Wednesday, February 8, 2023
முகப்புசமூகம்சாதி – மதம்அம்பேத்கர் மதம் மாறியது ஏன்?

அம்பேத்கர் மதம் மாறியது ஏன்?

-

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 3

அம்பேத்கர் ஏன் புத்த மதத்திற்கு மாறினார்?

அம்பேத்கர் மஹர்எனப்படும், சமுதாயத்தில் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு பிரிவில் பிறந்தார். மஹர்பிரிவு மக்களுக்குச் சிறந்த போர்க்குணங்கள் உண்டு. ஆனால், கல்வியறிவு கிடையாது. அதன் காரணமாகவே அவர்களால் சமுதாயத்தில் சிறந்த அந்தஸ்து பெற முடியாமல் இருந்தது.

ஒரு தனிமனிதனின் குணங்கள் அவன் வளர்க்கப்படும் சூழ்நிலையிலும், அவனது உணவையும் பொறுத்தே இருக்கிறது என்பதையும் அம்பேத்கர் அறிவார். புலால் உணவை மறுப்பது ஒரு நல்ல மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்று அவர் ஆராய்ந்தார். பஞ்சமா பாதகங்களைச் செய்யாதேஎன்று உபதேசித்தால், மக்கள் கேட்டுவிடப் போகிறார்களா என்ன? மாறாக அதைச் சொல்லாமல் அந்த நிலைக்கு அவர்களை இயற்கையாகவே இட்டுச் செல்ல வேண்டும். பஞ்சமா பாதகங்களைப் பற்றிக் கவலைப்படாதவை கிறிஸ்தவம், இசுலாம். அப்படியானால் அவர்களை நல்ல நிலைக்கு இட்டுச் செல்ல புத்தமதத்தால்தான் இயலும்.

புத்த மதத்தில் சேர்ந்த பின்பு அதன் கொள்கைகளை நெறிப்படிக் கடைப்பிடிக்க வைப்பதன் மூம் அவர்களை நல்ல நிலைக்கு முன்னேற்றி, சிந்தித்துச் செயல்படும் திறன் உள்ளவர்களாக மாற்றி, சமுதாயத்தில் சம அந்தஸ்து உடையவர்களாக அவர்களை ஆக்கிவிட முடியும் என்று அவர் நம்பியதாலே இலட்சக்கணக்கான தொண்டர்களுடன் அவர் புத்த மதத்திற்கு மாறினார். அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படும் அம்பேத்கருக்கு சட்ட அமைப்பு 25-ன் விதிப்படி புத்தமதம் ஹிந்து மதத்துடனே ஒன்றாகவே கருதப்படுகிறது என்பது எப்படி நினைவற்றுப் போகும்? சட்டத்தைத் தொகுத்தது அவரல்லவா? எனவே அம்பேத்கர் புத்த மதத்திற்கு மாறியதற்கு அதுவே காரணம்.

– ‘மதமாற்றத் தடைச் சட்டம் ஏன்
இந்து முன்னணி வெளியீடு, பக்கம் 32.

”தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வியறிவற்ற மூடர்களாக, அசுத்தமான வாழ்க்கையை வாழ்ந்தனர்; இறைச்சி உண்ணும் பழக்கங்கொண்ட அவர்கள் பொய், திருட்டு, பெண்டாளுதல் போன்ற பஞ்சமா பாதகங்கள் செய்யும் போக்கிரிகளாகவும் இருந்தனர்; இவற்றிலிருந்து அவர்களைத் திருத்த நினைத்த அம்பேத்கர் இசுலாம், கிறித்தவம் போன்ற அநாகரீக மதங்களைத் தவிர்த்துவிட்டு இந்து மதத்தின் உட்பிரிவான புத்த மதத்திற்குத் தனது ஆதரவாளர்களோடு மதம் மாறினார்” என்பதே இதன் பொருள்.

தாழ்த்தப்பட்ட மக்கள் அநாகரீகமானவர்கள், போக்கிரிகள் என்பது பார்ப்பன ‘மேல்’ சாதியினர் இன்று வரையிலும் கொண்டுள்ள வெறுப்புக் கலந்த திமிரான கருத்தாகும். இதற்காகத்தான் அம்மக்களோடு அம்பேத்கர் மதம் மாறினார் என்பது வெறும் பொய்யல்ல; பார்ப்பனக் கொழுப்பும் நரித்தனமும் கலந்த பொய். காரணம், அவர்கள் பார்ப்பன இந்து மதத்தால் தண்டிக்கப்பட்ட வரலாற்று அடிமைகள். அவர்கள் அடிமைகள் என்று உணர்வதைக் கூட அனுமதிக்காத பார்ப்பன இந்துமதம்தான் அநாகரீகமானது என்றார் அம்பேத்கர்.

ஒரு மதம் என்பது பொதுவாக மானுடத்தின் அறவியல், மகிழ்ச்சி, விடுதலையைப் பேசுகின்ற கொள்கைகளைக் கொண்டிருக்கும். ஆனால், இந்து மதம் என்பது கொள்கைகளின் தொகுப்பா அல்லது தண்டனைகளைப் பட்டியலிடும் குற்றவியல் சட்ட விதிகளின் தொகுப்பா? சாதிப்படி நிலையில் சூத்திர – பஞ்சம மக்கள் எப்படி அடங்கி ஒடுங்கி வாழவேண்டும் என்பதையே விதிகளாய் வைத்திருக்கும் பார்ப்பனியத்தை ஒரு மதம் என்று அழைக்கமாட்டேன் என்றார் அம்பேத்கர். சமூக நீதிகளைப் பொறுத்தவரை மனு தர்மத்தின் சட்டங்களை விடக் கேவலமான சட்டங்கள் எதுவுமில்லை என்று இந்து மதத்தின் மனித விரோதத் தன்மையைக் கிழித்துக் காட்டினார்.

‘இந்து’ என்ற பெயரே முகமதியர்கள் இட்ட பெயர்தான். அவர்கள் அப்படிப் பெயரிடவில்லை என்றாலும் பிரச்சினை ஏதும் வரப்போவதில்லை. காரணம் நாமெல்லாம் ஒரு நாட்டு மக்கள் என்ற சகோதர சமூக சிந்தனை பார்ப்பனியத்தின் சாதிய சமூகத்தில் இல்லாதபோது ஒரு பொதுவான பெயர் பற்றிய கேள்வியே எழுவதில்லை. இந்து – முசுலீம் சண்டையை தவிர்த்துப் பார்த்தால் இங்கே தனித்தனிச் சாதியாக வாழ்வதே முதலும் முடிவுமான குறிக்கோளாக இருக்கிறது. மக்கள் தங்களுக்குள் கலந்து உறவாடுவதாலேயே சமூகமாக வாழ்கின்றனர். ஆனால், இங்கே பிரிந்து வாழ்வதையே சட்டமாக வைத்திருக்கும் ஒரு நாட்டில் சமூகம் எங்கே இருக்கிறது என்று சீறியவர் அம்பேத்கர்.

சாதிய அமைப்பு என்பது தொழில்களை மட்டுமல்ல, தொழிலாளர்களையும் ஏற்றத்தாழ்வாக செயற்கையான தனித்தனித் தீவுகளாய்ப் பிரித்து விடுகிறது. பரம்பரை பரம்பரையாய் குலத்தொழில் செய்து வரும் ஒருவன் தன் தொழிலின் நலிவால் வாழ இயலாத போதும் பட்டினி கிடந்து சாவானே ஒழிய வேறு தொழில் செய்ய மாட்டான். அப்படிச் செய்வதை நினைத்தும் பார்க்க முடியாத வாழ்வைத்தான் பார்ப்பன இந்து மதம் விதித்திருக்கிறது என்று வழக்காடினார் அம்பேத்கர்.

இப்படி வாழ்வையும் சிந்தனையையும் மட்டுமல்ல உடற்கூற்றையும் பார்ப்பன இந்துமதத்தின் சாதியம் தனது மீற முடியாத அகமண முறையால் எப்படி நலிவடைய வைத்திருக்கிறது என்றால், இந்திய மக்களில் 100-க்கு 90 பேர் ராணுவத்துக்கு (உடல், எடை, உயரம்) இலாயக்கில்லாதவர்களாக உருவாக்கியிருக்கிறது என்று கேலி செய்தார் அம்பேத்கர். அது மட்டுமா, ஒவ்வொரு சாதிக்கும் விதிக்கப்பட்ட தனித்தனி உடை, உணவுப் பழக்கங்கள் காரணமாக வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வேடிக்கைப் பொருளாக, அருங்காட்சியகமாக இந்தியா இருப்பதை சினத்துடன் எடுத்துக் காட்டினர் அம்பேத்கர்.

கழுத்தில் கலயத்தையும், இடுப்பில் துடைப்பத்தையும் கட்டி தாழ்த்தப்பட்ட மக்களை வீட்டு நாயைவிடக் கேவலமாக நடத்திய இந்துக்கள் தங்களைப் பற்றியும், அதேபோல தம் அருகே வாழும 130 லட்சம பழங்குடியினர் (அம்பேத்கர் காலத்தில்) எந்த நாகரீக வளர்ச்சியுமின்றி ‘குற்றப் பரம்பரையாக’ நீடிப்பது பற்றியும் வெட்கமோ, வேதனையோ அடைவதில்லை என்று காறி உமிழ்ந்தார் அம்பேத்கர். இம்மக்களுக்கு கிறித்தவ மிஷனரிகள் செய்யும் சேவையைப் போல் இந்துக்கள் ஒருக்காலும் செய்ய முடியாது என்றும், அத்தகைய சகோதரத்துவ எண்ணமே பார்ப்பனியத்தின் ஆன்மாவில் கிடையாது என்பதையும் விளக்கினார்.

ஆரிய சமாஜத்தின் ‘தாய் மதம்’ திருப்பும் மதமாற்றச் சடங்கை ஒரு மோசடி என நிரூபித்தவர் அம்பேத்கர். ஏனைய மக்கள் ‘தம் கொள்கையால் மட்டுமே விடுதலை பெற முடியும்’ என்று தம் எண்ணிக்கையைப் பெருக்குவதற்கான அடிப்படையைக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்து மதமோ அத்தகைய வாக்குறுதியைக் கொடுக்க முடியாததோடு, அப்படி ஒரு முயற்சியையும் செய்ய முடியாது. காரணம் இந்து மதத்தில் சேர்க்கப்படும் ஒரு புதியவரை எந்தச் சாதியில் வைப்பது என்ற பிரச்சினை உள்ளது. சாதித் தூய்மையில் இரத்தக் கலப்பை விரும்பாத இந்துச் சமூகம் நெடுங்காலமாய் மதப் பிரச்சாரம் மற்றும் மதமாற்றம் செய்யாததற்கும் இதுவே காரணம் என்றார் அம்பேத்கர்.

”நாங்கள் சாதியை ஏற்கவில்லை, அவை இந்து மதத்தில் நுழைந்த இடைச் செருகல்கள், தொழில்முறை வேலைப் பிரிவினைக்காக ஏற்பட்ட வருண அமைப்பே இந்து மதத்தில் ஏற்படுத்தப்பட்டது” என வருண அமைப்புக்கு ஆதரவாக ஆரிய சமாஜத்தினர் வழக்காடினார்கள். அப்படி என்றால் ஒவ்வொரு தொழிலுக்கும் பிராமணன், சத்ரியன், வைசியன் என்று முத்திரை குத்துவது ஏன், பிறப்பின் அடிப்படையில் மட்டும் தொழில் தீர்மானிக்கப்படுவது ஏன், தொழில் மாறும் உரிமை கொடுக்க மறுப்பது ஏன், அப்படி மாறினால் கடும் தண்டனை வழங்கும் காப்பாளராக இந்து மதம் இருப்பது ஏன் என்று கேட்ட அம்பேத்கர், நான்கு வருணங்கள் –  நான்காயிரம் சாதிகள் எனப் பிரிந்திக்கிறதே ஒழிய தன்மையில் ஒன்றுதான் என்று அம்பலப்படுத்தினார்.

மேலை நாடுகளைப் போல இந்தியாவில் ஒரு சமூகப் புரட்சி ஏன் நடக்கவில்லை? ஐரோப்பாவில் உள்ள ஒரு தொழிலாளி இராணுவத்தில் சேரும் உரிமையிலிருந்து தனது பௌதீக ஆயுதத்தையும், போராடும் உரிமையிலிருந்து தனது அரசியல் ஆயுதத்தையும் கல்வி கற்கும் உரிமையிலிருந்து தனது தார்மீக ஆயுதத்தையும் பெற்றிருந்தான். அதனால் அங்கே புரட்சிகள் நடந்தன. இங்கே பெரும்பான்மை மக்களுக்குக் கல்வி கற்கும் உரிமையும், போராடும் உரிமையும், ஆயுதம் ஏந்தும் உரிமை கிடையாது. தனது கலப்பையோடு பிறந்து மாடு போல உழைத்துச் சாவதற்கு மட்டுமே உரிமை கொண்ட ஒரு சூத்திர – பஞ்சமன் தனது கலப்பைக் கொழுவை ஒருவாளாக மாற்ற அனுமதியில்லை. அதனால்தான் பல்வேறு கொடுமைகளைச் சகித்துக் கொண்டு வாழ்ந்த உழைக்கும் மக்களிடமிருந்து எந்தப் புரட்சியும் தோன்றவில்லை. தோன்றவும் முடியாது என்றார் அம்பேத்கர்.

இத்தகைய சாதிய அமைப்பை ஒழிக்காமல் ஒரு தேசத்தை உங்களால் உருவாக்க முடியாது, வெள்ளையர்களை விரட்டினாலும் தமது அடிமைத்தனத்திலிருந்து மக்கள் விடுதலை அடைய முடியாது என்றார் அம்பேத்கர். ”தீண்டாமைப் பிரச்சினையையும் – மத மாற்றத்தையும் – இந்து மதத்திற்குள்ளேயே பேசித் தீர்த்து விடலாம் – அதை அரசியல் அரங்கிற்குக் கொண்டு வராதீர்கள்” என காந்தி ஒவ்வொரு முறையும் நயவஞ்சமாக நாடகமாடினார். பேசுவதற்கு முன்னால் உங்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெள்ளைக் குல்லாய் போட வேண்டும், கதராடை உடுத்த வேண்டும், என்று வைத்திருப்பதுபோல சாதி, தீண்டாமை பாராட்டுபவன் உறுப்பினராக முடியாது என்று விதி கொண்டு வர முடியுமா என காந்தியின் கழுத்தைப் பிடித்துக் கேட்டார் அம்பேத்கர்.

ஆங்கிலேயரின் கைக்கூலி, தேசத் துரோகி என்று காங்கிரசு கும்பலும், பத்திரிகைகளும் வசை பாடிய போதும் தனது போராட்டத்தை விட மறுத்தார் அம்பேத்கர்.

1927-ஆம் ஆண்டு மராட்டியத்தில் சவுதாகர் களப் போராட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான தீண்டாமைக் கொடுமைக்கெதிரான நீரெடுக்கும் போராட்டத்தினைத் துவக்கினார் அம்பேத்கர். அடுத்த நாளே ‘இந்துக்கள்’ 108 பானைகளில் சாணம், பசு மூத்திரம், பால், தயிர் கொட்டி பார்ப்பனர்களின் யாகத்தோடு குளத்திற்குத் தீட்டு கழித்தார்கள். 1930-ஆம் ஆண்டு அம்பேத்கரும் தாழ்த்தப்பட்ட மக்களும் துவக்கிய நாசிக் கோவில் நுழைவுப் போராட்டம் 1935-ஆம் ஆண்டில்தான் வெற்றியடைந்தது.

அம்பேத்கரின் இத்தகைய போராட்டங்கள் வன்முறையற்ற அமைதியான போராட்டங்கள்தான் என்றாலும் இந்துக்கள் பல்வேறு வழிகளில் தொல்லை கொடுத்தார்கள், தாக்கவும் செய்தார்கள். இதனால் இந்த நாட்டில் சாதி – தீண்டாமையை ஒழித்து ஒரு சமூக எழுச்சியைக் கொண்டு வரும் தனது முயற்சியில் இந்துக்களைத் திருத்த முடியவில்லையே என்று வேதனைப்பட்ட அம்பேத்கர் 1935 யேவா மாநாட்டில் ”நான் பிறப்பால் இந்துவாகப் பிறந்து விட்டேன். ஆனால், நிச்சயம் இந்துவாகச் சாகமாட்டேன் என்று உங்களுக்கு உறுதி கூறுகிறேன்” என்று முடிவெடுத்தார்.

இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன் 1956-ஆம் ஆண்டு 2 லட்சம் தாழ்த்தப்பட்ட மக்களோடு புத்த மதம் மாறினார்.

அம்பேத்கர் மதம் மாறியது ஏன்?
2 லட்சம் தாழ்த்தப்பட்ட மக்களோடு பௌத்தத்திற்கு மதம் மாறிய அம்பேத்கர்

அத்பேத்கர் புத்த மதம் மாறியதன் காரணம் என்ன?

பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மைக்கு எதிராகவும், விகாரமான சடங்குகளுக்கு எதிராகவும், 25 நூற்றாண்டுகளுக்கு முன்பு தோன்றியது புத்த மதம். இந்து மதவெறியர்கள் கூறுவதுபோல பௌத்தம்  இந்து மதத்தின் உட்பிரிவு அல்ல. ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கோல்வால்கரே, புத்த மதம் செல்வாக்குடன் இருந்த வடமேற்கு – வடகிழக்குப் பகுதிகளில் வருண – சாதிய அமைப்பு சீர் குலைந்ததாகவும், அதனாலேயே முசுலீம், கிறித்தவ மதமாற்றமும் படையெடுப்பும் நடந்ததாகக் கூறி பௌத்தத்தை அருவெறுப்புடன் பார்க்கிறார். கணிசமான காலம் பார்ப்பனியத்திற்கு மாற்றாக விளங்கிய புத்தமதம் செல்வாக்குடன் திகழ்ந்ததற்கு அசோகர் உள்ளிட்ட மௌரிய மன்னர்கள் அளித்த ஆதரவும் முக்கியக் காரணமாகும்.

கடவுள், சடங்கு, நிரந்தர உலகக் கொள்கையை நிராகரித்த புத்தர், அனுபவ ஆய்வையும்  – அறிவையும் மட்டுமே நம்ப வேண்டுமென்றார். மேலும் அகத்தூய்மை, போதுமென்ற மனம், ஆசையை விட்டொழித்தல், பற்றுக்களை உதறுதல் ஆகியவற்றின் மூலமே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்றார். அவர் அமைத்த பிக்குகள், பிக்குணிகள் அடங்கிய சங்கம் எளிமைக்கும், சகோதரத்துவத்திற்கும், சமூக அக்கறைக்கும் சான்றாக விளங்கியது. இப்படி பார்ப்பனியத்திற்கு எதிராகக் கிளம்பிய பௌத்தம் பல்வேறு வரலாற்றுக் காரணங்களால் தோல்வியைத் தழுவி, இந்தியாவிலிருந்தே விரட்டப்பட்டது.

புத்தரின் பார்ப்பனிய எதிர்ப்பும், சமூக நோக்கமும் அம்பேத்கருக்கு மிகவும் பிடித்திருந்தன. மேலும் மனிதனின் அறவியல் விழுமியங்கள் தோன்றி நீடிப்பதற்கு மதம் அவசியம்  என்பதும் அவரது கருத்தாக இருந்தது. அவரைப் பொறுத்தவரை ஒரு நல்ல சமூகம் நிலவ வேண்டுமானால் சமூக நீதிகளைக் கொண்ட சட்டத்தை வைத்து மக்களை ஆளும் ஒரு நல்ல அரசு புறநிலையாகவும், மனிதனின் ஆன்மீக மேன்மையை வளர்க்கும் ஒரு மதம் அகநிலையாகவும் தேவை எனக் கருதினார்.

அதேசமயம் 25 நூற்றாண்டுகளுக்கு முந்தைய புத்த மதம் அந்தக் காலத்துப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயன்ற ஒரு மதமே தவிர இன்றைய பிரச்சினைகளுக்கு அது தீர்வாகாது. அதாவது புத்தரின் ‘நிர்வாணநிலை’ தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் போராடும் தேவையை மறுத்து, போதுமென்ற மனநிலையை அளிக்கிறது. இவையெல்லாம் அம்பேத்கருக்குத் தெரியாதா, என்ற கேள்விக்கு அவரது கடைசிக் காலத் தோல்விகளும், மதம் பற்றிய அவரது கருத்தும், சாதி ஒழிப்பிற்கான வழி முறை பற்றிய அவரது சித்தாந்தமும் பதிலாகின்றன.

அடுத்து முசுலீம் – கிறித்தவ மதங்களுக்க அவர் ஏன் மதம் மாறவில்லை? இந்து மதவெறியர் கூறுவது போல அவை ‘அநாகரீகமான மதங்கள்’ என்பதால் அல்ல. முதலில் அவை பார்ப்பனியத்தை எதிர்த்துப் பிறந்த மதங்கள் அல்ல; இரண்டாவது, இந்த மதங்களும் பார்ப்பனியத்தின் சாதிய அமைப்பை ஓரளவிற்கு ஏற்றபிறகே இந்தியாவில் நிலைபெற ஆரம்பித்தன.

மேலும் இசுலாமும், கிறித்தவமும் தமது மதக் கொள்கைகளைவிட வலுவான நிறுவன ரீதியான வலைப்பின்னலாலும், அரசு போன்ற கண்காணிப்பு செய்யும் சமூக நெறிப்படுத்தலாலும்தான் நீடிக்கிறது என்பது அவருக்குப் பிடிக்கவில்லை. பௌத்தம் மட்டுமே தனிமனிதனிடம் அறவியல் நல்லொழுக்கங்களை சுதந்திரமான முறையில் வளர்த்தெடுக்கின்றது என்பது அவர் கருத்து. ஆனால், இன்றும் புத்த சமயம் செல்வாக்குடன் வாழும் நாடுகளில் கூட அது நிறுவன ரீதியான மதமாகத்தான் இருக்கின்றது. மேலும் அம்பேத்கரின் புத்தமத மாற்றம் என்பது பார்ப்பன இந்து மதத்தை அசைத்துப் பார்க்கும் அளவு வெற்றியடையவில்லை.

இன்றைய தேவை கருதி அம்பேத்கரைத் திரித்துப் புரட்டும் இந்து மதவெறியர்கள் இன்று வரையிலும் அவரை வன்மத்துடன்தான் பார்க்கிறார்கள். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கோரும் அவரது மசோதாவை ஆத்திரம கொண்டு எதிர்த்தனர், கலவரம் செய்தனர். சில வருடங்களுக்கு முன் ‘இராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர்’ என்ற அவரது நூலைத் தடை செய்யக் கோரியும், மராத்வாடா பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கர் பெயரைச் சூட்டியதை எதிர்த்தும், ஆர்.எஸ்.எஸ். சிவசேனைக் கும்பல் வெறியாட்டம் நடத்தியது; பல தாழ்த்தப்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்; பல சேரிப்பகுதிகள் தீக்கிரையாகின; அம்பேத்கர் கைப்படச் சேகரித்த நூலகம் ஒன்றும் எரித்து அழிக்கப்பட்டது. அதன்பின் அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்ததைக் கண்டித்துப் போராட்டம் நடத்திய தாழ்த்தப்பட்ட மக்களில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தாழ்த்தப்பட்ட மக்களின் ஓட்டு வங்கியைக் கவரவும், தனது ‘மேல்சாதி’த் தன்மையை மறைக்கவம் அம்பேத்கரைப் புகழ்பாடும் இந்து மத வெறியர்கள் அப்போதுகூட, ‘ஆம் எங்கள் மதத்தின் அழுக்குகளை அநாகரீகங்களைக் களைய முயன்றார் அம்பேத்கர்’ என்று கூறாமல் தாழ்த்தப்பட்ட மக்கள் சுத்தமாக வாழ்வதற்கு முயன்றார் என்று கூசாமல் கூறுகின்றனர். கன்சிராம், மாயாவதி, ராம்விலாஸ் பஸ்வான், திருமாவளவன், கிருஷ்ணசாமி இவர்களையெல்லாம் வென்றெடுத்துவிட்ட நிலையில் இந்து மத வெறியர்கள் இன்னும் ஒருபடி மேலேபோய் அம்பேத்கர் இந்துமத மகான்களில் ஒருவர் என்று கூடக் கூறமுடியும்.

அரசியல் சட்டத்தின் 25வது பிரிவில் முசுலீம், கிறித்தவர்கள் தவிர்த்த புத்த மதத்தினர், ஜைனர்கள், சீக்கியர்கள் ஆகியோர் இந்துக்கள் என்று கூறப்பட்டிருப்பது உண்மைதான். தான் எதிர்த்த காங்கிரசின் மந்திரி சபையில், அம்பேத்கர் சட்ட மந்திரியாக இருந்தது, அரசியல் சட்ட முன் வரைவுக் குழுத் தலைவராகப் பணியாற்றியது – இவையெல்லாம் அரசு என்ற நிறுவனத்தின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் குறைந்தபட்ச உத்திரவாதமும், சலுகைகளும் பெற்றுத்தர வேண்டும் என்பதற்காகத்தான். இவை சாதி ஒழிப்பின் சிக்கல்கள் நிறைந்த பாதை அம்பேத்கரிடம் ஏற்படுத்திய சமரசங்கள். அதேசமயம் இத்தகைய முயற்சிகளால் அவர் திருப்தியடையவில்லை; அவை தவறு என உணர்ந்தபோது தூக்கி எறியவும் செய்தார்.

”என் விருப்பத்திற்கெதிராக எதைச் செய்யக்கூடாதோ அதைச் செய்யுமாறு பணிக்கப்பட்டேன், அரசியல் சட்டம் எழுத அவர்களுக்குக் கிடைத்த ஒரு சவாரிக் குதிரைதான் நான்” என்று கூறிய அம்பேத்கர் பின்னாளில் ”அரசியல் சட்டத்தை எழுதிய நானே அதை எரிப்பதிலும் முதல் நபராய் இருப்பேன்” என்றார். இந்துப் பெண்களுக்கான சமச் சொத்துரிமை தொடர்பான மசோதாவைத் திருத்தவும், தள்ளி வைக்கவும் முயன்ற நேரு அரசாங்கத்திற்கு எதிராக தன் சட்ட அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்தார் அம்பேத்கர். இவை சமரசத்தின் மூலம் அம்பேத்கர் முடங்க மாட்டார் என்பதைக் காட்டுகின்றன.

சமீபத்தில் சீக்கிய மதம் இந்து மதத்தின் உட்பிரிவதான் என்ற கூறிய ஆர்.எஸ்.எஸ்க்கு எதிராக சீக்கியர்கள் போராடினார்கள். அதனால் ஆர்.எஸ்.எஸ் தலைமை சீக்கிய மதம் தனியான மதம்தான் என்று மன்னிப்பு கேட்டு ஒப்புக் கொண்டது. ஆனால், தலித் பிழைப்புவாதிகள் பாரதீய ஜனதா கட்சியில் சங்கமமாயிருக்கும் இக்காலத்தில் பௌத்தத்தையும் அம்பேத்கரையும் இந்துமத வெறியர்கள் மற்றும் தலித் பிழைப்புவாதிகளிடமிருந்து மீட்டெடுக்கும் கடமை சாதிய ஒழிப்பில் அக்கறை கொண்ட ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

– தொடரும்

பாகம் 1 – மதம் மாறினால் தேசிய உணர்வு மாறுமா?

பாகம் 2 – பணம், வேலை, கல்விக்காக மதம் மாறுவது குற்றமா?

 1. இந்துவாய் சாகமாட்டேன். அம்பேத்கர்

  மேல் ஜாதிக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளுகின்றவர்களிடத்தில் நம்மீது கருணை ஏற்படும்படி நாம் செய்து வந்த முயற்சிகள் எல்லாம் வீணாய்ப் போய்விட்டன.
  இனி அவர்களிடத்தில் சமத்துவமாயும், ஒற்றுமையாயும் வாழ முயற்சித்து நம் சக்தியையும், உழைப்பையும், பணத்தையும் செலவழிப்பது வீண் வேலையாகும். நமது முறைகளும் இழிவுகளும் மேல் ஜாதிக்கார இந்துக்களால் தீர்க்கப்படும் என்று எதிர்பார்ப்பது ஏமாற்றத்தைத்தான் அளிக்கும்.

  இனி நாம் செய்ய வேண்டியது என்ன என்கின்ற விஷயத்தில் நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். அம்முடிவு என்னவென்றால்,

  நாம் இந்து மதத்தைவிட்டு அடியோடு விலகி விடுவது என்பதுதான்.

  நமக்கு யார் சுதந்திரம் கொடுக்க மறுக்கிறார்களோ அவர்களை இனி நாம் கெஞ்சக் கூடாது. அவர்களது சம்மந்தத்தை இனி நாம் விலக்கிக் கொள்ள வேண்டும்.
  நாம் நம்மை இந்துக்கள் என்று கூறிக்கொள்வது கூடாது.அதனால்தான் மேல் ஜாதிக்காரர்கள் நம்மை இழிவாகவும் கொடுமையாகவும் நடத்துகிறார்கள்.

  நாம் வேறு மதத்தைச் சார்ந்தவர்களாய் இருந்தால் நம்மை இப்படி கொடுமைப்படுத்த அவர்களுக்கு துணிவு இருந்திருக்காது. எந்த மதத்தினர் உங்களுக்கு சம அந்தஸ்து கொடுத்து சமத்துவமாய் நடத்துகிறார்களோ அப்படிப்பட்ட மதம் எதுவாயினும் அதில் சேர்ந்து கொள்ளுங்கள்.

  பிறக்கும் போதோ நான் தீண்டப்படாதவனாய் பிறந்தேன். என்றாலும் அது நான் செய்த குற்றமல்ல.

  ஆனால் இறக்கும் போது தீண்டப்படாதவனாய் இறக்கமாட்டேன். அதற்கு மார்க்கம் என் கையிலேயே இருக்கிறது. அதாவது நான் ஒரு இந்துவாய் இறக்கப் போவதில்லை
  (நாசிக்கில் கூடிய பம்பாய் மாகாண ஆதி இந்துக்கள் மாநாட்டில் டாக்டர் அம்பேத்கர் குடிஅரசு 20.10.1935)

  http://viduthalai.in/new/home/viduthalai/rationalism/2265-2011-01-28-12-14-11.html

  • கிறிஸ்தவ மதம் மாறினால்…அனைத்து ST,SC,MBC சாதிகள் எல்லாம் BC,FC போன்ற உயர் சாதினராக இந்திய அரசு ஏற்றுக்கொள்ளும்.(அம்பேத்கார் விசுவாசிகளே சட்டம் படிக்கவும்.)

 2. வினவு க்கு
  அருமையான கட்டுரை ,மதம் ஒரு ஆபத்து எங்கிர போது புத்த ,இச்லாம்,கிருச்து,கின்டு யெல்ல்லாம் ஒன்ட்ரு தான்.

  அம்பேத்கர் காக புத்தம் யேட்ருக்கொன்டால்நானும் ராஜப்க்செவும் வொன்ராகி விடுவொம்.யெந்தமதட்தில் பிரந்திருந்தாலும் யிரக்கும் போது அந்த மதத்தில் யாரும் இருக்க வேன்டாம் யென்பதே யென் கருத்து.– மெய்த்தேடி.

  • MEITHEDI//

   புத்தரும்,ராஜபக்சேவும் ஒன்றா? இலங்கையில் மட்டுமா புத்தமதம் இருக்கிறது? ஈழத்தில் கூட வெள்ளாளர் சாதி என்கிற ஆதிக்க சாதி சைவமார்கள் இருக்கிறார்கள் அவர்களால் இன்னும் தாழ்த்தப்பட்டசாதி மக்கள் பாதிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்,அதற்காக சைவமதமாகிய இந்து மதத்தை முதலில் எதிர்த்துபோராடலாமா? அப்படி போராடினால் முதலில் தமிழர்களின் பண்பாட்டு,கலாச்சாரத்தை எதிர்த்துதான் போராடவேண்டும். போராடலாமா?

