Friday, August 12, 2022
முகப்பு சமூகம் சாதி – மதம் பணம், வேலை, கல்விக்காக மதம் மாறுவது குற்றமா?

பணம், வேலை, கல்விக்காக மதம் மாறுவது குற்றமா?

-

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 2

சமயங்களுக்கு இடையே உள்ள தராதரங்களை எவ்வாறு ஒரு பசுவால் உணர்ந்து கொள்ள முடியாதோ அவ்வாறே அவர்களாலும் (ஹரிஜனங்களாலும்) உணர்ந்து கொள்ள முடியாதுகடவுள் இருக்கிறார் அல்லது இல்லை என்பதைப் பாகுபடுத்திப் புரிந்து கொள்ளும் மனமோ, புத்திக் கூர்மையோ, திறமையோ ஹரிஜனங்களுக்குக் கிடையாது.

நீங்கள் வைத்ய உதவி அளிக்கும்போது அதற்கு வெகுமதியாக உங்களின் நோயாளிகள் கிறித்தவ மதத்தில் சேர வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்

பொதுவாகக் கூற வேண்டுமெனில் எங்கெல்லாம் கிறித்தவ மதத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டுள்ளதோ, அது ஒரு ஆன்மீகச் செயலாக எந்த விதத்திலும் இருந்ததில்லை. இவையெல்லாம் சௌகரியத்திற்காகச் செய்யப்பட்ட மதமாற்றமே”…

கிறித்தவ மத போதனைக் குழுக்கள் தங்கள் பணியை அக்கறையுடன் ஆற்ற வேண்டுமானால், ஹரிஜனங்களை மதமாற்றம் செய்யும் அநாகரிகமான போட்டியிலிருந்து அவர்கள் அவசியம் விலகிக் கொள்ள வேண்டும்”…

இவை கிறித்தவ மதமாற்றம் பற்றிய சங்கராச்சாரியின் அருள் வாக்கல்ல; அல்லது விசுவ இந்து பரிசத்தின் திமிர் பிடித்த கிழட்டுச் சாமியார்கள் யாரும் கூறியதல்ல. இவை மதமாற்றம் குறித்த மகாத்மாவின்கருத்துக்கள். 1936, 37-ஆம் ஆண்டுகளில் தனது ஹரிஜன்பத்திரிகையில் அவர் எழுதியவை. (அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி10).

தமாற்றம் குறித்து ஒரு தேசிய விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று வாஜ்பாயி கூறியவுடனே, ”இதுபற்றி அரசியல் சட்டமும் நீதி மன்றமும் ஏற்கனவே தெளிவுபடுத்தியிருக்கின்றன. புதிதாக விவாதம் எதுவும் தேவையில்லை” என்று காங்கிரசு உள்ளிட்ட எதிர்க் கட்சிகளும் பத்திரிகைகளும் மடையடைத்ததற்கான காரணம் நேர்மையானதல்ல. குஜராத்தில் தேவாலயங்கள் கொளுத்தப்பட்டதைக் கண்டித்து ‘இந்து’ ஆங்கில நாளிதழ் (14.1.99) எழுதிய தலையங்கத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டது:

”குஜராத் மாநிலத்தின் இந்து செயல்வீரர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் உண்மைதான் என்று வைத்துக் கொண்டாலும் – அதாவது குஜராத் டாங்ஸ் மாவட்டத்தில் கட்டாயமாகவும், பணத்தாசை காட்டியும் மக்கள் மதமாற்றம் செய்யப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு – அவற்றைக் கையாள்வதற்கு இப்போது இருக்கின்ற சட்டங்களே போதுமானவை.”

இப்போது இருக்கின்ற சட்டங்கள் என்ன சொல்கின்றன?

”ஏமாற்றியோ, ஆசை காட்டியோ, கட்டாயப்படுத்தியோ மத மாற்றம் செய்வது தண்டனைக்குரிய குற்றம்” என்று ஒரிஸ்ஸா, ம.பி. ஆகிய இரு மாநில காங்கிரசு அரசுகள் 70களில்  ஒரு சட்டமியற்றின. இந்தச் சட்டத்திற்கு எதிராக ஸ்தனிஸ்லாஸ் என்ற பாதிரியார் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இச்சட்டம் அரசியல் சட்டத்தின் 25வது பிரிவு வழங்கும் ‘மத உரிமை’ எனும் அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும் என்று வாதாடினார். ”மதப் பிரச்சாரம் செய்யும் உரிமை என்பது மதமாற்றம் செய்யும் உரிமை அல்ல” என்று கூறிய உச்சநீதி மன்றம் 1977-இல் அவரது வாழ்க்கைத் தள்ளுபடி செய்தது.

”சட்டப்பிரிவு 25(1) வழங்குகின்ற ‘மனச்சாட்சிச் சுதந்திரம்’ என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்பட்டுள்ளதேயன்றி ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு மட்டும் வழங்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தனது மதத்தின் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்வது என்பதைக் கடந்து, அடுத்தவரை தன் மதத்திற்கு மாற்றுவது என்ற முயற்சியில் ஒருவர் ஈடுபடுவாரேயானால், அத்தகைய நடவடிக்கையானது மற்ற குடிமக்களின் மனச்சாட்சிச் சுதந்திரத்தில் தலையிடுவது ஆகும்.”

எனவே, ”ஏமாற்றியோ ஆசை காட்டியோ கட்டாயப்படுத்தியோ மதமாற்றம் செய்வது தண்டனைக்குரிய குற்றம்” என்று ஒரிசா, ம.பி. மாநில அரசுகள் இயற்றிய சட்டம் செல்லத்தக்கதே என 1977-லேயே உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்து விட்டது. இதுதான் மதமாற்ற உரிமை பற்றிக் கடைசியாக வந்துள்ள உச்சநீதி மன்றத் தீர்ப்பு. இனி, இந்தப் பிரச்சினை குறித்து ஆர்.எஸ்.எஸின் பொதுச் செயலாளர் எச்.வி.சேஷாத்ரி, 5.2.99 அன்று ‘இந்து’ பத்திரிகைக்கு எழுதியுள்ள கடிதத்தின் சில பகுதிகளைப் பார்ப்போம்.

”ஏமாற்றியோ, கட்டாயப்படுத்தியோ, ஆசைகாட்டியோ மத மாற்றம் செய்வது சட்டவிரோதமானது. ஆனால், மேற்கூறிய வார்த்தைகளின் பொருள் என்ன?” ”எடுத்துக்காட்டாக, பிரச்சாரம் செய்து மக்களைக் கூட்டுவது, இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையால் எனக்கு வியாதிகள் குணமானது என்று பொய்சாட்சி சொல்லும் நபர்களைக் காட்டுவது, காடுகளில் பழங்குடி மக்களைத் திரட்டி நள்ளிரவு முகாம்கள், விருந்துகள் நடத்தி வீடியோ திரைப்படங்கள் மூலம் மதப்பிரச்சாரம் செய்வது… – மதமாற்றம் செய்யப் பயன்படுத்தப்படும் இந்த வழிமுறைகள் எல்லாம் ‘ஏமாற்று’ இல்லையா?”

”மதம் மாற்றும் நோக்கத்துடன் பணம் கொடுத்தாலும், சோறு போட்டாலும், மருந்துகள் கொடுத்தாலும், ஏன் கல்வியே அளித்தாலும் இவையெல்லாம் ”இவ்வுலக ஆசை”யைத் தூண்டுபவைதானே! இவற்றுக்கும் ஆன்மீக விடுதலைக்கும் என்ன சம்பந்தம்?” ”மகாத்மா காந்தியும், அன்றைய ம.பி.காங்கிரசு அரசு நியமித்த நியோகி கமிசனும் தெளிவாகக் கூறியதுபோல, கிறித்தவ மதத்திற்கு மாறுபவர்கள் தங்களது புராதனமான சமுதாய, கலாச்சார வாழ்வின் இழைகளையெல்லாம் துண்டித்துக் கொள்கிறார்கள்; அழித்துக் கொள்கிறார்கள். மேற்கத்திய வாழ்க்கை முறைக்கு இரையாகி விடுகிறார்கள்.”

இதுதான் ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலர் சேஷாத்திரியின் குற்றச்சாட்டு.

இதுவரை படித்ததை நிதானமாக ஒருமுறை சிந்தித்துப் பாருங்கள்! ஒரிஸ்ஸா பாதிரியார் கொலைக்குப் பிறகு பாரதீய ஜனதா ஒருபுறமும், அதன் கூட்டணிக் கட்சிகள் உள்ளிட்ட பிற கட்சிகள், பத்திரிகைகள், நீதிமன்றம் ஆகிய அனைத்தும் எதிர்ப்புறமும் நின்று மோதிக் கொண்டிருந்தது போலத் தெரிந்த மாயை கலைந்து விடும். மத மாற்றம் குறித்து அரசியல் சட்டமும், அகிம்சா மூர்த்தியும், ஆர்.எஸ்.எஸ். காரர்களும் கூறுவது ஒன்றேதான் என்பது தெளிவாகும்.

மதமாற்றத்தில் ஈடுபடும் பாதிரியார்களை உயிருடன் கொளுத்துவதா, சட்டப்படி தண்டிப்பதா என்பதுதான் இவர்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடு!

பால் பவுடர்லவுகீகம், காமதேனுஆன்மீகம்!

ஜெபக் கூட்டம் நடத்தி மதம் மாற்றுவது ஏமாற்று! சோறு போட்டும், மருந்து கொடுத்தும் மதம் மாற்றுவது ‘இவ்வுலக ஆசையைத் தூண்டுவது’; காந்தியின் வார்த்தைகளில் சொன்னால் இந்த மதமாற்றங்கள் எல்லாம் ‘ஆன்மீகச் செயல்கள்’ அல்ல – சவுகரியத்திற்காகச் செய்யப்பட்ட லவுகீக (இவ்வுலகம் சார்ந்த) நடவடிக்கைகள்! இகலோக சவுகரியங்களுக்காக மதம் மாறுவது இழிவு, அவ்வாறு மதம் மாறுவதும், மாற்றுவதும் எப்படி என்று வாசகர்கள் தெளிவடைய வேண்டும்.

பைபிளையோ, குர்ஆனையோ வேத புராணங்களையோ ஆதாரமாகக் கொண்டு ”எங்களது சொர்க்கத்தில் ஒயின், ஆட்டிறைச்சி, அப்சரஸ் ஸ்திரீகள் போன்ற இன்னின்ன வசதிகள் உண்டு” என்று ஆசை காட்டலாம். அந்த ஆசையில் மயங்கி இவ்வுலக சிற்றின்பங்களை மறந்து மேற்படி ‘பேரின்பத்தில்’ நாட்டம் கொள்பவர்களை மதம் மாற்றலாம; அதை உச்சநீதி மன்றம் அனுமதிக்கிறது.

புரியும்படி சொல்வதானால் காமதேனு என்று ஆசை காட்டலாம், ஆனால், பால்பவுடர் விநியோகிக்கக்கூடாது; கற்பக விருட்சம் என்று ஆசை காட்டலாம். ஆனால், கல்வி அளிக்கக்கூடாது; கைலாய பதவி உண்டு என்று உத்திரவாதம் தரலாம. ஆனால், சாகக் கிடக்கிறவனுக்கு வைத்தியம் செய்யக்கூடாது. இதுதான் சட்டத்திற்கான விளக்கம். கல்விக்கு சரஸ்வதி, காசுக்கு லட்சுமி, மூளைக் கோளாறுக்கு குணசீலம், அம்மைக்கு மாரியம்மா, இன்னும் வயிற்றுவலி, வாய்க்கோளாறுக்குத் தனித்தனி கடவுள்கள் என்று இவ்வுலக இன்ப – துன்பங்களை இலாகா வாரியாகப் பிரித்துத் தனித்தனிக் கடவுள்கள் வைத்திருக்கும்போது இகலோக ஆசையைத் தூண்டுவதில் என்ன குற்றம்?

கடவுள் வரை போவதற்குக் காலதாமதம் ஆகும் என்பதால், ”உடனடி நிவாரணம் – நீடித்த இன்பம்” என்று பிரச்சாரம் செய்யும் சாய்பாபா, சிவசங்கர் பாபா போன்ற ஆக்ஷன் – 500, வயாக்ரா மாத்திரைகள் எல்லாம் வழங்குவது என்ன பேரின்பமா? ஜெபக் கூட்டங்கள் ஏமாற்று என்றால், மழை வருவதற்கும், வெயில் அடிப்பதற்கும் காஞ்சி ‘முனிவர்’ நடத்தும் வேள்விகள் எல்லாம் பத்தரைமாற்றா? ஆனானப்பட்ட அப்பர் பெருமானே அல்சருக்காக மதம் மாறியவர்தானே, நான் கான்சருக்காக மாறினால் என்ன என்று கூடக் கேட்கலாம். ஆனால், இதற்கெல்லாம் பதில் கிடையாது. அப்பருக்கு வந்தது ‘ஆன்மீக அல்சர்’ என்று விளக்கம் சொல்லி விடுவார்கள்.

திருச்சபைக்குத் தெரியாதா இவர்களின் தில்லுமுல்லு? அதனால்தானே ”ஆத்தும சரீர சுகமளிக்கும் கூட்டம்” என்று சிற்றின்பத்துடன் பேரின்பத்தையும் ஒட்டவைத்து சட்டத்திற்கு டிமிக்கி கொடுத்து விட்டார்கள்.

மனச்சாட்சியை ஆராயும் நீதிபதிகள்!

சரி. இகலோக ஆசை காட்டி மதம் மாற்றுவது குற்றம். அப்படி மாற்றியவர்களைச் சிறையில் தள்ளலாம். மாறியவர்களை எங்கே தள்ளுவது?

பால் பவுடர், பணம் காசு கிடக்கட்டும்; மீனாட்சிபுரத்தில் இசுலாமுக்கு மாறிய தாழ்த்தப்பட்ட மக்கள் பகிரங்கமாகச் சொல்கிறார்கள், ”சமமாக டீ குடிக்க வேண்டும், செருப்பணிந்து நடக்க வேண்டும், தோளிலே துண்டு போட வேண்டும், ஒரே கோயிலில் சாமி கும்பிட வேண்டும், சாதி வேறுபாடு இல்லாமல் எல்லோரும் எல்லோர் வீட்டிலும் அமர்ந்து சாப்பிட வேண்டும் – போன்ற இகலோக ஆசைகளுக்காகத்தான் இசுலாமுக்கு மாறினோம்” என்று தெளிவாகச் சொல்கிறார்கள். மதம் மாறுவதற்கு முன் ‘டேய்’ என்று கூப்பிட்டவன் இப்போது ‘பாய்’ என்று கூப்பிடுகிறானென்று மகிழ்ச்சி அடைகிறார்கள்.

கோயிலை மசூதியாக மாற்றினான் என்று கூறி, மசூதியை இடித்து அதனை ‘சர்ச்சைக்குரிய இடம்’ என்று பெயரிட்டு நீதிமன்றத் தீர்ப்புக்கு விட்டவர்கள் மீனாட்சிபுரத்தில் மதம் மாறிய தாழ்த்தப்பட்ட மக்களை என்ன செய்வார்கள்? சட்டவிரோதமாக – கேவலம் செருப்பு அணிந்து நடப்பது போன்ற அற்பமான இகலோக சவுகரியங்களுக்காக – மதம் மாற்றப்பட்ட மக்களை சர்ச்சைக்குரிய மனிதர்களாக்குவார்களா? அவர்கள் இந்துவா முசுலீமா என்பதை உச்சநீதி மன்றம் தீர்மானிக்குமா?

இது குதர்க்கமல்ல; எந்த மதத்தையும் பின்பற்றுவதற்கோ, பின்பற்றாமல் இருப்பதற்கோ வழங்கப்பட்டுள்ள ‘மனச்சாட்சி சுதந்திரம்’ என்னும் சுதந்திரத்தின் அடிப்படையில்தான் ஒருவன் மதம் மாறுகிறான். அவன் பால்பவுடரைக் காட்டி மாற்றப்பட்டானா, பரம பிதாவைக் காட்டி மாற்றப்பட்டானா என்பதை ஆராய நீதிமன்றத்திற்கு ஏது உரிமை? மதம் மாறியவர்களின் மனச்சாட்சியை ஆராய்வது இருக்கட்டும்; கட்சி மாறிகளின் மனச்சாட்சியை நீதிமன்றம் ஆராயப்புகுந்ததுண்டா?

பிறப்பால் மதத்தைத் தீர்மானிப்பது இறையியலா, உயிரியலா?

இந்த நாட்டில் ஒவ்வொரு இந்துவும், முசுலீமும், கிறித்தவனும் சுயமாகச் சிந்தித்து ”இந்த வழிதான் எனது ஆன்மவிடுதலைக்கு உகந்தது” என்று தெளிந்து, தனக்குரிய பரலோகத்தால் கவரப்பட்டு அந்தந்த மதத்தில் இருக்கிறானா, அல்லது ‘நாய்க்குப் பிறந்தது நாய்க்குட்டி’ என்பது போல இந்துவுக்குப் பிறந்ததால் இந்து, கிறித்தவனுக்குப் பிறந்ததால் கிறித்தவன் என்ற கணக்கிலா? நடைமுறையில் குடிமக்கள் பலரின் மதத்தைத் தீர்மானித்துக் கொண்டிருப்பது இறையியலா, அன்றி உயிரியலா?

