கண்ணை மறைக்கும் காவிப் புழுதி
சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 4
”பிற்பட்டோர் மற்றும் ஹரிஜனங்கள், பழங்குடியினர் ஆகிய இந்துக்களின் முன்னேற்றத்திற்காக மத்திய, மாநில அரசுகள் சலுகைகளை வழங்கியுள்ளன. அவற்றைப் பிடுங்கி, மதம் மாறிப் போன முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் வழங்குவது முறைகேடும், அநீதியும் ஆகும். இதனால் இந்துக்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமை குறைகிறது. பறி போகிறது. ஆகவே இந்தச் சலுகைகளை இந்துக்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும்.”
– ”மதமாற்றத் தடைச் சட்டம் ஏன்?”
இந்து முன்னணி வெளியீடு, பக்கம் – 45.
இந்துக்களின் இட ஒதுக்கீட்டை முசுலீம்களும் கிறித்தவர்களும் பிடுங்கிக் கொள்வதாகக் கூறும் இந்த அவதூறே உண்மைக்கு மாறான ஒரு மோசடியாகும். இன்று வரையிலும் தாழ்த்தப்பட்ட – பழங்குடி மக்களுக்கான இடஒதுக்கீட்டில் மதம் மாறியவர்களுக்கு இடமில்லை. தாழ்த்தப்பட்ட கிறித்தவ மக்களை, பிற்படுத்தப்பட்டவருக்கான இட ஒதுக்கீட்டில்தான் சேர்த்திருக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட முசுலீம் மக்களுக்கு எதிலும் இடஒதுக்கீடு கிடையாது. ஒரு சில மாநிலங்களில் ஒரு சில முசுலீம் சாதிகளை மட்டும் பிற்படுத்தப்பட்டவர் பட்டியலில் வைத்திருக்கிறார்கள். மொத்தத்தில் மதம் மாறுகின்ற முசுலீம், கிறித்தவ மக்கள், இடஒதுக்கீட்டுச் சலுகையை இழக்கிறார்கள் என்பதே உண்மை.
அடுத்து தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் அனைவருமே வரலாற்று ரீதியாக ‘இந்துக்களாக’ இருந்தது கிடையாது. ‘சதுர்வர்ணம்’ எனும் பார்ப்பன, சத்திரிய, வைசிய, சூத்திர – வர்ண சமூக அமைப்பிலேயே பஞ்சமர்கள் இடம் பெறவில்லை. ஆங்கிலேயர் காலத்தில், அதுவும் முதல் சென்சஸ் கணக்கெடுப்பின் போதுதான் இம்மக்கள் இந்து மத்திற்குள் சேர்க்கப்பட்டனர். மேலும் பார்ப்பன இந்து மதத்தின் சமூகக் கொடுமைகளை எதிர்த்து ஒடுக்கப்பட்ட சாதி மக்களின் எழுச்சியான போராட்டங்களும் வெள்ளையர் காலத்தில்தான் துவங்கின. இடஒதுக்கீடு கோரிக்கை பிறந்து பின்னர் அமலாக்கப்பட்டதின் அடிப்படை இதுதான்.
இத்தகைய இடஒதுக்கீடும் ஒடுக்கப்பட்ட சாதி மக்களின் சமூக விடுதலைக்காகத் தரப்பட்டதல்ல; மண்டல் கமிசன் குறிப்பிடுவதைப் போல உளவியல் ரீதியில் சற்று ஆறுதலைத் தருவதற்குத்தான். எனினும் இடஒதுக்கீடு என்ற சொல்லே சமூக வாழ்க்கையில் இடமில்லாமல் போன உழைக்கும் மக்களின் அவலத்தை அதாவது பார்ப்பன இந்து மதத்தின் கொடுமையைத்தான் குறிக்கின்றது. ஆதலால் இடஒதுக்கீடு பற்றிப் பேசுவதற்குக் கூட இந்து மதவெறியர்களுக்கு அருகதை கிடையாது. சாட்டையில் ரத்தம் தெறிக்க அடிப்பவனே புண்ணுக்கான மருந்தை சிபாரிசு செய்ய முடியாதல்லவா?
