Thursday, June 13, 2024
முகப்புஅரசியல்ஊடகம்டாடாவின் உயிர் வாழும் உரிமைக்கு 'ஆபத்து' !!

டாடாவின் உயிர் வாழும் உரிமைக்கு ‘ஆபத்து’ !!

-

ரத்தன் டாடாஉலகப் பெரு முதலாளிகளில் ஒருவரும் இந்தியத் தரகு முதலாளிகளில் முன்னவரும் மூத்தவருமான ரத்தன் டாடா, தன்னுடைய உயிர் வாழும் உரிமைக்கு உத்திரவாதம் கேட்டு உச்சநீதிமன்ற வளாகத்தின் மரத்தடியில் உட்கார்ந்திருக்கிறார். அதிசயம் ஆனால் உண்மை.

“இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 21, இந்தியக் குடிமகனின் உயிர் வாழும் உரிமையை உத்திரவாதம் செய்கிறது. உயிர் வாழும் உரிமை என்பது ஒரு குடிமகன் தனது தனிப்பட்ட இரகசியங்களைப் பேணிக்கொள்ளும் உரிமையையும் (right to privacy) உள்ளடக்கியது.. தனிப்பட்ட உரையாடல்கள் பொது அரங்கில் அம்பலமாகாமல் தடுப்பது அரசின் பொறுப்பு” என்று முறையிட்டார் டாடாவின் வழக்குரைஞர் ஹரிஷ் சால்வே.

“தனிப்பட்ட உரையாடல் என்றால் என்னவென்று விளக்க முடியுமா?” என்று திடீரென்று நீதிபதி கேட்டுவிடவே, “எப்போது இரவு விருந்து அருந்தப் போகிறீர்கள், என்பன போன்ற உரையாடல்களை சொல்கிறேன்” என்று சமாளித்து விளக்கமளித்தார் டாடாவின் வக்கீல்.

இந்த பதிலைக் கேட்டு சட்ட அறிவும், ஜனநாயக உணர்வுமற்ற பாமரர்கள் வேண்டுமானால் சிரிக்கலாம். மாட்சிமை தங்கிய நீதிபதிகள் சிரிக்கவில்லை. உரையாடலைப் பதிவு செய்த மத்திய அரசுக்கும், அவற்றை வெளியிட்ட அவுட்லுக், ஓபன் போன்ற பத்திரிகைகளுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள். நகைக்கத்தக்கதாயினும் இதுதான் நடந்திருக்கும் உண்மை.

ரூ. 1,76,000,00,000,000 என்று உயிரற்ற பூச்சியங்களால் குறிக்கப்பட்டு வந்த ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு இரத்தமும் சதையும் கொடுத்து, வாய்க்குள் உயிரையும் ஊதி விட்டிருக்கிறார் நீரா ராடியா என்ற அதிகாரத் தரகு தேவதை. கருணாநிதி குடும்பத்துக்குள் நடக்கும் குத்துவெட்டு சீரியல்தான் ஓடிக்கொண்டிருக்கிறது என்று நேயர்கள் ரசித்துக் கொண்டிருக்கும் போதே, “தன்னுடைய உயிர் வாழும் உரிமை பறிபோய் விட்டது” என்று அலறுகிறார் டாடா.

விபச்சார விடுதித் தலைவியின் டயரியிலிருந்து உதிரும் அமைச்சர்கள், நடிகைகள், தொழிலதிபர்களின் தொலைபேசி எண்களைப் போல, ராடியாவின் ஒலிநாடா பல உண்மைகளை உதிர்க்கிறது. ராஜா, கனிமொழி, மாறன், வெங்கைய நாயுடு முதலான அரசியல்வாதிகள், சோனியா, ராகுல், புத்ததேவ், மோடி, வாஜ்பாயி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பர்க்கா தத், வீர் சங்வி முதலான பத்திரிகை தூண்கள், பேஜாவர் சுவாமிகள் உள்ளிட்ட ஆன்மீகவாதிகள், கடைசியாக நீதிபதிகள்…!

