
16.12.2025
சாதி மறுப்பு புரட்சிகர மண விழா தொடர்பான
ஓர் முக்கிய அறிவிப்பு!
பத்திரிகைச் செய்தி
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! நண்பர்களே! ஜனநாயக சக்திகளே!
சாதி மதம் கடந்து காதலிக்க மணம் முடிக்க வேண்டும் ஜனநாயகம்! என்ற முழக்கத்துடன் வெண்மணி ஈகியர் நாளில் நடக்க இருந்த சாதி மறுப்பு புரட்சிகர மண விழா டிசம்பர் 25-க்கு பதில் டிசம்பர் 28 ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றி வைக்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் வாழ்த்துரை வழங்க இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர் தொல். திருமாவளவன் அவர்கள் டிசம்பர் 25 அன்று தவிர்க்க முடியாத காரணங்களால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆதலால் டிசம்பர் 28 ஆம் தேதி காலை 10.00 மணிக்கு ஏற்கெனவே திட்டமிட்ட அதே திருமண மண்டபத்தில் (அ.பா. வளையாபதி மகால், திருமோகூர், யா. ஒத்தக்கடை) நடக்கவிருப்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
தேதி மாற்றம் என்பது இந்நிகழ்ச்சியில் பேச இருந்த தலைவர்கள், ஜனநாயக சக்திகள், தோழர்கள், வழக்கறிஞர்கள், உறவினர்கள் என அனைவருக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும் என்பதை உணர்கிறோம்.
மணவிழா அழைப்பிதழைப் பார்த்தவர்கள் அனைவரும் மண விழாவிற்கு ஆதரவு தெரிவித்து வருவதை உணர்கிறோம். நாங்கள் அறிந்த, அறிமுகம் இல்லாத பலரும் இம்மண விழாவை ஆதரித்து பரப்புரை செய்வதையும் அறிகிறோம். மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த மணவிழா தள்ளிப் போவது நெருக்கடியை ஏற்படுத்தினாலும் அவற்றைக் கடந்து இம்மண விழாவில் தாங்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
இந்நிகழ்ச்சி தோழர்களின் திருமணம் என்பதைத் தாண்டி சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான ஒரு பண்பாட்டு அரசியல் இயக்கம் என்பதால் இந்நிகழ்ச்சியை சிறப்புற செய்ய வேண்டியுள்ளது. ஆதலால் இதற்கு ஒத்துழைப்பு கொடுத்து குடும்பத்துடன் அனைவரும் வருகை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
சாதி ஆதிக்க பண்பாட்டிற்கு எதிரான இந்தப் பண்பாட்டுப்போரில் அனைவரும் இணைவோம்!
சாதி மதம் கடந்து காதலிக்க மணம் முடிக்க வேண்டும் ஜனநாயகம் என முழங்குவோம்!
![]()
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram




