privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கசமச்சீர் கல்வி கருத்தரங்கம் - நிகழ்ச்சிப்பதிவு, படங்கள்!

சமச்சீர் கல்வி கருத்தரங்கம் – நிகழ்ச்சிப்பதிவு, படங்கள்!

-

க்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் சமச்சீர் பொதுப்பாடத்திட்டத்தை உடனடியாக அமுல் படுத்தக் கோரி கடந்த இருமாதங்களாக மக்கள் மன்றத்தில் போராடி வருகின்றனர். சென்னையில் டிபிஐ முற்றுகை மற்றும் ஜெயா கொடுப்பாவி எரிப்பு, உயர்நீதிமன்ற முற்றுகை மற்றும் தனியார் கல்வி முதலாளிகளின் அறிக்கை எரிப்பு, எனப் பல போர்க்குண மிக்க போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த திங்கட்க் கிழமை (18-07.11) சமச்சீர் பொதுப்பாடத்திட்டத்தை 22-ம் தேதிக்குள் நடைமுறைப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி மற்றும் புரட்சிகர அமைப்புகள் போராடி உயர்நீதி மன்றத்தின் வாயிலிருந்து பிடுங்கிய தீர்ப்பு என்றால் அது மிகையல்ல.

களத்திலே நின்று போராடிய  பு.மா.இ.மு, ம.க.இ.க. அமைப்புகள் கருத்துக்களை, உரிமைகளை மக்களிடத்திலே கொண்டு செல்லும் விதமாக அரங்கக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த அரும்பாக்கம் புதிய புபு மஹாலில் காலை 9 மணிக்கு தரைத்தளத்தில் ஓவியக் கண்காட்சி தொடங்கியது. தோழர் முகிலன் ஓவியங்கள் வணிகமயமாகும் கல்விக் கொள்கைக்கெதிரான போர் வாளாய் சுழன்றன. ஜெயா குரங்கு கையில் கிடைத்த பூமாலை, கல்வியை பறிக்கும் தனியார் பள்ளி முதலாளிகள், தனியார் பள்ளிகளை காக்கும் போயசு பள்ளி கல்வித்துறை, அரசு போன்ற ஓவியங்கள் பார்வையயாளர்களை ஈர்த்தன.

காலை பத்து மணிக்கு நிகழ்ச்சி முறைப்படி தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி ஆரம்பிக்கப்பட்டது. தலைமையுரையாற்றிய புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில அமைப்பாளர் தோழர் த.கணேசன் “தாழ்த்தப்பட்ட -பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வியை மறுத்த மனு நீதி திரும்புகிறது. காசில்லையேல் கல்வி இல்லை, யார் அதிகம் நன்கொடை தருகிறார்களோ அவர்களை மட்டும் பள்ளிகள் சேர்த்துக்கொள்கின்றன. வியாபாரமாக கல்வி மாறிவிட்ட நிலையில் சமச்சீர் பொதுபாடத்திட்டத்தினை அமுல்படுத்து என்ற சீர்திருத்த நடவடிக்கைக்களுக்கே கூட புரட்சிகர அமைப்புகள் போராட வேண்டியிருக்கிறது. ஜனநாயகம் உள்ளதாக கூறப்படும் இந்நாட்டில் ஜனநாயகம் இருக்கின்றதா?இது ஒட்டுமொத்தக் கல்வியும் வியாபாரமான பிரச்சினை என்றும் அதற்கெதிராக போராட வேண்டும்” என கூறினார்.

பின்னர் சமச்சீர் பொதுப்பாடத்திட்டத்தை அமுல்படுத்தக் கோரி சிறை சென்ற பு.மா.இ.மு தோழர்களுக்கு பாராட்டுக்களும் பரிசுகளும்(நூல்கள்) வழங்கப்பட்டன.

அடுத்ததாக”ஏன் சமச்சீர் கல்வி வேண்டும்” என்ற தலைப்பில் தமிழகத்தின் மூத்தகல்வியாளர் திரு. எஸ்.எஸ்.ராஜகோபாலன் அவர்கள் உரையாற்றினார். அதில் “1.2 கோடி மாணவர்களின் மீது தமிழக அரசுக்கு உள்ள அலட்சியமே மேல் முறையீடு செய்யவுள்ள ஜெயா அரசின் செயல் நிரூபிக்கிறது. கடந்த 1.5 மாதமாக எந்த வகுப்பிலும் பாடங்கள் நடக்கவில்லை. அதை நீங்கள் தான் மாற்ற வேண்டும். உலகில் ஏற்பட்ட சமூக மாற்றங்களே கல்வி முறையை மாற்றியிருக்கின்றன. ஆக சமூகத்தைப் பற்றிய கல்வி கொடுக்கப்பட வேண்டும். சாதிமுறை ஒழிக்கப்படவில்லை அது  நீடிக்கிறது.  அதுதான் சமூகத்தில் பரவிக்கிடக்கிறது. அதை அகற்ற வேண்டுமெனில் பகுத்தறிவு கல்வி கொடுக்க வேண்டும். அந்தக் கல்வி இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கையாக இருக்க வேண்டும். சுயசிந்தனையை, பகுத்தறிவை வளர்த்து சமூக மாற்றத்தில் பங்குகொள்ள சமச்சீர் கல்வி அவசியம்” என்றார்.

அடுத்ததாக, கல்வி கார்ப்பரேடமயம் என்பது உலகமயம் உருவாக்கும் புதிய பார்ப்பனீயம் என்ற தலைப்பில் ம.க.இ.க மாநில பொதுச் செயலர் தோழர் மருதையன் உரையாற்றினார். “சமச்சீர் பாடத்திட்டத்திற்காக எந்த ஓட்டுக்கட்சியும்  போராடவில்லை மாறாக பு.மா.இ.மு போராடியதன் விளைவாகவே நேற்றையத் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அடிபட்ட மிருகம் போல அரசு தனது வெறியாட்டத்தை தொடங்கினாலும் நாம் உறுதியாக போராடவேண்டும். ஸ்பெக்ட்ரம் ஊழல் 1.2 லட்சம் கோடி எனில் கல்வியை தனியார் ஆக்குவதால் ஆண்டுக்கு 2.5 லட்சம் கோடி முதலாளிகளின் லாபவேட்டையாக அமைகிறது.”

“காட்ஸ் ஒப்பந்தம் மூலம் தண்ணீர், உணவு, மருத்துவம், கல்வி என அனைத்தும் தனியார் மயமாக்கப்பட்டன. ஆதலால் காசில்லாதவனுக்கு கல்வி மறுக்கப்படுகின்றது. அதையே தமிழக அரசு வழக்கறிஞர் “பணம் கொடுத்துப் படிப்பது உரிமை”என்றும்,அமைச்சர் ” உலகமயமாக்கலை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு ஏற்ற கல்வி” என்றும்  கூறுகிறார்கள். ஆனால் 97.5 கட்டாஃப் மார்க் வாங்கிய ஏழைத்தொழிலாளியின் மகள் மேற்கொண்டு படிக்க முடியாமலிருப்பதும், 50 லட்சம் தரமுடிந்ததால் மட்டும் டாக்டராகும் மாணவனையும் உள்ளடக்கிய இக்கல்வி முறை அதாவது காசிருந்தால் கல்வி என்ற இம்முறை ஒழிக்கப்படவேண்டும். கல்விக்கு, அதை அளிப்பதில் சமூக நோக்கம் இல்லையேல் ஏற்றத்தாழ்வுகள் நீங்காது. ஆனால் இப்போது கல்வி கையிலிருக்கும் பணத்தை பொருத்து வழங்கப்படுகின்றது.”

“19-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் தகுதிக்கேற்ற கல்வி வழங்கிய அம்முறையை இப்போது உலகமயம் நமக்கு வழங்குகிறது. அமெரிக்காவில் ஒவ்வொரு மாணவனையும் 50 லட்சம் முதல் 1 கோடி வரை கடன் காரர்களாக்கி வெளியில் தள்ளுகிறது அக்கல்வி முறை. இது கல்வி வியாபாரமானதின் விளைவு. உற்பத்தி தேவைக்கானதுதான் கல்வி என்ற சமூக நோக்கத்தை அழித்து வணிகமயமாக, உழைக்கின்ற மிருகமாக மனிதனை மாற்றுவதுதான் ஜெயா அரசின் திட்டம். இதை முறியடிக்க மக்களைத்திரட்டி போராட வேண்டும்” என்று கூறினார்.

இறுதியாக கட்டாய-இலவசக் கல்வி தருவது அரசின் கடமை, கல்வி தனியார்மயம் என்பது ஏழைகள் மீதான வன்கொடுமை என்ற தலைப்பில் உரையாற்றிய ம.உ.பா.மை-ன் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் சி.ராஜூ “கல்வி தனியார்மயத்தால்,கட்டணக்கொள்ளளையால் அனைத்து மக்களும் ஏன் காவல்துறையினர் உட்பட அனைவரும் பாதித்துள்ளனர்”  என்றும் கடலூர் மாவட்டத்தில் ம.உ.பா.மை மற்றும் பொற்றோர் சங்கம் போராடிய போராட்ட அனுபவங்களை கூறினார்.

“மேலும் கள்ளச்சாராய விற்பனை போல் அங்கீகாரம் வாங்கி, வாங்காமல் பள்ளிகள் புற்றீசல் போல பெருகி மக்களை கொள்ளையடித்து வருகின்றன. உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை, உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தக் கோரி போராடியதற்காக பு.மா.இ.மு கடலூர் தோழா;கள் கைது செய்யப்பட்டதையும் அதில் 16 வயது தோழர் 20 நாட்கள் சிறையில் இருக்க வைக்கப்பட்டதையும் கூறினார். தனியார் பள்ளிகளுக்கெதிரான போராட்டம் ஏனைய தனியார்மய கொள்ளைகளுக்கெதிரான போராட்டம் அதில் நாம் போராடி வெற்றி பெறுவோம் என்றும் சமச்சீர் பாடத்திட்ட போராட்டத் தீயை அணையாமல் காத்து நிற்கும் பெருமை ம.உ.பா.மை மற்றும் பு.மா.இ.மு வையே சாரும்” என்றார்.

இந்நிகழ்சியில் சுமார் 1000த்திற்க்கும் மேற்பட்டோர் கலந்த கொண்ட நிகழ்ச்சியில் அரங்கம் நிரம்பி வழிந்தது. மாணவர்களும், பொற்றோர்களும் மற்றும் பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, ம.க.இ.க, பெ.வி.மு தோழர்களும் திரளாக கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சியின் இடையிடையே புரட்சிகர பாடல்கள் இசைக்கப்பட்டன.   இறுதியாக முறைப்படி சர்வதேசியகீதம் இசைக்கப்பட்டபின் நிகழ்ச்சி நிறைவுற்றது.

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

_________________________________________________________________

– தகவல்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, சென்னை
_________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

  1. சமச்சீர் பொதுப்பாடத்திட்டத்தை அமுல்படுத்தக் கோரி சிறை சென்ற பு.மா.இ.மு தோழர்களுக்கு வாழ்த்துக்கள்..

    • பாசிச ஜெயா ஒழிக! வெல்க அனைவருக்கும் சமமான கல்வி!
      கலியெனும் சரச்நட்கியெஐ ட்கெவேடியாலக்கும் முயர்சே ஒழ்கிக
      வெல்லட்டும் ம.க.எ.க , பு.ம.எ.மு, ட்கொழ்கர்கல் முயர்ச்கி

  2. கருத்தரங்க உரைகளை ஒலி வடிவில் வெளியிட கேட்டுக்கொள்கிறேன்.

    போராட்டத்தில் பங்குபெற்ற அனைத்து தோழர்கள் மற்றும் தோழமை

    அமைப்புக்களைச் சேர்ந்த்தவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  3. சமச்சீர் கல்வி கருத்தரங்கம் – என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று!

    திங்கட்கிழமை ஆபீசுக்கு வந்தவுடன், வினவு தளத்தைப் பார்த்தேன். சென்னையில் செவ்வாய் காலை ஒன்பது மணியளவில் கருத்தரங்கு என்பதை அறிந்தேன். அவசரமாக ஒரு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு பெங்களூரிலிருந்து சென்னை விரைந்தேன்.

    தோழர் மருதையனின் கட்டுரைகளைப் படித்த எனக்கு அவர் பேச்சினை நேரில் காண மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன்.

    அதிகாலை சென்னையில் விடிந்தது. இறங்கியதும் செய்தித்தாள் படித்த எனக்கு அதிர்ச்சி!. ஒருபக்கம் சமச்சீர் கல்விக்கு உயர்நீதிமன்றம் ஓகே சொன்னதில் மகிழ்ச்சி என்றாலும், இன்னொரு பக்கம் கருத்தரங்கின் அவசியம் இல்லாமல் போய் கேன்சலாகிவிட்டால்…நான் வந்த நோக்கம் வீணாகிவிடுமே என சிறு வருத்தம்.

    செய்தித்தாளின் அடுத்த பக்கத்தைப் புரட்ட, மேலும் ஒரு அதிர்ச்சிச் செய்தி. வழக்கு மேல்முறையீட்டிற்கு உச்சநீதிமன்றம் செல்வதாக இருந்தது. அப்பொழுதுதான் வினவின் செய்தி, அதாவது வழக்கு உயர்நீதிமன்றத்தில் நமக்கு சாதகமாக வந்தாலும், ஜெ அடிபட்ட மிருகம்போல் கண்டிப்பாக உச்சநீதிமன்றம் செல்வார் என சில தினங்கள் முன்பு சொன்னது நினைவுக்கு வந்தது.

    கண்டிப்பாக கருத்தரங்கம் விறுவிறுப்பாக நடைபெறும் என எதிர்பார்த்து, ஜிஜி மஹால் நோக்கி சென்றேன். மிகுந்த ஆர்வத்தில் எட்டு மணிக்கெல்லாம் இடத்தை அடைந்தாகிவிட்டது. மஹாலின் வெளியில் வரவேற்கும் விதமாக, தோழர்கள் செங்கொடியை நிறுவிக்கொண்டிருந்தார்கள். அருகில் உள்ள உணவகத்தில் காலை உணவை முடித்து, மெதுவாக உள்நுழைந்தேன். மிகுந்த உற்சாகத்தோடு அவர்கள் ஓவியக் கண்காட்சியை ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள்.

    தோழர்கள் இன்முகத்துடன் அரங்கிற்கு வழிகாட்டினார்கள். அரங்கினுள் நுழைந்தேன். தனியாக ஒரு இருக்கையில் அமர்ந்தேன். துணைக்கு எவரும் இல்லை. ஒன்பது மணி நெருங்கிக் கொண்டிருந்தது. மிகுந்த கூடத்தை எதிர்பார்த்த மனதில் பெரும் ஏமாற்றம்!!!!!!!!

