மகர ஜோதி பொய், ஐஸ் லிங்கம் பொய், பக்தி பரவசமும் பொய்
“சபரி மலையின் மகரஜோதி என்பது தானே எரிவது அல்ல, அது கோயில் ஊழியர்களால் கொளுத்தப்படுவதுதான்” என்று ஐயப்பன் கோயில் தலைமைப் பூசாரியின் குடும்பத்தைச் சேர்ந்த ராமன் நாயர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்தார். இதனை ஒட்டி பதில் சொல்லியாக வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டார் கோயிலின் தலைமைத் தந்திரி கண்டரரு மகேஸ்வரரு. அவர் சார்பில் அறிக்கை வெளியிட்ட அவரது பேரனும் கோயில் தந்திரியுமான ராகுல் ஈஸ்வர், “வனத்துறை அதிகாரிகளும், தேவசுவம் போர்டு (அறநிலையத்துறை) அதிகாரிகளும், போலீசும் கூட்டாகச் சேர்ந்து கொளுத்தும் தீப்பந்தம்தான் மகரவிளக்கு” என்ற உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார்.
‘இந்த அளவுக்கு குட்டு உடைந்த பிறகும் மார்க்சிஸ்டு அரசு மகரஜோதியைக் கொளுத்துமா?’ என்ற கேள்விக்கு “சபரிமலையில் மகரவிளக்கு வெளிச்சம் எப்படி உருவாகிறது என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தப்படும். ஆனால் பக்தர்களின் நம்பிக்கைக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாது” என்று பதிலளித்திருக்கிறார் மார்க்சிஸ்டு முதல்வர் அச்சுதானந்தன். யாரை யார் விசாரிப்பது? பந்தம் பிடிப்பவனை பற்ற வைப்பவன் விசாரிப்பதா? “தீவட்டியைத் தொடர்ந்து கொளுத்துவோம். தீவட்டிக் கொள்ளையைத் தொடர்ந்து நடத்துவோம்” என்பதுதான் அச்சுதானந்தனுடைய கூற்றின் பொருள்.
மகரஜோதி அம்பலமாவது இது முதல் முறையல்ல. பந்தம் கொளுத்திய மின்வாரிய ஊழியர்களைப் பிடித்துக் கொண்டு வந்தார்கள் கேரள மாநில பகுத்தறிவாளர் சங்கத்தினர். “அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா, அரசாங்க வருமானத்துக்கு ஆப்பு வைக்காதீங்கப்பா” என்று அன்பு வேண்டுகோள் விடுத்து அன்று பகுத்தறிவாளர்களை அமுக்கினார் அந்நாள் மார்க்சிஸ்டு முதல்வர் ஈ.கே. நாயனார்.
கோயில் தந்திரி கண்டரரு மோகனரு, தனது லீலாவிநோதங்கள் மூலம் ஐயப்பன் மகிமையைக் கந்தலாக்கியது தனிக்கதை. அவருக்கு வேதம், மந்திரம் போன்ற வெங்காயம் எதுவும் தெரியாதென்பதும் விலைமாதர் வீட்டு முகவரிகள் மட்டுமே தெரியும் என்பதும் அவரிடம் நடந்த விசாரணையில் அம்பலமானது. இப்போது தலைமைத் தந்திரியின் ஒப்புதல் வாக்குமூலம் வந்திருக்கிறது.
தெற்கே தீவட்டி பிசினஸ்; வடக்கே பனிக்கட்டி பிசினஸ். காஷ்மீரில் அமர்நாத் எனுமிடத்தில் குளிர்காலத்தில் ஒரு குகைக்குள்ளே பெரிய ‘குச்சி ஐஸ்’ வடிவத்தில் உருவாகும் பனிக்கட்டியைத் தரிசிப்பதற்கு ஆண்டுதோறும் 4 லட்சம் பக்தர்கள் அங்கே சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த பக்தர்களை பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாக்க 40,000 சிப்பாய்களை மாதக்கணக்கில் காவல் வைக்கிறது அரசு.
மேற்படி சிவலிங்கத்திற்கும் வந்தது சோதனை! “முன்னர் சுமார் 12 அடி உயரம் இருந்த பகவான் தற்போது 6 அடிக்கும் கீழே போய்விட்டார். காரணம் புரியவில்லை” என்று சென்ற ஆண்டு அபாயச்சங்கு ஊதினார் அந்தக் கோயிலின் நிர்வாக அதிகாரி. பகவானைக் கண்டு பக்தர்கள் உருகலாம், பக்தர்களைக் கண்டு பகவான் எப்படி உருகமுடியும்? “பக்தர்கள் விடும் மூச்சுக்காற்றின் வெப்பத்தைப் பனீசுவர பகவானால் தாங்கமுடியவில்லை” என்றன சில பத்திரிகைகள். பக்தர்களின் மூச்சை நிறுத்த முடியாதே! “குகைக்கு அருகில் அடுப்பு பற்றவைத்து பக்தர்கள் சப்பாத்தி போடுகிறார்கள். சூடு தாங்கமுடியாமல்தான் பகவான் கசிந்துருகுகிறார்” என்றன வேறு சில பத்திரிகைகள். புவி சூடேறுதல்தான் காரணம் என்றனர் வேறு சிலர்.
காரண காரியங்கள் குறித்த அறிவுப்பூர்வமான ஆய்வுகள் தொடர்வது ஆன்மீகத்துக்கு ஆபத்து என்பதால் குப்தா கமிசன் என்றொரு கமிசனைப் போட்டு ஆராயச் சொன்னது அரசு. பகவான் கரையாமலும், பக்தர்கள் கூட்டம் கலையாமலும் பாதுகாக்கும் பொருட்டு குகைக்கு குளிர் சாதன வசதி செய்து சிவபெருமானை ஸீரோ டிகிரியில் பாதுகாப்பது; பக்தர்கள் சப்பாத்தி போட 100 ஏக்கர் வனப்பகுதியைக் கோயிலுக்கு தானம் கொடுத்து அடுப்புச் சூட்டிலிருந்து ஆண்டவனைப் பாதுகாப்பது என்று முடிவு செய்தது அரசு. இந்த 100 ஏக்கர் தானத்துக்கு எதிராகக் காஷ்மீரே பற்றி எரியத் தொடங்கி, அதன் விளைவாக அம்மாநில காங்கிரசு அரசு இப்போது உருகிக் கொண்டிருக்கிறது.
எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாக, ‘அமர்நாத் பனிலிங்கம் செயற்கையானதல்ல’ என்று கொட்டை எழுத்தில் செய்தி போடுகிறது தினமணி (24.6.08).
இயற்கையாக உருவான எல்லாம் வல்ல இறைவனை செயற்கையாகப் பாதுகாப்பது ஏன் என்ற கேள்விக்கு மட்டும் அவர்கள் பதில் சொல்லவில்லை.
“”இராமன் பாலம் என்பது இயற்கையாக அமைந்த மணல்திட்டு”” என்று சொன்னால், ‘இல்லையில்லை, அது இராமனால் கட்டப்பட்டது, செயற்கையானது எனவே தெய்வீகமானது’ என்று கத்துகிறார் இராம. கோபாலன். ‘அமர் நாத் பனிலிங்கம் செயற்கையானது’ என்று சொன்னால் ‘இல்லையில்லை, அது இயற்கையானது எனவே தெய்வீகமானது’ என்கிறார்கள். வடக்கே இயற்கை தெய்வீகம்! தெற்கே செயற்கை தெய்வீகம்!
மக்களை மயக்கத்தில் ஆழ்த்துவதற்காக ஆளும் வர்க்கம் உருவாக்கிய மடமைகள் உடைபடும்போது மதவாதிகள் பதறுகிறார்கள்; அதற்குக் காரணம் இருக்கிறது. ஆனால் அற்புதம் என்றும் தெய்வீகம் என்றும் தாங்கள் இதுகாறும் நம்பிக் கொண்டிருந்தவை அயோக்கியத்தனமான மோசடிகள் என்று ஆதாரப்பூர்வமாகத் தெரியும்போது பக்தர்கள் பதறியிருக்க வேண்டாமா?
