privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கசமச்சீர்கல்வி - உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும், விளைவும்!

சமச்சீர்கல்வி – உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும், விளைவும்!

-

மிழக அரசு தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. ஒன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு ஏற்கெனவே அமலில் இருக்கும் சமச்சீர் பாடத்திட்டம் தொடரவேண்டும். மற்ற வகுப்புகளுக்கான பாடநூல்களில் பல பிரச்சினைகள் இருப்பதாக தமிழக அரசு கூறியிருப்பதால், அவற்றை ஆராய தமிழக அரசு ஒரு நிபுணர் குழுவை நியமிக்கவேண்டும்.  அந்த நிபுணர் குழு 3 வாரத்திற்குள் தனது அறிக்கையை சென்னை உயர்நீதி மன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். அதன் மீது சென்னை உயர்நீதி மன்றம் விசாரணை நடத்தி பாடத்திட்டத்தின் மீது இறுதித் தீர்ப்பு சொல்லவேண்டும்.

சுருக்கமாக இதுதான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் ஒரு முடிவை மேற்கொள்ளும்போது அது மக்கள் நலனுக்கானதாக இருக்கும் என்றே கருதவேண்டும். அவ்வாறின்றி தமிழக அரசின் மசோதாவுக்கு நோக்கம் கற்பித்து முடக்கியிருப்பது துரதிருஷ்டவசமானது. எனவே சமச்சீர் கல்வியை மேம்படுத்த எங்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரினார்கள் தமிழக அரசின் சார்பில் வாதாடிய வழக்குரைஞர்கள்.

இதனை எதிர்த்து வாதாடிய பிரசாந்த் பூஷண் (மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பில்), கிருஷ்ணமணி, ஹரீஷ் ஆகிய வழக்குரைஞர்கள் “மொத்தப் பாடங்களையும் முடக்கும் அளவுக்கு என்ன பிரச்சினை என்று அரசு கூறவில்லை. NCERT மற்றும் NCFP ஆகிய அமைப்புகள் 2005 இல் கொடுத்த வழிகாட்டுதல் அடிப்படையில் துறைசார் வல்லுநர்கள், ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்டு, கருத்தறியப்பட்டு இறுதியாக்கப்பட்ட இந்த பாடத்திட்டத்தை முற்றிலுமாக முடக்கும் அளவுக்கு இதில் என்ன பிரச்சினை என்று அரசு கூறவில்லை. 214 கோடி ரூபாய் வரிப்பணத்தை செலவு செய்து நூல்கள் தயாராக உள்ளன. இதனை நிறுத்திவிட்டு 2002 ஆம் ஆண்டு பாடத்திட்டத்தை அச்சிட தமிழக அரசு முடிவு செய்திருப்பது பிற்போக்கானது. உள்நோக்கம் கொண்டது. மேலும் சமச்சீர் கல்வி குறித்த தனது 10.09.2010 தேதியிட்ட தீர்ப்பில், “அரசுகள் மாறும்போது, அவர்கள் தமது விருப்பங்களுக்கு ஏற்ப பாடத்திட்டத்தையும் பாடநூலையும் மாற்றுவதையும், பள்ளிகளையும், ஆசிரியர்களையும், மாணவர்களையும் பந்தாடுவதையும் இந்த நீதிமன்றம் அனுமதிக்க முடியாது” என்று கூறியிருக்கிறது. ஆனால் தற்போது தமிழக அரசு அதைத்தான் செய்கிறது” என்று வாதிட்டனர்.

“அதற்குள் நாங்கள் செல்ல விரும்பவில்லை. ஒன்றாம் வகுப்புக்கும் ஆறாம் வகுப்புக்கும் ஏற்கெனவே சமச்சீர் பாடங்கள் அமலில் இருப்பதால் அது தொடரட்டும். மற்றவை குறித்து நிபுணர் குழு ஆராய்ந்து 3 வாரத்தில் உயர்நீதி மன்றத்தின் ஒப்புதலைப் பெறட்டும். பிள்ளைகள் 3 வாரம் விடுமுறையை அனுபவிக்கட்டும்” என்று தீர்ப்பளித்தார்கள் நீதிபதிகள்.

சட்டத்துக்கோ நீதிக்கோ இந்தத் தீர்ப்பில் இடமிருக்கிறதா என்பதை சட்ட வல்லுநர்கள்தான் கூறவேண்டும். நீதிபதிகளுக்குப் பின்னால் ஒரு அரச மரமும் முன்னால் ரெண்டு பித்தளை செம்புகளும் இருந்ததா என்பதை டெல்லிக்கு நேரில் சென்றவர்கள் கூறவேண்டும்.

என்ன எழவோ ஒரு பாடத்திட்டம். என்னிக்கி இஸ்கூலு தொறப்பான், அதச்சொல்லுஎன்று கேட்பவர்களுக்கு எமது விளக்கம் பின்வருமாறு:

இத் தீர்ப்பின்படி 1,6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கெனவே உள்ள சமச்சீர் பாடம்தான் என்பதால் பள்ளிக் கூடத்தை திறந்து அவர்களுக்கு மட்டும் வகுப்பு நடத்தலாம்.

மற்ற வகுப்பு மாணவர்களைப் பொருத்தவரை அவர்கள் பாடப்புத்தகத்துக்காக காத்திருக்க வேண்டும். 15 ஆம் தேதி பள்ளிக்கூடம் திறப்பதும் திறக்காததும் புரட்சித்தலைவியின் விருப்பம். அல்லது நீதிபதிகள் போகிறபோக்கில் குறிப்பிட்டதைப் போல எல்லோருக்கும் 3 வாரம் லீவு விடலாம்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நிபுணர் குழுவை தமிழக அரசு உடனே அமைத்துவிடும். பெரும்பாலும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் சில கல்வியாளர்களையும் கொண்டு இக்குழு அமைக்கப்படும். இந்த நியமனமே பிரச்சினைக்குரியதாக இருப்பின் நீதிமன்றத்தில் கேள்விக்குள்ளாக்கப்படலாம்.

“நீக்க விரும்பும் பாடங்களை அரசு நீக்கிக் கொள்ளலாம்” என்று சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கெனவே கூறியிருந்தது. உயர்நீதி மன்ற உத்தரவை அமல்படுத்துவது என்று தமிழக அரசு முடிவெடுத்திருந்தால், செம்மொழி வாழ்த்து, சென்னை சங்கமம் முதலான தனக்கு விருப்பமில்லாத பக்கங்கள் அனைத்தையும் கிழித்து விட்டு வெறும் அட்டையை மட்டும் கூட மாணவர்களுக்கு விநியோகித்திருக்கலாம். ஆனால் அப்பீலுக்குப் போய் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தமிழக அரசு தேடிப் பெற்றிருக்கிறது. இனி, பாடத்திட்டத்திலிருந்து மழித்தல், நீட்டல் எதைச்செய்தாலும் இறுதியாக அதற்கு உயர்நீதி மன்றத்தின் அனுமதியை தமிழக அரசு பெற்றாக வேண்டும். ஆட்சேபங்கள் உயர்நீதி மன்றத்தில் குவிந்தால், வழக்கு முடிவதற்கு எத்தனை காலமாகும் என்று சொல்ல முடியாது.

பாபர் மசூதி வழக்கிலாவது புராணம், தொல்லியல், வரலாறு ஆகியவற்றுடன் பிரச்சினை முடிந்து விட்டது. இதில் தமிழ்ப் பாடத்தில் மட்டுமின்றி, அனைத்துப் பாடங்களிலும் பிரச்சினை இருப்பதாக புரட்சித்தலைவியின் அரசு நீதிமன்றத்தில் கூறியிருக்கிறது. எனவே இந்த வழக்குக்கு மட்டும் சிறப்பு நீதிமன்றம் போட்டு அன்றாடம் விசாரித்தாலும் புரட்சித்தலைவியின் பொற்கால ஆட்சி முடியும்வரை விசாரித்து முடியுமா என்று தெரியவில்லை.

ஒரு வேளை 3 வாரத்தில் கமிட்டி அறிக்கை கொடுத்து, ஒரு வாரத்தில் தடலடியாக நீதிமன்றம் விசாரித்து முடித்து விட்டாலும், இறுதியாக்கப்படும் பாடங்களை அச்சிடுவதற்கு 4 மாதங்களாவது தேவை. மொத்தத்தில் நவம்பர் மாதம் பள்ளிக்கூடம் திறக்கலாம். அல்லது வேறு ஏதாவது சதிகாரத் திட்டம் இந்த அரசின் மனதில் இருக்கக் கூடும்.

உச்ச நீதிமன்றத்தில் வெற்றி பெற்றது யார்?

“பாடத்திட்டத்தை அரசு எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளட்டும். 4 விதமான பாடத்திட்டங்கள் இனி கிடையாது. ஒரே பாடத்திட்டம்தான் என்று முடிவாகி விட்டதல்லவா? இது சமச்சீர் கல்விக்கு கிடைத்த வெற்றிதானே!  அந்த வகையில் பார்த்தால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நமக்குக் கிடைத்த வெற்றி தானே என்று கேட்டார் ஒரு நண்பர்.

