privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்ஈழம்: போலீசின் அடுத்த குறி மாணவர்கள்!

ஈழம்: போலீசின் அடுத்த குறி மாணவர்கள்!

-

உயர்நீதி மன்றத்தில் புகுந்து வழக்குரைஞர்கள் மீதும் நீதிபதிகள் மீதும் ஒரு கொலைவெறித் தாக்குதலை நடத்திய சென்னை போலீசு, அடுத்ததாக மாணவர்கள் மேல் பாய்ந்திருக்கிறது. 3.3.09 அன்று காலை 9.30 மணி அளவில் சென்னை மாநிலக்கல்லூரியில் புகுந்து தடியடி நடத்தி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த 5மாணவர்களை கல்லூரி வாசலிலேயே கைது செய்து, அவர்களைக் கொடூரமாகத் தாக்கி, பல குற்றப்பிரிவுகளில் பொய் வழக்கும் போட்டு, சிறையில் தள்ளியிருக்கிறது.

கடந்த செவ்வாயன்று காலை 8.45 மணி அளவில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாணவர்கள் ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலைக்கு எதிராகவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் போலீசு நடத்திய கொலைவெறியாட்டத்துக்கு எதிராகவும் சென்னை மாநிலக்கல்லூரியின் வாயிலில்  அமைதியான முறையில் வாயிற்கூட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். சுமார் 9.30 க்கு அண்ணா சதுக்கம் ஈ-6 காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கண்ணன்  ஒரு போலீசு படையுடன் அங்கே வந்து இறங்கினார்.

” தேவ்டியாப் பசங்களா.. என்னடா மயிறு ஈழம்…! நீங்கள்லாம் ஈழத்திலயா பொறந்தீங்க? அங்க என்ன உங்க ஆயியையும் அக்க்காளையுமா …….. பண்றாங்க? அங்க என்னா நடந்தா உங்களுக்கு என்னடா? ” என்று கத்தியபடியே, பேசிக்கொண்டிருந்த தோழர் கணேசனின் பிடறியில் கை வைத்து தள்ளினார் இன்ஸ்பெக்டர் கண்ணன். போலீசு அராஜகத்துக்கு எதிராக முழக்கமிடத் தொடங்கினர் மாணவர்கள்.

பு.மா.இ.மு வின் சென்னை மாவட்ட இணைச் செயலர் தோழர் கணேசனையும், மாநிலக்கல்லூரி மாணவர் அருண் கோபி, சென்னை கிறித்தவக் கல்லூரி மாணவர்கள், வினோத்குமார் மதிவாணன், பள்ளி மாணவர் முத்துக்குமார் ஆகிய 5 பேரைச் சூழ்ந்து கொண்டு கண்மூடித்தனமாகத் தாக்கத் தொடங்கினர். இதைக்கண்டு கல்லூரி வளாகத்தில் ஆங்காங்கே நின்றிருந்த மாணவர்கள் வாயிலை நோக்கி ஓடிவரத் தொடங்கினர். உடனே கல்லூரியின் வாயிற்கதவை இழுத்து மூடிவிட்டு, 5 பேரையும் இரண்டு வண்டிகளில் தூக்கிப் போட்டுக் கொண்டு மின்னல் வேகத்தில் வண்டியைக் கிளப்பினர்.

போகும் வழி முழுவதும் 5 பேரையும் நிறுத்தாமல் அடித்தனர். “அன்னக்கி ஐகோர்ட்டுல வக்கீல்களை அடிச்சா மாதிரி எங்களையும் அடிச்சா பயந்துடுவோம்னு நெனச்சீங்களா?” என்று ஒரு மாணவர் கேட்டவுடனே அவரை கழுத்திலேயே லத்தியால் குத்தினார் இன்ஸ்பெக்டர் கண்ணன். “ஆமாண்டா.. கோர்ட்டுல பூந்து அடிச்சா மாதிரிதான். எல்லா எடத்திலயும் அடிப்போம். நடு ரோட்ல ஓடவிட்டு நாயை அடிக்கிற மாதிரி அடிப்போம். எவனும் எங்கள ஒண்ணும் புடுங்க முடியாது” என்று கொக்கரித்தார் கண்ணன்.

அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் வண்டி நின்றது. ஏட்டு சேகர் வண்டியின் சன்னல் கண்ணாடியை உடைத்தார். தன் சட்டையைத் தானே கிழித்துக் கொண்டார் எஸ்.ஐ சதானந்தம். மாணவர்கள் திருவல்லிக்கேணி ஈ-1 காவல் நிலையத்தில் இறக்கப்பபட்டனர். வாசலில் நின்றிருந்த ஏ.சி சோமசுந்தரமும், 20 போலீசாரும் அங்கேயே மாபணவர்களைச் சூழ்ந்து கொண்டு கண்மூடித்தனமாகத் தாக்கத் தொடங்கினர். “ஈழத்துல உங்க அக்காளயா …. புடுங்குறாங்க? அங்க என்னா நடந்தா உங்களுக்கு என்னடா?” என்று கேவலமாக ஏசிக் கொண்டே பெண் போலீசாரும் சேர்ந்து அடித்தனர்.  அடிக்கும்போது தங்கள் பாட்ஜை கவனமாக மறைத்துக் கொண்டனர். மாணவர்கள் எதிர்த்து முழக்கமிட்டனர். கணேசனே கீழே தள்ளி அவர் வயிற்றிலேயே பூட்ஸ் காலால் மிதித்துத் துவைத்து விட்டு, முகத்தில் காறி உமிழ்ந்தார் இன்ஸ்பெக்டர் கண்ணன்.

