privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திபி.எஸ்.எல்.வி ராக்கெட்: அறிவியலுக்கு கோயிந்தா, கோயிந்தா !!

பி.எஸ்.எல்.வி ராக்கெட்: அறிவியலுக்கு கோயிந்தா, கோயிந்தா !!

-

மூன்று மாதங்களுக்கு முன்னர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ விட்ட ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் தோல்வி அடைந்ததை அறிந்திருப்பீர்கள். இதனால் அந்நிறுவனத்தின் அறிவியலாளர்கள் சோர்ந்து போயிருக்க கூடும் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த தோல்வி ஏன் என்று அறிவியல் பூர்வமாக ஆய்ந்து அதை சரி செய்வதுதானே நியாயமானது? இது இந்தியாவிற்கு மட்டுமல்ல எந்த நாட்டு ராக்கெட்டிற்கும் பொருந்தும்.

நேற்று 12.7.2010 ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி சி-15 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது. அதிலுள்ள செயற்கைக் கோள்கள் எல்லாம் பழுதின்றி சுற்றுவட்டப் பாதையில் நிறுத்தப்பட்டிருக்கின்றது. இதற்கான 51 மணிநேர கவுண்ட்டவுன் சனிக்கிழமையன்று துவங்கியது. இத்தகைய முக்கியமான தருணத்தில் ராக்கெட் ஏவும் வேலைகளோடு நமது விஞ்ஞானிகள் வேறு ஒரு ‘முக்கியமான’ விவகாரத்திலும் ஈடுபட்டிருக்கின்றனர்.

அதாவது ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட வேண்டுமென்பதற்காக திருப்பதி கோவிலுக்கு சென்று வழிபட்டிருக்கின்றனர். இஸ்ரோவின் தலைவர் கே.ராதாகிருஷ்ணன் உட்பட பல விஞ்ஞானிகள் கோவிலுக்கு சென்று சுப்ரபாத சேவையில் ஏழுமலையானை தரிசித்திருக்கின்றனர். ராக்கெட்டின் மாதிரி வடிவம் ஏழுமலையானின் பாதத்தில் வைத்து சிறப்பு வழிபாடும் நடத்தியிருக்கின்றனர்.

இதிலிருந்து என்னவெல்லாம் நடந்திருக்குமென்று யூகிக்க முடிகிறது. ராக்கெட் முன்னாடி தேங்காய் உடைத்து, சூடம் கொளுத்தி, கருப்பு கயிறு கட்டி, திருஷ்டி பொம்மையை பொருத்தி எல்லாம் செய்திருப்பார்கள் போலும். கவுண்ட்டவுன் நேரத்தில் திருப்பதி சென்று காஸ்ட்லி ஆண்டவனை வழிபட்டு ராக்கெட் வெற்றிக்கு இறைஞ்சுகிறார்கள் என்றால் இந்தியாவில் அறிவியல் உருப்படுமா?

சாதாரண வாழ்க்கைப் பிரச்சினைகளுக்காக ஆண்டவனை நோக்கி பாமார மக்கள் செல்வதற்கும் இந்த மெத்தப் படித்த சான்றோர்களுக்கும் என்ன வேறுபாடு? ஒருவேளை ராக்கெட் கடலில் வீழ்ந்தால் அதற்காக வெங்கடாசலபதியிடம் காப்பீடா பெற முடியும்? இல்லை ராக்கெட் கடலில் விழுந்ததற்கான அறிவியல் காரணங்களை திருப்பதி கோவிந்தாவா அலசி வழி சொல்லப் போகிறார்? ஏனைய்யா இப்படி அறிவியலை இழிவுபடுத்துகிறீர்கள்?

ஒருவேளை இஸ்ரோவின் தலைவர் முஸ்லிமாக இருந்து அவர் அதற்காக மெக்காவோ, நாகூருக்கோ செல்வதை இவர்கள் அனுமதிப்பார்களா? நாட்டின் உயர் ஆய்வு நிறுவனங்களில் கூட இந்துத்தவத்தின் வடிவங்கள் எப்படி உறுதியாக இருக்கின்றன என்பதற்கு இது ஒரு சான்று.

திருப்பதியில் போய் மொட்டைபோடுபவர்களுக்கு மீண்டும் முடி வளர்ந்து விடும் என்பதால் பிரச்சினையில்லை. ஆனால் அறிவியலுக்கும் மொட்டை அடித்து விட்டால் அறிவு வளருவது சாத்தியமில்லை.

 

  1. //ராக்கெட்டின் மாதிரி வடிவம் ஏழுமலையானின் பாதத்தில் வைத்து சிறப்பு வழிபாடும் நடத்தியிருக்கின்றனர்.//

    அய்யோ, வாய்ல அசிங்க, அசிங்கமா வருதே!

    இது என்ன தீபாவளி ராக்கெட்டா!?
    இவனுங்களை நம்பியா இந்திய அறிவியல் வளரப்போவுது!

      • இல்ல, நீ தான் கண்டுபிடியேன்பா!

        சரி அதை எதுக்கு கண்டுபிடிக்கனும், ஏழுமலையானுக்கு லெட்டர் போட்டா பார்சல் வீட்டுக்கு வந்து சேர்ந்துராது உங்களுக்கு!

    • அசிங்க அசிங்கமா வருதா?.அது ஆசன வாய்!.கடவுள் உமக்கு நல்ல புத்தியை கொடுக்கட்டும்…

        • எனக்கு என்னவோ ‘வால் பையன்’ தான் ‘குரங்கு’ என தோன்றுகிறது.எதிரி என குரங்கு குப்பன் ( வடிவேலு பாஷையில்! ) யாரை நினைக்கிறது என புரியவில்லை! ‘வாலை’யும் நறுக்கி, ஆப்பு அசைத்த குரங்கையும் தாங்கள் கையாண்ட விதம் பிரமாதம்!.நன்றி, உண்மை சுடும்!.- டி.வி.கிருஷ்ணன்

    • இந்திய அறிவியல் எவ்வளவோ வளர்ந்துகுன்னுதான் இருக்கு வால்பையா.

      கடவுள் நம்பிக்கை இல்லாத உங்கள மாதிரி ஆளுங்கள் ஒரு 1% அறிவியல வளர்த்தார்கள் என்றால் கடவுள் நம்பிக்கை இருக்குற 99% அறிவியலை எவ்வளவோ வளர்த்துகுன்னு தான் இருக்குறாங்க. ஏன்.. இப்படி நீங்க தமிழ்ல அழ்காக எழுதுறீங்களே அதுவும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கண்டுபிச்சதனாலத்தான்.

      computer கண்டுபிச்சதும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்தான். இவங்க எல்லாம் இல்லன்ன நீங்க இன்னும் அசிங்கமா
      பேசிகிட்டு தான் இருக்கோணும். நெல்லுக்கு பாயுற தண்ணியெல்லாம் உங்களமாதிரி களைகளுக்கும் பாயுது.
      இப்புடியே அசிங்கமா பேசிக்கிட்டே nJoy பண்ணுங்க.

      • மனித நாகரிகத்தின் அறிவியல் வளர்ச்சி கடந்த நானூறு வருடத்தில் தான் அபரிவிதமாக வளர்ந்துள்ளது என்பதை அறிவீர்கள் தானே மோடோ!

        உங்கள் கணிப்பில் சில ஆயிரம் வருடங்களாக இருக்கும் கடவுள் ஏன் அப்போதே அனைத்தையும் தரவில்லை! காரணம் அப்போதெல்லாம் எல்லா செயலுக்கும் காரணம் கடவுள் தான் என்ற முட்டாள் சிந்தனை மட்டுமே இருந்தது, ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விக்கு பின் தான் அறிவியல் வளர்ந்தது!

        உண்மையில் களை நீங்கள் தான், மனிதன் கண்டுபிடிப்புகளை பயன்படுத்த உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது, கோவிலுக்கு போய் பாட்டு பாடி ஒரு கம்பியூட்டர் கேட்க வேண்டியது தானே! ரொம்ப வேணாம் ஒரு மவூஸ் வாங்கிரும்யா பார்க்கலாம்!

