privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்குண்டுவெடிப்பு குறித்து நிரபராதி அப்சல் குருவின் அறிக்கை!

குண்டுவெடிப்பு குறித்து நிரபராதி அப்சல் குருவின் அறிக்கை!

-

நண்பர்களே,

திகார் சிறையில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் காஷ்மீரத்து அப்பாவி அப்சல்குருவின் வழக்கறிஞர் அனுப்பிய ஊடகச் செய்தி அறிக்கையை இங்கு மொழிபெயர்த்து தருகிறோம். கூடவே டெல்லி உயர்நீதிமன்ற குண்டு வெடிப்பை கண்டித்தும், சம்பந்தமே இல்லாமல் அவரது பெயர் இழுக்கப்பட்டிருப்பது குறித்தும் அப்சல் குரு அவரது வழக்கறிஞர் பஞ்சொலி மூலம் வெளியிட்டிருக்கும் அறிக்கையும் தரப்பட்டிருக்கின்றது.

மூவர் தூக்கு குறித்து அதிகம் அறிந்த தமிழகத்தில் அப்சல் குருவின் நியாயம் பலருக்கும் தெரியாது. பாராளுமன்றத் தாக்குதலில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதும், அத்தகைய ஆதாரங்கள் ஒன்று கூட இல்லாத நிலையில் ‘தேசத்தின் மனசாட்சியை’ திருப்திப் படுத்துவதற்க்காக அவருக்கு மரண தண்டனை அளிப்பதாக வெட்கம் கெட்ட உச்சநீதிமன்றம் அந்த தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது.

மேலும் பாராளுமன்றத் தாக்குதல் நிச்சயமாக இந்திய உளவுத்துறையின் சதி நடவடிக்கை என்பதை பல மனித உரிமை அமைப்புகள் உரிய காரணங்களுடன் முன்வைத்திருக்கின்றனர். இதை உண்மையாக விசாரித்துப் பார்த்தால் அன்று இருந்த பா.ஜ.க அரசும், உள்துறை அமைச்சராக இருந்த அத்வானியும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படுவார்கள். அதை மறைக்கவே இந்துத்வா கும்பல் அப்சல் குருவை அதிவிரைவாக தூக்கிலட வேண்டும் என்று துடிக்கிறது. காங்கிரசு அரசு அதற்கு ஒத்தூதுகிறது.

இதை காஷ்மீரத்து மக்கள் அறிவார்கள். ஒரு வேளை அப்சல் குரு அநியாயமாகத் தூக்கிலடப்பட்டால் காஷ்மீர் மீண்டும் தீப்பிடித்து எரியும். இதற்காக மட்டும்தான் ஆளும் வர்க்கங்கள் கொஞ்சம் தயங்குகின்றன. ஆனால் காஷ்மீரத்திற்கு வெளியே இது மக்கள் போராட்டமாக பரிணமிக்கவில்லை என்பதற்கு நாம் வெட்கப்பட வேண்டும், வேதனைப்பட வேண்டும். பதிவர்கள், வாசகர்கள் அனைவரும் அப்சல் குருவின் நியாயத்திற்காக தங்களது குரலை ஒலிக்கச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன்

வினவு

_____________________________________________________

என்.டி.பஞ்சொலி,

வழக்கறிஞர், ஜி 3/617 ஷாலிமார் கார்டன் விரிவாக்கம் 1

ஷஹிபாபாத், காஜியாபாத் (உ.பி) 201005

ஏன் அப்சல் குரு தூக்கிலிடப்படக்கூடாது?

அப்சல் குரு
அப்சல் குரு

முகமது அப்சல் குருவின் வழக்கறிஞா் என்ற அடிப்படையிலும், கூடவே மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் உறுப்பினா் என்ற அடிப்படையிலும், நான் இத்துடன் அப்சல் குரு விடுத்த அறிக்கை நகலை இணைத்துள்ளேன்.

இந்திய பாராளுமன்றம் தாக்கப்பட்டது என்பது கண்டனத்துக்குரியது என்பதிலோ, அது எந்த அடிப்படையிலும் நியாயப்படுத்த இயலாத செயல் என்பதிலும் எவ்வித சந்தேகமுமில்லை. ஆனால் அந்த குற்றம் குறித்த மொத்த புலனாய்வு நடைபெறும் வழிமுறையில், விதத்தில் பல கேள்விகள் முன் நிற்கின்றன.  மேலும் எவ்வாறு துவக்க நிலை விசாரணையே துவங்காத நிலையில் மின்னணு ஊடகங்கள், குற்றம் சாட்டப்பட்டவரின் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது போல் சித்தரித்து அவரை கொன்றேயாக வேண்டும் எனுமளவிற்கு எவ்வாறு ஒலிபரப்ப இயலும்?

மேலும் மீண்டும் ஒரு பயங்கரமான குண்டு வெடிப்பு சம்பவம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் 7 செப் 2011-ல் நடைபெற்று பல உயிர்கள் பலியான சில மணிகளில், அப்சல் குருவின் பெயர் இதில் இழுக்கப்பட்டிருக்கிறது.  ஊடகங்கள் மின்னஞ்சல் ஒன்றை குறிப்பிட்டு அதன் உண்மைத் தன்மை நிறுவப்படாத சூழலிலேயே, முக்கியமான நேர ஒலி/ஒளி பரப்புகளில் குண்டுவெடிப்பு என்பது அப்சல் குருவிற்கு ஆதரவாக உள்ள குழுவினால் ஏற்பட்டது போல் உருவகப்படுத்தப்பட்டுள்ளது.

கார்ப்பரேட் ஊடகங்கள் என்பது யாருக்கும் கட்டுப்படாத ஒன்றாகும்.  மேலும் 24 மணி நேர தொலைக்காட்சி ஒளிபரப்புகளை மேற்கொள்கிற அத்தகைய ஊடகங்களின் செயல்பாடு, அடிப்படையான பத்திரிகை தர்மத்தை மீறுகிற செயல்களை திறம்பட கண்காணிக்க அதிகார அமைப்பு ஏதுமில்லை. அத்தகைய ஊடகங்களில் நடைபெறுகிற அனைத்து விவாத நிகழ்ச்சிகளும், நிலைத்திருக்கக் கூடிய கருத்திற்கு முரணாக யார் ஒருவர் மாறாக கருத்து சொன்னாலும் அதை எதிர்த்து மிகுதியான கருத்து திணிக்கப்பட்டு ஒலிபரப்பப்படுகிறது. மின்னணு ஊடகங்களெல்லாம் மிக உரக்க ஊழலுக்கு எதிராக பேசிய போதிலும், எந்தவித பொறுப்புமின்றி அதிகாரத்தோடு அத்தகைய ஊடகங்கள் தாம் செய்து வரும் ஊழலை ஒருபோதும் உணர்ந்து பார்ப்பதில்லை.

ஊடகத்தின் முன்பாக யாரேனும் அப்சல் குருவிற்கு சாதகமாக பேசினால் அவர் இந்தியனுக்கெதிராக பேசுபவர் எனவும், தேசிய பாதுகாப்பு வல்லுனர்கள் சொல்லும் தேசப்பற்று என்பது நிலையாக நிற்கக் கூடிய கார்ப்பரேட் ஊடகங்களுக்கும் மற்றும் இந்து மத உரிமை பேசுபவர்களுக்கு மட்டுமே உரித்தானது போல் சித்தரிக்கப்படுகிறது.

நமது “அப்சல் குருவை காப்பாற்றுங்கள்” என்கிற பிரச்சாரம் இந்திய ஜனநாயகத்தில் கீழ்காணும் அம்சங்களை பிரதிபலிக்கிறது.

