முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்"எங்கள் வேதனையை உணருங்கள்" என்கிறார்கள் காஷ்மீர் மக்கள் - நிருபமா சுப்ரமணியன்

“எங்கள் வேதனையை உணருங்கள்” என்கிறார்கள் காஷ்மீர் மக்கள் – நிருபமா சுப்ரமணியன்

-

எதிர்ப்புகள் தணிந்த பின்னரும் மக்களின் சாவுகள் பற்றிய கோபம் கனன்று கொண்டுதான் இருக்கிறது.

நிருபமா சுப்ரமணியன் – தி இந்து 24.11.2010

____________________________________________________

“ஷமீர் இந்தா, போய் பேரிக்கா வாங்கிக்க,” என்று தந்தை கொடுத்த 10 ரூபாய் நோட்டுடன் வாசலுக்கு ஓடிய சிறுவன், தள்ளுவண்டிக்காரரிடம் வாங்கிய கொழுத்த 5 பேரிக்காய்களுடன் திரும்பினான்.  அதில் ஒன்றைக் கவ்விக்கொண்டு, “அப்பா நான் மாமா வீட்டுக்குப் போயிட்டு வர்ரேன்” என்று கத்திக் கொண்டே மறுபடியும் வெளியே ஓடினான். ஸ்ரீநகர் பத்மலூ பகுதியில் வாழ்பவரும், பக்கத்து பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்பவருமான ஃபியாஸ் அகமத் ராஹ் என்ற தந்தையும் அவரது எட்டு வயது மகன் ஷமீரும் ஆகஸ்ட் 2 அன்று நண்பகலில் பேசிக்கொண்ட கடைசி சொற்கள் இவைதான். அடுத்த சில மணிகளில் அச்சிறுவன் ஷமீர் இறந்து கிடந்தான்.

புறக்கடை சந்தில் வைத்து நாலைந்து சி.ஆர்.பி.எஃப் ஜவான்கள் அவனை லத்திக் கம்புகளால் விளாசியதையும், அவன் தொண்டைக் குழியில் கம்பை வைத்து அழுத்தியதையும் பார்த்ததாக அக்கம் பக்கத்து மக்கள் ராஹிடம் தெரிவித்தனர்.

”ஏழு வயது சிறுவனை, எங்கள் குல விளக்கை அவர்கள் அணைத்துவிட்டனர்.  அவன் தனது கையில் துப்பாக்கியை அல்ல, கல்லைக்கூட அல்ல, பேரிக்காயைத்தானே வைத்திருந்தான்” என்று கதறுகிறார் தந்தை.

சிறுவன் அடித்துக் கொல்லப்படவில்லை; அன்று அந்த பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டபோது தலைதெறிக்க ஓடிய கூட்டத்தில் மாட்டி மிதிபட்டு செத்தான் என்று மறுத்துரைக்கிறது ஸ்ரீநகர் போலீசு.  சட்டத்தை அமல் படுத்துவோருக்கும் மக்களுக்கும் இடையிலான பிளவு கடந்த நான்கு மாதங்களாய் படுபாதாளமாகி இருக்கும் நிலையில் போலீசின் இந்தக் கூற்றைக் கொள்வாரில்லை.  ஷமீர் மரணம் தொடர்பாகப் போலீசால் போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ஏற்க மறுக்கிறார் அவனது தந்தை.

”அன்று அப்படி எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் நடக்கவில்லை.  என் மகனது மரணத்துக்குப் பின்னர்தான் எதிர்ப்புகள் கிளம்பின”  என்று விவரிக்கும் தந்தையின் கண்ணீர் வழிந்தோடுகிறது.  ”என் மகனைக் கொலை செய்த சி.ஆர்.பி.எஃப் ..காரர்களைத் தண்டிக்காமல் விடக்கூடாது” என்கிறார் ஃபயாஸ்.

ஸ்ரீநர் மற்றும் காஷ்மீரின் பிற பகுதிகளில் கல்லெறியும் மக்கள் போராட்டத்தை எதிர்கொண்ட போலீசு மற்றும் சி.ஆர்.பி.எஃப் படையினரின் தாக்குதலால் ஜூன் 11 அன்று கொல்லப்பட்ட 17 வயது பள்ளிச் சிறுவன் துஃபயில் மட்டூ தொடங்கி, ஜூன் முதல் அக்டோபர், 2010 வரையிலான மூன்று மாதங்களில் கொல்லப்பட்ட 112 பேர்களில் ஷமீரும் ஒருவன்.  ஒவ்வொரு சாவும் பல போராட்டங்களைக் கிளர்ந்தெழச் செய்கிறது.  ஒவ்வொரு போராட்டமும் சாவு எண்ணிக்கையை உயர்த்துகிறது.

போலீசுத் தரப்பு மறுமொழி

“இந்த சாவுகளில் சில நியாயப்படுத்த முடியாத வகையில், தவறான நடவடிக்கைகளால் விளைந்ததாக இருப்பினும், பெரும்பாலான சம்பவங்களில் கிளர்ந்தெழும் கும்பலின் நோக்கம் வன்முறையாகவே இருந்தது. துப்பாக்கி சூடு நடத்துவதைத் தவிற வேறு தெரிவு இல்லை” என்கிறது போலீசு தரப்பு.

அமைதிவழிப் போராட்டத்தின் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கி சூடு நடத்துகிறார்கள் என்ற விமர்சனத்துக்கு, “தீ வைப்பு எல்லாம் என்று முதல் அமைதிவழிப் போராட்டம் ஆனது?” , “ துப்பாக்கி அற்ற, காந்திய வழியில் நாங்கள் வன்முறையை எதிர்கொள்ளவேண்டும் என்று சொல்லுவதெல்லாம் அதீத கற்பனை” என்கிறார் ஸ்ரீநகர் காவல்துறை அதிகாரி.

