Wednesday, April 1, 2020
முகப்பு வாழ்க்கை அனுபவம் இசுலாமிய சமூகத்தில் ஒரு சீர்திருத்தத் திருமணம்!

இசுலாமிய சமூகத்தில் ஒரு சீர்திருத்தத் திருமணம்!

-

மாக்சிய ஆசான்கள், பகத்சிங் படங்கள் சூழ ஒரு இசுலாமியத் திருமணம்!!

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியைச் சேர்ந்த அலாவுதீனுக்கும் சப்னா ஆஸ்மிக்கும் 10.7.2010 அன்று திருமணம் நடந்தது.  இதிலென்ன முக்கியத்துவம் உள்ளது என்ற கேள்வி வாசகர்களுக்கு எழலாம்.  மணமகன் அலாவுதீன் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தோழர்.  மணமகளோ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் முன்னாள் உள்ளூர் கிளை செயலாளரின் மகள்.  பு.மா.இ.மு. அமைப்புத் தோழர்களின் தலைமையில் முசுலீம் மதச் சடங்குகளின்றி சீர்திருத்த முறையில் நடந்த திருமணம் இது என்பதுதான் இதன் சிறப்பு.

இத்திருமணம் உள்ளூர் ஜமாத்தாருக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் நடந்தது.  பொதுவாகப் பச்சைக் கொடி பறக்கும் இம்மண்டபத்தில் திருமண நாளன்று அம்மண்டபத்தை சிவப்புக் கொடிகளும் தோரணங்களும் அலங்கரித்தன.  முசுலீம் சமுதாய மக்கள் உருவ வழிபாட்டை மறுப்பவர்கள் என்பதும் அவர்களின் மத மற்றும் குடும்ப விழாக்களில் முசுலீம் மதத்தைச் சேர்ந்த ஞானிகளின் படங்களைக்கூட அனுமதிக்கமாட்டார்கள் என்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்று.  ஆனால், இத்திருமண நிகழ்ச்சியில் அம்மண்டபத்தில் கம்யூனிச ஆசான்கள் மற்றும் பகத் சிங்கின் புகைப்படங்கள் அலங்கரித்தன.  திருமண நாளன்று முழுவதும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் புரட்சிகரப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன.

மனிதர்களது வாழ்க்கையில் இன்பம்-துன்பம் உள்ளிட்டு அனைத்தும் ஆண்டவனால் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டுவிட்ட ஒன்று என்பது முசுலீம் மதத்தினரின் ஆழ்ந்த மத நம்பிக்கை.  இத்திருமணத்தின்பொழுதோ அம்மத நம்பிக்கைக்கு மாறாக, “திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதில்லை; வர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன” என்ற கம்யூனிஸ்டுகளின் நம்பிக்கை அனைவரையும் வரவேற்றது.  முசுலீம் சமுதாயத் திருமணங்கள், அச்சமுதாயத்தைச் சேர்ந்த மௌல்வி மற்றும் பெரியவர்கள் தலைமையில்தான் நடைபெறும்.  இத்திருமணமோ, பு.மா.இ.மு. அமைப்பாளர் தோழர் கணேசன் தலைமையேற்க, பு.மா.இ.மு. மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் பரமானந்தம், புதுக்கோட்டை மாவட்ட மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் அமைப்பாளர் வழக்குரைஞர் ராமலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்க நடைபெற்றது.

‘‘அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையவனுமாகிய அல்லாவின் திருப்பெயரால் ஆரம்பிக்கின்றேன்” என்ற குரான் வாசகத்தைச் சொல்லிய பிறகுதான் முசுலீம் திருமணங்கள் நடைபெறும். இத்திருமணமோ தோழர்களின் புரட்சிகர உரையோடு திருமணம் நடைபெற்றது.  இப்படி நடைபெற்ற திருமணத்தில் மணமக்களின் பெற்றோர்-உறவினர்கள், அமைப்புத் தோழர்களின் குடும்பத்தினர் மட்டுமின்றி, பகுதியில் வாழும் பெருவாரியான முசுலீம் மக்களும், உள்ளூர் ஜமாத் மற்றும் தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்த ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டோரும் சுயவிருப்பத்தோடு கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திச் சென்றனர்.

மணமேல்குடியில் வசிக்கும் முசுலீம் மக்களிடம் ஒரு சீர்திருத்தத் திருமணத்தை ஏற்றுக் கொள்ளும் மன மாற்றம் எப்படி சாத்தியமானது?  இத்திருமணத்தை மதச் சடங்குகளின்றி சீர்திருத்த முறையில் நடத்துவது என முடிவெடுத்தவுடனேயே, பு.மா.இ.மு. தோழர்கள் முசுலீம் மக்களிடமும், ஜமாத்தாரிடமும் திருமணத்தைச் சீர்திருத்த முறையில் நடத்த வேண்டிய அவசியம் குறித்து விளக்கியுள்ளனர்.  இந்த விளக்கமும், பு.மா.இ.மு.வின் புரட்சிகர அரசியல் மீதும், அமைப்பு நடவடிக்கைகள் மீதும் பகுதி முசுலீம் மக்களிடம் இருந்துவரும் நம்பிக்கையும் நன்மதிப்பும் – இவையெல்லாம் சேர்ந்துதான் இம்மன மாற்றத்தை உருவாக்கின.  கம்யூனிசப் புரட்சிகர அரசியல் மற்றும் நடைமுறை மூலம், முசுலீம் மதத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்களைக்கூடப் பிடித்தாட்டும் மதக் கடுங்கோட்பாட்டு வாழ்க்கை முறையில் உடைப்பை ஏற்படுத்த முடியும் என்பதை இத்திருமண நிகழ்ச்சி நிரூபித்துக் காட்டியுள்ளது.

வினவு குறிப்பு: புதிய ஜனநாயகம் இதழில் மணமகளின் தந்தை தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தின் மாநில துணைத்தலைவர் என்று வந்திருப்பது தவறான செய்தியாகும். இது குறித்து புதிய ஜனநாயகம் அடுத்த இதழில் மறுப்பு வெளியிடும் என்று ஆசிரியர் குழு தோழர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மணமகளின் தந்தை தவ்ஹீத் ஜமாஅத்தின் உள்ளூர் கிளை செயலாளராக முன்னர் பொறுப்பு வகித்துள்ளார் என்பதும் தற்போது பொறுப்பிலின்றி வெறும் உறுப்பினராக இருக்கிறார் என்றும் அந்த பகுதி தோழர்கள் கூறுகின்றனர். மற்றபடி இந்த திருமணத்திற்கு வந்திருந்த இசுலாமிய மக்களில் ஒருவர் கூட தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என அந்த இயக்கத்தினர் வேறு வழியின்றி வாதிடுகிறார்கள். அது உண்மையாயின் அந்த பகுதியில் இந்த கடுங்கோட்பாட்டு மத அமைப்புக்கு கிஞ்சித்தும் செல்வாக்கு இல்லை என்று தெரிகிறது.

__________________________________

– புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2010
__________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. “அந்தத் திருமணத்தில் குரான் ஓதப்படவில்லை; புரட்சிகரப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன!” – இது எப்படி சாத்தியமானது? ————————————————– அந்த திருமணத்தில் மட்டுமல்ல எந்த இசுலாமிய திருமணத்திலும் குர்ஆன் ஒத தேவையில்லை இந்த சாதரண விஷயம் கூட ஒங்களுக்கு தெரியவில்லை

  • ஹைதர் அலி, மற்ற எந்தக் கட்டுரை குறித்தும் கருத்து தெரிவிக்காதது ஏன் ?..

   • ///ஹைதர் அலி, மற்ற எந்தக் கட்டுரை குறித்தும் கருத்து தெரிவிக்காதது ஏன் ?..//// எனக்கு தெரிந்து மற்ற விஷயங்களிள் பொய் இல்லை எந்த ஒரு விஷயத்தையும் முழுமையாக அறிந்துக் கொள்ளாமால் விமர்சிக்க கூடாது என்பதில் உறுதியாக உள்ளவன் ஆனால் இந்த கல்யாண மேட்டர பத்தி எனக்கு நல்ல தெரியும்

 2. 1. புதிய ஜனநாயகம் இதழில் வேளியான தவறான பொய்யான செய்திக்கி மறுப்பு அந்தத் திருமணத்தில் குரான் ஒதப்படவில்லை; புரட்சிகர பாடல்கள் ஒலிபரப்பட்டன! இது எப்படி சாத்தியமானது? என்று தலைப்பிட்டு (பெட்டி செய்தியாக) வேளியாகியிருந்தது அதில் நிறைய பொய்கள் அடித்து விடப்பட்டிருக்கின்றன தவறுகளை திருத்தி கொள்ளவும். பொய் நெ.1 மணமகளோ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலத்துணைத் தலைவரின் மகள்.? பொய் நெ.2 பொதுவாகப் பச்சைக் கொடி பறக்கும் இம்மண்டபத்தில்? பொய் நெ.3 தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டோரும் சுய விருப்பத்தோடு கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திச் சென்றனர்? உண்மை நெ.1மணமகள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலத்துணைத் தலைவரின் மகளல்ல எப்புடி இப்படி ஒரு பொய்யை துனிந்து சொல்கீறிர்கள் என்று தெரியவில்லை? தவ்ஹீத் ஜமாத்தின் துணைத்தலைவர்கள்:
  எம்.ஐ சுலைமான்
  +91 9952035111
  கோவை ரஹ்மதுல்லாஹ்
  +91 9944132622 , +91 9150502450
  இவர்கள் தான் தவ்ஹீத் ஜமாத்தின் துணைத்தலைவர்கள் இவர்கள் இருவரும் இளைஞர்கள் ஒருவருக்கு 32 வயது மற்றவருக்கு 34 வயதிருக்கும் இவர்களில் யாரும் அந்த மணமகளின் தந்தை கிடையாது அப்புறம் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் மற்றும் துணைத்தலைவர் செயலாளர் யாரும் அந்த மணமகளுக்கு சொந்தம் கூட கேடயாது
  தலைவர்:நூர் முஹம்மது 9443423741
  து.தலைவர்:முஹம்மது சுல்தான்:9865048082
  செயலாளர்:அப்துல் காதர் 9842204322
  வேண்டுமேன்றால் அவர்களுடைய கைத்தொலைப்பேசி எண்கள் உள்ளன தொடர்பு கொள்ளவும் உண்மை நெ.2 பொதுவாகப் பச்சைக் கொடி முசுலிம்களின் அடையாளமாக சித்தரிக்க படுகின்றன உண்மை அதுவல்ல அப்புறம் அந்த எப்போழுதும் பச்சைக்கொடி பறக்கும் என்று ( பச்சைக்கொடி செவப்புக்கொடி இவர்களின் எதுகை மொனை ரசனைக்காக) புதிய ஜனநாயகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது அந்த மண்டபத்தில் இதுவரை எந்த பச்சை கொடியும் பறந்ததில்லை உண்மைநெ.3 தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டவர்கள் திருமணத்தில் கலந்துக் கொண்டதாக கதை அளந்து விட்டிருக்கிறது பு.ஜ. இதழ் இதுவும் அண்டபுழுகு தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த யாரும் கலந்துக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை

  • ஹைதர் அலி,
   கீ பலே ஹால்! கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது உங்களுக்கு பொருத்தம்தான்.
   இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள மணமகளின் தந்தை காரைக்குடியைச் சேர்ந்த தவ்ஹீத் ஜமாத்தின் முன்னாள் நகரச் செயலாளர். அவரின் பெயர் அப்பாஸ். இக்கட்டுரையில் மணமகளின் தந்தை தவ்ஹீதின் மாநிலத் துணைத் தலைவர் என்பது தவறாக குறிப்பிடப்பட்டிருந்தபோதிலும் அம்மண்டபத்தில் செங்கொடிகள் பறந்ததும், மகஇக பாடல்கள் ஒலிப்பரப்பட்டதும், திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுவதில்லை, வர்க்கத்தில் நிச்சயக்கப்படுகின்றன என்ற வாசகம் பொறித்த பேனர் வைக்கப்பட்டிருந்தது என்பதும் மார்க்ஸ்,எங்கெல்ஸ்,பகத்சிங் ஆகியோரின் படங்களும், வைக்கப்பட்டிருந்தன என்பதும், திருமணத்தைப் பதிவு செய்வதில் சுன்னத்துல் ஜமாத்திற்கும் தவ்ஹீதிற்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது ஒரு இஸ்லாமியர், ‘முதல்மரியாதையை கம்மூனிஸ்டுகாரனுங்க தட்டிக்கிட்டு போய்ட்டானுங்க நீங்க ஏண்டா சண்டைப் போட்டுக்கிறீங்க’ என்று கூறியதும், பந்தியில் பிரியாணி பரிமாறிய பின் சண்டை நின்றதும் உண்மையே. திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதில்லை எனும்போதே மணமகன் கடவுள் மறுப்பாளர் என்பது புரிகிறது. பின் ஏன் இரு ஜமாத்தும் திருமனத்தை பதிவு செய்து கொள்ள சண்டையிட்டனர் என்று புரியவில்லை. ஹைதர் கூறுவதுபோல குரான் ஓதப்படவில்லை என்பது பெரிய பிரச்சினையில்லாவிட்டாலும் கூட உருவப்படங்கள் வைக்கப்பட்டு ஒரு இஸ்லாமிய நிகழ்ச்சி நடைபெற்றது என்பதே பெரிய பிரச்சினைதான். மணமகனின் முயற்சிக்கு வாழ்த்துக்கள். மணமகனின் கருத்திற்கு ஆதரவளித்த மணமகளுக்கும் மணமகளின் பெற்றோர்களுக்கும் மணமகனின் பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள்.

   ஹைதர் உங்கள் வயிறு எரியுதா!

   • சாகித் ஒங்க எரிச்சலுக்கு இன்னும் கொஞ்ச நேரத்தில் தண்ணி ஊத்துகிறேன்

    • தோழர் ஹைதர் அலி, இந்த பிரச்சினையை நேர்மறையில் எடுத்துக் கொண்டு விவாதிக்கவும். இசுலாமிய மக்களிடம் கம்யூனிசம் பரவுவதும், அதையே அவர்கள் நடைமுறை படுத்துவதும் நிச்சயம் நாம் வரவேற்க வேண்டுமல்லவா. உழைக்கும் மக்கள் என்ற வகையில் இசுலாமிய மக்களின் பெரும்பான்மையினர் நம்மிடம் சேருவதைத்தான் நீங்களும் விரும்புகிறீர்கள் என்பதை பணிவுடன் நினைவு படுத்துகிறேன்.

    • இங்கு காட்டரபியாக ஒருவன் உங்களுக்கு பதில் கொடுக்க வீணாக சாகித் என்பவரை வம்பிழுக்குவது ஏனோ? இதை நியாயப்படுத்த TNTJ பைலாவில் ஏதேனும் விதி இருக்கிறதா? மற்றபடி வயிற்றெரிச்சலுக்கு தண்ணீர் வேண்டாம் gelusil இருந்தால் ஊற்றுங்கள்.

    • இது தொடர்பான ஒரு நல்ல தகவலுடன் இணையதளத்தில் விரைவில் சந்திப்போம் ஹைதர்அலி. வயிற்றெரிச்சல் எனக்கு எப்பொழுதும் ஏற்படுவதில்லை. மாற்றத்தை ஏற்றுக்கொள்பவர்களைக்குறித்து மகிழ்சியடைவதுபோல பழைய உலுத்துப்போன கோட்பாடுகளை பிடித்துத் தொங்குபவர்களிடம் அனுதாபமே ஏற்படும். அதற்கு எம்போன்றவர்களும் ஒரு காரணம் எனபதையும் உணர்ந்தவர்களே.

   • காட்டரபி,

    எதற்காக தோழர் ஹைதர் அலி வயிறு எரிய வேண்டும்? முதலில் அவர் குறிப்பிட்டது போல புதிய ஜனநாயகம் இதழில் மணமகளின் தந்தை தவ்ஹீத் ஜமா அத்தின் மாநில துணை தலைவர் என்று வந்த செய்தி தவறானது. இது குறித்து அடுத்த இதழில் மறுப்பு வெளியிடுவதாக புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு தோழர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மற்றபடி காட்டரபி குறிப்பிட்டிருக்கும் தகவல் சரியானதே.

    திருமணத்தில் குர் ஆன் ஓதப்படவில்லை என்பது ஒரு குறியீட்டுச் சொல்தான். அதே போல கம்யூனிச அடையாளங்களோடு ஒரு இசுலாமிய திருமணம் நடைபெறுவது மிக மிக அரிதான ஒன்றுதான். எனவே இத்திருமணம் குறித்து தோழர் ஹைதர் அலி மகிழ்ச்சிதான் அடைவார், வாழ்த்தும் தெரிவிப்பார்.

    • #தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டவர்கள் திருமணத்தில் கலந்துக் கொண்டதாக கதை அளந்து விட்டிருக்கிறது பு.ஜ. இதழ் இதுவும் அண்டபுழுகு தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த யாரும் கலந்துக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை#
     ஹைதரலியின் இந்த வரிகள் அவரது வயிற்றெரிச்சலைக்காட்டவில்லையா?
     தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த யாரும் கலந்துக்கொள்ளவில்லை என்ற மாபெரும் உண்மையை அவர் எங்கிருந்து கண்டுபிடித்தாரோ?
     பாவம் அவர். தவறானவர்களால் தவறாக வழிநடத்தப்படுகிறார்.

    • அன்புள்ள நண்பர் வினவுக்கு. நான் உங்களுடைய தோழன் அல்ல உங்களுடைய மொழியில் சொல்வதாக இருந்தால் நான் ஒரு மதவாதி மற்றும் வஹாபிய அடிப்படைவாதி இதை நான் உங்களிடம் பலமுறை கூறியிருக்கிறேன் இன்னும் என்னை தோழன் என்று நம்பி கொண்டிருக்க வேண்டாம். உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவன் என்ற ஒரே காரணத்திற்காக நான் கம்யூனிஸ்ட ஆகிவிட முடியாது என்பதை தெரிவித்து கொள்கிறேன்

    • @ஹைதர் அலி

     // நான் ஒரு மதவாதி மற்றும் வஹாபிய அடிப்படைவாதி இதை நான் உங்களிடம் பலமுறை கூறியிருக்கிறேன் இன்னும் என்னை தோழன் என்று நம்பி கொண்டிருக்க வேண்டாம். உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவன் என்ற ஒரே காரணத்திற்காக நான் கம்யூனிஸ்ட ஆகிவிட முடியாது என்பதை தெரிவித்து கொள்கிறேன் //

     நண்பர் ஹைதர் அலி அவர்களுக்கு வணக்கம்..

     உண்மையில் உங்களது மேற்கண்ட வசனத்தைக் கண்டு அதிர்ந்து விட்டேன்.
     உங்களை மத அடிப்படைவாதி என்று கூறிக்கொள்ள உங்களால் முடிகிற போது , மற்றொரு விசயத்தையும் நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்கள் என்று பொருள். அதாவது ஆர்.எஸ்.எஸ். , சங் பரிவார், ராம்சேனா,சிவசேனா, வி.எச்ஹ்.பி , இந்து முண்ணனி போன்ற மத அடிப்படைவாதிகள் குஜராத் தொடங்கி இந்தியா முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிராக செய்யும் ஒவ்வொரு விசயத்தையும் நீங்கள் அங்கீகரிப்பது போன்றதாகும். உங்கள் மத அடிப்படைவாதம் எப்படி இஸ்லாமிய நம்பிக்கையில் தொடங்குகிறதோ அதே போல் தான் அவர்களது மத அடிப்படைவாதமும் இந்து நம்பிக்கையில் தொடங்குகிறது. உங்கள் அடிப்படைவாதம் சரி என்று நீங்களே கூறிக் கொள்கையில் அவர்களது அடிப்படைவாதம் தவறு என்று எவ்வாறு உங்களால் கூற முடியும் ?.

     உங்கள் மத நம்பிக்கையால் எங்காவது மக்கள் படும் கஸ்டத்தில் இருந்து விடுதலை கிடைத்திருக்கிறதா ?..
     கம்யூனிசத்தினால் விடுதலை பெற்றோர் பல கோடி. உங்கள் மதம் உங்களுக்கு பொருளாதார விடுதலைக்கு என்றாவது வழிகோலுகிறதா ?..

     மதத்தின் பால் ஈர்க்கப்படுவதற்கு முன் ”நமது சமூகத்திற்கு என்ன வேண்டும் ?.. அதற்கு மதம் சரியான தீர்வா ?… இல்லை கம்யூனிசம் சரியான தீர்வா? “ என்று சிந்தித்து முடிவு எடுக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.

     சரியான் முடிவெடுப்பீர்கள் என்ற நம்பிக்கையில்

     தோழமையுடன்
     செங்கொடி மருது.

    • அன்புள்ள தோழர் ஹைதர் அலி,

     நீங்கள் இங்கே கூறியிருப்பது ஏட்டிக்கு போட்டி என்ற முறையில்தான் என்பது நம்மிருவருக்கும் தெரியும். மதம் குறித்த பிரச்சினைகளில் நீங்கள் சற்று உணர்ச்சிவசப்படுபவர் போல மற்றவர்களுக்கு, சில தோழர்களுக்கு தெரியலாம். நாங்கள் அப்படி கருதவில்லை. உங்களை மதவாதி போல நினைத்துக் கொண்டு சில தோழர்கள் விவாதிக்கிறார்கள். அந்த அணுகுமுறையில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.

     நீங்கள் குறிப்பிட்ட வகாபியிசத்துக்கு புரவலராக இருப்பது சவுதி ஷேக்குகள்தான். கூடவே அமெரிக்க அடிமைகளாவும், சொந்த நாட்டு மக்களை சுரண்டுபவர்களாகவும் இருக்கிறார்கள். கம்யூனிசம்தான் அரபு மக்களுக்கு நண்பனாக இருப்பதோடு அமெரிக்க ஏகாதிபத்தியத்தை வீழ்த்தும் வல்லமையையும் கொண்டிருக்கிறது.

     இன்றைய இசுலாமிய பெரும்பான்மை மக்கள் என்பவர்கள் வர்க்கம் என்ற முறையில் ஏழைகளாகத்தான் இருக்கிறார்கள். அவர்களுடைய சமூக விடுதலை என்பது நாம் வர்க்கம் என்ற முறையில் ஒன்று சேர்வதிலேயே அடங்கியிருக்கிறது. அந்த இணக்கத்தில்தான் நீங்கள் வினவோடு நட்போடு தோழமையோடு இருக்கிறீர்கள்.

     எனவே நீங்கள் என்ன சொன்னாலும் உங்களை தோழராக மாற்றும் முயற்சியிலிருந்து நீங்களோ, நாங்களோ பின்வாங்கமுடியாது. அது சமூக நலனுக்குகா நாம் செய்யும்முயற்சி. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு இசுலாமியத்திருமணத்தில் கம்யூனிச அடையாளங்களோடு நிகழ்வு நடைபெறுகிறது என்பது எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி என்பது உங்களது மனசாட்சிக்கு தெரியும். மற்றபடி இந்த பொருள் குறித்து வினவில் பிறிதொரு சந்தர்ப்பத்தில் பேசலாம்.

