privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஆசியாஇஸ்லாமியப் பெண்களைச் சிதைக்கும் ஆணாதிக்க அமிலம்!

இஸ்லாமியப் பெண்களைச் சிதைக்கும் ஆணாதிக்க அமிலம்!

-

13 வயது  ஜன்னத் உறங்கிக் கொண்டிருக்கிறாள். தன் மேலிருந்த போர்வை உருவப்படுவதை உணர்ந்து கண் விழிக்கிறாள். சில நொடிகளில் என்ன நடக்கிறதென்று  உணர்வதற்குள்ளேயே, அவளது நெஞ்சும், முகமும் தாங்க முடியாத அளவுக்கு வலியும், எரிச்சலுமடைகிறது. அவளுக்கருகில் உறங்கிக் கொண்டிருந்த அவளது தம்பிக்கும் முதுகில் வலி.  ஜன்னல் வழியாக வீசப்பட்ட பாட்டரி ஆசிட் தாக்குதல்தான் இச்சிறுமியின், அவளது தம்பியின் வலிக்கும் எரிச்சலுக்கும் காரணம்.

ஜன்னத் மீது ஆசிட் வீசியவர் அவளது வீட்டுக்கருகில் வசிக்கும் 20 வயது இளைஞர். ஜன்னத்தின் முகத்தை ஆசிட் வீசி சிதைக்கக் காரணம்,  அவள் அவ்விளைஞரின் திருமண ஆசைக்குச் சம்மதிக்காததுதான். பெண்களின் மீதான ஆசிட் தாக்குதலைப் பற்றி அதுவரை கேள்விப்பட்டிருக்க மட்டுமே செய்திருந்த ஜன்னத்தின் குடும்பத்தினருக்கு அன்றுதான் அதன் உண்மையான வலியும், வேதனையும், சூழ்நிலையின் பதைபதைப்பும் புரிந்தது. சில நூறு கிலோமீட்டர்கள் தள்ளி இருக்கும் தலைநகர் டாக்காவிற்கு ஜன்னத்தை உடனடியாக அழைத்துச் சென்றார்கள்.  ஆனாலும் மருத்துவமனையில் இடம் இல்லாத காரணத்தால் ஆசிட் காயத்துடனே காத்திருந்த ஜன்னத் க்கு மறுநாள்தான் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ரூபாலிக்கு திருமண வாழ்வைப் பற்றி ஒரு அழகான கனவு இருந்தது. ஆனால், அந்தக் கனவு திருமணமான ஆறு மாதங்களிலேயே ஆட்டம் கண்டது.  வரதட்சணையாக ஒரு மோட்டார் பைக்கை வழங்கியிருந்தார் ரூபாலியின் தந்தை. ஆனாலும் இன்னும் பணத்தை வாங்கி வருமாறு அவளது கணவனும், மாமியாரும் வற்புறுத்தினர்.  ரூபாலியைக் கடுமையாக நடத்தியதோடு, நாள் முழுவதும் ஓய்வில்லாத வீட்டு வேலைகளைச் செய்யுமாறும் கட்டாயப்படுத்தினர்.

முடிவில் ரூபாலி தன் பெற்றோர் வீட்டுக்குச் செல்ல வேண்டுமென்று கூறியபோது, அவரது கணவனும் மாமியாரும்  அவருடன் வாக்குவாதம் செய்து சண்டையிட்டனர். அதைத் தொடர்ந்து அடிக்கவும் முற்பட்டனர். திடீரென்று அவள் எதிர்பாராத தருணத்தில்,  ரூபாலியின் மாமியார்  அவரைப் பின்னாலிருந்து பிடித்துக்கொள்ள  கணவன் அவரது வாயில் ஆசிட்டை ஊற்றினான்.

அக்கம்பக்கத்து வீட்டினர் ரூபாலியைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனாலும், மருத்துவர்களால் முதலுதவி அளிக்க முடியவில்லை.  டாக்காவிற்கு அழைத்துச் சென்றாலும் ரூபாலிக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. ரூபாலியின் பெற்றோரால் மருந்துகளை விலை கொடுத்து வாங்க முடியாததே அதற்குக் காரணம்.

இந்த ஆசிட் வீச்சு ஜன்னத்துக்கோ அல்லது ரூபாலிக்கோ மட்டும் நடந்ததல்ல. பங்களாதேஷில்  ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 300 பெண்கள் ஜன்னத்தைப் போலவும், ரூபாலியைப் போலவும் ஆசிட் வீச்சுக்கு உள்ளாகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கின்றது. பாதிக்கப்பட்டவர்களில் பாதிப்பேர்  18 வயதுக்கு உட்பட்டவர்கள்.

78 சதவீத ஆசிட் வீச்சுகளுக்குக் காரணம்  காதலை ஏற்க மறுத்தது மற்றும் திருமணத்துக்கு சம்மதம் அளிக்காதது அல்லது உடலுறவுக்குச் சம்மதிக்காதது போன்றவையே.  வரதட்சணை, குடும்பச் சண்டைகள், சொத்துப் பிரச்சினைகள்  முதல்  சமையல் செய்வதில் ஏற்படும் சிறு தாமதம் கூட இந்த ஆசிட் வீச்சுக்குக் காரணமாக அமைந்து விடுகின்றன. தாக்குதலுக்கு உள்ளாகுவோரின் மருத்துவச் செலவுகளுக்காகப் பெற்றவர்கள் நிலத்தை விற்க வேண்டிவரும் என்பதற்காகவே  நிலத் தகராறுகளுக்காகவும் ஆசிட் தாக்குதல்கள் நடக்கின்றன.

இந்த ஆசிட் வீச்சுகள் பெரும்பாலும் இரவு நேரங்களில்தான் நடக்கின்றன. அல்லது மிக அவசியமான வேலைகளுக்காகப் பெண்கள் வெளியே செல்லும் சமயங்களில் இந்த ஆசிட் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். அருகிலிருப்பவர்களும் இந்தத் தாக்குதலில் பாதிக்கப்படுவதால், சுதாரித்துக்கொண்டு மருத்துவமனைக்குச் செல்வதும் தாமதமாகின்றது.

ஆசிட் எனும் கொடூரமான ஆயுதம் ஏன் எனில்  கார் பாட்டரியின் ஆசிட் கிடைப்பது எளிது, அதே சமயத்தில் விலை மலிவான ஆயுதமும் கூட.   ஒரு சில நாணயங்களில் ஒரு முழுக் கிண்ணம் அளவுக்கு ஆசிட் எங்கு வேண்டுமானாலும் கிடைக்கும். இந்த ஆசிட் வீச்சுகள் எல்லாம், முக்கியமாக முகத்தை நோக்கிக் குறிவைத்து வீசப்படுகின்றன.  பாதிக்கப்பட்டவரின் முகம் முற்றிலும் பாதிப்புக்குள்ளாகிறது. ஒருவரது சொந்த அடையாளத்தையே சிதைப்பது குரூரத்தின் உச்சநிலையாக இருக்கிறது! அவர்களது வாழ்க்கையே முற்றிலும் மாறிவிடுகின்றது. பல்லாண்டு காலம் பெண்கள் முகத்தை மூடியிருந்த ஹிஜாப்,  பிரான்ஸ் நாட்டில் தடை செய்யப்பட்டு அவர்கள்  தங்கள் சுய முகத்துடன், அடையாளத்துடன் வெளிவருகிற நேரத்தில் பங்களாதேஷ் தனது பெண்களை ஆசிட் வீசி பர்தாவுக்குள் ஒரேயடியாகத் தள்ளுகிறது.

பெண்கள் உடல் ரீதியாக, மன ரீதியாக, பொருளாதார  ரீதியாக பல தாக்குதல்களுக்கு உள்ளாகின்றனர். அதில் பெரும்பான்மை குடும்ப வன்முறையாகத்தான் இருக்கிறது.  உலகம் முழுவதிலும்  பெண்கள்  குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுகின்றனர் என்றாலும், மூன்றாம் உலக நாடுகளில் மதத்தின் பெயரால்  பெண்கள் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர், சுரண்டப்படுகின்றனர், உதாசீனப்படுத்தப்படுகின்றனர். இந்த வகையான ஆசிட் வீச்சுகள் பாதிக்கப்பட்டவரை முற்றிலுமாக நிலைகுலையச் செய்து விடுகின்றன.   இந்தத் தாக்குதலால் அவர் உயிரிழப்பதில்லையே தவிர உறுப்புகள் மிகுந்த பாதிப்படைகின்றன. சில சமயங்களில் மேல் தோல் மட்டுமன்றி எலும்புகளும் சிதைந்து விடுவதுண்டு.  இந்த ஆசிட் வீச்சால் ஏதாவது  ஒரு உறுப்பை அல்லது சில உறுப்புகளை இழக்க வேண்டியதாகிறது. பெரும்பாலானோர் கண்களை இழக்கின்றனர் அல்லது கேட்கும் திறனை இழந்து விடுகின்றனர்.

இந்தத் தாக்குதல்கள் அப்பெண்களுககு நிரந்தப் பாதிப்பு என்பதோடு மட்டுமல்லாமல் அவர்களது தன்னம்பிக்கையையும் குலைத்துப் போடுகின்றது.  ஒவ்வொரு நாளும் சமூகத்தோடு செத்து மடிய வேண்டியிருக்கிறது.  அன்றாட வாழ்வுக்கே போராட வேண்டியிருக்கிறது.  இந்தப் பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியைப் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாது அந்தக் குடும்பங்களுமே அனுபவிக்கின்றன.  ஒவ்வொரு நாளும் செத்து செத்து உயிர் வாழ்வதற்குப் பதிலாக  ஒரேயடியாக இறந்து போனால் முற்றிலும் விடுதலையடைந்ததாக இருக்கும் என்று கூடப் பலர் கருதுகிறார்கள்.  எப்படியோ  மீண்டு வந்து விட்டாலும், மனப்போராட்டங்கள் அவர்களைத் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள், தங்களைப் பார்ப்பவர்கள் உடனடியாக வெளிப்படுத்தும் அதிர்ச்சியைத் தாங்கிக்கொண்டுதான் வாழ வேண்டியிருக்கிறது.

அவர்களால் தொடர்ந்து சமூகத்தில் முன்போல உலவ முடிவதில்லை. கல்லூரிக்குச் செல்லவோ அல்லது வேலைக்குச்  செல்லவோ  முடிவதில்லை. தனிமையையே நாடுகிறார்கள். இது அவர்களது சமூக மற்றும் பொருளாதார ரீதியான வாழ்வை நிலைகுலையச் செய்து விடுகிறது. சமயங்களில் அவர்களது சொந்தக் குடும்பங்களாலேயே கைவிடப்படுகின்றனர். மறுமணம் நடப்பதும் மிகவும் அபூர்வம்.  பாதிக்கப்பட்ட இந்த அப்பாவிப் பெண்கள்  மன உளைச்சல்  காரணமாகத் தற்கொலை செய்தும் கொள்கிறார்கள்.

அதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீண்ட கால மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இது பங்களாதேஷ் போன்ற நாடுகளில் மிகவும் கடினம். அதோடு மருத்துவச் செலவும் மிகவும் அதிகம். ஒரு மணி நேர அறுவைச்சிகிச்சைக்கே பல நூறு அமெரிக்க டாலர்கள் வரை தேவையாக இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட வேண்டியிருக்கும். பாதிக்கப்பட்ட பெண்களின் ஏழ்மை நிலைமை இதற்கு இடம் கொடுப்பதில்லை.

டோலி அக்தர் என்ற 16 வயதுப் பெண், காதலை மறுத்த காரணத்துக்காக ஆசிட் தாக்குதலுக்கு உள்ளானாள். அவளது தந்தையிடமிருந்த முழுச்சொத்தும் அவளது மருத்துவத்துக்கே செலவானதால், படிப்பை நிறுத்தி விட்டு தற்போது துணிகளைத் தைத்துக் கொண்டிருக்கிறாள். சிறு வயதில் அவளது வாழ்க்கை அவளது மற்ற நண்பர்களைக் காட்டிலும் முற்றிலும் மோசமானதாக மாறியிருக்கிறது.

பீனா என்ற மற்றொரு சிறுமி, அவளது  உறவினரான மற்றொரு சிறுமியை முகமூடி அணிந்த நபரிடமிருந்து காப்பாற்றும்போது ஆசிட் தாக்குதலுக்கு உள்ளானாள். இந்தத் தாக்குதல் அவளுக்கு இரவில் நடந்தது. இருவருமே ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பீனா, ஒரு தடகள வீராங்கனை. உலக அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்காக உற்சாகமாகக் காத்திருந்தாள். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு  அவளது கனவுகள் சுக்குநூறாகிப் போய் விட்டன.

பங்களாதேஷில் முன்பை விடப் பெண்கள் பொதுவில் அதிகமாக வெளிவரத் துவங்கியிருக்கிறார்கள்.  ஏழைப் பெண்கள் கல்விக்காகவும், வேலைக்காகவும் தமது கிராமங்களை விட்டு நகர்ப்புறங்களுக்கு வருகிறார்கள்.  இதனாலெல்லாம் பெண்களை புர்க்காவுக்குள் அடக்கி வைக்கும் ஆண் சமூகத்தின் கண்ணோட்டம் மாறி விடவில்லை. வீட்டுக்கு உள்ளேயும், வீட்டுக்கு வெளியேயும் பாதுகாப்பு இல்லாத இந்தப் பெண்கள் மிகவும் எளிதாக இந்த வக்கிரமான பாலியல் வன்முறைக்கு ஆளாகி விடுகிறார்கள்.

பெண்கள் மீதான  ஆசிட் வீச்சுகள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் பெருமளவு நடக்கிறது என்றாலும், பங்களாதேஷ் தான் அதில் முன்னணியில் இருக்கிறது.  இருபது முப்பது ஆண்டுகளாகவே பெண்கள் மீதான  ஆசிட் வீச்சுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதற்கு முக்கியக் காரணங்கள் பழைமை வாதமும், ஆணாதிக்க சமூகமும், அதில் ஊறிப்போன நீதித்துறையுமே.  பெண்களை இரண்டாந்தரமாக நடத்துவது  மூன்றாம் உலக நாடுகளில் மிகவும் சகஜமாக இருக்கிறது.  பெண்கள் தங்களது உடைமை  என்ற  பிற்போக்குக் கண்ணோட்டமும் ஒரு காரணம்.

ஆசிட் வீச்சுகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும், சட்டங்களையும் இயற்றி இருப்பதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால், குற்றவாளிகளில் ஒன்றிரண்டு பேரைத் தவிர பெரும்பாலோனோர் தண்டிக்கப்படுவதேயில்லை. அவர்கள் சட்டங்களின் துணை கொண்டே வெளியில் வந்து வழக்கம் போல் நடமாடுகின்றனர். சகஜமான  வாழ்க்கையை வாழ்கின்றனர். அவர்களுக்கு எவ்விதக் குற்றவுணர்வும் ஏற்படுவதில்லை.

***

ஏனெனில் பெண்களை அடிமைப்படுத்துவது என்பது மத ரீதியாக வளர்த்தெடுக்கப்படுகிறது. பிற்போக்குத்தனத்தில் ஊறிப்போன மதங்களுக்கு இசுலாமும் விதிவிலக்கல்ல. பிற்போக்குத்தனத்தில் கட்டுண்ட மதங்கள் அனைத்தும் ஒன்றுபடுவது ஒரு விசயத்தில்தான் – பெண்ணடிமைத்தனமும், ஆணாதிக்கமும். இதனைச் சுட்டிக்காட்டினால், இசுலாம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு விட்டதாகக் கூறுகிறார்கள் இசுலாம் மதத்தலைவர்கள். உண்மையில்,  பெண்களுக்குச் சில உரிமைகளை இசுலாம் வழங்குவதாகவும், ஒரு சில  இனத்தவரின் பழக்க வழக்கங்களும்,  பெண்ணடிமைத்தனமும்தான் இந்நிலைமைக்குக் காரணம் என்றும் கூறுகின்றனர். முகமது  நபி சில உரிமைகளைப் பெண்களுக்கு வழங்கியிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

எடுத்துக்காட்டாக, பிறந்த பெண் குழந்தைகளை  வேண்டாத குழந்தையென்று மண்ணில் புதைக்கும் வழக்கத்தை அவர்தான் தடை செய்ததாகவும் கூறுகிறார்கள். அதோடு, குரான் அடிப்படையில்  பெண்களுக்கு சொத்துரிமையும், பாலியல் ரீதியான சுதந்திரமும்  இருப்பதாகக் கூறுகிறார்கள். பெண்களுக்குச் சொத்துரிமை வழங்காத, சதி எனும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை பாரம்பரியம் என்று சொல்லிக்கொள்ளும் இந்து மதத்தோடு ஒப்பிடுகையில் இசுலாம் பெண்களுக்கு இவ்வுரிமைகளை வழங்கியிருப்பது உண்மைதான்.

ஆனாலும் இவ்வுரிமைகளினால் பெண்களுக்கு சம உரிமையோ, குரான் படி பெண்களின் பெண்ணடிமைத்தனம் முற்றிலும் களையப்படவோ இல்லையென்றுதான் கூற வேண்டும். இசுலாமைப் பொறுத்தவரைக்கும் மூன்று வகையான மனிதர்கள் இருக்கிறார்கள். ஆண்கள், பெண்கள் மற்றும் முசுலீம் அல்லாத பிற சமய மக்கள். இதில் பெண்கள் என்பவர்கள் ஒரு முசுலீம் ஆணில் பாதிக்குச் சமம். ஒரு பெண்,  ஆணுக்குக் கொடுக்கப்படும் சொத்துரிமையில் பாதியைத்தான் பெறுவாள்  என்பதே இதற்குச் சான்று. ஒரு பெண் கீழ்படியவில்லை அல்லது கண்ணியமற்ற முறையில் நடந்துக்கொள்வதாக தெரிந்தால், ஆண் அவளை அதட்டிக் கேட்கலாம்; உடலுறவுக்கு மறுத்தால் அடிக்கலாம் என்றும் குரான் கூறுகிறது.

குரானின் (சுரா 4:34) படி, ஆணின் கையிலேதான் பெண்ணைக் குறித்த முழு அதிகாரமும் இருக்கிறது. பெண்ணைப் பராமரிப்பதிலேயே ஆண் தனது செல்வத்தைச் செலவழிப்பதால் பெண்ணை விட ஆணை உயர்ந்தவராக கடவுள் படைத்திருப்பதாகக் கூறுகிறது. நல்லபடியாக (!) நடந்துக்கொள்ளும் பெண்களுக்கு ஆண்களைப் போலவே சரிநிகராக உரிமைகள் இருந்தாலும், ஆணே எப்போதும் பெண்ணை விட உயர்ந்தவராகக் கருதப்படுவார் என்றும் குரான் கூறுகிறது.

இசுலாமிய ஷரியத் சட்டப்படி, ஒரு ஆணுக்கு நான்கு மனைவிகள் இருக்கலாம்.  தலாக் என்று மூன்று முறை கூறுவதன் மூலம்  தனது மனைவியை அல்லது மனைவிகளை மணவிலக்குச் செய்யலாம். ஆனால், ஒரு பெண் விவாகரத்து பெறுவது என்பது நடைமுறையில் மிகச்சிக்கலானது. இசுலாமியச் சட்டப்படி பெண்களும் விவாகரத்து கோரலாம் என்றும், தாய் என்ற இடத்தில் பெண்கள் வணக்குரியவர்களாகவும், மதிப்பிற்குரியவர்களாகவும் வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஆனால், விவாகரத்தின்போது குழந்தைகளை  உரிய வயது வரும் வரையில் வைத்துப் பராமரிக்கும் உரிமை தந்தைக்கே கிடைக்கிறது.  தங்களது குழந்தைகளை இழந்து விடுவோமோ என்ற பயத்தினாலேயே  பெண்கள் தங்கள் கணவன் பலதார மணம் புரிந்தாலும் அதனை ஏற்றுக்கொள்கிறார்கள். மேலும் பெண்களுக்கு தாய் என்ற மதிப்பிற்குரிய அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பதாகக் கூறும் இசுலாம்தான், குழந்தைகள் தந்தையின் உரிமை என்றும் கூறுகிறது.

அதன்படி தாய் என்பவள் ஒரு பராமரிப்பு வேலைகளைச் செய்பவர் என்றுதான் ஆகிறது. எனில், குரான்படி பெண்களுக்கு சம உரிமைகளோ, சுதந்திரமோ இருக்கிறதென்று எப்படிக் கூற முடியும்?

இசுலாமிய ஷரியத் படி, ஒரு பெண்ணைக் கொலை செய்தால் அதற்குத் தண்டனையாக ஒரு ஆணைக் கொலை செய்ததற்கு அபராதமாகச் செலுத்தப்படுவதில் பாதியைச் செலுத்தினால் போதும். நீதிமன்றத்தில் ஒரு பெண்ணின் சாட்சியானது ஒரு ஆணின் சாட்சியில் பாதியாக மதிக்கப்படும். ஆண், பெண்ணை பராமரிப்பதால் பெண் மீது ஆணுக்கு அதிகாரம் உண்டு. இதிலிருந்து, இசுலாம் பெண்களை சுமையாகத்தான் கருதுகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இத்தனைக்கும்,  குழந்தைகளைப் பராமரிப்பதிலிருந்து வீட்டு வேலைகளை செய்வதிலிருந்து குடும்பத்துக்குத் தேவையான  அனைத்து உழைப்பும் பெண்களிடமிருந்தே சுரண்டப்படுகிறது. ஒன்பது வயதுச் சிறுமிகள், தங்கள் தந்தையராலேயே மணம் முடித்துக் கொடுத்துவிடப் படுகின்றனர். தாய் மறுத்தாலும் அதைக் கணக்கில் கொள்வதில்லை.  பெரும்பாலான சமயங்களில் அந்த ஆண்களுக்கு அது இரண்டாவது அல்லது  மூன்றாவது திருமணமாக இருக்கும். தீவிர நம்பிக்கைக்குரிய மதத் தலைவர்கள், பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதைக்கூட உயர்த்தத் தயாரில்லை. முகமதுவின் மனைவியருள் ஒருவரான ஆயிஷா திருமணம் நிச்சயிக்கப்படும்போது ஏழு வயதாக இருந்தார். திருமணத்தின்போது  அவருக்கு  ஒன்பது வயதுதான். முகம்மது நபிக்கோ கிட்டதட்ட ஐம்பது வயதிருக்கும். அதோடு அவருக்குப் பல மனைவிகள் இருந்ததாகவும் தெரிய வருகிறது.

பெண்கள்  உரிமைகளுக்கான சட்டங்கள் எதுவும் அரசாங்கத்தால் முன் எடுக்கப்பட்டால் அது மதவாதிகளின் தீவிர எதிர்ப்புக்குள்ளாகும். குரானை எவ்விதத்திலும் மாற்றத்துக்கு உள்ளாக்காமல் கடைபிடிக்க வேண்டுமென்று கண்மூடித்தனமாக அச்சட்டத்தை எதிர்ப்பார்கள். ஈரானியப் பெண் சக்கீனாவை அவ்வளவு சீக்கிரம் நாம் மறந்திருக்க முடியாது. தகாத உறவுள்ளவராக குற்றஞ்சாட்டி அவரைக் கல்லாலேயே அடித்துக்கொல்ல வேண்டுமென்று தண்டனையும் விதித்தது, அரசு. அவருக்கு 99 கசையடிகளும் கொடுக்கப்பட்டது. சுரா (24:1) இல் தகாத உறவு கொண்டவராக இருந்தால் 100 கசையடிகள் கொடுக்கப்பட வேண்டுமென்று சொல்லப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள்.  முகம்மது நபி கல்லால் அடித்துக்கொல்லப்படுவதை கண்டித்திருந்தாலும், ஒரு இடத்தில் பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட இருவரையும்  கல்லால் அடித்துக் கொல்லுமாறு கூறுகிறார்.

இன்று இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அதனை  பெண்களுக்கு மட்டுமே உரிய தண்டனையாக மாற்றி விட்டார்கள். ஏனெனில் ஆண்களுக்கு நான்கு மனைவிகள் வரை வைத்துக்கொள்ள உரிமை இருக்கிறது. பல முசுலீம் நாடுகளில் பெண்களைக் கல்லால் அடித்துக் கொல்லும்  தண்டனை இன்றும்  நடைமுறையில் உள்ளது.  ஒருபெண் முதலிரவில் கன்னித்தன்மை இல்லாதவளாகக் கருதப்பட்டால் அவளது உறவினர்களாலேயே கொல்லப்பட்டு விடுவாள்.

இவ்வகையான கவுரவக் கொலைகள் இசுலாமிய நாடுகளில் சர்வசாதாரணமாக நடைபெறுகிறது. இந்த கவுரவக் கொலைகளுக்குப் பிஞ்சுக் குழந்தைகளும் தப்புவதில்லை. ஜோர்தானில்  எட்டு வயதுச் சிறுமி  தந்தையிடம் சொல்லாமல் நண்பர்களைப் பார்க்கச் சென்றதற்காக அடித்தே கொல்லப்பட்டாள்.  பெண்கள் உயிர் வாழ்வதும், உயிர் பறிக்கப்படுவதும் ஆண்களின் கையில்தான் இருக்கிறது. இப்படி உயிரைப் பறிக்கும் ஆண்கள் அவர்களது நண்பர்களாலும், உறவினர்களாலும் ஒரு ஹீரோவைப் போலத்தான் நடத்தப்படுகிறார்கள். இந்தியாவிலும் இந்தக் கவுரவக் கொலைகள், சாதி மற்றும் கோத்திரத்தின் பெயரால் நடைபெறுவதைக் கவனித்திருக்கலாம்.

இப்படி பெண்களின் நடத்தை, கண்ணியம் எல்லாமே ஆண்களின் மேற்பார்வையிலிருப்பதால் பெண்களும் தங்களைப் போல சம உரிமை பெற்ற மனித உயிர் என்று கருத அவர்கள் மறுக்கிறார்கள். சொல்லப்போனால், அப்படிச் சமமாக நடத்துவதை மதமே அல்லவா தடுத்து நிறுத்துகிறது?

மதத்தின் பெயரால், பெண்களின் கழுத்தின் மீதுதான் ஆண்களின் கால்கள் ஊன்றி நிற்கின்றன என்பதை மறுக்க முடியாது. இசுலாமிய சமூகத்தில் மதமே வாழ்வின் எல்லாவற்றிலும் கோலோச்சுகிறது – அவர்களுக்கென்று தனிப்பட்ட சட்டதிட்டங்கள், பழக்க வழக்கங்கள் என்று சகலமும் மதத்தையே முதுகெலும்பாகக் கொண்டிருக்கின்றன – இதற்கு எந்த மதமும் விதிவிலக்கல்ல என்றாலும்.

