Wednesday, November 6, 2024
முகப்புகளச்செய்திகள்போராடும் உலகம்துனிசியா: சர்வாதிகாரத்தை தூக்கி எறிந்த மக்கள் புரட்சி!

துனிசியா: சர்வாதிகாரத்தை தூக்கி எறிந்த மக்கள் புரட்சி!

-

குறிப்பு: இந்தியாவில் வெங்காயம் கிலோ 80 ரூபாய்க்கு விற்கிறது என்றால் மற்ற பொருட்களின் விலையை விளக்க வேண்டியதில்லை. உழைக்கும் மக்களில் பெரும்பான்மையோர் தற்போது ஓரிரு வேளை உணவை ரத்து செய்திருக்கின்றனர். ஆனாலும் இத்தகைய காந்திய வழி உண்ணாவிரதம் இன்னும் எத்தனை நாளைக்கு தொடர முடியும்?ஏகாதிபத்தியங்களின் சுரண்டலால் உலக பொருளாதாரம் தோற்றுவித்த ‘நெருக்கடி’ அமெரிக்காவில் துவங்கி, ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா என்று எந்த கண்டத்தையும் விட்டுவைக்கவில்லை. முதலாளித்துவத்தின் சூதாட்டத்தால் வந்த நட்டத்தை இப்போது ஏழை நாடுகளின் மேல், உலக மக்களின் மேல் ஏற்றி வருகிறார்கள். விளைவு எங்கும் வேலை இழப்பு, விலைவாசி உயர்வு, அரசு மானியம் ரத்து…. ஆயினும் இந்த அநீதிகளை மக்கள் தொடர்ந்து சகிக்க மாட்டார்கள் என்பதற்கு கிரீசீல் எழுந்த தெருப்போராட்டம் ஒரு துவக்கம் என்றால் அந்த போராட்டத்தையே புரட்சியாக சாதித்திருக்கிறது துனீசிய மக்களின் எழுச்சி. ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்பட்ட அந்த மக்கள் புரட்சியை தோழர் கலையரசன் விளக்குகிறார்.- வினவு

________________________________________________

26 வயதேயான வேலையற்ற பட்டதாரி இளைஞன் முஹமத்தின் தற்கொலை மரணம்,ஒரு மக்கள் புரட்சியாக மாறும் என்று எவரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். பட்டப் படிப்பு முடித்தும் வேலை வாய்ப்பு இல்லை. ஜீவனத்திற்காக நடைபாதையோரமாக காய்கறி விற்றுக் கொண்டிருந்தவன். போலிஸ் லைசன்ஸ் கேட்டு தொந்தரவு செய்ததன் காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டான். ஊர், பேர் தெரியாத இளைஞனின் மரணச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

விரைவிலேயே அவர்களது சீற்றம் அதிகார வர்க்கம் மீது திரும்பியது. அரசு நிறுவனங்கள் தாக்கப்பட்டன. கடைகள் சூறையாடப்பட்டன. 23 வருடங்களாக துனீசியாவின் சர்வாதிகார ஆட்சி நடத்த உறுதுணையாக இருந்த பிரெஞ்சு தூதரகம் கூட சுற்றி வளைக்கப்பட்டது. வேலையற்ற இளைஞர்களின் கலகமாக ஆரம்பித்தாலும், வழக்கறிஞர்களும், தொழிற்சங்கமும் தமது ஆதரவை தெரிவிக்கும் வகையில் போராட்டத்தில் குதித்தனர். உழைக்கும் வர்க்கமும், இழப்பதற்கு எதுவுமற்ற மக்களும் ஒன்று சேர்ந்து போராடினால் புரட்சி நிச்சயம் என்பதை துனீசியா மக்கள் சாதித்துக் காட்டியுள்ளனர்.

அரபுலகில் முதன் முதலாக இணையம் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட புரட்சியும் இதுவாகும். கொடுங்கோல் அரசின் இணையத் தடையை மீறி, டிவிட்டர், முகநூல் (Facebook) போன்ற சமூக வலையமைப்புகள் எதிர்ப்பு நடவடிக்கைகளை உடனுக்குடன் அறிவித்துக் கொண்டிருந்தன. போலிஸ் அடக்குமுறைகளை காட்டும் வீடியோக்களை, Youtube உடனுக்குடன் அழித்துக் கொண்டிருந்தது. ஆயினும் எல்லாவித தடைகளையும் மீறி, இறுதியில் புரட்சி வென்றது. “இணையத்தில் புரட்சி செய்கிறார்கள்!” என்று பரிகசிக்கும் கூட்டத்திற்கு இது சமர்ப்பணம்.

துனிசியா - சர்வாதிகாரத்தை தூக்கி எறிந்த மக்கள் புரட்சிகலகத்தை அடக்க அனுப்பப்பட்ட போலிஸ் படை, வழமையான துப்பாக்கிச் சூடு, கைதுகள், என்று மக்கள் எழுச்சியை அடக்கப் பார்த்தது. இறுதியில் துனிசியா சர்வாதிகாரி பென் அலியே முன் வந்து கைது செய்தவர்களை விடுதலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. திடீரென்று உறக்கத்தில் இருந்து விழித்துக் கொண்ட பென் அலி, வேலையற்ற மக்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தப் போவதாக விடுத்த அறிவிப்பை யாரும் பொருட்படுத்தவில்லை. இறுதியில் நாட்டை விட்டு வெளியேறி, சவுதி அரேபியாவில் அகதித் தஞ்சம் கோர வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.

உல்லாசப் பயணிகளால் அதிக வருமானம் கிடைக்கும் கரையோர நகரங்கள் என்றும் போல அமைதியாகத்தான் இருந்தன. ஆனால் பொருளாதார ரீதியாக பின்தங்கிய உள்நாட்டு நகரங்களில் தான் மக்கள் வீதிக்கு வந்து போராடத் தொடங்கினார்கள். உணவுப் பொருட்களின் விலையேற்றம், ஏற்கனவே தொழில் வாய்ப்பற்ற பகுதிகளை மோசமாகத் தாக்கியது.

உலகம் முழுவதும் பொருளாதாரப் பிரச்சினைகளால் மக்கள் கிளர்ச்சிகள் வெடிப்பதைப் பற்றி நான் எழுதினால், பலருக்கு பிடிப்பதில்லை. “மக்களுக்கு வாயும், வயிறும் முக்கியமல்ல, இன மான உணர்வே பெரிதென்று” வாதாடுகின்றார்கள். ஊடகங்களும் அரபு நாடுகளைப் பற்றியும் அப்படியான கருத்துகளைத்தான் பரப்பி வந்தன. “கலாச்சார மோதல்” தத்துவப் படி, அரேபியர்கள் முஸ்லிம்கள், வயிற்றை விட மதமே பெரிதென்று வாழ்பவர்கள் என்று தான் பிரச்சாரம் செய்தார்கள். “அரபு நாடுகளில் அல்கைதாவும் இல்லை, அரேபியர்கள் எல்லோரும் முஸ்லிம் மத அடிப்படைவாதிகளும் இல்லை,” என்று கடந்த பத்து வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிறேன். உண்மையான பிரச்சினை என்ன என்றும் தெளிவு படுத்தியிருந்தேன்.

மேற்கத்திய நாடுகளால் ஆதரவளிக்கப்படும் சர்வாதிகாரிகள், ஜனநாயக சுதந்திரத்தை மறுக்கும் அரசு அடக்குமுறை, வேலைவாய்ப்பின்மை, வறுமை, இவை சாதாரண மக்களை பாதிக்கும் பிரச்சினைகள். விரக்தியுற்ற இளைஞர்கள் பட்டப் படிப்பு படித்தாலும் வேலையின்றி, வெளிநாடுகளுக்கு ஓடிக் கொண்டிருக்கிறார்கள். வெளிநாடு போக வசதியற்றவர்கள், தீவிரவாதிகளாக மாறுகிறார்கள். அமெரிக்காவும், உள்நாட்டு சர்வாதிகாரிகளும் அவர்களை அல்கைதா என்று முத்திரை குத்தி அடக்கினார்கள்.