பிறகு,  போகிற வருகிற போலீசுக்காரனெல்லாம் நாலு அடி அடித்துவிட்டுச் சென்றனர்.

“ஈழம்.. ஈழம்… என்னடா மயிறு ஈழம்?” “நீயெல்லாம் வக்கீலுக்கு சப்போர்ட்டா? அவனுங்க வாங்குனத பாத்தீல்ல” “தாயோளி,  எல்லாருக்கும் குண்டாஸ் தான். வெளியவே வரமுடியாது”  சுமார் 11.30 வரை இந்த வசவும் அடியும் தொடர்ந்தன. பிறகு வந்தார் ஏ.சி.முத்துவேல் பாண்டி. எதுவுமே நடக்காதது போல நைச்சியமாகப் பேசத்தொடங்கினார். “நீங்க எதுவும் பிரச்சினையக் கிளப்பலன்னா செக்சன் 151 இல ஒரு கேஸ போட்டுட்டு விட்டுடறோம்” என்று பேரம் பேசினார். மாணவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. பல குற்றப்பிரிவுகளில் பொய் வழக்கு போடப்பட்டது.

செய்தி கேள்விப்பட்ட உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் மாணவர்களுக்கு ஆதரவாக உடனே  திரண்டு வந்தனர். ” இது பொய் வழக்கு. மாணவர்களை ரிமாண்டு செய்யக்கூடாது. அவர்களைத் தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வாதாடினர். பிறகு, மாஜிஸ்டிரேட்டின் உத்தரவுப்படி 5 பேரையும் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போலீசார், மருத்துவர்களிடம் தனியே பேசி, “மாணவர்களை அட்மிட் செய்யத் தேவையில்லை” என்று எழுதி வாங்கிக் கொண்டு எல்லோரையும் சிறைக்கு அனுப்பிவிட்டனர்.

ஈழத்தில் சிங்கள இனவெறியர்கள் நடத்தும் தாக்குதலையும், உயர்நீதி மன்றத்தில் போலீசு நடத்திய தாக்குதலையும் கண்டித்துப் பேசியதுதான் மாணவர்கள் செய்த ஒரே குற்றம். பிப்ரவரி 19 ம் தேதியன்று சுப்பிரமணியசாமி என்கிற ‘மாமா’வுக்கு முட்டையடி பட்டதற்காக உயர்நீதிமன்றத்தையே ரத்தக்களறியாக்கிய காவல்துறை, “ஈழத்தில் குண்டடி படுபவன் உன் மாமனா மச்சானா?” என்று மாணவர்களக் கேட்கிறது.

உயர்நீதி மன்றத்தைத் தாக்கிய போலீசுக்கு ஆதரவாக வரிந்து கட்டுகின்றன பத்திரிகைகள். தங்கள் குடும்பத்தினரை வைத்து உண்ணாவிரதம் நடத்தி மிரட்டுகிறது காவல்துறை. ஐ.ஏ.எஸ் அதிகாரிகளோ போலீசுக்கு ஆதரவாக பகிரங்கமாக அறிக்கை விடுகிறார்கள். ஆனால் வழக்குரைஞர்களை ஆதரித்து மாணவர்கள் பேசினால் தடியடி, பொய்வழக்கு, சிறை.

“நீதிமன்றம் மூடிக் கிடந்தால் மக்களுக்கு கஷ்டம். புறக்கணிப்பை கைவிட்டு கோர்ட்டுக்கு திரும்புங்கள்” என இன்று வக்கீல்களுக்குக வேண்டுகோள் விடும் இதே அரசுதான், ஈழப் போராட்டங்களை முடக்குவதற்காக மாணவர்களுக்கு காலவரையின்றி விடுமுறை விட்டது. இப்போது கல்லூரி திறந்தவுடன் ஈழம் குறித்து மாணவர்கள் பேசினால் அதனை முளையிலேயே கிள்ளுவதற்காக மூர்க்கமாகத் தாக்குகிறது.

இன்று மாணவர்கள் பட்ட அடியைக் காட்டிலும் முக்கியமானது அவர்களிடம் போலீசு பேசிய பேச்சு. “வக்கீலையும் நீதிபதியையுமேயே அடிச்சோம். நீ என்னடா சுண்டைக்காய்?” என்று பகிரங்கமாகக் கொக்கரித்திருக்கிறது காவல்துறை. “சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது என்ற பெயரில் போலீசு எப்படிப்பட்ட அட்டூழியமும் செய்யலாம். போலீசு சொல்வதுதான் சட்டம். அவர்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள்” என்ற கருத்தை அரசும் பத்திரிகைகளும் உருவாக்கியிருக்கிறார்கள். இதனால்  போலீசின் கொட்டம் ஆதிகரித்துக் கொண்டே போகிறது. இதற்கு நாம் முடிவு கட்டியாக வேண்டும்.