    நான்கைந்து பேர் மட்டுமே அரங்கினுள் கூடியிருந்தோம்.

    ஒரு பத்து நிமிடம் இருக்கும் பின்னர் மிகுந்த உற்சாகத்தோடு ஒரு கூட்டம் நுழைந்தது.
    பள்ளி மாணவர்கள், கல்லூரி இளைஞர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என கூட்டம் நிறைந்தது.

    தனித்திருந்த நான், நாமாக மாறினோம்.

    தொடக்க நிகழ்ச்சியாக, கீழ் அரங்கினில் ஓவியக் கண்காட்சி. பத்து புத்தகங்கள் படித்துத் தெரிந்து விளங்கக் கூடிய விசயங்களை, பத்தே நிமிடத்தில் ஓவியத்தின் மூலம் நேர்த்தியாக விளக்கி திரு. முகிலன் அவர்கள் சிறப்பான இடத்தைப் பெற்றார்.
    கண்காட்சியைக் கண்டு, பின் சிறு தொகையை தோழர்கள் வைத்திருந்த உண்டியலில் மனமுவந்து செலுத்திவிட்டு சற்று நிமிர்ந்தேன். கீழைக்காற்று தோழர்கள் வைத்திருந்த புத்தகங்கள், பரபரப்பாக விற்றுத் தீர்ந்து கொண்டிருந்தன. நானும் முயன்று புத்தகங்களைச் சேகரித்து, காலியாக நான் கொண்டு வந்திருந்த பையை நிரப்பினேன்.
    மீண்டும் அரங்கினுள் அதே இடத்தில் அமர்ந்தோம்.

    அனைவரும் சிறப்பாக உரையாற்ற வேண்டும் என மனதார வாழ்த்திக்கொண்டு அரங்கு நிகழ்ச்சியில் ஆழ்ந்தேன்.

    இளைஞர் அணித் தோழர் திரு. கணேசன், கனீர் குரலில் அரங்கத்தை அதிரச் செய்தார். என்ன ஒரு அழுத்தமான உச்சரிப்பு!. உண்மையாகவே அனைவருக்கும் வியப்பு. ஒவ்வொரு சொல்லும் ஒரு எழுத்து கூட சிதறாமல், அனைவரின் காதினுள் சென்று சேர்ந்தது என்பதைவிட இடிபோல் முழங்கியது என்றே சொல்ல வேண்டும். வாழ்க நீவிர் நூறாண்டு.

    அடுத்து நிகழ்ச்சியின் முதல் சிறப்புரையாளராக, மூத்தகல்வியாளர் திரு. ராஜகோபாலன் அவர்கள் கல்வி என்றால் என்ன? என்பதையும், சமச்சீர் கல்வி ஏன்? என்பதையும், சமச்சீர் கல்வியின் ஒரே ஒரு அம்சமான பொதுப் பாடத் திட்டத்திற்கே ஏன் இவ்வளவு எதிர்ப்பு? என சிறப்பாக விளக்கினார்.

    நான் கற்றுத் தேர்ந்த முதலாளித்துவக் கல்விக்கும், ஒவ்வொருவரும் கட்டாயமாகக் கற்க வேண்டிய சமூகக் கல்விக்குமுள்ள வேறுபாட்டை நிறையவே உணர முடிந்தது.
    அவரின் வயது முதிர்ச்சியால், பேசுவதற்கு மிகவும் சிரமப்பட்டார். அவரின் பேச்சு, சிறு குழந்தைகளுக்கும் புரியும் வண்ணம் மிக எளிதாகவும் இனிமையாகவும் இருந்தது. அவ்வளவு சிரமத்திற்குள்ளாகவும் சிறப்பாக நிறைவு செய்து, அரங்கினை கைத்தட்டலால் நிரம்பச் செய்தார்.

    அடுத்ததாக, நான் எதிபார்த்து வந்த, தோழர் திரு. மருதையன் ஆரம்பித்தார். நேரம் கருதி அவருக்குக் கொடுத்த தலைப்பில் மட்டும் அவர் பேச நேர்ந்தது. தமிழகம் முதல் இந்திய பாராளு மன்றம் வரை கல்வியை எவ்வாறு கார்போரேட் கொள்ளையாக மாற்ற திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார்கள் என சிறப்பாக விளக்கினார்.

    இறுதியாக, மனித உரிமைப் பாதுகாப்பின் தோழர் திரு. ராஜு. “நாம் போராடுவதற்கு எந்த பயமும் தேவையில்லை. எவ்வளவோ சட்டங்கள் நம் மக்களுக்கு மிகுந்த நலம் பயப்பதாக உள்ளன. ஆனால் அதை நிறைவேற்றாமல், நம்மை ஏமாற்றும் கொள்ளைக்காரர்களை நாம் போராடித்தான் வெல்ல முடியும்” என ஆணித்தரமாக விவரித்தார்.

