privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ : சிரிப்புப் போலீஸ் ஆப் இந்தியா !

சி.பி.ஐ : சிரிப்புப் போலீஸ் ஆப் இந்தியா !

-

சி.பி.ஐ என்றழைக்கப்படும் மத்தியப் புலனாய்வுத் துறை பற்றி நீங்கள் கேள்விப்படாமல் இருக்க முடியாது. ஊர் நாட்டில் ஓட்டுக் கட்சித் தலைவர்கள் வீட்டிலிருந்து காணாமல் போன ஜிம்மியில்  ஆரம்பித்து லோக்கல் போலீசால் ‘கண்டு’ பிடிக்க முடியாத கோழி களவாணி வரை துப்புத் துலக்கிக் கண்டு பிடிக்கும் சூராதி சூரர்களாக இவர்களை ஊடகங்கள் உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கலாம். கருணாநிதி வீட்டில் சி.பி.ஐ விசாரணை ரெய்டு என்றும் ஏதோ இந்த சூரப்புலிகளைப் பார்த்து கருணாநிதி குடும்பமே நடுநடுங்கி வீட்டின் மூலையில் குந்த வைத்து உட்கார்ந்திருப்பது போல தினமலர் அடிக்கடி குதூகலிப்பதையும் கூட நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

தமிழ்த் திரையுலகின் தீவிரவாத ஒழிப்புப் பிரிவின் சூப்பர் கமாண்டோவான கேப்டன் விஜயகாந்த் பல படங்களில் டில்லி சி.பி.ஐ அதிகாரியாகத் தோன்றி பாகிஸ்தான் தீவிரவாதியிடம் தங்கத் தமிழில் லெச்சர் அடித்தே டயர்டாக்கி மடக்கிப் பிடிப்பதைப் பார்த்திருப்பீர்கள். மலையாளத் திரைப்படங்களிலும் கூட மம்மூட்டி மோகன்லால் வகையறாக்கள் சி.பி.ஐ அதிகாரிகளாகத் தோன்றி உள்ளூர் போலீசால் கண்டே பிடிக்கமுடியாத பல்வேறு சிக்கலான வழக்குகளைத் தீர்த்துக் கொடுத்திருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன் ஏதோ கோழியோ ஆடோ களவு போன மேட்டரில் சி.பி.ஐ விசாரணை கோரி தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் “அட விடுங்கப்பா… இவங்க எத்தனை ஊர் பஞ்சாயத்தைத் தான் தீர்க்க முடியும்” என்று சி.பி.ஐயின் மேல் கருணையோடு ஒரு நீதிபதி தீர்ப்பு கூட வழங்கியிருந்தார்.

இப்படியாக சி.பி.ஐ பற்றிய ஒரு பயங்கரமான இமேஜும், அவர்களின் விசாரணையின் மேல் மக்களிடையே ஒரு நம்பிக்கையையும் பல ஆண்டுகளாகவே திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எதுக்கு இத்தனை பில்டப் என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. இப்படி ஊடகங்களாலும் சினிமா உலகத்தாலும் ஷெர்லக் ஹோம்சுக்கு இணையான துப்பறிவாளர்களாக ஜாக்கி வைத்து தூக்கிப் பிடிக்கப்பட்ட சி.பி.ஐ, சமீப நாட்களாக மக்கள் நினைத்துக் கொண்டிருப்பது போல் அல்லாமல் எதார்த்தத்தில் சீரியஸான காமெடி பீஸ்களாகத் தான் இருக்கிறார்கள் என்கிற உண்மை இப்போது அம்பலமாகியிருக்கிறது.

ஹால் டிக்கட்டை மறந்து விட்டு பரீட்சைக்குப் போன கதை!

கிம் டேவி, புரூலியா, பீட்டர் ப்ளீச், ஆனந்த மார்க்கம் போன்ற பெயர்களை நீங்கள் மறந்திருக்கலாம்; எனவே ஒரு சிறிய நினைவூட்டல். 1995-ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் மேற்குவங்க மாநிலம் புரூலியா மாவட்டத்தில் திடீர் என்று ஒரு மர்ம விமானத்தில் வந்த சிலர் ஆயுத மூட்டைகளைப் போட்டனர். அப்போது அது தேசிய அளவில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்த சமயத்தில் அம்மாநிலத்தில் அதிகாரத்திலிருந்த சி.பி.எம் கட்சியை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த ஆனந்த மார்க்கம் என்கிற தீவிரவாத சாமியார் கும்பலுக்குத் தான் இந்த ஆயுத மூட்டைகள் போடப்பட்டதாக சொல்லப்பட்டது. பின்னர் ஆயுதத்தைப் போட்ட விமானம் திரும்பும் வழியில் மடக்கிய சி.பி.ஐ அதிகாரிகள், அதில் பயணம் செய்த விமானக் குழுவினரையும் ஆயுத வியாபாரி பீட்டர் ப்லீச் மற்றும் ஆயுதக் கடத்தலின் சூத்ரதாரியான நீல்ஸ் க்ரிஸ்டியன் நீல்ஸன் என்கிற கிம் டேவியையும் கைது செய்தது.