பிப்ரவரி 19 ம் தேதியன்று உயர்நீதி மன்றத்தில் போலீசு நடத்திய ரவுடித்தனத்தை நாம் அனைவரும் தொலைக்காட்சிகளில் பார்த்தோம். போலீசார் நீதிபதிகளையே தாக்கியபோதும், ஒரு போலீசு அதிகாரி கூட இதுவரை தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்படவில்லை. ஆனால் ஈழ மக்களுக்காக அமைதி வழியில் போராடிய நம் மாணவர்கள் திருச்சியில் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டார்கள். இன்று மாநிலக்கல்லூரி, கிறித்தவக் கல்லூரி மாணவர்களை அடித்து, சிறையிலும் தள்ளியிருக்கிறார்கள். இதை நாம் அனுமதித்தால் நாளை ஒவ்வொரு கல்லூரிக்குள்ளும் காவல்நிலையம் வைப்பார்கள்.

மாணவர்களுடைய கோரிக்கையும் வழக்குரைஞர்களின் கோரிக்கையும் ஒன்றுதான். “அராஜகம் செய்த போலீசார் பணிநீக்கம் செய்யப்படவேண்டும். இன்ஸ்பெக்டர் கண்ணன், எஸ்.ஐ  சதானந்தம், ஏட்டு சேகர் ஆகிய மூவர் மீதும் கிரிமினல் வழக்கு போட்டு, பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்.” இந்தக் கோரிக்கைகளை முன்வைத்துப் போராடுவோம்.

ஈழத்துக்கும் வழக்குரைஞர்களுக்கும் ஆதரவாகக் குரல் கொடுப்பது நம் உரிமை. நேற்று

மாணவர்களுக்காகக் குரல் கொடுக்க  வக்கீல்கள் வந்தவுடனே, “இவர்கள் வக்கீல் பிரச்சினையைப் பேசவில்லை. ஈழப் பிரச்சினையைப் பேசியதற்காகத்தான் கைது செய்திருக்கிறோம்” என்று பொய் சொல்லி அவர்களைத் திருப்பியனுப்ப முயன்றிருக்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள்.

வழக்குரைஞர்கள் ஏமாறவில்லை.

ஈழப்பிரச்சினையில் வக்கீல்களும் மாணவர்களும்தான் தொடர்ந்து உறுதியாகப் போராடியிருக்கிறோம். எனவே, இரண்டு பிரிவினரும் சேர்ந்துவிடுவார்கள் என்று அஞ்சுகிறது போலீசு. அவர்களுடைய அச்சத்தை உண்மையாக்குவோம்! தமிழகம் முழுவதும் வழக்குரைஞர்களின் போராட்டத்துடன் மாணவர்களும் இணைந்து கொள்வோம்!

-புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, சென்னைக் கிளை வெளியிட்ட பிரசுரம்.

 

 

  1. அதியமான், ஆர்வி போன்ற மனிதாபிமானிகளை இங்கு கருத்துக் கூற அழைக்கிறேன்.

    அவர்களின் நடுநிலைமை கோவணத்தை இங்கு கொஞ்சம் காயப் போட வருமாறு அன்புடன் அழைக்கிறேன்..

    புரச்சி

  2. மிக வன்மையாக கண்டிக்க தக்க விடயம்.. போலிசு, அதிகார வர்க்கத்தின் காவல் நாய் என மீண்டும் நிரூபித்து இருக்கிறது…

    பல வருடங்களுக்கு முன்பு திராவிட கட்சிகள் பலவித போராட்டங்களுக்கு மாணவர்களை பயன்படுத்தி மக்களிடத்தில் செல்வாக்கு பெற்று தி.மு.க, ஆ.தி.மு.க என பல பிரிவுகளாக வளர்ந்தது.. இன்று அதே மாணவர்களை தனது காலால் மிதித்து நசுக்குகிறது..

    சமூக மாற்றத்திற்கு மாணவர்களின் விழிப்புணர்வும், செயல்பாடும் மிக மிக முக்கியம் என கருதுகிறேன்.. அதனால் தான் கருணாநிதி ஒவ்வொரு முறை மாணவர்கள் ஒரே சக்தியாக ஒன்று இணையும் போது கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து போராட்டங்களை நீர்த்து போகச் செய்கிறார்… ( கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் கொலை நடந்த சமயம், ஈழ மக்களுக்கான போராட்டம் நடந்த சமயம் )

    கருணாநிதிக்கு வயது ஆகி விட்டாலும், அறிவு இன்றும் நரி போல் கூர்மையாக உள்ளது…

  3. ஆண்டைகள் சூ காட்டினால் குதறும் ஏவல் நாய்தானே போலிசு.( ஊமைச் செந்நாய்?).

    மாறாக, ஈழ எதிர்ப்பு வசைகளை குரைக்க வேண்டிய உளவியல் பின்னணிதாம் என்ன?

    நான் கேட்பது, ஆண்டைகளின் அரசியல் நிலைப்பாடை எல்லாம் நுட்பமாக புரிந்து கொண்டு குதறும்போதே -வசைகளை வாரி இறைத்து- குரைக்க அவை நிஜ நாய்களா என்ன?

    சூனா சாமிக்கும் இந்த நாய்களுக்கும் உள்ள ஸ்நான ப்ராப்திதான் என்ன?