    கூட்டத்தில் அனைவருக்கும் வியர்த்துக் கொட்டியது. இடப்பற்றாக்குறையால், வெளியிலும் மக்கள் கூடியிருந்தனர். ஆச்சர்யம், வியப்பு, உண்மை என்னவென்றால், ஆரம்பம் முதல் இறுதிவரை வியர்வையில் நாங்கள் நனைந்துகொண்டிருந்தாலும், திரு. கணேசன் இறுதி உரையில் “கூட்டம் முடிந்தது அனைவரும் செல்லலாம்” எனக் கூறும் வரை உற்சாகம் ஒருவருக்கும் சிறிது கூடக் குறையவில்லை. மொத்த நிகழ்ச்சியில், அரங்கம் கைத்தட்டலில் மிகுதியான நேரம் அதிர்ந்துகொண்டேயிருந்தது. அவ்வளவு உற்சாகம்.

    சிறை சென்று வந்த மாணவர்களுக்கு சிறப்பு பாராட்டைத் தெரிவித்து மகிழ்ந்தோம். நிகழ்ச்சியின் இடையிடையே சிறுமியர்கள் பாடிய வீரம் செறிந்த நாட்டுப்புறப் பாடல்கள் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.

    முக்கியமாக ஒன்றைக் கூற வேண்டும். திரு. ராஜு அவர்கள் உரையாற்றும் முன், தேநீர் இடைவேளை. தொண்டர்கள் எனக் கூறிக் கொள்ளும் தோழர்கள், அருமையாக அவற்றைப் பரிமாறினார்கள். முடித்தபின், சிறு பேப்பர் கூட சிந்தாமல் எங்கள் கைகளில் இருந்து வாங்கி பெட்டியில் போட்டு அப்புறப்படுத்தினார்கள். வியந்துபோனேன்.அவ்வளவு சுத்தமாக மீண்டும் அதே இடம். ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கும் தண்ணீர் கொடுத்துக் கொண்டே இருந்தனர். அவர்கள் பரிமாறும் விதமும், கடைசிவரை சலசலப்பின்றி செயல்படும் ஒழுங்கும் மிகவும் வியக்க வைத்தன. அனைத்துப் பண்புகளும் அவர்களின் இயல்பிலேயே, கட்டாயமின்றி அமைந்திருந்ததை கண்கூடாகக் காண முடிந்தது. மெத்தப் படித்த எவரிமும் இதுவரை நான் காணாத ஒன்று அது!. அவர்களிடம் நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.

    நான் எதிர்பார்த்துச் சென்றதைவிட, சிறப்புரையாளர்கள் மூவரின் அனுபவபூர்வமான உரை, தோழர் கணேசனின் இடிமுழக்கம், தோழர் முகிலன் அவர்களின் ஓவியம், மற்றும் தோழர்கள் உபசரித்த முறை இவற்றால் ஆறு மடங்கு திருப்தியுற்றுத் திரும்பினேன்.
    இதற்கு முழுமுதற் காரணமான வினவு மற்றும் தோழர்களுக்கு, எனது உளங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஆக,

    என்னைப் பொறுத்தவரை,

    சமச்சீர் கல்வி கருத்தரங்கம் – என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று!

    • உண்மைத்தோழனின்

      அனுபவத்தை அனைவரும் பகிர்ந்து கொள்ள ஆசை உள்ளது எனவே,வினவு அவர்களே,

      காணொளியை பதிவேற்றவும். நன்றி.

  4. உண்மைத்தோழன்,
    உங்களின் அனுபவத் தொகுப்பு மெய்சிலிர்க்க வைத்துவிட்டது.

    • உங்கள் அனுபவ உரையைப் படித்து மிகவும் பெருமிதம் கொள்கிறேன்.எனக்கு காணக் கொடுத்து வைக்கலையே உண்மைத் தோழன்.

    • ஒரு அபத்தக் கட்டுரையின் இடுகை இது. இக்கட்டுரை ஆசிரியருக்கு முத்துக்குமரன் கமிட்டி என்ன சொன்னதுன்னும் தெரியல…அதன் பரிந்துரைகளில் முதல் பரிந்துரைதான் சமச்சீர் பாடத்திட்டம் என்பதும் புரியல..அந்த அபத்தத்துக்குத்தான் தெரியலன்னா..மெத்தப்படித்த அதிக மானுக்குமா புரியல?

      • Without even quoting and refuting from that link in a logical manner, one liner rejectio as Abatham shows your stupid and closed mind. the point i am trying to raise again and again is the work ethics, attitude and basic sincereity of govt school teahers, esp the primary and middle school teachers. you people do not bother or care about this vital matter and shout hoarse only about the syallabus. so who cares if the govt teachers are not doing their job properly. with or without samacheer we all here are not going to enroll our kids in govt schools, while the majprity of the extreme poor have not option but govt schools. so why should we bother. let us continue with this obsession about content but not the most basic issue : work ethics.

