தன் முதுகு வலி, இடுப்பு வலி என்று எந்த வலியையும் பொருட்படுத்தாது நான்கு நாட்களாக டில்லி காங்கிரஸ் அலுவலகத்தை தன் வாரிசு பரிவாரங்களோடு சுற்றிச் சுற்றி வந்த கருணாநிதி டெல்லி செய்தி ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வந்த நேரம் ஈழத்தின் கருமாதி இலங்கை அரசால் செய்யப்பட்டு வந்தது.
உலகத் தமிழினத்தின் தலைவர், திராவிட இயக்கத்தின் கடைசி கொழுந்து என்றெல்லாம் போற்றப்படும் கருணாநிதியின் பதவி சந்தர்ப்பவாத அரசியல் இவளவு அப்பட்டமாக சந்தி சிரிப்பது இப்போதுதான். விலைவாசி, ஈழத்துக்கு துரோகம், என எல்லாவற்றையும் கடந்து வெற்றி பெற்றாயிற்று. காங்கிரஸ்காரனும் கருணாநிதி முதுகில் ஏறி கரை ஏறி விட்டான். அதே கெத்தோடு போய் ஏழு மந்திரிப் பதவிகளையாவது பெற்று விட வேண்டும். பிள்ளைகளையோ பேரனையோ அனுப்பினால் பேரம் படியாது தான் போனால்தான் சரிவரும் என்றுதான் முதுமையின் தொல்லைகளை ஒரு பொருட்டாகக் கருதாமல் டில்லியில் தவம் கிடந்து தோல்வியோடு திரும்பியிருக்கிறார்.
சிவகங்கையில் தில்லு முல்லு செய்து வெற்றி பெற்ற ப. சிதம்பரம் கருணாநிதிக்கு நன்றி சொல்லும் போது எழுத்தின் மூலமே வெற்றியை ஈட்டிக் கொடுத்தவர் என்று புகழ்ந்தார். தேர்தல் முடிவுகள் வெளியான அன்றோ அல்லது மறுநாளோ கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் ”ஈழத் தமிழர்களுக்காக என் எழுத்துப் பணி ஓயாது”” என்று சொல்லியிருந்தார். கருணாநிதியின் இறுதிக்கால இந்த அரசியல் வியாபரத்தில் கடிதமும், பயணமும் இரண்டரக் கலந்திருக்கிறது. ஓட்டுக் கேட்டு வாக்காளர்களைப் போய் சந்திக்க பயணம் போக வேண்டியதில்லை. மருத்துவமனையில் போய் படுத்துக் கொண்டு கழிவிரக்க கடிதங்கள் எழுதினால் போதும். அழகிரியின் தலைமையில் திருமங்கலம் வெற்றியை மாடலாக வைத்து செல்வமும் செல்வாக்கும் (ரௌடிகள் செல்வாக்கு) உள்ள வேட்பாளர்களை நிறுத்தி பணத்தை வீசினால் வாக்காளன் ஓட்டுப் போட்டு விடுவான். அந்த வேலை முடிந்தது.
கொத்துக் குண்டுகளுக்கு செத்து மடிந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழனுக்காக ஏதாவது செய்யுங்கள் என்றால், “நான் நேற்று கடிதம் எழுதினேன், அதற்கு முந்தைய நாள் கவிதை எழுதினேன், நேற்று கூட சிதம்பரத்தோடு பேசினேன், நாளை தந்தியடிக்கிறேன், மறு நாள் தந்தியும் கடிதமும் சேர்த்தடிக்கிறேன்” என்று கபடியாடுகிறார்.பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்ட மக்களுக்காக கடிதம் எழுதி கண்ணீர் வடித்த கருணாநிதி, கடைசியாக நடத்திய உண்ணாவிரதம்தான் கொலைக்களத்தில் பலியாகி விழுந்த ஈழத் தமிழர்களுக்கு கடைசியாய் நடந்த இழிவு.
“கனரக ஆயுதங்கள் பயன்படுத்த மாட்டோம், யுத்த நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டோம், இனி மக்களை மீட்கும் நடவடிக்கைதான்”” என்று இலங்கை அரசு அறிவித்ததை போர் நிறுத்தம் என்று முழுப்பொய்யைச் சொல்லி ஆறு மணி நேர உண்ணாவிரதத்தை முடித்து விட்டுச் சென்று விட்டார். போர் நிறுத்தப்பட்டு விட்டதாக சொல்கிறீர்களே? அங்கே மக்கள் கொல்லப்படுகிறார்களே என்று கேட்டதற்கு மழைவிட்டும் தூவானம் விட வில்லை என்றார்.
போர் முடிவுக்கு வந்தாக அறிவிக்கப்பட்ட கடைசி மூன்று நாட்களில் மட்டும் ஐம்பதாயிரம் மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. கருணாநிதியின் அகராதியில் தூவனம் என்பதன் பொருள் ஐம்பதாயிரம் மக்கள் படுகொலையாக இருக்குமோ என்னமோ? இத்தனை நடந்தும் கடிதம், உண்ணாவிரதம், என்று ஈழ விவாகரத்தில் காரியம் சாதித்ததாக தம்பட்டம் அடித்தவர். ஏன் அதே கடிதத்தால் தனது வாரிசுகளுக்குத் தேவையான கேபினெட் மந்திரிப் பதவிகளைப் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து பெற்றுக் கொள்ள முடியாதா? காங்கிரஸ் கட்சியின் பார்முலாவில் இதற்கெல்லாம் எவ்வித முக்கியத்துவமும் கிடையாதா? என்றால் கிடையாதுதான். கடிதத்திற்கு மட்டுமல்ல கருணாநிதிக்கே முக்கியத்துவம் கிடையாது.
மத்தியில் தேர்தல் கமிஷன் தலைவராக நவீன் சாவ்லா கொண்டு வரப்பட்ட போதே காங்கிரஸ் பார்முலா மாறிவிட்டது. சரி அது என்ன காங்கிரஸ் பார்முலா. மிகவும் சிம்பிள்தான். இந்தத் தேர்தல் முடிவுகளின் போது காங்ரஸ் நாடு முழுவதும் மண்ணைக் கவ்வும் என்று பொதுவாக அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. பணம், அதிகாரம். தேர்தல் கமிஷன் துணையோடு மாநிலக் கட்சிகளுக்கு அல்வா கொடுத்து பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதிக எண்ணிக்கையிலான சீட்டுகள் வந்ததோடு. சில புதிய கூட்டாளிகளையும் சேர்த்துக் கொண்டு மாநிலக் கட்சிகளின் காலைவாரி விடுகிறது. காரியம் முடியும் வரை காலில் விழுந்து கெஞ்சுவது; அடுத்தவன் முதுகில் ஏறி சவாரி வருவது; காரியம் முடிந்ததும் அப்படியே காலைவாரி விடுவது, இதுதான் காங்கிரஸ் கட்சியின் கடந்தகால, நிகழ்கால, எதிர்கால வரலாறு. இன்று கருணாநிதியின் தயவு காங்கிரஸ் கட்சிக்குத் தேவையில்லை. அதனால்தான் டில்லியில் வைத்தே ”அளவுக்கு மீறி ஆசைப்படுகிறது திமுக” ‘என்று வெளிப்படையாகவே கருணாநிதியை மிரட்டினார்கள் காங்கிரஸ்காரர்கள். அத்தோடு ஆங்கில ஊடகங்களை தூண்டி விட்டு திமுகவின் டி.ஆர்.பாலுவையும், ஆ.ராசாவையும் ஊழல்வாதிகள் என்று பிரச்சாரம் செய்தார்கள்.இவர்கள் இருவருமே மகா யோக்கிய உத்தமர்கள் என்று சொல்வதற்கில்லை. மீடியாக்காரர்களுக்கும் காங்கிரஸ் காரர்களுக்கும் இவர்கள் இருவரும் ஊழல்வாதிகள் என்பது இப்போதுதான் தெரிந்ததாக்கும்.
காங்கிரசிடம் கேட்ட ஏழு மந்திரிப் பதவிகளும் கிடைக்கவில்லை, தான் அவமானப்படுத்தப்பட்டதாக கருதிய கருணாநிதி சொல்லாமல் கொள்ளாமல் ஜெட் ஏர்வேஸ் மூலம் டிக்கெட் போட்டு சென்னைக்கு வந்து விட்டாராம். நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களின் ராஜிநாமா கடிதங்களையும் வாங்கி வைத்துக் கொண்டு நாடகம் நடத்தினார், என்றும் உலகத் தமிழர்களின் காதில் திமுக பூச்சுற்றி விட்டது என்று உலக மகாயோக்கியர் ராமதாஸ் சொன்ன போது…….ஈழத்துக்காக உயிர்த்தியாகம் செய்த தியாகி முத்துக்குமார் கருணாநிதியை தன் கடிதத்தில் வருத்தெடுத்த போது வந்த கோபமும் ஆத்திரமும் ஏன் கேட்ட மந்திரிப் பதவிகளை தர மறுக்கும் காங்கிரஸ் மீது இவருக்கு வரவில்லை.வராது… வரவும் கூடாது. கெட்ட நேரம் பார்த்து சூடு சுரணை வந்து தொலைத்தால் மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே நேரத்தில் பீஸைப் பிடுங்கி விடுவான் என்ற பயம. உண்மையில் திமுகவின் மெயின் சுவிட்சே இப்போது காங்கிரஸ் கையில்தான் இருக்கிறது. மேலும் வாரிசுகளுக்கு பதவிகளை எப்படியாவது பெற்றுத் தறவேண்டுமென ஆலாய்ப் பறக்கும் கருணாநிதிக்கு தன்மான உணர்ச்சிகளெல்லாம் இருப்பதற்கு வாய்ப்பில்லை.
பதவி, அதிகார வெறி, வாரிசு அரசியலால் வீழ்ச்சியடைந்துள்ள தனது கட்சியின் நிலை தெரியாமல் பழைய நினைப்பில் நடந்து கொள்கிற திமுகவின் தலைவர் கருணாநிதியின் இன்றைய நிலை என்ன? கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து மத்தியிலோ மாநிலத்திலோ பதவியில் இருப்பதன் மூலம் தொடர்ந்து வலுவான நிலையில் கட்சி இருப்பது போல காட்டிக் கொண்டு மீண்டும் மத்தியில் வாரிசுகளுக்கும் அடிப்பொடிகளுக்கும் மந்திரிப் பதவி வாங்கி விடத் துடிக்கிற கருணாநிதி இந்த இடைப்பட்ட காலத்தில் மாநிலக் கட்சிகளின் செல்வாக்குடைந்து காங்கிரஸ் வலுப்பெற்றதை கவனிக்கத் துவங்குகிறார். தமிழகத்தில் திமுகவின் வெற்றியை மட்டுமே வைத்து நினைத்ததை சாதித்து விட நினைக்கும் கருணாநிதி மாநிலத்தில் மைனாரிட்டி அரசாக காங்கிரஸ் கட்சியை நம்பி இருப்பதையும் மறந்து விடுகிறார்.
முன்னெப்போதையும் விட கருணாநிதியைப் புரிந்து கொள்ளும் அப்பட்டமான அரசியல் சூழல் இப்போது தமிழகத்தில் நிலவுகிறது. தேர்தல் நேரத்தில் நான் ” என் சொல்படி கேட்டு நடக்கும் மத்திய அரசு வந்தால் இலங்கைக்கு இராணுவத்தை அனுப்பி தனி ஈழம் அமைப்பேன்”” என்று கதறிய ஜெயலலிதா தன் பேச்சை தமிழக மக்கள் நம்பவில்லை என்று தெரிந்ததும், ”இலங்கையில் அரசியல் சட்டம் திருத்தப்பட்டு தமிழ் மக்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும்” என அடக்கி வாசிக்கிறார். கருணாநிதியின் கட்சி பலவீனமானாலும் அவரது செல்வத்திற்கும் செல்வாக்கிற்கும் பழுதோ பாதகமோ இல்லாமல் இன்னும் பதவி அரசியலில் ஒட்டிக் கொண்டிருக்க முடிகிறதென்றால் அதற்கு காரணம் ஜெயலலிதாதான். ஆமாம் ஜெயலலிதாவின் பலம் கருணாநிதிதான். கருணாநிதியின் பலம் ஜெயலலிதாதான். சூழ நிலவும் கேவலங்களை மறைத்து தன் துதி பாட கருணாநிதி வழக்கமாக கையாள்வது தன்னைச் சூழ நிறுத்தி வைத்திருக்கும் அல்லக்கைகளைத்தான்.
இந்த அல்லக்கைகளில் முக்கியமானவர் மாமா..னமிகு வீரமணி. கருணாநிதியின் மந்திரி பதவிக்கான பேரங்களை ஏதோ மாபெரும் சமூகநீதியாகச் சித்தரிக்கும் வீரமணி அதை பார்ப்பன பத்திரிகைகள் அவதூறு செய்வதாக சீறுகிறார்.ஈழத்தின் மக்கள் புலிகள் என்ற பெயரில் கொல்லப்படுவதாக இதே பார்ப்பன ஊடகங்களும், காங்கிரசு அரசும் பிரச்சாரம் செய்யும் போது வராத கோபம், இலங்கை அரசுக்கு ஆயுதம் கொடுப்பதை நியாயப்படுத்தும் காங்கிரசுக்கு வாக்களியுங்கள் என்று பேசும்போது இல்லாத சுயமரியாதை உணர்வு இப்போது மட்டும் சீறிப்பாயும் மர்மமென்ன?
கனிவான இதயம் கொண்டவர், மென்மையான பண்பு கொண்டவர், நுட்பமான கவிதை எழுதுபவர், தாயகத்தில் பெண்கள் உண்ணாவிரதம் இருந்தபோது கண்ணீருடன் நிறுத்தச் சொன்னவர் என்று இலக்கியவாதிகளால் அறியப்படும் கனிமொழி இந்த பதவி வேட்டைக்காக தந்தையின் நிழல் போல வந்ததும், எல்லா இடங்களிலும் ஏதோ மகாபாரதப் போர் நடத்தும் உணர்ச்சியுடன் டெல்லியை சுற்றி வந்ததும் சரியாகச் சொன்னால் ஆபாசம். ஈழத்திற்காக கடைசிக் கட்டத்தில் புலிகளை சரணடையச் செய்ய நண்பர் ஜெகத்கஸ்பாருடன் முயற்சி செய்தாராம் கனிமொழி. இத்தகைய அதிகார பலம் கொண்டவர் அடுத்தநாளே ஈழத்தில் ஐம்பதாயிரம் மக்கள் கொல்லப்பட்டவுடன் எதுவும் நடக்காதது போல கேபினட் பதவிக்காக டெல்லியின் அதிகார பீடங்களை சுற்றி வந்த்திலிருந்து இவரது இதயம் ஈழத்திற்காக எப்படியெல்லாம் துடித்திருக்கும் என்பதை உணர்த்துகிறது. கனிமொழியியை தன் இலக்கிய வாரிசு என்றார் கருணாநிதி. பதவி வெறியிலும் அந்த வாரிசுரிமையை தனது அண்ணன்களோடு சேர்த்து வெளிப்படுத்துகிறார் கனிமொழி.
ராஜாத்தி அம்மாள், தயாளு அம்மாள், செல்வி போன்றோரெல்லாம கருணாநிதியின் வாரிசுகளுக்கு கேபினட் மந்திரி பதவி வாங்கித் தராமல் சென்னை திரும்பக் கூடாத என தமிழினத் தலைவரை மிரட்டியிருப்பார்கள் போலும். ஆனால் ஈழத்து மக்களுக்காக இப்படியொரு மிரட்டலை செய்வதற்கு தமிழகத்தின் மக்களுக்கு அதிகாரமில்லாமல் போனதே?
( எமது நண்பர் இராவணன் எழுதிய கட்டுரையை இங்கு வெளியிடுகிறோம். இவர் அவ்வப்போது வினவில் எழுதுவார் )
வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
தொடர்புடைய பதிவுகள்
துரோகத்தையே மூடிமறைக்கும் புதிய துரோகம்
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5785:2009-05-25-08-04-47&catid=277:2009
புலித் தலைமையைக் கொன்றவர்களும், அதை மூடிமறைப்பவர்களும்
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5782:2009-05-24-14-34-33&catid=277:2009&Itemid=76
நீங்க 1000 சொல்லுங்க இன்னும் கொஞ்ச நாளுல கலைஞர் மறுபடியும் தமிழின தலைவர் ஆயிடுவார்
யோவ் நான் பிரதமர் ஆக இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்கு, உங்களுக்கு பொருக்காதே, ஆம்மாவான்ட அமௌன்ட் வாங்கிடீங்களா?
