privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்மக்கள் மருத்துவர் கோட்னிஸ் நூற்றாண்டு விழா

மக்கள் மருத்துவர் கோட்னிஸ் நூற்றாண்டு விழா

-

டாக்டர் கோட்னிஸ்
செம்படை கூட்டத்தில் உரையாற்றும் மருத்துவர் (1942) - சீனாவில் மருத்துவரின் சிலை

மகத்தான மக்கள் மருத்துவர் துவாரகாநாத் சாந்தாராம் கோட்னிஸ் நூற்றாண்டு விழா !

பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை உயர்த்திப் பிடித்த போராளி டாக்டர் கோட்னிஸ் புகழ் நீடுழி வாழ்க !!

மருத்துவ வரலாறு எத்தனையோ தலைசிறந்த மருத்துவர்களைக் கண்டிருக்கிறது. ஆனால், வாழ்நாள் முழுவதும் உழைக்கும் மக்களின் விடுதலைக்காகவே தங்களையும் தங்கள் மருத்துவ அறிவையும் அர்ப்பணித்த மருத்துவர்கள் அரிதினும் அரிதே. அத்தகைய அரிய மருத்துவர்களில் ஒருவர்தான் டாக்டர் துவாரகாநாத் சாந்தாராம் கோட்னிஸ்.

இந்தியாவின் பெருமைக்குரிய புதல்வர்களில் ஒருவராகவும், உலகப் பாட்டாளி வர்க்கத்துக்கு இந்தியா அளித்த தியாகிகளில் ஒருவராகவும், சீன மக்கள் இன்றும் தங்கள் நெஞ்சங்களில் ஏற்றிப் போற்றும் ஒப்பற்ற நண்பராகவும் திகழ்ந்தவர்தான் டாக்டர் கோட்னிஸ்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் சோலாப்பூரில் 1910-ஆம் ஆண்டு அக்டோபர் 9-ஆம் நாள் பிறந்த கோட்னிஸ், பம்பா கிராண்ட் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்று, அக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார்.

1938-ஆம் ஆண்டு வாக்கில் ஜப்பானின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக சீன மக்கள் போராடி வந்தனர். இந்நியாயமான விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து இந்தியா முழுவதும் சீன மக்களுக்கு உதவும் இயக்கம் அப்போது நடைபெற்றது. போராடும் சீன மக்களுக்கு உதவ இந்தியாவிலிருந்து ஐந்து பேர் கொண்ட சிறந்த மருத்துவர்கள் குழு அனுப்பப்பட்டது. அந்த ஐவரில் ஒருவர்தான் டாக்டர் கோட்னிஸ். சீனா சென்றதும் அவர் அன்றைய சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவரான தோழர் சூயென்லா-ஐச் சந்தித்தார். பின்னர் மருத்துவ உதவி தேவைப்பட்ட யேனான் பகுதிக்கு 1939-இல் பல்வேறு இடர்பாடுகளுக்கிடையே சென்றார்.அங்கு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தோழர் மாவோ கோட்னிஸ் குழுவை நேரில் வந்து வரவேற்றார்.

உலகப் புகழ்பெற்ற நெஞ்சக அறுவைச் சிகிச்சை மருத்துவராக விளங்கிய கனடா நாட்டு மருத்துவர் டாக்டர் நார்மன் பெத்தூன் சீன மக்களுக்காகவே உழைத்து சீனாவிலேயே மரணமடைந்தார். அவரையே தனது வழிகாட்டியாகக் கொண்டு டாக்டர் கோட்னிஸ் பாட்டாளி வர்க்க சர்வதேச உணர்வோடு சீன விடுதலைக்காகப் பாடுபட்டார். போர்முனையில் ஊனுறக்கமின்றி போர் வீரர்களுக்கு மருத்துவம் பார்த்தார், டாக்டர் கோட்னிஸ். அதைத் தொடர்ந்து சீன மக்களும் சீன கம்யூனிஸ்ட் கட்சியும் உருவாக்கிய நார்மன் பெத்தூன் மருத்துவக் கல்லூரியில் ஆசிரியர் பொறுப்பேற்று, வசதிகளே இல்லாத போர்ச் சூழலில் அக்கல்லூரியை வளர்த்து மருத்துவர்களைப் பயிற்றுவித்தார். பல மைல் தூரம் சென்று விறகு பொறுக்கி வந்து உணவு சமைக்க வேண்டிய இடர்ப்பாடுகள் நிறைந்த சூழலிலும், அவர் தன்னலமற்றுப் பணியாற்றி சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராக உயர்ந்தார்.

நார்மன் பெத்தூன் சர்வதேச அமைதி மருத்துவமனையின் இயக்குநராகப் பொறுப்பேற்று சீன மக்களின் பெருமதிப்பைப் பெற்றார் டாக்டர் கோட்னிஸ். இம்மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்த குவோ குயிங்லான் என்ற பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்குப் பிறந்த ஆண் குழந்தைக்கு இந்திய-சீன நட்புறவைக் குறிக்கும் வகையில் “இன்குவா” என்று அவ்விளம் தம்பதிகள் பெயரிட்டனர்.

1942 ஜூலையில் டாக்டர் கோட்னிஸ் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். மருத்துவத்தைப் போதிக்கும் அளவுக்கு சீன மொழியை முயன்று கற்றார். ஓவின்றிக் கடுமையாக உழைத்ததால், கோட்னிஸ் உடல்நிலை பாதிக்கப்பட்டது. கடுமையான வலிப்புநோய் தாக்கி தனது 32-வது வயதிலேயே, 1942 டிசம்பர் 9-ஆம் நாள் அவர் உயிர் துறந்தார்.

அவரது மரணச் செய்தி அறிந்த மக்கள், சீனா முழுவதும் துக்கம் அனுசரித்தனர். 1942 டிசம்பர் 30-ஆம் நாளன்று நடந்த இரங்கற் கூட்டத்தில் சீன மக்கள் இராணுவத்தின் தலைமைத் தளபதியான தோழர் சூடே முன்னிலை வகித்து டாக்டர் கோட்னிசுக்கு அஞ்சலி செலுத்தினார். அக்கூட்டத்தில் தோழர் மாவோ கைப்பட எழுதிய இரங்கல் கடிதம் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

டாக்டர் கோட்னிசை தங்கள் முப்பாட்டனாகக் கருதும் சீன மக்கள், டாக்டர் கோட்னிஸ் நினைவாக ஹீபெ மாகாணத்தில் உள்ள ஷிஜியாஜுவாங் நகரில் உருவாக்கப்பட்டுள்ள அவரது உருவச் சிலையையும்  நினைவு மண்டபத்தையும் இன்றும் போற்றி வருகின்றனர். “டாக்டர் கோட்னிஸ் கி அமர் கஹானி” என்ற திரைப்படம் இந்தியாவில் வெளிவந்து அவரது புகழைப் பரப்பியது.

ஏழை நோயாளிகளைக் கொள்ளையடிப்பதே மருத்துவ தர்மமாக மாறிவிட்ட இன்றைய கேடுகெட்ட சூழலில், தன்னலமின்றி சீன விடுதலைக்கும் மக்களுக்கும் தன்னை அர்ப்பணித்த டாக்டர் கோட்னிஸ் நீலவானில் ஒரு சிவப்பு நட்சத்திரமாக மின்னுகிறார்.

கோட்னிஸ் தன்னலமற்ற மருத்துவர் மட்டுமல்ல, அவர் ஒரு சர்வதேசப் பாட்டாளி வர்க்கப் போராளி. அவரது நூற்றாண்டு விழா உலகெங்குமுள்ள பாட்டாளி வர்க்கத்தால் பெருமையுடன் கொண்டாடப்பட்டுவரும் இத்தருணத்தில், அவரது நினைவை நெஞ்சிலேந்தி அவர் கற்றுத்தந்த பாதையில் முன்னேறுவோம்!

டாக்டர் கோட்னிஸ் புகழ் நீடுழி வாழ்க!

________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர், 2010
________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. மக்கள் மருத்துவர் கோட்னிஸ் நூற்றாண்டு விழா | வினவு!…

    வாழ்நாள் முழுவதும் மக்களின் விடுதலைக்காகவே தங்களையும் தங்கள் மருத்துவ அறிவையும் அர்ப்பணித்த மருத்துவர்கள் அரிதினும் அரிது. அத்தகைய அரிய மருத்துவர்களில் ஒருவர்தான் டாக்டர் கோட்னிஸ்…

  2. படிக்கவே எவ்வளவு மகிழ்ச்சியை தரும் விடயம் இது.மருத்துவர்கள் இன்றைய சூழலில்?
    அய்யோ! நெஞ்சு பொறுக்குதில்லையே!

  3. […] This post was mentioned on Twitter by வினவு, புலவன் புலிகேசி. புலவன் புலிகேசி said: RT @vinavu: மக்கள் மருத்துவர் கோட்னிஸ் நூற்றாண்டு விழா https://www.vinavu.com/2010/11/13/doctor-shantaram-kotnis/ […]

  4. தன்னலமின்றி சீன விடுதலைக்கும் மக்களுக்கும் தன்னை அர்ப்பணித்த டாக்டர் கோட்னிஸ் ஒரு சர்வதேசப் பாட்டாளி வர்க்கப் போராளி. அவரது புகழ் நீடுழி வாழ்க

  5. சொந்த நாட்டில் (சத்தீஸ்கர், தாண்டேவடா மாவட்டத்தில்) பழங்குடி மக்கள் சுகாதார குறைபாட்டால் அவதிப்பட்டாலும், செத்து மடிந்தாலும் அதை வேடிக்கை பார்க்கும் இன்றைய முதலாளித்துவ மருத்துவர்களின் சமூகத் தரத்தின் தாழ்வு எங்கே? போராடும் சீன மக்களுக்கு உதவ இந்தியாவிலிருந்து சென்ற டாக்டர் கோட்னிஸின் சமூகத் தரத்தின் உயர்நிலை எங்கே? எந்த மனிதர்களின் உயிரைக் காப்பாற்ற மருத்துவப் படிப்பு பயிலப்பட்டதோ, அதே மனிதர்களிடம் டாக்டர் ஃபீஸ், மருத்துவச் செலவு என்ற பெயரில் அவர்களின் குரல்வளையையே பிடிப்பது என்றால் அது மருத்துவமா?
    சேவைத்துறையாகக் கருத்தப்படும் மருத்துவத்துறையை தனியார்மயம் என்ற பெயரில் கல்லாக்கட்டும் துறையாக மாற்றிய பெருமை அரசுக்கு மட்டுமே உண்டு. ஆனால் பேரு மட்டும் மக்கள் நல அரசு.
    ( வினவு,
    சீன மக்களுக்கு உதவ இந்தியாவிலிருந்து ஐந்து பேர் கொண்ட சிறந்த் மருத்துவர்கள் குழு யாரால் அனுப்பப்பட்டது?)

    • //சீன மக்களுக்கு உதவ இந்தியாவிலிருந்து ஐந்து பேர் கொண்ட சிறந்த் மருத்துவர்கள் குழு யாரால் அனுப்பப்பட்டது?//

      நேரு மற்றும் நேதாஜி ஆகியோரின் முயற்சியால் அனுப்பப்பட்டது.
      ஆதாரம் : விக்கிபீடியா
      In 1937, after the Japanese invasion of China, the communist General Zhu De requested Jawaharlal Nehru to send Indian physicians to China. Netaji Subhash Chandra Bose, the President of the Indian National Congress, made arrangements to send a team of volunteer doctors and an ambulance by collecting a fund of Rs 22,000 on the All-Indian China Day and China Fund days on July 7-9. He had made an appeal to the people through a press statement on June 30, 1938. In Modern Review S.C.Bose wrote an article on Japan’s role in the Far East and denounced the assault on China. The key element of this mission was it was from a nation itself struggling for freedom, to another nation also struggling for its freedom. The mission was reinforced with Nehru’s visit to China in 1939.

    • ஆனால் டாக்டர் கோட்னிஸை சீனாவுக்கு அனுப்பிய நேதாஜியை துரோகி என்றும், எட்டப்பன் என்றும், ஏகாதிபத்தியத்தின் ஏஜெண்ட் என்றும், டோஜோவின் (அன்றைய ஜப்பானிய பிரதமர்) நாய் என்றும் கடுமையாக விமரிசனம் செய்த இந்திய கம்யூனிஸ்ட்கள் இன்னிக்கு பிளேட்டை அப்படியே திருப்பிப் போட்டு கோட்னிஸை மட்டும் கொண்டாடுவது நல்ல தமாஷ்தான்.

      • ராம்காமேஸ்வரன்,

        உங்கள் வரலாற்றறிவு புல்லரிக்க வைக்கிறது. நேதாஜி காங்கிரசிலிருந்து வெளியேறக் காரணம் யார்? அவர்கள் நேதாஜியைப் பற்றி என்ன அவதூறு செய்தார்கள்? இன்றைக்கு இருக்கும் வலது கம்யூனிஸ்ட் கட்சி அன்றைக்கு ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியாக இருக்கும்போது காங்கிரசின் வாலாக செயல்பட்டது.

        எனவே காங்கிரசு ஆண்டைகளின் விமரிசனித்திற்கு தோதாகவே கம்யூனிஸ்ட்டு கட்சி நேதாஜியையும் விமரிசித்தது. நாட்டு விடுதலைக்காக ஹிட்லர் ஆதரவு முகாமில் அவர் சேர்ந்தது சரியா, தவறா?

