privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இந்துமதவெறியால் பிளவுண்ட மும்பை ! (பாகம் – 2)

இந்துமதவெறியால் பிளவுண்ட மும்பை ! (பாகம் – 2)

-

மும்பைத் தாக்குதலுக்காக ஆங்கில ஊடகங்கள் சாமியாடுவது இதுவரை நிற்கவில்லை. வருமானவரி கட்டும் பணக்கார இந்தியர்களுக்கே பாதுகாப்பில்லை, என்ன அநீதி என்று கொதிக்கிறார் பணக்கார இந்தியர்களின் விருந்து வைபவங்களை பத்தியாக எழுதும் ஷோபா டே. உடைந்து கிடக்கும் கண்ணாடித் துண்டுகளின் மத்தியில் நின்றவாறு ஆவேசமாக ஆடுகிறார் என்.டி.டி.வியின் பர்கா தத். வருமானவரி கட்டும் முதலாளிகள் அந்த வரியை பாமர மக்களின் மேல் மறைமுக வரியாய் சுமத்துகிறார்கள் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத அந்த அம்மணிக்கு எவ்வளவு ஆணவம்? ஏன், வருமான வரி கட்டாத இந்தியர்களின் உயிர் என்றால் அவ்வளவு இளப்பமா? அவர்களுக்குப் பரிச்சயமான மேட்டுக்குடி மும்பையில் விழுந்த சிறு கீறலைக்கூட அவர்கள் தாங்குவதற்குத் தயாராக இல்லை.

தாஜ், ஓபராய் விடுதிகளில் உயிரிழந்து, அடிபட்ட முதலாளிகளுக்கு ஆறுதல் சொல்லும் விதத்தில் சிவராஜ் பாட்டீல் உள்துறை பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டு ப. சிதம்பரம் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார். இதில் நிதியமைச்சகத்தை பிரதமரே வைத்துக் கொண்டிருப்பது அந்நிய முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியதோடு, மும்பைத் தாக்குதலால் சீர்குலைந்த பங்குச் சந்தை மீண்டும் எழுந்திருக்கிறதாம். அவர்களது பாதுகாப்புக்காகக் கவலைப்பட்டுச் செய்யப்படும் மாற்றங்கள் கூட அவர்களது பங்குச் சந்தை பாதிக்காதவாறு செய்ய வேண்டுமாம்.

மும்பை போன்ற நகரங்களில் இது போன்ற சிறிய தாக்குதல்கள் சகஜம் என்று கருத்துரைத்து ஊடகங்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட மராட்டியத்தின் துணை முதல்வர் ஆர். ஆர். பாட்டீல் வேறு வழியின்றி ராஜினாமா செய்திருக்கிறார். விலாஜிராவ் தேஷ்முக்கும் ராஜினாமா கடிதத்தை காங்கிரசு மேலிடத்திற்கு அனுப்பிவிட்டதாகவும் முடிவு அவர்கள் கையில் எனத் தெரிவித்திருக்கிறார். தற்போது இவரது விலகலையும் காங்கிரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. இதுபோக காங்கிரசுக் காரிய கமிட்டியில் எல்லோரும் உணர்ச்சி வசப்பட்டு விவாதித்தார்களாம். அவர்களுக்கு புரவலராக இருக்கும் முதலாளிகளுக்கு ஒரு ஆபத்து என்றதும் காங்கிரசின் மனசாட்டி துடிக்கிறது. ஏ.கே.அந்தோணி, பிரணாப் முகர்ஜி, இறுதியில் மன்மோகன் சிங்கும் தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலகுவதாகக் கூறினார்களாம். இறுதியில் சிவராஜ் பாட்டீலை மட்டும் இப்போதைக்கு விடுவித்து ஊடகங்களின் வாயை அடைக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

முன்னெப்போதுமில்லாத அளவுக்கு தார்மீகப் பொறுப்பு இப்போது மட்டும் நினைவுக்கு வரவேண்டிய அவசியமென்ன? காங்கிரசு கூட்டணி அரசு பதவிக்கு வந்த 2004 ஆம் ஆண்டு முதல் இன்று வரை நடந்த 25,000ம் குண்டுவெடிப்புக்களில் 7000 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இவர்களுக்கு முந்தைய பா.ஜ.க கூட்டணி அரசு ஆட்சியிலிருந்த போது நடந்த 36,259 குண்டு வெடிப்புச் சம்பவங்களில் 11,714 பேர் கொல்லப்பட்டனர். அப்போது எங்கே போனது இந்த தார்மீகப் பொறுப்பு?

2001 குஜராத் இனப்படுகொலையில் 2000த்திற்கும் மேற்பட்ட இசுலாமிய மக்கள் கொடூரமாக சங்க பரிவார குண்டர்களால் கொல்லப்பட்டனரே அப்போது மோடியோ, அத்வானியோ, வாஜ்பாயியோ ஏன் ராஜினாமா செய்யவில்லை? மோடியின் தலைமையில் இந்துமதவெறிக் கும்பல் நடத்திய இந்த இனப்படுகொலையை கொலைகாரர்களின் வாக்குமூலத்திலிருந்தே தெகல்கா ஏடு அம்பலப்படுத்திய போதும் இவர்களை யாரும் ஒன்றும் புடுங்க முடியவில்லையே?

முதலாளிகளின் உயிருக்குள்ள மதிப்பு இசுலாமிய மக்களுக்கில்லையா? அவர்கள் என்ன ஆடுமாடுகளா? இன்றைய இந்தியாவின் குண்டுவெடிப்புகளுக்கு அச்சாரம் போட்ட 93 மும்பைக் கலவரத்தை எடுத்துக் கொள்வோம். ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசுலாமிய மக்களைக் கொன்று குவித்த இந்த கலவரத்தை தனது 300 ஆண்டு வரலாற்றில் மும்பை கண்டதில்லை. பிரிவினைக்குப் பிறகு இவ்வளவு பெரிய கலவரத்தை நாடும் சந்தித்ததில்லை. உண்மையில் மும்பையில் நடந்த பயங்கரவாதம் இதுதான். இன்றைய பயங்கரவாதங்களுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பதும் இதுதான்.