ஏன்யா போட்டு மானத்த வாங்கிறிங்க… நா ஏதோ பொழப்பு பொழச்சிட்டு இருக்கேன்.. கிளி கிளின்னு கிளிச்சு தொங்க போடற உமக்கு என்ன பட்டம் கொடுக்கலாம்னு யோசன பண்ணி சொல்றேன்
ரங்க்ஸ் வேனுமின்னா ‘கோட்சில்லா’ பட்டம் குடுங்க பொருத்தமா இருக்கும் 🙂
வருக! வருக! மீண்டும் அரை டிக்கெட்டை பார்க்கையில் சந்தோசம் பொங்குகிறது.
மக்கள் நலனை கொண்டு எதிர் காலத்திலாவது தலைவர்கள் ‘கருத்தடை’ யை கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஈழத்தமிழன் கழுத்தில் ஈரத்துணி சுற்றினார் கலைஞர்
இழுத்து அமுக்கியது இந்திய தேசிய காங்கிரசு
அறுத்து முடித்தது ராஜபக்சே அரசு! ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்வதில் போட்டி போடுகிறார்கள் தமிழக அரசியல்வாதிகள். அவர்கள் என்னவோ தன் பாதையில் தெளிவாக இருக்கிறார்கள். நாம் தாம் பல சமயங்களில் மறந்துவிடுகிறோம்.
இன்று புலிகளைப் பற்றியும் அவர்களின் போராட்ட மற்றும் அரசியல் அணுகுமுறைகள் பற்றியும் நிறையவே எழுதுகிறார்கள், சர்வததேச ஊடகங்கள் முதல் தனியார் Blog வரை.அதனால் நான் ஓர் ஈழத்தமிழ் என்கின்ற வகையில் என் கருத்தை பதியலாம் என்று நினைக்கிறேன்.
என்வரையில், புலிகளை யார் எப்படி விமர்சித்தாலும் அவர்கள் இலட்சியம் ஈழத்தமிழரகளின் விடுதலை. அது எப்பொழுதுமே தூய்மையானது. புலிகள் இயக்கம் ராணுவ மற்றும் அரசியல் கட்டமைப்பை கொண்ட ஒரு விடுதலை இயக்கம். உலகம் அவர்களை பயங்கரவாத இயக்கம் என்கிறதா? எனக்காக, என் இனத்தின் விடுதலைக்காக போராடும் இயக்கம் என் கண்களுக்கு விடுதலை இயக்கமாகத்தான் தெரிகிறது. ஈழவிடுதலைக்கான அவர்களின் போராட்ட முறைகளும் அரசியல் அணுகுமுறைகளும் விமர்சனத்திற்குள்ளாகலாம். தப்பில்லை.
ஆனால், அவர்கள் இலட்சியம் விமர்சனத்திற்குள்ளாவது வேதனை.
இங்குள்ள சில இணைப்புகளின் தளங்களுக்கு சென்று விடுதலைப்புலிகள் பற்றிய விமர்சனங்களை படித்த போது எனக்கென்னவோ அவர்கள் தங்கள் வசதிக்கேற்றவாறு ஏதோ ஆற்றாமையை தீர்த்துக்கொள்ள எழுதுவது போல் படுகிறது. விடுதலைப்புலிகளின் தலைமையை திட்டி தீர்ப்பது போலுள்ளது. நிறையவே எழுதுங்கள். அது அவரவர் கருத்து சுதந்திரம். ஆயுதப்போராட்டமும் வன்முறையும் புலிகள் விரும்பி ஏற்றுக்கொண்டதல்ல. அது அவர்கள் மீது திணிக்கப்பட்டது என்பதுதான் என் கருத்து.
1958 ம் ஆண்டு, சிங்கள மொழிக்கு அரசமொழி என்ற அங்கீகாரமும் எங்களுக்கு அவசர கால சட்டமும் பரிசாக கிடைத்தது. அவசரக்கால சட்டத்தோடு எப்பொழுதுமே இலவச இணைப்பாக கிடைப்பது இராணுவ அடக்குமுறை. அதுதான் ஈழத்தமிழனுக்கும் கிடைத்தது. அது இன்றைய தேதி வரை அமுலிலுள்ளது, தமிழனுக்கு மட்டும். ராணுவ அடக்குமுறைக்கு எதிராக இனவிடுதலைப்போரை முன்னெடுப்பதானால் ஆயுதம் ஏந்தாமல் சாத்தியமாகுமா? என் சிற்றறிவுக்கு அதற்கான பதில் தெரியவில்லை. ஆனால், புலிகள் ஏந்திய ஆயுதங்கள் கடந்த காலங்களில் எத்தனையோ முறை எங்களை காத்திருக்கிறது, அவசரகால சட்டதின் ராணுவ அடக்குமுறையிலிருந்து. நான் ஈழத்தில் யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்தவள். எனக்கு காவல் துறை, நீதித்துறை என்பதெல்லாம் தமிழ் சினிமாவில் பார்த்தது தான். ஈழத்தில் நான் வாழ்ந்த பூமியில் நான் இதையெல்லாம் பார்த்ததில்லை. எனக்கு தெரிந்ததெல்லாம் புலிகளின் காவல் துறையும் நீதித்துறையும் தான். மற்றப்படி, எஙகள் வாழ்வு ஷெல்/விமானக்குண்டு மழை, பதுங்குகுழி, பிண்டங்களாய் துண்டங்களாய் மனித உடல்கள், மரணம் இவற்றோடுதான்.
இவற்றையெல்லாம் தாண்டி ராணுவ அடக்குமுறைக்கு எதிராக காந்தி வழியில் போராடி இருக்கலாமா? எங்கள் அனுபவத்தில் இல்லை என்றுதான் தோன்றுகிறது. ஆனால், யாராவது பார்வையாளர்கள் அல்லது விமர்சகர்கள் பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.
இதோ, மீண்டும் என் இனம் ஈழத்தில் 1948 இல் இருந்த நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. அவசரகால சட்டமும் ராணுவமும் இல்லை என்றால் காந்தியவழிமுறையை நாடலாமா? அது எங்களுக்குரிய உரிமைகளை மீட்டுத்தருமா? இனிமேல் ஈழத்தமிழன் “ஆயுதம்” என்ற் வார்த்தையை உச்சரித்தாலே அவன் பயங்கரவாதி என்ற சாயம் பூசும் நிலை உருவாகிவிட்டது. பிறகு நாங்கள் மறுபடியும் காந்தி தேசத்தின் காவலர்களால் பயங்கரவாத ஒழிப்பு போர்வையில் சாகடிக்கப்படுவோம் என்ற பயம் தான் பூதமாய் பயமுறுத்துகிறது.
அறுபது வருட உரிமைப்போர் முதல் முப்பது வருடங்களும் நிறையப்பேரால் முன்னெடுக்கபட்டு, பின்னர் புலிகளால் அடுத்த முப்பது வருடங்களுக்கு வழிநடத்தப்பட்டு, இன்று சிங்கள பேரினவாதிகளால் பயங்கரவாதம் ஆக்கப்பட்டுள்ளது. இனி இதை ஒவ்வொரு ஈழத்தமிழனும் தன் கடமையாய் எண்ணி தனியாகவோ அல்லது அணியாகவோ ஒற்றுமையாய் முயன்றால் அன்றி ஈழத்தமிழனுக்கு விடிவும் இல்லை. விடுதலையும் இல்லை. எம் வேற்றுமைகளை களைந்து ஒற்றுமையாய் எங்கள் இனத்தின் விடிவுக்காய் உழைப்போம்.
nalla pathivu
பிரச்சனைக்கு ஒரே தீர்வு , எங்களை பின்பற்றுங்கள்.
முன்பு நாங்கள் வெள்ளையனுக்கு அடிமை. இப்போ ஒரு கொள்ளையனுக்கு(கருணாநிதி) அடிமை , நாளை கொள்ளையன் குடும்பத்திற்கு அடிமை. எங்களை போல் நீங்களும் சிங்களனுக்கு அடிமையாய் வாழ கற்று கொள்ளுங்கள். தெரியவில்லையா , அகதியாய் ஒரு ஆறு மாதம் தமிழகத்திற்கு வந்து விட்டு போங்கள்.
ahhori,
உங்கள் ஆதங்கம் புரிகிறது. செரண்டிப்தீவும் (இலங்கை) ராஜபக்க்ஷே & Co. களாலும் அவர்களின் நண்பர்களாலும் (சரத் பொன்சேகா மற்றும் பலர்) துண்டாடப்பட்டு சீனா, இந்தியா போன்ற நாடுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டுக்கொண்டிடுக்கிறது. இதிலிருந்து ராணுவத்தின் கவனத்தை திசை திருப்ப தமிழ் அப்பாவிப்பெண்கள் பலியாகிறார்கள். சிங்கள பொதுசனத்தை “பிரபாகரன்” என்ற மாயையான ஒரு பொம்மையை காட்டி, அவர்களின் கவனம் திசை திருப்பப்படுகிறது.