   • காட்டரபி. அஹ்லன் அஹ்லன்(வருக வருக) ////////////////கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை//////////////// இது யாருக்கு பொருந்துமுன்னு பாப்பமா /////இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள மணமகளின் தந்தை காரைக்குடியைச் சேர்ந்த தவ்ஹீத் ஜமாத்தின் முன்னாள் நகரச் செயலாளர்./// சரியாக சொன்னிர்கள் எனக்கும் இதில் மற்று கருத்தில்லை ஆனால் இப்போழுது எந்த பொறுப்பிலும் இல்லை (தேவைப்பட்டால் அவருடைய கைத்தொலைபேசி நம்பர் தர தாயர்) ////////////அம்மண்டபத்தில் செங்கொடிகள் பறந்ததும், மகஇக பாடல்கள் ஒலிப்பரப்பட்டதும், திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுவதில்லை, வர்க்கத்தில் நிச்சயக்கப்படுகின்றன என்ற வாசகம் பொறித்த பேனர் வைக்கப்பட்டிருந்தது என்பதும் மார்க்ஸ்,எங்கெல்ஸ்,பகத்சிங் ஆகியோரின் படங்களும், வைக்கப்பட்டிருந்தன என்பதும்/////// உண்மையிலும் உண்மை ////////ஜமாத்திற்கும் தவ்ஹீதிற்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது ஒரு இஸ்லாமியர், ‘முதல்மரியாதையை கம்மூனிஸ்டுகாரனுங்க தட்டிக்கிட்டு போய்ட்டானுங்க நீங்க ஏண்டா சண்டைப் போட்டுக்கிறீங்க’ என்று கூறியதும்,/////// இப்பதான் மக பொய்யனாக அவதாரம் எடுக்குறீக உண்மையில் என்ன நடந்தது ஏன்றால் நம்ம அப்பாசு இருக்கார்ல அப்பாசு அவரு கரைக்குடி காரரு என்பதினால் சிவகங்கை மவட்ட தவ்ஹீத் ஜமாத் தலைவரும் என் நண்பருமான அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு சவூதியல இருந்து நம்ம அப்பாசு போன் பொட்டு என்னுடைய மகளுக்கு தவ்ஹீத் முறைப்படி திருமணம் நடக்கவிருக்கிறது அதானல் உங்களின் தவ்ஹீத் மண பதிவேடு புத்தகத்தை எடுத்துட்டு போங்க அதில் பதிவு செய்து கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கிறார் நம்ம அப்துல் ரஹ்மான் அத நம்பிகீனு புத்தகத்த தூக்கி கிட்டு வந்தூட்டர் வந்து பாத்தவுடனே ஆக இது செவப்பு கொடியா கீது அப்ப இது வேற கலியாணம் எங்க புஸ்தாகத்துல பதிய முடியாதுன்னு சொல்லிட்டு கேளம்பி வந்துட்டாங்க இதாப்பு உண்மை //////பந்தியில் பிரியாணி பரிமாறிய பின் சண்டை நின்றதும் உண்மையே.//////// பந்திக்கி முன்னாடியை கேளம்பி போயிட்டாங்க அதானல தான் நீங்க சண்டையில்லாம அமைதியா பிரியாணி சப்பிட்டிருக்கியா அவங்க கேளம்பி போன பிறகு தான் சண்டையிம் ஒஞ்சிருக்கு /////////////////திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதில்லை///////////////// திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக எந்த முசுலீமும் நம்புறதில்லை குர் ஆனிலையும் இல்லை இது நம்ம டி விஜய ரஜேந்தர் படத்துல வர்ர பாட்டு (கால்யணந்தாம் சொர்க்கத்துல நிச்சயிக்கபடுதாம் பத்திரிக்கை மட்டும் இங்கே அச்சடிக்கப் படுதாம்) அவரு மக கலியணத்துல கொண்டு பொயி போர்டு வையுங்க பொருத்தமாக இருக்கும். அப்புறம் நம்ம டி ரஜேந்தர் மாதிரி சொர்க்கம். வர்க்கம். தர்க்கம் அப்புடியின்னு அடுக்கு மொழி வசனத்த யூஸ் பன்னி போர்டு வச்சுட்ட அது முசுலிம்களின் நம்பிக்கை அயிடுமா? ஒரு நேர்மையான பத்திரிக்கையாக இருந்தால் தள்ளு முள்ளு நடந்ததை எழுதியிருக்க வேண்டும் மணமகனிடம் தவ்ஹீத் ஜமாத்தார்கள் தாவா செய்து விட்டு வெளியேறி போனதை எழுதியிருக்க வேண்டும் ஆனால் அதற்கு மாற்றமாக (தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்த ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டோரும் சுயவிருப்பத்தோடு கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திச் சென்றனர், அக்:2010 பு.ஜ. பாக்கம் 17)திட்டி விட்டு சென்றவர்களை வாழ்த்திவிட்டு சென்றதாக எழுதியாது உண்மையா?

    • ஹைதர்,
     கீ பல ஹால். உங்களது பின்னூட்டங்களிலிருந்து உங்களது வயிறு எரிகிறது என்பது தெளிவாகிறது. இது வினவுக்கு தெரியவில்லை என்பதுதான் மர்மமாக உள்ளது.
     சரி விஷயத்திற்கு வருவோம். சவூதியில் இருக்கும் அப்பாசு புதுகையில் இருக்கும் ரஹ்மானுக்கு போனில் விபரத்தைச் சொன்னதாகவே இருக்கட்டும். ஆனால் திருமணம் நடைபெறுவதற்கு சில நாட்கள் முன்பாகவே தவ்ஹீத் ஜமாத்தினர் மணமகனை அழைத்து சுமார் ஒரு மணிநேரம் குறுக்கு விசாரணை செய்திருக்கின்றனர். அதில் மணமகன் தப்பித்தவறிக் கூட அல்லா இருக்கிறான் என்று பொருள்படும்படி எந்த ஒரு வார்த்தையையும் உச்சரிக்கவில்லை. அதுமட்டுமல்ல அல்லா இருப்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா என்று கேட்டதற்கு, திருமணத்திற்கு இக்கேள்வி அவசியமா எனப் பதிலுரைத்திருக்கிறார். விசாரணை முடிந்தவுடன் உங்களருமை நண்பர் என்ன செய்திருக்க வேண்டும், சவூதியில் உங்களுக்கு பக்கத்தில் இருக்கும் அப்பாசுக்கு போன் மூலம் இதனைத் தெரியப்படுத்தியிருக்க வேண்டும். பிறகு அப்பாசு என்ன செய்திருக்க வேண்டும் உள்ளூர் ஜமாத்தினை தொடர்புகொண்டு இந்தத் திருமணத்தில் எனக்குச் சம்மதமில்லை என்பதை விளக்கியிருக்க வேண்டும். குறுக்கு விசாரணையின்போது ரஹ்மான் தூங்கிட்டார்னு நீங்கள் அடம்பிடிக்கலாம். இருந்தபோதிலும் மண்டபத்தைப் பார்த்த பிறகாவது அப்பாசை தொடர்புகொண்டாரான்னு பாத்தாஅதுவும் இல்லை. திருமணத்தில் கலந்தும்கொண்டுவிட்டு, சண்டையும்போட்டுவிட்டு,பந்தியில் கையையும் நனைத்துவிட்டு,போததுக்கு ஏப்பமுமிட்டுவிட்டு, பிறகு கேட்டா, திருமணமா!அப்படியா!எங்களுக்கு தெரியாதே!நாங்க அலாவுதீனின் அற்புத விளக்கென்னு நெனெச்சில்ல உள்ளார போனோம்னு சொன்னா, கேக்குறவன் கேனையன்! பாத்தவன் குருடனா!

    • //நான் ஒரு மதவாதி மற்றும் வஹாபிய அடிப்படைவாதி//

     ஆயாசமாக இருக்கிறது.

    • ////ஆயாசமாக இருக்கிறது/// ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்கதீங்க என்னையே வஹாபின்னு கண்டுபிடிச்சு முதன் முதலில் பட்டம் கொடுத்ததே நீங்கதான் ஆதாரம் வேனுமா? இதோ /// தீவிர வஹாபியான உங்களை இப்பிரச்சினையில் குரானை பின்பற்ற தடுப்பது எது?//// சௌதி எனும் நரகத்தீயில் பெண் தொழிலாளர்கள்! என்கிற தலைப்புல விவாதிக்கமொது ஒங்களுக்கு ஆயாசமாக வரலையே ஏன்?

    • அப்போ நீங்க வஹாபியில்லையா? நானாத்தான் ஒங்கள வஹாபியாக்கிட்டேனா?

    • ////அப்போ நீங்க வஹாபியில்லையா? நானாத்தான் ஒங்கள வஹாபியாக்கிட்டேனா?///நீங்க தான் கண்டுபிடிச்சீங்க தவிர நீங்க என்னை வஹாபியாக்கவில்லை

   • என்னதான் வினவு பொய்யை உண்மையாக்க நினைத்தாலும் முடியாது. இந்த ஒரு கட்டுரையிலிருந்தே உங்களோட அனைத்து கட்டுரைகளும் பொய்யும் புளுகு மூட்டயுமாதான் இருக்க கூடும்.

    • இந்நிகழ்சியை பொய்யும் புழுகுமூட்டையும் என்று கூறும் அஜ்மல் அவர்களே. இந்ந நிகழ்சி உண்மை என்று நாங்கள் உங்களுக்கு எந்த வகையில் நிறுபிக்கவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?

  • உங்கள்து இல்லங்களிலோ அல்லது நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களிலோ பச்சைக்கொடி பறக்க விடுகிறீர்களோ இல்லையோ, செவப்புக் கொடியை பறக்க விடுவீர்களா! இத்திருமணத்தில் செவப்புக்கொடி பறந்ததே ஒரு மாற்றம்தான்

   • எங்களுடைய இல்லங்களில் பச்சைக்கொடி பறக்க விடுவதில்லை

 3. திய ஜனநாயகம் என்ற மாத இதழ் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பற்றி தவறான செய்தி ஒன்றை சமீபத்தில் வெளியி்ட்டது. வெளியான செய்தி தவறானது மேலும் சாத்தியமில்லாதது என்பதை சுட்டிக்காட்டும் விதமாக சம்பந்தபட்ட இதழுக்கு பின் வரும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

  மதிப்பிற்குரிய புதிய ஜனநாயகம் மாத இதழின் ஆசிரியர் சண்முகம் அவர்களுக்கு,

  ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக!

  கடந்த அக்டோபர் 2010 இதழின் 17 ஆம் பக்கத்தில் புதுக் கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில துணைத் தலைவரின் மகளுக்கு புரட்சிகரப் பாடல்கள் பாடப்பட்டு திருமணம் நடந்ததாக செய்தி வெளியிட்டிருந்தீர்கள்.

  ஆனால் மணமகளின தந்தைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. கடந்த காலங்களில் அவர் சாதாரண கிளைப் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார்.அதுமட்டுமின்றி தற்போது மாநில துணைத் தலைவர்களாக பதவி வகிக்கும் எம்.ஐ.சுலைமான் மற்றும் ஆர்.ரஹ்மத்துல்லாஹ் அவர்களுக்கு திருமணமாகும் வயதில் பிள்ளைகளும் இல்லை. மேலும் இத்திருமணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளை, மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் உட்பட எவரும் கலந்து கொள்ளவில்லை என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறோம்.

  எனவே இதையே மறுப்பு செய்தியாக வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

  குறிப்பு: இஸ்லாமிய திருமணம் என்பது மணமக்களுக்கு இரண்டு சாட்சிகளுடன் மணமகளின் தந்தை அல்லது பொறுப்பாளர் திருமண ஒப்பந்தம் செய்து கொடுப்பதே இஸ்லாமிய திருமணம்.

  இதில் மாலைகள் கூட இருக்காது.இதைத்தவிர இதில் எந்த வித சடங்குகள் , சம்பரதாயங்கள் , பாடல்கள் , வரதட்சணை ,பெண் வீட்டார்களிடமிருந்து எந்த விதமான கையூட்டலும் பெறாமலும் புரோகிதர்கள் துணையின்றி தனித்தன்மையுடன் நடைபெறும் திருமணமே இஸ்லாமிய திருமணம்.

  இதையே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தும் அதைச் சார்ந்தவர்களும் பின்பற்றி பிரச்சாரம் செய்து வருகின்றனர் குறிப்பிடுகிறோம்.

  இப்படிக்கு

  ஆர்.ரஹ்மத்துல்லாஹ்
  மாநில துணைத் தலைவர்

  • மணமகளின் தந்தை அப்பாஸ் அவர்கள் தவ்ஹீது ஜமாத் அமைப்பின் நகரத்தலைவராகவும், செயலாளராகவும் இருந்தவர். இன்றும் அவ்வமைபில் உள்ளவர்தாம். தமது சொந்த செலவில் அமைப்பிற்காக நிறைய செலவு செய்பவரும்கூட. அவருக்கும் அமைப்பிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று ராஜவம்சமான தவ்ஹீது ஜமாத் அமைப்பின் மாநில துணைத்தலைவர் கூறியிருப்பது உண்மையாக வேண்டும் என்பதுதான் எம்போன்றவரின் விருப்பம்.
   அப்பாஸ் அவர்கள் இவ்வறிக்கையை படித்தபிறகாவது புரிந்துகொள்வார் என எதிர்பார்போம்.
   திருமணத்தைப் பதிவு செய்வதில் சுன்னத்துல் ஜமாத்திற்கும் தவ்ஹீதிற்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது என்பது உண்மை.
   அவர்களின் தில்லுமுல்லுகளுக்கு ராஜவம்சத்தின் அறிக்கை ஒரு சான்று.

   • /////மணமகளின் தந்தை அப்பாஸ் அவர்கள் தவ்ஹீது ஜமாத் அமைப்பின் நகரத்தலைவராகவும், செயலாளராகவும் இருந்தவர். இன்றும் அவ்வமைபில் உள்ளவர்தாம்.////ஒரு பொய்யை மறைக்க ஆயிரம் பொய் சொல்லதீர்கள் மணமகளின் தந்தை சவூதியில் தான் வேலை செய்கிறார் அதுவும் நான் வேலை பார்க்கும் இடத்திற்கு அருகிலே அவர் இன்று தவ்ஹீத் ஜமாத்தின் எந்த பொறுப்பிலும் இல்லை (அவருடைய போன் வேண்டுமா? தர தயாரய் இருக்கிறேன்) மற்றபடி இப்போழுது டுட்டி டயம் 5 மணிக்கி(இந்தியா டயம் 7 மணிக்கி) வேல முடியும் ஒக்கந்து பேசுவேம்

    • எங்கே நந்தனை கணவில்லை ஜொதியில் கலந்து விட்டாருன்னு நெனைக்கிறேன் நந்தா ரெடியா

    • #ஒரு பொய்யை மறைக்க ஆயிரம் பொய் #
     ஹைதர்அலி அவர்களே! நீங்கள் சிந்திப்பவர்தானே! நான் அப்பாஸ் அவர்கள் காரைக்குடியில் இருக்கிறார் என் சொல்லவில்லையே. தவ்ஹீத் அமைப்பில் உள்ளார் என்றுதான் குறிப்பிட்டுள்ளேன். அவர் சவதியில் இருந்தால் அவ் வமைப்பில் இல்லை என்று பொருளாகிவிடுமா? ஒரு வேளை தவ்ஹீத் ஜமாத் தேச பக்திமிக்க அமைப்போ? வெளிநாட்டிலிருப்பவர்களை அமைப்பைவிட்டு விலக்கிவிடவார்களோ?
     அவசரக்காரனுக்கு…….

    • திருவாளர் ஹைதர்,
     மணமகன் அப்பாஸின் தொலைபேசி எண்ணைத் தாருங்கள்

    • @ ஹைதர் அலி
     ///எங்கே நந்தனை கணவில்லை ஜொதியில் கலந்து விட்டாருன்னு நெனைக்கிறேன்////

     நந்தன் – ஜோதியில் கலந்தது…. சிதம்பரத்தில் நந்தனை பார்பனபிண்டங்கள் எரித்ததையா இப்படி உவமையாக கூறியுள்ளீர்கள்?

     எப்படி உங்களால் அதை பகடி செய்ய முடிகிறது? அவ்வளவு வக்கிரம் உங்கள் உள்மனதில் இருக்கிறதா? இல்லையெனில் இதற்கு மன்னிப்பு கேட்கவும்!

     இதே போல பார்பன பாசிஸ்டுகளுக்கு குஜராத்-பெஸ்ட்பேக்கரியில் எரித்து சுடப்பட்டதும் வெறும் ரொட்டி துண்டுகளாக தெரிந்தால், அதை வைத்து பகடி செய்தால் அதையும் ஏற்கும் நிலையில் நீங்கள் இருக்கமாட்டீர்கள் என்றே நம்புகிறேன்.

     தோழமையுடன்,

     அக்காகி.

    • நந்தன் அவர்களே. ////ஹைதர்அலி அவர்களே! நீங்கள் சிந்திப்பவர்தானே! நான் அப்பாஸ் அவர்கள் காரைக்குடியில் இருக்கிறார் என் சொல்லவில்லையே. தவ்ஹீத் அமைப்பில் உள்ளார் என்றுதான் குறிப்பிட்டுள்ளேன். அவர் சவதியில் இருந்தால் அவ் வமைப்பில் இல்லை என்று பொருளாகிவிடுமா?//// அய்யா நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை அவர் சவூதியில் இருப்பதால் அதுவும் நான் வேலை செய்யும் ஊரிலே இருப்பதால் அவரை சந்தித்து அவரே நான் தவ்ஹீத் உறுப்பினர் இல்லை என்பதை போனில் அறிவிப்பார் அதற்கான சாத்தியம் இருக்கிறது தயார என்று உங்களுக்கு சவால் விடத்தான் அப்படி சுருக்கமாக சவூதியில் தான் இருக்கிறார் என்று சொன்னேன் மணமகளும் மணமகளும் தங்களது நிலையை விளக்கியது போல் மணமகளின் தந்தையை நான் இன்னும் தவ்ஹீத் ஜமாத்தில் தான் இருக்கிறேன் என்று நீங்கள் சொல்ல வைத்து விடுங்கள் பார்ப்போம் இது ஒங்களுக்கான சவால்

    • காட்டரபி
     ///திருவாளர் ஹைதர்,
     மணமகன் அப்பாஸின் தொலைபேசி எண்ணைத் தாருங்கள்//// அய்யா டுப்ளிகேட் காட்டரபி ஒரிஜினல் காட்டரபி மொகர எப்புடியிருக்கும் ந ஒனக்கு சொல்லி தரேன் 2ம் நம்பர் பின்னூட்டம் இருக்குல அதுக்கு பதிலு போட்டுறுக்காரு போயி பாரு ஒரிஜினல் காட்டரபி போன் நம்பர் கேட்டால் கொடுக்க தயார்

    • அண்ணே அக்காவி ////நந்தன் – ஜோதியில் கலந்தது…. சிதம்பரத்தில் நந்தனை பார்பனபிண்டங்கள் எரித்ததையா இப்படி உவமையாக கூறியுள்ளீர்கள்?
     எப்படி உங்களால் அதை பகடி செய்ய முடிகிறது? அவ்வளவு வக்கிரம் உங்கள் உள்மனதில் இருக்கிறதா?//// சத்தியமாக ஒரு வக்கிரமும் கேடயாதுண்ணே எப்படி எரித்துவிட்டு ஜொதியில் கலந்து விட்டார் என்று பொய் சொல்லப்பட்டதோ அது போல இந்த நந்தன் அப்பாசு தவ்ஹீத் ஜமாத்தில் இன்னும் இருக்கிறார் என்று சொல்வது பொய் அதை தான் உவமையாக சொன்னேன்

 4. புரட்சிகர அமைப்புகளில் பணியாற்றும் தோழர்கள் ஒரு மாற்று திருமணமுறையை கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கடைபிடித்து மக்கள் மத்தியில் அறிமுகம் செய்தும் வருகின்றனர். தன்னலத்தை பின்னுக்குத் தள்ளி பொது நலனுக்காக வாழும் இவர்கள் தங்களின் வாழ்க்கை நடைமுறையின் மூலம் அனைத்து மதத்தினர் மத்தியிலும் பிற யாரைக்காட்டிலும் சிறந்தவர்களாகத் திகழ்கின்றனர்.

  மாற்று திருமண வடிவம் என்ற நிகழ்வை மய்யமாக வைத்தே “அந்தத் திருமணத்தில் குரான் ஓதப்படவில்லை; புரட்சிகரப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன!” – இது எப்படி சாத்தியமானது? என்ற பெட்டிச் செய்தி வெளியிடப்பட்டிருக்கிது என்றே கருதுகிறேன். மற்றபடி அது பொய் இது பொய் என்று விவாதம் செய்து மய்யக் கருத்திலிருந்து – அதாவது மாற்று திருமண வடிவம் பற்றிய கருத்திலிருந்து விவாத்தை திசை திருப்ப முயல வேண்டாம். எது சிறந்த திருமண முறை என்பது குறித்து அறிய ”உலகின் அழகிய மணமக்கள்” என்ற கட்டுரையில் எனது பின்னூட்டத்தைப் பார்க்கவும்.

  ஊரான்.

 5. மணமகளின் தந்தை டி.என்.டி.‍_ன் பொறுப்பாளர் எனத் தவறாகக் குறிப்பிடப்பட்டுவிட்டது என்பது உண்மைதான். ஆனால்,பின்னூட்டமிடுபவர்கள் அதனால் மட்டும் கோபப்படுவதாகத் தெரியவில்லை.எனவே கோபத்திற்கான உண்மையான காரணத்தைக் குறிப்பிடவேண்டும். அதுவே, ஒரு அவசியமான விவாதத்திற்கு வழிவகுக்கும். திருமணம் வர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது, பற்றி நண்பர்கள் கருத்துச் சொல்லலாம். பல இடங்களில் பு.ஜ செய்தி நகல் எடுத்துக் கொடுக்கப்பட்டு வருவதாக அறிகிறோம்.இஸ்லாமிய நண்பர்களிடம் ஆரோக்கியமான விவாதத்தை எதிர்பார்க்கிறோம். குருசாமிமயில்வாகனன்.

  • ஆரோக்கியமான விவாதத்தை எதிர்பார்க்கிறோம்

   —————–

   அதே அனைவரின் எதிர்ப்பார்ப்பும்..