இந்திய ஜனநாயகத்தின் ஏட்டு முதல் எஸ்.பி வரை அனைவரும் முச்சந்தியில் நிற்கிறார்கள். நீதிபதிகளின் தீர்ப்புகள், பத்திரிகையாளர்களின் அறச்சீற்றங்கள், எம்.பிக்களின் நாடாளுமன்ற உரைகள் அனைத்தும் டாடா, அம்பானிகளின் விருந்து மண்டபத்தில் வைத்து எழுதிக் கொடுக்கப்பட்டவை என்ற உண்மை அம்பலமாகி சந்தி சிரிக்கிறது.

இத்தகைய தனிப்பட்ட உரையாடல்கள் அம்பலமாவது இந்திய ஜனநாயகத்தின் உயிர் வாழும் உரிமையையே பறிக்கும் விபரீதமல்லவா? ஸ்பெக்ட்ரம், கோதாவரி எரிவாயு, சிங்குர் விளைநிலம், காடுகள், கனிவளங்கள் என பொதுச்சொத்துகளைக் கொள்ளயடித்துத்தான் முதலாளித்துவம் உயிர்வாழ்கிறது எனும்போது, அந்தக் கொள்ளையின் சூட்சுமங்களையும் சூத்திரங்களையும் வெளியிடுவது முதலாளித்துவத்தின் உயிர் வாழும் உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன?

விக்கி லீக்ஸ் அம்பலப்படுத்தும் அமெரிக்காவின் ‘இராஜதந்திரப் பரிமாற்றங்கள்’ உலகெங்கும் விரவியிருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் உயிர் வாழும் உரிமையைப் பறித்துவிடும் என்று அலறியிருக்கிறது ஒபாமா நிர்வாகம். உண்மைகளும் கூட உலகமயமாகித்தான் இருக்கின்றன!

“உயிர் வாழும் உரிமை என்பது விலங்குகளைப் போல உயிர் தரித்திருக்கும் உரிமை அல்ல, மனித கவுரவத்துடன் வாழ்வதற்கான உரிமை” என்று குடிசை இடிப்பை எதிர்த்துத் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் முன்னொரு காலத்தில் வியாக்கியானம் அளித்திருக்கிறது.

“பசி என்ற விலங்குணர்வை ஆற்றிக் கொள்வதற்கு புழுத்துப் போகும் அரிசியை ஏழைகளின் வயிற்றில் எறியக்கூடாதா?” என்று சமீபத்தில் உச்சநீதிமன்றம் கேட்டபோது, அவ்வாறு இலவசமாகக் கொடுப்பது முதலாளித்துவ சந்தையின் உயிர்வாழும் உரிமையைப் பறிப்பதாகும் என்பதால் கொதித்தெழுந்து எதிர்த்தார் மன்மோகன் சிங். அந்த உரிமைதான் இப்போது டாடா கேட்கும் உரிமை. பூனையின் காலடியோசை எலிகளின் காதில் படாத இரகசியமாக இருக்கும் வரைதானே, பூனை பசியாற முடியும்? அந்த ‘இரகசியத்தை’ அம்பலமாக்குவது பூனையின் உயிர் வாழும் உரிமையை பறிப்பதன்றி வேறென்ன?

_____________________________________________

– புதிய கலாச்சாரம் தலையங்கம், டிசம்பர் – 2010
_____________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 

 1. டாடாவின் உயிர் வாழும் உரிமைக்கு ஆபத்து !…

  உலகப் பெரு முதலாளிகளில் ஒருவரான ரத்தன் டாடா, தன்னுடைய உயிர் வாழும் உரிமைக்கு உத்திரவாதம் கேட்டு உச்சநீதிமன்ற வளாகத்தின் மரத்தடியில் உட்கார்ந்திருக்கிறார். அதிசயம் ஆனால் உண்மை !…

 2. கடைசீல இங்கதான் வரனும்.இந்த இடமும் கெட்டுப்போச்சுன்னா…அப்ப இருக்குதடி வேடிக்கை!