இல்லை. இதனை வெற்றி என்று கருதுவது மயக்கம். சரியாகச் சொன்னால் போராட்டத்தின் உண்மையான நோக்கத்தைப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பும், போராட்டத்தின் தேவையும் இப்போதுதான் முன்னைக்காட்டிலும் அதிகரித்திருக்கிறது.

ஏற்கெனவே கருணாநிதி ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் சமச்சீர் பாடத்திட்டத்தில் குறைகள் பல இருப்பினும், அது ஆசிரியர்கள், கல்வியாளர்களால் உருவாக்கப்பட்டது. அவர்கள் மாணவர்களுக்கு கற்பித்த அனுபவம் பெற்றவர்கள். துறை சார் அறிவு கொண்டவர்கள்.

தற்போது அதனை மறுபரிசீலனை செய்ய இருப்பவர்களில் பெரும்பான்மயினர் கல்வித்துறை அறிவோ அனுபவமோ இல்லாத அதிகார வர்க்கத்தினர். உயர் வர்க்கத்தை சேர்ந்த இவர்களது பிள்ளைகள் பத்மா சேஷாத்ரி, டான் பாஸ்கோ முதலான மேட்டுக்குடிப் பள்ளிகளில் படிப்பவர்கள். எனவே அந்தப் பள்ளிகள் பின்பற்றும் பாடத்திட்டங்கள்தான் தரமானவை என்பதே இவர்களது கருத்தாக இருக்கும்.

சமச்சீர் பாடத்திட்டத்தை முடக்கும் மசோதாவை அறிமுகப்படுத்திய கல்வி அமைச்சர் சட்டமன்றத்தில் பேசியதும் இங்கே குறிப்பிடத்தக்கது. உலகமயமாக்கலின் சவால்களை எதிர்கொள்ளும் விதத்திலும், ஐ.ஏ.எஸ் முதலான அனைத்திந்தியத் தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆற்றலை தமிழக மாணவர்களுக்கு வளர்க்கும் விதத்திலும் நமது பாடத்திட்டம் அமைய வேண்டும் என்றார் கல்வி அமைச்சர்.

துக்ளக் சோ முதல் பார்ப்பன அறிவுத்துறையினர், முதலாளிகள், அதிகாரிகள் ஆகியோர் அனைவரும் காலம் காலமாகக் கூறி வருவது இதைத்தான். அமெரிக்க ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்களின் தேவையை ஈடு செய்யும் விதத்திலும், அவர்களுக்கு தரமான ஊழியர்களை உருவாக்கிக் கொடுக்கும் விதத்திலும் நமது கல்வி அமைய வேண்டும் என்பதுதான் இதன் பொருள். “”பிரவுன் சாகிப்புகளை”” உருவாக்குவது பற்றி மெக்காலே கேவலமான மொழியில் அன்று பச்சையாக கூறியதை, “உலகமயத்தின் சவால்” என்று ஜம்பமாக கூறுகிறார் கல்வி அமைச்சர்.

“ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் பள்ளிக் கல்வி முடித்து வெளியே வருபவர்கள் 7 இலட்சம் பேர். இவர்களில் ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட அனைத்திந்திய தேர்வுகளுக்கு செல்பவர்கள் மொத்தம் 1000 பேர். இந்த 1000 பேரின் தேவைக்கு ஏற்ப 7 இலட்சம் பேரின் கல்வியை மாற்றியமைக்க வேண்டுமா?” என்று கேள்வி எழுப்புகிறார் கல்வியாளரும் சமச்சீர் கல்விப் பாடத்திட்டக் குழுவின் உறுப்பினருமான எஸ்.எஸ்.இராசகோபாலன்.

நமது நாட்டின் தேவை, மக்களின் தேவை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டோ, வரலாறு முதல் பண்பாடு வரையிலானவற்றைக் கற்பித்து மனிதனை உருவாக்கும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டோ கல்வியை அணுகாமல், தனியார்மய தாராளமயக் கொள்கைகளுக்கு ஏற்ப கார்ப்பரேட் கொள்ளைக்கு ஏற்ப கல்வி மறுவார்ப்பு செய்யப்படுகிறது. இதயமில்லாத மனித எந்திரங்களை உருவாக்கும் அத்தகைய கல்வி முறையைத் திணிப்பதைத்தான் “மேம்படுத்துவது” என்று கூறுகிறார் கல்வி அமைச்சர்.

தற்போதைய உச்ச நீதிமன்ற உத்தரவு இந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்பை ஜெ வுக்கு அளித்திருக்கிறது. புதிய பாடநூல்கள் அச்சிடுவதற்கு தாமதமாகும் என்ற பெயரில், “இப்போதைக்கு மெட்ரிக் பள்ளிகளின் தரமான பாடத்திட்டத்தையே வைத்துக்கொள்ளலாம்” என்று கூறி அவற்றைத் திணிப்பதற்கும், அவற்றையே மேம்படுத்தி அந்த திசையில் கல்வியை எடுத்துச் செல்வதற்குமான வாய்ப்பு அதிகம். உலகமயமாக்கலை முன்னேற்றம் என்று கருதுவோர், இந்தக் கல்வியையும் முன்னேற்றம் என்று கருத வாய்ப்புண்டு. அந்த வகையில் கடுமையானதொரு போராட்டத்திற்கு நாம் தயாராக வேண்டியிருக்கிறது.

_____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

  1. “தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் ஒரு முடிவை மேற்கொள்ளும்போது அது மக்கள்

    நலனுக்கானதாக இருக்கும் என்றே கருதவேண்டும்.” அவ்வாறின்றி தமிழக அரசின்

    மசோதாவுக்கு நோக்கம் கற்பித்து முடக்கியிருப்பது துரதிருஷ்டவசமானது. எனவே

    சமச்சீர் கல்வியை மேம்படுத்த எங்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரினார்கள்

    தமிழக அரசின் சார்பில் வாதாடிய வழக்குரைஞர்கள்.

    திமுக அரசாங்கமும் தேர்ந்தெடுக்கப்பட்டதுதானே,அதன் முடிவு மக்கள்

    நலனுக்கானதாகத்தானே இருக்கமுடியும்.அது தமிழக அரசாங்கத்தின் முடிவல்லாமல்

    அமெரிக்க அரசாங்கத்தின் முடிவா? சமச்சீர் கல்வியை மேம்படுத்துவதை யாராவது

    தடுத்தார்களா?

    மேலும் சமச்சீர் கல்வி குறித்த தனது 10.09.2010 தேதியிட்ட தீர்ப்பில்,

    “அரசுகள் மாறும்போது, அவர்கள் தமது விருப்பங்களுக்கு ஏற்ப பாடத்திட்டத்தையும்

    பாடநூலையும் மாற்றுவதையும், பள்ளிகளையும், ஆசிரியர்களையும், மாணவர்களையும்

    பந்தாடுவதையும் இந்த நீதிமன்றம் அனுமதிக்க முடியாது” என்று கூறியிருக்கிறது.

    ஆனால் தற்போது தமிழக அரசு அதைத்தான் செய்கிறது.”

    அரசு நியமித்த,தலைமைச் செயலாளர் முதலிய குழுவினர் 2(இரண்டு ) வாரத்தில்

    சென்னை உயர் நீதிமன்றத்தில் குழுவின் அறிக்கையை சமர்ப்பித்து ஒரு வாரம்

    தொடர்ந்து வழக்கினை விசாரித்து தீர்ப்பு வழங்கி ,அதன் பின் பாடப்புத்தகங்கள்

    அச்சடித்து வழங்கி பாடம் நடத்த தொடங்க வேண்டும்!இது எப்படி இருக்கு!

  2. இது மக்களுக்கு கிடத்த தீர்ப்பு அல்ல.பாசிச ஜெயாவுக்கும் தனியார்மய தாராளமயக் கொள்கைகளுக்கு கிடத்த தீர்ப்பு.இதில் இருந்து நீதிமன்றம் என்ன சொல்கிறதென்றால் மக்களெ இந்த போராட்டம் பத்தாது இன்னும் போராடுங்கள் நாங்கள் அதை பார்த்து ரசிக்கிரோம் என்கிரது.ஜனநாயாக நாட்டில் வெட்ககேடான தீர்ப்பு.புரட்சிகர அமைப்புகளுக்கு நிரைய வேலை இருக்கிறது.போராட்டத்தில் இனைவோம்.

  3. நானும் சிறிது மயக்கத்தில் தான் இருந்தேன், இப்பொழுது தான் புரிகிறது. போராட்டத்தின் தேவை இப்பொழுதும் உள்ளது.. போராட தயாராகுவோம்

    • என்ன மயக்கம் நேத்து அடிச்ச மப்பா…

      விதவிதமானா fலேவர்ல சமச்சீர்கல்வி பற்றி வினவு எழுதும் மூனாவது கட்டுரை இது..

      மூணு கட்டுரை எழுதிய பின் ட்கான் அண்ணன் அக்ணிப் பார்வைக்குப் புரியுது…

      மூணு கட்டுரை எழுதிய பின்னும் வினவுக்குப் பொழம்பல் தீரல..

      ///போராட்டத்தின் தேவை இப்பொழுதும் உள்ளது.. போராட தயாராகுவோம்///

      என்ன போராட்டம்..இப்படி பிண்ணூட்டம் இட்டு விட்டு அபீசில் தூங்குவதா??

      வினவைப் போலவே வாய்ப் பேச்சில் வீரராய் இராதீர்..

  4. அனைத்து மட்டத்திலும் ஒத்தக் கருத்துடையோரை உள்வாங்கி போராட்டம் நடத்த வேண்டும் …. சோரம் போன அரசியல் வியாதிகளை ஆஸ்பிட்டலிலேயே விட்டுவிட்டு வாருங்கள் ….

  5. இந்த தீர்ப்பு எதிர்பார்த்துதான்………..
    போராடனும்… மக்களை போராடவைக்கனும்

  6. இஸ்கூலு இன்னும் தொறக்காததுக்கு காரணம் ம.உ.பா.மையின் திட்டமிட்ட சதி என்று பொர்ச்சித்தலைவி தன் புண்ணாக்கு வாயைத் திறந்து வார்த்தைகளை உமிழக்கூடிய சாத்தியக்கூறு இருக்கிறது!

  7. “In respect of other classes, the Supreme Court directed the State to appoint an expert panel to examine the syllabus/textbooks and the ways and means to implement the common curriculum and submit a report to the Madras High Court in three weeks.
    A vacation bench of Justices B. S. Chauhan and Swatanter Kumar said the committee would be headed by the State Chief Secretary and comprise two academics appointed by the State; two nominees each from the State government and the National Council for Education, Research and Training; the Director of School Education and the State Education Secretary.

    The Bench asked the Division Bench of the High Court to hear the main writ petition, after the receipt of the committee report and dispose of it expeditiously on day-to-day hearing.

    It made it clear that since the validity of the Act had been upheld by the High Court and the Supreme Court, the committee could not go into the issue of change of the system. It said the committee should consider how to implement the directions of the High Court given in April 2010 for the implementation of the Act. It should complete the proceedings to enable the High Court to decide the writ petition expeditiously.

    The Bench passed the order after hearing senior counsel P.P. Rao, senior counsel Rajiv Dutta, Additional Advocate General Guru Krishna Kumar, Advocate General Navaneethakrishna, appearing for the State and senior counsel, A.K. Ganguly, senior counsel M.N. Krishnamani and counsel Prashant Bhushan and Harish Kumar for students and parents.

    The Bench said the decisions taken administratively or through legislative measures or such changes emerging with political changes or the wisdom of legislature should have a paramount consideration in the interests of the student community.

    Prior to the introduction of the Samacheer Kalvi Thittam, Tamil Nadu had four Boards, viz State Board; Oriental; Matriculation and Anglo-Indian.

    By the Tamil Nadu Uniform System of School Education Act, 2010 Act, a common curriculum was introduced and it was implemented for classes 1 and VI. After the Jayalalaithaa government assumed office, the Act was amended and Section 3 was introduced in the Act to postpone the implementation of the scheme.

    The High Court while staying the decision asked the State to implement the Act.

    ‘Deficiencies’

    The State in its special leave petition pointed out that the High Court did not consider the fact that the review of the syllabus was necessitated owing to various deficiencies, including propaganda material introduced by the DMK government, virtually amounting to politicising the minds of young children.

    As a consequence, the competence of the students in the State would not be on a par with students of other parts of the country while facing national-level examinations, the SLP said. ”

    http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2104266.ece?homepage=true

  8. ஒரு குடியானவன் தன்னோட வீட்டுக்குப் பின்னால இருந்த தோட்டத்திலே கீரை போட்டிருந்தான்.
    அவன் பொணடாட்டி மூணு மாசம் முழுகாம இருந்தா..குடியானவன் இந்த புள்ளத்தாச்சியக் கீரைக்குக் காவல் போட்டிருந்தான். அந்த ஊர்ல இருக்கிற வண்ணானோட கழுதை வயித்துப் பாட்டுக்காக கீரைய எல்லாம் மேயத் தொடங்குச்சு..பாத்து விரட்டிப்பாத்தா குடியானவன் பொஞ்சாதி..கழுதை நகர்ர மாதிரி தெரியல..குடியானவன் அந்தப்பக்கமா வந்தான். பொண்டாட்டியால கழுதையை விரட்ட முடியலன்னதும் கட்டை ஒண்ணைத் தூக்கி அதோட காலுல எறிஞ்சான்..ஒருகால் அடிபட்ட ஆத்திரத்தில கழுதை இன்னொரு காலால பின்னாடி ஓங்கி உதை விட்டது..அதில கீழே விழுந்த புள்ளத்தாச்சியோட கரு கலைஞ்சு போச்சு..கழுதைக்கும் கால் ஒடிஞ்சு போச்சு..ராஜாகிட்டே பிராது போச்சு..வண்ணான் என் கழுதையோட காலு போச்சுங்கறான்..குடியானவன் தன் பொஞ்சாதி வயத்துக் கரு கலஞ்சு போச்சுங்கறான்..ஆற அமர யோசிச்சு ராஜா தீர்ப்பு கொடுத்தான். கழுதைக்கு காலை ஒடிச்சதால காலைக் குணமாக்குறது குடியானவன் பொறுப்பு..குடியானவன் மனைவி கரு கலைஞ்சதால அத சரிபண்ணி மறுபடியும் கரு உண்டாக்குறது வண்ணான் பொறுப்பு அப்படின்னு தீர்ப்பாச்சுது..
    அந்த ராஜாதான் இப்போ சுப்ரீம் கோர்ட் நீதிபதி. பாடத்திட்டத்தை சரிபார்க்குறதைக் கூட அரசோட ஆள்கிட்டே ஒப்படைச்சிட்டு இந்த நீதியை நிலைநாட்டுற நீதிபதியப் பத்தி என்ன சொல்ல இருக்கு?

    • தமிழக அரசு நியமித்துள்ள இரு உறுப்பினர்கள் மேட்டுக்குடி கல்விவியாபாரிகள்.மிகவும் வேதனையாக இருக்கிறது.வியாபாரிகள் கல்வியாளர்கள் ஆனால் சாத்தான் வேதம் ஓதுவதில் தவறில்லைதான்….
      சமசீர்கல்வி முயற்சி இன்று அம்மாவால் கொலை செய்யப்பட்டத

  9. ஓட்டு போடுரமக்கா தொடர்ந்து போரடவும் கத்துக்குங்க,

    உப்ப தின்னவன், தின்னாதவன் எல்லாரும் தன்னிகுடிக்க வேன்டியதுதன்!!!.

    – புதியதமிழன்.

  10. “தமிழக மக்கள் தான் தோற்றுவிட்டார்கள்” என்று தேர்தல் ரிசல்ட் அன்னிக்கே வருங்கால தமிழக முதல்வர் குஷ்பூ அவர்கள் தீர்க்கதரிசனம் சொன்னார். அதையே தமிழக மம்மி பள்ளி மாணவர்களிடமிருந்து ஆரம்பித்திருக்கிறார் போல!

  11. சமச்சீர்கல்வி திட்டத்தினை இந்த ஆண்டே அமல்படுத்தக் கோரி போராடிய ம.க.இ.க

    வினர் 12 பேர் கைது, திருச்சி மத்திய சிறையில் அடைப்பு.அங்கும் போராட்டம்

    தொடர்கிறது, ம.க.இ.க வினர் உண்ணாவிரதத்தை துவங்கியுள்ளனர்.அவர்களது

    போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

  12. வெற்றி! வெற்றி!! வெற்றி!!!!!
    இப்போது வெளி வந்து இருக்கும் தீர்ப்பு ஜெயலலிதாவிற்கு கிடைத்த வெற்றி அல்ல.. தமிழ்நாட்டு மாணவர்களுக்கு கிடைத்த வெற்றி.. இனி சமச்சீர் கல்வியை மத்திய அரசின் பாடத்திட்டதிற்கு இணையாக மேம்படுத்தி மாணவர்களுக்கு அடுத்த ஆண்டுமுதல் நடைமுறைபடுத்த படும். நிச்சயம் இனி வரும்காலங்களில் தமிழ்நாட்டு மாணவர்கள் சிறந்த கல்வியை பெறலாம் என்கிற நம்பிக்கையை இந்த தீர்ப்பு தந்துள்ளது. ம.க.இ.க வினருக்கு நிச்சயம் இது தோல்வி கிடையாது அவர்கள் மாணவர்களுக்கு சமமான கல்வி கிடைக்க வேண்டும் என போராடினார்கள். நிச்சயம் சமச்சீர் கல்வி அடுத்த ஆண்டு முதல் தரமான பாடத்திட்டத்துடன் வெளிவரும். அதை படிக்கும் மாணவர்களும் அணைத்து போட்டி தேர்வுகளையும்,நுழைவு தேர்வுகளையும் சந்திக்கும் அறிவுடன் வெளி வருவார்கள்..