        • கடவுளை பத்தி ரொம்ப அற்புதமாக தப்புதப்பாக புரிந்து வைத்துள்ளீர். வேடிக்கையாக இருக்கிறது
          தங்கள் பதில். நீங்கள் சொல்லுவது விதண்டாவாதம். பாட்டுபாடி கேட்டால் கம்ப்யூட்டர் கிடைப்பதை
          கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும் நம்ப மாட்டார்கள்.
          மனித முயற்சி , உழைப்பு , அறிவியல் அனைத்தையும் மீறின ஒரு சக்தி அல்லது எதோ ஒன்று இருப்பதைத்தான்
          நானூறு வருடத்தில் இருந்தும் அதற்கு முன்னாலும் ஆதிகாலதில்ருந்தும் நம்பிக்கை கொண்டு வருகிறார்கள்.
          அதெல்லாம் உண்மையாக உழைப்பவர்களுக்கும் kazhttappattu கண்டுபிடிப்பவர்களுக்கும் தெரியும் ஒரு அற்புதமான
          விஷயம்.
          விரல் நுனியில், நாக்கு நுனியில், மூக்கு நுனியில் ஈசியாக உங்களைபோல உள்ளவர்களுக்கு கிடப்பதால் தான்
          அந்த சக்தி ஒரு விளையாட்டு பொருளாக, கிண்டல் செய்யும் பொருளாக தான் தெரியும்.
          பாட்டுபாடி மௌஸ் எல்லாம் வாங்க முடியாது ஐயா. வேனுமின்ன மோடி மஸ்தான் கிட்ட கேட்டா கிடைக்கும்.
          ஆனா மௌஸ் கண்டிபிடிச்சவனுக்கு தெரியும் அது எவ்வளவு அற்புதமான விசயம்ன்னு.

        • Dear Wall and all so called secularist,

          Study the books and life of Periyar correctly, without buying the computer if you pray in temple u r fool, but one who bought the computer can pray and thank the god for it. and more over every will pray for sucess for there work not for there dream, even in case of dream after the prayer every one will work it.

        • Dear Mr. Valpaiyan,

          (I couldnot read all the replies, so if somone has already told u this plz dont mind)

          you are talking about science, what is the scince doing? answer yourself and check with mine.
          science is understanding how a thing works. all the new inventions are coping some basic thing in nature. But could you tell me why something is working in that way? science says that we breath oxygen, can you tell me why do we breath oxygen why not carbon, or hydrogen (the most abundant) – science is how something works and how we can use it. when u talk about why it works in that way there God is coming in.

  2. இல்லீங்க,இவனுங்களை நம்பி அறிவியல் வளராது.வால்பையன்,வினவு போன்ற மாமேதைகளால் தான் வளரும்.அதிலும் முக்கியமா மாவோவின் அடிவருடிகளால் தான் கண்டிப்பாக வளரும்.

  3. தோழரே உங்கள் புரிதல் அடிப்படையே தவறாகத் தோன்றுகிறது.. ஆண்கள் கற்பழிக்கிறார்கள்,,,.. ஆனால் அனைத்து ஆண்களும் கற்பழிப்பாளர்கள் அல்ல.. அதைப் போல விஞ்ஞானிகளில் நாத்திகர்கள் உண்டு… ஆனால் அனைத்து விஞ்ஞானிகளும் நாத்திகர்கள் இல்லை என்பது அடிப்படையான உண்மை… பல மேல்நாட்டு விஞ்ஞானிகள் பல அரிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தியவர்கள் அனைவரும் நாத்திகர்களா என்பதை சொல்ல முடியுமா… இதற்கு பல உதாரணங்கள் உண்டு.. உங்களுக்கு முற்போக்கு தேவை என்பதால் இதில் இந்துத்வாவை வேறு இழுத்துக் கொண்டுள்ளீர்கள்.. மார்க்சியம் என்பது அனைத்தும் தழுவிய உண்மை என்பதையே நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை ஒரு முசுலிம் விஞ்ஞானி அணுகுண்டை தயாரிப்பவனும் நிச்சயமாக கிரமமாக தொழுகை நடத்தவிட்டுதான் விஞ்ஞான கூடத்துக்குச் செல்வான்.. என்ன செய்ய இயலும். மேலும் இஸ்ரோவில்கூட் முசுலிம் விஞ்ஞானிகள் இருந்தால் அவர் கடவுளை தொழுவதை யாரும் தடுக்கப் போவதில்லை.
    கந்தசாமி

    • //அதைப் போல விஞ்ஞானிகளில் நாத்திகர்கள் உண்டு… ஆனால் அனைத்து விஞ்ஞானிகளும் நாத்திகர்கள் இல்லை என்பது அடிப்படையான உண்மை…//

      விஞ்ஞானிகளில் 60% மேலானோர் நாத்திகர்களே… மறுக்க விரும்புகிறவர்கள் 60% மேலானோர் ஆத்திகர்கள் என்ற புள்ளிவிவரத்தை ஆதாரத்துடன் கொடுக்க வேண்டும்.

      • ///60% மேலானோர் ஆத்திகர்கள்///Nalla velai meethi 40 % aathigargallu othukkondeere…. illai adulaiyum doubta…. thaangala saami

      • //விஞ்ஞானிகளில் 60% மேலானோர் நாத்திகர்களே… மறுக்க விரும்புகிறவர்கள் 60% மேலானோர் ஆத்திகர்கள் என்ற புள்ளிவிவரத்தை ஆதாரத்துடன் கொடுக்க வேண்டும்.//

        If you say விஞ்ஞானிகளில் 60% மேலானோர் நாத்திகர்களே… So then you too have to prove it!! You cant skip away from the point of proving just because you said that at first …

  4. Why you are thinking like this .The chief scientist prayed to god for his peace of mind .If he pray for rocket that is not stupid thing .Anybody honestly accept if u invest money in yr business u not pray.I know only un experience person in business not pray for his business

  5. ////நாட்டின் உயர் ஆய்வு நிறுவனங்களில் கூட இந்துத்தவத்தின் வடிவங்கள் எப்படி உறுதியாக இருக்கின்றன என்பதற்கு இது ஒரு சான்று./////

    நாட்டின் பல்வேறு ராணுவ மற்றும் சிவில் ஆய்வு நிறுவன பெயர்கள், அந்த ஆய்வு நிறுவனங்கள் கண்டுபிடித்ததாகவும் (!!!) கட்டியமைத்ததாக(!!!) சொல்லப்படுகிற பல்வேறு சாதனங்களின் பெயர்கள் இப்படி அனைத்திலும் அப்பட்டமான இந்து பெயரை வைத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்…

    ராணுவ ஏவுகணைகளின் பெயர்களை பாருங்கள்…
    பிரித்வி, அக்னி, நாக்…

    ராணுவ ஹெலிகாப்டர், பைட்டர் விமான பெயர்களை பாருங்கள்…
    முறையே துரூவ், தேஜாஸ்

    ரேடார்கள் (Radar) பெயரை கேட்டால் தலைய சுத்தும்…
    ரோகினி, ரேவதின்னு….

    (இந்த லிஸ்ட் ரெம்ப பெருசுங்க….)

    இவனுங்க எல்லாம் விஞ்’சாணி’கள் தான்!

    பெரும்பாலான இந்திய ஆய்வு நிறுவனங்களில் BE முடித்தவர்களுக்கு கொடுக்கப்படும் முதல் முதன்மையான POST Scientist-B. சையிண்டிஸ்ட்-பி யா சேர்ந்து பதவி உயர்வு பெற்று (இடையில் ME அது இதென்று படித்து) சிறிது காலத்தில் நிறுவனத்தில் நிர்வாகி (Director) ஆக கூட ஆகிவிடலாம்! ஏன் சில நேரங்களில் கோமாளி ஜனாதிபதி கூட ஆகிவிடலாம்!!

    (காதல் படத்து ஜோக் சீன் நினைவில் வந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல 🙂 )

    இவனுங்கள எல்லாம் விஞ்சானின்னு சொன்னா, கலிலியோ, நியூட்டன், ஐன்டீன் போன்றோரை இதை விட அவமானப்படுத்த முடியாது!

    -அகாகி அக்காகியோவிச்

    • ‘அகாகி அக்காகியோவிச்’ என்பது போல ஜீவராசிகளையோ, ஜடப்பொருட்களையோ குறிப்பிட ஒரு பெயர் அவசியம்.அ,ஆ,இ…என்றோ 1,2,3..என்றோ உங்கள் சௌகரியத்திற்கு பெயர் சூட்டிக் கொள்ளுங்கள்!.எந்த ஆட்சேபணையும் இல்லை.அடுத்தவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென கவலைப் படுவோர் மட்டும் இது குறித்து சிந்திக்கட்டும்!. நமக்கு ஏன் இந்த அநாவசிய அசட்டுப் பிரச்சனை?.எதற்கு ‘ எந்த’ பெயர் வைத்தாலும், வைதல் ( சாடுவது ) மட்டும் தானே நம் குறிக்கோள்?!