“கடன் பட்டதும், காவியணிந்ததும், மதுமாமிசம்மனைவியைத் துறந்ததும், காடு மலைகளில் நடையாய் நடந்ததும் கேவலம் ஒரு தீவட்டியைத் தரிசிக்கத்தானா?” என்று குமுறியிருக்க வேண்டாமா? ‘அது தீவட்டியில்லை, தெய்வீகத் தீபம்தான். நாங்கள் நம்பமாட்டோம்’ என்று நக்கீரனுக்குப் பேட்டி கொடுக்கிறார்கள் ஐயப்பசாமிகள். “பகவானை எண்ணி பனியைச் சகித்ததும், பயங்கரவாதிகளை எண்ணிப் பயந்து செத்ததும், 12,000 அடி உயரம் மூச்சு வாங்க மலையேறியதும் ஒரு குச்சி ஐஸைத் தரிசிக்கத் தானா?” என்று கொதித்திருக்க வேண்டாமா? அந்தக் குச்சி ஐஸைப் பாதுகாக்க பாரத் பந்த் நடத்துகிறது பாரதிய ஜனதா. அதற்கும் கூட்டம் சேருகிறது.
பகுத்தறிவின் ஒளி பட்டவுடனே மூடநம்பிக்கை இருள் அகலவில்லையே ஏன்? ‘மகரஜோதி பொய்’ என்பதை அந்தக் கோயிலின் தந்திரியே பிரகடனம் செய்த பின்னரும் அய்யப்பன்மார்கள் திருந்தவில்லையே ஏன்? இந்த பக்தர்களை ‘மூட நம்பிக்கைக்குப் பலியானவர்கள்’ என்று மட்டும் நாம் கருதமுடியுமா? என்ன வகை பக்தி இது?
மூடநம்பிக்கை, பகுத்தறிவு, ஏமாற்றுபவன்ஏமாற்றப்படுபவன் என்ற வகைப்பாடுகளின் வரம்பைத்தாண்டி ஒரு விநோதக் கலவையாக உருப்பெற்று வருகிறது இந்த ‘பக்தி’. காமவெறி பிடித்த பித்தலாட்டக்காரனாக அர்ச்சகன், இந்தப் பித்தலாட்டத்துக்குப் பந்தம் பிடிக்கும் அரசு, அதற்குக் காவல் நிற்கும் போலீசு, ஐயப்ப சீசனில் திருடுவதற்காகவே மாலை போட்டுக் கொள்ளும் பிக்பாக்கெட்டுகள், டாஸ்மாக் கடைகளில் அய்யப்பன்மார்களுக்கென்றே ஒதுக்கப்பட்டிருக்கும் தனிக் கோப்பைகள், சுத்தம் கருதி சாக்கனாக் கடைகளில் அவர்களுக்கு மட்டும் இலை போட்டுப் பரிமாறப்படும் புரோட்டாக்கள்..! மோசடியும் சுயமோசடியும் சரிவிகிதத்தில் கலந்து உருவாகியிருக்கும் இந்தக் கூட்டுக் களவாணித்தனத்தில் ஏமாற்றுபவன் யார், ஏமாற்றப்படுபவன் யார் என்று பிரித்தறிய முடியவில்லை.
புதுப்பட ரிலீஸ் அன்று கட் அவுட்டுக்குப் பால் அபிசேகம் செய்யும் ரசிகனின் பரவசம், நூறு ரூபாய்ஒரு குவாட்டர் என்று கறாராக ரேட் பேசிக் கொண்டு லாரியில் ஏறி வந்து ‘தலைவா’ என்று உணர்ச்சி வசப்படும் தொண்டனின் மனக்கிளர்ச்சி, இலஞ்சத்தை அழுதுவிட்டு அப்புறமும் அதிகாரியிடம் ‘ங’ போல் வளையும்’ நெளிவு சுளிவு, மொய் எழுதும் வயிற்றெரிச்சலை மறைத்தபடி திருமண வீட்டில் மலர்ந்து மணம் பரப்பும் புன்னகைகள்..! அன்றாட வாழ்வில் நாம் காணும் இந்த ‘உணர்ச்சிகள்’ எல்லாம் அமர்நாத் யாத்ரீகர்களின் பரவசத்தையும் அய்யப்பன்மார்களின் மனக் கிளர்ச்சியையும் பிரதிபலிக்கவில்லையா?
இந்த மத உணர்ச்சி ஒரு மயக்கமென்றால், அது ஆட்படுத்தப்பட்ட மயக்கம் மட்டுமல்ல, விரும்பி ஆட்படும் மயக்கம். இது தெய்வீக அபினி மட்டுமல்ல, லவுதீக அபினியும் கூட. இது புனித யாத்திரை என்ற முகமூடி அணிந்த இன்பச் சுற்றுலா. இந்தப் போலி பக்தியை ஆன்மீக அனுபவமாக ‘உணர்ந்து’ மயங்கும் பொருட்டு ஒரு ‘தெய்வீக கிளைமாக்ஸ்’ பக்தனுக்கே தேவைப்படுகிறது.
எனவேதான் பக்தன் பதறுவதில்லை. சாம்சங் ரெப்ரிஜிரேட்டரையே கருவறையாக்கி, அதற்குள் பனி லிங்கம் ஒன்றை உறையவைத்து, ஆண்டுக்கு ஒரு முறை திறந்து காட்டினாலும் ‘ஹர ஹர மகாதேவா’ என்று கன்னத்தில் போட்டுக்கொள்ள இந்த பக்தர்கள் தயார்! மகரஜோதிக்குப் பதில் சிலிண்டரை வைத்து ‘ஸ்பிக் ஜோதி’யைக் கொளுத்திக் காட்டினாலும் அதனைத் ‘தரிசிக்கும்’ பொருட்டு விரதமிருக்கவும், இருமுடி சுமக்கவும் அய்யப்பன்மார்கள் தயார்!
‘டென் கமாண்ட்மென்ட்ஸ்’ என்ற திரைப்படத்தில் பார்த்த ஒரு காட்சி இங்கே நினைவுக்கு வருகிறது. பல வகையான விக்கிரக வழிபாடுகளில் மூழ்கியிருக்கும் யூத மக்களிடம் “இவையெல்லாம் கடவுளல்ல, உண்மையான கடவுளின் செய்தியை நான் உங்களுக்குக் கொண்டுவருகிறேன்” என்று கடவுளைத் தேடி மலைக்குச் செல்வார் மோசஸ். போனவர் திரும்புவதற்குத் தாமதமாகவே, “ஒரு கடவுளில்லாமல் இன்னும் எத்தனை நாள்தான் நாம் காத்திருக்க முடியும்?” என்று விசனப்பட்ட மக்கள் ஒரு எருமைக்கிடா பொம்மையைக் கடவுளாக்கி அதைத் தலையில் வைத்துக் கூத்தாடத் தொடங்குவார்கள்.
அந்தக் கூத்தும் இந்தக் கூத்தும் ஒன்று போலத் தோன்றினாலும் ஒன்றல்ல. அது அச்சத்திலும் மவுடீகத்திலும் மனிதகுலம் ஆழ்ந்திருந்த, அறிவியல் வளராத காலம். அது பல் முளைக்காத குழந்தையின் மழலை. இன்று நாம் காண்பதோ கிழவனின் மழலை. “ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான்தான் என்று, அந்தப் பொய்யில் உயிர்வாழ்வேன்” என்று மன்றாடும் காதலனைப் போல, ‘எங்களுக்கு ஒரு மாயையை வழங்கு’ என்று இறைஞ்சுகிறார்கள் இந்த பக்தர்கள்.