92 டிசம்பர் ஆறாம் தேதியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு மும்பையில் அதைக் கொண்டாடும் முகமாக சிவசேனா மகா ஆரத்தி என்ற புதிய பண்டிகையை அறிமுகப்படுத்தியது. தெருவில் கும்பலாக நின்று கொண்டு முசுலீம் துவேச முழக்கங்களை முழங்கிக் கொண்டு ஆரத்தி எடுத்தவாறு இந்து மதவெறி மும்பை முழுவதும் தீயாய் பரப்பப்பட்டது. இதை அறுவடை செய்ய இந்துமதவெறியர்கள் ஏதாவது ஒரு காரணத்திற்காகத் தயாரிப்புடன் காத்திருந்தனர். மும்பைப் புறநகர் ஒன்றில் தொழிற்சங்க மோதலுக்காக இரு சுமை தூக்கும் தொழிலாளர்கள் கொலை செய்யப்பட்டவுடன் சிவசேனா அதற்கு மதச்சாயம் பூசி கலவரத்தை துவக்கியது.

மூன்று இலட்சம் பிரதிகள் விற்கும் சிவசேனாவின் சாம்னா நாளிதழில் பால் தாக்கரே இசுலாமியர்களைக் கொல்லுமாறும் இனிவரும நாட்கள் நம்முடையவை எனவும் பகிரங்கமாகக் கலவரத்தைத் துவக்குமாறு ஆணையிட்டார். ஜனவரி 7 முதல் 20 வரை இரண்டு வார காலம் மும்பை சிவசேனா பிணந்தின்னிகளின் நகரமாகியது. உ.பியிலிருந்து ரொட்டித் தயாரிப்புத் தொழிலுக்காக வந்த முசுலீம் தொழிலாளிகள், மரவியாபாரம் செய்து வந்த கேரளாவின் மாப்ளா முசுலீம்கள், உ.பி, பீகாரின் சுமைதூக்கும் முசுலீம் தொழிலாளிகள் யாரும் தப்பவில்லை. அன்றைய மும்பையின் மக்கள் தொகை ஒருகோடியே 26 இலட்சமென்றால்  அதில் முசுலீம்களின் தொகை 14 இலட்சம். இதில் நான்கு லட்சம் முசுலீம் மக்கள் மும்பையை விட்டு வெளியேறினர். 40,000 பேர் அகதிகள் முகாமில் தஞ்சமடைந்தனர்.

ஹிட்லரின் நாசிக் கட்சியின் பாணியில் முசுலீம் வீடுகளுக்கு பெயிண்டால் அடையாளமிட்டு ஆள் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக ஏரியா மாறி சிவசேனா குண்டர்கள் இராணுவம் போல தாக்கினர். தாடிவைத்தவர்கள், சுன்னத் செய்திருக்கிறார்களா என்று திறந்து பார்த்து அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முசுலீம்கள் எல்லோரும் ஒரே நேரத்தில் தாக்கப்பட்டனர். அனாதை இல்லங்களில் உள்ள குழந்தைகளைக் கூட முசுலீம் குழந்தைகளா என்று பெயர் கேட்டு அடித்திருக்கின்றனர். சிவசேனாவை எதிர்த்து எழுதிய ஒருசில மும்பைப் பத்திரிகைகளும் பால்தாக்கரேவின் குண்டர்களால் தாக்கப்பட்டன. தாராவியிலிருந்த முசுலீம்களோடு தமிழ் மக்களும் கூட இந்தக்கலவரத்திற்காக நகரை விட்டு வெளியேறி தமிழகம் வந்தனர்.

மும்பைப் போலீசு சிவசேனாவின் பாதுகாப்புப் படையாக பணிபுரிந்தது. இன்றைக்கு தீவிரவாதிகளுடன் சமர்புரிந்தவர்கள் அன்று இந்து போலீசாக மட்டும் செயல்பட்டனர். அன்று முதலமைச்சராக இருந்த நாயக்கோ, பிரதமராக இருந்த நரசிம்ம ராவோ யாரும் ராஜினாமா செய்யவில்லை என்பதோடு சிவசேனாவின் அட்டூழியங்களுக்கு ஒத்தூதிக் கொண்டிருந்தனர். அரசுக் கணக்குப்படி 500 முசுலீம்களும், பத்திரிகைகளின் கணக்குப்படி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தக் கலவரத்தில் கொல்லப்பட்டனர். எல்லோருக்கும் வாழ்வளித்து மாநகரக் கலாச்சாரத்திற்கு முன்னோடியாக இருந்த மும்பை இந்துமதவெறியால் அப்போதுதான் பிளவுண்டது. முதன்முறையாக பணக்கார முசுலீம்களும் கலவரத்தில்  தாக்கப்பட்டனர். இப்போது தாஜ் ஓட்டலுக்காக கண்ணீரைத் தாரைவார்க்கும் மேட்டுக்குடி குலக்கொழுந்துகள் எதுவம் அன்று இரத்தக் கறைபடிந்த  மும்பை தனது அழகை இழந்துவிட்டதென வருத்தப்படவில்லை. வருத்தப்பட்டுப் பாரமும் சுமக்கவில்லை. அப்படிடச் சுமந்திருந்தால் அவர்களது புண்ணியத் தலமான தாஜ் ஓட்டலுக்கு நேர்நத களங்கத்தை தவிர்த்திருக்கலாமே?

மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் வற்புறுத்தலால் பின்னாளில் காங்கிரசு அரசு 93 மும்பைக் கலவரம் குறித்து விசாரிக்க ஸ்ரீகிருஷ்ணா கமிழஷனை நியமித்தது. சிவசேனாவின் மிரட்டலான சூழ்நிலையையும் மீறி நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா குற்றமிழைத்த தாக்கரேக் கட்சியனரையும், போலீசு அதிகாரிகளையும் அடையாளம் காட்டினார். ஆனாலும் இந்தக்கமிஷனின் அறிக்கை இன்றுவரை குப்பைக் கூடையில் தூங்குவதுதான் கண்ட பலன். கலவரத்தைத்தான் தடுக்கவில்லை, கலவரத்தின் குற்றவாளியைக்கூட கைது செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கு யார் தார்மீகப் பொறுப்பேற்பது?

நாரிமன் இல்லத்தில் இசுரேலியர்களைத் தீவிரவாதிகள் தாக்குகிறார்கள் என்றதுமே இசுரேலிய அரசின் வற்புறுத்தலுக்கேற்ப அமெரிக்க அரசு கமாண்டோ படை அனுப்பட்டுமா என்று இந்திய அரசைக் கேட்டது. உடனே பிரனாப் முகர்ஜி இந்த நாட்டை 61 ஆண்டுகளாக ஆண்டு வருகிறோம், எங்கள் பிரச்சினைகளை நாங்களே தீர்த்துக்கொள்ளும் வல்லமையை பெற்றிருக்கிறோம், அமெரிக்க உதவி தேவையில்லை என்று ரோஷத்துடன் பேட்டியளித்தார். இந்த மானம் குஜராத், மும்பைக் கலவரங்கள் நடக்கும் போது எங்கே போயிற்று? பத்தாண்டு காலத்தில் இந்தியா முழுவதும் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட போது காங், பா.ஜ.க அரசின் வேளாண் துறை அமைச்சர்கள் எவரும் ராஜினாமா செய்வது இருக்கட்டும், ஒரு சொட்டு கண்ணீர் கூட விடவில்லையே? இவ்வளவுபேர் இறந்து போனதால் வராத ரோஷம் தாஜ் ஓட்டலின் பாரைக் காலி செய்த உடன் பொத்துக்  கொண்டு வருகிறதே?