***

இந்தப் பின்னணியில்தான் நாம்  ஆசிட் தாக்குதல்களையும் நோக்க வேண்டியிருக்கிறது. எண்ணெயைப் பன்னாட்டு கம்பெனிகளுக்கு விற்று மேற்குலகின் செல்வச்  செழிப்போடும், நவ நாகரிகத்தோடும் பின்னிப் பிணைந்து வாழும் அரபு முதலாளிகள் தங்கள் இனப் பெண்களை பர்தாவுக்குள் அடைக்கின்றனர். ஒழுக்கம், கண்ணியம், கற்பு என்று வரும்போது மட்டும் குரானுக்குள் ஒளிந்துகொண்டு  பெண்களைப் பலிகடாவாக்குகின்றனர். இந்த இரட்டை வேடத்தில் இந்துமதப் பயங்கரவாதிகளுக்கு சற்றும் குறைந்தவர்களில்லை, இசுலாமிய மதவாதிகள்.

சாதி மாறிக் காதலித்தால், ஒரே கோத்திரத்தில்  திருமணம் செய்து கொண்டால் பெண்ணை கண்டந்துண்டமாக்குவது பார்ப்பனிய இந்துமதம். சாதிக்குள்ளும்,  கோத்திரத்துக்குள்ளும் பெண்ணை அடைத்து வைத்திருக்கிறது இந்துமதம். பர்தாவுக்குள் அடைத்து வைத்திருக்கிறது இசுலாமிய அடிப்படைவாதம்.

ஒரு பெண்ணுக்கு மணமகன் கொடை அளித்துத்தான் திருமணம் செய்ய வேண்டுமென்பதாகக் கூறினாலும் உண்மை வேறு மாதிரியாக இருக்கிறது. பங்களாதேஷின் பெரும்பாலான ஆசிட் தாக்குதல்கள் ஏழை மக்களிடையே வரதட்சணைக்காகவே நடத்தப்பட்டிருக்கிறது. ஒரு பெண் தனது காதலை நிராகரித்தால் அல்லது தனது ஆசைகளை நிறைவேற்ற மறுத்தால் தாங்கிக்கொள்ள முடியாத ஆணின் ஈகோ வக்கிரமாக அந்தப்பெண்ணைப் பழிவாங்கத் துடிகிறது. அதற்கு மதமும் துணை போகிறது.

இதுவே ஒரு பெண் ஆணின் மீது ஆசிட் தாக்குதலை நடத்த முடியாதா? கண்ணுக்குக் கண்; பல்லுக்குப் பல் என்பதுபோல ஆசிட் அதே விளைவுகளைத்தான் ஆண் மீதும் ஏற்படுத்தும் என்றாலும், ஒரு பெண் அவ்வாறு செய்வாளென்று யாரும்  எதிர்ப்பார்ப்பதில்லை. நினைத்துக்கூட பார்ப்பதில்லை. அடங்கி நடக்க வேண்டியவளாகத்தான் எதிர்ப்பார்க்கப்படுகிறாள்.

ஆப்கானிஸ்தான் ரஷ்யாவின் கீழ் இருந்தவரை பெண்களுக்கான சம உரிமைகள் சட்டங்கள் மூலமாகத்தான் நிலைநாட்டப்பட்டன, மதத்தின் மூலமாக அல்ல. பங்களாதேஷில் பல பெண்கள் பொதுவாழ்வில் வெற்றிகரமாக ஈடுபட்டு வந்தாலும் சாமானிய மக்கள் வாழ்க்கையில் எந்தப் பெரிய மாற்றமும் இல்லாததற்கு இந்த மதரீதியான அடக்குமுறையே காரணம்.

ஷேக் ஹசீனா, காலிதா ஜியா மற்றும் சயீதா சஜீதா சவுத்ரி போன்றவர்கள் முக்கியமான  அரசியல் பதவிகளை வகிக்கின்றனர்.  2008 ஆம் ஆண்டின் கணக்குப்படி பொதுத்துறையில் உள்ள 4419 பேரில் பெண்கள் 673 பேர்தான். பெண்கள் முன்னுக்கு வருவதற்கு ஏகப்பட்ட மசோதாக்களும், சட்டங்களும், வளர்ச்சித்திட்டங்களும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

இருந்தாலும், பெண்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமலே தீட்டப்படும் திட்டங்கள் வெறும் ஏட்டளவில்தான் இருக்க முடியும். 2000 ஆம் ஆண்டும், 2002 ஆம் ஆண்டும் சில கடுமையான சட்டங்கள் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டன. சட்டத்துக்குப் புறம்பான வகையில் ஆசிட் கையாளப்பட்டது தெரியவந்தால் 10 முதல் 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை உண்டு. ஆசிட் தாக்குதல் நடத்தும் குற்றவாளிக்கு மரண தண்டனையும் உண்டு.  இதனாலெல்லாம் இந்தத் தாக்குதல்களைப் பெருமளவு நிறுத்திவிட முடியவில்லை என்பதுதான் நடைமுறை எதார்த்தம். எளிதில் குற்றவாளி வெளியில் வந்துவிட முடிகின்ற சட்டத்துறையும், ஊழல் மலிந்த காவல்துறையும் ஒரு காரணம். அதோடு குற்றவாளி பணக்காரராக இருந்தால் நிலைமை இன்னும் மோசம்.

நீதிமன்றத்துக்கு வரும் பாதிக்கப்பட்டவர்களை தொடுத்த வழக்கினைத் திரும்பப் பெறுமாறு மிரட்டுவார்கள். இல்லையென்றால், குடும்பத்தினரைத் தாக்கப் போவதாகவும் சொல்வார்கள்.  தன் சகோதரிக்காக வழக்குத் தொடுத்திருந்த ஒரு பெண் குற்றவாளியின் குடும்பத்தினரால் மிகக் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டாள். வழக்குத் தொடுப்பவர்கள் மற்றும்  பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த வறுமை நிலையிலிருப்பதால் அதிகாரத்தை எதிர்த்து நிற்க முடிவதில்லை. பெரும்பாலும் தன்னார்வக் குழுக்களின் இல்லங்களிலேயே இப்பெண்கள் காலம் கழிக்க நேரிடுகிறது.

பல தன்னார்வக் குழுக்கள் ஆசிட் வீச்சினால் பாதிப்படைந்தவர்களுக்கு ஆதரவளிக்கின்றன. அதோடு மருத்துவ உதவிகளை இயன்ற அளவுக்குச் செய்கின்றன. இருந்தாலும் பாதிப்படைந்தவர்களுக்கு உதவுவதாக எண்ணி அவர்களைத் தனிமைப்படுத்தி விடுகின்றன. கல்வியும், வேலையும் தருவதாகக் கூறிக்கொண்டு அவர்களைச் சமூக வாழ்க்கையிலிருந்து பிரித்தெடுத்து விடுகின்றன. வக்கிரமாகப் பாதிக்கப்பட்ட இப்பெண்கள், மேலும் இரக்கமற்ற வாழ்க்கைக்கே உந்தப்படுகிறார்கள்.

உதவும் நோக்கு என்று சொல்லிக் கொண்டாலும் இந்தத் தன்னார்வ குழுக்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றுமொரு தண்டனையாகவே அமைந்து விடுகின்றன.  எந்த உடல்நலக் குறைபாடோ, நோயோ இது போன்ற விளைவுகளை ஏற்படுத்துவதில்லை.  ஒருபோதும்  தங்களது பழைய உருவத்தை, அடையாளத்தைப் பெற முடியாது என்பது அவர்களது முகத்திலறையும் உண்மையாக இருக்கிறது. இதனை ஏற்றுக்கொண்டு வாழவேண்டிய  கட்டாயத்துக்குத் தள்ளப்படுகின்றனர். பங்களாதேஷ் கிராமங்களில் அவர்கள் ஒருபோதும் தமது பழைய அங்கீகாரத்தைப் பெறுவதில்லை.

வாழ்வாதாரத்துக்காகச் செய்யும் வேலையும் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. ஒன்றிரண்டு வேலைகளையே செய்து பிழைக்க முடியுமென்ற நிலைதான் மீந்திருக்கிறது. அதுவும் அவர்களது பொருளாதார நிலைமையை மிகவும் பாதிக்கிறது.

இதற்குத் தீர்வென்பது, ஆணுக்கும் பெண்ணுக்கும் சரிசமமான  சட்ட உரிமைகளாலும் மற்றும் நீதியாலுமே முடியும். சமூகத்தின் ஒட்டுமொத்தக் கண்ணோட்டமே மாற வேண்டியிருக்கிறது. சீர்திருத்தங்களால் அங்கொன்றும் இங்கொன்றுமாக வேண்டுமானால் ஓரிரு நபர்களுக்கு மட்டும் தீர்வு கிட்டலாமே ஒழிய அது தற்காலிமானதுதான்.

இந்த ஆசிட் தாக்குதல்கள் இந்தியாவிலும் சாதாரணமானதொன்றுதான்.  கடந்த ஜனவரி 9 ஆம் தேதி கேரளாவைச் சேர்ந்த அஞ்சலி என்ற பெண்ணின் மீது உள்ளூர் பாஜக தலைவர் பிஜூ என்பவரின் அடியாட்கள் ஆசிட் வீசியிருக்கின்றனர்.  அஞ்சலிக்கு அந்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. பிஜூவின் ஆட்கள் அஞ்சலியின் வீட்டுக்கு ஃபோன் செய்து கூரியர் வந்திருக்கிறதென்றும், வீடு அடையாளம் தெரியாததால் வெளியில் வந்து நிற்குமாறும் கூறியிருக்கின்றனர். வீட்டுக்கு வெளியில் வந்து  நின்ற அஞ்சலி முகத்தில் ஆசிட்டை வீசியுள்ளனர். தற்போது இதற்கான வழக்கு நடந்து வருகிறது.  இதுவும் இந்துத்துவா காட்டும் பயங்கரவாதத்தின் மற்றொரு கோர முகம்தான்.

இந்தக் கோரமுகம்தான் நாடு முழுக்க கலாச்சாரக் காவலர் வேடமேற்கிறது. மதங்கள் வெவ்வேறானாலும் அதன் தூய்மை பெண்ணை எரிப்பதில்தான் இருக்கிறதென்று நிரூபிக்கின்றன இந்தச் சம்பவங்கள். சாதியையும், பெண்ணடிமைத்தனத்தையும் தனது கைகளாகக் கொண்டு மக்களை நசுக்கும் பார்ப்பனியம்தான் தற்போது அஞ்சலியின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திராவில் காதலை மறுத்த  இரண்டு மாணவிகள் மீது இளைஞர்கள் ஆசிட் வீசியதால் அப்பெண்கள் பலியான சம்பவத்தை செய்தியில் பார்த்திருப்போம். காதலித்த பெண்ணின் மீது ஆசிட் ஊற்றுவது என்ன வகையான நேசம் என்பது புரியவில்லை.

பெண்ணை நுகர்பொருளாக, உடமையாகக் கற்றுக்கொடுக்கும் ஊடகங்களும், சினிமாவும் அவளை அடைந்தே தீரவேண்டிய பொருளாகவே பார்க்கிறது. இந்தக் காதலை வியாபாரமாக்கிக் கொள்ளும் முதலாளித்துவமோ இன்றைய இளைஞர்களிடம் காதலைக் கூவிக் கூவி விற்றுக் காசாக்கிக் கொள்கிறது.  காதலை ஏற்க மறுக்கும் உரிமை  பெண்ணுக்கும் உண்டு என்பதை ஆணாதிக்கம்  உணர மறுக்கிறது. ரஜினி கமல் முதல் இன்றைய தனுஷ் வரை பெண்ணைத் தன் காலடியில் விழ  வைப்பதே ஆண்மைக்கழகு என்று  சவால் விட்டு அதனை நிரூபிக்கவும் செய்கிறார்கள். தனக்குக் கிடைக்காத பொருள் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று ரசிகனுக்கும் கற்பிக்கிறார்கள்.

இந்த வழியில் இன்றைய இளைஞர்களும் அமிலத்தால் பெண்ணைத் துடிக்க துடிக்க அழிக்கிறார்கள். மதம் எதுவாக இருந்தாலும் அதன் ஒழுக்கம், அன்பு, அமைதி என்ற எல்லாவற்றையும் பிரித்துவிட்டுப் பார்த்தால்  மையமாக இருப்பது பெண்ணடிமைத்தனமும், ஆணாதிக்கமும்தான். வாழ்நிலைமைகளையும்,  செல்வத்தை விநியோகிக்கும் சமுதாய நிலைமைகளையும் முதலாளித்துவம் மாற்றியிருக்கிறது. ஆனால் அதன் இலாப நோக்குகளுக்காக நிலப்பிரப்புத்துவத்தின் பிற்போக்குத்தனங்களை அப்படியே நிலவ விட்டு ஆதாயமடைகிறது.  அல்லது பெண்களை அரைகுறையாக சீயர் லீடர்ஸ் என்ற பெயரில் கவர்ச்சிக்கு உபயோகப்படுத்துகிறது.

இந்த நிலப்பிரபுத்துவ பிற்போக்குத்தனங்களையும், முதலாளித்துவ பாலியல் சுரண்டல்களையும் எதிர்த்து மக்கள் அனைவரும் சேர்ந்து போராடுவதுதான் சரியான தீர்வாக இருக்க முடியும். தனிப்பட்ட ஓரிருவர் போராடுவது  எந்தப் பலனையும் தராது. ஆளும் வர்க்கத்தின் பண்பாட்டு, கலாச்சார நிறுவனங்களைத் தகர்க்கும் சக்தி ஒடுக்கப்படும் மக்கள் கையில்தான் இருக்கிறது. அப்படி சமூக நலனுக்காகப்  போராட புறப்படும் மக்கள் கையில்தான் விடுதலைக்கான திறவுகோல் இருக்கிறது.

___________________________________________________________

– வேல்விழி, புதிய கலாச்சாரம், ஜூலை – 2011

_____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

  • அப்படியா?

   //ஒழுக்கம், கண்ணியம், கற்பு என்று வரும்போது மட்டும் குரானுக்குள் ஒளிந்துகொண்டு பெண்களைப் பலிகடாவாக்குகின்றனர். இந்த இரட்டை வேடத்தில் இந்துமதப் பயங்கரவாதிகளுக்கு சற்றும் குறைந்தவர்களில்லை, இசுலாமிய மதவாதிகள்.//

   இந்து மதம் என்றால் ‘பயங்கரவாதிகள்’. இசுலாமிய ‘மதவாதிகள்’. புரியுதா?

   • சீனு,

    தூங்குரவன எழுப்பலாம் சீனு, தூங்குரமாதிரி நடிக்கிற வினவ எழுப்ப முடியாது…இது அய்யாவோடநடுனிலமையினை நிலைனாட்டுவதற்காக ஒரு ஒப்புக்குக்கட்டுரை…

  • Vinavu has the dirty ability to link any criminal issues with hinduism. Thus, you can not say vinavu is not a biased one. In Bangaladesh, all are muslims and why vinavu did’t criticize them directly? What is the necessity to link that issue with hinduism? Can you answer?

   • ஏன்னே இந்து மதம் இந்து மதம்கிறீங்களே, அதுல யாரெல்லாம் இருக்காங்க, யாருங்க அந்த இந்து….?

    • அப்பாடி இப்பவாவது ஒத்துக்கிட்டியே….இந்து மதம்னா என்னான்னு தெரியாமலேயே இத்தனனாளா வினவில் வரும் கார்ப்பரேட் பிஸினஸ் கட்டுரைகளுக்கு கமெண்ட்ஸ் எழுதுறாய்…

     • பையா, எஸ்கேப்பு ஆகாதே ஐயா…
      நேக்குதான் தெரியல, நோக்கு தெரிஞ்சாலாவது சித்த சொல்ப்பிடாதா..
      யாருண்ணா அந்த இந்து? சீக்கிரம் சொல்லுங்கோ டைம் ஆயிண்ட்ருக்கு..

      • ///பையா, எஸ்கேப்பு ஆகாதே ஐயா…///என்ன இது எஙகிட்டே ரைமிங்கா..

       ஏ ஊசி
       னீ விக்கப்போடா பாசி
       எங்களுக்கு நீ தூசி
       இந்து மதத்த ஏசி
       எழுதுறது ஈசி
       உன் சொந்தமதத்துத் தூசி
       வண்டிநிறைய யோசி

    • ” ஏன்னே இந்து மதம் இந்து மதம்கிறீங்களே, அதுல யாரெல்லாம் இருக்காங்க, யாருங்க அந்த இந்து….?”

     இந்து மதம் இந்து மதம் சொல்றோமே, அதுல நல்லவன் , கெட்டவன், சாமியை கும்புடுறவன், கும்பிடாதவன், குண்டு வைக்கிறவன், குண்டு வைக்காதவன், அமைதியை விரும்புறவன், விரும்பாதவன் அப்படி இப்படின்னு சுமார் ஒரு எழுநூத்தி அம்பது மில்லியன் பேரு இருக்காங்க.அவ்வளவு ஏன் இந்த கேள்வியை கேட்கும் உங்க மூதாதையர் கூட இந்த மதத்தை சேர்ந்தவங்கதான். இந்தியாவோட மொத்த மக்கள் தொகைல ஏறத்தாழ எண்பத்து சதவீதம் இந்துக்கள் தான். உலகத்துலயே மூணாவது பெரிய மதம்னு கூட சொல்லலாம்

     நமக்கு அப்பாற்பட்டு விளங்கும் ஒரு சக்தியை இறைவனாக மனதார ஏற்றுக்கொண்டு அதனை முழுமனதுடன் வணங்கி மற்றோருக்கு மனதாலும் தீங்கு நினைக்காமல் வாழும் ஒருவனே உண்மையான இந்து.

     போதுமா?


     மாக்ஸிமம்

     • \\
      இந்து மதம் இந்து மதம் சொல்றோமே, அதுல நல்லவன் , கெட்டவன், சாமியை கும்புடுறவன், கும்பிடாதவன், குண்டு வைக்கிறவன், குண்டு வைக்காதவன், அமைதியை விரும்புறவன், விரும்பாதவன் அப்படி இப்படின்னு சுமார் ஒரு எழுநூத்தி அம்பது மில்லியன் பேரு . . . . .
      \\

      நண்பர் மாக்ஸிமம்
      இந்த பட்டியலில் தீண்டத்தகாதோன்,நோக்கத்தகாதோன் தீண்டாதோன் இவர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

      ஆதியில் வேத மதமாக இருந்தது பின்னர் இங்குள்ள பிற இனத்தவர்களை ஆரியர்கள் அடிமைப்படுத்தியவுடன் புராணங்களில் கூறப்பட்ட மதமாக மாறியது. தனது கடவுளர்கள் அவர்களது உருவம், தன்மை, உறவுநிலைகள் அனைத்தையும் மற்றிக்கொண்டது. இது அடிமைப்படுத்தப்பட்டோரிடம் இருந்து அபகரித்த அவர்களின் கடவுளர்களையும் உள்ளடக்கி ஒரு புது வடிவத்தில் தன்னை திருத்திக்கொண்டது. பூசை மதசடங்குகள் அனைத்தும் மற்றப்பட்டன. சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டன. இப்பொழுது உருவானதுதான் வருணாசிரம சட்டங்கள்.

      பின்னர் வந்தார் தனது அன்பாலும் அறிவாலும் இந்த கொடுமைகளை வேரறுக்க உள்ள ஒருவர். புத்தர். இந்து மதத்தின் சடங்குகள் எவ்வாறு மக்களை அடிமைப்படுத்துகின்றன பிராமணர்கள் எவ்வாறு சதிசெய்கிறார்கள் என்று அம்பலப்படுத்தினார்.
      அவரது காலத்திற்குப் பின் இந்து மதம் தன்னை வேறுவடிவில் உருமாற்றிக்கொண்டது. பல உள்ளடி வேலைகளைச் செய்து புத்த மதத்தை திரிந்து போகச்செய்தது. புத்தனின் உருவத்தையும் சுவீகரித்துக் கொண்டது. புத்தன் ஆரம்பித்துவைத்த இயக்கத்தை இன்னொரு தன்னைப்போன்ற மதமாக திரித்து விட்டது.

      அது வரை மாட்டுக்கறி உண்ட பிராமணப்பதர்கள் மாட்டுக்கறி உண்போன் இழிந்தோன் என்றனர். இது தனது இயல்பான உருமாறும் தன்மைக்கான இந்து மதத்தின் எடுத்துக்காட்டு.

      பின்னர் வந்தது சங்கரனின் காலம். புத்தன் இந்து மதத்திற்கு என்ன செய்தாரோ அதை தனது குறுக்கு புத்தியாலும் சாதித்திமிராலும் திருப்பி செய்தான். புத்த மதத்தின் கருத்துகளை உள்வாங்கிக்கொண்டு தனது கருத்துமுதல் வாதத்தை உருவாக்கினான். இப்பொழுது கடவுளர்கள் வேறு மாதிரி உருமாறினர். மக்களுக்கு விருப்பமான வகையில் மாறினர். இதன் மூலம் தங்களை மக்கள் மத்தியில் நிலைநிறுத்திக்கொண்டனர். சடங்குகள் வழிபாட்டு முறைகள் மாறின. தனது தவறுகளை திருத்திக்கொண்டது. தவறு என்று இங்கு குறிப்பிட்டது தனது கட்டமைப்பு சார்ந்த தவறுகள்.

      இதுதான் இந்து மதம். இந்து என்பவன் கடவுள் என்னும் கருத்துமுதல்வாதத்தில் கட்டுண்டு சங்கரன் உருவாக்கிய அத்துவைதம் என்னும் மாயாவாதத்தை உண்மை என்று நம்பி சமுதாய ஏற்றத்தாழ்வுகளை ஏற்றுக்கொண்டு அதற்கு காரணங்களும் விளக்கங்களும் கூறிக்கொண்டு வாழ்பவன்.

      நீங்கள் அவர்களில் ஒருவரா? இருக்கக்கூடாது என்பதே எனது நம்பிக்கை.

      • ayyo enna koduma sir idhu நான்கடவுள்இல்லை!!!!
       Unga pracharahukku oru edam porul illiya??
       Convert pannanumnu thudikkara christian missionaryoda mosama nadanthukaeengale??

    • அப்புறம் எங்க அத வினவிடம் இறுந்து எதிர்பார்க்க..வினவு செய்வது பிஸினஸ், இந்தக்கட்டுரை ஒரு சின்னமீன்(வினவைன்நடுனிலைமையாம்) விரைவில் வரும் ஒரு இந்து மதத்துவேசக்கட்டுரை..அது வந்தவுடன் ஆகாநம்மளையும் ஒருத்தேன்நல்லவன்னு சொல்ரான்டானு ஒரு கூட்டம் வந்து கமெண்ட்ஸ் எழுதி சந்தோஸப்படும்..

     மொத்ததில் வினவு செய்வது ஒரு பக்க பிஸினஸ், சமச்சீர் கல்வி-தோழர்களின் சாதனை என்று வினவிடமிருந்து ஒரு கட்டுரை வறுமென்ரு ஒரு பின்னூட்டம் இட்டிறுந்தேன்..(இதைப்பற்றிப் பேசினால் வினவின் பிஸினஸ் பாதிக்கப்படும் என்று கூறியிறுந்தேன்.)வினவு அதை வெளியிடாம்ல் தான் ஒரு போலி கம்யூனிஸ்ட்டான் என நிறூபிதுவிட்டது)

     இப்பவும் பாருஙக இப்ப ஒப்புக்கு ஒரு முஸ்லிம் கட்டுரை..னாளைக்கே ஒரு இந்துமத தூவேசக்கட்டுரை…என்னப்ப எல்லாம் பிஸினஸ் தான்…னாங்க சண்டை போட்டாதான் வினவிற்கு பிஸினஸ்…(வினவிற்குநஙொடை அளித்து விட்டீர்களா…)இந்தக் கமெண்டீனை வெளியிடும் தைரியம் வினவிற்கு இல்லை..ணல்ல பிஸினஸ்..

     • நண்பர்கள் பையா,சீனு,சரவ்,

      வணக்கம். இந்து மதம் என்பது என்ன ?.. எப்பொழுது இந்து மதம் என்பது உருவாகியது?. வெள்ளைக்காரனின் ஆட்சியில் தான் இந்து என்ற ஒன்றை உருவாக்குகிறார்கள். எவன் ஒருவன் பார்சி இல்லையோ, எவன் ஒருவன் இஸ்லாமியன் இல்லையோ, எவன் ஒருவன் கிறுஸ்தவன் இல்லையோ, எவன் ஒருவன் புத்தமதத்தான் இல்லையோ,எவன் ஒருவன் ஜைனன் இல்லையோ அவன் எல்லாம் இந்து என்று கூறியிருக்கிறான் வெள்ளைக்காரன்.

      ஆக இந்த இந்து மதத்தின் வரலாறு அதிக பட்சம் 200 ஆண்டுகள் தான். இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கருப்பசாமி,மாரியம்மன், முண்டக்கண்ணி,சுடலைமாடன், அய்யனார் போன்ற காவல் தெய்வங்களை மட்டுமே மக்கள் வணங்கி வந்தனர். அவ்வாறு வணங்கிய மக்களுக்கு இந்து என்றால் என்ன என்றே தெரியாது. இதற்கு உங்களுக்கு ஏதேனும் மாற்றுக் கருத்து உள்ளதா ?..

      இன்று இங்கு திரியும் ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் கூட்டம் எல்லாம் இந்த வரலற்று உண்மையை மறைத்து அனைவரும் இந்து என்று கூறி பரப்பி வருகிறது. அந்த ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ இந்து பரிசத், இந்து முண்ணனி, இந்து மக்கள் கட்சி, சங் பரிவார் ஆகியோரிடம் நாம் முன் வைக்கும் கேள்வி இதுவே.

      1. “ அனைவரும் இந்து எனில் இன்று வரை பல இடங்களில் கோவில்களில் தன் சொந்த மதத்தினரை அனுமதிக்காமல் இருக்கிறார்களே அதற்கு என்ன பதில் கூறப் போகிறார்கள்?.”
      2. இஸ்லாமியர்களை இந்து மதவிரோதிகள் என்றுன் கூறும் அவர்கள், தன் சொந்த மதத்தில் உள்ள ஒரு தாழ்த்தப் பட்டவனை கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க மறுக்கும் சக இந்துவை (செய்வதே இந்த பொறுக்கிகள் தான்) இந்து விரோதி என்று அழைப்பார்களா ?..
      3. வி.எச்.பி. , ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் தங்கள் மகனையோ மகளையோ ஒரு தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைப்பார்களா ? (எல்லாரும் இந்து தானே ?)

      இந்தக் கேள்விக்கு நீங்கள் பதில் கூறினாலும் சரி . அல்லது ஆர்.எஸ்.எஸ் அயோகியர்களிடம் இருந்து பதில் பெற்று கொடுத்தாலும் சரி. உங்கள் பதிலைப் பெறுவதற்கு ஆவலாக இருக்கிறேன்.

      இதற்கு சரியான பதில் கூறாமல் இனி இந்து மத லாவணி பாட மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்
      – பகத் சிங்

      • இன்னும் கொஞ்சம் விட்டால் ஆர். எஸ். எஸ் க்கு பிறகுதான் இந்துமதம் தோன்றியதாக கூட சொல்வீர்கள் போல.

       இந்தியாவில் இருக்கும் எண்ணற்ற திருக்கோவில்கள் ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்தவை.அயல்நாட்டு தொல் பொருள் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வறிக்கைகள் இத்தனை தெளிவு படுத்துகின்றன. இவ்வாறு இருக்கையில் இந்த கோவில்கள் எந்த மதத்தை, கோட்பாடுகளை கொண்டு கட்டப்பட்டன? எதனை அடிப்படையாக கொண்டு மக்கள் அங்கு சென்று இறைவனை வழிபட்டனர்.? இது போன்ற எல்லா கேள்விகளுக்கும் பதில் “ஹிந்து “என்ற ஒற்றை மையப்புள்ளியில் தான் அடங்கியுள்ளது…

       இங்கே ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருந்த வேறெந்த மதமும் இனமும் அறியாத மக்களை ஒட்டுமொத்தமாக ஹிந்து என்று பெயர் சூட்டி அழைத்தவன் வந்தேறி கூட்டத்தை சேர்ந்தவன்தான்.

       நீங்கள் சொல்லும் எல்லா காவல் தெய்வங்களும் சக்தியின் பல்வேறு வடிவங்கள்.. இவற்றை வணங்கும் முறைகளும் இந்துமத அடிப்படையிலானவை…

       அடுத்து ,

       நாமெல்லாம் மனிதர்கள். தவறு செய்யும் இயல்புடையவர்கள். கோபம், வெறுப்பு,வன்மம், பெருமித உணர்வு,ஆதிக்க மனப்பான்மை, இதுபோன்ற எல்லா உணர்வுகளும் உடையவர்கள். ஆக மனிதர்களிடத்தில் எல்லாமும் சரியானதாக இருக்க வேண்டும் என்று கருதுவது, எதிர்பார்ப்பது முட்டாள் தனம். அப்படி எல்லாமும் நூற்றுக்கு நூறு சரியாக விளங்கும் பட்சத்தில் அது மனிதம் ஆகாது. இறையாக கருதப்படும்..

       இந்துமதத்தில் நிலவும் சாதி வேற்றுமைகள் அனைத்தும் இங்கே வந்து புகுந்த அந்நிய நாட்டு வந்தேறிகளால், இந்நாட்டு மக்களை தங்கள் மதத்திற்கு மாற்றுவதற்காக திட்டமிட்டு புகுத்தப்பட்டவை, இன வேற்றுமையை காரணம் காட்டி அது தங்கள் மதத்தில் இல்லை என்று பொய் பிரச்சாரம் செய்து மக்களை கொத்து கொத்தாக மதம் மாற செய்வதே அவர்களின் இலக்கு.

       சரி உங்களுக்கு ஒரு கேள்வி, இந்து கடவுள் என்று ஒன்று இல்லவே இல்லை. அதை திட்டமிட்டு புகுத்தியவன் பிராமணன் எனில் , அவனும் அதை வழிபட வேண்டிய காரணம் என்ன?

       ஹிந்துவில் இருக்கும் மற்ற சாதிகளை விட அதிகமாக கடுமையாக விரதம் வழிபாடு என்று தன்னை அதில் ஈடுபடுதிக்கொண்டிருப்பவன் பிராமணன். நீங்கள் சொல்வது போல் அது பொய்யான ஒன்று என்று அவன் அறிந்திருந்தும் அதனை தொடர்வது ஏன்?. அதுதான் அவன் வருவாய்க்கு வழி என்று மழுப்ப வேண்டாம். இன்று கோவில்களைவிட வருவாய் ஈட்டித்தரும் எத்தனையோ தொழில்கள் உண்டு…


       மாக்ஸிமம்

       • நண்பர் மாக்ஸிமம்

        \\
        இங்கே ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருந்த வேறெந்த மதமும் இனமும் அறியாத மக்களை ஒட்டுமொத்தமாக ஹிந்து என்று பெயர் சூட்டி அழைத்தவன் வந்தேறி கூட்டத்தை சேர்ந்தவன்தான்.
        \\

        இங்கு வேறுவேறாக வாழ்ந்தவர்களை ஒட்டுமொத்தமாக ஒரே பெயரிட்டு தவறாக அழைத்துவிட்டார்.

        \\
        இந்துமதத்தில் நிலவும் சாதி வேற்றுமைகள் அனைத்தும் இங்கே வந்து புகுந்த அந்நிய நாட்டு வந்தேறிகளால், இந்நாட்டு மக்களை தங்கள் மதத்திற்கு மாற்றுவதற்காக திட்டமிட்டு புகுத்தப்பட்டவை
        \\

        சாதிவேற்றுமைகள் இங்கு ஏற்கனவே இருந்தது மட்டுமல்ல, அந்த ஒற்றைக்கொள்கை மேலாக மட்டும்தான் இந்த இந்து மதம் மொத்தமுமே கட்டப்பட்டுள்ளது. ஆதாரம் மநுநீதி.

        \\
        சரி உங்களுக்கு ஒரு கேள்வி, இந்து கடவுள் என்று ஒன்று இல்லவே இல்லை. அதை திட்டமிட்டு புகுத்தியவன் பிராமணன் எனில் , அவனும் அதை வழிபட வேண்டிய காரணம் என்ன?
        \\

        பாப்பான் படைத்த கடவுள்கள் அவனது அதிகாரத்தை நிலைநிறுத்த உதவும் கருவிகள். அவன்தான் அதை முதலில் கும்பிட்டாக வேண்டும். சரி. நீங்கள் உங்கள் கிராமங்களில் எங்கேனும் உங்கள் கோயில்களான மாரி, செல்லி, எல்லைக்காத்தான், ஐயனார் இங்கு எங்காவது பாப்பாரர்கள் வழிபடுவதைப் பார்த்துள்ளீர்களா? அல்லது அங்கு பாப்பான் யாரும் பூசாரியாக இருக்கிறானா?

        \\அதுதான் அவன் வருவாய்க்கு வழி என்று மழுப்ப வேண்டாம். இன்று கோவில்களைவிட வருவாய் ஈட்டித்தரும் எத்தனையோ தொழில்கள் உண்டு…
        \\

        திரும்பவும் தவறு செய்கிறீர்கள். தெரிந்தா தெரியாமலா என்று தெரியவில்லை. பத்துமனாபன் கோயிலில் தங்கம் பாளம் பாளமாக வெட்டியெடுத்தார்களாம். கடைசி அறையை திறக்க சோழி உருட்டி குறிகேட்டார்களாம். திறப்பவன் ரத்தம் கக்கி சாவான் என்று மோடி மஸ்த்தான் அளவுக்கு சாமி கப்சா கட்டிவிட்டதாம். நீதிபதிகள் சாமி சொன்னதைக் கேட்டு பயந்து விட்டார்களாம்.

        இப்பொழுது சொல்லுங்கள். குறிகேட்க அனுமதி வழங்க வைத்தது எது. அவ்வளவு பணத்தை அங்கு பதுக்கி வைத்தது எதனால். சோழி சொன்னதை நம்ப வைத்தது எது.
        மதம், அளவில்லாத பணத்தை மட்டுமல்ல, மக்களின் உழைப்பை இலவசமாக நுகர்ந்து கொள்ளும் அதிகாரம், கட்டற்ற அதிகாரம், உரிமைகளுக்காக போராடும் மக்களை பயத்திலும் போதையிலும் பக்தியிலும் அறியாமையிலும் கட்டும் திறமை ஆகிய அனைத்தையும் அவர்களுக்கு வழங்குகிறது.

        கடைசியாக அம்பேத்கர் தனது ‘சாதிகளை ஒழித்தல்’ என்னும் புத்தகத்தில் மேற்கோள் காட்டிய இரு பெரிய மனிதரின் எண்ணங்களை உங்களுக்காக இங்கு தருகிறேன்.

        “Know Truth as Truth and Untruth as Untruth ”
        —BUDDHA

        “He that WILL NOT reason is a bigot He that CANNOT reason is a fool He that DARE NOT reason is a slave ”
        -H. DRUMMOND

      • summa dagulpaas velalam kaatathada thambi.. dhayavy senju pera maathu. Unnna madhiri aaluga andha pera use panna bhagat singhra perkke asingam.
       .oru muslim தங்கள் மகனையோ மகளையோ ஒரு தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைப்பார்களா ? ??/ idhukku madhil solra

       • பகத் சிங் மீது அக்கறை கொண்டவரைப் போல் நடிப்பதற்கு நன்றி. இஸ்லாமியர்கள் தங்களுக்குள் பொதுவாக இரண்டு பிரிவாக இருக்கிறார்கள். சன்னி, சியா பிரிவினர். அவர்கள் ஒருவரை மற்றொருவர் இஸ்லாமியரே இல்லை என்று குற்றம் சாட்டிக் கொள்கின்றனர்.

        ஆனால் இந்து மதத்தில் தான் அனைவரும் இந்து என்று கூறிக் கொண்டு இந்த சாதிக்காரன் வரை கோவிலுக்குள் நுழையலாம். ஆனால் கருவரைக்குள் பார்ப்பான் மட்டும் தான் நுழைய வேண்டும். இந்த இந்த சாதிக்காரன் எல்லாம் கோவிலுக்குள்ளே கூட நுழையக்கூடாது என்று பிரித்து வைத்துள்ளீர்கள்.

        இஸ்லாமில் ஜாதி கிடையாது. உங்கள் மதத்தில் ஜாதி எவ்வாறு உள்ளது?.
        இல்லையென்று கூசாமல் பொய் கூறப் போகிறீரா ?.. அல்லது பகத் சிங் போன்று ஜாதியை மறுத்து அதனை அவமானமாக நினைத்து அந்த மதத்தில் இருந்து வெளியேறப் போகிறீரா ?..
        முடிவு செய்து சொல்லுங்கள்..

        • அண்ணே பகத்சிங் வாயை கிளறியதற்கு நன்றி

         //இஸ்லாமியர்கள் தங்களுக்குள் பொதுவாக இரண்டு பிரிவாக இருக்கிறார்கள். சன்னி, சியா பிரிவினர். அவர்கள் ஒருவரை மற்றொருவர் இஸ்லாமியரே இல்லை என்று குற்றம் சாட்டிக் கொள்கின்றனர்.//

         ஆமா கம்யூனிஸ்ட் நீங்க மட்டும் தோளோடு தோள் கை போட்டுகிட்டு திரிறீய்ங்களோ?

         அவன் போலி நான் ஒரிஜினலு இவன் அயூத சாகஸவாதி இந்திய கம்யூனிஸ்ட் சந்தர்ப்பவாதி என்னது இது?

         • ஹைதர் அலி,

          நான் அங்கு எடுத்துரைக்க வந்ததைப் புரிந்து கொள்ளாமல் அவசரக் குடுக்கையாக முடிவு கொண்டு பேசியிருக்கிறீர்கள். உண்மையான இஸ்லாமியர் யார் என்பதில் பிரச்சனை இருக்கிறது என்பதை நான் இழிவாகக் கூறவில்லை.

          இந்துவாக அழைக்கப்படும் / கருதப்படும் நபர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படாத கொடுமை இந்து மதத்தில் மட்டும் தான் உண்டு என்பதையே நான் சுட்டிக் காட்டியுள்ளேன்.
          புரிந்து கொள்ள முயற்சிக்கவும். இஸ்லாமிய மூளையை சிறிது நடுநிலை மூளையாக மாற்றிக் கொண்டு புரிய முயற்சித்தால் புரிந்து கொள்ளலாம்.

          • மன்னிக்கவும் அண்ணே
           கொஞ்சம் அவசரப்பட்டு விட்டேன்

           ஆமா அது என்ன இஸ்லாமிய மூளை நடுநிலை மூளைன்னு பிரிவு இருக்க

  • பொருலாதாரம் மட்டுமெ மனிதனை மெம்படுத்தும் என்னும் அரிவீனர்களிடம் வெரன்ன எதிர்பார்க்க முடியும் ?

 1. @ Skeptick
  idhula yen ayya relegion’a kondu vareenga? ipdi patta oonaaigalukku relegion illa.. indha veriyargal endha madhathula irundhaalum andha madhathoda avangala compare panna koodaadhu.. veriyargala veriyargalaa dhan paakanum..

 2. மனைவியை விவாக ரத்து செய்யும் நிலைக்கு முன் லேசாக முகத்தை தவிர அடிப்பதற்கு அனுமதி உள்ளது என்ற ஒன்றுக்கு மட்டும் ஆதாரத்தை அளித்து விட்டு மற்ற அனைத்தையும் தன் கற்பனை குதிரையை இஸ்லாத்தின் பெயரால் ஓட்டியிருக்கும் வினவின் வக்கிரபுத்தி கொடூரமானது.

  • வினவு கூறுவது கற்பனை எனில் நீங்கள் உண்மையை கூறலாமே உண்மை ..

   உண்மை உண்மையாக இருக்க மாட்டேங்கிறாரே …

 3. dear readers,

  kindly go through the following links

  A.
  முஸ்லிம் பெண்களுக்கு உரிமையில்லையா?
  …..

  B.
  இஸ்லாத்திலே பெண் குழந்தைகள் வரவேற்கப்படுகின்றதா?
  …..

  C.
  முஸ்லீம்கள் பெண்களை அடக்கி கல்வி அறிவில்லாமல் செய்கிறார்களா ?
  …..

  D.
  பெண்களை அடிமைப்படுத்துகிறதா திருக்குர்’ஆன் வசனம்?
  …..

  E.
  முஸ்லிம்கள் வரதட்சணை வாங்கலாமா?
  …..

  F.
  முஸ்லீம்களே எந்த காரணமும் இன்றி தலாக் சொல்லுகிறீர்களே?ஜீவனாம்சம் உண்டா? முஸ்லீம்களே! பெண்ணுரிமை எங்கே?உங்கள் சட்டம் பெண்ணுரிமைக்கு எதிராக இருக்கிறதே?
  …..

  G.
  இஸ்லாத்தில் தாலி உண்டா?
  …..

  H.
  இஸ்லாத்தில் பெண்களை ஹிஜாப் (பர்தா – புர்கா, -துப்பட்டி)அணிய கட்டாயப்படுத்துவது ஏன்?

  I.
  25. “நச்”பெண்களுக்கு பர்தா 20ம் நூற்றாண்டில் பொருந்தி வருமா?

  J.
  24. “நச்”முஸ்லிம் பெண்களுக்கு பர்தா / புர்கா / ஹிஜாபு தேவையா?

  K.
  இஸ்லாமிய ஆடை ஹிஜாபுக்குப் (புர்கா) பின் கண்ட வாழ்க்கை! – சகுந்தலா நரசிம்ஹன்

  L.
  பர்தா, பெண்ணுரிமை & பொதுக்கழிப்பிடம்

  • நீங்கள் பரப்பும் இதே இஸ்லாம்தானே இஸ்லாமிய நாடான பங்களாதேசிலும் இருக்கிறது, பிறகு அங்கு ஏன் பிரச்சனை நடக்கிறது. ஒரு பிரச்சனையை உங்கள் முன் வைத்தால் அதைப்பற்றி எதுவுமே சொல்லாமால், ஏற்கனவே எழுதி வைத்த கருத்துகளை கக்குவது சரியா?

  • இப்படி லிங்குகளாகக் கொடுப்பதால் என்ன பயன்? சரி, இத்தனை லிங்குகள் கொடுத்திருக்கீறீர்களே என்று 24ஆம் லிங்கைப் பார்த்தேன் அந்த போஸ்ட் முழுக்க லிங்குகள். அதிலும் இரு பெண்கள் புர்க்காவை வியந்தோதியிருப்பதை எழுதியிருக்கிறீர்கள். ஆனால், இஸ்லாமின் பெண்ணடிமைத்தனத்தால் ஆண்டுதோறும் பங்களாதேஷிலும், பாகிஸ்தானிலும், ஆஃப்கனிலும் ஆசிட் வீச்சுக்கும், கல்லெறிதலுக்கும் பலியாகும் பெண்களைப் பற்றி எதுவும் கூற மறுக்கிறீர்களே? இதுவே உங்களுக்குள் இருக்கும் ஆணாதிக்கத்தை சான்று பகர்கின்றதே! அவர்களைப் பற்றி எந்தகவலையுமின்றி, தீர்வுமின்றி ’எங்கள் மதத்தை பற்றி சொல்லிவிட்டாயா பார்’ என்று லிங்குகளை வாரியிறைப்பதால் என்ன பயன்? உங்கள் லிங்குகளால் பங்களாதேஷ் பெண்கள் மீதான ஆசீட் வீச்சை தடுத்துவிட முடியுமா?

 4. “அப்படி சமூக நலனுக்காகப் போராட புறப்படும் மக்கள் கையில்தான் விடுதலைக்கான திறவுகோல் இருக்கிறது.”
  நல்ல கருத்து இதோ நான் வரேன் “வேல்விழி, புதிய கலாச்சாரம், ஜூலை – 2011” நீதி மன்றங்ளை அனுகலாம் பொது நல வழ‌க்கு போடலாம்,பயன் கிடைக்குமா யோசிக்குனும் எந்த சமுகம் online கட்டுரைக்கா திரும்பி பார்க்காது ,,,,,,ஆனா வீதி போராட்டம் நம்மல தபபா நினைக்கும் சமுகம்,,,,,,,,வெறும் மேடை பேச்சு வீராகளாக இல்லமால் (online கட்டுரை என்று இல்லாமல்) சமசீர்கல்விகாக வீதியில் நின்று சிறை சென்ற நன்பர்களை பார்த்தேன் சமுதாய விழிப்புனர் பெற சிந்தனை பகிர்ந்துகொள்ளுங்கள்,,,,,,,,,,,,,,

 5. பிற மதங்களின் பெண்ணடிமைத்தனத்திலிருந்து மீள – சட்டத்தின் மூலம் வழி இருக்கிறது. ஆனால் முஸ்லீம் மதத்தில்?

 6. ஏதோ சில பிட்டு வசனத்த குரான்லேர்ந்த்து சொல்லி இப்படி அவதூரா வினவு எழிதி இருப்பது கன்டனத்துகுரியது…..எவனொ முட்டால்தனமா செய்கிர தவருக்கும் இச்லாத்திர்கும் முடுச்சு போடுவது சரியல்ல…. ம் பென்கலுக்கு தன்டனை தரும் உரிமை இல்லனு யாரு சொன்னது….. இரான்ல இதே ஆசிட் வீசியது தொடர்பா கொடுக்கப்பட்ட தன்டனை என்ன தெரியுமா… ஷரியத் சட்ட்ப்படி பென் மீது ஆசிட் வீசியதர்காக அவனுடய கன்கலில் அசிட்விட தீர்ப்பு கொடுக்கப்பட்டது மேலும் அந்த பென் மன்னித்தால் விட்டுவிடலாம் என்ரும் கூரப்பட்டு இருந்தது வினவுக்குத் தெரியாது போல சட்டம் சரியாதான் இருக்கு….

  • அந்த முட்டாளை உங்கள் மதத்தில் இருந்து நீக்க தயாரா ?..

   உங்கள் இஸ்லாமிய மத குருமார்கள் வீட்டில் பெண்ணடிமைத்தனம் இல்லையா ?..

   • //அந்த முட்டாளை உங்கள் மதத்தில் இருந்து நீக்க தயாரா ?..//

    தயார்!
    //உங்கள் இஸ்லாமிய மத குருமார்கள் வீட்டில் பெண்ணடிமைத்தனம் இல்லையா ?..//

    ஆமா பெண்ணடிமைத்தனமுன்ன இன்னாது? கொஞ்சம் சொல்ல முடியுமா?

    • அட .. நம்ம ஹைதர் அலி., அசல் இஸ்லாமியரே,

     பர்தாவுக்குள் பெண்களை திணித்து வைப்பது எந்தக் கணக்கு ?..

     எத்தனைப் பெண்களை வேண்டுமானாலும் பெண்டாடலாம் என்று உம் நபிகள் உரைத்தது எந்தக் கணக்கு ?..

     • அட நம்ம அண்ணே பகத்சிங்கு

      //எத்தனைப் பெண்களை வேண்டுமானாலும் பெண்டாடலாம் என்று உம் நபிகள் உரைத்தது எந்தக் கணக்கு ?.//

      அப்புடி எங்கேண்ணே உரைத்திருக்கிறார்

      • ஒரு இஸ்லாமியன் 4 தாரங்கள் கொண்டிருக்கலாம். அதற்கு மேல் வேறு பெண்ணின் மீது ஆசை கொண்டால் யாரையாவது விவாகரத்து செய்து விட்டு அந்தப் பெண்ணை மணம் செய்து கொள்ளலாம் என்று உங்கள் மத நூலில் இருக்கிறதா இல்லையா ?.. வசனத்தை எடுத்துப் போட்டால் தான் நம்புவீர்களா ?..

       குரான் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

       ஒரு இஸ்லாமியன் அடிமைப் பெண்கள் எத்தனை பேருடன் வேண்டுமானால் பாலுறவு வைத்துக் கொள்ளலாம். அவள் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமானால் மட்டுமே அவளை மணமுடிக்க வேண்டிய அவசியம் உண்டு.

       • ஹய்யோ ஹய்யோ சிரிப்பு தாங்க முடியவில்லை அண்ணே

        பகத்சிங் தாங்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.
        ஒங்க மூஞ்சி முன்னாடி சிரிச்சாத்தான் நல்லாயிருக்கும்
        இருங்கிங்களா?

      • குரான் – அத்தியாயம்-4
       ஸுரத் துன்னிஸாவு – பெண்கள்

       இந்த அத்தியாயத்தில் முதல் 34 வசனங்களை எடுத்துப் படிக்கவும்.
       இஸ்லாமிய அடிப்படைவாதி ஹைதர் அலிக்கு எல்லாம் மனப்பாடமாக தெரியும் என்று நினைக்கிறேன்.

       அந்த வசனங்களின் அனலில் நம் வீட்டுப் பெண்டீரை உழல விட நமக்கு மனம் வருமா என்று சிந்திக்கவும்.

       • வாயிலே நல்லா வந்துரும்
        இங்கு இந்த வசனத்திற்கு ஏற்கனவே பல சுட்டிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது
        கண்ணை நன்றாக திறந்து படித்துப் பார்த்து விட்டு
        கீ போர்டு மேலே கையே போட்டு பிறகு பேசவும்

 7. மிகவும் நன்ரி வன்ஜோர்… அவர்கலே உங்கல் இனைப்பு மிகவும் அருமை… வினவு இதைப்படித்தால் சிரிது தெலிவு கிடைகும்….

 8. //ஒழுக்கம், கண்ணியம், கற்பு என்று வரும்போது மட்டும் குரானுக்குள் ஒளிந்துகொண்டு பெண்களைப் பலிகடாவாக்குகின்றனர். இந்த இரட்டை வேடத்தில் இந்துமதப் பயங்கரவாதிகளுக்கு சற்றும் குறைந்தவர்களில்லை, இசுலாமிய மதவாதிகள்.//

  //இந்து மதம் என்றால் ‘பயங்கரவாதிகள்’. இசுலாமிய ‘மதவாதிகள்’. புரியுதா?//

  அவர் சொல்ல வருவது புரியலியா? இந்து மதத்தில் சிலர் பயங்கரவாதிகள். ஆனால் இசுலாமியர் எல்லாருமே பயங்கரவாதிகள் என்பதால் தனியாக சிலரை பயங்கரவாதிகள் என்று அழைக்க தேவை இல்லை என்று கூறுகிறார்.

 9. வினவு

  இது போன்ற ஒரு சில கட்டுரைகளை வெளியிட்டு தாங்களை நடுநிலைவாதியாக காட்டிக்கொள்ள முயற்சிக்க வேண்டாம்.

  மாறாக இது உங்களுக்கு எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்.(இது உங்களுக்கே தெரிந்திருக்கும்)

  ஹிந்துத்துவத்தை உங்கள் எழுத்துக்கள் வாயிலாக கடித்து குதறும் போது கூட சேர்ந்து கொண்டு தங்கள் பங்குக்கு வெறுப்பை உமிழும் மாற்று மத சகோதரர்களின் ஆதரவை இழக்கக்கூடும்.

  எனக்கு ஒன்று விளங்கவில்லை..

  ஹிந்துத்துவத்தில் நிலவும் சாதி கொடுமைகளையும், மூட பழக்க வழக்கங்களையும் ஒழிக்க இசுலாத்தில் இணைவதுதான் தீர்வு என்று பகுத்தறிவாளர் சொன்னதாக திரித்து கூறும் துரோகிகள் இதற்கென்ன சொல்கிறார்கள்?


  மாக்ஸிமம்

  • மாக்ஸிமம்,

   தாங்கள் மினிமமாக சிந்திப்பதால் தான் இந்தப் பிரச்சனை என்று எண்ணுகிறேன்.

   யார் கூறியது வினவு நடுநிலைவாதி என்று ?..

   பாட்டாளிவர்க்க சார்பு நிலைப்பாடு கொண்டது. மதங்கள் அனைத்தும் மக்கள் விரோதமானதே. அவை பாட்டாளிகளை அடிமைத் தளையிலிருந்து வெளிவரவிடாமல் தடுக்கும் சங்கிலிகளே. அனைத்து மதங்களும் எதிரிகளே.

   யார் திரித்தார்கள் ?.. யார் துரோகிகள் ?.. விளக்கமாக கூறவும்.

   • அனைத்து மதங்களும் எதிரிகளே எனில் ஹிந்து மதத்தின் மீது மட்டும் ஏனித்தனை காட்டம்? வன்மம்? பிற மதங்களை கையாளும் போல் அது அத்தனை உக்கிரமாய் வெளிப்படுவதில்லையே ஏன்?

    அய்யாவின் கருத்துக்களை யார் திரித்தார்கள் யார் துரோகிகள் என்று அவரவர் மனதுக்கே தெரியும்..

    அய்யா கூறியது என்ன? இறைவன் இல்லை என்றார் , அவனை வணங்குபவன் முட்டாள் காட்டுமிராண்டி என்றார்.. ஆனால் அவர் கூறியதை அப்படியே திரித்து ஹிந்து கடவுள்கள் மட்டும் பொய் என்பது போலவும் , இழிவுகளை களைய இசுலாத்தில் இணைவதே வழியென்றும் அவர் சொல்லாததை சொன்னதாக கூறும் ஒரு சில அய்யோக்கியர்களை தான் நான் குறிப்பிட்டேன்..

    ஒருவேளை அவர் அவ்வாறு சொன்னது உண்மையென்றால் ஏன் அவர் இசுலாத்தை தழுவவில்லை? அவர்தம் தொண்டர்களும் ஏன் தங்களை இணைத்துகொள்ளவில்லை?


    மாக்ஸிமம்

    ஒருவேளை சாதி veruppadugalai

    • @மாக்சிமம்

     பெரியார் கடவுள் இல்லை என்று எந்த அளவுக்கு ஆணித்தரமாகச் சொன்னாரோ அதே அளவுக்கு ஜாதி வேற்றுமையைக் கடுமையாகச் சாடினார்.

     ஜாதி அமைப்பின் அடித்தளமே இந்து மதம் தான் எனும் போது சும்மா விட்டு வைக்க முடியுமா ?.