சென்னை தீவுத்திடலில் அமர்நாத்தைப் போலவே பனிக்கட்டி லிங்கத்தை உருவாக்கி ‘சென்னையில் அமர்நாத்’ என்று விளம்பரம் செய்யப்படுகிறது. ராட்டினம் ஏறப்போன பொருட்காட்சிக் கூட்டம் உடனே பக்தர்களாக உருமாறி அந்த செயற்கை லிங்கத்தைப் பரவசத்துடன் வழிபடுகிறது. திருப்பதி வரை சென்று தரிசிக்க முடியாத பக்தர்களுக்காக ‘சீனிவாச திருக்கல்யாணத்தை’ சென் னையிலேயே நடத்தி, ‘சென்னையில் ஒரு திருப்பதி’ என்று விளம்பரம் செய்கிறது திருப்பதி தேவஸ்தானம். ‘கோயிந்தா கோயிந்தா’ என்று அங்கேயும் கூட்டம் அலைமோதுகிறது.
ஷாம்பு பாட்டில் வாங்கும் வசதியில்லாதவர்களுக்காக இப்போது சாஷேக்களில் தொங்குகிறார் கடவுள். நுகர்வு தரும் சிற்றின்பத்துக்கும் ஆன்மீகப் பேரின்பத்துக்கும் இடையில் நிலவுவதாகச் சொல்லப்படும் சீனப்பெருஞ்சுவர் மாயமாக மறைந்து விட்டது. இந்தப் பேரின்பமென்பது சிற்றின்பத்தின் வாலில் தடவப்பட்டிருக்கும் ஆன்மீக வாசனைத் தைலம். தமது இஷ்ட தெய்வங்கள் மீது இந்த பக்தர்கள் கொண்டிருக்கும் ஈடுபாடு, தமது இஷ்ட பிராண்டுகள் மீது நுகர்வோர் கொண்டிருக்கும் ஈடுபாட்டையே பெரிதும் ஒத்திருக்கிறது.
இது உத்திரவாதமில்லாத பரலோக இன்பவாழ்வை இலட்சியமாகக் கொண்டு இகலோகத் துன்பங்களைச் சகித்துக் கொள்ளும் இலக்கண வகைப்பட்ட ஆன்மீகமல்ல; உத்திரவாதமான இன்பத்துக்கான தேட்டம். ‘பக்தி’ என்று புனைபெயர் சூட்டிக் கொண்ட பிழைப்புவாதம். ஜோதியோ, லிங்கமோ, பக்திப் பரவசமோ அனைத்தும் இங்கே பிஸ்கெட் பாக்கெட்டுகளின் பளபளப்பான மேலுறைகள் மட்டுமே.
கஞ்சாச் செடியின் போதையைத் தெய்வீகமென்றும் பேரின்பமென்றும் தவமென்றும் எண்ணிக் கொண்டிருந்த கருத்து மயக்கமல்ல இது. ‘கஞ்சாவே பேரின்பம்’ என்று அறிவுப்பூர்வமாகத் தேர்ந்து தெளிந்த விழிப்பு நிலை. சொல்லப்போனால் இது வேறு ஒரு வகைப் பகுத்தறிவு. சுயநலத்துக்காகத் தெரிந்தே தன்னை மடமையில் ஆழ்த்திக் கொள்ளும் பகுத்தறிவு. கல்லையும் மரத்தையும் கண்டு அஞ்சி வணங்கிய மூடநம்பிக்கையைக் காட்டிலும் அபாயகரமான பகுத்தறிவு.
‘மாலை போடுவது மடமை’ என்று நீங்கள் சாடினால், ‘ஒரு மண்டலம் விரதமிருப்பதும், புலால் மறுப்பதும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்’ என்று அறிவியல் பூர்வமாக விளக்கி உங்களைத் திகைப்படையச் செய்வார்கள் இந்த பக்தர்கள். ‘பனிலிங்கம் பொய்’ என்று நீங்கள் கூறினால், “இந்த விசயம் உங்களுக்கு இப்போதுதான் தெரியுமா, எனக்கு ஏற்கெனவே தெரியும்” என்று சொல்லி உங்களை அதிர்ச்சியில் உறைய வைப்பார்கள். நீங்கள் அறிந்திராத மேலும் இரண்டு ஆன்மீக மோசடிகளை உங்களுக்கு விளக்கி, தங்களது உலக ஞானத்தின் மேன்மையை உங்களுக்குக் குறிப்பாலுணர்த்துவார்கள்.
அல்லது “மகரஜோதியும் பனிலிங்கமும் மட்டுமா, உலகமே மோசடிகளால்தான் நிறைந்து இருக்கிறது” என்று தத்துவஞானத்தின் தளத்துக்கு விவாதத்தை தள்ளிச் செல்லுவார்கள். லஞ்சம், வரதட்சிணை, சாதி, வாஸ்து, சாமியார்கள், ராசிக்கல் என நியாயப்படுத்த முடியாத எல்லா அயோக்கியத்தனங்களையும் கொள்கையளவில் மறுப்பதற்கும், நடைமுறையில் அவற்றுடன் அனுசரித்துச் செல்வதற்கும் என்ன விதமான நியாயப்படுத்தல்களை சமூக வாழ்வில் நாம் எதிர்கொள்கிறோமோ, அவற்றைத்தான் பக்தர்களும் பயன்படுத்துகிறார்கள். பிழைப்புவாதமும் காரியசாத்தியவாதமும் பழகிவிட்டதால், அந்த வாதங்கள் அனைத்தையும், ‘பழகிய சைக்கிளை பழகிய ரோட்டில் ஓட்டும் இலாவகத்துடன்’ பயன்படுத்தி பகுத்தறிவை முறியடிக்கிறார்கள் இந்த பக்தர்கள்.
‘டபுள்யூ.டபுள்யூ.எஃப்’ என் றொரு அமெரிக்க மல்யுத்தத்தைத் தொலைக்காட்சிகளில் நீங்கள் பார்த்திருக்கலாம். அதில் இரண்டு மாமிசமலைகள் மோதிக்கொள்வார்கள். நாக்கூசும் வார்த்தைகளால் ஏசிக் கொள்வார்கள். கொலைவெறியுடன் கட்டிப் புரளுவார்கள். எனினும் அது உண்மையான சண்டையல்ல. யார் வெல்ல வேண்டும் யார் தோற்க வேண்டும் என்பதை முன்னரே தீர்மானித்து நிகழ்ச்சியை நடத்தும் முதலாளிகள் காட்சிப்படுத்தும் நாடகம் அது. இரசிகர்களுக்கும் இது தெரியும். இருந்தாலும் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி சண்டையை ரசிக்கிறார்கள். ‘குத்து.. கொல்லு’ என்று வெறிகொண்டு கூச்சலிடுகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் ஏமாற்றுபவன் யார், ஏமாற்றப்படுபவன் யார்? நடிகன் யார், ரசிகன் யார்? தீவட்டி கொளுத்துபவன் யார், கன்னத்தில் போட்டுக் கொள்பவன் யார்? கண்டரரு யார், காணதவரு யார்? குருசாமி யார், கன்னிச்சாமி யார்?
இது ஒரு வகைப் ‘பகுத்தறிவு’. இதுதான் நம் முன் பக்திவேடம் பூண்டு ஆடுகிறது. வெறும் கருத்துப் போராட்டத்தால் இதனை வீழ்த்த முடியாது. இதன் இதயம் ஆன்மீகத்தில் இல்லை ; லௌகீகத்தில் இருக்கிறது சமூக வாழ்க்கையின் எல்லாப் பரப்புகளிலும் வேர் பரப்பியிருக்கும் இந்தப் ‘பகுத்தறிவை’ எதிர்த்துப் போராடுவதென்பது ‘ஒரிஜினல் மூடநம்பிக்கையை’ எதிர்த்துப் போராடுவதைக் காட்டிலும் கடினமானது.
புதிய கலாச்சாரம் – ஜூலை 2008 ( அனுமதியுடன்)
சென்ற கட்டுரையைப் போலவே மக்களின் மனநிலையை படம் பிடிக்கும் கட்டுரை…
பனிலிங்கம் பொய்,
மகர ஜோதி பொய்,
ராமன் பாலம் பொய்!