  13. அம்மா மொத்தமாக சமச்சீர் கல்வியை அழிக்கலாம் என திட்டம் போட்டார்.
    பாதி அவுட்.

  14. Even after reading articles of vinavu, i don’t understand real need of this ‘samacheer’ kalvi. One end you folks are saying that due to this absence, people are not getting ‘similar’ knowledge, so poor’s cannot participate/win in corporate world. In other end, you are saying ‘reduce’ the standards of ‘metric’ to match the lower ‘state board’ levels. What is the problem in adopting ‘Metric’ system for all 4 models. All children will be getting equal type of education. Is it not?

  15. Hi Subhasri,
    Can you please explain how ‘Metric’ syllabus is better than other syllabuses?
    Also, please let me know whether the Metric system allows Tamil as a medium of instructions?

  16. Hello Subhasri,

    Please list any one state in India which follows 4 different syllabuses in its state board schools? Pls don’t confuse this with CBSE. Then you can understand why we need an uniform system in schools?

    • Neethi, still you didnot answer my questions directly -:) –

      Obviously metric syllabus is much better than state board. We will come to this point later. Before that, what exactly you are looking out from children possessing this ‘samacheer’ kalvi with tamil as medium – work only in TN in Govt sector (if yes, present State board syllabus is enough, let them continue…what is the problem?)

      If they have to be competent to work in pvt sector to improve their standards of life, then English is essential.

      I am asking same question – what is the problem in implementing 4 models in TN? If u can give me an example with two children – 1 studying TN board and other in Metric. What do you think will happen to them in future?

  17. First of all, please read the syllabus of samacheer kalvi and compare it with metric and state board’s…then u can understand it.. We do not deny that english is essential.. what is the problem to learn english in state board schools?
    How can you come to the conclusion ‘Obviously metric syllabus is much better than state board’?

    what is the problem in implementing 4 models in TN?
    It creates in-equality in Children’s education. It should not be allowed in indian constitution. Metric/Anglo-indian/Oriental education is for rich people and state board is for poor…can be allowed further?

    It is similar to varnashram in this society.. we should give equality atleast in syllabus.

  18. The bill for samacheer kalvi says ‘WHEREAS at present there are four streams of school education in
    the State under the control of the State Government, namely, State Board
    Schools, Matriculation Schools, Oriental Schools and Anglo-Indian Schools
    and these schools have separate syllabus, text books and scheme of
    examination and are under the control of different Boards. As a result, the
    standard of education in these schools are not uniform;
    AND WHEREAS the Government are of the view that it is
    indispensable to evolve a uniform system of school education in the State to
    ensure social justice and provide quality education in the schools in the
    State;”

    We want social justice.. So we want Samacheer kalvi.

  19. For time being, i will agree that Metrics is not on-par with ‘samacheer’. pl park it.

    1) What is the problem if some people get education in non-state board. Do you think they will be superior in knowledge? If yes, their education system is best. If No, why you are bother about their system. Simply continue with ur TN-Board and add English communications as Mandatory.
    2) If u can give me an example with two children – 1 studying TN board and other in Metric. What do you think will happen to them in future? In my opinion both are different forms of stupid ‘mechale’ scheme to prepare clerks.

    • @ Subhashri.
      1. Every tamil child is not able to pay the fees of MATRIC / ORIENTAL /CBSE.
      2. if you are so much concerned in this issue, go to GOVT. School discuss with the childs / teacher of different classes and same way go to other patterns schools (CBSE/MATRIC/ORIENTAL).
      3. if you have money, you acquire some knowledge. if you are not having enough money, our STATE GOVTS. till now said ‘F_ _ _ our letter word’ and go to we will provide you free edu. must edu. etc.,
      4. All of a sudden, for the previous GOVT., knowledge came to adopt EQUAL Education – no child is educated based on their income.

  20. I don’t see any superiority in knowledge from metric schools..They may read more books..but knowledge? after 10+2 system, when entering into college, both students are same in knowledge.. Apart from syllabus, there is another psychological impact is being created in children’s mind while continuing both type of schools. (It may be side effect of the money spent for their education)..If we go to equality in education, it has many steps..1) common syllabus..2) same infrastructure and 3) same quality in teaching..
    We are in first step…
    We need to demand and protest for next 2 also..

    It is already discussed in many forums..
    Why the matic businessmen not ready for the common syllabus? fear of losing business?

    • Needhi, first of all thanks for continuing this discussion ethically, unlike many of your colleagues.

      So, according to you there is no difference in knowledge acquired. And non-SB schools are charging very high fees for same type of knowledge offered by SB schools. Correct? Then why you are bothered about those ‘business’ schools? Those stupids never offer required knowledge to build ‘quality’ citizen. There are bunch of stupids who does not they are wasting their hard earned money by paying many thousands for ‘ruthless’ education system. Let them go there. Why do we need to worry? Let the poor people continue in SB schools – and if Govt. can open more such shools, and improve quality further, obviously these ‘high-end’ schools will vanish.

      Did u saw the latest news – who are all added in the ‘team’ to analyze this ‘samacheer’ syllabus – a big comedy !! –

      padikira pillai enga erunthalum padikum. correcta?moreover, what we need to teach our next generation is – SELF DISCIPLINE – this is the only area we are lacking compared to US or EU. And this has to be taught by parents more rather than teachers. If we didnt cultive that habit in our children, there is no use in studing whicever by thestandard of education.

      • சுபசிரி, நீங்க நினைக்கிற மாதிரி விசயம் அவ்வளவு சுலபமானது இல்லை.. உ.த.தா. கொள்கைக்கு இந்தியப் பொருளாதாரம் மாற்றப்பட்ட பின்னர் கல்வி வணிகப்பொருளாகிவிட்டது. இது இளஞ்சிரார்களை பெருமளவில் பாதிக்கிறது. அருகாமைப்பள்ளி எனும் முறை குலைந்து காசுக்கேத்த கல்வி என மாறும்போது அது உருவாக்க இருக்கும் சமூகக் கோபமெல்லாம் யோசித்தீர்களா? என் மகன் படிக்கும் அந்த தமிழ்வழிப் பள்ளிக்கு வந்து சேருபவர்கள் எல்லாம் ஆண்டுக்கட்டணம் 400 ரூ கட்டக்கூட இயலாத அடித்தட்டு மாணவர்கள்தான். மத்தியானம் பள்ளிக்கு வெளியே விற்கும் மாங்காய் கூட வாங்கித்தின்ன வழி இல்லாதவர்கள்..இவர்கள் மட்டும்தான் இந்தப்பள்ளிக்கு இப்போது வருகிறார்கள். அதே நேரத்தில் சமூகத்தில் ஏழைகள் இருக்கிறார்கள் என்பதைக்கூட அறியமுடியாதபடி ரூ 45 ஆயிரம் ஆண்டுக்கு வசூலிக்கும் தி ஸ்கூல், பாலவித்யா மந்திர், பாலபவனில் ஒரே மாதிரியான பணக்காரக் குழந்தைகள் பயிற்றுவிக்கப்படுகின்றனர். இது எம்மாதிரியான சமூகப் பொறுக்கித்தனத்தை உருவாக்கும் தெரியுமா? ஐரோப்பாவிலோ அமெரிக்காவிலோ கூட இந்த அநீதி இல்லை..ஏன்? 20 ஆண்டுகளுக்கு முன் நான் படித்த பள்ளியில் சமூகத்தின் பல அடுக்கு மாணவர்களும் ஒரே யூனிபார்மில் ஒரே பள்ளியில் படித்தோம்..எல்லா விசயங்களும் புரிந்தன.. மேட்டுக்குடி மாணவர்களுக்கும் ஏழைமக்களைப்பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது..குறைந்தபட்சம் அவர்களுக்கு உதவவேண்டும் என்ற சிந்தனையாவது வளர்ந்தது? காசுக்கேத்த பள்ளி..வந்த பிறகு? இது உருவாக்கும் மனநோய்கள் இனி ஒவ்வொன்றாக குழந்தைகளைப் பாதிக்கும்..

        +2 பாடத்தை எந்தப்பள்ளியில் படித்தாலும் படிக்கிற பிள்ளை படிக்கும்தான்..ஆனால் 2 லச்ச ரூபாய் கொடுத்து நாமக்கல் கறிக்கோழிகளாக படிக்க வைக்கப்படும் ரெசிடென்சியல் பள்ளி மாணவிகளோடு சென்னை கார்ப்பரேசன் பள்ளி மாணவிகள் போட்டி இட்டால் 195 மார்க் எடுத்தாலும் தாலியை அடகுவைத்து ஜேப்பியாரிடம் ஜெகத்ரச்சகனிடம் கொட்டி அளத்தான் முடியும்..அண்ணா பல்கலையையோ எம் எம் சியையோ நாமக்கல் கோழிக்கறிகள் லகுவாய்க் கொத்திக்கொண்டு போகின்றன…இது அநியாயம் இல்லையா? சமூகநீதி மற்றி மயிர்பிளக்கப் பேசும் திர்ராவிட இயக்கக் கொழுந்துகள் கூட தன் பிள்ளைகளை இந்தக்கறிக்கடைகளில்தான் மார்க் எடுக்க 2 லச்சம் கொட்டுகின்றனர்.