    சண்டாள பாவிக்கு புரிய மாட்டேன்கிறதே…

  4. //கருணாநிதிக்கு வயது ஆகி விட்டாலும், அறிவு இன்றும் நரி போல் கூர்மையாக உள்ளது…//

    எங்கள் தலைவரின் அறிவு உலகப் புகழ்பெற்றது. நீங்கள் எல்லாம் 5 பேரை வைத்துக் கொண்டு குள்ள நரிபோல் செயல்பட்டு தமிழக சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயலும்போது நாங்கள் எப்படி சும்மா வேடிக்கை பார்க்க முடியும். அன்று இந்தி எதிர்ப்பு போராட்டம் உட்பட எங்கள் தலைவர்கள் நடத்தியது மக்கள் எழுச்சி இதில் மாணவர்களும் திரளாக கலந்து கொண்டனர். ஆனால் நீங்கள் சென்னையிலேயே ஒரே ஒரு கல்லூரியில் எந்தவிதமான மாணவர்கள் ஆதரவும் இன்றி குழப்பம் விளைவிக்க முயலுவது குள்ளநரித் தந்திரமே!

  5. அரசு vs அரசாங்கத்தின் முரண்பாடு மீண்டும் ஒரு முறை நன்றாகத் தெரிகிறது..

    கருணாநிதி முழு விருப்பத்துடன் ஈழ ஆதரவாளர்களை இப்படி மிருகத்தனமாக ஒடுக்க உத்தரவிட்டிருப்பார் என்று நம்பமுடியவில்லை.. அவரின் அரசாங்கம் அரசின் வழியில் தாமாகவே சென்று கொண்டிருப்பதாகவே ஊகிக்க முடிகிறது.

    வெறுமனே கருணாநிதியை மட்டும் கும்முவோர் இதை கவனிக்கவேண்டும். அவர் மட்டுமல்ல – நாளைக்கு திருமாவளவனே கூட ஆட்சிக்கு (இப்போதுள்ள அரசியல் நிலையில்) வந்தாலும் ஈழ போராட்டத்தை அரசு இயந்திரங்கள் இப்படித்தான் நசுக்கும்..

    ஈழ ஆதரவு பதிவுகள் / எழுத்துக்கள் இப்போது பரவலாக கருணாநிதி துரோகி / ஜெயா எதிரி / காங்கிரஸ் எதிரி என்பதாக மட்டுமே முன்னிருத்தி எழுதி வருகிறார்கள் — ஆனால் வெறும் ரப்பர் ஸ்டாம்புகளான இந்த அரசியல்வாதிகளின் மேலான கும்மிச்சத்தத்தில் இவர்களையெல்லாம் ஒட்டுமொத்தமாக இயக்கிக் கொண்டிருக்கும் அரசு இயந்திரங்களின் ரத்தவெறியும்~அடக்குமுறைத் தன்மையும்~மக்கள் விரோத போக்கும் ஈஸியாக மறைந்து கொள்கிறது.

    இந்திய அதிகார வர்க்கம் ( அரசு ) பார்ப்பனத் தன்மையது அது இந்நாட்டை அமெரிக்காவின் இந்த வட்டார ஏஜெண்டாக மாற்ற விழைகிறது – அது இத்துணைக்கண்டத்தின் குட்டி அமெரிக்காவாக தன்னைக் கருதிக் கொள்கிறது… இதனோடு இந்த அதிகார வர்க்கம் தரகு முதலாளிகளின் நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டிருக்கிறது~பட்டுக்கொண்டிருக்கிறது…

    கருணாநிதி உள்ளிட்ட தமிழின அரசியலை முன்னெடுக்கும் அரசியல்வாதிகளின் லிமிட்டேஷன் இவ்வளவு தான்… இந்த பீடங்களின் மீதான அவர்களுக்கு இருக்கும் பக்தி ( சமீப நாட்களில் கருணா வெளியிடும் அறிக்கைகள் ), அதன் மேலான பயம் ( கோர்ட்டுக்கு ஆம்புலன்ஸில் வரட்டுமா என்று காலில் விழுந்தது ).. இப்படி இவர்களின் பலவீனங்கள் இந்த சந்தர்பத்தில் பல்லிளிக்கிறது..

    ஒரு காலத்தில் ( அரை நூற்றாண்டுக்கு முந்தைய கருணாநிதி) வீச்சுடன் செயல்பட்ட கருணாநிதி இப்போது ஆட்சியதிகாரத்தில் சுகம் கண்டபின் வந்து சேர்ந்திருக்கும் நிலை பரிதாபகரமானது… இந்த அரசியல் அமைப்பு கருணாநிதி போன்ற ஆளுமையையே தொடைநடுங்கியாக மாற்றி விட்டிருக்கும் போது மற்றவர்களைப் பற்றி சொல்ல ஒன்றுமில்லை.

    ஈழ விடுதலையை ஆதரிக்கும் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டியது – ஈழ விடுதலைக்கு மட்டும் போராடுவதோடு நில்லாமல் இங்குள்ள அடிமைத்தனங்களையும்~ மக்களை நசுக்கி வைத்திருக்கும் அரசு இயந்திரங்களையும் எதிர்த்துப் போராட முன்வரவேண்டும்… ஈழப் போரின் மெய்யான நோக்கம் குறித்து வாயே திறக்காமல் வெத்துச் சவடால் விடும் ராமதாஸ், வைக்கோ போன்றோர் செல்லும் பாதை என்பது பல பத்தாண்டுகளுக்கு முன் கருணாநிதி போட்ட பாதை தான் என்பதை நாம் உணர வேண்டும்..

    *****************************************************************

    போலீஸின் காட்டுதர்பாரை வன்மையாகக் கண்டிக்கிறேன்!!

  6. //அன்று இந்தி எதிர்ப்பு போராட்டம் உட்பட எங்கள் தலைவர்கள் நடத்தியது மக்கள் எழுச்சி இதில் மாணவர்களும் திரளாக கலந்து கொண்டனர். ஆனால் நீங்கள் சென்னையிலேயே ஒரே ஒரு கல்லூரியில் எந்தவிதமான மாணவர்கள் ஆதரவும் இன்றி குழப்பம் விளைவிக்க முயலுவது குள்ளநரித் தந்திரமே!
    //

    நன்பர் எவ்வாறு மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்று கொஞ்சம் விளக்கினால் நலம்.. ஊழல் செய்து ஆட்சிக்கு வந்து பிறகு ஊழலைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது போலா..?

    சரி நண்பரே, நாங்கள்தான் ஆதரவு இல்லாமல் குழப்பம் விளைவிக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம் , ஆனால் உங்கள் கருணாநிதி எதற்காக கீழ்க்கண்ட போராட்டங்களை அனேகமாக அனைத்து மாணவர்களும் தன் எழுச்சியாக நடந்திய போது தடுக்க முயன்றார்…

    கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் கொலை நடந்த சமயத்தில் நடந்த போராட்டம் , ஈழ மக்களுக்கான ஆதரவு போராட்டம்…
    மேற்கூறிய இரண்டு போராட்டங்களிலும் மாணவர்கள் மிகவும் அமைதியான முறையில் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு இருந்தனர்… ஆனால் அதைக்கூட பொறுக்க முடியவில்லையா உங்கள் தலைவருக்கு…

    • //
      ஆனால் நீங்கள் சென்னையிலேயே ஒரே ஒரு கல்லூரியில் எந்தவிதமான மாணவர்கள் ஆதரவும் இன்றி குழப்பம் விளைவிக்க முயலுவது குள்ளநரித் தந்திரமே!
      //

      My uncle participated in that Hindi Athirpu porattam , lost his studies and life.But now he is doing business and rich.But he speaks Hindi,Marathi and other languages like Malayalam for doing business across different states.He will always told me that if he doesn’t participated in the Protest against Hindi Athirpu he will never lost his studies.On those days he ways in jail and got suffered in the hands of police for breaking buses in his region

  7. //அன்று இந்தி எதிர்ப்பு போராட்டம் உட்பட எங்கள் தலைவர்கள் நடத்தியது மக்கள் எழுச்சி இதில் மாணவர்களும் திரளாக கலந்து கொண்டனர்.//

    ஈழ மக்களுக்கு ஆதரவான போராட்டம் மக்கள் எழுச்சி இல்லையா… அதில் மட்டும் மாணவர்கள் பங்கு கொள்ளக் கூடாத… ?கொஞ்சம் விளக்கினால் உங்கள் கொள்கைகளை மக்கள் புரிந்து கொள்ள உதவும்…

  8. எங்க ஆட்சியா இருக்கறதுனால உங்கள மாதிரி நக்சலைட்டுங்கள் எல்லாம் துல்றீங்க இதுவே ஜெயா ஆட்சியா இருந்தால் பதுங்கிக்கிட்டு இருப்பீங்க

  9. வழக்கறிஞர்களும், மாணவர்களும் மட்டுமில்லை. அனைத்து தரப்பினரும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். காவல்துறையினரை டிஸ்மிஸ் செய்ய கோரவேண்டும்

  10. //எங்க ஆட்சியா இருக்கறதுனால உங்கள மாதிரி நக்சலைட்டுங்கள் எல்லாம் துல்றீங்க இதுவே ஜெயா ஆட்சியா இருந்தால் பதுங்கிக்கிட்டு இருப்பீங்க//

    இதெல்லாம் திமிர் பேச்சு!

    ஈழப் பிரச்சனையில்,இத்தனை கோமாளித்தனம், கயவாளித்தனம் செய்து அம்பலப்பட்டு போயிருக்கும் கருணாநிதி அனானி இளவழகனுக்கு தலைவர்! வெட்ககேடு!

    நக்சலைட்டுகள் எல்லா அடக்குமுறையையும், மக்கள் பிரச்சனைகளுக்கு எதிர்கொள்பவர்கள் தான்.
    இன்னும் சொல்லப்போனால், ஜெயலலிதாவுக்கு மண்டை காய்ச்சல் தொடர்ந்து கொடுப்பது நக்சலைட்டுகள் தான்.

  11. எங்க தலைவரும் அரசும் இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டுதானே இருக்கிறோம் அப்புறம் என்ன நீங்க தனியா போராட்டம் பண்றதுனன எங்க ஆட்சிய கவிழ்க்க சதி பண்றீங்க இனஉணர்வாளர்களான நாங்கள் மக்களோடுதான் இருக்கிறோம். வற்ர தேர்தல்ல இலங்கை பிரச்சனை முக்கியமா வரும் அப்பத் தெரியும் மக்கள் யார் பக்கம் நிக்கறாங்கன்னு.