 3. //// பூனையின் காலடியோசை எலிகளின் காதில் படாத இரகசியமாக இருக்கும் வரைதானே, பூனை பசியாற முடியும்? அந்த ‘இரகசியத்தை’ அம்பலமாக்குவது பூனையின் உயிர் வாழும் உரிமையை பறிப்பதன்றி வேறென்ன? ////
  அற்புதம்.வேறென்ன சொல்ல?

 4. ///பூனையின் காலடியோசை எலிகளின் காதில் படாத இரகசியமாக இருக்கும் வரைதானே, பூனை பசியாற முடியும்? ///

  அட்டகாசம் போங்கள். முதலாளித்துவம் உயிர்வாழும் இரகசியத்தை அருமையாக உணர்த்தியுள்ளீர்கள். கட்டுரை பச்சைமிளகாய் அளவினதாயினும் காரம் அதிகம். நச்.
  இந்த மாத பு.க.வந்துவிட்டதா!

 5. “அவ்வாறு இலவசமாகக் கொடுப்பது முதலாளித்துவ சந்தையின் உயிர்வாழும் உரிமையைப் பறிப்பதாகும் என்பதால் கொதித்தெழுந்து எதிர்த்தார் மன்மோகன் சிங்”

  First of all, this stupid PM should understand about the so called “Democracy”

 6. //மாட்சிமை தங்கிய நீதிபதிகள் சிரிக்கவில்லை. உரையாடலைப் பதிவு செய்த மத்திய அரசுக்கும், அவற்றை வெளியிட்ட அவுட்லுக், ஓபன் போன்ற பத்திரிகைகளுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள். நகைக்கத்தக்கதாயினும் இதுதான் நடந்திருக்கும் உண்மை.//
  டாட்டா,அம்பானி போன்ற ஓநாய்களின் மேற்கண்ட கடைசி புகலிடமும் டுபாக்கூர்தான் என்பதை நாட்டு மக்களுக்கு வெளிச்சம்போட்டுக் காட்டிவிட்டார்கள்.

 7. பூனையின் காலடியோசை எலிகளின் காதில் படாத இரகசியமாக இருக்கும் வரைதானே, பூனை பசியாற முடியும்? அந்த ‘இரகசியத்தை’ அம்பலமாக்குவது பூனையின் உயிர் வாழும் உரிமையை பறிப்பதன்றி வேறென்ன?

  simple but million worth words.

 8. today i u could get a good news that capitalism survives only on national assets. they are NOT CREATING any new assets , but only loot the national assets or officially speaking explore the national assets and modify it and re manufacture it like smelting the oron ore ,extruding it in to pipes,bars and rods. u have told the plain truth in simple manner but i am wondering y a lot of website with so many leading authors could not give a plain straight message to the reader like the above one. let say the http://www.countercurrents.org ,www.sanhati.com,peoples march, or so may left leaning or radical websites are doing good jobs but the manner in which T E A R I N G T H E C A P I T A L I S A M is IN ITS CORE IS VERY IMPORTANT WHICH I CAN SEE ONLY A VERY few websites honestly bravely do . in that line your website is leading the way. I have read and reading 100s of left leaning websites and i would like to share the below which are ok but touching the reader in ways of simple , practical day to day affairs is important…
  1,www.counterpunch.org
  2,www.monthlyreview.org
  3,www.northstarcompass.org,
  4,monkeysmashesheaven.wordpress.com
  5,www.sanhati.com
  etc etc etc……
  after reading so many websires i came to the conclusion is there are a very few only that educates the reader ,awakanes the reader and in the list vinavu fits.
  congrats for continuing your works…
  regards
  krk.

 9. எலி பூனை உருவம் முதலாளித்துவத்தின் ஒற்றை வரி விளக்கமெனில், விபச்சாரியின் இடம் இருந்து விழும் பிரமுகர்கள் தொலை பேசி என்!!! இந்த குறிப்பிட்ட பிரச்சனையின் சுரக்க குறிப்பு. நன்று.