        ஆகஸ்ட்டு புரட்சிக்கு பின்னர் கல்கத்தாவில் ஐ.என்.ஏவைச் சேர்ந்த வீரர்கள் தூக்கிலிடப்பட இருந்தனர். அதை காங்கிரசு கும்பல் ஆதரித்த்து. ஆனால் மக்கள் போராட்டத்தால் அது நிறுத்தப்பட்டது.

        வலது கம்யூனிஸ்ட் கட்சியின் கூஜா அரசியலை வைத்து அதையே இந்திய கம்யூனிஸ்ட்டுகள் என்று ஒரே அடியாக மதிப்பீடு செய்வது தவறு. ஒன்று வரலாறை ஒழுங்காக படிக்க வேண்டும். தெரியவில்லை என்றால் கேட்டுதெரிந்து கொள்தவது ஒன்றும் கவுரவக் குறைவல்ல.

        • கம்யூனிஸம், அல்லது கம்யூனிஸ்ட்டுகளின், குறைகளையோ தவறுகளையோ சுட்டிக்காட்டினால், இருக்கவே இருக்கிறது ஸ்டாக் ஸ்டேட்மெண்ட் – “அதெல்லாம் போலி கம்யூனிஸம், அல்லது அவர்களெல்லாம் போலி கம்யூனிஸ்ட்டுகள்’. ஐயா “அக்மார்க்” கம்யுனிஸ்டுகளே, உங்கள் கூற்றுப்படி 1920 முதல் 2010 வரையிலான தொண்ணூறு ஆண்டுகள் கேரளத்திலும், வங்கத்திலும், செயல்பட்டு வந்த அனைத்து கம்யூனிஸ்டுகளும் “போலிகள்” தானோ?

          ஒரு சித்தாந்தத்திற்கு அடிமைப்பட்டுவிட்டால் எதையுமே நடுநிலைமையோடு பார்க்க முடியாது – வரலாறு உட்பட.

          • மே.வங்கத்திலும், கேரளாவிலும் ஆட்சியில் இருந்தோ, எதிர்க்கட்சியாகவோ இருக்கும் கம்யூனிஸ்டுகள் போலிகள்தான். இவை பற்றி ஆயிரக்கணக்கான பக்கங்கள் பு.ஜனநாயகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. கம்யூனிசம் என்றாலே அலர்ஜியோடு இருப்பவர்களுக்கு போலி, அசல் குறித்து புரியாது என்பது எங்களுக்கு புரிகிறது.

            இந்த உலகில் நடுநிலைமை பார்வை என்று ஒன்று இல்லை – அப்படி நினைத்துக் கொண்டிருக்கும் அப்பாவிகளும் – ஒரு நிலைப்பாட்டிலிருந்தே பேசுகிறார்கள். அதையே நடுநிலைமை என்று நினைத்துக் கொண்டால் அது குறித்து அனுதாபப் படத்தான் முடியும்.

  6. //விழா எடுத்துச் சிறப்பித்த தஞ்சைத் தோழர்களுக்குப் பாராட்டுகள்//

    Why waste money for celebrating someone who is not even alive? You can use the money to build statue and celebrate his memory to buy medicines for poor people.

    • ஏழைகளை கையேந்தவைப்பதே உங்களைப்போல உள்ள முதலாளித்துவ சிந்தனையாளர்கள்தான்.இவ்வுலகத்தையே படைத்த உழைக்கும் மக்களை, வறுமை என்கிற கொடுமையில் தள்ளிவிட்டுட்டு உதவுங்களேன் என்று சப்பையைக்கட்டிக்கொண்டு திரியாதே.

  7. ராம் காமேஸ்வரன்,
    நீங்கள் பள்ளிக்காலத்தில் எதிர்ச்சொல் அமைப்பது பற்றி படித்ததில்லையா?
    தர்க்கம்-குதர்க்கம்,
    மெய்-பொய்,
    அறிவு- அறியாமை,
    சரி-தவறு,
    ஆரோக்கியம்-நோய்,
    வீரம்-கோழை,
    தெளிவு-குழப்பம்,
    மகிழ்ச்சி- துக்கம்,
    அசல்-போலி,
    நேர்மின் -எதிர்மின்……………….
    இவற்றில் உங்களால் நடுநிலைப் பொருள் ஒன்றை சொல்ல முடியுமா? அல்லது விசத்தில் நல்லது கெட்டது ஆராய முடியுமா? நடுநிலைப்போக்கு என்பதும் உண்மைக்கு விரோதிதான்.
    ஒரு தனி மனிதனுக்கு ஆரோக்கியமான அல்லது மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு மேல் வேறெதுவும் எப்படி இல்லையோ, அதுபோல மனித குலத்திற்கு கம்யூனிச சமூக அமைப்பிற்கு மேல் வேறெதுவும் இல்லை. ஆகையால் நீங்கள் கம்யூனிச தத்துவத்தில் குறை கண்டுபிடிப்பதை விட்டு விட்டு முடிந்தால் உங்கள் வர்க்க ஊடகங்களில் இத்தத்துவத்தை ஒளிபரப்ப அனுகிப்பாருங்கள். உங்கள் நிலைமை என்னவாகும் என அப்புறம் தெரியும். மற்றபடி கம்யூனிஸ்ட்டுகள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்று யாரும் சொல்லவில்லை.
    அதென்னங்க சித்தாந்தத்துக்கு அடிமைப்படுவது? நீங்க அறிவை ஏற்கிறீர்களா? நிராகரிக்கிறீர்களா? நீங்க வாழ்க்கையை விரும்புகிறீர்களா? வெறுக்கிறீர்களா? இதையே கொஞ்சம் மாத்தி நீங்க வாழ்க்கைக்கு அடிமையா? அறிவுக்கு அடிமையா என்று கேள்வி கேட்டால் எப்படி இருக்குமோ அப்படித்தான் உள்ளது உங்கள் வினாவும், ஆனாலும் நீங்கள் தொடர்ந்து வினவுங்கள். தெளிவு ஒன்றுதான்.

    • //நடுநிலைப்போக்கு என்பதும் உண்மைக்கு விரோதிதான்.//

      மாத்ராஸ்பர்சாஸ்துகௌந்தேய சீதோஷ்ண ஸுகது:க்கதா:
      ஆகமாபாயினோSனித்யா: தாம்ஸ்திதிக்ஷ்ஸ்வ பாரத – கீதை 2-14

      ஒருவனுக்கு ஒரு பொருளிலிருந்து கிடைக்கும் அனுபவம் பிறிதொருவனுக்கு வேறாகத் தெரியும். இரண்டு பேரும் ஒரேபோல் அதை அறிவதில்லை. காராணம் அவர்கள் மனநிலை, அவர்கள் புத்தியின் தன்மை. நமது ஒரு நிலையில் வரும் இனிப்பான விஷய அனுபவம் நமது நிலை மாறும்போது ஒரு கசப்பாக மாறுவதுண்டு. இது விஷயத்திலுள்ள் வேறுபாடா? அல்ல. நம் மன நிலையில் வரும் மாற்றத்தின் காரணமாக மாறுகிறது. அப்பொழுது, விஷயங்களில் சுக துக்கங்கள் இல்லை, அது நம் மன நிலையை ஒட்டி அமைகிறது எனத் தெளிவாகிறது அல்லவா? இப்படி மன நிலை மாறுவதால அது அநித்தியம். ஆதலால் வெப்பம், குளிர், சுகம் துக்கம் போன்ற அனுபவங்களும் அநித்தியம் என்பதை உணர்வாய் எனப் பொருள். விஷயங்களும் மாறுகின்றன. ஒரு பொழுது கிடைக்கும் விஷயம் மறு பொழுது மாறிவருகிறது. அல்லது அதே விஷயம் இரு பொழுதுகளில் வரும்போதும் நம் அனுபவம் வித்தியாசமாக இருக்கிறது. காரணம் நம் மன நிலையும் மாறுகிறது. இப்படி மாறும் வஸ்து அநித்தியம். சாசுவதமில்லை. ஆகையால் அவைகளிலிருந்து வரும் அனுபவமும் நித்தியமில்லை.

      உங்கள் கேள்விக்கு விடை பகவத் கீதையில் உள்ளது.

      • “இவ்வுலகில் ஒன்று நீங்கள் எங்களோடு இருக்க வேண்டும், அல்லது தீவிரவாதத்தை ஆதரிக்க வேண்டும். இரண்டிலும் இல்லாமல் நடுநிலையோடு யாரேனும் இருந்தால் அவர்களும் எங்களுக்கு எதிரிதான்” என்று அறிவித்த அமெரிக்காவிடம் சொல்லுங்கள் உங்கள் விளக்கத்தை.(விசத்தில் நல்லது கெட்டது ஆராய முடியாது என்பது வேறு விசயம்)

Leave a Reply to நந்தன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க