ஆங்கிலேயர் வருவதற்கு முன் உழைக்கும் மக்களை இந்து மதத்திற்கு வெளியே வைத்து ஆதிக்கம் செய்தார்கள். ஆங்கிலேயர் வந்தபின் இந்து மதத்திற்குள்ளே அடைத்து ஆதிக்கம் செய்ய விரும்புகிறார்கள் – அதுவும் முசுலீம் எதிர்ப்பு அடையாளத்தோடு. அதனால்தான் இந்து மதத்தை எதிர்த்து ஒடுக்கப்பட்ட சாதியினர் பெற்ற இடஒதுக்கீட்டை முசுலீம் கிறித்தவ மதங்கள் தட்டிச் செல்கின்றன என்று அவதூறு செய்கின்றனர். இன்னொருபுறம் இடஒதுக்கீடே கூடாது என்பதும், இடஒதுக்கீட்டை எதிர்த்து வட இந்திய மேல்சாதியினர் நடத்தும் கலவரங்களை முன்னின்று நடத்துவதும் இவர்கள்தான்.
எனவே தாழ்த்தப்பட்டோரைத் தாழ்த்தியதும், பிற்படுத்தப்பட்டோரை பின்தங்க வைத்ததும் முசுலீம்களோ, கிறித்தவர்களோ அல்ல என்பதற்கு விரிவான அகழ்வாராய்ச்சி தேவையில்லை. அதேபோல மதமாற்றம் என்பது அல்லா – இயேசுவின் மேல் கொண்ட அன்பினால் அல்ல, பார்ப்பனிய சாதிய ஒடுக்குமுறைகளிலிருந்து விடுபடவே நடந்தது என்பதையும் விளக்கத் தேவையில்லை.
அடுத்து மதமாற்றத்தையும், இட ஒதுக்கீட்டையும் இணைத்து இந்துமத வெறியர்கள் கவலைப்படும் மோசடியைப் பார்போம். பணம், பால் பவுடர், வளைகுடா வேலை என்று பொருள் உலக ஆசை காட்டி மதம் மாற்றப்படுவது தடை செய்யப்பட வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ்-இன் நீண்டநாள் கோரிக்கை. ஆனால், இடஒதுக்கீடு என்ற பொருள் உலக ஆசையைக் காட்டி இந்து மதத்தில் இருங்கள், மதம் மாறாதீர்கள் என்று கேட்பது மட்டும் ‘லவுகீக’ விசயமில்லையா? அதிலும் கவனியுங்கள், ”இந்து மதத்தின் சாதி – தீண்டாமைக் கொடுமைகளை ஒழித்து உங்களுக்கு விடுதலை தருகின்றோம். மதம் மாறாதீர்கள்” என்று அவர்கள் கோரவில்லை. இங்கேயே (அடிமையாக) இருங்கள், அப்போதுதான் இடஒதுக்கீடு சலுகைகள் தரமுடியும் என்று மிரட்டுகிறார்கள். இப்படி ஆன்மீகத்தினால் அல்ல பொருளாசையைக் காட்டித்தான், சமாதானத்தினால் அல்ல கிரிமினல் மிரட்டல்கள் மூலமாகத்தான் இந்துமதம் வாழ்கிறது என்பது அதன் யோக்கியதைக்கு ஒரு சான்று.
இருந்த போதிலும் இந்து மதத்திலிருந்து மதம் மாறிவிடுவதால் மட்டும் சாதிய இழிவுகள் போய் விடாது என்பதும் உண்மைதான். பணவசதி இருந்தும் மதம் மாறிய தாழ்த்தப்பட்ட மக்கள் மேல்சாதித் தெருவில் குடியிருக்க முடியாது. அவர்கள் செய்துவரும் அடிமைத் தொழிலும் பெரிதாக மாறிவிடவில்லை. மதம் மாறியதால் கிடைக்க வேண்டிய சமத்துவம் கேவலம் சுடுகாட்டில் கூட கிடைக்கவில்லை. திருச்சி கிறித்தவ இடுகாடு அதற்கோர் உதாரணம். கலப்புத் திருமணம் செய்வதால் கட்டி வைத்து அடிக்கப்படுவதும் நிற்கவில்லை. முசுலீம்கள் வாழும் அரியானாவின் சுதாக்கா கிராமம் அதற்கோர் உதாரணம். சாதிகள் எங்களிடம் இல்லை என்று தம் மதங்களின் புனிதக் கதைகளைப் பேசிவரும் இசுலாமும், கிறித்தவமும் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.