 1. புலனாய்வு அமைப்புகளில் நிலவி வரும் ஊழல் மற்றும் அவர்களிடம் தொழில் திறமை குறைவாக இருப்பது அம்பலப்படுத்தப்படுகிறது.  பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் புலனாய்வு அதிகாரியாக செயல்பட்டவர் பலமுறை புகழ்ந்து பேசப்பட்டார்.  ஆனால் பின்னர் கோடிக்கணக்கான பணம் சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் பரிமாற்றங்களில் அவருக்கிருந்த நிழலான மோசமான தொடர்புகள் காரணமாக அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.  அப்சலை தூக்கிலிடுவதன் மூலம் சிறப்பு பிரிவில் செயலாற்றும் காவலர்களின் ஊழல்களிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பிவிடலாம்.
 2. நீதித்துறை என்பது அரசியலமைப்பு சட்ட நிலை, மற்றும் சட்ட நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்டு ஊடகங்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. அதன் விளைவாக உச்ச நீதிமன்றம் “இந்த நாட்டின் தேசிய மனச்சாட்சியை திருப்திப் படுத்துவதற்காக” தூக்கு தண்டனையை உறுதிப்படுத்துகிறது. எந்த ஒரு நபரின் இறப்பு குறித்த தண்டனையை முடிவு செய்யும் சட்ட அடிப்படை இங்கு கிடையாது. அப்சல் தூக்கிலிடப்பட்டால் அது எந்த ஒரு இந்தியனும் இந்திய உரிமைக் குழுக்கள் அல்லது கார்ப்பரேட் நலனை திருப்திப் படுத்துவதற்காக தூக்கிலிடப்படலாம் என்றாகிவிடும்.
 3. பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் திட்டத்தின் பிரதம மூளை என்ற அடிப்படையில் மெளலானா மசூத் அசார்,காஜிபாபா மற்றும் தாரிக் அகமது என்ற 3 பாக்கிஸ்தானியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு குற்றக் குறிப்பாணை பதிவு செய்யப்பட்டது.  அத்தகைய பிரதம மூளையாக செயல்பட்டவர்கள் பிடிக்கப் படவில்லை.  கொலை நடவடிக்கையில் நிதர்சனமாக ஈடுபட்டவர்கள் இறந்து விட்டனர்.  எனவே சதிச்செயலில் ஒரு பங்கு அப்சலுக்கு உண்டு என கருதப்படினும் அவருக்கு தலைமை தண்டனையான தூக்கு தண்டனை வழங்கப்படக் கூடாது. ஏனேனில் அவர் குறிப்பிட்ட தாக்குதலுக்கு மூளையாக செயல்படவும் இல்லை, தாக்குதலில் ஈடுபடவும் இல்லை.  அப்சலை தூக்கிலிடுவதன் மூலம் உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பொறுப்பு என்பதும், தீவிரவாதத்திற்கு உண்மை காரணம் என்னவென்று கண்டறியும் நடவடிக்கையும் புறந்தள்ளப்பட்டுவிடும்.
 4. மனித உரிமை ஆர்வலர்கள் இது தொடர்பாக கைதான இருவர் ஒன்றும் அறிந்திராதவர்கள் என நிரூபித்துள்ளனர்.  இதில் கருவுற்றிருந்து சிறையில் குழந்தையை பெற்றெடுத்த ஒரு சீக்கிய பெண்ணும் அடக்கம். அவளது வாழ்வு முழுமையாக பழிவாங்கப்பட்டுவிட்டது.  நாம் எப்போதும் அவளை தொலைக்காட்சிகளில் கண்டதில்லை, என்பதுடன் அவளின் பயங்கரமான சோகமயமான வாழ்க்கையையும் கண்டதில்லை.  இது எவ்வாறு சில குடிமக்கள் கைவிடப்படுகிறார்கள் என்பதை காண்பிக்கிறது.
 5. டெல்லியிலும் நாட்டின் பிற பகுதியிலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நியாயமாக ஒன்றுபட்ட ஆதரவு காண்பிப்பதை காஷ்மீர மக்கள் பார்க்கின்றனர்.  அப்சலை தூக்கிலிடுவதென்பது அத்தகைய காஷ்மீர மக்களுக்கும், இதர இந்திய பகுதி மக்களுக்கும் இடையே நிலவிவரும் உணர்வு பூர்வமான பாலம் உடைந்துவிட ஏதுவாகும்.
 6. அப்சல் குருவிடம் எப்போதும் நியாயமான விசாரணை நடத்தப்படவில்லை. மேலும், அவருக்காக எந்த வழக்கறிஞரும் ஆஜராக முன்வராததால், அவர் வழக்கறிஞர் மூலம் தனது தரப்பை தெரிவிக்க இயலவில்லை. மிக முக்கியமான சாட்சியங்கள் கூட குறுக்கு விசாரணை செய்யப்படவில்லை. அப்சலை தூக்கிலிடுவதன் மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஒவ்வொருவருக்கும் உறுதியளிக்கப்பட்டுள்ள நியாயமான விசாரணை என்ற உரிமையை நாம் குறைத்து மதிப்பிடுவதாக ஆகிவிடும்.
 7. பாராளுமன்ற தாக்குதல் வழக்கின் முழுமையான அனுபவம் என்பது நமது ஜனநாயக நிறுவனங்களின் பலவீனத்தை காட்டுவதாக உள்ளது. அதே சமயம் அது குறிப்பிட்ட சில மெனக்கெடும் ஆர்வலர் குழுக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஜனநாயக உரிமைக்காக போராட துணிந்தால் அதற்கு இடமளிப்பதும் சாத்தியப்படும் என்பதும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. அப்சல் தூக்கிலிடப்பட்டால் அந்த இடம் என்பது குற்றத் தீர்ப்பிற்குள்ளாகிவிடும்.  இந்துத்வா தீவிரவாதிகள் வெடிகள் வெடித்து கொண்டாடலாம், கார்ப்பரேட் ஊடகங்களுக்கு சில தினங்களுக்கு தொடர்ந்து ஒலிபரப்ப நாடக காட்சிகள் கிடைக்கலாம். ஆனால் இந்திய ஜனநாயகம் என்பது வெடித்து சிதறுவதாக ஆகிவிடும். எனவே தான் அப்சல் குரு தூக்கிலிடப்படக்கூடாது.
 8. நான் இத்துடன் அப்சலின் பத்திரிக்கை செய்தி அறிக்கை நகல் ஒன்றை இணைத்துள்ளேன்.  அவர் வேண்டுகையின்படி அது பிரசுரிக்கப்பட்டால் அவர் மீது தவறான கருத்துக் கொண்டிருக்கும் மக்களில் பலர் அவரின் குரலைக் கேட்க முடியும்.

– என்டி பஞ்சொலி,  வழக்கறிஞர், 09 செப் 2011

 அப்சல் குருவின் பத்திரிகை செய்திக் குறிப்பு:

 சில தீய சக்திகள் மற்றும் சமூக விரோத நபர்கள் டெல்லி நீதிமன்ற வளாகத்தில் கடுங்கொடிய மற்றும் பதைபதைக்க வைக்கும் குண்டு வெடிப்பு என்ற சம்பவத்தை மேற்கொண்டிருப்பது மிகவும் கவலைப்படக் கூடிய செயலாகும்.  அந்த கொடுஞ்செயல் அனைவராலும் கண்டிக்கத்தக்க செயலாகும்.  எந்த ஒரு மதமும் அப்பாவி மக்களை கொல்வதை அனுமதிப்பதில்லை.  எனது பெயர் இதில் சம்பந்தமில்லாமல், தேவையில்லாமல் இழுத்தடிப்பது அறிந்து நான் மிகவும் துயருற்றுள்ளேன். சில தரகர்கள்/குழுக்கள் அசிங்கமான ஆட்டத்தை ஆடி என்பெயரை இதில் ஈடுபடுத்துகின்றனர்.  மிகக்கொடுமையான குற்றங்கள் நடைபெறும் போது சில தவறான நோக்கமுள்ள குழுக்கள் என் பெயரை வேண்டுமென்றே இழுப்பது என்பது இது முதல்தடவையல்ல. எப்போதெல்லாம் நாட்டில் குண்டு வெடிப்புகள் நடைபெறுகிறதோ, அப்போதெல்லாம் என் பெயரை வேண்டுமென்றே அடிபடச் செய்வதன் மூலம் என் மீது களங்கம் விளைவிக்கவும், எனக்கு எதிரான பொதுக் கருத்தை வலுப்படுத்துவதற்காகவும் இவ்வாறு செய்யப்படுகிறது.

 நான் இதை எனது வழக்கறிஞர் திரு என்டி பஞ்சொலி மூலம் இதை எனது பத்திரிகை செய்திக் குறிப்பாக அனுப்பியுள்ளேன்.  தயவு செய்து இதை பிரசுரிக்கவும்.

 (ஒ-ம்) அப்சல் குரு

த/பெ: அபிபுல்லா

பகுதி எண் 8, சிறை எண் 3

திஹார் சிறைச்சாலை

___________________________________________________

– தமிழாக்கம்: சித்ரகுப்தன்

___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

  • இல்லை மனிதன் சார் . அப்சல் கசாப்பை , நரேந்திர மோடி நடத்துற உண்ணாவிரத ” ஆட்டைலே” சேத்துக்கப் போறாங்களாம் 😀 😀

 1. உண்ணாவிரதம் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை !!!

  தேச விடுதலைக்காக பல தலைவர்களால் போற்றி பேணி வளர்க்கப்பட்ட உண்ணாவிரதம், நாட்டில் சமீபத்தில் நடுந்து வரும் சில அக்கிரமங்களால் மிகவும் மனம் நொந்து போய் இருந்தது.

  அப்பாவி பொது மக்கள் கொத்து கொத்தாக படுகொலை செய்யப்பட்ட போது, அதை தடுத்து நிடுத்த வேண்டிய ஒரு தலைவர், தலைக்கு துணைவியாரும் – காலுக்கு மனைவியாரும் என்று குளுகுளு காற்று வீசும் கடற்கரையில், குளிர் சாதன பெட்டிகளுடன், கின்னஸ் சாதனை படைத்த உண்ணாவிரதத்தைக் கண்டு, உண்மையான உண்ணாவிரதம் கடும் மன உளைச்சலில் அவதிப்பட்டு வந்தது!!

