privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்சி.பி.ஐ - சி.பி.எம்மேற்கு வங்கத்தில் போலி கம்யூனிஸ்டுகள் படுதோல்வி ஏன்?

மேற்கு வங்கத்தில் போலி கம்யூனிஸ்டுகள் படுதோல்வி ஏன்?

-

உருகுது போலிக் கம்யூனிசம்! மருகுது சமூகப் பாசிசம்!!

மிழகத் தேர்தல் முடிவுகளைப் போல் அல்லாமல் மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகள் ஊடகங்களுக்கும் அதை நெருக்கமாக கவனித்து வந்த மக்களுக்கும் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. என்.டி.டிவி போன்ற ஒரு சில முதலாளித்துவ ஊடகங்களில் இது கம்யூனிசத்துக்கு நேர்ந்த தோல்வியா என்று அலசப்பட்டது. ஆனால் சி.பி.எம் தோழர்கள் தெளிவாக இருக்கிறார்கள். அங்கே கம்யூனிசம் இருந்தால் தானே தோற்பதற்கு? அது மற்றவர்களை விட அவர்களுக்குத் தானே தெளிவாகத் தெரியும்? எனவே, மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பினார்கள் என்றும் அதனால் தான் தோற்று விட்டோமென தலைவர்கள் சொல்லி வருகிறார்கள்.

இனி இத்தோல்வியை ஆராய்வதற்கென்று சி.பி.எம் கட்சி ஒரு கமிட்டியை அமைக்கும். அவர்களும் கண்களைக் கட்டிக் கொண்டு தோல்வியெனும் இந்தக் கருப்பு யானையைத் தடவித் தடவி விதவிதமாக ஆய்வு முடிவுகளை வெளியிடுவார்கள். அது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால், நாம் சி.பி.எம் கட்சி பெற்றிருக்கும் இந்தத் தோல்வியை அதன் முழுமையான பொருளில் அறிந்து கொள்வது மிகவும் அவசியம். அதற்கும் முன், சி.பி.எம்மின் 34 ஆண்டு கால ‘வெற்றியின்’ மெய்யான அர்த்தம் என்னவென்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இந்தியப் போலி ஜனநாயக அமைப்பில் தொடர்ச்சியாக 34 ஆண்டுகளாக ஒரு மாநிலத்தின் ஆளும் கட்சியாக நீடிக்க முடிந்திருப்பதன் காரணத்தை விளங்கிக் கொள்வதிலிருந்து தான் அவர்களின் இன்றைய தோல்வியையும் புரிந்து கொள்ள முடியும்.

சில முதலாளித்துவ அறிவுஜீவிகள், சி.பி.எம் கட்சி மக்களிடமிருந்து வெகுதூரம் விலகிப் போய் விட்டது என்று சொல்கிறார்கள். இத்தனை நாட்களாக சி.பி.எம் கட்சியின் பிரதானமான பலமாக இருந்த ஊரகப் பகுதியின் ஓட்டு வங்கி சிங்கூரிலும் நந்திகிராமிலும் சி.பி.எமின் வெறியாட்டத்தின் விளைவாய் தகர்ந்துள்ளது என்கிறார்கள். மேலும் மக்கள் ஒரே கட்சிக்குத் தொடர்ந்து வாக்களித்து சோர்ந்து போயிருந்தார்கள் என்றும் இப்போது தான் மம்தா பானர்ஜியின் வடிவில் ஒரு மாற்றத்தைக் கண்டடைந்துள்ளார்கள் என்றும் சொல்கிறார்கள். இதில் முழுமையும் உண்மையில்லை என்றாலும் முழுமையாகப் பொய்யும் இல்லை.

சி.பி.எம் கட்சியின் 34 ஆண்டு ‘வெற்றிக்’ கதை

சி.பி.எம் கட்சியினர் தங்களது மேற்கு வங்கச் சாதனையாக அடிக்கடி சுட்டிக் காட்டுவது அங்கே இவர்கள் செய்ததாக பெருமைபட்டுக் கொள்ளும் நிலச் சீர்திருத்தம். இந்த நிலச்சீர்திருத்தம் தான் சி.பி.எம் கட்சிக்கு மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு வலுவான வாக்கு வங்கியை உண்டாக்கித் தந்தது என்று அவர்களே சொல்கிறார்கள். அதில் உண்மை இல்லாமலும் இல்லை. ஆனால், இந்தியாவிலேயே மிகச் சிறப்பாக நிலச் சீர்திருத்தம் செய்துள்ள முதல் மாநிலமான மேற்கு வங்கம் தான் இந்தியாவில் விவசாயிகள் தற்கொலையில் ஆறாம் இடத்தில் இருக்கிறது. ஆக, இவர்கள் சொல்லும் நிலச் சீர்திருத்தம் உண்டாக்கிய உண்மையான விளைவு என்ன என்கிற இரகசியம் இதற்குள் தான் அடங்கியிருக்கிறது.

எங்கே செல்லும் இந்தப் பாதை...??

மேற்கு வங்கத்தில் எழுபதுகளில் ஆட்சிக்கு வரும் இடது முன்னணி பிற மாநிலங்களோடு ஒப்பிடும் போது ஓரளவுக்குச் சிறப்பான நிலச்சீர்திருத்தத்தை செய்திருந்தது. ஆனால், நிலச்சீர்திருத்ததின் விளைவாக நிலம் பெற்ற விவசாயிகள்  அதிலிருந்து உண்மையான பலன்களை அறுவடை செய்தார்களா? அப்படிச் செய்திருந்தால் ஏன் எழுபதுகளில் 33 லட்சமாக இருந்த நிலமற்ற விவசாகளின் எண்ணிக்கை இன்று இரட்டிப்பாகியுள்ளது? ஏன் பரவலாக விவசாயிகளின் தற்கொலைகள் நிகழ்கிறது? இதையும் மீறி, எப்படி இத்தனை ஆண்டுகளாக ஊரகப் பகுதிகளில் சி.பி.எம் தனது செல்வாக்கை நிலை நிறுத்திக் கொண்டிருந்தது?

இந்தக் கேள்விகள் தனித்தனியாகத் தெரிந்தாலும், இவற்றுக்கான விடை என்பது ஒரு தொகுப்பாகத் தான் பார்க்க முடியும். அதன் அடிப்படையிலிருந்தே சி.பி.எம்மின் வாங்கு வங்கியில் விழுந்த பெரிய ஓட்டையையும் அதன் தொடர் விளைவாய் இன்று அவர்கள் சந்தித்திருக்கும் தோல்வியையும் புரிந்து கொள்ள முடியும்.

நிலச் சீர்திருத்தம் என்றவுடன் நீங்கள் நினைப்பது போல் நிலமற்ற விவசாயிகளுக்கு அப்படியே நிலத்தின் உரிமையை எந்த கேள்வியும் இன்றி மாற்றிக் கொடுத்து விட்டார்கள் என்று பொருள் இல்லை. நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிலங்களுக்கான பட்டாக்களை விவசாயிகளின் கைகளில் கொடுக்காமல், அவற்றை அந்தந்த பகுதி கட்சி அலுவலகத்திலேயே வைத்துப் பராமரித்துள்ளனர். உண்மையில், அந்தக் கால ஜமீன்தார்களின் இடத்தை வட்டார கட்சித் தலைவர்களைக் கொண்டு மாற்றீடு செய்தது தான் மேற்குவங்கத்தில் ‘தோழர்கள்’ செய்த நிலச்சீர்திருத்தத்தின் மிக முக்கியமான அடிப்படை. ஒருபக்கம் விவசாயிகளுக்கு நிலத்தின் மேலிருந்த உரிமையை உறுதிப்படுத்தியிருந்தாலும், இன்னொரு பக்கம் அதையே தனது வாக்கு வங்கியை உறுதிப் படுத்திக் கொள்ளும் நேரடியான ஒரு பேரப் பொருளாகவும் வைத்திருக்கிறார்கள்.

ஒரு பக்கம் நிலமற்ற விவசாயிகளுக்கு நிலத்தை வழங்கியிருப்பதாகச் சொல்லும் அதே சி.பி.எம் அரசு தான், இன்னொரு பக்கம் விவசாயப் பொருட்களைச் சந்தைப் படுத்துவதற்கான ஒரு சட்டத்தை (Agricultural products marketing commitee act) நிறைவேற்றி, பன்னாட்டு நிறுவனங்கள் கான்டிராக்ட் விவசாயத்தில் ஈடுபடவும், தனியார் விவசாயக் கிடங்குகளை நிறுவவும் அனுமதியளித்தது. இந்தியாவின் மற்ற பகுதிகளில் விவசாயத்தைக் காட்டிக் கொடுத்து விவசாயிகளைக் கருவறுக்கும் மறுகாலனியாக்கப் பொருளாதாரக் கொள்கைகளை எப்படி பிற ‘முதாலாளித்துவக்’ கட்சிகளின் அரசுகள் நடைமுறைப்படுத்தியதோ அப்படியே மேற்கு வங்கத்தின் ‘பாட்டாளி’ வர்க்கக் கட்சியும் நடைமுறைப்படுத்தியது. இப்படி, வெறுமனே நில உரிமையை மட்டும் விவசாயிகளிடம் கொடுத்து விட்டு விவசாயத்தின் மீது அவர்களுக்கு இருந்த உரிமையைப் பறிக்கும் பொருளாதாரக் கொள்கைகளையும் நடைமுறைப்படுத்தியிருக்கிறார்கள்.

இதன் அடிப்படையில் தான் அரசு தானியக் கிடங்குகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு விவசாயிகள் நிர்க்கதியாக விடப்பட்டனர். கடந்த டிசம்பர் – ஜனவரி மாத வாக்கில் இந்தியாவெங்கும் காய்கறிகளின் விலை உயர்ந்து மக்களின் கழுத்தை நெறித்துக் கொண்டிருந்த சமயத்தில் மேற்கு வங்க விவசாயிகளிடமிருந்து ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்டிருந்த 42 லட்சம் டன் உருளைக் கிழங்குகள் முறையான சேமிப்புக் கிடங்கு இல்லாமல் அழுகி நாறிக் கிடந்தது. ஆதாரம் – http://indiatoday.intoday.in/site/video/42-lakh-tonnes-of-potatoes-rot-in-west-begal/1/126469.html

‘பாட்டாளி வர்க்க’ அரசின் சேமிப்புக் கிடங்குகளில் முதலாளித்துவ பெப்சியின் லேய்ஸ் சிப்ஸ் தயாரிப்புக்காக கொள்முதல் செய்யப்பட்ட உருளைக் கிழங்குகளைச் சேமிப்பதற்காக மட்டும் பெரும்பாலான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேற்குவங்க ‘பாட்டாளித்’ தோழர்களின் இந்த துரோகத்தனத்தை எதிர்த்து சமீபத்தில் ஹூக்ளி மாவட்ட உருளை விவசாயிகள் போராடியுள்ளனர்.

சுமார் 6 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களை பகிர்ந்து கொடுத்திருப்பதாகச் சொல்லும் சி.பி.எம், அதில், சுமார் 1.20 லட்சம் விளை நிலங்களை பன்னாட்டு ரியல் எஸ்டேட் முதலைகளுக்கு தாரை வார்த்துக் கொடுத்துள்ளது. சுமார் 4 லட்சம் விவசாயிகள், தங்கள் நிலங்களை வசதியான விவசாயிகளுக்கு விற்று விட்டு விவசாயத்தை விட்டே விலகிச் சென்றுள்ளனர்.

நிலச் சீர்திருத்தம் என்கிற பெயரில் நிலங்களை வழங்கி விட்டு,  கீழ்மட்டத்திலிருந்து விவசாயத்தைக் கருவறுக்கும் வேலையையும் மேலிருந்து தொழில் வளர்ச்சி எனும் பெயரில் விவசாயப் புறக்கணிப்பையும் செய்தது தான் சி.பி.எமின் சாதனை. இது மட்டுமில்லாமல், ஒவ்வொரு துறையிலும் சில பொருளாதாரவாதக் கோரிக்கைகளை நிறைவேற்றுவது – அடுத்து அந்தப் பொருளாதாரமே நிலைத்து நிற்பதற்கான அஸ்திவாரத்தை உடைப்பது எனும் அளவில் தான் கடந்த 34 ஆண்டுகால சி.பி.எம்மின் மேற்குவங்க ஆட்சி நடந்துள்ளது.

சிபிஎம் மேற்கு வங்க மாநிலத்தில் விவசாயத்திற்கு செய்த துரோகத்தனங்களின் விளைவாக ஏற்கனவே ஊரகப் பகுதிகளில் பரந்துபட்ட மக்களிடம் ஒரு வெறுப்பைச் சம்பாதித்து வைத்திருந்த நிலையில் தான் சிங்கூரும் நந்திகிராமும் வருகிறது. ஏதுமில்லாவிட்டாலும் நிலமாவது இருக்கிறதே என்கிற குறைந்தபட்ச நம்பிக்கையிலிருந்த மக்களின் ஆத்திரத்தை இவ்விரு விவகாரங்களும் கிளப்பி விட்டதன் உடனடி விளைவு தான் இன்றைய தோல்வி. ஆனால்,  இது நொறுங்கி விழக் காத்திருந்த சீட்டுக் கட்டு மாளிகையின் மேல் கொசு அமர்ந்ததைப் போன்ற ஒரு விளைவு தான்.

