உழைக்கும் மகளிர்தினச் சிறப்புப் பதிவு – 11
இசுலாமியப் பெண்களைப் பற்றி எங்கு விவாதம் நடந்தாலும் “புர்கா”வும் தலாக் என்பதும் முதன்மையான தலைப்பாக அமைந்துவிடுகிறது. மற்ற பிரச்சினைகளெல்லாம் பிற மத பெண்களுக்கும் பொதுவானதாக அமைந்து, இவ்விரண்டிலும் மட்டும் இசுலாமியப் பெண்கள் தனித்து எதிர் கொள்வதால் இவை பிரதானமாக விவாதிக்கப்படுகிறது, அது தவிர்க்க முடியாததாகவும் உள்ளது. உயர் கல்வியும் வேலைக்குச் செல்வதும் பிரச்சனையான ஒன்றாக இருந்தாலும் இப்பொழுது அது வெகுவாக உடைக்கப்பட்டுவிட்டது.
புர்கா, தலாக் குறித்த பிரச்சனைகளில் 1400 ஆண்டுகளுக்கு முன் உள்ள நிலையே தொடர்கிறதா என்ற கேள்வியை எழுப்பி சமூகத்தை பார்ப்போமானால் இல்லை என்பதை ஆணித்தரமாக சொல்லலாம். காலத்திற்கு ஏற்ப மாறிவரும் இவர்களிடம் இது குறித்தான சரியத் சட்டங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி இன்னும் நாம் அதில் செய்யவேண்டியதைப் பற்றி பேசினால் உடனே அவர்களிடம் வரட்டுத்தனமான விவாதம் தலை தூக்கிவிடுகிறது. மத நம்பிக்கையில் மட்டும், அதாவது மதம் சார்ந்த இயக்கங்களில் அணி திரட்டப்படாதவர்களிடம் இது குறித்தான விவாதங்களை முன் வைக்கும் போது காலத்திற்கேற்ற மாற்றங்களை வரவேற்கவே செய்கின்றனர். இதற்கும் கடவுள் நம்பிக்கைக்கும் தொடர்பில்லை என்பதையும் உணர்கின்றனர். ஆனாலும் அதனை ஒரு தீர்மானகரமாக நடைமுறைப்படுத்த ஏனோ பயப்படுகின்றனர். தமது சொந்தப் பிரச்சினைகளில் ஜமாத்துகளோடு இவர்கள் போராடினாலும் இமாம்கள் அல்லது அமைப்புகளின் முன்னோடிகள் “சரியத்” என்ற ஆயுதத்தைக் கொண்டு வெட்டி வீழ்த்தி விடுகின்றனர்.
அதனால் “தலாக்” பற்றிய சரியத் சட்டம், நடைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றம், தேவையான மாற்றம் என்ற வகையில் இக் கட்டுரையை எழுத முயற்சித்துள்ளேன். சற்று நீளமாக இருக்கலாம். தவிர்க்க முடியாதது என்பதை புரிந்து கொண்டு கருத்தாய்வு தாருங்கள்.
சரியத் சட்டம் என்பது இந்திய பீனல்கோடு போல வரிசையாக தெளிவாக எழுதி வைக்கப்பட்ட புத்தகம் அல்ல. குர்ஆன் வசனங்களிலும் நபிமொழிகளிலும் ஆங்காங்கே காணப்படுபவைகளைக் கொண்டு எடுத்தாளப்படுபவைகள். அவற்றில் நிறைய முரண்பாடுகள் உள்ளன. இன்று சுன்னத் ஜமாத்தினரும் தவ்ஹீத் ஜமாத்தினரும், முரண்பாடுகளை அவரவருக்குப் பிடித்த மாதிரி எடுத்துக் கொண்டு சண்டையிடுவதும், தமக்குத்தாமே அக்மார்க் முத்திரைக் குத்திக் கொள்வதும் போல அன்று முதல் இன்றுவரை தர்க்கமும் சண்டையும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கு அரபிமொழியின் வளமின்மையும் ஒரு காரணம்.
எடுத்துக்காட்டாக குர்ஆன் 2:228-ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள குருஉ எனும் சொல்லின் வினைச் சொல்லான அக்ரஅத் எனும் சொல்லுக்கு ஒரு பெண்ணின் மாதவிடாய்க் காலம் நெருங்கிவிட்டது (மாதவிடாய் ஆரம்பம்) என்ற பொருளும், ஒரு பெண் மாதவிடாயிலிருந்து தூய்மையடையும் காலம் நெருங்கிவிட்டது (மாதவிடாய் நின்றுவிட்டது) என்ற எதிரிடையான பொருளும் உண்டு. இதனை நான் கூறவில்லை. புகாரி அவர்களே பதிவுசெய்துள்ளார்கள். (பார்க்க பாகம்:6 பக்கம் 78) எக்காலத்திற்கும் பொருந்தும் அருள்மறை என்று கூறும் குர்ஆனின் சொல்லிலேயே குழப்பம் என்றால் என்ன சொல்லவது?
தலாக் என்றால் என்ன?
மணவிலக்கு என்று புத்தகங்களில் எழுதுகின்றனர். விவாகரத்து (திருமண முறிவு) என்று பொதுவானவர்கள் புரிந்து வைத்துள்ளனர். நடைமுறையும் இதனையே உணர்த்துகிறது. ஆனால் அதன் நேரடிப் பொருள் விடுவித்தல், அவிழ்த்தல், கைவிடுதல் ஆகியன. ஒரு அரபி இச்சொல்லினை எப்படி புரிந்து கொள்வார் என்பதிலிருந்து தலாக் என்பதன் மூலம் ifif, நடைமுறையில் பெண்ணின் உணர்வுக்கும் உரிமைக்கும் எவ்வளவு மதிப்பளித்திருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.
தலாக் என்பதுபோல் ஈலா, ழிஹார் என் இருவகை மணமுறிவுகளும் இருந்துள்ளன. ஈலா என்றால் நீ எனக்கு விலக்கப்பட்டவள் (ஹராம்) என சத்தியம் செய்வதால் ஏற்படும் மணமுறிவு. ழிஹார் என்றால் நீ என்க்கு தாயைப் போன்றவள் என்று கூறிவிடுவதால் ஏற்படும் மணமுறிவு. இன்று இது ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளப்பட்டு நடைமுறையில் இல்லை. அதனால் இதற்குள் செல்ல வேண்டாம் என் கருதுகிறேன்.
ஒருவர் தன் மனைவியை தலாக் செய்ய விரும்பினால் “அவிழ்த்து விடுகிறேன்” அதாங்க தலாக் என்று மூன்று முறை சொல்ல வேண்டும். இதனை ஏறக்குறைய ஒருமாத கால இடைவெளியில் மூன்று தவணையாகச் சொல்ல வேண்டும் என்றும் ஒரே தவணையில் சொல்லிவிடலாம் என்றும் அன்றுமுதல் இன்று வரை அறிஞர்கள் ஆய்வு செய்து கொண்டும் தர்க்கம் செய்துகொண்டும் இருக்கின்றனர். சாதாரண மக்கள் எப்படிச் சொன்னாலும் ஒன்றுதான் என்ற புரிதலிலும் நடைமுறையிலும் இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு எப்படிச் சொன்னாலும் பலன் ஒன்றுதான்.
ஒரு ஆண் மூன்று தவணைகளில் தலாக் சொல்லுகிறான் என்று வைத்துகொள்வோம். தலாக்கிற்கு காரணமான தன் கோபம் தனியவோ, அல்லது தன் மனைவி ஒழுங்கங் கெட்டவள் என்று கருதி தலாக் சொல்லியிருந்தால் அது உண்மையா பொய்யா என்று நிதானமாக புரிந்து கொள்ளவோ அவகாசம் கிடைக்கும். மூன்றாவது தலாக் சொல்வதற்கு முன் தன் மனைவியை சேர்த்துக் கொள்ளலாம். பெண்ணைப் பொறுத்தவரை தன் கணவன் மனம் மாறி தன் மீது இரக்கம் காட்டமாட்டானா என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. ஒருமுறை தலாக் என்று சொல்லிவிட்டாலே பெண்ணானவள் “இத்தா” இருக்கத் தொடங்கவேண்டும். (இத்தா பற்றி இங்கு படித்துக்கொள்ளுங்கள்) மூன்றுமுறை சொல்லாவிட்டாலும் ஒரு முறை இந்தச் சிந்தனைக் கணவனுக்கு தோன்றிவிட்டால் காலம் முழுவதும் இந்த நெருக்கடியிலிருந்து அவள் மீளவே முடியாது. அதாவது ஆணாதிக்க வடிவமே “கைவிடுதல்” என்ற சரியத் சட்டம். முத்தலாக்கையும் ஒரே தடவையில் சொன்னாலும் ஆணாதிக்கமே கோலோச்சும். அதுவே ஒரு பெண் தன் சுய வருமானத்தில் இருந்தால்…..
பாத்திமா . அரசுத் துறையில் ஒரு பொறியாளர். கணவர் ஒரு ஆசிரியர். கை நிறைய சம்பளம் வாங்கும் பாத்திமாவிற்கு மேலும் ஒரு அரிய வாய்ப்பு கிடைக்கிறது. வெளிநாட்டில் அரசுத் துறையில் பொறியாளர் வேலை. இலகரத்தில் ஊதியம். வீடு கார் மற்றும் குடும்பத்திற்கான விசா என்று அனைத்து வகையிலும் ஏராளமான சலுகை. ஆனால் பிரிந்து வாழ மனைவியை அனுமதிப்பதில் கணவனுக்கு அளவில்லாத தன்மான உணர்வு. மனைவியை தடுக்கிறார். சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பாத்திமாவிற்கு இந்த பொன்னான வாய்ப்பை இழக்க விரும்பவில்லை. முதலாளித்துவ உலகத்தில் வாழும் அவரால் அதை இழக்க முடியாதுதானே. அப்படி இழக்க பொதுவாக எவரும் விரும்பவும் மாட்டார்கள். பாத்திமா தனது விருப்பத்தில் மாற்றம் செய்துகொள்ள தயாரில்லை. தன் கணவனையும் வேலையை விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு அழைக்கிறார். பெண் உழைப்பில் தாம் வாழ்வதா என்ற உணர்வு அவருக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. தலாக் செய்து விடுவதாக மிரட்டுகிறார். பலனில்லை. குடும்பத்திலுள்ளவர்கள் சமாதானம் செய்ய இன்று அவர்கள் இருவரும் வெளிநாட்டில். இது நடந்து பதினைந்தாண்டுகளுக்கு மேலாகிறது. இப்பொழுது அவர்கள் அந்நாட்டில் ஒரு பெரிய நிறுவனத்தின் முதலாளிகள்.
பொதுவாக வருமானம் ஈட்டும் பெண்களுக்கு தும்மினாலும் தலாக் என்ற நெருக்கடி இல்லை. அந்த பயமுறுத்தலையும் பெண்கள் எளிதாக கைகொள்கின்றனர். அதுபோல ஆண்களிடமும் மணவாழ்க்கையின் காதல் உணர்வை புரிந்து கொள்ளும் மனமுதிர்ச்சியையும் இன்று நிறையவே காணமுடிகிறது. அதாவது வெளியில் போகக் கூடாது, ஒரு ஆணுடன் பேசிவிட்டாலே சந்தேகம் கொள்வது என்ற பண்புகளில் நிறையவே மாற்றம் உள்ளது.
தலாக் என்பதற்கான “நபிவழி” என்று பின்வருமாறு கூறுகின்றனர். 1. மாதவிடாய், பிரசவ இரத்தப்போக்கு ஆகியவற்றிலிருந்து நீங்கி மனைவி தூய்மையாக இருக்க வேண்டும். 2. மனைவியுடன் தலாக் சொன்னபிறகு உடலுறவுக் கொள்ளக்கூடாது. 3. இரு சாட்சிகள் முன்னிலையில் மணவிலக்கு அளிக்க வேண்டும்.