 6. இசுலாமிய சமூகத்தில் ஒரு சீர்திருத்தத் திருமணம்! | வினவு!…

  மணமேல்குடியில் வசிக்கும் முசுலீம் மக்களிடம் ஒரு சீர்திருத்தத் திருமணத்தை ஏற்றுக் கொள்ளும் மன மாற்றம் எப்படி சாத்தியமானது?…

 7. I am not a indian,therefore i dont know more about this matter but,
  சுருக்கமாக இஸ்லாத்தைப் பற்றி அறிந்திருந்தால் இந்த திருமணத்தை இஸ்லாத்துடன் இணைத்திருக்கமாட்டீர்கள். சாதாரனமாக முஸ்லிம் அல்லாதவர்கள் திருமணத்திலும் முஸ்லிம்கள் கலந்துசிறப்பிப்பார்கள், அது தவரும் அல்ல எனவே TNTJ சகோதரர்கள் கலந்துகொண்டிருப்பின் ஏன் அவர்களைமாத்திரம வம்பிக்கு இழுக்கவேண்டும். இந்த ஒருதிருமணத்தைப் பார்த்துவிட்டு முஸ்லிம் மக்களிடம் கம்யூனிசம் பரவுவதுஎன்பது சிருபிள்ளைத்தனமானது ஏனெனில் இது இன்டனெட் யுகம். சற்று இன்டனெட்டில் உலன்றுபாருங்கள் இதைப்போன்று ஆயிரம் திருமணங்கள், திருமணத் தம்பதிகள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேயிருக்கிறார்கள் (ஒவ்வோருநாளும்). இதையெல்லாம் அலட்டிக்கொள்வதற்கு முஸ்லிம்களுக்கு நேரமில்லை.

  • ///சாதாரனமாக முஸ்லிம் அல்லாதவர்கள் திருமணத்திலும் முஸ்லிம்கள் கலந்துசிறப்பிப்பார்கள், அது தவரும் அல்ல ////

   இஸ்லாமிய முறைப்படி நடக்காத இஸ்லாமியர்களது திருமணத்திலுமா ?..

   அல்லா கோவிச்சுக்கப் போறாரு சாரு ..

  • ஆனாலும், தவ்ஹீத் ஜமாத்தினர் தம் அமைப்பு சாராத பிற இசுலாமியர்களின் திருமணங்களில்கூட ‘ஹராமான’ திருமணம் என்று கலந்துகொள்வதில்லை.

 8. புரட்சி என்றால் என்ன? ஆயஇரம் பொய் சொல்லி ஒரு கல்யானம். அவற்றில் சில பொய்கள் இவை. பொய் சொல்வதுதான் புரட்சியா?

  • இதோ வந்துட்டாருடா .. வாங்க கோயபல்சின் வாரிசே ..

   ஏதோ இஸ்லாமிய முறைப்படி நடந்த திருமணத்தை இங்கே புரட்டி கம்யூனிஸ முறைத் திருமணம் என்று பொய் கூறியது போல் தான் வாதாட வருகின்றனர் இந்த பார்ப்பனக் கைக்கூலிகள்.

   ஒரு சில தகவல்கள் தவறாக கிடைத்திருக்க அதை தோழர்கள் பிரசுரித்ததால் அதை இவ்வாறு பொய் என்று கூறி ஆதாயம் தேடத் திரியும் கும்பலுக்கு பதில் ஒன்று தான்.

   நீங்கள் எவ்வளவு குரைத்தாலும் உண்மை மறைக்கப்பட முடியாதது. ஒரு நாள் வெளிவந்தே தீரும்.

   தவறான தகவல்கள் சிறிய பெட்டிச்செய்தியில் அதிக சிரத்தை எடுக்காத காரணத்தால் வந்து விட (தவறுகள் கண்டிக்கத் தக்கவையே) அதை பொய் சொல்கிறார்கள் என்று மாற்றிக் கூறும் முட்டாள்களே உங்களிடம் கேட்க விரும்பும் ஒன்று தான்.

   இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த தோழர்கள் இருவர் மணவாழ்வில் புரட்சிகர முறையில் இணைந்ததைப் பற்றி ஒரு கருத்து வெங்காயமும் சொல்லாதது ஏன்?.. மணமக்களின் தந்தையின் பதவி பற்றி தவறான செய்தி வெளியானதற்கு குதிக்கின்ற நீங்கள்.. சரியான முறைப்படி வரதட்சணை வாங்காமல் நடந்த இந்தத் திருமணத்தை எதிர்ப்பது ஏன் ?..
   (இஸ்லாமியத் திருமணங்கள் அனைத்தும் வரதட்சனை இல்லாமல் நடக்கின்றன என்று ஒரு மகா பொய்யை எந்த முட்டாளும் இங்கு மொழியாது என்று நம்புகிறேன்)

   • நாங்கள் சொல்வதுதா சரி என்று மார் தட்டும் ஈங்கள் சில பொய்களை ஏன் மூடி ம்றைக்கிறீர்கலள்? ‘\’[ஒரு மூட்டை பொய்களுக்கு ஒரு பொய் பதம்.\]என்பது தெரியாதா உங்களுக்கு?

 9. மகிழ்ச்சிக்குறிய மாற்றம்..

  வரவேற்கத்தக்கது..

  இது போல நிறைய மாற்றம் நிகழ வாழ்த்துகள்.

 10. நல்ல சிந்தனை விதைத்த வினவுக்கு நன்றி,

  “மதம் ஒரு அபின் “என்று சொன்ன காரல்மார்க்ஸ் ய் நினைத்து பார்க்கிறேன்.

  முற்ப்போக்கு எண்ணத்தோடு இல்லறம் கண்ட மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.

  …மெய்தேடி.

 11. […] This post was mentioned on Twitter by karthick, சங்கமம். சங்கமம் said: இசுலாமிய சமூகத்தில் ஒரு சீர்திருத்தத் திருமணம்!: மணமேல்குடியில் வசிக்கும் முசுலீம் மக்களிடம் ஒரு சீர்திருத்தத் திர… http://bit.ly/a8mC1Y […]

 12. மணமேல்குடியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வரதட்சணை மிக மிக அதிகம். 7 லட்சம் ரொக்கம், 1.5 கிலோ தங்கம், ஒரு வீடு என்னும் அளவில் தற்பொழுது இருக்கின்றது. தவ்ஹீது அமைப்பு உறுப்பினர் வீட்டுக் கல்யாணங்கள் சில தவிர மற்ற அனைத்துத் திருமணங்களிலும் பெரும் அளவிலான வரதட்சணை கொடுக்கப்படும். அலாவுதீனுக்கும் சப்னா ஆஸ்மிக்கும் நடைபெற்ற திருமணத்தில், வரதட்சணை இல்லாததை முதலில் வரவேற்போம். தவ்ஹீது அமைப்பினரும் இதனை ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கின்றேன்.

  மணமேல்குடியைச் சுற்றியுள்ள பகுதிகளில் அனைத்துத் திருமணங்களும் சுன்னத் ஜமாஅத் அமைப்பினரின் திருமணப் பதிவு புத்தகத்தில் மட்டுமே பதிவு செய்யப்பட்டு வருகின்றன, தவ்ஹீது அமைப்பு உறுப்பினர்களின் திருமணங்கள் உட்பட. அப்பகுதிகளில் தவ்ஹீது அமைப்பினர் திருமணப் பதிவு புத்தகம் கூட வைத்துக்கொள்ள முடியாது. அத்தகைய இஸ்லாமிய பழமைவாதிகள் நிறைந்திருக்கும் பகுதியில், இஸ்லாமிய சடங்குகளை பின்பற்றாமல் நடைபெற்ற திருமணத்திற்கு வாழ்த்துகள்.

 13. .சுருக்கமாக இஸ்லாத்தைப் பற்றி அறிந்திருந்தால் இந்த திருமணத்தை இஸ்லாத்துடன் இணைத்திருக்கமாட்டீர்கள். சாதாரனமாக முஸ்லிம் அல்லாதவர்கள் திருமணத்திலும் முஸ்லிம்கள் கலந்துசிறப்பிப்பார்கள், அது தவரும் அல்ல எனவே TNTJ சகோதரர்கள் கலந்துகொண்டிருப்பின் ஏன் அவர்களைமாத்திரம வம்பிக்கு இழுக்கவேண்டும். இந்த ஒருதிருமணத்தைப் பார்த்துவிட்டு முஸ்லிம் மக்களிடம் கம்யூனிசம் பரவுவதுஎன்பது சிருபிள்ளைத்தனமானது .

  • @@@@@@@@@@
   சுருக்கமாக இஸ்லாத்தைப் பற்றி அறிந்திருந்தால் இந்த திருமணத்தை இஸ்லாத்துடன் இணைத்திருக்கமாட்டீர்கள். சாதாரனமாக முஸ்லிம் அல்லாதவர்கள் திருமணத்திலும் முஸ்லிம்கள் கலந்துசிறப்பிப்பார்கள், அது தவரும் அல்ல எனவே TNTJ சகோதரர்கள் கலந்துகொண்டிருப்பின் ஏன் அவர்களைமாத்திரம வம்பிக்கு இழுக்கவேண்டும்.
   @@@@@@@@@@@@@@@@

   இதிலேருந்து எனக்கு புரிவது ஒரு விசயம்தான், குறிப்பிட்ட இந்த திருமணம் இஸ்லாமிய குடும்பத்தில் நடந்திருந்தாலும், இஸ்லாமிய முறைப்படி நடக்காததால் அது அவர்கள் முஸ்லிம்களே அல்ல. மாற்று மதத்தினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதை போலத்தான் ஜமாத்து நண்பர்களும் கலந்துகொண்டிருக்கின்றனர்.

   ஆக நாட்டாமை மதத்திலேருந்தே தள்ளி வச்சிட்டார்!

   • ////இதிலேருந்து எனக்கு புரிவது ஒரு விசயம்தான், குறிப்பிட்ட இந்த திருமணம் இஸ்லாமிய குடும்பத்தில் நடந்திருந்தாலும், இஸ்லாமிய முறைப்படி நடக்காததால் அது அவர்கள் முஸ்லிம்களே அல்ல. மாற்று மதத்தினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதை போலத்தான் ஜமாத்து நண்பர்களும் கலந்துகொண்டிருக்கின்றனர்.
    ஆக நாட்டாமை மதத்திலேருந்தே தள்ளி வச்சிட்டார்!//// மணமகன் அலாவுதீன் மாதிரி நடிக்கமா உண்மையை பேசுகிற நம்ம கலீல் ரஹ்மான் என்கிற சொங்கொடியின் யாரு முசுலிமாக இருக்க முடியும் என்பதற்கான அழகான விளக்கம்
    மனதளவில் எப்போது நான் கடவுள் இல்லை என உணர்ந்தேனோ அக்கணமே நான் மதங்களை விட்டு வெளியேறிவிட்டேன் என்பதல்லவா உண்மை. நான் என்பது என் சான்றிதழ்களில் இருக்கும் என் பெயரோ மதமோ அல்ல. அவைகள் வெறும் அடையாளம் மட்டுமே. என்ன செய்கிறேன்?, எப்படி செயல்படுகிறேன்?, என்னவிதமாய் சிந்திக்கிறேன்? என்பவைகள் மட்டுமே நான் என்பதை தீர்மானிக்கும். அந்த வகையில் நான் ஒரு கம்யூனிஸ்டாக இருக்க முயற்சித்துக்கொண்டிருப்பவன். நான் பிறந்த மதம் உட்பட எந்த மதத்தின் சாயலும் என்னுடைய செயலில் தென்பட்டுவிடாதிருக்க மிகுந்த முனைப்பெடுத்துக் கொண்டிருக்கிறேன். மட்டுமன்றி என்னுடைய செயலில் சாரமற்று மதத்தின் சாய்ம் ஒட்டிக்கொண்டிருப்பதாக யாரேனும் சுட்டிக்காட்டினால் அதை மாற்றிக்கொள்ள அக்கணம் முதல் ஆயத்தமாயிருக்கிறேன்.
    மதம் சார்ந்த எந்த சலுகைகளும் எனக்கு அவசியமில்லை, அதை ஏற்றுக்கொள்ள நான் சித்தமாயில்லை என்பதை வெளிப்படுத்த ஒரு சிறிய எடுத்துக்காட்டு தரலாம் என எண்ணுகிறேன். இங்கு சௌதியில் நோன்பு மாதம் முழுவதும் முஸ்லீம்களுக்கு ஆறு மணிநேர வேலையும் ஏனையோருக்கு எட்டுமணிநேர வேலையும் என்பது விதி. ஆனால் நான் ஏனையோரைப்போல எட்டுமணிநேரம் வேலை பார்த்து வருகிறேன் என்பதும் அந்த இரண்டு மணி நேர வேலைக்கு ஓவர்டைம் வேண்டாம் என எழுதிக்கொடுத்திருக்கிறேன் என்பதையும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
    இதன் மூலம் என் பெயரில் மதம் ஒட்டியிருப்பதற்கு நடைமுறை சார்ந்த காரணத்தைத் தவிர சலுகைகளோ பலன்களோ காரணமல்ல என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன். இதற்குப்பிறகும் தகுந்த காரணமின்றி நான் சலுகைகளுக்காகவோ, பலன்களுக்காகவோ தான் பெயர் மாற்றாமலிருக்கிறேன் எனக்கூறுவோரை அலட்சியம் செய்கிறேன்.
    என் செயல்பாடுகளில் மதம் இல்லை என ஐயமற தெரிந்த பின்னும் பெயர் குறித்து கேள்வி எழுப்புபவர்களின் அரசியல் என்ன?

  • ஆனாலும், தவ்ஹீத் ஜமாத்தினர் தம் அமைப்பு சாராத பிற இசுலாமியர்களின் திருமணங்களில்கூட ‘ஹராமான’ திருமணம் என்று கலந்துகொள்வதில்லையே நல்லவரே!

 14. எல்லோருமே தயவு செய்து உண்மையான இஸ்லாமிய திருமணம் எப்படி இருக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் விளக்கி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு விவாதிப்பது நல்லது. ஒரு சிறு உதாரணம், உங்கள் திருமணங்களை எவ்வளவுக்கு எவ்வளவு சிக்கனமாக எளிமையாக நடத்த முடியுமோ அவ்வாறே நடத்துங்கள் என்பதுதான் நபிமொழி . இஸ்லாமிய மக்கள் வரதட்சணை,ஆடம்பரம் என்று நபிமொழிக்கு மாறாகத்தான் செய்து கொண்டு இருக்கிறார்கள். கம்யுனிஸ்டுகளுக்கு முன்பே மிகப்பெரிய புரட்சியை இஸ்லாமிய மதமும் ,நபிகளாரும் செய்திருக்கிறார்கள். நவீன காலத்தில் கூட முஸ்லிம் மக்களிடம் உள்ள இஸ்லாத்துக்கு விரோதமான ஒரு சில மூட நம்பிக்கைகளை களைவதில் சமுதாய இயக்கங்கள் முழு மூச்சாக ஈடுபட்டுக்கொண்டுதான் உள்ளன. தவ்ஹீத் ஜமாஅத் வரதட்சணை இல்லாத திருமணங்களை ஆயிரக்கணக்கில் நடத்திக்கொண்டுதான் உள்ளது. மேற்படி திருமணத்தை இரண்டு வீட்டாரும் முழு விருப்பத்தோடுதான் செய்தார்கள் என்றால் இதில் எந்த ஜமாத்தோ,தனி மனிதரோ தலையிட முடியாது.வேண்டும் என்றால் இது தொடர்பான மத ஆலோசனைகள் மட்டுமே செய்ய முடியும். புரட்சி,புரட்சி,புரட்சி என்பவர்கள் தயவு செய்து இஸ்லாமிய வரலாற்றையும்,நபிகளின் வாழ்வையும் முழுமையாக படிக்கவும். வினவில் பல கட்டுரைகள் இப்படிதான் மத எதிர்ப்பு என்கிற போர்வையில் அர்த்தமற்றதாகவே வருகிறது. தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினரோ,அல்லது தமிழகத்தில் ஏதாவது ஒரு முஸ்லிம் அமைப்பை சேர்ந்தவர்களோ உடனடியாக வினாவை சந்தித்து இஸ்லாமிய அடிப்படைகளை விளக்குங்கள்,அல்லது அது சம்பந்தமான புத்தகங்களையாவது கொடுங்கள். இனிமேலாவது இஸ்லாமிய தொடர்புள்ள கட்டுரைகள் எழுதும் பொது பயன்படும்.

 15. குவைத் தமிழன் உள்ளிட்ட இஸ்லாமிய நண்பர்களுக்கு,

  ”உண்மையான இஸ்லாமிய திருமணம் எப்படி இருக்க வேண்டும்” ”தயவு செய்து இஸ்லாமிய வரலாற்றையும்,நபிகளின் வாழ்வையும் முழுமையாக படிக்கவும். வினவில் பல கட்டுரைகள் இப்படிதான் மத எதிர்ப்பு என்கிற போர்வையில் அர்த்தமற்றதாகவே வருகிறது. தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினரோ,அல்லது தமிழகத்தில் ஏதாவது ஒரு முஸ்லிம் அமைப்பை சேர்ந்தவர்களோ உடனடியாக வினாவை சந்தித்து இஸ்லாமிய அடிப்படைகளை விளக்குங்கள்,அல்லது அது சம்பந்தமான புத்தகங்களையாவது கொடுங்கள். இனிமேலாவது இஸ்லாமிய தொடர்புள்ள கட்டுரைகள் எழுதும் பொது பயன்படும்” என்ற உங்களைப்போன்றோரின் ஆதங்கம் புரிகிறது.

  மாற்று திருமண வடிவங்களை பேசுவதிலும் நடைமுறைப் படத்தவதிலும் இஸ்லாமிய மத எதிர்ப்பு எங்கே வருகிறது. திருமண வடிவங்களில் எது சிறந்தது என்பதே விவாதத்திற்குரியது.

  1.விதி விலக்காக ஒரு சில திருமணங்களைத்தவிர ஆகப் பெரும்பாலான திருமணங்கள் ”சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதில்லை, அவை வர்க்கத்தில் நிச்சயிக்கபடுகின்றன” என்பதே நடைமுறை எதார்த்தம். இந்த எதார்த்த உண்மை புரட்சிகரத் திருமணங்களுக்கு மட்டமல்ல எல்லாத் திருமணங்களுக்கும் பொருந்தும்.

  2. மணமகனின் அல்லது மணமகளின் உருவத் தோற்ற்ம், அழகு குறித்த அம்சங்களைப் பார்ப்பதை விடுத்து மணமக்கள் உழைப்பை நேசிக்கிறார்களா என்பதே மணப்பொருத்தத்தில் மிகச்சிறந்த மணப்பொருத்தம் என புரட்சிகரத் திருமணமுறை வலியுறுத்துகிறது. யார் உழைப்பை நேசிக்கிறார்களோ அவர்களே நடை முறையில் பிறரை மதிப்பவர்களாக,
  நேசிப்பவர்களாக இருக்கிறார்கள். இது வர்க்க சிந்தனையிலிருந்து வருகிறதேயொழிய மதக்கோட்பாடுகளிலிருந்து எழுவதில்லை.

  3. வரதட்சணை, சீர், மொய் உள்ளிட்ட நடவடிக்கைகள் உயரிய மனித உறவை வெறும் பண உறவாகச் சிறுமைபப்படுத்தும் கயமைத் தனத்தை ஒழித்துக்கட்டுவதில் புரட்சிகரத் திருமண முறை முன்னோடியாகத் திகழ்கிறது.

  4. திருமணத்தில் தாலி உள்ளிட்ட சடங்குகள், சம்பிரதாயங்களை கடை பிடித்தாலும், கடைபிடிக்காவிட்டாலும் தம்பதியர் தங்களுடைய வாழ்க்கையில் எதிர்கொள்ளும் எந்தப்பிரச்சனையையும் தீர்க்க உதவுவதில்லை என்பதே எதார்த்தம். அப்படி இருக்க எதற்காக இந்தச் சடங்குகள் (அந்தந்த மதத்திற்கு ஏற்ப) சம்பிரதாயங்கள்?
  இதில் பணவிரயம் என்பது மட்டுமல்ல பிரச்சனை; வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்பங்களுக்கு, பிரச்சனைகளுக்கான உண்மைக்காரணத்தைத் கண்டறியும் வழிமுறைகளை பின்பற்றவும் அவைகளைக் களையவும் தடையாக நிற்கின்றனவே. அதனாலேயே சடங்குகள், சம்பிரதாயங்களை தவிர்க்கக்கோருகிறது புரட்சிகரத் திருமண முறை.

  5. வாழ்க்கையில் இருவருக்குமிடையில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை பேசித் தீர்த்துக்கொள்வதும் விட்டுக் கொடுக்கக்கூடிய வற்றில் விட்டுக் கொடுத்து வாழ்வதும் என்கிற இரு பாலருக்குமான சம உரிமையை வலியுறுத்துகிறது புரட்சிகரத் திருமணம். தீர்க்கமுடியாத அளவிற்கு முரண்பாடுகள் முற்றிவிட்டால் இருவரும் நிபந்தனைகள் ஏதுமின்றி பிரிந்து வாழவோ அல்லது தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வேறு துணையை தேடிக் கொள்ளவோ இரு பாலருக்குமான சம உரிமையைப் பேணுகிறது புரட்சிகரத் திருமண முறை.

  6. தம்பதியர் தன் குடும்பம் தன் சுற்றம் என்று வரம்பிட்டுக் கொள்ளாமல், யாருக்கு அநீதி இழைக்கபட்டாலும் அதற்காகப் போராட வேண்டும் என்ற பிறர் நலன் பேணும்
  பண்பை வலியுறுத்துகிறது புரட்சிகரத் திருமண முறை. அதனால்தான் பிற யாரைக்காட்டிலும் இத்தோழா்கள் முன்னோடிகளாகத் திகழ்கிறார்கள். இதற்கான சான்றுகளை புரட்சிகர இயக்கங்களின் செயல்பாடுகளை தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்குத் தெரியும்.

  இவ்வாரான சிறந்த அல்லது இதைவிடச் சிறந்த திருமண முறை மற்றும் வாழ்க்கை நெறிகளை வலியுறுத்தும் மார்க்கம்/பண்பு ”நடைமுறையில்” இருக்கமேயானால் இதை அன்பா்கள் ஆதாரத்துடன் வெளியிட்டால் பிற பதிவர்களுக்கு அது பயன்படுமே.

  மேலும், எது சிறந்த திருமண முறை என்பது குறித்து விவாதிக்க ”உலகின் அழகிய மணமக்கள்” என்ற கட்டுரையில் எனது பின்னூட்டத்தைப் பார்க்க மீண்டும் ஒருமுறை மீள் பதிவு செய்கிறேன்.

