உழைக்கும் மகளிர்தின சிறப்புப் பதிவு – 6
மகளிர் தினம்! ஒரு காதலர் தினம் போல் பெரும் கவனயீர்ப்பு, கருத்து முக்கியத்துவம் என்பவற்றை இந்த தினம் பெறுவதில்லை. இது பெண்களுக்குரிய தினம். பெண்கள் பாவப்பட்ட ஜென்மங்கள். எங்கள் மீது இரக்கம் காட்டுங்கள், அன்பைப் பொழியுங்கள் என்கிற சுயபச்சாதாப புலம்பல்கள் அல்ல இந்த எழுத்துகள். பிறப்பிலேயே மறுக்கப்பட்ட, சமூக அரசியல் நிர்ப்பந்தங்களால் பறிக்கப்பட்ட பெண்களின் உரிமைகளை மீட்பதற்கான ஓர் அடையாள நாள்.
ஆரம்பகால பெண்மீதான அடக்குமுறைகள் ஓர் ஆணுக்கு அடங்கியவளாய் பெண் தன்னை உருவாக்கிக் கொள்வது என்பதோடு ஆரம்பித்து, சமூகத்தில் பெண் என்பவள் ஆணின் “கெளரவம்” என்கிற வரை நீடித்தது. இதைத்தான் வள்ளுவனின் வாசுகி, படிதாண்டாப் பத்தினி, கொலையும் செய்வாள் பத்தினி என்றார்கள் காலங்காலமாய். இயற்கையோடும், இயங்கியலோடும் ஒவ்வாத உவமைகளை சொல்லியே பெண் மனம் மயக்கப்பட்டது. வார்த்தைகளின் மகுடியில் மயங்கிப்போன பெண்மனம் இயல்பாய் அடிமை விலங்கை தனக்குத்தானே பூட்டவும் கற்றுக்கொண்டது. இவாறாக, பெண் தனக்குத்தானே வரித்துக்கொண்டதும், சமூகத்தால் விதிக்கப்பட்டதுமான எழுதாத விதிகளோடும், அழுத்தங்களோடும் வாழவும், குடும்பத்தை கட்டிக்காக்கவும் அன்றுமுதல் இன்றுவரை நிர்ப்பந்திக்கப்படுகிறாள்.
என் பார்வையில் பெண்ணுக்கு இரண்டு விதமான விலங்குகள் பூட்டப்படுகின்றன; கண்ணுக்குத் தெரிந்ததும், தெரியாததுமாக. பெண் என்பவளும் காதல், திருமணம் என்கிற இயல்பான உணர்வுகளால் தீண்டப்ப்படும்போது, அது குறித்த கனவுகள், கற்பனைகளில் மூழ்கி தன்னைத்தானே சமூகவிதிகளோடு பொருத்திக் கொள்வதும், தனக்குரிய புதியதோர் அங்கீகாரத்தை தேடுவதும் இயல்பாய் நடந்தேறுகிறது. தனக்குத்தானே ஓர் விலங்கை பூட்டிக்கொள்கிறேன் என்பது பெண்ணின் கண்ணுக்கும், புத்திக்கும் சுலபத்தில் எட்டுவதில்லை.
கண்ணுக்குத் தெரிந்தே பெண்கள் மீது பூட்டப்படுவது “தாலி” என்னும் விலங்கு. தாலி என்பது ஓர் மரபு. ஆணும், பெண்ணும் தங்களை திருமணம் என்கிற பந்தத்தில் இணைத்துக் கொள்வதற்கான அத்தாட்சி. மனித நாகரிகம் வளர்ச்சியடைவதற்கு முன், சட்டங்கள், விதிமுறைகள் இயற்றப்படுமுன் மனிதன் திருமணத்தை அடையாளப்படுத்த கண்டுபிடித்தது. அதில் கூட சந்திரமதியின் தாலி அரிச்சந்திரனின் கண்ணுக்கு மட்டும் தான் தெரியும் என்று சொல்லும் அபத்தங்கள்! பெண்ணை இழிவு செய்து, தாலியின் மகிமையை காப்பாற்றுவது தான் இலக்கியம், மரபு, கலாச்சாரம் என்றால் அதுகுறித்து பகுத்தறிவை பெண்கள் வளர்த்துக்கொள்வது தவிர்க்க முடியாததாகிறது.
திருமண பந்தத்தில் தாலி என்கிற சின்னம் மட்டுமே பெண்ணுக்குரிய எந்தவொரு சமூக, பொருளாதார பாதுகாப்பையும், உத்தரவாதத்தையும் வழங்கி விடுவதில்லை. இரண்டு மனங்களுக்கு இடையே உண்டாகும் வேறுபாடுகளை, இடைவெளியை தாலி என்கிற சின்னம் களைந்துவிடுவதுமில்லை. இங்கே திருமணத்தில் தாலி தேவையா இல்லையா என்பதல்ல கேள்வி. தாலி என்கிற சின்னம் இரண்டு மனங்களை இணைக்கிறதா அல்லது மனிதர்களை இணைக்கிறதா என்பதே கேள்வி.
கனடாவில் உலகின் ஏறக்குறைய எல்லா நாடுகளிலிருந்தும் வந்து குடியேறுகிறார்கள். யாராயினும் தங்கள் தனித்தன்மைகளை பேண கனடிய சட்ட திட்டங்களில் அனுமதியுண்டு. ஈழம், இந்தியா, பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் எல்லோருமே கனடாவில் பிறந்து வளர்ந்த அல்லது இங்கே நீண்டகாலமாக குடியேறி வந்து வாழ்ந்த பெண்களை திருமணம் செய்வது கிடையாது. பல ஆண்களும், சில பெண்களும் தங்கள் சொந்தநாட்டுக்குச் சென்று திருமணம் செய்து, பின்னர் கனேடிய குடிவரவு சட்டதிட்டங்களுக்கமைய தங்கள் துணையை இங்கே அழைத்துக்கொள்கிறார்கள்.
வாழ்க்கையின் ஆரம்ப நிலைகளில் எந்த குறை, நிறைகளும் கண்ணுக்கும், புத்திக்கும் பெரும்பாலும் எட்டுவதில்லை. மணிரத்னம் படத்தில் வரும், “புது வெள்ளைமழை பொழிகிறது…” என்கிற வகையில் வாழ்க்கை இனிக்கும். குறிப்பாக திருமணத்துக்குப் பின் தான் உடலுறவு என்கிற ஒன்றையே உய்த்தும், துய்த்தும் அறியும் பெண்ணுக்கு அந்தக் கணங்கள் போலவே வாழ்க்கையின் அடுத்தடுத்த கட்டங்களும் இருக்கும், இருக்கவேண்டும் என்கிற விருப்பமும், ஆவலும் இருக்கும்.