 10. டாடா உச்ச நீதிமன்றம் செல்கிறார் என்ற செய்தி படித்தவுடன், உச்ச நீதிமன்றம் அவரிடம் கேட்க வேண்டிய கேள்வி ஒன்று உள்ளது. அதை கேட்குமா என்று நினைத்தேன். நினைத்தபடி கேட்கவில்லை போல…

  இந்த உரிமைக்காக நீங்கள் உயர்நீதிமன்றத்தை அரசியலமைப்பு சட்டம் பிரிவு 226ன் கீழ் அணுகியிருக்க முடியும் பொழுதில், ஏன் பிரிவு 32ன் கீழ் உச்ச நீதிமன்றம் வந்தீர்கள்? என்ற கேள்விதான் அது…

  மற்றவர்களிடம் அப்படிக் கேட்டிருக்கிறது.

 11. இயற்கை வளங்களையும், மனித உழைப்பையும் கொள்ளையடிப்பது முதலாளித்துவம்தான் என்பது உலகுக்கே தெரிந்த விசயம்தான். ஆனால், இதை டாடாக்கள் எதனோடு ஒப்பிடுகிறார்கள்? இது முதலாளித்துவத்தின் அடிப்படை உரிமையாம்! அதாவது அவர்கள் உயிர் வாழும் உரிமையாம்! இதுவும் அநேகமாக எல்லோரும் அறிந்ததுதான். ஆனால்,இந்த உயிர் வாழும் உரிமை என்பது, எதனை உள்ளடக்கியது? டாடாக்களின் தனிப்பட்ட ரகசியங்களைப் பேணிக்கொள்ளும் உரிமையுடன் சம்பந்தப்பட்ட்து என்கிறார் ரத்தன் டாடா. இந்த தனிப்பட்ட ரகசியம் என்பதுதான் முதலாளித்துவக் கொள்ளையின் சூட்சுமங்களையும், சூத்திரங்களையும் உள்ளடக்கியது. முன்னதில், அதாவது தமது கொள்ளை விவகாரத்தில் அலட்டிக்கொள்ளாத இந்த டாடாகள் ஏன் இந்த பின்னதில், அதாவது தமது கொள்ளையின் சூட்சுமங்களையும், சூத்திரங்களையும் கொண்ட ரகசியங்களை வெளியிடும் போது பதற வேண்டும்? இதுதான் நமக்கு புதுமை. இந்திய ஜனநாயகத்தின் அத்தனை தூண்களையும் இயக்குமிடம் டாடா, அம்பானிகளின் விருந்து மண்டபம்தான் என்ற உண்மை வெளியானதுதான். முதலாளித்துவத்துக்கும், இந்திய ஜனநாயகத்துக்கும் இடையே உள்ள நேரடி உறவு என்பது முதலாளித்து சந்தையை உயிர் வாழ வைக்கத்தானேயொழிய இந்திய மக்களை அல்ல என்பதை கட்டுரை மிக அருமையாக உணர்த்தியுள்ளது.

 12. ஊரை அடிச்சி உலையில்போடும் உலக மகா யோக்கியனே!நாங்கள் உயிர்வாழும் உரிமையக் உன்னிடம் கோரும்பொதெல்லாம்,அதுதான் என் வாழ்வுரிமை என எக்காளமிடுகிறாய்! இப்போது நீ உன்னுடைய உயிர்வாழும் உரிமைக்கு ஆபத்துவந்துவிட்டதாக ஊளையிடுகிறாய்! அப்படியென்றால்….உன் லாஜிக்படியே…எங்கள் வாழ்வில் வசந்தம் துளிர்விடதொடங்குகிறது.சரிதானே!இதுதான் அறிவியல்.உனக்கும் எனக்கும் பொதுவானது.
  _ தொழிலாளர்களின் மனசாட்சியாக சுடலை.

