
அன்பார்ந்த வாசகத் தோழர்களுக்கு,
“முத்தமிழறிஞர் பதிப்பகம்” ஒருங்கிணைக்கும் “சென்னை முற்போக்கு புத்தகக் கண்காட்சி” வரவிருக்கும் சனிக்கிழமை (நவம்பர் 8) சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் தொடங்கவுள்ளது. இப்புத்தகக் கண்காட்சி நவம்பர் 16-ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெற உள்ளது.
இப்புத்தகக் காட்சி அரசியல் நூல்களுக்காகவே சிறப்பாக நடத்தப்படுகிறது. முற்போக்கு அரசியலின் விளைநிலமாக இருக்கும் தமிழ்நாடு என்பதன் மற்றொரு நிரூபணம் தான் இப்புத்தகக் காட்சியாகும். அந்தவகையில், அரசியல் ரீதியாக ஆர்வமுள்ள அனைவருக்கும் இப்புத்தகக்கண்காட்சி பயனுள்ளதாக அமையும். பல்வேறு முற்போக்கு பதிப்பகங்கள் இந்த புத்தக் காட்சியில் பங்கேற்கின்றனர்.
சமூக மாற்றத்தை விரும்புகின்ற அனைவருக்கும் இப்புத்தகக் காட்சி பெரும் ஊக்கமளிக்கும் நிகழ்வாக அமையும். தமிழ்நாட்டின் முற்போக்கு அரசியல் வளர்ச்சியில் முக்கியமான பங்காற்றும்.
இவ்வளவு முக்கியமுள்ள இப்புத்தகக்கண்காட்சிக்கு அனைவரும் தவறாது வருகை புரிந்து ஆதரவளிக்குமாறும் பயன்பெறுமாறும் கேட்டுக்கொள்கிறோம். சமூக மாற்றத்தை நோக்கிய தங்களது உணர்வைக் கூர்தீட்டிக்கொள்ள நல்வாய்ப்பு தவறவிட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
இப்புத்தகக் காட்சியில் எமது “புதிய ஜனநாயகம் பதிப்பகம்” பங்கேற்கிறது. கடை எண் 15. தவறாது எமது பதிப்பகத்திற்கு வருகை புரியுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது, “புதிய ஜனநாயகம் பதிப்பகத்தை”த் தொடங்கி ஓராண்டு நிறைவடைய இருக்கிறது. சென்ற ஆண்டு சென்னைப் புத்தகக்கண்காட்சியில் முதன்முதலாகப் பங்கேற்ற போது, இளம் அரசியல் வாசகர்களின் மையமாக எமது பதிப்பகம் அமைந்தது என பதிப்புத்துறையைச் சேர்ந்த பலரும் பாராட்டினர்; வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இளம் வாசகர்களுக்காகவே, மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரிய, தமிழ்நாட்டின் மரபை உயர்த்திப் பிடிக்கின்ற நூல்களின் முக்கியமானவற்றைத் தேடிப்பிடித்து எமது பதிப்பகத்தில் இடம்பெறச் செய்தோம். அவற்றை இளம் வாசகர்கள் வாங்கி மகிழ்ச்சியடைந்தனர்.
அதே ஊக்கத்துடன் இப்புத்தக் காட்சியிலும் பங்கேற்கிறோம். இந்த ஓராண்டில் பல முக்கிய நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. பதிப்புத்துறையில் பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றை வாங்கிப் பயனுற இந்த புத்தகக்கண்காட்சி தங்களுக்குப் பயனளிக்கும்.
ஆகையால், தவறாமல், முற்போக்கு புத்தகக்கண்காட்சிக்கு வருகை தாருங்கள், புதிய ஜனநாயகம் பதிப்பகம் – கடை எண் 15-க்கு வாருங்கள்!
தொடர்புக்கு:
தொடர்பு எண்: 9791559223
மின்னஞ்சல்: puthiyajananayagampublication@gmail.com

எமது சமூக வலைத்தளப் பக்கங்களைப் பின்தொடருங்கள்:
முகநூல்: புதிய ஜனநாயகம் பதிப்பகம்
எக்ஸ் (டிவிட்டர்): புதிய ஜனநாயகம் பதிப்பகம்
இன்ஸ்டாகிராம்: புதிய ஜனநாயகம் பதிப்பகம்
நவம்பர் 7, ரசிய சோசலிசப் புரட்சி நாள் வாழ்த்துகள்!

தோழமையுடன்,
தோழர் ஆகாஷ்,
நிர்வாகி,
புதிய ஜனநாயகம் பதிப்பகம்,
9791559223.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram





