privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்தேர்தல் 2009 - சி.பி.ஐ.க்கு மாமியும், சி.பி.எம்.க்கு சாமியும் !

தேர்தல் 2009 – சி.பி.ஐ.க்கு மாமியும், சி.பி.எம்.க்கு சாமியும் !

-

Subramanian Swamy expressed gratitude to the CPI (M), for condemning the incident of some miscreants throwing eggs at him in the Madras High court last month. Dr. Swamy in a letter to the state secretary N.Varadarajan said: please be assured that this support of your party will be remembered by me and reciprocated.

The Hindu, March 11, 2009

பெரியவர் ஹர்கிஷன்சிங் சுர்ஜித் மறைவுக்குப் பிறகு அவருடைய இடத்தை நிரப்புவதற்குப் பொருத்தமான ஆள் இல்லையே என்று தவித்துக் கொண்டிருந்தார்கள் மார்க்சிஸ்டுகள். எச்சூரி எவ்வளவோ முயன்று பார்க்கிறார். இருந்தாலும் சுர்ஜித் அளவுக்கு அவருக்கு திறமை போதாது. அடுத்த தொங்குநிலைப் பாராளுமன்றத்தை உருவாக்குவதற்கான தேர்தல் நெருங்கி வருகிறது. மார்க்சிஸ்டு கட்சியின் எம்.பி நாற்காலிகள் கரைந்து விடும் என்பதும் தெளிவாகத் தெரிந்து விட்டது. இந்த நிலையில் கிடைக்கிற எம்.பி சீட்டுகளை வைத்துக் கொண்டு டெல்லியில் பேரம் பேசி முடிப்பதற்கும், ஒரு மூன்றாவது அணியை செட் அப் செய்வதற்கும் திறமை வாய்ந்த ஒரு தோழர் இல்லாமல் இருப்பது எப்பேர்ப்பட்ட இழப்பு! அந்த இழப்பை ஈடு செய்ய இதோ, சாமி வரம் தந்துவிட்டார்.

“பக்தா உன்னை மெச்சினேன். என்ன வரம் வேண்டும் கேள்” என்ற தோரணையில், “தோழர்களே, ஞாபகம் வைத்துக் கொள்கிறேன். தக்க சமயத்தில் கவனித்துக் கொள்கிறேன்” என்று பகிரங்கமாக அறிவித்து விட்டார். அரசியல் தரகு வேலைக்கு ஆளில்லையே என்று கவலைப்படாமல் மார்க்சிஸ்டுகள் தேர்தல் வேலையைக் கவனிக்கலாம்.

cpi(படத்தை பெரிதாக காண படத்தின் மேல் சொடுக்கவும்)

தமிழக மார்க்சிஸ்டுகளுக்கு இதில் விசேஷ சந்தோஷம். போயஸ் தோட்டத்துக்கு என்றைக்குத் தாவலாம் என்று மார்க்சிஸ்டுகள் மாநிலக்குழுவைக் கூட்டி விவாதம் நடத்திக் கொண்டிருக்கும்போதே, தா.பா குபீரென்ற தாவி அம்மாவைப் பார்த்துவிட்டார். வலது கம்யூனிஸ்டு தோழர்களுக்கு வாயெல்லாம் பல்லுதான். அவர்களை அவ்வப்போது மட்டம் தட்டி, ஓரம் கட்டி வைத்திருக்கும் மார்க்சிஸ்டுகளுக்கு தோழர்.தா.பா சரியான பாடம் புகட்டி விட்டார். “இப்படி சுறுசுறுப்பாக இருந்தால்தானே தோழர் கட்சி வளரும். நல்லகண்ணுவைப் போல கருணாநிதியையே சுற்றிக் கொண்டிருந்தால் காரியமாகுமா? பாருங்கள். உண்ணாவிரதத்தில் ஜம்மென்று அம்மாவுக்குப் பக்கத்து நாற்காலியில் நம்ம தோழர் உக்காந்திருக்கார். என்ன மீடியா கவரேஜ்! தாப்பான்னா தாப்பாதான்” என்று புளகாங்கிதம் அடைந்திருந்தார்கள்.