போலீஸ் தரப்பு நியாயங்கள் எதுவாயினும், போராட்டம் சற்றே ஓய்ந்திருப்பினும், இந்த மரணங்கள், “இந்தியப் படைகளுக்கும்”, புது டில்லி அரசுக்கும்,  மற்றும் ஒமர் அப்துல்லா தலைமையிலான மாநில அரசுக்கும் எதிராக நீறுபூத்ததொரு கோபக் கனலை விட்டுச் சென்றுள்ளன.  இப் படுகொலைகளை விசாரிக்க ஜூலை இறுதி நாட்களில் இரு நபர் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.  இதில் வெறும் 17 சாவுகள் குறித்து மட்டுமே விசாரிக்கப்பட இருப்பது மேலும் ஒரு கசப்பான முடிவு.

நிகழ்ந்த எல்லாப் படுகொலைகள் பற்றியும் ஆய்வு செய்யப்படவேண்டும் என்பது மக்கள் கோரிக்கை. ஆனால்,  அதே சமயம், கடந்த கால விசாரணைக் கமிஷன்களில் தாங்கள் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில், குற்றவாளிகள், அதிலும் குறிப்பாக பாதுகாப்புப் படையினர், தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை அவர்களிடம் எள்ளளவும் இல்லை.

1990 முதல் 2006 வரையிலான காலத்தில் 458 வழக்குகளில் ஆய்வு முடிவுகள் பாதுகாப்புப் படையினர் மீது குற்றம் சுமத்தின. ஆனால் அவர்கள் மீது குற்ற வழக்குத் தொடுப்பதற்கான அனுமதி இதுநாள் வரை வழங்கப்படவில்லை என ஹிந்து நாளேட்டுக்குத் தெரிவிக்கிறார் ஜம்மு-காஷ்மீர் குடிமக்கள் கூட்டணியைத் தலைமையேற்று நடத்தும் வழக்கறிஞர் பர்வேஸ் இம்ரோஸ்.

மற்றொரு உதாரணம்

தங்கள் முன் வாக்குமூலம் அளிக்குமாறு விசாரணைக் கமிஷனில் இருந்து வந்த இரண்டு தாக்கீதுகளுக்கும் கொலையுண்ட சிறுவன் துஃபயிலினின் தந்தை அர்ஷத் மட்டூ செவிசாய்க்கவில்லை. மாறாக, தனது மகன் சாவுக்கு ஒரு முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய வலியுறுத்தி அவர் சொந்த முறையில் நீதிமன்றப் போராட்டம் நடத்துகிறார்.

12-ம் வகுப்பு படிக்கும் மாணவன் வகுப்பு முடிந்து வீடு திரும்புகையில் இறக்கிறான்.  முதலில் அவன் தனது நண்பர்களால் கொல்லப்பட்டிருக்கலாம் என்றது போலீசு.  ஆனால், தலையில் கண்ணீர்ப் புகைக் குண்டடி பட்டதால் ஏற்பட்ட மரணம் இது என்றது பிரேதப் பரிசோதனை அறிக்கை. அவன் கல்லெறியும் போராட்டத்தில் எல்லாம் கலந்துகொண்டதில்லை என்கிறார் அவனது தந்தை.

தான் பெற்ற நீதிமன்ற ஆணையைக் கொண்டு முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய போலீசை நிர்ப்பந்திக்கிறார் மட்டூ. ஆனால் அவ்வாறு பெறப்படும், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போலீசின் முதல் தகவல் அறிக்கையோ, இரு தரப்புத் துப்பாக்கிப் பிரயோகத்தின் இடையே நிகழ்ந்த மரணம் இது என்கிறது.  மட்டூ இதை மறுக்கிறார். வழக்கு இன்னமும் சி.ஜெ.எம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது.

வசதியான கம்பள வியாபாரியான அவர் அரசு அளித்த 5 லட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகையை ஏற்கவில்லை.  அக்கம்பக்கத்து வீட்டுச் சுவர்களில் எல்லாம் “இந்தியாவே வெளியேறு” என்ற முழக்கங்கள் கிறுக்கப்பட்டிருக்கின்றன.   ”என் மகன் சிந்திய குருதியை விலைபேசவா நான் இருக்கிறேன். என் மகனைக் கொன்றவர்களைத் தண்டிக்க இந்த அரசு உடனடியாக முனைந்திருக்குமானால் ஏனைய 111 பேர் தம் உயிரை இழக்கும்படி நேர்ந்திருக்காது”  என்கிறார் மட்டூ.

”இந்தியா என்னை ஏமாற்றிவிட்டது. செய்தி ஊடகங்கள் உள்ளிட்ட இந்திய ஜனநாயகத்தின் பல அம்சங்களை நான் மதித்து வந்தேன்… ஆனால், இனி என்றும் அதற்கு இடமில்லை” என்கிறார் அவர்.

இந்த மனநிலைதான் பரந்த அளவில் அங்கு காணப்படுகிறது. “உ.பி. போலீசு துப்பாக்கி சூட்டில் இரு விவசாயிகள் இறந்ததற்குப் பாராளுமன்றத்தில் கூப்பாடு போட்டார்களே; காஷ்மீரில் 112 பேர் செத்ததற்கு மட்டும் எதையும் காணோமே, ஏன்?” என்று கேட்கிறார்கள் மக்கள்.  ஊழல் விவகாரத்தால் மகாராட்டிர முதல்வர் இராஜினாமா செய்கிறார்;  ஊடகங்களின் கூச்சலால் ரத்தோரி சிறைக்கு அனுப்ப்ப்படுகிறார்; ஆனால், இங்கே காஷ்மீரில் ஏராளமான படுகொலைகள் நிகழ்ந்த பின்னும் இதுபற்றி ஒரு சலசலப்பு கூட இல்லையே ஏன் என்கிறார்கள் அவர்கள்.

“இந்தியாவின் பிற பகுதிகளில், நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையிலும் கூட, மக்கள் சமூகம் தனது அக்கறையை வெளிப்படுத்திய விதம் காரணமாக இந்த அரசு தன் இஷ்டம்போல் செயல்பட முடியாது என்பதை உணர்ந்திருக்கிறது. ஆனால், காஷ்மீரில் இந்தப் பாதுகாப்புப் படை சட்ட ரீதியான பாதுகாப்பை மட்டுமல்ல, இந்திய மக்கள் சமூகம் மற்றும் ஊடகத் துறையின் அரசியல் மற்றும் தார்மீக பலத்தையும் பெற்றுத்தான் எங்கள் மீது பாய்கிறது” என்கிறார் வழக்கறிஞர் இம்ரோஸ்.

காஷ்மீரின் அரசியல் பிரச்சினைகள் சிக்கலானவை;  உணர்ச்சிபூர்வமான பலவற்றை உள்ளடக்கியதாக, ஓருநாளில் தீர்வுகாண இயலாததாக இருக்கிறது என்பதை எல்லாம் புரிந்துகொள்ள முடிகிறது; ஆயினும், அதே வேளையில் இந்த அரசு குறைந்த பட்சம் மனித உரிமை விசயங்களையாவது உடனடியாகத் தீர்க்க வேண்டும் என்கிறார் இந்த வழக்கறிஞர். “நீங்கள் இதைக்கூட செய்யவில்லை என்றால், இந்திய ஜனநாயகம் தன் மூஞ்சியில் தானே கரி பூசிக்கொள்கிறது என்பதைத் தவிர வேறென்ன” என்கிறார் அவர்.

தெருநாய்களைக் கொல்வது தடை செய்யப்பட்டிருப்பதையும், ஒரு கரடியைக் கொன்ற குற்றத்துக்காக 2007-ம் ஆண்டுமுதல் சிறையில் கிடக்கும் இரண்டு காஷ்மீரிகளையும் குறிப்பிட்டு, ”இந்தியாவில் காஷ்மீரிகளைவிட விலங்குகளுக்குக் கூடுதல் நியாயம் கிடைக்கிறது” என்று ஷமீரின் நினைவில் கண்ணீர் வடித்தபடி அவனது தந்தை கூறுகிறார்.

நியாயம் இல்லை

”இந்தியா ஒரு ஜனநாயக நாடாக இருக்கலாம். ஆனால், காஷ்மீர் விசயத்தில் அது ஜனநாயக விழுமியங்கள் அனைத்தையும் மறந்துவிடுகிறது. இந்திய அரசியல் அமைப்பில் காஷ்மீரிகளுக்கு நீதி இல்லை” என்கிறார் குலாம் நபி ஹகிம். போலீசு மற்றும் சி.ஆர்.பி.எஃப் துப்பாக்கி சூட்டில் ஒரு சிறுவன் கொல்லப்பட்டதைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்ட்த்தில் கலந்துகொண்டு குண்டடிபட்டு இறந்த சுகில் அகமத் தார் என்ற 15 வயது சிறுவனின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு துப்பாக்கி சூட்டுக்கு பலியான ஃபிதா நபி என்ற 19 வயது சிறுவனின் தந்தை இவர்.

நுரையீரல் சிதைந்து சின்னாபின்னமானதால் மரணத்தைத் தழுவினான் உமர் கயாம் என்ற 17 வயது சிறுவன். “ஆகஸ்ட், 22 அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு போலீசு நடத்திய தாக்குதலுக்கு ஆளாகி அவன் இறந்தான். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நாங்கள் விடுத்த வேண்டுகோள்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. இறந்தோர் பற்றிய அதிகாரபூர்வப் பட்டியலில் அவனது பெயர் சேர்க்கப்படவில்லை” என்கின்றனர் அவனது குடும்பத்தார்.

“காஷ்மீர் இந்தியாவின் பிரிக்கவொண்ணா அங்கமாக இருப்பது உண்மையானால், இந்தியா எங்களுக்காக ஏன் வருந்தவில்லை? உடலின் ஒரு உறுப்பு காயமுறுமானால் பிற உறுப்புகள் அதன் வலியை உணரவேண்டும். தயவுசெய்து எங்கள் வலியை உணருங்கள்” என்கிறார் அச் சிறுவனின் தந்தை அப்துல் கயாம்.

_________________________________________

நன்றி: தி ஹிந்து, தமிழாக்கம் – அனாமதேயன்
_________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 1. “எங்கள் வேதனையை உணருங்கள்” என்கிறார்கள் காஷ்மீர் மக்கள் – நிருபமா சுப்ரமணியன்…

  ஏழு வயது சிறுவனை, எங்கள் குல விளக்கை அவர்கள் அணைத்துவிட்டனர். அவன் தனது கையில் துப்பாக்கியை அல்ல, கல்லைக்கூட அல்ல, பேரிக்காயைத்தானே வைத்திருந்தான் என்று கதறுகிறார் தந்தை….

 2. Saga kashmeeriyai kooda thaan paarthu vanangara thisaiyil vanangadhaadaal, avargalai adithu viratiya kumbal, ippodhu aah oohu endru oolai idukirathu….. ramlan samayathil kooda petti kadai kooda yendha sadharana muslimum thirakka koodathu yena oru silla kalleri gumbalgalin veriyattam yendru adangumo!

 3. உங்கள் வேதனையை மட்டுமல்ல, உங்கள் தரப்பு நியாயங்களையும் உணரமாட்டோம்!!!

  காஷ்மீர் என்ற உடன் எங்களுக்கு தேச பக்தி போதை ஏற்றிவிடுகிறதே அதை எப்படி இழப்பது?

  எங்களுடைய மற்ற பிழைப்புவாதத்தை, சந்தர்ப்பவாதத்தை, அப்பட்டமான சுயநலத்தை மறைக்க நாங்கள் எதை தான் பயன்படுத்துவது சொல்லுங்கள்?

  இந்த நாட்டு பற்றையும், கிடிக்கெட்டையும் விட்டால் எதைக் கொண்டு எங்கள் சமூக அக்கரையை வெளிப்படுத்துவது???

  அதனால் தான் நாங்கள் சொல்கிறோம் “காஷ்மீர் இந்தியாவின் பகுதி! அந்த பகுதி மக்களின் துயரங்களை கண்டுகொள்ள மாட்ட்டோம்!” அதை கேள்வி கேட்டால், இந்தியியாவின் பகுதியில்லை என்றால் நீ தீவிரவாதி!

  மேலும், இந்தியியாவின் பகுதியில்லை என்றெல்லாம் நீங்கள் அமைதியாக உண்மையை பேசிவிட்டு போய்விட முடியாது, உங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்! ஏனென்றால் எங்களது இறையான்மையை (பிழைப்புவாதத்தை, சந்தர்ப்பவாதத்தை, அப்பட்டமான சுயநலத்தை) நீங்கள் இழிவு படுத்துகிறீர்கள்!!!

  செய்கிந்த்!

 4. நல்ல கட்டுரை.

  இந்தளவு அக்கறை காட்டுகிற இந்து ஈழத் தமிழர் விஷயத்தில் பூரணமான செய்தித் திரிப்பையல்லவா நடத்தியது!

  இப்போ, சி.பி.எம். காங்கிரஸின் கூட்டாளியாயிருந்தால், இந்து ராம், காஷ்மீர் பற்றி எதை எழுத அனுமதித்திருப்பாரோ? எதை எழுத ஆணையிட்டிருப்பாரோ?

  பழங்குடிகளை வேட்டையாடல் பற்றிய நிலைப்பாடு தெரிந்த கதை தானே!

 5. நிருபமா சுப்ரமணியன் மற்றும் மாலினி பார்த்தசாரதி போன்ற தி ஹிந்து நாளிதழில் பணியாற்றும்? தேச விரோத நாய்கள் அந்நிய கைக்கூலிகள்.

  வினவு அவர்களே இதற்க்கு மட்டும் உங்களுக்கு பார்ப்பன ராமின் தி ஹிந்து பத்திரிக்கை பிடிக்கும் ஆனால் ஸ்ரீலங்கா என்றால் அந்த ஆள் பிடிக்காதோ.

  • வாயா அமெரிக்க கைக்கூலி கைக்கூலின்னு கூட சொல்லக்கூடாது கால்கூலி சொல்றதுதான் ஒனக்கு பொருத்தமாக இருக்கும்

 6. வருடா வருடம் ஸ்பெஷல் பாக்கேஜ் என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான கோடிகளை காஷ்மீருக்கு நமது மத்திய அரசாங்கம் அள்ளிவிடுகிறது. இந்தியாவில் எந்த மாநிலதுக்குமே இல்லாத பல சிறப்பு சலுகைகள், மைனாரிட்டி மக்கள் என்ற முறையில் பல சலுகைகள் இவ்வாறு பொருளாதார ரீதியாக பல வசதி வாய்ப்புகள்.

  இன்னும் என்னதான் வேண்டும் இந்த காஷ்மிர [obscured] . ராணுவ அடக்குமுறை என்று சில [obscured] அது எதனால் என்று யோசிக்கவேண்டும். இந்தியாவின் மற்ற மாநிலங்களை போன்று இருந்தால் ஏன் இந்த பிரச்சனை.

  • //வருடா வருடம் ஸ்பெஷல் பாக்கேஜ்//
   ஒ அப்பன் பாக்கேட்ல இருந்த எடுத்து குடுக்கிற ரோம்ப அலுத்துகிற அதுல காஷ்மீர் காரன் வரிப்பணமும் இருக்கு

  • இந்திய அரசு ஏன் இவ்வளவு துன்பப்பட வேண்டும்?
   இந்திய அரசுக்குத் தெல்லையில்லாமல் காஷ்மீரிகள் தம் பாட்டில் இருக்கலாமே. நீங்கள் வருந்தி வருந்திக் கொடுக்கிற வரிப்பணமும் உங்களுக்கு மிஞ்சுமல்லவா!
   வெள்ளைக்காரன் கூட இந்தியாவைக் கட்டியாளக் கட்டாது என்றுதானே காந்தியிடம் ஒப்படைத்துப் போனான்!

   • அதயேதாங்க இந்தியாவிலும் பல பேர் சொல்லறாங்க. இந்து வெறி இந்தியாவில் வாழ்வது ரொம்ப கொடுமையான விஷயமென்றால் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்து விடலாமே?

    • இதைப்பற்றி ஒரு இந்தியன் கருத்து சொல்ல்லாம் ராம் உங்களைப்போன்ற NRI களுக்கும் இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம், கூலிக்காக நாட்டை மாற்றிக்கொள்ளும் கூட்டத்துக்கெல்லாம் தேசத்தை பற்றி பேச என்ன தகுதி?

   • பிழைப்புக்காக வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்தாலும் மனதாலும் உணர்வாலும் இந்தியர்களாக இருக்கும் NRI கள், உள்ளூரிலேயே இருந்து கொண்டு இந்திய பேச்சுரிமை, எழுத்துரிமை ஆகியவைகளை துஷ்பிரயோகம் செய்து கொண்டு பிரிவினைவாதம், பயங்கரவாதம் ஆகியவற்றுக்கு துணை போகிக்கொண்டு இருக்கும் தேசத்துரோகிகளை விட எவ்வளவோ தேவலை.

    வயிற்றை கட்டி வாயை கட்டி, (50 டிகிரி வெயில் காயும் பாலைவனத்திலும், -30 டிகிரி குளிர் நடுக்கும் ஊர்களிலும் வேலை செய்து)சம்பாதிக்கும் பணத்தை NRI கள் சுவிஸ் வங்கியில் போடுவதில்லை. இந்திய வங்கிகளில் தான் போட்டு வைத்திருக்கிறார்கள்.

    • இந்திய வங்கிளில் போடுகிறாறாம், விட்டா இந்தியாவின் கடனை அடைக்த்தான் வெளிநாட்டுக்கு போய் மாடாய் உழைத்து ஓடாய் தேய்கிறார் என்று சொல்வாரு போலயே…. அமெரிக்க, கணேடிய வங்கிகளில் இந்தியாவில் கிடக்கும் வட்டி கிடைக்காது ஓய், டாலர் இங்க வரும்போது அது 40 மடங்கு மதிப்பும் கூடுது ஓய்.. கேக்கறவன் கேணயனாய் இருந்தா எரும மாடு ஏரோப்பிளேன் ஓட்டும்பானாம்.. கிரீன் கார்டு, மஞ்சா கார்டு எல்லாம் தூக்கி கடாசிட்டு டவுசரோட வந்து இந்தியாவ முன்னேத்த வேண்டீதானே யாரு தடுத்தது.. பணம் போடறாறாமில்ல பணம்

    • //மனதாலும் உணர்வாலும் இந்தியர்களாக இருக்கும் NRI கள், //

     இதோட அர்த்தம் என்னவென்றால், இந்தியாவை கூட்டிக் கொடுப்பதை முழு மனதுடன் ஆதரிப்பது என்பதாகும்.

    • NRI-க்கள் அனைவரையும் ஒரே மாதிரி எடுத்துக்கொள்ளமுடியாது.
     வீட்டை அடகு வைத்து ஆடு,மாடு,வயலை விற்று வெளிநாட்டுக்கு போய் வெயிலிலும் குளிரிலும் வாடி வதங்கி உழைத்து குடும்பத்தை காப்பாற்ற பணம் அனுப்பும் உழைக்கும் மக்களும் அரசு மருத்துவ கல்லூரிகளில்,இ.தொ.க.(IIT ) இ.அ.க.(IISc ) இன்னபிற உயர்கல்வி நிலையங்களில் கோடிகணக்கில் மக்கள் வரிப்பணத்தை விழுங்கி படித்து பட்டம் பெற்றுவிட்டு இந்த நாட்டுக்கு துரோகம் செய்து வெளிநாட்டுக்கு காசு பார்க்க ஓடிப்போகும் நன்றிகெட்டவர்களும் ஒரே வகையினரா.

     முன்னவர்கள் உழைப்பாளிகள்.தம் உழைப்பால் தாமும் வாழ்ந்து அந்நிய செலாவணியால் தம் தாய்நாட்டையும் வாழவைப்பவர்கள்.பின்னவர்களோ இங்கும் அவர்கள் வருவாய்க்கு வழியிருந்தும் கூடுதல் வருமானத்துக்கு ஆசைப்பட்டு நாட்டுக்கு,தங்களை படிக்க வைத்த மக்களுக்கு,துரோகம் செய்பவர்கள்.

    • //விட்டா இந்தியாவின் கடனை அடைக்த்தான் வெளிநாட்டுக்கு போய் மாடாய் உழைத்து ஓடாய் தேய்கிறார் என்று சொல்வாரு போலயே//

     சொந்த கடனை அடைக்கத்தான் வெளிநாடுகளுக்கு போகிறார்கள். ஆனால் அவர்கள் அனுப்பும் அன்னியச் செலாவணி இந்தியாவின் கடனையும் அடைக்க உதவுகிறது என்பதுதான் உண்மை. சென்ற வருடம் NRI அனுப்பிய தொகை 52 பில்லியன் டாலர்கள். வளைகுடா நாடுகள், வட அமெரிக்கா, ஐரோப்பா என் எந்த ஊரிலிருந்து வந்தாலும் பணம் ஒன்றுதான். 2000 க்கு பிறகு தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்ட வாய்ப்புகள் அன்னியச் செலாவணி அதிகரிப்புக்கு காரணம்.

     நீ இந்தியனா என்ற கேள்வியே தவறான ஒன்று. NRI களின் தேசப்பற்றுக்கு உங்கள் சர்டிபிகெட் வேண்டாம்.

     http://www.thehindubusinessline.com/2007/08/10/stories/2007081050580801.htm
     http://www.migrationinformation.org/Feature/display.cfm?id=577

    • ராம் காமேசுவரன்,
     தங்களுக்கு எழுதிய பதிலை இங்கு பதிவதற்கு பதிலாக கீழே பதிந்துவிட்டேன்.பின்னூட்டம் எண்.11 .