கைது செய்யப்பட்டவர்களில் கிம் டேவி ‘மர்மமான’ முறையில் தப்பியோடி விட்டான் என்று சொன்ன சி.பி.ஐ, அவனைத் தேடி உலகெல்லாம் ஆட்களை அனுப்பிக் கொண்டிருந்தது. சரி. அடுத்து கையிலிருக்கும் பீட்டர் ப்ளீச்சையாவது விசாரித்து தண்டித்திருக்கும் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம் – மன்னிக்கவும். அவருக்கு ஜனாதிபதியின் மன்னிப்பை வாங்கிக் கொடுத்து பத்திரமாக வழியனுப்பி வைத்தது.

இதற்கிடையே இப்போது திடீர் ஞானோதயம் பெற்று டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் ‘தலைமறைவாக’ இருக்கும் கிம் டேவியைப் பிடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக உதார் காட்ட ஆரம்பித்தது சி.பி.ஐ. இதைக் கேள்விப்பட்ட கிம் டேவி, கடந்த மாதம் இந்திய செய்தித் தொலைக்காட்சிகளில் தோன்றி, தான் மறைந்து வாழவில்லையென்றும், பல ஆண்டுகளாக கோபன்ஹேகனில் தான் வாழ்ந்து வருவதாகவும், அங்கே பத்திரிகைகளுக்கு பேட்டியளித்துக் கொண்டும் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து கொண்டும் வெளிப்படையாகவே செயல்பட்டுக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார். மேலும், தான் கோபன் ஹேகனில் இருப்பது சி.பி.ஐக்குத் தெரியும் என்றும் அப்படியிருந்தும், சி.பி.ஐ அதிகாரிகள் இந்திய மக்களின் வரிப்பணத்தில் தன்னைத் ‘தேடி’ இத்தனை ஆண்டுகளாக உலகச் சுற்றுலா போய்க் கொண்டிருந்தாரத்கள் என்று இந்திய துப்பறியும் புலிகளின் டவுசரைக் கிழித்தார்.

இன்னும் ஒரு படி மேலே போய், தான் ஒன்றும் தப்பிக்கவில்லையென்றும், தன்னை பாதுகாப்பாக நேபாள எல்லைக்கு அழைத்துச் சென்று வழியனுப்பி வைத்ததே சி.பி.ஐ தான் என்றும் உண்மையை போட்டு உடைத்தார். ஏனெனில் அப்போது மத்தியிலிருந்த காங்கிரசு அரசு மேற்கு வங்கத்திலிருக்கும் சி.பி.எம் அரசைக் கலைப்பதற்கு ஒரு முகாந்திரம் வேண்டுமென்று, திட்டமிட்டே இந்த ஆயுதக் கடத்தலை நடத்தியதாகவும், அவர்கள் எதிர்பார்த்தது போல் நடவாமல் மொத்த திட்டமும் சொதப்பலாகி விட்டதால், தன்னை நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்க பயந்து கொண்டு தான் தன்னை பாதுகாப்பாக தப்ப விட்டனர் என்றும் சொல்கிறார்.

இதற்கு மேல் இவனை விட்டால் மிஞ்சியிருக்கும் கோவணத்தையும் உருவி விடுவான் என்று முடிவு கட்டிய சி.பி.ஐ, உடனடியாக கிம் டேவியை டென்மார்க்கிலிருந்து கைது செய்து அழைத்து வர ஒரு குழுவை அனுப்புகிறது. உடனே உங்களுக்கு காஷ்மீருக்குள் புகுந்து தீவிரவாதியை தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு வரும் விஜயகாந்த் நினைவுக்கு வரலாம் – முதலில் அந்தக் கற்பனைகளை எல்லாம் ரப்பர் வைத்து அழித்து விடுங்கள். இங்கேயிருந்து விமானம் ஏறி இன்னொரு நாட்டுக்கு பயங்கரமான தீவிரவாதியைப் பிடித்து வரப் போன சூரப்புலிகள் போகும் போது அதற்குத் தேவையான வாரன்டை எடுத்துப் போக ‘மறந்து’  விட்டார்களாம். ஏதோ ஹால் டிக்கட்டை மறந்து விட்டு பரீட்சைக்குப் போன அப்பாவி மாணவன் போல அங்கே  டென்மார்க் அதிகாரிகள் முன் பல்லைக் காட்டிக் கொண்டும் பின் மண்டையைச் சொறிந்து கொண்டும் இப்போது நின்று கொண்டிருக்கிறார்கள்.

இதுக்குப் பேசாமல் விஜயகாந்தையே அனுப்பியிருக்கலாம். டென்மார்க் காவல் துறையினரிடம் தமிழில் வாதாடி தீவிரவாதியை மட்டுமல்ல எக்ஸ்ட்ரா பிட்டிங்காக அந்த நாட்டு பிரதமரையே கூட தூக்கி வந்திருப்பார். இப்ப பாருங்க வட போச்சு.

ஊரெல்லாம் தேடிவிட்டு தன் தொப்பைக்குக் கீழே குனிந்து பார்க்க மறந்த கதை

சமீபத்தில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட உடன், பாகிஸ்தானில் தான் உலகத்துத் தீவிரவாதிகளெல்லாம் இருப்பது போலவும் ஒரு சீன் போட்டது இந்திய வெளியுறவுத்துறை. இதற்காக பாகிஸ்தானில் பதுங்கிக் கிடக்கும் ‘அதிபயங்கரமான ஐம்பது தீவிரவாதிகள்’ பட்டியல் ஒன்றைத் தயாரித்த உள்துறை அமைச்சகம், அதைப் பாகிஸ்தான் அரசிடம் கொடுத்து இவர்களைப் பிடித்துக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. அதைத் தொடர்ந்து களத்திலிறங்கிய இந்திய முதலாளித்துவ ஊடகங்கள், தமது பஜனையை ஆரம்பித்து சிறப்பாக நடத்தி வந்தது.