 10. @manidhan

  //ஒழுக்கம், கண்ணியம், கற்பு என்று வரும்போது மட்டும் குரானுக்குள் ஒளிந்துகொண்டு பெண்களைப் பலிகடாவாக்குகின்றனர். இந்த இரட்டை வேடத்தில் இந்துமதப் பயங்கரவாதிகளுக்கு சற்றும் குறைந்தவர்களில்லை, இசுலாமிய மதவாதிகள்.//

  //இந்து மதம் என்றால் ‘பயங்கரவாதிகள்’. இசுலாமிய ‘மதவாதிகள்’. புரியுதா?//

  //அவர் சொல்ல வருவது புரியலியா? இந்து மதத்தில் சிலர் பயங்கரவாதிகள். ஆனால் இசுலாமியர் எல்லாருமே பயங்கரவாதிகள் என்பதால் தனியாக சிலரை பயங்கரவாதிகள் என்று அழைக்க தேவை இல்லை என்று கூறுகிறார்.//

  நீங்க நல்ல அரசியல்வாதியாகலாம்…. அவர் குறிப்பிட்டது நீங்கள் சொல்வதைப்போல் அல்ல.. இந்து மதத்தினைக் குறிப்பிடும்போது ‘பயங்கரவாதிகள்’ என்று சொல்லும் வினவு இசுலாத்தைக் குறிப்பிடும்போது அவர்கள் மதவாதிகள் ஆனால் பயங்கரவாதிகள் அல்ல என்பதுபோல் ஒருசார்பாக வினவு பேசுவதைக் குறிப்பிடுகிறார். அவ்வளவே!

 11. //
  @ உடலுறவுக்கு மறுத்தால் அடிக்கலாம் என்றும் குரான் கூறுகிறது.
  //
  அன்புள்ள வினவு குழுவினருக்கு ஓர் வேண்டுகோள்.

  மேற்கண்ட அந்த கருத்து உங்கள் சொந்த கருத்தா? அது உண்மை எனில் உடலுறவுக்கு மறுத்தால் அடித்தால் அடிக்கச் சொல்லும் அந்த குரான் வசனத்தை தர இயலுமா?

  கருத்துக்கள் அனுமதிக்கப்படும் என்ற நம்பிக்கையுடன்…


  சஹா, சென்னை.

 12. //
  @ உடலுறவுக்கு மறுத்தால் அடிக்கலாம் என்றும் குரான் கூறுகிறது.
  //
  அன்புள்ள வினவு குழுவினருக்கு ஓர் வேண்டுகோள்.

  மேற்கண்ட அந்த கருத்து உங்கள் சொந்த கருத்தா? அது உண்மை எனில் உடலுறவுக்கு மறுத்தால் அடிக்கச் சொல்லும் அந்த குரான் வசனத்தை தர இயலுமா?

  கருத்துக்கள் அனுமதிக்கப்படும் என்ற நம்பிக்கையுடன்…


  சஹா, சென்னை.

  -(Spelling mistake Correction)

 13. முதலில் குர்ஆனின் முழுமையான வசனத்தை சொல்லிவிட்டு அதன் பின்பு உங்கள் சொல்ல விரும்பும் கருத்தை சொல்லவும்…. உங்கள் படைப்பு ஆரோக்கியமான படைப்பாக இருக்கட்டும்….

 14. “முகமதுவின் மனைவியருள் ஒருவரான ஆயிஷா திருமணம் நிச்சயிக்கப்படும்போது ஏழு வயதாக இருந்தார். திருமணத்தின்போது அவருக்கு ஒன்பது வயதுதான். முகம்மது நபிக்கோ கிட்டதட்ட ஐம்பது வயதிருக்கும். அதோடு அவருக்குப் பல மனைவிகள் இருந்ததாகவும் தெரிய வருகிறது.”

  ஆகா!!! வார்த்தைகளில் என்ன ஒரு நிதானம், கண்ணியம், சாந்தம்…

  இதே போன்றதொரு அடக்கமான விமர்சனத்தை நான் வினவின் எந்தவொரு ஹிந்துதுவதை சாடும் பதிவிலும் கண்டேதேயில்லை.

  சிறுபான்மையினரின் காலடிகளை நக்கி பிழைக்கும் ஓட்டுபொறுக்கி அரசியல் வியாதிகளுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?

  இதற்கு கம்முனிச முகமூடி வேறு?

  இரட்டைவேடம் போடும் நீங்கள் எந்நாளும் உங்களின் கொள்கைகளை வென்றெடுக்க போவதே இல்லை..


  மாக்ஸிமம்

  • வித்தியாசத்தை கண்டுபிடிக்கும் உமது திறமையை மெச்சுகிறேன். கட்டுரையிலிருந்து நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வரிகளில் என்ன தவறைக் கண்டீர்கள்? குரானின் வசனங்களில் தவறை மைக்ரோஸ்க்க்கோப் வைத்து தேடும் நீங்கள் ஆசீட் வீசும் போக்கைப் பற்றி கண்டீக்க வேண்டாம், ஒரு வார்த்தைக்கூட பேச மறுப்பதேன்?

   • இங்கிலீஷ் ,

    “வித்தியாசத்தை கண்டுபிடிக்கும் உமது திறமையை மெச்சுகிறேன். கட்டுரையிலிருந்து நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வரிகளில் என்ன தவறைக் கண்டீர்கள்? குரானின் வசனங்களில் தவறை மைக்ரோஸ்க்க்கோப் வைத்து தேடும் நீங்கள் ஆசீட் வீசும் போக்கைப் பற்றி கண்டீக்க வேண்டாம், ஒரு வார்த்தைக்கூட பேச மறுப்பதேன்?”

    மற்றவர் வேதமாக கருதும் விஷயங்களில், நம்பிக்கைகளில் கருத்தாடுவது சரியானது அல்ல. குரானின் வாசகங்களில் நீங்கள் சொல்வதுபோல் நான் விமர்சிக்க முயலவில்லை. அவற்றை கண்டிக்கும் உரிமையும் எனக்கு இருப்பதாக கருதவில்லை. மேலும் அது என் பணியும் அன்று.

    மாறாக வினவின் மதங்களை,கையாளும் அணுகும் விதத்தைதான் தவறு என்று குறிப்பிட்டிருந்தேன்…


    மாக்ஸிமம்

    • நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? வேதம் என்று சொல்லிவிட்டால் அதை கேள்விகேட்கவோ விமர்சிக்கவோ கூடாதா? அப்படியென்றால், ரூபாலிகளைப் பற்றியும் ஜன்னத்களைப் பற்றியும் உங்களுக்கு கவலையேயில்லை, இல்லையா?

 15. வினவு சகோதரர்களுக்கு,

  அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக..ஆமீன்)…

  ஒ ஒ…அடுத்த சுழற்சி முறை பதிவா???….

  உங்களலா முடிஞ்சா..நேரம் இருந்தா மேலே வாஞ்சூர் கொடுத்திருக்காரு பாருங்க சுட்டிகள்…படிச்சு பாருங்க.

  அப்புறம் சஹா (Saha) கேட்டிருக்காருங்க பாருங்க ஒரு நச் கேள்வி, அதுக்கும் பதில் சொல்ல பாருங்க. ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல மறுபடியும் உங்கள் இஸ்லாமிய அறிவை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கீங்க. மிக்க நன்றி.

  என்னோட கம்மெண்ட வெளியிடுவீங்கலான்னு தெரியல..ஏன்னா முன்பு என்னுடைய கமெண்டை மட்டுருத்திட்டீங்க..இதையாவது வெளியிடுவீங்க என்ற நம்பிக்கையில்,

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ
  http://ethirkkural.blogspot.com/

  • நீங்க சொன்னமாதிரி ஒரு பானை சோறுக்கு பதமா வாஞ்சூரின் ஒரு சுட்டியை பார்த்தேன். ஹிஜாப் பத்தின லிங்குல லிங்கா கொடுத்திருக்கார். மத்தபடி, புதுசா எதையும் சொல்லிடல…கட்டுரையில சொல்லியிருக்க முக்கிய பிரச்சினைக்கு யாரும் வரலையே? இதுவரைக்கும் ஒரு முஸ்லீம் பெண் ஆண் மீது ஆசிட் அடிச்சதா பங்ளாதேஷில நடந்திருக்கா? ஏன் நடக்கலை? பெண்ண்ணின் சாட்சி ஏன் ஆணின் சாட்சியில் பாதியாதான் ஏற்கப்படுது? இஸ்லாம் பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்திருக்குன்னு லிங்கு மூலமா சொல்ல வர்றீங்களே தவிர நடைமுறை எப்படி இருக்கு?

  • Aashiq Ahamed!! dont feel its just ur turn….
   Idhu eppadina Hindu madha veriyargalai appo appo kushi paduthuvarkaaga ezhudavendiyadhu!!! idhu thaan true communism!!!

 16. அன்பின் வினவு,
  //
  வினவு @
  உடலுறவுக்கு மறுத்தால் அடிக்கலாம் என்றும் குரான் கூறுகிறது.
  //

  //
  4:34. (ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்; எந்தப் பெண்கள் விஷயத்தில் – அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் – நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.
  //
  இந்த வசனத்தில் எங்கு உடலுறவுக்கு மறுத்தால் அடிக்கலாம் என்றும் குரான் கூறுகிறது??

  உங்களின் தமிழ் ஞானம் என்னை வியக்கவைக்கிறது.
  வேண்டுமென்றே கருத்து திரிபு செய்வது தங்களுக்கு அழகல்ல. தங்களின் கருத்துகளுக்கு இஸ்லாத்தின் பெயரிட்டு குறைகூறுவது மக்களை குழப்பும் செயலன்று வேறில்லை.


  சஹா, சென்னை.

  • எனது பதிவு “பெண்களை அடிக்கலாம் என்று குரான் ல் உள்ளது தொடர்பானது. தங்களின் கேள்விக்கான பதில் அல்ல.

   • அப்படியாயின், சம்மந்தமில்லாத இக்கருத்துக்களை தனி இடுகையாக (சகோ.இக்பால் செல்வன் போன்று) பதிந்திருக்கலாமே, (அல்லது அவரது பதிவை மீள்பதிவு செய்திருக்கலாமே?) இங்கு பதிவதன் நோக்கம்? விவாதத்தை திசைதிருப்பும் முயற்சியா?

    என்கேள்விக்கு வினவு குழுவினர் பதிலளிப்பார்களா?


    சஹா, சென்னை.

 17. //
  இதுமட்டுமல்ல, இன்னும் விஷயம் மோசமாக மாறுகிறது, அதாவது சில குறிப்பிட்ட இடங்களில் குர்ஆன் விபச்சாரம் செய்யமும் அனுமதி அளிக்கிறது.

  4:24. இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும். இவர்களைத் தவிர, மற்றப் பெண்களை, தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள். எனினும் மஹரை பேசி முடித்தபின் அதை(க் கூட்டவோ அல்லது குறைக்கவோ) இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது – நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கிறான்.
  //

  சட்டபூர்வமாக திருமணம் செய்து இன்பம் அனுபவிப்பது உங்களின் பார்வையின் படி விபச்சாரமா? இதென்ன கேலிக்கூத்து…

  //
  இதில் இன்னும் வேதனையான, சகிக்கமுடியாத விஷயம் என்னவென்றால், இன்றுவரை இந்த கட்டளை இரத்து செய்யப்படவில்லை, அதாவது தற்காலத்திலும் போரில் பிடிபட்ட அல்லது அடிமைகளாக இருக்கும் திருமணமான பெண்களை கற்பழிக்க முஸ்லீம்களுக்கு அனுமதியுண்டு.
  //

  இனிமே எல்லோரும் சட்டபூர்வ திருமணத்தை ரத்து செஞ்சுடனுமா? அப்புறம் எப்டி?

  அடிமையை கற்பழிக்க (அண்டர்லைன்) கற்பழிக்க எந்த வசனத்தில் அனுமதி கொடுக்கப்பட்டிருக்கு?

  மிகுந்த தமிழ் ஞானமும், புரிந்துகொள்ளும் திறனும் மேலும் சிறந்த கற்பனைவளமும் கொண்ட நீங்கள் ஓர் கதாசிரியராகவோ அல்லது சினிமா இயக்குனாகவோ ஆஹா ஏன் முயற்ச்சிக்க கூடாது?

  வாழ்த்துக்கள்.


  சஹா, சென்னை.

 18. வரதட்சணை கேட்டு சித்ரவதை 3 மாத கர்ப்பிணியை எரித்துக் கொன்ற கணவன்

  சென்னை, ஆக.12- வரதட்சணையாக 15 சவரன் நகை ரூ.50 ஆயிரம் ரொக்கம் தர மறுத்த கர்ப்பிணி மனைவியை எரித்து கொன்ற கணவனை காவல் துறையினர் கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த மாமியாரையும் கைது செய்ய வலியுறுத்தி பெண்ணின் உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

  சென்னை வியாசர்பாடி சத்தியா நகரை சேர்ந்தவர் கிருஷ் ணவேணி (50). வட சென்னை அ.தி.மு.க. மகளிர் அணி இணை செயலாளர். இவரது மகன் நந்தகுமார் (21). கார் ஓட்டுநர். இவரும் அதே பகுதியை சேர்ந்த சிவரஞ்சனி (19) என்பவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காத லித்து திருமணம் செய்தனர். இவர்களது ஒரு வயது குழந்தை இறந்து விட்டது. தற்போது சிவரஞ்சனி 3 மாத கர்ப்பிணி. இந்நிலையில் 15 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை வரதட்சணையாக பெற்றோரிடம் வாங்கி வரும்படி சிவரஞ்சனிக்கு நெருக்கடி கொடுத்துள்ளார் கிருஷ்ணவேணி. மறுத்த சிவரஞ் சனியை சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

  கடந்த 6ஆம் தேதி வரதட் சணை தொடர்பாக கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கிருஷ்ண வேணியும், நந்தகுமாரும் சேர்ந்து சிவரஞ்சனியை அடித்து உதைத் துள்ளனர்.

  அதன்பிறகு அவர் மீது மண் ணெண்ணெய் ஊற்றி தீவைத் ததாக கூறப்படுகிறது. இதில், உடல் கருகி உயிருக்கு போராடிய சிவரஞ்சனியை அக்கம்பக்கத்தினர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

  இதுகுறித்து எம்.கே,பி. நகர் காவல்துறை ஆய்வாளர் முத்து ராஜா வழக்கு பதிவு செய்து நந்தகுமாரை கைது செய்தார்.

  இந்நிலையில் சிகிச்சை பல னின்றி நேற்று சிவரஞ்சனி இறந் தார். தகவல் அறிந்ததும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஏராளமானோர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு வந்தனர்.

  பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது உடலை வாங்க மறுத்தனர். சிவரஞ்சனி சாவுக்கு காரணமான கிருஷ்ண வேணியை யும் கைது செய்ய வேண்டும். அதுவரை சடலத்தை வாங்க மாட்டோம் என்று கூறி மருத்துவ மனையை முற்றுகையிட்டனர்.

  உதவி ஆணையர் மனோகரன் கைது செய்வதாக உறுதி அளித் தார். இதை ஏற்று போராட்டத் தை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் ஒரு மணி நேரம் பதற்றம் நிலவியது.

  http://viduthalai.in/new/page-5/15749.html

 19. வினவு சகோதரர்களுக்கு,

  அஸ்ஸலாமு அலைக்கும்,

  என்னுடைய கமெண்ட்டை அனுமதித்ததற்கு நன்றி…

  இப்போது சில விளக்கங்கள்…

  பிரான்ஸ் நாட்டில் தடை செய்யப்பட்டது (கட்டுரையில் சொல்லப்பட்டிருப்பது போல) ஹிஜாப் அல்ல. அதற்கு பெயர் நிகாப்.

  நிகாப் என்றால் முகத்தை மூடும்விதமாக உடையணிவது – இது இஸ்லாம் சொல்லாதது.
  ஹிஜாப் என்றால் முகம், கைமணிக்கட்டு தவிர்த்து உடலின் மற்ற பாகங்கள் மறையுமாறு உடையணிவது – இது இஸ்லாம் சொல்லும் கண்ணியமான உடையணியும் முறை.

  (ஹிஜாப் = முகத்தை மூடுவது என்று குழப்பிக்கொண்டிருக்கின்றார் கட்டுரையாளர்)

  பிரான்ஸ் இந்த தடை சட்டத்தை அமல்படுத்தும்முன் ஒரு ஆய்வுக்கு உத்தரவிட்டது. ஆய்வின் முடிவில் தெரிய வந்தது என்னவென்றால், பிரான்சில் மிக மிக குறைவான அளவிலேயே முஸ்லிம் பெண்கள் நிகாப் அணிகின்றனர் என்பது. அதுமட்டுமல்லாமல், மேற்கத்திய நாடுகள் மற்றும் இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளில் முஸ்லிம் பெண்கள் அறுதிப்பெரும்பான்மையினர் ஹிஜாப் என்னும் (முகத்தை மூடாத) ஆடை முறையை அணிபவர்களாகவே இருக்கின்றனர்.

  இந்த காரணத்தினாலேயே நிகாப் தடை செய்யப்பட்ட போது பிரான்சில் பெரிய அளவில் எதிர்ப்பு எழவில்லை.

  ஆசிட் வீச்சுக்கும் இஸ்லாத்திற்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை. இந்த விஷயம் இஸ்லாமிய சட்டத்தை அமல்படுத்துகின்றோம் என்று சொல்லி செயல்படும் ஈரானுக்கு ஏன் தெரியவில்லை என்றும் புரியவில்லை. ஏனென்றால் ஈரான் தான் அப்படியொரு தீர்ப்பை சமீபத்தில் வழங்கியது. அதாவது, அங்கே ஒரு சகோதரி மீது ஒரு முட்டாள் ஆசிட் வீசி விட்டான். இதற்கு தண்டனையாக திரும்ப அந்த பெண்ணை அவன் மீதும் ஆசிட் வீச சொல்லி தீர்ப்பளித்தது ஈரான் அரசு.

  ஆனால் அந்த சகோதரியோ குர்ஆனின் வசனத்திற்கேற்ப அவனை மன்னித்துவிட்டு விட்டார்.

  ஒருவித குழப்பத்துடன், இஸ்லாமிய அறிவு இல்லாமல், சொல்லப்படாதவை சொல்லப்பட்டவையாக சித்தரித்து இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

  நான் ஏற்கனவே சொல்லியது போன்று வாஞ்சூர் அவர்கள் கொடுத்துள்ள சுட்டிகளை பார்த்தாலே இஸ்லாம் கூறும் பெண்ணியம் குறித்து ஒருவர் புரிந்துகொள்ளலாம். அதற்கு வேண்டியது, எந்தவித சாய்வு பார்வையும் இல்லாமல் எங்கள் கருத்துக்களை நேரான பார்வையில் முன்னோக்குவதே ஆகும்…

  தங்களுக்கு நேரமிருந்தால் இதனை பார்வையிடவும்

  http://ethirkkural.blogspot.com/2010/11/blog-post.html

  முக்கிய குறிப்பு: கருத்து விமர்சனங்கள் வினவை நோக்கி மட்டுமே வைக்கப்படுகின்றன. விமர்சங்களுக்கு பதில் சொல்லவேண்டியது வினவு மட்டுமே.

  நன்றி,

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ
  http://ethirkkural.blogspot.com/

  • இஸ்லாமில் இப்படி இல்லை அப்படி இல்லை என்று வலிந்து வலிந்து நிரூபிக்க முயலும் அன்பர்கள் இந்தபெண்களுக்கு ஏன் இப்படி நடந்தது என்றும் அதற்கான தீர்வையும் ஏன் பேச மறுக்கிறார்கள்?

   • வினவின் இந்த இடுகை அந்த பெண்களுக்கு நடந்தது குறித்தும், அதன் தீர்வுகள் குறித்தும் அல்ல என்பதை அறிக. இஸ்லாம் குறித்த தனது சொந்த கருத்துக்களை திணிக்க அந்த நிகழ்வுகளை பயன்படுத்திகொண்டிருக்கிறார் வினவு, இப்பதிவின் தலைப்பை படித்தாலே இது புரியும்.
    “இஸ்லாமியப் பெண்களைச் சிதைக்கும் ஆணாதிக்க அமிலம்!”
    ஹிஜாப், உடலுறவுக்கு மறுத்தால் அடிக்கலாம், திருமணம், விவாஹரத்து என்று பயணித்த இஸ்லாம் குறித்த அவரது (வறட்டு) வாதங்கள், கடைசியில் ஒப்புக்கு அஞ்சலி என்ற பெண்ணின் மீதான பாஜக தலைவர் பிஜூவின் ஆசிட் வீச்சு பற்றியும், ஆந்திர மாணவிகளின்மீது ஆசிட் வீசப்பட்டதை குறித்தும் பேசுகிறது. இந்த ஆசிட் தாக்குதல்கள் இந்தியாவிலும் சாதாரணமானதொன்றுதான் என்று அவரது வாதங்கள் சொல்லுகின்றன. அப்படியாயின் “இந்துப் பெண்களைச் சிதைக்கும் ஆணாதிக்க அமிலம்!” என்று ஏன் தலைப்பிடவில்லை?

    பிறகு, தலைப்பிலிருந்து விலகி நிலப்பிரபுத்துவ பிற்போக்குத்தனம், முதலாளித்துவ பாலியல் சுரண்டல் போன்ற அவர்களது ஆஸ்தான கொள்கைகளையும் விவரிக்கிறார்.

    இறுதியில், நச்சென்று ஒன்று சொன்னார் பாருங்கள்.
    // பெண்ணை நுகர்பொருளாக, உடமையாகக் கற்றுக்கொடுக்கும் ஊடகங்களும், சினிமாவும் அவளை அடைந்தே தீரவேண்டிய பொருளாகவே பார்க்கிறது. //
    //பர்தாவுக்குள் அடைத்து வைத்திருக்கிறது இசுலாமிய அடிப்படைவாதம்.//
    //பெண்களை அரைகுறையாக சீயர் லீடர்ஸ் என்ற பெயரில் கவர்ச்சிக்கு உபயோகப்படுத்துகிறது.//

    பெண்கள் அப்படி அரைகுறையாக கவர்ச்சி காட்டாமல், மறைக்கவேண்டிய அங்க அவயங்களை மறைக்க எடுத்துரைக்கிறார். இஸ்லாத்தில் அதன் பெயர்தான் புர்கா. வினவு அவர்கள் முன் பகுதியில் சொன்ன புர்கா குறித்த கருத்துக்களை அவரே பின் பகுதியில் மறுக்கிறார். என்ன ஒரு விந்தை?

    வினவு அவர்களுக்கு உண்மையில் பெண்களுக்கெதிரான அடக்குமுறையில் அக்கறை இருக்குமாயின், அவர் இஸ்லாத்தின் பெயரால் இந்த கருத்துகளை பதிந்திருக்க வேண்டியதில்லை. இஸ்லாம் குறித்த தனது சொந்த கருத்துக்களை திணிக்க அந்த நிகழ்வுகளை பயன்படுத்திகொண்டிருக்கிறார், அவ்வளவே..


    சஹா, சென்னை.

    • பெண்ணடிமைத்தனம் (பர்தா உள்ளிட) உள்ளிட்ட நிலப்பிரபுத்துவ பிற்போக்குத்தனங்களை தனது சொந்த ஆதாயம் கருதி முதலாளித்துவம் விட்டு வைத்திருக்கிறது என்று தெளிவாகக் கட்டுரை எடுத்துரைக்கிறது. முதலாளித்துவம் ஏற்பாடு செய்து தரும் இந்த ‘வசதி’யால் அதே பெண்ணடிமைத்தனம் எத்தனை நவீன அவதாரமும் எடுக்கிறது என்பதையே சியர் லீடர்ஸ் உதாரணம் எடுத்துக் காட்டுகிறது. (இங்கே ஒரு சியர்லீடர் என்ன வக்கிரங்களைக் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது என்பதை ஒரு ஆஸ்திரேலியச் சியர்லீடர் பெண் பதிவிட்டு அவர் வேலையை விட்டு நீக்கப்பட்டது வரலாறு)

     இதில் நீங்கள் விந்தையெனக் காணும் முரண்பாடு என்னவென்று விளங்கவில்லையே?

    • மறைக்க வேண்டிய அங்க அவயங்களை மறைப்பது உடை. ஆனால் புர்க்கா உடையா? எனில் பெண் என்பவள் கண்கள் தவிர முழுக்க மறைக்கப்படவேண்டிய அங்க அவயங்களா?!!

   • பிறகு வினவே கூறுகிறார்,
    // மதம் எதுவாக இருந்தாலும் அதன் ஒழுக்கம், அன்பு, அமைதி என்ற எல்லாவற்றையும் பிரித்துவிட்டுப் பார்த்தால் மையமாக இருப்பது பெண்ணடிமைத்தனமும், ஆணாதிக்கமும்தான்.//
    பிறகு ஏன் இஸ்லாத்தை மைய்யப்படுத்தி கட்டுரையிடவேண்டும்? இதிலிருந்தே தெரியவில்லையா, குழப்பம் யாருக்கென்று??

    • உங்களுக்கு என்ன பிரச்சினை? கட்டுரை வெளியிட்டதா இல்ல முஸ்லீம் பெண்களின் உண்மையான நிலையை, இஸ்லாம் பெண்க்ளை அடிமைப்படுத்தியிருப்பதை வெளிப்படுத்தியது பிரச்சினையா?

  • நான் எப்படி உன்மையை எழதுரழுதுரது என்டு யோசிச்சன்.
   பதில் எலுதினதுக்கு மிக்க நன்றி.

 20. அன்புள்ள வினவு குழுவினர்களுக்கு,

  வினவிடம் கேட்ட கேள்விக்கு இதுவரை பதிலில்லை. மற்றொருவர் (Ethicalist) சம்மந்தமில்லாமல் வேறொரு கருத்திடுகிறார். நான் அதுகுறித்து பதிலிட்டால் வேறொருவர் வேறொரு வன்மத்தை இஸ்லாத்தின் மீதும் முகமது நபியின் மீதும் சுமத்துவாரா? வினவின் தப்பிக்கும், மழுப்பும் தந்திரங்களுள் இதுவும் ஒன்றா?

  ஆதாரமற்ற உங்கள் கருத்துக்களையும், பல கருத்து திரிபுகளையும் மற்றும் (Ethicalist) போன்ற சம்மந்தமில்லாத பல பதில்களையும் கொண்ட இந்த திரியை நீங்கள் ஏன் நீக்ககூடாது?

  அல்லது ஆதாரங்கள் இருந்தால் அதை முன்வையுங்கள். மக்களை குழப்பி அதன்மூலம் ஆதாயம் தேட முயலும் தங்கள் போன்றோரின் செயல் விரும்பத்தக்கதல்ல.

  எனது இந்த கருத்து மட்டுறுத்தலின்றி வெளியிடப்படும் என்ற நம்பிக்கையுடன்…

  (வினவு குழு, vanjoor, Aashiq Ahamed மற்றும் இங்கு கருத்து பகிர்ந்த நம் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக. ஆமீன். )


  சஹா, சென்னை.