        கல்வி என்பது அனைவருக்குமான உரிமை..அது ஒரே மாதிரி வழங்கப்பட வேண்டும்..கண்டுக்காமல் போ என்பது பச்சை சுயநலம்

        • Neengale solringa -“ஏன்? 20 ஆண்டுகளுக்கு முன் நான் படித்த பள்ளியில் சமூகத்தின் பல அடுக்கு மாணவர்களும் ஒரே யூனிபார்மில் ஒரே பள்ளியில் படித்தோம்..எல்லா விசயங்களும் புரிந்தன” – Even i studied 20 years back in similar school (Municipal school); why this is not the case now in those schools? all due to corrupted politicians. if we fight against them, and bring back those standards of 20 yrs back, obvioulsy these JPar, ஜெகத்ரச்சக kumbal ellam kanama poidum. Ellaya? We all know all these ‘business’ schools are run by political folks(indirectly). So how do u think they are going to change? as long as people are there to ‘feed’ them they will run their business. My question is why we are bothering about them? If we send our children to State board schools, and push the teachers to improve on their ‘quality’ of teaching (you know why std. of teachers is reducing now-a-days compared to 25 yrs back !!), no one can stop our ‘brilliant’ childrens to grow up in ladder.

          In all Govt. eng, medical colleges, we have ‘reservation’ system in place. and hundreds of SC/ST folks are getting their seats yearly. Is it not? Is there any partiallity there based on metric or SB? Its only minimum cut off mark.

          Entha IIT/IIM la ellam enaku theirnju quota system ethu varaikum ella.Athuvum sikiram varalam, but i dont agree personally !! Beyond a stage only ‘marks’ should speak (as we know there is no difference in quality of education in SB or metric).

          Finally, we have so many other important problems to fight for; We need not fight for this ‘useless mechallay’ education system whether its in metric or SB form. Padikira pillai enga erunthalum padikum.

          • Forgot to tell you one more thing – why you folks are still praying towards useless BE !! – can u give me a statistics how much % of people going to job in eng. in which discipline they studies(civil, mech,etc). It will be very minimal. all of them now in IT field !! – if this field crash, they will all join the ‘pool’ of 2011/12 passout students to increase competiion. We all know there is not ‘huge’ scope for eng. in India and already we have ‘few million’ of engineers without job or in IT. Then why they hell we are throwing our hard earn money to JPar or Jagatratsagan?

            We accept or it not, communication in English is the only key element we need in our children to work in pvt. corporate world – either banking, insurance, retail or any other segment. Ofcourse with same base degree. Did u ever saw any of this sector asking BE as qualification -:)

            pana kolupu eduthu, padikka vakaravan, poitu poran sir. avana vidunga.

            • “பண கொழுப்பு எடுத்து, படிக்க வக்கிரவன், போய்ட்டு போறான் சார். அவன விடுங்க”.
              எப்படி விடுரது? ஏன் விடனும்? இவங்கள மாத்தறது எப்படி?
              இத்தனை கேள்விக்கும் விடை. தெருவில் இற்ங்கி போராடனும். இத்ற்கு தமிழ் சமூகம் தயாராகாதவரை பேசலாம்..பேசலாம்…பேசிகிட்டே இருக்கலாம்.

            • //pana kolupu eduthu, padikka vakaravan, poitu poran sir. avana vidunga.
              //
              இது சரியான அணுகுமுறை இல்லை. அக்கம் பக்கத்தில் வளர்கின்ற சக சிறுவர்கள் வெவ்வேறு வகையான பள்ளிகளில் பயில்வதைக் காணும் ஏழைச்சிறுவர்கள் கண்ணில் படும் பளபளக்கும் சீருடை, ஷூ முதல், அப்பணக்காரப் பள்ளிகள் அனுப்பும் டாட்டா சூமோ போன்ற வசதிகளைக் காணும் சிறுவர்களின் மனப் பதிவுகளை ஒருகணம் யோசித்துப் பாருங்க..அதே போல சமூகத்தின் கிரீமி லேயரில் உயர் அடுக்கில் திரளும் கொத்துக்கணக்கணக்கான சிறுவர்கள் மட்டுமே பயிலும் பி எஸ் பி பி, தி ஸ்கூல் போன்றவற்றை எண்ணிப் பார்க்க..இவர்களுக்கு தன் வயதை ஒத்த சிறுவர்கள் 3 வேளை உணவுக்குக் கஷ்டப்படுவது தெரியவே போவதில்லை..அதே போல நாமக்கல் கோழிப்பண்ணை பள்ளிகளில் 2 லட்சம் கொடுத்துப் படித்து விட்டு எம் எம் சி போன்ற அரசுக் கல்லூரிகளில் குறுக்கு வழிகளில் சேர்ந்து சமூகத்துக்கு மருத்துவம் பார்க்க வருபவர்களின் சமூகக் கண்ணோட்டம் எவ்வாறு இருக்கும் என்பதையும் எண்ணிப் பார்க்க..இது தொடர்ந்து கொண்டிருந்தால் ஏழை நடுத்தர மக்களின் எதிரிகள் கையில்தான் அனைத்தும் போய்ச் சேர்ந்து கொண்டிருக்கும்..அடுத்த தலைமுறை என்ன..அதன் தாக்கம் இப்போதே தெரிகின்றது… எம் எம் சி மாணவர்கள் பலருடன் பேசி இருக்கிறேன்..ஒருவருக்கும் ஏழைமக்கள் மீதான கருணை கடுகளவும் கிடையாது..கிட்டத்தட்ட 90 சதவீதத்துக்கும் மேல் உயர் அடுக்கைச் சேர்ந்தவர்கள்தான்.. இவ்வாண்டு மெரிட் லிஸ்ட் பார்த்தாலும் அதே ரெசிடென்சியல் பள்ளிகள்தான் அரசுக்கல்லூரி இடங்களைக் கொத்திச் சென்றிருக்கின்றன..

              எனவே பணத்திமிர் எடுத்தவன் என்னமும் செய்துகிட்டுக் கிடக்கட்டும் எனக் காணாதிருப்பது நம்மை ஏய்த்துக் கொள்வதாகும்…கல்வி..அனைவருக்கும் சமமாகக் கிடைக்கப் போராடாமல் சும்மா இருக்க முடியாது..வீதியில் இறங்கிப் போராடத்தான் வேண்டும்

    • தம்ப்ரி சுண்டல் விப்பது தப்பில்லை, கூட்டம் இருக்கும் இடத்தில்தான் விக்கும் ஆனா அதை சுண்டல்னு சொல்லி விக்கனும், ப்லாப்பழம்னு சொல்லி விக்கப்பிடாது..

      அந்த சுட்டிக்கும் சமச்சீர் கல்விக்கும் மயிறளவுக்காவது சம்பந்தம் இருக்கா? அதுல இருப்பது சுத்த அரசியல் புரிதலற்ற பிதற்றல், அந்த ‘இயக்க’ நபருக்கு தேசிய முதலாளின்னாலும் என்னான்னு தெரியல, அதை பற்றிய மார்க்சிய கொள்கையும் புரியல. சொந்த மூளை இல்லாம பிட்டசிச்சே அரசியல் பேசும் தற்போது களப்பணிகளிலிருந்து ஓய்வு பெற்று ஆய் போய்கொண்டிருக்கும் திருப்பூர் மென்டலுக்கு வேண்டுமானால் இது பெரிய் ஆய்வாக தெரியலாம், மத்தவங்களையும் அந்த மாதரியே நினைச்சா தகுமா… சுண்டல் விக்கிறத நிறுத்திட்டு சந்தேகம் எதனா இருந்தா நேர்மையா கேட்டுட்டு பதில் வாங்கிட்டு போங்க

      • மதன்

        கம்யூனிஸ்டுகள் என்றால் நாகரிகம் இருக்க வேண்டும் தோழரே

        • நாகரிகமா, அது என்ன மதன், சமச்சீர் கல்விக்கு அரவே தொடர்பில்லாத ஒன்றை சமச்சீர் கல்வியை பற்றிய புதிய கோணம் பொய் சொல்லி லிங்கு கொடுத்தீங்களே அப்ப எங்க போச்சு உங்க நாகரிகம்?

        • வினவிடம் மரியாதையை எதிர்பார்க்கிறீர்களே நீங்க புதிசோ.

      • அது சரி ஊசியாரே, தனியார் பள்ளி-கல்லூரி முதலாளிகள் தேசிய முதலாளிகளா? தரகு முதலாளிகளா? நீங்க என்ன சொல்றீங்க?