        • அதியமான்,
          சமச்சீர் கல்விக்கு எதிராக கல்விக் கொள்ளையர்கள் நடத்தி வரும் பரப்புரையின் ஒரு பகுதியே நீங்கள் குறிப்பிடும் கட்டுரை.நீங்கள் ஆசைப்படுவதால் அந்த கட்டுரையை பரிசீலித்து விடலாம்.

          \\அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் திறன் குறைந்து காணப்படுகிறது.//
          இந்த ஆண்டு பள்ளி இறுதித்தேர்வில் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 85 விழுக்காடு.மாநிலத்தின் பொது தேர்ச்சி விகிதமும் இதை ஒட்டியே இருக்கிறது.

          \\ஒன்று உலக அரங்கில் கற்றோர் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதாகக் காட்டுவதற்காகக் கையெழுத்து மட்டும் போட முடிந்தவர்களாகப் பெரும்பாலான மாணவர்களை ஆக்கும் அரசுப் பள்ளிக் கல்வி; மற்றொன்று வேலை வாய்ப்பைப் பெற்றுத்தர உதவும் மெட்ரிக்குலேசன் மற்றும் பிறவகைத் தனியார் பள்ளிக் கல்வி என்ற இரண்டுவகைக் கல்வி தோன்றிவிட்டது.//

          அரசு பள்ளிகள் குறித்த மட்டமான அபிப்ராயத்தை மக்களிடையே உருவாக்குவதில் ஏற்கனவே கல்வி கொள்ளையர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள்.அந்த கருத்தை மேலும் மக்கள் மூளையில் திடமாக இருத்தவே இந்த அவதூறு.அரசு பள்ளிகளில் பயில்வோர் கையெழுத்து போட மட்டுமே தெரியும் அளவுக்கு படித்தவர்களாம்.அண்ணா பல்கலை.யின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் மதிப்பு மிக்க நான்கு கல்லூரிகளில் இடம் பெறுவோரில் மிக கூடுதலானோர் அரசு பள்ளி மாணவர்களே.இந்த பின்னணியில் மேற்படி அவதூறை எண்ணிப்பார்த்தால் கட்டுரையாளரின் கபட நோக்கம் தெளிவாகும்.

          பதின்ம [மட்ரிசுலடிஒன்] பள்ளி பாடத்திட்டம் மற்றும் பிறவகைத் தனியார் பள்ளிக் கல்வி வேலை வாய்ப்பை பெற்று தருமாம்.இது நகைச்சுவையா.வாதமா.கல்லூரி கல்வி பொதுவானதாக இருக்கும்போது பள்ளிக்கல்விக்கு வேலை வாய்ப்பில் என்ன பங்கு இருக்கிறது.

          \\அடிக்கடி தேர்வுகள் நடத்தி மாணவர்களைக் கூடுதல் மதிப்பெண் பெற முடிந்தவர்களாக தனியார் பள்ளிகள் உருவாக்குகின்ற வேளையில் பாடத் திட்டத்திலுள்ள பாடங்கள் அனைத்தையுமே கூட நடத்தாமல் தேர்ச்சி பெறுவதற்குத் தேவையான குறைந்தபட்ச மதிப்பெண் பெறுவதற்கு இவ்வளவு நடத்தினால் போதும் என்ற அளவிற்குப் பாடங்களை நடத்துபவர்களாக அரசுப் பள்ளி ஆசிரியர்களில் பெரும்பாலோர் உள்ளனர்.//

          ஆசிரியர்கள் மீதான மற்றொரு அவதூறு.

          \\இந்தப் பின்னணியில் தான் வேலை வாய்ப்புப் பெற்றுத்தர உதவும் என்ற அடிப்படையில் நமது பெற்றோர் தங்களது பிற அத்தியாவசியச் செலவினங்களைக் கூடக் கட்டுப்படுத்திப் பணத்தைச் சேர்த்துத் தனியார் பள்ளிகளுக்குத் தங்களது பிள்ளைகளை அனுப்புகின்றனர். இதைத் தவிர தனியார் பள்ளிகள் மீதான குருட்டுத் தனமான மோகம் எதுவும் அவர்களுக்கு இல்லை.//

          வேலை வாய்ப்பு கல்லூரியில் என்ன படித்தோம் என்பதை பொறுத்துதான்.அது எல்லா தரப்பு மாணவர்களுக்கும் பொதுவானதாகத்தான் இருக்கிறது. தனியார் பள்ளிகள் ”தரத்தை” எப்படி உருவாக்குகிறார்கள்.மழலையர் வகுப்பில் சேர்க்கவும் குழந்தைக்கு நேர்முக தேர்வு.பெற்றோர் பட்டதாரியாகவும்,ஆங்கிலத்தில் உரையாட வல்லவராகவும் இருக்க வேண்டும்.அவர்கள் பள்ளியில் படித்து பத்தாம் வகுப்பு தேறியிருந்தாலும் மதிப்பெண் குறைவாக பெற்றிருந்தால் 11 ஆம் வகுப்பில் சேர்க்க மாட்டார்கள்.பத்தாம் வகுப்பு அரையாண்டு தேர்வு மதிப்பெண்களை வைத்து வேறு பள்ளி மாணவர்கள் என்றாலும் சரி சிறந்த மாணவர்களை தெர்ந்தெடுத்து அந்த கல்வி ஆண்டு முடிவதற்குள் 11 ஆம் வகுப்புக்கான சேர்க்கையை முடித்து விடுவார்கள்.இப்போது மட்டும் பெற்றோருக்கு ஆங்கிலம் தெரிய வேண்டியதில்லை.காரணம் மாணவனின் மதிப்பெண் பேசுகிறது.இப்படிதான் ”தரம்” என்ற மாயை தோற்றுவிக்கப்படுகிறது.