 13. Article 21 of Indian constitution deals ‘protection of live and persional liberty’. Here ‘right to live’ means to live with human dignity and all that goes along along with it. But what happen Kasmir , Dandewada and north east?. The above right available even in emergency situation according to law… But this theory applicable for capitalist and carporate only .

 14. Again it is funny and sheer double standards of Vinavu and comrades to talk about this ‘civil rights’ ; sure there is plenty of violations in India in the name of ‘capitalism’ (while it is not true capitalism or real democracy). but let the ‘real’ liberal democrats talk and argue about all this. not the communists whose methods of implementation of their agenda calls for complete suppression all forms of basic civil and political liberties.

  You people have no moral rights at all to argue about civil rights and democracy, as you do not belive in these first of all. When it comes to implementing your policies thru a red revolution, you have no hesitation is suppressing all these civil rights and democratic norms. That is the past history and will be repeated if and when you grab power in the name of ‘dictatorship of the prolatariat’.

  that is what the Maoists (whom you blindly support) are doing right now, in name of fighting for justice for the tribals.

 15. within 10 years India completely changed. our former finance ministers and present finance minister very cleverly changed the tax patern.
  few years back Income Tax rate is nearly 70% for the income slab exceed 5 lacks there was Gift tax and Estate duty. It controlled the accumulation of money with some persons. now they completely remove the Gift Tax, estate duty and reduced the Income tax rate to 30%. presently a man who earn less than 5 lacks and a man who earn 100000/ cores pay the Income Tax at the rate of 30% in the name of improvements.
  recently one chief minister was died and his son inherited his father business and shows his legal income more than 800 cores. one person pay the electricity bill for his house nearly 70 lacks and get rebate nearly 45,000/ for the payment of the bill. they are not born in the house Navab.
  in the name democracy the ordinary man looted by the Govt. in the name service Tax 12% for every thing, we must see a man who earn 1000 cores and a man who earn 1000 rupees pay the same rate of 12% service tax. we read the Mohul empire impose head tax on people , but it is not as cruel as the service Tax.
  within ten years the Big business house may start their own party and contest the election and form their own government. no one can stop it.
  this above case is simple indicator of our feature
  we must think. thanks for this forum.

  • ///few years back Income Tax rate is nearly 70% for the income slab exceed 5 lacks there was Gift tax and Estate duty. It controlled the accumulation of money with some persons. now they completely remove the Gift Tax, estate duty and reduced the Income tax rate to 30%.///

   Very correct. But gross tax revenue (adjusting for inflation) has multiplied many many times since this ‘reduction’ ; never before in the history of india after 1947, has the govt garnered this much money from direct and indirect taxes. You people will never understand that only minimum possible taxes will MOTIVATE people and entrepreneuers to their best efforts and produce real wealth, jobs, products and services. Why do you think no one now argues that tax rates should be raised to the level of 70s as above ?

 16. வரும் தேர்தலில் கூட்டணி சீட் அதிகம் பெற சிதம்பரம் பதிவு செய்த டேப் பதிவு .
  யார் வெளியிட்டது என்பது தான் பிரச்சினை !!
  Probe on who leaked the Nira Radia tapes
  The government on Monday ordered a probe into the leaks of recorded tapes of conversations between corporate lobbyist Niira Radia, her clients and certain journalists among others.

  The order to initiate a probe into the matter comes on a day when Tata group chief Ratan Tata approached the Supreme Court seeking action against those involved in the leakage of tapes containing his conversation with Radia.

  Home Ministry sources said the probe would be conducted by the Intelligence Bureau and the Central Board of Direct Taxes (CBDT) and will focus on finding out who leaked it and how.

  Incidentally, the CBDT had conducted the phone tappings over a period of time for which the sanction was given by the Home Ministry. (PTI)

   • //we can start //

    அப்படியே எண்டிங்கு என்னன்னு சொல்லிட்டீங்கன்னா இங்க இருக்குற மக்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும்…

 17. but wait and see the supreme court will give a historic judgement in favour of the tatas.all peoples involved in the recording activity will be booked and punished and even cellphones will not have a record button in future.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க