துனிசியாவில் கலகம் செய்தவர்களையும், பென் அலி அப்படி சொல்லிப் பார்த்தார். யாரும் நம்பியதாகத் தெரியவில்லை. கடைசியாக அவரே முன் வந்து, நாட்டில் வேலையில்லாப் பிரச்சினையை தீர்ப்பது முக்கியம் என்பதை ஒத்துக் கொண்டார். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்ய முடியுமா? மக்களின் கோபாவேசத்திற்கு முகம் கொடுக்க முடியாமல், நாட்டை விட்டு தப்பியோடி விட்டார்.

துனிசியா - சர்வாதிகாரத்தை தூக்கி எறிந்த மக்கள் புரட்சிதுனிசியா கலவரத்தை சர்வதேச பொருளாதார நெருக்கடியில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாது. கிரேக்க மக்கள் என்ன காரணத்திற்காக கிளர்ந்தெழுந்தார்கள்? வேலை, ஊதியம், உணவு பறிபோவதை எந்த மனிதன் தான் பொறுத்துக் கொண்டிருப்பான்? (இனமான உணர்வாளர்களுக்கு சுடலை ஞானம் பிறப்பதற்கு இன்னும் காலம் இருக்கிறது.) வளர்ச்சியடைந்த ஐரோப்பாவை சேர்ந்த கிரேக்கர்களாக இருந்தால் என்ன, வறிய நாடான மொசாம்பிக்கை சேர்ந்த மக்களாக இருந்தால் என்ன, எல்லோரும் வயிற்றுக்காக போராடக் கிளம்புகின்றனர். “முஸ்லிம் நாடுகளான” துனீசியா, அல்ஜீரியா, சூடான் போன்ற நாடுகளிலும் உணவுப் பொருட்களின் விலையேற்றம் மக்களை போராடத் தூண்டுகின்றது.

“சிங்களப் பேரினவாதிகளின்” சிறிலங்காவிலும், “தமிழ் இனப்பற்றாளர்களின்” ஈழத்திலும் மக்கள் பொருளாதார பின்னடைவுகளை எதிர்த்து போராடுகின்றனர். முதலாளித்துவ தமிழ் ஊடகங்கள் அத்தகைய செய்திகளை கூறாமல் இருட்டடிப்பு செய்கின்றன. எல்லா நாடுகளிலும் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு அரசு மானியம் அளிக்கின்றது. அரசு மானியத்தை விலக்கிக் கொண்டால் விலை ஏறும் என்பதும், அதனால் மக்கள் கலகம் செய்வார்கள் என்பதும், ஓரளவு பொருளாதாரம் தெரிந்த அனைவருக்கும் தெரியும்.

2009ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி துனிசியாவையும் பாதித்தது. பெருமளவு அந்நிய செலாவணியை ஈட்டித் தந்த உல்லாசப் பயணத் துறை, நஷ்டத்தை நோக்கி சென்றது. ஏற்றுமதி, அந்நிய முதலீடு அரைவாசியாக குறைந்தது. இதனால் வேலையற்றோர் தொகை அதிகரித்தது. பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்த காலத்தில், துனிசியா அரசு அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கியது. இதனால் படித்த வாலிபர்கள் பெருகினார்கள். அரபு நாடுகளில் அதிகளவு படித்த மத்தியதர வர்க்கத்தை கொண்ட நாடுகளில் துனிசியா முன்னணியில் திகழ்கின்றது. அது மட்டுமல்ல, ஒரு சராசரி ஐரோப்பிய நாட்டில் உள்ளதைப் போல, பெண்கள் சம உரிமையுடன் அனைத்து துறைகளிலும் பிரகாசித்தனர். ஆனால் அத்தகைய அபிவிருத்திக்குப் பின்னால், சர்வாதிகார கொடும்கோன்மை மக்களை அடக்கி வைத்திருந்தது. அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் தடை செய்யப்பட்டன.

எகிப்து போன்ற நாடுகளில் இருப்பதைப் போல, அன்றாட உணவுக்கே அல்லாடும் பரம ஏழைகள் துனிசியாவில் இல்லை. இருப்பினும்,Tunis, Sousse , Sfax, போன்ற நகரங்கள் சுற்றுலாத் துறை, சர்வதேச வணிகம் காரணமாக அதிக வளர்ச்சியடைந்திருந்தன. அப்படி எந்த அதிர்ஷ்டமும் வாய்க்கப் பெறாத பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு, குறைந்த ஊதியத்துடன் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ வேண்டிய நிர்ப்பந்தம். மொத்த தேசிய வருமானத்தில் 30 % செல்வத்தை, 10 % பணக்கார கும்பல் அனுபவிக்கின்றது. கீழ் மத்தியதர வர்க்கத்தை சேர்ந்த மக்கள் பொருளாதார பிரச்சினைகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திறந்த சந்தை, நவ தாராளவாத பொருளாதார சீர்திருத்தங்கள் எதுவும் அவர்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை தோற்றுவிக்கவில்லை. சாதாரண பணியாளர்களும், பாவனையாளர்களும் வரி செலுத்திக் கொண்டிருக்கையில், பணக்காரர்களும், வணிக நிறுவனங்களும் வரிச் சலுகை பெற்று வந்தனர். நாட்டின் பெரிய வர்த்தக நிறுவனங்கள் ஜனாதிபதி பென் அலியின் குடும்ப சொத்தாக இருந்தன. பென் அலி குடும்பத்தின் பேராசையும், அகங்காரமும் ஊழலுக்கு காரணம் என்று துனீசியா பொது மக்கள் குறைப் பட்டுக் கொள்கின்றனர்.

துனிசியா மக்களின் புரட்சியை சர்வதேச சமூகம் இரு கரம் நீட்டி வரவேற்க தயாராக இல்லை. மேற்குலக ஊடகங்கள் ஏதோ கடமைக்கு செய்தி வாசித்து விட்டுப் போகின்றன. உலகம் முழுவதும் மனித உரிமைகளை ஏற்றுமதி செய்யும் மேற்கத்திய நாடுகள் மௌனம் சாதிக்கின்றன. இரு வருடங்களுக்கு முன்னர் துனிசியாவுக்கு அரசு முறை விஜயம் செய்த பிரெஞ்சு ஜனாதிபதி சார்கோசி, “மனித உரிமைகள் நிலவரம் திருப்தியளிப்பதாக” நற்சான்றிதழ் அளித்தார். இன்று மக்கள் எழுச்சியை அடக்க, துனிசியா அரசு கேட்டுக் கொண்டால் படை அனுப்ப தயாராக இருப்பதாக பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சர் கூறுகிறார். துனிசியா முன்னாள் பிரெஞ்சுக் காலனி என்பதும், பிரான்ஸ் முக்கியமான வர்த்தக கூட்டாளி என்பதும் குறிப்பிடத் தக்கது. சிறிய நாடான துனிசியாவில் மக்கள் புரட்சி வென்று விட்டது. அடுத்தது இயற்கை வளம் நிறைந்த அல்ஜீரியா புரட்சிக்காக தயாராகி வருகிறது.

_________________________________________________________

– கலையரசன்

_________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. துனிசியா : சர்வாதிகாரத்தை தூக்கி எறிந்த மக்கள் புரட்சி !…

    26 வயதேயான வேலையற்ற பட்டதாரி இளைஞன் முஹமத்தின் தற்கொலை மரணம்,ஒரு மக்கள் புரட்சியாக மாறும் என்று எவரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்…

  2. […] This post was mentioned on Twitter by வினவு. வினவு said: துனிசியா: சர்வாதிகாரத்தை தூக்கி எறிந்த மக்கள் புரட்சி! https://www.vinavu.com/2011/01/17/tunisia-revolution/ […]

  3. துனீசிய மக்களின் எழுச்சி வரவேற்க்க கூடிய ஒன்றாகும். ஆப்ரிக்காவில் நம்மை போல் கேடுகெட்ட நடுத்தர வ்ர்க்கம் என்பது நான் கண்ட வரையில் அதிகம் இல்லை. ஒன்று அங்கு அரசாங்க ஜால்ராவாக விளங்கும் ஆப்பிரிக்க மேல்தட்டு வர்கத்தினர் இல்லையேல் வெறும் அன்றாடங்காய்சியான அடிதட்டு மக்கள் இதற்கிடையே இவர்களின் வாழ்வாதாரத்தை செல்வாக்கு மிக்க ஆப்ரிக்கமண்ணின் மைந்தனுடன் கூட்டு சேர்ந்து களவாடும் சிந்திக்கள்/ சிங்குகள்/மார்வாடிகள்/குஜராத்திகள்/இஸ்மாயிலிகள்/பாகிஸ்தானியர்கள்/அரேபியர்கள்.
    போதாத குறைக்கு ஐரோப்பிய நாய்கள் வேறு.