    • //பெரும்பாலான இந்திய ஆய்வு நிறுவனங்களில் BE முடித்தவர்களுக்கு கொடுக்கப்படும் முதல் முதன்மையான POST Scientist-B. சையிண்டிஸ்ட்-பி யா சேர்ந்து பதவி உயர்வு பெற்று (இடையில் ME அது இதென்று படித்து) சிறிது காலத்தில் நிறுவனத்தில் நிர்வாகி (Director) ஆக கூட ஆகிவிடலாம்! ஏன் சில நேரங்களில் கோமாளி ஜனாதிபதி கூட ஆகிவிடலாம்!!(காதல் படத்து ஜோக் சீன் நினைவில் வந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல ) //
      CSIR & its RRLs recruit JTAs as entry point ( நீங்கள் கூறுவது தவறு ) and Scientist ‘B’ etc.. are project oriented direct appointment or due to vacancy for the post in the relevant field/subject. Otherwise, is a post under departmental promotion among internal employees. ‘கோமாளி ஜனாதிபதி’ என்ற சொற்பிரயோகம் கேவலமானது. விஷமத்தனமாக ‘ நிர்வாகம் பொறுப்பல்ல ‘ என அறிக்கை விடும் நீர் தான் வினவின் நிர்வாகியா?.அவலை நினைத்து உரலை இடிக்காதீர்கள். தனி நபர் தாக்குதல் ஜாடையாய் தெரிகிறது.அப்துல் கலாம் ISRO Scientist ஆக இருந்து பின் ஜனாதிபதி ஆனதையும், பிருத்வி, அக்னி ( உம்மை கேட்காமல் பெயர் சூட்டி ) ஏவுகணை தொடுத்ததையும் சாட நினைப்பது அறிவீனம்….

      • ////CSIR & its RRLs recruit JTAs as entry point///

        so? what is your point of argument man?

        i said, in most of the Indian research organizations, the scientist is just a post rather than it means a researcher!

        to add precisely, most of our country’s research institutions do re-construction job, not any inventions or developments !

        the so called proud indians would be too proud of the DRDO institutions! where a BE fresher could get ‘scientist-B’ post, and TA (technical assistants) would be diploma…

        If the name is only to identify, why to name especially in Hindu name?? you could not even find single other names!

        and adding to this, in most of indian research organization’s official premises you could find a Hindu temple (mostly a ganesh temple). is this india is secular? i m not talking about residential quarters!
        even if a director / head of the organization level officers would forced to attend hindu rituals inside the office!
        No one thinks this as vulnerable…

        i went to a research organization during puja holidays (! ?)
        organization’s head is a christian, and he was attending celebrations in ganesh temple!
        i knew there were some of lower level officers who are Christians and atheists, never attend such parties!

        my questions is… is this country secular?
        and how could be a religious fanatic called as a scientist?

        • ஹிந்துஸ்தான் என்ற அழகிய பெயர் கொண்ட, பெரும்பாலும் ஹிந்துக்கள் வாழும் நாட்டில் பிள்ளையார் பிரதான தெய்வம் தான்.யாரும் மறுக்க இயலாது.உங்கள் கடவுள் மறுப்பு கொள்கை இந்து மதத்திற்கு மாத்திரமே என ஒப்புக் கொண்டதற்கு நன்றி.உங்கள் கிருஸ்துவ நண்பர், இந்து கடவுளை கும்பிட சொல்லி யாரும் வற்புறுத்தினார்களா ?!.முகமதிய நாடுகளில் தொழுகை நேரத்திலும்,நோன்பு காலங்க்களிலும் பிற மதத்தவர்கள் அனுசரிக்க வேண்டிய விதிமுறைகளை அறிவீர்களா? ” இங்கிலாந்து மெத்தப் படித்தவர்கள் வாழும் நாடு.அங்கு, பிச்சைக்காரன் கூட ஆங்கிலத்தில் பிச்சை எடுக்கிறான்!” என்பது போல பெயர் வைத்ததிலும் மதச்சாயம் பூசுகிறீர்கள்.லைலா புயல் எந்த மதம்?.அக்னி என்றால் நெருப்பு, ஆகாஷ் எனில் ஆகாயம்,ப்ருத்வி-அரசன் ( fought against British ). ‘ We trust in God ‘ என்ற வாசகத்துடன் ஆரம்பிக்கிறது அமெரிக்க அரசியலமைப்பு சட்டம். ஹிந்தி தெரியாததால் தவறாக எண்ணிவிட்டீர்கள்.மொழி தேவையற்ற ஒன்றாக நினைப்பீராயின் ‘நியாண்டர்தல் மனிதர்கள்’ போல இருங்கள்!மிருகங்கள்,பறவைகள் போல ஒலியே போதும்…பெயர் வைப்பதே கிடையாது.ஏன்?இது போன்ற பதிவுகளும் இருக்காது.எந்த சச்சரவும் இல்லை!!

      • ///அப்துல் கலாம் ISRO Scientist ஆக இருந்து பின் ஜனாதிபதி ஆனதையும், பிருத்வி, அக்னி ( உம்மை கேட்காமல் பெயர் சூட்டி ) ஏவுகணை தொடுத்ததையும் சாட நினைப்பது அறிவீனம்….////

        அப்துல் கலாம் DRDO Scientist ஆக இருந்தார், ISRO அல்ல மக்களே!!!! 🙂

        என்னை கேட்காமல் பெயர் சூட்டியது தவறு எனும் படி எங்காவது குறிப்பிட்டேனா?
        அல்லது மக்களை கேட்காமல் பெயர் சூட்டுவது தவறா? தவறு இல்லையா? (அரசு மக்களை கேட்காமல் ஒப்பந்தங்கள் போடுவது நினைவில் வந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல)

        பேரு வைக்கிறதும் தப்பில்ல, அத கும்பிடுறதும் தப்பில்ல…

        உங்களுக்கு ஒரு ஏவுகணை தயாரித்து அதற்க்கு ”பிரம்ம சிரஸ்” ன்னு பேர் வெச்சு, அதோட லாஞ்சிங் யூனிட்டுக்கு அர்ஜுனா, கிருஷ்னா, ராமா ன்னு பேர் வெச்சாலும் தப்பில்ல, அதுக்கு பூஜை புனஸ்காரம் பண்ணினாலும் தப்பில்லை!
        இது எதுவும் இந்து கணக்குல வராது பேர் சும்மா சொல்லி கூப்பிட தானே????

        • ///நிர்வாகம் பொறுப்பல்ல///
          ///நீர் தான் வினவின் நிர்வாகியா///
          ///சாட நினைப்பது அறிவீனம்….////

          இங்கு நிர்வாகம், என்பது இந்திய அரசின் நிர்வாகங்களை….

          வினவு நிர்வாகம் என்று புரிந்து கொண்டது உங்கள் அறிவாளித்தனைத்தை தான் காட்டுகிறது!

          முட்டாள் இந்திய அரசு தனது ஆராய்சி நிறுவனங்களில், விஞ் ‘சாணி’ என்ற பெயரில் சீட்டை தேய்க்க பொறியியல் படிப்பில் மொட்டை மனப்பாடம் செய்தவர்களை, சோசியம், ஜாதகம், கடவுள் நம்பிக்கையுடன் மொக்கை போடுவதற்க்கும் வினவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது??

          கேட்குறான் பாரு கேள்விய ‘கெக்ரான் மெக்ரான்’ மாதிரி…! 🙂

        • ///அப்துல் கலாம் DRDO Scientist ஆக இருந்தார், ISRO அல்ல மக்களே!!!! ///
          Please refer http://en.wikipedia.org/wiki/A._P._J._Abdul_Kalam .
          அதில் உள்ள வாசகங்கள் :
          Before his term as India’s president, he worked as an aeronautical engineer with DRDO and ISRO. He is popularly known as the Missile Man of India for his work on development of ballistic missile and space rocket technology.[6] In India he is highly respected as a scientist and as an engineer.

          கிணற்றுத் தவளையாய் இல்லாமல், கொஞ்சமாவது படித்து விட்டு பதில் அளியுங்கள்!