பால் பவுடர் கொடுத்து மதம் மாற்றுபவன் குற்றவாளி என்றால், பாலூட்டி, சோறூட்டி வளர்த்த ஒரே காரணத்தினால் மதமில்லாமல் பிறந்த மனிதக் குழந்தையை இந்துவாகவும், முசுலீமாகவும் மத மாற்றம் செய்யும் பெற்றோர்கள் அனைவருமே தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகள் என்று கொள்ளலாமே? அல்லது வயது வந்தோர் வாக்குரிமை போல, வயது வந்த ஒவ்வொரு குடிமகனும் எல்லா மக நூல்களையும் கற்று, தன் மனச்சாட்சிப்படி ஒரு மதத்தைத் தெரிவு செய்து தழுவவோ, எதையும் தழுவாமல் இருக்கவோ முடியும் என்ற நடைமுறை அமலில் உள்ளதா? ஆள்பவனைத் தெரிவு செய்யவே 18 வயதாக வேண்டும் எனும்போது ஆண்டவனைத் தெரிவு செய்ய அதற்கும் மேல் வயதும் அனுபவமும் வேண்டாமா?

இது வேடிக்கையல்ல, குடும்பத்திற்கும் மதத்திற்கும் உள்ள ‘இயற்கையான’ உறவை மீனாட்சிபுரத்தில் துண்டித்து விட்டார்கள். அப்பா மதம் மாறி அப்துல்லாவானார்; மகன் ரங்கசாமியாகவே இருந்து கொண்டான். மதம் மாறிய ஒரு பெண் இசுலாத்தில் பெண்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் பிடிக்காததால் பழைய படி ‘இந்து’வாகி விட்டாள். அவளைத் தாய் மதத்திற்கு வரவழைக்க எந்த விசுவ இந்து பரிசத்தும் போய் சடங்கு நடத்தவில்லை. இவர்களையெல்லாம் நீதிமன்றம் என்ன செய்யும்?

இத்தனை கேலிக்கூத்தான தீர்ப்புகளை வழங்கும் நீதிபதிகள் அவ்வளவு அடிமுட்டாள்களா என்று வாசகர்கள் வியப்படையலாம். இந்துமதச் சார்பை மனதில் வைத்துக்கொண்டு மதச் சார்பின்மை வேடம் அணிந்து கொள்ளும்போது அதன் விளைவு சட்டரீதியான கோமாளித்தனமாகி விடுகிறது. அவ்வளவுதான்!

படிப்பது கிறித்தவப் பள்ளி இடிப்பது மாதாகோயில்!

கோமாளித்தனம் கிடக்கட்டும். பார்ப்பன இந்து மத வெறியர்களின் அயோக்கியத்தனத்தைக் கொஞ்சம் ஆராய்வோம். ”மதம் மாற்றும்  நோக்கத்துடன் பணம் கொடுத்தாலும், சோறு போட்டாலும், மருந்து கொடுத்தாலும், ஏன் கல்வியே அளித்தாலும் அவையெல்லாம இவ்வுலக ஆசையைத் தூண்டுபவைதானே” என்கிறார் ஆர்.எஸ்.எஸ். செயலர் சேஷாத்ரி.

அப்படியே வைத்துக் கொள்வோம். கிறித்தவராக மதம் மாறியவர்கள் யாரும் மாதாக்கோயில் மணியோசையால் கவர்ந்திழுக்கப்படவில்லை எனும்போது தேவாலயங்களுக்கு நெருப்பு வைப்பானேன்? இவ்வுலக ஆசையைத் தூண்டி இந்துக்களை மதமாற்றம் செய்கின்ற பொறிகளான கிறித்தவப் பள்ளி கல்லூரிகளையும் மருத்துவமனைகளையும் அல்லவா ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அடித்து நொறுக்கவேண்டும்!

ஆனால், அதைச் செய்ய முடியாது. காரணம் மனிதாபிமானமல்ல; அவை தேவைப்படுகின்றன. தோன்போஸ்கோவும், லயோலாவும், செயிண்ட் ஸ்டீபனும் இன்ன பிற பள்ளிகளும் கல்லூரிகளும் பார்ப்பன உயர் சாதி இந்துக்களுக்குத் தேவை. சர்ச் பார்க் கான்வென்டு, தோடர்கள் – இருளர்கள் வீட்டுப் பிள்ளைகள் படிப்பதற்காகவா, கட்டப்பட்டிருக்கிறது? மதமாற்றச் சதியின் கூடாரங்களாக சேஷாத்ரி குறிப்பிடும் கிறித்தவக் கல்லூரிகளில் படித்தவர்கள்தான் பாரதீய ஜனதாவின் பல தலைவர்கள் என்று ஒரு பட்டியலே வெளியிட்டிருக்கிறது ‘அவுட்லுக்’ வார ஏடு!

படிப்பது கிறித்தவப் பள்ளி, இடிப்பது மாதாகோயில்! ஆர்.எஸ்.எஸ்.கும்பலின் இந்த ‘ஆன்மீக வலிமை’ தாழ்த்தப்பட்டோருக்கும், பழங்குடி மக்களுக்கும் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கும் இல்லாமற் போனதற்காக அவர்கள் பெருமைப்பட வேண்டுமா அல்லது வருத்தப்பட வேண்டுமா?

மதம் மாறுபவன் தேசத் துரோகி! தேசம் மாறினால் தேசபக்தன்!

”கிறித்தவ மதத்திற்கு மாறுபவர்கள் தங்களது புராதனமான சமுதாய கலாச்சார வாழ்வின் இழைகளையெல்லாம் துண்டித்துக் கொள்கிறார்கள். மேற்கத்திய வாழ்க்கை முறைக்கு இரையாகி விடுகிறார்கள்” என்று வருத்தப்படுகிறார் சேஷாத்திரி. விசுவ இந்து பரிசத்தின் தலைவரோ ”கிறித்தவர்கள் மேலை நாடுகளுக்கும் முசுலீம்கள் பாகிஸ்தானுக்கும்தான் விசுவாசம் காட்டுகிறார்கள்” என்று குற்றம் சாட்டுகிறார். ”மதமாற்றம் என்பது தேசிய மாற்றம்தான்” என்கிறது ஆர்.எஸ்.எஸ்.

குஜராத்திலும், ஒரிசாவிலும் மதம் மாறிய பழங்குடிகள் அதே காட்டில் தான் சுள்ளி ஒடித்துக் கொண்டிருக்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறித்தவராக மதம் மாறிய மீனவர்களை விசைப்படகிலேறி அப்படியே அமெரிக்காவிற்கு ஓடவிடவில்லை. ஆர்.எஸ்.எஸ்.ஸிடம் வெட்டுப்படுவதற்காக மண்டைக்காட்டுக்குத்தான் திரும்பி வருகிறார்கள். இவர்களெல்லாம் மதம் மாறியும் தேசத்தை மாற்றிக் கொள்ளாத ‘தேசத் துரோகிகள்’.

மதம் மாறாமலேயே தேசத்தை மாற்றிக்கொள்ளும் ‘தேச பக்தர்களை’ப் பார்க்க வேண்டுமா? அதிகாலை 5 மணிக்கே சென்னை அண்ணா மேம்பாலத்தின் மேல் நின்றபடி அவர்களைப் பார்க்கலாம். அமெரிக்க கான்சல் அலுவலகத்தின் வாயிலில், அந்தக் காம்பவுண்டு சுவரை அண்ணாந்து பார்த்தபடி நின்றிருப்பார்கள்.

பாரதமாமாவின் மடியிலிருந்து தப்பி ஓடும் அந்த ”வெளிநாட்டில் குடியேறவிருக்கும் இந்தியர்”களில் இந்துக்கள் எத்தனை பேர், கிறித்தவர்கள் எத்தனை பேர் என்று ஆர்.எஸ்.எஸ் கணக்கெடுக்குமா? இராமனும், கிருஷ்ணனும், ரிஷிகளும், முனிவர்களும் அவதரித்த இந்தப் புண்ணிய பூமியை விட்டு ஓடுகிறார்களே, அவர்களை ஆசை காட்டி இழுப்பது யார்? அமெரிக்கப் பாதிரியார்களா? அவர்கள் பால்பவுடருக்கு மதம் மாறும் புளியந்தோப்பு, வியாசர்பாடி இந்துக்களல்ல; டாலருக்காக தேசம் மாறும் மயிலாப்பூர், மாம்பலம் இந்துக்கள். கட்டாய மதமாற்றம் போல இவர்கள் கட்டாயமாக தேசிய மாற்றத்துக்கு ஆளாகிறார்களோ? இல்லை. அன்றும் இல்லை, இன்றும் இல்லை.

பிஜியின் கரும்புத் தோட்டத்தையும் இலங்கையின் தேயிலைத் தோட்டத்தையும், மலேசியாவின் ரப்பர் தோட்டத்தையும் உருவாக்கக் கட்டாயமாகக் கப்பல் ஏற்றப்பட்ட உழைக்கும் சாதியினர் அகதிகளாகத் திரும்பி வந்தார்கள். கேம்பிரிட்ஜிற்கும்,  ஆக்ஸ்போர்டிற்கும் கப்பலேறிய அவாள், ஐ.சி.எஸ். அதிகாரிகளாகவும், ஐகோர்ட்டு வக்கீல்களாகவும் திரும்பி வந்தார்கள். இன்று வெளிநாட்டில் குடியேறிய இந்தியர்களாகத் திரும்பி வருகிறார்கள். பார்ப்பான் கப்பலேறினால் சாதி – மதத்தை விட்டு நீக்க வேண்டும் என்று பேசியவர்கள், இன்று பகவானையே கப்பலேற்றி அனுப்புகிறார்கள்.

மதமாற்றத்திற்குத் தடை விதிக்கக் கோரும் பாரதீய ஜனதா, இந்தத் தேச மாற்றத்துக்குத் தூபம் போட்டு வளர்க்கிறது. ஏனென்றால் அவர்கள் அமெரிக்காவில் ஆலயம் அமைக்கிறார்கள். தியாகய்யர் உற்சவம் நடத்துகிறார்கள், அனைத்துக்கும் மேலாக ஆர்.எஸ்.எஸ்.ஸூக்கும் அள்ளித் தருகிறார்கள்.

சட்டத்தினால் ஒரு கொட்டடி!

அவர்கள் வெளிநாட்டில் குடியேறிய இந்தியர்கள். கிறித்தவர்களும் முசுலீம்களும் இந்நாட்டில் குடியேறிய அந்நியர்கள்! தேசத்தையே மாற்றிக் கொண்டாலும் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமையும், இந்தியக் குடிமக்களைவிட மேலதிக உரிமைகளையும் பாரதீய ஜனதா வழங்கும். ஆனால், சாதிக்கொடுமையிலிருந்து தப்பிக்க கிறித்தவத்திற்கோ, இசுவாமிற்கோ மதம் மாறினால் தாழ்த்தப்பட்டவர்களின் இடஒதுக்கீடு உரிமையை ரத்து செய்யக்கோரும்.

இதுதான் கட்டாயம். இதுதான் மிரட்டல். ஏனென்றால் ஆசை காட்டிக் கவர்ந்திழுப்பதற்கு இந்து மதத்தில் எதுவும் இல்லை. கிறித்தவத்திற்கும் இசுலாத்திற்கும் மாறிய சூத்திர பஞ்ச சாதியினருக்குச் சேவை செய்து அவர்களை மீண்டும் இந்து மதத்திற்குக் கவர்ந்திழுக்க முடியாது. ஏனென்றால் இவாளுக்குச் சேவை செய்வதற்காகவே அவர்களை நியமித்திருக்கிறது இந்துமதம். மதமாற்றம், ‘சகோதரன் பிரிந்து விட்டானே’ என்ற துயரத்தை இந்து மத வெறியர்களுக்குத் தோற்றுவிக்க வில்லை. ‘வேலைக்காரன் ஓடி விட்டானே’ என்ற ஆத்திரத்தைத் தான் உண்டாக்குகிறது.

அதனால்தான் அடிமைத்தனத்திலிருந்து தப்பியோட முயன்ற கறுப்பின மக்களை அமெரிக்க வெள்ளை நிறவெறியர்கள் கொட்டடியில் அடைத்ததுபோல, கிறித்துவத்துக்கும் இசுலாமுக்கும் தப்பியோடி விடாமல் தடுக்க, சட்டத்தால் ஒரு கொட்டடி கட்ட முயல்கிறார்கள் இந்து மதவெறியர்கள். ‘ஆசை காட்டுவதற்கு’ப் பாதிரியாரும், அரபுப் பணமும் இல்லாமல் போனாலும் அறுத்துக்கொண்டு ஓடுவதற்கு அநேகம் பேர் தயாராக இருப்பதால்தான் கொட்டடியைப் பூட்டிவிட முயல்கிறார்கள்.  ஆசை காட்டுபவனைத் தண்டிக்கத் தானே சட்டம் இருக்கிறது. ”அறுத்துக் கொண்டு போகவே முடியாது” என்று சட்டம் போட்டுவிட்டால் சநாதன தருமத்தை நிரந்தரமாக்கி விடலாமே என்று திட்டம் போடுகிறார்கள்.

பார்ப்பன மதத்திற்கு மாற முயன்றதற்காக அன்று நந்தன் எரிக்கப்பட்டான். பார்ப்பன மதத்தைவிட்டு மாற முயற்சிப்பதற்காக இன்று நந்தனின் வாரிசுகள் எரிக்கப்படுகிறார்கள்.

– தொடரும்

பாகம் 1 – மதம் மாறினால் தேசிய உணர்வு மாறுமா?

_________________________________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 1. //பால் பவுடர் கொடுத்து மதம் மாற்றுபவன் குற்றவாளி என்றால், பாலூட்டி, சோறூட்டி வளர்த்த ஒரே காரணத்தினால் மதமில்லாமல் பிறந்த மனிதக் குழந்தையை இந்துவாகவும், முசுலீமாகவும் மத மாற்றம் செய்யும் பெற்றோர்கள் அனைவருமே தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகள் என்று கொள்ளலாமே? அல்லது வயது வந்தோர் வாக்குரிமை போல, வயது வந்த ஒவ்வொரு குடிமகனும் எல்லா மக நூல்களையும் கற்று, தன் மனச்சாட்சிப்படி ஒரு மதத்தைத் தெரிவு செய்து தழுவவோ, எதையும் தழுவாமல் இருக்கவோ முடியும் என்ற நடைமுறை அமலில் உள்ளதா? ஆள்பவனைத் தெரிவு செய்யவே 18 வயதாக வேண்டும் எனும்போது ஆண்டவனைத் தெரிவு செய்ய அதற்கும் மேல் வயதும் அனுபவமும் வேண்டாமா?//

  அப்பாடியோவ் – வெகு காலமாக எனது மனதில் இருந்தவைகள் பதிவில் வந்தது மிக்க மகிழ்ச்சி …

  தனக்குப் பிறந்ததால் ஒன்றும் அறியாதக் குழந்தையிடம் தனது மதத்தைத் திணிப்பது எப்படிப் பட்ட அயோக்கியத் தனம் … நிச்சயம் இதுக் குறித்துக் கண்டிப்பாக சிந்திக்கப்படவேண்டியது என்பேன். எனது குடும்பத்தில் எனது தந்தையார் எனக்கு இன்ன மதத்தில் இரு – பழகு என கூறியது இல்லை. அனைத்து மதங்களையும் காலம் காலமாக கற்றும், கேட்டும் தெரிந்துக் கொண்டேன்… இப்படியான சுதந்திரங்கள் எத்தனைப் பேருக்குக் கிடைக்கும் … குறைந்தது 15 வயது வரையாவது பெற்றோர் தமது மதக் கோட்பாடுகளை குழந்தைகள் மீது திணிக்காது இருக்க வேண்டும் என்பதே எனது கருத்தும் …

  இஸ்லாமியர்கள் தமது பிள்ளைகளை வலுக்கட்டாயமாக குரானைப் படிக்க வைப்பது, கிறித்தவர்கள் -இந்துக்களும் அப்படியே தமது மதங்களைத் திணிப்பதும் முட்டாள் தனமான சிந்தனைகள் தான்…

  அதே போல மதம் மாறினால் – தமது கலாச்சாரங்களை மாற்றிவிட வேண்டுமாம் .. கிறித்தவத்தில் தாலிக் கட்டுவதைப் பற்றி சொல்லி, ஏன் மோதிரம் அணியலாமே என ஒருவர் முன்னர் சொல்லி இருந்தார்… அதே போல மதம் மாறினால் கட்டாயமாக உன்னுடைய கலாச்சாரங்களை துடைத்துவிட்டு வா எனக் கூறுவதும் கேளிக்கைக்கு உரியது. இஸ்லாமியராக மாறினால் தமிழ் அடையாளங்களை அழிக்க சொல்லுபவர்களும் உண்டு…

  இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.

  • ஆகா என்ன ஒரு அருமையான வியாக்யானம்..

   ஒருவன் கஸ்டப்படும் போது அவனிடம்நான் உன்னை காப்பற்றுகிறேன் ஆனால்நீ மதம் மாற வேண்டும் என்பது இழிவான் செயல் அல்ல???

   கடற்கரையோரம் கட்டப்பட்ட்ள்ள ச்ர்ச்சுகள் அனைத்தும் இல்லாதவர்களயும் இயலாதவர்களையும் மதம் மாற்றியதர்க்கான வலுவான ஆதாரங்கள். வெள்ளைக்காரனுக்கு நம்நாட்டு மக்களுக்குநல்லது செய்யனும் என்ட்ரு மயைரள்வேணும் எண்ணம் கிடையாது.. அவனுடைய எண்ணம் அனைதும் மதமாற்றத்தின் சூழ்ச்சியே…

   • //கடற்கரையோரம் கட்டப்பட்ட்ள்ள ச்ர்ச்சுகள் அனைத்தும் இல்லாதவர்களயும் இயலாதவர்களையும் மதம் மாற்றியதர்க்கான வலுவான ஆதாரங்கள்//
    இவர்களை இல்லாதவர்களாகவும், இயலாதவர்களாகவும் நீங்கள் ஏன் காலம் காலமாக அடிமை படுத்தி வைத்திருந்தீர்கள்?

 2. அமெரிக்காவில் இலவச வேலைன்னு சொன்னா எத்தனை பேர் கிறுஸ்தவரா மாற தயார்?.

  செளதி ல வேலைனு சொன்னா எத்தனை பேர் இஸ்லாத்துக்கு மாற தயார்.?

  அடிப்படை தேவை நிறைவேறியவருக்கே ஆன்மீகம் பற்றியெல்லாம் கவலை..

  நிஜமான ஆன்மீகம் மதம் சார்ந்த்தல்ல.. அது மதம் சார்ந்தது என்பதெல்லாம் புளுகு..

  ஆன்மீகத்துக்கான பல வழிகளில் ஒரு சிறு வழி வேணுமானால் மதம் உதவலாம்..

  மற்றபடி ஆன்மீக அமுது, ஆன்மீக அற்புதங்கள் மதத்தில் கிடைக்கும் என்பதெல்லாமே ஏமாற்று..

 3. //நாய்க்குப் பிறந்தது நாய்க்குட்டி’ என்பது போல இந்துவுக்குப் பிறந்ததால் இந்து, கிறித்தவனுக்குப் பிறந்ததால் கிறித்தவன் என்ற கணக்கிலா? நடைமுறையில் குடிமக்கள் பலரின் மதத்தைத் தீர்மானித்துக் கொண்டிருப்பது இறையியலா, அன்றி உயிரியலா?// – மிகவும் சரியான கேள்வி.

 4. மதம் யென்ற ஒன்று இல்லவே இல்லை..அது மாறினால் என்ன மாறாவிட்டால் என்ன????

  • இஸ்லாமிய மதம் என்றால் குழந்தையின் அனுமதி இல்லாமலே விருத்தசேதனம் (சுன்னத்) செய்யப்படுகிறது.
   கிறிஸ்தவரென்றால் திருமுழுக்கு செய்யப்படுகிறது.
   இப்படிப்பட்ட மத அடையாளம் ஏதும் இந்து மதத்தில் இல்லை. அந்த வகையில் இந்துமதம் சிறப்பானது தான்.

   குறிப்பு: பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களைப் போன்று நாட்டார் தெய்வ வழிபாடு செய்யும் இந்து மத பிற்படுத்தப்பட்ட மக்களின் மத அடையாளங்களை மட்டுமே இங்கு ஒப்பிடப்பட்டுள்ளது.

   ஒரு நாத்திக முஸ்லிமோ, கிறிஸ்தவரோ என்னிடம் மத அடையாளம் இல்லை என்று சொல்லமுடியாது. இஸ்லாமியருக்கு கட் செய்யப்பட்ட &#^%^#% யும்,கிறிஸ்தவருக்கு செவென் செக்றமென்ட்ஸ் (அருள்சாதனம்) என்ற $&^^$# ம் பார்ப்பான்ஸ் பூணூல் போல கூடவே இருக்கும்! ஆக, மதம் என்ற மடமை ஒன்று இல்லை என்று நாட்டார் தெய்வ வழிபாடு செய்யும் இந்துவால் மட்டுமே சொல்லமுடியும்.

   • @ பாசிஸ்ட் – அப்படியா சகோ. இந்து மதத்தில் குழந்தையின் விருப்பத்துக்கு மாறாக காது குத்தி, மொட்டைப் போடுகின்றார்களே .. கண்களுக்குத் தெரியவில்லைப் போலும் …. !!!

    உங்கள் இந்து மத சிரிப்பு சிறப்பை குப்பையில் போடுங்கள் ..

    நாத்திக முஸ்லிம், நாத்திக கிறித்தவர்கள் நம் தமிழ்நாட்டில் நம்மோடு வெளிப்படையாகவே இருக்கின்றார்கள் – வலையுலகிலும் கூட எழுதுகின்ரார்கள் …. !

    கொஞ்சம் அகல்விழிகள் திறந்து நம் சமூகத்தையும் காண்க … சகோ

    • காது குத்தி மொட்டை போடுவது மத வழக்கமா? நீங்க ரொம்ப கிச்சு கிச்சு மூட்டுரிங்க பாசு.

     யாரெல்லாம் மொட்டை போடுகிறார்களோ அவர்கள் எல்லாம் இந்துக்கள் என்று சொல்லுவீர்களா? தமிழ்நாட்டில் காது குத்தி கம்மல் அணிந்திருக்கும் பெண்கள் (சில ஆண்கள் உட்பட) எல்லோரும் இந்துக்கள் என்று சொல்ல முடியுமா?

     கண்டிப்பாக அப்படி சொல்ல முடியாது. (ஏன் என்று கேள்வி கேட்பவர்கள் தமிழ், தமிழர் வரலாறு, தமிழர் கலாச்சாரம், பண்பாடு போன்றவைகளையும் மிகக் குறிப்பாக நாட்டார் வழக்காறுகளையும் படியுங்கள்.) அப்படி சொல்ல முடியாத போது அதை எப்படி இந்து மத அடையாளம் என்று அடையாளப்படுத்த முடியும்?

     ஆனால் திருமுழுக்கு பெற்ற ஒரு குழந்தை எப்போதுமே கிறிஸ்தவ குழந்தை தானே தவிர இந்து அல்ல. சுன்னத் செய்யப்பட்ட முஸ்லிம் ஆண்குழந்தை எப்போதுமே ஒரு முஸ்லிம் தானே தவிர இந்து அல்ல. அது தான் மத அடையாளம். (மதத்தை துறந்த நாத்திகர்களை பேசவில்லை). அத்தகைய அடையாளம் அவர்களிடம் இல்லை என்பது தான் உண்மை. அப்படி இருந்தால் தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளவும்.

     • முதலாவது நீங்க சொல்றதுக்கும் இந்த கட்டுரைக்கும் என்ன சம்மந்தம்.
      //யாரெல்லாம் மொட்டை போடுகிறார்களோ அவர்கள் எல்லாம் இந்துக்கள் என்று சொல்லுவீர்களா?//
      அதேபோல் சுன்னத் செய்தவன் எல்லாம் இஸ்லாமியரா? இஸ்லாத்திற்கு முன்பே அந்த வழக்கம் இவ்வுலகில் இருந்தது இருக்கிறது.

      மதமே ஒரு அடையாளம் அதில் என்ன வேற அடையாளம் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன.

      ஆயிரம் ஜாதி வேற்றுமை வெச்சிகிட்டு மற்ற மதங்களை பற்றி பேசகூட ஒரு இந்துக்கு தகுதி இல்லை.

      • அப்ப நடக்க முடியாதவன நடக்க வைக்கிரேன் வாங்கரது..

       குஸ்டத்தப்போக்குரேன் வாங்கரத்து…இப்ப்டி பல சாதனைகள் கிரித்து வமதத்திலும் உன்டு..

       அப்ப உனக்குப் பேச தகுதி இல்லை…

       ஜாதி மதம் பார்க்காம சமத்துவம்மா சபரிமலைக்குப் போர கூட்டம் டா எஙக்கூட்டம்..
       ம்
       சபரி மலைக்குப் போகும் முன் வாபர் சாமியைத் தொழும்நாங்கள் வாபரை தெய்வாமாகத் தொழும் போது எங்களுக்கு இச்லாமியர் தான் பிரசாதம் தருகிரார்கள்..

       இதைநான் ஏர்கனவே ஒரு பதிவில் எழுதீருந்தேன் ஆனால் அதைநம்ம அன்னன் வினவு விவரமாக அழிதுவிட்ட்டார்..மும்மதத்தாரின் படத்தை மாட்டி மதநல்லினக்கம் பெனுவது..வேளாங்கண்ணிக்கும்நாகூருக்கும் போரதுநாங்கதாண்டா..

       ஏண்டா வெவரமா ஒரு விளங்காத தலைப்ப எடுது இந்துவையும் இன்டு மதத்தையும் தரக்குரைவா விமர்சனம் பண்ணி சந்தோசம் அடைவது…அதுக்கு எல்லா அள்ளக்கையும் வந்து சந்தோசமா இந்து மதத்த வினர்சணம் பன்ன்னுவது…

       ஆண்ணன ஒன்ட்ர கண்ணில் முஸ்லிம் தீவிரவாதம் தெரியாது…பாதிரியார்கள் பண்ணும் லீலைகள் தெரியாது…

       ஜாதியப் பத்தி பேசிரியே உஙக பெரிய்யாரே தன்னைநாயக்கர் என்ரு சொல்லுவதைத் தானடா பெருமையாகநினைத்தார்..

       பெரியாருக்கு ஏன் மத்த மதத்தை விமர்சனம் ச்ய்ய தைரியம் வரல…

       • //ஜாதியப் பத்தி பேசிரியே உஙக பெரிய்யாரே தன்னைநாயக்கர் என்ரு சொல்லுவதைத் தானடா பெருமையாகநினைத்தார்..//

        – பெரியார் அப்படி பேசியதாக எனக்கு தெரியாது. அய்யாவை பற்றி கண்டத ஹிந்துத்வா கும்பல் சொல்றாங்க அதில் இதுவும் ஒன்றாக இருக்கலாம்.
        – அப்பிடி சொல்லி இருந்தாலும் ஜாதி பேதம் பார்ப்பது மனித தன்மை இல்லை என்ற பகுத்தறிவு எனக்கு உள்ளது.
        – நான் செமரி ஆடு கூட்டம் போல சபரி மலை சென்று மகர ஜோதி என்ற பெயரில் எரியும் தீ பந்தத்தை கண்டு பரவசம் அடையும் முட்டாளும் இல்லை குஷ்டரோகம் வந்தால் ஜெப கூட்டம் செல்லும் மண்டுகமும் இல்லை.

        //பெரியாருக்கு ஏன் மத்த மதத்தை விமர்சனம் ச்ய்ய தைரியம் வரல…//
        – பெரியார் செய்த விமர்சனத்திற்கு ஒரு நேர்மையான பதில காணும் வந்துட்டாயங்க தைரியம் இருக்க இல்லையானு கேக்கறதுக்கு.
        – மணியடிச்சிகிட்டு சொன்னதெல்லாம் நம்பிட்டு காட்டுமிராண்டியா சுத்தி திரிஞ்ச மக்களை மண்டைலே குட்டி உண்மைய சொன்னான். அது தைரியம்.
        – சிலர் அதுகட உரைக்காம நாங்க தர்காவிற்கு போவோம் வேளாங்கனி போவோமுன்னு உளறிட்டு சுத்துது.

     • Your point is meaning less. There are many Americans who circumcise(sunnath). But they are not mulsims. get your facts straight. Muslims do it as ritual while Americans do it as surgery.

      Hindus do mottai and kaadhu kuthu as religious ritual. Not for beauty alone. If it is for beauty, then that should happen in beauty parlor or jeweler shop. Why in temple? So it is a religious thing. then they keep pottu, kungumam, thiruneer etc everyday. Is it not religious symbol?

      You are so biased towards your religion.

      • அமெரிக்கர்கள் (ஒரு சிலர்) சுகாதாரம் கருதி செய்து கொள்கிறார்கள். ஆனால் சுகாதாரம் கருதி என்றாலும் முஸ்லிம்கள் மத ரீதியாக செய்கிறார்கள். சுன்னத் என்பது மத அடையாளம் அல்ல என்று ஒரு முஸ்லிம் சொல்லட்டுமே!!!

       கிறிஸ்தவர்களும் கோயிலில் வைத்து மொட்டை அடித்து காது குத்துகிறார்கள். முஸ்லிம்களும் கம்மல் போட்டுக்கொள்ள காது குத்துகிறார்கள். ஆனால் அது மத அடிப்படையில் அல்ல. இது தமிழக கலாச்சாரம். ஆக இதை எப்படி நீங்கள் மத அடையாளம் என்று சொல்ல முடியும்?

       இஸ்லாமியர் ஒருவருக்கு கண்டிப்பாக சுன்னத் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது இஸ்லாமிய கட்டுப்பாடு. திருமுழுக்கு செய்யாவிட்டால் அவர் கிறிஸ்தவரே அல்ல என்பது தான் கிறிஸ்தவத்தின் நிலைப்பாடு. ஆனால் இந்து மதத்தில் என்ன செய்தால் இந்து? அப்படி ஏதாவது இருக்கிறதா? என்று தான் கேட்டிருந்தேன்.

       மீண்டும் கேட்கிறேன், சுன்னத் செய்யாதவன் முஸ்லிம் அல்ல. திருமுழுக்கு பெறாதவன் கிறிஸ்தவன் அல்ல. ஆனால், எது செய்யாதவன், பெறாதவன் இந்து அல்ல?

       கட்டுரைக்கு தொடர்பில்லாத விடயங்களை பேசுவது வருத்தமளிக்கிறது. மதமே இல்லை என்று ஒருவர் சொன்னார். அதன்படி தனி அடையாளங்கள் இல்லாத இந்து மதத்தில் இருந்து ஒருவர் வெளியேறிட முடியும், ஆனால் கிறிஸ்தவமும், இஸ்லாமும் உருவாக்கி வைத்திருக்கும் அடையாளங்களால் அவற்றை இல்லை என்று சொல்லி வெளியேறிட முடியாது, வெளியேறினாலும் கூடவே மத அடையாளம் இருக்கும், அந்த வகையில் இந்து மதம் சிறந்தது தான் என்பதை சொல்லத்தான் இத்தனை அவசியமற்ற பேச்சும்!

        • இன்று பொட்டு, குங்குமம் தவிர்த்து திருநீர் மட்டும் தான் இந்துகளின் தனிப்பட்ட அடையாளமாக இருக்கிறது. ஒரு சின்ன பிள்ளைய கேட்டா கூட இத சொல்லும். உங்களுக்கு தெரியாம இருக்குமான்னு நினச்சேன்!.

         குழந்தை பிறந்தவுடன் திருநீரை பூசி “இன்று முதல் நீ ஒரு இந்து” என்று பிரகடனபடுத்துகிறார்களா?

   • ///பார்ப்பான்ஸ் பூணூல் போல கூடவே இருக்கும்!///

    உண்மைதான் இந்துமதம் என்று ஒன்றில்லை. பார்ப்பன மதம் என்பதுதான் உண்மை. அதை பார்ப்பன மதம் என்றுதான் அழைக்கவேண்டும்.

 5. ஐந்து டன் எடையை அசாத்தியமாக் இழுகும் வலிமை கொண்ட யானை. தூண் போன்ற நான்கு கால்கள். முறம் போன்ற காதுகள். கம்பி போன்ற முடி. கூரான வெண்மை பொருந்திய தந்தம். பலம் பொருந்திய துதிக்கை. கோவிலில் வாசலில் எடுப்பதோ பிச்சை. அறிவியல் வளர வளர ஆன்மீகத்தையும் அயோக்கியத்தனத்தையும் அறிவியலின் துணை கொண்டு காத்துவிட முயற்சிக்கின்றனர். அன்று பிள்ளையார் சிலையை செருப்பால் அடிக்கும் போராட்டத்தை வெற்றிகரமாக செய்ய தந்தை பெரியாரால் முடிந்தது. இன்றைக்கு அது சாத்தியமா என்றால் கேள்விக்குறியே.