    என்ன வளம் இல்லை ஆப்ரிக்காவில் இப்புரட்சி ஆப்பிரிக்க கண்டம் முழுவதும் பரவ வாழ்த்துகள்

  4. “வெளிநாடு போக வசதியற்றவர்கள், தீவிரவாதிகளாக மாறுகிறார்கள்.”
    என்று மற்றவர்கள் போல் வினவும் சொல்வது சரியல்ல

  5. அடக்குமுறையும், சர்வாதிகாரமும் ஒருநாள் மரணிக்கும்! புரட்சியின் வெற்றி சர்வாதிகாரத்தை வென்றெடுப்பதோடு முடிந்து விடாது!
    முழு வெற்றி இனி துனீசியா செல்லும் பாதையைக் கொண்டே தீர்மானிக்கப்படும்!

    அடுத்து தங்களின் வாழ்த்தைப் பெறத் துடிக்கும் நாட்டு மக்களின் வரிசை இதோ… திபெத், மியான்மர், வட கொரியா!

    • //திபெத், மியான்மர், வட கொரியா!//

      இங்கெல்லாம் புரச்சி வந்தாக்க வினவு எதிர்க்கும் என்று எந்த ஜோசியரிடம் சென்று கேட்டுப் புரிந்து கொண்டாரோ ரம்மி….

        • அய்யா ஒத்து வாத்தியம்!
          சீனா எப்போது தானொரு முதலாளித்துவ நாடு என்று அறிவித்தது?
          தற்போது எந்த நாடுதான் உலகில் கம்யூனிச நாடு?
          யார் தான் ஒரிஜினல் அக்மார்க் கம்யூனிஸ்ட்?
          சீனாவிற்கே பெயர் வைக்க, பட்டம் சூட்ட உங்களால் முடியும் என்றால், குறிப்பிட்ட நாட்டு மக்களுக்கு,உரிமை கிடைக்க உங்களின் ஆதரவை நான் கோரியது தவறல்லவே?

        • “சீனா எப்போது தானொரு முதலாளித்துவ நாடு என்று அறிவித்தது?” என்று கேட்கிறீர்கள், rammy.
          அப்போ அவர்கள் அறிவிக்கும் வரை சீனா சோஷலிச நாடு தானா?
          எனின் இலங்கையும் ஒரு ஜனநாயக சோஷலிச நாடு தான். (அதன் பேர் அப்படித்தான் உள்ளது).

        • Corporal Zero

          //“சீனா எப்போது தானொரு முதலாளித்துவ நாடு என்று அறிவித்தது?” என்று கேட்கிறீர்கள், rammy.
          அப்போ அவர்கள் அறிவிக்கும் வரை சீனா சோஷலிச நாடு தானா?
          எனின் இலங்கையும் ஒரு ஜனநாயக சோஷலிச நாடு தான்.//

          இதுவும் ஒரு மாறுபட்ட கோணம் தான்!

          சீனாவை கம்யூனிஸ பெயரை, கொடியை உபயோகிக்கும் நாடு – சுருக்கமாக செங்கொடி நாடு என்று குறிப்பிட அனுமதி கிடைக்குமா?

      • அசுரன் அய்யா,

        எதிர்க்கும் என்று எங்கே கூறினேன்?
        வினவின் ஆதரவை அல்லவா கோரினேன்?

      • //சிறிய நாடான துனிசியாவில் மக்கள் புரட்சி வென்று விட்டது. அடுத்தது இயற்கை வளம் நிறைந்த அல்ஜீரியா புரட்சிக்காக தயாராகி வருகிறது//

        அசுரன் அய்யா! இது ஜோதிடர் கூற்றா?

  6. துனீசியக் கிளர்ச்சி வரவேற்கத் தக்கது.
    எனினும் அதை எதிர்காலத்தில் நிகழக் கூடிய ஒரு புரட்சிக்கான சைகையாக மட்டுமே கொள்ளலம்.
    அது துனீசியாவைப் புரட்சிகர மாற்றத்துக்குக் கொண்டு செல்லும் சாத்தியம் உடனடியாக இல்லை.

    உடனடியான சாத்தியப்படு இன்னொரு அதிகாரக் கும்பல் ஆட்சியைப் பிடித்துக் கொஞ்ச நாட்களுக்குப் பழைய ஊழல் ஆட்சியின் உறுப்பினர்களைப் பழி வாங்கும். பிறகு “பழைய குருடி…” கதை தான்.

    இக் கிளர்ச்சியின் சாதகமான பக்கங்கள் பல உள்ளன. முக்கியமாக வட ஆபிரிக்க அமெரிக்கச் சார்பு ஆட்சியாளர்களுக்கு எதிரான சக்திகட்கு இது ஒரு பெரும் ஊக்குவிப்பு.
    .
    .
    நிற்க.
    கட்டுரைக்கு நேரடிப் பொருத்தமற்று வரும் ““சிங்களப் பேரினவாதிகளின்” சிறிலங்காவிலும், “தமிழ் இனப்பற்றாளர்களின்” ஈழத்திலும் ” ” என்ற சொற்களின் படி, சிறிலங்கா ஈழம் எனும் இரண்டும் வெவ்வேறு நாடுகள் என்பது தான் பொருளா?

    இலங்கையில் நான்கு தேசிய இனங்கள் உள்ளன. ஈழம் என்ற சொல் வரலாற்றில் முழுத் தீவையுமே குறித்து வந்துள்ளது.
    இரண்டு தேசிய இனங்களின் மேட்டுக்குடிகள் நாட்டைக் கூறு போடுவது தான் சரி என்பதே கட்டுரையாளரின் பார்வையா?

    1976இல் தொடக்கி வைக்கப் பட்ட “தமிழ் ஈழக்” கனவு தான் இன்றைய அழிவுக்குக் கொண்டிவந்து விட்டது.
    இன்னமும் தமிழ்த் தேசியவாதிகள் தூக்கத்தில் தான் நடக்கிறகள்.
    தூக்கத்தில் தான் வாய் புலம்புகிறார்கள்.

    • வாசகர் ஒருவர் ஈழ விடுதலை போராட்டம் மேல்குடி மக்களிற்கு உரியது என தெரிவிப்பதன் மூலம் அனைவரையும் முட்டாள் ஆக்க முற்படுகிறார் . சிங்கள பௌத்த பேரினவாதிகளின் பிரச்சாரமும் இதுவும் ஒன்றுதான்

    • அம்பானி அண்ட் கம்பேனி , டாட்டா அண்ட் கம்பேனி , சங் பரிவா அண்ட் கம்பேனி, பிஜேபி அண்ட் கம்பேனி, காஞ்சி கிரிமினல் சங்கராச்சாரி அண்ட் கம்பேனி ஆர்.எஸ்.எஸ். அண்ட் கம்பேனியை வெளியேற்றும் போது அந்தக் கம்பேனிகளும் வெளியேற்றப்படும் ..

      வசதி எப்படி ராம் காமேஸ்வரன் ?

      • ஏன் அல் உம்மா அல் குவைதா, சிமி, மத ப்ரச்சாரம் செய்யும் மிஷினரிகள் இவர்களையும் விரட்ட வேண்டாமா ஏன் அவர்கள் உங்கள் சொந்தக்காரர்களா?