  ————————-
  ”புரட்சிகரத் திருமணங்கள் தேவைதானா!
  (உலகின் அழகிய மணமக்கள்! கட்டுரையின் மீதான விவாதத்தையொட்டி எழும் கேள்விகளும், அதற்கான விடைகளையும் இங்கே தொகுக்கிறேன்.)
  பதிவர்களுக்கு வணக்கம்.
  வழக்கமான திருமணத்திலிருந்து இந்தத் திருமணம் மாறுபட்டதாக இருக்கிறது. ஆனால், இதில் சரி தவறு என்ற அறிவு பூர்வமான விவாதத்தை நடத்துவதை விடுத்து பதிவர்கள் பொருளற்ற அல்லது தலைப்பிற்கு தொடர்பில்லாத கருத்துக்களை முன்வைப்பது, பதிவர்களை எது சரி என்று எடை போடுகின்ற ஆற்றலை வளர்ப்பதற்கு பதிலாக சலிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.
  அவரவர்கள் தங்களுக்குத் தெரிந்த, தாங்கள் உணர்ந்ததை மட்டுமே, சரியானது என்ற வாதத்தை முன்வைக்கிறார்கள். “People not talk about the world(reality), but about their perception” அதாவது, எதார்த்தம் என்பதை எதார்த்தமாகவே உணரும் போதுதான் எல்லோரும் ஒரே கருத்தை வந்தடைய முடியும். அந்த எதார்த்தத்தை அல்லது உண்மையைக் கண்டறிவதற்கு (ஜார்ஜ் தாம்சனின் கூற்றுபடி) புலனறிவு, பகுத்தறிவு, நடைமுறை என்ற இயங்கியல் / அறியவியல் அணுகுமுறைதான் எந்த ஒரு செயல்பாட்டையும் சரியா தவறா என்பதை தீர்மானிக்க உதவும்.
  இங்கு விவாதம் என்பதே வடிவம் சார்ந்த தாக அமைந்து விட்டதால் அதனுள் நின்று கருத்துகளை பகிர்ந்து கொள்ள வேண்டியதாகிவிட்டது. திருமணத்திற்கு பிறகு வர இருக்கின்ற வாழ்க்கை பிரச்சனைகள் இங்கு விவாதத்திற்கு வரவில்லை அல்லது அது தனியான பிரச்சனை. அதனால், கம்யூனிஸ்டுகளுக்கு மட்டுமல்ல, ஒரு பண்பாடு என்ற முறையில் இதன் வடிவத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு பேசுவது சரியாக இருக்கும்.
  திருமணத்தை ஏன் ஊர்கூட்டி நடத்த வேண்டும்? பழைய திருமண முறைகள் எல்லாம் ஊர்க்கூட்டித்தான் நடத்தப்படுகிறது. ஆனால், ஆடம்பரமும் சடங்கு சம்பிரதாயங்களும் இல்லாத முறையில் புரட்சிகரத் திருமணம் நடத்தப்படுகிறது. இங்கு எளிமை என்ற விசயத்தை ஏன் சொல்லவில்லை எனில், பழைய திருமணமுறையில் நடக்கும் திருமணங்களில் கூட எளிமையுடன் நடத்தப்படுகிறது. ஆனால், சடங்கு சம்பிரதாயத்தை புறக்கணித்து நடத்தப்படுவதில்லை. காதலித்து ஓடிபோய் திருமணம் செய்து கொள்பவர்கள் கூட, “கோயில்ல வச்சி ஒரு தாலி கட்டிட்டுவது” என்ற சடங்கைச் செய்கிறார்கள். ஆகையால், ஆடம்பரம், சடங்கு சம்பிரதாயம் ஆகியவற்றை புறக்கணித்து நடக்கிறது என்பதுதான் இந்தத் திருமணத்தின் முக்கிய அம்சம்.
  ====================================================================
  பழைய திருமணமுறைகள் எவ்வாறு நடத்தப்படுகிறது?
  முதல் பொருத்தம் கருப்பா, சிவப்பா; நெட்டையா, குட்டையா; ஊத்தப்பல்லா, நல்லப்பல்லா; சப்பை மூக்கா; மாறு கண்ணா, நல்ல கண்ணா; காது, நடை, பாவனை, குரல்….. ஆணா இருந்தா ஹாண்ட்ஸம்ப்; பெண்ணா இருந்தா குடும்ப லட்சணம்; இப்படி ஜோடி பொருத்தத்திற்கே ஆயிரம் இருக்கிறது.
  இரண்டாவது வசதி; ஆணா இருந்தா என்ன வேலை, கை நிறைய சம்பளம் (குறிப்பா கவர்மெண்ட் மாப்பிள்ளையா), பொண்ணை உட்கார வச்சி சாப்பாடு போடுவானா (அதாவது, உழைக்காமல் வாழவேண்டும், உழைப்பை வெறுப்பது); சம்பளத்தோடு மேற்படி வருமானம்(கிம்பளம்) எவ்வளவு (அதாவது மாப்பிள்ளை ஊரை ஏமாற்றத் தெரிந்தவனா); வீடு நிலபுலம் சொத்து, அப்பாவோட சேமிப்பு, வங்கி இருப்பு; ஏழையாக இருந்தால் ஆடு மாடு என வசதி பார்த்து – இதனை பங்கு போட உடன் பிறந்தவர்கள் (நாத்தனார், கொழுந்தனார், மூத்தார்) இருக்கிறார்களா; சாதி சணம், சொந்த பந்தம், பலம் எவ்வளவு (நாளைக்கு ஏதாவது தகராறுன்னா தேவைப்படுமே!) என்பதை உறுதி செய்து கொண்ட பிறகே, அடுத்த பொருத்தத்திற்கு செல்கின்றனர்.
  இதே போல பெண்ணைத் தேடுபவர்கள், கலரா இருக்க வேண்டும். (ஐஸ்வர்யா ராய் போல இது பையனின் எதிர்ப்பார்ப்பு) இதற்குமேல், பையனை பெற்றவர்கள் எதிர்பார்ப்புகள் தனி. மற்ற உருவப் பொருத்தங்கள் மேற்சொன்ன வகையில். முதல் விசயமே, பெண்ணுக்கு உடன் பிறந்தவர்கள் குறிப்பாக ஆண் பிள்ளைகள் இருக்கக் கூடாது (எதிர்காலத்தில் மாமனாரின் சொத்து முழுக்க இவனுக்கு வரவேண்டும். இப்போதைக்கு வாங்குவதையும் விடுவதில்லை). முன்பெல்லாம், பெண்ணோடு பிறந்த ஆண்கள் நிறைய இருக்க வேண்டும் என்று கருதினர் (மாமன் மச்சான்கள் அதிகமாக இருப்பதை எதிர்ப்பார்ப்பார்கள், காரணம் ஆபத்துக்கு உதவுமே என்று).
  சாதாரண வீட்டு பெண்களாக இருந்தால், புகுந்த வீட்டில் வந்து எல்லோருக்கும் அடிமையாக வேலை செய்ய வேண்டும். அதாவது, தொழில் சார்ந்த வேலைகள் மற்றும் துணி துவைப்பது, பாத்திரம் விளக்குவது, ருசியாய் சமைப்பது….மொத்தத்தில் உழைத்துக் கொட்டத் தயாராக இருக்க வேண்டும்.
  வேலைக்கு போகும் பெண்ணாக இருந்தால், சம்பளத்தை கவரோடு மாமியாரிடம் அல்லது கணவனிடம் கொடுப்பாளா? தன்னை பெற்று, வளர்த்து, படிக்க வைத்து, ஆளாக்கி வேலை வாங்கி கொடுத்த பெற்றோர் மற்றும் உற்றார் உறவினருக்கு ஆபத்து கட்டத்தில் கூட அந்தப் பெண் உதவக் கூடாது. இதில் வேலை வேறு வேறு இடத்தில் இருந்தால் வேலையை விடக்கூடாது, மாற்றிக்கொண்டு வரவேண்டும். இது எதுவும் பொருந்தாத பட்சத்தில் வேலையை விடத் தயாராக இருக்க வேண்டும்.
  அடுத்து நகை. பவுன் கணக்கிலா, கிலோ கணக்கிலா; கார் பங்களா சீர் எவ்வளவு தேறும்? சாதாரண குடும்பத்திலே டூவீலரில் தொடங்கி கோட்டு சூட்டு என நீண்டு செருப்பைக் கூட விடாமல் வாங்க வேண்டும். தனக்கு தேவைப் படுகிறதோ இல்லையோ வாசிங் மிசின், ஏசி, ஃபிர்ட்ஜ், கட்டில் மெத்தை எனத் தொடங்கி ஊறுகாய்ச் சட்டிவரை எதையும் விடுவதில்லை. இவையெல்லாம் திருமணத்தன்று மேடையின் அருகிலே, மணமக்களுடன் பொருட்காட்சி வைக்க வேண்டும். சில வசதி படைத்த திருமணங்களில் இந்த பொருட்காட்சிக்கு தனி ஹாலே தேவைப்படுகிறது.
  இவையேல்லாம் உறுதி செய்த பிறகுதான் ஐயரைப் பார்ப்பது, ஜாதகப் பொருத்தம் பார்ப்பது; ஜாதகப் பொருத்தம் முன்னப்பின்னே இருந்தாலும் மேலே சொன்ன பொருத்தங்கள் பொருந்திவிட்டால் ஜாதகப் பொருத்தத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். இதற்கு ஐயரும் துணை புரிவார்.
  ஒற்றரை வைத்து உளவு பார்ப்பது!
  என்ன உளவு? சாதி உறுதி செய்வது; பையன் (பீடி சிகிரேட்டு, தண்ணி, கிண்ணி, சீட்டு, பொம்பள கிம்பள இத்தியாதி இத்தியாதி) நல்லவனா கெட்டவனா, பெண் நல்லவளா (ஆண்களுடன் இயல்பாகும் பழகுவது ஒரு குற்றம் என்ற வகையில்), குறிப்பாக பெண்ணுடைய தாயார் நல்லவளா, சொல்லப்பட்ட சொத்து பத்து உண்மைதானா என உளவு (CIA, RAW, ISI, KGB இவர்களெல்லாம் எம்மாத்திரம்) பார்த்து உறுதி செய்து கொண்ட பிறகே அடுத்த படலம் தொடரும்.
  இனி பெண் பார்க்கும் படலம்; மாப்பிள்ளை பார்க்கும் படலம்;
  முதலில் நெருங்கியவர்கள் மட்டுமே சென்று பார்ப்பது. இதற்கு நாள், நேரம் அதாவது கிழக்கே போவதா, தெற்கே போவதா எந்த பக்கம் போகக் கூடாது என்பதையெல்லாம் உறுதி செய்து கொண்டு தான் செல்கின்றனர். போகும் போது கண்டிப்பாக பூனையோ, பொட்டு இல்லாத பெண்ணோ கண்ணில் கூட பட்டுவிடக் கூடாது. தப்பித்தவறி கண்ணில் பட்டுவிட்டால் பயணம் ரத்து. போய் உட்கார்ந்த உடன் பஜ்ஜி, போண்டா, அனைத்தையும் ருசி பார்க்கலாம். ஆனால், கைமட்டும் நைனைக்கக் கூடாதாம்! இது என்ன லாஜிக்கோ?
  அடுத்து படைபலத்தை கூட்டிக் கொண்டு சென்று பார்ப்பது. இதற்கு குறிப்பாக பிற சாதியினரை ஒன்றிரண்டு பேரையாவது அழைத்துச் செல்ல வேண்டும். அப்பொழுதுதான் இவர்களுடைய அருமை பெருமைகளை பறைசாற்றிக் கொள்ள முடியும். வசதி இருக்கிறதோ இல்லையோ இந்தப் படலத்தில் குறைந்த பட்சம் அம்பாசிடரில் தொடங்கி ஸ்கோர்பியோ வரை (வாடகைக்குத் தான்) வண்டி அமர்த்த வேண்டும். இல்லையென்றால், மரியாதை என்னத்துக்கு ஆவது! இது இரு வீட்டாருக்குமே பொருந்தும்.
  பொருத்தம் பொருந்திவிட்டால் அடுத்து கை நனைக்கும் படலம். இதற்கு படைபலம் சற்றே கூடுதல். செல்லும் போது வழியில் ஏதாவது ஒரு கோயிலில் தேங்காய் கட்டாயம் உடைத்தாக வேண்டும். தேங்காய் உடைக்கும் போது எசகு பிசகாக (கோணலாக உடைந்தாலோ, அழுகலாக இருந்தாலோ) எதாவது நடந்துவிட்டால், அதற்கு ஒரு NCR (நான் கன்ஃபார்மன்ஸ் ரிப்போர்ட்) போட்டுக் கொள்வார்கள்!
  இப்போதுதான் பெண்ணை அலங்காரம் செய்து அழைத்து வருதல். இதற்கு தனி கலைஞர்களை அழைத்து வந்து அழகு படுத்தி காட்டுவது உண்டு. ஏற்கெனவே, முதல் படலத்திலேயே பொண்ணும் பையனும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு பிடித்ததினால் தான் இரண்டாம் படலம் தொடர்கிறது. இந்த அலங்காரமெல்லாம், படைபலத்திற்கு பெண்ணை பிடிக்க வேண்டுமே என்பதற்காக. விருந்து மற்ற பிற இத்தியாதி இத்தியாதி சமாச்சாரங்கள் முடிந்த பிறகு நிச்சயார்த்தம் தேதி தீர்மானிக்கப்படும்.
  அடுத்து நிச்சயதார்த்தம். இதை நடத்துவது யார் என்பது இருவீட்டாரில் யார் இளிச்சவாயர் என்பதைப் பொருத்தது. நிச்சயதார்த்தத்திற்கு பத்திரிக்கை அடிப்பதும் உண்டும். மண்டபம், கார், ஊர்வலம் இவையெல்லாம் வசதியைப் பொருத்து அமையும். இதற்கும் பெரும் படை தேவைப்படும். சில நேரங்களில் பேருந்து வைப்பதும் உண்டு. பலத்தை காட்டவேண்டாமா, நிச்சயதார்த்தத்தை நடத்துபவர்கள் சாப்பாடு போடுவதற்கு திண்டாடவேண்டும். இதனைப் பார்த்து, இதுக்கே இப்படின்னா, கல்யாணத்துக்கு!
  கல்யாணத்திற்கு நாள் குறிப்பது: இவர்களே முதலில் பஞ்சாங்கத்தைப் பார்த்து தோராயமாக நாள் தீர்மானித்துக் கொள்வார்கள். ஒரு ஐயரைக் கலந்து ஜாதக் பொருத்தப்படி நாள், நேரம் தீர்மானிப்பார்கள். இவர்கள் தீர்மானித்த நாளில் மண்டபம் தேடுவார்கள். வேண்டிய மண்டபம் கிடைக்கவில்லை என்றால் மற்றொரு தேதியில் மண்டபத்தை பதிவு செய்வார்கள். அந்தத் தேதி ஜாதகத்துக்குப் பொருந்தவில்லை என்றாலும், இன்னொரு NCR போட்டுக் கொண்டு தங்களை சமாதானம் செய்து கொள்வார்கள். மண்டபம் கிடைக்காமல் திண்டாடுவதற்குக் காரணம், முகூர்த்த நாள் பஞ்சாங்கப்படி மாதத்தில் மூன்றோ நான்கோ தானே பிறகு எப்படி ஒரே நாளில் பத்து திருமணங்கள் செய்ய முடியும்? மண்டபம் மட்டுமல்ல, ஐயரும் கிடைக்கமாட்டார். இது அந்தக் காலத்திலேயே வரும்படிக்காக ஐயர்கள் செய்த சூழ்ச்சிகள் போலும்.
  முன்பெல்லாம் வீட்டிலேயே திருமணம் நடக்கும். இட நெருக்கடி இருந்தாலும், உணவு பரிமாற இடப் பற்றாக்குறை இருந்தாலும் இருக்கிற இடத்தில் ஒருவழியாக சமாளித்துக் கொள்வார்கள். இப்போதெல்லாம், கட்டாயம் கோயில் மண்டபமாவது ஏற்பாடு செய்ய வேண்டும். வசதியைப் பொருத்து தனிக் கல்யாண மண்டபம்.
  அடுத்து பத்திரிக்கை அடிப்பது. இதற்கு ஐயரை கன்சல்ட் பண்ண வேண்டும். பிறகு, முன் அட்டையை அலங்கரிக்க போவது குலதெய்வமா அல்லது ஐயா, திருமா, வைகோ, அம்மா, கலைஞர், தளபதி, மற்றும் சாதித்தலைவர்களா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். பின் அட்டையை தீர்மானிப்பதில் பெரும் சர்ச்சைக்கு பிறகு மாமன், மச்சான், அண்ணன், தம்பி, அங்காளி, பங்காளி, சாதி சணம் என்று மொத்த ஊரையே பட்டியலிட வேண்டும். இதில் யாருடைய பேருக்கு பின்னாலும் ஒரு பட்டம் கட்டாயம் இடம் பெறவேண்டும். படித்திருந்தால் படிப்பும், வேலையிலிருந்தால் வேலையும், இவை இரண்டும் இல்லாவிட்டாலும் சாதிப் பட்டம் (கவுண்டர், முதலியார், செட்டியார், நாயுடு எக்ஸ்செட்ரா); கோவணம் அளவே நிலமிருந்தாலும் நிலக்கிழார் பட்டம். இவற்றில் ஏதாவது மிஸ்ஸிங் என்றால் இவர் கல்யாணத்தில் மிஸ்ஸிங்.
  பத்திரிக்கை வீட்டுக் வந்தவுடன், அதன் நான்கு மூளைகளிலும் மஞ்சளில் முக்கியாகவேண்டும். இல்லையேல் மங்களம் இல்லாமல் போய்விடும்! பத்திரிக்கை கவருக்குள் நான்கு மஞ்சள் அரிசி கண்டிப்பாக இருக்க வேண்டும்.
  பத்திரிக்கை வைக்கும் போது, நெருங்கிய சொந்தம் என்றால், தட்டிலே புடவையோ, நகையோ வைத்து அழைக்க வேண்டும். சற்று தூரத்து உறவு என்றால் பத்திரிக்கையுடன் வெத்தலை பாக்கு போதும். நண்பர்கள் என்றால் வெறும் பத்திரிக்கை போதும், தட்டு கூடத் தேவையில்லை. தெரிந்தவர், கொடுக்க வேண்டுமே என்ற கட்டாயம் இருந்தால், பத்திரிக்கையில் பெயர் எழுதக் கூடத் தேவையில்லை. பத்திரிக்கை வைக்கச் செல்லும் போது கையிலே குங்குமச் சிமிழ், கொஞ்சம் மல்லிகைப் பூ கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும் (சுமங்கலிகளுக்கு கொடுக்க வேண்டுமல்லவா!)
  மணப் பொண்ணுக்கு பட்டுப்புடவை எடுக்க இருவீட்டாரும், அருகில் உள்ள பெருநகருக்குச் சென்றாக வேண்டும். வசதியைப் பொருத்து ஆயிரங்களில் தொடங்கி பல ஆயிரங்களில் முடிவதுண்டு. இதில் ஒரு நாளில் முடிக்காமல் லாட்ஜில் ரூம் போட்டுக் கொண்டு மறுநாளும் பார்ப்பவர்கள் உண்டு! பொருத்தமான கலர் கிடைக்க வேண்டுமே? பட்டுப் புடவை இல்லாமல் கல்யாணம் ஏது, அதற்குத்தான் இவ்வளவு முக்கியத்துவம்.
  சொந்த பந்தங்களுக்கு துணிமணி எடுக்க, செலவு தனித்தனி. எடுத்த துணி சரியில்லை என்று ஒரு சொந்தம் ஆட்சேபித்தாலும் அதற்கு பிடித்தமாதிரி இன்னொரு துணி எடுத்தாக வேண்டும். குறிப்பாக சேலை எடுப்பதில்தான் இந்த பிரச்சனை அதிகமாக வரும்.
  தாலி வாங்குவது. அதற்கு உரிய கைராசி பொற்கொல்லரைத் தேடுவது; சாதியைப் பறைசாற்றும் முத்திரையைத் தீர்மானிப்பது என இது ஒரு தனிவேலை.
  பந்தக்கால் நடுவது, நவதானியத்தை முளைவாரி விடுவது (எத்தனை சட்டி என்பதை சாதி தீர்மானிக்கும்) குல தெய்வத்தைக் கும்பிடுவது எல்லாம் அவரவர் குடும்பக் குழு மரபைப் பொருத்தது.
  பசிக்கு சோறுபோடுவதை விட பகட்டைக் காட்டுவதற்காகவே பந்தி ஏற்பாடு செய்யப்படுகிறது. அதற்கு முதலில் மெனுவைத் (ஐயிட்டங்கள்) தீர்மானிக்க வேண்டும். அடுத்து அந்த மெனுவுக்கேற்ற சமையல்காரரைத் தேட வேண்டும். அவர் குஜராத்தில் இருந்தாலும் விடப்போவதில்லை. வந்தவர்கள் மெச்சவேண்டுமே, அதற்காகத் தான் இவ்வளவும்.
  முன்பெல்லாம், சோறு, கத்திரிக்காய், முருங்கைக் காய் சாம்பார், ரசம், மோர், அப்பளம், வடை அல்லது போண்டா, கொஞ்சம் பாயாசம் இவைதான் இயல்பான மெனு. யாரும் குறை சொன்னதில்லை. ஆனால், இப்பொழுதெல்லாம் பூரி தோசை ஊத்தாப்பத்தில் தொடங்கி ஐஸ்கிரீம் வரை ஆயிரத்தெட்டு ஐயிட்டங்கள். இலையைப் பார்த்தவுடனே, சாப்பிடச் சென்றவர் மலைத்துப்போய் ஒருசிலவற்றை சாப்பிட்டுவிட்டு மற்றதை வீணக்குவது சகஜமாக நடக்கிறது. இங்கே வயிற்றுக்கு உணவு என்பதைவிட பந்தாவுக்காவே பந்தி நடக்கிறது.
  திருமண வைபவம்
  முதல் நாள் மாலை வரவேற்பு; கல்யாண மண்டப அலங்காரம்; லைட்னிங், பிரம்மாண்டமான மேடை பின்புறம். முதலில் வாயிலில் அலங்கார வளையம் அமைப்பது தொடங்கி பளபளக்கும் வண்ண வண்ண டிஜிட்டல் பேனரில் மணமக்கள் மட்டுமல்ல மணமக்களின் பெற்றோர்களும் மின்னியாக வேண்டும். ஜானவாசம் என்ற பெயரில் நடக்கும் மாப்பிளை அழைப்பிற்கு அலங்கார வண்டி ஏற்பாடு. அதற்கான நாதஸ்வரம். மண்டபத்திற்கு போகின்ற பாதையில் இருபுறமும் துணிச்சீலைகள் கட்டுவது; மண்டபத்தை முழுவதற்கும் சீரியல் லைட்டுகள் அமைப்பது – பக்கத்தில் மரங்கள் இருந்துவிட்டால் அவையும் வண்ணவிளக்குகளால் பூத்து குலுங்கும் – வரவேற்பு மேடை அமைப்பது. குறிப்பாக, மரம் செடி கொடி புல் பூண்டுகளை அத்தனையும் அள்ளி தெளித்து முடிந்தால் புறாக்களை வைத்து, வாய்ப்பிருந்தால் கூடுதலாக சில ஜீவராசிகளையும் உயிரோடு மேடையிலேற்றி பிரமிக்க வைக்கிறார்கள். இன்னொரு பக்கம் சைடு மேடையிலே ஆர்கெஸ்ட்ரா குழுவினர் அலறுகிறார்கள் (பாட்டு கச்சேரிதான்).
  திருமணத்திற்கு நீண்ட நாட்கள் சந்திக்காத உறவினர்கள், நண்பர்கள் வருவார்கள். இவர்கள் தங்களது உணர்வுகளை பகிர்ந்துகொள்ளக் கூட இந்த ஆர்கெஸ்ட்ரா குழுவினர் இடம் கொடுப்பதில்லை. இதனை ஏற்பாடு செய்தவர்களுக்கும் இந்தக் காட்டுக்கத்தல் கௌரவமானதுதான். ஆனால், மனம் விட்டு பேசுபவர்கள் கூட இந்தக் கத்தலுக்கு மேல் அதிகமாக கத்திப் பேசி தங்களது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த மேடையில் மணமக்களுக்கு பின்னால் யார் நிற்பது என்பது இரு வீட்டாரின் வல்லமையைப் பொருத்தது.
  மறுநாள் காலை திருமண நிகழ்ச்சி என்றால், நண்பர்கள், உறவினர்கள் சிலர் முதல்நாள் இரவு விடியவிடிய ரூம் போட்டு தண்ணியடிப்பது கட்டாயம் செய்ய வேண்டிய கடமை. இது இல்லையென்றால், திருமணத்தில் கலந்து கொண்ட திருப்தி இருக்காது.
  காலை நான்கு மணியிலிருந்து சடங்கு சம்பிரதாயங்கள் நடக்கும். ஐயர் தீர்மானித்த வகையில் அவருக்கு அடுத்த திருமண நிகழ்ச்சி இருந்தால் அவசரமாகவும், இல்லையென்றால் மெதுவாகவும் மந்திரம் ஓதி சம்பிரதாயப்படி திருமணத்தை முடித்து வைப்பார். அதன் பிறகு இருக்கும் சம்பிரதாயங்கள் பலப்பல. இடம் கருதி இவற்றை விவரிக்கவில்லை.
  ”மொய்யில்லாமல் கல்யாணமா”, மாமன் வச்ச மொய்யில் தொடங்கி நண்பர்கள் வைக்கும் மொய் வரை, நகையில் தொடங்கி பண்ட பாத்திரங்களில் தனது பெயரைப் பொதித்து, ரூபாய் நோட்டுகளை கவரிலே திணித்து (கவர் கிடைக்காமல் திண்டாடுவதும் தனது பெயரை எழுதத் தெரியாமாலும் திண்டாடுவது தனிக்கதை). ஏற்கெனவே எழுதிய மொய்யை திரும்பப் பெறுவதில் கல்யாணக்காரனின் ‘அக்கரையும்’, மொய்யை வாங்கியவன் திரும்ப தனது கடனை செலுத்தும் ‘கண்ணியமு’ம் இங்கே ஒன்றுபடுகிறது. இதில் இனி நமக்கு வருமா என்ற கவலையுடன் மொய் எழுதுபவர்களும் உண்டு. உயரிய மனித உறவை வெறும் பண உறவாக சிறுமைப் படுத்தும் இதை பழங்காலந்தொட்டே செய்து வருவதற்காக யாரும் வெட்கப்பட்டதில்லை! இதற்கு தலைமுறை தலைமுறையாக தனி நோட்டை பராமரிப்பது, தொல்லியல் ஆய்வுக்குரியது.
  மேற்கண்ட எமது விளக்கங்கள் இந்து மத சம்பிரதாயத் திருமண வடிவம் என்ற வகையில் அமைந்தவை. இன்னமும் கூடுதலாகவோ, குறைவாகவோ சம்பிரதாயங்களும், சடங்குகளும் அமையக் கூடும். இதில் இசுலாமிய, கிருத்துவ மதத் திருமண வடிவங்கள் மதம் சார்ந்த சம்பிரதாயங்களில் மாறுபட்டிருந்தாலும் உள்ளடக்கமான நடவடிக்கைகள் பொருந்தக் கூடியவையே.
  =========================================================================
  மாற்றுத் திருமண வடிவத்தை பரிசீலிப்போம்!
  ஒரு ஆண் உயிரினமும் பெண் உயிரினமும் சேர்ந்து இனப்பெருக்கம் செய்வது என்பது உயிரினத்தின் இயற்கை நிகழ்வு (Natural phenomena). ஒரு உயிரியல் தேவை என்ற அடிப்படையில் ஒரு ஆணும் பெண்ணும் தான் சேர்ந்து இல்லறவாழ்வில் ஈடுபடமுடியும் என்ற வகையில் மட்டுமே தனது துணையை தேர்ந்தெடுக்கிறார்கள். இதற்கு சமூகம் ஏற்படுத்தியுள்ள சடங்குகள் சம்பிரதாயங்கள் தேவைதானா என்ற கண்ணோட்டத்திலிருந்து மாற்று திருமண முறையைத் தீர்மானிக்க வேண்டும்.
  மாற்று திருமண வடிவத்தை யார் நாடுகிறார்கள்? குறைந்த பட்சம் மணமக்களில் ஒருவர் நிலவுகின்ற இந்த சமூகத்தில் உள்ள இழிவுகளுக்கு எதிராக சிந்திக்கிற, போராடுகிற போராளியாக இருக்கிறார்கள். அவர்கள் பார்க்கும் பொருத்தம் தன்னுடைய இந்த சமூகப் பணிக்கு இடையூறு இல்லாத துணையைத் தேடுகிறார்கள். இதுதான் அவர்கள் பார்க்கும் முதல் பொருத்தம்!
  இங்கே சாதியோ, மதமோ, குலமோ, கோத்திரமோ தேவைப்படுவதில்லை. ஒரே சாதியில் ஒரே மதத்தில் அமைந்தாலும் அதை ஒரு பொருத்தமாக எடுத்துக் கொண்டு திருமணம் செய்வதில்லை.
  மணமக்களில் ஒருவர் மற்றவரைத் தேர்ந்தெடுக்கும் போது, அவர்கள் உழைப்பை நேசிக்கிறார்களா, உழைப்பில் ஈடுபடுகிறார்களா என்பதை தகுதியாகப் பார்க்கிறார்கள். உழைப்பில் ஈடுபடுபவர்கள் மட்டுமே, உழைப்பை நேசிப்பவர்கள் மட்டுமே உழைப்பாளி மக்களை, சொந்த பந்தங்களை நண்பர்களை உறவினர்களை நேசிப்பார்கள் என்ற புரிதலிலிருந்து இந்தத் தகுதி தீர்மானிக்கப்படுகிறது.
  முக்கியமான, அவசியமான இந்தப் பொருத்தங்களை மட்டுமே எடுத்துக் கொள்வதால் பிற பொருத்தங்கள் தேவையற்றதாகிவிடுகிறது.
  இப்படிப் பொருந்தி விட்ட பிறகு மணவாழ்க்கையைத் தொடங்கிவிடலாமே, எதற்கு அதற்கு ஒரு விழா என்ற கேள்வி எழுகிறது.
  சாதி, அந்தஸ்து, சம்பிரதாயம், சடங்குகள், ஆடம்பரங்கள் போன்ற முகமூடிகளுக்குள் திருமணங்களைப் பார்த்த இந்தச் சமூகம் மாற்று திருமண நிகழ்வை தன்னுடைய உறவினர் செய்யும் போது அங்கீகரிப்பதில்லை. ஒருவகையில் பழைய திருமண முறை, புதிய மாற்று திருமண முறையின் மீது தனது ஆதிக்கத்தை செலுத்த முற்படுகிறது. அதற்கெதிரான போராட்டத்தின் மூலமே புதிய மாற்று திருமணமுறை தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. அதற்காகவே, ஊர்க்கூட்டி புரட்சிகர திருமணங்களை நடத்த வேண்டியுள்ளது. வடிவம் என்ற அடிப்படையில் இத்திருமணமுறையை பிறர் கற்றுக் கொள்ளவும், கடைபிடிக்கவும் வேண்டும் என்பதற்காவே பகிரங்கமாக பலர் முன்னிலையில் செய்ய வேண்டியதாகிவிடுகிறது.
  அழைப்பதற்கு ஒரு பத்திரிக்கையும், சில நேரங்களில் சுவரொட்டிகளும், எளிய முறையில் தேவைப்படுகிறது. வருகிறவர்களின் எண்ணிக்கைக்கேற்ப இடம் தீர்மானிக்கப்படுகிறது. வீடோ, மண்டபமோ, அல்லது தெருமுனையோ முடிவு செய்யப்படுகிறது. வருபவர்களுக்கு எளிய உணவு பரிமாறப்படுகிறது. சில நேரங்களில் அது டீ என்ற அளவில் சுருங்கி இருந்ததும் உண்டு. இருந்தாலும் தவறேதும் இல்லை! வடிவத்தை அறிமுகப்படுத்துவதற்குத்தான் இந்த நிகழ்வேயன்றி, தங்களது பகட்டை பறைசாற்றுவதற்கல்ல.
  பட்டாடைகளும், பகட்டாடைகளும் இங்குத் தேவையில்லை. அதாவது, வரவேற்பின் போது மேற்கத்திய கோட்டு சூட்டு போட்ட அமெரிக்கனாகவும் – அது மே மாத வெயிலாக இருந்தாலும் கூட – மறுநாள் காலை தாலி கட்டும் போது, பூணூல் போட்ட புராதன இந்தியனாகவும் வேடம் போடவேண்டியத் தேவை இங்கே இல்லை.
  முதலில் பார்ப்பானுக்கு பெண்டாட்டியாகி பிறகு மணமகனுக்கு மனைவியாகும் அற்பங்கள் இங்கே நிகழ்வதில்லை. அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, பஞ்ச பூதங்களையும் சொந்தங்களையும் சாட்சிக்கழைத்து, நடத்தப்படும் திருமணங்களில் ஆணோ அல்லது பெண்ணோ அவற்றுக்காக பயந்து கொண்டிருப்பதில்லை. அவர்கள் விருப்பத்திற்கேற்ப முரண்பாடுகள் வரும் போது முறித்துக் கொண்டு செல்கிறார்கள். ஆனால், புரட்சிகரத் தம்பதியினர் தங்களுக்கு சமூகக் கடமை இருப்பதினால், தங்களுக்குள் எழும் பிரச்சனைகளை பேசித்தீர்த்துக் கொள்கிறார்கள். காரணம், தங்களது சமூகப் பணிக்கு இல்லற செயல்பாடு குறுக்கிடக் கூடாது என்ற உயரிய நோக்கமே! மற்ற திருமணங்களில் சில இடங்களில் பேசித் தீர்த்துக் கொள்வதில்லையா என்று கேட்கலாம், அது அவர்களது சொந்த விருப்பு வெறுப்புகளில் இருந்து, பழைய சமூகம் அவர்கள் மீது திணித்துள்ள மதிப்பீடுகளில் இருந்து முடிவு செய்து கொள்கிறார்கள். இங்கே சமூகத்திற்கான கடமை, பொறுப்பு என்பதெல்லாம் எதுவும் கிடையாது!
  புரட்சிகர வடிவத்தில் மணமக்கள் உறுதி மொழியும், சிலர் உரையாற்றுவதும், கருத்துகளை வெளிப்படுத்துவதற்கான கலைநிகழ்ச்சிகள் மட்டுமே இடம் பெறுகிறது. இதுவும் ஒரு ஒழுங்கில் நடக்கிறது.
  சில பதிவர்கள், ”ஏன் மாலை மாற்றிக் கொள்ளவேண்டும்”, ”பெற்றோர்கள் ஏன் பட்டாடை உடுத்திக் கொள்ள வேண்டும்” என்பன போன்ற ஒரு சில அம்சங்களை வைத்து கேள்வி எழுப்பி இந்த மாற்று திருமண முறையையே கேள்விக்குள்ளாக்க முயற்சிக்கிறார்கள். ஒரு அவசரமான முத்திரையைத் திணிக்க எத்தனிக்கிறார்கள். மாற்றுத் திருமணங்களை ஆதரிப்பவர்கள் போல வந்து இது போன்று குறை கூறுவதன் மூலம், அவர்களிடம் பழைய சமூகக் கருத்துக்கள் உள்ளன என்பதைக் காட்டுகிறார்கள்.
  ஏற்கெனவே, சொன்னது போல மாற்று திருமண முறையில் பட்டாடைகள் தேவையில்லை தான்! குற்றம் சொல்வதை விட அவர்களுக்கு சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்வார்கள்.
  மாலை மாற்றுவது என்பது இங்கு சடங்காகத் தான் செய்யப்படுகிறது என்றே கருதவேண்டும். சம்பிரதாயம் என்ற அடிப்படையில் இவையும் தவிர்க்கப்பட வேண்டும்.
  இந்தத் திருமண முறை என்பது கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ம.க.இ.க., மற்றும் அதன் தோழமை அமைப்புத் தோழர்களால் கடைபிடிக்கப்பட்டு வெற்றிகரமாக தங்களது வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். அவர்கள் சொந்த பந்தங்களாலும் நண்பர்களாலும் சமூகத்தாலும் அங்கீகரிக்கப்பட்டிருகிறார்கள். இந்த விவாதம் இணைய பதிவர்களுக்குத்தான் புதியதேயொழிய, வெளியே வாழும் தோழர்கள், அன்றாடம் மக்களோடு மக்களுடன் விவாதித்தும் தெளிவு படுத்தியும் வருகிறார்கள். மேலும், இந்தத் திருமண வடிவங்களை எளிமைப்படுத்தவும், விரிவுபடுத்தவும் பதிவர்கள் முனைவார்களேயானால், அதுவே அவர்கள் இந்தச் சமூகத்திற்கு செய்யும் பெரும் தொண்டாகும்.
  பதிவர்கள் முடிந்தால் இது போன்ற திருமணங்களில் பங்கேற்பதும், தம்பதியரின் வாழ்க்கையை உற்று நோக்குவதன் மூலமும் மட்டுமே, இதுதான் சிறந்த திருமண முறை என்பதை அவர்கள் உணர முடியும்.”

  ஊரான்

  • கட்டுரை ரொம்ப நல்லாட்ட்கஹான் இருக்கு, ஊரான் நீங்கள் கல்யாணம் ஆனவரா? உங்கள் வாளழ்க்கையில் எப்படி? ஊருக்கு உபதேசமா? இல்லை என்று சொன்னால் உம் நம்பிட்தானே ஆகவேண்டும். எல்லாம் எல்லாம் எங்கள் தலை எழுட்து.

   • அய்யா சரவணன் அவர்களே,

    கட்டுரை நல்லா இருக்கு என்றால் அதில் உள்ளவை உண்மையானவைதானே. இதை வெளிப்படையாக சொல்லுவதில் தயக்கம் ஏன்? நான் திருமணம் ஆனவன்தான். 24 ஆண்டுகளுக்கு முன்பு புரட்சிகரத் திருமணம் நடந்தது. எவை எல்லாம் தவறானவை, அவசியமற்றவை என்று சொல்லிருக்கிறேனோ அவைகள் அனைத்தையும் தவிர்த்திருக்கிறேன். எவை எல்லாம் அவசியமானவை, சரியானவை என்று சொல்லியிருக்கறேனோ அவைகளை கடைபிடித்திருக்கறேன். இது ஊருக்கு உபதேசம் அல்ல. நடைமுறை அனுபவத்தின் எதார்த்தம். எனது திருமணத்தில்கூட அன்றைய புரிதலுக்கேற்ப மாலை மாற்றி கொள்ளப்பட்டது. இது அவசியமற்றது என்பதை அனுபவத்தின் மூலம் உணர்ந்திருக்கிறேன். பரிசீலிப்பதன் மூலமே தவறுகளைக் களைய முடியும். மலர்களை மருந்துக்காகவும் உணவுக்காகவும் மட்டுமே பயன்படுத்துவதுதான் அர்த்தமுள்ளது. மற்ற எதற்குப் பயன் படுத்தினாலும்- மலர் அஞ்சலி உட்பட- அவை அர்த்தமற்றவை. அதற்காக செலுத்தப்படும் உழைப்பும் அர்த்தமற்றவை. மலர்களைப்பற்றி பிரிதொரு தனிப்பதிவில் விவாதிக்கலாம்.

    இங்கே, ”எல்லாம் எங்கள் தலை எழுத்து” , மற்றொரு இடத்தில் ”அய்யோ முடியலடா சாமி. விஷயத்தை மட்டும் பேசுங்கப்பா. — தாங்க முடியல இன்னும் பேச்சிலுமா?” என்று சலிப்பை வெளிப்படுத்தியிருக்கறீர்கள்.

    உண்மை சிலருக்கு கசக்கும் எனபார்களே அது இதுதானோ. புலனறிவு, பகுத்தறிவு, நடைமுறை என்கிற மூன்று கட்டங்களில் விசயங்களைப் பரிசீலியுங்கள். நிச்சயம் நீங்கள் எதார்த்தத்தை, உண்மையைக் காண்பீர்கள். அப்பொழுது நாம் ஓரணியில் நிற்போம்.

    நம்பிக்கையுடன்
    ஊரான்

 16. ஊரான் அண்ணே!!! இவ்ளோ பெரிய விளக்கம் எதுக்குன்னே? நீங்க சொல்ற விஷயங்கள் எல்லாம் இந்து திருமண முறையில்தான் அதிகமாக உள்ளது.ஒரு இந்து ஆணுக்கும்,பெண்ணுக்கும் மேற்படி சடங்கு சம்பிரதாய முறைப்படியான திருமனத்திலிருந்து விலகி நீங்கள் சொன்ன புரட்சிகர திருமணம் ,பெரியார் சொன்ன மாதிரி, இன்னும் தமிழ் வழியில் திருக்குறள் சொல்லி நிறைய திருமணங்கள் நடந்துகொண்டுதான் உள்ளது.நானும் கூட அதுமாதிரியான திருமணங்களில் பங்கெடுத்துள்ளேன்.உண்மையிலேயே அதுதான் புரட்சிகர திருமணம். ஆனால் இஸ்லாமியர்கள் இன்று நடத்தக்கூடிய திருமணங்கள் பெரும்பாலும் ஆடம்பர,வரதட்சணை வாங்கும் திருமணங்கள்தான் நடக்கிறது.அதே நேரத்தில் இவை எதுவும் இல்லாத புரட்சிகர திருமணங்களும் தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் சில அமைப்புகளாலும் நடத்தப்படுகிறது. இதுவும் புரட்சிதான். ஆனால் மனமேல்குடிக்கும் ,நான் சொன்னதற்கும் ஒரே வித்தியாசம் அவர்கள் அந்த இடத்தில் கடவுளின் பெயரால் திருமண ஒப்பந்தம் செய்யவில்லை, நாங்கள் கடவுளின் பெயரால் திருமண ஒப்பந்தம் செய்துகொள்கிறோம். இவ்வளவுதான். கடவுள் நம்பிக்கை உள்ள ஒரு சில முஸ்லிம்களை நீங்களோ,அல்லது அவர்களாகவோ இறைமறுப்பாளர்களாக மாறியிருக்கிறார்கள்.உங்கள் பார்வையில் இது புரட்சி.எங்கள் பார்வையில் வழிகேடு.நீங்கள் சொல்லும் புரட்சிகர திருமனத்தைதான் நான்கூட செய்ய போகிறேன்.வரதட்சணை வாங்காமல்,நல்லநேரம் பார்க்காமல்,சடங்கு,சங்கு,சாங்கியம் பார்க்காமல்தான் செய்வேன்.வித்தியாசம் என்னன்னா,மணப்பெண்ணை ஏற்கனவே நாலுபேருக்கு மனைவியானவள் என்று இழிவுபடுத்தாமல் கண்ணியப்படுத்தும் விதமாக உள்ளதால் கடவுளையும் மந்திரங்களையும் சேர்த்துக்கொள்வேன்.இதுல என்ன தப்பு?

  • குவைத் தமிழன் அவர்களுக்கு,

   ”வரதட்சணை வாங்காமல்,நல்லநேரம் பார்க்காமல்,சடங்கு,சங்கு,சாங்கியம் பார்க்காமல்தான் செய்வேன்” என்ற தங்களின் முயற்சிக்கு முதலில் எனது வாழ்த்துக்களை பதிவு செய்கிறேன். மேலும் கீழ்கண்ட மூன்று முக்கியமான விசயங்கயையும் பரிசீலிக்கக் கோருகிறேன்.

   1.திருமணங்கள் சொர்க்கத்தில் (ஆண்டவனால்) நிச்சயிக்கப்படுகின்றன என்பதே கடவுளையும் மந்திரங்களையும் பின்பற்றுகிறவர்களின் நம்பிக்கை (இது அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும்). ஆனால் திருமணங்கள் தங்களின் வசதிக்கேற்ப – வர்க்கத்தில் -மனிதர்களாலேயே தீர்மானிக்கப்படுகிறது என்பதே நடைமுறை உண்மை.

   2.வாழ்க்கையில் இருவருக்குமிடையில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை பேசித் தீர்த்துக்கொள்வதும் விட்டுக் கொடுக்கக்கூடிய வற்றில் விட்டுக் கொடுத்து வாழ்வதும் என்கிற இரு பாலருக்குமான சம உரிமையை வலியுறுத்துகிறது புரட்சிகரத் திருமணம். தீர்க்கமுடியாத அளவிற்கு முரண்பாடுகள் முற்றிவிட்டால் இருவரும் நிபந்தனைகள் ஏதுமின்றி பிரிந்து வாழவோ அல்லது தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வேறு துணையைத் தேடிக் கொள்ளவோ இரு பாலருக்குமான சம உரிமையைப் பேணுகிறது புரட்சிகரத் திருமண முறை. இங்கே சாதி மதக் கோட்பாடுகளைச் சொல்லி பெண்ணானவள் விட்டுக்கொடுத்துப் போக வேண்டும் என்றோ, ஆண் மகன் தன் விருப்பப்படி நடந்து கொள்ளவோ இடம் தருவதில்லை.

   3. தம்பதியர் தன் குடும்பம் தன் சுற்றம் என்று வரம்பிட்டுக் கொள்ளாமல், யாருக்கு அநீதி இழைக்கபட்டாலும் அதற்காகப் போராட வேண்டும் என்ற பிறர் நலன் பேணும்
   பண்பை வலியுறுத்துகிறது புரட்சிகரத் திருமண முறை.

   நிறைய திருமணங்கள் புரட்சிகரத் திருமணங்களாக நடத்தப் படுவதாக நீங்கள் சொல்வதில் மேற்கண்டவைகள் உள்ளனவா?

   மேலும், மேலே சொன்ன மூன்று விசயங்களில் தாங்கள் ஒன்றுபடுவதன் மூலமே நீங்கள் செய்யப்போகும் திருமணம் புரட்சிகரத் திருமணம் என்ற வரையறைக்குள் வரும்.

   பரிசீலியுங்கள், புரட்சிகரத் திரமணத்திற்கு முயற்சி செய்யுங்கள். முடிந்தால் – உங்கள் திருமணம் இந்தியாவில் நடக்கும் பட்சத்தில் – நானும் பேச்சாளராக கலந்து கொள்கிறேன்.

   வாழ்த்துக்களுடன்,

   ஊரான்.

   • அய்யோ முடியலடா சாமி. விஷிய்ட்த மட்டும் பேசுங்கப்பா. எஉட்டுலயே தாங்க முடியல இன்னும் பேச்சிலுமா?

  • @குவைத் தமிழன்..

   நண்பர் குவைத் தமிழன் அவர்களுக்கு வணக்கம்.