  பொது மக்களின் பணத்தை (ட்ரஸ்ட் பணத்தை), பல லட்ச ரூபாயை ஆட்டையைப் போட்டு, தனது பிறந்த நாள் விழாவை கோலாகலமாக கொண்டாடிய ஒரு முதியவர், திடீரென்று ஒரு நாள் ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதம் என்று ஆடிய நாடகத்தைப் பார்த்து, உண்மையான உண்ணாவிரதம் கடும் நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வந்தது!!

  ஸ்காட்லாந்தில் சொந்தமாக ஒரு உல்லாச தீவு, ஆயுர்வேத மூலிகை ஏற்றுமதியில் சுமார் 1,100 கோடி அந்நிய செலவாணி மோசடி செய்து விட்டு, வருவாய்துறை அதிகாரிகளின் கண்களிலேயே விரலை விட்டு ஆட்டி வந்த முற்றிலும் துறந்த முனிவர் (!!!???) ஒருவன் திடீரென்று ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதம் என்று காட்டிய பிலிமில் உண்மையான உண்ணாவிரதம் சமீப காலமாக சித்த பிரமை பிடித்தது போல இருந்தது!!

  ஒரு பாவமும் அறியாத ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை, அவர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக, அதிலும் கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றை கிழித்து சிசுக்களை வெளியே எடுத்து தீயில் இட்டு சாகடித்த, சொல்வதற்கு வார்த்தைகளே இல்லாத கொடுமைகள் பல செய்த ஒரு “நரபலி மோசடி”, “அமைதி, சமூக நல்லிணக்கம் கோரி உண்ணாவிரதம்!!” என்ற செய்தியைப் படித்ததும், உண்மையான உண்ணாவிரதம், இத்தனை அவமானங்களுக்கு பிறகும் இனி தாம் உயிரோடு வாழ்வதில் அர்த்தமே இல்லை என்று, இன்று அதிகாலை தூக்கு மாட்டி, தற்கொலை செய்து கொண்டு விட்டது!!!

  • ஆமா ஓங்க மத சார்பற்ற சோனியா வின் ஆட்சி பள்ளிளிக்குதே ஒரு லட்சம் தம்ஜிகன கொன்ன கான்கிரசுக்குதான் ஒட்டு போடுவாங்க முசுலீமுங்க..ஆனா இந்த தபா மீண்டும் காங்கிரஸ் வராது!!முச்லீமுங்க சாத்துங்க

  • சரி என்ன பண்ணலாம்?சாப்பாட்ட பெனஞ்சி மோடி வாயில் திணிக்கும் போராட்டம் பண்ணுவோமா?மத சார்மற்ற என கூறி கொள்ளும் ஒன்றரை லட்சம் தமிழனை ஆயிரம் முஸ்லீம்களுக்கு இணை வைத்து மீண்டும் காங்கிரசை ஆட்சியில் அமர வைப்போமா?

   • மோடியின் உண்ணாவிரதப் பந்தலுக்கு சென்று, வாழ்த்து தெரிவித்து குரூப் போட்டோ எடுத்துக்கொண்ட குஜராத் முஸ்லிம்களை என்ன சொல்ல? அவுங்க அமைதியா தான் இருக்காங்க… நம்மதான் ஒருத்தனை ஒருத்தன் கெட்ட கெட்ட வார்த்தையால் திட்டிக் கொண்டு அடித்துக்கொண்டு வினவு போன்ற கலவரமூட்டிகளுக்கு கம்யுனிச தீவிரவாதிகளுக்கு தீனி போடுகிறோம்…

    • நீங்க சொல்றதும் நல்லாத்தான் இருக்கு!!உண்மை!!இவுங்க போடுற தீனிக்கு நாம அடிச்சிகிட்டு பலியாகுரமோ?

    • வினவு போன்ற கலவரமூட்டிகளுக்கு கம்யுனிச தீவிரவாதிகளுக்கு தீனி போடுகிறோம்…

     Correct Sir,,

     வினவு எலெதரத பாட்த எல்லமா BJP & RSS மட்டும் த பன்னரஙனு சொல்லரங…. What they got from other parties……………

 2. நிரபராதி அப்சல் குரு/////
  .
  .

  யப்பா உச்சநீதிமன்ற நீதிபதியே சொல்லிட்டாரு அல்லா ஜெயில் கதவையும் தொறந்து உடுங்க!

   • ஒரு பச்சைப்புளுகை வெளியிட்டிருக்கும் மஞ்சள் பத்திரிகையின் இணைப்பை பார்த்து நீலப்படம் பார்ப்பவன் போல வெறி கொண்டு மகிழும் காவி மனது

   • பிறகு ஏன்‘தேசத்தின் மனசாட்சியை’ திருப்திப் படுத்துவதற்க்காக அவருக்கு மரண தண்டனை அளிப்பதாக தங்களது தீர்ப்பில் உச்சநீதிமன்றம் கூறவேண்டும்.?

    • கொஸ்டின் கஸ்டமா இருக்கு.. அதனால மனிதன்,சீனு,நரன் இவங்க எல்லாம் இதை ‘சாய்ஸ்ல’ விட்டுடுவாங்க….!!!

     • தம்பி பொன்ராசு, தீர்ப்பை முழுதாக படித்து பார்த்துவிட்டு பேச வேண்டும்… 107 பக்க தீர்ப்பிலே ஒரே ஒரு வரியை பிடிச்சிக்கிட்டு தொங்குறது சரியில்லை… அந்த ஒரு வரிதான் உண்மையிலே குற்றவாளிகளுக்கு மிக மிக கண்டனம் தெரிவிக்கிற வரி…

      குறிப்பிட்ட அந்த வரி தமிழாக்கம் செய்து தரப்பட்டுள்ளது… மூலத்தை படிக்க ஆங்கிலத்தில் தீர்ப்பு கீழே உள்ளது…

      “மிக அதிகப்படியான உயிரழப்புகளை உருவாக்கிய, அரசு இயந்திரத்தையே முடக்கிய, மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்த, இந்த நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பதின் மூலமே ஒட்டுமொத்த தேசத்தின் மனசாட்சி திருப்திபடுத்தப்படும்… இந்தியாவின் ஒற்றுமைக்கும், இணக்கத்துக்கும், இறையாண்மைக்கும் சவால் விடும் இது போன்ற தீவிரவாத சதி செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்குமரண தண்டனை விதிக்கபடுவதன் மூலமே ஈடு செய்ய முடியும்”.

      “”The gravity of the crime conceived by the conspirators with the potential
      of causing enormous casualties and dislocating the functioning of the
      Government as well as disrupting normal life of the people of India is some
      thing which cannot be described in words. The incident, which resulted in
      heavy casualties, had shaken the entire nation and the collective conscience of
      the society will only be satisfied if the capital punishment is awarded to the
      offender. The challenge to the unity, integrity and sovereignty of India by
      these acts of terrorists and conspirators, can only be compensated by giving
      the maximum punishment to the person who is proved to be the conspirator in
      this treacherous act. The appellant, who is a surrendered militant and who was
      bent upon repeating the acts of treason against the nation, is a menace to the
      society and his life should become extinct. Accordingly, we uphold the death
      sentence.””

      • பொன்ராசு நீங்க மறுமொழி எழுத முடியாட்டி இதை சாய்சுல விடலாம்.. எனக்கு ஆட்சேபனை இல்லை 🙂

      • //இது போன்ற தீவிரவாத சதி செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்குமரண தண்டனை விதிக்கபடுவதன் மூலமே ஈடு செய்ய முடியும்”.//

       மனிதன் நீங்கள் நெம்ப அவசரப்படுகிறீர்கள். குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பது என்பதெல்லாம் சரிதான். இங்கு, யார் குற்றவாளி என்பதுதானே பிரச்சினை.

       • எனக்கென்ன அவசரம்… என்னுடைய பதில் பொன்ராசு அண்ணன் சாய்சுல விட சொன்ன கொச்டினுக்கு நண்பரே…

        \\ஏன் தேசத்தின் மனசாட்சியை திருப்திப் படுத்துவதற்க்காக அவருக்கு மரண தண்டனை அளிப்பதாக தங்களiது தீர்ப்பில் உச்சநீதிமன்றம் கூறவேண்டும்..\\
        இந்த வரியில் உங்கள் புரிதல் தவறு என்பதுதான்…

        இந்த இடத்தில் யார் குற்றவாளி என்ற விவாதமே இல்லையே… நீங்கள் அந்த கேள்வியை இந்த கமெண்டில் இடை செருக வேண்டாம்…… அது பற்றி முந்தைய பிந்தைய கமெண்ட்களில் நிறைய சொல்லப்பட்டிருக்கு..

    • தேசத்தின் மனசாட்சி என்பது மனிதன், நரன், சீனு போன்ற காவிகளின் மனசாட்சி என்பதனால் …

 3. ஜெயாவின் சட்டமன்றத் தீர்மானம் அதையொட்டிய ஒமர் அப்துல்லாவின் பேச்சு இதனால் பரிதவிக்கும் பாஜக என்ற நிகழ்வுகளின் நீட்சியாக உயர்நீதிமன்றத்தில் குண்டு வெடித்திருக்கிறது. இந்த குண்டு வெடிப்பும் கூட சந்தேகத்திற்குரியதுதான். ஊடகங்களின் அளப்பரைகளை அவதானிக்கும்போது நமது உளவுத்துறையையும் தனியார்மயப்படுத்திவிடலாம். உளவுத்துறையை ஊடகங்களிடம் கையளித்துவிடலாம்.

 4. மதசார்பற்ற முத்திரை குத்துப்பட்ட காங்கிரஸ்!!கொன்றது எத்தனை பேர்களை?
  சீக்கிய படுகொலை- 3000
  போபால் விஷ வாயு-பல பத்தாயிரங்கள் (இன்றும் அதன் பாதிப்பால் பலர் ஊனம)
  இலங்கை போர்-10000000 தமிழர்கள்!!(இன்றும் பல லட்சம் பேர் முல்வேளிகளில்)
  இதெல்லாம் என்ன அஹிம்சை வழியோ?

  • நீங்கள் அடித்துக் கொள்வதையெல்லாம் பரிசீலித்தால் வினவுக் கட்டுரைகள் எல்லாம் உண்மையானவை என்று தோன்றுகிறது. சில பின்னூட்டங்களில் வினவு, நீ மட்டும் யோக்கியமா என கேட்டிருந்தனர். ஆனால் இவர்களெல்லாம் அடித்துக்கொண்டு தங்களை அம்பலப்படுத்திக்கொள்வதன் மூலம் வினவை யோக்கியவனாக்கிவிடுகின்றனர். வினவு, இதுதான் போட்டு வாங்குவதோ?

 5. ஒதுங்கும் போக்கும்,சுயநலமும்,பயமும் என்றைக்கு மக்கள் மனதிலிருந்து அகலுதோ
  அன்றைக்குதான் இப்படிபட்ட அநியாங்களுக்கு முடிவு கட்டப்படும்

  • Infidel தம்பி, உச்சிக்குடுமி நீ இந்த பிளாக்குலே போய் பாரு http://thathachariyar.blogspot.com/ பார்ப்பனத் தீவிரவாதம்தான் உலகத்துலேயே ஃபர்ஸ்ட் . இன்னா பெட்டு கட்டுரே தொறை?

   • ஆமா இன்பிடேல் சாரே உங்க fidelity பத்தி நான் பேச வரலை!! கி.பி,.576 இல இஸ்லாம் தொன்றியதுன்னா அதுக்கு முன்னாடி வரை அல்லா என்ன செய்து கொண்டிருந்தார்?

 6. நரன் பாஸ். அட நீங்க சொன்னாலாம் கேட்கமாட்டங்க பாஸ் , சுனா சாமி வகையறாக்கள் சொல்லனும் .:D 😀 “தேசத்தின் மனசாட்சிக்காக அப்சல் குருவுக்குத் தூக்கு , நரேந்திர மோடி , அத்வானி & கோ வுக்கு பல்லக்குத் தூக்கு” மானங்கெட்ட மனசாட்சி 😀

 7. அப்சல் வழக்கு பற்றிய விரிவான ஒரு கட்டுரை தேவை.இது போதிய விவரங்களுடன் இல்லை

 8. அப்சல் குரு நிரபராதிதான்… நாங்க ஒத்துக்கிறோம்… அதான் எங்களுக்கு தெரியுமே… நீ என்ன புதுசா சொல்ல வர அதை சொல்லு…

  என்னடா இந்து பசங்கல்லாம் எதிர்த்து, அப்சல் சாரை திட்டி எழுதுவாங்க… இஸ்லாமிய பசங்கல்லாம் ஆதரவ எழுதுவாங்க.. ஒரு 100 கமெண்ட் கிட்ட ஒருத்தன ஒருத்தன் நாராசம திட்டிகிட்டு சூட மத வெறி கிளம்பும்னு பாத்தியா… நாங்கல்லாம் மெச்சூர் ஆகிட்டோம்…. இந்த பிரிட்டிஷ் காரன் ஸ்டைல் பிரித்தாலும் சூழ்சிஎல்லாம் சிறைச்சாலை படத்திலே பாத்துட்டோம் கண்ணா பாத்துட்டோம்..

  நண்பர்களே இந்துத்வா தீவிரவாதத்தை விட, இஸ்லாமிய தீவிரவாதத்தை விட, கிறித்தவ, பௌத்த இன்ன பிற மத சார்புடைய தீவிரவாதத்தை விட…
  இந்த சீன கம்யுனிச தீவிரவாதம் மிக கொடியது… அது நம் ஒற்றுமைக்கு உலை வைக்கும் உணர்ந்து கொள்ளுங்கள் …

  • கம்யுனிச தீவிரவாதிகள் இசலாமிய ஆதரவு என்ற முகமூடியை பூட்டு கொண்டு, மத வெறியை தூண்டுகிறார்கள்…

  • இந்திரன் … வெள்ளைச் சட்டைப் போட்டுக் கொண்டு காவிகளுக்கு ரத்த தாகம் தீர்க்க ஆள் சேர்க்கிறார் .. இந்துக்களே கடப்பாரை தயாராகட்டும் .. தாஜ்மகால் இருந்த இடத்தில் தான் இராமன் கக்கூஸ் போனான். முகர்ந்து பார்க்க அணி திரளுங்கள்.

 9. இந்த அப்பாவி அப்சல் குருவையும்,அந்த அஜ்மல் கசாப்பையும்
  சீக்கிரம் தூக்குல போட சொல்லுங்க சார்.இந்த ரெண்டு பேரையும்
  சாக்கா வெச்சி இந்த காவிக்கூட்டம் ஒட்டுமொத்த
  முஸ்லீம்களையும் தாலி அறுக்குறானுங்க.

 10. சாட்சி இல்லாமல் தூக்கு தன்டனை வழங்கியது தவறான முன் உதாரனம். வினவின் இந்த கட்டுரை நேர்மையானதுதான்.

 11. ///மேலும் பாராளுமன்றத் தாக்குதல் நிச்சயமாக இந்திய உளவுத்துறையின் சதி நடவடிக்கை என்பதை பல மனித உரிமை அமைப்புகள் உரிய காரணங்களுடன் முன்வைத்திருக்கின்றனர். இதை உண்மையாக விசாரித்துப் பார்த்தால் அன்று இருந்த பா.ஜ.க அரசும், உள்துறை அமைச்சராக இருந்த அத்வானியும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படுவார்கள். அதை மறைக்கவே இந்துத்வா கும்பல் அப்சல் குருவை அதிவிரைவாக தூக்கிலட வேண்டும் என்று துடிக்கிறது. காங்கிரசு அரசு அதற்கு ஒத்தூதுகிறது.////

  prove this first with facts. இந்துத்துவாவை நான் என்றும் ஆதரிப்பவன் இல்லை. ஆனால் இப்படி இஸ்ட்டதுக்கு எழுதுவதை எல்லாம் அப்படியே உண்மை என்று நம்புவர்கள் இங்கு இருக்கும் வரை, எதிர்வினை ஆற்றி தொலைக்க வேண்டியிருக்கிறது.

  இந்திய உளவு துறை ஏன் இப்படி ‘சதி’ செய்ய வேண்டும் ? you are crazy. that is all i can say.

  • நண்பர் அதியமான்,
   \\prove this first with facts.//
   இதை நிரூபிப்பது ஒன்றும் கடினமல்ல.2006 ஆம் ஆண்டு அக்டோபர் 30 நாளிட்ட அவுட் லுக் ஏட்டில் வெளியான அருந்ததி ராயின் கட்டுரை ஒன்றே போதும் சங்க பரிவார் கும்பலின் மாய்மாலங்களை அம்பலப் படுத்த.பார்க்க. http://www.outlookindia.com/article.aspx?232979
   கட்டுரையிலிருந்து சில வரிகள்.
   \\In a serious lapse of procedure, on December 20, 2001, the investigating officer, Asst Commissioner of Police (ACP) Rajbir Singh (affectionately known as Delhi’s ‘encounter specialist’ for the number of ‘terrorists’ he has killed in ‘encounters’), called a press conference at the Special Cell. Mohammed Afzal was made to ‘confess’ before the media. Deputy commissioner of police (DCP) Ashok Chand told the press that Afzal had already confessed to the police. This turned out to be untrue. Afzal’s formal confession to the police took place only the next day (after which he continued to remain in police custody and vulnerable to torture, another serious procedural lapse). In his media ‘confession’ Afzal incriminated himself in the Parliament attack completely.During the course of this ‘media confession’ a curious thing happened. In an answer to a direct question, Afzal clearly said that Geelani had nothing to do with the attack and was completely innocent. At this point, ACP Rajbir Singh shouted at him and forced him to shut up, and requested the media not to carry this part of Afzal’s ‘confession’. And they obeyed! The story came out only three months later when the television channel Aaj Tak re-broadcast the ‘confession’ in a programme called Hamle Ke Sau Din (Hundred Days of the Attack) and somehow kept this part in. Meanwhile in the eyes of the general public—who know little about the law and criminal procedure—Afzal’s public ‘confession’ only confirmed his guilt. The verdict of the ‘collective conscience of society’ would not have been hard to second guess.//

   \\Eventually, both the high court and the Supreme Court set aside Afzal’s confession citing ‘lapses and violations of procedural safeguards’. But Afzal’s confession somehow survives, the phantom keystone in the prosecution’s case. And before it was technically and legally set aside, the confessional document had already served a major extra-legal purpose: On December 21, 2001, when the Government of India launched its war effort against Pakistan it said it had ‘incontrovertible evidence’ of Pakistan’s involvement. Afzal’s confession was the only ‘proof’ of Pakistan’s involvement that the government had! Afzal’s confession. And the sticker-manifesto. Think about it. On the basis of this illegal confession extracted under torture, hundreds of thousands of soldiers were moved to the Pakistan border at huge cost to the public exchequer, and the subcontinent devolved into a game of nuclear brinkmanship in which the whole world was held hostage.