        • கிருஷ் டி.வி சொன்னது..
          //அக்னி என்றால் நெருப்பு, ஆகாஷ் எனில் ஆகாயம்,ப்ருத்வி-அரசன் ( fought against British ). //

          பிரித்விராஜ் சவுஹான் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் ஆண்ட (இந்து ஷத்திரிய) ராஜ்புத் மன்னன். முஸ்லிம் மன்னர்களிடம் சண்டை போட்டவர். British அப்ப கிடையாது.

          குளத்து முதலைகளும் படிக்க வேண்டியிருக்கு பாஸ்.

    • How about these name??

      * Abdali-I
      * Hatf-I/IA
      * Ghaznavi
      * Ghauri I
      * Shaheen I
      * Ghauri II
      * Shaheen II
      * Ghauri-III *
      * Shaheen-III *
      * Babur (Hatf VII)
      * Baktar-Shikan

      Are these look more of wat u like?? Anyway wats wrong pray got b4 doing something important… why you people so worried about it?? I dont understand!!! If you don’t believe in god, do you think all need to follow you???

      //ஏன் சில நேரங்களில் கோமாளி ஜனாதிபதி கூட ஆகிவிடலாம்!!//

      This one shows you are attitude… I know you mean Abdul kalam!! Means you don’t how much he put effort on Indian Space environment?? He was a pillar from ISRO start to till date… Mind you.. He is not a comedian or fool like few people .. he dedicated his whole life to India and its space research… he didnt even married for that sake… Now you feel he is comedian…

      I think you people are sick…

      • @Jayasankar N

        //How about these name??//

        I believe Pakistan is a MUSLIM country and they have every right to name their inventions with Muslim/Urudu names. And do you think the So called SECULAR India has named any of their inventions with NON HINDU names ?

    • this is our country, we will keep our names only, how dare u can ask for keeping the name of invaders of 300 years (english) or 600 years of (Muslims). Is they can recongise our work. pls tell any of muslim country keep the name of india for there street or just for a building. all you guys of Ettappan and Arcot Navabs should go these countries

    • போதெம்கின் – கிணற்றுத் தவளை என்று கூறியது தவறு தான். நீங்கள் Bore Well frog!நான் முதலை அல்ல.டால்ஃபின்!! ( known as killer whale, with a smile in face, friendly to human )
      Please refer : http://www.thamel.com/htms/history.htm Contents in brief : Kathmandu Valley was conquered by King Prithvi Narayan Shah and Kathmandu became the capital of the modern Nepal.King Prithvi Narayan Shah was successful in bringing together diverse religio-ethnic groups under one national. He was a true nationalist in his outlook and was in favor of adopting a closed-door policy with regard to the British. Not only his social and economic views guided the country’s socio-economic course for a long time, his use of the imagery, ‘a yam between two bouldersÕ in Nepal’s geopolitical context, formed the principal guideline of the country`s foreign policy for future centuries.The War with British – The Nepalese had differences of opinion with the East India Company regarding the ownership of the land strip of the western Terai, particularly Butwal and Seoraj. The outcome of the conflict was a war with the British. The British launched their attack on the Nepali forces at Nalapani, the western most point of Nepal’s frontier at the close of 1814. Though the Nepalese were able to inflict heavy losses to the British army on various fronts, the larger army and the superior weapons of the British proved too strong.

      • இஸ்ரோ-டி.ஆர்.டி.ஓ : தகவல் பிழைக்கு வருந்துகிறேன்!

        நான் சொன்னதுக்கு சும்மா அனத்துறீங்களே தவிர… பதில காணும்.

        ரிப்பீட்டு:
        ///my questions is… is this country secular?
        and how could be a religious fanatic called as a scientist?////
        ///முட்டாள் இந்திய அரசு தனது ஆராய்சி நிறுவனங்களில், விஞ் ‘சாணி’ என்ற பெயரில் பொறியியல் படிப்பில் மொட்டை மனப்பாடம் செய்தவர்களை, சோசியம், ஜாதகம், கடவுள் நம்பிக்கையுடன் சீட்டை தேய்ப்பவர்களையும் பணியிலமர்த்தியிப்பதர்க்கும், அவர்கள் அங்கு மொக்கை போடுவதற்க்கும்……….

        (இதுக்கு- எங்க அலுவகத்தில்- ஒரு பார்ப்பன அடிவருடி சொன்ன பதில்: ரிசர்வேசன்ல படிச்சு ரிசர்வேசன்ல வேலைக்கு வந்தவனுங்க அப்படி தான் இருப்பானுங்க!)
        //////////

        மொழி – ஒலி தான் என்றால், ஏன் சமஸ்கிருத பேர் மட்டும் வைக்கப்படுகிறது?

        இந்திய ஏவுகணைக்கு நேபாள ’பிரித்திவி’ பேரு வெச்சிருக்காங்களா? ஆமா ன்னு சொன்னா, இதெப்படி சரியாகும்?

        இல்ல இந்திய ஏவுகணைக்கு இந்திய ’பிரித்திவி’ பேரு தான் வெச்சிருக்காங்கன்னா, போதம்கின் சொன்னது சரிதானே? கிருஷ்ணமாச்சாரி???

        • ‘Prithvi’ means Earth in sanskrit. Like Agni and Akash from the ‘Five Elements’. Prithvi III had another name meaning ‘Ocean’.

          I gave the reply about Prithviraj Chauhan, because T.V. Krishnan mentioned him as a king who fought the British. Now he says Prithvi was named after the Nepali ruler.

          T.V. Krishnan, you can rather be ignorant than being a fraudulent revisionist.

      • ///நியாண்டர்தால்////

        நாங்க நியாண்டர்தால் மனிதனா அலையுறோமா?
        நீங்களும்- இந்திய அரசும் ராமனின் குரங்கு படையா அலைகிறீர்களா?

        காலாவதியான இந்து மதத்தை புடிச்சு தொங்குற நீங்க மாடர்ன்?
        ராக்கெட் விடுறதுக்கு ஏண்ட திருப்பதிக்கு போயி மொட்ட போடுறேன்னு வேண்டிக்க்றேன்னு கேட்டா, நியாண்டர் தால்!

        சரி! அத ஏண்டா திருப்பதிக்கு மட்டும் போயி வேண்டிக்கறே மற்ற மத வழிபாட்டு தலங்களிலும் வேண்டிக்க வேண்டியது தானே ன்னு கேட்டா, இந்து மதத்தை மட்டும் எதிர்க்கிற செக்குரியலிஸ்ட்!

        சரி! இந்தியாவே ஒரு பல்தேசிய, பல மொழி பேசப்படுகிற நாடுதானே? இதுல ஏன் சம்ஸ்கிருத, இந்து பேர் மட்டும் வெக்கிறீங்கன்னு கேட்டா, மொழி – ஒலி, சும்மா இடெண்டிஃபிகேசனுக்கு தான் வெச்சோம்!

        நான் சொன்னது என் நன்பர் பற்றி அல்ல! அந்நிறுவன தலைமை பொறுப்பில் உள்ள அதிகாரி பற்றி.
        யாரும் நிர்பந்தித்தார்களா என அறிவுப்பூர்வமான கேள்வி கேட்டீர்கள். தலைமை அதிகாரி, ஆயுத பூஜையில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பது எப்படி?
        அதுவும் அன்று சிறப்பு விருந்தினர் வேறு வந்திருந்தால்???

        எந்த மதமானாலும் உங்க மதத்தையும், மொக்கையையும் வீட்டோட வெச்சுக்குங்க ஏண்டா, ஆராய்சி நிறுவனத்துக்குள்ள கொண்டுவர்ரீங்க, அறிவியலோட மொக்கை போடுறீங்கன்னு கேட்டா, அது உங்களுக்கு இந்து மதத்தை மட்டும் எதிர்க்கிற மாதிரி தான் தெரியும்!
        ஏனெனில், மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்துத்துவா என்ற இந்திய ரகசியம் அனைவரும் அறிந்தது தானே!

    • mind your words Mr.Akaki. What know about science and who u are you are a scientist? .But i am scientist even i don’t believe the god.A.P.J Abdul kalam is a great scientist do you know how much effort he took for successful launch for first rocket SLV and IGMPD defence project.he is not a joker ok.