   திருமணத்திற்கு பின்னான வாழ்வு முறையில் தான் கம்யூனிசத் திருமணங்களுக்கும் நீங்கள் கூறும் வரதட்சனை வாங்காத இஸ்லாமியத் திருமணங்களுக்கும் உள்ள வேறுபாடு இருக்கிறது. வரதட்சனை வாங்காமல் நடந்தாலும் (பாராட்டுதலுக்குறியது) உங்கள் திருமண வாழ்வுமுறை ஒரு குறுகிய வட்ட்டத்திற்குள்(இஸ்லாம்) அடங்கி விடுகிறது.

   ஆனால் கம்யூனிச திருமண முறை என்பது திருமணத்திற்கு பின் தான் அதன் முழு சக்தியையும் கொண்டு வர்க்கச் சுரண்டலுக்கும், பார்ப்பனிய சுரண்டலுக்கும் எதிராக போராடும் நோக்கத்தோடும், அதற்கான உறுதிமொழியோடு தான் தொடங்குகிறது.

   இன்றைய ஹிந்துவின் நடுப்பக்க கட்டுரையை படிக்கவும் (08-10-2010). இன்றைய இஸ்லாமிய இளைய தலைமுறைகள் எவ்வாறு இருக்கின்றனர் என்பதையும் பார்க்கவும். அவர்கள் புரட்சிகரமானவர்களா ?.. இல்லை கம்யூனிஸ்ட்டுகள் புரட்சிகரமானவர்களா?.. என்று பின்னர் கூறவும்.

   மேலும் த்வ்ஹீத் ஜமா அத் தின் திருமண முறையை பாராட்டும் அதே வேளையில் நீங்கள் கூறியது போல் அத்தகையத் திருமணம் புரட்சிகரமானது அல்ல. அது உங்கள் மத நம்பிக்கை அடிப்படையிலானது.

   ஹிந்து திருமண முறையை விட உங்களது முறை முற்போக்கானதே .. இதில் மறுப்பதற்கு ஏதுமில்லை.

   ஆனால் திருமணத்திற்குப் பிறகு உள்ள வாழ்வை யாருக்காக, எதற்கு எதிராக வாழ்கிறோம் என்பதையும் பொருத்தே புரட்சிகரம் என்பது அமையும்.

   ஈராக்கில் உள்ள மக்கள் அங்கு அமெரிக்காவை எதிர்த்துப் போராடுவது மத சார்பிலா ?.. இல்லை ஏகாதிபத்திய எதிர்ப்பிலா ?..

   அனைத்து உழைக்கும் மக்களுக்குமாக என்று இன்றுவரை உங்களது இஸ்லாமிய அமைப்புக்கள் ஏதாவது போராட்டமோ அல்லது ஆதரவுக்குரலாவது கொடுத்துள்ளனரா ?.. இஸ்லாமியர் பிரச்சனை, இட ஒதுக்கீடு பிரச்சனைக்கு மட்டுமே குரல் கொடுக்கின்றன.

   உழைக்கும் மக்கள் , ஒடுக்கப்படும் மக்கள் (இஸ்லாமியர்கள் உட்பட) என சுரண்டப்படும் அனைவருக்கும் இன்று வரை குரல் கொடுத்து வருவது கம்யூனிச நக்சல்பாரி அமைப்புக்களே…

   நசுக்கப்படும் மக்களுக்காக் போராடுவோம் என்று உறுதிமொழி ஏற்று அதன் படி வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளும் கம்யூனிசத் திருமணங்கள் புரட்சிகரமானவையா ?..

   அல்லது மத இலக்கணப்படி வரதட்சணை மட்டும் வாங்காமல் தனது மத வட்டத்திற்குள் சுருண்டு கொள்ளும் திருமணங்கள் புரட்சிகரமானவையா ?..

   உங்கள் பதிலை எதிர்பார்த்து
   தோழமையுடன்
   செங்கொடி மருது.

  • குவைத்தமிழரே! குலம், கோத்திரம் பார்த்துதான் திருமணம் செய்யவேண்டும் என்று முகம்மது நபி கூறியுள்ளாரே.
   அய்யா, ஹலாலான திருமணத்திற்கு “மஹர்” கொடுக்கவேண்டுமே. அது எதற்கு?

   • நந்தன். //////குவைத்தமிழரே! குலம், கோத்திரம் பார்த்துதான் திருமணம் செய்யவேண்டும் என்று முகம்மது நபி கூறியுள்ளாரே.
    அய்யா, ஹலாலான திருமணத்திற்கு “மஹர்” கொடுக்கவேண்டுமே. அது எதற்கு?/////// போகதே நந்தா போகதே -நடகம் பாத்தேன் அதுல நந்தன பாத்தி ஒரு பாட்டு வரும்.
    ஒரு சூதுயாறிய நெஞ்சன்ய்யா, இப்படி நான் அறியப்பட்ட நந்தனுக்கும் ஒங்களுக்கும் எவ்வளவு வித்தியாசமுன்னு பாப்பமா குலம் கோத்திரம் பாத்துதான் கலியாணம் பன்னனுமுன்னு நீங்க சொன்ன ஹதீஸோட மீதி பாதியை ஒங்களுக்கு சொல்றேன் நபிகள் நயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள் “நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள்” அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச்சிறப்புக்காக, அவளுடய அழகுக்காக, அவளுடைய மார்க்கப்பற்றுக்காக! நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையை அடைந்து கொள்ளும் உமக்கு நலம் உண்டாகட்டும். நூல் (புகாரி முசுலிம்) இங்கே எங்கண்ணே கொலத்த பாத்து கலியாணம் பண்ண சொல்லி இருக்கு அப்புறம் இன்னோரு ஹதீசு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள் பெண்களை அவர்களின் அழகுக்காக திருமணம் முடிக்காதீர்கள்; அவர்களுடைய அழகு அழியக்கூடியாது. பெண்களைச் செல்வந்தர்கள் என்பதற்காக மணம் முடிக்காதீர்கள்; அவர்களுடைய செல்வம் வரம்பு மீறுவதிலும் அடங்காப் பிடாரித்தனத்திலும் அவர்களை ஆழ்த்திவிடக்கூடும். மாறாக மார்க்கப்பற்றின் அடிப்படையில் அவர்களை மணமுடித்துக் கொள்ளுங்கள். நூல்: அல்முன்தகா இங்கே இந்த ஹதீசு வர்க்கம் பாத்து கலியாணம் பண்ணகூடாது என்றும் சொல்கிறது

 17. இஸ்லாம் சகோதரர்களுக்கு,

  இஸ்லாம் சமூகத்தில் இருவர் தங்களது சம்பிரதாயங்களை உடைத்தெறிந்து சீர்திருத்தக் கல்யாணம் செய்துகொண்டுள்ளனர். மனிருந்தால் வாழ்த்துங்கள், இல்லையெனில் தனக்குள் வேலையைப் பார்த்துக் கொண்டு செல்லுங்கள்.

  அதை விட்டுவிட்டு கட்டுரையில் இருக்கும் சிறு சிறு தவறுகளை சுட்டிக்காட்டி, என்னவோ அப்படி ஒரு திருமணமே நடக்காதது போல ஒரு தோற்றத்தை உருவாக்க ஏன் முயல வேண்டும்.

  இதற்கு ஒருவர் தனிப் பதிவு வேறு போட்டிருக்கிறார். அவர் கருத்தின்படியும், அங்கே பதில் அளித்திருக்கும் இன்னொருவர் கருத்துப் படியும், இஸ்லாமிய பழமைவாத திருமணங்கள்தான் முற்போக்காக நடத்தப் படுகிறதாம். கம்யூனிசத் தலைவர்களின் படங்களை வைத்ததால் இது பிற்போக்கான திருமணமாம். இன்னும் ஒருபடி மேலே போய், இந்தத் திருமணம் செய்துகொண்ட இருவரும் இஸ்லாமியர் என்ற தகுதியையே இழக்கிறார்கள் எனக் குறிப்பிட்டிருக்கிறார். இவர்களெல்லாம் எப்போதுதான் திருந்த போகின்றனரோ.

  நான் கலந்துகொண்ட பல இஸ்லாமியத் திருமணங்களில், வரதட்சணை லட்சக் கணக்கில் புரள்வதைப் பார்த்திருக்கிறேன். அதுவும் இங்கே உடன் வேலை செய்யும் இஸ்லாம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் திருமணம் வரதட்சணை ஒத்துவராத காரணத்தாலேயே பல பெண்களை பார்த்து கடைசியாக இருப்பதிலேயே அதிகம் வரதட்சணை கொடுக்கும் பெண்ணை மணந்துகொண்டார். இவர்கள் திருமணமும் இஸ்லாமிய முறைப் படிதான் நடந்தது. இதையும் முற்போக்கு திருமணத்தில் சேர்ப்பார்களா அவர்கள் எனத் தெரியவில்லை.

 18. 1.மணமகனும் மணமகளும் தங்களின் கருத்துக்களை கூறினால் இன்னும் பல உண்மைகளை அறிந்துகொள்ளலாம்.

 19. அக்டோபர் 2010 பு.ஜ.வில் வெளியான அந்த திருமணத்தில் குரான் ஓதப்படவில்லை, புரட்சிகர பாடல்கள் ஒளிபரப்பபட்டன இது எப்படி சாத்தியமானது? என்ற தலைப்பில் வெளியான செய்தி முற்றிலும் பொய் என தவ்ஹித் ஜமாத்தை சேர்ந்தவர்கள் வாதிடுவது எனக்கு வியப்பளிக்கின்றது.
  அந்த செய்தியில் மணமகளின் தந்தை காரைக்குடி முன்னாள் நகரச்செயலாளர் மகள் (காரைக்குடி பகுதி துணைத் தலைவராகவும் இருந்துள்ளார்) என்பதற்கு பதிலாக மாநில துணைத் தலைவாpன் மகள் என பிழையான செய்தியை தவிர அனைத்தும் உண்மையே!
  நான் வசிக்கும் மணமேல்குடி மற்றும் எனது குடும்பத்தார் அங்கம் வசிக்கும் உள்ளுர் ஜமத்தார்கள் அனைவரும் நான் ஒரு கம்யூனிஸ்டு என்பதை நன்கு அறிவர் எனது திருமணத்தை சீர்திருத்தமாக நடத்த வேண்டியதின் அவசியத்தையும் பு.மா.இ.முவின் கொள்கை செயல்பாட்டையும் விளக்கி சீர்திருத்த திருமணங்கள் முஸ்லீம் சமூகத்தில் அவசியம் என்பதை திருமணத்திற்கு 3 மாதத்திற்கு முன்பு இருந்தே ஜமாத்தார்கள் இளைஞர்களிடம் மற்றும் முஸ்லீம் பெண்களிடமும், பெண்ணின் அடிமைதனத்தை ஒழிக்க இதுபோன்ற சீர்திருத்த திருமணங்கள் அவசியம் என்பதை விளக்கினேன்.இதே கருத்தை எனது குடும்பம் , மணமகள் , மணமகள் தயாரிடமும் விளக்கினேன்..
  “முஸ்லீம் மதத்தில் நிலவும் மூடப்பழக்கங்கள் அடிமைத்தனத்திற்கு எதிராக இத்திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் எமகண்டத்தில் திருமணம் நடைபெறும்” என்றும் திருமண பத்திரிக்கை அச்சடித்து இருவீட்டாரும் அழைப்பு விடுத்தோம். திருமணத்திற்கு முந்தைய நாளான 09.07.2010 முதல் திருமணநாளான 10.07.2010 வரை ம.க.இ.க.வின் புரட்சிகர பாடல்கள் ஒளிபரப்பப்பட்டன. பாடல்களை நிறுத்தாமல் ஒளிபரப்புமாறு ஜமாத்தார்கள் இளைஞர்கள் பெண்கள் என்னிடம் கூறினார்கள். திருமண நாள் அன்று செங்கொடிகளும் டிஜிடல் பேனர்களில் கம்யூனிச ஆசான்கள் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்களின் சார்பில் வைக்கப்பட்ட பேனர்களில் அம்பேத்கர் படமும் கம்பீரமாக ஜொலித்தன. திருமண மேடையில்(உள்ளுர் ஜமாத்திற்கு சொந்தமான மண்டபம்) பகத்சிங் படம் போட்ட பேனர் அனைவரையும் வரவேற்றது.
  திருமணம் பு.மா.இ.மு தலைமையில் சீர்திருத்தமாக நடந்து முடிந்தவுடன் திருமணத்தில் கலந்துகொண்ட தவ்ஹித் ஜமாத்தை சேர்ந்தவர்கள் (காரைக்குடி பகுதி) “மேடையில் நாங்களும் பேசுவோம்” என கூறி மேடை ஏற முயன்றனர். ஆனால் உள்ளுர் ஜமாத்தார்கள் ஒன்று கூடி தவ்ஹித் ஜமாத்தை சேர்ந்தவர்களை மண்டபத்தை விட்டு வெளியேற்றினர். அப்போது தள்ளு முள்ளு ஏற்பட்டது. தவ்ஹித் ஜமாத் கலந்துகொண்டதற்கு என்னிடம் வீடியோ ஆதாரம் உள்ளது. ஆனால் புதுக்கோட்டை மாவட்ட துணை தலைவர் அப்துல்மஜித் என்பவர் பெண்ணின் தந்தையிடம் திருமணத்திற்கு முதல் நாள் வரை “நான் ஒரு கம்யுனிஸ்ட் என்று கூறியும் நாத்திகன்” என்று கூறியும் திருமணத்தை நிறுத்த முயற்சித்தார். ஆனாலும திருமணத்தில் அவரும் கலந்துகொண்டார். அதே போல் காரைக்குடி தவ்ஹித் ஜமாத்தார் எனக்கு போன் செய்து “அல்லாவை ஏற்றுகொண்டால் தான் உனக்கு திருமணத்தில் பெண் வீட்டாரை கலந்துகொள்ள அனுமதிப்போம்” என போனில் மிரட்டினர். இதை காரைக்குடி தவ்ஹித் ஜமாத் மறுக்கமுடியுமா?

  மண்டபத்தை விட்டு உள்ளுர் ஜமாத்தால் வெளியேற்றிய போது தவ்ஹித் ஜமாத்தை சேர்ந்தவர்கள் “காபிரை, (முஸ்லீம் அல்லாதவர்கள்) முஸ்லீம் மத திருமணத்தில் அனுமதிக்கிறீர்கள் இஸ்லாமியர்களை விரட்டுகிறீர்கள். இதற்கு மறுமையில் அல்லா உங்களுக்கு தண்டனை கொடுப்பான்” என சாபம் விட்டீர்களே, அப்போது திருமணத்தில் கலந்து கொண்ட முஸ்லீம் அல்லாதவர்கள் “இதுதான் இஸ்லாத்தின் சமத்துவகொள்கையா” என கேள்வி கேட்டது உங்கள் காதில் விழவில்லையா?

  எனவே எங்கள் பகுதியை சேர்ந்த முஸ்லீம் உழைக்கும் மக்கள் அனைவரும் நிச்சயமாக நம்புகிறோம். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை நிலைநாட்டி சுயசார்பாக வாழ்வதற்கு கம்யூனிஸ கொள்கைதான் சரி என ஏற்றுக்கொண்டுள்ளோம். இதற்காக இஸ்லாம் அஞ்சவேண்டியது இல்லை. பார்ப்பணியமும் , ஆளும்வர்க்கமும் தான் அஞ்ச வேண்டும்.

  நிச்சயமாக இப்படி ஒரு திருமணத்தை செய்ததற்கு தவ்ஹித் ஜமாத் வாழ்த்தினை இன்று தெரிவிக்கவில்லை என்றாலும் சமூக அனுபவத்தின் வாயிலாக நாளை நிச்சயம் உணர்வார்கள்.

  • மிகவும் பூரிப்பாக இருக்கிறது. உங்கள் உழைப்பும், வாழ்வும் தான் உங்கள் பகுதி இஸ்லாமிய மக்களுக்கு ஒரு சீர்திருத்த மணத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தைத் தந்திருக்க வேண்டும். மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • வாழ்த்துகள் தோழரே! சமூக சீர்திருத்தத்தில் முதல் அடியை எடுத்து வைத்துள்ளீர்கள். இனிவரும் சமூகமும் அதனை தொடரட்டும்.

  • சகோதரர் அலாவுதீன் அவர்களுக்கு,

   அஸ்ஸலாமு அலைக்கும்…

   தயவுக்கூர்ந்து இந்த கேள்விக்கு நேரடியாக பதில் கூறுங்கள்.

   தங்களுக்கு இறை நம்பிக்கை உண்டா?

   இந்த கேள்வி அலாவுதீன் அவர்களுக்கானது. அதனால் வேறு யாரும் இதற்கு பதில் அளிக்க வேண்டாமென்று கேட்டுக்கொள்கின்றேன்…

   நன்றி,

   உங்கள் சகோதரன்,
   ஆஷிக் அஹ்மத் அ

   • அவுருதான் சுயசார்பாக வாழ்வதற்கு கம்யூனிஸ கொள்கைதான் சரின்னு மேட்டர தெளிவாச் சொல்லியிருக்காருல்ல அப்புறம் என்ன நம்பிக்கை தும்பிக்கைனு புலம்பிகிட்டு. இந்தியாவுல இந்த நம்பிக்கைத் தொல்லை தாங்கமுடியலப்பா.

    • சகோதரர் கலை அவர்களுக்கு,

     சலாம்,

     உணர்ச்சிவச படுவதால் ஒரு உபயோகமும் இல்லை. கேள்வி சகோதரர் அலாவுதீனை நோக்கி எழுப்பப்பட்டுள்ளது. பொறுத்திருங்கள், அவர் பதில் சொல்லட்டும்.

     நன்றி,

     உங்கள் சகோதரன்,
     ஆஷிக் அஹ்மத் அ

   • அலாவுதீன்

    எல். அலாவுதீன்
    நான் ஒரு கம்யூனிஸ்ட்
    உலகம் முழுவதும் கம்யூனிஸ்ட்களுக்கு கொள்கை ஒன்றுதான். அதாவது எதை பற்றியும் இயக்கவியலின் கண்ணோட்டத்தில் தீர்மானிப்பவர்கள் கம்யூனிஸ்ட்களே! இதுதான் நண்பரின் சந்தேகத்திற்கு நேரடியான பதில் என்று கருதுகிறேன்.
    மேலும் இஸ்லாமியர்கள் கம்யூனிஸ்ட்கள் பக்கம் செல்வதை கண்டு கொந்தளிக்க அவசியமில்லை. ஏனெனில் கம்யூனிஸ்ட்களை கொன்று குவித்த சதாம் உசேன் அமெரிக்காவில் கொல்லப்பட்டபோது அவருக்காக குரல் கொடுத்தவர்கள் கம்யூனிஸ்ட்களே! இஸ்லாமிய தீவிரவாதம் என பீதியூட்டி வரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முதல் எதிரி கம்யூனிசமே! பாபர் மசூதி இடிப்பு தினத்தை இந்தியாவின்இ கருப்பு தினம் என்று அறிவித்தவர்கள் கம்யூனிஸ்ட்களே! அயோத்தி தீர்ப்பை இந்துவத்தின் தீர்ப்பு. என்றும் அதற்கு எதிராக போராடுபவர்களும் கம்யூனிஸ்ட்களே! ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மக்களின் பாதுகாவலன் கம்யூனிசமே! அந்த வகையில் நான் கம்யூனிஸ்டாக இருப்பது உங்களுக்கு மகிழ்ச்சி தானே? நண்பரே! ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு சேவை செய்ய கம்யூனிசத்தின் பக்கம் அணிதிரளுங்கள்.
    எனவே நண்பர் அவர்கள் குஜராத் முஸ்லீம்களை கொடூரமாக கொன்று குவித்த மோடியின் கையை குலுக்கிய பார்பன ஜெயலலிதாவின் கட்சியில் இருக்கும் இஸ்லாமியர்கள் பி.ஜே.பி. யில் இருக்கும் இஸ்லாமியர்கள் மற்றும் ஓட்டு பொருக்கும் கட்சியில் தனது சுய நலனுக்காக சிறுபான்மை மக்களை அடகு வைக்கும் இஸ்லாமியர்களிடம் என்னிடம் கேட்ட இந்த கேள்வியை கேட்டு அவர்களை விழிப்புணர்வுற செய்தால் பயனுள்ளதாக இருக்கும்.

  • அன்பின் வினவு,

   இது மணமகனின் பின்னூட்டம்தான் என்பதை உறுதி செய்ய வேண்டுகிறேன்.

 20. எனது தந்தை அப்பாஸ் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் காரைக்குடி முன்னாள் நகரச்செயலாளர் , காரைக்குடி பகுதி துணைத்தலைவர் , தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் கூட்டங்களில் குடும்பத்துடன் கலந்து கொள்பவர். இன்று சவுதியில், தவ்ஹித் ஜமாத்தில் வேலை பளுவின் காரணமாக பொறுப்பில் இல்லை என்றாலும் அதன் கொள்கைகளை பரப்புகிறார். நிதி வழங்குபவர். அவர் எனது கணவருக்கு அடிக்கடி போன் செய்து “ஏற்ற தாழ்வுகள் அல்லாவால் உருவாக்கப்பட்டது. எனவே கம்யுனிசம் ஏற்ற தாழ்வுகளை ஒழிப்பதாக கூறுகிறது. கம்யுனிஸத்தை ஏற்றால் அல்லாவை எதிர்பது போல் ஆகிவிடும்.”. ஆகவே “தாங்கள் அமைப்பில் இருந்து சமூகப்பணி ஆற்ற வேண்டும் என விரும்பினால் தவ்ஹித் ஜமாத் அமைப்பில் சேருங்கள்” என்று கூறிவருகிறார். இப்படிப் பட்ட எனது தந்தையை தவ்ஹித் ஜமாத்திற்கு சம்பந்தம் இல்லாதவர் என்று கூறுவது எந்த வகையில் நியாயம்?

  • எதிர்ப்புகளை வென்று இதைச் சாதித்திருப்பீர்கள். உங்கள் போராட்டம் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். வாழ்த்துக்கள்.

  • வாழ்த்துகள் சகோதரி.! உங்கள் மனவுறுதிக்கு பாராட்டுகள்.

  • அன்பு சகோதரி சப்னா ஆஸ்மி அவர்களுக்கு,

   அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு.

   முதலில், உங்கள் இருவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

   உங்கள் கணவரிடம் கேட்ட கேள்வியை உங்களிடமும் கேட்க விரும்புகின்றேன். அவர் பணி நிமித்தமாக இருப்பதால் பதிலளிக்க தாமதமாகின்றது என்று நினைக்கின்றேன்.

   என்னுடைய கேள்வி, நீங்கள் ஒரு முஸ்லிமை தானே திருமணம் செய்து கொண்டீர்கள்?

   முஸ்லிம் என்றால் என்ன அர்த்தம் என்று உங்களுக்கு நன்றாக தெரியும் என்று நினைக்கின்றேன். “இறைவனுக்கு அடிபணிந்தவன்” என்று பொருள் கொள்ளலாம். உங்கள் கணவர் இறைவனுக்கு அடிபணிந்தவரா?

   தயவுக்கூர்ந்து வினவு தோழர்கள் பதில் அளிக்க வேண்டாம். கேள்வி மணமக்களிடம் எழுப்பப்பட்டுள்ளது. அவர்கள் பதில் அளிக்கட்டும்.

   நன்றி,

   உங்கள் சகோதரன்,
   ஆஷிக் அஹ்மத் அ
   http://ethirkkural.blogspot.com

   • மணமக்கள் தேன்நிலவுக்கு போயிருக்காங்க. வர 2 வாரம் ஆகும் பரவாயில்லையா! வேணுமுன்னா அவங்க சார்பா நான் பதில் சொல்லுறேன். நான் மாப்பிள்ளையோட ஒன்னுவிட்ட மாமாவோட பையந்தான்.

    • சகோதரர் காட்டரபி அவர்களுக்கு,

     அஸ்ஸலாமு அலைக்கும்,

     ஒன்றும் பிரச்சனையில்லை சகோதரரே. இரண்டு வாரம் கழித்தே பதில் சொல்லலாம். பொறுத்திருக்கின்றேன்.

     திருமணமாகி மூன்று மாதம் கழித்து இரண்டு வாரம் தேனிலவு சென்றிருக்கின்ற மணமக்கள் திரும்ப வந்தவுடன் பதில் சொல்லட்டும்.

     உங்களால் முடிந்தால் உங்கள் ஒன்று விட்ட மாமா மகனிடம் சொல்லி அவர் தேனிலவு சென்றிருக்கின்ற இடத்தில் இணைய வசதி இருந்தால் பதில் அளிக்க சொல்லவும். முடியவில்லை என்றால் பரவாயில்லை. நான் காத்திருக்கின்றேன்.

     நன்றி,

     வஸ்ஸலாம்,

     உங்கள் சகோதரன்,
     ஆஷிக் அஹ்மத் அ
     http://ethirkkural.blogspot.com

  • அன்பின் வினவு,

   இது மணமகளின் பின்னூட்டம்தான் என்பதை உறுதி செய்ய வேண்டுகிறேன்.

   • சகோதர் ஜமீல் அவர்களுக்கு,

    சலாம்…

    நல்ல கேள்வி. வினவு சகோதரர்கள் ரொம்ப நேர்மையானவர்கள். நீங்க கேட்ட கேள்விக்கு நேர்மையா பதில் சொல்லுவாங்க பாருங்க.

    உங்க மெயில் id கொடுத்தீங்கன்னா, இது தொடர்பா எனக்கு தெரிந்த விசயங்களை பகிர்ந்து கொள்வேன். இன்ஷா அல்லாஹ்…

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ
    http://ethirkkural.blogspot.com

    • ஆஷிக் அஹமத் அவர்களே

     பப்ளிக்-ல மணமக்களை குறுக்கு விசாரணை பண்ணிட்டு, இப்போது ஒரு மர்மத்தைத் திணிப்பது ஏன்? உங்களுக்குத் தெரிந்ததை, அது எதுவாக இருந்தாலும், இங்கே எல்லோருக்கும் சொல்வதுதானே நேர்மை?

     சரி அப்துல்லா கீழே பதில் சொல்லிட்டார். உங்கள் கேள்விகளின் நோக்கம் என்ன? தீர்ப்பு என்ன?

 21. //எங்கள் பகுதியை சேர்ந்த முஸ்லீம் உழைக்கும் மக்கள் அனைவரும் நிச்சயமாக நம்புகிறோம். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை நிலைநாட்டி சுயசார்பாக வாழ்வதற்கு கம்யூனிஸ கொள்கைதான் சரி என ஏற்றுக்கொண்டுள்ளோம். இதற்காக இஸ்லாம் அஞ்சவேண்டியது இல்லை. பார்ப்பணியமும் , ஆளும்வர்க்கமும் தான் அஞ்ச வேண்டும்.//

  ஹைதர் அலி அண்ணே, இது உங்களுக்கு.

  • உண்மையில் நான் கம்யூனிஸத்தை என் கொள்கையாக ஏற்றுக் கொண்டிருந்தால் என் கொள்கைக்கி முன் இசுலாம் உட்பட எல்லா மதங்களும் அஞ்ச வேண்டும் என்றுதான் உடைத்து கூறியிருப்போன் சத்தியம் ஒற்றை தன்மையுடையது உண்மையில் கலப்படம் இருக்ககூடாது, ஏஜ்சல் சொல்கிறார்:(பருப்பொருள்கள்) புலன்களால் தொட்டு உணர முடியக் கூடியவைகளே உலகில் உண்மையானவைகள்” காரல் மார்க்ஸ் சொல்வதைப்போல உணவு, உடை,உறையுள், சிற்றின்ப நிறைவு இவற்றோடு மனிதனின் தேவைகள் நின்றுவிடுவதில்லை. அதாவது முசுலிம்கள் தமது ஆன்மாவை தூய்மைப் படுத்திட இஸ்லாத்தையும், நமது பொருளாதார பிரச்னைகளுக்கு தீர்வு கண்டிட கம்யூனிசத்தையும் பின்பற்றக்கூடாது? அப்படி செய்வதானால் கம்யூனிசம் நமது சமுதாய அமைப்பையோ அல்லது சமுதாய அமைப்பின் ஏதேனும் ஒரு பகுதியையோ பாதிக்காது இதனால் நாம் நமது ஒழுக்கப் பண்புகள், நமது சமுதாய நடைமுறைகள்,பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை பாதுகாக்கின்றவர்களாகவும் அதே நேரத்தில் நமது பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டிட மிகவும் நவீனமானதொரு கொள்கையும் கொண்டவர்களாக திகழலாம், என்று சித்தந்தம் தெரியாத மக்களை ஏமாத்தலாம் ஆனால் ஒங்கள் சித்தந்தம் என்ன அது இறுதியில் எதை எதிர்பார்க்கிறது என்பதையும் நீங்களும் அறிவீர்கள் நானும் இப்போழுது இது சம்பந்தமான புத்தகங்களை படித்துக்கொண்டிருக்கிறேன் அதனால போதம்கின் அண்ணே (ஒன்றை இழக்காமல் ஒன்றை பேர முடியாது) ஏனேனில் கம்யூனிஸவாதிகள் சொல்வதுபோல பொருளதார திட்டங்கள், வாழ்வின் அடிப்படை கொள்கைகள், வாழ்வின் கண்ணோட்டம், வாழ்வின் கொள்கைகள், கோட்பாடுகள் இவற்றிற்கிடையில் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கவே செய்கின்றது. இவற்றை தனித்தனியாகப் பிரித்திட முடியாது இவை ஒன்றோடொன்று இருகப்பிணைந்தவை,

   • ஹைதர் அலி,
    உங்க பதில இப்போ தான் பாத்தேன்.

    //ஒன்றை இழக்காமல் ஒன்றை பெற முடியாது//

    சரியாகச் சொன்னீர்கள். ” மதம் ஒடுக்கப்பட்டவனின் பெருமூச்சாக இருக்கிறது.” பெருமூச்சை இழந்துவிட்டு நார்மலா மூச்சு விட ஆரம்பிக்கலாம். மற்ற நாத்திகர்களைப் போல வெறும் வறட்டு நாத்திகம் மட்டும் பேசாமல், மதத்தின் தேவையை இல்லாமல் செய்யும் சமூக அமைப்பை உருவாக்கத்தான் பொதுவுடைமைவாதிகள் உழைக்கிறார்கள். கம்மியூநிஸ்டுகள் முன்னணியாளர்கள், அவர்களின் தலைமையில் (மத நம்பிக்கையுடையவர்களையும் உள்ளடக்கிய ) மக்களின் புரட்சியில் தான் ஒடுக்கப்பட்டோரின் நல்வாழ்வுக்கான நம்பிக்கை இருக்கிறது.

    எனவே அப்துல்லா சொன்னது போல, இசுலாம் (இஸ்லாமியர்கள்) பயப்பட வேண்டாம். இசுலாமிய மத அடிப்படைவாதத்தை ஊக்குவிக்கிற ஆளும்வர்க்க சவூதி ஷேக்குகளும், இந்து மதவெறியில் பிழைப்பு நடத்துகிற இந்திய பார்ப்பனிய ஆளும் வர்க்கமும் தான் பயப்படவேண்டும்.

    நிறைய படிக்கிறீர்கள், யோசிக்கிறீர்கள் எனத் தெரிகிறது. தோழர்கள் யாருக்கும் வறட்டு மதக் காழ்ப்பு இல்லையென்பதை மட்டும் இப்போதைக்கு உணர்ந்ததால் மகிழ்ச்சி.

 22. மணமகள் சப்னா ஆஸ்மிக்கு,

  //ஏற்ற தாழ்வுகள் அல்லாவால் உருவாக்கப்பட்டது// என்று உங்கள் தந்தை கூறியதாக எழுதியிருப்பது நீங்கள்தான் என்றால் உங்களுக்கு இஸ்லாத்தைப் பற்றி எதுவுமே தெரியாது என்றாகிறது. இது கம்யூனிஸக் கருத்துகூட இல்லை.

  நீங்கள் எழுதியிருப்பதைப் பற்றி உங்கள் தந்தை இங்குக் கருத்துக் கூறுவது சரியாக இருக்கும்.

  ஏனெனில், மனிதர்களிடையே ஏற்றத் தாழ்வென்பது கூடாது (அல்குர் ஆன் 2:213; 4:1; 10:19; 39:6; 49:13) என்பதை இறைவன் திட்டவட்டமாகக் கூறுகிறான். இதை அறியாமல் உங்கள் தந்தை ததஜ எனும் தவ்ஹீது அமைப்பில் இருப்பதாக நீங்கள் எழுதியிருப்பது வியப்பளிக்கிறது!

  முஸ்லிம்களிடம் நடைமுறையில் உள்ளவை எல்லாம் இஸ்லாம் அல்ல என்பதை கம்யூனிஸத் தோழர்களும் அறிவர்.

  இஸ்லாம் எதிர்க்கும் வர்க்கபேதம், அதிகாரச் சுரண்டல், மௌட்டீக-மூடநம்பிக்கைகள், வெற்றுச்சடங்குகள் ஆகியவற்றை எதிர்த்து நிற்பதால் மகஇக மற்ற அமைப்புகளைவிட முஸ்லிம்களின் ஆதரவுக்கு உரித்தானது என்பதை மறுக்கமுடியாது. ஆனால், இறைக்கொள்கையில் கம்யூனிஸம் மறுப்பு நிலையிலும் இஸ்லாம் ஏற்பு நிலையிலும் உள்ள இருதுருவங்கள்.

  பின்னூட்டமிடும் முஸ்லிம் சகோதரர்களுக்கு:

  மணமகளின் தந்தை தவ்ஹீது அமைப்பில் இருப்பதாக புதிய ஜனநாயம் இதழில் வந்த செய்தி தவறானது என்பது ததஜ சார்பாக முறைப்படி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இங்கு வினவின் குறிப்பிலும் அது இடம்பெற்றுள்ளது.

  மணமகன் ஏற்கனவே அப்பகுதியில் கம்யூனிஸ்ட்டாக அறியப்பட்டிருக்கிறார். மணமகளும் தம் கணவரைப் பற்றி அறிந்தே திருமணம் செய்திருக்கிறார். எனவே, முஸ்லிம்கள் இதில் அதிகமாக அலட்டிக்கொள்ள ஏதுமில்லை என்பது எனது கருத்து.

  சீரழிக்க வந்த சின்னத்திரையின் வழிகாட்டுதலால் தற்போது பெருகிவரும் ‘அதிதீவிர சீர்திருத்தவாதிகள்’போல் இவ்விருவரும் ஓடிப்போய்விடவில்லையே, அதுவரையில் மகிழ்வு கொள்வீர்!

  • ///முஸ்லிம்களிடம் நடைமுறையில் உள்ளவை எல்லாம் இஸ்லாம் அல்ல///

   இஸ்லாத் முற்போக்கானது, புரட்சிகரமானது என்று வாதிடும், இஸ்லாமிய நண்பர்களே,

   ஆக, நடைமுறையில் இஸ்லாத்தை கடைபிடிக்காதவர்கள் கூட முஸ்லிம்களாக ஏற்றுக்கொள்ளப்படுவார்கள், அல்லாவை நம்பும் ஒரே காரணத்தால்!!!

   அல்லாவை மட்டுமல்ல எந்த மதத்தையும் நம்பாத ஒரே காரணத்திற்காக அவர்களை முஸ்லீமாக ஏற்றுக்கொள்ளாவிடினும் பரவாயில்லை, அதை அவர்களும் எதிர்பார்க்க மாட்டார்கள். இஸ்லாமே கூட எதிர்க்கும் வர்க்கபேதம், அதிகாரச் சுரண்டல், மௌட்டீக-மூடநம்பிக்கைகள், வெற்றுச்சடங்குகள் ஆகியவற்றை எதிர்த்தாலும் அவர்களை வெறுத்து காறி உமிழ்வீர்களோ?

   இத்திருமணத்தில் அந்த ஒரு பிழையான செய்தியை தவிர, (வாழ்த்து கூட தெரிவிக்காமல்) இதை வெறுக்க சரியான காரணம் என்ன???
   அறிவு நாணயத்துடன் பதிலளியுங்கள்…..

   தோழர்கள் பாண்டியன்-அஜிதா திருமண பதிவில் வாழ்த்து தெரிவித்திருந்த ஹைதர் அலிக்கு, இங்கு கடுஞ்சின மூட்டிய விடயம் எது?

 23. மணவிழாவில் இணைந்த தோழர்கள் இருவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்!

  தோழர் அலாவுதீன்,

  உங்கள் குடும்பத்தினர் மட்டுமல்லாது, மணமகளின் குடும்பம், மற்ற பிறரது உள்ளங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்த போராடி வெற்றி கண்டுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

  இதை பார்க்கும் போது, என் குடும்பத்தில் இது வரை போராடி மாற்றத்தை கொண்டுவர இயலவில்லை என்று குற்ற உணர்வே மேலோங்குகிறது.
  அதே நேரம், எந்நிலையிலும் சமரசமற்று, தொடர்ந்து போராடவும், செயல்படவும் ஊக்கமும் அளிக்கிறது!

  வாழ்த்துக்களுடன்…

  • ////உங்கள் குடும்பத்தினர் மட்டுமல்லாது, மணமகளின் குடும்பம், மற்ற பிறரது உள்ளங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்த போராடி வெற்றி கண்டுள்ளீர்கள். வாழ்த்துக்கள்///// “ஏற்ற தாழ்வுகள் அல்லாவால் உருவாக்கப்பட்டது. எனவே கம்யுனிசம் ஏற்ற தாழ்வுகளை ஒழிப்பதாக கூறுகிறது. கம்யுனிஸத்தை ஏற்றால் அல்லாவை எதிர்பது போல் ஆகிவிடும்.”. ஆகவே “தாங்கள் அமைப்பில் இருந்து சமூகப்பணி ஆற்ற வேண்டும் என விரும்பினால் தவ்ஹித் ஜமாத் அமைப்பில் சேருங்கள்” என்று கூறிவருகிறார். இப்புடி அட்வைசு பன்னுகிற மாமனார் மாற்றத்த ஏத்துகிட்டார நல்ல ஜொக்கு

   • விவாதத்தில் அனைத்து கேள்விகளுக்கும் விளக்கங்களுக்கும் விளக்கமளிக்கும் தாங்கள் இன்னும் திருமணம் முடித்த தோழர்களுக்கு ஒரு வாழ்த்து சொல்லவில்லை. குறைந்தபட்சம் மற்றவரின் விருப்பங்களுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து வாழ்த்தலாம் இல்லை தோழர்கள் கேட்டுக்கொண்ட பிறகாவது காரணத்தை விளக்கி இருக்கலாம்.இஸ்லாம் குறித்த விவாதத்தில் கூட பொறுமையோடு கூறப்பட்ட கருத்துக்கள் சார்ந்து விளக்கமளித்த தாங்கள் இவ்விசயத்தில் மௌனம் காப்பது ஒரு வருட காலமாக உங்களின் பின்னோட்டம் வாயிலாக அறிந்த எனக்கு வருத்தமாக உள்ளது ஹைதர் அலி .

   • ஹைதர்,
    கீ பல ஹால்.
    “ஏற்ற தாழ்வுகள் அல்லாவால் உருவாக்கப்பட்டது.”

    பின்பு என்ன விதமான சமூகப்பணி ஆட்ட மன்னிக்கவும் ஆற்ற தவ்ஹீதில் சேருமாறு அப்பாசு கூறுகிறார்.

   • ஹைதர்அலி!
    தவ்ஹீத் ஜமாத்தினர் திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை, மணமகனுடன் தாவா செய்துவிட்டு திரும்பிவிட்டனர் என்று கூறினீர்கள். அவ்வாறில்லை. பும இமு தலைமையில் திருமணம் முடிந்த பிறகு அதனை தாங்களும் பதிவு செய்துகொள்கிறோம் என்று தவ்ஹீத் முயற்சி செய்தபோதுதான் தள்ளுமுள்ளு ஏற்பட்டது என்று பதிலுறைத்துள்ளோம். அதற்கான தங்களின் பதிலைக் காணவில்லையே?

 24. இறைவனுடைய சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது நிலவட்டுமாக,

  இஸ்லாத்தின் பார்வையில் திருமணதிற்கு என்று சடங்கு சம்பர்தாயம் கிடையாது, திருமணம் என்பது ஒரு ஒப்பந்தமே,.
  முஸ்லிம் என்று பெயர் வைத்தவனெல்லாம் முஸ்லிம் கிடையாது, இறைவனுக்கு இணை வைக்காதவன் தான் முஸ்லிம்

  • யாரெல்லாம் முஸ்லீம் என்றுச் சொல்லுகிறது இஸ்லாம்! அல்லாவிற்கு இணை வைக்காமல், அல்லாவை ஏற்றுக் கொண்டவன் எவனாகவும், எவளாகவும் இருந்தாலும் சரியே, அவன் அல்லது அவள் எக்கேடு கெட்டுப்போயிருந்தாலும், குடி கூத்தியாள் என கொட்டமடித்திருந்தாலும் சரியே, அவர்கள் முஸ்லீமே. இப்படித்தான் வாழவேண்டும் என கூறப்பட்டிருந்தலும், தவறு செய்யவே மனிதன் படைக்கப்பிட்டிருக்கிறான் என்பதினால் ஒன்றும் பிரச்சினையில்லை. தவறு செய்து கொள். ஆனால் அல்லாவை மட்டும் உதறிவிடாதே என்பதுதான் முக்கியம். இதைப்போன்றே….

   இன்றைய தாய்மார்கள் தந்தைமார்கள் மனைவிமார்கள் கனவன்மார்கள் மாமன்மார்கள் நல்லவன் வேடம் போடும் எல்லாமார்களும் கூறுகிறார்கள் நீ எக்கேடு கெட்டாவது போ குடி கூத்தியாக்கூட வச்சுக்க இந்த மகஇக காரனுங்க கூட மட்டும் போயிடாத என்கின்றனர். ஆக இவர்கள் போதிப்பது, பேசுவது எல்லாமே ஒரு பம்மாத்து. ஏற்றத்தாழ்வை ஆமோதித்துக்கொண்டே என்னவிதமான வெங்காய சமூகப்பணியை ஆற்றிவிட முடியும். பழங்குடியினரை நரவேட்டையாடும் மன்மோகன் வகையறாவை எதிர்க்காத நயவஞ்சகன் ராகுலை அப்பழங்குடியினர் நம்பமுடியுமா? அதுபோலவே, ஏற்றத்தாழ்வை நானே உருவாக்கினேன் என்ற இறைவனை எதிர்க்காமல் வஹாபிசம் பேசும் சமூகப் பணியாளர்களையும் நம்பமுடியாது. அந்த வெளக்குமாறுகளுக்கு எத்தனை குஞ்சம் கட்டினாலும் வெளக்குமாறு வெளக்குமாறுதான்.

  • அது என்ன வகையான ஒப்பந்தமய்யா ஷேக் அவர்களே?

 25. மீண்டும் மீண்டும் பொய் சொல்கிறார்கள். மணமகளின் தந்தை தவ்ஹீத் ஜமாத்தின் பதவியில்தான் இல்லை. அமைப்பில் அவர் ஒரு உறுப்பினரே.

 26. மணமக்களுக்கு வாழ்த்துகள்!
  வினவுக்கு இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடந்தால், வினவில் முன்கூட்டியே விளம்பரம் செய்தால், நேரில் காணும் வாய்ப்பு கிடைக்கும். மனைவி, நண்பர்கள் போன்றவர்களுடன் செல்லும் வாய்ப்பும் கிடைக்கும். இவர்கள் மத்தியில் மாற்று அரசியல், பண்பாடு போன்றவற்றை பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பாயிருக்கும்.
  தோழர் அஜிதா திருமணமும் எங்கள் ஊருக்கு பக்கம் தான். முதலில் தெரிந்திருந்தால் சென்றிருக்கல்லாம் அல்லவா! என் மனைவியும் எங்கேயாவது கூட்டி செல்லுங்கள் செல்லுங்கள் என்று! எனவே தான் இந்த வேண்டுகோள்!