   Big Whispered Question: Could it have been the other way around? Did the confession precipitate the war, or did the need for a war precipitate the need for the confession?//

  • அப்சல் குரு மீதான விசாரணை மற்றும் நீதிமன்ற தீர்ப்பு குறித்து அருந்ததி ராய் எழுப்பிய பதிமூன்று கேள்விகள்.
   http://www.guardian.co.uk/world/2006/dec/15/india.kashmir

   Question 1: For months before the attack on parliament, both the government and the police had been saying that parliament could be attacked. On December 12 2001, the then prime minister, AB Vajpayee, warned of an imminent attack. On December 13 it happened. Given that there was an “improved security drill”, how did a car bomb packed with explosives enter the parliament complex?

   Question 2: Within days of the attack, the Special Cell of the Delhi police said it was a meticulously planned joint operation of Jaish-e-Mohammad and Lashkar-e-Taiba. They said the attack was led by a man called “Mohammad” who was also involved in the hijacking of flight IC-814 in 1998. (This was later refuted by the Central Bureau of Investigation.) None of this was ever proved in court. What evidence did the Special Cell have for its claim?

   Question 3: The entire attack was recorded live on CCTV. Two Congress party MPs, Kapil Sibal and Najma Heptullah, demanded in parliament that the CCTV recording be shown to the members. They said that there was confusion about the details of the event. The chief whip of the Congress party, Priyaranjan Dasmunshi, said, “I counted six men getting out of the car. But only five were killed. The closed circuit TV camera recording clearly showed the six men.” If Dasmunshi was right, why did the police say that there were only five people in the car? Who was the sixth person? Where is he now? Why was the CCTV recording not produced by the prosecution as evidence in the trial? Why was it not released for public viewing?

   Question 4: Why was parliament adjourned after some of these questions were raised?

   Question 5: A few days after December 13, the government declared that it had “incontrovertible evidence” of Pakistan’s involvement in the attack, and announced a massive mobilisation of almost half a million soldiers to the Indo-Pakistan border. The subcontinent was pushed to the brink of nuclear war. Apart from Afzal’s “confession”, extracted under torture (and later set aside by the supreme court), what was the “incontrovertible evidence”?

   Question 6: Is it true that the military mobilisation to the Pakistan border had begun long before the December 13 attack?

   Question 7: How much did this military standoff, which lasted for nearly a year, cost? How many soldiers died in the process? How many soldiers and civilians died because of mishandled landmines, and how many peasants lost their homes and land because trucks and tanks were rolling through their villages and landmines were being planted in their fields?

   Question 8: In a criminal investigation, it is vital for the police to show how the evidence gathered at the scene of the attack led them to the accused. The police have not managed to show how they connected Geelani to the attack. And how did the police reach Afzal? The Special Cell says Geelani led them to Afzal. But the message to look out for Afzal was actually flashed to the Srinagar police before Geelani was arrested. So how did the Special Cell connect Afzal to the December 13 attack?

   Question 9: The courts acknowledge that Afzal was a surrendered militant who was in regular contact with the security forces, particularly the STF of Jammu and Kashmir police. How do the security forces explain the fact that a person under their surveillance was able to conspire in a major militant operation?

   Question 10: Is it plausible that organisations such as Lashkar-e-Taiba or Jaish-e-Mohammad would rely on a person who had been in and out of STF torture chambers, and was under constant police surveillance, as the principal link for a major operation?

   Question 11: In his statement before the court, Afzal says that he was introduced to “Mohammed” and instructed to take him to Delhi by a man called Tariq, who was working with the STF. Tariq was named in the police charge sheet. Who is Tariq and where is he now?

   Question 12: On December 19 2001, six days after the parliament attack, police commissioner SM Shangari identified one of the attackers who was killed as Mohammad Yasin Fateh Mohammed (alias Abu Hamza) of the Lashkar-e-Taiba, who had been arrested in Mumbai in November 2000 and immediately handed over to the Jammu and Kashmir police. He gave detailed descriptions to support his statement. If police commissioner Shangari was right, how did Yasin, a man in the custody of the Jammu and Kashmir police, end up participating in the parliament attack? If he was wrong, where is Yasin now?

   Question 13: Why is it that we still do not know who the five “terrorists” killed in the parliament attack are?

   These questions, examined cumulatively, point to something far more serious than incompetence. The words that come to mind are complicity, collusion, involvement. There is no need for us to feign shock or shrink from thinking these thoughts and saying them out loud. Governments and their intelligence agencies have a hoary tradition of using strategies such as this to further their own ends. (Look up the burning of the Reichstag and the rise of Nazi power in Germany in 1933; or Operation Gladio, in which European intelligence agencies created acts of terrorism, especially in Italy, in order to discredit militant groups such as the Red Brigades.)

   The official response to all of these questions has been dead silence.

   • நண்பர் திப்பு,

    அப்ஃப்சல் குரு குற்றவாளியா அல்லது நிரபராதியா, மற்றும் அவருக்கு மரண தண்டனை கூடாதா என்பதை பற்றி நான் கேள்வி எழுப்பவில்லை. இந்த தாக்குதலை இந்திய உளவு துறையினர் தான் திட்டமிட்டு நடத்தினர் என்ற அபத்தமான வாதத்தை பற்றி தான் கேள்வி.
    அதை பற்றி உங்கள் பதிலில் ஒன்றும் இல்லை.

    Potamkin,

    I have only one counter question to the expert Arundhadhi Rai : the main door to the parliament was locked by people inside the building as soon as the firing started outside the building. It was a very fortunate act by some alert person(s). Otherwise, even if one terrorist had managed to penetrate the building with his gun, then probably hundreds of MPs would have been killed. And Advani, Vajpayee and Congress members too could probably be dead or injured.
    Do you think anyone is that crazy in the intelligence agencies of India ?

    Conspiracy theories always abound in such matters. Yes, there was lots of confusion in the investigation process. that is different. but to allege that Indian intelligence agencies (and the govt) are behind all this is crazy.

    என்ன வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் பகுத்தறிவை உபயோகித்து யோசிக்க வேண்டும்.

    //Question 13: Why is it that we still do not know who the five “terrorists” killed in the parliament attack are?///

    because of the nature of the incident and most probably they were from Pakistan training camps. Just because the identity of these people are not established properly doesn’t mean that they are the mercenaries of Indian agencies. crazy. no guy other than fanatically trained jihadists would be ready for these kind of suicidal attacks, where the attackers die in the end.

    • \\என்ன வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் பகுத்தறிவை உபயோகித்து யோசிக்க வேண்டும்.//

     நீங்கள் சொன்னதுதான்.அதைத்தான் நான் உங்களிடம் கோருகிறேன்.அப்சல் அப்பாவி என்பதை ஐயத்திற்கு இடமின்றி அருந்ததி ராயின் கட்டுரை நிறுவுகிறது.இங்கு சில கேள்விகளை எழுப்பி விடை தேடிப் பார்த்தால் உண்மை விளங்கும்.

     நாடாளுமன்ற தாக்குதல் நடைபெற்ற இரண்டே நாட்களில் ”துப்பு துலக்கி” அப்பாவிகள் நான்குபேரை சிக்க வைத்துள்ள மோசடி நிகழ்ந்தது ஏன்.

     அப்படியானால் உண்மையான குற்றவாளிகளை,அந்த தாக்குதலுக்கு பின் மறைந்திருக்கும் சதியை மூடி மறைக்கும் கபட நாடகமல்லவா இது.

     உண்மையான குற்றவாளிகளை உலகுக்கு அடையாளம் காட்டக் கூடாது என்பதற்காகத்தான் உள்துறை அமைச்சர் அத்வானியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிய மைய புலனாய்வுத்துறை அவசர அவசரமாக கற்பனையான குற்றவாளிகளை கைது செய்தது எனபது இதன் பொருளில்லையா.