  12. //எங்க தலைவரும் அரசும் இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டுதானே இருக்கிறோம் அப்புறம் என்ன நீங்க தனியா போராட்டம் பண்றதுனன எங்க ஆட்சிய கவிழ்க்க சதி பண்றீங்க //
    அட அட அட… என்ன ஒரு ஆதங்கம்.
    “குழந்தை அழுகுது யாராவது முட்வோர்ஸ் கிரேப் வாட்டர் கொடுங்கோ…”

  13. //ஒரே ஒரு கிரேப் வாட்டர் தந்தால் போதும்.கப்புன்னு சோனியா கால்ல விழுந்துடும்//

    உங்க குழந்தைகளுக்கெல்லாம் அதைதான் நீர் கொடுக்கீறிரோ நாகரீகமற்றவர்கள் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டீர்கள் பழுத்த மூத்த அரசியல்வாதியை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள துப்பற்றவர்களிடம் காட்டுமிராண்டித்தனம் வெளிப்படுவதைத்தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும். தமிழகத்து பழமொழியை இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன். “விதைக்காததை அறுக்க முற்படாதீர்கள்”, “அந்தரத்தில் மாங்காய் பழுக்காது” நன்பரே உங்க கிட்ட ஆர்வகோளாறுதான் தெரியுதே ஒழிய அறிவு இருக்குறா மாதிரி தெரியல.

  14. கல்தோன்றி மண்தோன்றா காலத்தில் முன்தோன்றி மூத்த தமிழன்! என்னமா அறிவுபூர்வமாக விவாதம் நடத்தி இந்த நூற்றாண்டில் போராட்டம் நடத்துறாங்க!

    தாய்ப்பால் ஊட்டுவது குழந்தைக்கு நல்லதா? கெட்டதா? என்று விவாதம் நடத்தினால், அது நூறுவீதம் கெட்டதுதான், என்று எவரும் மறுக்க முடியாதளவுக்கு ஆதாரத்தோடு விவாதம் நடாத்தி, வெற்றிவாகை சூடிக்கொள்ளும் திறமை, தமிழனைத் தவிர! அவனக்கு கருணையாகி தமிழ்பொழியும் தலைவனைத் தவிர! வேறு எவருக்குமே இல்லை.

    என்னே கருணா பாசம்! என்னே ஜெய கோசம்!

    தமிழா! உன் அறிவுக்கூர்மையை கழுமரமாகி உன்னையே அதில் உலகம் வீழ்த்தியிருப்பது வரலாறு. இதிலிருந்து மீளமுடியாது நீயே மயங்கி நிற்கிறாய். தொடர்ந்தும் உன்னை விழ்த்துவதற்கான சந்தர்ப்பங்களை உலகம் ஏற்படுத்தும். அப்போது பற்றிப்பிடித்து உன்னை காப்பாறிக்கொள்ள, தமிழனுக்கென்று உலகில் ஓர் அரசு இல்லையே என்று புலம்புவாய். இன்றைய நிலமையிலும் உலகையும், உன்னையும் நீ புரிந்துகொள்ளாவிட்டால்!!!!

  15. இந்த இளவழகன் திமுக வை சேர்ந்தவர் என்று இனிமேலும் நம்பிக்கொண்டிருப்பவர்களுக்காக மீண்டும்….

    எந்த ஒரு திமுக தொண்டனும் ஈழப்பிரச்சனையில் கலைஞரின் செயல்பாடுகளை ஆதரித்து தனது வலைப்பதிவுகளிலேயே எழுதாத போது வலிந்து வந்து வினவில் எழுதும் இந்த இளங்கோவனின் கொண்டை தெறியவில்லையா?
    வந்திருப்பது சாட்சாத் பெருமாளேதான்..
    திருப்பதி பெருமாள் அல்ல
    இரண்டு நாள் முன்னர் மாயவர்த்தான்பேரில் வந்து ஆள்மாறாட்ட மோசடி செய்த ‘அந்த’ பெருமாள் ….
    60களின் தமிழ் சினிமா ஹிரோக்கள் மச்சத்தை ஒட்டிக்கொண்டு ஆள்மாராட்டம் செய்தாலும் முக்கியமான நேரத்தில் அந்த மச்சம் கிழே விழுந்துவிடும். நாமும் பார்த்திருக்கிறோம். அதே போல இந்த சீபிஎம் கட்சியின் ஹீரோவும் எவ்வளவு வேஷம் கட்டினாலும் தமிழை மாற்றி எழுதினாலும் எழுதும் அவதூறு ஒன்றுதான். படிப்பவர்களையெல்லாம் முட்டாள்கள் என்று நினைத்து விட்டார் போதும். ஐயோ பாவம்

  16. //புரச்சிக்கு தனியாக – வார்த்தைகளி கொஞ்சம் தரம் இருப்பது எல்லாருக்கும் நல்லது. தரம் கேட்டு பேசுவது உங்கள் கருத்துரிமை என்றால் அதை ஒதுக்குவது என் கருத்துரிமை அல்லவா?//

    நடுநிலைமை என்பது ஒருவரது சார்புத் தன்மையை மறைக்கும் கோவணது துணி என்பது என் கருத்து. அதையே அங்கு குறிப்பிட்டிருந்தேன். ஆர்வி வலையுலகுக்கு புதுசு போலருக்கு அதான் இது மாதிரி விசயங்களையே தரம், அக்மார்க் என்று விளிக்கிறார்.

    புரச்சி

  17. ஒருவேளை ஆர்வி, அதியமான் போன்றவர்களை “”மனிதாபிமானிகளை ” என்று நான் குறிப்பிட்டிருந்ததைத்தான் தரம் கெட்டு நான் பேசுவதாக நண்பர் ஆர்.வி எண்ணிவிட்டாரோ? விந்தையான மனிதர்கள்….

  18. \\எங்கள் தலைவரின் …………..குள்ளநரித் தந்திரமே … இள‌வ‌ழ‌க‌ன்\\
    40 பேரும் ப‌த‌வி விலகுவார்க‌ள்… கொஞ்ச‌ நாள் க‌ழித்து.. 40பேர் பதவி விலகினால் த‌மிழ் ஈழ‌ம் ம‌ல‌ருமா? அப்ப‌டி ம‌ல‌ரும் என்றால் 40பேரும் ப‌த‌வி வில‌குவார்க‌ள். தெரியாமல் கேட்கிறேன், 40பேர் ப‌த‌வியில் இருப்ப‌தால் ம‌ட்டும் த‌மிழீழ‌ம் ம‌ல‌ர்ந்துவிட்ட‌தா? இல்லை போர் தான் நின்றுவிட்டதா? போரை நிறுத்த‌ துப்பில்லை, நீலிக்க‌ண்ணீர் எத‌ற்கு? தமிழின துரோகி, கொலைஞர்,கோழை கருணாநிதி… த‌மிழ‌னே இன்னுமா உன‌க்கு புரிய‌வில்லை? என் இன‌த்தில் இப்ப‌டியா.. க‌ட்ட‌பொம்மனா காட்டிக்கொடுத்து எட்ட‌ப்ப‌னனான்? இல்லை இங்கு எட்ட‌ப்பன் மாறுவேட‌ம் அணிந்து க‌ட்ட‌பொம்மனாய் அலைந்தான் கால‌த்தின் க‌ட்டாய‌ம் வேடம் க‌லைந்து வீதிக்கு வ‌ந்துவிட்டான் தமிழின துரோகி, கொலைஞர்,கோழை கருணாநிதி.
    இன்னும் நிறைய‌பேர் இப்ப‌டி அர‌சிய‌ல் அர‌ங்கில் அரிதார‌மிட்டு அலைகின்ற‌ன‌ர். தமிழுக்காய் போர்முரசு கொட்டி எதிரியின் கால‌டியில் ப‌துங்கும் வை.கோ, தா.பாண்டியன், காலடியில் இடம் கிடைக்குமா என ஏங்கும் தமிழ் குடிதாங்கிகள், தமிழ் போராளிகள், கூட்டணிபற்றி யோசிக்கும் கேப்டன்,சுப்ரீம்கள்.
    நம்மை பற்றி நம் உணர்வு க‌வ‌லைப்ப‌டாது, த‌மிழால் வாழ்ந்துகொண்டு போர் என்றால் பொதும‌க்க‌ள் சாக‌த்தான் செய்வார்க‌ள், போரில் சாகாத‌ பொதும‌க்க‌ள் உண்டா? என்று வடிவேலு பாணியில் ஏள‌ன‌ம் செய்யும் செயாக்க‌ள். காஸாவில் ந‌ட‌ப்ப‌த‌ற்கு மட்டும் க‌ண்ட‌ன‌ம் செய்வார்க‌ள், அத‌ற்கும் கைதட்டும் க‌ள‌வானி த‌மிழ‌ர்கள், சோக்க‌ள், சு.சாக்க‌ள், எம் த‌மிழின‌மே ஈழத்திலே எத‌ற்காக‌ இந்த‌ப்போர்? தெரியும்தானே உன‌க்கு. எவ‌ன் எவ‌னுக்கோ அதரவு குரல் ம‌ட்டும‌ல்லாது க‌ரமும் நீட்டும் நீ. உன் இன‌ம் என்ப‌தாலா வெட்டி நியாயம் பேசுகிறாய்? த‌மிழ‌ர் பிர‌ச்ச‌னை என்றால் ம‌னித‌ம் பேசும் சில‌ர், க‌ருவ‌ரைக்குள் நுழைவது என்றால் ம‌ட்டும் ம‌னித‌ம் ம‌ற‌ந்து உரிமை பேச‌ ஓடி வ‌ருவார்க‌ள். உண‌ர்வுகொள். உன‌க்காக‌ ஒரு அணி உருவாகாத‌ப‌ட்ச‌த்தில் தேர்தல் புற‌க்க‌ணிப்போம்.
    நாளைய‌ வ‌ர‌லாறு ப‌டைக்க, தமிழ் உணர்வுள்ள இளைய‌ ச‌முதாய‌மே த‌மிழ‌னின் உரிமையை நிலைநாட்ட‌, த‌மிழ‌னின் துக்க‌ம் துடைக்க‌ போரை முடிக்க, காலம் தாழ்தாது ஒரு ந‌ல்ல‌ முடிவெடுப்போம், ஆயிரத்திற்கு ஒருவர் புறப்பட்டாலும் போதும் இப்போரை தமிழனுக்கு சாதகமாக முடிப்போம்.
    த‌மிழ‌ர் ப‌டை திர‌ள‌ட்டும் த‌மிழீழ‌ம் பிற‌க்க‌ட்டும். க‌ள்ள மெள‌ன‌ம் காக்கும் ச‌ர்வ‌தேச‌மே. ஓயாத அலைகளாய் தமிழர் படை களமாடும். அப்போதும் இதே மெளனம் கடைப்பிடி.

  19. அணைத்து மாணவர்களும் போலிசாரின் அராஜகத்தை கண்டித்து குரல் கொடுக்கவேண்டும்.
    “இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம்.
    எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்” – காசி அனந்தன்

  20. முதலில் இனவெறியன் ராஜபக்ஸேவிற்கு நன்றி கூறவேண்டும். ஈழப்பிரச்சனையில் தமிழின துரோகிகள் ஒவ்வருவறாக தங்கள் உண்மை முகத்தை வெளிக்காட்டி வருகின்றனர்.

  21. “ஆட்டை கடித்து மாட்டை கடித்து” என்று பழமொழி சொல்வார்கள், காவல் எனும் ஏவல் நாய்கள் வழக்குறைஞர்கள் கடித்து, மாணவர்கள் கடித்து……….
    இனி நாம் கடிபடப்போகிறோமா? கடிக்கப்போகிறோமா?
    ************************************************************
    இந்தப்போலிகளின் நோக்கம் தான் என்ன? பெயர் மாற்றிக்கொண்டு வேடமிட்டு வந்து உளறிக்கொட்டுவதில் யாருக்கு என்ன பயன்?

    தோழமையுடன்
    செங்கொடி

  22. மாணவர்கள்ப‌டை திர‌ள‌ட்டும்
    எரிமலையாகிவெடிக்கட்டும்
    ஏவல் நாய்கள் ஓடிமறையட்டும்
    தனித்தமிழ ஆளட்டும்
    தமிழ‌னின் தார‌க மந்திரமாகட்டும்

  23. //தேவ்டியாப் பசங்களா.. என்னடா மயிறு ஈழம்…! நீங்கள்லாம் ஈழத்திலயா பொறந்தீங்க? அங்க என்ன உங்க ஆயியையும் அக்க்காளையுமா …….. பண்றாங்க? அங்க என்னா நடந்தா உங்களுக்கு என்னடா? ” //

    என்ன இது காக்கி சட்டைக்கும் பூணூலுக்கும் வித்தியாசமே தெரிலயே ! இவ்ளோ தூக்கலா பேசுறாங்களே 300 க்கும் மேலயா தமிழ்நாட்டு மீனவர்கள சிங்கள ராணுவம் சுட்டுக்கொன்னபோ போலீசுகாரங்களயோ ராணுவத்தயோ யாரும் தேவடியா பசங்கள் என்னு சொல்லலையே. ஏன்யா தமிழ்நாட்டு மீனவங்கள் எல்லாம் எங்க பொறந்தாங்க? தம்மாத்துண்டு இலங்கைய கண்டாக்க ஒண்ணுக்கு போறவங்களுக்கு இவ்ளோ ரோசம் பொத்துகிட்டு வருது. முதல்ல பட்டாளத்த கூட்டிண்டு போய் 300 இந்திய மீனவர்களுக்கு பதிலா ஒரு சிங்களப் படைய கொல்லு நீங்க எல்லாம் தேவடியா பயலூங்க இல்லேன்னு முதல்ல நாம ஒத்துக்கிறம். யாரு யார திட்டுறது?

  24. படிக்கும் மாணவர்களை படிக்க விடுங்கள் உங்களின் உணர்ச்சி தூண்டுதலால் கல்லூரியை துறந்த பலநூறு முன்னாள் மாணவர்கள் தன்னுடைய கல்லூரி படிப்பை நிறைவு செய்யமுடியாமல் தத்தளித்து கொண்டு நிரந்திரபணி இல்லாமல் குடும்பசுமையை தாங்கமுடியாமல் தன்னுடைய மகனாவது நன்றாக படித்து நல்வாழ்வு வாழவேண்டும் என்று நினைக்கிறார்கள் அவர்களையும் ஏதாவது போராட்டம் என்று ,களம் காணவாருங்கள் மாணவர்களே என்ற உணர்ச்சி உரைகளால் அவர்களின் பெற்றோராகிய முன்நாள் மாணவர்களின் கனவுகளை நசுக்காதீர்கள் தமிழன் முன்னேற கல்வி ஒன்றுதான் பெரிய ஆயுதம் அதையும் அவனிடம் இருந்து பிடுக்காதீர்கள் அதுவே இன்றைய அரசியல் வாதிகள் தமிழனுக்கு செய்யும் மிகப்பெரிய உதவியாக இருக்கும் . உங்களின் உணர்வு பூர்வமான போராட்டத்திற்கு மாணவர்களின் ஆதரவை வேறுஎதாவது வழிகளில் பெறுங்கள் கல்லூரி புறக்கணிப்பு வேண்டாம்.

  25. முதலில் இனவெறியன் ராஜபக்ஸேவிற்கு நன்றி கூறவேண்டும். ஈழப்பிரச்சனையில் தமிழின துரோகிகள் ஒவ்வருவறாக தங்கள் உண்மை முகத்தை வெளிக்காட்டி வருகின்றனர்.

Leave a Reply to rajkumar பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க