மார்க்ஸ்:
தத்துவ ஞான ஆராய்ச்சிக்கு முதலில் அவசியமாக இருப்பது துணிவான, சுதந்திரமான அறிவே.
– காரல் மார்க்ஸ்

***
ஏங்கெல்ஸ்:
சமூக வளர்ச்சியின் பல்வேறு காலகட்டங்களில், சுரண்டப்படுபவர்களுக்கும் சுரண்டுபவர்களுக்கும் இடையே, ஆதிக்கம் செலுத்தப்படும் வர்க்கங்களுக்கும் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கங்களுக்கும் இடையே நடந்த வர்க்கப் போராட்டங்களின் வரலாறே அனைத்து வரலாறும் ஆகும்.
– ஏங்கெல்ஸ்

***
லெனின்:
மனிதகுலம் படைத்தளித்திருக்கும் கருவூலங்கள் யாவற்றையும் பற்றிய அறிவைப் பெற்று உங்கள் சிந்தனையை நீங்கள் வளமாக்கிக் கொள்ளும் போது மட்டுமே உங்களால் கம்யூனிஸ்ட் ஆக முடியும்.
– லெனின்

***
ஸ்டாலின்:
உண்மையான வீரம் என்பது, தன்னைத்தானே கட்டுப்படுத்தி வெல்வதற்கும், ஒருவரின் விருப்பத்தை கூட்டு மனப்பான்மைக்கும், உயர் கட்சி அமைப்பின் விருப்பத்திற்கும் கீழ்ப்படுத்துவதற்கும் போதுமான வலிமையுடன் இருப்பதாகும்
– ஸ்டாலின்

***
மாவோ:
நாம் அடக்கமும் விவேகமும் உடையவர்களாக இருக்க வேண்டும்; இறுமாப்பு, அவசர புத்தி இரண்டுக்கும் எதிராக நம்மை பாதுகாக்க வேண்டும்; உடல், பொருள், ஆவி மூன்றாலும் மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும்.
– மாவோ

***
டிமிட்ரோவ்:
பாசிசம் குறித்து:
நிதி மூலதனத்தின் ஆக படுமோசமான, பிற்போக்கான, ஆக அதிகமான ஆதிக்க இனவெறி கொண்ட ஆகப்படுமோசமான ஏகாதிபத்திய நபர்களின் பகிரங்கமான பயங்கர தன்மை கொண்ட சர்வாதிகாரமாகும்.
– டிமிட்ரோவ்

***
பெரியார்:
தன்மானம் என்பது பகுத்தறிவு, சுயமரியாதை, சமத்துவம், மூடநம்பிக்கை ஒழிப்பு ஆகியவற்றின் அடிப்படையிலானதாகும்; சாதி, மத, இன, மொழி அடிப்படையிலான அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு, மனிதனாக சமத்துவத்துடன் வாழ்வதே தன்மானம்.
– பெரியார்

***
அம்பேத்கர்:
நால்வர்ண சாதி அமைப்பை விட இழிவான சமூக அமைப்பு வேறு எதுவும் இருக்க முடியாது. அது மக்களைப் பயனுள்ள செயல்களில் ஈடுபட விடாமல், செயலிழக்கச் செய்து, முடக்கிப் போடும் ஒரு அமைப்பாகும்.
– அம்பேத்கர்

***
பாரதிதாசன்:
எங்கும் பாரடா இப்புவி மக்களை!
பாரடா உனது மானிடப் பரப்பை
பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்
‘என்குலம்’ என்றுனைத் தன்னிடம் ஒட்டிய
மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சி கொள்!
புதியதோர் உலகம் செய்வோம்
கெட்டபோரிடும் உலகத்தை
வேரொடு சாய்ப்போம்.
– பாரதிதாசன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram





