இரண்டாம் ஆண்டில் புதிய ஜனநாயகம் பதிப்பகம் – சென்னைப் புத்தகக் கண்காட்சியில் பங்கேற்பு

ஜனவரி 8 முதல் ஜனவரி 21 வரை நடக்கவுள்ள 49-வது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் புதிய ஜனநாயகம் பதிப்பகம் பங்கேற்க உள்ளது என்கிற மகிழ்ச்சிகரமான செய்தியை வாசகர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம். கடை எண் 277, வரிசை எண் 5-இல் புதிய ஜனநாயகம் பதிப்பகத்தின் கடை அமைய உள்ளது.

0

அன்பார்ந்த வாசகர்களே,

டந்தாண்டு டிசம்பர் 26, கம்யூனிச பேராசான் மாவோவின் 131-வது பிறந்தநாள் அன்று உதயமான புதிய ஜனநாயகம் பதிப்பகம், ஓராண்டை நிறைவு செய்துள்ளது.

இந்த ஓராண்டில் புதிய ஜனநாயகம் பதிப்பகம் சார்பாக சுமார் பத்து புத்தகங்கள் வரை வெளியிடப்பட்டுள்ளன. பிற முற்போக்கு பதிப்பகங்களின் நூல்களை மக்களிடம் அறிமுகம் செய்வதிலும் கொண்டுசென்று சேர்ப்பதிலும் புதிய ஜனநாயகம் பதிப்பகம் முக்கிய பங்காற்றி வருகிறது.

மேலும், புத்தகக் கண்காட்சிகளிலும் புரட்சிகர-ஜனநாயக சக்திகளின் கூட்டங்களிலும் தொடர்ச்சியாக கடை போடுவதன் மூலம், புரட்சிகர அரசியலையும் பாசிச எதிர்ப்பு அரசியலையும் முற்போக்கு சக்திகளிடம் கொண்டு சேர்த்து வருகிறது.

பாசிச மோடியின் ஆட்சியில் கருத்துரிமை நசுக்கப்படுவது, டிஜிட்டல் ஊடகங்களின் ஆதிக்கம், பதிப்புத்துறை சந்தித்துவரும் நெருக்கடி ஆகியவற்றை எல்லாம் எதிர்கொண்டவாறுதான் புதிய ஜனநாயகம் பதிப்பகம் இப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. பாசிசம் அரங்கேறிவரும் இச்சூழலில், சளைக்காமல் இப்பணிகளை முன்னெடுத்துவரும் புதிய ஜனநாயகம் பதிப்பகத்திற்கு எமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

இத்துடன், 2026 ஆம் ஆண்டு, ஜனவரி 8 முதல் ஜனவரி 21 வரை நடக்கவுள்ள 49-வது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் புதிய ஜனநாயகம் பதிப்பகம் பங்கேற்க உள்ளது என்கிற மகிழ்ச்சிகரமான செய்தியை வாசகர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம். கடை எண் 277, வரிசை எண் 5-இல் புதிய ஜனநாயகம் பதிப்பகத்தின் கடை அமைய உள்ளது.

சமகால அரசியல் சூழல், மார்க்சியம் தொடர்பான பல புதிய புத்தகங்கள் பதிப்பகத்தின் சார்பாக இப்புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட உள்ளன. வாசகர்கள் தவறாமல் புதிய ஜனநாயகம் பதிப்பகத்தின் கடையைப் பார்வையிட்டு நூல்களை வாங்கிச் செல்லுமாறும், தங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு பதிப்பகத்தை அறிமுகம் செய்து வைக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

– வினவு

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க