மார்க்சிஸ்டுகளா கொக்கா? “நீ மாமியை சுத்தி பழம் வாங்குவதற்குள் நான் சாமியை சுத்தி பழத்தை வாங்கிவிடுவேன்” பெரியண்ணன் வேலையைக் காட்டிவிட்டார்கள். மாமிக்கு இங்கே என்ன செல்வாக்கு இருந்தாலும், டெல்லி மேட்டருக்கு அவர் சாமியைத்தானே நம்பியாக வேண்டும். அந்த சாமியையே மடக்கிவிட்டால்! மடக்கி விட்டார்களே!

cpim(படத்தை பெரிதாக காண படத்தின் மேல் சொடுக்கவும்)

தேர்தல் முடிந்தபின் எந்த திசையில் காய் நகர்த்தப் போகிறார் என்பதையும் சாமி இன்றைக்கு சூசகமாகத் தெரிவித்து விட்டார். தனக்கு எதிராக சென்னை வக்கீல்கள் தீண்டாமைக் குற்ற வழக்கு கொடுத்திருப்பதால், பி.சி.ஆர் சட்டத்தை திருத்தச் சொல்லி டெல்லி உச்ச நீதிமன்றத்தில் சாமி ஒரு வழக்கு போடப்போகிறாராம். பிராமண தலித் கூட்டணி அமைந்து விட்டால், திராவிட இயக்கங்கள் அதோ கதிதானாம்.

தலித் என்றால் மாயாவதி. பிராமண என்றால் அதில் யாரெல்லாம் உண்டு? மார்க்சிஸ்டுகளைத்தான் கேட்கவேண்டும். எப்படியோ, நடுவில் ஜரிகை அங்கவஸ்திரத்துடன் வைத்தி மாமா நிற்க, இருபுறமும் காரத்தும் பரதனும் நிற்கும் கண்கொள்ளாக் காட்சியை தேர்தலுக்குப்பின் தொலைக்காட்சிகளில் அடிக்கடி பார்ப்போம் என்பது மட்டும் புரிந்து விட்டது.

இது கொள்கையற்ற கூட்டணி என்றெல்லாம் யாரும் சொல்லிவிட முடியாது. வக்கீல் போராட்டத்தையே எடுத்துக் கொள்ளுங்களேன். “கருணாநிதி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதனால்தான் இப்படியொரு சம்பவம் உயர்நீதிமன்றத்தில் நடந்திருக்கிறது” என்கிறார் சாமி. “புறக்கணிப்பு போராட்த்தைக் கைவிட்டு வக்கீல்கள் வேலைக்குத் திரும்ப வேண்டும்” என்றும் கூறுகிறார்.

மார்க்சிஸ்டு கட்சியின் நிலை என்ன? “உயர்நீதிமன்ற சம்பவத்துக்கு கருணாநிதிதான் பொறுப்பேற்க வேண்டும். புறக்கணிப்பை கைவிட்டு வக்கீல்கள் வேலைக்குத் திரும்பவேண்டும்” இதுதான் மார்க்சிஸ்டுகளின் நிலை.

சு.சாமியையும், மார்க்சிஸ்டுகளையும் தவிர வேறு யாரும் இந்த இரண்டு கருத்துகளையும் ஒரே நேரத்தில் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல, சு.சாமி மீதான முட்டை வீச்சு சம்பவத்தையும் இரண்டு கட்சிகள்தான் கடுமையாகக் கண்டித்திருக்கின்றன. ஒன்று பா.ஜனதா. இன்னொன்று மார்க்சிஸ்டு.

இதை வைத்து மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது அயோக்கியத்தனம் என்று மார்க்சிஸ்டு மெய்யன்பர்கள் கொதிக்கலாம். எது மொட்டைத் தலை எது முழங்கால் என்பது தேர்தலுக்கு முன்னால் எப்படித் தெரியும்? மேலும், மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் கலையில் வல்லவரான சாமியையே வளைத்து விட்டீர்கள். அப்புறம் என்ன? கூச்சப்படாதீர்கள். ரெண்டு பக்கமும் சிவப்பு பார்டர் போட்ட ஜரிகை அங்கவஸ்திரம் கிடைக்குமா என்று மார்க்கெட்டில் விசாரிக்கச் சொல்லுங்கள். எத்தனை நாள்தான் சாமியை நம்பியிருக்க முடியும்?