சிங்கூர் நந்திகிராம் பிரச்சினைகளின் போது சி.பி.எம்மின் அராஜகத்தை எதிர்த்துப் போராடிய மக்களோடு மக்களாக மம்தா பானர்ஜி நின்றது அவர்களுக்கு ஒரு நம்பிக்கையூட்டும் மாற்றாகத் தோற்றமளித்துள்ளது. வேறு வழியின்றி தொடர்ந்து ‘இடது’ முன்னணிக்குத் தொடர்ந்து வாக்களித்து வந்த மக்களுக்கு ஒரு மாற்று தோன்றி விட்டதாக நம்பியதன் விளைவு தான் சி.பி.எம்மின் பாரம்பரிய வாக்கு வங்கியில் விழுந்த பலமான அடிக்கு மிக முக்கியமான காரணம். அதே நேரம் முந்தைய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தனித்து நின்று வாக்குகளைப் பிரித்தது போல் அல்லாமல் இந்த முறை மம்தா போட்டதைப் பொறுக்கிக் கொண்டு சென்றதும் சி.பி.எம்மிற்கு எதிரான வாக்குகள் சிதறாமல் செய்து விட்டது.

சி.பி.எம்மின் சாதனை மைல்கற்கள்!

கடந்த தேர்தல்களில் சி.பி.எம்மின் வலுவான வாக்கு வங்கியாக கிராமப்புற வாக்கு வங்கியே இருந்து வந்தது. நகர்ப்புறங்களில் பரவலாக வாக்குகள் குறைந்தாலும் கூட கிராமப்புறங்களில் கிடைக்கும் வாக்குகளைக் கொண்டே சமாளித்து வந்தது. ஊரகப் பகுதிகளில் தான் கொண்டிருக்கும் வலுவான வலைப்பின்னலைக் கொண்டு மக்களை அச்சுறுத்தியும் மிரட்டியும் தான் இந்த வாக்கு வங்கியைச் சிதறாமல் பார்த்துக் கொண்டது. இத்தனை ஆண்டுகளாக சி.பி.எம்மின் இந்த அடாவடிகளுக்குச் சவால் விடும் ஒரு மாற்று அமையாமல் போனது தான் தொடர்ந்து அந்த மக்கள் வேறு வழியின்றி அதற்கு வாக்களிக்கும் ஒரு நிர்பந்தத்தை உண்டாக்கியிருந்தது. தெருச் சண்டைக்காரி என்று ஊடகங்களால் குறிப்பிடப்படும் மம்தா பானர்ஜி சி.பி.எம்மின் ஆயுதத்தையே எடுத்து அதன் கண்களையே குத்திக் குடைந்ததைப் பார்த்த மக்களுக்கு அவர் ஒரு இயல்பான மாற்றாகத் தோற்றமளித்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை.

ஏற்கனவே பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் மிகக் குறைவான அரசு சுகாதார நிலையங்களைக் கொண்டிருக்கும் மேற்கு வங்க மாநிலத்தில், அரசு பொறுப்பில் இருக்கும் மருத்துவமனைகளும் கூட பன்றித் தொழுவம் போல் நாறிக் கிடக்கும் நிலையில், ஓரளவு பெரிய அரசு மருத்துவமனைகளை சத்தமில்லாமல் தனியார்மயமாக்கும் வேலையைச் செய்து வருகிறது. இந்த வகையில் தான், தெற்கு கொல்கத்தாவில் இருக்கும் அரசு காச நோய் மருத்துவமனையைத் தனியாருக்குத் தாரை வார்த்துள்ளது.

ஒரு புறம் தனக்கு அடிப்படையான பலத்தை வழங்கியிருந்த விவசாயிகளின் கோபத்தை சம்பாதித்திருந்த சிபிஎம், இன்னொரு புறம் தனது கணிசமான வாக்கு வங்கியாக இருந்த இசுலாமிய சமூகத்தின் வெறுப்பையும் ரிஸ்வானூர் ரஹ்மான் விவகாரத்தில் இழந்தது. இதுவும் கூட ரிஸ்வானூர் ரஹ்மான் என்கிற ஒரு தனிநபருக்காக தோன்றிய ஒட்டுமொத்த சமூகக் கோபம் என்று பிரித்துப் பார்க்க முடியாது. சமூக வளர்ச்சிக் குறியீடு, கல்வி, மருத்துவ வசதி என்று அனைத்து அலகுகளிலும் அரசுத் துறை புறக்கணிக்கப்பட்டதால் பின்தங்கியிருக்கும் ஒரு மாநிலத்தில் இயல்பாக உருவாகக் கூடிய ஆட்சிக்கு எதிரான மனநிலை ஏற்கனவே மக்களை சி.பி.எம்மிடம் இருந்து விலக்கியிருந்தது.

ஜோதிபாசுவிற்குப் பின் அதிகாரத்திற்கு வரும் புத்ததேவ் பட்டாச்சார்யாவோ, மக்களோடு எந்தவிதத்திலும் நெருங்கிய தொடர்பு கொண்டவரல்ல. அதற்கு முன் ஒரு வாய் வார்த்தையாகவாவது மக்கள் நலம், விவசாய வளர்ச்சி என்றெல்லாம் சொல்லப்பட்டு ஏற்படுத்தி வைத்திருந்த மாயத் திரையை எல்லாம் புத்ததேவ் வந்து கிழித்தெறிந்து கட்சியை மக்கள் முன் நிர்வாணமாக நிறுத்தினார். முந்தைய தலைவர்களைப் போல் அல்லாமல், எந்த வித மேல் பூச்சும் இன்றி மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள்கைகளை மிருகத்தனமாகத் திணித்தார் புத்ததேவ்.

கொல்கத்தாவில் கை ரிக்சாக்களை ஒழித்த போது மனிதர்களை வைத்து மனிதர்களே இழுத்துச் செல்வது கொல்கொத்தாவுக்கு வரும் வெளிநாடுகளைச் சேர்ந்த விருந்தினர்கள் நம்மைப் பற்றி  அசிங்கமாக நினைத்துக் கொள்ள வைத்து விடும் என்றார். தமிழகத்தில் கை ரிக்சா ஒழிக்கப்பட்ட போது கூட அது மனிதனின் சுயமரியாதைக்கு எதிரானது என்கிற ஒரு விளக்கம் சொல்லப்பட்டது ஆனால், பாட்டாளித் ‘தோழர்களோ’ கை ரிக்சாக்களை வெளிநாட்டுக்காரர்கள் ரசிக்கமாட்டார்கள் என்கிறது. குஜராத் ‘வளர்ச்சி’ பற்றி மோடி  உண்டாக்கியுள்ள ஊடக மயக்கங்களைப் போலவே மேற்கு வங்க வளர்ச்சி பற்றியும் முதலாளித்துவ ஊடகங்கள் வாயிலாகப் பிரச்சாரங்களை புத்ததேவ் முன்னெடுத்தார். இதற்காகவே, மேற்கு வங்கத்தின் பிராண்டு அம்பாசிடராக வேல்லி ஓவன் என்பவரையும் நியமித்தார்.