இந்நிலையில், பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாகச் சொல்லப்பட்ட மேற்படி தீவிரவாதிகள் பட்டியலில் இருக்கும் வாஜுல் காமர் கான் என்பவர், மும்பையின் அருகே உள்ள தானேவில் தான் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார் என்கிற உண்மை ஊடகங்களில் அம்பலமானது. உடனே இதற்கு விளக்கமளித்த மத்திய உள்துறை அமைச்சர் செட்டிநாட்டுச் சிதம்பரம், இது ஏதோ சின்னத் தவறு தான் என்றும், தெரியாமல் நடந்து விட்ட இத்தவறைப் பற்றி தீவிரமாக விசாரித்து சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிப்பதாகவும், நடந்ததற்குத் தானே பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் அறிவித்தார்.

அவர் சொல்லி வாய் மூடவில்லை. அதற்குள் அதே பட்டியலில் இருக்கும் இன்னொரு தீவிரவாதியான பெரோஸ் அப்துல் ரஷீத் கானும் இந்தியாவில் தான் இருக்கிறார் என்கிற உண்மை அம்பலமாகிறது. முதல் நபராவது ஒளிந்து வாழும் நபர். இரண்டாவது நபரோ ஏற்கனவே இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருப்பவர்.

ஏற்கனவே கைதான பெரோஸ் கான் மீது சர்வதேச போலீஸில் சொல்லி ஒரு பிடி வாரண்ட்டையும் வாங்கி வைத்துக் கொண்டு உலகமெல்லாம் தேடியலைந்துள்ளது சி.பி.ஐ. அது மட்டுமல்லாமல், இந்தியச் சிறையிலிருக்கும் இந்த நபர் பாகிஸ்தானில் ‘ஒளிந்து’ கொண்டிருப்பதாகவும், பாகிஸ்தான் அரசு இந்தத் தீவிரவாதியைப் பிடிக்க ஒத்துழைக்கவில்லை என்றும் எனவே பாகிஸ்தான் தீவிரவாத நாடு என்றும் தீவிரமாக பிரச்சாரமும் செய்து வந்தது.

தேடப்படுவது யார் பிடிபட்டது யார் என்கிற சாதாரண விவரத்தைக் கூட சரிபார்க்கத் துப்பில்லாத இந்த விசாரணை அமைப்பு தான் ஸ்பெக்ட்ரம், ஆதர்ஷ் உள்ளிட்ட பல்வேறு ஊழல் முறைகேடுகளை விசாரித்து வருகிறது என்பதை வாசர்களுக்கு நினைவூட்டுகிறோம். தீவிரமான போலீஸ் பயிற்சி, ஒற்றறிவதிலும், உளவுத் தகவல்களைச் சேகரிப்பதிலும், விசாரணை முறைகளிலும் உலகத்தரமான பயிற்சி, என்று சகல வகைகளிலும் தேர்ச்சி பெற்ற தொழில் முறை நிறுவனமே இந்த லட்சணத்தில் இருக்கும் போது, அண்ணா ஹசாரே உருவாக்க நினைக்கும் ஜன் லோக்பால் விசாரணை அமைப்பு எந்த லட்சணத்தில் இருக்கும் என்பதை வாசகர்கள் முடிவுக்கே விட்டு விடுகிறோம்.

சி.பி.ஐ, ஐ.பி, என்.ஐ.ஏ உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளும் உளவுப் பிரிவும் உண்மையில் குற்றத்தடுப்பு, உண்மையைக் கண்டறிதல் என்கிற மக்கள் நல நோக்குக்காக இல்லாமல் வெறும் ஆளும் வர்க்க சேவைக்கென்றே வளர்த்தெடுக்கப்பட்டிருப்பதன் விளைவு தான் இப்போதைய இந்த அவமானங்களுக்குக் காரணம். ஃபோபார்ஸ் முதல் ரிலையன்சு வரை பல்வேறு ஊழல் வழக்குகளில் குற்றவாளிகளையும், முதலாளிகளையும் காப்பாற்றிய நிறுவனம்தான் இந்த சி.பி.ஐ.

ஆட்சிக்கு எதிரானவர்களைக் கண்காணிப்பது, மிரட்டுவது என்பதற்காகவே பயன்படுத்தப்படும் இந்தக் கருவிகள், என்ன தான் பயிற்சியளிக்கப்பட்டாலும் கடைசியில் இப்படி காமெடிப் பீஸுகளாக சீரழிந்து போவது தவிர்க்க முடியாது என்பதே நிதர்சனம். லோக்கல் போலீசு சரியில்லை, சி.பி.ஐதான் உலகத்தரம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் மிடில்கிளாஸ் மாதவன்கள் இனியாவது உண்மை என்ன என்பதை தெரிந்து கொள்ளட்டும்.

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

  1. அருமையான கட்டுரை ..

    சிரிப்பு போலீஸ் ஆஃப் இந்தியா 200 கோடி ரூபாயை ஒரு குற்றவாளியைத் தேட செலவளித்த கதையையும் சேர்த்திருக்கலாம்.

  2. ஆமாம்..! சிரிப்புப் போலிஸ்தான்..! அதற்கு என்ன இப்போ??? நீங்க சொன்ன விஷயமெல்லாம் புரியுது!! ஃபைனலா என்ன சொல்ல வர்றீங்க..??

    • ஊரில் சிறு பொருள் காணாமல் போனா கூட சி பி ஐ விசாரணை வைக்கலாமா ? என்று நக்கலாக கேட்பார்கள். அந்த அளவு மக்கள் மனதில் திறமையான அமைப்பு என்று பதிய வைக்கபட்டிருக்கும் இது அப்படி ஒன்றும் பெரிய புலனாய்வு புலிகளும் அல்ல அவர்கள் குற்றவாளிகளை பிடித்து தண்டனை வழங்கி நீதியை நிலைநாட்டுவதும் இல்லை மாறாக குற்றவாளியை தப்புவிக்கவும் ஆட்சியதிகாரத்தில் உள்ளவர்களுக்கு கைதடியாகவும் தான் உள்ளனர் என்பதைத்தான் கட்டுரை நிரூபிக்கிறது.

      அரசியல்வியாதிகள் முதல் அரசின் அங்கமான சட்டம், நீதி, காவல்துறை, நிர்வாகம் என அனைத்தும் கறைபடிந்து கிடக்கும் நிலையில் இந்த ஜனநாயகம் என்ற ஒன்று எங்கு வாழ்கிறது? தவறிழைத்தவர்கள் தண்டிக்கபடமாட்டார்கள் என பட்டவர்த்தனமாக தெரிந்தும், அதன் உறுப்புகள் அதன் அடிப்படையில் இயங்க வில்லை என்று என்று தெரிந்தும் அதனை நம்புவதில் என்ன அர்த்தம் என்று கேட்கறோம்.

      ஆம் என்று கூறிய நீங்கள் இது போலி ஜனநாயகம் என்று புரிந்து கொண்டீர்கள் என்றால் எங்களோடு உண்மையான ஜனநாயகதிற்க்கான போராட்டத்தில் இணைந்து கொள்ளுங்கள் என்கிறோம்.

      அப்படி இப்படி இருந்தாலும் நீங்க இப்படி பேசவும் எழுதவும் முடிகிறதே ஜனநாயகம் அந்த அளவுக்கு ஜனநாயகம் இருக்கிறது என்றால் இன்னும் ஆயிரம் கட்டுரைகள் தொடர்ந்து வரும் உங்கள் நம்பிக்கையை இல்லை என நிரூபிக்க……..உங்களுக்கு புரிய வைக்க

      • இது செத்துப்போன ஜனநாயகம் என்பது எனக்கு நன்கு தெரியும். அதைத் தெரிந்துகொள்ள இன்னும் ஆயிரம் கட்டுரைகள் எனக்குத் தேவையில்லை. இது ஜனநாயகமோ, கம்யூனிசமோ, முதலாளித்துவமோ, காவியிஸமோ, கண்றாவியிசமோ அல்லது வேறு எந்த இசமோ இருந்துட்டுப் போகட்டும். ஆனால் எதுவானாலும் மக்களின் அடிப்படைப் பண்புகளில் மாற்றம் இல்லாதவரை எந்த இசம் வந்தாலும் சமூக நீதியை தூக்கி நிலைநிறுத்துவதென்பது மிகக்கடினம். எந்தவிதமான சமூக அமைப்பு வந்தாலும் அதில் வைரஸ் போன்ற மனிதர்கள் துளைத்தெடுத்து அதைக் களங்கப்படுத்துவதற்கென்றே இருக்கத்தான் செய்கின்றன. யுக யுகமாக இது ஒன்றே மாறாதது!! மனிதகுலம் அத்தனையும் மாண்டு புதிதாக தழைத்தாலன்றி மாற்றம் நிகழாது என்ற விரக்தியில்தான் கூறுகிறேன்.

  3. ஆணியை பிடுங்க வேண்டாம் என அந்த 50 பேர் பட்டியலை சிபிஐ தனது வலைத்தளத்திலிருந்து நீக்கிவிட்ட செய்தியையும் சேர்த்திருக்கலாம்.

    • கார்த்திக்,
      முன்கூறிய என் பதிலை படித்துக்கொள்ளுங்கள். தெனாவட்டாக நான் பதிலளிக்கவில்லை. மனிதகுலத்தின் மனங்கள் எல்லையற்ற ஒரு மோசமான வெளிக்குள் புகுந்துவிட்டன. அதை சரிசெய்வது மிகக்கடினம் என்றுதான் கூறுகிறேன். முடியவே முடியாது என்ற ஒரு நிலைக்குள் மட்டும் இன்னும் நான் செல்லவில்லை. இதைப் பற்றி மேலும் கூறவேண்டுமானால், மனிதமனம், பிரபஞ்ச வெளியில் மனித மனம் என்பது எப்படி உருவானது, அதன் பரிமாணம் இவை பற்றியெல்லாம் தத்துவ விசாரம் செய்ய வேண்டி வரும்.

  4. இந்தக் கட்டுரையின் மூலம் நீங்கள் சொல்ல வந்த கருத்தை நேரடியாகவே சொல்லிவிடலாமே.. ஏன் சுற்றி வளைக்க வேண்டும்.. சரி.. உங்களுக்குப் பதிலாக இந்தக் கட்டுரையின் நோக்கத்தை ரத்தினச் சுருக்கமாக சொல்லிவிடுகிறேன்..
    ”அதாவது…. ஸ்பெக்டிரம் ஊழலில் ராசாவுக்கோ கனிமொழிக்கோ எந்த பங்கும் இல்லை.. எவனோ பார்ப்பன பாசிஸ்டுகள் ஊழல் செய்துவிட்டு அந்தப் பழியை ராசா கனி ஆகியோர் தலையில் போட்டுவிட்டார்கள்.. பாவம் கருணாநிதி… ஆகவே சிபிஅய் என்பது பொய் வழக்கைத் தவிர எதுவும் போடாது என்பதை அனைத்து மக்களும் தெரிந்து கொள்ளவும்…”
    (அங்கங்கே பார்ப்பன பயங்கரவாதி என்று சேர்த்துக் கொண்டு வாசகர்களைப் படிக்கச் சொல்லவும்) …..அவ்வளவுதானே சார்.. எதுக்கு இவ்வளவு பெரிய பில்டப்பு….

    • நாகராசு ஏன் இவ்வளவு உளரல்ஸ்ஸ்ஸ்ஸ்…. இசுபெக்டிரம் ஊழலை பத்தி வினவு 25 பதிவு எழுதியிருக்காங்க ரூம் போட்டு படிச்சிட்டு அப்புறம் வந்து எதாவது எழுதினா இப்படி லூஸ் மோசன் ஆகாது.

      உதவி சுட்டி https://www.vinavu.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D/

      • கேள்வி… நீ வினவின் அல்லக்கை…. ”நீ என்னன்ன சொன்னாலும் கவிதை…”’ ன்னு பாடிக்கிட்டு இருக்கற ஒரு விசிலடிச்சான்… உன்னய மாதிரி நா இருக்க முடியாது ராசா… எல்லா கட்டுரையும் படிச்சுட்டுத்தான் சொல்றேன்… வினவின் line of thinking writeup எல்லாமே ”கருநா” மேல ஒரு சாப்ட் கார்னரோட எழுதற கட்டுரைகள்தான்… அதத்தான் வெளியிடுவார்……. நீர் வினவு கட்சியிலிருந்து வெளிய வந்து ரூம் போட்டோ போடாமேயோ… மோசன் போயோ போகமலேயோ யோசி… அது வரைக்கும் உனக்குத்தான் வௌங்காது…..

        • நாகராசு உம்ம அனாடமி வேறையா, டயரியா வேற வழியா வருது??? இதைத்தான் வெர்பல் டயோரியான்னு சொல்வாங்களோ….

          வினவுக்கு கருணாநிதி மேல சாப்ட் கார்ணராம்.. இதை இவரு கண்டு புடிச்சிட்டாராம்.. எனக்கு தெரிஞ்சு கருணாநிதிக்கு ஆப்படிக்கும் பலப்பல கட்டுரை வினவுல வந்திருக்கு. தத்துபித்துன்னு பேயரத்துக்கு மின்னால சித்த அதெல்லாம் படிக்கப்படாதா அம்பி..

          உதவி சுட்டி https://www.vinavu.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF/page/4/

          என்னைய அல்லக்கைன்னு சொல்றதுதான் நான் கேட்ட கேள்விக்கு பதிலா..
          யோக்கியமான ஆளா இருந்தா கட்டுரையின் நோக்கம்னு நீங்க சொல்ற வாதத்தை ஆதாரத்தோட நிருவனும். முடியலேன்னா தோல்வியை ஒப்புகிட்டு போய்கிட்டே இருக்கனும். அதுதான் நல்ல மனுசனுக்கு அழகு…

          • மிஸ்டர் கேள்விக் கும்பி…..
            நீ ஆயிரம் தடவ சொன்னாலும் நெற்றிக் கண் திறந்தாலும் குற்றம் குற்றம்தான்னு சொல்ற பரம்பரஅய்யா நானு…. உம்ம லிங்க முதல் உம்ம மண்டையில கொடும்… ஜெ ஊழல்னா ஒரு மாதிரியும்…. கருநா ஊழல்னா ஒரு மாதிரியும் பேயறதுதான் உம்ம அம்பி வேல…. உமக்கு புரியலைன்னா… உமக்கு அறிவு வளர்ச்சி அவ்வளவுதான்னு அர்த்தம்…..

            • நாகராசு..

              நீங்க மொதல்ல சொன்னது இது

              @@@@@@@@@@@@@@@@@@@@
              ”அதாவது…. ஸ்பெக்டிரம் ஊழலில் ராசாவுக்கோ கனிமொழிக்கோ எந்த பங்கும் இல்லை.. எவனோ பார்ப்பன பாசிஸ்டுகள் ஊழல் செய்துவிட்டு அந்தப் பழியை ராசா கனி ஆகியோர் தலையில் போட்டுவிட்டார்கள்.. பாவம் கருணாநிதி…
              @@@@@@@@@

              இது உளரல் முடிஞ்சா நிரூபிங்கன்னு சொன்னேன், ரெபரன்சுக்கு சுட்டியும் கொடுத்தேன்.. உங்க கிட்டேருந்து பதிலே இல்லே..

              அடுத்து இப்படி உளரினீங்க

              @@@@@@@@@@
              வினவின் line of thinking writeup எல்லாமே ”கருநா” மேல ஒரு சாப்ட் கார்னரோட எழுதற கட்டுரைகள்தான்… அதத்தான் வெளியிடுவார்…
              @@@@@@@@@@

              இது டோட்டல் டுபாக்கூர்னு ஆதாரத்தோட மறுத்து உங்களை நிரூபிக்கச்சொல்லி சவால் விட்டேன்.. அதுக்கும் பதில் சொல்லாம புதுசா இப்படி உளருறீங்க

              @@@@@@@@@@
              ஜெ ஊழல்னா ஒரு மாதிரியும்…. கருநா ஊழல்னா ஒரு மாதிரியும் பேயறதுதான் உம்ம அம்பி வேல
              @@@@@@@@@@

              இன்னும் ஜெ ஊழலை பற்றி வினவுல எதுவும் பெரிசா எழுதவேயில்ல ஆனாலும் இப்படி லூசுத்தனமா நீங்க எழுதிகிட்டிருக்கீங்க.. இதுக்கு சைடுக்கு நக்கீரன் பரம்பரைன்னு வேற.. கருமம் கருமம். பேசாம ”சூனா பானா லேசுவாசாத்தான் வீங்கியிருக்கு, யாரும் பாக்கறத்துக்கு முன்னால அப்படியே ரகளையா கிளம்புடான்னு” போய்கிட்டே இருங்க.

              மனுசன்னா சொன்ன சொல்லுக்கு பொறுப்பேத்து விளக்கம் கொடுக்கனும். இல்ல ஆதாரமாச்சும் கொடுக்கனும். இரண்டும் இல்லாம இஷ்டத்துக்கு உளரிக்கொட்டினா அதுக்கு பேருதான் வெர்பல் டயோரியா.

              உங்களமாதிரி சொன்ன சொல்லுக்கு பொறுப்பேக்க தில்லில்லாத கோழைகளுக் கெல்லாம் விவாதம் ஒரு கேடான்னு யாராச்சும் கேட்டுடப்போறாங்க அதனால சீக்கிரம் வாயிலையும் இன்னும் வசதிப்பட்ட இடத்திலெல்லாம் கார்க் வச்சு அடைச்சுகிட்டு படுத்து தூங்குங்க சார்.

              • உம்ம வினவின் மேல் உள்ள ’ரசிகத் தன்மை’ ’விசிலடிச்சான்’ தன்மை.. உம்மை சரியான வழியில் கொண்டு செல்லவில்லை என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்… ஒரு வகையில் இதுவும் ஒரு ரஜினி ரசிகர் மன்றமே… அப்படித்தான் வினவை வளர்க்க விரும்புகிறீர்களா…? அல்லது வினவுக்கு ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கையில்லையா..? சரி விசயத்துக்கு வருகிறேன்… ஒவ்வொரு வரியை பிடித்துத் தொங்கிக் கொண்டு இதை நிருபி அதை நிருபி என்றால் என்னாலும் வினவில் வருவதைப் பற்றி ஆயிரம் சொற்றொடர்களை வைத்துக் கொண்டு தொங்கி இது என்ன அது என்ன என்று கேட்க முடியும்… ஆனால் அது விதண்டாவாதம்.. வினவால் 1000 ஜன்மத்திற்கு பதில் சொல்ல முடியாது.. நான் சொல்ல வந்தது என்ன.. தற்போது current topic நடக்கிறது.. சிபிஅய் ஒரு பெரும் புள்ளியை கைது செய்து விட்டது.. மேலும் பல கார்ப்பரேட் முதலைகள் இருக்கிறார்கள்… அவர்களை கைது செய்ய முடியுமா என்பது ஒரு மிலியன் டாலர் கேள்வி.. கருநா மகளை கைது செய்தவுடன் பார்ப்பன தலைமையில் இருக்கும் ஒரு சிபிஅய் என்று சிந்தனையோட்டம் வினவுக்கு வருவதன் விளைவுதான் இந்தக் கட்டுரை…சிரிப்பு போலீஸ் என்ற பகடி.. … அது மிகவும் சொத்தையான வாதம்…ஆயிரம் ஓட்டைகள் இருந்தாலும் CBI யிடம் பல திறமைசாலிகள் இருக்கிறார்கள்.. அதற்கு வினவோ நீங்களோ certificate தரத் தேவையில்லை.. ராஜீவ் கொலையில் துப்பு துலக்கிய விதம் ஒன்றே சாட்சி.. அதில் பல ஓட்டைகள் இருக்கலாம்…அதே சமயம் விடுதலைப் புலிகள்தான் காரணம் என்பதை திட்டவட்டமாக உங்களால் மறுக்க முடியுமா…? சித்தரவதைகள் செய்திருக்கலாம்.. உமது சோவியது KGB கூட அப்படித்தான்.. அரசு அமைப்புகள் அப்படித்தான் இயங்கும்… நமது நாட்டில் பல்வேறு அரசியல் குறுக்கீடுகள் இருந்தபோதும் இயன்றதை செய்கிறார்கள் என்றே சொல்வேன்… வினவு இந்த சமயத்தில் சிரிப்பு போலிஸ் என்ற பகடியை விட்டு… கார்ப்பரேட் ஆட்களை கைது செய்ய முடியுமா என்று கேள்வி எழுப்பியிருந்தால் அதுதான் சரியான வாதமாக இருக்கஒழியுமே தவிர உமது softcorner ஆட்களைத் தொட்டவுடன் பகடி செய்வது நான் மேற்கண்ட பின்னுட்டத்தில் சொன்னதை சரி என்றே எண்ண வைக்கிறது…