ஆங்கிலேயர்கள் போகும்வரை தாழ்த்தப்பட்ட கிறித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. ஆனால், 1950-இல் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, இந்து மதமல்லாத ஏனைய மதங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது என மாற்றப்பட்டது. அதன்பின் 1956, 1990-ஆம் ஆண்டுகளில் முறையே சீக்கிய, புத்த மதங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு தரவேண்டும் என அதே சட்டம் திருத்தப்பட்டது. காரணம் மதம் மாறுவதினால் அம்மக்களுக்கு சமூக, பொருளாதார முன்னேற்றம் கிடைத்து விடவில்லை என்பதால் இத்திருத்தங்களைக் கொண்டு வந்தார்கள். எனில் இந்த உண்மை தாழ்த்தப்பட்ட கிறித்தவ – இசுலாமிய மக்களுக்கும் பொருந்தும்.
பார்ப்பனியத்தின் ஆன்மாவான சாதி – தீண்டாமையால் நலிவுற்றுத் திணறும் இந்தியச் சமூகத்தில், எந்த மதமும் அடிப்படையான மாற்றத்தைக் கொண்டு வர முடியாது. எனவே, அந்த ‘ஆன்மா’ ஒழிக்கப்படும்வரை தாழ்த்தப்பட்ட – பழங்குடி மக்கள் எந்த மதத்திற்கு மாறினாலும் அவர்களுக்கு இடஒதுக்கீடு – மற்றும் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்கிறோம்.
– தொடரும்
____________________________________________________________
- பாகம் 1 – மதம் மாறினால் தேசிய உணர்வு மாறுமா?
- பாகம் 2 – பணம், வேலை, கல்விக்காக மதம் மாறுவது குற்றமா?
- பாகம் 3 – அம்பேத்கர் மதம் மாறியது ஏன்?
____________________________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- இன்ட்லியில் வினவை தொடர
- கூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க
- உங்கள் கேள்விகள் இங்கே…
வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]
தொடர்புடைய பதிவுகள்
‘தாழ்த்தப்பட்ட முஸ்லிம்’ என்ற வார்த்தை பிரயோகத்தை தவிர்க்கவும். ஏனெனில் இஸ்லாம்
மனிதர்களை ஏற்ற தாழ்வுடன் நடத்த கற்று தரவில்லை.அவ்வாறு நடந்து கொள்பவர்களை இஸ்லாம் வெறுக்கிறது. ‘பிலால்’ என்ற ஒரு கறுப்பின ஒடுக்கப்பட்ட ஒருவருக்கு தான்
தொழுகைக்கு அழைக்கும் மேன்மையான பதவியை வழங்கி கௌரவித்தார்கள். அந்த சமூகத்தினருக்கு சம அந்தஸ்தை வழங்கினார்கள்.இந்த சீர்திருத்தம் கூட RSS
வெறியர்களின் இஸ்லாமிய வெறுப்புக்கு காரணமாக இருக்கலாம்.
நிகழ் உலகில் இஸ்லாத்தை தழுவும் தாழ்த்தப்பட்ட சகோதரர்களும் கண்ணியமாகவே நடத்தப்படுகிறார்கள்.
உண்மை . தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் நிலை மாற்ற இஸ்லாத் மட்டுமே சிறந்த மதம் அங்கு அவர்களுக்கு சாதி சலுகைகள் தேவையில்லை.
சீர்திருத்தத்தை கொண்டு வந்தவர் நபிகள் நாயகம் (ஸல்).
பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை சலுகை என்று நாம் சொல்வோமா?மக்கள் தொகைக்கேற்ப பிரதிநித்துவம் இருக்கவேண்டும் என்பது சலுகை அல்ல உரிமை இதை யாரும் பிச்சை போட முடியாது.தாழ்த்தப்பட்ட சகோதரர்களுக்கு அரசியல் அமைப்பு சட்டத்தில் இருக்கும் உரிமையை சலுகை எனும் வார்த்தையால் நாம் மீண்டும் மீண்டும் கொச்சை படுத்துகிறோம்.B .C மற்றும் M .B .C க்கும் மக்கள் தொகைக்கேற்ப இட ஒதுக்கீடு உள்ளது என்று பலருக்கு தெரியவில்லையா?
இட ஒதுக்கீடு என்பது இந்துமதத்தில் தலித்துகளை தொடரவைக்கக் கொடுக்கும் கையூட்டு சலூகை தான்.
இதுபற்றி அடிக்கடி எழுதி வருகிறேன்
http://govikannan.blogspot.com/2008/06/blog-post_18.html
http://govikannan.blogspot.com/2008/09/blog-post_7130.html
http://govikannan.blogspot.com/2007/05/blog-post_30.html
http://govikannan.blogspot.com/search/label/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81
கோவி.கண்ணன்,
இடஒதுக்கேடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டும்தான் உள்ளதா? பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கொடுக்கப்படுவதின் பெயர் என்ன ? அதைப் பற்றி எழுதுங்களேன்!
இது அறியாமையா அல்லது குறிப்பிட்ட சில சாதி மக்களை அசிங்கப்படுத்தும் முயற்சியா? இட ஒதுக்கீடு எல்லோருக்கும் உண்டு. சுதந்திரத்திற்கு முன்னாள் கல்வி , அரசு வேலை வாய்ப்பில் தெலுங்கு வடுகர்(நாய்டு), முதலி, பிள்ளை பட்டம சூடிய சில கலப்பின சாதிகளுக்கு மட்டும் இட ஒதுக்கேடு இருந்தது உங்களுக்கு தெரியுமா? அனால் அவர்களுக்கு இன்றும் இட ஒதுக்கேடு உண்டு. இன்னும் சொல்லப்போனால் தமிழர் நாட்டில் இட ஒதுக்கேடு பெரும் தெலுங்கன் , கன்னடன் கூட தமிழனை ஏசுவதுதான் இங்கு வேதனையான வேடிக்கை.
சமூக நீதிக்கு, இட ஒதுக்கீடு ஒரு மிக முக்கிய ஆயுதம். ஆனால் அதை ஒழுங்கா, நேர்மையா பிரயோக்காமல், தொடந்து க்ரீமி லேயர்களே அநியாயமா அனுபவிக்கிறாங்க.
அதை கண்டு FC பிரிவினர் கோபமும், வெறுப்பும் அடைகிறார்கள். சமூக அநீதியாக தெரிகிறது.
இதை பற்றி முன்பு நான் எழுதிய பதிவு :
http://athiyaman.blogspot.com/2006/01/reg-creamy-layer-misusing-reservation.html
இன்று இட ஒதுக்கீடு முறையில் பயன் பெருபவர்களின் பொருளாதார பின்புலத்தை முழுசா ஆராய்ந்தால் பல உண்மைகள் தெரிய வரும். மொத்த பயனாளிகளில் கிரிமி லேயர்கள் எத்தனை சதம் என்று அறிய வேண்டும். பெரும்பான்மையான சதவீதம் கிரிமீ லேயர்களே என்றே தோன்றுகிறது.