     தாக்குதல் குறித்த முழு உண்மைகளும் வெளிவர கூடாது என அப்போதைய ஆட்சியாளர்கள் விரும்பியிருக்கிறார்கள் எனபது இதன் மூலம் தெளிவாகவில்லையா.

     அப்படி அவர்கள் விரும்புவதற்கான காரணம் என்னவாக இருக்க முடியும்.

     மேலும் பொதெம்கின் கொடுத்துள்ள அருந்ததி ராயின் கேள்விகளுக்கும் விடை என்ன என எண்ணிப்பாருங்கள்.உண்மை விளங்கும். [அருமையான ஒரு கட்டுரைக்கான இணைப்பை தந்தமைக்கு போதேம்கினுக்கு நன்றி]

     • //தாக்குதல் குறித்த முழு உண்மைகளும் வெளிவர கூடாது என அப்போதைய ஆட்சியாளர்கள் விரும்பியிருக்கிறார்கள் எனபது இதன் மூலம் தெளிவாகவில்லையா.///

      இல்லை. அப்படி பொருள் கொள்ள முடியாது. இது போன்ற பெரும் பாதிப்பை உருவாக்கும் பயங்கரவாத தாக்குதல்கள் (பாரளுமன்ற கட்டிடத்திற்க்குகள் ஒரு பயஙக்ரவாதி நுழைந்திருந்தாலே, மும்பாயில் 2008இல் நிகழ்ந்தது போல் பல நூறு எம்.பிகளை, அமைச்சர்களை கொன்றிருக்க முடிந்திருக்கும்) முடிந்தவுடன் போலிஸ் மற்றும் அரசு எந்திரம் மீது மிக மிக அதிகமான ப்ரெஸ்ர் உருவாகும். குற்றவாளிகளை உடனே கைது செய் என்று. பல நேரங்களில் முக்கிய குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடிப்பது சாத்தியமில்லதாதல், சந்தேகத்தின் அடிப்படையில், circumstancial evidences கொண்டு பலரை கைது செய்து ஊடகங்கள் முன்பு நிறுத்தும் வேலை நடக்கும். பாகிஸ்தானில் இருந்து ஏவியவர்களை அடையாளம் கண்டு கைது செய்வது பெரும்பாலும் சாத்தியமில்லை. இங்கு ‘உதவியவர்கள்’ என்று சந்தேகப்படுவர்களை கைது செய்வது தான் நடக்கிறது. இந்திரா காந்தி கொலை வழக்கில் தூக்கிலிடப்பட்ட பீந் சிங் மீதும் இதே போல் circumstancial evidence தான். நேரடியான ஆதரம் கிட்டவில்லை. ஆனால் நீதிமன்றங்கள் மரண தண்டனையை வழங்கியது. ராஜிவ் கொலைவழக்கில் மரண தண்டனைக்குள்ளான பேரளிவாளன் நிலையும் ஏறக்குறைய இதே போல் தான்.

      இதை பற்றியே நான் பேசவில்லை. அப்ப உண்மை குற்றவாளிகள் இந்திய உளவு துறையினர் தான் என்று ஊகம் பற்றி தான் பேசினேன். பாரளுமன்ற கட்டிடத்தினுள் ஒருவன் துப்பாகியோடு நுழைய அந்த நிகழ்வில் நிறைய வாய்ப்பிருந்தது. சாமயோசிவதமாக, உயிரை பணையம் வைத்து ஒருவர் கதவை மூடியதால் பலரும் தப்பினர். அத்வானி, வாஜ்பாயி முதலியோர் கட்டிடத்தினுள் தான் இருந்தனர். அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த உளவு துறையை ஏவி, சதி செய்து, இந்த தாக்குதலை நிகழ்த்தி, கூண்டாக ’தற்கொலை’ செய்து கொள்ளும் மடையர்கள் அல்லவே ? வினவுவின் அனுமானம் அப்படி சொல்கிறது.

      உண்மையில் இந்த தாக்குதலை திட்டமிட்டு ஏவியவர்கள் யாராக இருக்க முடியும் ? அதை தான் யோசியுங்கள் என்று சொன்னேன்.

      • அண்ணே …

       அதியமான் அண்ணே … இராஜீவ் காந்தியை போட்டுத் தள்ளப் போற கதை கூட உளவுத் துறையில இருந்து அவனோட மெய்க்காப்பாளன் வரைக்கும் எல்லாருக்கும் தெரியுமாம். உளவுத்துறை என்ன அவ்வலவு உத்தமத் துறையா ?..

       இந்தியன் முஜாஹிதீன் ங்ற அமைப்பே அந்த நோனிகளோடதுன்னு நோக்குத் தெரியாதா ?..

       பிரதம மந்திரி தான் சாகலைல .. அத்வானியும் சாகலைல .. எனக்கு இருக்குற சந்தேகம் எல்லாம் … தக்காலி அவ்வளவு தூரத்துல இருந்து தாக்குதல் நடத்துனவனுங்க கொஞ்சம் பக்கதுல போய் பண்ணிருந்தானுங்கன்னா போட்றலாம்னு தெரியாத அளவுக்கு முட்டாப்பசங்களா ?..ன்னு தான்.

       கொஞ்சம் வொளக்கம் கொடுக்க முடியுமா?..

       உங்க ஒளவுத் தொறையும் காவிக் கும்பலும் பினாயக் சென்னோட மெயிலைத் ஐ.எஸ்.ஐ ஓட சம்மந்தப்படுத்தி வழக்கு போட்டதை வச்சே உங்க வக்கனை என்னனு தெரிஞ்சு போச்சு அதியமான் ..

       போய் சத்தமில்லாம வாஸ்து சாஸ்திரமும் நியூமராலஜியும் பார்த்து சம்பாதிக்கிற வழிய பாருங்களேன்.

 12. “அப்சல் வழக்கு பற்றிய விரிவான ஒரு கட்டுரை தேவை.இது போதிய விவரங்களுடன் இல்லை” குண்டுவெடிப்பு என்றாலே அரசு கை காட்டும் ஒருவரை கண்ணை மூடிக்கொண்டு தூக்கிலேற்று என்று ‘தேசபக்தி’ சாமியாடும் கூட்டத்திற்காகவே மேற்படி கோரினேன். திப்பு மற்றும் போதம்கின் தந்த அருந்ததிராய் கட்டுரை,கேள்விகளின் இணைப்பிற்கு நன்றி. இரண்டையும் உள்ளடக்கி தமிழில் விரிவான கட்டுரையின் தேவை இப்பொதும் இருக்கிறது.

 13. ///அதை மறைக்கவே இந்துத்வா கும்பல் அப்சல் குருவை அதிவிரைவாக தூக்கிலட வேண்டும் என்று துடிக்கிறது. காங்கிரசு அரசு அதற்கு ஒத்தூதுகிறது.///

  வினவு,

  நீங்களும் உங்க லாஜிக்கும். பல விசியங்களில் உங்கள் தர்க்கம் மற்றும் interpretation of facts மிக தவறு மற்றும் கேனத்தனமானது என்பதை இதில் இருந்தே அறிந்து கொள்ளாம்.

  அஃப்சல் குருவின் தூக்கு தண்டனையை பல ஆண்டுகள் நிறைவேற்றாமல், வேண்டுமென்றே தாமதம் செய்தது காங்கிரஸ் அரசு தான். 2004இல் இருந்து காங்கிரஸ் தான் ஆள்கிறது. அரசியல் காரணங்களினால், இவரின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற பயந்து இன்று வரை தாமதிக்கிறது. (ராஜிவ் கொலை வழக்கிலும் ஏறக்குறைய இதே தந்திரம் தான்). மிக எளிமையான, தெளிவான விசியமான இதை பற்றி மேற்படி ‘analyse’ செய்வது தான் உமது மார்க்சிய விஞ்சானபூர்வ முறை போல். ஏன் உங்க பருப்பு வேகுவதில்லை என்று புரிகிறது !!!

  • அதியமான் அவர்களே , மசால் போண்டாவில் பருப்பு வேகவில்லை என்றால் எண்ணெயை குத்தம் சொல்லலாமா ?… தீ எவ்வளவு இருக்குன்னு பாக்கனும். சரி அதை விடுங்க ..

   அப்சல் குரு வழக்கிலும் , பேரறிவாளன் வழக்கிலும் மக்களின் கொதி நிலையை மனதில் கொண்டு தான் இன்று வரை தூக்கு தள்ளிப் போடப்பட்டு வருகிறது.

   உங்களைப் போன்ற முதலாளிகளின் இலாபத்தைப் பெறுக்க மக்களின் தாலியறுக்க ஏதாவது கொடுமையான சட்டத்தைக் கொண்டு வரும் போது மக்களின் கவனத்தைத் திருப்பவே இது போன்ற வழக்கை இழுத்தடித்து வருகிறார்கள் இந்த அரசாங்கங்கள். இந்த பருப்[பை முதலில் வேக வைக்க முடிகிறதா என்று பார்த்து விட்ட்யு பதில் சொல்லவும்.