  6. நம்மை மீறிய சக்தி ஒன்று உள்ளது! இதுவரை கண்டுபிடிக்கப்படாததாலேயோ, நிரூபிக்கப்படாததாலேயோ…இல்லை என்று கூறி விட முடியாது! உணர்வு பூர்வமானது!
    அவரவர் விருப்பம்! அவரவர் சுதந்திரம்! கண்டுபிடிக்கப் பட்டது மட்டுமல்ல, இதுவரை காணாமல் இருப்பதும்,அவற்றைக் காண முயற்சிப்பதும் அறிவு தான்! (கம்யூனிசவாதிகளைப் போல் நானும் எழுதும் முயற்சி)

  7. இப்படி அதிமேதாவி போல எதோ முற்போக்கான கருத்து எழுதுரபோல சொல்லுறது கொஞ்சம் அதிகம்தான் என்னதான் படிச்சாலும் படிகிளை என்றாலும் கடவுள் பக்தி எல்லோருக்கும் இருக்கும், இதுல எங்க ஹிந்து மதம் வந்தது, அதுல வேலை பார்க்கிற ஒரு விஞ்சானி முஸ்லிமா இருந்த அவரு அல்லாவ கும்பிடு இருப்பர் இல்ல ஒரு கிருத்துவர இருந்த அவர் யேசுவ கும்பிடு இருப்பர் மனிதர்கள் நம்ம என்னதான் செய்தலும் ஒரு மன திருப்திக்கு இப்படி செயுறது தப்பு இல்ல அதர்க்கா அவர்கள் ஒன்னும் அதிசியமா கடவுள ராக்கெட் உருவாக்க சொல்லல இதுபோல கட்டுரை எழுதி தேவைஇல்ல

  8. வால்பையன் சொல்லவந்தது….. கோடிகனக்குல ராக்கெட் தாயார் பண்ணி அப்புறமா….பெருமாள்கிட்ட மாதிரி ராக்கெட் காண்பிச்சு அப்புறமா அது நல்ல பறக்க பிராத்னை பண்றதுக்கு…… சும்மா … பெருமாள்கிட்ட . வரைபடத்த வச்சி ராக்கெட் விட்டிருந்தா…பணம் மிச்சம்ன்னும் சொல்லறார்…

  9. இந்த அமெரிக்கா, ஜெர்மனி விஞ்சானிகள் எங்கே படையல் போட்டார்கள் என்று எடுத்து நம்மாளுகளுக்கு சொல்லுங்க. அதையும் செய்வாயிங்க, கூறு கேட்ட கூ-கள்.

    • அப்போலோ – 13 ஊத்திக்கிட்டப்ப, நம்பர் ராசி இல்லாததுன்னு குமுறியது, கூறுகெட்ட குப்பனுக்குக் கூட தெரியுமே! அமெரிக்க அடிவருடிக்கும், ஜெர்மனி ஜொள்ளருக்கும் தெரியாதது விந்தையாக உள்ளது!!

      • //நம்பர் ராசி இல்லாததுன்னு குமுறியது, கூறுகெட்ட குப்பனுக்குக் கூட தெரியுமே! அமெரிக்க அடிவருடிக்கும், ஜெர்மனி ஜொள்ளருக்கும் தெரியாதது விந்தையாக உள்ளது!!//

        உடனே அமெரிக்க நாசா நம்பர் ராசியானதா மாத்திக்கிச்சா? ஒரு மதவாதி புலம்புறதும் மதவாதியே அறிவியல் நிறுவனத்தை வழிநடத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது.

      • பார்ப்பன சாமியிசம் தானே பார்ப்பனபண்டாரங்கள் செல்லும். ஏழுமலையான் சாதாரண சாமி இல்லை அவர் மிகப்பெரிய விஞ்ஞானி , ஆமா தனது தொப்புள் கொடியில் பிரம்மனை கட்டி வைத்திருக்கிறார் அல்லவா, எத்தனை அவதாரம் 10 பேரை கல்யாணம் செய்தும், நூற்றுக்கணக்கான கோபிகையை வைத்துக்கொண்டு பால்வினை நோய்கள் வராது தன்னை காத்து நிற்கும் மாபெரும் மருத்துவ விஞ்ஞானி,

        சமூகத்தை பிரிக்க / பிளக்க சாதியை உருவாக்கி அதில் பார்ப்பனர்களுக்கு சேவை செய்வதை திராவிடர்களுக்கு வேலையாக்கிய மாபெரும் சமத்துவ விஞ்ஞானி.

        ஒன்னும் முடியலீங்க, யப்பா காத்து வரட்டும்

        கலகம்

  10. Hello friends,

    Almost 60% of scientists are Atheists(Someone who denies the existence of god) only. This is because, they know science is correct and religion is a bunch of wang.

    What about the remaining?

    Even Newton denied the divinity of Christ!
    Even Einstein disbelieves in Personal Gods & Prayer!

    and so on……..

    Science is ultimate truth. This fellow Mr. Radhakrishnan and his fellows are not understanding science! You may ask “Can u design PSLV?” (This is final the outcome of an Extremist who is cornored and have no other choice)…….

    Mr.Radhakrishnan didn’t design PSLV. Isn;t it?? It was designed by either a group of scientists of Russia and not by Indians (How many indians know this)!!

    Come on guys.. .come to reality… Dont impose your junk believes on others

    God is not a proven thing! So, According to science there is no”God”

  11. “ஒருவேளை இஸ்ரோவின் தலைவர் முஸ்லிமாக இருந்து அவர் அதற்காக மெக்காவோ, நாகூருக்கோ செல்வதை இவர்கள் அனுமதிப்பார்களா? நாட்டின் உயர் ஆய்வு நிறுவனங்களில் கூட இந்துத்தவத்தின் வடிவங்கள் எப்படி உறுதியாக இருக்கின்றன என்பதற்கு இது ஒரு சான்று.”

    This is not a genuine statement. Adbul Kalam’s told in a interview before launching he always will do a pray.

    Katturai elthurengura perula…. thevai illama religiona ulla ilukathey,

    Ithu muttal thanamana oru katturai…

    Contraversiala eluthiye popular aganumnu irukeenga pola…

  12. //This is not a genuine statement. Adbul Kalam’s told in a interview before launching he always will do a pray.//

    அப்படியே ஒரு ராக்கெட்டுக்கு அக்பர் – 1 என்று பெயர் வைக்க முடியுமா இங்கு? ராக்கெட்டுக்கு ஒரு முஸ்லீம் பெரியவரை கூட்டி வந்து பூசை செய்ய முடியுமா? இல்லை இஸ்ரோ பூனூலிஸ்டு கும்ப்ல அதை அனுமதித்துதான் விடுமா? ராக்கெட்டில் வயரை கட் செய்து விட மாட்டார்கள்? (பசு மாமிசம் சாப்பிடுர துல்லுகனக் கூட்டிட்டு வந்து பூசை போட்டா ராக்கெட்டு கடல்லதான் விழும் என்று சொல்ல வசதியாக) .

    அறிவியல அறிவியலா இருக்க விடுங்கப்பா…. அதையும் புடிச்சி சந்தனம், ஜவ்வாது தடவி.. கந்தர கோலம் ஆக்கிறாய்ங்க…

  13. //நானும் படிச்சா கண்டுபிடிக்கபோறேன், ராக்கெட் என்ன மந்திரத்துலயா கொண்டு வந்திங்க//

    ஆமாம்,படிச்சிருந்தா நோபல் பரிசே வாங்கியிருப்பீங்க.

  14. பதிவுல கேட்ட இந்த முக்கியமான கேள்விக்கு யாரும் பதில் சொல்ல காணுமே –

    //ஒருவேளை இஸ்ரோவின் தலைவர் முஸ்லிமாக இருந்து அவர் அதற்காக மெக்காவோ, நாகூருக்கோ செல்வதை இவர்கள் அனுமதிப்பார்களா? நாட்டின் உயர் ஆய்வு நிறுவனங்களில் கூட இந்துத்தவத்தின் வடிவங்கள் எப்படி உறுதியாக இருக்கின்றன என்பதற்கு இது ஒரு சான்று.//

    இதே அந்த விஞ்ஞானி ஒரு முசுலீமாவோ இல்ல கிருத்துவராவோ இருந்து அவரோட மத நம்பிக்கைப்படி பிரார்த்தனை பண்ணியிருந்தா
    அப்ப இங்க ‘ஆத்திகர்களோட மன திருப்தியை கேலி பேசாதீங்க’ என்று நொன்னை பேசும் வெண்ணைகள் எப்படி பேசியிருப்பார்கள்?

