
27.11.2025
பத்திரிகைச் செய்தி
அன்பார்ந்த உழைக்கும் மக்களே நண்பர்களே ஜனநாயக சக்திகளே!
“சாதி, மதம் கடந்து காதலிக்க மணமுடிக்க வேண்டும் ஜனநாயகம்!” என்ற முழக்கத்துடன் நடைபெற இருந்த மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் ரவி, தோழர் ராதிகா அவர்களின் சாதி மறுப்பு புரட்சிகர மண ஏற்பு விழா முதுபெரும் தோழர் சம்பத் அவர்களின் மறைவை ஒட்டி மாற்றுத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இதை பொதுவெளியிலும் அறிவித்திருந்தோம்.
நவம்பர் 29-இல் நடக்க இருந்த சாதி மறுப்பு புரட்சிகர மண ஏற்பு விழா டிசம்பர் 25ஆம் தேதி (25.12.2025) வெண்மணி ஈகியர் நாளில், மாலை 4.00 மணி அளவில் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த அதே திருமண மண்டபத்தில் (அ.பா.வளையாபதி மகால், திருமோகூர், யா.ஒத்தக்கடை, மதுரை) நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதற்கு மக்களும் ஜனநாயக சக்திகளும் ஆதரவு தெரிவித்து நடைபெற இருக்கும் சாதி மறுப்பு புரட்சிகர மண ஏற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
சாதி மறுப்பு புரட்சிகர பண்பாட்டை உயர்த்தி பிடிப்போம்!
சாதி மதம் கடந்து காதலிக்க மணம் முடிக்க வேண்டும் ஜனநாயகம் என்று முழங்குவோம்.
![]()
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram





