privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்மும்பை 26/11: அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம் ! (பாகம் - 1)

மும்பை 26/11: அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம் ! (பாகம் – 1)

-

” வெள்ளைப் பூக்கள் உலகமெங்கும் மலர்கவே ” எனும் ரகுமானின் பாட்டு 27.11.08 அன்று சென்னை எப். எம் அலைவரிசைகளில் குத்தாட்டப் பாடல்களுக்கு மத்தியில் திரும்பத் திரும்ப ஒலிபரப்பப்பட்டது. வழக்கமாக சமூகப் பிரச்சினைகளின் பால் நாட்டமற்று சினிமாவை மட்டும் மட்டற்று பரப்பும் தொகுப்பாளினிகள் அதிசயமாய் மும்பைத் தாக்குதல் குறித்து தமிங்கலத்தில் பேசிக்கொண்டிருந்தார்கள்.  எந்த அளவு அதிகமாய் பேசினார்களோ அந்த அளவு பிரச்சினையைப் பற்றி மருந்துக்குக் கூட தொடவில்லை. அரசியல் மற்றும் செய்தி அறிக்கைகளை பண்பலை வரிசையில் ஒலிபரப்பக் கூடாது என்றொரு விதியிருக்கிறது. ஒருவேளை அந்த விதியில்லையென்றாலும் அவர்களால் இதைத் தாண்டி பேசியிருக்க முடியாது. அன்றாடம் அரட்டையடிப்பதற்கென தொலைபேசியில் வரும் நேயர்களும் அதையே பின்தொடர்ந்தார்கள். நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் ஒரு சம்பவத்தை அரட்டைக் கலாச்சாரமும் தன்னளவில் வெளிப்படுத்த முடியும் என்று நிரூபித்தார்கள்.

குட் மார்னிங் கூட சொல்ல முடியவில்லையென்றார் ஒருவர், பேப்பரைப் பிரித்தால் தினசரி குண்டு வெடிப்புதான் சலிப்பாயிருக்கிறது என்றார் மற்றொருவர், மனது கஷ்டமாயிருக்கிறது, பிரார்த்தனை செய்வோம், நம்பிக்கையுடன் இருப்போம், சென்னைக்கு பிரச்சினையில்லை இப்படியே நாள்முழுக்க பேசினார்கள். மும்பைத் தாக்குதலை சமூகம் எப்படிப் பார்க்க வேண்டுமென்பதையே எப். எம்மின் பேச்சுக்கள் பிரதிபலித்தன. பிரச்சினை என்னவென்று புரியக்கூடாது என்று உறுதி செய்துவிட்டு எல்லாம் நல்லபடி நடக்குமென்று எதிர்பார்க்கும் ஆபத்தில்லாத மனிதாபிமானம்.

அந்த மூன்று நாட்களும் தொலைக்காட்சி முன் அமர்ந்து விட்டு தனது பிரியத்திற்குறிய மும்பை நகரத்தின் சோகம் குறித்து லதா மங்கேஷ்கார் 300 முறை அழுதாராம். நட்சத்திர ஓட்டல்களில் விருந்து வைபவங்களுக்கு செல்பவர்கள் தங்களது போற்றுதலுக்குறிய நினைவுச் சின்னங்கள் தகர்க்கப்படுவதை நினைத்து ஆங்கிலப் பத்திரிகைகளில் கண்ணீர் வடித்தார்கள். நாடெங்கிலும் ஆங்கிலப்பள்ளிக் குழந்தைகள் மெழுகுவர்த்தி ஏந்தி கொல்லப்பட்டவர்களுக்காக அஞ்சலி செலுத்தினார்கள். தீவிரவாதிகளை சாகசத்துடன் வீழ்த்தும் கமாண்டோக்களை ஆங்கிலத் திரைப்படத்தில் மட்டும் பார்த்தவர்கள் தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு என்.எஸ்.ஜி வீரர்களுக்குப் பாராட்டு மழை பொழிந்தார்கள். பாதுகாப்புப்படை வீரர்கள் சிலர் உயிர்த்தியாகம் செய்திருப்பதை வைத்து கவிதைப் போட்டி நடத்துகிறது தினமலர். கொல்லப்பட்ட போலீசு, இராணுவ அதிகாரிகளின் இறுதி ஊர்வலத்தில் மக்கள் கூட்டமும், பாரத மாதாவைப் போற்றிய முழக்கமும் அலைமோதின.

இப்படி எல்லோரையும் ஒருவாரம் ஈர்த்திருக்கும் வலிமையை மும்பைத் தாக்குதல் கொண்டிருந்தது.

பத்து தீவிரவாதிகள் அறுபது மணிநேரம் தேசத்தின் கவனிப்பை தமது பக்கம் திருப்பி விடுவதில் வெற்றி பெற்றார்கள். இதுவரை நடந்த தீவிரவாதத் தாக்குதலையெல்லாம் ஒன்றுமில்லையென ஆக்கிவிட்டது மும்பைத் தாக்குததல். விஜயகாந்த், அர்ஜூன் மற்றும் தெலுங்குப் படங்களில் வரும் மலிவான தீவிரவாதிகளையெல்லாம் விஞ்சிவிட்டனர் இந்த உண்மையான தீவிரவாதிகள். முன்பதிவு செய்ய ரயில் நிலையத்தில் காத்திருந்தவர்கள், சாலையில் நடந்து சென்றவர்கள், திரைப்படம் பார்க்க வந்தவர்கள், மருத்துவமனையில் நுழைந்தவர்கள் எவரையும் இரக்கம் பார்க்கமல் இயன்ற அளவு சுட்டுக் கொன்றனர். இதற்கு முன் ஆளில்லாமல் குண்டுகள் மட்டும் வெடித்து வரும் அழிவை சில மனிதர்களே நேரிட்டுக் கொண்டு வந்ததால் பீதியும், பயங்கரமும் புயல் வேகத்தில் மும்பையில் மட்டுமல்ல, நாடு முழுவதும் பரவின. இத்துடன் முடிந்திருந்தால் கூட இது மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதலென்று செய்திகளின் எண்ணிக்கையில் ஒன்று கூடி பின்னர் மறக்கப்பட்டிருக்கும்.

ஆனால் தாஜ் ஓட்டல், ஒபராய் ஓட்டல், நாரிமன் ஹவுஸ் மூன்றிலும் அவர்கள் நுழைந்ததும்தான் இந்திய ஆளும் வர்க்கங்கள் மட்டுமல்ல மேற்கத்திய நாடுகளும் கூட கடும் அதிர்ச்சியடைந்தன. வெளி நாட்டவர்கள் அதிலும் குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, இசுரேல் நாட்டினர், இந்திய முதலாளிகள், மேல்மட்ட அதிகார வர்க்கத்தினர், தனியார் நிறுவன உயர் நிர்வாகத்தினர் அனைவரும் தீவிரவாதிகளால் துரிதமாக தேடித் தேடிக் கொல்லப்பட்டனர். இதுவரை பயங்கரவாதம் அவர்களால் ஆளப்படும் மக்களை மட்டும் தாக்கியதை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் இப்பொது முதல்முறையாக அதன் சூட்டை அனுபவிக்க வேண்டி வந்தது நினைத்துப் பார்த்திராத ஒன்று. இதுவே ஊடகங்கள் வழி நாட்டையும் மக்களையும் அதிர்ச்சியடைய வேண்டியதை ஒரு கடமையாகச் செய்தது.

குண்டு வெடிப்புக்களில் சாதாரண மக்கள் கொல்லப்படுவதை பரபரப்பாக செய்தி வெளியிடும் ஊடகங்கள் இங்கே பரபரப்பிற்காக மட்டுமல்ல தங்களுக்கு நிகழ்ந்த துயரமாகவே கருதி செய்திகளையும்  இந்தியஅரசு செய்யவேண்டிய எதிர்காலத் தயாரிப்புக்களையும் கட்டளை போல வெளியிட்டன. ஒரு வர்க்கமென்ற முறையில் ஊடகங்களுக்கு விளம்பரங்களின் மூலம் வருமானம் தரும் வெளிநாட்டினர், தனியார் நிறுவன முதலாளிகள், நிர்வாகிகளுக்கு நிகழ்ந்த அவலங்கள் ஊடக முதலாளிகளுக்கு கடும் கோபத்தை வரவழைத்திருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்தக் கோபம் அல்கய்தா அமெரிக்காவில் நடத்திய செப் -11 உலக வர்த்தக மையத் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்க ஊடகங்களுக்கு வந்த கோபத்திற்கு நிகரானது. வால் ஸ்டீரீட்டின் இதயம் தகர்க்கப்பட்டதால் அமெரிக்க முதலாளிகளுக்கு வந்த ஆத்திரம் ஆப்கான், ஈராக் மீது போர் தொடுப்பது, பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்கள் என்று ஊடக முதலாளிகளால் தொடர்ந்து ஒரு கச்சேரியாக அங்கே நடத்தப்பட்டது.

அமெரிக்க எஜமானர்களை பிழைப்பு கருதி வியந்தோதும் இந்தியா டுடே, டைம்ஸ் ஆஃப் இந்தியா, நீயு இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற தினசரிகள், அவை போன்ற ஆங்கிலத் தொலைக்காட்சி சேனல்கள் அத்தனையும் அதே கச்சேரியை வன்மத்துடன் செய்து வருகின்றன. இனி இதையே சன். டி.வி போன்ற பிராந்திய நாட்டாமைகள் மொழிபெயர்த்துப் பிரச்சாரம் செய்வார்கள். இந்தக் கச்சேரியை தமது வாழ்நாள் பணியாகச் செய்துவரும் குருமூர்த்தி, துக்ளக் சோ, அருண்ஷோரி, ஸ்வபன்தாஸ் குப்தா போன்ற சித்தாந்திகள் இப்போது முழுவீச்சுடன் இயங்கி வருகிறார்கள்.   விட்டால் இவர்களே கூட பாக்கிஸ்தானுக்கு படையெடுத்து போனாலும் போவார்கள். நாடு முழுக்க நிகழ் காலத்திலும் வருங்காலத்திலும் போர்வெறியும், பொடா,  புதிய போலீசுப் படை என்ற சர்வாதிகார வெறியும் நீக்கமற நிரைவிக்கப் போகிறது.

ரயில் நிலையத்தில் கொல்லப்பட்ட மக்களை நினைத்து சென்னை சென்ட்ரல் நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்படவில்லை. ஆனால் சென்னை நட்சித்திர முதலாளிகளின் கூட்டத்தைக் கூட்டி முன்னெச்செரிக்கை ஏற்பாடுகள் பற்றிய பாடம் நடத்தப்பட்டு விடுதிகளுக்கு போலீசு பாதுகாப்பும் போடப்பட்டது. அஸ்ஸாமில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டபோது தேசிய பாதுகாப்புப் படையின் பிரிவு எல்லா நகரங்களிலும் நிறுத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கை வரவில்லை. இப்போது தாஜ் ஓட்டல் தாக்கப்பட்டதும் வந்திருக்கிறது. விருந்தினர்களே எப்பொதும் சரியானவர்கள் என்ற கடமை முழக்கத்தை சிரமேற்கொண்டு தமது உயிரை ஈந்து பல முதலாளிகளையும், வெளிநாட்டினரையும் காப்பாற்றிய நட்சத்திர விடுதியின் ஊழியர்களைப் பற்றிய கதைகளை விட தாக்குதலில் சில மணிநேரங்கள் அல்லல்பட்டு தப்பித்த மேன்மக்களின் துன்பக்கதைகள் காவியமாய் பத்திரிகைகளை நிரப்புகின்றன.

அவ்வளவு ஏன் தாஜ்மஹால் பேலஸ் என்ற கல்லும் மண்ணும் கொண்டு கட்டப்பட்ட அந்த அஃறிணைப் பொருளுக்காக எத்தனைபேர் கண்ணீர் விட்டனர்! உருக்குலைந்து நிற்கும் அந்த விடுதியின் மதுவறையை முன்பக்கச் செய்தியில் படத்தோடு வெளியிட்டு துக்கப்படுகிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு. நாளொன்றுக்கு ஒரு இலட்சத்துக்குமேல் வாடகை வாங்கப்படும் அதன் கோபுர உச்சியில் இருக்கும் பிரசிடன்சியல் சூட் அறை,  பல உலகத் தலைவர்களெல்லாம் தங்கிய அந்தப்பெருமை மிகு அறை இன்று வெடிகுண்டு வீசப்பட்டு நிர்மூலமாயிருப்பது குறித்து வருந்துகிறது இன்னொரு நாளேடு! தாஜ் ஓட்டல் உயிர்ப்புள்ள கட்டிடம், பல இன்பங்கள், மகிழ்ச்சிகள், திருமணங்கள், நினைவுகளைக் கொண்டு வாழும் கட்டிடம் என்கிறார் ஒரு திரைப்பட இயக்குநர். இன்னும் நூறாண்டு பாரம்பரியம் மிக்க அந்த விடுதியின் பெருமை, இந்தியனுக்கு ஓட்டலில் இடமில்லை என்ற கோபத்தில் ஓட்டலைக் காட்டிய அந்தக் கால டாடாவின் கர்ண பரம்பரைத் தேசபக்திக் கதைகள், ஒரு வருடத்தில் 500 கோடி செலவழித்து விடுதியின் பொலிவை மீட்டுக் கொண்டு வருவதாக சபதமெடுக்கும் இந்தக் கால ரத்தன் டாடாவின் உறுதி மொழிகள் எல்லாம் பயங்கரவாதத்திற்கெதிரான போராய் அணிவகுக்கின்றன.

சிங்கூரில் நானா கார் தொழிற்சாலை வெளியேறி குஜராத்திற்கு கொண்டு செல்லப்பட்டது, தற்போதைய ஓட்டல் தாக்குதல் எல்லாம் ரத்தன் டாடாவின் கிரகநிலைமை சரியில்லையாம். இதையே பிரபலமான ஜோசியக்காரர்களிடம் செய்தியாக வாங்கி வெட்கமில்லாமல் வெளியிட்டிருக்கின்றன ஆங்கில நாளேடுகள்! உண்øமையில் டாடாவின் நில ஆக்கிரமிப்பால் மேற்கு வங்க விவசாயிகளின் கிரகம்தான் சரியில்லை என்று சொல்லலாம். தற்போது குஜராத்தின் விவசாயிகளுக்கும் கிரகநிலைமை சரியில்லை. ஒரு மாநில அரசின் ஆதரவோடு அந்த மக்களின் எல்லா வளங்களையும் சுரண்டி தொழில் செய்ய நினைக்கும் ஒரு முதலாளிக்கு வரும் பிரச்சினைகள் குறித்து என்ன ஒரு கவலை!

கேட் வே ஆஃப் இந்தியாவுக்கு அருகில் கடலைப் பார்த்து பணக்காரர்களின் சின்னமாய் இருக்கும் தாஜ் மஹால் பேலஸ் ஓட்டல் மும்பையின் கவுரவச் சின்னமாம். இதற்கு ஏற்பட்ட அநீதி குறித்து கொதித்தெழுகிறார் ஷோபா டே என்ற சீமாட்டி எழுத்தாளர். மும்பைக்கு அருகில் விதர்பாவில் இதே சில ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்திருப்பதை செய்தியாகக்கூட படித்திராத, நட்சத்திர விடுதிகளில் கூடி குடி கூத்துக்களை நடத்தும மேன்மக்களின் அருமை பெருமைகளை கூலிக்கு எழுதும் பத்தி எழுத்தாளருக்கு வயிறு பற்றி எரிகிறது! இனம் இனத்தோடுதான் சேருமென்றாலும் அதற்காக இப்படியா?

சாதாரண மற்றும் நடுத்தர மக்கள் ஏறெடுத்தும் பார்க்க முடியாத தாஜ் ஓட்டல் எப்படி மும்பையின் கவுரவச் சின்னமாகும்? மும்பை நகரம் 24 மணிநேரமும் சுறுசுறுப்புடன் இயங்குவதற்கு உழைத்து ஓடாய்த் தேயும் ஆசியாவின் பெரிய சேரியான தாரவியைக் கூட மும்பையின் சின்னமாக வரையறுத்தால்  ஒரு அர்த்தம் உண்டு. நாளொன்றுக்கு பல்லாயிரம் ரூபாயை வாடகையாகக் கொண்டிருக்கும் ஒரு நட்சத்திர விடுதி யாருக்கு அவசியம்? ஊழலில் புழுத்த அதிகாரவர்க்கம், நிதி மோசடிகள் செய்யும் முதலாளிகள், சந்தர்ப்பவாதங்களைக் கூடிப்பேசும் அரசியல் தலைவர்கள், உல்லசத்தில் திளைக்க விரும்பும் நடிகர்கள், இந்திய அடிமைகளை மேற்பார்வையிட வரும் மேற்குலகின் மேல்மட்டத்தினர் இவர்களுக்கெல்லாம்தானே நட்சத்திர விடுதி தேவைப்படுகிறது? ஆர்டர் செய்த ஷாம்பெய்னைக் குடிப்பதற்குள் தீவிரவாதிகள் வந்து விட்டார்கள் என்றெல்லாம் செய்திகள் பத்திரிகைகளில் வந்த வண்ணம் இருக்கின்றன.

மும்பையில் தீவிரவாதிகள் தாக்கிய இதே காலத்தில் துபாயில் எட்டாயிரம் கோடி செலவில் ஒரு தனித்தீவு உருவாக்கப்பட்டு அட்லாண்டிஸ் பாம்ஜூமைரா ரிசார்ட் என்ற மாபெரும் விடுதி திறக்கப்பட்டிருக்கிறது. இதில் விடுதிகள், ஓய்வில்லங்கள், தனி பங்களாக்கள் எல்லாம் இருக்கின்றன. இதில் ஒரு நாள் தங்குவதற்கு எட்டு முதல் இருபது இலட்சம் வரை வாடகையாம். இதில் பல பாலிவுட் நட்சத்திரங்கள் பங்களாக்களை வாங்கியிருக்கிறார்களாம். இந்தி மற்றும் ஹாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்ட இதன் திறப்பு விழாவின் செலவு 160 கோடியாம். வாணவேடிக்கை மட்டும் 56 கோடி. உலக முதலாளிகளுக்காக இந்த தனித் தீவை   கெர்ஸனர் இன்டர்நேஷனல் என்ற பன்னாட்டு நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. பக்கத்தில் ஈராக் என்றொரு நாட்டில் அன்றாடம் இழவு வீட்டு ஒப்பாரி நடக்கும் நேரத்தில் திறக்கப்பட்ட இந்த பிரம்மாண்டத்தின் இந்தியப் பதிப்புதான் தாஜ் ஓட்டல். முதலாளிகளின் உல்லாசபுரி தாக்கப்பட்டதையே தேசத்தின் மீதான தாக்குதலாக சித்தரிக்கின்றன ஊடகங்கள். மக்கள் அடிபட்டால் கண்டும் காணாமலும் இருப்பவர்கள் முதலாளிகள் தாக்கப்பட்டதும் கதறி அழுகிறார்கள்.

புதன் கிழமை தீவிரவாதிகள் மும்பையில் புகுந்ததால் வியாழக்கிழமை பங்குச் சந்தை மூடப்பட்டது கடந்த 20 வருடத்திற்குள் இரண்டாவது முறையாம். இரண்டு நாள் வர்த்தகம் மூடப்பட்டதால் 50,000 கோடி இழப்பாம். மேலும் திரையரங்குகள், ஓட்டல்கள் எல்லாம் ஆளின்றி கலெக்ஷன் குறைந்தது பற்றியெல்லாம் பத்திரிகைகள் அருவருப்பின்றி கவலைப்படுகின்றன. இவர்களோடு ஒப்பிடும்போது நீரோக்கள் பிடில் வாசித்த கதையெல்லாம் வெறும் தூசு!

ஐந்து பந்தயங்கள் முடிந்து இரண்டு பந்தயங்களை ரத்து செய்து விட்டு நாடு திரும்பியிருக்கிறது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. கிரிக்கெட் போட்டிகள் ரத்தானதையும் பத்திரிகைகள் கவலைப்படத் தவறவில்லை. அதிலும் அந்த அணியின் உடமைகள் இன்னமும் தாஜ் ஓட்டலில் இருக்கிறதாம். அவற்றுக்கு என்ன கதி ஏற்பட்டதோ என்று கூட செய்திகளை வெளியிடுகிறார்கள். மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடக்குமா நடக்காதா என்ற விவாதம், 20 ஓவர் போட்டிகளைக் கொண்ட சாம்பியன்ஸ் லீக் போட்டி தள்ளி வைக்கப்பட்டது, 2011 இல் நடைபெற இருக்கும் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி நடக்குமா என்ற ஐயம், இந்திய அணியின் பாக் சுற்றுப்பயணம் ரத்தானது எல்லாம் மும்பைத் தாக்குதலின் இரத்தம் உலர்வதற்குள் விவாதத்திற்கு வந்துவிட்டன.

கிரிக்கெட்டின் பிரபலத்தை வைத்து தீவிரவாதிகளுக்கெதிரான நடவடிக்கைகள் என்ற பெயரில் சர்வாதிகாரத்தை உசுப்பி விடுவதில் ஊடகங்கள் முனைந்திருக்கின்றன. ஏற்கனவே ஐ.பி.எல் போட்டிகள் நடக்கும் போது ஜெய்ப்பூரில் குண்டுகள் வெடித்தன. அப்போது ஒரு கோடியை நிவாரணமாகக் கொடுத்து விட்டு போட்டி நடப்பதற்கு முன் இரண்டு நிமிடங்கள் அஞ்சலி செய்து விட்டு ஆட்டத்தை தொடர்ந்ததைப் போல இப்போது முடியவில்லை. அவ்வகையில் தமது வசூல் பறிபோனது குறித்து கிரிக்கெட் முதலாளிகள் வெறுப்பில் இருக்க, இங்கிலாந்து வீரர்கள் பயபீதியில் உறைய, ரசிகர்களோ தங்களது பொழுதுபோக்கு ரத்தானது குறித்து கடுப்பில் இருக்க தீவிரவாதத்தின் குறி சரியாகத்தான் அடித்திருக்கிறது. மும்பைத் தாக்குதலில் வர்த்தக உலகம் தனது வருவாயை இழந்திருப்பதும் தாஜ் ஓட்டலின் கவலைக்கு ஈடான இடத்தைப்  பிடித்திருக்கிறது.

இந்தியாவின் வர்த்தகத் தலைநகரமென்று புகழப்படும் மும்பை இப்போதுதான் தாக்கப்பட்டிருக்கிறதா?
இதற்கு முன்பும் பலமுறை தாக்கப்பட்டிருக்கிறதே?
அப்போது இல்லாத ஆர்ப்பாட்டங்கள் இப்போது ஏன்?

– தொடரும்

 

  1. ஞாநி எழுதிய ஆங்கில கட்டுரைக்கும்,இதற்கும் உள்ள ஒற்றுமைகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசு கிடையாது :). தலைப்பே சொல்லி
    விடுகிறது நீங்கள் அங்கு சுற்றி இங்கு
    சுற்றி என்ன சொல்லப் போகிறீர்கள்
    என்பதை.

  2. ‘இந்தியாவின் வர்த்தகத் தலைநகரமென்று புகழப்படும் மும்பை இப்போதுதான் தாக்கப்பட்டிருக்கிறதா?
    இதற்கு முன்பும் பலமுறை தாக்கப்பட்டிருக்கிறதே?
    அப்போது இல்லாத ஆர்ப்பாட்டங்கள் இப்போது ஏன்?’

    அப்போதும் இப்பபோதும் ஊடகங்கள்
    தீவிரவாதத்தினால் பாதிப்புற்றோருக்கு
    ஆதரவாய் இருந்தன.உங்கள் கட்டுரையில்
    தீவிரவாத தாக்குதலை கண்டிப்பதை,
    விட உங்களுக்கு பிடிக்காதவர்களை திட்டும் எண்ணம் நன்றாக வெளியாகியுள்ளது.
    மலினமாக அரசியல் செய்யும் பிறரை
    ஆர்ப்பாட்டங்கள் செய்வதாக எழுதுவது
    வேடிக்கை.

  3. மும்பை தாக்குதல் நடந்த 60 மணி நேரமும் இடைவிடாது பல்வேறு கோணங்களிலிருந்து குறிபார்த்து நம்மை சுட்டன ‘செய்தி’ தொலைகாட்சிகள். சன்டை சீன் முடிந்துவிட்டது, இப்போது நடப்பது சென்டிமென்ட் சீன். யார் சிறந்த தேச பக்தர் என அறிவிக்கப்படாத போட்டியை நடத்துகிறது, கருத்து சொல்ல வருகிற அறிவு சீவிகளும் ‘இந்தியா’ வந்து ஆடுகிறார்கள், விசயகாந்தே தோற்குமளவிற்கு தம் கட்டி தேசபக்தி டைலாக் பேசுகிறார்கள். மாற்றுப் பார்வைக்கோ, ஜனநாயக பூர்வமான அலசலுக்கோ இடமில்லாமல் தேச வெறி ஊட்டப்படுகிறது. இது போன்ற இக்கட்டான தருனங்களில் ஒருசிலர் பொது புத்திக்கு ஆட்படாமல் தீர்க்கமான கருத்துக்களை முன்வைக்கிறார்கள். அதில் ஒன்றுதான் மருத்துவர் ருத்ரன் ஆங்கிலத்தில் எழுதிய இந்த பதிவு. படியுங்கள் Mumbai – The Pain and the Shame

  4. Imperialist USA used the WTO tower to wage an injustice war against Afghanistan & Iraq which resulted in killing lakhs of people. Now India is trying to use this opporunity to invade Pakistan.

    The people from both USA and India should oppose their terrorists rulers.

  5. என்னடா ஆச்சு….இவ்வளவு உயிர் பலி நடந்தும் வினவு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தவில்லையே..என நினைத்தேன்.

  6. வாய்யா குமரன்…நீதானே தேவர் சாதி வெறியன்னு பேசுன அஹிம்ஸாவாதி…இப்ப என்ன காமெடி பண்ண வந்தியா? இது உன் இடமில்ல போய் பட்லிவடை கடையில மாவாட்டு…வந்துட்டானுங்க
    என்ன எழுதியிருக்குன்னு இன்னமும் படிக்கவேயில்ல அதுக்குள்ள கருத்து சொல்ல வந்துட்டாரு நாட்டாம தீர்ப்பு சொல்ல…. ஆரம்பத்திலேருந்து படிய்யா மொதல்ல

    //மாற்றுப் பார்வைக்கோ, ஜனநாயக பூர்வமான அலசலுக்கோ இடமில்லாமல் தேச வெறி ஊட்டப்படுகிறது. இது போன்ற இக்கட்டான தருனங்களில் ஒருசிலர் பொது புத்திக்கு ஆட்படாமல் தீர்க்கமான கருத்துக்களை முன்வைக்கிறார்கள்.//

    வலைஞர் கருத்துடன் உடன்படுகிறேன்..இந்த மீடியா அட்டகாசம் தாங்கல.. இலங்கையில ஆயிரக்கணக்கான தமிழர்களை கொல்லும் போது இந்த சர்தேசாயிகளும் பர்காகளும் என்னத்த புடுங்க போயிருந்தாங்க.

  7. ஆம்,
    தேவர் சாதி வெறியன்னு பேசுன அஹிம்ஸாவாதி….நான்தான். மும்பை தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்போம் என்கிறேன் நான். காரணத்தை தேடுவோம் என்கிறாய் நீ. சிங்கள அரசும் பல காரணங்களை சொல்கிறது..தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு… ” மாற்றுப் பார்வைக்கோ, ஜனநாயக பூர்வமான அலசலுக்கோ இடமில்லாமல் தமிழ் இன வெறி ஊட்டப்படுகிறது ” என சிங்கள அரசு சொன்னால் நீ என்ன செய்வாய்..??.. நூற்றுக்கணக்கான இந்தியர்கள் கொல்லப்பட்டபோது நீ எங்கு புடுங்க போயிருந்தாயோ அங்குதான் ஆயிரக்கணக்கான தமிழர்களை கொல்லும் போது இந்த சர்தேசாயிகளும் பர்காகளும் புடுங்க போய் இருப்பார்கள். அதாவது காரணங்களை புடுங்க போய் இருப்பார்கள்..
    எனக்கு இங்கு வேலை இல்லை என்றால் வேறு யாருக்கு இங்கு வேலை… உங்களைப் போன்ற புடுங்குறவர்களுக்கு மட்டும் தானா..??

  8. Athellam irukatum vinavu.. ippozhuthum thangalin thakkuthal, aalum varkam, muthalithuvam, menmakkal ipdi ne iruke thavira, intha theeviravathigala pathi oru pathu vari ezhuthitu vituteengale?!! athulayum kooda avangala kandikira mathiri therila(thevai illiyo??).. yetho pora pokkula vijayakanthayum arjunayum kindal panitu poiteenga..
    paagam 2nd la yum ithey thana pesuveenga??

  9. குமரா முதலில் நான் இட்ட பிண்ணுட்டத்துக்கு வருத்தம் தெறிவிக்கிறேன். ஒரு வேளை நீ பதிலளிக்காமல் இருந்திருந்தால் உன்னை பற்றி எனக்கு ஏற்கனவே இருந்த கருத்து மாறியிருக்காது.

    வாரணம் ஆயிரத்தையும், கிரிக்கெட் தோல்வியையும் பல மணிநேரம் அலசி காயப்போடும் நாம் இந்த தீவிரவாத தாக்குதலை மட்டும் ஆராயக்கூடாதா?

    தீவிரவாதம் கண்டிக்கதக்கதுதான் காந்தகாரை கண்டித்தோம், அசாமை கண்டித்தோம், அகமதாபாத்தை கண்டித்தோம், கோவையை, டில்லியை, பெங்களூரை, ஹைதராபாதை..நாம் கண்டிக்காத்து உண்டா..ஆனால், வெறும் கண்டிப்பால் ஒழிந்து விடுமா தீவிரவாதம்?

    கண்டிக்க வேண்டும் கண்டிக்க வேண்டும் என மீடீயா மீண்டும் மீண்டும் உரக்க கூவுவதன் பின்ன்னியே ” உன் வேலை கண்டிப்பது மட்டும் தான் ஆராய்வது அல்ல” என்பதுதான். இது இந்தியா மட்டுமல்ல உலகெங்கும் இதுதான் நிலை! அப்பேர்பட்ட அமெரிக்காவிலேயே தீவிரவாதம் இல்லையா..இல்லை மிகவும் பலமான இசுரேல் அமெரிக்க கூட்டணியினால் தீவிரவாத்தஃதை ஒழிக்க முடிந்த்தா?

    இன்று நீயும் நானும் கண்டித்துவிட்டு நம் வேலையை பார்க்க சென்று விடுவோம்… நமக்கு பிறகு நமது பிள்ளைகளுக்கு.. அவர்கள் பிள்ளைகளுக்கு என போக தீவிரவாதம் என்ன சொத்தா? நமது முன்னோர்கள் செய்த தவறை நாம் செய்யலாமா. நமது வாழ்நாளிலேயே இதற்கு விடைகாண வேண்டாமா?

    அதற்ககாக் நடந்த விசயங்களை ஆராயவேண்டாமா, காரணம் இல்லாமல் விளைவு இல்லை என்பது நீ அறியாத்தா? காரணத்தை மாற்றாமல் விளைவை மாற்ற முடியாது.. அதற்காக் ஆராய்வோம், வாதிடுவோம், செயல்படுவோம்..அதுதான் சரியான வழி என நான் கருதுகிறேன்

    இப்போது இதை பேசத்தவறினால் பின்பு வேறொப்பாது பேசுவது… இதுதான் தருணம்… கண்டிப்பது போகட்டும்… தீவிரவாதம் தோன்றுவது ஏன் என்பதற்கும் இதை ஒழிப்பது எப்படி என்பதற்கும் உனது கருத்தை சொல். விவாதிப்போம்

  10. தீவிரவாதத் தாக்குதலில் வர்க்க நியாயங்களும் தர்க்க பேதங்களும் பார்க்க வேண்டுமா ? அதுவே தான் “அவர்கள்” ஆசைப்பாட்டார்கள்.

    ஆங்கில ஊடகம், அதுவும் அமேரிக்க ஊடகம் இதனை விட யார் என்ன தர்க்க நியாயங்களை சொல்ல முடியும்.

    http://online.wsj.com/article/SB122809281744967855.html

    தன் மனைவி மக்களை காப்பாற்ற முடியாதவர், அடுத்தவரைக் காப்பாற்றியுள்ளார்.

    சின்னங்களா இல்லை என்பதா இன்றைய விவாதம் ? இது போல் தேவையற்ற விவாதங்களை இந்தியாவில் ஏற்படுத்தத்தானே தாக்கினார்கள்.

    எந்த வர்க்கத்தைத் தாக்கினார்கள் என்பது முக்கியமல்ல. அப்பாவிகளைக் கொல்வது எந்த நாட்டினாலும் அனுமதிக்க முடியாது, அனுமதிக்கக் கூடாத செயல்.

    மீனவர்களும் நாட்டுக்காகத் தங்கள் கடமையைச் செய்ய ஊடங்கள் அதனைக் காட்டியுள்ளதே! அவர்களும் இழப்பை சந்தித்துள்ளனரே!

    அதுமட்டுமல்ல இதுவரை எந்த வர்க்கத்தைத் தாங்கினாலும் இந்தியா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் வருந்தத்தக்க உண்மையும் கூட!

    ஆய்ந்து, பகுத்து, வகுத்து எல்லாம் செய்தாகிவிட்டது. இனி விவாதிப்பதற்கும் எதுவும் இல்லை. எதிர்வினைக்காகவே இந்திய மக்கள் காத்திருக்கிறோம்.

    இந்த தாக்குதலில் எஃ.எம் வானொலிகள் சொல்லாத பிரிச்சனைகளை/அர்த்தங்களை உங்கள் இரண்டாம் பகுதியில் பார்க்க இயலுமா ?

  11. குமரனுக்கு மதுவின் பதில் மிக சிறப்பாகவும் ஆழமாகவுமே இருந்தன.இதனால் குமரன் மாறுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை.குமரன் கோட்சில்லா ,குப்பன் போன்றோர் தாங்கள் வரும் போதே கண்ணுக்கு கடிவாளம் போட்டுக்கொண்டு வருகின்றார்கள்.மறுமொழிக்கான இடத்தில் தன் பேர் வரவேண்டு என்பதற்காகவே தினம் தினம் கோட்சில்லா வந்து கும்மி அடிக்கின்றார்.
    கண்டிப்பாக அவர்கள் மாறவில்லைஎனினும் பொது கருத்துடைய நபர்கள் இந்த மறு மொழியின் மூலம் மறு காலனியின் கொடுமைகளையும்,பார்ப்பன பாசிசத்தையும் உணர்வர்.
    எங்களுடய கவிதை இவரை போன்றவர்களுக்காக……

    நீ உண்ணும் உணவை
    உடுத்தும் ஆடையை,
    ஆபரணங்களை நெஞ்சில்
    கை வைத்துசொல் உனக்காகத்தான்
    மேற்கொள்கின்றாயா? இப்போதும்
    மவுனமாய் உதிர்க்கின்றாய் “என்னபண்றது?”

    நான் மவுனமாய் அல்ல
    உரக்கச்சொல்லுவேன்
    உன் “என்னபண்றது” என்பது
    தான் உன் பதில்
    தப்பித்தவறி எதுவுமே
    உனக்கு செய்து விடக்கூடாது
    என்பதில் பிறந்த
    பதில் அது…..

    தரகர்களின் சூறையாடலில்
    சிக்கி திணறுகின்றது உன்
    தேவைகள்
    நாளை கூட
    நாளையென்ன நாளை
    இக்கணமே கூட நீ
    எறியப்படலாம் சக்கையாய்……

    http://kalagam.wordpress.com/

  12. தங்களின் கட்டுரை பார்ப்பன பயங்கரவாதத்துக்கெதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வக்கிகும்.தோழர் மருதையன் சொன்னது போல”வாயில் வந்தே மாதரம் கையில் கோககோலா”பிறகு “வாயில் கோலா ஆசனவாயில் வந்தே மாதரம் ” இது தான் இன்றையா யோக்கிய சிகாமணிகளின் யோக்கியதை.ஆளும் வர்க்கம் அழு என்று சொன்னால் அழ வேண்டும்,சிரி என சொன்னால் சிரிக்கவேண்டும் மறுத்தால் பயங்கரவாதி தீவிரவாதி பட்டங்கள் தானாக வந்து சேரும்.பாசிச பயங்கரவாதிகள் ஆளும் நாட்டில் புனிதர் பட்டம் எதிர் பார்ப்பது தவறு. உங்களின் அடுத்த பாகம் பார்ப்பனீயத்துக்கெதிரான போர்வாளாய் இருக்கும் என நம்புகின்றோம்.முடிந்தால்
    படிக்கவும்

    மும்பை தாக்குதல்கள்-எது பயங்கரவாதம்?

    கலகம்

  13. vinavu katturai netthiyadi for capitalists.
    here one doubt for me.
    sadhviya thottavudane advani alaruraru. udane Manmohan advani ya poi pakkirar. ATS chief ku kolai mirattal. exact a rendu nnal kazhich avar pona jeep gali. avarum gali. eppadippa?? sonna madhiri ATS chief gali???
    eppadi ATS chief pora jeep terroristukku therinjadhu???
    vinavuuuuuuuuuuuuuuuuuuu?????
    any answer?????
    rajan s.

  14. இந்தப் பெயரில் மேலே வந்த கமெண்ட் நான் போட்டதல்ல.

    கமெண்ட் போடக்கூட ஐ.டி வைத்துக் கொள்ள வேண்டும் போலிருக்கே…

  15. ஊடகங்களூக்கு விளம்பர வருவாய் தருவது .. யார்? அவர்களூக்கு சார்பாக .. நன்றிகடனாக அவர்கள் செய்வது தவறா? நன்றி மறப்பது நன்றா…

    மணிக்கொருமுறை பிரேக்கிங் நியூஸ் வேண்டும்…. அதுவும் பரபரப்பாக… லைவ் கவரேஜ் செய்ய வேண்டும்.. அதற்கு விளம்பரதாரர் ஆதரவு வேண்டும்…

    தாஜ் ஓட்டலை பற்றியே பேசறீஙளேடா… மும்பை சி எஸ் டி… அஙக செத்தவன்… அவன பற்றியும் பேசுங்கடா… ஆனா பேச மாட்டிங்க.. ஏன்னா.. இங்க செத்தவ்ன் பார்வையாளன்… செத்தவன் போக இன்னும் 100 கோடிக்கும் மெல இருக்கான் பார்க்க. ..

    ஆனா தாஜ் ஹோட்டல்ல செத்தவன் பனம் தரவன்…

    நன்றி மறப்பது நன்றோ…

    இந்த நாடும் …நாட்டு ஊடகங்களூம் நடுனிலைமை தவறி நாசமாக போய் ரொம்ப நாள் ஆச்சு…

    .

  16. Look at the mail i got…. kadavula… mudiyala
    :O(

    *****************

    13 May ——– JAIPUR
    June———NA———-
    26 July ———— AHMEDABAD
    August ————NA—————
    13 September ———— DELHI
    October ———-NA—————
    26 November ————— MUMBAI
    December ——–NA(hopefully)——————–
    13 January —————– What Next?

    Please be careful in the week of January 13.
    This might be some random observation of sequence dates of bomb blasts or terror attacks.
    But there’s no harm in keeping ourselves alert..

  17. மது,
    கலகம் சொன்னது போல் உங்களுடைய பதில் மிக சிறப்பாகவும் ஆழமாகவுமே இருந்தன. ஆனால் மாறுவதற்கு நான் என்ன தீவிரவாதியா ??? நான் என்ன சொல்கிறேன்…வன்முறை எங்கு நிகழும் போதும்..அது திண்ணியமாக இருந்தாலும், மேலவளவாக இருந்தாலும், சட்டக்கல்லூரியாக இருந்தாலும், மும்பையாக இருந்தாலும், குஜராத் படுகொலைகளாக இருந்தாலும் முதலில் ஒரே நிலையில் கண்டிப்போம். பிறகு சட்டப்படி தண்டிப்போம். நீங்கள் சொல்வது போல் மேலே சொன்ன எல்லா நிகழ்வுக்கும் ஒரு காரணம் இருக்கும். மேலவளவு கொலைகாரர்களுக்கு மனிதாபிமானம் இல்லாவிட்டாலும் கொலைக்கான காரணம் இருக்கும்.அதை ஆராய்ந்து நோக்குவது எவ்வளவு மோசமான செயல். அதே போல் தான் தீவிரவாதிகளுக்கு ஆயிரம் காரணம் இருப்பினும் மும்பை தாக்குதலை ஆராய்ந்து நோக்குவதும் மோசமான செயல் என்று நான் கருதுகிறேன்.இருப்பினும் தீவிரவாதம் மத வெறியின் பரிணாம வளர்ச்சி என்றே கருதுகிறேன். மது,
    தவறான வார்த்தைப்பிரயோகம் இப்போதும் இதற்கு முன்பும் இருக்குமேயானால் என்னை மன்னிக்கவும்…

  18. intha mathiri comment podanumnrathuku nan ippo blogger id la vachukala..

    >kumar, மேல் டிசம்பர் 4th, 2008 இல் 12:20
    >மு.பகல் சொன்னார்:
    >இந்தப் பெயரில் மேலே வந்த கமெண்ட்
    >நான் போட்டதல்ல.

    >கமெண்ட் போடக்கூட ஐ.டி வைத்துக்
    >கொள்ள வேண்டும் போலிருக்கே…

    hmm.. neenga solra ella karuthukum nan othu poran.. muthalalithuvam, menmakkalin pokku, mediakalin poku, anaithume kandikathakkavaithan.. taj onnum oru average indian oda symbol kidayathu.. ithula kodumai ennana, athu munnadi poi nethu ella ariva(vi)ligal sila hindi padangala pathutu mezhuguvathi yethuran, kandikiren pervazhi nu panitrunthanunga.. ithayum live relay otitrukkanunga the so called “representatives of India” media karanunga.. periya kodumai enna na vanthu kathunavanunga la ethana peru ottu poduvanunganey theriyathu.. ivanunga vanthu education system, law, policing, ruling ellathayum mathanum nu kathuranunga.. kodumai.. ithai ellam kandikalam.. thappe illa… nan othukuran..

    aana ithukelam karanam antha pathu peru.. avangala pathiyum neenga pesi than aaganum.. athula neenga avalava seyyala(ithu varai 2nd part therila) nu thonuthu.. thirumbavum nanga ithaye than solla porom na onnum solrathukilla..

  19. […] இடுகைகள் மும்பை 26/11: அமெரிக்காவால் ஆசிர்வதிக்கà…வெடித்த குண்டுகள் ! புதையுண்ட […]

  20. ஏற்கனவே பொடா வேண்டும் என வலியுறுத்துகிற இந்துத்துவ பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை முன் வைத்து, குளிர்காய போகிறார்கள்.

    இந்துத்துவ பயங்கரவாதிகள் உண்டாக்கிய கலவரங்கள் மற்றும் கொலைகளுக்கு இதுவரை ஒருவரும் தண்டிக்கப்படவில்லை.

    சமூக அக்கறை கொண்டவர்கள் மட்டுமே எதிர்த்து போராடுகிறார்கள்.

    பெரும்பான்மையினர் இதை எதிர்த்து போராட வேண்டும். அப்பொழுது அமைதியாக இருக்கிறார்கள்.

    எதிர்வினையாக தீவிரவாதிகள் குண்டுகள் வெடிக்கும் பொழுது, எல்லோரும் சேர்ந்து கொண்டு, தேச பக்தி என்ற பெயரில் விஷம் கக்குகிறார்கள்.

    கலவரம், குண்டுவெடிப்பு – என்பது ஒரு சங்கிலி தொடர் போன்றது. விளைவு பாசிசம் தான் எழும். அப்பொழுது எல்லா முற்போக்காளர்களும், சிறுபான்மை இனத்தவர்களும் தான் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

    எல்லோரும் இதை உணர்ந்து, பார்வையாளனாக மட்டும் பார்த்து கொண்டிராமல், கருத்து மட்டும் சொல்லிக்கொண்டிராமல், களத்தில் இறங்கி போராட முன்வர வேண்டும்.

Leave a Reply to மது பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க