    அந்த ஏழுமலையானுக்கே வெளிச்சம்

  15. //ஒரு வேளை இந்த ஏழுமலையான் பெரிய விஞானியா இருப்பாரோ?//

    இல்லேன்னா திருப்பதி மலை மேலே ரோடு போடாத பஸ் போகாத காலத்திலேயே, அவ்வளவு பெரிய கீரீடத்தோட மேலே ஏறி அய்யங்காருங்க கூட்டத்தோட போய் உக்கார்ந்து கும்மி அடிக்க முடியுமா ?

    அவர் பிரம்மோட்சவ ஊர்வலம் வரும்போது பாருங்க, தேரோட இரண்டு பக்கமும் துணியால செஞ்ச ராக்கெட் தொங்கும் 🙂

  16. இதே அந்த விஞ்ஞானி ஒரு முசுலீமாவோ இல்ல கிருத்துவராவோ இருந்து அவரோட மத நம்பிக்கைப்படி பிரார்த்தனை பண்ணியிருந்தா
    அப்ப இங்க “அறிவியலுக்கு கோயிந்தா கோயிந்தா” ன்னு கொக்கரிக்கும் மாவோயிச கொலைகார கும்பல எப்படி பேசியிருப்பார்கள்?
    அந்த ஏழுமலையானுக்கே வெளிச்சம்

  17. கடவுள் ஒழிஞ்சிருக்குற இடம் எதுன்னு ரொம்ப நாளைக்கி முன்ன ஒரு ஆங்கில பதிவு போட்டேன். அப்துல் கலாம் அங்கிளோட கத ஒன்ன் அப்படியே ஒட்டாலக்கட்டி செஞ்ச பதிவு அது. அது இங்க

    Story of Faith & Story of Science

    http://kaipulla.blogspot.com/2006_04_01_archive.html

  18. இஸ்ரொ தலைவர் மனதிருப்திக்கு ஏலுமலையான கும்பிட்டார்னு சொல்லும் நண்பர்களே, இதுக்கு முன்பு யாகம் வேள்வி என நடத்தியது தெரியுமா?அதுக்கு என்ன காரண்ம் சொல்ல போகிறீர்கள்?

  19. Dear Mr. Valpaiyan,

    (I couldnot read all the replies, so if somone has already told u this plz dont mind)

    you are talking about science, what is the scince doing? answer yourself and check with mine.
    science is understanding how a think works. all the new inventions are coping some basic thing in nature. But could you tell me why something is working in that way? science says that we breath oxygen, can you tell me why do we breath oxygen why not carbon, or hydrogen (the most abundant) – science is how something works and how we can use it. when u talk about why it works in that way there God is coming in. The scientist who went to temple did not represent ISRO. It is his own belief, u r not suppose to criticise anyone’s personal view.
    And TO THE PERSON WHO WROTE THIS you have told that “தனால் அந்நிறுவனத்தின் அறிவியலாளர்கள் சோர்ந்து போயிருக்க கூடும் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது”
    As a person in science field i tell u this is totally wrong, they didnot become like u said
    this engine is a challenge to us and they will do it and you will also see it.

    • அகிலா
      கடவுள் நம்பிக்கை என்பது ஒருவரது சொந்த விசயம்தான். ஆனால் ராக்கெட் கவுண்ட்டவுண் ஆரம்பித்த நேரத்தில் திருப்பதி சென்று வணங்கியதும், அங்கே வெங்கடாசலத்தின் பாதத்தில் பி.எஸ்.எல்.வி ராக்கெட்டின் மாதிரியை வைத்து வணங்கியதும் எப்படி சொந்த விசயம் ஆகும்? இதற்கான உரிமையை அவர்களுக்கு யார் கொடுத்த்து?

      • Hi,

        Hope this is just an argument not a fight 🙂

        thanks for the reply without throwing my comment into bin

        my question is did the scientist go or did ISRO go, hope it is the scientist. They are of course the human beings, and every human have their own believes, they come out at the very important moments of their lives. “இந்தியாவில் அறிவியல் உருப்படுமா?” I truely object this kind of question.
        May i know in what field you are, I tell you no one can stop the growth of India’s science growth.
        and surely you can question, but u cannot kid someone
        “ராக்கெட்டின் மாதிரி வடிவம் ஏழுமலையானின் பாதத்தில் வைத்து சிறப்பு வழிபாடும் நடத்தியிருக்கின்றனர்” I think this can be objected. If you have the proof for what you have, better object it in a open manner by writing to a news paper or some other source, i think that will be more effective than writing a blog like this, (i myself came to ur blog while searching for something else only) if you truely want to object it do it in a better open manner

        cheers, akila

  20. அதாவது சிந்த்தெடிக் செல் (Synthetic cell) அல்லது செயற்கை அனு என்பதன் சுருக்கமே சிந்த்தியா! ஆக, சரியாகச் சொன்னால் இது ஒரு இயற்கை+செயற்கை (பாக்டீரியாவின் உடல்+செயற்கை மரபனுக்கோப்பு) கலவைதானே தவிர முழுமையான செயற்க்கை உயிர் அல்ல என்பதை நினைவில் கொள்க!!

    • @அகிலா

      //இயற்கை+செயற்கை கலவைதானே தவிர முழுமையான செயற்க்கை உயிர் அல்ல//

      அப்படித்தானே வினவும் சொல்கிறது. முழு செயற்கை உயிரை உருவாக்கவே முடியாதென அறிவியலாளராகிய நீங்கள் முடிவெடுக்கிறீர்களா?

      //“ராக்கெட்டின் மாதிரி வடிவம் ஏழுமலையானின் பாதத்தில் வைத்து சிறப்பு வழிபாடும் நடத்தியிருக்கின்றனர்” I think this can be objected.//

      ஏன் இதை கண்டிக்கலாம் என்று தெளிவான விளக்கம் தருவீர்களா?

      //It is his own belief, u r not suppose to criticise anyone’s personal view.//

      இந்தியா ராக்கெட் ஏவுவது பெருமாள் குடியிருக்கிற வைகுண்டத்தில் ஓட்டை போடுவதாக ஒருவர் கேஸ் போட்டார். அவரது own belief . அதை விமரிசிக்கலாமா கூடாதா? விமரிசிக்கலாம் என்றால் அதற்கு நீங்கள் கூறப்போகும் காரணத்தை ஒட்டியே இந்த பதிவின் மையக் கருத்தும் நிற்கிறது.

      • 1. Vinavu may say the same thing, but that answer was not to the blog but to the reply given to me earlier (not my words too, i forgot to say that this is taken from another blog, link taken from this same blog, if you haven’t read it look for it)
        2. Im neither saying you can make nor you cannot make, the answer i gave was what science is doing. Even in this case(synthetica) they have tried which is already existing (but no one can deny that it is a great achievement) – which was created alread (don’t question me for saying created, ok, this is my belief) – or if you want to say which evolved say it i have no problem.
        3. இந்தியா ராக்கெட் ஏவுவது பெருமாள் குடியிருக்கிற வைகுண்டத்தில் ஓட்டை போடுவதாக ஒருவர் கேஸ் போட்டார். அவரது own belief . அதை விமரிசிக்கலாமா கூடாதா? விமரிசிக்கலாம் என்றால் அதற்கு நீங்கள் கூறப்போகும் காரணத்தை ஒட்டியே இந்த பதிவின் மையக் கருத்தும் நிற்கிறது. – I dont understand this point – what are you trying to say ??
        4. ஏன் இதை கண்டிக்கலாம் என்று தெளிவான விளக்கம் தருவீர்களா? – this too i told some one else, since he objected (this blog is in that manner only know, am I right?) the scientist going to temple which he cannot do. But there no reply from anyone for “if you want to object do it openly”

        As a person new to these blogs may i ask one question (just to know, not to criticise) What is the meaning of writing a blog? What is the use in criticising something you dont like in a blog like this, that too writing like what you write only is good for nation. (It is write?) It is like just I’m talking to a sister in my next house now you people are talking to some one sitting 400 or 500 km away from you(within yourself only). I may have same view in many cases, but what does it going to do to the society???? If some one wants to answer me that you have rights to tell your opinion please don’t send it as an reply.

        • Akila.leave aside science.Let us see propriety questions.so that u can arrive at a conclusion. Nobody questions Radhakrishnan for being theist.but PSLV is not his ancestral property to behave with it as he likes.It is made up from taxpayers money.All the taxpayers r not theists.Atheist also pay tax.Is it fair to take draft of PSLV to a worship place.Moreover all the tax paying beleivers r not Hindus.substancial number of them follow other religions like Islam Christianity Sikh Parsi Jain Budhism.Hence,Is it fair to take the draft to a hindu temple.Documents related to rocket launching are highly guarded ones.Is it not breach of security to take them to a public place frequented by thousands of people.Is submission of Draft at the feet of a temple deitey befitting to a secular state.