 21. நம் அனைவரின் மீதும் ஏகன் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
  அன்பு வினவு நிர்வாக சகோதரர்களுக்கு., வழக்கம்ப்போல் இஸ்லாத்தில் பெண்ணடிமைத்தனத்தை புகுத்த முயற்சித்தமைக்கு., என் கண்டனங்கள்.. நேரடியாக கேட்கிறேன்., பிற்போக்கு சிந்தையில் இஸ்லாத்தை முன்னிலைப்படுத்தும் நீங்கள் இஸ்லாம் அல்லாத ஏனைய மதம் மற்றும் மதம் சாரா பெண்கள் இன்று வரையிலும் தங்களது முதல் எழுத்தாக தனது கணவனின் பெயரையோ அல்லது தங்களது தந்தையின் பெயரையோ தான் வைத்திருக்கிறார்கள்..ஏன் அவ்வாறு வைக்க வேண்டும் உங்களின் செந்திற பார்வையில் இதற்கு பெயர் ஆணாதிக்கதனம் இல்லையா..? பகுத்தறிவில் நோக்கினாலும் அஃது அவ்வாறு ஆண்களின் இன்ஷியல் வைக்க வேண்டிய அவசியம் இல்லையே..?
  இன்று வரை விவாகரத்து பெற்றால் பெண்ணுக்கு தான் ஆணிடமிருந்து ஜிவானாம்சம் பெறப்படுகிறது., மாறாக எந்த ஆணுக்கும் பெண்ணிடமிருந்து ஜிவானாம்சம் பெறப்படுவதில்லை.. ஆண் பெண் சமத்துவம் பேசும் உலகில்.. இது ஆணை விட பெண்ணை மட்டம் படுத்தும் இல்லை… இல்லை கேவலப்படுத்தும் நிகழ்வாக இல்லையா..? ஆணுக்கு பெண் சமம் என குரலெழுப்பும் உங்களின் பெண்ணிய கரிசனம் ஏன் இதற்கு எதிராக மௌனம் சாதிக்கிறது..? முழுவதும் ஆணாதிக்கம் நிறைந்த இந்த சமுக விஷயத்தில் வினவுவின் பெண்ணுரிமை எங்கே போனது…? உங்களின் வெற்று எண்ணத்தில் குர்-ஆனுக்கு சுய விளக்கம் தந்து ஏனைய உலகவியல் தவறோடு இஸ்லாத்தை ஒப்பிட்டு உங்களின் காழ்ப்புணர்ச்சியே கண்ணியில் கொட்டாதீர்கள்., ,
  வினவுவின் பார்வைக்கு இறுதியாக! இஸ்லாம் இவ்வுலக வாழ்க்கைக்கு பொருந்தாத ஆணாதிக்க சட்டங்களை கொண்டாத நீங்கள் கருதினாலோ அல்லது நீங்கள் கொண்ட கொள்கைதான் ஏற்றமானது என நம்பினாலோ, நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்! இஸ்லாம் அல்லாத ஏந்த மாற்று சட்டத்தால் அனைத்து நிலைகளிலும் மனித சமுகத்திற்கு தேவையான உகந்த தீர்வை ஏற்படுத்த முடியும்., அஃது உங்களது கம்யூனிச சட்டமாக ஆயினும் சரியே நீங்கள் உண்மையாளராக இருந்தால் உங்களின் அடுத்த ஆக்கம் அதை குறித்து இருக்கட்டும். அதுவல்லாமல் இஸ்லாம் -பர்தா-பெண்ணடிமைத்தனம் என ஆயிரம் முறை கேள்விகளாகப்பட்டு ஆயிரத்தொரு முறை பதிலளிக்கப்பட்ட கேள்விகளை தூசித்தட்டி கொண்டு வந்தால், இனி பொய்-புரட்டு என்பதற்கு தமிழ் அகராதியில் மூன்றெழுத்து வார்த்தைதான் சொற்பொருளாக இருக்கும்.,

  -இறை நாடினால் இனியும் சந்திப்போம்
  http://iraiadimai.blogspot.com/

 22. இஸ்லாமிய மதவாதிகள் எபடி இவ்வளவு தைரியமாக எங்கள் மதத்தில் அனைத்துமே சரி என்று கூச்சலிட முடிகிற‌து?
  இது அவர்களின் ஒரே இறைவனால் முகமது மூலம் சொல்லப்பட்டு பிறகு யார் யார் மூலமாக தொகுக்கப்பட்ட குரான் கொடுக்கும் தைரியம்தான்.
  1400 வருடம் ஆகியும் எந்த வசனத்திற்கும் இதுதான் தெளிவான் அர்த்த‌ம் என்று கூறவே முடியாது. பல பிரிவுகள் தோன்றியதே இவ்விஷயத்தில் மண்டையை பிய்த்துக் கொண்டுதான்.
  1.ஒரு பிரிவு முகமது இறுதி தூதர் என்றால் ,சில பிரிவுகள் இல்லையென்பார்,இருவரும் ஒரே வசனத்திற்கு பல வியக்கியானம் சொலவ்து மிகவும் நகைச்சுவையாக் இருக்கும்.
  2.ஒரு பிரிவு ஈசா இறந்து விட்டார் என்றால் இன்னொரு பிரிவு இல்லை என்று கூக்குரலிடும்.
  3.ஒரு பிரிவு தற்காலிகத் திருமணம் 4.24 ஐ காட்டி நட்த்தும்.இன்னொரு பிரிவு அது அப்படி இல்லை என்று கூறும்.

  4.கல்லெறிதல்,சுன்னத்,ஐந்து நேர தொழுகை குரானில் இல்லை என்றாலும் பின்பற்றுவார்கள்.அடைப்புக் குறியை போட்டு அறிவியல் முதல் அரசியல் வரை எந்த கருத்தும் கொண்டுவர முடிவதே இது இறைவனிடம் இருந்து வந்தது என்பதன் அத்தாட்சி.

  • திரு samurai அவர்களுக்கு,
   தொழுகை குறித்து குரான் கூறுவதை பாருங்கள்.

   30:31. நீங்கள் அவன் பக்கமே திரும்பியவர்களாக இருங்கள்; அவனிடம் பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்; தொழுகையையும் நிலை நிறுத்துங்கள்; இன்னும் இணைவைப்போரில் நீங்களும் ஆகி விடாதீர்கள்.

   4:103. நீங்கள் தொழுகையை முடித்துக் கொண்டால், நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும், விலாப்புறங்களின் மீது (படுத்திருக்கும்) நிலையிலும் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்; பின்னர் நீங்கள் (ஆபத்தினின்று விடுபட்டு) அமைதியான நிலைக்கு வந்ததும், முறைப்படி தொழுது கொள்ளுங்கள் – ஏனெனில், நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது.

   17:78. (நபியே!) சூரியன் (உச்சியில்) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை (ளுஹ்ரு, அஸ்ரு, மஃரிப், இஷா) தொழுகையை நிலை நிறுத்துவீராக; இன்னும் ஃபஜ்ருடைய தொழுகையையும் (நிலைநிறுத்துவீராக); நிச்சயமாக ஃபஜ்ரு தொழுகை சான்று கூறுவதாகயிருக்கிறது.

   24:58. ஈமான் கொண்டவர்களே! உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர் (அடிமை)களும், உங்களிலுள்ள பருவம் அடையாச் சிறுவர்களும் (உங்கள் முன் வர நினைத்தால்) மூன்று நேரங்களில் உங்களிடம் அனுமதி கோர வேண்டும்; ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நீங்கள் (மேல் மிச்சமான) உங்கள் உடைகளைக் களைந்திருக்கும் “ளுஹர்” நேரத்திலும், இஷாத் தொழுகைக்குப் பின்னரும்-ஆக இம்மூன்று நேரங்களும் உங்களுக்காக (அமையப் பெற்றுள்ள) மூன்று அந்தரங்க வேளைகளாகும் – இவற்றைத் தவிர (மற்ற நேரங்களில் மேல்கூறிய அடிமைகளும், குழந்தைகளும் அனுமதியின்றியே உங்கள் முன் வருவது) உங்கள் மீதும் அவர்கள் மீதும் குற்றமில்லை; இவர்கள் அடிக்கடி உங்களிடமும் உங்களில் ஒருவர் மற்றவரிடம் வரவேண்டியவர்கள் என்பதினால்; இவ்வாறு, அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்; மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.

   அடைப்புக்குறி குறித்த தங்கள் கருத்து மொழிகள் பற்றிய தங்கள் அறிவு ஞானத்தை (?!) தெளிவாக்குகிறது. திருமறை குரான் அரபு மொழியில் அருளப்பட்டதால், அந்த மொழிக்குரிய இயல்போடு இருக்கிறது, ஆகையால் அதை மொழிபெயர்க்கும் பொது அதன் கருத்துக்கள் மாறாமல் இருக்க அடைப்புக்குறி அவசியமாகிறது.

   மொழிபெயர்ப்பு பற்றி விக்கிபீடியா கூறுவதை படியுங்கள்.

   “ஒரு மொழியில் உள்ள உரைப்பகுதியின் பொருளை விளக்கி அதே பொருள் தரக்கூடிய இன்னொரு உரைப்பகுதியை வேறொரு மொழியில் உருவாக்குதல் மொழிபெயர்ப்பு எனப்படுகின்றது. இங்கே முதல் உரைப்பகுதி மூல உரைப்பகுதி என்றும் உருவாக்கப்பட்ட உரைப்பகுதி இலக்கு உரைப்பகுதி என்றும் குறிப்பிடப்படுகின்றது. இலக்கு உரைப்பகுதி, மூல உரைப்பகுதியின் மொழிபெயர்ப்பு ஆகும்.

   மொழிபெயர்ப்பு, சூழ்நிலைகளையும், இரண்டு மொழிகளினதும் இலக்கண விதிகளையும், அவற்றின் எழுத்து மரபுகளையும், மரபுத் தொடர்களையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். ”

   link

   http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

   குரானை அங்கொன்றும் இங்கொன்றுமாக தப்புத்தப்பாக படித்துவிட்டு விமர்சிக்காதீர்கள்.

 23. இபோது குரான் 4.34 அடிக்க சொல்கிறது ஏன் என்றால் உடல் உறவுக்கு மனைவி மறுத்தால் என்று பதிவிட்டது தவறு குரானில் எங்கே என்கிறார்கள்.வேண்டுமானால் அடைப்புக் குறிக்குள் அவர்கள் மட்டுமே போட முடியும்.ஆனால் பல முல்லாக்கள் இதை கூறுவதை காட்டினால் அவர்கள் சொலவ்து சரியான் விளக்கம் அல்ல என்பார்கள்.
  இப்போது இபின் அப்பாஸ்/ன்(முகமதுவின் மஉறவினர்) தஃப்சீரில்(விளக்கம் இப்படித்தான் கூறுகிறது என்றால் இதையும் ஏற்றுக் கொள்ள மாட்டடர்கள் என்பதும் தெரியும்.
  இது மற்றவர்கள் உடல் உற‌வுக்கு மனைவி மறுத்தால் அடிக்கலாம் என்பது இஸ்லாமின் அனுமதிக்கப்பட்ட ஒரு விஷயம்.

  ibn abbas tafsir for koran 4.34

  http://www.altafsir.com/Tafasir.asp?tMadhNo=0&tTafsirNo=73&tSoraNo=4&tAyahNo=34&tDisplay=yes&UserProfile=0&LanguageId=2
  (Men are in charge of women) they are in charge of overseeing the proper conduct of women, (because Allah hath made the one of them) the men through reason and the division of booty and estates (to excel the other) the women, (and because they spend of their property (for the support of women)) through paying the dowry and spending on them, which the women are not required to do. (So good women) He says: those wives who are kind to their husbands (are the obedient) they are obedient to Allah regarding their husbands, (guarding) their own persons and the wealth of their husbands (in secret) when their husbands are not present (that which Allah hath guarded) through Allah’s protection of them in that He gave them the success to do so. (As for those from whom ye fear) know (rebellion) their disobedience to you in bed, (admonish them) by means of sacred knowledge and the Qur’an (and banish them to beds apart) turn your faces away from them in bed, (and scourge them) in a mild, unexaggerated manner. (Then if they obey you) in bed, (seek not a way against them) as regards love. (Lo! Allah is ever High Exalted) above every single thing, (Great) greater than every single thing. Allah has not burdened you with that which you cannot bear, so do not burden women with that which they cannot bear of affection.

 24. Beat your Wives or “Separate from Them”? (Qur’an 4:34)
  http://www.wikiislam.net/wiki/Beat_your_Wives_or_%22Separate_from_Them%22%3F_(Qur%27an_4:34)

  http://www.wikiislam.net/wiki/Wife_Beating_in_Islam
  __________

  மேற்கூறிய சுட்டிகளை பார்த்தால் இவ்வசனத்திற்கு பல பொருள் அடைப்புகுறி இட்டும்,இடாமலும் கூறலாம் என்பது புரியும்.
  ஒரு நடைமுறையில் இஸ்லாமிய பெண்கள்,பிற மத பெண்களை விட உரிமைகள் குறைவாக் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.

  1.முதல் மனைவியின் ஒப்புதல் இன்றி கணவன் இன்னொரு திருமணம் செய்ய முடியும்.ஒரே சமயத்தில் 4 மனைவிகள் வைத்திருக்க அனுமதி உண்டு.வசதி உள்ளவர்கள் 4 ஐ சுழற்சி முறையில் பயன் படுத்துவர்.சவுதி அரசன் அப்துல்லாவிற்கு 30 மனைவிகள்,ஆனால் எப்போதும் மொத்த்ம் 4 மட்டுமே.

  2. திருமண‌ வயது இல்லாத்தால் பலர் மதம் மாறி மைனர் பெண்னை மனமுடிப்பதும் அறிந்த விஷம்ம்.இதில் இறைதூதரே வழிகாட்டி 6 வயது பெண்ணை திருமணம் செய்தார்.

  3. ஃபர்தா என்பது பெண்கள் விரும்பி அணிதல் சரி.அணியாத பெண் மீது வன்முறை.இன்னும் சில நாடுகளில் இது கட்டாய படுத்த படுகிற‌து.

  • samurai நல்ல கமொடி பன்னுறீங்கே

   //ஒரு நடைமுறையில் இஸ்லாமிய பெண்கள்,பிற மத பெண்களை விட உரிமைகள் குறைவாக் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.//

   அப்புடியா இது சம்பந்தமாக விரிவாக பதில் சொல்றதுக்கு முன்னாடி

   பெண் உரிமையைப்பற்றி மனுஸ்மிர்தி சொன்னது
   (சமஸ்கிருத மூலமொழியில் கீழே)

   (பால்யே பிதிர்வஸே விஷ்டேது பானிக்ரஹா யெளவ்வனே புத்ரானாம் பர்த்தரீ
   ப்ரேது நபஜேத் ஸ்த்ரீ ஸ்வதந்த்ரதாம்)

   அதாகப்பட்டது இதற்கு அர்த்தம் என்னவேன்றால்.

   பெண்ணே நீ குழந்தை பருவம் வரை அப்பன் சொன்னதை கேள்
   வளர்ந்து மணமனதும் கனவன் சொன்னதை கேள் உனக்கு குழந்தை பிறந்து தலையேடுத்ததும் உன் மகன் சொன்னதை கேள்
   உனக்கு இதுதான் கதி நீ சுகந்திரமாக வாழ தகுதியற்றவள் ஆண் சொல்படி கேள்

   என்ன அருமையான சட்டம்
   ஆமா ராமனின் தந்தைக்கு தசரதனுக்கு 60,000 மனைவிகள் இந்த ரிக்கர்டை கண்டிப்பாக யாரலும் ஒடைக்க முடியாது

   • உண்மை,

    உண்மை என்று பெயர் வைத்துகொண்டு உண்மையிலே காமெடி செய்வது நீங்கள் தான்….

    இது முழுக்க முழுக்க இசுலாமிய சம்பந்தப்பட்ட பதிவு…

    Ethicalist என்று ஒருவர் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகிறார். அவருக்கு பொருத்தமான பதிலை கூறி அவரது வாதத்தை உடைக்க வேண்டிய தாங்கள் சம்பந்தமே இல்லாமல் இந்து மதத்தில் இருந்து உதாரணங்களை கூறுவதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்?

    அ. பெண்கள் மீதான அடக்குமுறை எல்லா மதங்களிலும் இருக்கிறது என்று சொல்ல வருகிறீர்களா? அப்படி என்றால் நீங்கள் சார்ந்திருக்கும் மதமே சிறந்தது என்று சொல்ல இயலாது அல்லவா?

    ஆ. ஹிந்து புராணங்கள் எல்லாம் கட்டுகதைகள் என்று உங்களை போன்ற மாற்று மத சகோதரர்கள் கூறி வரும் போது, அவற்றை தசரதன் போன்ற உதாரணங்கள் கூறி உண்மை என்று ஒத்து கொள்கிறீர்களா?

    முடிந்தால் ஆத்திரப்படாமல் Ethicalist இன் வாதத்தை ஆதாரங்களுடன் உடைக்கவும். இல்லையெனில் மற்றவர்கள் போல அமைதியாக இருந்து விடவும்…


    மாக்ஸிமம்

 25. என்னங்க நடுநிலையாளர்-நு காட்டிக்க முயற்சியா ?. நல்ல முடிவு.

  மத வாதிங்க யாருமே அவங்கவங்க மதத்திலே இருக்கற ‘குறைகள’ ஒத்துக்க மாட்டாங்க. அதுக்காக மத்தவங்க சுட்டி காட்டாம இருக்க முடியாது.

  முக்கியமா நம்ம நாட்டுலேயும் வயசான அரபு ஷேக்கு-கள் வந்து சின்ன வயசு பொண்ணுங்கள கல்யாணம் பண்ணிட்டு கொஞ்ச நாள் கழிச்சு தலாக் சொல்லிட்டு போறதுக்கு மதம் உதவி செய்யுது.
  http://answering-islam.org/Silas/childbrides.htm

 26. இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பிறப்பிலிருந்தே மனிதாபமானம் அற்றவர்களாகவும், தீயவர்களாகவும் இருக்கிறார்களா? என்று கேட்டால், நிச்சயமாக பதில் “இல்லை” என்பது தான்.

  http://unmaiadiyann.blogspot.com/2008_12_03_archive.html

  • என்னமா கதை சொல்ரீங்க….. ஜிகாத் இதர்கு பல பொருல் உன்டு…. ச்ட்ருக்க்லெ… மிகவும் சரியானது……. அது ஆயுதம் தரித்து மட்டும் அல்ல… இப்போது என்னுடய சகோதரர்கல்… கருத்தின் மூலம் பதில் தருகிரார்கலே.. அதுவும் ஜிகாத்…. பாவம் உங்கலுக்கு அது புரியல போல….

   • இன்ரும் நாங்கல் அனைத்து வேதங்கலையும் நமபுகிரோம்…ஆனால் குரான் இருதி வேதம் அவ்வலவே…..

   • நான் எனது கருத்துகளை ஆதாரத்துடன் தெரிவித்துள்ளேன். முடிந்தால் அந்த ஆதாரங்கள் தவறு என்று நிரூபிக்கவும். சும்மா RSS உடன் என்னை தொடர்பு படுத்தி சிண்டு முடிப்பதை தவிர்க்கவும்.

    http://www.answering-islam.org/tamil/muhammad/oman.html

  • அன்பு Ethicalist,

   தங்களின் வாதம் விடந்தண்டாவதமாக உள்ளது . ஒரு பேச்சுக்கு நான் இப்படி கூறினால் அதை நீங்கள் ஏற்றுக்கொவீர்களா?

   ” எல்லா கம்யுனிஸ்டுகளும் நக்சல் பாரி / மாவோயிஸ்டுகள் அல்லர்,
   எல்லா நக்சல் பாரி / மாவோயிஸ்டுகளும் கம்யுனிஸ்டுகள் அல்லர்.

   ஆனால் ஒரு நக்சல் பாரி / மாவோயிஸ்ட் அடிப்படைவாதி தான் சண்டையில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் போது, தன் மூலமாக மற்றவர்கள் கொடூரமாக காயப்படுத்தப்படுகிறார்கள் என்பதை நினைத்துப் பார்ப்பதில்லை, அதற்கு பதிலாக “தான் தன் கொள்கையை, முதலாளித்துவ சுரண்டலை எதிர்கிறோம் ” என்பதை மட்டுமே நினைக்கிறான். இப்படி வன்முறையில் ஈடுபடுவதினால், தனக்கு / தன் மக்களுக்கு நல்ல பணம், பதவி சுகம் நிச்சயம் கிடைக்கும் என்று கருதிவிடுகிறான்.

   என் இந்த கருத்துக்களுக்காக கம்யுனிஸ்ட் தோழர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். உங்கள் வார்த்தைகள் எங்களை எவ்வளவு காயப்படுத்துகிறது என்பதை சுட்டவே இவ்வாறு கூறினேன். மன்னிக்க.

   நண்பர் Ethicalist இந்த திரியின் தலைப்புக்கு சற்றும் சம்மந்தமில்லாத அவரது இஸ்லாமிய எதிர்ப்பு வாதங்களை வைக்கிறார். இஸ்லாத்தை எதிர்க்க வேண்டும் என்ற பொதுப்புத்தியில் அவர் இதை செய்வதாகவே எனக்குப் படுகிறது.

   நான் இதுவரை கேட்ட கேள்விக்கு வினவு குழுவினர் உள்ளிட்ட யாரும் பதிலளிக்கவில்லை, அப்படியெனில் அவர்களிடம் வறட்டு தத்துவங்கள் மட்டுமே உள்ளது, ஆதாரங்கள் ஏதும் இல்லையென பொருள்கொள்ள வேண்டியுள்ளது.
   அபாண்டமான குற்றச்சாட்டை அடுத்தவர் மீது வைப்பதுதான் தங்கள் வழமையோ?

   என்னுடைய கமெண்ட்டை அனுமதித்ததற்கு நன்றி.

   சஹா, சென்னை.

  • u r the best story writer i ever known…. story…screenplay… direction…by ETHICALIST….simply superb… i think u r trained in R.S.S…. u r simply speaking sang parivaars propaganda against islam….

  • அறிந்திராத உண்மைகள் இருக்கட்டும் வாஞ்சூர், இதுவரை அறிந்த பல உண்மைகள் இக்கட்டுரையில் இருக்கின்றன. அதைப்பற்றி எப்போ சிந்திப்பீங்க?

 27. நான் எனது கருத்துகளை ஆதாரத்துடன் தெரிவித்துள்ளேன். முடிந்தால் அந்த ஆதாரங்கள் தவறு என்று நிரூபிக்கவும். சும்மா RSS உடன் என்னை தொடர்பு படுத்தி சிண்டு முடிப்பதை தவிர்க்கவும்.

  http://www.answering-islam.org/tamil/muhammad/oman.html

 28. ஹலோ எத்திஸ்ட்
  நம்ம சொன்னதுக்கு அவிய்ங்கே என்ன பதில் சொன்னாய்ங்கே அத வெளங்கி தான் பேசுகிறோமா என்ற எந்த பொது அறிவும் இல்லாமல்
  எரும மாட்டுலே மழ போஞ்ச மாதிரி எனக்கேன்னனு அடிச்சு உட்டுகிட்டே போன எப்புடியிண்ணே?
  எங்காயவது படிச்ச குப்பையை நா பட்டுக்கு கொட்டி விட்டுட்டு போயிட்டே இருப்பேன்
  என்று இருக்கிறது உன்னுடைய எழுத்தும் செயலும் கொஞ்சம் மூச்சு வாங்கு மெளத்த போயிற போற நிதானம் ரொம்ப முக்கியம்.ம்ம்

 29. @ Ethicalist

  உங்கள் வாதங்களை, முரண்பட்ட கருத்துக்களை மட்டும் கூறவும். அதை விடுத்து மரியாதைகுறைவாகவும் தரக்குறைவாகவும் விமர்சனம் செய்வதை அனுமதிக்க முடியாது. உங்கள் தவறுகளை திருத்திக்கொள்ளுங்கள்.

  பண்பாடு, நாகரீகம் அற்ற, மரியாதை தெரியாத ஒரு காட்டெருமையிடம் நான் விவாதம் செய்ய விரும்பவில்லை.

  வினவிர்க்கு ஓர் முக்கிய வேண்டுகோள்,

  Ethicalist-ன் மேற்கண்ட பதிலில் தரம் தாழ்ந்த முறையில் , தகாத முறையில் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப்பற்றி கூறப்பட்டிருப்பதால் அந்த பதிலை நீக்கவும்.
  நேர்மையான முறையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறேன்.
  தங்களது தளத்தில் கருத்து மோதல் மட்டுமே நடக்கும், தனி நபர் தாக்குதல்கள் இராது என்றெண்ணுகிறேன்.


  சஹா, சென்னை.

  • “பண்பாடு, நாகரீகம் அற்ற, மரியாதை தெரியாத ஒரு காட்டெருமையிடம்”
   ..
   “தங்களது தளத்தில் கருத்து மோதல் மட்டுமே நடக்கும், தனி நபர் தாக்குதல்கள் இராது என்றெண்ணுகிறேன்.”

   ————

   அது சரி.. 🙂

  • தவறு செய்பவர்கள் தனி நபர்களாக இருந்தால்? அவர்களை விமர்சிக்கக் கூடாதுதா? மாற்று கருத்துகளுக்கும் காலத்திற்கேற்ப மாறுதலுக்கும், வழிவிடாத-இடம் அளிக்காத எந்த மதமும் மதி்ப்பை பெறாது. 19-ம் நுாற்றாண்டின் எந்த சனநாயக கருத்தும் இசிலாமியத்தில் இடம்பெறவில்லை. இசிலாமிய நாடுகளில் தொழில்புரச்சியும் ஏற்படவில்லை. தொழில்புரட்சி ஏற்பட்ட நாடுகளிடம் அடிமைகளாகவும் அவை இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக எண்ணைவளம் காரணமாக வளர்ந்த நாடுகள் தங்களை அண்டி இருக்கும் நிலையால் இசிலாம் இந்த நிலையில் இருக்கிறது. உலகில் கொல்லப்படுவர்களில் அதிகம்பேர் இசிலாமியர்கள். உங்கள் முகமது நபி என்ன செய்தார்? முதல் பெண்கள் போரில் வன்புணர்ச்சி செய்வது பற்றி நபிகள் சொன்னதாக சொல்லியவற்றை உங்கள் கருத்து என்ன? அவை உண்மைகாளா? பொய்களா? பதில் வேண்டும்

   • சூரி அவர்களே
    //19-ம் நுாற்றாண்டின் எந்த சனநாயக கருத்தும் இசிலாமியத்தில் இடம்பெறவில்லை. //

    இஸ்லாமை பற்றி உங்க்ளுக்கு ஒன்றுமே தெரியவில்லை என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இஸ்லாம் ஒரு முழுமைப்படுதத்தப்பட்ட மதம்.. சீ… மார்க்கம். அல்லாஹ் உங்களுக்கு மதத்தை முழுமைப்படுத்திவிட்டேன் என்று அல்குரானிலேயே சொல்லிவிட்டான். பிறகு இஸ்லாமிய சமுதாயத்தில் புதிய கருத்துகளை கொண்டுவருவது ஃபிட்னா என்று அறியவும்.
    ஃபிட்னா என்றால் என்ன வென்று இந்த பதிவில் பார்க்கலாம்

    http://pagadu.blogspot.com/2011/08/blog-post.html

   • சூரி,

    19 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஜனநாயக கருத்துக்கள் அல்குரானில் இல்லாமலிருக்கலாம். அதற்கு தேவையுமில்லை. ஆனால், 19ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் கருத்துக்கள் அல்குரானில் இடம் பெற்றிருப்பது எபப்டி?