இதையெல்லாம் மீறி யாராவது சிங்கள கல்விமான்கள் இவர்களை விமர்சித்தால் அவர்களை “சிங்கள புலி” என்று முத்திரை குத்துகிறார்கள் ராஜபக்க்ஷேக்கள். என்றாவது ஒருநாள் இதையெல்லாம் சிங்கள சமூகம் உணரும்போது இலங்கை இன்னொரு பர்மா ஆகியிருக்குமோ என்னவோ?
தமிழர் இன நலன் என்ற போர்வையில் தமிழகத் தலைவர்களை இழிவு படுத்தும் இடுகைகளால், ஈழத்திற்கு என்ன பயன்.
ஏன் தமிழக அரசியல் கலந்து ஈழப் போருக்கு இழப்பு உண்டாக்குகின்றீர். நீங்கள் ஈழப் போரின் நண்பரா அல்லது பகைவரா? நண்பரெனில் ஏன் தமிழக அரசியலைக் கலந்து ஈழப் போருக்கும் அரசியல் சாயம் பூசுகின்றீர்? மிகத் தவறான அனுகுமுறை.
கவி நீங்கள் ஏதோ சொல்ல வருகிறீர்கள் ஆனால் என்ன என்று புரியவில்லை முடிந்தால் நீங்கள் முரண்படும் பகுதிகளை எழுதுங்களேன்
ம்ம். நல்ல வேடிக்கை தான் நண்பர் அர டிக்கெட்டு.
தமிழகத் தலைவர்களை ஈழப் போர் இடுகையில் அவமதிப்பதின் அவசியம் என்ன?
மன்னிக்கவும்,
இதை விட தெளிவாக எப்படிக் கேட்பது
.
.கவி.
என்னங்க கவி, தமிழகத்தலைவர்களுக்கும் ஈழப் பிரச்சனைக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொல்லுறீங்களா?
கவி, நீங்கள் முந்தைய பதிவுகளை படித்துவிட்டு வருவது நல்லது. தமிழக தலைவர்கள் ஈழத்தமிழ் மக்களுக்கு உதவி செய்கிறேன் பேர்வழி என துரோகம் தான் செய்து இருக்கிறார்கள். அதென்ன ஈழப்போருக்கும் அரசியல் சாயம் பூசுகின்றீர்? இதென்ன இப்படியொரு குழப்பமான சொற்பிரயோகம்? உண்மையில் குழப்பமாக தான் இருக்கிறது நீங்கள் எழுதியதை படிக்கும் பொழுது.
பதவிக்காக அலையும் கேவலத்தைத் தொலைக்காடசியில் பார்க்குந்தோறும்… ‘ச்சே இப்படிக்கூட இருப்பார்களா…?’என்று எரிச்சல் பொங்குகிறது. ஈழத்தமிழன் செத்தால் என்ன… ஈழமே கடலில் மூழ்கிப்போனால்தான் என்ன? பதவி ஐயா பதவி!
எல்லாம் ஆரியத்தால் வந்தது………………..
காம்பிரமைஸ் என்றால் காபினட்டாம்………….. ஆயுதம் துாக்கினால் அனாதைப் பிணமாம்..
கார்டூன் அருமை. வாழ்த்துக்கள்.
//மக்கள் நலனை கொண்டு எதிர் காலத்திலாவது தலைவர்கள் ‘கருத்தடை’ யை கவனத்தில் கொள்ளவேண்டும்.
🙂
🙂
🙂
🙂
🙂
🙂
🙂
🙂
1919-இல் அறிமுகப்படுத்தப்பட்ட ரௌலட் சட்டத்தையும், பிரிட்டிஷ் எதிர்த்து 1920-21இல் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார் காந்தி. சத்யாக்ரக முறையில் நாடு முழுதும் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அச்சமயத்தில் 1922 ஃபெப்ருவரி 4-ஆம் தேதி அன்று உத்தரப் பிரதேசத்தில் சௌரி சௌரா என்ற ஊரில் ஒரு மதுபானக் கடையின் எதிரில் 2000 பேர் கொண்ட போராட்டக்காரர்கள் திரள்கிறார்கள். கடையை மூடச் சொல்லி கோஷமிடுகிறார்கள். போலீஸ் வருகிறது. மக்களைக் கலைந்து போகச் சொல்லி வானை நோக்கிச் சுடுகிறது போலீஸ். ஆனால் மக்கள் கலைந்து செல்வதற்குப் பதிலாக போலீஸை நோக்கிக் கற்களை வீசி எறிகிறார்கள். இனியும் பொறுத்தால் ஆபத்து என்பதை உணரும் இன்ஸ்பெக்டர் மக்களை நோக்கி சுடச் சொல்லி உத்தரவிடுகிறார். துப்பாக்கிச் சூட்டில் மூன்று போராட்டக்காரர்கள் சாகிறார்கள். பலர் காயமடைகிறார்கள். உடனே போராட்டக்காரர்கள் மேலும் கொந்தளிப்பாகி போலீஸை நோக்கிக் கற்களை வீசுகிறார்கள்.
ஆயிரக் கணக்கான மக்கள் கூட்டம் தங்களை நோக்கி முன்னேறுவதைக் கண்ட போலீஸ்காரர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்குள் சென்று ஒளிந்து கொள்ள, போராட்டக்காரர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்குத் தீ வைக்கிறார்கள்.
துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்ட இன்ஸ்பெக்டர் உட்பட 22 போலீஸ்காரர்கள் உயிரோடு எரிக்கப்படுகிறார்கள்.
அடுத்த நாளே காந்தி ஒத்துழையாமை இயக்கதைக் கை விடுகிறார். 22 போலீஸ்காரர்கள் இறந்ததற்குத் தானே பொறுப்பு என்று பிரகடனப் படுத்துகிறார். போராட்டக்காரர்களை சரியான முறையில் போராட்டத்துக்குத் தயார் செய்யாமல் மிக அவசரகதியில் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்து விட்டதாகக் கூறி உண்ணாவிரதத்தைத் தொடங்குகிறார். இப்போதைய தலைவர்களைப் போல் காலை ஏழு மணியிலிருந்து முற்பகல் பதினோரு மணி வரை நான்கு மணி நேரம் உண்ணாவிரதம் இருக்கும் தலைவர்களைக் கொண்ட கால கட்டம் இது. ஆனால் காந்தி ஐந்து தினங்கள் உண்ணாவிரதம் இருந்தார்.
அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பிரிட்டிஷார் 172 போராட்டக்காரர்களைக் கைது செய்தது. அடுத்த ஆண்டே இலஹாபாத் நீதி மன்றம் 19 பேருக்கு தூக்குத் தண்டனை அளித்தது. 113 பேருக்கு ஆயுள் தண்டனையிலிருந்து 2 ஆண்டு தண்டனை வரை விதிக்கப்பட்டது.
இப்போது பல தமிழ்நாட்டுத் தலைவர்கள் பகத் சிங் மற்றும் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரின் வழிதான் சரியானது என்று பேசி மக்களை வன்முறையின் பக்கம் திருப்பி விட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் 1922 ஃபெப்ருவரி 4ஆம் தேதி அன்று நடந்த சம்பவத்தால் உணர்ச்சி வசப்பட்டு காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை இன்னும் தொடர்ந்திருந்தால் அவருடைய போராட்டம் அஹிம்சை வழியிலிருந்து பிறழ்ந்து ஆயுதப் போராட்டமாக மாறியிருக்கும். பிரிட்டிஷ்காரர்களும் ராணுவத்தை முழு அளவில் இறக்கி மக்களைக் கொன்று குவித்திருப்பார்கள். இந்தியாவில் ரத்த ஆறு ஓடியிருக்கும். போராடுபவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்கள் அல்ல; பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தியிருக்கும் உலக நாடுகள்.