  • //அன்று பிள்ளையார் சிலையை செருப்பால் அடிக்கும் போராட்டத்தை வெற்றிகரமாக செய்ய தந்தை பெரியாரால் முடிந்தது. //

   அன்று பிள்ளையார் சிலையை செருப்பால் அடித்தது போராட்டாமா…அது காட்டுமிராண்டித்தனத்தின் உச்சம்…

   ஏன் என்ட்ரால் பல கோடி பேரின் மனதில் உள்ள பிள்ளையாரை அவர் செருப்பால் அடித்தால் தப்பில்லையாம், ஆனால் சில ஆயிரம் பேரின் மனதில் உள்ள அவரின் உருவச் சிலைக்கு திண்டுக்கல்லில் செருப்பு மாலை போடப்பாட்டது அப்ப அதுவும்
   தப்பில்லையே நியாயம் தானே…

   • //ஏன் என்ட்ரால் பல கோடி பேரின் மனதில் உள்ள பிள்ளையாரை அவர் செருப்பால் அடித்தால் தப்பில்லையாம், ஆனால் சில ஆயிரம் பேரின் மனதில் உள்ள அவரின் உருவச் சிலைக்கு திண்டுக்கல்லில் செருப்பு மாலை போடப்பாட்டது அப்ப அதுவும்
    தப்பில்லையே நியாயம் தானே…//

    தமிழ்நாட்டுல பிள்ளையாரயும், சாதி வெறியனும் பெண்டாளுபவனுமான ராமனையும் செருப்பால் அடித்தால் கேட்க நாதி கிடையாத் என்பதுதான் உண்மை. பெரியாரை அவ்வாறு செய்தால் அயோத்தி மண்டபமும், அக்கிரஹாரமும் ரணகளமாகிவிடும் என்பதும் உண்மையே. தமிழ்நாட்டில் பாசிஸ்டுகளுக்குத்தான் என்னே ஒரு பரிதாபகரமான நிலை …

   • ஆயுள் பூராவும் ஆண்டான் அடிமையாக காலந்தள்ள விருப்பம் இருக்கும், வேசிக்குப் பிறந்தவர்கள் என்ற மனுதர்மக் கூற்றை ஏற்றுக்கொள்ளும், கல்வி வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வுரிமை இவை எவற்றிலுமே சம உரிமை தேவையில்லை என்று ஏற்றுக்கொள்ளும், தீண்டாமை வாழ்வுரிமை என்றும், பெண்னடிமை அறிவுடைமை என்றும், ஜாதியம் வாழ்வியம் என்றும், மற்றும் மூடநம்பிக்கை உயிர் நம்பிக்கை என்றும் ஒப்புக்கொள்ளும் மனசாட்சி உள்ள ஒவ்வொரு சூத்திரரும், பஞ்சமரும் இதைச்செய்யட்டும். தாராளமாகச் செய்யட்டும் அதுதான் அவர்கள் விருப்பம் என்றால்.

  • China japan Thailand did not allow christians to spread christianity and Islam. These countries are rich. These countries were not ruled by British people as their colony country. No Terrorism till today.

 6. Very good article. master piece . this is the first time i feel that i can argue with anybody at any level regarding this religious matters boldly and courageously !

  all the points i never read or heard this much clearly in any books or meeting .

  wonderful work ! keep it up. my wishes to your team.

  Regards
  Venkatesan
  Chennai

 7. மதமாற்றம், ‘சகோதரன் பிரிந்து விட்டானே’ என்ற துயரத்தை இந்து மத வெறியர்களுக்குத் தோற்றுவிக்க வில்லை. ‘வேலைக்காரன் ஓடி விட்டானே’ என்ற ஆத்திரத்தைத் தான் உண்டாக்குகிறது.அப்பட்டமான உண்மை.

 8. //மதம் மாறாமலேயே தேசத்தை மாற்றிக்கொள்ளும் ‘தேச பக்தர்களை’ப் பார்க்க வேண்டுமா? அதிகாலை 5 மணிக்கே சென்னை அண்ணா மேம்பாலத்தின் மேல் நின்றபடி அவர்களைப் பார்க்கலாம். அமெரிக்க கான்சல் அலுவலகத்தின் வாயிலில், அந்தக் காம்பவுண்டு சுவரை அண்ணாந்து பார்த்தபடி நின்றிருப்பார்கள்.//

  ஒரு சீரியஸான மேட்டரை தனக்கே உரிய நகைச்சுவை உணர்வோடு வினவு சொல்லியிருப்பதை படித்தவுடன் என்னையறியாமல் சிரித்து விட்டேன்.

  அதானே! இதுவும் ஒரு வகையில் மதமாற்றம், கலாசார மாற்றம்தானே! இதைப் பற்றி ஒருவரும் பேசுவதில்லையே!

  • நீ மாறும் அந்த மதம் அத்தோடு காலி…

   உன் சேவை இந்து மதத்திற்குத் தேவை

  • எங்க சுத்துனாலும் அதியமான் capital(இசத்தில்) தான் வந்து நிக்கிறாரு!

   p.s reply for athiyaman

   • நீங்க மட்டும் எங்க குத்தினாலும் அது பார்ப்பானின் பின்னாடியாகத் தானே இருக்கு…!

 9. //”சமமாக டீ குடிக்க வேண்டும், செருப்பணிந்து நடக்க வேண்டும், தோளிலே துண்டு போட வேண்டும், ஒரே கோயிலில் சாமி கும்பிட வேண்டும், சாதி வேறுபாடு இல்லாமல் எல்லோரும் எல்லோர் வீட்டிலும் அமர்ந்து சாப்பிட வேண்டும் – போன்ற இகலோக ஆசைகளுக்காகத்தான் இசுலாமுக்கு மாறினோம்” என்று தெளிவாகச் சொல்கிறார்கள். மதம் மாறுவதற்கு முன் ‘டேய்’ என்று கூப்பிட்டவன் இப்போது ‘பாய்’ என்று கூப்பிடுகிறானென்று மகிழ்ச்சி அடைகிறார்கள்//
  மதம் மாறுதலுக்கு பின்பான நடப்புகள் மகிழ்ச்சியே ஆனாலும், மதம் மாறுவது என்பது நமது கலாசாரத்தில் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போதும் செயல் போல அல்ல. நமது கலாசாரத்தில் மதம் சார்ந்தே பல பழக்கவழக்கங்கள் உள்ளன.இது சற்றே உணர்வு பூர்வமாக அணுக வேண்டிய விடயமகிறது..ஆக மாயாஜல ஏமாற்றுவேலைகள் கொண்டோ, அல்லது ரோட்டில் பொம்மை விற்பவனின் வியாபார யுக்தியுடன் மத மாற்றம் செய்விப்பது காரி உமிழ்வதர்க்கு உரியதே.

 10. //ஆசை காட்டிக் கவர்ந்திழுப்பதற்கு இந்து மதத்தில் எதுவும் இல்லை. கிறித்தவத்திற்கும் இசுலாத்திற்கும் மாறிய சூத்திர பஞ்ச சாதியினருக்குச் சேவை செய்து அவர்களை மீண்டும் இந்து மதத்திற்குக் கவர்ந்திழுக்க முடியாது. ஏனென்றால் இவாளுக்குச் சேவை செய்வதற்காகவே அவர்களை நியமித்திருக்கிறது இந்துமதம். மதமாற்றம், ‘சகோதரன் பிரிந்து விட்டானே’ என்ற துயரத்தை இந்து மத வெறியர்களுக்குத் தோற்றுவிக்க வில்லை. ‘வேலைக்காரன் ஓடி விட்டானே’ என்ற ஆத்திரத்தைத் தான் உண்டாக்குகிறது.//

  ஆணித்தரமான வார்த்தைகள்….

 11. இன்று கிறிஸ்துவனாக, முஸ்லீமாக இருப்பவர்கள் இந்தியாவில் இருக்க கூடாது என்று சொல்லும் இந்த …. ,

  நாளை பார்ப்பன அல்லாதவர்கள், இந்தியாவில் இருக்கக் கூடாது என சொல்ல மாட்டார்களா???

  அங்கே சிங்களத்தான் செய்யும் அநியாயங்கள் இங்கு இந்தியாவிலும் நிகழ்ந்து விடாமல் பார்த்துக் கொள்ள் வேண்டும் ..

  வினவு விவரித்தது போல், அங்கே அமெரிக்கன் எம்பஸ்ஸியில் நீண்ட வரிசையில் காத்திருக்கும், தேச மாற்றம் நிகழ்த்திக் கொண்டிருக்கும் பார்ப்பனப் …… தடுத்து நிறுத்த உமது ஆர்.எஸ்.எஸ்க்கு துப்பு இருக்கிறதா?

 12. //மீண்டும் கேட்கிறேன், சுன்னத் செய்யாதவன் முஸ்லிம் அல்ல. //

  தவறு!

  1.இறைவன் ஒருவன் என்றும் முகமது நபி அந்த இறைவனின் கடைசி தூதர் என்றும் கல்லையும் இயற்கை பொருட்களையும் வணங்காத எவரும் முஸ்லிமாகி விடுகிறார்.