ஆனால், “தேனிலவு கட்டம்” (Honeymoon Phase) முடிய கொஞ்சம், கொஞ்சமாய் கணவனின் சுயரூபம் தெரியவர சில பெண்கள் மொழியும், வாழ்க்கையும் புரியாத அந்நிய தேசத்தில் நிர்க்கதியாகி நிற்கத்தான் செய்கிறார்கள். பெண்கள் மீதான வன்முறைக்கு கனேடிய சட்டத்தில் தண்டனை நிச்சயம், அதிலிருந்து தப்பமுடியாது என்று தெரிந்தாலும், தன் மனைவி தனக்கு இழக்கைப்படும் கொடுமையை வெளியே சொல்லமாட்டாள் என்கிற பெண்ணின் மடமைத்தனத்தை ஆண் தனக்கு சாதகமாக்கிக் கொள்கிறான். உடல், உள, பாலியல் ரீதியான வன்கொடுமைகளுக்கு மனைவி என்கிற பெயரில் பெண் பலியாக்கப்படுகிறாள். கணவன் எப்படி மனைவியை பாலியல் வன்முறை செய்ய முடியும் என்று சிலர் கேலியாக கேள்வி கேட்கக் கூடும். மனைவியே ஆனாலும் ஓர் பெண்ணின் சம்மதம் இல்லாமல் அவளை பாலியல் ரீதியாக கூட துன்புறுத்தக்கூடாது என்பது தான் சட்டம்.
கனடாவே என்றாலும் பெண்கள் கணவன் என்கிற ஆண் மூலம் எப்படி கொடுமைப்படுத்தபடுகிறார்கள் என்பது பற்றி நிறையவே சொல்லலாம். குடும்ப வன்முறை (Domestic Violence) என்பதால் ஆண்கள் பாதிக்கப்படுவதில்லையா என்று சிலர் விதண்டாவாதம் செய்யலாம். எத்தனையோ அறிக்கைகள், ஆய்வுகள், உண்மைக்கதைகளை கேட்டபின் தெரிந்துகொண்டேன்; குடும்ப வன்முறையில் பெண்களே மிக அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். வேண்டாத பெண்டாட்டி கைபட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்.
சில கணவன்மார்களுக்கு மனைவியை ஒதுக்கி வைக்க காரணங்கள் தாராளமாகவே கிடைக்கிறது. கனேடிய சட்ட திட்டங்களுக்கு அமைய ஸ்பொன்சரில் ஒருவர் வாழ்க்கைத் துணையை அழைத்து வந்தால் குறைந்தது பத்து வருடங்களுக்கு அவரே தன வாழ்க்கைத் துணைக்குத் தேவையான எல்லா செலவுகளையும் பொறுப்பேற்க வேண்டும். இல்லையென்றால் அதன் விளைவுகள் பாரதூரமானதாக இருக்கும். இது போன்ற, எங்கே தங்களை நாட்டுக்கு திருப்பி அனுப்பி விடுவார்களோ என்கிற பயம் ஒருபுறமும், தன் பிறந்த வீட்டை எப்படி சமாளிப்பது என்கிற கிலியிலுமே பல பெண்கள் தங்களுக்கு நடக்கும் கொடுமைகளை வெளியே சொல்வதில்லை.
சில பெண்கள் மனநோயாளிகளாகவும் ஆகியிருக்கிறார்கள் என்று பெண்கள் அமைப்புகள் சொல்கின்றன. இதன் காரணமாக குழந்தைகளை, குழந்தைகள் காப்பக அமைப்புகள் தங்கள் பொறுப்பில் எடுத்துக்கொள்கிறார்கள். எப்படியோ, கட்டிய கணவனின் கொடுமைகளை இனியும் பொறுக்க முடியாது என்கிற நிலை வரும்போது கணவனை விட்டு விலகிச் சென்று தங்கள் வாழ்க்கையை மீள கட்டியெழுப்ப நிறையவே சிரமப்பட்டு பலர் வெற்றியும் அடைகிறார்கள். .
கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் பெரும்பாலும் பெண்களுக்குரிய தற்காலிக வதிவிடங்களில் (Shelters) தங்கவைக்கப்படுகிறார்கள். எதுவுமே இல்லாமல் பூஜ்யத்திலிருந்து வாழ்க்கையை தொடங்குகிறார்கள். இந்த நாட்டில் இவ்வாறு பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவ, அவர்களின் வாழ்க்கையை மீளவும் அவர்களின் சொந்த முயற்சியிலேயே கட்டியெழுப்ப நிறையவே அரசின் திட்டங்கள் இருக்கின்றன. வாழ்க்கையில் எந்தப் பிரச்சனை வந்தாலும் பெண்கள் பெரும்பாலும் பிறந்த வீட்டை நோக்கியே ஓட நினைப்பார்கள். ஆனாலும், எல்லாப் பெண்களுக்கும் அந்த ஆதரவு கிடைக்குமா நிச்சயமாக தெரியவில்லை. ஒரு முக்கிய காரணம் பெண் கணவனைப் பிரிந்து வந்தால் அது பெரும்பாலும் பெண்ணின் பிழையாகவே பார்க்கப்படுகிற ஓர் குறைபாடு எம் சமூகத்தில் நிலவுகிறது. அதன் காரணமாகவே சில பெண்கள் இவாறான பிரச்சனைகள் வரும்போது பிறந்தவீட்டை தவிர்க்கிறார்கள்.
தனிமனித சுதந்திரங்கள் பறிக்கப்படும்போது அது சார்ந்த சமூக கட்டமைப்பு அர்த்தமற்றதாகிப்போகிறது. கணவன் என்கிற உறவும், பெண்ணுக்கு விரோதமான சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பெண்ணுக்கு அபத்தமாய் தோன்றினால் அது அவர்கள் சமுதாயப் பிறழ்தல் ஆகவும் உருவாக காரணமாகிறது. அப்போது பாதிக்கப்படுவது அந்தப் பெண் மட்டுமல்ல அவளைச் சார்ந்து வாழும் குழந்தைகளும் தான்.