  7. கரம் மசாலா,”வினவு” தளத்திலுமா?வாழ்க!!!!!!!!!!!!!!!!!!!!!நிற்க…………….கட்டுரை ஆசிரியருக்கு,தமிழில் எழுதும் போது மிக்க அவதானம் தேவை!ஓர் எழுத்து மாறினாலும் அர்த்தமே மாறிவிடும் பாக்கியம் பெற்றது நம் தமிழ் மொழி!இங்கும் அது நடந்திருக்கிறது:யூ டியூப் உடனுக்குடன் ///அழித்துக்// /கொண்டிருந்தது!?அதாவது இல்லாது செய்து கொண்டிருந்ததா?அப்படியல்ல “அளித்துக்” கொண்டிருந்தது என்று வர வேண்டும்!(குற்றம் கண்டு பிடித்தே பெயர் வாங்கும் புலவர்களும்???)

    • Ram Kameswaran,
      கருணாநிதி, சோனியா & கம்பெனிகளை ஊரை விட்டு துரத்தி RSS அசோசியேட்ஸையும் ஜெயலலிதா & கம்பெனியையும் கொண்டுவந்து பயனில்லையே.
      சி.பி.ஐ., சி.பி.எம். ஆட்சிக்கு வந்து எதுவும் மாறுமா?
      தலையணையை மாற்றினால் தலைவலி தீராது.

      துனீசியாவிலும் தலையணைகளை மாற்றும் முயற்சிகள் இப்போது தீவிரமாகியுள்ளன. மக்கள் கிளர்ச்சி அதற்கப்பால் போக வேண்டும்.
      .
      வாழ்த்துகளுக்கு நன்றி, YOGA.S.
      வெகு காலமாக இங்கே எழுதிவருகிறேன்.
      ஆட்சேபம் இல்லையே!

  8. Here the people are came togetherto one way because they didn’t get no other way. They understood.

    But here lot of Alternatives Paths are shown to people by CORPORATE MEDIAS like ADMK to Karunanidhi, BJP to Congress now KARUPPU MGR to replace DMK.

    “” But the base (Constitutional, Economic & Govt Policies) are same. “”

    People should understand that and come together against to change the “base”. Till that everything is same !!!!

  9. இந்த பொரட்சி பொரட்சி ன்னு சொல்றிங்களே அந்த படம் இங்க நம்ம இந்தியாவில் அட இல்ல நம்ம தமிநாட்டில் மட்டுமாவது எப்ப ரிலீஸ் ஆகும் என்று எனக்கு மட்டுமாவது சொல்லுங்களேன். பொங்கலுக்கே வருமுன்னு ரொம்ப எதிர்பார்த்தேன். அதோட இல்லாம நீங்க வேற அப்பப்ப பயங்கரமா பில்டப் கொடுக்கறீங்க.

    • கல்வியறிவற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று மகாத்த்மா காந்தி கூறியதை அப்படியே பின்பற்றிவரும் நான் உங்களுக்கு உதவுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன் அய்யா எடிசன் அவர்களே .. அதாவது அது பொரட்சி இல்லீங்க … புரட்சி ..

      எங்க சொல்லுங்க .. பு … ர … இட் … சி.. புரட்சி …

      அப்புறம் பாத்திங்கனா .. இந்த புரட்சி எப்போ வரும்னா ..
      ”கொஞ்சம் கூட மானம், ரோசம், வெக்கம், சொரணை, இப்படி எதுவுமே இல்லாம வெளிநாட்டுக்கு இந்திய நாட்டைக் கூட்டிக் கொடுக்குற பொறம்போக்கு மாமா பசங்களுக்கு வக்காலத்து வாங்கிட்டு வரும் மினி மாமாக்கள் என்னைக்கு திருந்துராங்களோ அப்போவே வந்திரும் .. நீங்க அவங்களுக்கு வக்காலத்து வாங்குறவர் இல்லைல.. எடிசன்.

      எனக்கு தெரியும் நீங்க ரொம்ப… நல்லவர்னு..

    • எடிசனுக்கே ‘ஃபிலிம்’ காட்டுறீங்களா ?
      எடிசனுக்கே ‘பல்பு’ குடுக்குறீங்களா?
      இல்ல..
      எடிசனுக்கே மெடிசினா?
      தாமஸ் ஆல்வா எடிசனுக்கே அல்வா கிண்டி ஊட்டி விடுறீங்களா?

  10. //திபெத், மியான்மர், வட கொரியா!//
    இங்கெல்லாம் புரச்சி வந்தாக்க//

    asuran sir!

    திபெத்திலும், மியான்மரிலும் இதுவரை விடுதலைப் போராட்டம் நடைபெறவில்லை என்கிறீர்களா? செங்கொடி பறக்கும் நாடுகளில், இனி எப்போதும் புரட்சி ஏற்பட வாய்ப்பு இல்லை என்கிறீர்களா? வரலாறும், ஜோசியமும் கடந்தகாலம்! அனுமானமும்,குறிக்கோள்களும் எதிர்காலம்! கடந்ததும், நிகழ்வதும் எதிர்காலத்திற்கு வழிகாட்டிகள்!

  11. Yoga,
    பல வீடியோக்களை வன்முறையை காரணமாக காட்டி யூடியூப் அழித்து விட்டது. புரட்சியின் செய்திகள் வெளியுலகை எட்டா வண்ணம் யூடியூப் தடை செய்ய விரும்பியது ஒரு காரணம். துனிசியா அரசும் இணையத் தடைக்கு அழுத்தம் கொடுத்திருந்தது.

    Garammasala,
    சிங்களவர்கள் அனைவரும் பேரினவாதிகளாகவும், ஈழத்தமிழர்கள் அனைவரும் இனப்பற்றாலர்களாகவும் இதுவரை காலமும் நமக்கு சொல்லப்பட்டது. தமிழ் ஊடகங்களும், தமிழ் தேசியம் பேசுவோரும் அவ்வாறான பிம்பத்தை ஏற்படுத்தி விட்டிருந்தனர். அதைத் தான் இங்கே சுருக்கமாக தெரிவித்தேன்.

    • கலையரசன்,
      தவறன சில சொற் பிரயோகங்கள் வரலாற்றையும் அரசியலையும் தொடர்ந்தும் தவறாக விளங்கச் செய்யும் படிமங்கள் நிலைக்க உதவுகின்றன.
      அவற்றைப் பற்றி எச்சரிக்கையுடன் இல்லாத போது நாமும் தவறுகட்குத் துணைபோகிறோம்.
      உங்களிடமிருந்து கூடிய கவனத்தை எதிர்பார்த்ததாலேயே என் குறிப்பு எழுதப்பட்டது.
      பெரும்பாலானோர் இனப்பற்றளர்களக இருப்பது சூழலின் யதார்த்தம். அது நிதானமற்ற அரசியலாகத் தொடர நாம் வழி செய்யக் கூடாதல்லவா.

  12. இது உண்மையான மக்கள் புரட்சியா? அப்படி இல்லை நிச்சயமாக இல்லை.
    இதில் பென் அலியால் அடக்கப்பட்ட மதவாதிகளும், அவரது அரசியல் எதிரிகள் அதாவது எதிர்க்கட்சிகளும் அடக்கம்.இது ஒரு கதம்ப கூட்டணி. வெறுமனே பாட்டாளி வர்க்க புரட்சி என்றெல்லாம் லேபில் குத்த முடியாது.
    அதாவது காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக ஒரு எதிர்ப்பு போராட்டம் வெடிக்க அதை மக்கள் புரட்சி என்றெல்லாம் ஜல்லி அடிக்கிறீர்கள்.
    இவர்கள் எல்லோரும் நாளை துனிசியாவை இந்த மண்ணுலகின் சொர்க்க்கமாகவா மாற்றி விடப் போகிறார்கள்.பார்ப்போம் இந்த இடத்தை யார் நிரப்பபோகிறார்கள் என்று. நிச்சயம் கட்டுரையாளரின் ஆசை நிறைவேறாது. கொஞ்ச நாள் கழித்து அதைப்பற்றியும் நீங்களே கட்டுரை எழுதவும் தேவை வரும் என நினைக்கறேன்.
    கலை, நீங்கள் வெளியிட்ட அகதி வாழ்கை புத்தகத்தை இன்று வினவால் முதலாளித்துவ பதிப்பகம் என்று விளாசப்படும் கிழக்கு மூலமாகத்தானே ? தங்களது சந்தைப்படுத்தல் தந்திரங்கள் மூலம் கண்டதையும் விற்று காசாக்கும் கிழக்கு தானா உங்களுக்கு கிடைத்தது ? கீழைக்காற்று வேண்டாததாகி விட்டதா ? என்ன விதமான அரசியல் இது ?

  13. நண்பர் கலையரசன் தன் கட்டுரைகள் மூலம் நிறைய செய்திகளை, தகவல்களை வழங்கும் ஆற்றல் கொண்டவர். ஆனால் அவரிடம் மார்க்சிய தத்துவார்த்த புரிதலில் குறைபாடு நிறைய உண்டு. ஐரோப்பிய நாடுகளில் வரும் செய்திகளை வைத்துக் கொண்டு கட்டுரை எழுதுவதால் ஏற்படும் குறைபாடு இது.மாக்ச்சிய ஆய்வாளனுக்குரிய கள ஆய்வு இவரிடம் காணப்படுவதாக தெரியவில்லை. இதனால்தான் கடந்தகாலங்களில் ஐரோப்பிய நாடுகளில் நடந்த முதலாளித்துவ மத்திய தர வர்க்க இளைஞர்களின் கிளர்ச்சிகளை வர்க்கப் போராட்டமாக இவரை எழுதத் தூண்டியதெனலாம். வர்க்கப் போராட்டம், புரட்சி என்பதற்குரிய தத்துவார்த்த போராட்ட பின்புலம்களை ஆய்ந்து உணரா தன்மை நண்பர் கலையரசனிடம் மலிந்து காணப்படுகிறது. இதனால்தான் துனிசியாவில் ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சியை புரட்சியாக பார்க்கும் பார்வைக் குறைபாடாகும். துனிசிய போராட்டம் எந்தவகையிலும் முற்போக்கு அம்சங்களை கொண்டிருக்கவில்லை. அதிகார மையங்கள் தங்கள் ஆதிக்க அரசியலை நடாத்துவதற்கு தன் எழுச்சியாக எழுந்த இந்த போராட்டத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளன.துனிசியக் கம்யூனிஸ்ட் கட்சி ஓரங் கட்டப்பட்டுள்ளது. நகர் புற இளைஞர்களின் லும்பன் வாத குணாம்சங்களே போராட்டத்தில் முக்கிய பங்கை வகிக்கின்றது. இது பற்றி விரிவாக இடதுசாரி கண்ணோட்டத்தோடு ஆய்வுகள் வர வாய்புண்டு. வினவு அவற்றை மொழிபெயர்த்து வெளியிட முயலவேண்டும். நண்பர் கலையரசன் மிகுந்த எழுத்தாற்றல் உள்ளவராக இருந்தாலும் அவரின் கட்டுரைகள் தோழர்களை பிழையான புரிதலுக்கும், கற்றலுக்கும் உள்ளாக்கிவிடும் அபாயம் உள்ளது. சில காலங்களுக்கு முன் ஆபிரிக்க நாடுகளின் சாதியம் பற்றிய கட்டுரையையும் இவ்வகையை சார்ந்ததே. சாதியத்தின் தோற்றத்திற்கான அரசியல் பொருளாதார சமூக காலச்சார பண்பாட்டு தளங்களை புரிந்து கொள்ளாமல் ஆபிரிக்க இனக் குழுக்களை சாதியாக பார்க்கும் தவறான பார்வையும் இவ்வகையான குறைபாட்டின் பிரதிபலிப்பே. எழுத்துக்கள் எம் பொழுதை போக்குவதற்காக எழுதப்படுபவையாக இருத்தல் ஆகாது. எம் எழுத்துக்களுக்கு ஆய்வும் அர்ப்பணிப்பும் கொள்கை பிடிப்பும் அவசியம்.

    • தோழர் கோசிமின்,
      துனிசியா கட்டுரை ஒரு போராட்டத்தை உள்ளது உள்ளபடி அறிவிக்கும் ஒரு செய்திக் கட்டுரைதான். அதில் தேவையான தொடர்புள்ள விசயங்களை வைத்து தோழர் கலையரசன் எழுதியிருக்கிறார். அந்த அளவுக்கு அதை முழுமையாக பிழையின்றி எவரும் புரிந்து கொள்ள முடியும். மேலும் அது ஆய்வுக் கட்டுரை அல்ல. அதனால் ஆய்வுக் கண்ணோட்டமின்றி எழுதப்பட்ட கட்டுரை என்ற பொருளல்ல.

      ஒரு அரபு நாட்டில் மத கோரிக்கைகளை மறுதலித்துவிட்டு வர்க்க கோரிக்கைகளுக்காக மக்கள் கிளர்ந்தெழுந்து போராடுவதை நாம் வரவேற்பதுதான் சரி. ஒரு வேளை அந்த போராட்டம் தனது கோரிக்கையில் தோல்வியடைந்தாதலும் கூட அது மிகவும் கௌரவமான தோல்விதான். அதிலிருந்து பிழைகளை கற்றுக்கொண்டு எதிர்காலத்தில் மேலும் குறிப்பான போராட்டங்கள் எழும். பாரிஸ் கம்யூன் புரட்சி தோல்வியடையும் எனத் தெரிந்தும், அத்தகைய புரட்சிக்கு தொழிலாளர்கள் இன்னமும் தயாராகவில்லை என்பதை அறிந்தும் காரல் மார்க்ஸ் அந்த புரட்சியை கேள்விப்பட்டதும் கொண்டாடினார்.

      துனிசியா கட்டுரையின் முன்னுரையில் இது உலக முதலாளித்துவத்தின் சுரண்டலுக்கு எதிராக மக்களிடையே எழும் தன்னியல்பான போராட்டம் என்பதையும் இது மேலும் மேலும் வளர்ந்து வருகிறது என்பதையும் குறிப்பிட்டிருந்தோம். நீங்கள் சொல்வது போல துனிசியா போராட்டத்தில் நடுத்தர வர்க்கமும், லும்பன் இளைஞர்களும் கலந்து கொண்டிருப்பதாலேயே அது தனது முக்கியத்துவத்தை இழந்துவிடவில்லை. மேற்கத்திய நாடுகளில் முதலாளித்துவத்தை எதிர்த்து போராடும் மக்களில் பல்வேறு குழுக்கள், அராஜகவாதிகள் உட்பட இருக்கின்றனர். இதனாலேயே நாம் அதை எதிர்க்காமல் வரவேற்கத்தானே செய்கிறோம்?

      நீங்கள் இந்த போராட்டங்களை ஒரு வறட்டுவாத மார்க்சிய பார்வையிலிருந்து பரிசீலிப்பதாக விமரிசனம் வைக்கிறோம். அதாவது துனிசியா போராட்டம் ஒரு புரட்சிகரக் கட்சியின் தலைமையில் திட்டமிட்ட வகையில் நடந்தால்தான் அதை ஏற்றுக் கொள்ள முடியும் என்பது உங்கள் பார்வை. அப்படி நடந்தால் அது மகிழ்வுக்குறியதுதான். ஆனால் அப்படி ஒரு திட்டமிட்ட புரட்சிக்கு உரிய கட்சியும், மக்களும் தயாராக இல்லாத போது என்ன செய்வது?

      உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியின் விளைவாக நடக்கும் இந்த போராட்டங்கள் நமது விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட நிலையில் சுரண்டலுக்கு எதிர்விளைவாக நடக்கிறது. அதை பயன்படுத்தும் பலம் கம்யூனிசகட்சிகளுக்கு இல்லாத போது அது அந்தந்த வரம்புகளுக்குட்பட்டே நடக்கும். எனினும் இதை நாம் உலக முதலாளித்துவத்திற்கு எதிரான பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்திற்கு உரம் சேர்ப்பதாகவே பார்க்க முடியும். முக்கியமாக மத எண்ணங்கள் ஆதிக்கம் செலுத்துவதாக மேற்கு ஊடகங்களால் பிரச்சாரம் செய்யப்படும் அரபு நாட்டில் இப்படி ஒரு வர்க்கப் போராட்டம் நடந்திருப்பதும், சர்வாதிகாரி நாட்டை விட்டு ஓடுமளவு போராட்டம் தீவிரமாக நடைபெற்றதும் வரவேற்க கூடிய ஒன்றே.

      எனவே இதில் உங்கள் பார்வையில்தான் பழுது இருப்பதாக காண்கிறோம். தோழர் கலையரசன் இந்த கட்டுரையில் அப்படி ஒரு திருத்தமான புரட்சியாக இதை குறிப்பிடவில்லை. அந்த போராட்டத்தின் வரம்புகளை கணக்கில் கொண்டே எழுதியிருக்கிறார்.

      உங்கள் பார்வைப்படி பார்த்தால் ஈராக் போர் எதிர்ப்பு ஆர்ப்பாடங்கள் கூட வெற்றியடையவில்லை, ஏனெனில் இவை நகர்ப்புற மத்திய வர்க்கத்தின் செல்வாக்கில் நடைபெற்றது என்று சொல்ல்லாம். ஆனால் உலகமெங்கும் நடந்த அந்த ஆர்ப்பாட்டங்களை கம்யூனிஸ்ட்டுகள் உற்சாகத்துடன் வரவேற்பதுதான் சரி. ஏகாதிபத்தியத்தை வீழ்த்தும் சோசலிச முகாம் உருவாகாத வரை இந்த போராட்டங்கள் வெற்றியடையாது என்றாலும், நாம் சோசலிச முகாமிற்காக பாடுபடும் அதே நேரத்தில் இத்தகைய ஜனநாயக போராட்டங்களை ஆதரிப்பதும் செய்ய வேண்டும். இந்த உலக மக்களை அணிதிரட்டித்தான் நாம் ஏகாதிபத்தியத்தை வீழ்த்த முடியுமே அன்றி நாம் மட்டும் அதை செய்ய முடியாது.

      ஆப்ரிக்க தொடரில் சாதி குறித்த உங்களது விமரிசனங்களை அப்போதே தெரிவித்திருக்கலாம். இப்போது அது குறித்த விவாதம் இந்த இடத்தில் இடம்பெறுவது தேவையில்லை என்று கருதுகிறோம்.

      மேலும் தோழர் கலையரசனின் துனிசியா குறித்த கட்டுரை ஒன்று நாளை வெளியிடுகிறோம். ஒரு வேளை உங்களது கேள்விகளுக்கு அதில் விடை இருக்கலாம். எனினும் உங்களது விமரிசன அணுகுமுறையை நாங்கள் ஏற்கவில்லை.

      • கோசிமின் கருத்தை நூறு விழுக்காடு வரவேற்கிறேன்.

        வினவு இது உங்களுக்கே ஓவரா தெரியலையா ?

        // உழைக்கும் வர்க்கமும், இழப்பதற்கு எதுவுமற்ற மக்களும் ஒன்று சேர்ந்து போராடினால் புரட்சி நிச்சயம் என்பதை துனீசியா மக்கள் சாதித்துக் காட்டியுள்ளனர்.//

        இப்படித் தானே எழுதி இருக்கிறார்

        //தோழர் கலையரசன் இந்த கட்டுரையில் அப்படி ஒரு திருத்தமான புரட்சியாக இதை குறிப்பிடவில்லை //

        மேல இருககிற வரிக்கு என்ன அர்த்தம்னு கொஞ்சம் விளக்கினால் பரவாயில்லை.

        • எழில், உங்களுக்கு அரசியல் அறிவு குறைபாடு என்ன மெடலா? இப்படி பெருமையாக அணிந்து கொண்டு வருவதற்கு.. வினவை எதிர்க்க உங்களுக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம், தவறில்லை.. அதற்காக எதைப்பற்றி கருத்து தெரிவிக்கின்றோம் என்ற புரிதல் கூட இல்லாமல் இருந்தால் அதைப்பார்த்து பரிதாபம்தான் பட முடியும்…

          உங்களிடம் ஒரு வருடத்திற்கு முன்னால் சொன்னதைத்தான் இப்போதும் சொல்கிறேன்.. கற்றுக்கொள்ள பணிவு வேண்டும். நான் உங்கள் மேல் இன்னமும் நம்பிக்கை இழக்கவில்லை. வாழ்த்துகள்

        • தோழர் கேகே இதில் என்ன அறிவு குறைபாட்டைக் கண்டீர்கள் என்று புரியவில்லை. இதே போன்ற கருத்தைத்தான் நான் எனது பின்னூட்டத்திலும் குறிப்பிட்டேன். அது கோசிமின் போல தத்துவார்த்தமாக இல்லை. கோசிமின் அவர்களின் கருத்து தத்துவார்த்தமாக இருந்ததால் அதுவும் இதுவும் ஒன்று தான் என எனக்கு தோன்றியது.கலையரசன் எல்லாவற்றுக்கும் சிவப்பு சாயத்தை பூசுகிறார் என்பது தானே அதன் முழு சாராம்சம். இதில் என்ன பிழை?
          எனக்கு கலையரசனின் முரண்பாடுகள் புரியவில்லை.
          அவர் ஒரே நேரத்தில் உங்களுக்கும் நண்பராக இருக்கிறார்,காலச்சுவடுக்கும் நண்பராக இருக்கிறார் கிழக்கு பதிப்பகம் மூலம் நூல் வெளியிடுகிறார். நீங்கள் பின்னிரண்டையும் விளாசுகிறீர்கள்.
          இதைக் கொஞ்சம் விளக்குங்களேன்.
          மிக எளிதாக எல்லோரையும் கீழிறக்கி,தாழ்த்தி,இழிவு படுத்து கடந்து செல்கிறீர்கள்.இது போன்ற பண்பாட்டை நான் கற்றுக்கொண்டு என்ன ஆகப் போகிறது?
          எனக்கு கற்றுக்கொள்ள ஆசைதான் ஆனால் எதைக் கற்றுக்கொள்ள வேண்டும் யாரிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் நான் தெளிவாகவே இருக்கிறேன். உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன்.

      • வினவு தோழர்களுக்கு,
        ///தோழர் கலையரசன் இந்த கட்டுரையில் அப்படி ஒரு திருத்தமான புரட்சியாக இதை குறிப்பிடவில்லை. அந்த போராட்டத்தின் வரம்புகளை கணக்கில் கொண்டே எழுதியிருக்கிறார்.///
        இதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. என்றாலும், துனிசிய மக்கள் பேரெழுச்சியை புரட்சி என்ற சொற்பதம் கொண்டு உச்சரிப்பதே (அதாவது கட்டுரையின் தலைப்பில்) பொருத்தம் இல்லை என்பதுதான் என் கருத்து. இக்கட்டுரைக்கு தொடர்புடைய அடுத்த கட்டுரையான “துனிசிய மக்கள் புரட்சியின் படிப்பினைகள்” என்ற கட்டுரையிலாவது இதை கணக்கில் கொண்டிருக்க வேண்டும்.

  14. DISUNITY AMONG THE MUSLIMS ( Context of Tunisia and now Egypt)

    Disunity among the Ummah is very dangerous and it may provide a murderous opportunity for the adversaries to add fuel to the fire.

    After all, Ahmedinejad had not been a corrupt, incompetent or an immoral ruler. He has scored more than pass mark (I will give him a Merit Pass) There is no hard evidence to prove that last year’s election was a farce. So who was behind the attempted regime change in Iran?

    Try to go back to the earliest time of Islamic history when Khalifa Uthman ibn Affan (ra) was assassinated and when Ali ibn Abi Talib (ra) assumed the leadership of the nation of Islam.