          \\அதாவது இன்றைய “தாராளவாத” உலகமய பொருளாதாரச் சூழலில் உருவாகி வளர்ந்து வரும் மிகப்பெரும் பிரச்னையே ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையில் உள்ள இடைவெளி பெரிதாக, இன்னும் பெரிதாக ஆகிக் கொண்டிருப்பதே ஆகும்.

          அந்த நிலையில் கல்வியில் மட்டும் சமத்துவம் எவ்வாறு ஏற்பட முடியும்?//

          இன்றைய “தாராளவாத” உலகமய பொருளாதாரச் சூழலில் மேல்நிலை மற்றும் கல்லூரிக் கல்வி சமத்துவமானதாக இருக்கும்போது துவக்க மற்றும் உயர்நிலை கல்வி ஏன் சமமாக இருக்க கூடாது.சமூகத்தில் சமத்துவம் ஏற்படும் வரை காத்திருங்கள் என்று கல்வி கொள்ளையர்கள் சொல்வதற்கு என்ன காரணம்.அதுவரை கொள்ளை அடித்து கொள்ளலாம் என்பதை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்.

          \\இதனாலும் படித்து வேலைக்குச் செல்வதன் மூலம் மட்டுமே வாழ்க்கையை நடத்த முடியும் என்ற அடிப்படையில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர் ஏற்கனவே மெட்ரிக்குலேசன் படிப்பையும் தாண்டி சி.பி.எஸ்.இ.,ஐ.சி.எஸ்.இ. பாடத் திட்டங்களுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பத் தொடங்கி விட்டனர்.
          தற்போதைய இந்த சமச்சீர் கல்வி பேச்சு எழுந்தவுடன் அனைத்து மெட்ரிக்குலேசன் பள்ளிகளும் தங்களது பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடப் பிரிவுகளைத் துவக்கி விட்டதோடு அதற்குக் கூடுதல் கட்டணமும் வசூலிக்கத் தொடங்கி விட்டன.//

          மைய கல்வி திட்டத்துக்கு கொள்ளையர்கள் தாரளமாக போகட்டும்.தமிழக தொழிற் கல்லூரிகளில் அரசு பாடத்திட்டத்தில் படித்தவருக்கே முன்னுரிமை என ஒரே ஒரு அரசு ஆணை போதும்.கொள்ளையர்களின் கூடாரம் கலகலத்து விடும்.

          பாடத்திட்டங்களின் கடுமை குறித்து ஒரு எளிய விளக்கம்.ஏற்கனவே ஒரு பின்னூட்டத்தில் எழுதியதுதான்.உலகின் தலை சிறந்த மருத்துவர்கள் பலரை தமிழக அரசு மருத்துவ கல்லூரிகள் உருவாக்கியுள்ளன என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள்.அவர்களில் பலர் முந்தைய புகுமுக வகுப்பு [ப்.உ.ச்.] முறையில் படித்து மருத்துவ கல்லூரிக்கு சென்றவர்கள்.அவர்கள் புகுமுக வகுப்பில் படித்த அறிவியல் பாடங்கள் தற்போது 11 ஆம் வகுப்பிலேயே சொல்லித்தரப்படுகிறது.12 ஆம் வகுப்பு பாடங்கள் முன்னர் கல்லூரி அளவில் இருந்தவை. இதே நிலைதான் வணிகவியல் பாடங்களின் நிலையும்.புகுமுக வகுப்பு முறையில் படித்து கணக்கு தணிக்கையாளர்கள் [ஆஉடிடொர்] ஆனவர்கள் தற்போது படித்து வருபவர்களை விட திறன் குன்றியவர்கள் என சொல்ல முடியுமா.

          மற்றபடி ஆசிரியர்களிடம் காணப்படும் குறைபாடுகள் குறித்தும் அவற்றை களைவது குறித்தும் பேசுவதற்கு இது தருணமல்ல.அவற்றை காட்டி சமச்சீர் கல்வியை தடை செய்வது ஏற்று கொள்ள முடியாதது.