தொழில் வளர்ச்சி எனும் பெயரில் நிலங்களைப் பறித்ததை எதிர்த்துப் போராடிய மக்களையெல்லாம் அரக்கத்தனமாக ஒடுக்கியதோடு அதை வெளிப்படையாக நியாயப்படுத்தவும் செய்தார். நிலப்பறிப்புக்கு எதிராகப் போராடும் விவசாயிகள், புத்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்த போது, ‘யார் இவர்கள், இவர்களோடு பேசுவதெல்லாம் என் தகுதிக்கே இழுக்கானது’ என்று தெரிவித்தார். இது ஏற்கனவே கட்சியை விட்டு விலகிப் போயிருந்த மக்களை முற்றிலும் விரோதமான ஒரு நிலைக்குத் தள்ளுகிறது.

இந்நிலையில் தான் உழைக்கும் மக்களின் தோழன் என்று சொல்லிக் கொள்ளும் கட்சி நேரடியான மக்கள் விரோதியாகவும், முதலாளித்துவக் கட்சியிலிருந்து பிரிந்து வந்து நகர்ப்புற லும்பன்களைத் தனது அடிப்படை பலமாகக் கொண்டிருந்த கட்சி ,மக்களின் நண்பனாகவும் தோற்றமளிக்கும் ஒரு வரலாற்று விநோதமும் நடந்தது.

முதலாளித்துவ எதிர்ப்பையோ மக்கள் விடுதலையையோ தனது திட்டத்திலேயே கொண்டிராத மம்தா பானர்ஜிக்கு பரந்துபட்ட மக்கள் ஆதரவை சி.பி.எம்மே ஏற்படுத்திக் கொடுக்கிறது. லால்கரில் போராடிய மக்களை வன்முறையுடன் அடக்கி ஒடுக்க, ஆயுதம் தாங்கிய தனது கட்சியின் ரவுடிகளை அனுப்பிய புத்ததேவ், அது பழிக்குப் பழிவாங்கும் செயல் என்று கூசாமல் சொல்கிறார் – இன்று முதலாளிகள் சங்கத்தின் தலைவரைத் தனது வேட்பாளராக களமிறக்கிய மம்தா பானர்ஜி, அன்று லால்கரில் போராடிக் கொண்டிருந்த மக்களின் தோளோடு தோள் நிற்கிறார்.

சி.பி.எம் இன்றைக்கு வந்தடைந்திருக்கும் பாசிச வடிவம் என்பது அவர்கள் இத்தனை ஆண்டுகளாக செயல்படுத்தி வந்த பொருளாதாரவாத செயல்திட்டங்களினின்று முரண்பட்ட ஒன்றல்ல. சி.பி.எம்மின் பொருளாதாரவாதத்தின் ஒரு எதார்த்தமான நீட்சி தான் இன்று அவர்களை ஒரு சமூக பாசிஸ்டுகளாக சீரழித்துள்ளது. சிபிஎம் கட்சியின் மிக முக்கியமான பலமாக விளங்கியது அவர்களின் தொழிற்சங்கங்கள். கீழ் மட்ட அளவில் ஒவ்வொரு தொழிற் பிரிவிலும் வலுவான தொழிற்சங்கங்களை நிறுவி அந்தந்தப் பிரிவின் பொருளாதாரக் கோரிக்கைகளை மட்டும் போராடியோ பேரம் பேசியோ வாங்கித் தருவது – மேலிருந்து ஒட்டு மொத்தமாக உள்நாட்டு தேசியத் தொழில்களின் நசிவைக் கோரும் மறுகாலனியாக்கப் பொருளாதாரக் கொள்கைகளை ஏற்றுக் கொள்வது என்கிற இந்த வினோதமான நிலை உண்மையில் ஒரு முரண்பாடே அல்ல.

மேற்கு வங்கத்தின் நீரோ யாரு?

விவசாயத்தின் நசிவிற்கும், உள்நாட்டுத் தொழில்களின் நசிவிற்குமான அடிப்படையான காரணம் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் மறுகாலனியாக்கப் பொருளாதாரக் கொள்கையாக இருக்கும் போது, அந்தந்தப் பிரிவுக் கோரிக்கைகளுக்கு மட்டும் முகம் கொடுத்து விட்டு ஒட்டுமொத்தமான காரணத்திற்கு முகம் திருப்பிக் கொள்வதன் நீட்சி தான் சி.பி.எம் கட்சி வந்தடைந்திருக்கும் ஒரு குழப்பமான நிலைக்குக் காரணம். அதனால் தான் முதலீடுகளைப் பற்றியும், போராட்டங்களைப் பற்றியும் புத்ததேவ் தெரிவிக்கும் கருத்துக்கள் மோடியின் கருத்துக்களோடும், மன்மோகன் – மான்டேக் சிங் கும்பலின் கருத்துக்களோடும் அசப்பில் அப்படியே ஒத்துப் போகிறது. அதனால் தான் எந்தவிதக் கூச்சநாச்சமும் இன்றி கம்யூனிஸ்டுகளை ஒழித்துக் கட்டிய மலேசிய சலீம் குழுமத்தோடு ஒட்டி உறவாடவும் முடிகிறது.

இப்போது அதிகாரத்திற்கு வந்துள்ள மம்தா பானர்ஜியும் சி.பி.எம்மின் கொள்கைகளில் இருந்து சாராம்சத்தில் வேறுபட்டவரல்ல. இப்போதே ஊடக விவாதங்களில் தமது கட்சி மேற்கு வங்கத்  தொழில் வளர்ச்சிக்கு எந்த வகையிலும் இடையூறாக இருக்காது என்கிற உறுதிமொழிகளை அளிக்கத் துவங்கி விட்டார். இப்போது வேறுபாடு என்பது மறுகாலனியாக்க வளர்ச்சியை வலிந்து திணிப்பதா அல்லது வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஏமாற்றிக் கொடுப்பதா  என்பதில் மட்டும் தான். மேல் மட்ட அளவிலான பொருளாதரக் கொள்கைகளில் மாற்றம் ஏதும் கிடையாது என்பதை அறிவித்துள்ள அதே நேரத்தில் கீழ் மட்ட அளவிலும் சி.பி.எம்மின் அதே போக்குகளையே திரினமூல் காங்கிரசும் பின்பற்றத் தொடங்கியுள்ளது.