இரண்டாவது விதியில் எந்தப் பிரச்சனையும் இல்லை. தலாக் என்றாலே அதுதானே. முதலாவது விதிப்படி மாதவிடாய் காலத்தில் தலாக் சொல்லக்கூடாது. ஆனால் சொல்லக்கூடாது என்ற தலைப்பில் குர்ஆன் வசனம் 65: 1 ஐ ஆதாரமாகக் கூறும் புகாரி அவர்கள், அடுத்த தலைப்பிலேயே தலாக் செல்லும் என்றும் தலைப்பிட்டு, இரண்டிற்கும் சாட்சியாக காலிபா உமர் அவர்களின் மகன் அப்துல்லா செய்த ஒரே தலாக் நிகழ்ச்சியை (புகாரி 5251, 5252, 5253) ஆதாரமாக எழுதியுள்ளார். வேடிக்கையான முரண்பாடு. இவர்கள் ஏன் தங்களுக்குள் காலம் காலமாக அடித்துக் கொள்கிறார்கள் என்று புரிகிறதா? இதற்குப் பெயர் தெளிவான மார்க்கமாம்.
தலாக் பற்றி புகாரி அவர்கள் தொகுத்துள்ள எந்த நபிமொழியிலும் இரு சாட்சிகள் முன்னிலையில்தான் தலாக் சொல்ல வேண்டும் என்பதற்கான நபிமொழி ஒன்றும் இல்லை. தலாக் சொல்லிவிட்டு வந்து தான் தலாக் சொல்லிவிட்டதாக பிறரிடம் கூறியதான நபிமொழிகளே காணப்படுகிறது. முகம்மது நபியும் தனது ஒரு மனைவியை தலாக் செய்தபோது எந்த சாட்சியையும் முன்னிருத்தியும் தலாக் செய்யவில்லை. உமையா என்ற அப்பெண்ணிடம் தாம்பத்திய உறவுகொள்ள முற்பட்டபோது அப்பெண் குலப் பெருமைகூறி இணங்க மறுத்துவிடவே, முகம்மதுநபி “உன் குடும்பத்தாரிடம் சென்றுவிடு” என்று கூறிவிட்டு வெளியில் வந்து அபு உசைத் என்பவரிடம் இரு வெண்ணிற சணலால் நெய்யப்பட்ட ஆடைகளை உமையா அவர்களுக்கு கொடுத்து அவரது குடும்பத்தாரிடம் கொண்டு விட்டுவிடுங்கள் என்று கூறியதாக (புகாரி: 5254,5255) நபிமொழி உள்ளது. இந்நிகழ்சி முத்தலாக்கையும் ஒரேதடவையில் முகம்மதுநபியே கூறியதற்கு சாட்சியாகவும் இருக்கிறது.
ஒருவர் தம் மனைவி மீது விபச்சாரக் குற்றச்சாட்டைக் கூறினால் நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவேண்டும். அவ்வாறு கொண்டு வரத் தவறினால் அவருக்கு எண்பது கசையடிகள் தண்டனையும் அதன் பிறகு அவர் அளிக்கும் எந்த சாட்சியும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடாது என்று குர்ஆன் வசன எண் : 24:4 கூறுகிறது.
ஹிலால் பின் உமய்யா என்பவர் ( மற்றொரு நபிமொழியில் இவர் பெயர் உவைமிர் அல் அஜ்லானி என்றுள்ளது. ஆனால் நிகழ்சி ஒரே மாதிரியுள்ளது. பெயரிலுமா இவர்களுக்குள் குழப்பம்?) தன் மனைவி மீது விபச்சாரக் குற்றச்சாட்டை முகம்மது நபியிடம் கூறி தனக்கு என்ன தீர்வு எனக் கேட்கிறார். அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வரும்படியும் இல்லையேல் கசையடி கொடுக்கப்படும் என்றும் முகம்மது நபி கூறுகிறார்கள். அதற்கு ஹிலால் அவர்கள் தன் மனைவி அடுத்தவருடன் உடலுறவு கொள்வதை பார்த்ததிற்குமா நான்கு சாட்சிகள் வேண்டும் என்று மீண்டும் கேட்க நடைமுறைச் சிக்கலை புரிந்துகொண்ட முகம்மது நபி தமக்கு வேறு கட்டளை அல்லாவிடமிருந்து வந்துவிட்டதாக (குர்ஆன் வசனம் 24:6-9) கூறி நான்கு முறை தாம் சொன்னது உண்மை என்று சத்தியம் செய்து அதன் பிறகு அப்படி தாம் செய்த சத்தியம் பொய்யானால் தன்மீது அல்லாவின் சாபம் உண்டாகட்டும் என்று கூறினால் போதும் என்றும் கூறிவிடுகிறார்கள். இதற்கு லிஆன் செய்தல் என்று பெயர். அது சரி குற்றம் சுமத்தப்பட்ட பெண் என்ன செய்ய வேண்டும்? ஹிலால் அவர்களின் மனைவி ஷரீக் பின் சஹ்மா அவர்களையும் இவ்வாறு சத்தியம் செய்யச் சொல்லகிறார்கள். (அதாவது அல்லாவிற்கு அஞ்சி சொல்லமாட்டார் என்ற கருத்தில் என கருதுகிறேன்) அவரும் அதேமாதிரி சத்தியம் செய்கிறார். இருவருமே தம் மீது குற்றமில்லை என்று கூறிவிட்டபொழுது என்ன தீர்ப்புச் சொல்லவது? தீர்ப்பை குற்றம் சுமத்தியவரே எழுதிவிடுகிறார். “ நான் இவள் மீது குற்றம் சுமத்திவிட்ட பிறகு இவளை கைவிடாவிட்டால் (தலாக் சொல்லாவிட்டால்) நான் சொன்னது பொய் என்றாகிவிடும் என்று கைவிட்டுவிட்டார். (புகாரி 4747, 5308)
இன்றைய நடைமுறையில் அப்படி தன் விருப்பத்திற்கு ஏற்ப தலாக் என்று சொல்லிவிட முடியாது. ஒருவர் தன் மனைவியை தலாக் செய்ய விரும்பினால் அதற்கான காரணத்தை சொல்லி தன்னுடைய ஜமாத்தில் சொல்லவேண்டும். காரணம் சொல்லத் தேவையில்லை என்று சரியத் சட்டமிருந்தாலும் காரணம் சொல்லாமல் ஜமாத் ஏற்றுக் கொள்வதில்லை. உடலுறவு தொடர்பான ஒழுக்கக் கேட்டிற்குத் தவிர பிற காரணங்களுக்கு தலாக் என்பதை உடனடியாக அனுமதிப்பதில்லை. உடலுறவு தொடர்பான ஒழுக்கக் கேட்டிற்குக் கூட தீர விசாரிக்காமல், அதற்கான சாட்சிகள் இல்லாமல் அனுமதிப்பதில்லை. பிறவகை குற்றச்சாட்டுகளுக்கு சில மாதங்கள், வருடங்கள் கூட தீர்ப்புக் கூறாமல் தள்ளிவைத்து பின்னர்தான் தலாக் என்பதை ஏற்றுக்கொள்கின்றனர்.
ஆனாலும் உலமாக்கள் மன்றங்களும் இசுலாமிய அமைப்புகளும் தன்னிச்சையாக சொல்லப்படும் தலாக்குகளை அங்கீகரிக்கின்றனர். செல்போன் மூலமும் தலாக் சொல்லலாம் என்றும் இவர்கள் அனுமதித்துள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். விதிவிலக்காக ஜமாத்துகள் கூட பிரச்சனைக்குரியவரின் வசதி வாய்ப்பைப் பொறுத்து ஏற்றுக் கொள்கிறது.
குலா
தலாக் – ஆண் தன் மனைவியைக் கைவிடுதல்- என்பது போல பெண் தன் கணவனை தலாக் சொல்ல முடியுமா?
குலா (அல்குல்வு) என்ற இச்சொல்லிற்கும் கழற்றிவிடுதல் என்றுதான் பொருள். ஆனால் தன்வினையில் பயன்படுத்தக் கூடாது. பிறவினையில் பயன்படுத்த வேண்டும். அதவது பெண் தன் கணவனைப் பிடிக்காவிட்டால் நடுவரிடமோ அல்லது தமக்குப் பொறுப்பாக இருந்து யார் திருமணம் செய்து வைத்தார்களோ அவர்களிடம் முறையிட்டு தன் கணவனை “கழற்றிவிடச் சொல்லுங்கள்” என்று சொல்வதாகும். இதற்கு ஒருமுறை, மூன்றுமுறை என்ற கணக்கெல்லாம் கிடையாது. கழற்றிவிடச் சொல்ல விரும்பும் பெண் தான் பெற்ற மகர் தொகையை திருப்பிக் கொடுக்க வேண்டும். அல்லது ஏதாவது நட்ட ஈட்டுத்தொகை கொடுக்க வேண்டும்
இதிலும் முரண்பாடு இவர்களிடையே உள்ளது. குலா என்பது முழுமையான தலாக் என்றும் இல்லை என்றும் இரண்டு கருத்துண்டு. அதாவது இசுலாமியச் சட்டப்படி தலாக் சொல்லி விட்டால் அவ்விருவரும் மீண்டும் இணைந்து (திருமணம்) வாழ முடியாது. அவ்வாறு வாழ விரும்பினால் அப்பெண் வேறொருவரை திருமண்ம் செய்து அவருடன் உடலுறவு கொண்ட பிறகு அவரிடமிருந்து தலாக் பெற்று அதன் பிறகே ஏற்கனவே வாழ்ந்தவருடன் இணைய முடியும். குலாவில் அதுபோல் வேறு திருமணம் செய்யத் தேவை இல்லை; விரும்பினால் இணைந்து கொள்ளலாம். அது பிரிவினையே தவிர தலாக் இல்லை என்பது ஒருசாரரின் கருத்து.
இதற்கு அவர்கள் கூறும் ஆதாரம் குர்ஆன் வசனம் 4:20. அது, “ஒரு மனைவியிடத்தில் (விவாகரத்து செய்துவிட்டு) மற்றொரு மனைவியை (திருமணம் மூலம்) மாற்றிக் கொள்ள விரும்பினால் அவர்களில் ஒருத்திக்கு ஒரு (பொற்)குவியலையே கொடுத்திருந்தாலும் அதிலிருந்து எதனையும் நீங்கள் (திரும்ப) எடுத்துக்கொள்ளாதீர்கள்.” என்று கூறுகிறது.
குலாவும் தலாக்தான் என்று கூறுபவர்கள் குர்ஆன் வசனம் 2:229 மற்றும் புகாரி 5373 மற்றும் 5230 ஆகியவற்றை ஆதாரமாக கூறுகிறார்கள். “கணவன் மனைவியிடையே இசுலாமிய நெறிப்படி வாழ முடியாது என்று பிணக்கு எற்பட்டால் மனைவியிடம் ஈட்டுத் தொகை பெறுவதில் குற்றமில்லை” என்று குர்ஆன் கூறுகிறது. (குர்ஆனின் எந்த வசனத்தை சரி என்று எடுத்துக்கொள்வது? உங்களுக்கு எதுபிடிக்குதோ அதை எடுத்துக்கொள்ளுங்கள்.)