இன்றைக்கு ஒன்றுக்கு மூன்று தாக்கரேக்கள் மராட்டியத்தில் வலம் வருகிறார்கள். மருமகன் ராஜ் தாக்கரே  தனி சமஸ்தானத்தை உருவாக்குவதற்கு அப்பாவி பீகாரி தொழிலாளிகளையும், மாணவர்களையும் தனது வானரப்படையால் தாக்கி வருகிறார். அப்போது கூட அவர் மீது நடவடிக்கை எடுக்க எவ்வளவு பயம்? 2008 இல் இதுதான் நிலைமை என்றால் 93 இல் எப்படி இருந்திருக்கும் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். இருப்பினும் அன்றைக்கு அப்பாவி முசுலீம்களை வேட்டையாடிய தாக்கரேக்கள் இப்போது துப்பாக்கியுடன் வந்தவர்களைப் பார்த்து வெலவெலத்துப் போயிருக்கிறார்கள் என்பதும் உண்மைதான். மும்பைத் தாக்குதல் குறித்து பெரிய தாக்கரே தனது சாம்னா பத்திரிக்கையில் ஒன்றும் சீறக் காணோம். இதை பார்க்கும் போது இந்து மதவெறியர்களால் உற்றார் உறவினரைப் பறிகொடுத்த ஒரு முசுலீம் இளைஞன் தீவிரவாதம்தான் தீர்வு என்று யோசிக்கமாட்டானா என்ன?

இந்து மதவெறியர்களின் கலவரங்கள்தான் தீவிரவாதத்தின் தோற்றுவாய். இந்தத் தோற்றுவாயை வேரறுக்காமல் புதிய சட்டம் – புலனாய்வுப் பிரிவு – போலீசுப் படை தீவிரவாதத்தின் அபாயத்திலிருந்து இந்தியாவைக் காப்பாற்றிவிடுமா?

– தொடரும்

 

 1. hindutva, us foreign policy, capitalism, corrupt n insensitive govt, farmers.. ivai kuritha anaithu karuthukalayum nan aamothikiran.. mikavum kadumaya kandikavum varunthavum seikiren.. ithai matum nan unga kita irunthu ethirpakalai vinavu.. pona pathivula kadasiya pinnootam potrunthan.. ivai ellam matum than thavaru nu ungaluku padutha?? ithuku nan unga kita irunthu pathila(?? poduveengala??) ethirpakaran.. nan enna solla varan nu ungaluku puriyum.. illa na koodiya seekiram puriya vaikiran..

 2. ”2004 ஆம் ஆண்டு முதல் இன்று வரை நடந்த 25,000ம் குண்டுவெடிப்புக்களில் 7000 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இவர்களுக்கு முந்தைய பா.ஜ.க கூட்டணி அரசு ஆட்சியிலிருந்த போது நடந்த 36,259 குண்டு வெடிப்புச் சம்பவங்களில் 11,714 பேர் கொல்லப்பட்டனர். அப்போது எங்கே போனது இந்த தார்மீகப் பொறுப்பு?”

  4 ஆண்டுகளில் 25000 குண்டுவெடிப்பென்றால், ஒரு நாளைக்கு சராசரி எத்தனை?.பாஜக 1998-2004 ல் ஆட்சியிலிருந்தது.கிட்டதட்ட ஆறு ஆண்டுகள்.
  அதில் 36,259 குண்டு வெடிப்பு சம்பவங்கள்,
  11,714 பேர் கொல்லப்பட்டனர்-
  இதற்கு ஆதாரம் என்ன?

  1993ல் மும்பையில் நடந்த குண்டு வெடிப்புகளில் எத்தனை பேர் இறந்தனர்
  என்று தெரியுமா. அதை செய்தது யார்?

  1992ல் நடந்த கலவரங்களில் இந்துக்களும்
  கொல்லப்பட்டனர் என்பது உண்மை.

  மகா ஆர்த்தி முஸ்லீம்கள் தொழுகை
  என்ற பெயரில் பொது இடங்களில்
  கூடி பிறர் நடமாடமுடியாதபடி
  செய்ததன் எதிர்வினை.
  சிவசேனாவை நான் ஆதரிக்கவில்லை.அதன் வன்முறையையும்.

  ‘இந்து மதவெறியர்களின் கலவரங்கள்தான் தீவிரவாதத்தின் தோற்றுவாய். ‘.

  நிச்சயமாக இல்லை.இஸ்லாமிய
  தீவிரவாதம் என்ன என்பதை நீங்கள்
  புரிந்து கொள்ளவில்லை.
  முஸ்லீம்கள் தரப்பு என்ன செய்தாலும்
  அதை மறைமுகமாக நியாயப்படுத்தியே
  எழுதுவதுதான் உங்கள் நோக்கம்.
  பங்களா தேஷில் சிறுபான்மையினரான
  இந்துக்கள் பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட
  பின் தாக்கப்பட்டனர்.அதையெல்லாம்
  எழுதியதால் தஸ்லீமா மீது இஸ்லாமிய
  அடிப்படைவாதிகள் கோபம் கொண்டனர்.
  அடுத்து தலிபான்களுக்கு ஆதரவாக
  தலிபான் செய்தது எல்லாம் அமெரிக்க
  ஏகாதிபத்தியம், ஹிந்த்துவ அமைப்புகள் செய்ததன் எதிர்வினை என்று நீங்கள்
  எழுதினாலும் வியப்படைய ஒன்றுமில்லை.

 3. Excellent… expecting forth coming parts too.

  The comment of rajan in the previous post is very valid one. In this entire trauma, one thing is very fishy – that not only the ATS chief, but a team of ATS officers who were involved in Malegaon probe was killed.

  The current socio-economic conditions of India, Pakistan & America demands some kind of War or war-like scenario or some sort of tension in the border.