 3. நல்ல பதிவு வினவு. அம்பேத்கர் உண்மையான ஜனநாயகவாதி.
  அம்பேத்காரின் மதமாற்றம் என்பது பார்ப்பன இந்துமதத்தின் மீது உள்ள வெறுப்பே காரணம்.

 4. புத்தமத புகழ் பாடும்போதெல்லாம் என் நிணைவுக்கு சட்டென்று வருவது இலங்கை தான். இதை நான் பல இடங்களில் மறுமொழியில் குறிப்பிட்டிருக்கிறேன். மெய்த்தேடி அதை குறிப்பிட்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியாகவும் உள்ளாது. தமிழனுக்கு உரிமை வழங்குவதை எதிர்ப்பதில் அரசியல் வாதிகளை விட புத்த பிட்சுக்காளே அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இவ்வளாவு தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்த போது அமைதி, கொல்லாமை, இன்னல் செய்யாமை….. கடைபிடிக்கும் புத்த பிட்சு மௌனமாக இருந்தது ஏன்?

  பௌத்ததை கடைபிடிக்கும் தமது வழித்தோன்றலுக்கு அறிவுரை கூறாதது ஏன்?

  அடுத்து அப்பேத்கர். இவர் சட்டமும் இயற்றுவாராம் அதை அவரே எரிப்பாராம்.

  இன்று சாதி ஓட்டுவாங்க சாதி வேசம் போடு அரசியல்வாதிகளை விட கீழ்தரமாக உள்ளது இவரது பேச்சு. முரட்டு குதிரையை அடக்கும் கடிவாளமும் சாட்டையும் கையில் கிடைத்தும் பயன் படுத்த தெரியாத தற்குரியாகவே என்ன தோன்றுகிறது.

  மற்றபடி அபேத்கரை பற்றி தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு இது.

 5. சூத்திரன் என்கிற பார்ப்பனன்//

  //இன்று சாதி ஓட்டுவாங்க சாதி வேசம் போடு அரசியல்வாதிகளை விட கீழ்தரமாக உள்ளது இவரது பேச்சு. //

  பார்ப்பனர்களின் சாம்ராஜயத்தைப்பற்றி பேசினாலே பார்ப்பனர்களுக்கும்,பார்ப்பன பனியாட்களுக்கும் எங்கு இருந்துதான் கோவம் வருகிறதோ தெரியவில்லை.இதில் ஈழப்பிரச்சனையில் உண்மையான அக்கரை உள்ளது போல காட்டிக்கொண்டு மூட்டி விடுவதுயெல்லாம் ஒரு பிழைப்பு.ஈழத்திற்கு முதல் எதிரிகளே பார்ப்பனர்கள் தான்.

  • சும்மா வினவு மாதிரி அரைவேக்காட்டுத்தனமாக கத்தாமல் அவர் கேட்ட கேள்விகளுக்குநேர்மையாக பதில் அளிக்க முயற்ச்சி செய்யலாமே மீரா…

 6. MM// சூத்திரன் என்கிற பார்ப்பனன்//

  அரைவேர்க்காட்டுதனமாக நீங்கள் தான் பேசுகிறீர்கள்.பிராமணன் ஏன் பூனூலை போடுகிறான் சொல்லுங்க.மற்ற திருமண,நிகழ்ச்சிகளை விட பூனூல் விழாவை மட்டும் இன்றும் மிக பிரம்மாண்டமாகவும்,மிகவும் முக்கியத்துவ வாய்ந்த நிகழ்ச்சியாக ஏன் நடத்துகிறார்கள், ஆதிக்க சாதி வெறிதானே! இந்த நவின முதலாளித்துவ உலகத்திலே இப்படி தீவிரமாக இருக்கிறீர்கள் என்றால் அம்பேத்கர் வாழ்ந்த காலத்தில் எப்படி இருந்திருப்பீர்கள்.இதை தான் அம்பேத்கர் கிழித்தார் இது உங்களுக்கு ஓட்டுப்பொறிக்கி அரசியல்வாதிகள் போல சாதி வெறி பேசுவதுற்கு சமமாகுமா? இப்பொழுதும் அம்பேத்காரரை கீழ்சாதி என்ற அடையாளத்துடன் தான் நோக்குகிறீர்கள். அவர் என்ன படித்து எதையெல்லாம் ஆராய்ந்து பட்டம் பெற்றார் என்பதை உன் பாட்டனை கேட்டுபார்.

  • வினவு வீட்டுக் குழாயில் தண்ணி வரலேன்னா கூட அது பார்ப்பனன் செய்த தவறு தான்…

   அது போல எல்லா குப்பை கட்டுரைக்கும் இந்து மட்றும் பார்ப்பண ஊறுகாய் வைக்கும் உங்க தலை வினவும்…

   உஙகளுடைய அரிய கண்டுபிடிப்பு தவறு…னான் பார்ப்பணன் அல்ல…

   இந்து மதத்தில் இருக்க இஸ்டம் இல்லை என்ட்ரால் வேறு எந்த மதத்தில் வேண்டும் என்றாலும் சேரலாம்..இது அவனவன் தனிப்பட்ட விசயம்

 7. வினவுக்கு வர வர இந்தி செய்தி சேனல்கள் மாதிரி,தனது இணைய தளத்தை மாற்றி TRP rateயை ஏற்ற நினைக்கிறார் போல் இருக்கிறது.நிறைய comments வரும்.Ads நிறைய போட்டு சம்பாதிக்க நினைக்கிறார்.

  அம்பேத்கார்,புத்த மதம் மாறினால் கம்யுனிட்வாதிகளுக்கு கொண்ட்டாடம்..வினவுக்கு சில கேள்விகள்..

  அம்பேத்கார்,கிறிஸ்தவம்,இஸ்லாம் மாறியிருந்தால் ஆதரிக்கமாட்டீர்களா…புத்தம் இலங்கையில் தமிழை கருவருத்தது மரமண்டையில் நினைவுல்லதா..
  (எல்லா மதங்கள் நல்லதோ போதிக்கின்றன..எல்லா சாதியிலும் நல்லவர்கள் இருக்கவோ செய்கின்றனர்…)

  தாழ்த்தப்பட்ட மக்கள்,புத்த மதத்திற்கு மட்டும்தான் கம்யுனிசமா?

  எந்த பிராமனர் கத்தி,அருவாள் எடுத்து ரவுடிசம் பண்ணி வருகிறார்?(பள்ளியில் என் தோழன் ஓர் ஏழை பிராமணன்..அவனிடம் இருந்து நான் கற்றது அதிகம்..மனிதர்களை நேசியுங்கள்.)

  கீயுபா பணக்காரர் கம்யுனிட்டாக மாறி,தனக்குப்பின் தனது சொந்தங்களை ஆட்சியில் வைத்தால்,கம்யுனிசமா…

  பிராமனர்களுக்கு,பணக்காரர்களுக்கு,உயர் சாதியினர்க்கு கம்யினிஸ்ட்டாக மாற உரிமையில்லையா.(காஸ்ரோ ஓர் பணக்காரர்..வரலாறு படிக்கவும்)

 8. மதிப்பிற்குறிய மீரா, உங்களுக்கு ஒரு உண்மை புரியாவேண்டும். இந்திய சட்டத்தையும், பிரிட்டீஷ் சட்டத்தையும் ஒப்பிட்டு பாருங்கள் உண்மைபுரியும். பாரிஸ்ட்டர் பட்டம் பெற்ற பகுத்தரிவு சிந்தன சிற்பி, தான் தலைமைவகித்து எழுதிய சட்டபுத்தகத்தை எரிப்பதாக கூரியது ஏன்? விளக்கவும்.

  மேலும் மதத்தை யானையின் மதமாக பயன் படுத்தாமல், சமயம்(பக்குவமான வழி-மார்கம்) என கொள்வோம். பாட்டன் சொத்து திராவிட பரம்பர்யத்தை அண்டி பிழைக்கவந்த ஆரியன் கைபற்றினால், அடித்து விரட்டுவதை விட்டு ஓடி ஒளிவது கோழைதனம்.

  மற்றபடி சமய கொள்கைகளும், கட்சி கொள்கைகளும் ஏட்டளவில் நின்ற்விட்டது என்பது மட்டுமே உண்மை.

  • சூத்திரன் அவர்களே பிரிட்டிஷ் அரசிய அமைப்பு சட்டத்தை படிக்கும் அளவுக்கு நீங்கள் இருப்பதால்மீண்டும் கூறுகிறேன். Indian Constitution aims at securing not merely political or legal equality, but also social equality ………….இது பிரிட்டிஷ் மட்டும் அல்ல உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லாதது.the Indian Constitution envisages laws for the governance of the States too. Detailed provisions regarding the working of the Union Government and the State Governments have been given with a view of avoiding any constitutional problems which the newly-born Democratic Republic might experience in the working of the Constitution.இதுவும் உலகில் எங்கும் காணமுடியாது.மேலும் இந்தியர்கள் அனைவருக்கும் உறுதி செய்யப்பட்ட உரிமைகள்
   The Right to Equality;The Right to Freedom;The Right against Exploitation;The Right to Freedom of Religion;Cultural and Educational Rights;The Right to Constitutional Remedies….தனித்துவமானது.you have to be somebody to comment on baba saheb…JAI BHIM.

  • தலைவா..பல்லாயிரம் ஆண்டுக்கு முன் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த திராவிடனையும் கெல்லலாமே……

  • உண்மையிலேயே சூத்திரன்தான் என்றால்,மேலும் பிரிட்டிஷ் அரசியல் சட்டத்தை யாரையோ படித்து விட்டு வர சொன்னாயே முதலில் நீ படித்தது உண்மையானால்,அதன் தலைப்பை சொல்லு பாப்போம் அதாவது TITLE ஐ சொல்லு பாப்போம்.தமிழையே ஒழுங்கா எழுத தெரியாமல் எந்த ——– சொன்னதை வச்சு உலகத்திலேயே எந்த அறிவாளியும் சொல்லாததை சொல்லியிருக்கிறாய் இங்கே மீண்டும் இந்த பெயரில் பின்னூட்டம் போடபெயரின் அர்த்தத்தை அறிந்தவர் யாரிடமாவது கேட்டு தெரிந்துக்கொள்.

 9. சூத்திரன்//
  //பாரிஸ்ட்டர் பட்டம் பெற்ற பகுத்தரிவு சிந்தன சிற்பி, தான் தலைமைவகித்து எழுதிய சட்டபுத்தகத்தை எரிப்பதாக கூரியது ஏன்? விளக்கவும்.//

  இந்தியாவில் அரசியல் அமைப்பு சட்டம் எழுத மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டது.
  முத‌ல்குழு அப்போதைய‌ நாடுக‌ளில் எந்த‌ நாட்டு சட்ட‌ங்க‌ளை எடுத்துக்கொள்ள‌லாம் என்று அல‌சி இங்கிலாந்து உட்ப‌ட்ட‌ சில‌ நாடுக‌ளின் ச‌ட்ட‌ங்க‌ள் தேர்வு செய்த‌து. இந்த‌க்குழுவில் பார்ப்ப‌ன‌ர்க‌ளைத்த‌விர‌ வேறு யாருக்கும் இட‌மில்லை. இர‌ண்டாவ‌து குழு அந்த‌ச்ச‌ட்ட‌ங்க‌ளில் எதை இந்தியாவுக்காக‌ தெரிவு செய்ய‌லாம், என்னென்ன‌ மாற்ற‌ங்க‌ள் செய்ய‌லாம் என்று வ‌ரைய‌றை உருவாக்கிய‌து. இந்த‌க்குழுவிலும் பார்ப்ப‌ன‌ர்க‌ளைத்த‌விர‌ வேறு யாருக்கும் இட‌மில்லை.இவ‌ற்றிலிருந்து அர‌சிய‌ல் சாச‌ன‌ முன்வ‌ரைவை உருவாக்கி இந்திய‌ பாராளும‌ன்ற‌த்தில் தாக்க‌ல் செய்து ‌அமலாக்குவ‌து மட்டும்தான் மூன்றாவ‌து குழுவின் வேலை. இந்த‌க்குழுவில் ம‌ட்டும் பார்ப்ப‌ன‌ர்க‌ளோடு இர‌ண்டு முக‌ம்ம‌திய‌ர்க‌ளும் சேர்க்க‌ப்ப‌ட்ட‌ன‌ர். அத‌ற்க்குத்த‌லைவ‌ராக‌ ஒரு தாழ்த்த‌ப்ப‌ட்ட‌வ‌ர் அதாவ‌து அம்பேத்கார்.

  ஏன் அம்பேத்கார் த‌லைவ‌ராக்க‌ப்ப‌ட்டார்?

  தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ம‌க்க‌ளை பெரும்பான்மையாக‌ கொண்ட‌ நாட்டில் சிறுபான்மை பார்ப்ப‌ன‌ர்க‌ள் கொண்டுவ‌ந்த‌ ச‌ட்ட‌ம் என்று பின்ன‌ர் மாற்ற‌ம் செய்ய‌ப்ப‌ட்டுவிட‌க்கூடாது என்ப‌தால் தான்.

  உண்மையிலேயே தாழ்த்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு ச‌ட்ட‌ரீதியாக‌ ஏதாவ‌து செய்துவிட‌முடியும் என்று ந‌ம்பினார் அம்பேத்கர். ஆனால் தாழ்த்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு ஆத‌ரவாக‌ ஒரு சில திருத்த‌ங்க‌ளை கொண்டுவ‌ருவ‌த‌ற்கு கூட‌ அவ‌ர் போராட‌வேண்டியிருந்த‌து. அத‌னால் தான் அவ‌ர் பாராளும‌ன்ற‌த்திலேயே அறிவித்தார் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை எரிப்பவன் ஒருவன் இருப்பான் என்றால் அதில் முதல் நபராக நான் இருப்பேன் என்று அம்பேத்கர் கூறினார்.

 10. Indian situation-parliamentary system of democracy was taken from England, the concept of federalism, the Bill of Rights and Judicial Review have followed the US model, the Directive principles of state policy was taken from Irish constitution, the emergency provisions were taken from the Weimer Constitution of Germany, Fundamental Rights were taken from the US Constitution, structure of government into three levels and provision of residuary powers were taken from the Constitution of Canada….இதுதான் உண்மை மேலும் அன்றிருந்த நூற்றுக்கணக்கான நாடுகளில் இருந்த ஜனநாயக அரசியல் அமைப்பு சட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு உலகிலேயே மிகப்பெரிய அரசியல் அமைப்பு சட்டம் எழுதப்பட்டது ….இங்கே சரக்கடித்து விட்டு அமெரிக்காவில் ஒரு பெண்மணி(priya)எழுதியது போல் பிரிட்டிஷ் அரசியலமைப்பு சட்டத்தை வரிக்கு வரி நகல் எடுக்கவில்லை அதை நம்பி யாரும் இனி பின்னூட்டம் இடாதீர்.

  • உண்மை தான்.. இந்தியாவைப் பற்றி கொஞ்சமேனும் அறியாதவர்கள் எல்லாம் தமிழ் சினிமாவைப் பார்த்துவிட்டு அது தான் இந்தியா என இங்கு கருத்திட்டு வருவதைப் பார்த்திருக்கின்றேன் .. அய்யோ பாவம் அவர்கள் பேச்சில் கூவம் என விட்டுத் தள்ள வேண்டியது தான் ..

 11. யார் தலைவன்?
  எவன் ஒருவன் தமக்கு கீழ் உள்ளவர்களை கட்டுபடுத்தி வழிநடத்தி செல்கிறானோ, அவனே தலைவன். தமக்கு கீழ் உள்ளவர்களை கட்டுபடுத்தி இருக்க வேண்டும், அல்லது குறையுள்ள சட்டத்தை நிறைவேற்ற தடை செஇதிருக்க வேண்டும், அல்லது தலைவர் பதவியை தூக்கி எறிந்துவிட்டு சாமான்ய மக்களையும், மக்கள்சக்க்தியையும் கொண்டு போராடியிருக்க வேண்டும். அம்பேத்கர் என்ன செய்தார் என்று விளக்கவும் மீரா.