பார்பன இந்து மதம்=சாதி+தீண்டாமை என்கிறீர்கள்.அந்த மதத்திலிருந்து மாறியவர்களுக்கு சாதி கிடையாதும, தீண்டாமை இல்லை, எனவே அவர்களுக்கு சம உரிமை,சம மரியாதை தருவோம் என்றுதானே மதம் மாறச்சொல்கிறார்கள்.இஸ்லாத்தில் சேருங்கள் என்ற பெரியாரும் அதைத்தானே சொன்னார்.கிறித்துவ/இஸ்லாம் – இதில் எதற்கு மதம் மாறினாலும் அவர்கள் தலித்கள் அல்ல, அந்த மதங்களில் தீண்டாமை,சாதி பாகுபாடு கிடையாது,சமத்துவம் இருக்கிறது என்றுதானே பிரச்சாரம் செய்கிறார்கள்.அப்புறம் அவர்களுக்கு எதற்கு இட ஒதுக்கீடு-தலித் என்ற பிரிவில். தலித்களுக்கு இட ஒதுக்கீடு இருக்கிறது, அது தீண்டாமையை சரி என்பதற்காக அல்ல.மாறாக தீண்டாமையால் அவர் பாதிக்கப்பட்டார்கள் என்பதற்காக அவர்கள் முன்னேற வழங்கப்படும் ஒரு உரிமை.அம்பேத்கரே கிறித்துவ/இஸ்லாம் மதம் மாறிய தலித்களுக்கு இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று அரசியல் சட்டத்தில் எழுத வில்லை.அது தேவை என்று அவர் கருதவில்லை. நீங்கள் என்ன அம்பேத்கரை விட அறிவாளியா.
இன்றும் தலித்களில் இது பற்றி ஒத்த கருத்து இல்லை.கல்வி,வேலைவாய்ப்பில்
முன்னேறியுள்ள கிறித்துவ/முஸ்லீம் ’தலித்’களுக்கு இட ஒதுக்கீடு கூடாது என்று வாதிடும் தலித்கள் இருக்கிறார்கள்.தேசிய தலித/பழங்குடி ஆணைய உறுப்பினர்களிடையே இதில் ஒத்த கருத்து இல்லை.இதையெல்லாம் மறைத்து விட்டு எழுதுகிறீர்களே.
சாதி,தீண்டாமை – இந்து மதம் தவிர்த்த பிற மதங்களிலும் இருக்கிறது என்றால் அதற்கு காரணம் யார்.இஸ்லாம் இந்தியாவிற்கு வந்து இத்தனை நூற்றாண்டுகளாகியும் அங்கும் இவை இருக்கிறது என்றால் ஏன்.கிறித்துவ மதமும் இங்கு வந்து இத்தனை காலம் ஆகிய பின்னும் அங்கும் சாதி,தீண்டாமை என்றால் அதற்கு காரணம் யார், ஏன் திருச்சபையால்,கிறித்துவ மத நிறுவனங்களால் இவற்றை இல்லாமல் செய்ய முடியவில்லை.
கிறித்துவ திருச்சபையின் ஆதரவுடந்தான் அடிமை வியாபாரம், காலனி ஆதிக்கம் நடந்தது.இஸ்லாத்தில் சமத்துவம் என்பது உண்மையில் இருக்கிறதா. இஸ்லாமிய
நாடுகளில் முஸ்லீம் அல்லோதோருக்கு எதிராக பாகுபாடுகள் இல்லையா.
எனவே ஏதோ இவை இந்தியாவிறகு வந்தபிந்தான் ‘கெட்டு’ப் போய்விட்டன என்று வாதிட முடியாது.
ஒன்று கம்யுனிஸ்ட் என்று சொல்லிக் கொண்டு நாத்திக்ம பேச வேண்டும், மதங்களை நிராகரிக்க வேண்டும்,ஆன்ம் அறுவடை,ஆள் பிடிக்கிற வேலையை யார் செய்தாலும் எதிர்க்க வேண்டும்.
இல்லாவிட்டால் எமக்கு இந்து மதம் என்றால்தான் ஆகாது, மத மாற்றம் இந்து மதத்திற்கு எதிராக உள்ளதால் நாங்கள் மதமாற்ற கும்பலுடன் சேரிந்து ஆன்ம அறுவடை செய்வோம் என்று தெளிவாக சொல்லிவிட்டு மதம் மாற்றத்தில் மோகன் லாசரஸ்,பால் தினகரன், ஜகிர் நாயக் போன்றோரின் முயற்சிகளை ஆதரிக்கிறோம் என்று வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும். நீங்கள் கம்யுனிசம் பேசிக் கொண்டு மத மாற்றத்திற்கு ஆள் பிடிக்கிற கும்பலின் அடியாள் போல் எழுதுகிறீர்கள்.போலி கம்யுன்சம் பேசுவதை விட்டு விட்டு ஜாகிர் நாயக்,மோகன் லாசரஸ் கும்பல்களுடன் சேர்ந்து வெளிப்படையாக வேலை செய்யுங்கள்.