  If there is any tension in the border, Pak will move its troops to her eastern border. Then America can easily bargain with Pak establishment about their cross border adventures in Pak’s western border line. Which gives america a complete control onto the pushtoon area. Which they need very desperately at present.

  If there is a war? Weapon supply, post war clean-ups, infrastructure building contracts, dollars-dollars-and-more-dollars for America. Can also pump-in more dollars & trench the sub continent into huge debts.

  I expect vinavu team to throw more light on to this aspect in the up coming parts. May be this sounds like some conspiracy theory; but definitely there is something-something- fishy about this particular terror attack.

  OK-OK Let me save my balls from our great cyber nationalists Godzilla, Dracula, dinosaurs, kumaran & all such filthy creatures – So….

  I CONDOLE FOR THE ATTACK ON OUR NATIONAL ICON TAJ HOTEL & ITS BEAUTIFUL BAR…

  JAIIIIIIIII HIND…!!!!!!!!!!!!

 4. Editor, Your website needs to be controlled, it is turning out to be a place to provoke Hindu, Muslim & inter caste violation.

  If this continues then I will take your articles and the comments to the court file a case against you on raising communal tension.

 5. unmaigalai uraka koovuvathil unga pakkam nan irukiren vinavu.. aanal sila unmaigalai maraitho, kooramalo viduvathin ulnokkam puriyamal than ithanai pinnootangal.. appadi neer seivathil nokkam undendral pesi prayosanamillai.. nadathungal.. ungalukkena othu ootha yegapata kodi thookkigal irukinranar.. nanraga oothungal.. hindutva, capitalism patri pesum neer jihad, simi, lashkar, al qaeda, * mujahideens(ethanai iruku ne therila pa), WIF, taliban, chinese-communism(ithai pathi kandipa neenga ezhuthanum), christian missionaries(ivanga mission aduthu varathu), evangelism, demographic changes in africa, south asia(ithula ethu ethu lam varum nu ungaluku theriyum), vatican ithai ellathayum tholurika mun vareengala?? kandipa nan ungalai mathipen.. atha vitutu oru thalai patchama nadanthukuteengarathu nalla illa..

 6. //தலிபான் செய்தது எல்லாம் அமெரிக்க
  ஏகாதிபத்தியம் செய்ததன் எதிர்வினை//

  Gotzilla,

  Do you dare to say no to this? Who is this Taliban? Read history first… Atleast the past 60 years history.

  prognosticsage

 7. “Vinavu, Vinai Sei” nu title ethuku vacheenga nu sathiyama puriyala.. ipdi oru title ah vachukuta neenga, kanula padura ellathayum ore konathula irunthu than *ViINAVUVAN* nu kanganam katikitu irukura mathiri iruku.. ungal kelvigal ellam sari than.. othukuran.. athuku nu ellathayum vinavanum, kandikanum.. appo than neenga solrathula artham iruku.. illa na pathoda pathinonnu, neengalum onnu.. avalavu than..

 8. மும்பை பயங்கரவாத தாக்குதலை யாரும் எதிர்பார்க்காத வேறொரு சக்தி நடத்தி இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. 200 பேரளவில் கொல்லப்பட்ட இந்த தாக்குதலில், ஒரு முக்கியமான நபரும் அடங்குகின்றார். மும்பை மத்திய ரயில் நிலையத்தில் நுழைந்த ஆயுதபாணி “கண்மூடித்தனமாக” சுட்டதில், சாதாரண பொது மக்கள் மட்டும் பலியாகவில்லை. மும்பை நகரின் “பயங்கரவாத தடுப்பு பிரிவின்” உயர் போலிஸ் அதிகாரி ஹேமந்த் கர்கரேயும், அவரது கூட்டாளிகளும் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்களுக்கு அந்த அதிகாரியின் நடமாட்டம் பற்றி முன்கூட்டியே தெரிந்திருந்ததா?

  http://kalaiy.blogspot.com/2008/12/blog-post_04.html

 9. prognosticsage
  U.S trained islamic miltants.There is no doubt about it.But talibans restricted the education for girls,destroyed the buddha statues in Bamiyan and persecuted those who disagreed with them and
  made burkha compulsory for women. Are you going to aruge that all this is just a response to U.S policy and actions and thereby indirectly defend Talibans.I will not
  be surprised if you folks do so.

 10. அவசியமான கட்டுரை.

  ஜப்பான் காட்சில்லா, தாஙகள் கூறும் கருத்து எல்லாம் தங்கள் ஒரு இந்துத்வா பிரதிநிதி என்பதை தான் காட்டுகிறது.

  முஸ்லீம்கள் அனைவரும் சிறுபன்மமையனவர்கள் . அவர்கள் தவறு செய்வதற்காக தாக்கபடவில்லை
  முஸ்லீம்கள் என்ற ஒரு காரணத்திற்காக தாக்கபட்டனர்.

  முஸ்லீம்கள் தரப்பு , முஸ்லீம்கள் தரப்பு என்றால் என்ன அர்த்தம்?
  முஸ்லீம்கள் எல்லாம் ஒன்னா சேர்ந்தா திட்டம் போட்டார்கள்??

  “முஸ்லீம் தப்பு செஞ்சா முஸ்லீம்கள் தரப்பு என்று தான சொல்ல முடியும் பின்ன ஜப்பான் தலையன் தரப்புனா சொல்ல முடியும்.”என்று தாங்கள் கருதினால்

  ” பொம்பள பொருக்கி பிரேமனந்தா, கொலைகாரன் ரவுடி சங்கராச்சாரி, பயங்கரவாதி பிரக்யா சிங்,”
  இதுங்களையெள்ளாம் இந்து தரப்பு என்று சொல்ல முடியுமா.

  ஆரோக்யமான அறிவை வளத்து கொள்ள கூடிய விவாதங்களை செய்யுஙகள் .
  விதண்டவாதம் செய்யாதீர்கள்

  விடுதலை

 11. ///இதை பார்க்கும் போது இந்து மதவெறியர்களால் உற்றார் உறவினரைப் பறிகொடுத்த ஒரு முசுலீம் இளைஞன் தீவிரவாதம்தான் தீர்வு என்று யோசிக்கமாட்டானா என்ன?///

  Ithai padippavanthaan nichayamaaga theeviravaathiyaaga maaruvaan……Vinavu, unmayai sollungal, aanaal ungal karuthai nilai naatta, theeviravaathigalai uruvaakaatheergal…….