  1. நான் சிபிஎம் சிபிஐ அணிகளிடம் கேட்கிறேன் இன்னமும் ஏன் இந்த தமிழ் விரோத, மக்கள் விரோத கட்சிகளில் இருக்கின்றீர்கள். ஜெயாவுக்கு சாமரம் வீசுவதும், சீட்டு பேரம் பேசுவதுமா உங்கள் புரட்சி

  2. கர்ணாநிதி ஆச்சில கம்யூனிஸ்ட் காம்ரேட்ஸ தேங்க பண்ண முட்ல. இந்த ஒரு எவிடன்ஸ் வச்சே இந்த ஆச்சிய கலச்சுடுட வேண்டீதான்.

  3. வினவு, மகஇக, மானஸ்தன் போன்றவர்கள் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டும் புரட்சியில் வல்லவர்கள் என்பதை ஏற்கனவே நிரூபித்து விட்டீர்கள். அதனை மேலும் உறுதிப்படுத்தியுள்ளீர்கள். மறைமுகமாக பா.ஜ.க.வுக்கு ஒத்து ஊதும் உங்களது குண்டு சட்டி பார்ப்பனீய புரட்சி எதிர்காலத்தில் வரலாறு படைக்கும். குழப்பத்தை மட்டுமே கொள்கையாக வைத்திருக்கும் போலி நக்சலிசவாதிகளான உங்களால் குரைக்க மட்டுமே முடியுமே தவிர, உழைக்கும் மக்களுக்கு எதையும் வென்றெடுக்க உதாவது. எதிர்புரட்சி சக்திகளின் ஊனக்குரலாக வினவு மாறிவிட்டதை ஏற்கனவே இணையவாதிகள் உணர்ந்து விட்டார்கள். தற்போதைய சூழலில் இந்தியாவில் நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார்? பா.ஜ.க.வா அல்லது காங்கிரசா? இந்த இரண்டையும் முறியடித்து மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கக் கோரும் மூன்றாவது அணியா? உங்களைப் பொறுத்தவரை இவைகள் எதுவுமே உதவாது என்று மொத்தமாக ஒரு கோணியில் கட்டி கல்லடிக்கும் கும்பல்தானே. அதே சமயம் மறைமுகமாக பா.ஜ.க. ஆட்சியமைக்க இதுபோன்ற மகத்தான பிரச்சாரங்களில் ஈடுபடுவது உங்களது அரிப்பை தீர்த்துக் கொள்ள உதவலாம். அது மக்களுக்கு உதவாது!

  4. //உங்களது அரிப்பை தீர்த்துக் கொள்ள உதவலாம். அது மக்களுக்கு உதவாது!//

    அப்படியா ராசா? ஜெயல்லிதா கூட கூட்டனி சேந்து நீ மக்களுக்கு எப்படி உதவப்போற
    இதுக்கு முன்னால காங்கிரஸோட கூட்டனி சேர்ந்து மக்களுக்கு எப்படி உதவின?
    ஜெயல லிதாவுக்கும் நரேந்திர மோடிக்கும் வித்தியாசம் இல்லை என்று முழங்கிய காலம் மறந்து விட்டதா மோனே?
    இதுக்கெல்லாம் பதில் சொல்லுவீங்களா சாரே?

  5. என்ன சந்திப்பு சார் கம்யூனிசம் பற்றி அன்னிக்கு வேறொரு சைட்டுல நிறைய எழுதுனீங்க இப்ப என்னடான்னா ஜெயல்லிதாவோடு கூட்டனின்னு எழுதியிருக்காங்க. என்ன இது. அப்ப ராஜா ராமன் சார் சொன்னது சரியா? நீங்க உங்களேயே ஏமாத்திகிறீங்களா இல்ல எங்கள ஏமாத்துறீங்களா?

    மொய்தீன், துபாய்

  6. படங்களில் ஒரு கலை நேர்த்தி இருக்கிறது. படம் அசத்தலாய் வந்திருக்கிறது.

    படம் சம்பந்தபட்டவர்களை பாதித்திருக்கிறது என்பது சந்திப்பு பதிலில் தெரிகிறது.

    தேர்தல் வரைக்கும் அரசியல் கட்சிகளின் ஒரு நிலை. தேர்தல் வந்துவிட்டால், ஒரு நிலை. இவர்கள் அம்பலமாவதற்கு தேர்தல்களும் தேவைப்படுகிறது. என்ன அதற்காக ஆகும் செலவு தான் அதிகம்.