சி.பி.எம் மாநில அளவில் கீழ்மட்ட அளவில் நிர்வகித்து வந்த வலைப் பின்னலை இப்போது மம்தா கைப்பற்றியுள்ளார். இன்னும் சொல்லப்போனால், கீழ் மட்ட அளவில் சி.பி.எம் உண்டாக்கி வைத்திருந்த கட்சி ரீதியான அதிகாரத்துவ ரவுடிகளும் அந்த அமைப்பும் இப்போது சி.பி.எம் லேபிளைக் கழட்டியெறிந்து விட்டு திரிணாமூல் காங்கிரசின் லேபிளை ஒட்டிக் கொண்டுள்ளது.

உதாரணமாக, கொல்கத்தா நகரில் ஆட்டோ ஓட்டுனர்களை நிர்வகித்துக் கட்டுப்படுத்தும் ஆட்டோ யூனியன்களும் அதன் வட்டாரத் தலைவர்களும் இப்போதே திரிணாமூல் காங்கிரசுக்கு பரவலாக மாறி வருவதாக செய்திகள் வருகிறது. இதையே ஊரகப் பகுதிகளுக்கும் விரித்துச் செல்வதைக் கடந்து மம்தா பானர்ஜிக்கு வேறு வாய்ப்புகள் இருக்காது. மக்களை அரசியல் படுத்தாமல் வெறும் பொருளாதாரவாதக் கோரிக்கைகளுக்கு மட்டும் போராடப் பழக்கப்படுத்தி அதன் மேல் தனது வாக்கு வங்கியைக் கட்டமைக்கும் சி.பி.எம்மின் உத்தி இப்போது அவர்களையே பூமராங் போலத் திருப்பித் தாக்குகிறது.

ஆக, மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரசும் சி.பி.எம்மிலிருந்து சாராம்சத்தில் வேறுபட்டவரல்ல. அந்த வகையில் ஐந்து ஆண்டுகள் கழித்து சி.பி.எம் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றும் வாய்ப்பு கூட இருக்கிறது. ஆனால், அப்போது சி.பி.எம்மிற்கு வேறெந்த ஒப்பனையும் தேவையாக இருக்காது. தி.மு.கவும் அ.திமு.கவும் மாறி மாறி வருவது போல் இவர்களும் செத்து செத்து விளையாடிக் கொண்டிருக்கலாம்.

தனது திட்டத்திலும், நடைமுறையிலும் புரட்சியை ஒழித்துக் கட்டியிருக்கும் சி.பி.எம் கட்சி இனிமேலும் தனது போலி கம்யூனிச அடையாளங்களைக் கூட பின்பற்ற முடியாது என்ற நிலையைத்தான் மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன. முப்பத்தி நான்கு ஆண்டுகள் பொருளாதாரவாதம், பாசிச நடைமுறை, கட்சி கும்பலின் சர்வாதிகாரம், தொழிலாளிகள்-விவசாயிகள் மீதான அடக்குமுறை என்று சமூக பாசிஸ்டுகளாக மாறிவிட்ட கட்சி இனிமேலும் தங்களை கம்யூனிஸ்டுகள் என்று அழைத்துக்கொள்ளாமல் இருந்தால் பொருத்தமாக இருக்கும். ‘தோழர்கள்’ தயைகூர்ந்து இதைப் பரிசீலித்து அமல்படுத்த வேண்டும்.

நாங்களும் போலிக்கம்யூனிஸடுகள் யார், ஏன் என்று விளக்கமளித்து விளக்கமளித்து சலித்துப் போயிருக்கிறோம்.

_______________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. தோல்விஅடைந்தா “போலி கம்யூநிஸ்ட்”

    வெற்றிபெற்றால் “நல்ல கம்யூநிஸ்ட்”

    என்ன கொடுமை சரவணன் !!!

    முதல்ல கம்யூநிஸ்ட்ன்னா யாருண்ணே ?

  2. கம்யூனிஸ்ட்னாலே போலி தான்., பிறகென்ன போலி கம்யூனிஸ்ட்…

  3. இன்று கூட ஒரு செய்தி சைனா-வில் உலகின் மிகபெரிய சூதாட்ட விடுதி திறக்கப்பட்டுள்ளது. இதுவே இங்கே செய்திருந்தால் இவர் இதற்காக பெரிய ப்ளாக் எழுதி இருப்பார்.

  4. Quranist, வினவு எப்போதாவது தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் கம்யூனிஸ்ட்டுக்களை மதிப்பிடுள்ளதா?

    ஜனநாயகன், முதலாளிய ஜனநாயகம் போலி என்பதற்காக ஏன் நேர்மையான கம்யுனிஸ்ட்டுக்களும் இருக்கக் கூடாது என்று வேண்டிக்கொள்ளுகிறீர்கள்?

    Padh, சீனாவைப் பற்றி வினவு என்ன சொல்லி வருகிறது என்று எப்போதாவது படித்துள்ளீர்களா?

    உருப்படியாக ஒரு மாற்றுக் கருத்து இல்லாவிட்டால் உளறிக் கொட்ட அவசியமில்லையே!

  5. The Polit Bureau of the Communist Party of India-Marxist (CPI-M)

    என்ற வார்த்தை 34 ஆண்டுகளில் மருவி போலி கம்யூனிஸ்ட் ஆகிவிட்டது.

  6. “மேற்கு வங்கத்தில் போலிக் கம்யூனிஸ்டுகள் படுதோல்வி ஏன்?”

    1.தவறான நிலச்சீர்திருத்தச்சட்டம்.
    2.விவசாயிகளின் தற்கொலைகள்.
    3.பன்னாட்டு நிறுவனங்கள் கான்டிராக்ட்.
    4.தனியார் விவசாயக் கிடங்குகள்.
    5.மறுகாலனியாக்கப் பொருளாதாரக் கொள்கைகள்.
    6.பெப்சியின் லேய்ஸ் சிப்ஸ்.
    7.பன்னாட்டு ரியல் எஸ்டேட் முதலைகள்.
    8.விவசாயப் புறக்கணிப்பு.
    9.சிங்கூர் நந்திகிராம்.
    10.தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் மறுகாலனியாக்கம்.
    11.இசுலாமிய சமூகத்தின் வெறுப்பு.
    12.மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரசு.

    One word answer:

    13:11. God is not to change what is in a people until they change what is within their socio economic political policy.

    quranist@aol.com

  7. Sari vinavu, neengale sollunga, entha areavula/countrla ‘unmayana’ communist erukanga. Avanga exacta Pattali makkalugana eppadi work panranga? If u answered somewhere else, just give that link/reference. Really I like to know what exactly the so called ‘communism’ means – in simple terms.