சாமியே சரணம் பொய்யப்பா!
இந்த கட்டுரை பக்த கேடிகளுக்கு இன்னுமொரு ஆப்பு!
unakeelam arivea illaya saami ilenu nee nammbu but ipdi pannatha romba naal uyiroda irukka mata
unaku sinthanai seiya theriyuma… namma yellathukum mela oru super power illama than manusangalukulla automatic ah uiyrnu onu iruku ?… daily ne yenna battery recharge pannikaraya ? illa soru sapadrathu yepdi jeernam aguthu nu yesochiya ?
ithavae tha english karan, science nu solli appatama sollaran, ava sollratha apdiyae nambuveenga, thai molila, olukathoda, simpla sonna kindal pannrathu ungaluku kokaiya ?
(Nithyanantha mattrum pala mirukangalai mun utharanam vaipathil priyojanam illai, prachanai naam – manitharkalukidaye mattum than.)
இந்திய அரசு மெக்காவில் இருக்கும் வெறும் மொட்டை கல்லை பார்ப்பதற்கு கூட வருடா வருடம் கோடி கணக்கில் செலவழிக்கிறதே, உங்கள் பகுத்தறிவிற்கு அது ஏன் எட்டவில்லை? பிழைப்புவாதிகள் மக்கள் மட்டும்தனா ?
தயாளன்.
நண்பரே மக்காவில் உள்ள கல்லை அற்புதம் என்றோ இயற்கை என்றோ சொல்லி யாரும் யாரையும் ஏமாற்றுவதில்லை. குத்துக்கல்லும் குப்புசாமியும் ஒன்றாகுமா
மக்காவிற்கு (ஹஜ்) சென்று வந்தால் “தாய் அவனைப் பெற்றெடுத்த நாளில் இருந்ததைப் போன்று (பாவமறியாயப் பாலகனாகத்) திரும்புவான்.” என்ற முஹம்ம்துவின் அருவாக்கிற்கு என்ன விளக்கம்.
நீ ஏண் நாண்டுக்கிட்டு இருக்கறேன்னு கேட்டா அவன் ஏன் திரும்பிக்கிட்டு இருக்கான்? னு திருப்பி கேக்குற புத்திசாலியே…
மக்காவுக்குப் போனால் தான் மோட்சம் கிட்டும்னு முஸ்லிம் மதம் சொல்லவில்லை. பணவசதியும், பயண வாய்ப்பும் இருக்கறவங்க மட்டும் அங்கே போய் பொதுவான ஓர் இறைவனை தேச இன அந்தஸ்து கடந்த ஒரேமாதிரியான வெள்ளாடை அணிந்து ஆன்மிக அனுபவம் பெறும் வாய்ப்பு அது.
super machan
ஓன்று மட்டும் புரிகின்றது.
இந்தப் போதை “அவனுக்குப்” பிடித்திருக்கின்றது.
சாமி என்று யாராவது கூப்பிடுவது…
இஸ்லாமியர் ஹஜ் சென்று வந்தவுடன் ஹாஜியார் என்று அழைக்கப் படுவதைப் போல
வித்தியாசமாய் உடை அணிவது….
சவரம் செய்யாமல் இருப்பது…
பெரிய பொதிகள் இல்லாமல் உல்லாசப் பயணம் செல்வது..
நடனம் ஆடுவது..
பாட்டுப் பாடுவது…
ஏதோ போதை…ஏதோ சந்தோசம்…
மனுஷனாப் பொறந்தா ஏதாவது என்டேர்டைன்மென்ட் (பொழுதுபோக்கு) வேணும்ல!
சினிமாவும் டி.வி.யும் எத்துனை மணிநேரம் தாங்கும்?
இதனால உங்களுக்கு என்ன நஷ்டம்?
இதை செய்யாமல் நீங்க என்ன சாதித்தீர்கள்?
மோசஸ் மாதிரி நீங்க திறப்பின் வாசலில் நிற்க முடிஞ்சா- அத செய்யுங்க.
இதெல்லாம் இல்லாம மனுஷன் வாழ்ந்தா மன அழுத்தம்தான் மிஞ்சும்.
ஒருவேளை டாஸ்மாக் விற்பனைக் குறைகின்றதே என்ற கவலையா!
பனி லிங்கமும் கிடையாது- பனி சிங்கமும் கிடையாது என்று எங்களுக்குத் தெரியும்.
ஜோதி உருவானவர் இங்கே கிடையாது, எங்கே என்பதும் எங்களுக்குத் தெரியும்.
நல்ல ஒரு மாற்று கொடுத்தால் – நீங்கள் சொல்வதைக் கேட்கின்றோம்.
கம்ப்யூட்டரை விட்டுக் களத்தில் இறங்கத் தயாரா?
விமரிசனம் நன்றாக உள்ளது.
ஆக்கபூர்வமான தீர்வு சொல்லப் படவில்லை எண்பது வருத்தம் அளிக்கின்றது.
குரு சாமியின் பிழைப்பில் மண் அள்ளிப்போட நினைத்தீரோ!
இந்தக் குளிருக்கெல்லாம்அஞ்சாது பனிக்கரடி.
ஹ…ஹாய்…ஹீ…..
//இது ஒரு வகைப் ‘பகுத்தறிவு’. இதுதான் நம் முன் பக்திவேடம் பூண்டு ஆடுகிறது. வெறும் கருத்துப் போராட்டத்தால் இதனை வீழ்த்த முடியாது. இதன் இதயம் ஆன்மீகத்தில் இல்லை ; லௌகீகத்தில் இருக்கிறது சமூக வாழ்க்கையின் எல்லாப் பரப்புகளிலும் வேர் பரப்பியிருக்கும் இந்தப் ‘பகுத்தறிவை’ எதிர்த்துப் போராடுவதென்பது ‘ஒரிஜினல் மூடநம்பிக்கையை’ எதிர்த்துப் போராடுவதைக் காட்டிலும் கடினமானது.
//
இந்த வரிகளை எத்தனை பேர் புரிந்து கொண்டார்கள் என்று தெரியவில்லை. இந்த கட்டுரை வெறுமனே பகுத்தறிவு பிரச்சாரம் அல்ல மாறாக பக்தி என்பதே ஒரு பகுத்தறிவாக இருக்கிறது எனப்தும், அதனை எதிர்க்கும் பண்பாட்டு போராட்டம் என்பது இன்னும் நுட்பமாக செய்யப் பட வேண்டியுள்ளது என்பதையும் சுட்டி காட்டியே இந்த கட்டுரை உள்ளது.
ONNU SOLLIKKA VIRUMBARA. MANITHARKALAI NAL VALIPADUTHA, OLUKKANGALAI KADAIPIDIKKA, THAVARU SEYVATHAI THADUKKA, KADAVULIN PEYARAL PAYAMURUTHI VAITHURIKIRAR KAL NAM MURKAALA MANITHARKAL. ATHAN VILAIVE INTHE URUVA VALIPADU PONDRA MATTA VALIPAADUGAL.
THAPPU SEYYATHENU SONNA KETKA MAATANGA. THAPPU SENJA SAMI KANNA KUTHIDUM SONNA KEPPANGA. APPADI THAN VANTHU IRUKKANUM INTHA VALIPADUGAL.
ALAIPAAYUM MANATHAI ORU NILAI PADUTHAVE IN THE URUVA VALIPADU. MANATHAI AALATHERINTHAVARKALUKKU ETHUVUM THEVAI ILLAI.
AVVLOTHAN. ITHUL KADAVUL IRUKIRARA ILLAYA ENPATHU PIRACHANAI ALLA. MAKKAL THAVARILAIKKAMAL IRUKKA ERPADUTHAPATTATHU ENDRU .
IYARKAI THAAN KADAVUL.