  7. The unholy wedding of the two communist parties with Jaya in TN clearly indicates their lack of political will to fight against the BJP and the Congress. Not only here they have committed this farce but also in Orissa they have gone into an understanding with Naveen Patnaik, who had been a loyal partner of NDA for eleven long years. Yechury is now knocking at the door of Sharath Yadav to take him into the fold of Third Front. But the question still unanswered is how come the above metioned parties become secular by overnight ? or Who has given Karat the authority to decide on who is secular and who is not when his own party’s secular credential is in question?

  8. அதெல்லாம் கிடக்கட்டும்… சந்திப்பு கட்சிக்குள் இருந்து கொண்டே ந்ரேந்திரமோடிஐ புகழ்ந்து த் ள்ளினாரே ஒரு எம்.பி…ம்தசார்பற்ற அரசியலில் சிபிஎம்மின் சாயம்..அவ்வள்வுதான்.அச்சுதானந்தன் ச்ப்ரிமலைக்கு இருமுடி கட்டினார்.மே.வ்ங்க எம்.பி..முதலில் நான் இந்து பார்ப்பனன் என்றரே..என்னே மதசார்பற்ற உரறுதி…இந்த உறுதிஐ காப்பாற்றத்தான் கும்பகோணத்தில் புனித நீராடி நூந்நுக்கணக்கான பேரை மேலே அனுப்பிய,சமீபத்தில் தேர்தல் வெற்றிக்காக இந்து கோவிலில் யாகங்கலை நடத்தும்…ஜெ…கூட தேர்தல் கூட்டணி.அது சரி…ஒரே ஆணை மூலம் 1.5 ல்ட்சம் அரசு ஊளழியர்களை வீட்டுக்கு அனுப்பின ஜெ.கூட சேர்ந்து என்ன வர்க்க பணி ஆற்றப்போகிறார்களாம்…அது சிங்கூரில் சிரித்து கிடந்ததே டாடா கம்யூனிச்டுகள் என்று ம.க.இ.க.இன்ம் காட்டியதே…..வெளுத்துப்போன சிவப்பு..காவிதான் எதற்கு..வசவுகள்…வரலாறு பொய் சொல்லாது….

  9. ஒரு பழைய ம க இக பாடல்…

    செய்யுறது தரகு பணி உனக்கெதுக்கு சிவப்பு துணி…
    தூ மானங்கெட்ட சிபிஎம் கொள்கை கூட்டனி…
    கஜானவ பங்கு போட வந்த கூட்டனி….

    இது போட்டு 13 வருசமாச்சு இன்னும் அதே மாமா வேலதான்,, CPIM = கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் மாமாயிஸ்டு….!

  10. இந்த பதிவில்/ பின்னூட்டங்களில் தெளிவான விமரிசனம் முன்வைக்கப்பட்டிருக்கும் போது தோழர் சந்திப்பு அதற்கு பதிலளிக்காமல் நழுவுவது ஏனோ?
    ஒரு ஆர்எஸ்எஸ் காரணுக்கு கூட 4 பக்கம் பதிலெழுதும் தோழர் சந்திப்பு, புரட்சிகர கம்யூனிஸ்டுகளின் கேள்விக்கு மிரட்சியடைவது ஏனோ?

  11. மகஇக வின் புரட்சி என்ன? அவர்கள் திட்டம் என்ன? பல கோடி உழைக்கும் மக்களின் பல பிரச்சினைகளை தீர்க்க என்ன திட்டம்? அவர்களை எப்படி திரட்டுவதாக உத்தேசம்? பாராளுமன்ற ஜனநாயகம் உங்களுக்கு ஏற்புடையதா?இல்லையா? பலர் எழுதுகிறீர்கள்.தெளிவுபடுத்துங்கள். சிபிஐ, சிபிஎம் கட்சிகள் தேர்தல் பாதையை மக்களை திரட்டப் பயன்படுத்தலாம் என்று முடிவுடன் இயங்குகிறார்கள். தேர்தல் என்றாலே அணி சேர்வது அவசியம்.காங்கிரஸ், பிஜெபி க்கு மாற்றாக மூன்றாவது அணியைக் கட்ட முயற்சிக்கிறார்கள். அதில் என்ன தவறு உள்ளது. அரசியல் அடிப்படையில் விமர்சனம் செய்யுங்கள். அதை செய்யாமல் அவன் மாமா இவன் மாமா என்ற அநாகரிக வார்த்தைகளால் என்ன பயன். குழப்பம்தான் மிஞ்சும்.