ஸாயித் பின் கைஸ் என்பவரின் மனைவி முகம்மது நபியிடம் சென்று தனது கணவர் உடலுறவுக்கான தகுதியில்லாததைக் குறிப்பிட்டு தமக்கு தலாக் பெற்றுத் தருமாறு வேண்டுகிறார். அதற்கு முகம்மது நபி, அப்பெண்ணிடம் கணவரிடமிருந்து பெற்ற தோட்டத்தை திருப்பிக் கொடுத்துவிட சம்மதம் பெற்றுக்கொண்டு ஸாயித் பின் கைஸ் அவர்களை தலாக் செய்யச் சொல்லுகிறார்கள். (புகாரி 5373)
பனூமுகிரா குலத்தினர் தங்கள் புதல்வியை அலி அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க விரும்புகின்றனர். ஆனால் அதற்கு முகம்மது நபி அனுமதியளிக்க மறுத்துவிட்டு, “பாத்திமா என்னில் பாதியாவார். அவரை வருத்தமடையச் செய்வது என்னை வருத்தமடையச் செய்வது போலாகும். வேண்டுமானால் பாத்திமாவை தலாக் செய்துவிட்டு வேறு திருமணம் செய்து கொள்ளட்டும்” என்று கூறுகிறார்கள். (4 மனைவி ஆதரவாளர்கள் கவனிக்க)
இவைகள் மூலம் முரண்பாடு ஒருபக்கமும், குலா என்பது தலாக் போலல்லாத கழற்றிவிடச் சொல்லி சொல்லுதல் என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
குலா என்பது எப்படியிருந்தாலும் பெண், ஜமாத்தில் முறையிட விசாரணை நடத்தும் ஜமாத் கணவன் மீது குற்றமிருப்பின் கணவனுக்கு தண்டத் தொகை வழங்கவும், அவன் பெற்ற வரதட்சிணையை திருப்பித் தரவும் உத்தரவிடுகின்றனர். வரதட்சணை பெறாவிட்டாலும் இழப்பீட்டுத் தொகை உண்டு. குற்றம் யாருடையது என்பது மட்டுமே கணக்கில் எடுக்கப்படுகிறது. ஆண் தலாக் செய்தாலும் இதுவே இன்றைய நடைமுறை. உலமாக்களின் தலையீடும் செல்லுபடியாவதாகத் தெரியவில்லை. காரணம் திருமணம் என்பதில் பெண்ணைப் பெற்றவர்கள் அல்லவா பெரிதும் இழக்கின்றனர். வரதட்சிணை மட்டுமல்ல பிரச்சனை. திருமணச் செலவு என்பதும் திரும்பப் பெறமுடியாத இழப்பல்லவா. பெண்ணைப் பொறுத்தவரை மறுமணம் என்பது முதல் திருமணத்தை விட கூடுதலாகவே செலவு செய்ய வேண்டியுள்ளது. அல்லது கொஞ்சமும் பொருத்தமில்லாத வயது கூடியவர்களை திருமணம் செய்ய வேண்டும். ஏழைகளைப் பொறுத்தவரை மறுமணம் என்பது கானல் நீர்தான்.
மணவிலக்கு நடந்தால் சரியத் சட்டப்படி குழந்தைகள் கணவனையே சாரும். ஆனால் நடைமுறையில் பெரும்பாலும் பெண்ணே குழந்தைகளைப் பொறுப்பேற்று கொள்கிறாள். மறுமணம் என்று வரும்போது ஏற்படும் பிரச்சனையால் ஆண் தற்காலத்தில் குழந்தைகளை ஏற்றுக் கொள்வதில்லை. பெண்ணைப் பொறுத்தவரை உணர்வுவகை சார்ந்த பாசம் என்ற பிணைப்பால் குழந்தைகளை தன்மீது திணிக்கப்படுவதாக கருதுவதில்லை. குழந்தைகளுக்கான எதிர்காலம், பராமரிப்பு என்ற வகையில் மாதம் மாதம் அல்லது ஒரு நிர்ணயிக்கப்பட்ட தொகையையும் ஜமாத் கணவனிடமிருந்து பெற்றுத் தருகிறது.
அந்தக் காலத்தில் சந்தையில் வாங்கும் பொருள்போல பெண்களை அன்பளிப்பு (மகர்) கொடுத்து திருமணம் செய்துகொண்டனர். பெற்றவர்களும் யாராவது வாங்கிக் கொண்டால் சரிதான் என்று பருவமடையாத பெண்களைக்கூட 50 வயதுக் கிழவனுக்கும் திருமணம் செய்துகொடுத்தனர். ஒவ்வொருவரும் 5, 10 என்று பெண்களை திருமணம் செய்துகொண்டனர். இன்று அப்படி முடியுமா? என்னதான் சரியத்தைக் காக்கும் சட்டமேதையாக இருந்தாலும் தனது 6 வயது மகளுக்கு திருமணம் செய்து வைப்பாரா? இல்லை இரண்டாந்தாரமாக தன் மகளை மணமுடித்துக் கொடுப்பாரா? எந்தப் பெண்ணாவது தன் கணவன் வேறு திருமண்ம் செய்துக் கொள்ளத்தான் அனுமதிப்பாரா? காலம் ரொம்பத்தானே மாறிவிட்டது!
ஆமாம்! மிகவும் மாறிவிட்டதுதான். ஆனாலும் இசுலாமிய ஆண்கள் மனதில் தலாக் பற்றிய சிந்தனை மட்டும் மாறவில்லை. இரு எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்.
தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்றுகொண்டிருந்த பேரூந்து கூட்டம் நிரம்பி வழிந்தது. ஒரு இசுலாமிய ஜோடி மூன்றுபேர் இருக்கையில் பயணித்தனர். ஜன்னலோரத்தில் மனைவி. அவருக்கு அருகில் அவரது கணவர். அதற்கடுத்து வேறு ஒருவர். திடீரென்று அவர்களது கைக்குழந்தை அழ ஆரம்பிக்கிறது. எவ்வளவு சமாதனம் செய்தும் அழுகை நிற்கவில்லை. கணவராகப்பட்டவர் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும்படி கூறுகிறார். மனைவி வெட்கப்பட்டுக்கொண்டு மறுக்கிறார். சர்ச்சை முற்றி அப்பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு இறங்கப் போவதாக எழுந்திருக்க, அவரது கணவன் அடித்துவிட, மூன்றாவதாக இருந்தவர் மேல் அந்தப் பெண் விழுந்துவிடுகிறார். எதிர் இருக்கையில் அதுவரை அமைதியாக இருந்த ஒருப்பெண் (அநேகமாக அப் பெண்ணின் தாயார்போல் தெரிகிறது) குழந்தையை தூக்கிக் கொண்டு “இப்படி பஸ்ஸிலயும் சண்டை போடுகிறீர்களே” என்று கூறுகிறார். கணவராகப்பட்டவருக்கு கோபம் உச்சமடைய மேலும் அதிகமாக அப்பெண்ணை (அசிங்கமாகவும்) திட்டிவிட்டு “உன்னை தலாக் சொன்னாதான்டி சரிவரும். எனக்கு ஒரு தம்ளர் பால் போதும்டி தலாக் சொல்ல. (பால் எதுக்கு என்று எனக்குப் புரியவில்லை) எனக்கு ஆயிரம் பொண்ணு கிடைக்கும்டி” என்று கத்திக் கொண்டே வருகிறார். நல்லவேளையாக ப்ட்டுக்கோட்டை வந்துவிடுகிறது. முன்னாடியே உள்ள நிறுத்தத்தில் நம்ம அற்புதவிளக்கு இறங்க வேண்டிருந்ததால் இறங்கிவிட பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லையாம்.
இலட்சாதிபதி முகம்மது அலி. 55 வயதிருக்கும் அவருக்கு. திருமணம் செய்தநாளிலிருந்து அவரது மனைவிமீது அவருக்கு அலாதியான அன்பு. எதற்கெடுத்தாலும் மஹ்மூதாபீ என்று கூப்பிடாமல் அவருக்கு நேரம் நகராது. எதையும் தன் மனைவியிடம் கலந்து கொள்ளாமல் முடிவெடுக்கமாட்டார். ஆனால் அவருக்கு இந்த வயதில் திடீரென்று என்னானது என்று புரியவில்லை. சில மாதங்களாக இருவருக்கும் பிணக்கு. ஒருநாள் திடீரென்று தம் மனைவியை தலாக் சொல்லிவிடுகிறார். ஜமாத்திற்கெல்லாம் செல்லவில்லை. அவரது பேத்திகளே பிள்ளை பெற்றுவிட்ட இந்த வயதில் பஞ்சாயத்தெல்லாம் சரிபட்டுவருமா? பணக்காரராகவும் உள்ள அவருக்கு அதெல்லாம் அசிங்கமில்லையா! அவரது மகன்களால் (3பேர்) ஏதும் சொல்ல முடியவில்லை. காரணம் சொத்து முழுவதும், இந்து மதத்திலிருந்து சிறுவயதில் வீட்டைவிட்டு ஓடிவந்து இசுலாத்தில் இணைந்த அவரே உழைத்து சேர்த்த சொத்து. (கொஞ்சம் கடத்தல் தொழிலும்தான்). மூச்சுவிட்டால் அனைவரும் வெளியே போகவேண்டியதுதான். அதனால் தந்தைக்கு பிள்ளைகளும் ஆதரவு. அதற்கு சரியத்தும் சென்னை உலமாக்களும் ஆதரவு. சில தினங்களில் தலாக்கிற்கான காரணம் புரிந்தது. முகம்மதலி கேரளப் பெண்ணொருவரை திருமணம் செய்துகொண்டு கேரளாவிலேயே செட்டில் ஆகிவிட்டார்.
நிறைய எடுத்துக்காட்டுகள் தரலாம். தானும் ஒரு பெண்ணுக்கு தகப்பனாக இருந்தாலும் தலாக் என்பதை எளிதாகச் செய்துவிடலாம் என்ற மனநிலையில், அது தன்னுடை ஆண்மைக்கான அடையாளம் என்ற சிந்தனையில் இவர்கள் இன்றும் வாழ்வதற்கு நிறைய எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்.
இசுலாமிய சமூகத்திலும் சரியத்திற்கு அப்பாற்பட்டு நிறையவே மாற்றங்கள் நடந்துள்ளன. சரியத்தை கடைபிடிப்பதும் முடியாத காரியமாக உள்ளதையும் பார்க்கிறோம். சில பெண்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வாழ வழியில்லாமல் தொடர் ஜீவனாம்சம் கேட்கும்போது மட்டும் இந்த “சரியத்தின் காவலர்கள் என்ற போலிகள்” உச்சாணிக் கொம்பில் ஏறிகொண்டு அனைவரையும் உசுப்பிவிட்டு அதாவது இசுலாத்தை சிதைக்க ஆர்.எஸ்.எஸ்சின் சதி, கம்யூனிஸ்டகளின் சதி என்று இசுலாமியர்களை உசுப்பிவிடுகின்றனர். வழக்கு தொடுப்பவரே இசுலாம் அழிந்துவிடுமோ என்று பயந்துபோய் தனது கோரிக்கையை திரும்பப் பெறும்வகையில் தமது பிற்போக்குத்தனத்தை சாதித்துக் கொள்கின்றனர்.
ஆண்களின் நேரடியாக மணவிலக்கு செய்வதற்கான உரிமையை தடுப்பது, முறைகேடான மணவிலக்கிற்கு ஜீவனாம்சம் பெறுவது, எல்லாவற்றிற்கும் மேலாக சுயமாக வருமானம் ஈட்டவும் அதனை தனது விருப்பத்திற்கேற்ப பயன்படுத்தும் உரிமையைப் பெறுவது ஆகியனவற்றில் மாற்றங்கள் தவிர்க்க முடியாததாக பொருளாதாரச் சூழ்நிலை இன்றுள்ளது. இசுலாமியப் பெண்கள் இதனைப் புரிந்துகொண்டு காலத்திற்கேற்ற தமது உரிமைகளை பெறுவதற்கு போராடவேண்டும். வாழும் உரிமைக்கும் மத நம்பிக்கைக்கும் முடிச்சுப்போட முயற்சிப்பவர்களை அடையாளங்கண்டு அம்பலப்படுத்த வேண்டும்.