 7. […] This post was mentioned on Twitter by வினவு and புலவன் புலிகேசி, ஏழர. ஏழர said: “எங்கள் வேதனையை உணருங்கள்” என்கிறார்கள் காஷ்மீர் மக்கள் – நிருபமா சுப்ரமணியன் http://j.mp/epfJ2w […]

 8. ” “ துப்பாக்கி அற்ற, காந்திய வழியில் நாங்கள் வன்முறையை எதிர்கொள்ளவேண்டும் என்று சொல்லுவதெல்லாம் அதீத கற்பனை” என்கிறார் ஸ்ரீநகர் காவல்துறை அதிகாரி. ”

  வன்முறையை வன்முறையால்தான் எதிர் கொள்ள வேண்டும் என்கிறார் காவல் துறை அதிகாரி. அப்படியானால் காந்தியின் அகிம்சை தான் இந்த நூற்றாண்டின் சிறந்த கொள்கை என்ற பம்மாத்து எதற்கு?

  காந்திய உபதேசம் மக்களுக்குத்தான்; அரசாங்கத்துக்கு அல்ல, என்பதை காஷ்மீர் மட்டுமல்ல நம்மூர் மக்களின் குடிநீர் போராட்டத்துக்கும் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நிரூபிக்கின்றன.

  ஊரான்.

 9. ///”இந்தியா ஒரு ஜனநாயக நாடாக இருக்கலாம். ஆனால், காஷ்மீர் விசயத்தில் அது ஜனநாயக விழுமியங்கள் அனைத்தையும் மறந்துவிடுகிறது. இந்திய அரசியல் அமைப்பில் காஷ்மீரிகளுக்கு நீதி இல்லை” என்கிறார் குலாம் நபி ஹகிம். ///
  காஷ்மீர் மக்களை சுட்டுத்தள்ளித்தான் இந்திய ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் இந்த ஜனநாயக மசுரு யாருக்கு வேணும்? இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைப்பவர்கள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.

  • இந்த்த செத்துப்போன பசங்க எல்லாம்.. அம்பது நூறு ரூபாய்க்கு ஆசைப்பட்டு
   போலீசை நோக்கி கல்லெறிந்த படியால் தான் கொல்லப்பட்டார்கள்..
   இதில் வருந்துவதெற்கு ஒன்றும் இல்லை…
   காசு கொடுத்து கூட்டிவந்தவுனுகள் தான் மனமிருந்தால் கவலைப்படணும்…
   இல்லைனா தாய் தகப்பன் புள்ளைங்களை கண்காணிக்கணும்..
   அந்த 112 பேரும் கல்லெறியும் போது தான் கொல்லப்பட்டார்கள்

   • போலீசுக்காரனுக்கே உரிய புத்தியிலிருந்து பதில் சொல்லியிருக்கீங்க. எந்த போலீசுக்காரன் மக்களின் கோரிக்கையை அல்லது மக்களின் போராட்டத்தை ஏற்றுக்கொள்கிறான்? அதாவது வளர்ப்பு பிராணியிடம் போய் நியாய அநியாயத்தை எதிர்பார்க்க முடியுமா? அதற்குத் தெரிந்ததெல்லாம் எஜமான விசுவாசம். காஷ்மீர் மக்களீன் ரத்தத்தை குடித்துவிட்டுத்தான் இந்திய ஜனநாயகம் உயிர் வாழும் என்பதை நீங்கள் வேண்டுமானால் ஆதரியுங்கள். தன்மானமுள்ள எவரும் ஆதிக்க முடியாது.

   • என்னங்க, உங்க இந்தியில ஒரே எழுத்துப்பிழையா இருக்கு.
    இப்படியெல்லாம் கஷ்டப்படணுமா?

    ஏக் காவ் மே ஏக் கிசான் ரகு தாத்தா… உங்களுக்கு என்ன கட்டாயமோ? 🙂

   • நான் வேனா நூறு ரூவா தாரேன்.நீயும் உன் குழந்த குட்டியோட கல்லெறிய வாரியா…ஏண்டா 50 க்கும் நூறுக்கும் கல்லெறிஞ்சி சாவ அவனுங்களுக்கு என்ன பைத்தியமா புடிச்சிருக்கு.அதெல்லாம் வீர உணர்வுடா மூதேவி.உன்ன மாதிரி [obscured] அது தெரியாது…….

    • இந்தா வீர உணர்வு பொங்கிவந்தா பொத்தி கிட்டு இருக்கணும்..இல்லைனா இப்படி வீணா தான் போகணும்…
     பாக்கி கிட்டே பல் இழிச்சு வாங்கும் போது இனிக்கும்,..
     போலீஸ் சுடும் போது தான் உணர்வு பொங்குமாக்கும்

  • இலங்கைத் தமிழர்கள் சொல்லுவார்கள்: “தானறியாச் சிங்களம் தன் பிடரிக்குச் சேதம்”.
   இந்திக்கும் செல்லும்.

   • ஆமாங்கறேன்– ராஜீவோட பொடரியும் பொளந்தாப்பிலத் தான்.

    ஞீங்ஙள் பொடரிக்குச் சேதமில்லாமே மலயாளம் பறையும் போல.

    • பொன்சேகா அண்ணா , கோத்தபாய அண்ணா என்னை விட்டுடுங்கண்ணா
     அண்ணா …நான் ஆயுதத்தை கீழ போட்டுடுரன் ..என்னை விட்டுடுங்கண்ணா 🙂 🙂 🙂
     இப்படி எல்லாம் கெஞ்சியும் மண்டையிலே கோடாலியை நாட்டிட்டானுன்களே..
     ராஜீவ் காந்தி அப்படி கெஞ்சினதா தெரியல்லா எல்லோ

    • ராஜீவ் கெஞ்ச வில்லை.. பிஞ்சி பிஞ்சி தான் போனார்.

     ஆனால் அவரது கடந்த காலத்தில் இரண்டு பெண்கள் கெஞ்சினார்கள்.

     “என்னை விடுடா, ஓநாய்க்கு பொறந்த நாயே” என்று ஒரு சீக்கியப் பெண்ணும்….
     “என்னை விடுடா, வெறிநாய் அனுப்பி வச்ச சொறிநாயே” என்று அந்த ஈழத்துப் பெண்ணும்…

    • பிரபா கரைஞ்ஞான் ஞீங்ஙள் கண்டோ?

     பொடரி பொளவுண்ட பிரபாவுக்காகவோ பொடரி பொளவுண்ட ராஜீவுக்காகவோ தானறியாப் பஞ்சாபியாலே பொடரி பொளவுண்ட அவன் அம்மைக்காகவோ ஞான் கரைஞ்ஞில்லான்.

  • UNNAI YAARUM INGU IRUKKA KATTAYA PADUTHAVILLAI… POYEE CHINA TIENAMAN SQUARE IL POI KOSHAM PODU… UNADHU KULATHAIYE POONDODU AZHITHUVITTU MUDHALITHUVA NAADUGALIN SADHI YENDRU UNGAL SAHA MKDK KARANGALAI KATHA SOLLUVAARGAL.

   • நீச வாத்யாரே ரொம்பத் தான் மெரட்ரயே.
    நீ வாங்கரப்ப யாரும் வரதுக்கும் போங்கரப்ப போரதுக்கும் இந்தியாங்கறது ஓம் பாட்டன் வூடா, ஓம் மாமியா வூடா?
    நீ இன்னா இமிக்ரேஸன் ஆபீஸர்னு நெனைப்பா? அவுங்கூட இப்புடி திமிரா பேசமாட்டன் யோவ்!

    • appuram neenga yennna India Jananayagathukku dictionarya ? Nee sonna avukarathukkum illati kattarathukkum…. r manigandan india jananayagam pidikalai yengirar… yaarum avarai ingu thanga varpuruthavillai yenbathu thaan pathilaaga irukka mudiyum!

   • இந்திய ஜனநாயகம் தப்பா இருக்கு, அது பிடிக்கல்லேன்னா, சொல்றது அவரோட இஷ்டம்.
    இந்தியா தப்பா இருக்கு, அது பிடிக்கலேன்னா, சொல்றது அவரோட இஷ்டம். இங்கேயே இருக்கணும்னா இருப்பாரு, போவணும்னாப் போவாரு.
    நீரு யாரையா எவனேயும் போன்னு சொல்ல?

    நா ஒண்ணும் ஒம்ம மாதிரி அகராதி புடிச்ச பேச்சு பேசலியே.
    மத்தவனோட மனசுலே இன்னா இருக்கோணும்னு வேறே நீரு சட்டம் போடரீரே.
    நீரு யாருன்னையா நெனச்சுக்கிட்டீரு?

    நீரு ஏழுதறதே தமிழ் எழுத்துலே எழுதினாப் படிக்க ஒதவியாயிருக்கும். முடியிலேன்னா முழுசா இங்கிலீஸிலியே எழுதித் தொலைக்கலாமே.

  • இதுவா முதல் தடவை?
   அவர் ஒவ்வொரு போராட்டத்துக்கு ஒவ்வொரு நீதி வைத்திருப்பவராயிற்றே.

 10. என்ன செய்வது எனத் தெரியவில்லை. ஆயுதப் படையினர் எங்கு சென்றாலும் இந்த அட்டூழியங்கள் நடந்து கொண்டுதானிருக்கின்றன. அது இலங்கை இனப் போராட்டமாக இருந்தாலும் சரி, காஷ்மீர் மக்களின் போராட்டமாக இருந்தாலும் சரி.

  இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், இலங்கை இனப் போராட்டத்திற்கு ஆதரவாக பேசும் பலரும், காஷ்மீர் என்றவுடன், நாட்டுப்பற்று பற்றி பேசுவதுதான். இவர்கள் பலருக்கும் காஷ்மீரின் உண்மையான வரலாறே தெரிவதில்லை.

  பொது வாக்கெடுப்பு நடத்தி காஷ்மீரில் வாழும் பெரும்பான்மை மக்களின் முடிவுக்குக் கட்டுப்படுவதே சரியான வழி.

  • அங்கே இந்த முல்லாக்கள் காலம் காலமாக இருந்தவனை கலைத்து விட்டு ஓட்டெடுப்பு வை என்றால்..
   எங்கே வைப்பது?

 11. பொது வாக்கெடுப்பு நடத்தி காஷ்மீரில் வாழும் பெரும்பான்மை மக்களின் முடிவுக்குக் கட்டுப்படுவதே சரியான வழி. வழி மொழிகிறேன். ஆனால் செய்வார்களா இந்த அரசியல்வாதிகள்… செய்ய விடுவார்களா இந்த நடுத்தர வர்க தேச பக்த குஞ்சுகள்…. கழுதை கரைந்தாலும் மாட்டார்கள். காஷ்மீர் மக்கள் தங்களுடைய‌ சொந்த‌ முயற்சியிலேயே தங்கள் சுதந்திரத்தை பறித்து எடுத்து கொல்வது மட்டும்தான் சாத்தியம்.