 12. //U.S trained islamic miltants.There is no doubt about it.But talibans restricted the education for girls,destroyed the buddha statues in Bamiyan and persecuted those who disagreed with them and
  made burkha compulsory for women. Are you going to aruge that all this is just a response to U.S policy and actions and thereby indirectly defend Talibans.I will not
  be surprised if you folks do so.//

  When there is no proper platform for the commoner to express his protest it will shelter in the existing Identity… In this case in Afgan it is US sponsered Taliban…. History can be refered to confirm this behaviour of the Mass.

  And the point you have confronted against Vinavu is not about the conservative bullshits of Taliban. yours is all about Terrorism and for that America is the International Mother and Hindhudva is the Indian Sub continent Mother….. May I request you to stick to this point and address your opinions clearly?

  Prognosticsage

 13. And I have some simple questoins to Ask Mr. Godzilla kind of People….

  Questions from Nalladiyar:

  #1) ஐயாயிரம் பேரைக் கொல்வதே நோக்கமென்றால் வடமாநிலங்களில் பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சுட்டிருக்கலாம்.அங்குதான் மோடி, அத்வானி உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்தார்கள். மும்பையிலிருந்து அடித்து விரட்டப் பட்ட பிகாரிகள் சிலரை சேர்த்துக்கொண்டு தாக்கரேயை தாக்கியிருக்கலாம். அனாயசயமாக இவ்வளவு ரிஸ்க் எடுத்து, பாதுகாப்பு நிறைத்த நட்சத்திர ஹோட்டலில் அறையறையாகச் சென்று ஐயாயிரம் பேரைக் கொல்லத் திட்டமிட்டது எவ்வளவு முட்டாள்தனமாகப் போய்விட்டது? என யாரும் கேட்கவில்லை! ‘நியாயப்படி, தர்மப்படி கேட்கவும் கூடாது!’

  #2)சமீப குண்டு வெடிப்புகளுக்குப் பின்னர் முக்கியப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் சொல்லப்பட்டது.சொல்லி வைத்தாற்போல் அனைத்து ஊடகங்களிலும் ஒரேயொரு தீவிரவாதி கையில் துப்பாக்கியுடன் கொலைவெறியுடன் நிற்கும் புகைப்படம் மட்டுமே வெளியாகியுள்ளது.வேறு தீவிரவாதிகள் எவனும் எந்தக்காமிராவிலும் படம்பிடிக்கப் படவில்லையா? என யாரும் கேட்கவில்லை! ‘நியாயப்படி, தர்மப்படி கேட்கவும் கூடாது!’

  #3)
  மாலேகான் மற்றும்பிற குண்டு வெடிப்புகளில் ‘இந்துத்துவா தீவிரவாதம்’ சந்திசிரிச்சு, மன்மோகன்சிங் தலைமையிலான அரசு போகிற போக்கில் முஸ்லிம்களுக்கு ஏதாச்சும் நல்லது செய்ய வாய்ப்பிருந்தச் சூழலில், மும்பை தாக்குதலின்மூலம் இந்திய முஸ்லிம்களுக்கு என்ன பயன்? வெண்ணை திரண்டுவரும்போது தாழியை உடைக்க வேண்டிய அவசியம் என்ன? என யாரும் கேட்கவில்லை! ‘நியாயப்படி, தர்மப்படி கேட்கவும் கூடாது!’

  #4) பாகிஸ்தானிலிருந்து அதிவேகப் படகில் கடல்வழியாக ஊடுறுவினார்கள் என்று சொல்லப்படுகிறது. மும்பையை விடக் குஜராத் கடல்பகுதி மிகவும் வசதியாக இருக்கும்போது குஜராத்தை ஏன் தவிர்த்தார்கள்? துறைமுக வர்த்தகத் தலைநகரான மும்பைக்குள் எல்லைதாண்டி தாக்குமளவு மும்பை கடல்பகுதி கேட்பாரற்றுக் கிடக்கவில்லை. சர்வதேசங்களிலிருந்து சரக்குக் கப்பல்கள் வந்துசெல்லும் பிஸியான கடல்பகுதியில் எல்லைதாண்டி மீன் பிடிக்க வந்தாலே பிடிபடும்போது ஆயுதங்களுடன் வந்தார்னார்கள் என்பது நம்பும்படியாக இல்லையே? என யாரும் கேட்கவில்லை! ‘நியாயப்படி, தர்மப்படி கேட்கவும் கூடாது!’

 14. ஒரு ஆளைக் கொன்னா அது கொலை.
  பத்துப்பேரைக் கொன்னா அது தீவிரவாதம்.
  வெளிநாட்டவனையும் சேத்துக் கொன்னுட்டா அது பயங்கரவாதம். அதுவும் பாகிஸ்தான் பயங்கரவாதம்.

  கூட்டிக் கழிச்சுப் பாரு… கணக்கு சரியா வரும்.

 15. இதனால்…நடுநிலைவாதிகள் எனக்கூறிக்கொள்வோர் சொல்ல வருவது என்னவெனில்..

  1) தீவிரவாதிகள் மீது ஒரு தவறும் இல்லை. பாபர் மசூதி இடிப்பு, மும்பை கலவரம், குஜராத் கலவரம் போன்றவைகள் நடந்ததால் தான் பாவம் இந்த மாதிரி செய்து விட்டார்கள்…..இதில் தவறு ஒன்றும் இல்லை..அவர்களை சுட்டுக்கொன்ற இராணுவத்தினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து தூக்கிலிடவேண்டும்.

  2). தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவை விடுவித்து பாரதரத்னா வழங்க வேண்டும்.

  3). மும்பை ரயில் நிலைய துப்பாக்கிச்சூட்டில்
  தீவிரவாதிகள் சுட்டதில் 24 இஸ்லாமியர்களும் இறந்து விட்டனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. எனவே இந்துக்களை அல்லது இஸ்லாமியர் அல்லாதோரை பிரித்து அறிய அவர்களின் கழுத்தில் நாய் சங்கிலி அணிவிக்க வேண்டும்….
  சூப்பரா இருக்கு நடுநிலை…வாழ்க ஜனநாயகம்

 16. The Press has already started war against Pakistan. Every day some Pakistan High Commissioners are brought and banged by the TV channels. Indian authorities are turning their deaf ears to the Pakistan claim that LeT is a banned organisation in Pakistan. I think the Indian think tank is divided into two in dealing with Mumbai terror strikes. While one group advocates war another wants to be more diplomatic because a war would bring international focus again on India- Pakistan border which they think do more harmful to India’s interests. So there is no war climate as some people think. Now there is a growing demand of tightening the security. A Police State is in the minds of Indian middle class. They spit venom on all politicians. So the repercussions of this terror strike is too precarious as it takes us to an endless game of both state terrorism and counter terrorism.

