Saturday, February 14, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4488 பதிவுகள் 3 மறுமொழிகள்

காலம் உருவாக்கியத் தலைவர் மலைச்சாமி

ஊர் பெயர்களில் சாதிய அடையாளங்களை துடைத்தெறிவதற்காக சக மாணவர்களை இணைத்துக்கொண்டு போராடினார். பச்சேரி-யை (பள்ளர் மக்கள் வசிக்கும் பகுதி) இமானுவேல் நகர், பெரியார் நகர் என்றும், பறச்சேரி-யை டாக்டர் அம்பேத்கர் நகர் என்றும், சக்கிலியச்சேரி-யை விடுதலை நகர் என்றும் பெயர் மாற்றம் செய்வதற்காக போராட்டங்களை முன்னெடுத்தார்.

கத்தார் மீது வான்வழித் தாக்குதல்: இஸ்ரேலின் ரவுடித்தனம்!

இத்தாக்குதலானது ஹமாசுடனான அமெரிக்காவின் பேச்சுவார்த்தையின் போலித்தன்மையை அம்பலப்படுத்துவதாக அமைந்துள்ளது.

உதய்பூர் ஃபைல்ஸ்: இஸ்லாமிய வெறுப்பைக் கக்கும் திரைப்படம்!

இதுபோன்ற படங்களின் மூலம் சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள் மீது மிகத் தீவிரமான உளவியல் போரைத் தொடுத்து வருகிறது பாசிச கும்பல்.

ஜி.எஸ்.டி-யே ஒரு அயோக்கியத்தனம் | டிரம்பிற்கு அடிபணியும் மோடி அரசு | தோழர் அமிர்தா

ஜி.எஸ்.டி-யே ஒரு அயோக்கியத்தனம் | டிரம்பிற்கு அடிபணியும் மோடி அரசு | தோழர் அமிர்தா https://youtu.be/buGc6ea7zq4 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

தாராளவாதத்தை எதிர்த்துப் போரிடுக! | தோழர் மாவோ | மீள்பதிவு

தாராளவாதம் என்பது குட்டி பூர்ஷ்வா வர்க்கத்தின் சுயநல உணர்விலிருந்து தோன்றுகிறது. அது தனிநபர் நலன்களை முதலாவது இடத்திலும், புரட்சியின் நலன்களை இரண்டாவது இடத்திலும் வைக்கின்றது.

தூத்துக்குடியில் சி.ஐ.டி.யூ. தோழர்கள் மீது பா.ஜ.க. குண்டர்கள் தாக்குதல் | தோழர் செல்வா கண்டனம்

தூத்துக்குடியில் சி.ஐ.டி.யூ. தோழர்கள் மீது பா.ஜ.க. குண்டர்கள் தாக்குதல் தோழர் செல்வா கண்டனம் https://youtu.be/XhtpC-B899A காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

சத்தீஸ்கரில் 14,678 தொழிலாளர்கள் ராஜினாமா: பா.ஜ.க. அரசிற்கு செருப்படி!

செப்டம்பர் 3 அன்று போராட்டத்திற்கு தலைமை தாங்கிய 25 ஊழியர்களை பாசிச பா.ஜ.க. அரசு அடாவடியாக பணிநீக்கம் செய்தது. இப்பாசிச நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 14,678 தொழிலாளர்கள் நேற்று (செப்டம்பர் 6) ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்து சத்தீஸ்கர் மாநில பா.ஜ.க. அரசிற்கு செருப்படி கொடுத்துள்ளனர்.

கேரளாவில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம் கலவர நடவடிக்கையா?

ஒருபுறம், காசா மீதான இஸ்ரேலின் போரை எதிர்ப்பதாக கூறும் கேரள சி.பி.எம். அரசு, மறுபுறத்தில், பாலஸ்தீன ஆதரவு போராட்டத்திற்கு கலவர முத்திரை குத்தி ஒடுக்குகிறது. இது கேரள சி.பி.எம். அரசின் சந்தர்ப்பவாதத்தையும் இரட்டை வேடத்தையும் காட்டுகிறது.

இராஜஸ்தானில் மதமாற்ற தடை மசோதா: சிறுபான்மையினர் மீதான சட்டப்பூர்வ பாசிசத் தாக்குதல்

‘கர்வாப்சி’ (‘இந்து’ மதத்திற்கு மாற்றுவது) எனப்படும் ஆர்.எஸ்.எஸ்-இன் பாசிச நடவடிக்கைக்கு விலக்களித்துள்ள இம்மசோதா, இஸ்லாமிய-கிறிஸ்தவ சிறுபான்மை மக்கள் மீது பாசிச தாக்குதல் தொடுப்பதையே நோக்கமாக கொண்டுள்ளது.

50% வரிவிதிப்பு: திருப்பூர் தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறி

திருப்பூரில் உள்ள 2,500-க்கும் மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் 20,000-ற்கும் மேற்பட்ட பின்னலாடை சார்ந்த நிறுவனங்களில் வேலை பார்க்கும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மதுரையில் சுயமரியாதை – உரிமைக்காகப் போராடிய மாற்றுத்திறனாளிகள் கைது

“மருத்துவக் குழுவால் வழங்கப்படும் சான்றிதழில் இயலாமையின் சதவிகிதம் குறைத்து மதிப்பிடப்படும்போது, ​​அந்த மாற்றுத்திறனாளி அரசாங்கத்திடமிருந்து உண்மையான இழப்பீட்டைப் பெறுவதற்கான உரிமையை இழக்கிறார்”

காசாவில் பட்டினிப் படுகொலை: போரின் விளைவல்ல, மையம்!

பஞ்சம், பட்டினியால் காசாவின் சமூகம் நிலைகுலைந்து இருக்கிறது, மனித இயல்புகள் குறைந்து வருகின்றன, இவை இசுரேல் நடத்தும் போரின் துணை விளைவுகள் அல்ல. இதுதான், இசுரேலின் நோக்கத்தின் (குற்றத்தின்) மையமான பகுதி. அது, பாலஸ்தீன சமூகத்தை முற்றாக அழிக்க வேண்டும் என்ற நோக்கமாகும், குற்றமாகும்.

ரஷ்ய எண்ணெயும் மோடி அரசின் அம்பானி சேவையும்

ரஷ்ய எண்ணெய் மூலம் வரும் இலாபம் என்னவோ அம்பானிக்கு. அமெரிக்காவின் வரிவிதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்பு மட்டும் உழைக்கும் மக்களுக்கு.

திருப்பரங்குன்றத்தில் பரமசிவமும் பாஷாவும் | ஆவணப்படம் | ம.க.இ.க

திருப்பரங்குன்றத்தில் பரமசிவமும் பாஷாவும் | போலீசால் தடுக்கப்பட்ட ஆவணப்படம் | ம.க.இ.க இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.. https://youtu.be/TmLyFOVJc98 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

தமிழ்நாடு கல்விக் கொள்கை 2025 மீதான அறிக்கை | மக்கள் கல்விக் கூட்டியக்கம்

“அடித்தட்டு மக்களின் குரலற்ற குழந்தைகளுக்குக் கண்ணியம் மிக்க வாழ்க்கையைத் தர வேண்டும் என்றால், கல்வி தரும் பொறுப்பை அரசு முழுமையாக ஏற்க வேண்டும். அதை விடுத்து மக்களுக்குக் கல்வி கொடுப்பதிலிருந்து பொறுப்பைக் கை கழுவி, தனியார் மயத்தை ஊக்குவிக்கும் வகையில் நமது மாநிலக் கல்விக் கொள்கை வெளியிடப்பட்டது ஏற்புடையதல்ல.”