        • அகிலா

          நானும் பதிவுலகத்துக்கு புதுசு தான். கஷ்டப்பட்டுத் தான் தமிழில் எழுதுகிறேன். நீங்களும் முயற்சி செய்யுங்கள்.

          1 . மன்னிக்கவும். எனக்கு உங்கள் Q / A புரியவில்லை. விளக்கினால் விவாதிக்கலாம். நீங்கள் குறிப்பிட்ட அந்த பதிவையும் ஏற்கனவே படித்து விட்டேன். அதை இங்கே ‘quote ‘ செய்வதன் மூலம் நீங்கள் நிறுவ முயலுவது என்ன?

          2 . Evolution , from one form to another. அவ்வாறல்லாமல் தானாக உருவாகிய/உருவாக்கப்பட்ட பொருள் ஏதும் உண்டா? இருப்பின் அதை உருவாக்கியது யார்? அவரை உருவாக்கியது யார்? கொஞ்சம் யோசித்து உங்கள் முடிவை பரிசீலனை செய்யுங்கள்.

          3. நீங்கள் 25 -ஆவது பின்னூட்டத்தில் (comment ) வால்பையனிடம் சொன்னதை ‘quote ‘ செய்து தானே கேட்டேன்? double slash – களுக்கு நடுவில் இருப்பது ‘quote ‘. பதிவுலக வழக்கம்.
          கவுண்ட்டௌன் நேரத்தில் வழிபாடு நடத்தியது இங்கு விமரிசிக்கப்படுகிறது. அதை ‘own belief ‘ என்று விடமுடியாது.

          4. கண்டிக்கலாம் என்கிற கருத்தில் நீங்கள் உடன்படுகிறீர்கள் என இதை புரிந்து கொள்கிறேன். கண்டிக்கும் முறையில் நீங்கள் கொண்டிருக்கும் கருத்து நியாயமானது. வினவு தோழர்களின் நோக்கத்தோடு நீங்கள் ஒத்துப் போகும் புள்ளி அதுதான் என நினைக்கிறேன். ‘Blog’கள் நீங்கள் நினைப்பது போல பக்கத்து வீட்டுக்காரருடன் பேசுவது போலில்லை. வினவு தளத்தை பொருத்தவரையில் அவை ‘Open’ -ஆக, நேர்மையாக எழுதப்படுக்கின்றன. வினவு தளத்தில் நூற்றுக்கணக்கானோர் ஒரே சமயத்தில் படிக்கிறார்கள், லட்சகணக்கில் ‘விசிட்’கள். விபரங்கள் தளத்தில் உள்ளன. பரவலாக வாசிக்கப்படும் ஒரு முற்போக்கு புரட்சிகர வலைத்தளம் இது. வினவு தளத்தின் அறிமுகம் இதோ. https://www.vinavu.com/we/ கண்டிப்பாக படியுங்கள்.

          பத்திரிகையில் படிக்க ‘ம. க. இ. க.’ வின் புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் இதழ்களையும் நீங்கள் படிக்கலாம்.
          நிறைய விவாதியுங்கள். நன்றி.

  21. @ Rathi
    What you said is true rathi, in Earth atmosphere most abundant is nitrogen. But in universe Hydrogen is the most abundant.
    ” The most abundant element in the universe is hydrogen, which makes up about 3/4 of all matter! Helium makes up most of the remaining 25%. Oxygen is the third most abundant element in the universe. All of the other elements are relatively rare.”
    http://chemistry.about.com/cs/howthingswork/f/blabundant.htm
    Is it ok?

    • A-OK! பூலோகம், பிரபஞ்சம் பற்றி விளக்க elements அதன் குறியீடுகள். கடவுள் பற்றி விளக்கவும் குறியீடுகள், பிறை, நட்சத்திரம், சிலுவை இத்யாதிகள், புரிந்துவிட்டது. 🙂

  22. Many people say most of the scientist are god believers that is right. but problem with Indians are they do not know to differentiate their faith and superstition and they are trained to fear about the superstitious set up created by our society right from our childhood like AaTha kanna Kutthum, katha kutthum, so we fear god and relate everything with god. By making this fear one group is melting money. This was seen more in film industry now it started in scientific community. so sad…

  23. In his autobiograpgy Kalam has described the prayers / reading of holy books by three people before the launch of an important satellite in the 80s. Kalam was reading Koran, while a hindu scientist was reading the Gita and a Christian scientist was reading Bible. all in the same room some hours before the launch. and praying in their methods. After a certain point science and technology seems powerless and unable to perform as planned. It is but human nature to pray or do some ‘rituals’ for a postive result. It is impossible to launch all satellites fautlessly and perfectly. the margin for error or failure is always there and cannot be gauged all the time. hence the prayers by those who belive. nothing wrong in it as long as it is private and does not corrupt the secular character of the ISRO. read Kalam’s bio first.

    • what do you mean athiyaman??

      do you mean to say, for flawless satellite launch, prayers and rituals are required ?

      how to you declare praying/performing rituals are human nature?
      had you interview early, Pre-history humans? or for this too you surf wiki??

      ///the margin for error or failure is always there and cannot be gauged all the time.///
      the probability of failure decreases as the science develops! it is evident from all scientific research and exploration!
      it seems, even if the probability of success is 99.99999999….. %, even then also you would be saying there is a margin for failure, which is not in human hand, it is god’s power and you would prefer praying/doing rituals!

      try to understand contradiction between human and the nature!

      and moreover this comment from athiyaman is invalid as it does nt have ‘Stalin, Mao, USSR, ukraine, etc… 🙂

      better luck next time!

      • //do you mean to say, for flawless satellite launch, prayers and rituals are required ?/// did i say that ? no, i said nothing wrong with prayers, as long as they are PRIVATE and does not corrupt the secular nature of the ISRO. I have more to write here refuting your perverted personal slants in many post. but as i was away for most of the time last week, will get back here soon. esp in the post about Lysenkov.

        • ///but as i was away for most of the time last week,///

          இப்ப மட்டும் உங்களை யார் இங்க அழைச்சாங்க ன்னு கேட்க தோனுது!

          தனிமனித தாக்குதல், எதிர்கருத்து உடையவர்களை விரட்டுதல் ன்னு, அது திரும்பிவிடுமென்பதால்……….

          வாங்க அதியமான் வாங்க! வந்து வாங்கி கட்டிகிட்டு போங்க! 🙂

      • // for this too you surf wiki??// what the hell do you know about wiki or proof. do you mean to say all wiki is wrong and false while what you and your comrades asset about Stalin or Mao is the correct version ? you try this with any (repeat : any university) in this whole world. then we can know who is trying to bring out the truth and who is covering up. so far no comrade has refuted my posts in my blogs with read proof and logic. only rantings of mis-guided maniacs who belive that only their version of history is correct.

        • ///only rantings of mis-guided maniacs who belive that only their version of history is correct.///

          its looks like a self-criticism of our great athiyaman! but it is not….. just another absurd which he propagates very often! 🙂

  24. Did any scientist attribute the success due to their prayers in Thirupathi. And no scientist thanked the god in public (media) after the successful launch. So just ignore this issue.

  25. போபால் யூனியன் கார்பைடு நிறுவனத்திலிருந்து வெளியேறிய நச்சு வாயுவினால் ஒரே இரவில் பத்தாயிரத்திரத்திற்கும் மேற்பட்டோர் பலி. இலங்கை யுத்தத்தின் இறுதிநாளன்று மட்டும் 25ஆயிரம் மக்கள் பலி. இறந்த இவர்களனைவரும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களா! எந்தப்பக்கம் ஓடினால் உயிர்பிழைக்கலாம் என்பதே தெரியாமல் ஓடி பலியான இவர்களனைவரும் தத்தமது கடவுள்களை அழைக்காமலா ஓடியிருப்பார்கள்! ஏன் அந்த சனியன் காப்பாற்ற வரவில்லை? இதற்கு யாரை தண்டிப்பது! இவர்களனைவரின் சாவிற்கும் ஒரே நாளில் நாள் குறித்த கடவுளையா? அல்லது ஆண்டர்சனையா? ராஜபக்சேவையா? இதற்கு, “ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட வேண்டுமென்பதற்காக திருப்பதி கோவிலுக்கு சென்று வழிபட்டதை” ஆதரிக்கும் கோவிந்தாக்கள் பதில் சொல்லவேண்டும். கோவிந்தாக்களுக்கு நம்பிக்கை இருந்தால் அதை உங்களது அறைக்குள்ளே வைத்துக்கொள்ளுங்களேன். இதுபோன்று கோவிந்தா கோவிந்தாவென்று சொலவதனால்தான் ராக்கெட் பறக்கிறது என்பதும் என்னுள் இறங்கி தேவன் கிரியைகள் செய்கிறார் என்பதும் மற்றவர்களையும் சேர்த்து முட்டாளாக்கும் மோசடிகள். இமோசடிகளினால் தான் பெரும்பான்மை மக்கள் போராடும் உணர்வின்றி இருக்கிறார்கள். பாட்டுபாடி கேட்டால் கம்ப்யூட்டர் கிடைக்காதுதான் பிறகு தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும் என்பதற்கு என்னதான் விளக்கம்.