//அம்பேத்கரே கிறித்துவ/இஸ்லாம் மதம் மாறிய தலித்களுக்கு இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று அரசியல் சட்டத்தில் எழுத வில்லை.அது தேவை என்று அவர் கருதவில்லை. நீங்கள் என்ன அம்பேத்கரை விட அறிவாளியா.// அதே அம்பேத்கர்தான் இந்து சனாதானிகளுக்கு சட்டத்தை எழுத பேனா தேவைப்பட்டது என்னை பயன்படுத்திக் கொண்டார்கள் என்று கூறி அரசியல் சட்டத்தை இவரின் கையைக் கொண்டுஎழுத வைத்த லட்சணத்தை சொல்லியுள்ளார். அம்பேத்கரை விட நீங்கள் அறிவாளியாஎன்ன?
அகமது உங்களுக்கு விசயமே தெரியாதா? அருமை ரவி சீனிவாஸ் அவர்கள் உலகத்திலேயே மிகப்பெரிய அப்பாடக்கர். நானும் சமீபகாலமாக பார்க்கிறேன் பலப்பல பெயரில் வந்து கும்மியடிக்கிறாரே ஒழிய கொண்டையை மறைக்கமாட்டேங்கறாரே.
சாதி அடிப்படையில் கொடுக்கப்படும் சலுகைகளை நிறுத்தி விட்டு ஏழை பணக்காரன் என்ற அடிப்படையில் சலுகை இருந்தால் மட்டுமே சாதியை தீண்டாமையை ஒழிக்க முடியும் . அதற்கு நம் நாடு நேர்மையான அரசியல்வாதிகள் , அரசாங்க அதிகாரிகளை தாங்கி இருக்க வேண்டும். இந்த நாடு அந்த விதத்தில் சாபக்கேடான நாடு. நேர்மையற்ற நாட்டில் எதையும் மாற்ற முடியாது. முதலில் நேர்மை வேண்டும் நாம் அனைவருக்கும்
ஓரளவு வளர்ந்த பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களே இன்னும் IIT யிலோ IIM யிலோ படிக்க முடியல தலித்தெல்லாம் நினைத்தே பார்க்கமுடியாது.அங்கே படித்துவிட்டு நேரே அமெரிக்காவிற்கு சென்று விடும் மாணவன் ஒவ்வொருவனுக்கும் நம் பணம் எவ்வளவு செலவிடப்படுகிறது,அங்கு மட்டும் ஏன் இட ஒதுக்கீடு இல்லை,அங்கு படிப்பவர்கள் யார்?இதெல்லாம் அதியமானுக்கு தெரியுமா? சமூகத்தில் மூன்று சதத்துக்கு குறைவாக இருப்பவர் கோபம் பெரிதா நம் ஆதங்கம் பெரிதா?நம்முடைய க்ரீமி லேயர் மாணவர்கள் இப்போது தான் அங்கு போட்டி போட ஆரம்பித்துள்ளனர் அதுக்குள்ளேயே தாங்கமுடியல அவாளுக்கு.இன்னும் ஆயிரம் பெரியார்கள் தோன்றினால் தான் அடிப்படை அறிவே பலருக்கு வரும் போல் இருக்கிறது.