  12. //The unholy wedding of the two communist parties with Jaya in TN clearly indicates their lack of political will to fight against the BJP and the Congress. Not only here they have committed this farce but also in Orissa they have gone into an understanding with Naveen Patnaik, who had been a loyal partner of NDA for eleven long years. Yechury is now knocking at the door of Sharath Yadav to take him into the fold of Third Front. But the question still unanswered is how come the above metioned parties become secular by overnight ? or Who has given Karat the authority to decide on who is secular and who is not when his own party’s secular credential is in question?//

    பழனியப்பா மேலே மாமா என்று எதுவும் குறிப்பிடாமலேயே CPM அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.. இதன் பயனை நீங்கள் அறிவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

    புரச்சி

  13. மேலே ஒருவர் கந்தசாமி என்ற பெயரில் எழுதியிருக்கிறார் அவர் நானல்ல.. எனக்கும் இந்த தேர்தல் புறக்கணிப்பு சமாச்சாரத்தில் நம்பிக்கை வரவில்லை.. CPM தற்போது ஆட்சியில் பங்கேற்கும் வகையில் வந்து விட்டார்கள்தான்.. அது தவறாக இருக்கலாம்,, அதற்காக குறைந்த பட்ச வாய்ப்பைக் கூட பயன் படுத்தக் கூடாது என்பதை ஏற்கவில்லை.. ஒரே ஒரு வேண்டுகோள் வினவு தள அமைப்பாளர்கள் மாமா.போன்ற வார்த்தைகளை எடிட் செய்து வெளியிடவும்..
    கந்தசாமி

  14. தேர்தல் நெருங்கி வருகிறது.

    எந்தக் கூட்டணியாலயும் மக்களுக்கு பயன்
    இல்லை. மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க என்ன திட்டம் உள்ளது.

  15. அன்பு தோழர்களே ,

    நான் எங்கள் வட்டார CPM கட்சி செயலாளரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவர் அந்த ஊர் தி.மு.க எம்.எல்.ஏ நிறைய நல்ல பணிகளை செய்து வருவதாகவும், சில நேரங்களில் மக்கள் பணத்தை ஏப்பம் விட்டு விடுவதாகவும் அத்தகைய நேரங்களில் மட்டும் நாம் அவர்களை விமர்சித்து சரி செய்தால் போதும். அதை விடுத்து ஒட்டு மொத்த பொதுவுடைமை புரட்சி என்பதெல்லாம் தேவை இல்லை. அதே போல 15 வருடத்திற்கும் மேலாக கட்சியில் உள்ள அவரே நேரடியாக வெளிப்படையாக “தம்பி ! நாங்க தான் சரியா படிக்கல அப்ப்டி இப்படி வந்து தெரியாம மாட்டிகிட்டு முழிக்கிறோம் (CPM இல்.). நீ நல்லா படிச்சிருக்க பொழப்ப பாரு ! ” என்று கூறினார். மேலும் இன்றைய உலகமய தாரளமய உலகத்தில் வெளி நாட்டு முதலீட்டை ஆதரிக்க வேன்டும். அப்பொ தான் தொழிற்வளர்ச்சி ஏற்படும் என்றும் கூறினார். அதனால் தான் மேற்கு வங்கத்தில் அனுமதித்ததாயும் சுதேசி கொள்கை இப்பொ செல்லுபடியாகாது என்றும் கூறினார்.

    இப்படி நல்லா சமரசம் செய்துக்கிஏ இருந்தால் எப்போ கம்யூனிசம் இந்தியாவுல வரும்னு கேட்டதுக்கு ? அதுக்கு தேவை இல்லை ? “அப்பப்போ சில சலுகைகளை கேட்டு வாங்கி கிட்டா போதும்” “அதுக்கு போராடுனா போதும்”

    அப்ப்றம் அவர்கிட்ட பேச பெரிசா ஏதும் ஒன்னும் இல்லையினு வந்துட்டேன்.

Leave a Reply to புரச்சி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க