   • //அப்சல் குரு வழக்கிலும் , பேரறிவாளன் வழக்கிலும் மக்களின் கொதி நிலையை மனதில் கொண்டு தான் இன்று வரை தூக்கு தள்ளிப் போடப்பட்டு வருகிறது.///

    உண்மைதான். அப்ப வினவு ஏன் ///காங்கிரசு அரசு அதற்கு ஒத்தூதுகிறது.//// என்று காங்கிரஸை அப்படி குற்றம் சொல்கிறது. 2004இல் இருந்து காங்கிரஸ் ஆட்சி. இரண்டு அனுமானங்களில் ஏதாவது ஒன்று தானே சரியாக இருக்க முடியும் ? இதை தான் கேட்டேன். இதை புரிந்துக்காம சும்மா உளரல்.

    //உங்களைப் போன்ற முதலாளிகளின் இலாபத்தைப் பெறுக்க மக்களின் தாலியறுக்க ஏதாவது கொடுமையான சட்டத்தைக் கொண்டு வரும் போது மக்களின் கவனத்தைத் திருப்பவே இது போன்ற வழக்கை இழுத்தடித்து வருகிறார்கள் ///

    இல்லை. மரண தண்டனை முதலாளித்துவ நாடுகளில் மட்டும் தான் இருப்பது போல் பேசுகிறீர்கள். கம்யூனிச நாடுகளில் மிக அதிகமாக அளிக்கப்பட்டது. ஸ்டாலின் காலத்தில் ‘களை எடுப்பு’ என்ற பெயரில் பல ஆயிரம் பேருக்கு மரண தண்டனை விதிக்கப்ட்டது. நிக்கலாய் புக்காரின் போன்ற பெரும் தலைவர்களுக்கும் தான். மாவோவின் கலாச்சார புரட்சியின் போது சீனாவில் ம்ரண தண்டனைக்கு ஆளனவர் எண்ணிக்கை மிக மிக அதிகம். சும்மா விவரம் தெரியாம் பேசகூடாது. மேலும் : சர்வாதிகார அமைப்பு கொண்ட ‘பாட்டாளி வர்க சர்வாதிகார’ நாடுகளில் இங்கு போல் எதிர்கட்சி, எதிர்ப்பு, மாற்று கருத்து, மனித உரிமைகள் அமைப்பு (PUCL போன்றவை) எல்லாம் உங்க பா.வ.சர்வாதிகாரத்தில் அனுமதிக்கப் படாது. இது போன்ற விவாதங்கள், அப்பீல்கள், போராட்டங்கள் எல்லாம் சாத்தியமே இல்லை.

    அதனால், மரண தண்டனையை மார்க்சியர்கள் ‘எதிர்பது’ என்பது பெரும் முரண் நகை.
    வன்முறையில் நம்பிக்கை கொண்டவர்கள், வர்கப்போரில் ‘எதிர்களை’ கொல்வது தவறில்லை என்று கருதுபவர்கள், மரண தண்டனை பற்றி பேசாமல் இருப்பதே சரி. இல்லாவிட்டால் கேலி கூத்தாக இருக்கும்.

 14. ///அதை மறைக்கவே இந்துத்வா கும்பல் அப்சல் குருவை அதிவிரைவாக தூக்கிலட வேண்டும் என்று துடிக்கிறது. காங்கிரசு அரசு அதற்கு ஒத்தூதுகிறது.///

  வினவு,

  நீங்களும் உங்க லாஜிக்கும். பல விசியங்களில் உங்கள் தர்க்கம் மற்றும் interpretation of facts மிக தவறு மற்றும் கேனத்தனமானது என்பதை இதில் இருந்தே அறிந்து கொள்ளாம்.//

  100% correct

  • அடடே பையா …

   ஏற்கனவே பல பதிவுகள் ல தோழர்கள் கேட்ட் கேள்விக்கு பதில் சொல்ல முடியாம எஸ்கேப் ஆகிப் போனிங்க.. என்னைக்கு வந்தீங்க ?.

   சொல்லவே இல்ல .. ஹ்ம்ம்ம் …

   பரவாயில்ல இப்பொ கொஞ்சம் தேரிட்டீங்க போல .. அடுத்தவனுக்கு ஆமா சாமி போட்டுட்டு ஓடிடலாம்னு பிளானா ?..

 15. \\பாராளுமன்றத் தாக்குதல் நிச்சயமாக இந்திய உளவுத்துறையின் சதி நடவடிக்கை என்பதை பல மனித உரிமை அமைப்புகள் உரிய காரணங்களுடன் முன்வைத்திருக்கின்றனர்
  prove this first with facts\\

  நண்பர் அதியமானே…proof இருந்ததால் நாங்க ஏன்பா இங்க வெட்டியா எழுதிக்கிட்டு இருக்கோம்.. நாங்க அதை எப்பவோ சீனாவுக்கு வித்து துட்டு பாத்து இருக்கமாட்டோம… இது சும்மா படிக்குறவங்களுக்கு விறு விருப்பூட்ட எழுதப்பட்ட பதிவு பா…

  • ப்ரூஃப் இல்லாம இவுக தூக்கே கொடுப்பாங்களாம் .களுக்கு கட்டுரை படிக்கிறதுக்கு புரூஃப் வேணுமாம் ..

 16. ,,sankararaman tore sankarachari,ranjitha tore nithyanantha,aseemanand tore malegon and sathpathi burst,sanjivebhatt(i.p.s.gujarath) tore modi what else want to provoke these adiyaman like sons of modi.2156 unidentified bodies found out in north kashmir,2000muslims killed in kujrat,in poonj a mentally ill civilian was shot dead on the pre text of lashkar-e-tayyaba top commander…the cold blood murders r in one stage shouting vanthe matharam. closing their eyes, these adhiyamans ask for evidences.beware these mentally ill athiyamans r t most dangerous.dont afraid of tore their facemask as and there itself

  • அதெல்லாம் சீனாவின் சதின்னு சொல்ல ஒரு குரூப்பு பின்னாடியே வந்திட்டிருக்கு …

   கொஞ்சம் விலகியே நில்லுங்க .. லொல்லு லொல்லுன்னு வந்து பாயும்ங்க …

 17. \\ தாஜ்மகால் இருந்த இடத்தில் தான் இராமன் கக்கூஸ் போனான். முகர்ந்து பார்க்க அணி திரளுங்கள்.

  ஆட்டுப்புளுக்கையவே அகழ்ந்தாராயும் சர்வ வல்லமை கொண்ட சர்வேஸ்வரர்கள் என்ன தீர்வு சொல்லுறீக ?..

  மக்களின் தாலியறுக்க ஏதாவது கொடுமையான சட்டத்தைக்…

  போய் சத்தமில்லாம வாஸ்து சாஸ்திரமும் நியூமராலஜியும் பார்த்து சம்பாதிக்கிற வழிய பாருங்களேன்

  தேசத்தின் மனசாட்சி என்பது மனிதன், நரன், சீனு போன்ற காவிகளின் மனசாட்சி

  அமெரிக்காகாரனின் காலை நக்கலாமா ?.. நரேந்திர மோடி காலை நக்கலாமா

  –களுக்கு கட்டுரை படிக்கிறதுக்கு புரூஃப் வேணுமாம் ..\\

  உண்மையான தோழர்களுக்கு, விவாதங்களை விருப்பும் தோழர்களுக்கு,

  “மாட்டு ரவி” என்ற இந்த பாத்திரம், புதிதாக உருவாக்கப்பட்டு, இங்கு உள்ள ஆரோக்யமான விவாத களங்களில் புகுந்து அசிங்கமான வார்த்தைகளை விதைத்து யாரையோ திருப்தி படுத்த நினைப்பதை பார்க்கும்போது, இங்கு மாற்று கருத்தாளர்கள் அசிங்கத்தை கொண்டு அச்சுறுத்தி வெளியேற்றப்பட திட்டமிடலோ என தோன்றுகிறது…

  எங்களின் கருத்துக்கள் மீது அசிங்கம் அள்ளி வீசப்படும் இந்த முயற்சிக்கு பின்னால் பெயரிலே மாத்திரம் மிருகம் கொண்ட ஒரு தனிப்பாத்திரமா அல்லது ஒரு கிளை குழுவா என யோசிக்க தோன்றுகிறது…

  விளக்கம் தேவை…தயவு செய்து மாட்டு ரவி பாத்திரத்தின் மூலம் பதிலளிக்க வேண்டாம்…

 18. அப்சல் குரு 102 பக்கத்துக்கு அளித்த குற்றத்துக்கு கருணை காட்ட வேண்டும் என்ற மனு அப்துல் கலாம் என்ற முகமதிய குடிப்பேரரசுத்தலைவர் காலடிக்கு சென்ற பொது, அவர் ஏன் அதை கிடப்பில் போட்டார்… ஏன் மன்னித்து தண்டனை குறைப்போ அல்லது தண்டனை ரத்தோ செய்யவில்லை…

  இக்கொடும் செயலை மன்னித்தால், நபிக்கும் வெருக்கப்பட்டவனாவேன் என்ற அச்சம் தானே அது…

  • அவர் அச்சப்பட்டது பார்ப்பனீயத்தின் மனசாட்சிக்காக இருந்திருக்கலாம்

   • ஒரு முகமதியர் ஏன் பார்ப்பனியத்தின் மனசாட்சிக்கு அச்சப்பட அல்லது அடிபணிய வேண்டும்?