  26. //Nalla puththii Petror valarpil varuvathu. Yethayum koduthu vaanga ahtu ondrum kadai charakkalla//

    திருடன், மொள்ளமாறி, முடிச்சவுக்கி, சாமியார்கள் அனைவருமே பெற்றோர்கள் தான் வளர்க்கிறார்கள்!!, இவனுங்க மட்டும் வானத்திலிருந்தே குதிச்சானுங்க!

  27. //You are absolutely wrong. dont ask me explanation. //

    நான் சொல்றது தப்புன்னு சொல்ல நீங்க டீச்சரா இருக்கனும், இருந்துட்டு போங்க, ஆனா விளக்கமெல்லாம் கேட்காதேன்னு சொல்றிங்களே, நீங்க சர்வாதிகாரியா!?

  28. வணக்கம் நண்பரே!

    எனது புதிய பதிவு:
    :
    கருணாநிதி ஹிந்தி படிக்க விட்டு இருந்தால் மூணு வேளை பிரியாணியும் ஒரு குவார்ட்டரும் ஒவ்வொரு தமிழனக்கும் தினமும் கிடைத்து இருக்கும்!

    http://tamilkadu.blogspot.com/

    or

    http://tamilkadu.blogspot.com/2010/07/blog-post.html

    என்றும் அன்புடன்,
    ஆட்டையாம்பட்டி ஆம்பி!?

  29. @ கிருஷ் டி.வி
    //அக்னி என்றால் நெருப்பு, ஆகாஷ் எனில் ஆகாயம்,ப்ருத்வி-அரசன் ( fought against British ). //

    //போதெம்கின் – கிணற்றுத் தவளை என்று கூறியது தவறு தான். நீங்கள் Bore Well frog!நான் முதலை அல்ல.டால்ஃபின்!! ( known as killer whale, with a smile in face, friendly to human )
    Please refer : http://www.thamel.com/htms/history.htm Contents in brief : Kathmandu Valley was conquered by King Prithvi Narayan Shah and Kathmandu became the capital of the modern Nepal.//

    ப்ரித்வி- வடமொழியில் ‘நிலம்’ என்று பொருள்.

    அந்த நேபாள மன்னனோட பேர இந்திய ஏவுகணைக்கு வைச்சாங்கன்னு சொல்ற உங்க தெளிவு புரியுது. உங்க புரட்டுகள் தெரிஞ்சதுனால தான் உங்கள இங்க யாரும் சட்டை செய்யுறது இல்ல போல.

  30. ஏதோ ஒரு ப்ருதிவியை காட்டி செந்தில் வாழைப்பழ காமெடி போல ‘இது தான் அந்த ப்ருதிவி’ – who did not fought against British & lived long long ago etc..என கூறியபோது, நான் குறிப்பிட்ட ப்ருதிவியைப் பற்றி எழுதினேன்.யானையை குருடர்கள் அவரவர் நோக்கில் வர்ணித்த கதையாக இது அமைந்துவிட்டது.நீங்கள் கூறியது போல பஞ்ச பூதங்களில் ( அப்பு,தேயு,வாயு,ப்ருதிவி,ஆகாசம் ) மூன்று என்பதில் எள்ளளவும் மறுப்பு இல்லை.சரியான விளக்கத்திற்கு நன்றி.ஆனால் அதற்காக நீங்கள் எனக்கு சட்டை செய்யவும் வேண்டாம், pant தைக்கவும் வேண்டாம்! (இதுவும் புரட்டுனு புலம்பாதீங்க தோழரே!).சட்டைக்கு சாட்சியாக,சாட்டையடி போல், என் பின்னூட்டமும், அதற்கான வினவின் பதிலும் இதற்கு அடுத்ததாகவே அமைந்தது தற்செயல் தான்!

    • டி.வி. கிருஷ்ணன்

      //நீங்கள் கூறியது போல பஞ்ச பூதங்களில் ( அப்பு,தேயு,வாயு,ப்ருதிவி,ஆகாசம் ) மூன்று என்பதில் எள்ளளவும் மறுப்பு இல்லை.சரியான விளக்கத்திற்கு நன்றி//

      தவறை ஒத்துக்கொள்ளும் தன்மை இல்லையெனினும் மனதளவில் புரிந்துகொண்டமைக்கு நன்றி. நீங்கள் அகாகியை ‘கிணற்றுத் தவளை’ என்று சீண்டிய வரையில் உங்கள் தவறை குத்திக்காட்ட விரும்பியதில்லை.

      மற்றபடி, நீங்கள் சட்டை போட்டு வந்தால் கவனிக்கப்படுவீர்கள்.
      அவிழ்த்துபோட்டு வந்தால் அசிங்கமாய் பார்க்கப்படுவீர்கள்.

  31. இனிய போதம்கின், சட்டையை அவிழ்த்து (உரித்து)விட்டு வரும் ஜந்துவான பாம்பைக் கண்டு படையும் நடுங்குமென கேள்விப்பட்டிருக்கிறேன்.அசிங்கமாய் நினைத்து,(கவனிக்கப்பட்டுதான்!)அருவெறுப்பில் ஓடுவதாய் நீங்கள் நினைக்கலாம்!.’தொடை நடுங்கி’கள்-அவர்கள் தொடையில் ‘படை’ (சொறி);எனவே அந்த ‘படை’ நடுங்கி இருக்கலாம் என நான் நினைத்திருப்பேன்.பெயர் சூட்ட பொதுவாக, யாரும் காரணங்கள் கொடுப்பதில்லை.நாமும் கேட்பதில்லை! நாமாக ஏதேனும் புரிந்து கொள்கிறோம்!. ‘அமாவாசை’ என்ற என் தமிழ் நண்பர் ‘நவீன் சந்திரா’ (New Moon)என அதே அர்த்தத்தில் பெயர் மாற்றம் செய்து கொண்டதை, நியூமராலஜிக்காக ஏதோ வடமொழிப் பெயராக சம்பந்தமில்லாமல் இருக்கிறதே என அறியாமையில் எண்ணியிருந்தேன் ‘பூர்ணசந்திரா’ (பௌர்ணமி,Full Moon) எனும் வங்காள நண்பர் விளக்கும் வரை! Meanings are not in words,but with people.O.K?.

    • சரீங்… பாம்பு புத்துக்குள்ள கைய வுட்டா கடிச்சிராதுங்களா?

  32. வால்பையனின் வாசகம்:
    //எனக்கு ஆங்கிலம் தெரியாதுங்க!
    தமிழிலில் கேளுங்க!//
    Posted on 15-Jul-10 at 5:53 pm | Permalink
    அவரது வசதிக்காக…’எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே.பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே!’..இயன்றால், தமிழில் எழுதுங்கள் உண்மைசுடும்….

  33. தோழரே, தங்கள் பதிலிலேயே ‘பெயர்’ குறித்த நம் விவாதத்தின் முடிவு அமைந்துள்ளது.அது ‘பாம்பு புற்று’ அல்ல.கரையான் கட்டிய வீடுகளில் இவை ஆக்கிரமிப்பு செய்துவிடுகிறது!எலி வளைகளை வளைத்துப் போட்டும்,பொந்துப் பறவைகளைப் பந்தாடியுமே வாழ்கிறது. சொந்தமாக வீடு கட்டத் தெரியாத ஜந்து. மனிதர்களாகிய நாம் தான் பரஸ்பரம் வார்த்தைகளால் கடித்துக் கொள்கிறோம்!

Leave a Reply to ramkumar பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க