இந்த கல்வி அறிவும், சமூக அமைப்பும் மக்களிடம் எதை தெரிவிக்க வேண்டும், எதை தெரிவிக்க கூடாது என்பதில் குறியாய் உள்ளன.. அதையும் மீறி உண்மை வெளிவரும்போது மக்கள் போதைக்கு அடிமை ஆனவர்கள் போல அவற்றில் இருந்து மீள மறுக்கின்றனர்.. நம்முடைய மக்களின் நிலைமை எந்த ஒரு கூட்டத்தையும் பின் பற்றி செல்லும் செம்மறி ஆடுகளின் நிலைமையை போலதான் உள்ளது…
மக்களின் மூட நம்பிக்கையை தயவு செய்து கெடுக்க வேண்டம் .. you might be an athiest but don’t publish some sensitive issues in internet world which affects others divotion…
மதம் குறித்து எப்போது பேசினாலும் முடிந்தவரை பதில் கூறிவிட்டு முடியாதபோது அது எங்களின் நம்பிக்கை என்று முடிக்கிறார்கள். அந்த நம்பிக்கை எதைக்கொண்டு நெய்யப்பட்டுள்ளது என்பதை ஆய்வுக்கு உட்படுத்த யாரும் விரும்புவதில்லை.
கண்ணால் கண்ட பிறகும் பட்டினிச்சாவுகளை எதிர்த்துப்போராடும் ஊக்கத்தை அந்த நம்பிக்கை தரவில்லை என்றால்
தெளிவுகள் கிடைத்தபின்னும் நல்லதை ஏற்றுச்செய்யும் துணிவை அந்த நம்பிக்கை தரவில்லை என்றால்……
அறிவியலால் நிரூபிக்கப்பட்டாலும் கூட அந்த நம்பிக்கை புறந்தள்ளப்படவேண்டியதே; அறிவியலால் நிரூபிக்கப்படாதபோதோ….
தோழமையுடன்
செங்கொடி
//you might be an athiest but don’t publish some sensitive issues in internet world which affects others divotion…//
Pal, the devotion and the marketing tactics of the devotes are irritating and hurting ppl like vinavu. Would you please help vinavu by asking them to stop the nonsense?
காலங்காத்தாலே தூங்கவிடாம ஒரு பக்கம் கோயில் மைக்செட், ஒருபக்கம் பாங்கு சத்தம், இன்னொரு பக்கம் அல்லேலுயா கோஸ்டியோட அவலக்குரல். ரொம்பக் கஷ்ட்டமா இருக்கு தல, எப்படியாவது இதெயெல்லாம் நிப்பாட்டிட்டீங்கன்னா உங்களுக்குப் புண்ணியமாப் போகும்.
ur correct, but u must undrstand one thing there something more then human , nature is god. try to think each and every happaning with god. without him nothing.
ஒன்னு செய்யுப்பா…
ஊரைவிட்டு ஓடிப் பொய் காட்டுல இருந்துக்கோ…
சாரி… காட்டுல தூங்கு…..
அய்யய்யோ! பயமா இருக்கும்.
சத்தமே கேட்காம எப்படித் தூங்குவது?
அப்படித் தூங்கினா நம்மள சாமியாக்கிடுவான்களே..
பகவானே
அருமையான கருத்துக்கள்.ஆழமாக எழுதப் பட்டிருக்கிறது.உண்மையான ஆனமீகவாதிகளாக இருந்தால் வெட்கித் தலைகுனிந்து வேதனைப் படுவார்கள்.ஆனால் அவர்கள் இந்தப் போலிப் பக்தியின் முன் தோற்றுப் போய் நிற்பதுதான் உண்மை.
//சென்னை தீவுத்திடலில் அமர்நாத்தைப் போலவே பனிக்கட்டி லிங்கத்தை உருவாக்கி ‘சென்னையில் அமர்நாத்’ என்று விளம்பரம் செய்யப்படுகிறது. ராட்டினம் ஏறப்போன பொருட்காட்சிக் கூட்டம் உடனே பக்தர்களாக உருமாறி அந்த செயற்கை லிங்கத்தைப் பரவசத்துடன் வழிபடுகிறது. திருப்பதி வரை சென்று தரிசிக்க முடியாத பக்தர்களுக்காக ‘சீனிவாச திருக்கல்யாணத்தை’ சென் னையிலேயே நடத்தி, ‘சென்னையில் ஒரு திருப்பதி’ என்று விளம்பரம் செய்கிறது திருப்பதி தேவஸ்தானம். ‘கோயிந்தா கோயிந்தா’ என்று அங்கேயும் கூட்டம் அலைமோதுகிறது.//
சமீபத்தில் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான ஒரு இஸ்லாமிய இயக்கத்தார் தங்களது நிகழ்ச்சி ஒன்றில் மக்காவிலுள்ள கஅபா பள்ளியைப் போல வடிவமைத்து வைத்திருந்ததை கண்டு மக்கள் அதைச் சுற்றி வந்தனர் என்றும் அதைத் தடுக்க நிகழச்சி ஏற்பபடு செய்திருந்தவர்களே விளக்க ஏற்பாடுக்ளை பின்னர் செய்தனர் என்றும் அறிந்து வெட்கினோம்.
நண்பா , கட்டுரை அருமை… அதே சமயத்தில் முஸ்லீம் மதத்தினர் மக்காவுக்கு சென்றால் தான் மோட்ஷம் கிட்டும் என்றும் கிறிஸ்தவர்கள் போப் என்ற மனிதனை கடவுளாக கொண்டாடுவதும் அந்த போப்களின் ஓரின சேர்கை விஷயங்கள் வெளி வந்ததையும் மேற்கோள் காட்டி இருந்தால் நீங்கள் ஒரு உண்மையான பகுத்தறிவு உடையவர் என்பேன் …ஆனால் உங்கள் கருத்து ஒரு மதத்தை மட்டுமே சாடுவது அப்பட்டமான உண்மை …
“”//இராமன் பாலம் என்பது இயற்கையாக அமைந்த மணல்திட்டு”” என்று சொன்னால், ‘இல்லையில்லை, அது இராமனால் கட்டப்பட்டது, செயற்கையானது எனவே தெய்வீகமானது’ என்று கத்துகிறார் இராம. கோபாலன். ‘அமர் நாத் பனிலிங்கம் செயற்கையானது’ என்று சொன்னால் ‘இல்லையில்லை, அது இயற்கையானது எனவே தெய்வீகமானது’ என்கிறார்கள். வடக்கே இயற்கை தெய்வீகம்! தெற்கே செயற்கை தெய்வீகம்!
சாம்சங் ரெப்ரிஜிரேட்டரையே கருவறையாக்கி, அதற்குள் பனி லிங்கம் ஒன்றை உறையவைத்து, ஆண்டுக்கு ஒரு முறை திறந்து காட்டினாலும் ‘ஹர ஹர மகாதேவா’ என்று கன்னத்தில் போட்டுக்கொள்ள இந்த பக்தர்கள் தயார்! மகரஜோதிக்குப் பதில் சிலிண்டரை வைத்து ‘ஸ்பிக் ஜோதி’யைக் கொளுத்திக் காட்டினாலும் அதனைத் ‘தரிசிக்கும்’ பொருட்டு விரதமிருக்கவும், இருமுடி சுமக்கவும் அய்யப்பன்மார்கள் தயார்//
நல்லா குட்டு வச்சிருகீங்க….
நம்ம மக்கள் ரொம்ப நல்லவங்க சார்…எதைச்சொன்னாலும் நம்புவாங்க…
நாலு வ்ரியில் நருக்குனு சொல்லீட்ங்களே எப்படி சார் இவ்வளவு தைரியம்.உங்ளுக்கு ஒரு கீரீடம் வைக்க வேண்டியது தான்.
