privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காகடாஃபி கொலையோடு தீராது அமெரிக்க வெறி!

கடாஃபி கொலையோடு தீராது அமெரிக்க வெறி!

-

அவை மிகக் கலங்கலான வீடியோக் காட்சிகள். கடந்த வாரம் வெளியான அந்தக் காட்சிகளைக் கண்டு உலகெங்கும் மனிதாபிமானம் கொண்டவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். முதல் வீடியோவில் அந்த வயதான மனிதர் காரிலிருந்து தரதரவென்று இழுத்துச் செல்லப் படுகிறார். அவரது உடலெங்கும் இரத்தக்கறை படிந்துள்ளது. தலை கலைந்துள்ளது. அங்குமிங்கும் அலைபாயும் கண்களில் இன்னதென்று விளக்கவியலாத ஒரு உணர்ச்சி உறைந்து போயிருக்கிறது. வாயிலிருந்து ஏதோ புரியாத வார்த்தைகள் வெளிப்படுகிறது. அந்த மனிதரைக் கீழே தள்ளும் வெறி பிடித்த கூட்டம் கண்மண் தெரியாமல் அடித்துத் துவைக்கிறது. தொடர்ந்து சில துப்பாக்கி முழக்கங்கள் கேட்கிறது. வேதனை அலறலும் மரண ஓலமும் வெறிக்கூச்சலும் எழுகிறது. இந்தக் காட்சிகளைப் படம் பிடித்துக் கொண்டிருக்கும் கைபேசிக் காமெரா அங்குமிங்குமாய் அலைபாய்கிறது. சிறுது நேரத்திலேயே அனைத்தும் ஒரு முடிவுக்கு வருகிறது. தொடரும் காட்சிகளில் உயிரற்ற அந்த மனிதரின் பிணம் தரையோடு தேய்த்து இழுத்துச் செல்லப்படுவதைக் காட்டுகிறார்கள். சுற்றி நிற்கும் துப்பாக்கியேந்திய ‘வீரர்கள்’ வெற்றி முழக்கமிடுகிறார்கள்.

———————————————————

இது இரண்டாவது வீடியோக் காட்சி. ஒரு அடைசலான அறை. அதன் ஒரு மூலையில் இரத்தம் தோய்ந்த உள்ளாடைகளோடு இளைஞனொருவன் சுவரில் சாய்ந்து அமர்ந்துள்ளான். உறுதியான பார்வை. தன் உடலில் உண்டாயிருக்கும் காயங்களை அசிரத்தையாகப் பார்வையிடுகிறான்.  ‘உன் காயங்களுக்கு நாங்கள் மருந்து போடுவோம்’ என்று துப்பாக்கியேந்திய ‘வீரன்’ ஒருவன் உறுதியளிக்கிறான். ‘இது காயங்களல்ல. என் மார்பில் பதிக்கப்பட்ட பதக்கங்கள்’ என்கிறான் அந்த இளைஞன். மெல்லிய ஆனால் உறுதியான குரல். அவன் பார்வையில் அச்சமில்லை. தண்ணீர் குடிக்கிறான். தனது கடைசி சிகரெட்டை இரசித்துப் புகைக்கிறான். சில நொடிகளிலேயே சுட்டுக் கொல்லப்படுகிறான். அந்த முடிவு அவன் எதிர்பாராத ஒன்றல்ல.

அந்த வயதான மனிதர் முவாம்மர் அல் கடாஃபி. அந்த இளைஞன் கடாஃபின் மகன் முட்டெஸிம் அல் கடாஃபி. கடந்த 20-ம் தேதி லிபியாவின் முன்னாள் அதிபர் கடாஃபியும் அவரது மகன் முட்டெஸிம் அல் கடாஃபியும் சிர்ட்டே நகரக்கு வெளியே நேட்டோ கூலிப்படையினரால் கொல்லப்பட்டனர். இந்தக் கொலைகளோடு நேட்டோ படைகளின் ‘மனிதாபிமானம்’ ஒரு தற்காலிக முடிவுக்கு வந்துள்ளது. சிர்ட்டே தான் கடாஃபியின் பூர்வீகம். இதே மண்ணில் தான் எழுபதாண்டுகளுக்கு முன் கடாஃபி பிறந்திருந்தார்.