    ஹைசன்பர்க் அன்சர்டைனிடி பிரின்ஸிபிளை அன்றே சொன்ன அல்லாஹ் பற்றிய கட்டுரையை இப்போது பதிந்திருக்கிறேன்.

    படித்து அல்குரான் அல்லாஹ் அனுப்பிய இறைச்செய்திதான் என்ற ஆதாரத்தை படியுங்கள். பகிர்ந்து கொள்ளுங்கள்

    இஸ்லாமிய அறிவியல்: ஹெய்சன்பர்க் ஐயப்பாட்டுக் கொள்கையை அன்றே அறிவித்த அல்லாஹ்

    • நண்பர் இப்னு ஷகிர். இஸ்லாமை மிகத் தெளிவாக உமது தளத்தில் விளக்கியுள்ளீர்கள். அறிவுள்ளவன் எவனும் இதை படித்து புரிந்து கொள்ளக் கடவன். இஸ்லாம் எப்படிப்பட்ட மகோன்னதமான மதம் என்று நன்றாக விளங்கியது. மேலும் எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

     • நான் கடவுள் இல்லை என்று பெயர் வைத்திருப்பவரே. (இது என்னமாதிரியான பெயர்? அடுத்தாற்போல நான் இப்னு ஷகீர் இல்லை என்று பெயர் வைத்துகொள்வீர்களா? )
      இஸ்லாம் ஒரு கடல் போன்றது. அத்னை ஒருவராலோ இன்னொருவராலோ ஏன் பிரபஞ்சத்தையே ஆறு நாட்களில் படைத்த அல்லாஹ்வால் கூட தெளிவாக விளக்கிவிட முடியாது.

      அப்படிப்பட்ட இஸ்லாத்தை நான் தெளிவாக விளக்கிவிட்டேன் என்று சொல்வது உங்கள் அறியாமையையே காட்டுகிறது.

      இஸ்லானின் எளிமை பற்றி ஒரு பதிவு எழுதியுள்ளேன் பார்த்து கருத்து கூறுங்கள்

      • நான் கடவுள் இல்லை பெயர் காரணம்– நான் கருத்து முதல்வாதி அல்லன். அதாவது உண்மையான பொருள்முதல்வாதி, வரலாற்று இயக்கவியல் பொருள்முதல்வாதி.

       நன்றி.

       ஆனால் லிங்க் சரியாக கிடைக்க வில்லை.

      • இப்படிப்பட்ட எளிய மதத்தில் சேர்ந்து விட வேண்டும் என்று மனது துடியாய் துடிக்கிறது. ஆனால் உங்களால் தான் இந்து மதத்தில் சேர முடியாது.நீங்கள் எந்த சாதியில் சேருவீர்கள்.

       நான் எப்படி கடவுள் ஆக முடியும். அதனால்தான் நான் கடவுள் இல்லை என்று பெயர் சூட்டிக்கொண்டேன். இப்னு ஷகிர் என்று நான் பெயர் வைத்துக்கொள்ள முடியாது. ஆனால் நீங்கள் நான் கடவுள் இல்லை என்று தாராளமாக பெயர் வைத்துக்கொள்ளலாம். அதுதான் அந்த பெயரின் சிறப்பு.

       • இந்து மதத்தில் எவனாவது சேருவானா? சேர்ந்தால் இபிலிஸ் அவன் காதில் உச்சா போய்விடுவான். இதுவும் இன்ன பிறவுமான ஷைத்தானின் குணநலன்களை நபி)ஸல்) அவர்கள் தெரிவித்ததை அறிவியர்பூர்வமாக ஆராய்ச்சி செய்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்

        இஸ்லாமிய அறிவியல்: ஷைத்தான் ஏன் காதில் உச்சா போகிறான்?

        படித்துவிட்டு அறிவியல் பொங்கி ததும்பும் இறைமார்க்கமான இஸ்லாத்தில் இணையுங்கள். ஆனால் அரபி ஷேக் ஆக்கு, அரபி ஷேக்கின் பெண்ணை தா என்று கேட்டுவிடாதீர்கள்.

        • ஒருவர் வானம் ஏறி வைகுண்டம் போனாராம். அந்த கதையை கொஞ்சம் விளக்கமாக எழுதுங்களேன். உங்களை போன்றோரின் நம்பிக்கை மிகுந்த வாக்கிலேயே அதை கேட்க விரும்புகிறேன்.

         • அவர் பிறந்த மண் ,பொன் விளையும் பூமியாக தெரிகிறது.எத்தனையோ இசங்கள் மண்ணோடு மண்ணாகிவிட்டன. அவர் காட்டித் தந்த வழியில் கோடான கோடி மக்கள் இப்பவும் வாழ்ந்த காட்ட முடியும் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .எந்த நவீனங்களையும் தன்னுள் ஏற்றுக் கொள்கிறது.பொல்லாத வல்லரசு கம்யுனிசத்திற்கு குளிதொண்டிவிட்டது ஆனாலும் இஸ்லாத்தின் மீது எத்தனை அவதூறுகள் பரப்பினாலும் இஸ்லாம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருக்கிறது..பொறாமையின் வெடிப்பில் ,காழ்ப்புணர்வின் புணர்ச்சியில் ,நான் கடவுளும் ,கண்டதுகளும்

       • ///இப்னு ஷகிர் என்று நான் பெயர் வைத்துக்கொள்ள முடியாது. ஆனால் நீங்கள் நான் கடவுள் இல்லை என்று தாராளமாக பெயர் வைத்துக்கொள்ளலாம். அதுதான் அந்த பெயரின் சிறப்பு///

        நன்று.எந்த கொள்கையில் இருக்கிறீர்களோ அந்த கொள்கையின் அடிப்படையில் பெயர் வைத்துள்ளீர்கள்.ஆனால் சிலரோ தங்களுக்கு ஒவ்வாத கொள்கையில் இருந்து களவாடி பெயர் வைத்துள்ளனர்.

    • உங்களுக்கு ஒன்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். மாடு ஆய் போகும் இடத்தில் இருந்து என்ன வரும். இதென்னடா கேனத்தனமான கேள்வி என்கிறீர்களா. சாணிதானே வரும். ஆனால் லச்சுமி வருவாளாம். மாட்டு மூத்திரத்தை தினம் குடிப்பவன்தான் உண்மையான இந்து என்று உயர்ந்த பிராமண பெருமக்கள் கூறுகிறார்கள். பாருங்கள். மாட்டு சாணத்திலேயே தங்கம் எடுக்கிறது இந்து மதம். ஐசன்பெர்க் சொன்னதை முன்னமேயே சொன்ன இஸ்லாத்தை பெருசாக சொல்ல வந்து விட்டீர்கள். யார் மதம் பெரியது. வாருங்கள். சண்டை போடுவோம்.

 30. வினவிற்கு ஒரு வேண்டுகோள்
  Ethicalist என்பவன் , வரலாற்று புரட்டு , மற்றும் மிக தவறுதலான மதிப்பை தரக்கூடிய மொழிமாற்றம் மூலமாக முஹம்மது நபி (ஸல் ) அவர்களை தவறாக எழுதி உள்ளான் நிச்சயமாக இதை ஏற்றுகொள்ள முடியாது , உடனே இவருடையா பின்னூட்டங்களை நீக்குமாறு வேண்டிகொள்கிறேன்

 31. நன்றி எதிகாலிஸ்ட், மிக அருமை. இனிமேலாவது வினவு மற்றும் அதில் மத அடிப்படையிலான பதிவுகளை தவிர்த்துவிட்டு ஆக்கப்பூர்வமான பதிவுகளை இடவும்..இதன் மூலம் எல்லா(இஸ்லாம், கிறித்துவம், இந்து..இன்னும்பல…) மதங்களிலுமே இதுபோல (முகமது, மூசா) வலுதவர்களினால் ஏராளமான இடைச்செருகல்கள் செருகப்பட்டு அம்மதங்களின் உண்மைத்தன்மை கேள்விகுரியக்கப்பட்டு விட்டது..ஆகவே அவைகளில் கூறப்பட்ட நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டு மனிதனாக வாழ முயற்சிக்கவும்..நமக்குள் நாமே அடித்துக்கொண்டு இருப்பதால் நமது தேசம் முன்னேறப் போவதில்லை..நமது நாட்டை ஆஸாத்துகளும் சுரண்டுகிறார்கள்..கிறிஸ்துவின் பெயரால் தினகரன் களும்,இன்னபிற ராசா களும், வதேராகளும், இந்துவின் பெயரால் நித்தியாநந்தா களும் சுரண்டுகிறார்கள்..அவர்களுக்கு மதம் ஒரு மக்களை திசை திருப்பும் கருவி..இனிமேலாவது திருந்துங்கள்..அறியாமையை விடுத்து அனைவரும் ஒன்று படுங்கள்(ஒரு பிகர கரெக்ட்பண்ணும்போது இந்த மதங்கள் எல்லாம் எங்கே போகுதுன்னு தெரியல).கலாமின் கனவை (2020 ல இந்தியா உலக வல்லரசு) நனவாக்குங்கள்…

 32. எதிகலிசுட்,
  நெறிமுறையாளர் என்று பொருள்படும் புனைபெயரை வைத்துக்கொண்டு நெறிமுறைகள் ஏதுமின்றி பண்பாடு,நாகரீகம் என சக மனிதர்களுடன் பேசும்போது கடைப்பிடிக்க வேண்டிய நற்பண்புகளை தூக்கி கடாசிவிட்டு இசுலாமியர்கள் தங்கள் தலைவராக வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டுள்ள நபிகள் நாயகம் அவர்களை அவன்,இவன் என ஏக வசனத்தில் குறிப்பிட்டு அவரைப்பற்றி தரக்குறைவாக விமரிசனங்களை எடுத்து வைத்துள்ளீர்கள்.நீங்கள் சொந்தமாக எழுதும்போது முகம்மது நபியை அவர் இவர் என்றுதான் எழுதியிருக்கிறீர்கள்.சொந்த சரக்கு தீர்ந்து போனபின் ஆரோக்கியம் என்பவர் எழுதியதை வாந்தி எடுக்கும்போது அவரது நரகல் நடையைத்தான் கக்கி இருக்கிறீர்கள்.

  இங்கு நீங்கள் அடுக்கடுக்காக இசுலாம் மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து ஒரே வரியில் ”எதிரணியே இல்லாத களத்தில் பாய்ந்து பாய்ந்து கோல் அடித்து கொண்டிருக்கிறீர்கள்” என்றுதான் சொல்லவேண்டும்.வினவு தளத்தில் விவாதிக்கும் இசுலாமிய சகோதரர்கள் இசுலாமிய ஆன்மீக கல்வியை ஐயந்திரிபற கற்று தேறியவர்கள் அல்ல.உண்மையிலேயே இசுலாம் குறித்து விவாதித்து ஒரு தெளிவான முடிவை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனபது உங்கள் விருப்பம் என்றால் நீங்கள் அணுக வேண்டியது [அழைக்க வேண்டியது] ”தமிழ்நாடு தவ்கீத் சமாஅத்” தைதான்.அவர்கள்தான் இது போன்ற விவாதங்களுக்கு எப்போதும் அணியமாக இருப்பதாக பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்கள்.இப்போது கூட கிறித்துவ பாதிரியார்களுடன் விவாதத்திற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதை அவர்களது வலைத்தள முகப்பிலேயே அறிவித்துள்ளார்கள்..பார்க்க சுட்டி.http://www.onlinepj.com/.

  மதவாதிகளுடன் விவாதம் செய்ய முடியாது என்ற வேடிக்கையான காரணத்தை சொல்லிவிடாதீர்கள்.மதத்தை பற்றி மதவாதிகளிடம்தானே விவாதிக்க வேண்டும்.

 33. நண்பர் எதிகலிஸ்ட், வேறு தளங்களிலிருந்து கருத்துகளை இங்கே பதியும் போது வெறும் சுட்டி மட்டுமே அளித்தால் போதும், அந்த வழிமுறையைத்தான் பலரும் கடைப்பிடிக்கின்றனர்., உங்கள் பின்னூட்டங்களை வைத்து அதன் மூல சுட்டியை எடுத்து போட்டிருக்கிறோம், தேவைப்பட்டால் தொகுப்பாக ஒரு மறுமொழியில் நீங்கள் அளிக்க விரும்பும் சுட்டிகளை அளிக்கவும்

  புரிந்துணர்வுக்கு நன்றி

 34. பெண்ணடிமையா ? பெண்ணுரிமையா ?
  இணைய தளங்களில் காணக்கிடைத்தது.
  சுட்டிகளை சொடுக்கி படித்து சிந்திப்போமா?

  >>> திருமணத்துக்கு முன் மனைவி கன்னியா? இல்லாவிட்டால் அவளைக் கல்லெறிந்து கொல்? <<>> பெண்ணடிமையா? பெண்ணுரிமையா? இந்தியாவில் நடந்த பெண் (வன்)கொடுமைகள். <<>>
  பெண்களுக்கு மாதவிடாய் இயற்கையா? பாவங்களின் ப‌ல‌னா?
  <<>> பெண்கள் மிருகங்களை விட கேவலமானவர்களாமே ? <<>> பெண்களுக்கு மோட்சம் கிடையாது. அப்படி வேண்டுமென்றால் அவள் இன்னொரு பிறவியெடுத்து ஆணாய்ப் பிறந்தால்தான் மோட்சம் . <<>> உடலுறவுக்கு மோட்சத்தில் கட்டுபாடில்லை. தட்டுபாடில்லை. வேண்டும் எண்ணிக்கைகளில் உனக்கு அனுபவிக்க தேவடியாள்கள் வேண்டுமா? நீ விரும்பிய பெண்கள் வேண்டுமா?

  >>> “பெண்களுக்கு எட்டு வயதுக்குள் திருமணம் செய்து விடு” – வேதம். இல்லை யென்றால் அதாவது ருதுவானபின் கல்யாணம் செய்தால் அவளுடைய மாதவில‌க்கில் வெளிப்படுவதை அவளுடைய அப்பனே சாப்பிட வேண்டும். –குழந்தைகளுக்குக் கல்யாணம் செய்து வைக்கக்கூடாது “ உத்தரவிட்ட‌ இந்தியாவின் ஆங்கிலேய அரசாங்கம்”. <<>> பிராமண பெண்ணும் ஒரு சூத்திரச்சிதான். அவளுக்கு வேதத்தை தொட , படிக்க, வேதம் கண்பட, ஓதும் ஓசை காதில் பட அருகதை கிடையாது. கல்யாணத்தின் போது சீதைக்கு வயது ஆறேதான். <<>> . இறந்த கணவனுடன் அவன் சிதையிலேயே மனைவியையும் உயிருடன் எரித்துவிடு.? வேதம் <<>> ஸ்திரிகளுக்கு எதுக்கு சொத்து? ஓடிப்போயீடுவா…!!!. ஆம்படையானுக்கு அடிமையாக இருக்கறதுதான் ஸ்த்ரீக்கு அழகு. <<>> பெண்களுக்கு கல்வி தேவையில்லை, சொத்தில் பங்கு கிடையாது.ஆணுக்கு அடங்கியிருக்க வேண்டும்.. <<<

  .

  • வாஞ்சூர் தாத்தா….

   உங்களை லிங்க் தாத்தா ன்னு கூப்பிடலாம்னு தோணுது..

   இப்படியே லிங்க் மேல லிங்க் கொடுத்துட்டு போய் வினவையும் ஒரு இன்டலி, தமிழ்மணம் போல் மாற்றி விடாதீர்கள்..

   உங்க சொந்த கருத்து இருந்தால் சொல்லுங்கள்., அத்தியாவசியமான சூழ்நிலைகளில் லிங்க் களை தாருங்கள்..

   விடுக்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் இந்து மதத்தில் நிலவும் அவலங்களை சுட்டி காட்டுவது எந்த விதத்தில் உங்களது கருத்துக்கு வலு சேர்க்கும்?

   உங்கள் சட்டையில் தூசு இருக்கிறது என்றால். அதற்கு பதிலளிக்காமல் அடுத்தவன் சட்டையை கைகாட்டுவது ஏன்?

   தாத்தாவிற்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.


   மாக்ஸிமம்

   அது சரி..

 35. புர்க்கா..

  குறைந்துவிட்ட ஆடையால்
  கும்மாளக் கொண்டாட்டம் உலகுக்கு;
  மறைக்க வேண்டியவையை
  மறந்துவிட்டப் பரிதாபம்!

  அரைகுறை ஆடையில்
  எல்லாமே விலகும்;
  முன்னேறிவிட்டோமென்று
  முரசுக் கொட்டும் உலகம்!

  போர்திக்கொண்டுப் போகும் எம்
  சகோதிரியைக் கண்டு
  பொறுக்கவில்லையோ
  பொருக்கி உனக்கு!

  ஒழுங்கான ஆடையில்
  உலா வரும் ஒரேச் சமுதாயம்;
  படையுடன் வந்து தடைப்போட்டாலும்
  நடைப்போடமாட்டோம் வீதியிலே;
  மரணம் வந்தாலும்
  மானம் காப்போம் தரணியிலே!

  வரமாட்டோம் ஒருநாளும்
  அரைகுறைக்கு – காலமெல்லாம்
  கட்டுப்படுவோம் இறைமறைக்கு!!

  -யாசர் அரஃபாத்

 36. “பண்பாடு, நாகரீகம் அற்ற, மரியாதை தெரியாத ஒரு காட்டெருமையிடம் நான் விவாதம் செய்ய விரும்பவில்லை”

  “தங்களது தளத்தில் கருத்து மோதல் மட்டுமே நடக்கும், தனி நபர் தாக்குதல்கள் இராது என்றெண்ணுகிறேன்.”

  அது சரி இது என்ன சித்தாந்தம்?

 37. சில வகுப்புவாதிகள் பிற சமூகத்தைப் பற்றி கேட்ட என்னத்தை ஏற்ப்படுத்துவதற்காக சின்ன சந்து போந்து கிடைத்தாலும் நுழைந்து கடுமையாக உழைக்கிறார்கள் ஆனால் அவர்களின் என்னம் நிறைவேற போவதில்லை.

  தன்னுடைய மதத்தின் பெருமையை பேசுவது தவறில்லை தன் சார்ந்த மதத்தை நோக்கி வினாக்கள் வரும்போது அதை எதிர்க்கொண்டு பதில் சொல்வதும் தவறில்லை.

  அதை தான் இங்கு பின்னூட்டம் ஊடாக இஸ்லாமியர்கள் செய்துக் கொண்டிருக்கிறார்கள் பிற கொள்கைகளை இழிவாக பேசவில்லை ஆனால் சில வகுப்புவாதிகள் பிற மதத்தை திட்டுவதையே பிழைப்பாக கொண்டு ஊடுருவி அம்பலப் படுகிறார்கள்.

  • மதத்தை ஆதரிப்பவர்களுக்கும் மத வெறியர்களுக்கும் பெரிய அலவு வித்தியாசம் இல்லை ஹைதர் அலி.

   மனிதத்தை கேள்விக்குள்ளாக்கும் எந்த நடவடிக்கைகளையும் எதிர்ப்பது என்பதே ஒரு மனிதனின் உயர் இலட்சியமாக இருக்க வேண்டும். ஆனால் எந்த மதத்திலும் அது கிடையாது. பெண்களை அடிமைகளாகவும், அழகுப் பொருளாகவும் மட்டுமே அனைத்து மதங்களும் பார்க்கின்றன.

   பெண்களை அடக்க நீங்கள் எத்தனை காரணம் சொல்லுகிறீர்களோ, அத்தனைக் காரணங்களையும் ஒரு இந்து பார்ப்பான் ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவரை அடக்கக் கூறுகிறான். அடிமைத்தனம் குறித்து நீங்கள் என்ன என்ன காரணம் கூறுகிறீர்களோ அதே போன்ற காரணங்களை ஒரு இந்து வெறியன் இந்தியாவில் இஸ்லாமியர்கள் இருக்கக்கூடாததற்கான காரணங்களாக கூறுகிறான்.

   இதில் உங்களுக்கும் அவர்களுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இல்லை. ஒரு வேளை இந்தியா ஒரு இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடாக இருந்திருந்தால் நீங்கள் அவர்களை விட ஒரு படி மேலே போய் இருந்திருக்கக்கூடும்.

   குஜராத்தில் இஸ்லாமியர்கள் உயிரோடு எரிக்கப்பட்ட போது கண்டும் காணாமல் போனது இந்து வெறியர்கள் மட்டும் அல்ல. சாதாரணமாக இந்து மதத்தில் இருக்கும் மக்கள் தான்.
   ஆனால் அதற்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் கம்யூனிஸ்டுகளே ..
   உழைக்கும் மக்களின் குணம், நடுத்தரவர்க்கத்தின் குணம் , உயர்தட்டுகளின் குணம் இவை தான் பாரிய அளவில் மாறுபடுமே ஒழிய, இந்து குணம், கிறுஸ்தவ குணம், இஸ்லாமிய குணம் போன்றவை என்றும் பெரிய அளவில் மாறுபடாது. இவை அனைத்தும் ஆளும் வர்க்கத்திற்கெதிராக மக்களை ஆர்த்தெழாதவாறு பார்த்துக் கொள்ளவே உதவுகிறது.

   • பாத்தீங்களா பகத்சிங் என்னையே சொல்லிட்டு நீங்க ரொம்ப நிதானம் இழந்திட்டீகளே
    இது எந்த ஊர் நியாயம்.

    ஒங்களுக்கு விரிவாக பதில் சொல்லுறேன் நிதானமாகத்தான்

    • என்னைக்கு சொல்லுவீங்க ஹைதர் அலி ?… உங்களுடன் விவாதிக்க ஆவலாக இருக்கிறேன் ..

 38. Ethicalist , சுலாமியர்கள் தங்கள் தலைவராக வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டுள்ள நபிகள் நாயகம் அவர்களை அவன்,இவன் என ஏக வசனத்தில் குறிப்பிட்டு அவரைப்பற்றி தரக்குறைவாக விமரிசனங்களை எடுத்து எழுதியது மிகத்தவறு.
  அதே போல் இஸ்லாமிய ஓவியரான ஹுசைன் இந்து கடவுளான சரஸ்வதியை படைப்பு சுதந்திரம் என்ற பேரில் கேவலமான முறையில் வரைந்து மிகத்தவறு.
  ஓவியர் ஹுசைன் ம ஒரு பண்பாடு, நாகரீகம் அற்ற, மரியாதை தெரியாத ஒரு காட்டெருமை தான்.

  • குமரன்

   //இஸ்லாமிய ஓவியரான ஹுசைன்//

   தவறு நண்பரே ஓவியரான ஹுசைன் இது தான் சரி

   இதில் இஸ்லாத்தை ஓட்ட வேண்டாம் எந்த இஸ்லாமியானும் இதை ஆதாரிக்கவில்லை

 39. சில வகுப்புவாதிகள் பிற சமூகத்தைப் பற்றி கெட்ட என்னத்தை ஏற்ப்படுத்துவதற்காக சின்ன சந்து போந்து கிடைத்தாலும் நுழைந்து கடுமையாக உழைக்கிறார்கள் ஆனால் அவர்களின் என்னம் நிறைவேற போவதில்லை.

  தன்னுடைய மதத்தின் பெருமையை பேசுவது தவறில்லை தன் சார்ந்த மதத்தை நோக்கி வினாக்கள் வரும்போது அதை எதிர்க்கொண்டு பதில் சொல்வதும் தவறில்லை.

  அதை தான் இங்கு பின்னூட்டம் ஊடாக இஸ்லாமியர்கள் செய்துக் கொண்டிருக்கிறார்கள் பிற கொள்கைகளை இழிவாக பேசவில்லை ஆனால் சில வகுப்புவாதிகள் பிற மதத்தை திட்டுவதையே பிழைப்பாக கொண்டு ஊடுருவி அம்பலப் படுகிறார்கள்.

 40. ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது நிலவுவதாக,

  இந்த தலைப்பே தவறு என்பதை கூறிவிடுகிறேன். அமிலம் ஊற்றுவதற்கும், இஸ்லாத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நபிகள் நாயகம்(ஸல்) ஒருகாலும் முஸ்லிமாக்கள் மீது அமிலம் ஊற்றச் சொல்லவில்லை. குரானிலும் ஒரு இடத்திலும் முஸ்லிமாக்கள் மீது அமிலம் ஊற்றச் சொல்லவில்லை. அப்படியிருக்கும்போது இது இஸ்லாமிய பழக்கம் என்று எழுதுவது சரியா என்று சிந்தியுங்கள்.

  ஒரு சில நேரங்களில் மூஃமின்கள் வழி தவறி செல்லக்கூடிய முஸ்லிமாக்களை திருத்தி நேர்வழியாம் இஸ்லாத்தில் வரவேண்டும் என்ற உயரிய எண்ணத்துக்காக அசிட் ஊற்றுவதை செய்துள்ளார்கள் என்பது உண்மைதான். காஷ்மீரில் பர்தா அணிந்து செல்லாத முஸ்லிமாக்கள் மீது ஆசிட் ஊற்றி அவர்களை இஸ்லாமிய நெறிப்படி பர்தா நிகாப் அணிந்து செல்ல வைத்து அவர்களது இஸ்லாமிய நெறியை காத்துள்ளார்கள். பாகிஸ்தான் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இப்படி இஸ்லாமை நிலைநிறுத்துவதற்காக செய்துள்ள ஆசிட் அட்டாக்கை அனுமதிக்கலாம். ஆனால், ஒரு பெண் தனக்கு மனைவியாகவில்லை எனப்தற்காக தனி ஆர்வத்துடன் ஆசிட் அட்டாக்கை பயன்படுத்தியுள்ளதை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்காது. அதற்கு இஸ்லாமில் அனுமதி இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

  இஸ்லாம் ஒரு முழுமையான மார்க்கம் என்பதை தெரிவித்துகொள்கிறேன். சீப்பால் எத்தனை தடவை தலை சீவலாம் என்பதை கூட நெறியாக வைத்திருக்கும் மார்க்கம் என்றால் அது இஸ்லாம்தான். இஸ்லாத்தை பின்பற்றுபவர் எந்த கேள்விக்கும் சிந்திக்க வேண்டியதே இல்லை. நபி பெருமானார்(ஸல்) என்ன செய்திருக்கிறார் என்பதை பார்த்து அதே போல செய்தால் போதுமானது.

  • காந்தியை கொல்லும்போது கையில் இஸ்மாயிலுன்னு பச்சை குத்திய உன்னுடைய வாத்தியார் புத்தி உன்னை விட்டு போகுமா? என்ன?