வினவு வாசகர்களுக்கும்/ வசகர்களுக்கும் பொதுவாக ஒரு விஷயம் தெரிய வேண்டி உள்ளது. தீண்டமை என்னும் மனித பாகுபாடு கண்டிப்பாக ஆதிமனிதன் தோற்றிவைக்க வில்லை. இது இந்தியாவில் மட்டும் அல்ல, உலகமுழுவதும் ஏதோ ஒரு கோணத்தில் இருக்கதான் செய்கிறது. எடுத்துக்காட்டாக மேலை நாடுகளில் நீக்ரோ. இப்போது நாம் பேசிக்குண்டிருப்பது உண்மையாகவே அதன் கிளைகலையும், விழுதுகளையும் பற்றிதான். விழுதுகளையும், கிளைகளையும் வெட்டுவதால் மரம் அளிந்துவிடாது. அதன் அணிவேர் எங்கு உள்ளது என்று கண்டுபிடிக்க வேண்டும்.
வரலாறு காலத்தின் கண்ணாடி என்பார்கள் அதை பார்க்க இன்றுள்ள தலைமுறை ஒதுக்கி விட்டர்கள். கண்டிப்பாக ஒவ்வொற்வரும் அதை பார்க்க வேண்டும். அப்போது சாதி பாகுபாடு எங்கு உதயமானது என்பதை கண்டு பிடித்துவிடலாம்.
தாழ்தபட்டவர் எனப்படும் அருந்ததியினர் சமஸ்தனங்களை ஆண்டதாக வரலாறுகள் சொல்லுகிறது. மேலும் விக்ரமாதிதன் தொட்டிய நயக்கர்கள் இனத்தை சார்ந்தவர் என்றும் வரலாறுகள் சொல்லுகிறது. பார்பன கூற்றுபடி பார்த்தால் ஆட்சி செய்பவன் சத்திரியன். ஆனால் இவர்கள் ஆட்சி செய்தபோதும் ஏன் தாழ்தபட்டவர்கள் ஆனார்கள்.
இதை பொதுவாக பார்பனர் ஆதிக்கம் என்று மட்டும் கூறி விட முடியாது. வசதி படைத்த இஸ்லாம் ஒருவர் இந்துவை பேதங்கள் பேசியதை நான் நேரடியாக கேட்டிருக்கிறேன், அவரே வேருபிரிவு இஸ்லாமியரை பேதம் பேசியதையும் கேட்டிருக்கிறேன். மேலும் பெந்தகோஸ்ட் கிறித்துவர்களை தாழ்த்தப்பட்டவராகவே மதிக்கிறார்கள் என்பது உற்று நோக்குபவருக்கு தெரியும்.
ஆகவே இதை அவசரம் இல்லாமல் ஆராய்ந்து ஒரு கட்டுரை உறுவாக்கினால் நலம். இல்லையேல் கம்யூனிஸ்ட், திக, மட்டும் வினவாக இருந்தாலும் மனித பேதத்தை ஒழிக்க முடியாது. அப்படி யாரேனும் எழுதினால் தயவுசெய்து, mathancha@rediffmail.com மற்றும் bosemathanc@gmail.com க்கு link அனுப்பவும். ஆவலுடன் கத்திருக்கிறேன்.
உங்களைப் பார்த்து நான் முஸ்லிமாக முடியுமா? கேப்டன் அமீருத்தீன்
கொடிக்கால் பாளையம் மீலாத் விழாவில் நடந்த அந்த “தாடி” விவகாரம் அந்த ஊரையும் தாண்டி சுற்று வட்டாரத்தில் பரபரப்பாக சிறிது காலம் பேசப்பட்டது. அது ஒரு சர்ச்சையை கிளப்பியது என்றே சொல்ல வேண்டும். ஒரு விவாதப் பொருளாக ஆக்கப்பட்டு
பலதரப்பிலும் பேசப்பட்டது. அது தொடர்பாக அப்போது “மறுமலர்ச்சி” “முஸ்லிம் முரசு” போன்ற பத்திரிகைகளில் கேள்விகள் கேட்கப்பட்டன். அதனால் அந்த விவகாரம் பல ஊர் மக்களும் அறிந்திட வாய்ப்பேற்பட்டது.
http://knrtimes.blogspot.com/2009/03/blog-post_8725.html
//இந்து மதத்தின் சாதி – தீண்டாமைக் கொடுமைகளை ஒழித்து உங்களுக்கு விடுதலை தருகின்றோம். மதம் மாறாதீர்கள்//
சும்மா எப்போ பாத்தாலும் பிரச்சனையின் உச்சி குடுமிய புடுங்குறதுலேயே குறியா இருங்க 🙂
பின்னிணைப்பு:
…அவர்களுக்கு உணவில்லை என்று வருத்தப்பட்டேன், நான் நல்ல கிறிஸ்தவன் என்றார்கள். அவர்களுக்கு ஏன் உணவில்லை என்று கேட்டேன், என்னை கம்யூனிஸ்ட் என்று சிறைபிடிக்கிறார்கள். இப்படி ஒரு பிஷப் சொன்னதாக வினவின் ஏதோ ஒரு கட்டுரையில் படித்த நியாபகம்.
அதன் பிறகு, வினவின் ஒவ்வொரு கட்டுரை படிக்கும் போதும் “அவர்களுக்கு “ஏன்” உணவில்லை என்று கேட்டேன், என்னை கம்யூனிஸ்ட் என்றார்கள்” என்ற இந்த வரிகள் மட்டும் தவறாமல் வந்து செல்லும். இப்போதும் கூட.
இடஒதுக்கேடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டும்தான் உள்ளதா? பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கொடுக்கப்படுவதின் பெயர் என்ன ? அதைப் பற்றி எழுதுங்களேன்!
இது அறியாமையா அல்லது குறிப்பிட்ட சில சாதி மக்களை அசிங்கப்படுத்தும் முயற்சியா? இட ஒதுக்கீடு எல்லோருக்கும் உண்டு. சுதந்திரத்திற்கு முன்னாள் கல்வி , அரசு வேலை வாய்ப்பில் தெலுங்கு வடுகர்(நாய்டு), முதலி, பிள்ளை பட்டம சூடிய சில கலப்பின சாதிகளுக்கு மட்டும் இட ஒதுக்கேடு இருந்தது உங்களுக்கு தெரியுமா? அனால் அவர்களுக்கு இன்றும் இட ஒதுக்கேடு உண்டு. இன்னும் சொல்லப்போனால் தமிழர் நாட்டில் இட ஒதுக்கேடு பெரும் தெலுங்கன் , கன்னடன் கூட தமிழனை ஏசுவதுதான் இங்கு வேதனையான வேடிக்கை.
அய்யா.இட ஒதுக்கீடு பெற்று உயர்ந்த தாழ்த்தப்பட்டவர்கள் எத்தனை பேர் அவரவர் இனத்துக்காக உழைக்கிறார்கள் என சொல்ல முடியுமா? பனம் வந்தவுடன் உறவுகளை மறந்துவிட்டு மேல் வர்கத்துடன் மட்டுமே நட்பு பாராட்டுவார்கள். (95% சதவிகிதம் பேர் இப்பிடித்தான்). அவர்கள் குடும்பம் மட்டுமே செழிக்கும், ஆனால் அவர்கள் இனம் அப்படியேதான் இருக்கும். இதுதான் நடைமுறையில் உள்ள உன்மை. இதன் உன்மைக் காரனம் மனிதனின் சுயநலம் தான்.
yean thevar,vanniyar,pillai ivala pathi eluthaama..ennamo brahmanargal mattum saathi veriya kaatura maathiri eluthureenga….avanga Law collegela adicha maathiri adi veluthuruvaanu bayamaa…..
From When did MKEK supports இடஒதுக்கீடு ? It is a logical and good change of MKEK!
During 1994 MKEK was against இடஒதுக்கீடு, so after a long lasting arguments with comrades i came out of MKEK.
பார்ப்பனியத்தின் ஆன்மாவான சாதி – தீண்டாமையால் நலிவுற்றுத் திணறும் இந்தியச் சமூகத்தில், எந்த மதமும் அடிப்படையான மாற்றத்தைக் கொண்டு வர முடியாது. எனவே, அந்த ‘ஆன்மா’ ஒழிக்கப்படும்வரை தாழ்த்தப்பட்ட – பழங்குடி மக்கள் எந்த மதத்திற்கு மாறினாலும் அவர்களுக்கு இடஒதுக்கீடு – மற்றும் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்கிறோம்.