 12. இந்து மதத்தில் தற்போதைய பிரச்சனை பார்ப்பனர்களிடம் இல்லை .. ஏனைய சாதிகளிடையே உள்ளது .. பார்ப்பனர் செய்வது தவறு தானே ? ஏன் தட்டிக் கேட்காமல் ஆமாம் போடுகின்றார்கள் பலர் … அங்கேத் தான் பிரச்சனையே.. பார்ப்பான் மோசம் எனப் பேசிவிட்டு .. அய்யர் ஓய் !!! பாப்பாவுக்கு ஒரு அர்ச்சனை செய்றீங்களா ? என சொல்ல.. பாவம் அவரும் பிழைப்புக்காக.. பேஸ் பேஸ் சென்ச்சுட்டாப் போச்சு !!! பாப்பாவோட நாமகரணம் என்ன … அப்படினு போய்டுறார் .. நமது நாட்டில் பேசுபவர்கள் பலர் செயலில் காட்டுவதில்லை . இந்து மதத்துக்கான மாற்றங்களை உள்ளிருப்பவர்கள் தான் கொண்டு வர முடியும் .. வெளியே இருந்து சொல்லாமே தவிர செய்ய முடியாது .. அதற்கு உள்ளிருப்போர் போராடவும், மாற்றவும் முயற்சிக்க வேண்டும்.

 13. இஸ்லாம் பற்றி சிரிதும் அறிந்திடாமல் “மேலும் இசுலாமும், கிறித்தவமும் தமது மதக் கொள்கைகளைவிட வலுவான நிறுவன ரீதியான வலைப்பின்னலாலும், அரசு போன்ற கண்காணிப்பு செய்யும் சமூக நெறிப்படுத்தலாலும்தான் நீடிக்கிறது” இஸ்லாம் ஒன்று மட்டுமே மனித வாழ்விற்கு தேவையான அனைத்தயும் போதித்து பின் பற்ற வலியுருத்துகின்றது…

  “பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கோரும் அவரது மசோதாவை ஆத்திரம கொண்டு எதிர்த்தனர்”” “இந்துப் பெண்களுக்கான சமச் சொத்துரிமை தொடர்பான மசோதாவைத் திருத்தவும், தள்ளி வைக்கவும் முயன்ற நேரு அரசாங்கத்திற்கு எதிராக தன் சட்ட அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்தார் அம்பேத்கர். “” இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் உரிமை வழங்கி உள்ளது,அது மட்டுமில்லாமல் வரதட்சனை வாங்குவதை பெரும் குற்றமாக கூறி தடை செய்ததோடு மட்டுமில்லாமல் பெண்களுக்கு மணக்கொடை கொடுத்து தான் ஆண் மணமுடிக்க வேண்டும் எனவும் கட்டாயப்படுதுகின்றது,,

  (“”அடுத்து முசுலீம் – கிறித்தவ மதங்களுக்க அவர் ஏன் மதம் மாறவில்லை? இந்து மதவெறியர் கூறுவது போல அவை ‘அநாகரீகமான மதங்கள்’ என்பதால் அல்ல. முதலில் அவை பார்ப்பனியத்தை எதிர்த்துப் பிறந்த மதங்கள் அல்ல; இரண்டாவது, இந்த மதங்களும் பார்ப்பனியத்தின் சாதிய அமைப்பை ஓரளவிற்கு ஏற்றபிறகே இந்தியாவில் நிலைபெற ஆரம்பித்தன”” இஸ்லாம் ஒருபோதும் பார்ப்பனிய சாதி அமைப்பை ஏற்றதே கிடையாது சாதியை 1400 ஆண்டுகளுக்கு முன்பே அழித்து ஒழித்த மார்க்கம். தன் இறுதி ஹஜ் பயணத்தின் போது பெருமானார் (ஸல்) அவர்கள்; மொழிகின்றார்கள்:

  மக்களே! எச்சரிக்கையுடன் இருப்பீராக! உங்கள் அனைவரின் இரட்சகன் இறைவனே. அரேபியனுக்கு அரேபியன் அல்லாதவனை விடவோ கருப்பனுக்கு வெள்ளையனை விடவோ வெள்ளையனுக்கு கருப்பனை விடவோ இறையச்சத்தை பொறுத்தே தவிர, வேறு எந்தவித மேன்மையும் இல்லை. இறைவனிடத்தில் மிகுந்த மதிப்புள்ளவர் உங்களிடத்தில் மிகுந்த இறையச்சம் உள்ளவரே. நான் உங்களிடம் இறைவனின் தூதை சேர்ப்பித்து விட்டேன் அல்லவா?

  மக்கள் பதிலளித்தனர்: ”இறைவனின் தூதரே! ஆம்! சேர்ப்பித்துவிட்டீர்கள்!” – அப்படியானால் இங்கே வருகை தந்திருப்போர் இங்கில்லாதவர்களுக்கு இவ்விஷயத்தை எட்டச்செய்ய வேண்டும். (பை ஹகீ).

  ஒரு ஹதீஸில் பெருமானார் அவர்கள் அறிவுரை கூறுகிறார்கள். நீங்கள் அனைவரும் ஆதமின் மக்கள். ஆதமோ மண்ணால் படைக்கப்பட்டிருந்தார். மக்கள் தம் முன்னோர்களை பற்றி பெருமையடிப்பதை விட்டுவிடவேண்டும். இல்லையேல் அவர்கள் இறைவனின் பார்வையில் ஒரு அற்ப புழுவை விட இழிந்தவர்களாக ஆகிவிடுவர்.

  மற்றொரு ஹதீஸில் கூறுகிறார்கள்: ”அல்லாஹ் மறுமை நாளில் வம்சத்தை பற்றியும் பரம்பரை பற்றியும் கேட்க மாட்டான்.” ‘இறைவனிடத்தில் கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் எவர் மிகுந்த இறையச்சம் கொண்டோரோ அவரே ஆவார்.’

  பின் வருபவை இன்னொரு ஹதீஸின் வாசகமாகும்:
  ‘அல்லாஹ் உங்கள் தோற்றங்களையும், செல்வத்தையும் பார்ப்பதில்லை. உங்கள் உள்ளங்களின் பாலும் செயல்களின் பாலும் தான் நோட்டமிடுகிறான்.’ (முஸ்லிம் – இப்னுமாஜா)

  இந்த போதனைகள் வெறும் வார்த்தை அளவில் மட்டுமே இருக்கவில்லை. இஸ்லாம் போதனைகளுக்கு எற்ப இறை விசுவாசிகள் கொண்டு ஒரு உலகளாவிய சகோதரத்துவ சமுதாயத்தை செயலளவில் உருவாக்கிக் காட்டிவிட்டது. அச்சமுதாயத்தில் நிறம், இனம், மொழி, தேசம் ஆகிய எவ்வித பாகுபாடும் இல்லை. அது உயர்வு, தாழ்வு தீண்டாமை, பிரிவினை வகுப்பு மாச்சரியம் ஆகியவைகளை தூக்கி எறிந்துள்ளது.

  இஸ்லாமிய குடும்பத்தில் பங்கு பெறும் எல்லா மனிதர்களும், எந்த இனத்தை எந்த குலத்தை எந்த நாட்டை சார்ந்தவரானாலும் முழுக்க முழுக்க சமமான உரிமைகளுடன் பங்கு பெற முடியும். அவ்வாறு பங்கு பெற்று சிறப்புடன் வாழ்ந்து வருகின்றனர்.

