privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்ஈழம்: சென்னையில் ம.க.இ.க ஆர்பாட்டம் ! படங்கள், வீடியோ !!

ஈழம்: சென்னையில் ம.க.இ.க ஆர்பாட்டம் ! படங்கள், வீடியோ !!

-

ஜனவரி 26, 2009! வழக்கம் போல் சென்னை மெரினாவில் காவல்துறை அணிவகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அரசுத் தொலைக்காட்சியில் தில்லியில் நடக்கும் இராணுவ அணிவகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. பிற தொல்லைக்காட்சிகளில் சிம்பு, தனுஷ், தமன்னா முதலான நாட்டுக்காக உழைக்கும் நல்லவர்களின் அணிவகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. இப்படியாக தேசப்பற்று பொங்கி வழிந்து கொண்டிருந்த நிலையில், சென்னை ஆளுநர் மாளிகைக்கு அருகில் சைதாப்பேட்டை பனகல் மாளிகைக்கு எதிரிலிருந்து ஒலிக்கிறதொரு இளம்பெண்ணின் குரல். ஈழத்திலே வெறியாட்டம்! இங்கே எதற்கு கொண்டாட்டம்? குடியரசுக் கொண்டாட்டம்?” இம்முழக்கத்தை தொடர்ந்து எதிரொலித்து எழும்புகின்றன ஆயிரக்கணக்கான குரல்கள்.

சைதை பேருந்து நிலையத்தை கடந்து செல்லும் வாகனங்கள் தம்மையறியாமல் தாமதிக்கின்றன. அனுமதி வழங்கப்படாத ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்ய வந்து நிற்கும் காவல்துறையின் முகத்தில் ஈயாடவில்லை.

சென்ற வேலையை மறந்து ஆர்ப்பாட்டத்தை கவனிக்க நிற்கிறார்கள் மக்கள். முழக்கங்கள் விண்ணைப் பிளக்கின்றன. தெறிக்கும் தமிழர் இரத்தத்தின் புரவலன் யார், புரவலன் யார்? இலங்கை இராணுவம் கைகளிலே இருப்பதென்ன, இருப்பதென்ன? இந்திய அரசு சப்ளை செய்த துப்பாக்கிகள், ஆயுதங்கள்! இந்திய அரசே, காங்கிரஸ் அரசே, பதில் சொல், பதில் சொல்! நாடகம் வேண்டாம், நாடகம் வேண்டாம், நயவஞ்சக நாடகம் வேண்டாம்” கூர்ந்து கவனிக்கிறார்கள் பலர். வியந்து நிற்கிறார்கள் சிலர். மாட்சிமை தாங்கிய உலகத்தின் மாபெரும் ஜனநாயக சோசலிசக் குடியரசின் கொண்டாட்ட நாளன்று, அதன் அயோக்கியத்தனத்தை, அகிம்சை தரித்த கொலை முகத்தை தோலுரிப்பதா?

ஆம். ஜனநாயகக் குடியரசின் முகத்திரையை கிழிக்கும் ஜனநாயக உரிமையை நிலைநாட்ட எமது அமைப்புகளான மக்கள் கலை இலக்கியக் கழகம்(ம.க.இ.க), புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்ணணி(பு.ஜ.தொ.மு), விவசாயிகள் விடுதலை முன்ணணி(வி.வி.மு), புரட்சிகர மாணவர் இளைஞர் முன்ணணி(பு.மா.இ.மு), பெண்கள் விடுதலை முன்ணணி(பெ.வி.மு) ஆகிய புரட்சிகர அமைப்புகள் அன்றுதான் களத்திலறங்கின. முதல் நாள் பு.ஜ.தொ.மு-வின் முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டிற்கு தமிழகம் முழுவதிலுமிருந்து பங்கேற்க வந்திருந்த புரட்சிகர அமைப்புகளின் தோழர்களிடம், மாநாடு முடிந்த இரவில், மறுநாள் காவல்துறை அனுமதியின்றி, சிங்களப் பாசிச அரசுக்கு துணைபோகும் நயவஞ்சக இந்திய அரசை அம்பலப்படுத்தும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ள திட்டம் அறிவிக்கப்பட்டது. சற்றும் தயங்காமல் பங்கேற்க முன்வந்தனர் தோழர்கள். அன்று இரவு ஆயிரக்கணக்கான தோழர்கள், ஆண்கள், பெண்கள், கைக்குழந்தைகள் சென்னையின் பல இடங்களிலும் தங்கிக் கொண்டனர். 500க்கும் மேற்பட்ட பெண்களும், குழந்தைகளும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில்தான் அன்று இரவு உறங்கினர். விரட்ட வந்த காவல்துறையை சாதுர்யமாகப் பேசி விரட்டியடித்தனர்.