ஆயிரக் கணக்கில் மக்களைப் பலி கொடுத்து அவர்களின் பிரேதக் குவியலின் மீது ஒரு தேசத்தின் சுயராஜ்யத்தை நிறுவுவதா என்று கேட்டார். காந்தி செய்தது கோழைத்தனம் அல்ல. அதுதான் வீரம். துப்பாக்கியை எடுத்துச் சுடுவதல்ல வீரம். துப்பாக்கியை எடுக்க வேண்டிய உணர்ச்சிகரமான சூழலில் சாத்வீகத்தைக் கடைப்பிடிக்கும் மன உறுதி கொண்டிருப்பதே வீரம். எதிரியிடம் தவறு கண்டு பிடிப்பதல்ல வீரம். தன்னை சுய பரிசோதனை செய்து கொள்வதே வீரம். எதிரியைத் தண்டிப்பதல்ல வீரம். அதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் தன் தவறை உணர்ந்து தன்னைத் தண்டித்துக் கொள்ளும் மன உறுதி கொண்டவனே வீரன்.
காந்தி அஹிம்சையைத்தான் போதித்தார். ஆனால் அவர் கோழை அல்ல; மிகக் கடுமையான நெஞ்சுரம் மிக்கவர். துப்பாக்கி நெற்றிப் பொட்டில் வைக்கப்பட்ட போதும் கண்களை இமைக்காத துணிவு கொண்டவர் காந்தி. அவர் மக்களை நேசித்தார். ஒரு சுதந்திரமான தேசத்துக்காக பல்லாயிரக் கணக்கான மக்களை அவர் பலி கொடுக்க விரும்பவில்லை. அதே காரணத்தினால்தான் பாகிஸ்தான் என்ற பகுதி இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட வேண்டும் என்ற நிலை வந்தபோது அதற்கு ஒப்புக் கொண்டார். இன்றைய தினம் காந்தி உயிரோடு இருந்திருந்தால் காஷ்மீரும் பிரிந்து செல்வதை அனுமதித்திருப்பார். ” தினம் தினம் ராணுவத்தினராலும், போராளிகளாலும் இந்தப் பகுதியில் மக்கள் செத்து மடிந்து கொண்டிருக்கும் நிலையில் எதற்காக காஷ்மீர் என்ற இந்த நிலத்தை நாம் வைத்துக் கொண்டிருக்க வேண்டும்? ” என்பதே அவருடைய கேள்வியாக இருக்கும்.
ஒட்டு மொத்த மக்களையும் பலி கொடுத்து விட்டு எதற்காகத் தனிநாடு? நாட்டுக்காக மக்களா, மக்களுக்காக நாடா? இதுதான் காந்தி அடிக்கடி கேட்ட கேள்வி.
இப்போது சுபாஷ் சந்திர போஸை கொண்டாடும் தமிழகத் தலைவர்களிடம் நான் கேட்க விரும்பும் கேள்வி இதுதான் : அவர் சாதித்தது என்ன? ஒரு அந்நிய தேசத்தில் இந்திய தேசிய ராணுவத்தை அமைத்தார். ஹிட்லரோடும் முஸோலினியோடும் கூட்டு சேர்ந்தார். பல லட்சம் பேரைக் கொன்று குவித்த ஒரு ஃபாஸிஸ்டோடு கூட்டு சேர்ந்து அடையப் போகும் சுதந்திரத்தின் மூலம் எம்மாதிரியான மக்களை உருவாக்க முடியும்? அப்படி உருவாக்கப்பட்ட தேசம் எப்படி இருக்கும்? வன்முறையின் அஸ்திவாரத்தில் அமைக்கப்பட்ட இஸ்ரேல் இன்றும் பாலஸ்தீனியர்களின் ரத்தக்கறை படிந்த தேசமாகத்தானே கருதப் படுகிறது?
ஆயுதப் போராட்டத்தின் மூலம் எந்த நாடு சுதந்திரம் அடைந்திருக்கிறது? ரஷ்யப் புரட்சியிலிருந்தே ஆரம்பிக்கலாம். அப்போதைய ரஷ்யா ஜாரின் குடும்பத்தினரிடமும், சில அதிகாரிகளிடமும், தேவ சபையிடமும்தான் இருந்தது. அந்த தேசத்தின் நிலம் முழுவதும் இந்த மூன்று பிரிவினரின் ஆதிக்கத்தில் இருந்தது. மக்கள் அடிமைகளாய் வேலை செய்து பட்டினியால் செத்துக் கொண்டிருந்தார்கள். எல்லாவற்றையும் கோர்க்கியின் தாய் நாவலில் படித்திருக்கிறோம். இப்படி, இழப்பதற்குத் தங்கள் உயிரைத் தவிர வேறு எதுவுமே இல்லாதவர்கள்தான் ஆயுதப் போராட்டத்தைக் கையில் எடுக்க முடியும். வாழ்வதற்கான நம்பிக்கையையே முற்றாக இழந்து போகும் நிலையில்தான் அது சாத்தியம். ஆனால், இப்போதய உலகம் அப்படியா இருக்கிறது?
ஆயுதப் புரட்சியின் மூலம் கூபா சுதந்திரம் அடைந்திருக்கலாம். ஆனால் அதில் ஒரு பிரச்சினை இருக்கிறது. கூபப் பிரஜைகளை சுதந்திரமாக விட்டால் 90 சதவிகிதம் பேர் நாட்டை விட்டுச் சென்று விடுவார்கள்.
தகவல் தொழில்நுட்பம் நம்ப முடியாத அளவுக்கு வளர்ந்து விட்ட இன்றைய கால கட்டத்தில் கெரில்லா யுத்த முறைக்கு சாத்தியமே இல்லை. மேலும், மக்களுக்கு ஆயுதத்தை எடுப்பதில் விருப்பம் இல்லை. நேதாஜி, பகத் சிங் என்று சொல்லிக் கொண்டு ஒன்றிரண்டு பேர் இருக்கலாம். ஆனால் அவர்கள் ஒட்டு மொத்த மனித சமூகத்தின் பிரதிநிதிகள் அல்ல.
சதாம் உசேன் அமெரிக்காவை எதிர்த்தார். கடாஃபியும் எதிர்த்தார். ஆனால் சதாம் அமெரிக்காவை விளிம்புக்குத் தள்ளினார். அதையேதான் தாலிபான்களும் செய்தனர். இப்போது ஈராக், ஆஃப்கன் என்ற இரண்டு தேசங்களுமே காணாமல் போய் விட்டன. இதுவா சுதந்திரம்? இதுவா தனிநாடு?
சதாம் ஒரு நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவர். அந்த தேசத்தின் வலிமையான ராணுவமே அவர் கையில் இருந்தது. மக்கள் அவர் பக்கம். விதவிதமான ஆயுதங்கள். இவ்வளவு இருந்தும் அமெரிக்காவை எதிர்க்க முடியவில்லை. ஒரு மண்குழிக்குள் பதுங்கி வாழ்ந்து, அமெரிக்க சிப்பாய்களிடம் சிக்கி, மரண தண்டனை விதிக்கப்பட்டு செத்தார். சதாம் உசேனுக்கே அந்த நிலை என்றால் ஒரு மிகச் சிறிய கெரில்லா இயக்கம் எப்படி ஸ்ரீலங்கா, இந்தியா, சீனா முதலிய பல நாடுகளின் ராணுவத்தைச் சமாளிக்க முடியும்? இப்படிப்பட்ட சூழலில் ஆயுதத்தைக் கையில் எடுப்பது தற்கொலைக்குச் சமம் அல்லவா?
கடந்த முப்பது ஆண்டுகளாக அப்படிப்பட்ட தற்கொலைகளும் கொலைகளும்தான் நடந்து கொண்டிருந்தன. மூத்த தலைவர் அமிர்தலிங்கத்திலிருந்து ஆரம்பித்து அத்தனை சக போராட்டக் குழுவினரும் புலிகளால் அழிக்கப்பட்டனர். சிறுவர்களெல்லாம் ஆயுதப் போராட்டத்தில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டனர். இயக்கத்தை விமர்சிப்பவர்கள் அழித்தொழிக்கப்பட்டனர். இலங்கை ராணுவத்தில் இருந்தது போலவே சித்ரவதைக் கொட்டடிகள் அமைக்கப்பட்டு இயக்கத்தை எதிர்த்தவர்களும், எதிர்த்ததாக சந்தேக நிழல் படிந்தவர்களும் சித்ரவதை செய்யப்பட்டனர். ஒருசில முஸ்லீம்கள் அரசுக்கு உளவு சொல்லி விட்டார்கள் என்ற காரணத்தால் ஒரு லட்சம் முஸ்லீம்கள் யாழ்ப்பாணத்திலிருந்து ஒரே நாளில் அவர்களுடைய வாழ்விடங்களை விட்டு வேறோர் இடத்துக்குத் துரத்தியடிக்கப் பட்டனர். இப்படி ஒரு பட்டியலிட்டால் அது பக்கம் பக்கமாக நீளும். இதன் காரணமாக, உலகம் முழுவதும் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் ஸ்ரீலங்காவின் நிலப்பரப்பில் நான்கில் ஒரு பங்கைத் தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருந்த புலிகள் இப்போது முழுமையாக அழிக்கப்பட்டதற்குக் காரணங்கள் என்ன?