__________________________________________________
– சாகித்
__________________________________________________
தலாக் – சரியத் சட்டமும் இசுலாமியப் பெண்களின் அவலமும் ! உழைக்கும் மகளிர்தினச் சிறப்புப் பதிவு – 11 | வினவு!…
இசுலாமியப் பெண்களைப் பற்றி விவாதம் நடந்தால் “புர்கா”வும் தலாக்கும் முதன்மையான அமைந்துவிடுகிறது. மற்ற பிரச்சினைகள் பிற மத பெண்களுக்கும் பொதுவானதாக அமைந்து, இவ்விரண்டு மட்டும் இசுலாமியப் பெண்கள் தனித்து எதிர் கொள்வதால் இவை பிரதானமாக விவாதிக்கப்படுகிறது,…
நல்ல பதிவு
எதிர் வாதங்கள் வந்து குவியும் பாருங்கள்.நடைமுறையில் உள்ள தவறுகளை சுட்டினால் ,பிற மதத்தில் சரியாக உள்ளதா,இஸ்லாமை விமர்சிப்பதை விட்டால் வேறு வேலை இல்லையா என்பது போலவே பதில்கள் வரும்.
இந்த ஷாரியாவில் பல பிரிவுகள் உள்ளன.நடை முறைப்படுத்துவதற்கு அதில் உள்ள மிக சிறந்ததை(இப்போதைய மனித உரிமை சட்டங்களுக்கு பொருந்துவதை) செயல் படுத்த முடியும்.ஆனால் செய்ய மாட்டார்கள்.
தமக்கு சாதகமான இடங்களில் மட்டும் ஷாரியத் சட்டதை கையில் எடுக்கும் இஸ்லாமிய ஆண்களுக்கு ஒரே ஒரு கேள்வி :
விவகாரத்து, பல தார மணம், ஜீவனாம்சம், சொத்துரிமை போன்ற சிவில் விசியங்களில் மட்டும் தான் சாரியத்தை எடுத்துகொள்கிறீர்கள். கிரிமினல் கேஸ்களான திருட்டு, கொள்ளை, கொலை, பண மோசடி போன்ற விசியங்களில் மட்டும் இந்திய கிரிமினல் சட்டத்தை ஏற்பதில் தயக்கம் இல்லை. இவைகளில் (இன்றைய சவுதி அரோபியாவில் உள்ளது போல்0 ஷாரியத் சட்டங்களை ஏற்பதில்லை. ஏன் இந்த இரட்டை வேடம் ?
http://www.cfr.org/religion/islam-governing-under-sharia/p8034
Marriage and divorce are the most significant aspects of sharia, but criminal law is the most controversial. In sharia, there are categories of offenses: those that are prescribed a specific punishment in the Quran, known as hadd punishments, those that fall under a judge’s discretion, and those resolved through a tit-for-tat measure (ie., blood money paid to the family of a murder victim). There are five hadd crimes: unlawful sexual intercourse (sex outside of marriage and adultery), false accusation of unlawful sexual intercourse, wine drinking (sometimes extended to include all alcohol drinking), theft, and highway robbery. Punishments for hadd offenses–flogging, stoning, amputation, exile, or execution–get a significant amount of media attention when they occur.
வட்டி வாங்ககூடது என்பதும் இஸ்லாமிய கோட்பாடு. அது இன்றைய complex economy with inflaton and monetisations களின் சாத்தியம் இல்லை என்று நியாயப்படுத்திக்கொள்கிறிர்கள். இதே நியாயம் தலாக் போன்ற மேல் சொன்ன விசியங்களில் மட்டும் ஏற்றுக்கொள்ள மறுப்பது இரட்டை வேடம் தான் ?
இவர்கள் கிரிமினல் குற்றங்களுக்கு சரியத் சட்டத்தை நடைமுறை படுத்தமாட்டார்களா என்று உள்ள கேள்வி பிற்போக்குகளை ஆதரிப்பதுபோல் உள்ளது. அனேகமாக இக்கேள்வி பின்வருமாறு இருந்தால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
வட்டிவாங்கும் இசுலாமியர்களை சரியத் சட்டப்படி தண்டிக்க மாட்டார்களா? அல்லது சரியத் சட்டப்படி அரசாங்கத்தை தண்டிக்கச் சொல்லி போராடாமாட்டார்களா? தங்கம், போதைப்பொருள், அன்னியச்செலவாணி, உண்டியல் என்ற (வட்டி)க்கு பணப்பரிமாற்றம செய்யும் இசுலாமயர்களை, வியாபாரத்தில் போலிப்பொருள்களை விற்பனை செய்யும், எடை திருட்டு செய்யும் இசுலாமியர்களை சரியத் சட்டம் கொண்டு தண்டிக்க மாட்டார்களா? அல்லது அரசாங்கத்தை நிர்பந்திக்க மாட்டார்களா? அபலைப் பெண்களுக்கான ஜீவனாம்சம் என்றதும் சரியத் சட்டத்தை தூக்கிக் கொண்டு ஓடிவருகிறீகளே! என்று இருந்தால் சரியான கேள்வியாக இருக்கும்
முஸ்லீம்கள், பிற சமயத்தவரிடம் பெருமையாக சொல்லி கொள்வது “முஸலீம் மதத்தில் வரதட்சனை கிடையாது. ஆண்கள் தான் தரவேண்டும்”. அப்படி ஆண்கள் தருவது – பெண்ணை விலைக்கு வாங்குவது போன்றது. விலைக்கு வாங்கப்பட்ட பொருள் – எந்த கேள்வியும் கேட்காமல் வாழ பழகி கொள்ள வேண்டும். மீறி பேசினால் – நான் கொடுத்ததை கொடுத்து விட்டு போ என்பது தான் தீர்வு. இந்திய சமுகத்தில் – முஸ்லீம் பெண்களுக்கு இருபது வருஷங்களுக்கு முன் இருந்த சுதந்திரம் இன்று இல்லை என்பதே உண்மை. பிற சமய பெண்கள் – சுதந்திர காற்றை சுவாசிக்க, சுவாசிக்க் – இவர்கள் மீதான பிடி இறுகுகிறது. மத பிற்போக்குவாதிகளின் கைகள் ஓங்க – உங்களை போன்ற முற்போக்காளர்களும் ஒரு காரணம். நீங்கள் எதற்கோ செய்யும் உதவிகளை – அவர்கள் எதற்கோ பயன்படுத்தி கொள்கிறார்கள். எதிர்காலத்தில் நிலைமை மோசமாக தான் மாறும். பெண்கள் போராடி எதையும் பெற இயலாது. அரசாங்கத்தால் எதுவும் செய்ய இயலாத நிலை தான் வரும். மீறி செய்தால் – மனித உரிமை ஆர்வலர்கள் வரிந்து கட்டி கொண்டு வருவார்கள். கவலையே படாதீர்கள்- இனி கொஞ்ச நாளில் எல்லாம் தலிபான் மயம் தான்.
எதையும் விவாதிக்காமல், போராடாமால் தீர்க்கமுடியாது ஓஷோ.
விவாதத்திற்குள் ஆழமாக செல்ல விருப்பமில்லை.(அதற்க்கான அறிவு போதுமானதாக இல்லை)
முடிந்தால்,நீதி மன்றங்களில் பதியப்படுவதில்லை என்று காரணம் சொல்லாமல்
புள்ளி விபரம் கொடுங்கள்.சமீப காலங்களில் எவ்வளவு தலாக் நடந்துள்ளது என்று.இது ரொம்ப ஈசி.
முஸ்லீம்கள் பெருவாரியாக வாழும் ஊர்களில் நான்கை தேர்ந்தெடுத்து கணக்கெடுத்து விடலாம்.
சட்டங்கள் எப்படியோ.நடைமுறையில் அப்படி இல்லை என்பதே நிதர்சனம்.அந்த பேருந்து நபர்
ஆணாதிக்க நபர்.அவர் எந்த மதத்தில் பிறந்திருந்தாலும் இப்படிதான் பேசியிருப்பார்.மனைவியை வெளிநாட்டுக்கு அனுப்ப தயங்கியவரும் இதே ரகமே.வாய்ப்புகள் எளிதாக இருந்தாலும் விவாகரத்து
அதிகம் நடைபெறாமல் இருந்தால் நல்ல விஷயம் தானே.(சாராயக்கடையில் வேலை செய்துகொண்டு
குடிக்காமல் இருப்பவனை போல)
“” விவகாரத்து, பல தார மணம், ஜீவனாம்சம், சொத்துரிமை போன்ற சிவில் விசியங்களில் மட்டும் தான் சாரியத்தை எடுத்துகொள்கிறீர்கள். கிரிமினல் கேஸ்களான திருட்டு, கொள்ளை, கொலை, பண மோசடி போன்ற விசியங்களில் மட்டும் இந்திய கிரிமினல் சட்டத்தை ஏற்பதில் தயக்கம் இல்லை. இவைகளில் (இன்றைய சவுதி அரோபியாவில் உள்ளது போல்0 ஷாரியத் சட்டங்களை ஏற்பதில்லை. ஏன் இந்த இரட்டை வேடம் ? “”
மிஸ்டர் அம்பி! யார் வேண்டாம்னு சொன்னாங்க.கொண்டு வாங்களேன்.
முஸ்லீம்கள் சந்தோசமா
ஏத்துப்பாங்க.சட்டமியற்றும் இடங்களில் க்ராஸ் பெல்ட் கோஷ்டி தானே ஆதிக்கம் செலுத்துகிறது!
ட்ரை பண்ணுங்களேன்.
silanthi,
நான் ‘அம்பி’ அல்ல. கவுண்ட சாதி வெறியன். எதையும் தெரிந்துகிட்டு பேசவும் !!
உங்களுடைய எல்லா விமர்சனங்களுக்கும் இங்கே பதில் கிடைக்கும். http://onlinepj.com/books/islam-penkalin-urimayai/
உங்களுடைய எல்லா விமர்சனங்களுக்கும் இங்கே பதில் கிடைக்கும். http://onlinepj.com/books/islam-penkalin-urimayai/
இதை படித்த பின்பு தயவுசெய்து விமர்சனம் செய்யயும்.
ஒரு புர்கா கூடாரத்துக்குள்
ஒளித்து வைக்கப்பட்ட
எம் சகோதரிகளின் பரிமாணங்கள்.
பரிமாணங்களனைத்தும்
சுதந்திரந் தேடிய கூர்மத்திலிருந்தன.
இருளுக்குள் இருந்துகொண்டு
அவர்களின் கண்கள் மட்டும் ஒளிபாய்ச்சும் –
விலங்கொடிக்கும் விவரந்தேடி…
அந்த கையறு நிலையின் வீச்சம்
அவர்களின் கண்களில்.
அந்த ஒளிவெள்ளத்தில்
சமுதாயம் கண்கள்
கூசித்தான் போகவேண்டும்.
ஆனால் சமுதாயத்தின் கண்கள்
பார்ப்பதைத் தவிர்த்துக் கொண்டன!
அந்த ஒளிவெள்ளம்
ஆண்டவனை நோக்கியும்
பிரார்த்தித்துப் பாய்ச்சப்பட்டது.
அப்போது அந்த ஆண்டவன்
ஆண்களுக்கு மட்டுமே
போதனை செய்துகொண்டிருந்தான் –
பெண்களை எவ்வெவ்விதத்தில்
வழி நடத்த வேண்டுமென்று.