 27. மணமகன் அலாவுதீனுக்கும் மணமகள் சகோதரி சப்னா ஆசுமிக்கும் மனமார்ந்த திருமண நல்வாழ்த்துக்கள்
  \\மாக்சிய ஆசான்கள், பகத்சிங் படங்கள் சூழ ஒரு இசுலாமியத் திருமணம்!//
  \\உருவப்படங்கள் வைக்கப்பட்டு ஒரு இஸ்லாமிய நிகழ்ச்சி நடைபெற்றது என்பதே பெரிய பிரச்சினைதான்//
  மணமகன் பொதுவுடமைவாதி என்பதும அவர் கடவுள் மறுப்பாளர் என்பதும தெளிவான நிலையிலும் அவரது திருமணத்தை இசுலாமிய திருமணம் என்றும் இசுலாமிய நிகழ்ச்சி என்றும் நீங்கள் விளிப்பது முரண்பாடாக உள்ளது.மணமகன் கடவுள் மறுப்பாளர் எனும்போது அந்த கடவுளின் பெயரால் அமைந்த மதத்தின் நிறுவனத்தில் (சமாத்) தனது திருமணத்தை ஏன் பதிவு செய்யவேண்டும். அரசு பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்திருக்கலாமே.இந்த திருமணத்தை இசுலாமிய திருமணம் என்பதை விட பு.ம.இ.மு. அமைப்பு திருமணம் என்று சொல்வதே பொருத்தமானது.ஒருவேளை அலாவுதீன் தனக்கு இசுலாமிய அடையாளத்தை தரும் தனது பெயரை மாற்றி மத அடையாளம் தராத பெயரை சூட்டிக்கொண்டிருந்தால் இந்த பிரச்னையே வந்திருக்காது.பார்ப்பன அடையாளத்தை துறக்க புசுப கமல்,தோழர் பிரசந்தாவாக மாறும்போது வல்லபேசன்,தோழர் மருதையனாக மாறும்போது இசுலாமிய அடையாளத்தை துறக்க கலீலுல்ரகுமான் தோழர் செங்கொடியாகும்போது அலாவுதீனும் தான் கொண்ட கொள்கைகளுக்கு ஏற்ப பெயரை மாற்றி கொள்ளலாமே.
  \\திருமணத்தைப் பதிவு செய்வதில் சுன்னத்துல் ஜமாத்திற்கும் தவ்ஹீதிற்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது ஒரு இஸ்லாமியர், ‘முதல்மரியாதையை கம்மூனிஸ்டுகாரனுங்க தட்டிக்கிட்டு போய்ட்டானுங்க நீங்க ஏண்டா சண்டைப் போட்டுக்கிறீங்க’ என்று கூறியதும், பந்தியில் பிரியாணி பரிமாறிய பின் சண்டை நின்றதும் உண்மையே.//
  இது திருமணத்தில் கலந்து கொண்டு விருந்துண்டவர்களை இழிவுபடுத்துவதாக உள்ளது. சங்க பரிவாரங்கள் திட்டமிட்டு செய்யும் நச்சு பரப்புரைகளில் ஒன்றான இசுலாமியர்கள் பெருந்தீனி பிரியர்கள்.என்ற கருத்தாக்கத்தை எதிரொலிக்கிறது
  \\ திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதில்லை எனும்போதே மணமகன் கடவுள் மறுப்பாளர் என்பது புரிகிறது. பின் ஏன் இரு ஜமாத்தும் திருமனத்தை பதிவு செய்து கொள்ள சண்டையிட்டனர் என்று புரியவில்லை//
  சுன்னத் சமாத்தை பொறுத்தவரை அவர்கள் மணமகன் கைக்கூலி(வரதட்சணை) வாங்கும் திருமணங்களையே பதிவு செய்ய தயங்க மாட்டார்கள்.சில ஊர்களில் கைக்கூலி தொகை,மணமகளுக்கு போடப்படும் நகைகளின் எடை,கொடுக்கப்படும் சீர்வரிசை பொருட்களின் பட்டியல் என அனைத்தும் பதிவு செய்யப்படுகிறது.அவர்கள் திருமண கட்டணம் செலுத்தப் பட்டுள்ளதா தலைக்கட்டு வரி (உறுப்பினர் கட்டணம்) பாக்கி உள்ளதா என்று மட்டுமே பார்ப்பது வழக்கம்.எனவே அவர்களுக்கு அந்த கொடுமைகள் இல்லாத இந்த திருமணத்தை பதிவு செய்வதில் தயங்குவதற்கு ஏதுமில்லை.
  தவ்கீத் சமாத்தை பொறுத்தவரை இந்நிகழ்வு முழுவதும் அவர்களின் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.மணமகன் கடவுள் மறுப்பாளர் என்று தெரிந்த பின்னும் தங்கள் புத்தகத்திலும் பதிவு செய்ய சண்டையிட்டதும்,மணமகனிடம் வாதம் செய்ததும்.சிவகங்கை மாவட்ட தவ்கீத் அமைப்பினரின் முதிர்ச்சின்மையை காட்டுகிறது.மணமகளின் தந்தை ஏதோ ஒரு வகையில் தவ்கீத் அமைப்புடன் தொடர்புடையவர் எனும்போது அவரது குடும்பத்தினரே தவ்கீத் பரப்புரையால் ஈர்க்கப்படவில்லை அதை ஏற்று செயல்படவில்லை என்பது தெளிவாகிறது.இது தமக்கு ஏற்பட்ட பின்னடைவு என்பதை அவர்கள் உணர வேண்டும்.
  \\பின்பு என்ன விதமான சமூகப்பணி ஆட்ட மன்னிக்கவும் ஆற்ற தவ்ஹீதில் சேருமாறு அப்பாசு கூறுகிறார்//
  தன்னலம் இன்றி சமூகப்பணி ஆற்ற முன்வருவோரை இழிவு படுத்த வேண்டாம்.குருதிக்கொடையில் தவ்கீத் மற்றும் த.மு.மு.க.அமைப்பினரே தமிழகத்தில் முன்னணியில் உள்ளனர்.தமிழகத்தை ஆழிப் பேரலை தாக்கியபோது இசுலாமிய அமைப்பினர் சாதி மத பேதமின்றி ஆற்றிய சமூகப்பணி தமிழகம் அறியும். இப்பணி குறித்து புதிய கலாச்சாரம் ஏடு த.மு.மு.க.வை பெயர் குறிப்பிட்டு பாராட்டி எழுதியதை நினைவு படுத்துகிறேன்.

 28. சகோதரர் காட்டரபி அவர்களுக்கு,

  அஸ்ஸலாமு அலைக்கும்,

  ஒன்றும் பிரச்சனையில்லை சகோதரரே. இரண்டு வாரம் கழித்தே பதில் சொல்லலாம். பொறுத்திருக்கின்றேன்.

  திருமணமாகி மூன்று மாதம் கழித்து இரண்டு வாரம் தேனிலவு சென்றிருக்கின்ற மணமக்கள் திரும்ப வந்தவுடன் பதில் சொல்லட்டும்.

  உங்களால் முடிந்தால் உங்கள் ஒன்று விட்ட மாமா மகனிடம் சொல்லி அவர் தேனிலவு சென்றிருக்கின்ற இடத்தில் இணைய வசதி இருந்தால் பதில் அளிக்க சொல்லவும். முடியவில்லை என்றால் பரவாயில்லை. நான் காத்திருக்கின்றேன்.

  நன்றி,

  வஸ்ஸலாம்,

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

 29. இது வேறு ஒரு ஹதிது. குலம் கோத்திரம் பற்றி கூற்றிய ஹதிதல்ல. ஆனாலும் இது குறித்து மேலும் ஹைதரிதம் விவாதிக்கப் போவதில்லை. இது வீண். ஏனெனில் அவர் ஒரு புளுகர். புஜ மீதான அவரது ”புளுகுமூட்டை” குற்சாட்டுக்கு எங்களின் ஆணித்தரமான பதிலுக்கு மறு மொழி கூறவில்லையே!

  • போகதே நந்தா போகதே, ////இது வீண். ஏனெனில் அவர் ஒரு புளுகர். புஜ மீதான அவரது ”புளுகுமூட்டை” குற்சாட்டுக்கு எங்களின் ஆணித்தரமான பதிலுக்கு மறு மொழி கூறவில்லையே!///// கண்டிப்பாக பதில் கூறுகிறேன் அதுக்கு முன்னாடி ஒரு சின்ன கேள்வி ரொஸ் கலர்ல வந்த நீங்க புளு கலர்ல எப்புடி மாறிங்க மாப்புள்ளகாரரு இப்ப ரொஸ் கலர்ல மாறியிட்டாரு என்ன நடக்குது?

   • ஹைதர் க.க.க.போ 🙂 லொள்ளு நெம்ப அதிகமா போச்சு !

    • எல்லாம் ஒங்ககிட்ட கத்துகிட்டதுதான்

   • டுப்பாக்கூர் ஈமெயில்னு ஒன்னு வச்சிருந்தா ஸ்பெல்லிங் மிஸ்டேக் வற்றதுதான்.. அங்கணயே சென்டர் ஸ்டாண்டு போட்டு நின்னா எப்பிடி…. மேல போங்க

   • ஹைதர்,
    உங்களுக்கு முதல்ல மாமனார் பதவியில பிரச்சினை, அப்புறம் கொடியில பிரச்சினை, அப்புறம் சாப்பிட்டதுல பிரச்சினை, இப்போ பொம்மையில பிரச்சினை. நீங்க இதுவரைக்கும் கல்யாணத்தை பிரச்சினைன்னு சொல்லவில்லை என்பதிலிருந்து உங்க நல்ல வெள்ள உள்ளம் தெரியுது. அப்புறமென்ன ஒரு வாழ்த்து சொல்லக்கூடாதா?

 30. எல். அலாவுதீன்
  நான் ஒரு கம்யூனிஸ்ட்
  உலகம் முழுவதும் கம்யூனிஸ்ட்களுக்கு கொள்கை ஒன்றுதான். அதாவது எதை பற்றியும் இயக்கவியலின் கண்ணோட்டத்தில் தீர்மானிப்பவர்கள் கம்யூனிஸ்ட்களே! இதுதான் நண்பரின் சந்தேகத்திற்கு நேரடியான பதில் என்று கருதுகிறேன்.
  மேலும் இஸ்லாமியர்கள் கம்யூனிஸ்ட்கள் பக்கம் செல்வதை கண்டு கொந்தளிக்க அவசியமில்லை. ஏனெனில் கம்யூனிஸ்ட்களை கொன்று குவித்த சதாம் உசேன் அமெரிக்காவில் கொல்லப்பட்டபோது அவருக்காக குரல் கொடுத்தவர்கள் கம்யூனிஸ்ட்களே! இஸ்லாமிய தீவிரவாதம் என பீதியூட்டி வரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முதல் எதிரி கம்யூனிசமே! பாபர் மசூதி இடிப்பு தினத்தை இந்தியாவின்இ கருப்பு தினம் என்று அறிவித்தவர்கள் கம்யூனிஸ்ட்களே! அயோத்தி தீர்ப்பை இந்துவத்தின் தீர்ப்பு. என்றும் அதற்கு எதிராக போராடுபவர்களும் கம்யூனிஸ்ட்களே! ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மக்களின் பாதுகாவலன் கம்யூனிசமே! அந்த வகையில் நான் கம்யூனிஸ்டாக இருப்பது உங்களுக்கு மகிழ்ச்சி தானே? நண்பரே! ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு சேவை செய்ய கம்யூனிசத்தின் பக்கம் அணிதிரளுங்கள்.
  எனவே நண்பர் அவர்கள் குஜராத் முஸ்லீம்களை கொடூரமாக கொன்று குவித்த மோடியின் கையை குலுக்கிய பார்பன ஜெயலலிதாவின் கட்சியில் இருக்கும் இஸ்லாமியர்கள் பி.ஜே.பி. யில் இருக்கும் இஸ்லாமியர்கள் மற்றும் ஓட்டு பொருக்கும் கட்சியில் தனது சுய நலனுக்காக சிறுபான்மை மக்களை அடகு வைக்கும் இஸ்லாமியர்களிடம் என்னிடம் கேட்ட இந்த கேள்வியை கேட்டு அவர்களை விழிப்புணர்வுற செய்தால் பயனுள்ளதாக இருக்கும்.

  • China is a good example where muslims are protected by communism (Google about how china kills innocent muslims). Also don’t forget how LTTE treated muslims (these ma.ka.ee.ka support LTTE). Communism is not a solution. We all should have love and affection for each other. No hate. No forced views. I will tell shortly what I believe.

   Everyone is equal. There is no need for organized religions or gods. There is no need for weapons or army (except to establish justice, like police force). No one should be forced to live a communist life. Everyone should willingly share what they have and love others and find joy in helping them.

   Where communism fails is, it forces people to strict lifestyle where almost hard-worker and poor-performer are treated equally. The worst part is, communism forcibly snatches from hard-workers and give it to slackers.

   My last suggestion. Never trust communists to support your religion. If you want to see change, be the change. Be a man of love and affection. Love Obama equally as Osama. Modi and Musharaf are our human brothers. Let us not let love and truth die on the lines of religions and ideologies.

   • ‘Also don’t forget how LTTE treated muslims (these ma.ka.ee.ka support LTTE).’
    nuni pul meyinthuviddu.. vai pulithatho mangai pulithatho enru pesa koodathu…
    nan oru eela thamilachi… eelathileye vazhnthaval… 1991 aandu yazhpanathil enna nadanthathu enru 13 vayathu sirumikuriya kangalal parthaval.. paadasalayil kalvi karpitha virupathukuriya asiriyayai.. nanbiyai illanthu koba paddaval..manithan enbavan pillai puripavan… avan eppothu than pillaiyai othukondu thirunthi than seitha pillaiku pirayasitham seigirano… avanai vida uyrnthavan yarume illai.. LTTe ( pirabaharan athai than thirumba sithar… 2001 ill.. ivalavukkum 1991 ill nadanthathuku pirabaharanuku neradi thodarbillai..thalaivan enra muraiyil tharmega poruperru mannipum vendinar)
    IPKF nadanthu konda muraiku tharmega porupetru… vote poddu rajeev ganthiyai pirathamar akkiya jananayaga indian enhinra murayil ennidam neengal mannipu kedka thayara? thayar enral LTTE ai pathi vimarsiungal nan kedka thayar…

 31. இது எப்படி சீர்திருத்த திருமணம் ஆகும்?

  ஒரு இஸ்லாமிய‌ ஆண் இஸ்லாமிய‌ பெண்ணை திரும‌ண‌ம் செய்துள்ளார்.அங்கு ச‌ட‌ங்கு ம‌றுப்பு ம‌ட்டுமே நிக‌ழ்ந்துள்ள‌து ம‌த‌ ம‌றுப்பு நிக‌ழ‌வில்லை.வின‌வு க‌ம்யுனிஸ‌த்துக்கு த‌லையையும் இஸ்லாத்திற்கு வாலையும் காட்டும் விலாங்கு மீன் வேலை செய்யாதீர்க‌ள்

 32. நெத்தியடி முகம்மது மற்றும் தவறாக வழிநடத்தப்படும் சில மதவாத மொக்கைகளுக்கு ஒரு விளக்கம்.

  தோழர் அலாவூதின் அவரது வேலை காரணமாக வெளியூரில் இருக்கிறார். அப்போது வினவில் வந்த கட்டுரை தொடர்பாக தோழர்கள் அவரை பின்னூட்டம் போடுமாறு கேட்டுக்கொண்டனர். ஒரு பிரவுசிங் செண்டரில் போய் அங்கு தமிழில் போடுவதற்கு சில தொழில் நுட்ப பிரச்சினை மற்றும் தெரியாமையால்அவரால் முடியவில்லை. அதையே ஒரு சாதாரண எழுத்துருவில் அடித்து தோழர்களிடம் அனுப்பி போடுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். அதை அவருடைய தோழர்கள் யூனிகோடில் மாற்றி இங்கே போட்டிருக்கின்றனர். இதுதான் நடந்த்து. தற்போது இந்த விவகாரத்தினால் அவரது குடும்பத்தை உள்ளூர் ஜமாஅத்திலிருந்து நீக்குவதற்கு உள்ளூர் தவ்ஹீத் ஜமாஅத் மதவாதிகள் பெரும் முயற்சி செய்து வருகின்றனர். இதன் பொருட்டு வரும் நாட்களில் அவரை ஜமாஅத் அவரை விசாரிக்க இருக்கிறது. தான் ஒரு கம்யூனிஸ்ட் என்று அறிவித்துக் கொள்ளும் தோழர் அலாவூதின் அந்த விசாரணையை எதிர்கொள்ள இருக்கிறார். வினவு சார்பில் அவரது ஊருக்கு சென்று இந்த விவகாரங்களை நேரடி ரிப்போர்ட்டாக தருவது என்று முடிவு செய்திருக்கிறோம். பொதுவில் அந்த ஊர் இசுலாமிய மக்கள் எமது அமைப்புகளை ஆதரிப்பது மதவாத தவ்ஹீத் ஜமாஅத் காரர்களுக்கு பிடிக்க வில்லை. எனினும் உழைக்கும் மக்களென்ற முறையில் இசுலாமிய மக்கள் எங்களுடன்தான் சேருவார்கள். இது நல்ல விசயமென்று அந்த மதவாத மொக்கைகள் புரிந்து கொள்ள வேண்டும். எனினும் விரைவில் வினவு சார்பில் மணமேல்குடி சென்று ஒரு நம்பிக்கை ரிப்போர்ட் தருவதற்கு இந்த விவகாரம் உதவியிருக்கிறது. அந்த வகையில் நெத்தியடி அன்கோவிற்கு நன்றி. மற்றபடி இங்கே கூறப்பட்டுள்ள விவரங்கள் தோழர் அலாவூதின் எமக்கு தொலைபேசியல் சொன்னதுதான்.

  • மணமகன் அலாவுதீனுக்கு சில கேள்விகள். தோழர்களும் பதிலளிக்கலாம். ஆரோகியமான விவாதத்தை வரவேற்கிறேன்.
   1. இயக்கவியல் கண்ணோட்டம் கொண்ட கடவுள் மறுப்பாளரான நீங்கள் இசுலாமிய அடையாளம் தரும் பெயரில் நீடிக்கிறீர்கள். அது உங்கள் உரிமை. ஆனால் அதை தவறாக பயன்படுத்த உங்களுக்கு உரிமையில்லை. கடவுள் மறுப்பாளர் எனும் போது நீங்கள் இசுலாமியராக இருக்க முடியாது. ஆனாலும் உங்கள் பெயரில் உள்ள இசுலாமிய அடையாளத்தை வைத்துக்கொண்டு முசுலிம் சமாத் திருமண பதிவு புத்தகத்தில் உங்கள் திருமணத்தை பதிவு செய்தது சரிதானா?

   2. உங்கள் திருமணத்தை சமாத் பதிவு செய்ய வலிய முன் வந்திருந்தாலும் நீங்கள் மறுத்திருக்க வேண்டும். இயக்கவியல் கண்ணோட்டம் கொண்ட பொருள்முதல் வாதியான உங்களுக்கு உங்கள் கருத்துப்படி பிற்போக்கான ஒரு மதத்தின் நிறுவனத்தில் உங்கள் திருமணத்தை பதிவு செய்ய வெட்கமாக இல்லையா!

   3. நீங்கள் சமாஅத்தில் பதிவு செய்யாமல் திருமணம் செய்திருந்தால் உங்கள் உறவினர் நண்பர்களை தவிர்த்து பிற முசுலிம் மக்கள் உங்கள் திருமணத்தில் கலந்து கொண்டிருப்பார்களா.

   4. கடவுளை மறுக்கும் உங்கள் திருமணத்தை வினவும் பு.ஜ.வும் இசுலாமிய திருமணம் என்று சொல்வதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?

   5. உங்கள் திருமணத்தில் இரு சாரார் போட்ட சண்டை பிரியாணி போட்டவுடன் நின்று போனதாக எழுதி பு.ஜ.வும் வினவும் உங்கள் விருந்தினர்களை இழிவுபடுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

   வினவுக்கான கேள்விகள்..

   1. உங்கள் அமைப்பு தோழர் ஒருவர் பிற்போக்கு மத நிறுவனத்தில் தனது திருமணத்தை பதிவு செய்வதை எப்படி அனுமதிக்கிறீர்கள்?.”சொர்க்கத்தில் நிச்சயிக்கப் பட்ட திருமணங்கள்” மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ள அந்த பதிவேட்டில் ”வர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட”இந்த திருமணத்தை பதிவு செய்வது சரிதானா.

   2.சகோதரர் ஹைதர் அலியை அவர் பொதுவுடைமை கொள்கையை ஏற்காதவர் என்றபோதிலும் தோழர் என்றுதான் அழைப்போம் என்கிறீர்கள்.அவரை தோழராக மாற்றும் முயற்சியை கைவிடப்போவதில்லை என்கிறீர்கள்.அது உங்கள் பரப்புரை உரிமை.ஒப்புக்கொள்கிறோம்.உங்கள் முயற்சியில் வெற்றி பெற்றால் அவரை தோழர் என்று அழைக்கலாம்.ஆனால் அப்படி அவர் பொதுவுடமைவாதியாக மாறாதவரை அவர் விரும்பாவிட்டாலும் தோழர் என்றுதான் அழைப்போம் என்பது நீங்கள் போற்றும் பொதுவுடமைப் பண்பாகுமா.

   • Communism is always forced on others. It benefits only who forces it on others. These people are worst than those few muslims who are terrorists. There are more than 17 crore muslims in India, yet we had few hundred terrorists. But we have few thousands of hardline communists in India (like ma.ka.ee.ka) but we have them all as terrorist. Now it is clear that who is evil and who is the real problem.

    May be what muslims believe is foolish according to some. But their foolishness kill less lives than these communists’ rationalism. If given a strict choice of muslims or communists, I always choose muslims. There are many free muslim nations like Turkey, Dubai, Malaysia (there is problem, but still not like China or North Korea)

    • Well you have explained about Green Terroorism., Red Terrorism?!?!,, And my question is what is your idea about saffron terrorism ?..

     Again I am telling you – ” Yes .. Really!!??!! … We believe you as a anti – hindutuvaist, We dont have any counter ideas about your secularism.

     Jai – Sri Ram .. Oh.. Sorry.. Jai Hind

   • மணமகன் அலாவுதீன்
    நண்பர் திப்புவுக்கு
    “1. இயக்கவியல் கண்ணோட்டம் கொண்ட கடவுள் மறுப்பாளரான நீங்கள் இசுலாமிய அடையாளம் தரும் பெயரில் நீடிக்கிறீர்கள். அது உங்கள் உரிமை. ஆனால் அதை தவறாக பயன்படுத்த உங்களுக்கு உரிமையில்லை. கடவுள் மறுப்பாளர் எனும் போது நீங்கள் இசுலாமியராக இருக்க முடியாது. ஆனாலும் உங்கள் பெயரில் உள்ள இசுலாமிய அடையாளத்தை வைத்துக்கொண்டு முசுலிம் சமாத் திருமண பதிவு புத்தகத்தில் உங்கள் திருமணத்தை பதிவு செய்தது சரிதானா?”
    நான் இஸ்லாமிய பெயரை இன்னும் தொடர்வதற்கு காரணம் இசுலாமியர்களிடமும் கம்மூனிசம் மாற்றத்தை ஏற்ப்பெடுத்தும் என்பதற்காகவே (காற்று புகமுடியாத இடங்களில் கூட கம்மூநிசம் புகுந்துவிடும் நண்பரே) தமிழ்நாட்டில் கம்மூநிசத்தை முதன்முதலில் பரப்பியவரே இஸ்லாமிய பெயர் கொண்டவர்தான் ஆனால் தௌஹீத் ஜமாஅத் போன்ற அனைத்து இசுலாமிய அமைப்புகளும் தேர்தல் காலங்களில் பார்ப்பன ஜெ காலையும், ப ஜ க கூட்டு கருணாநிதியின் காலையும் பிடித்து இசுலாமிய எதிரிகளை வளரவிடவில்லையா? அல்லாவிற்கு பயப்படுவதாக பீலாவிடுவதிருக்காட்டும். இந்த துரோகத்தை நினைத்து உங்கள் மனம் என்றாவது குற்ற “உணர்வு” கொண்டதுண்ட?
    “2. உங்கள் திருமணத்தை சமாத் பதிவு செய்ய வலிய முன் வந்திருந்தாலும் நீங்கள் மறுத்திருக்க வேண்டும். இயக்கவியல் கண்ணோட்டம் கொண்ட பொருள்முதல் வாதியான உங்களுக்கு உங்கள் கருத்துப்படி பிற்போக்கான ஒரு மதத்தின் நிறுவனத்தில் உங்கள் திருமணத்தை பதிவு செய்ய வெட்கமாக இல்லையா!”
    நான் அங்கம்வகிக்கும் உள்ளூர் ஜமாஅத் மற்ற ஜமாஅதுக்களைவிட முற்றிலும் வேறுபட்டது. கடந்த காலங்களில் ஒரு குடும்பம் மட்டுமே இந்து மதத்தில் இருக்கும் நாடாமை போல தலைவர் பொறுப்பிலிருந்து தீர்ப்பு வழங்கிவந்தது சொத்துக்கள