புலித் தலைவர் அங்குள்ள யதார்த்தத்தையும், மாறிவிட்ட அரசியல் சூழலையும் புரிந்து கொள்ளவில்லை. ஆறு மாதத்திற்கு முன்பு கூட புலிகளைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்தது இலங்கை அரசு. புலிகள் அதை சட்டை செய்யவில்லை.
அதன் விளைவாக இன்று புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த அத்தனை பேரும் கொல்லப்பட்டு விட்டார்கள். (பிரபாகரன் மட்டும் தப்பி விட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது. போர்க்களத்தில் நின்று போரிட்டுக் கொண்டிருக்கும் ஒரு கெரில்லா போராளி இவ்வளவு சீராக முகச் சவரம் செய்து கொண்டிருப்பாரா என்ன? மேலும், இலங்கை ராணுவத்தின் செய்தியில் ஏகப்பட்ட குளறுபடிகள் உள்ளன. பிரபாகரன் கொல்லப்பட்டதாக வந்த அறிவிப்புக்குப் பிறகு அவருடைய உடலைக் காட்ட ராணுவம் ஒரு முழுநாளை எடுத்துக் கொண்டது. இதுபோல் இன்னும் பல சந்தேகங்கள் உள்ளன. முக்கியமாக, அவரது கழுத்து அருகில் ஒரு வெட்டுத் தழும்பு இருக்கும். ராணுவத்தின் படத்தில் அது இல்லை. இலங்கையில் டி.என்.ஏ. ஆய்வு நிலையம் எதுவும் இல்லை; மேலும், டி.என்.ஏ. சோதனை முடிவு தெரிய குறைந்த பட்சம் மூன்று தினங்கள் ஆகும். ஆனால் இலங்கை அரசு ஒரே நாளில் டி.என்.ஏ. சோதனை செய்து ‘இந்த உடல் பிரபாகரனுடையதுதான் ’ என்று தெரிவித்திருக்கிறது. இதிலிருந்து, ராணுவம் காட்டும் உடல் ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது என்றே முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது).
இலங்கை அரசு புலிகளை ஆறு மாதத்திற்கு முன்பு கூடப் பேச்சு வார்த்தைக்கு அழைத்தும் புலிகள் அதை நிராகரித்ததால் ஏற்பட்டிருக்கும் பேரழிவுகள் கொஞ்ச நஞ்சமல்ல. புலிகளின் ஆதரவு இணைய தளமான ’ புதின ’ த்தில் மே 19 அன்று அதன் செய்தியாளர் செய்மதி தொலைபேசியில் கூறிய செய்தி கீழே வருவது:
” புலிகளிடமிருந்து எதிர்த் தாக்குதல் இல்லாத நிலையிலும் இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தியதால் கடந்த நான்கு நாட்களில் மட்டும் 4000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். திரும்பிய பக்கமெல்லாம் பிணக்குவியல்களே உள்ளன. இறந்தவர்களின் உடல்கள் அகற்றப்படாததால் அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. படு மோசமான காயங்களுக்கு உள்ளாகி, சிகிச்சையளிக்க எந்த வழியுமற்ற நிலையில் கதறும் பொதுமக்கள், அங்கே இருக்கும் போராளிகளிடம் தங்களைச் சுட்டுக் கொன்று விடுமாறு மன்றாடுகின்றனர்.
அதேபோல், காயமடைந்து சிகிச்சைக்கு வழியில்லாமல் இருக்கும் போராளிகள் தங்களுக்கு சயனைடு கொடுக்குமாறு கதறுகின்றனர்.
பதுங்கு குழிகளுக்குள் இருக்கும் போதே கொல்லப்பட்ட மக்களின் சடலங்களுக்கு மேலேயே, உயிரோடு இருப்பவர்கள் பாதுகாப்புக்காகப் பதுங்க வேண்டிய அவலம் நிலவுகிறது. ”
இந்த அவலத்திற்குக் காரணம் ராஜபக்சே மட்டும்தான் என்று கூறினால் அது நியாயமாக இருக்காது. புலிகள் தேர்ந்தெடுத்த வழிமுறையும் இதற்குக் காரணம். குறைந்த பட்சம் ஆறு மாதத்திற்கு முன்னால் பேச்சு வார்த்தையை நிராகரிக்காமல் இருந்திருந்தால் இன்று ஈழம் ஒரு சுயாட்சி கொண்ட மாகாணமாகவாவது உருவாகியிருக்கும்.
ராஜபக்சே ஒரு இனவாதி என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அவர் ஒரு நவீன ஹிட்லர். ஆனால் இப்போதைய நிலையில் தமிழர்களுக்கு மறு வாழ்வும், சம உரிமையும் அளிக்க இந்தியா போன்ற நாடுகள் அவரை நிர்ப்பந்திக்க வேண்டும். ஏனென்றால், இந்தியாவின் ராணுவ உதவி இல்லாவிடில் அவர்கள் புலிகளை அழித்திருக்க முடியாது.
ஸ்ரீலங்காவின் வட பகுதியான யாழ்ப்பாணம் போரின் காரணமாக பல ஆண்டுகளாகவே மின்சாரம், பெட்ரோல், மருத்துவ வசதி, பாடசாலைகள் என்று எந்த வசதியும் இல்லாமல் மனிதர்கள் வாழவே லாயக்கற்ற பகுதியாக இருந்து வந்திருக்கிறது. இப்போது நடந்த தீவிரமான போரினால் அந்தப் பகுதி முற்றிலுமாக அழிந்து ஆஃப்கனிஸ்தானைப் போல் காட்சியளிக்கிறது. இங்கே தமிழர்கள் மீண்டும் 30 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தது போல் அமைதியாக வாழ ராஜபக்சே வழி வகுத்துக் கொடுக்க வேண்டும். இதற்கும் அவரை உலக நாடுகள் நிர்ப்பந்திக்க வேண்டும்.
போராளிகளும் இனிமேல் ஆயுதங்களைப் போட்டு விட்டு, சாத்வீகமான முறையில் சம உரிமைக்காகப் பாடுபட வேண்டும். நிச்சயமாக அது கோழைத்தனம் அல்ல. வரலாற்றில் சற்று பின்னே செல்வோம். இடம் லாகூர். அக்டோபர் 30, 1928. சைமன் கமிஷனை எதிர்த்து லாலா லஜபதி ராய் ஊர்வலம் சென்று கொண்டிருக்கிறார். அவர் உடன் செல்வது பண்டிட் மதன் மோகன் மாளவியா. போலீஸின் லத்தி லஜபதி ராயின் மார்பில் பாய்கிறது. அன்றைய தினம் மாலை நடந்த பொதுக்கூட்டத்தில் லாலா லஜபதி ராய் பேசினார்: “என் உடம்பில் படும் ஒவ்வொரு லத்தி அடியும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சவப்பெட்டியின் மீது அடிக்கப்படும் ஆணி. ” அன்றைய தினம் வாங்கிய அடியினால்தான் பின்னர் நவம்பர் 17, 1928 அன்று லாலா லஜபதி ராய் இறந்தார்.
இந்த நெஞ்சுரமும் துணிவும்தான் அகிம்சை வழியிலான சத்தியாக்ரகப் போராட்டத்தின் ஆணிவேர்.
1918 & 1920 is not the same situation now we are about 100 years advanced in all fields….SLA is not the only when who can claim war victory for this war…imfact they would have lost in this war if SLA vs LTTE alone……but in reality
SLA +China +India(USA) + almost all asian country = LTTE alone imagine who can win in the war……………USA(NGO=France +italy+ germany+ UK almost all european coutry = Iraq , you have USA won in this war…………now its too late to think of ahimsa or non-violence way to fight against SLA or to have right for tamil people….some time i wonder now there are several people who are comparing LTTE with other organisation with the past history proposing their ideas views and comments against LTTE but what would have happen if LTTE would won this war with whom you compare this………i am confused
ரொம்பவும் சரி!