பெண்கள் கணவனைப் பிரிந்து வாழ்வது, விவாகரத்து கோருவது என்பது சமூகப் பிரச்சினையாய் மட்டும் பார்க்கப்படாமல், அது தனிமனிதப் பிரச்சனையாகவும் பார்க்கப்பட்டால் தான் அதற்குரிய தீர்வை எட்டமுடியும் என்பது என் கருத்து. தாலி என்கிற கலாச்சாரம் மற்றும் பண்பாடு என்கிற வேலிகள், தடைகளாக உருவெடுக்காமல் பெண்களும் சுதந்திரமாய் தங்கள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம், பெண்களுக்கு கல்வி, சுயமாய் முடிவெடுக்கும் திறன் மற்றும் தைரியம் என்பன வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அதேவேளை, பெண்ணுரிமைகள் அரசியல் ரீதியில் வென்றெடுக்கப்பட வேண்டுமானால் அதற்குரிய பலம்வாய்ந்த அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். வெறும் தேர்தல் அரசியல் ஜனநாயக ஒற்றை வாக்கு என்கிற ஒன்று மட்டும் பெண்ணுரிமையை அரசியல் ரீதியாகப் பெற்றுக் கொடுக்காது. பலம் வாய்ந்த அமைப்புகளாயும், அதனோடு தங்களை இணைத்துக்கொள்வதன் மூலமே பெண்கள் தங்கள் உரிமைகளை உறுதிப்படுத்தவும், பாதுகாக்கவும் முடியும்.
____________________________________________________________
– ரதி
____________________________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- இன்ட்லியில் வினவை தொடர
- கூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க
தொடர்புடைய பதிவுகள்:
- கணவனுக்கு எழுத முடியாத கடிதம்…..
- தாய்லாந்தின் புன்னகை அரசிகள்! – சாந்தி
- ஜான் தெரோய்ன்: பெண்களையும் அரசியல் பேச விடுங்கள்!-தமிழச்சி
- டிவி சீரியல் கொடுமைகளில் பெண்கள் – தீபா
- அறிவியல் உலகில் பெண்கள் – அன்னா
உழைக்கும் மகளிர் தின சிறப்பு பதிவுகள் 2010
- பெண் ஏன் இப்படியானாள்? – தமிழச்சி
- நாப்கின் – சங்கரி.
- அவர்கள் வேறு பெண்கள் – செல்வநாயகி.
- என் தோழி என்ன தவறு செய்தாள்? – சந்தனமுல்லை
- பெண்: என் வாழ்க்கைப் புரிதலிலிருந்து… – உமா ருத்ரன்.
- அவலத்தினாலான பெண்வாழ்வு மீள்வது எப்போது? – தீபா
- பெண் புன்னகையின் பின்னே….. – ரதி
- வரலாற்றைப் படித்து வர்க்கமாய் எழு தோழி!
- 2010-ல் இசுலாமியப் பெண்கள்: மதமும் வாழ்க்கையும் !!
- பெண் எப்போது பெண்ணாக இருந்தாள்? – மு.வி.நந்தினி
- உதைபடும் பெண்வாழ்வு – முத்துலட்சுமி.
- y choromosome* உடன் ஒட்டி வரும் சலுகைகள் – அன்னா
- என்று மடியும் இந்த அடிமையின் மோகம் ?
கனடாவில் பெண் வாழ்க்கை – ரதி -…
தண்டனை நிச்சயம், என்று தெரிந்தாலும், தன் மனைவி தனக்கு இழக்கைப்படும் கொடுமையை வெளியே சொல்லமாட்டாள் என்கிற பெண்ணின் மடமைத்தனத்தை ஆண் தனக்கு சாதகமாக்கிக் கொள்கிறான்….
தாலி என்கிற கலாச்சாரம் மற்றும் பண்பாடு என்கிற வேலிகள், தடைகளாக உருவெடுக்காமல் பெண்களும் சுதந்திரமாய் தங்கள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம், பெண்களுக்கு கல்வி, சுயமாய் முடிவெடுக்கும் திறன் மற்றும் தைரியம் என்பன வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.
நிச்சயமாய் ரதி.வாழ்த்துகள்
தோழர்களே ரதியை இப்படி அடிக்கடி எழுத வைத்தால் கொஞ்சமாவது தேறும்.
கட்டுரையின் நோக்கம் கனடாவில் இருந்து பார்க்கும் பார்வையால் என்னால் இங்கு பெண்கள் குறித்து காட்டப்படும் சித்திரத்தை விமர்சிக்க முடியவில்லை.
ரதி சில இடங்களில் வார்த்தைகள் தரும் லாவகம் ஆச்சரியப்படுத்தியது.
என்னுடைய பார்வையில் ஆண்களை விட ஒரு பெண் பாதிக்கப்படும் போது உடனடியாக கிடைக்கும் பாதிப்பும், தலைமுறைகள் கடந்த பாதிப்பும் நம் கண்களுக்கு எளிதாக தெரிகின்றது என்பதே உண்மை.
பெண்கள் சுதந்திரம் என்பதை விட சுதந்திரம் கிடைத்த பெண்கள் செய்து கொண்டிருக்கும் அத்தனை செயல்பாடுகளை சற்று விரிவாக பேசியிருக்கலாம்.
எந்த காலத்திலும் பெண்களுக்கு பெண்கள் தான் முதல் எதிரிகள்.இதற்காக வெளியே இருந்து ஆட்கள் வரத் தேவையில்லை.
“எந்த காலத்திலும் பெண்களுக்கு பெண்கள் தான் முதல் எதிரிகள்.இதற்காக வெளியே இருந்து ஆட்கள் வரத் தேவையில்லை”.
நண்பர் ஜோதிஜி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் சொல்லியிருப்பது சமூகத்தைப் பரிசீலிக்காமல் பொத்தாம் பொதுவில் சொல்லப்படும் ஒரு தவறான கருத்து. ஆண்களாய் இருந்தாலும் பெண்களாய் இருந்தாலும் அவர்கள் ஏன் அவ்வாறு இருக்கிறார்கள்? அதற்கு காரணம் என்ன? என்கிற முறையில் சற்றே விரிவாக பிரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
”திருமண பந்தத்தில் தாலி என்கிற சின்னம் மட்டுமே பெண்ணுக்குரிய எந்தவொரு சமூக, பொருளாதார பாதுகாப்பையும், உத்தரவாதத்தையும் வழங்கி விடுவதில்லை. இரண்டு மனங்களுக்கு இடையே உண்டாகும் வேறுபாடுகளை, இடைவெளியை தாலி என்கிற சின்னம் களைந்துவிடுவதுமில்லை. இங்கே திருமணத்தில் தாலி தேவையா இல்லையா என்பதல்ல கேள்வி. தாலி என்கிற சின்னம் இரண்டு மனங்களை இணைக்கிறதா அல்லது மனிதர்களை இணைக்கிறதா என்பதே கேள்வி.”
