privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்விக்கிலீக்சில் நம்புங்கள் (எம்.கே) நாராயணன் பின்னுகிறார்!!

விக்கிலீக்சில் நம்புங்கள் (எம்.கே) நாராயணன் பின்னுகிறார்!!

-

ம்புங்கள் எம்.கே நாராயணணை மறந்திருக்க மாட்டீர்கள். பிரதமர் அலுவலகத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணிபுரிந்து வந்த நாராயணன், கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ந்தேதி அன்று அந்தப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக வெளியுறவுத் துறை செயலாளராக பதவி வகித்து ஓய்வு பெற்ற சிவசங்கர் மேனன் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

இந்த பதவி மாற்றம் குறித்து இந்தியாவின் அமெரிக்க தூதரான திமோதி ரோமர் அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.

ஹெட்லி - எம்.கே.நாராயணன்
ஹெட்லி - எம்.கே.நாராயணன்

அந்தக் கடிதத்தில், “மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி டேவிட் ஹெட்லியை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என, இந்திய அரசு கேட்பதெல்லாம், சும்மா பம்மாத்து வேலை தான். உண்மையில், ஹெட்லியை இந்தியாவுக்கு கொண்டு வந்து விசாரிக்க விரும்பவில்லை. நாட்டு மக்களை திசை திருப்பவே, ஹெட்லியை கொண்டுவர வேண்டும் என இந்திய அரசு கேட்கிறது. இந்தத் தகவலை, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனே என்னிடம் தெரிவித்தார்’ என்று, ரோமர் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “மேலும், ஹெட்லியை அனுப்பும்படி அமெரிக்காவை இந்திய அரசு கேட்க வேண்டாம். அப்படிக் கேட்டாலும், அமெரிக்க விதிகளின்படி அதை நிறைவேற்றுவது சாத்தியமல்ல’ என, நாராயணனிடம் தான் கூறியதாகவும் ரோமர் தெரிவித்துள்ளார். 2009-ம் ஆண்டு டிசம்பரில் இந்த விஷயங்கள் நடந்தன என்று, விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும் எம்.கே.நாராயணின் பதவி மாற்றம் குறித்தும், அவர் காஷ்மீர் பிரச்சினையில் பழமைவாதமாகவும், அதிக்கம் செய்யும் தரப்பின் கருத்தை பிரதிபலிப்பதாகவும், அவருக்கும் நேரு, இந்திரா குடும்பத்திற்கும் உள்ள செல்வாக்கும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பஞ்சாங்க அம்பி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியிலிருந்து மாற்றப்பட்டிருப்பதையும் அமெரிக்கர்கள் விரும்பியிருக்கிறார்கள் என்பதும் அதிலிருந்து தெரிகிறது.

இந்த விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு மட்டுமல்ல நம்புங்கள் நாராயணனுக்கும் அதிர்சியை ஏற்படுத்தியிருக்கிறதாம்.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர், “”விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல் முற்றிலும் உண்மைக்கு மாறானது. ஹெட்லியை எப்படியும் இந்தியாவுக்குக் கொண்டு வந்து, மும்பை தொடர் குண்டு வெடிப்பு குறித்து விசாரிக்க வேண்டும் என்பதில், மத்திய அரசு மிகுந்த அக்கறை காட்டியது. அவரை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. அத்துடன், ஹெட்லியை பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதிலும் மத்திய அரசு அக்கறை காட்டியது,” என்று சொல்லியிருக்கிறார். அதே நேரத்தில், அமெரிக்க அதிகாரிகள் உடனான தன் பேச்சு குறித்து, அவர் கருத்து தெரிவிக்க மறுத்திருக்கிறார். அதைப் பற்றியும் கருத்து சொல்லியிருந்தால் அண்ணாத்தேவின் தேசசேவை சந்தி சிரித்திருக்கும்.

இந்திய அரசின் உயர் பதவியில் இருந்த ஒரு அம்பி அதிகாரி, இந்திய அரசை கண்டபடி பேசியிருப்பது குறித்து அண்ணா ஹசாரே அம்பிகள் என்ன சொல்வார்கள்? நாங்கள் வெளிப்படையாக இந்திய அரசை கண்டித்தால் எங்களை தேச துரோகிகள் என்று தூற்றும் ‘தேசபக்தர்கள்’ இவ்விடத்தில் அமைதி காக்கும் மர்மம் என்ன?