   இன்னும் நல்ல முஸ்லிம் பெயரில் நல்ல ட்ரை பன்னு ட்ரைனிங் பத்தவில்லை

   எங்கே மறுபடிக்கும் சந்தேகம் வராத மாதிரி வேற காமண்ட் போடு ஐ எம் வெயிட்டிங்

   • அன்புள்ள சகோ ஹைதர் அலி

    ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் தலை மீது நிலவுவதாக!

    நீங்கள் என்னை கிண்டல் பண்ணுவது அப்புறம் இருக்கட்டும்.

    மூஃமீன்களுக்கு மிக மிக மிக முக்கியமான நபி (ஸல்) அவர்களது எச்சரிக்கையை ரமலான் காலத்தில் நினைவு படுத்தியிருக்கிறேன்.

    உங்களது இஸ்லாமிய நண்பர்களிடமும் இந்த முக்கியமான எச்சரிக்கையை பகிர்ந்துகொள்ளுங்கள்

    மூஃமீன்களுக்கு உடனடி எச்சரிக்கை: துவா செய்யும்போது அண்ணாந்து பார்க்கக்கூடாது

    இந்த பதிவை படித்தால்தான் ஏன் இந்த எச்சரிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது என்று அறிவீர்கள்.

    தயவு செய்து பரப்புங்கள். இது மிகவும் அவசியமான எச்சரிக்கை. பலரது அடிப்படை வாழ்வே கேள்விக்குரியாக ஆகிவிடக்கூடிய ஆபத்து நிறைந்தது

   • “காந்தியை கொல்லும்போது கையில் இஸ்மாயிலுன்னு பச்சை குத்திய உன்னுடைய வாத்தியார் புத்தி உன்னை விட்டு போகுமா? என்ன? ”

    ஹைதர்.
    இதற்க்கு ஆதாரம் வேண்டுகிறேன்.
    நன்றி
    கிருஷ்ணா

    • கிருஷ்ணா

     இதற்கான ஆதாரத்தை ஐதர் அலியிடம் கேட்பதை விட புகழ்பெற்ற இதழியலாளர் ஞானியிடம் கேட்கலாம்.அவர் 29-10 -2008 நாளைய குமுதம் இதழில் எழுதிய கட்டுரையிலிருந்து,

     \\பயங்கரவாதம் என்பது வெடிகுண்டும் ஆர்.டி.எக்ஸும் துப்பாக்கித் தாக்குதலும் மட்டுமா ? மனித மனங்களுக்குள் துவேஷத்தை வளர்ப்பது, அதை வளர்ப்பதற்காக வன்முறையில்லாமலே எல்லா விஷமங்களையும் செய்வதும் பயங்கரவாதம்தான்.

     தன் வீட்டுக்குத் தானே தீ வைத்துக் கொண்டு பங்காளி மீது பழி போடுவது முதல், ஒருவர் கைதானதும் அவர் எங்கள் அமைப்பில் இல்லை எப்போதோ விலகிவிட்டார் என்று சமாதானம் சொல்வது வரை எல்லாமே விஷமமான உத்திகள்தான்.

     காந்தியைக் கொல்வதற்கு முன்பாக கோட்சே ஆர்.எஸ்.எஸ்.சிலிருந்து விலகியதும் இஸ்மாயில் என்று கையில் பச்சை குத்திக் கொன்டதும் ஒன்றும் கருத்து வேறுபாட்டால் விலகவில்லை.

     அது ஒரு விஷமத்தனமான உத்தி.//

     முழுமையான கட்டுரைக்கு பார்க்க சுட்டி.

     http://rajkanss.blogspot.com/2008/11/blog-post.html

    • “காந்தியை கொன்றபோது கோட்சே தன் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டிருந்தான். ஒரு முஸ்லீம்தான் காந்தியை கொன்றது என்று கூறி முஸ்லீம்களுக்கு எதிராக மக்களைத் தூண்டலாம் என்கிற சதித் திட்டம். தங்களது மதவெறிக் காட்டுமிராண்டித் தனத்திற்கு தடையாக இருந்த காந்தியையும் கொல்வது, அதை வைத்தே முஸ்லீம்களை வேட்டையாடுவது. இதிலிருந்து தெரிவது என்னவெனில், எல்லாக் கலவரங்களுக்கும் முஸ்லீம்களே காரணம் என்ற தங்களது பொய்யை உண்மையாக்க சகல சகுனித்தனத்தையும் கையாளும் சங்பரிவாரிகளே கலவரங்களை ஆரம்பிப்பவர்கள்.” (எம்.அசோகன் எழுதிய ‘சாவர்க்கர் உண்மைச் சித்திரம்’ – பக்கம் 7) //

     • ஏதோ L.P Sharma, romila thapar, r.c. majumdar, அப்படின்னு ஆதாரம் கொடுபிங்கன்னு பாத்தா ராஜராஜ சோழன் வரலாற்றுக்கு கல்கிய ஆதாரம் காட்டுறிங்க.

      இன்னும் கொஞ்சம் நல்லா முயற்சிபண்ணுங்க.

      கிருஷ்ணா

      • தமிழ் நூல்கள்,தமிழ் வரலாற்றாசிரியர்கள் என்றால் உங்களுக்கு இளக்காரமாக தெரிகிறதா.இங்கிலிபீசுல இருந்தால்தான் அந்த தகவல்களை உண்மை என்று எடுத்துக் கொள்வீர்களா.

       தமிழில் எழுதும் வரலாற்றாசிரியர்களும் கடுமையாக உழைத்து ஆதாரங்களை திரட்டி அவற்றின் அடிப்படையில்தான் நூல்களை எழுதுகிறார்கள். தகவல்களுக்கான மூலம் எது என்றும் நேர்மையாக நூலின் கடைசி பக்கங்களில் தெரிவிக்கிறார்கள்.நான் கொடுத்த ஆதாரம் மற்றும் ஆசிரியரின் நடுநிலைமை குறித்து ஐயம் இருந்தால் சொல்லலாம்.அதை விடுத்து அவர் சொன்னால்தான் ஒப்புக்கொள்வேன்,இவர் சொன்னால்தான் ஒப்புக்கொள்வேன் என்று சொன்னால் அதற்கு பெயர் வாதமல்ல விதண்டாவாதம்.

  • இப்னு சகிர் , குடுமி தெரிது மறச்சுகுங்க, எப்படி புள்ளைக்காவது ஒரிஜினல் பெயர் வைப்பீர்களா ?

   • ஈமான் நிறைந்த சகோதரர் ஷாகுல் ஹமீது அவர்களே,
    ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒரிஜினல் பெயர்தான்.
    அல்லாஹ் பிறக்கும் என்று நிச்சயம் செய்ததை மனிதனால் மாற்றமுடியுமா? அந்த ஹதீஸ் உள்ளேயே அடிமைப்பெண்களை எப்படி நடத்த வேண்டும் என்பதையும் அருட்கொடையாக அளித்த அண்ணல் நபிபெருமானார்(ஸல்) அவர்களை பற்றியும் ஒரு பதிவு எழுதியிருக்கிறேன்
    பெண் கைதிகளை எப்படி நடத்த வேண்டும் என்று நபிகள் நாயகத்தின் வழிகாட்டல்

    உங்கள் மீது ஏக இறைவனின் அருட்கொடை என்றென்றும் நிலவுவதாக!

 41. அணைத்து இஸ்லாம் மதத்தை பின்பற்றும் நண்பர்களுக்கு, முகமது அவர்கள் எழுதியது அணைத்தும் சரியே என்று கூறுகிறிர்களா? அவற்றில் தவறுகளே இல்லையா?? கடவுள்கள், கடவுள் தூதுவர்கள் மனிதர்களுக்காக பிறந்து ஆண்டுகள் பல கடந்தும் இன்றைய தினமும் பெரும்பான்மையான மக்களின் இழி நிலை உலக அளவில் மறவில்லையே, ஏன் என்று என்றாவது நினைத்து பார்ததுண்டா? உலக அளவில் ஏன் நாம் வகுத்துள்ள நாடுகள் அளவிலாவது இழி நிலை மாறியுள்ளதா? நீங்கள் நன்றாக இருக்கலாம் (நன்றாக இருக்கவேண்டும்) ஆனால் அணைத்து மக்களும் மகிழ்சியாக, அடிமைத்தனம் இல்லாமல், இழி நிலை இன்றி உள்ளார்களா?

  அனைத்து மதத்தினற்கும், நீங்கள் கூறும் கடவுள் சக்தி இருந்திருந்தால் அனைத்தும் நல்ல நிலையில் அல்லவா இருக்க வேண்டும்! பல வேதங்கள் பல மதங்களில் இருந்தும் இத்தனை காலங்களாக மாற்றம் இல்லையே!!

  பல மதங்களிளும் பெண்களை, ஆண்களுக்கு அடிமை போலவே கூறியுள்ளன. உடலமைப்பை தவிர மனதளவில்/அறிவளவில் இரு பாலரும் சமமே என்று இன்று நிறுபனமாவதை பல விதங்களில் பார்த்து கொண்டுதான் இருகிறோம்.

  கடவுளால் எழுதப்பட்டதாக கருதப்படும் ஒரு மத வேதத்தை படிக்கும் பலர் பலவிதமாக அர்த்தம் கொள்ளபடுகிறது என்றால் எங்கே தவறுள்ளது? கடவுளால் எழுதபட்டிருந்தால் நிச்சயம் அனைவராலும் ஒரே விதமாக அல்லவா அறியவோ/புரியவோ பட வேண்டும்? புரிதல் மாறுபடுவதால் தான் ஒருவருக்கு சரி என்று படுவது அடுதவர்க்கு தவறாகிறது.

  கடவுளால் படைக்க பட்டதாக சொல்லபடும் மனிதனையே கடவுளால் புரிந்துகொள்ள முடியவில்லை. உதாரணம், ஒவ்வொரு மதத்திலும் போர் செய்யும் முறை விரிவாக உள்ளது. போர் யாரை எதிர்த்து? போரில் தோற்ற மனிதர்களை எவ்வகை அடிமை படுத்த வேண்டும் என்றும் பல மதங்களில் சொல்ல பட்டுள்ளது. கேட்டால் கடவுளும், கடவுள் தூதுவர்களும் மக்களை அடிமைதனத்தில் மீட்க, அறியமையிலிருந்து மீட்க, இழிநிலையிலிருந்து மீட்க வந்தார்கள் என்று கூறுவார்கள்.

  ஆனால் இன்றும் ஒரே மதத்தினுள் இழிநிலையும், அடாவடிதனமும், அடிமைத்தனமும் உள்ளது என்று சொன்னால் செய்தவர்கள் எங்கள் மதமில்லை என்று மதத்தைதான் காப்பற்ற பார்க்கிறிர்கள், பதிக்கபட்டவர்களை அல்ல.

  ஒரு பேச்சுக்கு, உலகில் அனைவருக்கும் அனைத்து வசதியும் கிடைத்து, அனைவரும் உழைத்து, இயலதவர்களுக்கு உதவி, சமநிலையில் இழிநிலை இல்லாமல், துரோகதனம் இல்லாலமல், அடிமைதனம் இல்லாமால் இருந்தால் எப்படி இருக்கும்?

  அது தான் கம்யுனிசம்! ஆனால் இது சாத்தியம் இல்லை. காரணம் கடவுள், மதம் !!! அப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பது மனிதநேயம்.

  பாதிக்க படுவோரின் சார்பில் அவர்களுக்காக, சமத்துவதுக்கான, மனிதநேய எண்ணத்துடன் எழுதப்படும் வினவின் கட்டுரைகளை வரவேற்போம்.

  கட்டுரைகளில் தவறு இருக்களாம், அவரவர் புரிதலுக்கு ஏற்றவறு தவறுகள் தோன்றலாம். ஆனால் பாதிக்க படுபவர்களுக்காக எழுதுவதை ஆதரிப்போமே!!!

  நட்புடன்,
  Balaji S

  • பாலாஜி

   முஸ்லீம்கள் உங்களுக்கு சில விஷயங்களை சொல்லியிருக்கிறார்கள். அடிமைத்தனத்துக்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தமில்லை, வன்முறைக்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தமில்லை போன்றவை எல்லாம் காபிர்களை இஸ்லாத்தின் பக்கம் அழைத்துவர மனத்தடையாக இருப்பவற்றை கொஞ்சம் தள்ளிப்போட நாங்கள் செய்யும் வழிமுறைகள்.

   உள்ளே வந்தபின்னால், இஸ்லாமை அறிந்த பின்னால், அடிமைமுறை, வன்முறை எல்லாம் அல்லாஹ்வின் அழகான அருட்கொடைகள் என்று நீங்களே புல்லரித்துகட்டுரைகள் வரைவீர்கள்.

   ஒரு சில நேரங்களில் தக்கியா செய்து தக்கியா செய்து, மூமீன்களே இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் என்று ஏமாந்துவிடுகிறார்கள்.

   அவ்வப்போது அவர்களது சிந்தையை நேர் செய்யவேண்டி நினைவு ஊட்ட வேண்டியுள்ளது.

   அதற்காகத்தான்
   <a href="http://pagadu.blogspot.com/2011/08/blog-post_11.html"இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமா? தாவா செய்பவர்களுக்கு சிறு விளக்கம்

   என்ற சிறு கட்டுரையை எழுதியுள்ளேன்.

   நீங்களும் இஸ்லாமை ஏற்றுக்கொண்டு அல்லாஹ்வின் மேற்கூறிய அருட்கொடைகளை பெற வாழ்த்துகிறேன்.

   • நீங்கள் நல்லவரா? கெட்டவரா?

    இஸ்லாம் நல்ல மதமா, இல்லையா? என்ன சொல்ல வருகிறீர்கள்?

    மெய்யாலுமே எனக்கு புரியவில்லை 🙁

    -Balaji S

   • Hi dude,
    I got it. continue your great work. initially your link was not working as there is some problem with the URL, after editing it I could able to visit your site. Keep it up.

    sorry for the confusion, you are doing good job so that implies you could be a good person only 🙂 (but not for all people)

    – Balaji S

    • பாலாஜி அய்யா இப்ப புரிஞ்சிதா வந்திருக்குறது யார்னு…… இதுல தொடர்ந்து வேற எழுதனுமா ? இதெல்லாம் ஒரு பொழப்பு …. நாங்க ஒங்களப்பத்தி எழுதவே வேண்டாம் ஒரிஜினலே அங்க படு கேவலம்

     • பிறப்பால் தான் மதம் நிர்னைக்க படுகிறது என்றால் நிர்னைக்கப்பட்ட மதம் அசிங்கமானது கேவலமானது என்று மதத்தை விட்டு எப்பொழுதோ வெளியேறிவிட்டோம்.

      ஆனால் அனைத்து மதமும் அசிங்கமும் கேவலமும் நிறைந்தது என்று தெரியவரும் போது அனைவருக்கும் தெரியபடுத்துவதை பாராட்டி வரவேற்கத்தானே வேண்டும்.

      நீங்களும் உங்களுக்கு தெரிந்த தவறுகளை தெரியப்படுத்துங்கள் (எம்மதம்மானலும் சரி)

      🙂

      – Balaji S

 42. மதம் பற்றிய பதிவுகளை மதவாதிகள் இரண்டு விதத்தில் பயன்படுத்திக் கொள்கின்றனர். ஒன்று தனது மதம் பற்றிய நல்ல கருத்துகளை எவ்வளவு மூடியுமோ அவ்வளவு விளம்பரப்படுத்துவதாக எழுதுவது இரண்டு, அடுத்த மதத்தைப் பற்றி எவ்வளவு மூடியுமோ அவ்வளவு இழிவாக எழுதுவது்.

 43. வினவுக்கு,

  பெண் மீது ஆசிட் வீசுவது வன்மத்தின் வெளிப்பாடு.அது மதம் எனும் எந்த அபினுக்கும் பொருந்தும்.கட்டுரையின்நோக்கமும் அதுவாகத்தான் யிருக்கும் என கருதுகிறேன்.
  மத வெர்ரி பிடித்தவர்கள் மன்னித்தால் ! நல்ல ஆரோக்கியமான பதிவாக ஏன் கருதக்கூடாது?.

  மெய்தேடி.

 44. இஸ்லாம் மகோன்னதமான மதம்தான் இதில் சந்தேகம் என்ன?

  ஆனால் சிலவேளைகளில் நமது மூமீன்களே இஸ்லாம் எளிய மார்க்கம் என்றெல்லாம் குழம்பிவிடுகிறார்கள்.
  ஆகையால் தாவாப்பணியை எப்படி இஸ்லாம் எளிய மார்க்கம் என்று சொல்லி தாவா செய்யும் போது நாம் நினைவில் கொள்ள வேண்டியவை என்று ஒரு பதிவு எழுதியுள்ளேன்.

  கருத்துக்களை கூறவும்

  இஸ்லாம் எளிய மார்க்கமா? அல்லது நின்றுகொண்டு தண்ணீர் குடித்தல்

 45. இந்த தலைப்பு பொருத்தமற்றது என்பவர்களுக்கு,

  சட்டத்தில் ஓட்டைகள் இருப்பதினால்தான் குற்றவாளிகள் தப்பிக்க முடிகிறது.
  இந்து மதத்தில் சாதீய அடுக்கு இருப்பதினால்தான் தீண்டாமை நிலவுகிறது.
  இஸ்லாத்தில் ஆணாதிக்கம் இருப்பதினால்தான் பெண் அடக்குமுறைக்குள்ளாகிறாள்.

 46. நான்கடவுள் இல்லை என்ற பெயரிலும் மற்ற பெயர்களிலும் எழுதும் நாத்திகர்களுக்கு ஒரு அறிவுரையை சகோதரர் முஹம்மத் ஆஷிக் சிட்டிஜன் கூறியுள்ளார்கள்.

  இஸ்லாம் பற்றிய சிட்டிஜன் முஹம்மத் ஆஷிக்கை ஒட்டி அவரது கருத்துக்களை விவரித்து விளக்கி காபிர்களுக்கு இஸ்லாமிய விளக்கப் பாடம் எடுத்து தாவா செய்துள்ளேன்.

  மூமின்களின் பகுத்தறிவும் காபிர்களின் மடத்தனமும்.. ஒரு இஸ்லாமிய ஆய்வு

  • பதிவை படித்தேன் நண்பரே. என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை போங்கள். நீங்கள் தேர்தலில் நில்லுங்கள். என் வாக்கு உங்களுக்குத்தான். (வாக்களிப்பதை பற்றி அல்லாவும் சல்லல்லாகு அலைகுவஸ்ஸலமும் அல்குர்ரானில் ஏதாவது சொல்லியுள்ளனரா. ஏனென்றால் இப்போதெல்லாம் உங்கள் பதிவுகளை படித்தபின் அல்லாவுக்கும் ச அ வ வுக்கும் பயப்பட ஆரம்பித்து விட்டேன்.- சல்லல்லா…. அப்படியென்றால் என்ன. நானொன்றும் கெட்டவார்த்தை சொல்லி உங்கள்நபிப்பெருமானாரை திட்டி விடவில்லையே)

 47. ///////////////அறிவியர்பூர்வமாக ஆராய்ச்சி செய்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்

  இஸ்லாமிய அறிவியல்: ஷைத்தான் ஏன் காதில் உச்சா போகிறான்?

  படித்துவிட்டு அறிவியல் பொங்கி ததும்பும் இறைமார்க்கமான இஸ்லாத்தில் இணையுங்கள்.////////////////

  அவசரமா வந்திருக்கும் … போயிருப்பான் …

  இப்படி கண்ட இடத்தில் வாயைத் திறக்காதீர்கள் .. அதிலும் போய் விடப் போகிறான். ஜாக்கிரதை..

 48. //ஆப்கானிஸ்தான் ரஷ்யாவின் கீழ் இருந்தவரை பெண்களுக்கான சம உரிமைகள் சட்டங்கள் மூலமாகத்தான் நிலைநாட்டப்பட்டன,///
  நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? அந்நிய நாட்டில் புகுந்து அங்கு அப்பாவி ஆண்களையும் பெண்களையும் சரி சமமாக கொன்றதாக கூற வருகிறீர்களா?
  உங்க ரஷ்யாவில் ஜிம்னாடிக்ஸ் போட்டிகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக நடப்பது ஏன்? நீச்சல் போட்டிகள் ,டென்னிஸ் ,போட்டிகள் ஆண்களுக்கு என்றும் பெண்களுக்கும் என்றும் தனித்தனியாக நடப்பது ஏன்?
  ஆண்களுக்கு மட்டும் மேலாடைகள் இல்லாமல் பல இடங்களில் காட்சி தருகிறார்கள் .பெண்களுக்கு உங்களது கம்யுனிசம் அந்த அனுமதி வழங்கி யுள்ளதா? watchman உள்ளனர்.watchwoman உள்ளனரா? பெண்கள் மட்டுமே கருவுருவதும் பாலூட்டுவதுமாக உள்ளனரே ,ஆண்களும் ஒரு குழந்தைக்கு ஒரு குழந்தை மாற்றாக கருவுறவும் பாலூட்டவும் உங்களது ரஷ்யாவில் ஆய்வுகள் நடக்கிறதா?

 49. கம்யுனிச நாடுகளில் நடை பெரும் அத்தனை குற்றங்களுக்கும் கம்யுநிசம்தான் காரணமா? ஏன் ஜனநாயாக நாடுகள் போல் உங்களது கம்யுனிச நாடுகளில் இன்னும் பெண்தலைவர்கள் உருவாக வில்லை?
  ஹீராவிலிருந்து ஒரு பெண் தனித்து ஹஜ் செய்வார் என்ற நபி[ஸல்] அவர்களின் கூற்று ஆண்களுக்கு இணையாக பெண்களும் செயல்படுவார்கள் ,அதை இஸ்லாம் மறுக்காது என்பதற்கு ஆதாரம் அல்லவா?

 50. இசுலாமிய சமூகத்தில் மதமே வாழ்வின் எல்லாவற்றிலும் கோலோச்சுகிறது – அவர்களுக்கென்று தனிப்பட்ட சட்டதிட்டங்கள், பழக்க வழக்கங்கள் என்று சகலமும் மதத்தையே முதுகெலும்பாகக் கொண்டிருக்கின்றன.
  ஆம் .மனிதனை நெறிப் படுத்த சமூகமாக வாழ்ந்திட ,இஸ்லாத்தை விட சிறந்த ஒரு வழிகாட்டலை இதுவரை எவராலும் காட்டிட முடியவில்லை..

 51. மார்க்ஸும் (1818-1883), காதலும், குடும்பமும்[4]: மார்க்ஸ் குடும்ப வாழ்க்கையில் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார். யூதராகப் பிறந்த இவர் குடும்பம் புரொடஸ்டன்ட் கிருத்துவத்திற்கு மாறியது. ஒரு மிகவும் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த அதிலும் ஒரு அழகியை அவர் காதலித்தாராம். அவர் தனது காதலில் ஏற்பட்ட அனுபவங்கள் வாழ்க்கையில் பல பாடங்களைக் கற்றுக் கொடுத்தது. தனது ஒன்பது வயது மகன் இறந்தபோது, அவனை அடக்கம் செய்ய ஒரு சவப்பெட்டியை வாங்கக்கூட அவரிடம் பணம் இல்லாமல் இருந்தததாம்! ஜென்னி வோன் வெஸ்ட்பேலன் (Jஎன்ன்ய் வொன் Wஎச்ட்ப்கலென்) என்ற அந்த மனைவியின் மூலம் பிறந்த ஏழு குழந்தைகளில் மூன்றுதான் பிழைத்து பெரியவர்களாக வளர்ந்தனராம். இதனிடையில் ஹெலன் டெமுத் என்ற தனது வேலைக்காரி மூலமும் பிறந்த ஒரு மகன் இருந்தானாம்[5]. ஆகவே அத்தகைய ஏழ்மையிலும் இவருக்கு காதல், கலவி, மனைவியைத் தவிர ஒரு துணைவி என்றெல்லாம் இருந்ததை கவனிக்கவேண்டும்.
  மார்க்சின் இந்த செயல்பாடுகள் நியாயப் படுத்தலுக்கு உரியனவா?

  • //மூலமும் பிறந்த ஒரு மகன் இருந்தானாம்//
   இருந்தானாம் என்றுதானே சொல்கிறார்கள். இருந்தான் என்று சொல்லவில்லையே. இருந்தானாம் என்ற புரளிக்கெல்லாம் பதில் சொல்ல சொல்ல முடியுமா?

   //ஏழ்மையிலும் இவருக்கு காதல், கலவி, மனைவியைத் தவிர ஒரு துணைவி என்றெல்லாம் இருந்ததை கவனிக்கவேண்டும்
   இதல்லாம் நீங்கள் சொல்வது உங்களுக்கே ஓவராத் தெரியல!//

   • இப்படி பட்ட மார்க்ஸை வைத்துக் கொண்டு பெண் உரிமைகள் பற்றி பேசுவது உங்களுக்கு ஓவராக தெரியவில்லையா?

    • சிந்திக்கும் அறிவு இல்லாத முட்டாள்களிடம் பேசி என்ன செய்வது என்று தெரியவில்லை?.

     மார்க்ஸில் தொடங்கி ஸ்டாலின், மாவோ வரை அனைவரையும் அவதூறு பேசிச் செல்லும் இந்த முட்டாள்கள், அவர்களது சமகாலத்திய ஆதாரம் எதையும் எடுத்துத் தருவதில்லை.

     ஆர்.எஸ்.எஸ் அடிபொடிகள் கூட சொல்லித்திரிகின்றன ”முகம்மது நபி ஒரு ஆண்மையற்றவர் என்றும் அவரது குழந்தைகள் அவருக்கு பிறந்தன அல்ல என்றும் கருத்து நிலவுவதாக”.

     அதற்கெல்லாம் விளக்கம் கொடுத்துக் கொண்டிருப்பீர்களா ?..

     ஆதாரம் சரியாக கூறும் போது விளக்கம் சரியாக அளிக்கப்படும் ..

     • ancis Wheen (2000). Karl Marx. W. W. Norton and Company. p. 173.
      ஆதாரம் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.
      உங்களது கம்யுனிஸ்ட் தலைவர்கள் யாரும் அவர்கள் சொன்ன கொள்கையின்படி வாழவில்லை.தன்னால் வாழமுடியாத வாழ்க்கையை பிறருக்கு சொல்லுவதற்கு இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது.?மார்கசால் குறைந்தது பத்து பேர்களையாவது தன்னுடன் அவரது கொள்கையை பின்பற்ற செய்ய முடியவில்லை.பத்து பேர்களுடன் சேர்ந்து பண்ணை வாழ்க்கையை அவர் வாழ்ந்து காட்டியிருக்க வேண்டும்.அவருக்கு வேலைக்காரியை வைத்துருந்தாரா ?இல்லையா? அவரது மனைவிக்கு வேலைக்காரர் ஏன் வைக்கவில்லை? அவர் ஏன் காதல் பண்ணினார்?அந்த காதல் மற்றவர்களுக்கு தேவை இல்லை என்று சொல்ல அவருக்கு என்ன தகுதி?மாவோவுக்கு எதற்கு இத்தனை மனைவிகள் ?