மறுநாள் காலை, தோள்பைகளையும், குழந்தைகளையும் சுமந்து கொண்டு பட்டொளி வீசிப் பறந்த ஆயிரக்கணக்கான செங்கொடிகளோடு சில மணி நேரங்களில் போர்ப்படையாய் சைதையில் அணிவகுத்து நின்றனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், இளம்பெண்கள், முதியவர்கள் என அனைவரும் செந்நிறத்தில் உடையணிந்து நிற்க, செம்படை அணிவகுப்பாய் சீறித் தொடங்கிற்று ஆர்ப்பாட்டம். போர்முழக்கமாய் தப்பு ஒலிக்க, காற்றை கிழித்துக் கிளம்பின முழக்கங்கள். சிவப்பு அலையாய் எழுந்து நின்ற தோழர்களைக் கண்டு உள்ளூர கலங்கி நின்ற காவல்துறை, ஒரு புறம்கைது செய்ய வேண்டும், இத்தோடு முடித்துக் கொள்ளுங்கள்” என தலைவர்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்தது. மறு புறமோ இலங்கைக்குள்ள திரும்ப திரும்ப மூக்கை நுழைக்கிற, குப்புறக் கிடந்தான் ராஜீவ் காந்தி மறந்து போகுற!” என ம.க.இ.கவின் மையக் கலைக்குழு பாடிக் கொண்டிருந்தது. அந்த புனித நாளில் அந்தப் புனிதப் பாடலை சத்தியமூர்த்திப் பவனத்து கதர்ச்சட்டைகள் கேட்டிருக்க வேண்டும். மெய்மறந்து போயிருப்பார்கள்.

கிளிநொச்சி வீழ்ந்தது, முல்லைத்தீவு பிடிக்கப்பட்டது என ஒவ்வொரு நாளும் வெளிப்டையாக தமது குரூர மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வரும் பார்ப்பனப் பத்திரிக்கைகளை அம்பலப்படுத்தி பேசத் துவங்கினார் ம.க.இ.கவின் மாநிலச் செயலாளர் மருதையன். 1983 முதல் தனது உளவு அமைப்புகளால் ஈழப் போராளி அமைப்புகளை கைக்கூலிகளாக்க முயன்றதையும், தான் முன்வைத்த துரோக ஒப்பந்தத்தை ஈழ மக்கள் புறக்கணித்த ‘குற்றத்திற்காக’ அமைதிப் படை என்ற பெயரில் தனது படையை அனுப்பி ஈழ மக்களை கொன்று குவித்தும், ஈழப் பெண்களை பாலியல் வன்புணர்ச்சிக்கும் ஆளாக்கிய வரலாற்றின் துயரத்தை சில வரிகளால் கோட்டுருவமாக எழுப்பினார். தமது தலைவனுக்காக செண்டிமெண்ட் கண்ணீர் வடிக்கும் கதர்ச்சட்டை காலிகள் ஈழப்பெண்களின் இரத்தத்திற்கும், கண்ணீருக்கும் என்றைக்காவது பதில் சொல்லியிருக்கிறார்களா எனக் கேள்வி எழுப்பினார். இந்நிலையில் தமது சுயநிர்ணய உரிமைக்காக போராடி வரும் மக்களின் கோரிக்கையைப் பற்றி வாய் திறக்காமல், சோறு அனுப்ப இரங்கற்பா பாடும் கேவலத்தை திரைகிழித்தார்.ஏய் பிச்சையெடுப்பதற்கா நடக்கிறது அங்கே போராட்டம்? ஈழத் தமிழ் மக்களின் தன்னுரிமைக்கான போராட்டம் அது” என கொதித்த குரலில் தகித்தது மண். இந்திய அரசை கைகூப்பி போரை நிறுத்த வலியுறுத்தும் மோசடியை அம்பலப்படுத்தினார். இந்திய அரசு குறைந்தபட்சம் போரை நிறுத்து என்று கூட சொல்லாது. ஏன் என்றால், டாடாவுக்கு அங்கே தேயிலைத் தோட்டம் இருக்கிறது. ஏன் என்றால் அம்பானிக்கு அங்கே எண்ணெய்க் கிணறு இருக்கிறது. அந்துஜாவுக்கு சிமெண்ட் கம்பெனி இருக்கிறது. மித்தலுக்கு தொழில்கள் நடக்கின்றன. எனவே இந்தியத் தரகு முதலாளிகள் கொள்ளையடிப்பதற்காக இந்திய அரசு மாமா வேலை பார்க்கிறது” என தெற்காசியாவின் பிராந்திய நாட்டாமையாக தன்னை நிறுவிக் கொள்ள முயலும் இந்திய அரசின் வர்க்க நலனை படம் பிடித்தார். தனது சொந்த நாட்டில் காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களிலுள்ள மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுத்து, அவர்களை காக்கை குருவிகளைப் போல சுட்டுத் தள்ளும் இந்திய அரசு, சிங்கூரிலும், நந்திகிராமிலும், ஒரிசாவிலும், கோவாவிலும் தரகு முதலாளிகளுக்காகவும், பன்னாட்டு முதலாளிகளுக்காகவும் உழைக்கும் மக்களை சுட்டுத் தள்ளிய இந்திய அரசு, ஈழ மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் என்பது பகற்கனவு மட்டுமல்ல, இந்திய அரசின் நயவஞ்சக கொலைவெறி முகத்தை மறைப்பதாகும் என்பதை ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.உடனடித் தீர்வுகள் ஏதுமில்லை. எனினும் போராட்டம் தொடர்கிறது. ராஜபக்சே நினைப்பது போல புலிகளையும், பிரபாகரனையும் ஒழித்து விட்டால் ஈழப் போராட்டம் முடிந்து விடுமென்பது வீண்கனவு. மக்களுக்கு எதிரான எந்த அடக்குமுறையும் வென்றதில்லை. விடுதலைப் போராட்டம் தொடரும். தொடர்ந்து கொண்டேயிருக்கும். ஏனெனில் விடுதலைக்கான போராட்டம் தேதி குறிப்பிட்டு தொடங்கி, தேதி குறிப்பிட்டு முடிக்கப்படுபவையல்ல” என முழங்கினார். கண நேரம் பெரும் மழை பொழிந்த அமைதி நிலவியது.

கிளிநொச்சி வீழ்ந்தாலென்ன, முல்லைத்தீவு வீழ்ந்தாலென்ன, இல்லை வென்றது இல்லை, இல்லை! இனவெறி ஆதிக்கம் வென்றது இல்லை!” என முழக்கங்கள் அதிர காவல்துறை வாகனங்களில் ஏற்றப்பட்டார்கள் தோழர்கள். கம்பியிட்ட ஜன்னல்களின் வழியே செங்கொடி பறக்க முழக்கமிட்ட தோழர்களை ஏற்றியவாறு கடந்து சென்றன வாகனங்கள். எனினும் காற்றில் ஒலித்தவாறிருந்தன அடர்த்தியான குரல்கள். இதோ நேற்று பிரணாப் முகர்ஜி இலங்கை சென்றிருக்கிறார். போரை நிறுத்துவதற்கு அல்ல, வெற்றியைக் கொண்டாட! இலங்கை அரசு கொக்கரிக்கிறது, கருணாநிதியையும், ஜெயலலிதாவையும் வேடிக்கை பார்க்க அழைக்கிறது! துக்ளக் சோ சிரிக்கிறான், சுப்பிரமணிய சுவாமி குதூகலிக்கிறான், இந்து ராம் வாழ்த்துப்பா எழுதுகிறான், இலங்கைக்கும் இந்தியாவுக்குமான கிரிக்கெட் போட்டியில் டாஸ் ஜெயிப்பது எவ்வளவு முக்கியமென டோனி விளக்குகிறார். எல்லா சமயமும் நீங்களே டாஸ் ஜெயித்து விட முடியாது. காலங்கள் மாறும், மாறியே தீரும். இன்று நெறிக்கப்பட்டு கிடக்கும் ஈழமக்களின் குரல்வளைகளிலிருந்து தணியாத விடுதலைத்தாகம் பெரும் ஓலமாய் எழுந்தே தீரும். இது வரலாற்றின் விதி.