  8. If you could have written this big article last year and indicated that these ‘false communist’ will fail in 2011 election, we all could have appreciated you !!…now after they defeat, simply your quoting that they are ‘false’ !…they could not have sustained for 34 years if they are not real communists !!

  9. கார்ப்பரல் ஸீரோ மே 17, 2011 அட் 4:15 ப்ம்.

    வினவு எப்போதாவது தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் கம்யூனிஸ்ட்டுக்களை மதிப்பிடுள்ளதா?

    “அப்படியானால் எல்லாக்கொள்கையும் சரிதான் என வாதிடலாம்”

  10. //நாங்களும் போலிக்கம்யூனிஸடுகள் யார், ஏன் என்று விளக்கமளித்து விளக்கமளித்து சலித்துப் போயிருக்கிறோம்.//

    அசல் கம்யூனிஸ்ட்கள் யாரென்று அடையாளம் காட்டுமாறு கேட்டு எனக்கும் சலித்து விட்டது!

    மிதவாத தோழர்களே, அதிகார போதையில் தடமாறிவிட்டனர் எனில்,தீவிர தோழர்களுக்கு
    அதிகாரம் கிடைத்துவிட்டால்?நரிக்கு நாட்டாமை கதை?

  11. ஆமா..நான் தெரியாமதான் கேக்குறேன்..அங்கெ எல்லாம் “பார்ப்பனியம்” கிடயாதா? இல்லெ வங்காளத்திலே எல்லாருமே கேனப்பசங்களா??

  12. இந்த கட்டுரையில் சரியான விளக்கம் இல்லை. கீழ் கண்ட பிளாக்கில் உள்ள கட்டுரை CPM பற்றி போதிய விளக்கங்களைக் கொண்டிருக்கிறது. http://advancedworkers.blogspot.com/2011/05/blog-post_4111.html இந்த கட்டுரை ஒரு மொழிபெயர்ப்பாக இருந்தாலும் சரியான மார்சிச பார்வையைக் கொண்டிருப்பதாக உணர்கிறேன்.

    • அண்ணே ஒரு டிராட்ஸ்கியிஸ்டுக்கு எப்படி சரியான மார்க்சியப் பார்வை இருக்கமுடியும்? அதுவும் தலைப்பே கிறுக்குத்தனமா இருக்கு ‘இந்திய ஸ்டாலினிஸ்டுகள் தலைமையில்…’ யாரு சிபிஎம்மா? கிழிஞ்சுது.. அவங்க ஸ்டாலின் படத்தை கூட பயன்படுத்துவதில்லைன்னு கீத் ஜோன்சுக்குத்தான் தெரியல உங்களுக்கு கூடவா புரியாது.. அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேயிங்கரதுமாதிரி, டிராட்ஸ்கியிஸ்டுக்கு இருக்கும் ஸ்டாலினிய பயத்தில் என்னென்னமோ எழுதுகிறார்கள்… ஹையோ ஹையோ

    • அண்ணே, ஒரு சமயம், ஒரு பிரச்சனையில் சரியான முடிவை எடுக்கத் தெரியாமல் சிரமப்பட்ட ஒரு தோழர் அனுபவப்பட்ட ஒரு தோழரிடம் என்ன செய்வது என்று கேட்டார்.
      “தயங்காமல் ட்ராட்ஸ்கிவாதி எவனையாவது கேள். அவன் சொல்லுவது நிச்சயம் தவறாகத் தான் இருக்கும்” என்றார் அனுபவப்பட்ட தோழர்.

      இப்போதும் பல விடயங்களில் (குறிப்பாக வட ஆபிரிக்காவிலும் மத்திய கிழக்கிலும்) தப்புத்தப்பாகத்தான் ட்ராட்ஸ்கிவாதிகள் பேசிவருகிறார்கள்.

  13. உங்க திட்டம் எங்கன்னு கேட்டுநாங்களும் சலிச்சுதான் போயிட்டோம்…

  14. //ஊரகப் பகுதிகளில் தான் கொண்டிருக்கும் வலுவான வலைப்பின்னலைக் கொண்டு மக்களை அச்சுறுத்தியும் மிரட்டியும் தான் இந்த வாக்கு வங்கியைச் சிதறாமல் பார்த்துக் கொண்டது.//
    இதை எப்படி நம்புவது ? அழகிரியாலேயே இப்படி மிரட்டி ஓட்டு போட வைக்க முடியாத போது. நீங்கள் சொல்ல வந்தது வேறு வகையான மிரட்டல் என்றால் அதை விளக்குங்களேன். ஏனென்றால் சிபிஎம் மின் ரெளடியிசம் எப்படி மற்றவற்றிலிருந்து வேறுபட்டு பலமாக இருக்க முடிந்தது என்பதை நீங்கள் விளக்கியாக வேண்டும்.. அது அவ்வளவு தூரம் உண்மையென்றால்.

    //மக்களை அரசியல் படுத்தாமல் வெறும் பொருளாதாரவாதக் கோரிக்கைகளுக்கு மட்டும் போராடப் பழக்கப்படுத்தி அதன் மேல் தனது வாக்கு வங்கியைக் கட்டமைக்கும் சி.பி.எம்மின் உத்தி இப்போது அவர்களையே பூமராங் போலத் திருப்பித் தாக்குகிறது.//
    இந்த வரிகள் சுருக்கமாக கம்யூனிஸ்ட்டுகளின் எல்லா அரசியல் போராட்டங்களுக்கும் பொருந்தும். கார்ப்பேரட் பொருளாதாரத்தில் சுயநலத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு ஓடத்துவங்கிவிட்ட மக்களிடம் எவ்வாறு அதைத் தவிர்த்த பார்வையை உண்டாக்குவது ? நீங்கள் உண்டாக்கியிருக்கிறீர்களா ? அப்படிப் பார்வையுடன் வாழத் தலைப்பட்டால் அவர்களின் அன்றாட உணவும் பறிபோகுமே ? சோசலிச எண்ணம் உருவாக்கி பின்னர் கம்யூனிச எண்ணம் உருவாக்கும் உத்தியா உங்கள் உத்தி ? சிபிஎம் மின் உத்தியிலிருந்து உங்கள் உத்தி எவ்வாறு வேறுபட்டது ?