///நண்பா , கட்டுரை அருமை… அதே சமயத்தில் முஸ்லீம் மதத்தினர் மக்காவுக்கு சென்றால் தான் மோட்ஷம் கிட்டும் என்றும் கிறிஸ்தவர்கள் போப் என்ற மனிதனை கடவுளாக கொண்டாடுவதும் அந்த போப்களின் ஓரின சேர்கை விஷயங்கள் வெளி வந்ததையும் மேற்கோள் காட்டி இருந்தால் நீங்கள் ஒரு உண்மையான பகுத்தறிவு உடையவர் என்பேன் …ஆனால் உங்கள் கருத்து ஒரு மதத்தை மட்டுமே சாடுவது அப்பட்டமான உண்மை …//
நீ ஏண்டா நாண்டுக்கிட்டு இருக்கறேன்னு கேட்டா அவன் ஏன் திரும்பிக்கிட்டு இருக்கான்? னு திருப்பி கேக்குற புத்திசாலியே…
மக்காவுக்குப் போனால் தான் மோட்சம் கிட்டும்னு முஸ்லிம் மதம் சொல்லவில்லை. பணவசதியும், பயண வாய்ப்பும் இருக்கறவங்க மட்டும் அங்கே போய் பொதுவான ஓர் இறைவனை தேச இன அந்தஸ்து கடந்த ஒரேமாதிரியான வெள்ளாடை அணிந்து ஆன்மிக அனுபவம் பெறும் வாய்ப்பு அது.
ya i agree with u do u know how many people aare dieing in the period of hug. i will tell u bcoz im in saudi arabia atleast 1 million people in eachh year. non muslims they can’t even enter the the place mecha . compare to there our india is better. so ur agree with anmeegam but ur not agree with one riligion . so ur there. only one riligion dosn’t ask to convert that the riligion u mentioned. u people con’t agree that riligion in the sence think about ur poority
முஸ்லிம்கள் மக்கா போனால் தான் மோசம் கிட்டும் என்று இல்லை போகாமலும் மோச்சம் கிட்டும் என்று நீங்கள் சொன்னாலோ ,நினைத்தாலோ அவர்கள் போய்விட மாட்டார்கள் எவன் ஒருவன் நன்மையான ,பிறருக்கு தீமை செயாமல் இருக்கிறானோ அவன் மோசம் அடைவான்.
////சாம்சங் ரெப்ரிஜிரேட்டரையே கருவறையாக்கி, அதற்குள் பனி லிங்கம் ஒன்றை உறையவைத்து, ஆண்டுக்கு ஒரு முறை திறந்து காட்டினாலும் ‘ஹர ஹர மகாதேவா’ என்று கன்னத்தில் போட்டுக்கொள்ள இந்த பக்தர்கள் தயார்! மகரஜோதிக்குப் பதில் சிலிண்டரை வைத்து ‘ஸ்பிக் ஜோதி’யைக் கொளுத்திக் காட்டினாலும் அதனைத் ‘தரிசிக்கும்’ பொருட்டு விரதமிருக்கவும், இருமுடி சுமக்கவும் அய்யப்பன்மார்கள் தயார்!////
:-))
நான் ஓர் ஈழத்தமிழனாக இருந்தாலும் இந்தியாவில் நீண்டகாலம் வாழ்ந்தவன் என்ற ரீதியில் இங்கே ஓர் இடுகையிட விரும்புகின்றேன், அத்தோடு இது தாயகத்தமிழர் மனங்களைப்புண்படுத்தினால் தயவு செய்து மன்னித்துக்கொள்ளுங்கள்.
கோடி கோடியாய் பணம் கொட்டுமிடம் இந்தியாவில் எல்லோரும் சொல்வது திருப்பதி வெங்கடேஸ்வரர் அத்துடன் ஐயப்பன் கோவில்;
இவை இரண்டும் உண்மையிலேயே தமிழ் நாட்டில் இல்லை. வேற்று மாநிலத்தில் இருந்தாலும் பக்தர்கள் தமிழ்நாட்டிலிருந்தே இங்கு அதிகம் செல்கின்றார்கள். உண்மையில் நான் வெட்கி வேதனைப்பட்டேன், நான் இந்தியாவிலிருந்த சமயம் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு பெரும் பணக்காரர் 1கோடி ரூபாவினை திருப்பதிக்கோவிலுக்கு காணிக்கை செலுத்தினார், அதேநேரம் ஒரு கோடி மக்கள் தமிழ் நாட்டில் உண்ண உணவின்றி வாடுகின்றனர், சரி 1 கோடி மக்களுக்கு 1 ரூபா வீதமாவது கொடுக்க வேண்டாம், 10 சதமாவது கொடுத்திருக்கலாமே? இல்லை தமிழ் நாட்டு அரசுக்கு சரி கொடுத்திருக்கலாமே? இவ்வாறு எத்தனை கோடிகள் கொட்டுகின்றது ஆந்திராவுக்கு? உன் பணத்தை நீ கொடுக்கின்றாய் உன் இடத்திற்கு குடிக்கக்கூட தண்ணீர் தர மறுக்கின்றான் அவன், இதை நீ உணர்கின்றாயா? நீ கொடுக்கும் ஒரு ரூபாயா இருந்தாலும் தமிழனுக்கு கொடு, தமிழனை வாழ வை அதை விடுத்து அடுத்தவனுக்கு கொட்டிக்கொடுக்குறாய். அவனோ உன்னை எட்டி உதைக்கின்றான், நீ ஒரு கோடி கொடுத்தாய் என்று அங்கே சொன்னால் நீ தமிழன் என்று தெரிந்தால் உனக்கும் தான் அடி, உதை. மனதிற்கொள் வெட்கித்தலைகுனியவேண்டும், அரசியலில் ஆட்டிப்படைக்கின்றனர் எல்லாமே பாதிக்கு மேல் வேற்று மாநிலத்தான், நீ தமிழ் நாட்டுக்காரன் என்று கூறிக்கொண்டு ஆந்திராவிலோ, இல்லை கர்நாடகத்திலோ இல்லை வேறு எந்த மாநிலத்திலோ உன்னால் சுதந்திரமாக தமிழ் வாழ்க என்று ஒரு வார்த்தை சொல்ல முடியுமா உனக்கு? சொல்ல தைரியமிருக்கின்றதா உனக்கு இல்லையே ஆனால் வேற்று மாநிலத்தவன் வந்து தமிழ்நாட்டில் ஆண்டால் தலைமேல் வைத்துக்கொண்டாடு, பால் அபிசேகம் செய், ஏனென்றால் தமிழன் மடையன் என்று எண்ணிக்கொண்டான். வந்தோரை வாழவைக்கும் பூமி வாழவைக்கும் பூமி என்று சொல்லியே நீ செத்துப்போ அவன் வாழ்ந்துகொண்டிருக்கின்றான். தமிழினமே சிந்திக்க வேண்டிய தருணமிது. அந்நியன் நம்மினம் அழிக்க நினைக்கின்றான், ஆண்டவன் அதைப்பார்த்து இரசிக்கின்றான்.
கேவலம் உன் இனம் உன் கண்முன்னே அழிக்கப்படுகின்றது அதைப்பார்த்தும் இன்னும் ஏன் அமைதி?
ecellent
அய்யா இறை உணர்வு என்பது மொழிகளைக் கடந்தது. இந்து மதத்திற்க்கு எதிராக எழுதும் இந்த போலி பகுத்தறிவுவாதிகள், உண்மையிலேயே பகுத்தறிவுவாதிகளாக இருந்தால் தமிழகம் கண்ட சித்தர்களைப் பற்றி ஆய்வு செய்துவிட்டு பிறகு எழுதட்டும்
மிக நுட்பமான கட்டுரை…அற்புதமாக எழுதப்பட்டுள்ளது…!!!
/மக்காவுக்குப் போனால் தான் மோட்சம் கிட்டும்னு முஸ்லிம் மதம் சொல்லவில்லை. பணவசதியும், பயண வாய்ப்பும் இருக்கறவங்க மட்டும் அங்கே போய் பொதுவான ஓர் இறைவனை தேச இன அந்தஸ்து கடந்த ஒரேமாதிரியான வெள்ளாடை அணிந்து ஆன்மிக அனுபவம் பெறும் வாய்ப்பு அது.