 17. ====/////
  இந்து மதவெறியர்களின் கலவரங்கள்தான் தீவிரவாதத்தின் தோற்றுவாய்.’

  நிச்சயமாக இல்லை.இஸ்லாமிய
  தீவிரவாதம் என்ன என்பதை நீங்கள்
  புரிந்து கொள்ளவில்லை.
  முஸ்லீம்கள் தரப்பு என்ன செய்தாலும்
  அதை மறைமுகமாக நியாயப்படுத்தியே
  எழுதுவதுதான் உங்கள் நோக்கம்
  .====//////

  யார் இந்த காட்ஸில்லா ?
  இந்துத்துவா பயங்கரவாதிகளை நாம் தான் புரிந்துகொள்ளவில்லையாமே !
  சரி அதை முழுமையாக புரிந்து கொன்டுள்ள‌ இவர் அந்த‌ இந்து பயங்கரவாதத்தை பற்றி அது என்ன அதன் அபாயம் என்ன அதை எப்படி அழிப்பது என்று கொஞ்சம் விளக்க முடியுமா?

  1990 களுக்கு முன்பு ஏன் இங்கு இஸ்லாமிய பயங்கரவாதிகள் குண்டு வைக்கவில்லை ? இங்கு பூணூல் போடறதனால தானே சார் பாப்பான்னு சொல்றோம்? சாதி ஆதிக்கத்தின் குறியீடாக குடுமி ஆடும் போது தானே சார் அங்கே அரிவாளுக்கே வேலை வருது..

  அது மாதிரி தாங்க வானரக்கூட்டங்களின் தலைமை குரங்குகளான‌ மோடி,பாபு பஜ்ரங்கி,அத்துவானிகள் எல்லாம் இருக்கும் வரை குண்டுகளும் ஒழியாது

 18. // Now there is a growing demand of tightening the security. A Police State is in the minds of Indian middle class. They spit venom on all politicians. So the repercussions of this terror strike is too precarious as it takes us to an endless game of both state terrorism and counter terrorism.//

  Great and Good Observation… The other danger is India heading towards a Civil War…..

 19. Shame on u guys.
  you send some think to moon? AH!
  THINK OUT SIDE OF YOUR WASTE BASKET. Remember this only one month, after that,
  ” you short minded people will forget all of this carnage”and follow your boss. You indian people only have a very big mouth nothing else.

  aron.a
  TORONTO,CANADA

 20. Anbulla tholargale,

  oru piratchanaiyai aaraivathu mattum theervagathu.

  ungaleen ennaththil thondrum ” theervu ” kattayam therivikkappada vendrum.

  appoluthu than, ungalin karuththu niraivana thagavum, vimarsanathtirkum mattrum vivathathirkum piraku silaralavathu pin pattra padalam. payan padalam.

  nandriuyudan

 21. ////தீவிரவாதிகள் மீது ஒரு தவறும் இல்லை. பாபர் மசூதி இடிப்பு, மும்பை கலவரம், குஜராத் கலவரம் போன்றவைகள் நடந்ததால் தான் பாவம் இந்த மாதிரி செய்து விட்டார்கள்…..இதில் தவறு ஒன்றும் இல்லை..அவர்களை சுட்டுக்கொன்ற இராணுவத்தினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து தூக்கிலிடவேண்டும்.////

  அப்படின்னு யார் சொன்னார்கள்
  திரு குமரன் அய்யா அவர்களே ?
  அரை உண்மையும் அரை பொய்யும் பேசாதீர்கள், நீங்கள் மேற்கூறியது
  போன்ற‌ வரிகள் எங்கேனும் இந்த கட்டுரையிலோ அல்லது வேறு கட்டுரைகளிலிருந்தோ உங்களால் எடுத்துக்காட்ட முடியுமா ?
  பொய்யையும் உண்மையையும் கலந்துகட்டி அடிப்பதன் மூலம் அதற்கொரு பொதுத்தன்மையை ஏற்படுத்த முற்சிப்பது R.S.S அம்பிகள் பின்பற்றி,பின்பற்றி நாறிப்போன யுக்தி.

  ///தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவை விடுவித்து பாரதரத்னா வழங்க வேண்டும்////

  இதுவும் அது போலத்தான்.
  அப்சல் குருவை பயங்கரவாதி என்று கூற உங்களிடமோ அல்லது இந்த
  (அ)நீதிமன்றங்களிடமோ எந்த ஆதாரமும் இல்லை ஆனால் அவரை தூக்கில் போட்டு கொன்றுவிட வேண்டும் என்கிற ஆசைக்கு மட்டும் அளவில்லை அதற்காக கூறப்படும் அனைத்தும் அவர் மீது பொய்யாக கற்பிக்கப்பட்ட‌ ஆதாரங்கள் என்பதை நிரூபிக்க நான் உங்களுக்கு ஆய்வுகளையும்,கட்டுரைகளையும் தருகிறேன் அதற்கு எதிரானவற்றை நீங்கள் காட்ட முடியுமா?
  கீலானி ஏன் விடுதலை செய்யபட்டார் என்பதாவது உங்களுக்கு தெரியுமா ?

  இறுதியாக ஒன்றை உணருங்கள் உண்மைகளை R.S.S காரன் விரும்புவதை போல சொல்ல‌ முடியாது, உண்மைகளை R.S.S காரனால் ஏற்கவும் முடியாது. நீங்கள் R.S.S காரன் தான் என்பதை சொல்வதற்கு நான் ஒன்றும் உங்களை பார்த்து பேசி பழகியிருக்க‌ வேண்டிய அவசியமும் இல்லை என்கிறேன்,ஏனென்றால் அது தான் உலகக்கண்ணோட்டம்ன்னு ஒன்னு இருக்குதே !

 22. முதலில் குமரன்,
  ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்.வினவு அவர்களுடைய கட்டுரைகள் மீண்டுமொருமுறை உங்கள் கண்ணாடியை கழற்றிவிட்டு படியுங்கள்.நாட்டு மக்களுக்கு பார்ப்பன மதவெறியர்கள் தான் அந்த கன்ணாடி வழியே பார்க்கின்றார்கள்.நம்மையும் பார்க்கச் சொல்கின்றார்கள்.கட்டாய மதமாற்றம் நடக்குது என ஆர்.எஸ்.எஸ்.சொன்னால் ஆமாம் நடக்குதுள்ள என சொல்ல கூட பழகி விட்டார்கள்.ஆனால் உண்மை என்னவெனில் யாரையும் அரியானாவில் செத்த மாட்டின் தோலை உரித்தார்களே அதை போல வலுக்கட்டாயமாக இல்லை . பார்ப்பனிய கொடுங்கோன்மைக்கு எதிராக தோள் சீலை போரட்டம் முதல் மீனாட்சி புரம் வரை தொடர்ந்து கொண்டு இருக்கின்றது.வினவு(கலகம் உட்பட) யாருமே மத சார்பாக எழுதுவதில்லை. ஏன் தஸ்லீமாவை இசுலாமியா மத அடிப்படை வாதிகளுக்கெதிராக யார் கருத்து ரீதியில் எழுதிக்கொண்டிருந்தார் என்பது உங்களுக்கு தெரியுமா?