  15. இங்கு பேசும் பலருக்கு மார்க்சியம்.லெனினிய்ம்.கம்யூனிசத்தின் அடிப்படைகள் எதுவும் தெரியாது.தெரியாததை தெரிந்து கொள்ளவும் முயற்சிப்பதில்லை.மாறாக கம்யூனிசத்திற்க்கு எதிராக ஊளையிடுவதையே தொழிலாகக் கொண்டுள்ளனர்.எது மாற்று எனவும் முன்வைப்பதில்லை.ஆரோக்கியமான விவாதத்திற்க்கும் முயற்சிப்பதில்லை.வினவின் கருத்துக்கள், இதுவரையிலான பதிவுலக மொக்கைகள்,மேல்தட்டு,நடுத்தர வர்க்க கும்பலை ஆட்டம் காண வைத்துள்ளது.அதன் வெளிப்பாடுதான் ஊளையிடுதல்;

  16. //இங்கு பேசும் பலருக்கு மார்க்சியம்.லெனினிய்ம்.கம்யூனிசத்தின் அடிப்படைகள் எதுவும் தெரியாது.தெரியாததை தெரிந்து கொள்ளவும் முயற்சிப்பதில்லை.//

    //மாறாக கம்யூனிசத்திற்க்கு எதிராக ஊளையிடுவதையே தொழிலாகக் கொண்டுள்ளனர்//

    நீங்க ஊளையிடுங்க நாங்க பொத்திக்குறோம்.

    //.எது மாற்று எனவும் முன்வைப்பதில்லை.//

    “நீங்க மாறினாலே போதும்” இல்ல “பொத்திக்கிட்டாலும் போதும்”

    • நீங்க பொத்திக்கிடுறேன்னு சொல்றீங்களா? இல்ல எங்கள பொத்திக்கிடச் சொல்றீங்களா! ஏன் கேக்குறேன்னா நீங்க எழுதுனத பாத்தா எல்லாமே லூசுத்தனமா இருக்கு.

  17. நீங்கள் யார் ?

    தமிழ் தமிழ் தமிழ் எனக்கூறும் தமிழனா?

    கேரளா மேற்கு வங்களாம் என எக்காளமிடும் இந்தியனா ?

    அமெரிக்காவுக்கு எதிராகவே பேசும் ரஷ்யனா ?

    ஆறாம் அறிவு பெற்ற மனிதனா ?

  18. சமூக பாசிசம், பொருளாதாரவாதம் இவற்றை பதிவு சார்ந்து விளங்கி கொண்டாலும், இதனை வரையறுத்து தெளிவாக யாராவது விளக்குங்களேன்

  19. கம்யூனிஸ்ட் இயக்கங்களின் பிரிவுக்கும் பிளவுக்கும் காராணீயம் என்ன ?

    அதாவது எந்த அடையாளம்/அளவுகோளினால் (போலி)கம்யூனிஸ்டுகளை அள(ழை)ப்பது ?

    ஆதார ஸ்ருதிகளுடன் கட்டுரை வரைக.

  20. கட்டுரையிலே சொல்லியிருக்கிறது சரியா தப்பான்னு பேசறத விட்டு சம்பந்தா சம்பந்தமில்லாமே பேசிக்கிட்டிருக்காங்க!
    போதாததுக்கு அதுக்கெல்லாம் பதில வேற எதிர்பாக்கிறாங்க!

    • ” கம்யூனிஸ்ட் இயக்கங்களின் பிரிவுக்கும் பிளவுக்கும் காராணீயம் என்ன ?
      அதாவது எந்த அடையாளம்/அளவுகோளினால் (போலி)கம்யூனிஸ்டுகளை அள(ழை)ப்பது?”

      இதற்கான பதில் ஒன்றுக்குப் பலமுறை பல இடங்களிலும் சொல்லப்பட்டுள்ளது.
      ஒவ்வொரு முறையும் “ஆதார ஸ்ருதிகளுடன்” ஆனா ஆவன்னாவிலிருந்து தான் தொடங்குவதென்றால் அது கொஞ்சம் கஷ்டம் சாமி.

      கொஞ்சமாவது அக்கறையுடன் விசாரித்துவிட்டுக் கேள்விகளை எழுப்ப வேன்டிய கட்டுரை இது.

  21. நாடளமன்றத்தின் மூலம் எந்த தீர்வும் கிடைக்காது என்பதே உண்மை. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இங்குள்ள முதலாளிகளின் கைபாவையாகத்தான் இயங்க வேண்டி இருக்கும் சிபிஎம் அப்படி தான் சீரளிந்தது

    • அப்படியென்றால் நீங்கள் யாருடைய கைப்பாவை என தெரிந்துகொள்ள ஆவல்.

      • கம்யூனிசம் தோற்றது என்று யார் சொன்னார்கள்?
        அது ஒரு ஆய்வுமுறையாகத் தோற்றாதா? இல்லை.
        அது ஒரு இலட்சியமாகத் தோற்றதா? இல்லை; இன்னமும் அந்த இலக்கு உயிருடனுள்ளது.

        இன்னமும் உலகின் சமூக அரசியல் பிரச்சனைகளை விளங்கிக் கொள்ள வேறெந்த அணுகுமுறையையும் விட வலுவான, நம்பகமான ஒரு அணுகுமுறை தோற்றதாக எப்படிச் சொல்ல இயலும்?

        நடைமுறை இயக்கங்கள் எழுவதும் விழுவதும் மீள எழுவதும் தான் வரலாறு. 1990இல் கம்யூனிசம் ஒழிந்துவிட்டது என்றவர்கள் 10 வருடம் கழித்துத் தங்கள் முகங்களைத் துண்டால் மறைத்துக் கொண்டார்கள்.

        முதலாளியம் ஒழியும் வரை போராட்டம் ஒயாது.

        சோரம் போன ஒரு இடதுசாரிக் கட்சியின் தோல்வியை ஒரு இலட்சியத்தின் தோல்வி என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் பிரச்சனை.
        நானென்ன செய்ய!

        • கம்யூனிசம் தோற்றது என்று யார் சொன்னார்கள்?
          ——————————————–
          இன்னும் போதையிலேயே எத்தனை நாள் இருக்கப்போறீங்க !

          மன நல காப்பகத்தில் சேருங்க !!

          ரிஸல்ட் 13 ஆம் தேதி வந்து கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸ்ச ஊத்தி மூடியாச்சு !!!

          • இன்னும் அப்பாவியாய் எத்தனை நாளைக்குத்தான் இருக்கப்போறீங்க.

            நீங்கள் வினவில் மேய வேண்டியது இன்னும் இருக்கிறது. புரியவில்லையென்றால் வினவிடம் கேளுங்கள். நீங்கள் மனநல காப்பகத்தில் சேருவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

          • ம.ந. காப்பகத்தில் ஒங்க ரூமுக்குக் கொஞ்சம் எட்டத்திலேயா ரூம் இருந்தா சொல்லுங்க.
            விசாரிக்கறேன்.