  • podhu vaaku eduppu neengal angirundha puthargalaiyum, hindukkalaiyum adithu viratti vittu eduthal eppadi seellupadiyaagum? avargal kadhi yenna? saha kashimir karararye madhikka theriadha kumbal thaan indha kall yeri kumbal. ungal mozhiyil sonnal ‘ isulamia paarpaniyam’!

 12. \\நீ இந்தியனா என்ற கேள்வியே தவறான ஒன்று. NRI களின் தேசப்பற்றுக்கு உங்கள் சர்டிபிகெட் வேண்டாம்.//
  நீங்கள் படித்தவர்.உங்களுக்கு மூளை வடிகால் (Brain drain ) பற்றியும் அது நாட்டுக்கு நல்லதா தீயதா என்றும் நான் சொல்லவேண்டியதில்லை.இந்த அளவுகோலின்படி பார்க்கும்போது NRI -க்களின் நாட்டுப்பற்று சொல்லாமலே விளங்கும்.

  \\வளைகுடா நாடுகள், வட அமெரிக்கா, ஐரோப்பா என் எந்த ஊரிலிருந்து வந்தாலும் பணம் ஒன்றுதான்//

  மேலும் வளைகுடா நாடுகளில் வாழும் உழைக்கும் வர்க்க இந்தியர்களையும் அமெரிகக, ஐரோப்பிய கண்டங்களில் வாழும் மேட்டுக்குடி இந்தியர்களையும் ஒரே வகையினராக கருதமுடியாது.வளைகுடா இந்தியர்கள் ஐந்தாண்டுகளோ பத்தாண்டுகளோ அங்கு உழைத்து பொருளீட்டுக்கொண்டு இம்மண்ணுக்கு திரும்பி வர துடித்துக் கொண்டிருப்பவர்கள்.இந்தியா எனும் குளத்தில் வேர்பிடித்து நிற்கும் ஆம்பல் கொடிகள் அவர்கள். அமெரிகக ஐரோப்பிய இந்தியர்களோ தலைமுறை,தலைமுறைக்கும் அங்கேயே தங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள்.மெக்காலே கனவு கண்ட ”உடலால் இந்தியர்கள் உள்ளத்தால் ஐரோப்பியர்கள்” .அற்ற குளத்து அறுநீர் பறவைகள் அவர்கள்.
  \\இந்து வெறி இந்தியாவில் வாழ்வது ரொம்ப கொடுமையான விஷயமென்றால் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்து விடலாமே?//

  இந்து மத வெறியர்களை எதிர்ப்பவர்கள் இந்தியாவில் இருக்க கூடாது என்கிறீர்கள்.
  ரதயாத்திரை வழிநெடுகிலும் கலவரங்கள் நடத்தி,மும்பை,குசராத் என தொடர்ச்சியாக கலவரங்கள் நடத்தி முசுலிம்களை கொன்று குவித்தாலும்,அதை தெகல்கா செய்தியாளர்களின் படப்பிடிப்பு கருவியின் முன் பகிரங்கமாக அறிவித்தாலும்,சிடைன்சு பாதிரியாரையும் அவரது பச்சிளம் குழந்தைகள் இருவரையும் உயிரோடு எரித்து கொன்றாலும் இந்து மத வெறியர்களை எதிர்க்க கூடாது.எதிர்ப்பவர்கள் இந்தியாவில் இருக்ககூடாது என்கிறீர்கள்.இதுதான் பாசிசம்.

  • //இந்தியா எனும் குளத்தில் வேர்பிடித்து நிற்கும் ஆம்பல் கொடிகள் அவர்கள்//
   பரவாயில்லை, நல்லா கவிதை எழுதுகிறீர்கள். ஆனால் NRI கள் எல்லாம் எனக்கு “அற்ற குளத்து அருநீர் பறவைகளாக”த்தான் தெரிகிறார்கள்.

   • \\NRI கள் எல்லாம் எனக்கு “அற்ற குளத்து அருநீர் பறவைகளாக”த்தான் தெரிகிறார்கள்//

    உங்களுக்கு தோன்று கிறது என்பதற்காக அதுவே உண்மையாக இருக்க முடியாது.

    கவிதை என்னுடையதல்ல.பழந்தமிழ் பாடல் அது.

    அற்ற குளத்து அறுநீர் பறவை போலல்லாது
    கொட்டியும் ஆம்பலும் போல் ஆங்கே
    ஒட்டி உறவாடுவதாம் நட்பு.

    • இந்த வினவிலே நீங்கள் உங்களுக்கு தோன்றுகிறதை தானே எல்லாம் உண்மை போல உளறுகிறீர்கள்
     பிறகு என்ன..

    • \\நீங்கள் உங்களுக்கு தோன்றுகிறதை தானே எல்லாம் உண்மை போல உளறுகிறீர்கள்//

     எனக்கு தோன்றுகிறது என்று எந்த வாதத்தையும் நான் எடுத்து வைப்பதில்லை.அப்படி ஏதாவது நான் தர்க்க நியாயமின்றி எழுதியிருந்தால் அதை எடுத்துகாட்டிவிட்டு இந்த குற்றச்சாட்டை நீங்கள் பதிவு செய்திருக்க வேண்டும்.இப்போது சொல்லுங்கள்.உளறுவது நீங்களா.நானா.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க