      கம்யூனிஸம், கம்யூன், காதல், காமம், கலவி, கற்பு, பாலியல், இத்யாதி – I
      முஹம்மது நபி[ஸல்] அவர்களின் வாழ்க்கை திறந்த புத்தகம் போல் உள்ளது .ஆதலால் அவர்களின் வாழ்க்கை பற்றி எந்த வீணர்களும் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

     • அட கேடு கெட்ட முட்டபயலே அப்துல்

      //ஆதாரம் சரியாக கூறும் போது விளக்கம் சரியாக அளிக்கப்படும் ..//

      ஆமா கிளிச்ச

      முட்டபயலே ஒனக்கு ஒன்னு தெரியுமா ஆர்.எஸ்.எஸ் அடிபொடிகள் கூட சில சமயங்களின் மார்க்ஸிய மதவாதியான உன்ன்னைப் போன்று அசிங்கமான அவதூறுகளை சொல்லுவதில்லை.

      இஸ்லாத்தின் மீது உன்னை மார்க்ஸிய மதவேறியர்கள் வைத்த ஆதாரமற்ற அவதூறுகளை வரிசையாக அடுக்கவா?

      வந்துட்டாரு யோக்கியன்

 52. //ஆப்கானிஸ்தான் ரஷ்யாவின் கீழ் இருந்தவரை பெண்களுக்கான சம உரிமைகள் சட்டங்கள் மூலமாகத்தான் நிலைநாட்டப்பட்டன,///
  நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? அந்நிய நாட்டில் புகுந்து அங்கு அப்பாவி ஆண்களையும் பெண்களையும் சரி சமமாக கொன்றதாக கூற வருகிறீர்களா?
  உங்க ரஷ்யாவில் ஜிம்னாடிக்ஸ் போட்டிகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக நடப்பது ஏன்? நீச்சல் போட்டிகள் ,டென்னிஸ் ,போட்டிகள் ஆண்களுக்கு என்றும் பெண்களுக்கும் என்றும் தனித்தனியாக நடப்பது ஏன்?
  ஆண்களுக்கு மட்டும் மேலாடைகள் இல்லாமல் பல இடங்களில் காட்சி தருகிறார்கள் .பெண்களுக்கு உங்களது கம்யுனிசம் அந்த அனுமதி வழங்கி யுள்ளதா? watchman உள்ளனர்.watchwoman உள்ளனரா? பெண்கள் மட்டுமே கருவுருவதும் பாலூட்டுவதுமாக உள்ளனரே ,ஆண்களும் ஒரு குழந்தைக்கு ஒரு குழந்தை மாற்றாக கருவுறவும் பாலூட்டவும் உங்களது ரஷ்யாவில் ஆய்வுகள் நடக்கிறதா?

  • //// நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? அந்நிய நாட்டில் புகுந்து அங்கு அப்பாவி ஆண்களையும் பெண்களையும் சரி சமமாக கொன்றதாக கூற வருகிறீர்களா? ///

   ஒரு சிறிய ஆதாரம் அல்லது லின்க் ?.. பிளீஸ் ..

   ///உங்க ரஷ்யாவில் ஜிம்னாடிக்ஸ் போட்டிகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக நடப்பது ஏன்? நீச்சல் போட்டிகள் ,டென்னிஸ் ,போட்டிகள் ஆண்களுக்கு என்றும் பெண்களுக்கும் என்றும் தனித்தனியாக நடப்பது ஏன்?
   ஆண்களுக்கு மட்டும் மேலாடைகள் இல்லாமல் பல இடங்களில் காட்சி தருகிறார்கள் .பெண்களுக்கு உங்களது கம்யுனிசம் அந்த அனுமதி வழங்கி யுள்ளதா? watchman உள்ளனர்.watchwoman உள்ளனரா? பெண்கள் மட்டுமே கருவுருவதும் பாலூட்டுவதுமாக உள்ளனரே ,ஆண்களும் ஒரு குழந்தைக்கு ஒரு குழந்தை மாற்றாக கருவுறவும் பாலூட்டவும் உங்களது ரஷ்யாவில் ஆய்வுகள் நடக்கிறதா?////

   ரொம்ப அறிவாளித் தனமா கேக்குறீங்க .. சூப்பர் சார் …
   மூஞ்சில ஆசிட் ஊத்துற நாயிக்கு வக்காலத்து வாங்க வர்ற ———-மூளை இப்டித்தான் சிந்திக்குமோ ?..

   • ////ரொம்ப அறிவாளித் தனமா கேக்குறீங்க .. சூப்பர் சார் …
    மூஞ்சில ஆசிட் ஊத்துற நாயிக்கு வக்காலத்து வாங்க வர்ற ———-மூளை இப்டித்தான் சிந்திக்குமோ ?..////

    ஆசிட் ஊத்துற நாயோடு நிற்க வேண்டும் .எங்கு இஸ்லாத்தினை குறை கூற வாய்ப்பு கிடைக்காதோ என்று நாக்கை தொங்க போட்டு அலைவது போல் உள்ளது உமது அபிமானியின் கட்டுரை.

    • //உங்க ரஷ்யாவில் ஜிம்னாடிக்ஸ் போட்டிகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக நடப்பது ஏன்? நீச்சல் போட்டிகள் ,டென்னிஸ் ,போட்டிகள் ஆண்களுக்கு என்றும் பெண்களுக்கும் என்றும் தனித்தனியாக நடப்பது ஏன்?
     ஆண்களுக்கு மட்டும் மேலாடைகள் இல்லாமல் பல இடங்களில் காட்சி தருகிறார்கள் .பெண்களுக்கு உங்களது கம்யுனிசம் அந்த அனுமதி வழங்கி யுள்ளதா? watchman உள்ளனர்.watchwoman உள்ளனரா? பெண்கள் மட்டுமே கருவுருவதும் பாலூட்டுவதுமாக உள்ளனரே ,ஆண்களும் ஒரு குழந்தைக்கு ஒரு குழந்தை மாற்றாக கருவுறவும் பாலூட்டவும் உங்களது ரஷ்யாவில் ஆய்வுகள் நடக்கிறதா?////

     ரொம்ப அறிவாளித் தனமா கேக்குறீங்க .. சூப்பர் சார் …
     மூஞ்சில ஆசிட் ஊத்துற நாயிக்கு வக்காலத்து வாங்க வர்ற ———-மூளை இப்டித்தான் சிந்திக்குமோ ?..

     அந்த நாய் க்காக நான் வரவில்லை .இஸ்லாத்திர்க்ககவே வந்துள்ளேன்.கம்யுநிசத்தைப் பற்றி கேட்டால் அந்த நாயை சொல்லி திசை திருப்ப வேண்டாம்.ரஷ்யாவில் மேற்கண்ட ஆய்வுகள் நடக்கிறதா?

   • //// நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? அந்நிய நாட்டில் புகுந்து அங்கு அப்பாவி ஆண்களையும் பெண்களையும் சரி சமமாக கொன்றதாக கூற வருகிறீர்களா? ///

    ஒரு சிறிய ஆதாரம் அல்லது லின்க் ?.. பிளீஸ் ..////

    சரி சமமாக கொள்ள வில்லை .ஆண்களை அதிகமாகவும் பெண்களை குறைவாகவும் கொன்றதாக சொல்ல வருகிறீர்களா?இல்லை ஆண்களை கொன்றும் பெண்களை கற்பழிக்கவும் செய்தோம் .ஆதலால் சரிசமமாக கொல்லவில்லை என்பீர்களா? அங்கிங்கு எனாதபடி இணைய தளத்தில் கொட்டிக்கிடக்கிறது/ டாஸ்மாக் கடையில் நுழைந்ததே போதாதா? உள்ளே சென்று குடித்ததுக்கு வேறு ஆதாரம் வேண்டுமா?

 53. இன்று மொஹாலியில் இரு பெண்கள் மீது அசிட் வீசப்பட்டுள்ளது. பங்களாதேசில் இது மாதிரி எதோ ஒரு பொருக்கி முஸ்லிம் பெண் மீது இதே மாதிரி அசிட் வீசிய சம்பவத்தை இஸ்லாமிய அடிமைத்தனம் என்று வர்ணித்த இதே வினவு இன்று என்ன பதில் சொல்லப்போகிறது. தனி மனிதன் தவறுக்கு எவ்வாறு ஒரு மார்க்கம் பொறுப்பாக முடியும்.இதுல பார்த்தாவ அடிமைத்தனம்னு ஆராய்ச்சி வேற. முஸ்லிம்கள் விஷயத்தில் வினவும் மேற்குலக விளம்பரத்தை திணித்து ஏனோ.உண்மையில் வினாவை நடத்துவது மதசார்பற்றவர்கலாக இருந்தால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையேல் இதுமாதிரி விஷம கருத்துக்களை பரப்புவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.காண்க ndtv பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் வினவே எனக்கு பதில் வேண்டும்….

  • அது ஹிந்து மதத்தில் உள்ள பெண் அடிமை என்பார்கள் .கம்யுனிச நாட்டில் இது போன்று சம்பவங்கள் நடைபெறவே இல்லையா?அப்படி நடை பெற்றாலும் செய்திகள் வெளியாகும் வாய்ப்பு உள்ளனவா?

 54. சில முஸ்லீம்கள் செய்யும் தவறுக்கெல்லாம் இஸ்லாம் தான் காரணமென்றால், உலகில் பெரும்பான்மையினரான மத்திய தர, குறைந்த வருமானமுள்ள மக்களெல்லாம் பட்ட, படக்கூடிய கடினங்களுக்கு கம்யூனிசம் தான் காரணாமா? ஜோசப் ஸ்டாலினும் இன்னும்பிற கம்யூனிசத்தலைவர்களின் கொள்கைகளை(?) என்னவென்று சொல்வது.

  போர்த்தலைவன்

  • பிறகு, சில முஸ்லீம்கள் நல்லவர்களாக இருப்பதற்கு இஸ்லாம் காரணமல்ல என்பதையும் ஏற்றுக்கொள்வீர்களா?

 55. ///பிறகு, சில முஸ்லீம்கள் நல்லவர்களாக இருப்பதற்கு இஸ்லாம் காரணமல்ல என்பதையும் ஏற்றுக்கொள்வீர்களா?////
  ஓரின புணர்ச்சி செய்து திருநாவுக்கரசைக் கொன்ற ஜான் டேவிட் உருவாவதற்கு அந்த பலகலை கழகம் காரணமில்லையோ,பல தேசிய அறிஞர்கள் உருவாவதற்கு அந்த பலகலை கழகம் தான் காரணம் என்போமா ,,,,,,,,,,என்பதை புரிந்து கொள்ளுங்கள் சுஜித்கான்?

 56. நல்ல கருத்துள்ள கட்டுரை
  ஏக்க இறைவனின் திருப்பெயரால்..

  கார் ஓட்டும் முஸ்லிமாக்களை நபி வழியில் கண்ணியப்படுத்த புரட்சிகர யோசனை ஒன்றை பகிர்ந்துள்ளேன்

  உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்

  நன்றி

  • அன்பிற்குரிய சகோதரி வேல் விழி அவர்களே….உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக….
   புதிய கலாசாரம் இதழில் தாங்கள் எழுதியுள்ள இஸ்லாமியப் பெண்களை சிதைக்கும் ஆணாதிக்க அமிலம் என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரை,அதற்கு உணர்வு பத்திரிகை கொடுத்துள்ள பதில்.பின்னர் உணர்வுக்கு உங்கள் தோழர் ஷஹிட் அளித்துள்ள பதில்கள் அனைத்துமே சம்மந்தமில்லாமலும்,அபத்தமாகவும் இருக்கிறது.
   மேலும் உங்கள் கட்டுரை முழுக்க இஸ்லாம் குறித்த உங்களின் அறியாமையும்,இஸ்லாம்,திருக்குர்ஆன் குறித்த உங்களின் பார்வையும் முழுக்க முழுக்க சுய கருத்துக்களாகவே உள்ளன.நீங்களே உங்கள் கருத்துக்களில் முரண்படுகிறீர்கள்.இது உங்களை குறை கூற வேண்டும் என்ற எண்ணத்தில் எழுத வில்லை.கருத்து தளத்தில் இயங்கும் உங்களைப் போன்றவர்கள் இஸ்லாம் குறித்து குறைந்த பட்ச அறிவாவது கொண்டிருக்கவேண்டும்.இஸ்லாம் குறித்து உங்களின் பார்வை மிக மிக பலவீனமாக இருக்கிறது.
   உங்கள் கட்டுரை நெடுகிலும் இஸ்லாம் அல்லது திருக்குர்ஆன் குறித்து நீங்கள் குறிப்பிடும் இடங்களிலெல்லாம். `என்று சொல்லப்படுகிறது`-`என்று கூறப்படுகிறது` என்றே மேற்கோள் காட்டுகிறீர்கள்.ஆக,இஸ்லாத்தை நீங்கள் குறைந்த பட்சம் கூட ஆய்வுக்குட்படுத்தவில்லை.பிறர் சொன்னதை வைத்தே கட்டுரை எழுதப் புறப்பட்டு விட்டீர்கள்.இது உங்களைப் போன்ற பொது தளத்தில் களமாடுபவர்களுக்கு அழகானது அல்ல.

   அந்த கட்டுரையில் ஆசிட் வீச்சுக்கு காரணமாக இப்படிச் சொல்கிறீர்கள்…..
   78 சதவீத ஆசிட் வீச்சுகளுக்குக் காரணம் காதலை ஏற்க மறுத்தது மற்றும் திருமணத்துக்கு சம்மதம் அளிக்காதது அல்லது உடலுறவுக்குச் சம்மதிக்காதது போன்றவையே. வரதட்சணை, குடும்பச் சண்டைகள், சொத்துப் பிரச்சினைகள் முதல் சமையல் செய்வதில் ஏற்படும் சிறு தாமதம் கூட இந்த ஆசிட் வீச்சுக்குக் காரணமாக அமைந்து விடுகின்றன. தாக்குதலுக்கு உள்ளாகுவோரின் மருத்துவச் செலவுகளுக்காகப் பெற்றவர்கள் நிலத்தை விற்க வேண்டிவரும் என்பதற்காகவே நிலத் தகராறுகளுக்காகவும் ஆசிட் தாக்குதல்கள் நடக்கின்றன.

   பிறகு உங்கள் கட்டுரையின் இன்னொரு பகுதியில்……

   இருபது முப்பது ஆண்டுகளாகவே பெண்கள் மீதான ஆசிட் வீச்சுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதற்கு முக்கியக் காரணங்கள் பழைமை வாதமும், ஆணாதிக்க சமூகமும், அதில் ஊறிப்போன நீதித்துறையுமே.

   என்று கூறுகிறீர்கள்.ஏனிந்த முரண்பாடு?ஆசிட் வீச்சுக்கு ஏது காரணம்?-இது சாம்பிள் தான். இப்படி உங்கள் கட்டுரை நெடுக ஏகப்பட்ட முரண்பாடுகள்.இதற்கு காரணம் நீங்கள் எடுத்துக்கொண்ட தலைப்பில் தெளிவின்மை.

   இன்னொரு விஷயம் சகோதரி வேல்விழி…

   ஆசிட் வீச்சினால் பங்களாதேஷ் பெண்கள் பாதிக்கப் படுகிறார்கள் என்ற விஷயம் குற்றவியல் சம்மந்தப்பட்ட பிரச்சனை.அதை அந்த பார்வையில் தான் நீங்கள் அணுகி இருக்க வேண்டும்.இதில் சற்றும் தொடர்பில்லாமல் தானாக முன்வந்து இஸ்லாத்தை நுழைக்கிறீர்கள்..ஆசிட் பிரச்சனை பங்களாதேஷ் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் தவிர்த்த வேறு நாட்டில் நடந்திருந்தால் அதை கண்டிப்பாக நீங்கள் மதத்தோடு தொடர்பு படுத்தாமல் சொல்லவந்த ஆசிட் வீச்சு என்கிற சமூக விரோத செயலை,பெண்களுக்கெதிரான வன்கொடுமையை நேர்த்தியாக சொல்லியிருப்பீர்கள்.
   நீங்கள் ஒப்புக்கொண்டாலும்,மறுத்தாலும் உங்கள் கட்டுரையில் இஸ்லாத்தின் மீதான ஏதோ ஒரு எதிர்ப்புணர்வு அல்லது காழ்ப்புணர்வு வெளிப்படுவதை காண முடிகிறது.அப்படி இல்லை என்று நீங்கள் மறுக்கலாம்.உண்மையிலே உங்களுக்கு இப்படிப்பட்ட உணர்வு இல்லை என்றாலும் உங்கள் கட்டுரையின் நடை அப்படித்தான் அமைந்திருக்கிறதுசோ.ராமசாமி,குருமூர்த்தி,அருண் சோரி,ராமகோபாலன் போன்ற . இந்துத்துவா சிந்தனை கொண்டவர்கள் இஸ்லாத்தை விமர்சிக்கும் போக்கிற்கு நிகராக உங்கள் கட்டுரையும் இருக்கிறதே தவிர புதிய கலாச்சாரத்தை சேர்ந்த ஒரு தோழர் எழுதியதாக ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
   அன்புச் சகோதரி வேல் விழி…உங்கள் பெயருக்கு ஏற்றார் போல் உங்கள் விழிகளை கூர்மையாக்குங்கள்.குறிப்பாக மதங்கள் தொடர்பான ஆய்வில்.
   இஸ்லாம் குறித்த ஆரோக்கியமான விமர்சனங்கள் எதுவாகிலும்,அது எவ்வளவு கடுமையாக இருந்தாலும் அதை வரவேற்கிறேன்.விவாதங்களின் மூலமாகவும்,கருத்து பரிமாற்றங்களின் மூலமாகவும் தான் நம் சந்தேகங்களையும் தவறான புரிதல்களையும் களைய முடியும்.இது அறிவ்த்ஹ்டேடலின் பாற் பட்டது. அந்த அறிவுத் தேடலுக்கு உங்கள் மனம் நாடினால் பின்வரும் மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளுகள் என்று சகோதர வாஞ்சையோடு அழைப்பு விடுக்கிறேன்

   reporterfaisal@gmail.com

   அன்புடன்
   பைசல்

 57. வினவு இணையதளத்தை ஆதரிக்கும் முஸ்லிம்களா நீங்கள்? இதோ வினவின் வேடம் களைகிறது….

  1 Vote

  ஏற்கனவே கூறியது போல நடுநிலையான செய்தியாளராக தன்னை காட்டிக்கொண்டு இஸ்லாமிய
  மார்க்கத்தினையும் அதன் சட்டதிட்டங்களையும் சரியாக புரிந்து கொள்ளாமல் செய்திகள்
  வெளியிடுவதில் தற்போது வினவு இணையதளம் முன்னேறி வருhttp://pfikaraikal.files.wordpress.com/2011/08/vinavu1.jpg?w=205&h=205கிறது.

  ஹிஜாப் என்னும் ஃபர்தாவை பிரான்சு அரசு தடை செய்துவிட்டு பெண்களுக்கு சுதந்திரத்தை
  கொடுத்திருக்கிறதாம். ஆனால் வங்காள தேசத்தில் பெண்களை அடிமைப்படுத்துகிறார்களாம்.

  சமீபத்தில் தனது இணையதளத்தில் “இஸ்லாமிய பெண்களை சிதைக்கும் ஆணாதிக்க அமிலம்” என்ற
  தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அக்கட்டுரையில் சகட்டு மேனிக்கு குற்றச்சாட்டை
  வைத்துள்ளது வினவு இணையதளம். அந்த கட்டுரையின் ஆரம்பமாக வங்காளதேசத்தில் நடைபெற்றதாக
  சில சம்பவங்களை கூறுகிறது. அதில் ஒருவன் ஒரு பெண்ணின் மீது காதல் கொண்டு அதை அந்த பெண்
  ஏற்க மறுத்ததால் அந்த பெண் மீது ஆசிட் வீசியதாகவும் கூறுகிறது. இது போன்ற மூன்று நான்கு
  சம்பவங்களை கூறிவிட்டு, சமீபகாலமாக பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் போன்ற நாடுகளை விட
  வங்காள தேசத்தில் பெண்கள் மீது ஆசிட் வீசும் சம்பவம் அதிக அளவில் நடந்து வருவதாக
  கூறுகிறது அக்கட்டுரை. உச்சந்தலைக்கும் முழங்காலுக்கு முடிச்சு போடும் வேலையையே வினவு
  இணையதளம் செய்கிறது.

  ஒரு தனி மனிதன் செய்யும் தவறுகள் அது அவன் பின்பற்றும் மதத்தோடு ஒப்பிடும் அவலம் அது ஏன்
  முஸ்லிம்களுக்கு மட்டும் நடத்தப்படுகிறது என்பது நமக்கு புரியாத புதிராகவே உள்ளது.

  வங்காளதேசத்தில் நடந்த சம்பவங்களை போன்று என்ணற்ற சம்பவங்கள் அதிக அளவில் இந்தியாவிலும்
  நடைபெற்றுள்ளன இன்னும் சொல்லவேண்டுமென்றால் வங்காளதேசத்தை விட இந்தியாவில் தான் அதிக
  அளவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுகின்றன. இன்று வரை பெண்சிசுக்கொலை
  நின்றபாடில்லை, பாலியல் வன்முறைகள் குறைந்தபாடில்லை, இதில் ஈடுபடும் குற்றவாளிகள்
  அதிக அளவில் தண்டிக்கப்படுவதும் இல்லை. அப்படியானால் இந்தியா அரசாங்கம் பெண்களை சிதைத்து
  வருகிறது என்று கூறலாமா?

  குர் ஆன் கூறுவது போன்று இஸ்லாம் பெண் அடிமைத்தனத்தை களையவில்லையாம்! காரணம் இஸ்லாமிய
  பெண்கள் மீது ஆசிட் வீசப்படுகிறதனாலா? என்ன ஒரு மடத்தனம்? இஸ்லாமிய சட்டங்கள் பெண்
  அடிமைத்தனத்தை ஒழித்திருக்கிறது என்பதற்கு எண்ணற்ற வரலாற்று ஆவணங்கள் உண்டு. வேண்டுமானால்
  நாம் வினவு இணையதளத்திற்கு தெரிவிக்க தயார்!

  குரானின் (சுரா 4:34) படி, ஆணின் கையிலேதான் பெண்ணைக் குறித்த முழு அதிகாரமும்
  இருக்கிறது. பெண்ணைப் பராமரிப்பதிலேயே ஆண் தனது செல்வத்தைச் செலவழிப்பதால் பெண்ணை விட
  ஆணை உயர்ந்தவராக கடவுள் படைத்திருப்பதாகக் கூறுகிறது. நல்லபடியாக (!)
  நடந்துக்கொள்ளும் பெண்களுக்கு ஆண்களைப் போலவே சரிநிகராக உரிமைகள் இருந்தாலும், ஆணே
  எப்போதும் பெண்ணை விட உயர்ந்தவராகக் கருதப்படுவார் என்றும் குரான் கூறுகிறது.

  குர்ஆனுடைய வசனங்கள் தங்களுக்கு புரியவில்லையாயின் இஸ்லாமிய மார்க்க அறிஞரிடம் கேட்டு
  தெரிந்துகொள்ளுங்கள். சூரா நிஸா (4:34) வது வசனம் என்ன கூறுகிறது. இதோ!

  (ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான்.
  (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும்,
  ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர்
  (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்)
  இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு,
  பாதுகாத்துக் கொள்வார்கள்; எந்தப் பெண்கள் விஷயத்தில் – அவர்கள் (தம் கணவருக்கு) மாறு
  செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும்
  திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும்
  திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால்,
  அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் – நிச்சயமாக அல்லாஹ் மிக
  உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.

  எங்குமே குர்ஆன் ஆண்கள் தான் உயர்ந்தவர்கள் என்றோ பெண்கள் தாழ்ந்தவர்கள் என்றோ கூறியதில்லை.
  பெண் என்பவள் பலஹீனமானவள், எல்லா காரியங்களிலும் ஆண்களுக்கு சரிசமாமாக வேலை
  செய்யமுடியாது என்பது நிதர்சனமான உண்மை. குடும்பத் தலைவர்களாகவும், குடும்பத்தில்
  நிர்வகிப்பவ்ர்களாகவும், குடும்பத்தை நிரவகிப்பவர்கள் ஆண்களாக இருப்பதினால் குடும்ப
  சூழ்நிலைகளை அறிந்து முடிவுகள் எடுப்பதினால் ஆண்களுக்கு சில முன்னுரிமைகள் இருப்பதையே
  இந்த குர்ஆன் வசனம் சுட்டிக்காட்டுகிறது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் குடும்ப
  சூழ்நிலைகளில் கணவன் தனது மனைவியிடம் ஆலோசனை கேட்பதும், மனைவியின் ஆலோசனைக்கு
  மதிப்பளிப்பதும் சிறந்தது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஒரு பெண்
  தனது கணவனுக்கு மாறு செய்தால், அவர்களுக்கு நல்லு உபதேசம் செய்யுங்கள் என்றும், அதிலும்
  அவர்கள் திருந்தா விட்டால் படுக்கையில் இருந்து விலகி இருங்கள் என்றும், அதிலும்
  திருந்தாவிட்டால் லேசாக அடியுங்கள் என்றும் தெளிவாக கூறுகிறது குர்ஆன் வசனம். உடனே
  பார்த்தீர்களா! ஆண்கள் பெண்களை அடிக்கலாம் என்றும், குர்ஆன் வசனங்கள் பெண்களை அடிமைப்படுத்த
  தூண்டுகிறது என்றும் கூறுவது வினவின் வாடிக்கை. இஸ்லாம் போன்று எந்த ஒரு மதமோ,
  அரசாங்கமோ பெண்களுக்கு உரிமைகளை வழங்கிடவில்லை.

  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். உங்களது மனைவி தவறு செய்பவளாக இருந்தால்
  தனிமையில் அவளுக்கு உபதேசம் செய்யுங்கள், அவளை கண்டியுங்கள், அவளது முகத்தில்
  அடிக்காதீர்கள்! லேசாக அடியுங்கள் என்று கூறியுள்ளார்கள்.

  “உடலுறவுக்கு மறுத்தால் அடிக்கலாம் என்றும் குரான் கூறுகிறது.”

  பெண்களை உடலுறவுக்கு அழைத்து அவள் மறுத்தால் அவளை அடிக்கலாம் என்று குர் ஆன் கூறுவதாக
  கூறும் வினவு ஆசிரியரே! எந்த வசனத்தில் அவ்வாறு கூறப்பட்டுள்ளது என்பதை காட்ட முடியுமா?

  வழக்கம்போல் இஸ்லாத்தின் எதிரிகள் கேட்கும் கேள்விகளையே வினவு ஆசிரியரும் கேட்டுள்ளார்.
  இன்டெர்நெட்டை அதிக அளவில் பயன்படுத்தும் வினவு ஆசிரியருக்கு அதே இன்டெர்நெட்டில் அவர்கள்
  வைத்த குற்றச்சாட்டிற்கு பதில் இருப்பது தெரியாதோ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க