                • நாகராசு, அதே பழைய சொத்தையான வாதாமானாலும், அட்லீஸ்ட் பதிவுக்கு சம்பந்தமா விவாதிக்க முயற்சிசெஞ்சதுக்கு வாழ்த்துகள். இனி உங்க கருத்தை பிரிச்சி மேயலாமா….

                  1) உம்ம வினவின் மேல் உள்ள ’ரசிகத் தன்மை’ ’விசிலடிச்சான்’ தன்மை.. உம்மை சரியான வழியில் கொண்டு செல்லவில்லை என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்… ஒரு வகையில் இதுவும் ஒரு ரஜினி ரசிகர் மன்றமே… அப்படித்தான் வினவை வளர்க்க விரும்புகிறீர்களா…? அல்லது வினவுக்கு ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கையில்லையா..?

                  —> உங்க வருத்தம் எல்லாம் கிடக்கட்டும். நான் என்ன சொன்னதுக்காக இதை எழுதுனீங்க. உங்க கருத்து தப்புன்னு நான் சொன்னா ஒடனே வினவு ரசிகனா. அப்ப உங்க கருத்து சரின்னு சொன்னா நாகராசு ரசிகனா. இதுதான் உங்க ஜனநாயகமா? ஜார்ஜ் புஸ்ஸூ சொன்னாரு பாருங்க ‘நீ எங்களோட இல்லேன்னா நீ அவன் ஆளுன்னு’ அதுதான் இது பச்சையான பாசிசம். உங்க கருத்தை சொல்றதுக்கு உங்களுக்கு உரிமை இருக்கும் போது அதை மறுக்கும் உரிமை எனக்கும் இருக்கு.

                  ——————–>

                  2) சரி விசயத்துக்கு வருகிறேன்… ஒவ்வொரு வரியை பிடித்துத் தொங்கிக் கொண்டு இதை நிருபி அதை நிருபி என்றால் என்னாலும் வினவில் வருவதைப் பற்றி ஆயிரம் சொற்றொடர்களை வைத்துக் கொண்டு தொங்கி இது என்ன அது என்ன என்று கேட்க முடியும்… ஆனால் அது விதண்டாவாதம்.. வினவால் 1000 ஜன்மத்திற்கு பதில் சொல்ல முடியாது.

                  —> ஒரு வரியை பிடித்து தொங்கிக்கொண்டு உங்களை நிரூபிக்க சொல்லி நான் கேட்கவில்லை நீங்களும் வினவில் வரும் சொற்றொடறை வைத்து கேள்வி கேட்கவில்லை. மாறாக பதிவில் இல்லாத ஒரு விசயத்தை பதிவின் மையமான பொருளாக எழுதினீர்கள். அது தவறு என ஆதாரபூர்வமாக வினவு எழுதிய கட்டுரைகளை சுட்டினாலும், உங்கள் கருத்தை நீங்கள் பரிசீலிக்கவே இல்லை. மாறாக பதட்டமடைந்து மீண்டும் மீண்டும் தொடர்பற்று எழுதினீர்கள்

                  ——————–>

                  3) தற்போது current topic நடக்கிறது.. சிபிஅய் ஒரு பெரும் புள்ளியை கைது செய்து விட்டது.. மேலும் பல கார்ப்பரேட் முதலைகள் இருக்கிறார்கள்… அவர்களை கைது செய்ய முடியுமா என்பது ஒரு மிலியன் டாலர் கேள்வி.. கருநா மகளை கைது செய்தவுடன் பார்ப்பன தலைமையில் இருக்கும் ஒரு சிபிஅய் என்று சிந்தனையோட்டம் வினவுக்கு வருவதன் விளைவுதான் இந்தக் கட்டுரை…சிரிப்பு போலீஸ் என்ற பகடி.. …

                  —> இதைத்தான் நான் மறுத்தேன். அதாவது கடந்த வாரம் தீவிரவாத பட்டியலில் சிபிஐ யின் டூப்பாக்கூர்தனம் அனைத்து மீடியாக்களிலும் சிரிப்பாய் சிரிக்கும் போது வெளிவந்த கட்டுரை இது. இதை கனிமொழி கைதோடு தொடர்பு படுத்தி பார்ப்பது உங்களுடைய குறைபட்ட பார்வை.

                  ஸ்பெக்ட்ரம் ஊழல் அல்ல அது கார்ப்பரேட் முதலாளிகளின் பகல் கொள்ளை என்று ஊழலின் பின்னணி குறித்து வினவில் வந்த 25 கட்டுரைகளின் சுட்டியை அளித்தேன் அதைவைத்தல்லவா வினவின் கருத்தை மதிப்பீடு செய்யமுடியும். அதை விட்டு புருலியா ஆர்ம்ஸ் டிராப்பில் சிபிஐ செய்த காமெடியை வைத்து ஸ்பெக்டரம் பற்றிய வினவின் கருத்தை எப்படி அளப்பது. அது ஒரு அறிவார்ந்த செயலாகுமா?

