Thursday, October 21, 2021

மக்கள் ஊடகம் வினவு – ஆதரிப்பது உங்கள் கடமை

சோர்வூட்டும் சமூக நிலைமைகளிலிருந்து மாற்றம் வருமா? நிச்சயம் வருமென்று உங்களை உற்சாகத்துடன் அழைத்துச் செல்கிறது வினவு. புதிய முயற்சிகள், சலிப்புறாத உழைப்பு, மக்கள் நலனில் சமரசமற்ற உறுதி, மக்கள் விரோதிகளை அடையாளம் காட்டுவதில் துணிவு, அர்ப்பணிப்போடு பணியாற்றும் தோழர்கள்…….

இந்த அணியில் நீங்களும் பங்கேற்க வேண்டும். ஆதரியுங்கள்!

வினவு தளத்தை ஆதரிப்பது உதவி அல்ல.
அது உங்கள் பொறுப்பு !

கொடை, தருமம், உதவி அனைத்தும் கொஞ்சம் கிள்ளிக் கொடுக்கும் ‘கருணை’யைக் குறிக்கிறது. இல்லாதோர் பெரும்பான்மையாகவும், கொஞ்சம் இருப்போர் கூட இல்லாமையை நோக்கி சரியும் காலத்தில் வினவுக்கு ஆதரவளிப்பது உங்கள் பொறுப்பு. குடும்ப வரவு செலவு கணக்கில் வினவு தளத்திற்கும் ஒரு நிதி ஒதுக்குங்கள்.

உங்கள் குரல் உங்கள் ஆதரவோடுதான் ஒலிக்க முடியும்

செய்திகள், கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், கள ஆய்வுகள், வீடியோ செய்திகள், பாடல்கள், புகைப்படங்கள், களச் செய்திகள், ஆவணப்படங்கள், நேரலை, கேள்வி பதில், விருந்தினர் பக்கம்,நேர்காணல்கள், வினாடி வினா, கருத்துக் கணிப்பு … பத்தாண்டுகளில் வினவு தளம் ஒரு மக்கள் ஊடகமாக பரிணமித்து வருகிறது.

ஒரு ஊடகத்திற்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள் இன்றியே வினவு தளம் நடத்தப்படுகிறது. இணையத்தின் வீச்சும், சமூக வலைத்தளங்களின் தாக்கமும் அதிகரிக்கின்ற காலத்தில் வினவு அதிவேகமாவும், துடிப்பாகவும் செயல்பட உங்கள் பங்களிப்பு அவசியமில்லையா?

கார்ப்பரேட் விளம்பரங்கள் இல்லாமல் ஒரு ஊடகம் செயல்படும் என்பதை நிரூபித்திருக்கிறது வினவு

வணிக ஊடகங்கள் மாருதி நிறுவனத்தின் புதிய காரை விளம்பரம் செய்கிறார்கள். நாங்கள் சிறைப்பட்ட மாருதி தொழிலாளிகளை சந்திக்க அரியானா சென்றோம். அவர்கள் வேதாந்தா நிறுவனத்தின் விளம்பரத்தை வெளியிட்டார்கள். நாங்கள் ஸ்டெர்லைட்டை எதிர்த்துப் போராடும் மக்கள் குரலை வெளியிடுகிறோம். இது எப்படி முடியும்?

வினவு தளத்தில் விளம்பரங்களோ, இலாப நோக்கமோ ஒருபோதும் கிடையாது என்பதை உறுதிபடக் கூறுகிறோம். எங்கள் செலவுகளுக்கு மக்களை மட்டுமே சார்ந்து நிற்போம். இந்த உறுதியில் உங்களுக்கும் பங்கில்லையா? சந்தா செலுத்துங்கள்!

இளம் தலைமுறையிடம் முற்போக்கு அரசியல் பார்வையைக் கொண்டு செல்கிறது வினவு

கூகுள் அனலிடிக்ஸ் புள்ளிவிவரப்படி வினவு தளத்தை அன்றாடம் ஆயிரக்கணக்கானோர் படிக்கிறார்கள். இதில் மாணவர்கள்-இளைஞர்கள் அதிகம் என்கிறது கூகுள். இப்பிரிவினரிடம் மார்க்சிய அறிமுகம் சாதி மத எதிர்ப்பு, ஆணாதிக்க எதிர்ப்பு, சமத்துவப் பார்வை, ஜனநாயக விழிப்புணர்வு, ஏகாதிபத்திய எதிர்ப்பு அத்தனையும் கொண்டு சேர்க்கிறது வினவு. இந்துத்துவத்தை எதிர்த்து பெரியார், அம்பேத்கர் துவங்கி இன்றைய அறிஞர் பெருமக்கள் வரை போராடுகின்றனர். அந்தப் போராட்டத்தின் கருத்தியல் ஆயுதக் கிடங்காக திகழும் வினவு, இளையோரிடம் சங்கமிக்க ஆதரியுங்கள்!

சினிமா மாயையிலிருக்கும் மக்களை மீட்கப் போராடுகிறது வினவு

சினிமா தமிழக மக்களின் புதிய மதமென்றால் மிகையில்லை. சினிமா விமர்சனங்களை சுடச்சுட கொடுக்கும் வணிக ஊடகங்கள் திரைக்கதையின் விறுவிறுப்புக்கேற்ப தரப்படுத்துகின்றன. ஆனால் ஒரு கதையின் சமூகக் கண்ணோட்டம் என்ன, அது சுட்டும் திசை வழி ஆரோக்கியமானதா என ஆற அமர விமரிசிக்கிறது வினவு. வணிக ஊடகங்கள் சினிமாவின் பிரபலத்தை வைத்து கல்லா கட்டுகின்றன. நாங்கள் சினிமாவின் சமூகப் பரிமாணம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஊட்டுகிறோம்.

ஆள்வோரை எதிர்த்து ஒரு ஊடகம் தொடர்ந்து பேச முடியும் என்பதற்கு வினவு ஒரு சாட்சி

ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது அவரது கண் அசைவுக்கு கட்டுப்பட்டன மற்ற ஊடகங்கள். பாசிச ஜெயாவின் ஊழல் குற்றங்கள் முதல் டாஸ்மாக் குற்றம் வரை நாங்கள் பேசினோம், எழுதினோம், பாடினோம். அதனால் அடக்குமுறையையும் எதிர்கொண்டோம். மோடியுடன் விருந்துண்ண சென்றார்கள் தமிழக ஊடக நிர்வாகிகள். நாங்களோ பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி, மாட்டுக்கறி வன்முறை, கொல்லப்பட்ட அறிஞர்கள் என தொடரும் குற்றங்களை பதிவு செய்தோம். ஆள்வோரை எதிர்ப்பதில் அச்சமின்றி ஒரு ஊடகம் பேச முடியுமென காட்டிய வினவு உங்கள் ஆதரவைக் கோருகிறது.

உங்கள் வினவு தளத்தின் பத்தாண்டு தாண்டிய பயணமிது, ஆதரியுங்கள்!

ஜூலை 17, 2008 துவங்கி பத்தாண்டை தாண்டி விட்டோம். 9,000 பதிவுகள், இலட்சத்திற்கும் மேற்பட்ட மறுமொழிகள், 600க்கும் மேற்பட்ட வீடியோக்கள், சமூகவலைத்தளங்களில் பின்தொடரும் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட நண்பர்கள்……………. ஆனால்….? கார்ப்பரேட் ஊடகங்களோடு ஒப்பிடும் போது இவை ஒன்றுமில்லை. ஒன்றுமில்லாத மக்களின் குரலாக பயணிக்கும் வினவு தளத்தினை வலுப்படுத்துவது உங்கள் கடமை.