சரியான கருத்துதான். ஆனால் இரண்டு மனங்கள் இணைகின்றனவா? ஏன் இணைவதில்லை? இணையாமல் இருப்பதற்கு இந்த இருவரும்தான் காரணமா? அல்லது இதற்கும் அப்பால் ஏதேனும் காரணங்கள் இருக்கின்றனவா? எங்கு நோக்கினும் இந்த நிலை இருக்கின்றதே. கிட்டத்தட்ட எல்லோரும் இப்படித்தானே இருக்கின்றார்கள். என்ன செய்ய?
மனப்பதிவுகளாய் இருக்கும் தவறான கருத்துக்கள் நடைமுறையில் வன்முறையாக மாறுகிறது.
இருப்படி இருப்பதானாலேயே அனைவரையும் கெட்டவர்கள் என்று முடிவு செய்யலாமா? அனைவரையும் கெட்டவர்கள் என்று முடிவு செய்துவிட்டால் யார் யாரை எதிர்த்துப் போராடுவது? முதலில் அறியாமையின் வெளிப்பாடாகவே இதைப் பார்க்க வேண்டும். அறியாமையிலிருந்து விடுவிப்பதன் மூலமே தப்பெண்ணங்களிலிருந்து மக்களை விடுவிக்க முடியும்.
வன்முறையை கையில் எடுக்காதவரை அவர்கள் கெட்டவர்கள் இல்லை. இங்கே வன்முறை என்பதில் உளவியல் வன்முறையும் அடக்கம். ஆனால் இன்றைய சமூகத்தில் வன்முறையை கையிலெடுப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை இனியும் வளரவிட்டால் எதிர்த்தப் போராடுவதற்கு ஆட்கள் இருக்கமாட்டார்கள்.
” பெண்ணுரிமைகள் அரசியல் ரீதியில் வென்றெடுக்கப்பட வேண்டுமானால் அதற்குரிய பலம்வாய்ந்த அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். வெறும் தேர்தல் அரசியல் ஜனநாயக ஒற்றை வாக்கு என்கிற ஒன்று மட்டும் பெண்ணுரிமையை அரசியல் ரீதியாகப் பெற்றுக் கொடுக்காது. பலம் வாய்ந்த அமைப்புகளாயும், அதனோடு தங்களை இணைத்துக்கொள்வதன் மூலமே பெண்கள் தங்கள் உரிமைகளை உறுதிப்படுத்தவும், பாதுகாக்கவும் முடியும்”.
ஆம். நடைமுறை போராட்டங்களினூடாகத்தான் இப்பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முடிகிறது. வெறும் விழிப்புணர்வு பிரச்சாரங்களால் எதுவும் மாறுவதில்லை. இந்த சமூக கட்டமைப்பிலிருந்தே தப்பெண்ணங்கள் தோன்றுவதால் சமூகத்தை மாற்றியமைக்கும் போராட்டத்தினூடேதான் இவற்றை ஒழித்துக்கட்ட முடியும். அத்தகைய சமூக மாற்றத்திற்கு பெண்கள் மட்டமல்ல அனைவருமே ஒன்றினைந்து போராட வேண்டும்.
மகளிர் விடுதலை என்பது சமூக விடுதலையோடு இணைந்திருப்பது. பெண்களை மட்டும் தனியே பிரித்து பெண் விடுதலை பற்றி பேசுவது புதிய முறையில் பெண்களை அடிமைப்படுத்தவே உதவும்.
தோழர் ரதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
மிகவும் அருமையான, உண்மைகள் நிறைந்த பதிவு .. தாயக தமிழ்நாடு – இலங்கையை விடவும் கனடாவில் பெண்களுக்கு சட்டப் பாதுக்காப்பு அதிகம் என்றாலும், சமூக பாதுகாப்போ, சமூக சுதந்திரமோ இங்குள்ள தமிழ் பெண்களுக்கு குறைவு தான். ஒரு பெண்ணின் கல்வி, வேலை, கணவன் என அனைத்திலும் மணத்துக்கு முன் பெற்றோரின் தீர்மானத்தில் இயங்குபவை, திருமணத்துக்கு பின் கணவனின் தீர்மானத்தில் இயங்குகிறது. இங்கு கணவனுக்கு எதிராக பெண்களை முடிவு எடுக்கச் சொல்லவில்லை, ஆனால் பெண்களின் தீர்மானங்களையும் சரிசமமாக குடும்பங்களில் எடுத்துக் கொள்ள வேண்டும். பெண்ணானவள் வேலியைத் தாண்டுவாள் என்ற குற்ற உணார்ச்சியிலேயே ஆண்கள் இப்படி செய்வது மகா காட்டு மிராண்டித் தனமாகும்… பெண் விடுதலை என்பது பெண்களுக்கு 33 சதவீதம் கொடுத்து ஒதுக்கவதால் வர ப்போவதில்லை அனைத்து DECISION MAKINGS-யிலும் பெண்களுக்கு சம உரிமை இருத்தல் வேண்டும்.
தண்ணி அடிப்பதும், ஆணை போல சுற்றுவதும் பெண் விடுதலை இல்லை.. அனைத்து DECISION MAKINGS-யிலும் பெண்களுக்கு சம உரிமை இருத்தல் வேண்டும்.
அது தான் முழு பெண் உரிமை என்பது எனது கருத்து …
thaali mattume manathai inaippathu enbathu thavaraanathu…athu thannudan mattume paaliyal virunthu ena pennukku idum veli enbathaale…pala manangkal murikinrana…
மிக நன்றாக எழுதியுள்ளீர்கள் ரதி.
“ஈழம், இந்தியா, பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் எல்லோருமே கனடாவில் பிறந்து வளர்ந்த அல்லது இங்கே நீண்டகாலமாக குடியேறி வந்து வாழ்ந்த பெண்களை திருமணம் செய்வது கிடையாது. பல ஆண்களும், சில பெண்களும் தங்கள் சொந்தநாட்டுக்குச் சென்று திருமணம் செய்து, பின்னர் கனேடிய குடிவரவு சட்டதிட்டங்களுக்கமைய தங்கள் துணையை இங்கே அழைத்துக்கொள்கிறார்கள்.
வாழ்க்கையின் ஆரம்ப நிலைகளில் எந்த குறை, நிறைகளும் கண்ணுக்கும், புத்திக்கும் பெரும்பாலும் எட்டுவதில்லை. மணிரத்னம் படத்தில் வரும், “புது வெள்ளைமழை பொழிகிறது…” என்கிற வகையில் வாழ்க்கை இனிக்கும். குறிப்பாக திருமணத்துக்குப் பின் தான் உடலுறவு என்கிற ஒன்றையே உய்த்தும், துய்த்தும் அறியும் பெண்ணுக்கு அந்தக் கணங்கள் போலவே வாழ்க்கையின் அடுத்தடுத்த கட்டங்களும் இருக்கும், இருக்கவேண்டும் என்கிற விருப்பமும், ஆவலும் இருக்கும்.”
அண்மையில் வேறொரு பதிவில் நான் இட்ட பின்னுட்டம் இப் பதிவிற்கும் பொருந்துமாதலால் இங்கும் இடுகின்றேன். அநேகமான இவ்வாறு வெளிநாடு வரும் பெண்களுக்கு எந்தவித ஆதரவுக் குழுவும் இல்லை.
மனப் பொருத்தத்தைத் தவிர மிச்ச எல்லாப்பொருத்தமும் பார்த்துத் தான் அநேகமான் இத் திருமணங்காள் நிச்சயிக்கப்படுகின்றன. நிச்சயமானதும் கூட வெளிப்படையாகக் கதைத்து, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள சந்தர்ப்பம் அநேகமாக இல்லை.
ஒரு சின்ன உதாரணம்.
அண்மையில் இங்கு வசிக்கும் ஒரு ஆணுக்கு இலங்கையிலேயே பெற்றோர் பெண் பார்த்து திருமணம் அண்மையில் முடிந்து பெண்ணும் இங்கு வந்தாயிற்று. வந்த சிறு காலங்களில் ஒரு நாள் திடீரென்று பயங்கர நெஞ்சு வலி. உடம்பில் ஒரு பிரச்சினையும் இல்லை, ஒன்றும் serious ஆக இருக்காது, panadol போட்டு, கொஞ்சநேரம் ஒய்வெடுத்துப் பாருங்கள் என்று GP உட்பட எல்லோரும் சொல்லியாயிற்று. ஒன்றும் பலனில்லை. தனக்கு மூச்சே எடுக்க இயலவில்லை, நிச்சயம் சாகத்தான் போறேன் என, paramedics கூட வந்து GP சொன்னதையே சொன்னார்கள். It was purely psychological. There was nothing wrong with her physically.
நான் முதலில் இது புதிதாக வெளிநாட்டிற்குத் தனது சொந்தம், நட்பு, தெரிந்தவை எல்லாவற்றையும் விட்டு விட்டு வந்ததாலும் மேலும் புதுச்சூழல், புது உறவு, புது எல்லாமே என்பதால் தான் என நினைத்தேன். ஆனால் நடந்ததை மிக அண்மையில் வவுனியாவிலிருந்து வந்திருந்த ஒரு மருத்துவரிடம் கதைத்துக்கொண்டிருக்கையில் அவர் சொன்னது, ஊரில் மேற்கூறிய symptoms உடன் திருமணமான புதிதில் பல பெண்கள் ஆஸ்பத்திரிக்கு வருபவர்களாம். அவர்களில் அநேகமானவர்களுக்கு அது மனப்பிரம்மையாகவே இருக்கும் என்றார். எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. நம்பவே முடியவில்லை. இதுவரைக்கும் யாரும் இதைப் பற்றிச் சொன்னதேயில்லை. எமது சமூகத்தில் பிரச்சனைகள் எல்லாவற்றையும் பூசி மெழுகி வெளியில் சந்தோசமான மேன்மையான சமுகமே எனக் காட்டிக் கொள்வதன் முக்கியத்துவம் சிறு வயதிலிருந்தே போதிக்கப்படுகிறது. பிரச்சினை, சந்தேகங்கள் எதுவுமே வெளியே யாருடனும் கதைக்க அநேகமாக முடியாது. அநேகமாக அதன் விளைவே என்றார். இவ்வளவு பெண்களைப் பாதிக்கின்றதெனில் ஏன் எவரும் இதைப் பற்றி இதுவரை கதைக்கவேயில்லை? It’s happening to significant proportion of young women in our culture, but nobody ever even discusses it.
Domestic violence ஜப்பற்றி மிகவும் நன்றாகச் சொல்லியுள்ளீர்கள்.
நியுசிலாந்தில் இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு புகலிடம் கொடுக்கும் ஓரு நிறுவனத்தைப் பற்றியும் திருமணம் எனும் பேரில் நடக்கும் வன்முறைகள் பற்றியும் அண்மையில் எழுதியுருந்தேன். ஆனால் அநேகமாக இவ்வாறு புகலிடம் தேடுபவர்களை விட இருந்து கொடுமைகளை அனுபவிப்பவர்களே அதிகம். ஆனால் அநேகமாக இவ்வாறு புகலிடம் தேடுபவர்களை விட இருந்து கொடுமைகளை அனுபவிப்பவர்களே அதிகம். domestic violece ஜப் பற்றிய விழிப்புணர்வு இங்கு பல மருத்துவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கும் தான். பெண்கள் மருத்துவரைப் பார்க்க வரும் போது அவரது உடலில் அல்லது செய்கைகளால் மருத்துவர்களுக்கு எதாவது சந்தேகம் வரின் இயலுமானவரை அப்பெண்களோடு கதைத்து உண்மைகளை வெளிக்கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும். ஆனாலும் அப்பெண் இதை எங்கும் ஒப்புக் கொள்ளாவிடில் எதுவும் செய்ய முடியாது. நீங்கள் சொன்னது போல் மனைவி தனக்கு இழக்கைப்படும் கொடுமையை வெளியே சொல்லமாட்டாள் என்கிற பெண்ணின் மடமைத்தனத்தை ஆண் தனக்கு சாதகமாக்கிக் கொள்வது நிறையவே உண்டு.