//
அட வாசக அதி புத்தி சாலியே , அந்த பரவச அனுபவத்தை தாண்ட சபரி மலைக்கும் போறவனும் சொல்றான் …என்ன உன் மதத்தில காசு உள்ளவன் மட்டும் போறதா நீ சொல்ற ..இங்க ஏழை பாளை எல்லாரும் போறான் .. அங்க போரவுனுக்கும் இங்க போறவனுக்கும் பெரிய வித்தியாசமில்லை ..உன் எதிரி மதத்தை பற்றிய கட்டுரை என்றவுடன் நீ காட்டும் அக்கறை நல்லாவே தெரியுது
very good say ilayadhasan
///மக்காவுக்குப் போனால் தான் மோட்சம் கிட்டும்னு முஸ்லிம் மதம் சொல்லவில்லை. பணவசதியும், பயண வாய்ப்பும் இருக்கறவங்க மட்டும் அங்கே போய் பொதுவான ஓர் இறைவனை தேச இன அந்தஸ்து கடந்த ஒரேமாதிரியான வெள்ளாடை அணிந்து ஆன்மிக அனுபவம் பெறும் வாய்ப்பு அது.
//
இது எப்படி இருக்குன்னா, ஒரு குறிப்பிட்ட மத பணக்காரன் குடிக்கிற மதுவிலதான் பரவச அனுபவம் கிடைக்கும் , மத்தவன் குடிக்கிறதுல ஒரு போதையும் கிடைக்காது அப்படின்ற மாதிரி … ஆக மொத்தம் மக்காவுக்கும் ,சபரி மலைக்கும் , வாடிகனுக்கும் போற எல்லா பயளுகலுமே போதைக்கு அடிமை …இதுல என் போதை பெரிசு ,உன் போதை சிறிசு அப்படின்னு அடி தடி வேற …
Well said Ilayadasan….
Hats off
Vinavu, if you have added facts about the ‘huge beliefs’ in other religions also, it would have been a nice entertaining article
keep the good work going
வினவு,
அருமையான கட்டுரை.
ஆன்மீக வியாபரத்திற்கு மகரஜோதி முதலீடு இல்லாத தொழில்
எனக்கும் , என் முஸ்லீம் நண்பனுக்கும் ,உணவு இடைவெளியில் ஓர் உரையாடல் , நண்பன் வழக்கம் போல் , இஸ்லாம் மதத்தின் அருமை , பெருமைகளை எடுத்து சொல்ல ஆரம்பித்தார்:
நண்பர்: குரான் ல என்ன சொல்லியிருக்குன்ன , மனிதன் இறந்த பின்,அவன்
முதுகு தண்டு வடதில இருந்து முத்து மாதிரி ஒன்னு சொர்கத்துக்கு போகும், அங்க சொர்க்க வாழ்வுன்னு ஒரு நாட்டாமை தீர்ப்பு சொல்லிடாருன்ன
உடனே அந்த முத்து ,அந்த மனிதன் பதினாறு வயதில எப்படி இருந்தானோ அப்படி
ஆயிடுவான் …அப்புறம் அவன் சொர்க்கத்தில் இருக்கிற கன்னி கழியாத பெண்களை எப்படி வென அனுபவிக்கலாம் …
நான் : இது ஒரு கவர்ச்சி காட்டி மதத்துக்கு இழுக்கிற தந்திரமா இருக்கே..
ஏன் அந்த முத்து ஒரு குழந்தை ஆக மாறி , அப்படியே எந்த ஒரு
விவகாரம் இல்லாம இருக்க வேண்டிதானே …அங்க போனபுரமும்
ஏன் இந்த ஜல்சா ஆசை ?
நண்பன்: பெருத்த அமைதி ..
நான் : உங்களோட இன்னொரு முஸ்லீம் நண்பன் ,உங்க கூடவே
இறந்து , நீங்க ரெண்டு பெரும் , முத்து ல இருந்து உங்க பதினாறு
வயசுக்கு போறத வட்சிகுடுவோம் …அங்க ரெண்டு கன்னிக இருக்காக
ஆளுக்கு ஒன்ன அனுபவிக்கலாம் அனுபவிகிறீங்க ..அப்புறம்
உங்க ரெண்டு பேருக்கும் ஒரு பொறாமை வருது ..என் கன்னி அழக அவன்
பாக்க கூடாதுன்னு …அப்பே என்ன செய்வீங்க ?
நண்பன்: அமைதி
நான்: ஒரு வேலே , அவங்களுக்கும் முக்காடு போடுருவீன்களோ ?
adinga ilayadhasan . superb
Anna iladasa rendu kanni illai, 62 kannikal nammai sorkalogathil nammai varaverpargalam. ethuku salsa panna. oru ponnu kelvi-pathil nigalchiyil azhhaga ketal, oru aanukku 62 kannigal alla koduppaar. oru pennukku Alla ethanai aangalai koduppaar.
Muslimgalidam pathil kidaiyathu.
Arumai nanba arumai…Jai Hindhu…
dai muttal sorkam enbathe kavalaigalai marakkum idam anga poi epdida sanda varum. apdi iruntha athu sorkam illada
“இது ஒரு வகைப் ‘பகுத்தறிவு’. இதுதான் நம் முன் பக்திவேடம் பூண்டு ஆடுகிறது. வெறும் கருத்துப் போராட்டத்தால் இதனை வீழ்த்த முடியாது. இதன் இதயம் ஆன்மீகத்தில் இல்லை ; லௌகீகத்தில் இருக்கிறது சமூக வாழ்க்கையின் எல்லாப் பரப்புகளிலும் வேர் பரப்பியிருக்கும் இந்தப் ‘பகுத்தறிவை’ எதிர்த்துப் போராடுவதென்பது ‘ஒரிஜினல் மூடநம்பிக்கையை’ எதிர்த்துப் போராடுவதைக் காட்டிலும் கடினமானது.”
புதிய கலாச்சாரத்தில் வந்த பல கட்டுரைகளையும் வினவு வெளியிட வேண்டும்.கடவுள் எங்கெ இருக்கிறார் எனக்கேட்டால் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்பார்கள் பின்ன என்ன இதுக்கு சபரிமலைக்கு போறீங்க என்றால் மனசு தான் கடவுள் என்று புது வியாக்கியானம் கொடுப்பார்கள்,கடவுள் குடியுப்பதால் தான் தன் வாழ்வுக்கு யாரெதிரி என்பதை தெரிந்தும் அறியாதது போல் கடவுள் போதையில் கிடக்கிறார்கள் நம்முடைய வேலையே கொஞ்சமும் ஈவிரக்கமின்றி இவர்களின் “மனசை” பிளப்பதாக இருக்கவேண்டும்
கலகம்
கோழி முட்டை போடுவதை போல பின்னூட்டமிடும் ஒரு புண்ணாக்கு வேட்டிக்கு உள்ளே கட்ட வேண்டிய கோவணத்தை நெற்றியில் கட்டிக்கொண்டு வந்திருக்கிறது.
காவி நிறத்தில் இருந்தாலும் கோவணம்தானே அதன் கப்பு இந்த பிண்ணூட்ட பகுதியை நாறடிப்பதால் அந்த ஜந்துவை விரட்டி விடுங்கள் தோழர்களே.
ஜட்டி யில் தொழிற் சங்கம் கூடாது என வரிந்து கட்டிக் கொண்டு வந்த ஐடி தாசன் இங்கே பொந்து மத்ததிற்காகவும் ஆஜர் ஆகிரார்…..
நமது அறிவையும் , பகுத்தறிவையும் கேள்வி கேட்கிறார். ஆனால் ஒரு பிரச்சனை…..
ஜட்டி துறையோ, பொந்து மதமோ ஏதோ புனிதமாக இருப்பது போலவும அதை பற்றி நாம் அவதூறு பேசுவது போலவும பிதற்றும் இவர் ராமலிங்க ராஜூ மற்றும் ராமன் நாயரையும் மறப்பது ஏனோ?