செய்வதறியாது திகைத்து,
அந்தக் க்ண்களிலிருந்து
ஒளிவெள்ளம் ஆண்டைகளின்,
ஆண்களின் குவியலுக்குள் பாய்ச்சப்பட்டது.
அவர்களோ போதனைகளின் போதையில்
அந்த இறைவனிடமே
சந்தேகங்களைக் மேலும் மேலும்
கிளறிக்கொண்டேயிருந்தார்கள்!
பெண்கள் எப்படியெல்லாம்
நடத்தப்பட வேண்டுமென்று!
இருளின் விடை காண
ஒளி பாய்ச்சித் தேடியபோதும்
கிடைத்தது…
மீண்டும் இருள்தான்!
அடிக்குங் கைகளைத்
தடுத்த போதும்,
இயலாமையில் அறற்றிப்
புலம்பியபோதும்,
இதயம் குமைதலால்
ஏனென்று கேட்டபோதும்,
சுமை பாரம் பூமிக்குள் அழுத்த
கைதொழுது அழுதபோதும்…
எம் சகோதரிகளுக்கு
கேட்காமலேயே கொடுக்கப்பட்ட
ஆறுதல் சுதந்தரம்
தலாக்!
புர்காவுக்குள் இருக்கும்
மூட்டை பளுவாயிருக்குமென்று
நினக்கும் நிமிடத்திலேயே
தலாக் எனும் வார்த்தை மூலத்தால்
ஒரு மூலையில் இறக்கிவைக்கப்பட்டு
ஆண்களின் பயணம்
தொடர்ந்துகொண்டேதானிருக்கிறது…
கருத்துக்களை முழுமையாக உள்வாங்குவதிலும் ,புரிதலில் ஏற்ப்பட்டுள்ள வெற்றிடமே இது போன்ற குறை பதிவு .
அரபி கற்றறிந்த இமாம்களுக்கே “அரபிமொழியின் வளமின்மை” -என்று குறை கூறி ஆராயந்திருக்கும் பதிவு பதிந்தவர் அரபியில் கரைகண்டவரோ ? ” திருக்குரான்”-னையும் , நபி-மொழியையும் குறை என்று கூறி நக்கல் செய்வதற்கு ?
உண்மையில் உங்களுக்கு முஸ்லீம் பெண்களைப் பற்றி கவலை என்றால் , இஸ்லாமை முழுமையாக அறிந்து அதற்கு பிறகு ஷரியத் சட்டத்தைப் பற்றி எழுதுங்கள்.
அரபியுலுள்ள குறையை நான் சொல்லவில்லை “பாதிப்பே”.
புகாரி சொன்னதைதான் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன். ஓரு சொல் மாடவிடாய் நின்றதையும் குறிக்கும், மாதவிடாய் ஆரம்பிம்பதையும் குறிக்கும் என்பது அறிவுடமையாகுமா என்று கூறுங்கள்?
ஆமாங்க- எங்க இந்து மதத்தைப் பத்திக் கூட இந்த மடையனுங்க ஒண்ணுமே தெரிஞ்சுக்காம விமர்சனம் செய்யறானுங்க, நாமெல்லாம் சேந்து எதாவது நடவடிக்கை எடுப்பமா ?
நிச்சயமாக, நீங்கள் கூறுவது போல அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ளதெ தவிர பெரும்பான்மை அவ்வாறு இல்லை. முதன் முதலில் பெண்கல்வியை, பெண்சிசுக்கொலையை தடுத்தது, விபச்சாரத்தை தடுத்தது, வரதட்சணை வாங்குவது மற்றும் முறைகேடான விசயங்களை தடுத்தது இஸ்லாம்தான். நீங்கள் ஒரு தெளிவு பெற்ற நபரிடம் கேட்டு தெரிந்திருந்தால் இவைகளை கூற மாட்டீர்கள். மேலும் பகுத்துணர்ந்து அறிதலும் இஸ்லாத்தில் உண்டு. சில மத வியாபாரிகளின் நடவடிக்கை காரணமாக எழுந்த சந்தேகங்களே இவை இதற்கு காரணம் அவாளின் பாதிப்பு தவிர வேறு ஏதுமில்லை
இங்கே செல்லுங்கள். பெண்மை மதிக்கப்படும் பாங்கை பாருங்கள்.
http://rishansharif.blogspot.com/2009/01/blog-post_08.html
‘முஸ்லிம் இளம் பெண் ஸ்டவ் வெடித்து சாவு’ என்று நாம் பத்திரிக்கைகளில் பார்க்க முடிகிறதா? இல்லை. இதற்கு காரணம் ‘தலாக்’ என்ற ஒன்றை மார்க்கத்தில் இலேசாக்கியதுதான். மற்ற மதங்களில் விவாகரத்தை சிரமமாக்கியதாலும், வாழும் வரை ஜீவனாம்சம் கொடுக்க வெண்டும் என்பதாலும், பல வருடங்கள் கோர்ட் படிக்கட்டுகளை ஏற வேண்டும் எனபதாலும் இதெற்க்கெல்லாம சிரமப்படாமல் ஸ்டவ்வை வெடிக்க வைத்தோ அல்லது வேறு முறைகளிலோ பெண்ணை கொலை செய்து விடுகிறார்கள்.
‘இவ்வாறு விவாகரத்து செய்தல் இரண்டு தடவைகளே! இதன் பிறகு நல்லமுறையில் சேர்ந்து வாழலாம்.’ -குர்ஆன் 2:229
எனவே இரண்டு தடவைகளில் கோபத்தில் கூறி விட்டாலும் அந்த மனைவியோடு சேர்ந்து வாழலாம்.
‘தலாக், தலாக், தலாக்’ என்று ஒரே நேரத்தில் மூன்று முறை சொன்னாலும் ஒரு முறை சொன்னதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது முகமது நபியின் அறிவுரை.
இந்த சட்டங்களை தவறாக உபயோகிப்பவர்களை விளக்கி அவர்களுக்கு உபதேஷம் செய்யலாம்.
‘அவ்விருவருக்கிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவன் குடும்பத்தில் சார்பில் ஒரு நடுவரையும் அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள். அவ்விருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் இறைவன் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான்.’
-குர்ஆன் 4:35
‘நல்ல முறையில் விட்டு விடுங்கள். அவர்களைத் துன்புறுத்தி வரம்பு மீறுவதற்க்காகச் சேர்த்துக் கொள்ளாதீர்கள்.’
-குர்ஆன் 2:231
விவாகரத்தை சிரமமாக்கியதால் பெயருக்கு மனைவியை வைத்துக் கொண்டு சின்ன வீட்டோடு வாழ்ந்து வரும் பல நண்பர்களை எனக்குத் தெரியும். விவாகரத்து சுலபத்தில் கிடைக்க வேண்டும் என்பதற்காக ‘என் மனைவி இன்னாரோடு கள்ள தொடர்பு வைத்துள்ளாள்’ என்று நெஞ்சறிந்து பொய் சொல்லும் பலரைப் பார்த்திருக்கிறேன்.
எனவே வினவு அவர்கள் இஸ்லாமிய பெண்களின் மேல் பரிதாபப்படுவதை விட மற்ற மதங்களில் ஸ்டவ் வெடிக்காமல் இருப்பதற்கு என்ன வழி என்று ஆராய்ந்தால் நலம். மேலும் நாங்கள் வஞ்சிக்கப்படுகிறோம் என்று எந்த இஸ்லாமிய பெண்ணும் இது வரை கொடி பிடிக்கவும் இல்லை.
சரி …இஸ்லாமிய மார்க்கத்தை நான் துறந்தால் அடுத்து என்ன வழி என்ற விளக்கத்தையும் அளிக்க வேண்டும். நீங்களும் செங்கொடியும் மற்ற தோழர்களும் கம்யூனிஸமே நிரந்தர தீர்வு என்பீர்கள். ரஷ்யாவிலும் சைனாவிலும் காலத்துக்கு ஒவ்வாத சட்டங்கள் என்று கம்யூனிசத்தை என்றோ ஓரம் கட்டி விட்டார்கள்.
நம் நாட்டில் இந்த கம்யூனிஸ்டுகள் பண்ணும் காமெடி கொஞ்ச நஞ்சமல்ல. இரண்டு சீட் அதிகம் கொடுத்து விட்டால் ‘அம்மாதான் நிரந்தர முதல்வர்’ என்கின்றனர். அடுத்த தேர்தலில் கலைஞர் இரண்டு சீட்டு அதிகரித்து விட்டால் ‘கலைஞரைப் போல் வருமா’ என்கிறார்கள்.
இந்த நிலையில் நீங்களும் செங்கொடியும் மற்ற தோழர்களும் இஸ்லாத்தை விமரிசித்து கம்யூனிஸத்தை எப்படி வளர்க்கப் போகிறீர்கள் என்று எனக்கு ஒரே கவலையாக இருக்கிறது வினவு.
//சரி …இஸ்லாமிய மார்க்கத்தை நான் துறந்தால் அடுத்து என்ன வழி என்ற விளக்கத்தையும் அளிக்க வேண்டும். நீங்களும் செங்கொடியும் மற்ற தோழர்களும் கம்யூனிஸமே நிரந்தர தீர்வு என்பீர்கள். ரஷ்யாவிலும் சைனாவிலும் காலத்துக்கு ஒவ்வாத சட்டங்கள் என்று கம்யூனிசத்தை என்றோ ஓரம் கட்டி விட்டார்கள்.//
உங்களை யாரும் இஸ்லாமை விட்டு விட சொல்ல வில்லை.ஷாரியாவில் உள்ள சில இக்காலத்திற்கு ஒவ்வாத விஷயங்களை சுட்டிக் காட்டி மாற்றுங்கள் என்றே கேட்கிறோம்.
பல்தாரம்ணத்திற்கு மதவாதிகளால் சொல்லப் படும் காரணம் என்ன?
பலதார மணத்திற்கு காரணமாக முல்லாக்களினால் கூறப்படுவது (இஸ்லாமிய) ஆண்களுக்கு காம உணர்வு அதிகம் ஆகவேதான் இஸ்லாம் அனுமதிக்கிறது.
ஆனால் சுவனப் பிரியன் ,பி.ஜே உட்பட 99.9% தமிழ் இஸ்லாமியர்கள் ஒரு தாரம் உடையவர்கள் ஏன் இப்படி?.99.9 % பேர் இஸ்லாமை விட ந்ன்னெறி கொண்டவர்கள் அப்ப்டித்தானே!!!!.0.1% ஆட்களுக்காக மொத்த சமுதாயமும் ஏன் பேச வேண்டும்?
அதனையும் கண்கானித்து ஒழுங்கு செய்தால்தானே நல்லது.ஒருவன் காம இச்சைக்காக இன்னொரு கல்யாணம் செய்ய அனுமதிக்கிறோம் என்பதை விட அவருக்கு மனநல சிகிச்சை அளித்தால் அவர் குணம் அடைவார்..அதிகப்படியான காம இச்சை என்பது ஒரு மன் வியாதியே.
முதல் மனைவியின் அனுமதியின்றி இன்னொரு திருமணமென்பது சரியாக படவில்லை.
//மேலும் நாங்கள் வஞ்சிக்கப்படுகிறோம் என்று எந்த இஸ்லாமிய பெண்ணும் இது வரை கொடி பிடிக்கவும் இல்லை.//
நான்காவது மனைவியாக மகிழ்சியாக வாழ்வார்கள் என்பதும் இதுதான் இறைவனின் கட்டளை என்பதும் ,சமுதாயத்தை முன்னேற்றப் பாதையில் செலுத்தாது.
சுவனப்பிரியனே.
நம்புதாளை என்ற கிராமத்திலுள்ள சாகுல்ஹமீது என்பவரின் மகள் இராமநாதபுரத்தில் திருமணம் செய்துகொடுத்து மணமகனால் எரித்துக் கொள்ளப்பட்டால். காரணம் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு.