  2. கட்டாய கடமையான தொழுகை, நோன்பு, ஏழை வரி, வசதியுடையவர்கள் ஹஜ் போன்ற கிரியைகள் அவரை இஸ்லாத்தின் பக்கம் இன்னும் நெருக்கமாக்கி வைக்கும்.

  தாடி வைப்பது, சுன்னத் செய்வது என்பவற்றை ஒருவர் செய்யாவிட்டாலும் அதனால் அவர் இஸ்லாத்தை விட்டு வெளியேற மாட்டார்.

  • //இறைவன் ஒருவன் என்றும் முகமது நபி அந்த இறைவனின் கடைசி தூதர் என்றும் கல்லையும் இயற்கை பொருட்களையும் வணங்காத எவரும் முஸ்லிமாகி விடுகிறார்.//

   Why one have to accept a man called muhammad to worship “one formless God”? If God will accept only those who accept muhammad as prophet, that means, God is showing favoritism. this is absurd…

  • ஷியா சன்னி அஹமதியான்னு பிரிஞ்சி நின்னு அடிச்சிகிரீன்களே ஏன்?முகமது நபிதான் கடைசி தூடர்னு ஏத்துக்கத அகமதியாவ நீங்க அசிங்கமா நடத்தும் முறை தெரியாதா?

 13. சில கருத்துக்களோடு உடன்பாடு இல்லை என்றாலும், கட்டுரை மிகவும் அருமை!!!

   • Who the hell are they to cheat us…

    இந்த மாறி வியாபாரச் சரக்காக மதத்தை விற்க்கும் மானங்கெட்ட பொழப்பு…

    எம்மக்கள் இது போன்ற __________________ விலை போனது அந்தக்காலம் தம்பி…

    • Will they allow you inside your temple? Will they allow your son/grandson to become priest (iyer)? They are using you for their own needs, but when it comes religion, you are always second class.

     My friend converted to muslim when he was 13. Now he is a preacher in his mosque. They treat him like any other muslim. But you and your forefahters all are hindus. Yet brahmins treat you as second class. Shame shame… puppy shame…

 14. சென்கொடிக்கு இருக்கும் தெகிரியம் வினவுக்கு இல்லை.செங்கொடி போல பொட்டில் அடித்தாற்போல் பேசும் தெறம வினவுக்கு இல்லை.சும்மா பெரியார் போல கருணாநிதி போல போலி நாத்திகம்தான் பேசுறாரு!!திருந்துங்கன்னே!!

 15. மிக அருமையான பதிவு…மனமார்ந்த வாழ்த்துக்கள். இக்பால் செல்வன் சொன்னது போல எனக்கும் “அப்பாடியோவ் – வெகு காலமாக எனது மனதில் இருந்தவைகள் பதிவில் வந்தது மிக்க மகிழ்ச்சி …”

  முதலாம் பதிவில் இருந்த பல இடுகைகளில் இருந்த கேள்விகளுக்கும், குழப்பங்களுக்கும், இந்தப்பதிவு அருமையான பதில்களையும், விளக்கங்களையும் கொடுத்திருக்கிறது. ஆனால், பதிவின் சரத்தை புரிந்து கொள்ளாமல், குறுகிய கண்ணோட்டத்தோடு இன்னும் இந்து மதம்தான் சிறந்தது, கிறிஸ்தவ மதம்தான் சிறந்தது போன்ற விவாதங்களை பார்ப்பது மனவருத்தம் அளிக்கிறது.

 16. வேலை, கல்விக்காக மதம் மாறுவது குற்றமா?

  இல்லை! இல்லை! எல்லா விஷயத்திலும் பணம் வாங்காம இருப்பது இந்திய தேசத்திற்கு இறையாண்மைக்கு எதிரான மிகப்பெரிய குற்றம் !

 17. பணம், வேலை, கல்விக்காக மதம் மாறுவது குற்றமா?

  பணம்,வேலை,கல்வி,இடஒதுக்கீடு போன்ற சலுகைகளை விட்டு பட்டியல் சாதிப்பட்டியலிருந்து மதம் மாறுவது இராமராஜ்ஜிய இந்துத்வ இந்திய அரசுக்கு எதிரான
  பெரிய குற்றம் !!

 18. கடந்த ஆண்டு, எனது வீட்டில் பணிபுரிந்தவரை உடல் நலம் விசாரிப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றிரிந்தேன்,அவர் வாதநோயால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர் அவர். அவர் வீட்டிற்கு சென்ற பொழுது எனக்கு ஆச்சர்யம், அவருக்கு அவரது மனைவி பணிவிடை செந்துகொண்டிருந்தார். காரணம், அவருக்கும் அவரது மனைவிக்கும்நீண்ட ஆண்டுகளாக பேச்சுவார்த்தை கிடையாது என்பது எனக்கு தெரியும், அவரது மனைவியும் அவரது ஆண்பிள்ளைகளும் கிருத்துவ மதத்திர்கு மாறியிருந்ததுதான் காரணம். அவரால் பேசமுடியவில்லை. என்னைப்பார்த்ததும் அழுதார். டாக்டர்கள் கைவிரித்து விட்டார்கள் என்று அவரது மகன் கூரினார். (தண்ணிய போட்டுட்டு சைக்கிள் ஓட்டும் போது கீழே விழுந்து மண்டையில் அடிப்பட்டுவிட்டது). அவரது தலைமாட்டில் பைபிள் ஒன்று இருந்தது. அவரது மனைவி என்னிடம் பேச ஆரம்பித்தார், மாதா கோயிலேர்ந்து கன்னியாஸ்திரிகள் தினமும் வந்து ஜெபம் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள், ஒரு எண்ணையையும் கொடுத்து தட சொல்லி இருக்கிறார்கள். இப்பொழுது அதைத்தான்நான் செய்து கொண்டிருக்கிறேன், கொஞ்சம் கொனஞ்சமாஜக அவரிடத்தில் முன்னேற்றம் தெரிகிறது. கர்த்தரின் கிருபையினால் அவர் சுகமாகிவிடுவார் என்று கூறினார்.அவரின் இப்பொழுதுநிலை என்ன தெரியுமா? தன்னுடைய வேலைகளை தானாகவே செய்துகொண்டிருக்கிறார். தினமும் காலையில் பைபிளை படிக்கிறார். ஏசுவை துதிக்கிறார். முற்றிலுமாக கிறித்துவத்திற்கு மாறிவிட்டார்.

  இப்படித்தான் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஏதேனும் ஒருசம்பவங்கள் நடந்தேரியிருக்கும், அதன் காரணமாக அவர்கள் விரும்பியே மதம் மாறுகிறார்கள். இதில் கட்டாய மதமாற்ற்ம என்பது எங்கிருந்து வருகிறது. சாக கிடக்கும் பொழுது யாரரால் காப்பாற்றப்படுகிறோமோ, அவர்தான்நம்முன் கடவுளாக தெரிவார்.

 19. I am also a Christian Convert. There is reason behind my conversion. But all of my friends, even some relatives think that I converted for money. But the truth is I never got any money or offers from Christians. Moreover, I was not asked about caste while I converted. They treat me like every other Christian and now one family is willing to marry their daughter to me. Christianity is one of the good religions.

  • can you assure no christians talking very badly about hindu when ever you get tehe chances ,especialy converted one.there s no hindu talking like that.because hindu see everybody as their bro and sisters so that only they gave respect and help for who came here initialy.i never talk about the god because as hindu one beleives great power what ever name be.cristianity is merely brain wash.and cunningness in people.if u see the history of that we came to know they destructed lot of temples, and compulsorily converted so many people who came for work under british .they first seperated caste into three ,for seperation and ruling policy.they doing all like hindus just to make slow conversion with minimal hurt.whatever money using for conversion is all they got by cruly ruled many countries robbed from there.sin creates sin only .very soon awareness will come people will wake.

 20. 1லட்சம் பேர் முள்ளிவாய்காலில் மாட்டி கொண்டு முஸ்லீம் அல்லா என்ற கதறினான் கிறிஸ்துவன் பரமபிதாவே எங்களை காப்பாற்றுங்கள் என்றான் இந்து அவனுடைய ஆயிரத்தெட்டு கடவுளையும் கூப்பிட்டு பார்த்தான் எதிரே புத்தன் கொத்து குண்டுகளை வீசி சிறித்து கொண்டிருந்தான் கடைசி வரை அவர்களை காப்பாற்ற எந்த கடவுளும் வரவில்லை இவர்களில் யார் சிறந்த கடவுள் என்று படம் போட்டு விளக்குக

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க