                  ——————–>

                  4) … வினவு இந்த சமயத்தில் சிரிப்பு போலிஸ் என்ற பகடியை விட்டு… கார்ப்பரேட் ஆட்களை கைது செய்ய முடியுமா என்று கேள்வி எழுப்பியிருந்தால் அதுதான் சரியான வாதமாக இருக்கஒழியுமே தவிர உமது softcorner ஆட்களைத் தொட்டவுடன் பகடி செய்வது நான் மேற்கண்ட பின்னுட்டத்தில் சொன்னதை சரி என்றே எண்ண வைக்கிறது…

                  —> நீங்கள் வினவின் தொடர் வாசகர்தானே கனிமொழி மேல் சிபிஐ வளையம் நெருங்கும் போதே வினவு கட்டுரை எழுதியதே அதைக்கூட படிக்கவில்லையா https://www.vinavu.com/2011/04/28/kanimozhi-kalmadi/

                  இதில் நீங்கள் எழுப்பிய மில்லியன் டாலர் கேள்விதானே எழுப்பப்பட்டிருக்கிறது. ஆக இது தொடர்ப்பாக எழுதப்பட்டிருக்கும் பதிவிலேயே தெளிவாக வினவு அதன் கருத்தை எழுதியிருக்கும் போது. நீங்களாக கற்பிதம் செய்து கொண்டு சாப்ட் கார்னர் என எழுதினால் அது அவதூறு என்றுதானே விமர்சனம் செய்ய முடியும். மேலும் கருணாநிதி/திமுக வை விமர்சித்து ஏகப்பட்ட கட்டுரையையும் வினவு எழுதியிருக்கிறது என்றும் சுட்டிகள் கொடுத்தேன்.

                  நீங்கள் எதையுமே படிக்காமல் ஒரு முன்முடிவோடு இப்பிரச்சனையை அனுகும் போது இப்படித்தான் தவறான முடிவுகளை வந்து அடைவீர்கள். உங்கள் வசித்தாக்க மீண்டும் அந்த சுட்டிகளை இங்கே பதிகிறேன்.நிதானமாக படித்து உங்கள் கருத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.

                  https://www.vinavu.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D/

                  https://www.vinavu.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF/page/4/

            • ஜெயலலிதா பாப்பாத்தி. ஒரு முதலாளி வர்க்க கால்நக்கி. கருணா பெரியாரியல் பேசி உளரும் ஒரு முதலாளி வர்க்க கால்நக்கி. அவ்வளவுதான். இதில் வினவு எங்கு கருணாவுக்கு சார்பாக எழுதி உள்ளார்கள். இருவரையும் ஒரு சேரதான் வினவு கண்டித்து எழுதி வருகிறது. வீணாக வாயைக்கொண்டு உளரி உமது பிராமண முகத்தை காட்டாதீர்கள்

  5. னம்ம ஊரில் களி: தீகாரில் சப்பாத்தியும் குருமாவும் தருவார்களெ

  6. எனக்கு புரிஞ்சியிருச்சு, மிடில் கிளாஸ் மாதவனுக்கு புரிங்சாலும்,குப்புற விழுந்து எழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டல என்பார்கள்

  7. களி தந்தெல்லாம் அந்தக் காலம்.இப்பெல்லாம் அரிசி சாதம்தான்.அனுபவம் பெறனும்னா,ம.க.இ.க, புமாஇமு.விவிமு நடத்துகிற போராட்டங்களில் கலந்து கொண்டு
    தெரிஞசுககலாமே! பதி சார்

  8. முஸ்லீம் சொம்புதூக்கி வினவே பாகிஸ்தான்ல மத துவேஷ சட்டத்த எதிர்த்த ஒரு கவர்னர் மத வேரியனுன்களால் கொல்லபட்டார் அதெல்லாம் நீ சொல்ல மாட்ட!

    • Mr Sarav……I dont need your help to understand the realities. (At the same time – for your information -I dont possess any POONAL in my body.) So dont come to any hasty decision (may be due the influence of reading vinavu).
      I am NOT agreeing VINAVU in toto. No doubt – There are some agreeable aspects. But I want to exercise the democracy of agreement to the disagreement. In some articles, I supported by way of writing comment. Whenever you find time, just go thro them.
      தற்போது நண்பர் கேள்வியார்…
      அய்யா கேள்வியாரே நான் அனைத்து வினவு கட்டுரைகளைப் படித்தவன்… புதிதாக நீங்கள் எதையும் சுட்டவில்லை..
      மும்பை நிகழ்வில் எழுதப் பட்ட கட்டுரையா.. அல்லது கனி விவகாரத்திற்காக எழுதப்பட்டதா என்பது வினவின் முக்கயஸ்தர்களுக்கே வெளிச்சம்… நான் கட்டுரையின் குறிப்பான விசயத்திற்கு செல்லவில்லை மாறாக சாராம்சமாக உள்ள பொதுவிசயத்தைச் சுட்டினேன்… என்ன இருந்தாலும் திமுகவின் காலிப் பெருங்காய டப்பாவின் வாசனை வினவிற்கு பிடித்திருக்கலாம்தானே…?

Leave a Reply to கேள்விக்குறி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க