அரசுக்கு விசுவாசமாக நடந்து கொள்ளாமல் அதன் இரகசியங்களை இப்படி ஒரு வெளிநாட்டு தூதரிடம் பேசுவது என்ன செயல்? இது மட்டும் தேசத் துரோகமில்லையா? இங்கு நாராயணன் கூறியிருக்கும் கருத்துக்களின் படி இந்திய அரசு மக்களை திசை திருப்புவதற்காக ஹெட்லியைப் பற்றி பேசுகிறது என்பது உண்மைதான். பாக்குடனான பதட்டமே இவர்களது அரசியல் லாபத்திற்காகத்தான் என்பதை பலமுறை சொல்லியிருக்கிறோம். ஆனால் இந்த நாராயணன் இந்திய அரசைப் போல ஒரு அமெரிக்க அடிமை என்பதையும், அமெரிக்கர்களின் மனம் கோணாமல் நடந்து கொள்ளுவதைப் பற்றியும் பேசியிருப்பதுதான் குறிப்பிடத் தக்கது. இருந்தும் இவரை அமெரிக்கா கை கழுவியிருப்பதற்கு காரணம், இன்னும் மோசமான அடிமை வேண்டும் என்பதுதான்.

முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் நடக்கும் போது இந்த நாராயணன்தான் தே.பா.ஆலோசகர். அப்போது இவர் கொழும்பு சென்று ஈழத்தமிழர்களை காப்பாற்றுவது போல சீனெல்லாம் போட்டார். அப்போது இவர் ராஜபக்சேவிடம் என்ன பேசியிருப்பார்? ” உங்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்கிறோம். சீக்கிரம் புலிகளையும், ஈழத்தமிழர்களையும் முடித்து விடுங்கள், தமிழ்நாட்டிலிருந்து வரும் குரல்களையெல்லாம் கண்டு கொள்ளதீர்கள்”, என்றுதான் சொல்லியிருப்பார்.

இந்திய அரசும் அதன் அடிநாதமாய் விளங்கும் அதிகார வர்க்கமும் மக்களை எப்படி கிள்ளுக்கீரைகளாக நினைக்கிறார்கள், எவ்வாறு அமெரிக்க அடிமைகளாக பணிபுரிகிறார்கள் என்பதற்கு இந்த நம்புங்கள் எம்.கே.நாராயணன் ஒரு சான்று.

___________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

  1. விக்கிலீக்ஸ் சொல்வதெல்லாம் உண்மையாயிடுமா? சீன அடிமை – அமெரிக்க அடிமைய பத்தி பேசலாமா?

    • /அமெரிக்க அடிமைய பத்தி பேசலாமா?//

      பின்பு அடிமைக்கு ஏனடா தேசபக்தியும், வீராப்பும்.

    • //விக்கிலீக்ஸ் சொல்வதெல்லாம் உண்மையாயிடுமா?//

      ஜாக்கி!

      நீங்க யார் யார் சொல்லுறதெல்லாம் நம்புவிங்கன்னு சொன்னா எங்களுக்கு வசதியா இருக்கும். நாங்களும் அவா சொல்லுவதையே நம்புவோம்.

    • நாராயணன் சொல்வதை மட்டும் ஏன் மற்றவர்கள் நம்பவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

  2. மூச்சுக்கு முண்ணூறு தடவை மூவரின் மூச்சை நிறுத்துவதை நியாயப் படுத்தும் அம்பிகள், ராஜிவ் காந்தி கொல்லப் பட்ட வீடியோ பதிவை சி.பி.ஐ கேட்டும் கொடுக்காத இந்த எம்.கே.நாராயணனையும், அதுகுறித்து அலட்டிகொள்ளாத சி.பி.ஐயையும் பற்றி வாய்திறந்தால் நன்னா இருக்கும். இந்த செய்தி விக்கிலீக்ஸ் வெளியிட்டது அல்ல. ராஜிவ் கொலையை விசாரித்த ரகோத்தமனே கூறியது.