        • வானம் பாடி கல்வி என்பது சேவையா கடைச்சரக்கா. கல்வியை கடைச்சரக்கு என்று முடிவு செய்தால் தான் அவ்னை முத்லாளி என்று ஏற்றுக்கொள்ள வேஎண்டி வரும். நூதன முறையில் மக்களை கொள்ளை அடித்து திருடும் திருடன் முத்லாளி ஆகமாட்ட்டான்….தேசிய முத்லாளிகள் என்றால் முதலில் என்ன்வென்று தெரிந்துக்கொள்ளுங்கள்? அதன் பின் விவாதியுங்கள்.. அரை குறையாக எதையாவது வாசித்துவிட்டு நடுவில் நடுவில் தேசியம், தரகு என்று போட்டுவிட்டு மார்க்ஸிய ஆய்வாளர் ரேஞ்சுக்கு பிகு செய்வது —— என்றால் அதற்கு வால் பிடிப்பது என்ன என்பதை மறக்காமல் நீங்களே எனக்கு சொல்லுங்கள்..

          • அக்னிப் பார்வை அவர்களே, எனக்கு உண்மையிலேயே தேசிய முதலாளிகள் என்றால் என்னவென்று சொல்லிக் கொடுங்கள். படிக்கக் கிடைப்பதெல்லாம் நீங்கல் சொல்வதுபோல் அரைகுறையாகத்தான் கிடைக்கிறது. நீங்களாவது தேசிய முதலாளிகள் என்றால் என்னவென்று மார்க்சிய அடிப்படையில் முழுமையாக எனக்குச் சொல்லுங்களேன்.
            அதோடு கல்வி நம் தமிழ்நாட்டில் கடைச்சரக்காக ஆகவில்லையா? “கல்வியில் தனியார்மயம்”, “கல்வி வியாபாரமாகிவிட்டது”, “தனியார் பள்ளிகள் கொள்ளை லாபம் அடிக்கிறார்கள்” என்றெல்லாம் வினவு, ப்திய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் இதழ்களிலும் ம.க.இக. மற்றும் ம.உ.பா.க பிரசுரங்களிலும் படித்துள்ளேனே. இந்த உண்மைகளிலிருந்து கல்வியை கடைச்சரக்கு என்று முடிவு செய்ய முடியாதா? பெற்றோர்களிடம் கூடுதல் கட்டணம் வாங்கி ஆசிரியர்க்ளுக்கும் ஊழியர்களுக்கும் அடிமட்டமான சம்பளம் கொடுத்துச் சுரண்டி லாபம் ஈட்டும் தனியார் பள்ளி-கல்லூரி முதலாளிகளும் திருடிய பொருளை அதன் உண்மை மதிப்பிலிருந்து மிகக் குறைந்த விலைக்கு விற்று தானே செலவு செய்து கொள்ளும் திருடனும் எப்படி ஒன்றாகும். பிறரது உழைப்பைச் சுரண்டி உபரி லாபம் ஈட்டினாலே அவரை முதலாளியாகவும் அவரால் சுரண்டப் படுபவர்களை தொழிலாளியாகவும் ஏன் பார்க்க முடியாது? தனியார் பள்ளி உரிமையாளர்கள் முதலாளி வர்க்கம் இல்லையென்றால் அவர்கள் வேறெந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்? எனக்கு ஒன்றும் புரியவில்லை. கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுன்ஹ்களேன் அக்னிப் பார்வை.

            • பெட்டி கடை வைத்திருக்கும் குப்புசாமியும் மொதலாளி
              மளிகை கடை வைத்திருக்கும் அண்ணாச்சியும் மொதலாளி
              இந்தியாவில் சூப்பர் மார்க்கெட் வைத்திருக்கும் அம்பானியும் மொதலாளி
              உலகலவில் சூப்பர் மார்க்கெட் வைத்திருக்கும் வால்மார்ட்டும் மொதலாளி

              இதுல எந்த மொதலாளியை ஆதரிப்பது?

              என்னது மொதலாளியை ஆதரிப்பதா?
              அயோயோ கம்மீனிசம்னா மொதலாளியை ஆதரிக்க கூடாதே?

            • வானம்பாடி, கல்வி கடைசர்க்காகிவிட்டது என்பதை சொல்லும் அதே நேரத்தில், கல்வி முதலாளிகளை விரட்டிவிட்டு கல்வியை அரசு இலவசமாக தரவேண்டும் என்றுதான் சொல்கிறோம். அதாவது கல்வி விற்பனைக்கு அல்ல, இலவச கல்வியை அளிப்பது அரசின் பொறுப்பு, இலவச கல்வி மக்களின் உரிமை. இதுதானே நிலைப்பாடு

              இதுல தேசிய-சர்வதேசிய முதலாளிகளை போட்டு ஏன் குழப்பிக்கிறீங்க?

              • தேசிய முதலாளினா வெள்ளையன் , சரவண பவன், சரவணா ஸ்டோர் முதலாளி எல்லாம் தான்

              • //சந்தேகம் எதனா இருந்தா நேர்மையா கேட்டுட்டு பதில் வாங்கிட்டு போங்க//ன்னு மதனுக்குச் சொன்ன ஊசியாரே நான் கேட்ட கேள்வி-தனியார் பள்ளி-கல்லூரி முதலாளிகள் தேசிய முதலாளிகளா? தரகு முதலாளிகளா? நீங்க என்ன சொல்றீங்க? ஆனா அதற்கு நீங்க இன்னும் பதில் சொல்லலையே. //இதுல தேசிய-சர்வதேசிய முதலாளிகளை போட்டு ஏன் குழப்பிக்கிறீங்க?// என்று சொல்வது எப்டி என் கேள்விக்குப் பதிலாகும்?

  21. தமிழக அரசு நியமித்துள்ள இரு உறுப்பினர்கள் மேட்டுக்குடி கல்விவியாபாரிகள்.மிகவும் வேதனையாக இருக்கிறது.வியாபாரிகள் கல்வியாளர்கள் ஆனால் சாத்தான் வேதம் ஓதுவதில் தவறில்லைதான்….
    சமசீர்கல்வி முயற்சி இன்று அம்மாவால் கொலை செய்யப்பட்டது!

  22. ஒய் . ஜி . பார்த்தசாரதியும் , சி. ஜெயதேவும் , என்ன கல்வியாளர்களா? அவர்கள் கல்வி வியாபாரிகள்.

  23. கடந்த நூறு ஆண்டு காலமாக நாம் பார்பனர்களை குறை கூறிக்கொண்டு இருக்கிறோம். (தென் இந்திய நல உரிமை சங்கம், சுயமரியாதை இயக்கம், நீதி கட்சி, திராவிட கழகம், பின்னர் எண்ணற்ற திராவிட அரசியல் கட்சிகள் எல்லாம் திட்டி ஆயிற்று)

    என்னை பொறுத்தவரை சுமார் 20 வருடங்களுக்கு முன்னால் மண்டல் கமிஷன் அமல்படுத்திய பிறகு நாம் அவர்களைப்பற்றி பேசுவது தேவை இல்லை என்றே தோன்றுகிறது. அல்லது நாம் இன்னும் பேசிக்கொண்டு இருந்தால் நமக்கு அறிவு, அரசியல், ஆட்சி அதிகார பலம் இருந்தும் நாம் இன்னமும் வளரவில்லை என்றே தெரிகிறது. அல்லது சரியான அறிவு கிட்டவில்லை என்றே தோன்றுகிறது.

    தமிழகத்தில் 5 முறை, சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக யார் ஆண்டார்கள் என்பது நமக்கு தெரியும்.

    கிராமப்புற அரசு பள்ளிக்கு ஏன் ஆசிரியர்கள் ஒழுங்காக வருவதில்லை என்று நாம் கேட்க முடியவில்லை. பள்ளிகளுக்கு கட்டடம்,
    நாற்காலி, கரும்பலகை சரியாக இல்லை என்று நாம் போராட முடியவில்லை. மாணவர்களுக்கு லேப்டாப் தேவை இல்லை,

    முதலில் அடிபட்டை வசதியும், கழிப்பறை வசதியும் தான் தேவை என்று அதிகாரவர்க்கத்த ை கேட்டு நம்மால் போராட முடியவில்லை. நகர் புறங்களில் மக்கள் தொகைக்கு ஏற்ப தேவையான அளவு அரசு பள்ளிகள் வேண்டும் என்று நம்மால்

    அதிகாரவர்க்கத்த ை கேட்டு போராட முடியவில்லை. வீரம் விளைந்த சேர, சோழ, பாண்டிய, நாயக்க, பல்லவர்கள் என்று பறை சாற்றி கொள்பவர்கள் இதை பற்றி எல்லாம் பேசுவது இல்லை. ஆனால் பார்பனர்களை மட்டும் குட்ட்றஞ்சாட்டி பேசுகிறோம்.