பொதுவாக இதுபோன்ற கொடூரங்கள் வெளியில் தெரிவதில்லை. காரணம் போஸ்மார்டம் செய்யப்ட்டு உறுப்புகளை அகற்றபடுவதால் சொர்கத்திற்கு போகமாட்டார்கள் என்ற கோட்பாடு. அதுபோல இறந்த உடலை வேதனை செய்யக்கூடாது என்ற கோட்பாடு. பிறகென்ன? தினமும் மாப்பிள்ளைகளுக்கு கொண்டாட்டம்தானே!
ஷரியத்தும் வேண்டாம்,எந்த மத அடிப்படையிலான தனி நபர் சட்டமும் வேண்டாம், அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் வேண்டும்.இதுதான் சரியான தீர்வு.ஆண்-பெண் சமத்துவத்தை அடிப்படையாக வைத்துதான் சட்டம் இருக்க வேண்டுமே தவிர மதவாதிகளின் விளக்கங்களின் அடிப்படையில் இல்லை.
பெண்களுக்கு தேவையான கல்வி,சமூக பாதுகாப்பு,பொருளாதார சுதந்திரம்- இந்த மூன்றும் இல்லாமல் பெண்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடையாது. ஷரியத் இதற்கு உதவுமா என்று கேளுங்கள்.உடனே சுவனப்ப்ரியன்கள் போன்றவர்கள் சொல்வார்கள் ஆண்களும்,பெண்களும் சேர்ந்து வேலை செய்வது இஸ்லாமிய நெறிக்கு முரணானது, பெண் தனியே தொலைதுரார பயணம் செய்வது மார்க்கத்திற்கு முரணானது என்று. நீங்கள் ஷரியத்தின் மூலமா இத்ற்கு தீர்வு காணப் போகிறீர்கள்.
‘தமது சொந்தப் பிரச்சினைகளில் ஜமாத்துகளோடு இவர்கள் போராடினாலும் இமாம்கள் அல்லது அமைப்புகளின் முன்னோடிகள் “சரியத்” என்ற ஆயுதத்தைக் கொண்டு வெட்டி வீழ்த்தி விடுகின்றனர்.’
ஆக பிரச்சினை ஷரியத் என்று தெரிந்த பின்னும் ஏன் பொது சிவில் சட்டம் வேண்டும் என்று கட்டுரையாளர் வாதிடவில்லை.
//பெண் தனியே தொலைதுரார பயணம் செய்வது மார்க்கத்திற்கு முரணானது என்று.//
அய்யா அப்பாவியே!!! முடிந்தால் உங்கள் குடும்பத்துப் பெண்ணை தனியா தொலை தூரப் பயணம் அனுப்பிப் பாருங்களேன்?
தனக்குன்னா ஒரு சட்டம்!!! …. ஊரான்களுக்கென்றால் வேறொரு சட்டமா? இதைத்தான் பாப்பார பய புத்திங்கறது.
திருந்துங்க.
இப்பொழுது பெண்கள் விண்வெளிக்கே சென்று வருகிரார்கள்.இன்னும் சவுதியில் பெண்கள் வாகனம் ஓட்டக் கூடாது என்ற சட்டமும் வைத்துள்ளார்கள்.
அய்யா,’ வேண்டாமே!!!’ அவர்களே , இன்று பெண்கள் தனியே நெடுந்தூர பயணம் செல்வதே இல்லை என்றா சொல்கிறீர். இன்று தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு போகும் பேருந்துகளையும் ரயில் வண்டியையும் சென்று பாருங்கள். எல்லோரும் அவர்கள் குடும்ப பெண்களை நம்பிக்கையோடு அனுப்பி வைக்கிறார்கள், பூனை கண்ணை மூடி கொண்டால் உலகமே இருட்டு என்று நினைப்பது போல் நீங்கள் உங்கள் குடும்பப்பெண்களை அனுப்பாவிட்டால் யாருமே செல்வது இல்லை என்று நினைப்பா? அது சரி பெண்கள் நெடுந்தூர பயணத்தை பற்றி மட்டும் பதில் சொன்ன நீர் ஆண்களும் பெண்களும் சேர்ந்து வேலை செய்வது இஸ்லாமிய நெறிக்கு முரணானது என்பதற்கு பதில் சொல்ல வில்லையே. ஏன் அந்த கருத்தில் தங்களுக்கும் உடன்பாடா அல்லது கண்டுகொள்ளாது விட்டுவிட்டீர்களா?
// ஆண்களும் பெண்களும் சேர்ந்து வேலை செய்வது இஸ்லாமிய நெறிக்கு முரணானது என்பதற்கு பதில் சொல்ல வில்லையே. //
இது நடுநிலையான கட்டுரையே இல்லை. அப்புறம் எதற்கு இதற்கெல்லாம் வரிக்கு வரி பதில் சொல்வது?
ஆனா!!!, வக்கனையா ஜால்ரா போடுறீங்களே? நீங்களெல்லாம் அப்படித்தானா என்பதை உங்க மனசு ஒத்து பதில் தரீங்களான்னு பார்க்கத்தான் அப்படி கேட்டேன்.
உங்க வண்டவாலங்கள் தான் நல்லாத் தெரியுதே?
ஆம், அப்புறம் உங்க வீட்டுப் பெண்களை அன்னிய ஆண்களுடன் கலந்துத்தான் வேலைக்கு அனுப்புகின்றீர்களா?
இதற்கு பதில் உங்களிடமிருந்து எப்படி வரும்னா… என்னுடைய வீட்டுற்கு பத்து வீடு தள்ளி ஒரு பெண் இரவு வேலைக்குக்கூட போகுதுன்னு சொல்லப் போறீங்களா?
பொதுவாக இஸ்லாமிய நண்பர்களிடம், இது போன்ற விசியங்களை ‘விவாதிக்க’ முடியாது. அந்த அளவு brain wash செய்யப்பட்டு, உணர்ச்சி பூர்வமாக மட்டும் அனுக பழக்கப்படுவிட்டார்கள்.
ஏறக்குறையே இதே பாணி தான் தீவிர மார்க்சியர்களுக்கும். ஒரே ஒரு வித்யாசம் : மார்க்சியம் ‘விஞ்ஞானபூர்வமானது’ என்று கருதுவதால், scientific method and rational, logical conepts என்று இன்னும் உணர்சிபூர்வமாக வாதாடுவார்கள். காரணம் மார்க்ஸின்ம் பெரும் படைப்பான மூலதனம் ; அதில் highly complex mathematical derivations for surplus value, profits, capital இருப்பதால், அது நிருபிக்கப்ட்ட விஞ்ஞானம் என்று தீவிரமாக நம்புகிறார்கள். அதுதான் இவர்களின் பைபிள். ஆனால் உண்மையில் மார்சியத்தின் அச்சாணியான Labour theory of surplus value, விஞ்ஞான ரீதியாக, empiricalஆ நடைமுறையில் பொய்பிக்கபட்ட hypothesis.
தலாக் – சரியத் சட்டமும் இசுலாமியப் பெண்களின் அவலமும்! இதற்கான பதிலை ’மாற்றங்கள் தேவை’ வெகுவிரைவில் தர இருக்கின்றது.
காத்திருங்கள்.
http://changesdo.blogspot.com
thanks
It clearly shows the writer does not have enough knowledge about Islam. Its not his fault also he has time to study about Islam . The only Religious scholars who are welcoming others to ask about their religion in this world is Muslims scholars.
I am requesting the writer to Meet TNTJ(Tamilnadu Dowheed Jamaat) leaders to clear his clarifications and after once he has met them the he can publish those things in this Vinavu.com. The writer have dare to meet them or Dr.Zakir Naik regarding this.????
Any way the following link will guide you or you can make calls to the following mobile numbers and you can ask all your questions.
http://onlinepj.com/books/islam-penkalin-urimayai/
9865584000
9003225959
984674337
இது குரான் 4.3 க்கு அண்னன் பி.ஜே அவர்களின் விளக்கம். இத்னை படித்து பர்க்கவும். அதாவது அடக்க முடியாக் காமம் கொண்ட இஸ்லாமிய ஆண்கள் ,விபச்சாரம் செய்யாமல் இறன்ரடாவது திருமணம் செய்யலாம் என்கிறார்.முன்று நான்கு திருமணம்ம் என்று அடக்க முடியாக் காமம் என்றால் அவரையும்.அவருக்கு ஆதரவு தரும் மதகுருக்களையும் மன் நல மருத்துவமனையில் சேர்ப்பது நலம். இனி அண்னன் பி.ஜே
___________________
http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/106-palatharamanam/
106. பலதார மணம்
இவ்வசனம் (4:3) நான்கு மனைவியர் வரை திருமணம் செய்ய ஆண்களுக்கு அனுமதி வழங்குகிறது. இது பெண் களுக்கு இழைக்கப்படும் அநீதி எனப் பரவலாகக் கருதப்படுகிறது. இது பற்றி சரியாக ஆய்வு செய்தால் இஸ்லாம் இவ்வாறு அனுமதித்திருப்பதன் நியாயத்தை உணர முடியும்.முதல் மனைவி பாதிக்கப்படுகிறாள் என்பதால் இது பெண்களுக்கு இழைக்கப் படும் அநீதி என்று கருதப்படுகிறது.
முதல் மனைவி பாதிக்கப்படுவாள் என்பது உண்மை தான்.
இன்னொரு பெண்ணை இரண்டா வதாக மணப்பதால் மட்டும் முதல் மனைவி பாதிக்கப்பட மாட்டாள். மணக்காமல் வைப்பாட்டியாக வைக்கும் போதும், கணவன் பல பெண்களிடம் விபச்சாரம் செய்யும் போதும் முதல் மனைவி பாதிக்கப்படுகிறாள். இன்னொரு பெண்ணை மணப்பதால் ஏற்படும் பாதிப்பை விட இது அதிகப் பாதிப்பை ஏற்படுத்தும். பல பெண்களிடம் தொடர்பு வைத்துக் கொண்டு அவர்கள் மூலம் நோயைப் பெற்று முதல் மனைவிக்குப் பரிசளிக்கும் கூடுதலான பாதிப்பு இதனால் முதல் மனைவிக்கு ஏற்படுகிறது.
இரண்டாம் திருமணத்தை எதிர்ப்பவர் கள் வைப்பாட்டி வைப்பதையும், விபச்சாரத்தையும் சட்டப்பூர்வமாகத் தடுக்க வேண்டும். பலதார மணத்தை மறுக்கும் எந்த நாட்டிலும் (நமது நாடு உள்பட) விபச்சாரத்துக்கோ, வைப்பாட்டி வைத்துக் கொள்வதற்கோ தடை இல்லை. அது குற்றமாகவும் கருதப்படுவதில்லை.
பெண்ணுரிமை பாதிக்கிறது என்பது தான் பலதார மணத்தை எதிர்க்கக் காரணம் என்றால் சின்ன வீட்டையும், விபச்சாரத்தையும் சட்டப்பூர்வமான குற்றம் என்று அறிவிக்க வேண்டும்.
சின்ன வீடு வைத்துக் கொள்ளும் ஆண்களையும், விபச்சாரம் செய்யும் ஆண்களையும் தடுக்க முடியவில்லை. இன்னொருத்தியின் கணவன் என்று தெரிந்தும் அவனைக் கைக்குள் போடும் பெண்களையும் தடுக்க முடியவில்லை என்பதால் தான் ‘சட்டப்பூர்வமான மனைவி என்ற தகுதியை வழங்கி விட்டு குடும்பம் நடத்து’ என்று இஸ்லாம் கூறுகிறது.