  3. அமெரிக்கர்களுக்கு என்னேனவற்றை எல்லாம் கழுவ இந்திய அடிமைகள் [காங்கிரசு ] தேசபக்திமான்கள் இருக்கிறார்கள் என்பது ஜாக்கி ,தோழன் இன் கருத்திலிருந்து தெரிகிறது.

    கணேஷ்

  4. ///இந்திய அரசின் உயர் பதவியில் இருந்த ஒரு அம்பி அதிகாரி, இந்திய அரசை கண்டபடி பேசியிருப்பது குறித்து அண்ணா ஹசாரே அம்பிகள் என்ன சொல்வார்கள்? நாங்கள் வெளிப்படையாக இந்திய அரசை கண்டித்தால் எங்களை தேச துரோகிகள் என்று தூற்றும் ‘தேசபக்தர்கள்’ இவ்விடத்தில் அமைதி காக்கும் மர்மம் என்ன?///

    இதர பல குழுக்களும், அமைப்புகளும் கூட ‘அமைதியாக’ தான் இருக்கிறார்கள். எல்லா விசியங்களை பற்றியும் ‘கருத்து’ சொல்லியே ஆக வேண்டும் என்றெல்லாம் கட்டாயமில்லையையே. மேலும் அண்ணா ஹசாரேவின் போராட்டத்தை ‘அம்பிகள்’ மட்டும் ஆதரிக்கவில்லை. இதர பல சாதியினரும்,மததினரும் ஆதரித்தனர். மும்பாய் டப்பாவாலாக்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்து தம் ஆதரவை தெரிவித்தனர்.
    இது ஜனனாயக நாடு தான். (இன்னும் வினவு தலைமையில் பாட்டளிவர்க சர்வாதிகாரம் உருவாகவில்லை). இங்கு ‘அம்பிகள்’, மற்றும் யார் வேண்டுமானாலும் அமைதியான முறையில் போராட உரிமை உண்டு. ம.க.இ.க மட்டும் தான் ஒரிஜினல் போராளிகள் மற்றவர் எல்லாம் மடையர்கள் அல்லது அயோக்கியர்கள் என்று நீங்களே சொல்லிக்கிட்டு திரியுங்க. பலரும் பலதை இப்படி சொல்லிக்கிட்டு ‘திரிய’ இந்த நாட்டில் உரிமை உண்டு தான். :)))

    • //(இன்னும் வினவு தலைமையில் பாட்டளிவர்க சர்வாதிகாரம் உருவாகவில்லை). இங்கு ‘அம்பிகள்’, மற்றும் யார் வேண்டுமானாலும் அமைதியான முறையில் போராட உரிமை உண்டு. ம.க.இ.க மட்டும் தான் ஒரிஜினல் போராளிகள் மற்றவர் எல்லாம் மடையர்கள் அல்லது அயோக்கியர்கள் என்று நீங்களே சொல்லிக்கிட்டு திரியுங்க. பலரும் பலதை இப்படி சொல்லிக்கிட்டு ‘திரிய’ இந்த நாட்டில் உரிமை உண்டு தான். 🙂 )//)

      மிக அருமை…

    • //இந்திய அரசின் உயர் பதவியில் இருந்த ஒரு அம்பி அதிகாரி, இந்திய அரசை கண்டபடி பேசியிருப்பது குறித்து அண்ணா ஹசாரே அம்பிகள் என்ன சொல்வார்கள்?//

      நாராயணன் – அம்பி amazing assumption by vinavu..

  5. நாரவாய் நாராயணன் ஒரு அதிகாரவர்க்கத்தின் அடிமையில்லை. இந்த பாதுகாப்பு அதிகாரி மட்டும் பாதுகாப்பு இல்லாமல் தமிழ்நாட்டிற்கு வந்தால் அவருக்கு பல்துலக்கிவிட சனங்கள் ரெடி

  6. போன எடுத்தா நைநைங்கரானுங்க.. டேய் நாராயனா! உன்னோட கொசுத்தொல்லை தாங்காம தான உன்ன கழட்டி விட்டுட்டார் நம்ம கொன்டக்காரர்.

Leave a Reply to கணேஷ் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க