அநேகமாக இவ்வாறு புலம் பெயர்ந்து வரும் பெண்களுக்கு ஒரு ஆதரவுக் குழுவும் இல்லை. அந்நாடுகளில் இருக்கும் தமிழசங்கங்கள் கூட ஒன்றும் செய்வதில்லை. செய்வதற்கு முன் அப்படி ஒரு பிரச்சனை இருக்கென்று ஒப்புக்கொள்ளவைப்பதே கடினம்.
அத்தோடு ஊரிலிருந்து ஒரு அனுபவமும் இல்லாமல் வரும் பெண்கள் எத்தனையோ பேர் இங்கு வந்து எதுவும் செய்யத்தெரியாமல் இருக்கிறார்கள். பலவருடங்காள் இங்கிருந்த அவர்களின் புதுக் கணவர்கள் கூட அவர்களை ஒரளவுக்காவது அவர்களின் காலில் நிக்கச்செய்ய உதவுவதில்லை. கொஞ்சம் கொஞ்சம் ஆங்கிலம் கற்க, சிறு சிறு அன்றாட வெளி வேலைகளைத் தனியச் செய்யப் பழகிவதேயில்லை. பின் எதாவது பிரச்சனை வரின் survive பண்ண சரியான கடினமாக இருக்கும். சனத்தை பற்றிக் கேட்கவே வேண்டாம். வந்து இரண்டு மாதம் கூட ஆகியிருக்காது. “எதாவது விசேடம் இருக்குதோ”? என்று கேட்கத்தொடங்கி விடுவினம். அப்பிடியே கன்னத்தில் இரண்டு போடலாம் போல் இருக்கும். அடிப்படையான surving skills ஏ இல்லாமல் பிள்ளையைப் பெற்று என்ன செய்வதென்று ஒருவரும் யோசிப்பதே இல்லை.
கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் பெரும்பாலும் பெண்களுக்குரிய தற்காலிக வதிவிடங்களில் (Shelters) தங்கவைக்கப்படுகிறார்கள். எதுவுமே இல்லாமல் பூஜ்யத்திலிருந்து வாழ்க்கையை தொடங்குகிறார்கள். இந்த நாட்டில் இவ்வாறு பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவ, அவர்களின் வாழ்க்கையை மீளவும் அவர்களின் சொந்த முயற்சியிலேயே கட்டியெழுப்ப நிறையவே அரசின் திட்டங்கள் இருக்கின்றன.//
இப்படி மட்டும் இந்தியாவில் இருந்தால்.?..
எத்தனை பெண்ணுக்கு விடுதலை கிடைத்த்திருக்கும் அடிமை வாழ்விலிருந்து
இக் கட்டுரையின் சில இடங்களுடன் நான் முரண்பட்டுக் கொள்கின்றேன். அத்துடன் இங்கு இடப்பட்டிருக்கும் சில பதில் கருத்துக்களில் சில தவறான தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளதால் அவை தொடர்பான எனது பார்வையினையும் தருகின்றேன்.
//“கனடாவே என்றாலும் பெண்கள் கணவன் என்கிற ஆண் மூலம் எப்படி கொடுமைப்படுத்தபடுகிறார்கள் என்பது பற்றி நிறையவே சொல்லலாம். குடும்ப வன்முறை என்பதால் ஆண்கள் பாதிக்கப்படுவதில்லையா என்று சிலர் விதண்டாவாதம் செய்யலாம். எத்தனையோ அறிக்கைகள்இ ஆய்வுகள்இ உண்மைக்கதைகளை கேட்டபின் தெரிந்துகொண்டேன்; குடும்ப வன்முறையில் பெண்களே மிக அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.” //
இதில் குடும்ப வன்முறைகளின் ஆண்கள் பாதிக்கப்படுவதில்லையா என விதண்டாவாதம் செய்வதாகக் சுறுவதானது மிகவும் தவறான வாதமாகும். கனடாவில் பல ஆண்கள் குடும்ப வன்முறையில் பாதிக்கப்பட்டு தங்கும் விடுதிகளிலும் வீதிகளிலும் தங்குவது மிகவும் சாதாரணமான நிகழ்வாக இருக்கின்றது. குடும்ப வன்முறையானது ஆண் பெண் என இல்லாது பொதுவாகப் பார்க்கப்பட வேண்டும். குடும்ப வன்முறையினால் பாதிக்கப்படுவது ஆணாயிருந்தாலும் பெண்ணாயிருந்தாலும் அது கண்டிக்கத்தக்கது. இது தொடர்பாக சமூகத்தில் விளக்கமளித்து அது களைய முற்படவேண்டுமே தவிர ஒருவர் பாதிக்கப்படுவது பெரிது மற்றவர் பாதிக்கப்படுவது சிறிது என வேறுபடுத்தக் கூடாது. அவ்வாறு வேறுபடுத்தி ஒரு பகுதியை ஒதுக்குவதானது இக் குடும்ப வன்முறைகள் மென்மேலும் வலுப்படவே காரணமாகும். இக் குடும்ப வன்முறைகளின் ஒரு வடிவம் தொடர்பாக என்னுடைய வலைத்தளத்தில் பதிந்திருந்தேன். அது தொடர்பான இணைப்பு இங்கே http://justopentalk.blogspot.com/2010/02/blog-post_24.html
//“கனேடிய சட்ட திட்டங்களுக்கு அமைய ஸ்பொன்சரில் ஒருவர் வாழ்க்கைத் துணையை அழைத்து வந்தால் குறைந்தது பத்து வருடங்களுக்கு அவரே தன வாழ்க்கைத் துணைக்குத் தேவையான எல்லா செலவுகளையும் பொறுப்பேற்க வேண்டும். இல்லையென்றால் அதன் விளைவுகள் பாரதூரமானதாக இருக்கும். இது போன்றஇ எங்கே தங்களை நாட்டுக்கு திருப்பி அனுப்பி விடுவார்களோ என்கிற பயம் ஒருபுறமும்இ தன் பிறந்த வீட்டை எப்படி சமாளிப்பது என்கிற கிலியிலுமே பல பெண்கள் தங்களுக்கு நடக்கும் கொடுமைகளை வெளியே சொல்வதில்லை.”//
இங்கு கட்டுரையாளர் கனடியக் குடிவரவுத் துறையின் நடவடிக்கைகள் தொடர்பாக எந்தவொரு விளக்கமும் இன்றித் தனது கருத்தினை முன்வைத்துள்ளார். கனடியக் குடிவரவுச் சட்டத்தின் பிரகாரம் தனது வாழ்க்கைத் துணையினை ஒருவர் கனடாவிற்கு அழைத்து வருவதானால் அவ்வாழ்க்கைத் துணைக்கு மூன்று வருடங்களிற்கு நிதி தொடர்பாக பொறுப்புள்ளவராகிறார். இங்கு பத்துவருடங்கள் என்பது குழந்தைகளிற்கானதாகும். அதுவும் அவர்கள் 25 வயதினை அடையும் வரையாகும். http://www.cic.gc.ca/english/immigrate/sponsor/spouse-apply-who.asp#sponsoring
//“கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் பெரும்பாலும் பெண்களுக்குரிய தற்காலிக வதிவிடங்களில் தங்க வைக்கப்படுகிறார்கள்.”//
வீட்டைவிட்டு வெளியேறும் பெண் பாதுகாப்புக் காரணங்களிற்காக தற்காலிக வதிவிடத்தில் தங்கவைக்கப்பட்டாலும் அவர் தங்குவதற்கு வேறு இடங்கள் இருக்கும் போது அல்லது வேறு குடியிருப்புக்கள் உதவி வழங்கும் நிறுவனங்களின் நிதிநிலவரத்திற்குள் வரும் செலவாக இருப்பின் அங்கு அப்பெண் தங்க அனுமதிக்கப்படுவாள்.
//“அநேகமான இவ்வாறு வெளிநாடு வரும் பெண்களுக்கு எந்தவித ஆதரவுக் குழுவும் இல்லை.”//
இவ்வாறான ஆதரவுக் குழுக்கள் சிறீலங்காவில் இருக்கிறதா இல்லை என்பதோ அல்லது அவ்வாறான குழுக்களிற்கு எமது மக்கள் செல்வார்களா இல்லை என்பது தொடர்பாக எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆயினும் இவ்வாறான குழுக்கள் பல கனடாவில் இருக்கின்றன. இவை கனடிய அரசின் நிதியுதியையும் பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக இவ்வாறு புலம்பெயர்ந்து வரும் பெண்களாக இருக்கட்டும் ஆண்களாக இருக்கட்டும் அவர்கள் முன்வந்தாலே அன்றி இவ்வாறான சிக்கல்களைத் தீர்க்கமுடியாது. சுpல இடங்களில் வீட்டுக் கதவினைத் தட்டி அழைத்துப் போகப் பல சமூக சேவையாளர்கள் இருப்பினும் தாம் தங்கள் வீடுகளிற்குள் அடைபட்டு இருப்பதையே பலரும் விரும்புகின்றனர்.
ரொறன்ரோ நகரில் இருக்கும் குடும்ப வன்முறைகள் மற்றும் பெண்களிற்கு இழைக்கப்படும் இன்னல்களிற்கான தீர்வைத் தமிழில் உரையாடிப் பெறுவதற்கே பல தமிழ் ஆண் மற்றும் பெண் சமூக சேவையாளர்கள் உள்ளார்கள். இவர்கள் பற்றிய விபரம் பெறுவதற்கு எனது மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ளலாம். just.open.talk@gmail.com
மிக பயனுள்ள மேலதிக தகவல்கள்
நல்ல கட்டுரை.
தாலி என்பது வேலி என்பதை விட, a sign of marriage என்று எடுத்துக் கொள்ளலாம். பார்த்துப் பார்த்தே காதல் வளர்க்கும் விடலைகள் நிறைந்த நாட்டில் ஒரு பாதுகாப்புக்காகவேனும் தேவையாக இருக்கிறது. தாலியாக இல்லாமல் மோதிரம் போல இருந்தாலும் பரவாயில்லை. பதிலுக்கு ஆணும் திருமண மோதிரம் அணிய வேண்டும். திருமணமாகியும் ஆகவில்லை என்று பொய் சொல்லி இன்னொரு பெண்ணைக் காதலித்து ஏமாற்றும் ஆண்களும் இருக்கிறார்கள்.
ஏமாற்றத் துணிந்தவனை எந்த அடையாளமும் தடுத்து நிறுத்தி விடுவதில்லை. மனைவியை கணவன் கொடுமைப்படுத்துவதற்கு உரிமம் வழங்கும் ‘டோக்கன்’ என்பதைத்தவிர தாலியால் பயன் ஒன்றும் இல்லை. தாலியோ மோதிரமோ எதுவானாலும் அது தேவையற்ற சுமை.
சமீபத்தில் தான் இப்படி ஒரு கதையைக் கேட்க நேர்ந்தது. எனக்குத் தெரிந்த ஒருவர், இப்படி புலம் பெயர்ந்து வந்த நாட்டில் அவரது நண்பிக்கு கணவனால் ஏற்பட்ட இன்னல்களையும், அதிலிருந்து வெளியே வந்து, கிடைத்த வேலை செய்து கொண்டே படித்து, இன்று நல்லதொரு பணியில் இருப்பதையும், சொன்னார். சொந்த நாட்டில் இப்படி ஒரு நிலை ஏற்படுவதை விட புலம் பெயர்ந்த நாட்டில் ஏற்படுவது இன்னும் சிரமமானது.
“இயங்கியலோடும் ஒவ்வாத உவமைகளை சொல்லியே பெண் மனம் மயக்கப்பட்டது. வார்த்தைகளின் மகுடியில் மயங்கிப்போன பெண்மனம் இயல்பாய் அடிமை விலங்கை தனக்குத்தானே பூட்டவும் கற்றுக்கொண்டது”
முற்றிலும் உண்மை! இந்த விஷயத்தில் பெரிதளவு படிக்காத பெண்களுக்கும் படித்த பெண்களுக்கும் வேற்றுமை இருப்பதில்லை…என்பது என் கருத்து. பள்ளிகளில், கல்லூரிகளில் படிக்கும் காலத்தில், “திருமணம்..வாழ்க்கையின் ஒரு பாகம் தானே, அதற்கு பிறகு மேலும் படிக்க இருக்கிறேன்”, “மணம்முடித்தவுடன் குழந்தை பெட்ட்றேடுக்க ஒன்றும் அவசியமில்லை; இரண்டு மூன்று வருடங்கள் விருப்பபடி வேலைக்கு செல்வேன் அல்லது படிப்பேன்”, என கூறிய தோழிகள் பலர். அதே தோழிகள் இப்பொழுது, “படிப்பா…அதெல்லாம் நினைச்சே பாக்கமுடியாதுடி”; “இனிமே எல்லாம் என் பையன் தான்; வேலைய கூட விட்டுடலாமானு நினைக்கறேன்” என அலுத்துக்கொள்வது வருத்தத்தை அளிக்கிறது.