  முதலில் படியுங்கள் பிறகு விவாதியுங்கள். செத்து போன முசுலீம் மக்களுக்காகவும்,தாழ்த்ப்பட்ட மக்களுக்காக நீங்கள் வருந்து வது உண்மையெனில் பதில் சொல்லுங்கள் குஜராத்-ல் முசுலீம் பெண்ணின் வயிறை கிழித்து சிசுவைகொன்று அவரை பாலியல் வன்புணர்ச்சிசெஇது கண்டம் துண்டமாக வெட்டினார்களே அந்த ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன மத வெறியர்களை என்ன செய்ய வேண்டும் என சொல்லுங்கல். இன்னும் கீழ் கன்ட கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் பிறகு மும்பை குறித்த விவாதத்தை தொடரலாம்.

  “மும்பைதாக்குதலை வெற்றிகரமாக முறியடித்தமைக்காக ராணுவ, NSG வீரர்களுக்காக நாம் பெருமைப்படமுடியுமா? பெருமைப்பட முடியுமெனில் குஜராத்தில் 3000 முசுலீம் மக்கள் கொன்றொழிக்கப்பட்டதற்காக நாம் அவமானப்பட்டே ஆக வேண்டும்.ராணுவம், NSG எப்போதும் மக்களுகெதிராகவே இருக்கின்றன. இவை தான் இந்த பாசிச அரச உறுப்புக்கள்.அரசின் கூலிப்படைகள் .அசாம்,காசுமீரிகளை கொன்று அப்பெண்களை பாலியல் வன்முறை செய்ததற்காகவும்,மனோரமாவின் உடலெங்கும் குண்டுகளை பதித்தற்காகவும் அவைகள் பரிசுகளை வாங்கி குவித்தன.மும்பை தாக்குதலில் தனது வீரத்தை காட்டியவர்கள் தான் மேற்கண்ட வேலைகளையும் செய்தனர்.இப்பாதக செயல்களுக்காக ,அரசோ வெட்கி தலைகுனியவில்லை,”

  சட்டக்கல்லூரி குறித்த கட்டுரையின் போது நீங்கள் சொன்னீர்கள் “உங்கள் கட்டுரையை படித்தவுடன் நான் தேவர் சாதி வெறியனாகிவிட்டென் என்று நீங்கள் ஒரு முசுலீமாய் பிறந்து கொல்லப்பட்ட பெண் உங்கள் சொந்தமாகவோ இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்.இப்பொதும் சொல்கிறோம் இங்கு யாரும் எந்த மததிற்கும் சப்பை கட்டு கட்டவில்லை பார்ப்பன மத் வெறியால் இசுலாமிய மக்கள் தாக்கப்படுகின்றார்களா இல்லையா அதற்கு யெஸ் ஆர் நோ என்ற பதிலாவது சொல்லுங்கள்.

  இங்கு நம்முடைய நோக்கம் இந்த குமரனை தக்குவதல்ல இது போல பல குமரன்களை உருவாகத்துடிக்கும் பார்பன மத வெறிக்கு ஆட்படாமல் பலரையும் த்டுப்பதே.இந்த மறு மொழிகான இடத்தை லூசு கோட்சில்லா போன்றவர்கள் குட்டையை கிளப்பினாலும் நாம் சரியாகவே கன்டிப்பாய் கொண்டு செல்வோம்

  கலகம்

  http://kalagam.wordpress.com/

 23. Vinavu,

  This post uses the standard Kalaignar Karunanidhi argument. Whenever somebody points out that there is a problem in Kalaignar’s govt, his standard response is “Why didn’t you say anything when something happened during MGR/Jayalalitha’s rule?”

  It was very wrong that Narasimha Rao didn’t resign in 93. But why should Rao’s non-resignation be the precedent for this govt?

  Yes, muslims have reasons to feel aggrieved. Do you feel that Hindus in Bombay wouldn’t be justified in being angry?

  Even if we agree to your viewpoint, how in the world does this justify Pakistanis bombing Mumbai’s hotels? The rich don’t have a right to be protected? (BTW, I live in U.S. and I came to know about the railway station shooting only thro Tamil blogs. Now that is truly distorted reporting, biased towards the rich!)

  If I extend your argument,
  1. Sikhs should also attack Pakistan and destroy it because there was an unparalleled genocide in 47.
  2. Sikhs should be up in arms against the Indian govt because of 84 Delhi riots.
  3. Christians should be up in arms because of what happened to Father Staines.
  4. Dalits should destroy India for obvious reasons.
  5. Backward castes should destroy all non-backward castes.
  6. Forward castes should destroy everybody else because reservations cause them hardships.
  7. Tamil Nadu should destroy Karnataka because of Kaveri.
  8. Ditto for Karnataka against TN
  9. India should destroy LTTE because of Rajiv Gandhi.
  10. India should attack Sri Lanka as the Sri Lankan Tamils are victimized.

  Is there an end to this?

  No govt is fair, has been fair, and is going to be fair. Every govt is going to make mistakes. Show me a fair govt in the world that has always done the right thing. So we shouldn’t have a govt.?

  The hope always has been that media, elections, and democracy would reduce and mitigate these mistakes.

 24. ஆர்.வி –

  🙂 🙂

  இந்த பதிவைப் படித்தவுடன் எனக்குத் தோன்றிய வரிகள்

  இன்று தேசபக்தி என்ற நல்ல வார்த்தை கேட்ட வார்த்தையானது.

 25. ///////
  இந்த பதிவைப் படித்தவுடன் எனக்குத் தோன்றிய வரிகள்

  இன்று தேசபக்தி என்ற நல்ல வார்த்தை கேட்ட வார்த்தையானது./////

  திருவாளர் முரளி அவர்கள்.
  ——————————————–

  நாட்டுப்பற்று நல்ல வார்த்தையா கொட்டவார்த்தையாங்கிற‌தை அப்புறமா பேசலாம் அதற்கு முன்னால் நாட்டுப்பற்று என்கிற அந்த வார்த்தைக்கு உங்கள் விளக்கம் என்னன்னு மட்டும் கொஞ்சம் சொல்லிட்டு போங்களேன்,பார்ப்போம்.