    The cunning Muawiyah and his group wanted the culprits, who planned and executed the assassination to be caught and punished as soon as possible, but Ali (ra) wanted to concentrate on the peace, unity and administration of the Ummah, but his adversaries were stubborn and had a political axe to grind. This led to the weakening and disintegration of the Nation of Islam. Did Islam gain by this sort of rationalistic freedom?

    This is exactly what may happen in Iran if the followers of Mousavi pursued their selfishness and greed for political power. They may play into the hands of the enemies of Iran who have been waiting for a pretext and an opportunity to destabilize the nation and in the process help the ambitions of the greatest enemies of Islam

    For the sake of saving the millions of innocent people of a Muslim nation, at times we have to forgive and forget the shortcomings of our leaders and rulers rather than trying to change the regime, create massive anarchy ( look at Afghanistan) by getting help from insincere and manipulating Non-Muslim world powers.

    Iraq is right in front of our eyes. Tens of thousands of People like me hated Saddam Hussein and went to the extent of morally co-operating with his opponents and dissidents in seeking help to punish and execute Saddam and overthrow his administration (Remember Dr. Ahmed Chalabi and gang). What were the consequences?

    But right now the same people feel the foolishness, naivety and immaturity of such political thinking and wish if only Saddam had remained in power and we could have saved the deaths of about 1.2 million Iraqis and about 400,000 people becoming refugees, over 600,000 widows and about 500,000 orphans and the nation going to the dogs. Who was responsible for this tragedy?
    Case Two: Afghanistan: Islam was trying hard to destroy group loyalty and tribalism, but the people of Afghan gave importance to their tribes: Pushtu, Hazar, Tajik, Uzbeks, Turkmen, Kyrgyzs etc, and their leaders like Burhanuddin, Ahmed Mashod, Hikmatyar and others could have reconciled for the sake of the unity of the nation and Ummah but ego and greed for political power corrupted them and brought horrendous bloodshed, devastation and sufferings to the millions of innocent people and brought a shame to Islam in the world.

    In conclusion I will say that we have to be patient, pray hard and should not try to create anarchy and confusion in Muslim societies for the sake of political power. There are hard lessons for the Indian Muslims from these tragedies. United we stand and divided we fall.
    Let us wait until Allah swt Bring about a change in leadership

  15. The world has witnessed an eruption of unparalled magnitude in the Muslim world over the past two weeks. Muslims the world over from Pakistan, to Tunisia, to Egypt, Yemen, Palestine, Jordan and even Albania have showed their utter mistrust and disapproval of the tyrant rulers imposed upon them. The demonstrators have shown great courage inspired by the Muslims of Tunisia. These demonstrations have erupted from the frustrated hearts of the Ummah and are a sincere display of the Islamic sentiment. Indeed, the videos from Cairo are riveting, with masses of Muslims flowing from the masajid after Friday prayer and overwhelming security forces. As a clear sign of the goodness of the Ummah, the world is witnessing the riot police allowing the Muslims to perform the Isha prayers in the streets; an indication that the very security forces that repress the Ummah are the same ones who will protect and defend it when its Islamic sentiment is evoked.

    A sign of the the tyrant rulers in the Muslim world scrambling for legitimacy can be seen in Palestine. The secret documents and meeting notes gushing forth clearly illustrate how Western Nations are using the PLO to surrender the majority of Palestine. Everything in those documents emphasizes that the PLO was established to legitimize the recognition of the Israel and to surrender the majority of Palestine. Furthermore, it punctuates the reality that the Palestinian Authority’s goal is to protect the state of Israel while focusing on crushing the Islamic sentiments of the Muslims of Palestine. As if that weren’t enough, the Arab dictators fragile alliances are crumbling under the weight of their own words, as revealed by these recently released documents. The mis-trust and betrayal for each other is now in the open.

    In Pakistan, the very lawyers who protested the detainment of Chief Justice Chaudry in 2007 by President Pervez Musharraf, are the very ones supporting Malik Mumtaz Hussain Qadri, the admitted killer of Salman Taseer, the former governor of Punjab province. Their support is noteworthy because it indicates the Islamic sentiment across all segments of Pakistani society, from the underclasses to the young and educated class. The recent shooting by a US diplomat of two Pakistanis was the most recent flashpoint in the continued outrage Muslims have against the US presence in the Af-Pak region.

    Clearly, what is happening in Tunisia, Egypt, Jordan, Yemen and Pakistan shows the desire that the Muslim Ummah has for change. The Ummah has adopted the numerous injunctions in the Quran and Sunnah to take their rulers to account and hold them to task for their transgressions:

    كُنتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَتُؤْمِنُونَ بِاللّهِ
    “You are the best nation produced for mankind. You enjoin what is right and forbid what is wrong and believe in Allah” (Quran 3:110)

    The Messenger of Allah (saw) said: “By Him in whose hand is my soul, you must enjoin the Ma’aruf and forbid the Munkar, otherwise Allah will be about to send His punishment upon you. And then if you pray to Him (to ask Him), he would not answer you.”

    The Messenger of Allah also (saw) said: “The master of martyrs is Hamza bin Abdul-Muttalib and a man who stood to an oppressor ruler where he ordered him and forbade him so he (the ruler) killed him.”

    Muslims are beginning to take matters into their own hands; the veil of fear has been lifted. The time is now and now is the time for the return of the natural order of the Muslim world. Hizb ut-Tahrir calls upon the people, the intellectuals in society and the army to work together to uproot the foreign capitalist influence and establish a sincere Khilafah. This ummah with its rich Islamic heritage and real leaders (not those who are Western influenced) possesses the framework of the system, its solutions and its ideology. We possess brave men and ample resources. We must not be cheated of real change.

    *
    *
    *
    *
    *
    *
    *
    *
    *
    *

  16. நம்மில் யாருமே எதிர்பார்த்திருக்க இயலாதளவு முக்கியமான நிகழ்வாகத் துனீசியப் புரட்சி அமைந்து விட்டது.
    இது ஒரு பெரிய காட்டுத் தீயை உருவாக்கியுள்ள சிறு பொறி என்பதில் ஐயமில்லை.

    எனினும் ஏகாதிபத்திய அணிக்கு ஒற்றுமையும் தெளிவான நோக்குக்களும் தேவையான தருணமிது.

    எகிப்தில் மூண்டுள்ள புரட்சித் தீயை அணைக்க அமரிக்கா முழு மத்திய கிழக்கையுமே அழிக்க முற்படலாம்.

    அதை விடப் பலவாறான எதிர்ப் புரட்சிகளுக்கான வேலைகளும் தொடக்கப்பட்டுவிட்டன. பயனுள்ள ஒரு கட்டுரை:
    http://www.globalresearch.ca/index.php?context=va&aid=22993

  17. லிபியா மீது அமெரிக்க பயங்கரவாதி ரத்தக் காட்டேரி பாராக் ஒபமா மற்றும் அவனது சகலைகளும், சுடுகாட்டுச் சொறிநாய்களுமான பிரான்ஸ், பிரிட்டனின் ஏவுகனை/விமானத் தாக்குதல் நடத்தியுள்ளனர். காடாபி எனும் உள்ளூர் ரவுடியை ஒழிப்பது என்ற பெயரில் லிபியா மீது தாக்குதல் தொடுத்துள்ள இந்த சர்வதேச ரவுடி கிரிமினல்களின் அயோக்கியத்தனத்திற்கான விலையை அமெரிக்க, பிரான்ஸ், பிரிட்டன் மக்களே தருவார்கள் என்பதுதான் வருத்தத்திற்குரியதாக உள்ளது.

    • இந்த ’ரத்தக்காட்டேரி’ தாக்குதல் நடத்தவில்லை என்றால் கடாஃபி, எதிர்ப்பாளர்களை பூண்டோடு ஒழித்திருப்பான். அமெரிக்க ஆக்கிரமப்புகளுக்கு இதுவரை ஆதரவளிக்காத, ஃப்ரான்ஸ் தான் முதல் தாக்குதல் செய்தது. அவர்கள் ஒன்றும் மடையர்களோ அல்லது ஏகாதிபத்தியவாதிகளோ அல்ல.