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே சொடுக்கவும்

இந்த பதிவுக்கு தமிழிஷில் வாக்களிக்க இங்கே சொடுக்கவும்

தொடர்புடைய பதிவுகள்:

ஈழத்திற்காக ஓர் ஆர்ப்பாட்டம்…

ஈழம்: தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் போராட்டம் !

வீடியோ:

படங்களை பெரியதாக காண படத்தின் மேல் சொடுக்கவும்

 

 

  1. வாடிய நெஞ்சில் மலர்ச்சிதரும் காணொளி நண்பரே நன்றி! இணைப்பிற்கு.

  2. ஈழத்தில் நடக்குது கொலைவெறியாட்டம் இங்கே என்ன குடியரசு கொண்டாட்டம்” என்ற கேள்வி உண்மையான இந்தியபற்று வைத்திருக்கும் எவரையும் உலுக்கும் ஆனால் காதில் கேட்காதவாறு ஐடி அடிமைகள் பீபீஓ தொண்டுகளும் 19B க்காக காத்திருந்தனர்,தோழர்கள் பலரிடமும் நோட்டீசுகளை கொடுத்தனர்.படித்த மேதாவிகளும் ஐடி அட்மைகள் சிலரும் வான்கிய நோடீசைன் தலைப்பை பார்த்தவுடன் கீழேப்போட்டன.தன்வாழ்க்கையை தவற விட்டவன் ஈழத்தமிழன் உயிரைபற்றி கவலைப்படுவான் என எதிர்பாப்பது கூட தவறுதான் போலும்.\\

    அம்முழக்கங்களால் எக்கட்டிடமும் அசையவில்லை.துரோகத்தை மொத்தமாய் குத்தகை எடுத்த இவ்வரசின் கட்டிடங்கள் உடைபடுவதற்கு கலகக்குரல்களின் எண்ணிக்கை ஆயிரமல்ல லட்ச,கோடிகளாக பெருகவேண்டும்,இன்னும் நாம் பார்வையாளராகவே இருந்தால் ஈழத்தில் மட்டுலல்ல இங்கேயும் தமிழினம் மொத்தமாய் அழிக்கப்படும்.ஒப்பாரிகளோ ஈழத்தமிழனின் கதறல்களை பார்த்து கண்ணை கசக்குவது மட்டும் பலன் தராது, ஈழத்தில் போரினை நடத்திக்கொண்டு இரூக்கும் இந்திய அரசினை எதிர்க்காத நமது கண்ணீர் செத்துக்கொண்டிருக்கும் அம்மக்களை சுட்டெரிக்கவே துணை போகும்.

  3. மருதய்யன் பேசும்போது பார்ப்பன பத்திரிகைகள், ஜெயலலிதா, சு.சாமி, சோ, ராம் என்று கூறி பார்ப்பனீயம்னு சொல்றாரு. பார்ப்பனீயம்னா என்னான்னு விளக்கனா நல்லாயிருப்பீங்க. ஏதோ ஒரு பி.பி.ஓ. அடிமை கேக்குறான்னு விட்டுறாதீங்க எஜமானே.

  4. If ever Eelam Tamils loose the current battle, Tamils of Tamil Nadu will loose their respect and will get humiliated especially among neighbouring states like Karnadaka and Kerala.

    Hence, my brethren………urge Sonia to stop abetting the sinhala state terror.

  5. Vaseekaran is correct……

    It is the Tamils of Tamil Nadu who will loose if sri lanka ever wins the current war against Eelam Tamils. Come on……..our neighbouring states refuse to give us the water even after the Court’s ruling…..sonia does not challenge karnataka/Kerala for this……..

    Further, the sinhala state terror forces’ head already humiliated Tamil Nadu politicians by saying that they are like Jokers/clowns having no guts……..

  6. உங்கள் போராட்டங்களுக்கு நன்றிகள் தோழர்களே.
    தமிழர்களின் ஒன்று பட்ட போரே இந்திய உபகண்டத்தில் இந்திய வல்லதிக்கச் சுரண்டலை ஒழிக்கும்.பெரியார் வழியில் சேயின் வழியில் மார்க்சின் வழியில் ஒன்று பட்டுப் போராடுவோம்.

  7. The sooner the LTTE, the terrorist organisation is eliminated, the better. These bastards are using poor innocent Tamils as human shield, similar to Hamas against the Israleis. Where were your sympathy when innocent civilians got killed for decades in the suicidial attacks by these monsters? Blaming brahmins and Parapans for everything is the easy way out. The brahmins make up a tiny percentage of the TN population and to blame them for all the ills of this dreaded useless corrupt DMK govt is laughable. Don’t you guys ever grow up? I do agree that there was discriminiation against the Dalits by ALL sections of the community in the past. To isolate and blame one particular community is just DMK /EVr siriyar politics. SLK tamils need a peaceful settlement that will enable them coexist peacefully, on PAR, with the Singhalese . As long as LTTE is in charge, this will not happen. Let us pray for a peaceful future.

  8. மதிப்புக்குரிய டாக்டர் ருத்ரன் தங்களது ரெஸ்பான்சுக்கு நன்றி, மருதய்யன் ருத்திரனின் பதிலை ஏற்றுக் கொள்கிறாரா? இதுதான் உங்களது அதிகாரப்புர்வமான கருத்தா என்பதையம் அறிய விரும்புகிறேன்.

  9. அன்பரசு, கூகிளில் பார்ப்பனியம் என்று தேடிப்பாருங்கள்.. முன்பே நிறைய எழுதப்பட்டிருக்கிறது..

    இல்லை என்றால் இங்கே / அல்லது வினவு தோழர்கள் வலைத் தளங்களிலோ ( அசுரன் ) / பெரியாரிஸ்டுகள் வலைத்தளங்களிலோ ( தமிழ் ஓவியா ) வகைப்படுத்தலில் இருக்கும் பார்ப்பனியம் என்ற வார்த்தையை கிளிக் செய்தால் நிறைய கட்டுரை கிடைக்கும் பொருமையாக படித்துப் பாருங்கள்..

    இந்தக் கட்டுரை ஈழம் தொடர்பானது என்பதையும் நினைவில் வைத்திருங்கள்..

  10. காதல் பையா (காதல் கோமாளி) இந்தக் கட்டுரை ஈழம் தொடர்பானது என்பதை நான் உணர்ந்துள்ளேன். ஆனால், உங்கள் மருதய்யன் தான் இந்த ஈழம் விசயத்தில் பார்ப்பனீயம் விளையாடுவதாக கூறியுள்ளார். அதனால்தான் மேற்கண்ட கேள்வி. மேலும் பார்ப்பனீயம் என்றால் என்ன என்பதை நான் தேடிக் கொள்ள முடியும். நான் கேட்பது அதுவல்ல! பார்ப்பனீயம் என்று உங்கள் மருதய்யன் எதை வரையறை செய்கிறார் என்பதுதான். உங்களுக்கு தெரியவில்லை என்றால் மருதய்யனிடம் கேட்டுச் சொல்லுங்களேன்.

  11. திருச்சிற்றம்பல மேடையில் பக்தர்கள் பாடி வழிபட ம.க.இ.க. போராட்டம் நடத்தியதால் ம.க.இ.க. மறைமுக பார்ப்பனிய அமைப்பு என்ற நமது மதிப்பீடு பொய்யாகி விடாது. ஏகாதிபத்திய நிறுவனங்களிடம் நிதி பெறும் சில ‘தன்னார்வ’ அமைப்புகள் கூட உலகமயத்தை எதிர்த்து சில பேணிμணிட்டங்கள் நடத்துவதைப் பார்க்கிறோம். ம.க.இ.க.வும் அதனை வழிநடத்துகிற இ.க.க (மா-லெ) மாநில அமைப்புக்குழுவும் தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்க்கின்றன. பார்ப்பனியப் புனைவான இந்திய தேசியத்தை ஆதரிக்கின்றன. மார்வாடி எதிர்ப்பு கூடாது என்கின்றன. சோ – ராம் குரலிலேயே விடுதலைப் புலிகளை எதிர்க்கின்றன. எனவே இந்த அமைப்புகளை மறைமுகப் பார்ப்பனிய அமைப்புகள்; இந்திய ஆளும் சக்திகளுக்கு மறைமுகமாக சேவை செய்யும் சீர்குலைவு அமைப்புகள் என த.தே.பொ.க. மதிப்பிடுகிறது. இண்Oஅணிμ ம.க.இ.க. வின் இந்த அடிப்படை நிலைபாடுகளில் மாறுதல் இல்லை. எனவே நமது அதே மதிப்பீடும் தொடர்கிறது.