  அங்கே இன பேதமில்லை, நிற பேதமில்லை, புதிதாக வந்தவர்கள் என்ற அடைமொழி எதுவும் இல்லை. இஸ்லாத்தில் இணைந்து விட்டார்கள் என்றால் அங்கே இரண்டற கலந்துவிடுகின்ற நிலையே ஏற்பட்டு விடுகின்றது. கடலிலே நதிகள் கலந்துவிட்ட பின்பு, அங்கே நதிகள் என்று பிரித்து பார்க்க முடிவதில்லை. நதி கடலாகி விடுகிறது. இதுவே, இஸ்லாத்தில் இணைகின்றவர்களின் நிலை.)

  http://www.ottrumai.net/TArticles/12-MarchTowardsIslam.htm

  • முகம்மது சியால் – பார்ப்பனியத்தை ஏற்றுக்கொண்ட இஸ்லாமின் கதையை இங்கே படியுங்களேன், ஒரு வேளை உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம்

   https://www.vinavu.com/2009/11/11/casteism-in-islam/

   இஸ்லாத்தின் சமூக சமத்துவ கோட்பாட்டுக்கு முற்றிலும் நேரெதிரான வகையில், இந்திய முஸ்லிம்களிடையே சாதிய வேற்றுமையும் பாரபட்சமும் புரையோடிப் போய் கிடக்கிறது. இது, பார்ப்பன இந்து மதத்தின் தாக்கத்தினால் ஏற்பட்டது மட்டுமல்ல; பல இஸ்லாமிய மன்னர்களும் உலேமாக்களும் இச்சாதிய பாரபட்சத்தை நியாயப்படுத்தி கட்டிக் காத்து வந்துள்ளனர். இந்த உண்மையையும், மனுவாத அடிப்படையில் இஸ்லாமிய மார்க்கம் எவ்வாறு இந்தியாவில் உருத்திரிக்கப்பட்டுள்ளது என்பதையும் வரலாற்றுப் பின்னணியுடன் வெளிக்கொணர்கிறார், இஸ்லாமிய இளைஞரான மசூத் ஆலம் ஃபலாஹி.

   தற்போது டெல்லி நேரு பல்கலைக்கழகத்தின் அரபுமொழித் துறையில் முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சி மாணவராக உள்ள இவர், ஜாமியா உல்ஃபலா மதரசாவில் இஸ்லாமிய மார்க்கக் கல்வியைப் படித்து முடித்தவர். இந்திய முஸ்லிம்களிடையே நிலவும் சாதி மற்றும் சாதி அடிப்படையிலான இழிவுபடுத்தல்கள் பற்றி இவர் விரிவாக ஆய்ந்தெழுதியுள்ளார். கொல்கத்தாவிலிருந்து வெளியாகும் “”ஃபிராண்டியர்” (பிப்ரவரி 511, 2006) என்ற ஆங்கில வார இதழுக்கு அளித்த நேர்காணலில் அவர், இவை குறித்து அலசுகிறார். புறக்கணிக்கப்படும் பிரச்சினை குறித்த இச்சிறுவெளியீடு இந்துமதத்தின் கொடுமைகளை எதிர்க்கிறோம் என்று கூறிக்கொண்டு இஸ்லாத்திலும் மனு”தர்ம’ அடிகொடுக்கும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், சாதியத்திற்கு எதிராகவும் விடாப்பிடியாகப் போராட விரிந்த பார்வையை அளிக்குமென்று நம்புகிறோம்.

  • இது உண்மை……மதம் என்ற அடிப்படையில் இச்லாம் மட்ர மதததை காட்டிலும் சிரந்ததெ……

   ஆனால் இதில் சுய சிந்தனைகலை வுருவாக முடிவதில்லை…..

   Only educated people and capable of analyzing can do better…..remaining all are just addict to their religion….

 14. //எவன் ஒருவன் தமக்கு கீழ் உள்ளவர்களை கட்டுபடுத்தி வழிநடத்தி செல்கிறானோ, அவனே தலைவன். //
  சூத்திரன் (தேவிடிய பசங்க என்றால் பெருமை படும் ஒரே இனம்) அவர்களே அம்பேத்கர் அந்த குழுவின் தலைவரே தவிர நாட்டின் தலைவர் ‘நல்லவர்’ நேரு. மற்றுமொரு உண்மை என்னவென்றால் அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும் போராடவில்லை இப்பொழுது ஜாதி பெருமை பேசி வெட்கமில்லாமல் திரியும் சூத்திர ஜனத்திற்கும் போராடினார்(நேரம் கிடைத்தால் அவரோடைய புத்தகங்களை படியுங்கள்).

  http://www.ambedkar.org/ambcd/01.Caste%20in%20India.htm

  http://www.ambedkar.org/ambcd/38A.%20Who%20were%20the%20Shudras%20Preface.htm

  http://www.ambedkar.org/ambcd/02.Annihilation%20of%20Caste.htm

  இதை இப்பொழுது படியுங்கள்
  //இந்துப் பெண்களுக்கான சமச் சொத்துரிமை தொடர்பான மசோதாவைத் திருத்தவும், தள்ளி வைக்கவும் முயன்ற நேரு அரசாங்கத்திற்கு எதிராக தன் சட்ட அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்தார் அம்பேத்கர்.//

  இலங்கையில் உள்ள பிக்குகளை வைத்து புத்தனை எடை போடும் தமிழ் தேசியவாதிகளே கற்று கொள்ளுங்கள் வறட்டு தேசியத்தின் விளைவை. தமிழ் தேசியம் மறைமலை அடிகள் முதற்கொண்டு இன்றைய நெடுமாறன் வரை எல்லோரும் ஜாதி விசயத்தில் மழுப்புவார்கள். அவ்வளவு ஏன் ஈழம் வேண்டும் என்று கொக்கரிக்கும் புலம் பெயர் ஈழத்தமிழரின் வெள்ளாள வெறியை பற்றி தமிழ் தேசியவாதிகள் பொழைப்பு கேட்டு விடும் என்று பேசுவதே இல்லையே.

  • // சூத்திரன் (தேவிடிய பசங்க என்றால் பெருமை படும் ஒரே இனம்) //

   எதையும் தவறாகவே கருத்தில் கொண்டு தாழ்த்திக்கொள்ளும் தாழ்வுமனப்பன்மையை முதலில் விட்டொளியுங்கள். சூத்திரம்- வழி, தீர்வு என பொருள் பட சிந்தியுங்கள். அடிப்படை தேவை முதல் ஆடம்பார தேவைவரை உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு(சூத்திரம், வழி) காணும் ஒருவன், அவனே சூத்திரன்.

   • //எதையும் தவறாகவே கருத்தில் கொண்டு தாழ்த்திக்கொள்ளும் தாழ்வுமனப்பன்மையை முதலில் விட்டொளியுங்கள்//
    நீங்கள் என்ன நினைத்தாலும் ஹிந்து வேதமும் புராணமும் அப்பிடி கருதுவதில்லை. அதை விட அவற்றை பற்றி ஒன்னும் தெரியாத பார்ப்பான்(ஜாதி பார்க்கும் அனைவரும் அடங்குவர்) அப்பிடி கருதுவதில்லை. ஆஸ்திரேலியாவில் லக்ஷ்மி படம் போட்ட ஜட்டி அணிந்தால் ஆத்திரப்படும் ஒரு இந்தியன் அமெரிக்காவில் நாயிக்கு இந்திய என்று பெயர் சூட்டினால் ஆர்பரிக்கும் இந்தியன் தன்னை சட்டத்தின் அனுமதியோடு சூத்திரன் (தே.ம ) என்று சொல்வதை ஏற்றுக்கொண்டு கோவில் கர்ப்பகிரகாம் வெளியில்(சமீப காலங்களில்) நின்று சூத்திர பெருமை பாராட்டமுடியுது. இதை சொன்னால் தாழ்வு மனப்பான்மை கூடாது என்று சுகி சிவம். ஷிவ் கேரா போல உபதேசம் வேறு.

 15. பல சந்தேகங்களுக்கு விடையாக அமைந்துள்ளது இக்கட்டுரை. பல வரிகள் கோடிட்டுக் காட்டப்படவேண்டி இருப்பினும் கீழ்கண்ட இந்த வரிகள் ஹிந்துத்வ அடிப்படை வாதிகளுக்கு பயன்படுக்கூடியதாக அமையும் என்பதால்….

  *****சாதித் தூய்மையில் இரத்தக் கலப்பை விரும்பாத இந்துச் சமூகம் நெடுங்காலமாய் மதப் பிரச்சாரம் மற்றும் மதமாற்றம் செய்யாததற்கும் இதுவே காரணம் என்றார் அம்பேத்கர்.*****

 16. Hi friends

  I have seen everyone’s commends. First up all Sri Ambedkar previous name was Ambekar. i.e He is from Ambe village that is way his name was Ambekar. Kar means residence of that village. After wards he changed his name. The main thing is Ambekar (Ambedkar) was a brahmin. Who are agains the Brahmin’s they should know first this thing.

  Madurai ambi

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க