    • ஏன் சுதந்திர இந்திய அரசு அணுவிபத்து கட்டுபாடு மசோதாவை அமெரிக்காவிற்கு அடிபணிந்து சட்டமாக நிறைவேற்ற வேண்டும்?

     • இந்திய அரசு அனுவிபத்து கட்டுப்பாடு மசோதா நிறைவேற்றியாதல், நாம் யாரும் இங்கு வாழ்நாள் முழுதும் அழுதுகொண்டும் அரட்டிக்கொண்டுமிருக்கவில்லை…. அதனால் எந்த சாமான்யனும் போராட்டங்கள் நடத்திக்கொண்டிருக்கவில்லை, தண்டவாளத்தில் தலை வைக்கவில்லை, சட்டசபையில் தீர்மானங்கள் நிறைவேற்றிகொண்டிருக்கவில்லை…

      ஆனால் அம்முகமதியர் கிடப்பில் போட்ட கருணை மனுக்களால் நாடே கொந்தளிக்கிறதே.. அம்முகமதியர் ஆளும் பார்ப்பனிய அரசுக்கு அடிபணிந்து முதுகெலும்பற்று மன்னிக்க மறுத்தார் என்றால் அவரை கோழை என்கிறீரா? அல்லது குரானுக்கஞ்சி கொடியவனை மன்னிக்க மறுத்த மாமதியாளர் என்கிறீரா?

      • அநீதிக்கு எதிராக கலகம் செய்பவனைத்தான் வீரன் என கூறமுடியும்.

       முஸ்லீம் வெறுப்பையே தனது கொள்கையாக வைத்திருக்கும் ஒரு கூட்டம் சனாதிபதியாக எதனடிப்படையில் ஒரு முஸ்லீமையே தேர்வு செய்திருக்கும்?

       முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்காக தமிழக மக்கள் போராடியதை வேண்டுமானால் கொந்தளிப்பு என்ற வார்த்தையால் கூறலாம். அப்சல் குருவை தூக்கில் போடச் சொல்லும் அரைடவுசர்களின் கத்தலை கொந்தளிப்பு என்பது அந்த வார்த்தையயே அவமானப்படுத்துவதாக உள்ளது

       • \\கொந்தளிப்பு என்பது அந்த வார்த்தையயே அவமானப்படுத்துவதாக உள்ளது\\

        அப்சல் விடயத்திலும் கொந்தளிப்பு இருக்கிறது நண்பரே… அப்சல் குருவுக்காக இஸ்லாமிய மக்களிடம் ஒரு பெரும் கொந்தளிப்பு உண்டாகியுள்ளது… அது கஷ்மிர சட்டசபையில் தீர்மானமாக்கபடும் அளவு சென்றுள்ளது… பாராளுமன்றத்தில் கார் குண்டு வைத்தவனுக்கு சட்டமாமன்றம் காக்கும் அவலம் வரை சென்றுள்ளது…

        \\கோழை என்கிறீரா? அல்லது குரானுக்கஞ்சி கொடியவனை மன்னிக்க மறுத்த மாமதியாளர் என்கிறீரா\\

        மேதகு குடியரசுத்தலைவர் கலாம் அவர்கள் செய்தது சரியா தவறா… வீரமா அல்லது விவேகமா அல்லது உங்கள் பாஷையில் கோழைத்தனமா என்ற கேள்விக்கு விடை காண விழைகிறேன்…

         • கேள்விக்கு சம்பந்தமில்லா பதில்… இல்லை இல்லை பதில் என்ற பெயரிலே மீண்டும் ஒரு கேள்வி…

          கலாமை பற்றிய கேள்விக்கும் பதில் இல்லை, காஷ்மீரம் பற்றிய கேள்விக்கும் பதில் இல்லை, கொந்தளிப்பு அவமானமாக அவதானிக்கப்பட்டதேன் என்பதற்கும் பதில் இல்லை…

          மீண்டும் மீண்டும் குற்றம் நிரூபிக்கப்பட்டதா என்று குண்டுச்சட்டியில் குதிரை தான் ஒட்டுகிறீரே தவிர, எந்த நியாயமான கேள்விக்கும் பதில் இல்லை…

          குற்றம் நிரூபிக்கப்பட்டதா என்று கேட்கும் நீங்கள், குறைந்தபட்சம் நிரூபிப்பது என்று எதனை குறிப்பிடுகிறீர்கள் என கூறுங்களேன், அல்லது இதுவரை உங்கள் அறிவுக்கெட்டிய நிரூபிக்கப்பட்ட குற்றம் என்றும் நீங்கள் கருதும் ஏதாவது ஒரு கொடுஞ்செயலை (லோக்கல் திருட்டு, அடிதடி,கைகலப்பு போன்ற உங்கள் சுற்றுவட்டரங்களில் நடக்கும் உள்ளூர் குற்றங்களல்ல) கூறுங்களேன்… நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று அறிவோமே…

        • மோடியை சட்டம் இயற்ற அனுமதித்திருக்கும் அவலத்தைவிடவா காஷ்மீரின் தீர்மானம் இருந்துவிடப் போகிறது.

    • ஜின்னாவோட சேர்ந்து நாட்டை துண்டு போட்ட சரனாகதி சவர்காரின் போட்டோவை மட்டும் – பாராளுமன்றத்தில் திறந்து வைக்க பா.ஜ.க சொன்னபொழுது – ஏண்டா வந்தேறி சோமாறிங்களா..ஜின்னாவின் போட்டாவையும் சேர்த்துத்தான் தொறந்துவைப்பேன்ந்னு சொல்ல – துனிவில்லாத – அப்துல் கலாம்..அல்லக்கை

 19. (வினவு தோழர்கள் கவனத்திற்கு :- இது சம்மந்தம் இல்லாத பதிவு என்றாலும் இதனை முடிந்தால் தனியாக ஒரு பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் – நன்றி )
  தோழர்களே , பதிவர்களே, பார்வையாளர்களே ,,

  ஒரு அவசியமான மற்றும் அவசரமான செய்தி. இன்று காலையில் பாரத் இஞ்சினியரிங் கல்லுரியில் (சேலையூர் – சென்னை) கடைசி ஆண்டு மாணவர்கள் வேலை வாய்ப்பு ஏற்படுத்தித்தருவதாக கூறி ஏமாற்றிய நிர்வாகத்தை எதிர்த்து ஆர்ப்பட்டம் மற்றும் வகுப்பு பிறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதில் பெரும்பாலான வெளிமாநில மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களுடன் உணர்வுள்ள சில தமிழக மாணவர்களும் பங்கேற்றனர். குறைந்த பட்சம் 500 மாணவர்கள் பங்கேற்றனர். முதலில் ஆசிரியர்கள் மூலம் சமரசம் பேசிய நிர்வாகம், மாணவர்கள் அதற்கும் மட்டுப்படாததால், ஒரு சில புல்லுருவிகளை மாணவர்கள் மத்தியில் ஊடுறுவ விட்டு மாணவர்களில் முன்நின்றவர்களை வீடியோ படம் எடுத்தது. பின்னர் அதில் சில புல்லுறுவி மாணவர்களை விட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மற்ற மாணவர்களை மிரட்டும் பணியில் ஈடுபட்டது நிர்வாகம். போராட்ட மாணவர்கள் உடனடியாக கோபம் கொண்டு அந்த புல்லுறுவிகளை விரட்டியடித்தனர்.

  நிர்வாகம் எந்த ஊடகத்தையும் உள்ளே அனுமதிக்கவில்லை. சமீபத்தில் கிடைத்த செய்தி. ஆத்திரத்தின் உச்சத்தில் போராடிய மாணவர்களில் முன்நின்ற மாணவர்களை தனியாக அழைத்துப் போய் இரும்புக்குழாயால் அடித்து தாக்கியிருக்கிறது நிர்வாகம். இது குறித்து வெளியே செய்திகள் வராதவாறு அமுக்க முயற்சிக்கிறது.

  இவ்விசயத்தை பரவலாக்குமாறு தோழர்களை கேட்டுக் கொள்கிறோம். மாணவர்களின் நியாயமான போராட்டத்தை ஆதரிப்போம்..

  • சமீபத்திய செய்தி:

   தற்போது 150 மாணவர்களை சிறைபிடித்து கல்லூரி வளாகத்தில் அடைத்து வைத்திருக்கிறார்கள.

   வெளியே போலீஸ் கூட்டம் நிற்கிறது. உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க