கடாஃபி கொலையோடு தீராது அமெரிக்க வெறி! -
கடாஃபி - மூட்டெஸிம்

அரபுலகில் நடந்த ‘வண்ணப் புரட்சிகளைத்’ தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் மேற்கத்திய நாடுகளின் ஆசீர்வாதத்துடன் லிபியாவின் பெங்காஸி பகுதியை நேட்டோ ஆதரவு பெற்ற கூலிப்படை ஒன்று கைபற்றுகிறது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நேட்டோ நாடுகளுக்கும், கத்தார் போன்ற கைக்கூலி நாடுகளுக்கும் லிபிய மக்களின் மேல் திடீர் ‘பாசம்’ பொத்துக் கொண்டது. இதனடிப்படையில், கடந்த மார்ச் மாதம் தொடங்கி நேட்டோ படைகள் தரைவழியே முன்னேறி வந்த கூலிப்படைக்கு ஆதரவாக வான்வழித் தாக்குதல் தொடுத்து வந்தது.

இந்த விமானத் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான டன்கள் வெடி பொருட்களை லிபியர்கள் மேல் வீசியிருக்கிறார்கள். லிபியாவின் மேலான கூட்டுப்படைகளின் தாக்குதல்கள் பிப்ரவரி 17-ம் தேதி ஆரம்பித்தது. தாக்குதல் துவங்கிய இருபத்து நான்கு மணி நேரத்துக்குள்ளாக B-52 ரக போர் விமானம் மூலம் 45 டன் வெடி குண்டுகளை வீசியுள்ளனர். மத்தியத் தரைக்கடலில் மிதந்த நாசகாரிக் கப்பல்களில் இருந்து சிறிய ரக அணு ஏவுகணைகளை (Uranium Depleted missiles) வீசியுள்ளனர்.

ஆயிரக்கணக்கான அப்பாவி லிபியர்களின் பிணத்தின் மேல் நேட்டோ நடத்திய ‘மனிதாபிமான’ வெற்றிப் பேரணியின் விளைவாய் ஆகஸ்ட் 23-ம் தேதி லிபிய தலைநகர் திரிபோலி கூலிப்பட்டாளத்தின் கையில் விழுகிறது. அதைத் தொடர்ந்து தனது ஆதரவுப் படைகளோடு திரிபோலியிலிருந்து பின்வாங்கும் கடாஃபி, தனது சொந்த ஊரான சிர்டே பகுதிக்குத் தப்பிச் செல்கிறார். இதற்கிடையே கடந்த ஒரு மாத காலமாக சிர்டே நகரத்தை தரை மார்க்கமாக சுற்றி வளைக்கும் கூலிப்படை, அதைக் கைப்பற்றவும் கடாஃபியைத் தீர்த்துக் கட்டவும் கடும் பிரயத்தனங்கள் செய்து வந்தது. இதற்கு ஆதரவாக நேட்டோ படைகள் வான் மார்க்கமாக தாக்குதல் தொடுத்து வந்தது. பல்லாயிரம் அப்பாவி மக்கள் இந்தத் தாக்குதல்களில் உயிரிழந்தனர்.

கடாஃபி கொல்லப்பட வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக இருந்தது. கடந்த 18-ம் தேதி த்ரிபோலிக்கு ஒரு இரகசிய பயணம் மேற்கொண்ட ஹிலாரி கிளிண்டன், அங்கே கூலிப்படையின் ஆதரவாளர்கள் மத்தியில் ‘கூடிய விரையில் கடாஃபி கொல்லப்படுவார்’ என்று உறுதியளித்துள்ளார். கடாஃபியைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டுமென்பது அவர்கள் நோக்கமாக இல்லை. ஒருவேளை அப்படி நடந்திருந்தால், அமெரிக்காவோடு கடந்த பத்தாண்டுகளாக கடாஃபி கொண்டிருந்த நெருக்கமும், லிபிய மண்ணில் அமெரிக்கா நடத்தி வந்த இரகசிய சித்திரவதை மைய்யங்கள், கடாஃபியோடு போட்டுக் கொண்டி இரகசிய இராணுவ ஒப்பந்தங்கள் போன்றவை பற்றி அவர் வாய் திறக்கும் சாத்தியம் இருந்தது. அப்படியொன்று நடந்து, தனது மனிதாபிமான இமேஜுக்கு இழுக்கு நேர்வதை அமெரிக்கா விரும்பவில்லை.