    ஆனால் பார்பனர்களே, இரண்டு கேள்விகள் ஒன்று : தமிழில் “பிராமண பாஷை” எங்கு இருந்து வந்தது ?
    இரண்டு: ஆலயத்திற்கு உள்ளே மக்கள் செல்லும் பொழுது, பொது மக்கள் நிற்கும் இடம் தாண்டி கருவரைக்கு பக்கத்துக்கு அறை வரை சென்று கடவுள் தரிசனம் செய்கிறீர்களே ? உங்களுக்கு வெட்கமாக இல்லையா ?

    — கணியன் —

    • கணியன், நீங்கள் சொல்வது எதையும் செய்ய முடியாததால்தான் பிராமணர்களை எதிர்க்கிறொம். ஊருக்கு இளைத்தவன், பிள்ளையார் கோயில் ஆண்டி என்பது போல்தான்.

    • Kanian – i totally agree with all your points. Let vinavu brothers answer it.

      But i don’t understand your two questions on brahmins – these two seems to be irrelevant to this context.
      1) what is our problem if they speak some different langage -:)
      2) only the ‘gurukal’ caste people can enter ‘கருவரை’ – and now-a-days any one who pays money (irrespective of caste) can enter the ‘பக்கத்துக்கு அறை’ in any temple. why ur asking particularly brahmins? any specific reason? the ‘gurukals’ are entering the ‘கருவரை’ because thats their JOB and they need to tell all those ‘manthras’ inside that room which will generate ‘electro magnetic waves’ if they pronunce as its being taught to them. many people may laugh here, but its true. For eg. Go to any sivan temple during ‘pradosam’ and be there when the ‘pooja’ is performed or when ‘deeparathana’ is performed – at that the decible of sound from manthras, bell will ‘penerate’ your body. You can get a feel of it – its science. ‘aaanmigavathigal’ – ehtai avanga laungagela ‘paravasam’ nu sollranga.

      • //which will generate ‘electro magnetic waves’ if they pronunce//
        நீங்க சொல்றது இவங்களுக்கெல்லாம் சிரிப்பா இருக்கும்..
        அறிவியல்னா இவங்களுக்கு ஐரோப்பாலதான் இருந்து வரணும்னு நினைக்கிறவங்க.
        குண்டலினி சக்தியை நம் மக்கள் அடக்கி அடக்கி அந்தரத்திலே எழும்பிப் பறக்கிறதைக் கூட இவங்க நம்பமாட்டாங்க மேடம்..
        முன்னோர்கள் ஆகாசமார்க்கமாகப் போற தொழில்நுட்பம் வரை வச்சிருந்தாங்க…மேக்னடிக் வேவ்லாம் அதுல சும்மா ஒரு சின்னபங்குதான்..
        சிபிஎஸ்சில படிச்சா மலச்சிக்கல் கூட வராது மேடம்..
        இந்தமாதிரி ‘அறிவியல்’ விசயங்களைப் போயும் போயும் ‘வினவு’கிட்டயா சொல்லணும்..?

        • அப்ப நிசமாவே எருமமாடு ஏரோப்பிளேன் ஓட்டிச்சா? பிளடி கண்ட்ரீ புரூட் நாஸ்தீகர்கள் எழுதிய ஸ்டேட் போர்ட் சிலபஸ்ல இதெல்லாம் வரவேயில்லை. ஸ்ரீமதி ஒய் ஜி பார்த்தசாரதி மேடம் மனது வைத்து இதையெல்லாம் பிசிக்ஸ் பாடத்துல 5வகுப்பிலேருந்து கொண்டு வரனும்

        • “electro magnetic waves” நன்னா ஷொன்ளேன் போங்கோ, சாதாரண கருவறைக்கே இப்படின்னா காஞ்சி மடம் எப்படி இருக்கும்? அங்கேர்ந்து வர வேவ்ஸ்ஸோட வைப்ரேஷன் தாங்காமத்தானே பெரியவால்லாம் ‘தண்டத்தை’ தூக்கிண்டு திரிஞ்சா?!

      • //the ‘gurukals’ are entering the ‘கருவரை’ because thats their JOB and they need to tell all those ‘manthras’ inside //
        subhasri,
        why ‘gurukal’ caste only can enter in karuvarai.. if they are in karuvarai for telling those ;manthras’, any people, who knows all those ‘manthras’ should be allowed to enter in to karuvarai.. because, that ‘electro magnetic waves’ will be created by any other man who tells all those ‘manthras’.. its not that only ‘gurukal’ caste can only create that ‘electromagnetic waves’.. then why should they only be there to tell those manthras?

        • Any caste people can enter ‘karuvari’ – athuthan karunanithi sattam kondu vanthutare…let all people study those ‘manthras’ and then enter ‘karuvarai’ and perfrm the same pooja’s…i am not against it.

      • சுபஸ்ரீ அவர்களே எத்தனை பேர் அர்த்தம் புரிந்து மந்திரம் சொல்கிறார்கள்? பரிதிமாற்கலைஞரின் திருமண சம்பவம் தெரிந்திருக்கும் என நம்புகிறேன். மற்றபடி மந்திர சொற்களுக்கு ‘சக்தி’ விஞ்ஞானம் என்பதெல்லாம் உடான்ஸ் அரதப்பழசு. எவ்வளவு காலத்துக்கு இப்படி ஜல்லி அடிப்பீர்கள்? மாறுங்கள்.

  24. What is touted as “Uniform system of education” is just being implemented as “Uniform syllabus”. What is needed is the equal exposure to all the people, be it a student of a corporation school or a Convent. Only when the government can ensure this, it can be called “Uniform system of education”. Else, we would end up with the same syllabus and different levels of exposure.

    • எனக்கு நன்கு தெரியும் நண்பரே
      நீங்கள் நல்லவர் மற்றும் உங்களின் கரிசனம்
      சமூகத்திற்காக நீங்கள் உங்கள் மூளையைக் கசக்கி
      வருந்துவதும் தெரியும் நண்பரே..
      எங்களுக்கெல்லாம் இட ஒதுக்கீடு
      கேட்டபோது சமூகம் தனது திறமைசால்
      மனிதரை இழப்பதற்காக வருந்தினீர்..
      இட ஒதுக்கீட்டைப் பற்றிப் பேசியபோது நீங்கள்
      ஒருபோதும் எதிர்த்துப் பேசினீர் இல்லை..
      ஆனால் அப்போதுதான் நண்பரே
      ஒடுக்குவோரில் ஏழைகள் பற்றிப் பேசினீர்..
      அப்போது சோசலிசத்தினைப் பேசி இட ஒதுக்கீட்டின்
      காயை நசுக்கினீர் நண்பரே..

      ஐ ஐ டியில் பிற்பட்டோர் இடஒதுக்கீடு வரும்போது
      மறக்காமல் சொன்னீர் நண்பரே..
      கிராமப் பள்ளிகளில் எல்லாம் கக்கூஸ் கட்ட-
      இட ஒதுக்கீட்டுக்கு மாற்றாகத்தான்
      என்பதை மறக்கவில்லை நண்பரே..
      இப்போதும் சமச்சீர் கல்விக்கு நீர்
      கொடுக்கும் விளக்கம் எல்லாம் நன்றாகவே இருக்கிறது
      நண்பரே…ஆனாலும்
      இதில் எல்லாம் ஏமாந்து போக பழைய
      ஏகலைவனும் நந்தனும் இல்லையே
      நண்பரே..என்ன செய்யலாம்

    • அமைதிப் பெருங்கடல் ஜுன் 22, 2011 7:35 மணி

      ” சீரானகல்வி அமைப்பு” என நம்பப்படுவது, “சீரான பாடத்திட்டங்கள்”என

      செயல்படுத்தப்பட்டுவருகிறது.கார்ப்பரேசன் பள்ளி அல்லது கான்வென்ட் பள்ளி

      மாணவர்,யாராயிருந்தாலும் அனைவருக்கும் சம வாய்ப்புதான் தேவை.அரசாங்கம் இதை

      உறுதியாகநடைமுறைப்படுத்தினால் மட்டுமே சீரான கல்வி அமைப்பு எனக் கூறமுடியும்.

      இல்லையெனில், அதே பாடத்திட்டம் ஏற்றத்தாழ்வான வாய்ப்புக்களை மட்டுமே வழங்க

      முடியும்.

  25. ஐயா பெரியவர்களே, முதியவர்களே, அறிவாளிகளே, எல்லோருக்கும் என் முதற்கண் வணக்கம்.
    சபாஷ், நான் சின்னப்பையன். உங்களுடன் போட்டி போடும் அளவிற்கு எனக்கு அறிவு இருக்கிறதா என்பது சந்தேகம் தான்.

    நீங்கள் ‘சமச்சீர் கல்வி’ வேண்டுமா, வேண்டாமா என்று நாடளாவில் நாட்கணக்கில் நீதிமன்றம் வரை சென்று வந்ததைப் பார்க்கும்போது, தமிழ்நாட்டில் ‘சமச்சீர்’ என்ற சொல்லுக்கு ஒருவனுக்கும் அர்த்தம் தெரியவில்லை என்று கேவலப்படுத்தத்தான் தோன்றுகிறது. மன்னிக்கவும். போட்டி என்று ஆன பின், வயது வித்தியாசமில்லாமல் தான் பேசவேண்டிருக்கிறது.