          இறுதியாக,\\இச்சமச்சீர் கல்வி பழைய தி.மு.க. அரசினால் கொண்டுவர எத்தனிக்கப் பட்டதால் வேண்டுமென்றே அதாவது பழைய அரசின் கொள்கைகள் அனைத்தையும் அவை சரியானவையா? அல்லது தவறானவையா? என்று கருதாமல் பாரபட்சமாகக் கிடப்பில் போடும் அல்லது கைவிடும் போக்கைப் புதிய அரசாங்கம் கடைப்பிடிக்கிறது என்ற பொதுவான ஒரு கருத்தினை மேலே கூறிய தனிநபர்களும் அமைப்புகளும் முன் வைக்கின்றன.//

          இல்லை.நிச்சயமாக இல்லை.ஆளும் பார்ப்பன கும்பல் சமச்சீர் கல்வியை ஏன் தடை செய்கிறது என்பதற்கான விடை பெரியார் அதில் வருகிறார்.கருணாநிதியை பாடத்திலிருந்து தூக்கியடிப்பதை போல பெரியாரை தூக்கிப் போட்டால் அம்பலமாகி விடுவோம் என்பதால் மொத்தமாக ஊத்தி மூடப் பார்க்கிறது.குப்பத்து பிள்ளைக்கும் என் மகனுக்கும் ஒரே கல்வியா என்ற வக்கிர புத்தி அதற்கு துணை போகிறது.

          • //மற்றபடி ஆசிரியர்களிடம் காணப்படும் குறைபாடுகள் குறித்தும் அவற்றை களைவது குறித்தும் பேசுவதற்கு இது தருணமல்ல.அவற்றை காட்டி சமச்சீர் கல்வியை தடை செய்வது ஏற்று கொள்ள முடியாதது.///

            சமச்சீர் கல்வியை தடை செய்ய சொல்லி நான் எங்காவது சொல்லியிருந்தேனா ? நீங்க த்ரும் புள்ளிவிபரங்கள் எல்லாம் பள்ளி இறுதி வகுப்புகளுக்கு தான். ஆரம்ப பள்ளிகளின் நிலை மற்றும் annual drop out ratio பற்றியும் தான் நான் பேசினேன்.

            அந்த கீற்று சுட்டியில் எட்டாம் வகுப்பு வரை உள்ள நிலை பற்றி சொல்லப்பட்டிருப்பவை பற்றி பேசக் கூட மாட்டீஙகிறீக. ஆசிரியர்களின் பொறுப்பற்ற தன்மை பற்றியும்..

            சரி, அப்ப அரசு ஆசிரியர்களின் நிலை பற்றி இப்ப பேசமால் வேற எப்ப பேசுவதாம். இப்படியே தொடர்ந்தால் பெரிய பிரச்சனை இல்லை என்றால், அப்பறம் உங்க இஸ்டம். நான் மட்டும் ஏன் தொடர்ந்து இதை பேசிக்கொண்டிருக்க வேண்டும்.
            இங்கு எழுதும், படிக்கும் அனைவரும் (அல்லது மிக பெரும்பான்மையோர்) தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் (முக்கியமாக ஆரம்ப பள்ளிகளில்) சேர்க்க போவதில்லை. பரம ஏழைகளில் பசங்க தான் அங்க படிக்ககிறாக. so why bother ? huh ?

            • //அரசு பள்ளிகள் குறித்த மட்டமான அபிப்ராயத்தை மக்களிடையே உருவாக்குவதில் ஏற்கனவே கல்வி கொள்ளையர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள்.///

              :))). மக்கள் என்ன அவ்வளவு மூடர்களா ? அப்படி எல்லாம் ’சதி’ செய்து அபிப்பராயத்தை எல்லாம் உருவாக்க முடியாது. உண்மை நிலை பற்றி எல்லோருக்கும் தெரியும். பெரிய தத்துவ பிரச்சனை அல்ல இது. மிக சுலபமாக புரியும் விசியம்.

  5. சுயசிந்தனையை, பகுத்தறிவை வளர்த்து சமூக மாற்றத்தில் பங்குகொள்ள சமச்சீர் கல்வியின் அவசியத்தை உணர்ந்து போராடுவோம்.வெற்றி பெருவோம்.உண்மைத்தோழன் அவர்களுக்கு புரட்சிகரவாழ்த்துக்கள்.

    • சுயசிந்தனையை, பகுத்தறிவை வளர்த்து சமூக மாற்றத்தில் பங்குகொள்ள “உலகத்தரம்” வாய்ந்த சமச்சீர் கல்வி உலகமக்கள் அனைவரும் பெற சமச்சீர் கல்வியின் அவசியத்தை உணர்ந்து போராடுவோம்.வெற்றி பெருவோம்.

  6. தனது ‘சொந்த மகனை’ ஒழுங்காக படிக்க வைக்க முடியாத விஜயகாந்த், ‘சமச்சீர் கல்வி’ மற்றும் ஒன்னரை கோடி தமிழக கிராமபுற மாணவர்கள் குறித்து தெரிவித்துள்ள மட்டமான ‘அறியாமை’ கருத்து!!!

    http://tamil.unitymedianews.com/2011/08/12/vijaykaanth-bluffs-about-samachcheer-kalvi-after-his-loyala-college-fiasco-in-enrolling-low-scoring-son/

Leave a Reply to raja பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க