privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்அரசு மருத்துவமனையா? மரண வாசலா?

அரசு மருத்துவமனையா? மரண வாசலா?

-

அரசு மருத்துவமனையா - மரண வாசலா

போதிய அளவுக்கு மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள், செவிலியர்கள் இல்லாமலும், அடிப்படை வசதிகள் இல்லாமலும் தமிழகத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. பறவைக் காச்சல், பன்றிக் காச்சல், சிக்குன்குனியா மற்றும் இன்னும் பெயர் தெரியாத பல புதிய நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கப் பல அரசு மருத்துவமனைகளில் மருந்துகளும் இல்லை; குடிநீர், மின்சாரம், இரத்த வங்கி, எக்ஸ்ரே, ஈ.சி.ஜி., அவசர சிகிச்சைப் பிரிவு, ஆம்புலன்ஸ் முதலான வசதிகள் இல்லாமலும், அறுவை சிகிச்சை, தண்ணீர் சிகிச்சை, இதயநோய் சிகிச்சை, தோல்நோய் சிகிச்சை, குழந்தை நலம், எலும்பு முறிவு முதலானவற்றுக்கு மருத்துவர் இல்லாமலும், தண்ணீர் இல்லை, போதிய இடவசதி இல்லை என்று பல்வேறு காரணங்களைக் கூறியும் நோயாளிகளை விரட்டும் அரசு மருத்துவமனைகளின் அலட்சியத்தால் தொடர்ந்து பல ஏழைகளின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டு வருகின்றன.

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வழியில்லாமல், தங்களது சிறு உடமைகளை விற்றும் கந்துவட்டிக்குக் கடன் வாங்கியும் ஏழை நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்லுமாறு நிர்பந்திக்கப்படுகின்றனர். இவற்றைக் கண்டித்து பலமுறை மனு கொடுத்தும் மருத்துவமனை நிர்வாகமோ, அரசோ அசைந்து கொடுப்பதில்லை. மறுபுறம், கலைஞர் காப்பீடு திட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனைகள் கொழுப்பதற்காகப் பலநூறு கோடிகளை அரசு ஒதுக்குகிறது.

அரசின் அலட்சியத்தை எதிர்த்தும், அரசு மருத்துவமனையைப் போர்க்கால அடிப்படையில் மேம்படுத்தி மக்களின் உயிரைக் காக்கக் கோரியும் நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பகுதியில் இயங்கிவரும் நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம், 11.10.2010 அன்று வாகனப் பேரணியையும், கண்டன ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியது. கோத்தகிரி டானிங்டன் பகுதியிலிருந்து காமராஜர் சதுக்கம் வழியாக மார்க்கெட் திடலை இப்பேரணி வந்தடைந்ததும், அங்கு சங்கத்தின் தலைவர் தோழர் செல்வம் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மருத்துவமனை சீர்கேட்டை அம்பலப்படுத்தியும், அரசு மருத்துவமனைகளைப் புறக்கணித்துத் தனியார் மருத்துவமனைகளை ஊட்டிவளர்க்கும் கலைஞர் காப்பீடு திட்டத்தை எதிர்த்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் உள்ள அரசு மருத்துவமனை சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்து, கடந்த 2009-ஆம் ஆண்டின் இறுதியில் மாவட்டத் தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால், தலைமை மருத்துவமனை என்ற பெயர்ப்பலகை மட்டும்தான் இங்கு இருக்கிறதே தவிர, இங்கு போதிய மருத்துவர்களோ மருந்துகளோ இல்லை. மக்களின் அடிப்படைத் தேவைகளை அறவே புறக்கணித்துவரும் அரசை எதிர்த்தும், மருத்துவம் பெறுவது நமது அடிப்படை உரிமை, அதைச் செய்துதர வேண்டியது அரசின் கடமை என்பதை உணர்த்தியும் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்ட பென்னாகரம் வட்ட விவசாயிகள் விடுதலை முன்னணி, அதன் தொடர்ச்சியாக 11.10.2010 அன்று பென்னாகரம் அரசு மருத்துவமனை முன்பாக தோழர் சிவா தலைமையில் விண்ணதிரும் முழக்கங்களுடன் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

அரசு மருத்துவமனைகளைத் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வரும் தமிழக அரசை எதிர்த்தும், தனியார் மருத்துவமனைகளின் கொள்ளையை எதிர்த்தும் நடந்த இந்த ஆர்ப்பாட்டங்கள், போராடாமல் அடிப்படை உரிமைகளை நாம் பெறமுடியாது என்பதை உழைக்கும் மக்களுக்கு உணர்த்து வதாக அமைந்தன.

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. அரசு மருத்துவமனையா? மரண வாசலா? | வினவு!…

    போதிய அளவுக்கு மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள், செவிலியர்கள் இல்லாமலும், அடிப்படை வசதிகள் இல்லாமலும் தமிழகத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன….

  2. சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகள் எல்லாவகையிலும் சிறப்பாக இருக்கிறது என்கிறார்களே? கிராமப்புறத்தை விட்டு விடுங்கள். நகர்ப்புற மருத்துவமனைகள் உங்கள் பார்வையில் எவ்வாறு உள்ளது?

    • கிராமப்புறத்தை விட்டுவிடுங்கள் நகரத்தை பாருங்கள் என்று சொல்றீங்களே சார் உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை….ஆமாம் என்ன படிச்சிருகீங்க ஐயா? என்ன வேலையில் இருக்கீங்க பசங்க எல்லாம் சௌக்கியமா? எந்த ஊர்லேர்ந்து சிட்டிக்கு வந்தீங்க?

  3. பணக்காரர் ஒருவர் நான் மருத்துவமனைக்கே
    செல்வதில்லை என்று சொல்லுவதற்கும்
    எழை ஒருவர் ஆஸ்பத்திரி பக்கமே
    செல்வதில்லை என்று சொல்லுவதற்கும்
    நிறைய உள்ளர்த்தங்கள் இருக்கின்றன
    முன்னது ஊட்டசத்து உணவும்
    ஆரோக்கியமான வழ்விடம் இருக்கிறது
    என்ற ஆகம்பவம்
    பின்னது பொது மருத்துவமனை கியுவில்
    மதியம் வரை நிக்க வேண்டும்
    அதனால் ஒருநாள் கூலி பறி போய் விடுமே
    என்ற பயமும்
    கொஞ்சம் அசந்தால் உயிரே பறி போய் விடும்
    என்கிற பயம் தான்
    விவாசயிகளை கசாயத்தை குடிக்க வைக்கிறது

  4. அதிலும், கிராமப்புற மருத்துவமனைகளில் specialty மருத்துவம் சீரமைக்கப்பட வேண்டும். நோயால் அல்லல்பட்டு நகரத்துக்கு வந்து கஷ்டப்படுபவர்கள் ஏராளம்.

  5. [[[அதன் தொடர்ச்சியாக 11.10.2010 அன்று பென்னாகரம் அரசு மருத்துவமனை முன்பாக தோழர் சிவா தலைமையில் விண்ணதிரும் முழக்கங்களுடன் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது]]]
    இது போன்ற போராட்டங்களை விரிவுப்படுத்த வேண்டும்

  6. சற்றே இந்தியாவுக்கு வெளியே இலங்கைக்கு சென்று அரசு மருத்துவமனையை கொஞ்சம் பார்த்தால் . அதிர்ச்சி. காரணம் போர் சூழலால் பதிக்கப்பட்ட வடகிழக்கு தவிர்த்து ஏனைய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளின் தரம் . ” ஏண்டா இந்தியவேல்லாம் வல்லரசாடா ” என்று கேட்கிற அளவுக்கு இருக்கு.. பிறகு நான் சிங்கபோர்ர் மற்றும் கனடாவில் இருக்கும் அரசு மருத்துவமனை பற்றி உங்களுக்கு சொல்லி தெரியவேண்டியதில்லை.

  7. //கலைஞர் காப்பீடு திட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனைகள் கொழுப்பதற்காகப் பலநூறு கோடிகளை அரசு ஒதுக்குகிறது.//

    தனியார் மருத்துவமனையா? புரத்தார்களா?ஆழச்சிந்தித்து எழுதவும்.

  8. ஒரு பொருளை எப்படியாவது வாங்கவைக்க வேண்டும் என்பதற்காக செய்யப்படும் விளம்பரம் இன்று ஒரு இயல்பான விசயமாக ஆகிவிட்டது. இங்கு ‘வாங்குதல்’ என்பதை பெரும்பாலும் மக்களின் ‘தேவை’ தீர்மானிப்பதிலலை. நிர்பந்தமே தீர்மானிக்கிறது. அதேபோல் இன்று மருத்துவமும் விளம்பரப் பொருளாக ஆக்கப்பட்டுவிட்டது. இதன் பொருள் நாட்டில் நோயாளிகள் எப்படியாவது குணமாகிவிட வேண்டும் என்பதாலா, அல்லது நீங்கள் நோயாளிகளாக இருந்தால்தான் நாங்கள் கல்லாக்கட்ட முடியும் என்பதாலா ? பின்னது என்றால் இந்த மருத்துவத்தின் யோக்கியதை எப்படிபட்டதாக இருக்கும்? இங்கு கேள்விக்குள்ளாக்கும் விசயம் இன்றைய நவீன மருத்துவ முறையை அல்ல; இந்த நவீன முறை உண்மையான நோயாளிகளை சென்றடைவதற்கு வர்க்க பேதம் ஒரு முன் நிபந்தனை என்றாலும் பல புதிய நோயாளிகளை (செயற்கையாக) கோருகிறது என்பதுதான் இந்த விளம்பரத்தின் சாரம். உயிரை பொருளாகப் ‘பாவி’க்கும் இந்த தனியார் மருத்துவமுறைகளை கருணாநிதி அரசு ஊட்டி வளர்ப்பதன் நோக்கமே அரசு மருத்துவமனையை நீர்த்துபபோகச் செய்யத்தான் என்பதை தோழர்களின் போராட்டச் செய்தியே மிக எடுப்பாக உணர்த்தியுள்ளது.

Leave a Reply to ஒரு ரூபாய் புளுத்த அரிசியும் கிரிக்கெட் ரசிக்கும் முதல்வரும்! « இளமாறன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க