திருமணம் ஆகாமல் பெண்கள் கர்ப்பமடைவதும், கைவிடப்படுவதும் மலேசிய இந்து சமுதாயத்தில் அதிகமாகி வருவதைக் கண்டு அங்குள்ள இந்துக் கள் பலதார மணத்தைத் தங்களுக்கும் அனுமதிக்குமாறு போராடி வருகின்றனர். (மலேசிய நண்பன் நாளிதழ் – 05.01.2002)
பலதார மணத்தை இஸ்லாம் அனுமதிப்பதற்குப் பல நியாயமான காரணங்கள் உள்ளன.
1. திருமணம் செய்யும் பருவத்தை அடைந்த பெண்கள் திருமணம் செய்யும் பருவத்தை அடைந்த ஆண்களை விடப் பல மடங்கு அதிகமாக உள்ளனர். ஏனெனில் பெண்கள் ஆண்களை விட சுமார் 10 வருடங்களுக்கு முன்பே திரு மணத்திற்குத் தயாராகி விடுகின்றனர்.
2. ஆண்களை விட பெண்களே மக்கள் தொகையில் அதிகமாக இருக்கிறார்கள்.
3. இறப்பு விகிதத்தில் ஆண்களை விட பெண்கள் குறைவாக இருக்கிறார்கள்.
4. போர்க் களங்களில் இளம் மனைவியரின் கணவர்கள் கணிசமான எண்ணிக்கையில் மாண்டு வருகின்றனர்.
5. பெரும் எண்ணிக்கையிலான பெண்களுக்கு மண வாழ்வு கிடைக் காததால் விபச்சாரம் பெருகி வருகிறது.
6. பெண்களுக்குத் திருமணம் செய்து கொடுப்பதற்காக பெரும் தொகையை வரதட்சணையாகக் கொடுக்கும் அவலமும் அதிகரித்து வருகிறது.
7. வரதட்சணை கொடுக்க இயலாத வர்கள் தங்கள் பெண் குழந்தைகளை உயிருடன் கொலை செய்வதும், கருவிலேயே சமாதி ஆக்குவதும் அன்றாட நிகழ்ச்சிகளாகி வருகின்றன.
8. திருமண வாழ்வைப் புறக்கணிக்கும் பிரம்மாச்சாரிகளும் ஆண்களின் பற்றாக் குறையை மேலும் அதிகரிக்கிறார்கள்.
9. பெற்றோரால் வரதட்சணை கொடுத்துத் திருமணம் செய்து தர முடியாது என்பதை உணரும் இளம் பெண்கள் தாமாகவே வாழ்வைத் தேடிக் கொள்வதாக எண்ணி ஏமாந்து கற்பிழந்து வருகின்றனர்.
10. தனக்குத் திருமணம் நடக்காது என்றெண்ணி தற்கொலை செய்யும் பெண்களும் அதிகரித்து வருகின்றனர்.
இது போன்ற நியாயமான காரணங்களின் அடிப்படையிலும், ஆண்கள் விபச்சாரத்தில் விழுவதைத் தடுப்பதற்காகவும் இஸ்லாம் பலதார மணத்தை அனுமதிக்கிறது.
இதனால் பல பெண்களுடன் தொடர்பு வைப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என்பது தான் யதார்த்த நிலை.
ஏனெனில் திருமணம் எனும் போது பொறுப்புகளைச் சுமக்க வேண்டியிருப்ப தால் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஆண்கள் மட்டுமே பலதார மணத்தை நாடுவர். விபச்சாரத்திற்கோ, சின்ன வீடு வைத்துக் கொள்வதற்கோ எவ்விதப் பொறுப்பையும் சுமக்க வேண்டியதில்லை என்பதால் ஆண்கள் சீரழியும் நிலைமை தான் உருவாகும்.
மேலும் இது போன்ற தகாத உறவுகள் மூலம் பாலியல் நோய்களைத் தானும் பெற்று, தனது மனைவிக்கும் பரிசளிக்கும் அவலங்களும் அதிகரிக்கும்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக பலதார மணம் செய்யுமாறு இஸ்லாம் கட்டளை ஏதும் பிறப்பிக்கவில்லை. தேவையுள்ளவர்களுக்கு அனுமதி மட்டுமே வழங்கியுள்ளது.
இரண்டாம் தாரமாகவாவது ஒரு கணவன் கிடைத்தால் போதும் என்ற நிலையில் ஏராளமான பெண்கள் இருப்பது பலதார மணத்தின் நியாயத்தை உணர வைக்கிறது.
ஆணுக்கு அனுமதிப்பது போல் பெண்ணுக்கும் பலதார மணத்தை அனுமதிக்க வேண்டுமென்று சிலர் கூறுகின்றனர். இது ஏற்க முடியாத வாதமாகும்.
மேலே நாம் சுட்டிக் காட்டிய காரணங்களில் எதுவும் பெண்களுக்குப் பொருந்தாது. பெண்களுக்குப் பலதார மணத்தை அனுமதித்தால் மேலே சொன்ன தீய விளைவுகள் மேலும் அதிகரிக்கும். எனவே, பெண்களுக்குப் பல கணவர்களை அனுமதிக்க நியாயமான ஒரு காரணமும் இல்லை.
மாறாகப் பெண்ணுக்கும் இந்த அனுமதி வேண்டும் என்போரின் விருப்பப்படி அனுமதிப்பதனால் விபரீ தங்களும், கேடுகளும் தான் ஏற்படும் என்பதையும் நாம் உணர வேண்டும்.
ஒரு ஆண் நூறு பெண்களுடன் ஒரு ஆண்டு தனித்து விடப்பட்டால் அந்த நூறு பெண்களும் நூறு குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியும்! ஒரு பெண் நூறு ஆண்களுடன் தனித்து விடப்பட்டால் அவளால் நூறு குழந்தைகளைப் பெற முடியுமா?
ஒரு ஆணுக்குப் பல பெண்கள் மூலம் பத்துப் பிள்ளைகள் பிறந்தால் அந்தப் பத்துப் பிள்ளைகளின் தந்தை யார்? தாய் யார்? என்பதை அறிந்து கொள்ள முடியும். பல ஆண்களிடம் உறவு வைத்துள்ள ஒரு பெண் பெற்றெடுக்கும் ஒரே ஒரு பிள்ளைக்குத் தாய் யார்? என்பது தான் தெரியுமே தவிர, தந்தை யார்? என்பதை அறிந்து கொள்ள முடியாது.
இந்த நிலையை விட அந்தக் குழந்தைக்கு வேறு கேவலம் எதுவுமிருக்க முடியாது. இது போல் உருவாகக் கூடிய, தகப்பன் யார் என்று தெரியாத சந்ததிகள் உள்ளம் நொறுங்கி மனோ வியாதிக்கு ஆளாவார்கள்.
ஒரு ஆண் நான்கு மனைவிகள் மூலம் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்தால் அந்த நான்கு குழந்தை களையும் பராமரிக்கும் பொறுப்பை அவன் தலையில் சுமத்தி விடலாம். அந்தக் குழந்தைகளுக்கு ஆகும் செலவுகளைக் கொடுக்குமாறு அவனை நிர்பந்திக்க முடியும். ஆனால் ஒரு பெண் நான்கு ஆண்களுடன் கூடிப் பெற்றெடுக்கும் ஒரு குழந்தைக்கு இந்த உத்திரவாதம் அளிக்க முடியுமா? ஒவ்வொருவனும் அக்குழந்தை தன்னுடையதில்லை என்று மறுத்து விட்டால் எந்தச் சான்றின் அடிப்படையில் அவன் மீது பொறுப்பைச் சுமத்த முடியும்? அதற்குரிய செலவினங்களைக் கொடுக்கு மாறு அவனை எப்படி நிர்பந்தப்படுத்த முடியும்? வளரப் போகும் அந்தக் குழந்தையின் எதிர்காலம் இருள் நிறைந்ததாக அல்லவா ஆகும்?
அது போல் ஒவ்வொருவனும் அந்தக் குழந்தை தன்னுடையது என்று உரிமை கொண்டாடினால் அந்தக் குழந்தையைக் கூறு போட்டு ஆளுக்குக் கொஞ்சம் பிரித்துக் கொடுக்க முடியுமா?
ஒருவனுக்குப் பல மனைவியர் மூலம் பல நூறு குழந்தைகள் இருந்தாலும் அவன் இறந்த பின் பல நூறு குழந்தைகளுக்கும் தந்தை இன்னார் என்று தெரிவதால் வாரிசுகள் என்ற அடிப்படையில் அவனது சொத்தில் பங்கு கேட்க முடியும்.
பல ஆண்களை மணந்தவளின் கணவர்களில் எவர் இறந்தாலும், அவளது பிள்ளைகள் தந்தையின் சொத்து என்று உரிமை கொண்டாட வழியில்லாது போகும்.
இஸ்லாம் வழங்கியுள்ள இந்த அனுமதியை சில முஸ்லிம்கள் முறைகேடாகப் பயன்படுத்துவதையும் நாம் இங்கே சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.
இரண்டாம் திருமணம் செய்யக் கூடியவர்கள், முதல் மனைவிக்கு அதைத் தெரிவிக்காமல் இரகசியமாகத் திருமணம் செய்கின்றனர். முதல் மனைவிக்கு இது பற்றித் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் இவர்கள் கருதுகின்றனர்.
உண்மையில் முதல் மனைவியின் உரிமை இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் அவளுக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியம் கண்டிப்பாக உள்ளது.
ஒரு மனைவியுடன் ஒருவன் வாழும் போது, அவனது எல்லா நாட்களையும் அவளுக்கே கொடுக்கிறான். அவளுக்கே தனது பொருளாதாரத்தையும் செலவு செய்கிறான். இந்த நிலையில் அவன் மற்றொரு திருமணம் செய்தால் முதல் மனைவிக்குக் கிடைத்து வந்த நாட்களில் பாதி நாட்கள் குறைந்து விடுகின்றன. பொருளாதாரத்திலும் பாதி பறி போகிறது.
இரண்டாம் திருமணத்தின் மூலம் முதல் மனைவி பாதிக்கப்படும் போது, அவளுக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியம் தானாகவே ஏற்பட்டு விடுகின்றது.
‘முழு நாட்களையும் எனக்கே தருவீர்கள் என்பதற்காகத் தான் உங்களை நான் மணந்து கொண்டேன்; அதில் பாதி நாட்கள் எனக்குக் கிடைக்காது என்றால், அத்தகைய வாழ்க்கை எனக்குத் தேவையில்லை’ என்று கூட அவள் நினைக்கலாம்.
இரண்டாம் திருமணத்தைப் பற்றி அவளுக்குத் தெரிவிக்கப்படும் போது தான் மேற்கண்ட உரிமையை அவள் பெற முடியும்.
முதல் மனைவிக்குத் தெரியாமல் இரண்டாம் திருமணம் செய்தால் இரண்டாம் மனைவியும் பாதிக்கப்படு கிறாள். ஏனெனில் முதல் மனைவிக்குத் தெரியாமல் திருமணம் செய்பவர்கள், அவளுக்குத் தெரியக் கூடாது என்பதற்காக சரிசமமாக இரண்டு மனைவிகளிடமும் நாட்களைக் கழிக்காமல் அவ்வப்போது ஏதேனும் பொய்க் காரணங்களைக் கூறிக் கொண்டு இரண்டாம் மனைவியிடம் செல்கின்றனர்.
இதனால் இரண்டாம் மனைவிக்கு, அவளுக்குச் சேர வேண்டிய உரிமையை அவனால் கொடுக்க முடியாத நிலை ஏற்படுகின்றது.
முதல் மனைவிக்குத் தெரியாமல் இரண்டாம் திருமணம் செய்திருக்கும் நிலையில் அவன் மரணித்து விட்டால் அப்போதும் அவனது மனைவியர் பாதிக்கப்படுகின்றனர்.