    நான் இங்கு சொல்ல போகும் கருத்து தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ‘அறிவாளிகள்’ வயிற்றிலும் புளியைக் கரைக்கலாம். ‘சமசீர்கல்விக்கும்’ கருணாநிதியின் ‘சமச்சீர் கல்விக்கும்’ ஏகப்பட்ட வேறுபாடு இருக்கிறது. ஆங்கிலத்தில் பல காலங்களுக்கு நான் எழுதியதை திருப்பி எழுதும் நிலைக்கு உங்களின் அறிவிலித்தனமான பேச்சுக்கள் தள்ளிவிட்டது.
    ‘சமச்சீர் கல்வி’ என்பதின் உண்மையான அர்த்தம் தெரிய வேண்டுவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய தளங்களில் காணலாம்.
    1. http://www.kelvi.tk
    2. http://arivuu.files.wordpress.com/2011/08/sivavidya.pdf
    மேலுள்ளவைகளைப் படித்து விட்டு வரும். சமச்சீர் கல்வி பற்றி எந்த அளவிற்கு வேண்டுமானாலும் விவாதிக்க தயார்,
    முதலில் ‘சமச்சீர் கல்வி’ என்றால் என்ன என்பதை அறியும்.
    ———————————————————

    அறிவை வ‌ள‌ர்த்துக் கொள். இது ஒவ்வொருவ‌ரும் ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு கூறும் அறிவுரை. உங்க‌ள் குழந்தைக‌ளை எங்க‌ள் ப‌ள்ளிக்கு, க‌ல்லூரிக்கு அனுப்புங்க‌ள். நாங்க‌ள் அவ‌ர்க‌ளின் அறிவை வ‌ள‌ர்த்து விடுகிறோம். இது திருட்டுக் க‌ய‌வாளி ஆசிரிய‌ கொள்ளைக்கூட்ட‌ங்க‌ளின் பொய்யுரை. அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள‌ ஒருவ‌ன் ப‌ல‌ ஆண்டுக‌ள் ப‌ள்ளி சென்று, புத்த‌க‌ங்க‌ள் ப‌ல ப‌டித்து, பாட‌ங்க‌ள் ப‌ல‌ ப‌யின்று, தேர்வுக‌ள் ப‌ல எழுதி, ப‌ட்ட‌ங்க‌ள் ப‌ல பெற‌வேண்டுமா? தேவையில்லை. உன்னிட‌ம் சிந்திக்கும் திற‌னிருக்கிறதா? அது போதும். நான் காட்டும் வ‌ழியில் சிந்தித்துப் பார். வ‌ள‌ரும் உன் அறிவு.

    கேள்வி: ஒன்றைப்ப‌ற்றி என் அறிவை வ‌ள‌ர்த்துக் கொள்வ‌து எப்ப‌டி?

    ப‌தில்: ஒன்றைப்ப‌ற்றி அறிய‌ப்ப‌ட‌ வேண்டிய‌வைக‌ளை அறியும்போது அதைப்ப‌ற்றிய‌ உன் அறிவு வ‌ள‌ரும்.
    ஒன்றைப்ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
    1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
    2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
    3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
    4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
    5. அத‌ன் உருக்க‌ள் எவை?
    6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
    7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?

    .
    .
    .
    விதிப்ப‌டி பொருளா? பொருட்ப‌டி விதியா? எதுவும் விதிப்ப‌டிதான் என்கிறது அறிவிய‌ல். விதிப்ப‌டிதான் விமான‌ங்க‌ள் உருவாக்கப்ப‌டுகின்ற‌ன‌. விதிப்ப‌டிதான் ஏவுக‌ணைக‌ளும், ராக்கெட்டுக‌ளும் உருவாக்க‌ப்ப‌டுகின்ற‌ன. விதிப்ப‌டிதான் ர‌யில் என்ஜினும், உன் இத‌ய‌மும் இய‌ங்குகிற‌து. நீ உண்ணுவ‌து செரிப்ப‌தும் விதிப்ப‌டிதான். விதிப்படிதான் நீயும், நீ அறிவதும். பூமி சூரிய‌னைச் சுற்றுவ‌தும் விதிப்ப‌டிதான். கணினிகள் இயங்குவதும் விதிப்படிதான். எதுவும் விதிப்ப‌டிதான் இய‌ங்குகிற‌து. விதிப்ப‌டிதான் எதுவும் தோன்றி ம‌றைகிற‌து. விதிப்ப‌டிதான் உன் பிற‌ப்பும், இற‌ப்பும். விதிப்ப‌டிதான் திட்ட‌ங்க‌ள் உருவாக்க‌ப்படுகின்ற‌ன‌. விதிய‌றியாத‌வ‌ன் திட்ட‌மிட்டு ஏவுக‌ணைக‌ளையும், விமானங்க‌ளையும், ராக்கெட்டுக‌ளையும், ர‌யில் என்ஜின்க‌ளையும், க‌ணிணிக‌ளையும் உருவாக்குவ‌தில்லை.

    பொருளுக்குப் பொருள் மாறுபடும் எதுவும் விதியாகாது. விதி நேரத்திற்கு நேரம் மாறுபடக்கூடிதல்ல. இடத்திற்கு இடம் மாறுபடுவதும் விதியல்ல. விதியில் புதிய விதி என்றும், பழைய விதி என்றும் பாகுபாடில்லை. விதியில் புதுமையைப் புகுத்த முடியாது. புதியன புகுதலும் பழையன கழிதலும் என்பது பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும். விதிக்குப் பொருந்தாது. தோன்றி மறைவது பொருள். விதி என்பது அப்படி தோன்றி மறையும் பொருளல்ல. விதியில், உன் விதி என் விதி என்ற பாகுபாடு கிடையாது. விதிப்படிதான் நீயும் நானும் தோன்றி மறைகிறோம். விதிப்படி தான் பொருட்கள் அசைகின்றன, நகர்கின்றன என்கிறது இயற்பியல்.

    நியூட்டன் விதி பொருளுக்குப் பொருள் மாறக்கூடியதல்ல. கூலூம் விதி பொருளுக்குப் பொருள் மாறக்கூடியதல்ல. வெப்பவியலின் விதிகள் பொருளுக்குப் பொருள் மாறக்கூடியதல்ல. விதி பற்றி அறியாத மூதேவிகள் தான் தங்களால் அனைத்தையும் மாற்ற முடியும் என்று கூவுகின்ற‌ன‌. பல மேடைகளில் நமது மேதகு தமிழக முட்டாள் துணைவேந்தர்கள் கூறும் அறிவுரைகளில் ஒன்று: நம்மால் எதையும் மாற்ற முடியும். அரசியல்வாதிகள் தான் ஏதோ அறியாமல் உளறுகிறார்கள் என்றால், இந்த மூதேவிகளுக்கு அறிவிருக்கிறதா என்ற மிகப்பெரிய சந்தேகம் ஏற்படுகிறது. பல்கலைக்கழக துணைவேந்தர்களின் அறிவு இந்த நிலை என்றால், இந்த முட்டாள்களுக்கு கீழுள்ள ஆசிரியர்கள், பேராசிரியர்களின் மற்றும் அவர்களிடம் பயிலும் மாணவர்களின் அறிவுத்திறன் எப்படி இருக்கும் என்பதைச் சொல்லவே தேவையில்லை. இத்தகைய முட்டாள் மூதேவிகள் எப்படி தமிழகப் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களாக நியமனம் பெறுகிறார்கள் என்பது உலகறிந்த விஷயம்.

  26. உங்களுடன் போட்டி போடும் அளவிற்கு எனக்கு அறிவு இருக்கிறதா என்பது சந்தேகம் தான்.
    உங்களுக்கே சந்தேகம் வந்திருச்சா? அப்புறம் எப்படி ,எங்க சந்தேகத்தை தீர்ப்பீங்க ஷண்முகா?

    • @ வலிபோக்கன்:

      உங்கள் சந்தேகதைப் போக்குகிறேனோ இல்லையோ, தமிழத்தில் கல்வித்துறை என்பது இனி வருங்காலங்களில் இருக்காது. http://www.kelvi.tk தளத்தைப் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

  27. என் அனுபவத்தில் உழைப்புதான் அறிவைக் கொடுத்தது.தனியார் மயம்,தாராளமயத்தினால்
    கல்வி காசு உள்ளவனுக்கே! கல்வித்துறை இருக்கும் ஆனால் வசதி படைத்தவர்களுக்கே
    பயன்படும்.உச்ச மன்ற தீர்ப்பினால் சமச்சீர் கல்வி புத்து குலுங்கும் என்ற நம்பிக்கையேல்லாம் எனக்கு கிடையாது சண்முகம் சார்

Leave a Reply to புதுநிலா பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க