கண்ணை மூடிக்கொண்டிருந்தால் திறக்கலாம்
குருடராயிருந்தால்……அதுவும காரியக் குருடராயிருந்தால்???????????????????????
illayadhasan
முஸ்லீம் மதத்தினர் மக்காவுக்கு சென்றால் தான் மோட்ஷம் கிட்டும் என்றும் கிறிஸ்தவர்கள் போப் என்ற மனிதனை கடவுளாக கொண்டாடுவதும் அந்த போப்களின் ஓரின சேர்கை விஷயங்கள் வெளி வந்ததையும் மேற்கோள் காட்டி இருந்தால் நீங்கள் ஒரு உண்மையான பகுத்தறிவு உடையவர் என்பேன் …ஆனால் உங்கள் கருத்து ஒரு மதத்தை மட்டுமே சாடுவது அப்பட்டமான உண்மை …
ஏண்டா அம்பி,
புதிய கலாச்சாரம் பத்திரிக்கை படிக்கிரியோல்லியோ,
ம.க.இ.க., எல்லா ம்த்த்தையும் விமர்சனம் பன்ராள். மதத்தை வைச்சு வியாபாரம் பன்ர என்னை மாதிரி எல்லா பிராடுகளுக்கும் ம.க.இ.க., எதிரிதான்.
ஆமா நீ நம்மவாதான , ஆத்துக்கு வந்துட்டு போடா.
குருட்டு அர டிக்கெட்டு ,
என் பின்னூட்டத்தை நல்லா படி முதல்ல …பொந்து மதம் …முல்லா மதம் ..
கிரிஷ் மதம் …எல்லாமே சுத்த பேத்தல் பொடியா …முந்தரி கொட்டையா இருக்காத ..
எல்லாத்தையும் விரட்டு விரட்டுனி சொல்ற உன்ன மொதல்ல விரட்டனும் ..மொதல்ல முழு டவுசர் தைத்து , பொறுமையா எப்படி அடுத்தவங்க என்ன சொல்ல வாரங்க கவனிக்க கத்துக்கோ
welldone yarlnilavan
வோய் ராம கோபாலா … நான் அம்பியுமில சும்பியுமில …அதை படிச்சியா இத படிச்சியா கேட்குரையே ..விட்டா வினவு பதிவெல்லாம் படிச்சு ஒரு டாக்டோரட் வாங்கிவந்துட்டுதன் பின்னூட்டம் போடணுமுன்னு சொல்வியோ ?
இந்து மதவெறி இளையதாசரே,
கட்டுரையில் ஆதாரத்தோடு பனிலிங்கம் பொய், மகர ஜோதி பொய், ராமன் பாலம் பொய் என்று போட்டிருக்கு. நீங்களும் ஆதாரத்தோடு அதை மறுக்கலாமே. இதுக்கு இடையில் முசுலீம ஏன் இழுத்து உடுற. ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி போன்ற காவி ரவுடிகள் தான் எதை பேசினாலும் இப்படி முசுலீம இழுத்து உடுவான்.
ஏம்பா தாசு,
சாரிபா …உன் புண்ணூட்டத்த இப்பதான் பாத்தேன்… முத்தான மூணு கருத்த சொல்லீகிறே……
1) இந்துவ மட்டும் ஏன் திட்டுற?
2) முசுலீம ஏன் திட்டல??
3) கிரிஸ்டியன ஏன் திட்டல???
இத கண்டு புடிக்கறத்துகுள்ளாரயே தாவு தீந்து டவுசர் கிழிஞ்சு போச்சு….இந்த அழகுலா புதுசா முழு டவுசர தைக்கணுமாம்? விளங்கிடும்!!!!
அப்புறம் ஒன் மேட்டர்… நீ எல்லாத்தையும் படிச்சு டாக்குடர்ர்ர்ரேட்டு வாங்கிட்டு புண்ணூட்டம் போட வாணாம்…
அட்லீஸ்ட் இந்த கட்டுரையை படிச்சுட்டு புண்ணூட்டம் போடு….
அத உட்டுட்டு சம்மந்தமேயில்லாம அவன திட்டு அவங்காயாவ திட்டுன்னு சொன்னா உன்ன கும்பின்னுதான் சொல்லுவாங்க
நான் முஸ்லீம் மதத்தை சாடியவுடன் , நான் ஒரு அம்பியோ என்று உடனே சந்தேகம் வந்து டவுசரும் , கோபாலனும் எப்படி குதிகிரான்களோ …அதே சிந்தனயில் ஒட்டிய சந்தேகம் தான் எனக்கும் வந்தது வினவின் இந்த பதிவின் மேல …நான் உடனே வினவு நீ ஓர் கிறிஸ்டியன் தானே …அல்லது நீ ஓர் முஸ்லீம் தானே நு கேட்கலே …அப்படியே விட்டுப்போன இந்த இரு மதங்களின் நாற்றத்தையும் மேற்கோள் கட்டியிருந்தா , கட்டுரை ஒரு நடு நிலமையா இருந்திருக்குமே !
டவுசர் நீ தான் எதையும் புரிய முடியாத அர வேக்காடு ன்னு நியே ஒத்துகிட்ட …பின்ன என்ன , பாஞ்சயது முடிஞ்சட்சு ..போயி அடுத்த கும்மி எங்க போடலாமுன்னு பாரு !
சுனா பானா, இந்து மதத்தை மட்டும் சொல்லாதட ன்ன , உடனே இந்து தீவிர வாதியா ….முஸ்லீம் பத்தி சொன்னவுடனே நீ குதிகிரையே , அப்பா நீ ஒரு முஸ்லீம் தீவிரவாதின்னு நான் ஏன் உன்ன கூப்பிட கூடாது ?
எலேய் தாசப்பா..
வினவு தளத்தில் இதற்கு முன் இசுலாமிய அடிப்படைவாதம் மற்றும் கிருத்துவ மூடத்தனங்களை குறித்து எழுதப்பட்டிருக்கிறது.. — நீ ஏன் அங்கெல்லாம் வந்து ஏன் இந்து மதம் குறித்து எழுதவில்லை என்று ஏன் கேட்கவில்லை??? Surprising dude..!!!
இக்கட்டுரை ஒரு பத்திரிகையில் வெளியான ஒன்று.. அதனை இங்கே மறுபதிப்பு செய்திருக்கிறார்கள். ஏற்கனவே பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரையில் என்ன எழவுக்கு மாற்றம் செய்து இசுலாம் கிருத்துவம் குறித்து சொருக வேண்டும்? அதற்குத் தான் முன்பே எழுதிய கட்டுரை இருக்கிறதே? அதைக் கூட கவனிக்காத அளவுக்கு உன் குடுமி உன் கண்ணையே மறைக்கிறது. மொதல்ல அத்த அள்ளி முடிஞ்சிக்கோங்கோ.
பேளப் போற எடத்துல சாப்டியான்னு கேக்கரது தான் உன் அறிவா? எங்கேர்ந்துய்யா கெளம்புரீங்க?
இன்னும் கேட்க வேண்டியது தானே.. ”வினவுக்காரவுக ஜோராஸ்ட்ரியம், கான்பூஷியம், அவும் ஷென்ரிக்யோ, பாகான், சீக்கியம், ஜைனம், பௌத்தம், இயற்கைமதம், தாவோயிசம், யூதம்… இப்படி உள்ள மதங்களையெல்லாம் பத்தி எழுதாததாலே அந்த மதவெறி பிடிச்சி அலையறாக” அப்படின்னு..
நன்பர்கள் மன்னிக்க::: “ஒரு பத்திரிகையில்” = புதிய கலாச்சாரத்தில்.
தே லவர் பாய் , உன்ன மாதிரி லவ் பன்றதில பிசிப்பா .. latest பதிவுக்கு லேட்டஸ்ட் reply தான் கொடுக்க முடியும் … அறிசுவடிய தேடி பிடிச்சு அங்கெல்லாம் போயி கருத்த போடுன்னு சொல்றே …நான் போட ரெடி …நீ ரெடியா lad?