இந்நிலையில், கடந்த இருபதாம் தேதி கடாஃபி தனது நெருக்கமான ஆதரவாளர்களோடு சிர்ட்டே நகரை விட்டு தப்பிச் செல்வதை அறிந்த நேட்டோ, தனது போர் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி அவர் நகர முடியாமல் செய்கிறது. இந்தத் தகவலை தரையிலிருந்து இயங்கும் கூலிப்படைக்குத் தெரிவித்து, கடாஃபியும் அவரது மகனும் கொல்லப்படுவதை உறுதி செய்து கொள்கிறது.

மரணம் நெருங்கி வந்த அந்த இறுதி நிமிடங்களில் கடாஃபியின் கண்களில் தெரிந்த அந்த உணர்ச்சியின் பொருளென்ன? சகல சௌபாக்கியங்களுடனும் வசதிகளுடனும் சுகித்திருந்த அந்த இளைஞனை எள் அளவும் மரணபயமின்றி அவ்வாறு பேச வைத்த உணர்ச்சி என்னவாக இருக்கும்? அது என்னவாயிருக்குமென்று இவர்களின் மரணச் செய்தி கேட்டதும் ‘வாவ்’ என்று குதூகலித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடிய ஹிலாரி கிளிண்டனுக்குத் தெரியாதிருக்கலாம். ஆனால், அவரது சொந்த நாட்டில் ஒவ்வொரு நகரமாய் ஆக்கிரமித்துச் சூழ்ந்து வரும் 99% அமெரிக்கர்களுக்கு அது சர்வ நிச்சயமாய்த் தெரிந்திருக்கும்.

ஒபாமாவுடன் கடாஃபி
ஒபாமாவுடன் கடாஃபி

முவாம்மர் அல் கடாஃபி ஒரு முழுமையான ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி என்று சொல்லி விட முடியாது. அறுபதுகளின் இறுதியில் உலகெங்கும் உண்டான ஏகாதிபத்திய எதிர்ப்பு அலையின் லிபிய பிரதிநிதி தான் முவாம்மர் அல் கடாஃபி. 1969-ல் திடீர் புரட்சி மூலம் இத்ரீஸின் மன்னராட்சிக்கு முடிவுகட்டி அதிகாரத்திற்கு வரும் கடாஃபி, அதற்கு முன் லிபிய மண்ணில் மேற்கத்திய நாடுகள் நிறுவியிருந்த எண்ணை நிறுவனங்களை அரசுடமையாக்கினார். அமெரிக்காவுக்கு லிபியாவில் இருந்த வீலஸ் விமான தளத்தை இழுத்து மூடினார். அது தான் அன்றைய தேதியில் ஆப்ரிக்க கண்டத்திலேயே அமெரிக்காவுக்கு இருந்த மிகப் பெரிய இராணுவ செயல்தளம். ஆனால், சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சிக்குப் பின் கடாஃபி இதற்கெல்லாம் நேரெதிரான நிலையை எடுக்கிறார்.

தொண்ணூறுகளின் துவக்கத்தில் புதிய பொருளாதாரக் கொள்கைகளை அமுல்படுத்தியதாகட்டும், இந்த நூற்றாண்டின் துவக்க பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் ‘தீவிரவாதத்திற்கு எதிரான போருக்கு’ வால் பிடித்ததாகட்டும், ஐரோப்பிய அமெரிக்க எண்ணை நிறுவனங்களுடன் எண்ணை ஒப்பந்தங்கள், இராணுவ ஒப்பந்தங்களை போட்டதாகட்டும் – அவர் ஏகாதிபத்தியங்கள் மனங்கோணாதவாறு நடந்து கொள்வதில் எச்சரிக்கையாகவே இருந்தார். இப்படி ஒருபக்கத்தில் மக்கள் விரோத பொருளாதார நடவடிக்கைகள் எடுத்தும், தனது குடும்ப சர்வாதிகார ஆதிக்கத்தை உறுதிப்படுத்தியும் மிருக பலத்துடன் லிபிய மக்களை அடக்கியாண்ட அதே காடாஃபி தான் தனது மக்களுக்களின் வாழ்க்கைத் தரத்தை குறைந்தபட்ச அளவுக்காவது உறுதிப் படுத்தியிருந்தார்.