ஹிஹி பிரபாகரன் தானா..? அப்ப உங்க அதி புனித தூய உத்தம உன்னத மாசற்ற உளவு அமைப்புக்கு பங்கே இல்லையா? ராவின் கைங்கரியங்கள்ன்னு தனிப் புத்தகம் போடலாம். அந்த இயக்கங்கள எல்லாம் ஒரு காலத்துல கூட்டா ஒண்ணாத் தானே இயங்கிட்டு இருந்தாங்க. அவங்களுக்குள்ள பூசல் மூட்டி, வெட்டிக்க வெச்சு, பிரிச்சு வச்சது யாருங்கோ? புலிகள் நடவடிக்கை எடுத்திருக்கலன்னா இல்லன்னா வேற ஒரு இயக்கம் புலிகளப் போட்டுத் தள்ளியிருப்பாங்க. இன்னேரம் புலிகள போட்டுத் தள்ளிட்டாங்கன்னு இன்னொரு இயக்கத்த திட்டிட்டு இருப்போம். இதுக்கெல்லாம் காரணகர்த்தாவான ராவை, அதை ஆட்டிவைக்கும் பார்ப்பன வர்க்கத்தை உட்டுடுவோம்! எல்லாமே பிரபாரகன் குத்தம் தானுங்க. எங்க வீட்டுக்கு எதிர மழைத்தண்ணி தேங்கி சாக்கடை ஆயிடிச்சி அதுவும் அவர் குத்தம் தானுங்கோ
some one told like, and i also think the same …….
ஐயா, இது 2009. காந்தி இப்போ இருந்தா துப்பாக்கிதான் தூக்கியிருப்பார். ஆனால் நீங்க சொல்றதும் சரிதான். ஒரு மனுசனுக்கு சோறும் துணியும் கெடைச்சாப் போதாதுங்களா? மானம்,தன்மானம் இதெல்லாம் எதுக்கு? சிங்களவன் மட்டும் துப்பாக்கி வச்சிருப்பான். துப்பாக்கி வச்சிருக்கறவன் சும்மாவா இருப்பான்? தமிழ் பெண்களைக் கண்டால் கற்பழிக்கவும் தோனும். அவன் கிட்ட போயி “வேண்டாம் ராஜா! இது தப்பும்மா…வீட்டுக்குப் போ… அங்க உன் பொண்டாட்டி காத்திருப்பாள்” னு சொல்லணும்னு சொல்றீங்களா சார்! எல்லாவிதமான சுதந்திரமும் உரிமைகளும் பறிக்கப்பட்டு, மானமும் போய், ஏழ்மையுடன் கூடிய ஓர் அடிமை வாழ்வு இனிக்குமா சார்? அப்படிப்பட்ட ஓர் வாழ்க்கை …………… க்கு சமம். அதனாலதான் அத்தனை போராளிகளும் சயனைடு குப்பியுடன் சமராடி சாவை எதிர்கொள்கிறார்கள்…மற்றபடி உங்கள் அகிம்சா வழியை நான் குறைகூற வரவில்லை. ஈழத்தமிழரின் வலியை நாம் பட்டாலன்றி உணரமுடியாது. அது போலவேதான் அவர்களது ஆயுதப் போராட்டமும்.
Ravi,
/ஈழத்தமிழரின் வலியை நாம் பட்டாலன்றி உணரமுடியாது. அது போலவேதான் அவர்களது ஆயுதப் போராட்டமும்.//
மிகவும் நன்றி.
நண்பர்களே,
சாரு நிவேதிதா எழுதுவதையெல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அவரது தளத்தை படிப்பவர்களில் கணிசமானோர் ஈழத்தமிழர்கள் என்பதால் எதாவது எழுத வேண்டுமென்ற கடமைக்கு எழுதியிருக்கிறார். மற்றபடி அவருக்கு காந்தியும் தெரியாது, ஆயுதப் போராட்டமும் தெரியாது. இன்றைக்கு ஈழத்தை பிணச்சுடுகாடாக்கியிருக்கும் சிங்கள இனவெறி ஆயுதத்தின் வலிமை கொண்டுதான் வெறியாட்டம் ஆடியிருக்கிறது. புலிகளின் அரசியல் பிரிவு தலைவரை வெள்ளைக்கொடி பிடித்து சரண்டையுமாறு சொல்லிவிட்டு பின்னர் சுட்டுக் கொன்றிருக்கிறது. இத்தகைய இனவெறிக்கு காந்தியெம்ல்லாம் வெறும் பிஸ்கோத்து. அடுத்து காந்தியைப் பற்றி இருக்கும் மூடநம்பிக்கைகள் பல. அதிலொன்று இந்த அஹிம்சை. காந்தியின் போராட்டம் இந்திய மக்களின் போர்க்குணத்தை கருவறுக்குமென்பதால் வெள்ளையர்கள் திட்டமிட்டு காந்தியத்தை அனுமதித்தார்கள். இந்த அரிச்சுவடி கூட தெரியாமல் சாரு காந்தியைப் பற்றி புளகாங்கிதமடைகிறார். புலிகளை தோற்றதும் இதுவரை அரசியல் என்றால் வேப்பங்காயாக கருதிக்கொண்ட கண்ட கண்ட ஜந்துகளெல்லாம் இப்போது ஈழத்தமிழர்களுக்கு அரசியல் வகுப்பு எடுக்கும் கொடுமை சிங்கள இனவெறியை விட அபாயகரமானது.
நட்புடன்
வினவு
தோழர் வினவு சொல்வது சரிதான்,
ஒரு சந்தேகம் என்ன சொல்லவரார் சாரு எல்லாத்துக்கும் காந்திதான் தீர்வுங்குறாரா?
எப்படியோ சாரு வந்துட்டார் அவரோட பெஸ்ட் பிரண்டு வருவாரா.பேர்தான் தொண்டயில சிக்கிகிட்டு வரமாட்டேங்குதே,
அதான் அவங்க நட்பு பெருமய பத்தி கூட வினவுல கட்டுரையா எழுதியிருந்தாங்களே.
பேர்தான் மறந்து போச்சு
இனிமே திருவாளர் சாரூஊஊஊஊஉ அவர்கள் சட்டய கழட்டி வேட்ட்டிய மட்டும் கட்டிகிட்டு ஈழத்துல போயி காந்தியாகப்போறார்
//புலிகளை தோற்றதும் இதுவரை அரசியல் என்றால் வேப்பங்காயாக கருதிக்கொண்ட கண்ட கண்ட ஜந்துகளெல்லாம் இப்போது ஈழத்தமிழர்களுக்கு அரசியல் வகுப்பு எடுக்கும் கொடுமை சிங்கள இனவெறியை விட அபாயகரமானது.//
மிக மிக சரியாக சொன்னீர்கள். சில நாட்களாக ‘அலசுகிறேன் பேர்வழி’ ஆளாளுக்கு அள்ளி விடுராயிங்க. தாங்க முடியல …!
http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/0905/25/1090525096_1.htm
ஈழத்தமிழர்களுக்கு நடக்கும் கொடுமைகளை பார்ர்த்து என்னைப் போன்ற சாதாரண தமிழனுக்கு மனம் வலிக்கிறது. இருந்தாலும் என்ன செய்ய முடியும் மிஞ்சி மிஞ்சி போனால் இணையத்தில் என் உள்ளக் குமுறல்களை பதிவு செய்யலாம். இதனால் என்ன பலன் ஏற்பட போகிறது என்று எனக்கு தெரியவில்லை, முத்துக்குமார் போன்ற உண்மைத்தமிழன் தீக்குளித்ததையே கேவலமாக பேசும் பதடி தமிழன் இல்லை இல்லை பதடிகள் இருக்கும் தமிழ்நாட்டில் என்று தமிழ் உணர்வு பெரும்பாலான மக்களுக்கு ஏற்பட்டு அதன் முலம் தமிழகத்திற்கும் ஈழாத்தமிழ்ற்கும் விடிவு காலம் ஏற்படுமோ.