 26. உலக உத்தமர் “SUPERLINKS” –

  உங்கள் ஆர்வம் எனக்குப் புரிகிறது. தேசபக்தி என்றால் என்ன என்று நான் விளக்கி உமக்கு புரிய வேண்டும் என்றால் சொல்கிறேன்.

  ஆனால் அதுவல்லவே உம் நோக்கம். எனவே என்னைப் பின் தொடர்வதை விட்டு, ஆர்.வி கேட்ட கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்ல முயலுங்களேன்!!

 27. hi RV/murali

  vinavu engaiyavathu makkal kudiyirukkum paguthila kundu vaikka sonna maathiri theriala. ithu unga purithalnu nenaiken.

  murali

  pls explain to me about “thesapakthi”

 28. Muslims are being killed???

  No mention of their genocides and mass murders and conversions?

  Every day they proclaim that “Only allah is God..”, how would your wife feel if I come out and proclaim in the crowd “என் புருஷன் மட்டும் தான் யோக்யம், என் புருஷன் மட்டும்தான் ஆம்பளை…”

  One of the mail problems is the tolerance of the Hindus.
  If you are willing to address the issues, address it unbiasdly….

 29. //////////////////////////////////////////////////
  உலக உத்தமர் “SUPERLINKS” –
  உங்கள் ஆர்வம் எனக்குப் புரிகிறது. தேசபக்தி என்றால் என்ன என்று நான் விளக்கி உமக்கு புரிய வேண்டும் என்றால் சொல்கிறேன்.

  ஆனால் அதுவல்லவே உம் நோக்கம். எனவே என்னைப் பின் தொடர்வதை விட்டு, ஆர்.வி கேட்ட கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்ல முயலுங்களேன்!!
  //////////////////////////////////////////////////////////////

  உள்ளூர் உத்தமர் முரளி அய்யா அவர்களே,
  முதலில் உம்மிடம் கேட்ட கேள்விகளுக்கு நீங்கள் பதில் கூறுமையா மற்றதை பின்னால் பார்ப்போம்.அவர் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டுமா ? நிச்சையமாக சொல்கிறேன்,அதற்கு முன்னால் உங்களைப் போன்ற தேசபக்தர்களுக்கெல்லாம் மொத்தமாக சில கேள்விகளையும் மூன்றாம் பாகத்தில் கேட்டுள்ளேன்.என்னோட ஆர்வம் புரியிதில்ல‌..
  அப்புற‌ம் என்ன‌ சும்மா டென்க்ஷ‌ன் ப‌ன்னாம‌ ப‌தில‌ச்சொல்லுங்கையா

 30. selvi… if some wife declares aloud that only her husband is THE man, ( the example you used), it simply means she is in total love with that man. she may be an idiot. but why question her faith (synonym for love)?
  when you discuss, dont be unbiased (as you said yourself)

 31. Mani,

  // இதை பார்க்கும் போது இந்து மதவெறியர்களால் உற்றார் உறவினரைப் பறிகொடுத்த ஒரு முசுலீம் இளைஞன் தீவிரவாதம்தான் தீர்வு என்று யோசிக்கமாட்டானா என்ன? //
  The above, highlighted in the end of Vinavu’s post justifies the bombing because of past injustices suffered by muslims. If we go by this logic, every group that has suffered has a right to resort to terrorism. Vinavu definitely hasn’t said that terrorism is right. But throughout the post, there is a tone of accepting muslim terrorism because muslims have been victims in the past.

  I believe that physical violence is justified in defense only – anybody who starts the physical violence should be always punished. This is not an easy doctrine to follow. If a guy walks into a railway station with an automatic machine gun, the security forces should resort to violence. But exceptions don’t make the doctrine wrong…

 32. Hello Mr. Middle Class R.V,

  I saw your questions and arguments, it’s just a silly middle class political knowledge. According to me the words will come from the mouth of filter coffe’s who read the Times of India and speaking like a man who is having the knowledge of whole world. What a miracle !!!

  If you (R.V) have realy interest and intention to find a solution for all this problems. first understand the problems well and the base, reason of the problems. then a true man can find the way for all.

  From your stand any one can ask endless questions, but in that questions there will be no intention to overcome the problems even there will be no interest to see the sand of the well. your ready to see the water alone. what will be the result of this, even though you are being a lion, you people will fell into the deep well because of the foolish goats.!!!

 33. Renuga-Ajitha,

  You are resorting to one of the Kalaignar’s debating techniques – you are speculating about my personal attributes instead of answering my points. My middle-classness or not is irrelevant – I have questions, please answer them if you want a discussion. Whether I am short, tall, black, white, young, old, middle class, non-middle class – who cares?

  Clearly, I don’t agree with Vinavu’s analysis and justification of this event. I do agree with Vinavu’s comments on POTA more or less, and it is thanks to Tamil bloggers including Vinavu that I even came to know about the massacre at the CST railway station – I do agree with him the coverage shows a bias towards the rich.

  I would love to hear about your views of the problems, reasons for the problems, your proposed solutions if any, even if they are very similar to Vinavu’s. Where would I find them?

 34. RV,
  Rengua-Ajitha, Vinavu support stalinism They will argue in defense of killing of lakhs in the stalinist
  russia and suppression of all dissent by that regime. For them human rights is a pretext to criticise not a norm to be practised. They would defend the killing of Vavilov and support Lysenko’s actions.Dont be fooled
  by their ‘concern’ for human rights or anti-POTA views.

 35. There is only one solution to solve the terrorists and bomb blast problems in India. Forget Kashmir and come out of it and in a broad mind view give the independence for those people and we can forget LOC- a problem of two nations kashmir and pakistan and no need for a mammoth military budget and let us try to enjoy a peaceful life. But there will be s sudden dead end on the roads of some politicians and they may again resume rathayatra to krisna janmabhoomi to get back their lost votes from mejority people.

 36. Thought Provoking article.
  It analyse the root causes of these kind of attacks.
  If Democarcy and Secularism is followed in India in a true way witout any discriminations these kind of BOMB BLasts will not happen.

  I am against ALL TYPES of Discriminations and TERRORISM.
  ISLAMIC TERRORISM IS NOT AN ANSWER TO HINDU COMMUNALISM.
  All muslims should join with Democratic -Human rights – Leftisit forces to fight against HINDUTVA COMMUNALSIM.
  Regards
  Izzath

Leave a Reply to senthil kumar பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க