    http://tamizharkannotam.blogspot.com/2008/06/blog-post_8327.html

  12. ஆரம்பிச்சுட்டானுகப்பா…. எழவு ஊட்ல விருந்து கொண்டாட எப்படிய்யா மனசு வருது?

    உனக்கு மருதையன் பற்றி பார்ப்பனியம் என்னும் விமர்சனம் வைத்துத்தான் பேச வேண்டும் என்றால் அதைப் பற்றி ஏற்கனவே விவாதித்துள்ள இடத்துக்கு வந்து ஏற்கனவே உளறிக் கொட்டி விட்டு பாதியில் ஓடிப்போனவர்கள் விட்ட இடத்தில் இருந்து தொடர வேண்டியது தானே?

    *****************************************************************

    நன்பர்களும் இந்த “தலைப்பில்” இந்த இழையில் இது போன்ற லூசுகளிடம் “விவாதிப்பதை” தவிர்த்து விடுவது தான் நல்லது என்றே நினைக்கிறேன்.. இது கவனத்தை திசை திருப்பிவிடும் உத்தியாக இருக்கும் என்று தோன்றுகிறது. –

    இந்த ஜந்து ஒரு வேளை (போலி)விடுதலையோ தறுதலையோவாகக் கூட இருக்கலாம் –

  13. கேள்வி கேட்டவனுக்கு லூசுப் பட்டம் கொடுத்த புதிய கலாச்சாரம் வாழ்க!

  14. நண்பர்களே,
    ம.க.இ.க இடஒதுக்கீட்டி்ற்கு எதிராக செயல்படுகிறது என்று கூறுகிற‌‌ இந்த அன்பரசு ஒரு கடைந்தெடுத்த பொய்யராக இருக்கிறார்.
    ம.க.இ.க தலித் மக்களின் ஒடஒதுக்கீட்டிற்கு எதிராக எங்கேயும் பேசியதில்லை மாறாக தலித் மக்களை ஒடுக்கி இரத்தம் குடிக்கும் ‘தமிழனின்’ ஒற்றுமை பற்றி பேசும் சாதிவெறியர்களுக்கு இடஒதுக்கீடு தரக்கூடாது என்று தான் கூறுகிறது. இந்த அன்பரசு சுத்த ‘தமிழன்’ போலிருக்கிறது.
    அது தான் இவ்வளவு கோபம் வருகிறது. இவருடைய அவதூறு பின்னூட்டங்களை இங்கே வெளியிடாதீர்கள்.பார்ப்பனியம் தொடர்பான‌ வேறு பதிவுகளில் அவரது பொய்களை போடட்டும் அங்கே வைத்துக்கொள்வோம்.

  15. காஷ்மீரில் ஒரு திவிரவாதி மறைந்து இருக்கிறான் என்பதற்காக, அவன் மறைந்திருக்கும் கிராமம் முழுவதும் குண்டு வீசி அங்குள்ள அப்பாவி மக்களை கொன்று தான் அந்த தீவிரவாதியை பிடிக்க முயல்வீர்களா?
    இந்திய அரசாங்கம் தனது இராணுவத்தை அனுப்பி அந்த கிராமத்தின் மீது குண்டு வீசி ,,அங்குள்ள மக்கள் மீது போர் தொடுத்து தான் ,அந்த தீவிரவாதியை பிடிக்க முயலுமா?

  16. பாரதிராஜா தன் விருதை திருப்பி மத்திய அரசிடமே கொடுத்துவிடுகிறார்.அதே போல் தமிழகதை சேர்ந்த பல துறை சார்ந்தவர்கள் தங்களுக்கு மத்திய அரசால் வழங்க பட்ட விருதுகளை திரும்ப கொடுத்தால் ,தமிழரின் ஒற்றுமையை இந்தி பேசும் வடநாட்டானுக்கு விளங்கும்.