        • If you could have written this big article last year and indicated that these ‘false communist’ will fail in 2011 election, we all could have appreciated you !!…now after they defeat, simply your quoting that they are ‘false’ !…they could not have sustained for 34 years if they are not real communists !! – summa kathai vidanthinga. Sari, tell us in which part of work TRUE communist are ruling? and the unique benefits people have earned…

          • சீனிவாஸ், கட்டுரையை படிச்சீங்க சரி, அதுக்கு கீழேயே தொடர்புடைய பதிவுகள் லிஸ்டுல 3 வருசமா எழுதின முக்கிய பதிவுகளை சுட்டி கொடுத்திருக்காங்க அதை பாக்கலையா, போய் பாத்திட்டு வந்து உங்க கருத்தை எழுதுங்க

  22. ‘இனி இத்தோல்வியை ஆராய்வதற்கென்று சி.பி.எம் கட்சி ஒரு கமிட்டியை அமைக்கும்.’

    தமிழகத்தில் 10 இடங்களில் வெற்றிபெற்றதை பற்றியும் ஆராய ஒரு கமிட்டி அமைத்தால் என்ன விடை கிடைக்கும்?

  23. மேற்குவங்கத்தில் ஆட்சி மாறியதை தமிழகத்தில் ம.க.இ.க போன்ற இன்டர்நெட் புரட்சியாளர்கள் மிகவும் சந்தோஷத்துடன் கொண்டாடுகின்றனர். இவர்கள் டுபாக்கூர் புரட்சியாளர்கள் மட்டுமல்ல மம்தாயிஸ்டுகளின் தமிழக வார்ப்பாகவும் இருக்கிறார்கள். அங்கு 34 ஆண்டுகள் மக்களின் அடிப்படை வாழ்வியல் முன்னேற்றத்திற்காக உழைத்த இடதுசாரி ஊழியர்களின் படுகொலைகளை கொஞ்சமும் கண்டு கொல்லாமல் மார்க்சிஸ்டுகளின் எதிர்ப்பை மட்டுமே முதன்மையாக வைத்து பரிதாபமாக அரசியல் நடத்தி வருகின்றனர்.

    நிலபிரபுத்துவ முதலாளித்துவ அரசியல் ஏஜென்ட் மம்தாவின் வெற்றி இவர்களுக்கு மிகவும் உற்சாகம் அளிக்கிறது. அமெரிக்க ஆதரவுடன் மம்தாவும் மாவோயிஸ்டுகள் என்ற கூலிக்கு மாரடிக்கும் கொலை பட்டாளமும் மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழியர்களை நூற்றுக்கணக்கில் படுகொலை செய்ததை இவர்கள் மார்க்சிஸ்டுகளின் ரவுடியிஸமாக வடிவமைத்தனர். நிலசீர்திருத்தம் செய்து மக்கள் வாழ்க்கையில் ஒளிவிளக்கேற்றிய மார்க்சிஸ்டுகளை வெல்ல முடியாமல் தவித்த மம்தா, அந்த மாநிலத்தில் தொழில் வளர்ச்சி இல்லை என கூப்பாடு போட்டார். ஒட்டுண்ணி காங்கிரஸ் அதற்கு மத்திய அரசிலிருந்து ஆதரவு அளித்தது. தொழிற்சாலைகள் துவக்க அந்த இடது முன்னணி அரசு முயற்சி எடுத்த போது உழைப்பளிகளின் நிலங்களை பிடுங்குவதாக அபாண்டமாக பழி கூறினர். அங்குள்ள முதலாளித்துவ ஊடகங்கள் ஒவ்வொரு நிமிடமும் இடதுசாரி அரசாங்கத்திற்கு எதிராக பொய்களை கட்டவிழ்த்து விட்டனர்.

    சிங்கூரும் நந்திகிராமும் நல்ல வாய்ப்பாக அவரக்ளுக்கு அமைந்தது. இப்பிரச்சனையை வைத்து கொடூரமக படுகொலைகளை அரங்கேற்றினர். மத்திய காங்கிரஸ் அரசு இதற்கு முழு ஒத்துழைப்பை வழங்கியது. இந்தியா முழுவதும் அந்த ஆட்சிக்கு எதிராக கடுமையான பிரசாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டது. அந்த ஊடகங்களின் எச்சத்தை தமிழக இணைய புரட்சியாளர்களான “டுபாக்கூர் வீரர்கள்” ம.க.இ.க போன்றோர்கள் அப்படியே வாந்தி எடுத்தனர்.

    மேற்கு வங்கத்தில் கொள்ளையடித்த நிலங்களை இழந்த நிலக்கிழார்களும், கொள்ளை லாபம் அடிக்க முடியாத முதலாளிகளும், கள்ள சந்தைகாரர்களும் ஒன்றினைந்து ஒரு மக்கள் ஆட்சியை வீழ்த்தி உள்ளனர். இப்போது ஒரு தேவதூதனாக மம்தாவை சித்தரிக்கின்றனர். இப்போதும் பல லட்சம் மக்கள் ஆதரவு உள்ள ஒரு இயக்கத்தை மொத்தமாய் அழிக்க முயற்சிக்கின்றனர். மம்தா வெற்றி அடைந்ததும் அவரகள் படுகொலைகளை துவக்கி விட்டனர். மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்களும் ஊழியர்களும் கொடூரமாக படுகொலை செய்யப்படுகின்றனர். அரசியல் படுகொலைகளை காங்கிரஸ் கட்சி 1977 இல் செய்ததை போல இப்போது மம்தா துவக்கி உள்ளார்.

    ஒன்று மட்டும் நிச்சயம் வரலாற்று பக்கம் எப்போது இத்தகைய கொலைகாரர்களை விரட்டிய வரலாற்றைதான் பதிந்து வைத்திருக்கிறது. இவர்கள் வென்றதாக சரித்திரம் இல்லை. மக்களுக்காக பல தியாகங்களை செய்த மார்க்சிஸ்டுகள் மீண்டும் எழுவார்கள் முன்பைவிட வீரியத்துடன். தமிழகத்தில் மார்க்சிஸ்டுகள் ஒழிந்துவிட்டதாக ஓலமிடும் டுபாக்கூர் புரட்சியாளர்கள் கொஞ்சம் பொறுத்திருப்பது அவசியம். துரோகத்தால் வீழ்த்தப்பாட்டர்களே ஒழிய மார்க்சிஸ்டுகளை அங்கு மம்தா மற்றும் மத்தாயிஸ்டுகளான மாவோயிஸ்டுகளும் ஒட்டுண்ணி காங்கிரசும் நேர்மையாய் வெற்றி கொள்ளவில்லை என்பதை நினைவில் வைப்பது அனைவருக்கும் நல்லது.

Leave a Reply to Quranist பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க