கணவனின் சொத்துக்கள் தனக்கும், தனது பிள்ளைகளுக்கும் மட்டுமே உரியது என்று முதல் மனைவி நினைத்துக் கொண்டிருப்பாள். அவன் மரணித்தவுடன் இரண்டாம் மனைவியும் அவளது பிள்ளைகளும் சொத்தில் பங்கு கேட்டு வந்தால் அதனாலும் முதல் மனைவியும் அவளது பிள்ளைகளும் ஏமாற்றப்படுகிறார்கள்.
இரண்டாம் திருமணம் பற்றி முதல் மனைவியிடம் தெரிவிக்கும் போது, அவள் ஏற்றுக் கொண்டால் பிரச்சனை இல்லை. இரண்டாம் திருமணம் செய்தால் உன்னோடு வாழ மாட்டேன்’ என்ற முடிவை அவள் எடுத்தால் அதற்கான உரிமை அவளுக்கு உண்டு.
தனது கணவன் தன்னைத் தவிர யாரையும் திருமணம் செய்யக் கூடாது என்று ஒரு பெண் வலியுறுத்தினால் ஆண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமையை அவள் மறுத்தவளாக மாட்டாள்.
அலீ (ரலி) அவர்களுக்குத் தமது புதல்வியை மணம் முடித்துக் கொடுக்க ஹிஷாம் பின் முகீரா என்பவர் அனுமதி கேட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அனுமதிக்க மாட்டேன்; மீண்டும் அனுமதிக்க மாட்டேன்; மீண்டும் அனுமதிக்க மாட்டேன். வேண்டுமானால் அலீ, எனது மகளை விவாகரத்துச் செய்து விட்டு, அவரது மகளை மணந்து கொள்ளட்டும்’ எனக் கூறினார்கள். (நூல்: புகாரி 5230)
)
10.07.2009. 11:26
__________________
இத்னை பி.ஜே தனது வாழ்வில் எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்ட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.
சங்கர் சாரே!!!,
ஃஃஇத்னை பி.ஜே தனது வாழ்வில் எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்ட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.ஃஃ
இதை நீங்க கேட்பதற்கு முன்பு நான் எனக்கு அடக்கமுடியாத காம உணர்வு ஏற்படுவதால் நான் இவர்கள் கூறியவாறு இரண்டாம் திருமணம் பண்ணாமல் விபச்சாரிகளிடம் சென்று எனது உணர்வை தனித்துக் கொள்கின்றேன். அதனால் எனக்கு எந்தவித கேடும் ஏற்படவில்லை. எனது மனைவி இதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகின்றாள் எனக் கூறிவிட்டு உங்கள் கேள்வியைக் கேட்டால் நியாயமாக இருக்கும்.
அப்படி ஒரு வாக்குமூலம் உங்களால் கொடுக்க முடியுமா?
எனக்கு அடங்கா காமம் ஏற்படுவது இல்லை.நடுத்தர வாழ்வின் சிக்கல்களும் ,வருமான வரி,கட்ட வேண்டிய கடன் தவணை,குழந்தைகளின் கல்வி,அவர்களது எதிர்காலம் என்று நினைத்தால் வருகிற காம உணர்வும் காணாமல் போகிறது.
ஆனால் அலிக்கு வேறுதிருமணம் செய்ய முயற்சிக்கும்போது மட்டும் ஏன் பாத்திமாவை தலாக் செய்துவிட்டு வேறு திருமணம் செய்யச் சொல்கிறார்கள் முகம்மது நபி. ஏன் இந்த ஓரவஞ்சனை? தன் மகள் மட்டும்தான் ஆத்மா உள்ள பெண்ணோ? அவரவருக்கு அவரவர் மகள் உசத்தியில்லையா?
ஆனாலும் அடிமைப்பெண்களை மட்டும் மருமனுக்கு கொடுக்கிறார்கள். (இவர்கள் வைப்பாட்டியாக மாட்டார்களா?)
///இத்னை பி.ஜே தனது வாழ்வில் எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்ட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்//
சங்கர் சாரே, பீஜேக்கு காம உணர்வு அதிகமில்லை என்றே கருதுகிறேன். வேண்டுமானால் பாக்கருக்கு நான்கு மனைவிகளை முடித்து வைத்திருக்கலாம். பாக்கரையும் வெளியே அனுப்பியிருக்கத் தேவையில்லை. பீஜே மிஸ் பண்ணிட்டாரு.
ந ந்தினியோட ஜல்ஷா பன்னும்போது காப்பாத்தின பிஜே சக்கிலாவோட
ஜல்ஷா பன்னும்போது காப்பாத்த முடியாம போச்சு. காரணம் ஹாமிம் என்ற படுபாவி. நோட்டீஸ் அடிச்சி தெரு தெருவா ஒட்டிபுடுவேன்னு மிரட்டிபுட்டாரு. இத வீடியோவில பாக்லாமுங்களா? இரண்டு நாள் பொறுங்க. வீடியோ காட்டுரேன்
I was waiting for somebody to rip these “facts” apart. Since nobody has (probably coz, it is just stating the obvious), here is my attempt. இதை இன்னும் ஒரிரு இணையப் பக்கங்களில் வாசித்ததால், இதற்கு எதிர்க்கருத்துச் சொல்வது முக்கியம் என்று நினைக்கின்றேன்.
பலதார மணத்தை ஆதரிப்பவர்கள், அதற்கான உண்மையான காரணங்களையும் தேவையையுமே குறிப்பிட்டு வாதிட வேண்டுமே ஒழிய, சிறுவயதிலிருந்தே கேள்விகள் கேட்காமல் நம்ப வளர்க்கப்பட்டவர்களை, யாரும் கேள்விகள் கேட்க மாட்டார்கள் என்பதற்காக ஒருவர் தனது நிலைக்கு ஆதாரமென மனதில் வந்ததெல்லாம் சும்மா சொல்வது நம்பமுடியாமல் உள்ளது. இவ்வாறு பொய் சொல்வதால் உங்கள் கடவுளுக்கு உங்களில் கோபம் வராதா அல்லது தன்னைத் தான் ஆதரிக்கிறான் என்பதால் நீங்கள் என்ன சொன்னாலும் விட்டு விடுவானா அந்தக் கடவுள்?
பலதார மணத்தை இஸ்லாம் அனுமதிப்பதற்குப் பல நியாயமான காரணங்கள் உள்ளன.
1. திருமணம் செய்யும் பருவத்தை அடைந்த பெண்கள் திருமணம் செய்யும் பருவத்தை அடைந்த ஆண்களை விடப் பல மடங்கு அதிகமாக உள்ளனர். ஏனெனில் பெண்கள் ஆண்களை விட சுமார் 10 வருடங்களுக்கு முன்பே திரு மணத்திற்குத் தயாராகி விடுகின்றனர்.
2. ஆண்களை விட பெண்களே மக்கள் தொகையில் அதிகமாக இருக்கிறார்கள்.
Seriously, உண்மை இக்கட்டுரை சொல்வதற்கு முற்றிலும் மாறானது. சதாரணமாக ஒரு சமமின்மையும் இல்லாதிருந்தாலே உலகில் 105-107 ஆண்களுக்கு 100 பெண்களே பிறப்பார்கள். இளவதிலும் திருமண வயதிலும் கிட்டத்தட்ட இதே sex ratio தான் அநேகமான நாடுகளில் உள்ளது. ஆயினும் இந்தியா, சீனா நாடுகளில் நடத்தப்படும் பெண் சிசுக் கொலைகளால் இந்நாடுகளில் பொதுவாக சராசரிக்கு மிகக் கூடுதலாகவே ஆண்களின் எண்ணிக்கை உண்டு. சீனாவில் தனிய ஒவ்வொரு ஆண்டும் பெண்களை விட ஒரு மில்லியன் ஆண்கள் கூடுதலாகப் பிறக்கிறார்கள் எனக் கருதப்படுகின்றது. இதனால் பெண்களுக்குத்தான் பற்றாக்குறையே ஒழிய ஆண்களுக்கு அல்ல. சீனாவில் 28-49 வயதிற்கு இடைப்பட்ட திருமணமாகாதவர்களில் 94 சதவீதமானோர் ஆண்கள். இந்நிலமை தொடரின், அடுத்த 20 ஆண்டுகளில் பரந்த ஆசியாவிலும், குறிப்பாக இந்தியாவிலும் சீனாவிலும் இளவயது ஆண்கள் பெண்களை விட 10-15 சதவீதம் அதிகளவு இருப்பார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது. திருமணம் ஒருவரின் வாழ்வில் மிக முக்கியமாகக் கருதப்படும் இச்சமூகங்களில் இவ்வாண்கள் திருமணம்
செய்யவோ குடும்பம் நடத்தவோ வாய்ப்புகள் கிடைக்கப்போவதில்லை. இதனால் சமுகத்தில் வன்முறைகள் கூடப் பலமடங்கு அதிகரிக்கிறதாம்.
Abnormal sex ratios in human populations: Causes and consequences
Socio-cultural aspects of the high masculinity ratio in India
Characteristics of sex-ratio imbalance in India, and future scenarios
3. இறப்பு விகிதத்தில் ஆண்களை விட பெண்கள் குறைவாக இருக்கிறார்கள்.
இது point. ஆனால் ஒரெயொரு பிரச்சனை என்ன தெரியுமா? பெண்கள் ஆண்களை விடக் கூடுதல் ஆண்டுகள் உயிர் வாழ்வதால் 65 வயதிற்கு மேற்பட்டொரிலேயே பெண்களின் எண்ணிக்கை ஆண்களைவிடக் கூடுதலாகக் காணப்படுகின்றது. ஆனால் இங்கு யாரும் 65 வயதிற்கு மேற்பட்ட பெண்களைத் ஆண்கள் திருமணம் செய்யலாமென வாதிடுவதாகத் தெரியவில்லையே.
4. போர்க் களங்களில் இளம் மனைவியரின் கணவர்கள் கணிசமான எண்ணிக்கையில் மாண்டு வருகின்றனர்.
உண்மை. Although போர்க்கால்ங்கலிலும் போருக்கு பிந்திய உடனடிக்காலங்களிலும் பிறக்கும் ஆண் குழந்திஅகளின் எண்ணிக்கை சாதாரண காலங்களை விட சிறிது கூட. போரினால் ஆதரவற்று விடப்படும் பெண்களுக்கு உடனடித் தேவை இன்னொரு திருமணமல்ல. அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து அவர்களை முன்னேற்றி தமது கால்களில் நிற்கப் பண்ணுவதே. அதன் பின் அவர்களுக்குத் திருமணம் செய்ய வேண்டுமெனில் அவர்களே அதைத் தீர்மானிக்கலாம். ஈழத்தில் இன்று தாண்டவமாவும் இப்பிரச்சனைக்கும் இதே முதல் தீர்வாக வேண்டும். இத்தேவையைப் பூர்த்திசெய்வதற்குத் தேவைக்கும் அதிகமாக புலம் பெயர்ந்த தமிழர்கள் வெளிநாடுகளில் நல்ல நிலமைகளில் உள்ளார்கள். பலர் செய்துகொண்டும் உள்ளனர். இதை வசதியுள்ள எல்லோரையும் செய்யத் தூண்டவேண்டுமே ஒழிய இப்பெண்களை பலதாரமணமென்னும் போர்வையில் exploit பண்ணுவது நியாயமேயில்லை.
5. பெரும் எண்ணிக்கையிலான பெண்களுக்கு மண வாழ்வு கிடைக் காததால் விபச்சாரம் பெருகி வருகிறது.
விபச்சாரம் பெருகி வருவதற்குக் காரணம் நிச்சயமாக இதுவல்ல. ஆண்கள