அன்புள்ள சாரு… உன்னை சாறுபிழிந்த நிலையில்தான் உலகம் கண்டதா.. பகத்சிங் என்பது ஆயுதம் மாத்திரமே என நினைக்கும் உனது அறிவு என்னை மலைக்க வைக்கின்றது.. வன்முறையா அல்லது அகிம்சாயா என்பது முக்கியமானதா அல்லது அந்தப் பாதையை தேர்வு செய்யவைத்த சித்தாந்த்த்தின் போதமை அல்லது போதாமை முக்கியமா… இலட்சியம் வழிமுறையை தீர்மானிக்கும்.. வழிமுறையோ இலட்சியத்தை நியாயப்படுத்தும்.. இந்த எளிய உண்மை உங்களைப் போன்ற அறிவாளிகளுக்கு புரிய மறுக்கிறது..
காந்தி க்கு மாத்திரமல்ல அவரை ஆதரித்த பிர்லாவுக்கும் தேவைப் பட்டது அமைதி அதன் மொழியில் சொல்வதென்றால் தொழில் அமைதி.. அதற்கு ஆயுதம் உதவியிருக்கும் என்றால் காந்தி ஆயுத்த்தைத்தான் எடுத்திருப்பார்… ஆனால் கோபத்தில் கொந்தளித்த இந்தியாவை வீரம் என்பது அடங்கிப்போவது என்ற பௌத்த வீரத்தை காப்பி அடித்த்துதான் காந்தியின் அகிம்சை…
இன்றைக்கு காசுமீரை தனியே பிரிய அனுமதித்து இருப்பார் காந்தி எனச் சோன்னீர்கள்.. என்ன செய்ய சிரிக்கத்தான் முடிகிறது… உலகத்தில் தன்னுடைய சொந்த மக்களைப் பார்த்தால் தீட்டு தொட்டால் தீட்டு என ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஒதுக்கி வைத்த ஒரு மத்த்தின் சார்பாக அதனைப் பிரிந்து தனியாக இட ஒதுக்கீடு பெறக் கூடாது என்பதற்காக தலித் களை மீண்டும் நுகத்தடியில் பூட்டிய காந்தியின் பூனா ஒப்பந்தம் என்ற துரோகத்தை எப்படி மறக்க முடிகிறது உங்களால்… கேவலம் தனக்கு சேவை செய்ய இனி தலித் கள் கிடைக்க மாட்டார்கள் என்பதற்காக அவர்களை இந்துமத்த்தின் கேவலத்திலிருந்து விடுவிக்க மறுத்த காந்தி காசுமீரை விடுவாரா என்ன•..
பகத் பற்றிய உங்களது புரிதல் மிகவும் தாழ்ந்த தரத்தில் உள்ளது… அல்லது காந்தயின் பார்வையில் உள்ளது.. குண்டு போட்டு பாராளுமன்றம் இனி வேலைக்கு ஆகாது என பகத் சொல்லி 80 ஆண்டுகள் ஆகப் போகிறது அதனை நாம் புரிந்திருந்தால் அல்லது அறிவாளிகளான நீங்கள் மக்களுக்கு புரிய வைத்திருந்தால் வாக்குப்பதிவு எப்படி அதிகரித்திருக்கும்…
வாழ நம்பிக்கை இருந்தால் ஆயுதம் தேவையில்லை என்பதும் ஒரு சந்தர்ப்பவாதம்தானே.. அப்படி ஒரு சூழலை கொள்ளையடித்தவனே ஒரு ரூபாய் மிச்சம் வைத்து விட்டுப் போனால் அவனை தண்டிக்க கூடாது என்பது போலத்தானே இதுவும். அப்படிப்பட்ட சமரச வேலைகளை செய்வதற்கு உங்களைப் போன்ற அறிவாளி என்ஜிஓ க்கள் உலகம் முழுவதும்தானே உள்ளீர்கள்.. இது போக சுய உதவிக்குழுக்கள் என்ன•. உணவுக்கு வேலைத்திட்டம் என்ன•.. தன்னை சுற்றி நிகழ்வதை அறியாத வண்ணம் அவனுக்கு தெரிந்து கொள்ள வாய்ப்பளிக்காத மேட்டிமைத்தனம்தானே நிவலவுகிறது.
Good one thanks Mani…. i thought to write something very similar to this for Mr.Charu ……people should know that india got freedom not just because of this ahimsa or non-violence , they should read european history what happend at the time and during second world war, British lost in second world war and they could not control all the colonised countries that was the main reason and they decided to give freedom for all colonised coutries including INDIA ….so this is not because of so called Ghandhis ahimsa………………you know what ? here in france i have seen the school history books they are teaching how india got freedom from British,…….so they say the above reason………so please writers read all the history carefully and think in all possible direction , instead of commenting LTTE from one side……….anybody who is about to start a organisation would commit mistakes that could be very dangerous also………for DMK 30 years back there was no leader , Anna left the leader chair for Periyar for some political reason , you see now as this Great Grandpa came into power he did allkinds of nasty things for his development and his family and co(his sons, daughter and i dont know howmany legal and illlegal wife he had ? ) he became leader for DMK like a king and his sons will ultimately next ……….compare him with LTTE leader …….he developed his own son to be a commander and to fight againt SLA until death………and our respectable kalainger going to delhi for his sons Minister post ……….so think before giving your comments to blame oneside on LTTE….
கியூபா ஏன் தாராளமயம் என்ற அம்மணத்தில் சேரவில்லை என உங்களது வருத்தம், காந்தி தலித் மக்களை இந்துக்கள் என மோசடி செய்யத் தடையாக அம்பேத்கார் இருந்த்தற்காக நொந்த்து போல•..
ஐடி துறையெல்லாம் வளர்வதற்கும் கொரில்லா போர் முறைக்கும் என்ன தொடர்பு என புரியவில்லை… பழைய கொரில்லாக்கள் தங்களது பாணிகளை தொடர் பரிசோதனை மற்றும் கண்டறிதல் மூலமாகத்தான் பெற்றனர்… அந்த அறிவு உள்ளவர்கள் விஞ்ஞானம் வளர்வதை கணக்கில் கொள்ளாமல் இரண்டாயிரம் ஆண்டுகளாக என்ன சொல்லுகிறோம் இறைவனிடம் எனத் தெரியாமலே சொல்லும் மணியாட்டும் கூட்டமல்ல•.
சின்ன நாடு வெல்ல முடியாது என்பது அறிவியல் பூர்வமான தர்க்கமல்ல•.. சதாம் ஏன் தோற்றார் என்பதை விடவும் நல்ல அம்சங்கள் இலங்கைப் போராளிகளிடம் உண்டு… ஆனால் அரசியல் சித்தாந்தப் பார்வை தெளிவாக இல்லாத்தால் சுத்த ராணுவ வாத்த்தை நம்பிய ஹீரோயிசமுமே அவர்கள் தோற்றதற்கான காரணம்.. மக்கள் பங்கேற்பாளர்களாக இல்லாமல் பார்வையாளர்களாகவே இருந்த்தும் முக்கிய காரணம்.. மாறாக ஆயுதம் தூக்கியதால் அழிந்தார்கள் என்பது ரவுடிகளுக்கு வேண்டுமானால் பொருந்தலாம்… விடுதலை இயக்கங்களுக்கு அல்ல•..
மற்றபடி பிற குழுக்களை கொன்றது இவற்றை வெறும் ஜனநாயக மறுப்பு என்று பார்க்கும் முன்னர் அவர்கள் செய்த துரோகத்தால் விளைந்த இன்னல்களை கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும். முசுலீம் மக்கள் விசயத்தில் புலிகள் தவறு இழைத்தது ஏனெனில் சித்தாந்த அரசியல் என தெளிவாக ஒரு பார்வை அவர்களிடம் இல்லாததுதான்…
ஈழம் சுயாட்சி உடைய மாகாணமாகி இருந்தால் கணவனாகிய மக்கள் ஆதரவுடன் தாயாகிய ஈழத்தை பிள்ளைகளாகிய போராளிகள் பெண்டாள கூட்டிக் கொடுத்து போலத்தான்… ஆனால் இப்போது அதனை எதிர்த்து தந்தையும் பிள்ளையும் அழிந்திருக்கிறார்கள்.. தாய் வல்லுறவுக்குள்ளாக்கப் பட்டிருக்கிறாள்… இதற்காக பெண்டாண்டவர்களும் அதற்கு ஆயுதம் கொடுத்தவர்களும்தான் வெட்கப்பட வேண்டும்… மாறாக அவளது பிள்ளை தறுதலையாகவே இருந்தாலும் அந்த நுண் அரசியலை பேசுவது அசட்டுத்தனம்தான்…
லாலா லஜபதிராய் சொன்ன சொல்லை காப்பற்றத்தான் பகத் சாண்டர்சைக் கொன்றான்…