      மேலும் 1999 செர்பிய தாக்குதல் பற்றி அறிய, பார்க்கவும் :

      http://athiyamaan.blogspot.com/2008/10/blog-post_31.html
      சதாம் ஹுசேன், செர்பியா,ஆஃப்கானிஸ்தான், அமெரிகாவின் போர்கள், டாலர் அரசியல் மற்றும் இன்ன பிற…

  18. அமெரிக்கா ஈராக்கில் எதைச் சாதித்ததோ அதையே லிபியாவிலும் சாதிக்க முற்படுகிறது.

    கடாஃபி அன்பின் திருவுருவமல்ல.
    எனினும், லிபியாவில் எத்தனை பேர் (போராளிகள்/போராடாதோர்) கொல்லப்பட்டுள்ளனர் என்பது பற்றிய நம்பகமான தகவல்கள் இதுவரை இல்லை.
    நமக்குத் தரப்பட்டுள்ளவை யாவுமே ஊகங்கள். அவையும் மிகைப்படுத்தப்பட்டன என்றே தெரிகிறது. (உதாரணமாக, லிபியாவில் சாதாரண மக்கள் மீது கிளர்ச்சியின் தொடக்கத்தில் விமானத் தாக்குதல் நடந்ததாகப் பொய் கூறப்பட்டது).

    கடாஃபிக்கும் சதாம் ஹுசேனுக்கும் ஒரு பெரிய வேறுபாடும் இல்லை.
    இருவருமே ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்தவர்கள் தாம். மிக அண்மை வரை பிரிட்டிஷ் ஆட்சிக்கு நெருக்கமானவராகவே கடாஃபி இருந்தார்.
    இருவரில் எவரையும் அகற்ற அந்நிய வல்லரசுகள் நடவடிக்கை எடுப்பது தீயது.
    அந்தந்த நட்டு மக்கள் செய்ய வேண்டியதை அந்நிய வல்லரசுகள் செய்யப் போவதில்லை.
    அவற்றின் நோக்கம் சனனாயகத்தை கொண்டுவருவதல்ல, ஊழல் மிக்க ஒரு பொம்மை ஆட்சியே அவற்றின் தேவை.

    கடாஃபிக்கு எதிராகப் போர் தொடுத்த நோக்கமும் சதாமுக்கு எதிராகப் போர் தொடுத்த நோக்கமும் வேறுபட்டனவல்ல. போரின் விளைவுகளும் அவ்வாறே அமையும். மேற்குலகு காக்க முனைவதாகச் சொல்வோரை விடப் பன்மடங்கானோர் மேர்குலகின் தாக்குதல்களில் அழிவது உறுதி. அதற்கான சான்றுகள் ஏலவே வந்து விட்டன.
    .
    அண்மைய அரபுலக எழுச்சிகளில், லிபியாவில் மட்டுமே ஆயுதந் தாங்கிய கிளர்ச்சி நடந்தது.
    லிபியாவில் நடந்ததை விட மோசமாக, ஆயுதம் ஏந்தாத ஆர்ப்பாட்டக்காரர்கள் யேமெனிலும் பாஹ்ரெய்னிலும் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர். பாஹ்ரெய்னில் சவூதிப் படைகள் இன ஒடுக்குமுறை அரசின் சார்பில் உள் நுழைந்துள்ளன.

    எங்கள் மனிதாபிமான மேற்குலகின் மனிதாபிமானத் தாராளவாதச் சிந்த்தனையாளர்கள் எங்கே போனார்கள்?

    • அவர்கள் மேற்குலக நடவடிக்கைகளை என்ன சொல்லி காப்பாற்றலாம்னு யோசித்துக்கொண்டு இருக்கிறார்கள்!

    • இப்படியே ‘பேசுக்கிட்டு’ மட்டும் இருங்க. அங்க எதிர்ப்பாளர்கள், கடாஃபியால் கூண்டோடு கொன்றழிக்கப்பட்டால் உங்களுக்கு என்ன கவலை. நீங்க வேற இடத்தில் சுகமா இருக்கீகல்ல. பேசுங்க.

      ஆமா, இந்த சோவியத் ரஸ்ஸியா 1979இல் ஆஃபாகானிஸ்தான் மீது படை எடுத்த போது, உம்மை போன்றவர்கள் என்ன ‘கருத்து’ தெரிவித்திருப்பீர்கள் என்று யோசிக்கிறேன். நம்ம ஆளுங்க செஞ்சா அது சரி. ஆனா ‘எதிரி’ செய்ஞ்சா அது ஏகாதிபத்தியம் !!!

    • //கடாஃபிக்கு எதிராகப் போர் தொடுத்த நோக்கமும் சதாமுக்கு எதிராகப் போர் தொடுத்த நோக்கமும் வேறுபட்டனவல்ல. //

      அருமை. என்ன ஓர் பார்வை. வான் தாக்குதல் மட்டும்தான் லிபியா மீது. ஈராக் போல் மீண்டும் சிக்கிக்கொள்ள யாரும் தயாரா இல்லை. அய்.நா சபை தீர்மான அடிப்படையில் தான் இந்த தாக்குதல். ஆனால் ஈராக் போர் அப்படி அல்ல.

  19. ஒரு முக்கிய விசியத்தை விட்டுவிட்டேன் : கடாஃபியின் படைகள் மீது வான்வழி தாக்குதல் நடத்துவதை ‘எதிர்க்கும்’ நாடுகளின் போலித்தனம் மற்றும் உள்னோக்கங்கள் பற்றி. முக்கியமாக துருக்கி இதை கடுமையாக எதிர்க்கிறது. no fly zone லிபியா மீது அமைக்க துருக்கி இடம் கூட அளிக்க மறுத்துவிட்டது. உண்மையான காரணம் ஜனனாயக ‘கொள்கை’ அல்ல. துருக்கியில் உள்ள குர்த் இன மக்கள் தனிநாடு கேட்டு பல ஆண்டுகளாக போராடுகின்றனர். (பக்கத்து நாடுகளில் உள்ள குர்த் இன மக்களுடன் சேர்ந்து). அவர்களை நசுக்க பல வகைகளில் பல நாடுகள் முயல்கின்றன. லிபியா மீது தாக்குதலை ஆதரித்தால், எதிர்காலத்தில் எங்க தம் மீதும் இதே போல் தாக்குதல் (குர்த் மக்கள் எழுச்சியை நசுக்க முயலும் போது) வர வழி பிறக்கும் என்ற பயம் தான் உண்மையான காரணம்.

    மடியில கனம் இருப்பவன் தான் பயப்படுவான் என்ற பழமொழி இங்கு மிக பொருந்து. இந்தியா உள்பட, இந்த தாக்குதலை எதிர்க்கும் அனைத்து நாடுகளுக்கும் இது பொருந்தும்.
    கொள்கை, மன்னாங்கட்டி எல்லாம் ஒன்றும் இல்லை. தத்தம் நாடுகளில் தாங்கள் செய்யும் மீறல்கள்களை (அய்.நா) பயமில்லாமல் தொடர இந்த வேடம். அவ்வளவுதான்.
    சீனாவுற்க்குதான் முதல் இடம். ராணுவ பலத்தால், தம் மக்களையே அடிமையாக வைத்திருப்பதால் பயம். எதிர்ப்பு. நல்ல நடிகர்கள் இவர்கள் எல்லோரும்.

    தாக்குதலை ‘எதிர்க்கும்’ உங்களை போன்ற அப்பாவிகளை கேடயமாக பயண்படுத்தி கொள்ளும் ‘ராஜ தந்திரம்’ இவர்கள் அனைவருக்கும் உண்டு. இடதுசாரிகளை கேடையமாக பயன்படுத்தி தம் அயோக்கியத்தனங்களை தொடர் பல காலமாக ‘ராஜ தந்திரம்’ பயன்படுத்துப்படுகிறது. இடதுசாரிகளும் அதை பற்றி அலட்டிகொள்ளாமல், இதற்க்கு ’துணை’ போகும் முட்டாள்தனம் தொடரும் தான்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க