PayUMoney மூலம் சந்தா செலுத்த

ஒரு மாதம்

Rs. 100
 • செய்தி மின்னூல் - 4
 • பு.ஜ. மின்னூல் - 1
 • பு.க. மின்னூல் - 1
 • பு.க. அச்சு நூல்

காலாண்டு

Rs. 250
 • செய்தி மின்னூல் - 13
 • பு.ஜ. மின்னூல் - 3
 • பு.க. மின்னூல் - 3
 • பு.க. அச்சு நூல்

அரையாண்டு

Rs. 500
 • செய்தி மின்னூல் - 26
 • பு.ஜ. மின்னூல் - 6
 • பு.க. மின்னூல் - 6
 • பு.க. அச்சு நூல்

ஒரு வருடம்

Rs. 1000
 • செய்தி மின்னூல் - 52
 • பு.ஜ. மின்னூல் - 12
 • பு.க. மின்னூல் - 12
 • பு.க. அச்சு நூல்
ஒரு வருடம்


சிறப்பு சந்தா

Rs. 5000
 • செய்தி மின்னூல் - 52
 • பு.ஜ. மின்னூல் - 12
 • பு.க. மின்னூல் - 12
 • பு.க. அச்சு நூல் - 2 X 12

Paypal மூலம் சந்தா செலுத்த

$ 5 /பிரதி மாதம்
 • செய்தி மின்னூல் - 1 நபர்
 • பு.ஜ. மின்னூல் - 1 நபர்
 • பு.க. மின்னூல்- 1 நபர்
 • பு.க. அச்சு நூல் உள்நாடு - 1 நபர்
 • பு.க. அச்சு நூல் வெளிநாடு
$ 10 /பிரதி மாதம்
 • செய்தி மின்னூல் - 2 நபர்கள்
 • பு.ஜ. மின்னூல் - 2 நபர்கள்
 • பு.க. மின்னூல் - 2 நபர்கள்
 • பு.க. அச்சு நூல் உள்நாடு - 2 நபர்கள்
 • பு.க. அச்சு நூல் வெளிநாடு
$ 20 /பிரதி மாதம்
 • செய்தி மின்னூல் - 4 நபர்கள்
 • பு.ஜ. மின்னூல் - 4 நபர்கள்
 • பு.க. மின்னூல் - 4 நபர்கள்
 • பு.க. அச்சு நூல் உள்நாடு - 4 நபர்கள்
 • பு.க. அச்சு நூல் வெளிநாடு - 1 நபர்
$ 50 /பிரதி மாதம்
 • செய்தி மின்னூல் - 10 நபர்கள்
 • பு.ஜ. மின்னூல் - 10 நபர்கள்
 • பு.க. மின்னூல் - 10 நபர்கள்
 • பு.க. அச்சு நூல் உள்நாடு - 10 நபர்கள்
 • பு.க. அச்சு நூல் வெளிநாடு - 2 நபர்கள்
$ 100 /பிரதி மாதம்
 • செய்தி மின்னூல் - 20 நபர்கள்
 • பு.ஜ. மின்னூல் - 20 நபர்கள்
 • பு.க. மின்னூல் - 20 நபர்கள்
 • பு.க. அச்சு நூல் உள்நாடு - 20 நபர்கள்
 • பு.க. அச்சு நூல் வெளிநாடு - 4 நபர்கள்
$ 200 /பிரதி மாதம்
 • செய்தி மின்னூல் - 40 நபர்கள்
 • பு.ஜ. மின்னூல் - 40 நபர்கள்
 • பு.க. மின்னூல் - 40 நபர்கள்
 • பு.க. அச்சு நூல் உள்நாடு - 40 நபர்கள்
 • பு.க. அச்சு நூல் வெளிநாடு - 8 நபர்கள்

தமிழ் இணையத்தில் வினவு தளத்தின் முக்கியத்துவம் என்ன?

பிரபல தமிழ் பதிவர்கள் சொல்கிறார்கள்:

2002-லிருந்து தமிழ் இணையத்தை அக்கறையுடன் கவனிப்பவன் என்ற வகையில் என்னால் உறுதியுடன் கூறமுடியும், வினவு என்பது தமிழ் இணையத்தின் ஒரு முக்கிய நிகழ்வு. தொழில் நுட்பக் கண்ணோட்டத்துடனோ, மொழி வளர்ச்சி என்ற கண்ணோட்டத்துடனோ தமிழ் இணையத்தினைப் பார்ப்பதற்கு மேலதிகமாக, அதன் அரசியல் பற்றிய கண்ணோட்டத்துடன் பார்ப்பவர்களுக்கு இந்த உண்மை தெள்ளெனத் தெரியும்.