“திருமணம் முடிந்த கையோடு ஒரு குழந்தையை பெற்றெடுக்கவேண்டும்; பின்னர் அதனை வளர்ப்பதில் அவள் கவனம் இருக்க வேண்டும்”, போன்ற விதிமுறைகளை ஒரு பெண் மனதில் சிறுவயதிலிருந்தே விதைப்பதில் நம் சமூகம் முழுவெற்றி அடைந்துள்ளது!
sorry to say that most of the people dont know the purpose of the THAALI.its very sad that they thought its against penniyam.no guys.THAALI is a kind of science , purly undersandable by make deep dimension within you.
love and grace
ganesh
THAALI is a kind of science//
அப்ப ஆணுக்கும் உபயோகிக்க சொல்லலாமே..
கொஞ்சம் விளக்கினால்தானே புரிந்து கொள்ள முடியும்.
@Ganesh: I never heard any science behind the ‘Thali’. If you could elaborate it people like me might be able to understand that science. I see ‘Thali’ as a sign of authority. But sadly most of the females, who I spoke to, love to wear ‘Thali’. Even though they couldn’t provide any reason they just want to have ‘Thali’ on their marriage and want to wear it forever! I don’t see any males who is ready accept a sign of authority from a female on the day of their marriage.
ரதி…அட நீங்கள் இங்கா இருக்கிறீர்கள் !
பெண்ணாக இருந்து அதே உணர்வோடு அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.நான் கேள்விப்பட்டவரை கனடாவில் நிறையவே இருகிறது நீங்கள் சொல்லியிருக்கும் சிக்கல்கள்.கணவனை விட்டு விலகியிருக்கும் ஒரு பெண்ணைச் சமூகமும் விட்டுவைப்பதில்லையே.கணவனானவன் வெளியில் சொல்லிக்கொண்டு திரியும்
பொய்யான வார்தைகளைத்தானே நம்புகிறார்கள் !
கனடாவில் இன்னுமொரு சிக்கல் இருப்பதாய் அறிந்தேன் .. இங்குள்ள தமிழர்கள் அரசின் பணம் பெறுவதற்காக சிலர் கணவரை விட்டு பிரிந்து வாழ்வதைப் போல வாழ்கிறார்கள் …. அல்லது கணவரை விட்டு வேண்டும் என்றே பிரிந்து ஒற்றைத் தாய்மார் என வாழ்கிறார்கள் .. உண்மையாக பாதிக்கப்படும் பெண்கள் பலர் குடும்ப கௌரவம், பிள்ளைகளிம் எதிர்காலம் என கணவராலும், குடும்பத்தாலும் கொடுமைப்படுத்தப்பட்டு வாழ்பவர்களும் இருக்கிறார்கள். இன்னது இன்னது எனப் பிரித்து பார்க்க முடியாமல் சில கேஸ்கள் இருக்கின்றன….
நீங்கள் கூறிய பதிவைப் படித்தேன். சிறுவர்களின் பாலியல் வன்முறையும் நிச்சயமாக குறிப்பிடத்தக்களவு எமது சமூகத்தில் நடக்கிறது. நாம் பூசி மெழுகும் விடயங்களில் அதுவும் ஒன்று. சிறுவர்களில் பால் வேறூபாடற்று இக்கொடூரம் நடக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
“குடும்ப வன்முறையினால் பாதிக்கப்படுவது ஆணாயிருந்தாலும் பெண்ணாயிருந்தாலும் அது கண்டிக்கத்தக்கது.”
நிச்சயமாக.ஆனால் ரதி சொன்னதுபோல் வயது வந்தோரில் ஆண்களை விட எத்தனையோ மடங்கு கூடப் பெண்களுக்கே நடக்கிறது. ஆனால் யாருக்குச் செய்யப்பட்டாலும் குற்றம் ஒன்றே.
நாலு நாள் அதே பஸ் ஸ்டாண்ட்ல தொடர்ந்து பார்த்திருந்து, ஒரு தடவை அவள் பதிலுக்குத் திரும்பிப் பார்த்தால், அவளும் தன்னை கவனிக்கிறாள் என்ற நினைப்பு உள்ள ஆண்கள் இங்கே அதிகம். பெண் மோகத்தில் அலைபவர்களைச் சொல்லவில்லை. வயதுப் பையன் வயதுப் பெண்ணைப் பார்த்து ஈர்க்கப் படுவது போல. தேவையில்லாமல் அவனுக்கும் குழப்பம்.
ஆணும் அணிந்தால், அவனுடன் பழகும் பெண் அறிந்து கொள்ளலாம், அவன் திருமணமானவன் என்று. தடுப்பு அவனுக்கு அல்ல, அந்தப் பெண்ணுக்கு – அவன் திருமணமாகாதவன் என்று நம்பி ஏமாறாமல் இருக்க.
கட்டாயப் படுத்தத் தேவையில்லை. ஆனால் இருவரும் அணிந்தால் நல்லது என்றே தோன்றுகிறது.
தாலியை உதறிவிட்டு திருமணம் ஆணும் பெண்ணும் திருமண மோதிரம் அணிவது உசிதம். பழந்தமிழர் பழக்கங்களில் தாலி இருந்தது இல்லை.. என்பதால் தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை ..
ஆக்கபூர்வமான விமர்சனங்களுக்கும், கனடாவைச் சேர்ந்தவர்களின் மேலதிக தகவல்கள், கருத்துகளுக்கும் நன்றி.
jmms, தமிழர்களின் கலாச்சார, சமூக, பண்பாட்டு அமைப்புக்கு இங்கே இருப்பது போல் ஓர் பெண்களுக்கு பாதுகாப்பான, ஆதரவான திட்டங்கள் எங்கள் தாய்நிலத்தில் கொண்டுவரப்பட வேண்டும் என்பது என் கனவு. இங்கே இது போன்ற பிரச்சனைகள் முதலில் உளவியல் ரீதியில் தான் அணுகப்படுகிறது. பிறகு தான் மிச்சமெல்லாம். ஆனால், நாங்கள் அதற்கு எதிர்மறையான ஒழுங்கில் தான் அணுகுகிறோம். இந்த ஒழுங்கு மாறினாலே அது பாதி வெற்றிதான்.