    சிங்களவன் இலங்கை தனக்கு மட்டும் தான் சொந்தம் என்று எண்ணுவது போல்,இந்தியா ,இந்தி பேசுபவனுக்கு தான் சொந்தம் என்று எண்ணுகிறார்கள்,

    அத்னால் தான் தமிழனின் கொரிக்கையை செவி மடுக்காமல் ,ஈழ தமிழனை அழிக்க மத்திய அரசு உதவி செய்கிறது.

    அதுமட்டுமல்ல,தமிழக மீனவர்களை தாக்கி சொல்லும் இலங்கை இராணுவத்திற்கு உதவி செய்கிறது.

    ராஜிவ்காந்தி கொலை வழக்கில் பிரபாகரன் தான் அனுப்பினார் என்று சொல்லி அவரை கைது செய்து,ஒப்படைக்க வேண்டும் என்று சொல்லும் இந்திய அரசு ,இலங்கை இராணுவன் ,நம் தமிழ மீனவர்களை கொன்று வருகிறதே,ஆகவே இலங்கை இராணுவத்தின் தளபதியையும் ,அதன் தலைவ்ராக உள்ள அதிபரையும் ஏன் கைது செய்து ,இந்திய அர்சிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா ஏன் கோரவில்லை.

    அதுபோல் ,மும்பை தாக்குதலில் கைதானவன் ,தன்க்கு பாகிஸ்தான் இராணுவம் தான் ஆயுதம் கொடுத்தது ,பயிற்சி கொடுத்தது என்று கூறியுள்ளான்,அதற்க்காக பாகிஸ்தான் இராணுவ தளபதி மற்றும் அந்நாட்டு அதிபரை கைது செய்ய இந்தியா இதுவரை ஏன் முயவில்லை.

    சராசரி மனிதன் கொல்லபட்டால் பரவாயில்லை.ராஜிகாந்தி மட்டும் கொல்லபட்டால் ,கைது என்பீர்கள்.

    மும்ப்பை இறந்தவர்கள் இந்தியர்கள் அல்லவா?தமிழக மீனவர்கள் இந்திய பிரஜை அல்லவா?
    00:46 (10 hours ago)

  17. புலிகளை அழிக்கும் இலங்கையின் முயற்சிக்கு சீனா உறுதியான ஆதரவு
    [23 – April – 2009]
    விடுதலைப் புலிகள் இயக்கத்தை முற்றாக அழிக்கும் இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு சீனா தனது உறுதியான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.
    அதே சமயம் நேபாளத்தின் பிரதமர் புஷ்பா கமால் நகால் மாவோயிஸ்டுகளை இராணுவத்திற்குள் உள்ளீர்க்க மேற்கொண்டிருக்கும் தீர்மானத்தையும் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை சீனா வரவேற்றுள்ளது.

    இலங்கையும், நேபாளமும், சீனாவின் நட்பு நாடுகள். பாதுகாப்பு மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் அதேசமயம், தேசிய ஒருமைப்பாட்டை இந்த நாடுகளின் அரசாங்கங்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு நாம் ஆதரவளிக்கின்றோம் என்று சீன வெளிவிவகார அமைச்சின் பெண் பேச்சாளர் ஜியாங்யூ கூறியுள்ளார்.

    விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை சரணடையுமாறு 24 மணி நேர காலக்கெடு விதிக்கப்பட்டிருப்பது தொடர்பாக செய்தியாளர் மாநாட்டின் போது எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

    முன்னெப்போதுமில்லாத அளவுக்கு சீனாவுக்கும், நேபாளத்துக்குமான உறவுகள் வலுவடைந்துள்ள தருணத்திலேயே சீனாவிடமிருந்து இந்தக்கருத்து வெளிப்பட்டுள்ளது.

    நேபாளத்திற்கான வருடாந்த உதவியை 50% வீதத்தால் அதிகரிக்கப் போவதாக சீனா அண்மையில் அறிவித்திருந்தது. அத்துடன், இந்திய எல்லைப்புறத்தில் நேபாளத்தில் நீர்மின் திட்டத்தில் முதலீடு செய்வது குறித்து சீனா பரிசீலித்து வருகிறது.

    http://www.thinakkural.com/news\2009\4\23\importantnews_page72079.htm

Leave a Reply to certifiedasshole பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க