மயூரன்

செயல்பாட்டாளர்

சில படங்கள் நமக்கு ரொம்பப் பிடிக்கும்; பலரும் சிலாகிக்கும் சில படங்கள் நமக்கு அநியாய எரிச்சலைத் தரும் (எ.கா: மதராசப்பட்டினம்); அதன் காரணங்கள் வினவின் விமர்சனத்தைப் படிக்கும் போது தான் புரிந்து தெளிவு பிறந்தது. குறிப்பாக, “அங்காடித் தெருவில் சொல்லப்படாதது என்ன” என்ற வினவின் மாற்றுப் பார்வை இவ்வளவு விஷயம் இருக்கிறதா, நமக்கு ஒன்றுமே தெரியவில்லையே என்று எண்ணமிட வைத்தது.

தீபா

சமூக ஆர்வலர்

வெகுஜன ஊடகங்களை விட பெரும்பாலும் நான் மாற்று ஊடகங்களில் சமகால நிகழ்வுகளை வாசிக்க விரும்புகிறவன். வெகுஜன ஊடகங்களை விட மாற்று ஊடகங்களிலேயே உண்மையான களநிலவரம் தெரியவரும் என்பது என்னுடைய அனுபவத்தில் நான் கண்ட உண்மை. அதற்கெல்லாம் நான் வினவு தளத்தையே நாடுகிறேன்.

தமிழ் சசி

சமூக ஆர்வலர்

இடதுசாரி பின்புலத்தில் வளர்ந்த அல்லது வசித்த நபர்கள், வாழ்வியல் தேவைகளுக்காக வேறிடத்துக்கு புலம்பெயர்கையில் கருத்தியல் ரீதியாக தனித்து விடப்படுகிறார்கள் (அவ்வாறு உணர்கிறார்கள் என்பதே சரி). அந்த எண்ணத்தில் இருந்து மீளவும் தனது சமூக அறிவை மேம்படுத்திக் கொள்ளவும் ஒரு தளம் தேவைப்படுகிறது. நானறிந்த வகையில் அந்த இடத்தை வினவுதான் நிரப்புகிறது.

வில்லவன்

சமூக ஆர்வலர்

ஒரு மாற்று ஊடகத்தின் தேவை பெருவாரியான மக்களின் பெருங்கனவாக இருக்கிறது. பெரும் ஊடகங்கள் செய்தியை நுகர்பவர்களாக மக்களை மாற்றிவிட்டபோதும்கூட, அதே மக்கள் ‘உண்மைக்காக’ ஏங்குகிறவர்களாகவும் இருக்கின்றனர். மக்களின் உண்மைக்கான ஏக்கத்தை தீர்த்து வைக்கும் முன்னெடுப்பாக ‘வினவு’ தளத்தை நான் பார்க்கிறேன்.

மு.வி.நந்தினி

பத்திரிகையாளர்

வினவு இணையத்தில் தவிர்க்கவியலாத ஒரு சக்தியாக அழுத்தந் திருத்தமாக வளர்ந்திருக்கிறது. இணையத்தைப் பயன்படுத்துபவர்களில் ஒரு பெரும் பிரிவினருக்கு வினவு அரசியல் உணர்வை ஊட்டியிருக்கிறது. அவர்களை உரையாட வைத்திருக்கிறது. கோபம் கொள்ள வைத்திருக்கிறது.சினிமா, கவிதை, காதல், அரட்டை என்று ‘லைட்டாக’ உலா வந்து கொண்டிருந்த பலரை அடுத்தடுத்த கட்டங்களுக்கு உயர்த்தியிருக்கிறது.

மருதன்

எழுத்தாளர்