லிபியாவை ஆப்ரிக்காவின் ஸ்விட்சர்லாந்து என்பார்கள். இந்தப் புதிய நூற்றாண்டுக்குள் லிபியா நுழைந்த போது அது ஒப்பீட்டளவில் பிற ஆப்ரிக்க நாடுகளை விட சிறப்பான மனித வளக் குறியீடுகளைக் கொண்டிருந்ததை மேற்கத்திய நாடுகளே மறுப்பதில்லை. எண்ணை வர்த்தகத்தை கடாஃபி குடும்பம் நேரிடையாகக் கட்டுப்படுத்தி அடித்த கொள்ளையில் ஊதாரித்தனமான சுகபோகத்தில் திளைத்திருந்த போதிலும் அதன் லாபத்தில் ஒரு பகுதியை மக்கள் நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்தினார். மேற்கத்திய நாடுகளின் கார்ப்பொரேட் கம்பெனிகளோடு எண்ணை துரப்பண ஒப்பந்தங்களைப் போட்டிருந்தாலும், எண்ணை வர்த்தகத்தை பன்னாட்டுக் கம்பெனிகளிடம் முழுமையாக ஒப்படைக்காமலே வைத்திருந்தார்.

________________________________________________________

இப்போது லிபியா ‘விடுவிக்கப்பட்டிருக்கும்’ நிலையில், அதன் எண்ணை வளங்களும் தங்கம், யுரேனியம் உள்ளிட்ட அள்ள அள்ளக் குறையாத இயற்கை வளங்களும் முழுமையாக பன்னாட்டுக் கம்பெனிகளின் கரங்களில் வந்து விழுந்துள்ளது. ஈராக்கில் விட்டதை லிபியாவில் பிடிக்க அமெரிக்காவுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது. மேலும், லிபிய அரசாங்கத்தோடு எண்ணை வர்த்தக ஒப்பந்தங்கள் செய்திருந்த சீனா, ரசியா, பிரேஸில் போன்ற நாடுகளையும் போட்டியிலிருந்து விலக்கியாகி விட்டது. கலகக்காரர்கள் பெங்காஸி பகுதியைக் கட்டுப்படுத்தியிருந்த ஆரம்ப காலத்திலேயே அவர்களின் அதிகாரத்தை அங்கீகரிக்கும் மேற்குலக நாடுகள், அவர்களோடு எண்ணை வர்த்தகம் பற்றிய பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்து விட்டனர். மேலும், சீனாவோடும் ரசியாவோடும் முந்தைய லிபிய அரசாங்கம் போட்டிருக்கும் ஒப்பந்தங்களை மறு பரிசீலனை செய்யப் போவதாகவும் அறிவித்திருந்தனர்.

ஆப்ரிக்க கண்டம் முழுவதையும் தனது சுரண்டலுக்கான பின்னிலமாக வைத்திருப்பது, இதில் போட்டிக்கு வரும் சீனா ரசியா போன்ற நாடுகளை ஓரங்கட்டுவது போன்ற ஏகாதிபத்திய நலனில் இருந்து பிறந்தது தான் அமெரிக்காவின் ‘மனிதாபிமான’த்திற்கும்’ ஜனநாயகத்தை நிலை நாட்ட அவர்களுக்கு புதிதாய் பிறந்திருக்கும் இந்த அக்கறைக்கும் அடிப்படையான காரணம். ஏற்கனவே அரபுலக மன்னர்களெல்லாம் அமெரிக்கப் பாத நக்கிகளாக இருக்கும் நிலையில், எண்ணை வளத்தைப் பொறுத்தவரையில் அந்தப் பிராந்தியத்தில் இரண்டாம் இடத்திலிருக்கும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளையும் வளைத்துக் கொண்டால், உலக எண்ணை ரிசர்வில் 60 சதவீத அளவுக்கு அமெரிக்காவின் பிடியில் சிக்கும்.

தற்போது ஏகாதியபத்திய உலக ஒழுங்கைக் கவ்விப் பிடித்திருக்கும் பொருளாதாரப் பெருமந்தத்திற்கான தீர்வை மூன்றாம் உலக நாடுகளின் வளங்களை மேலும் மேலும் ஒட்டச் சுரண்டுவது, இதற்கான தடைகளைப் போர்களின் மூலம் அகற்றுவது என்கிற பாதையில் மேற்குலகம் சென்று கொண்டிருக்கிறது. ஆனால், ஏற்கனவே புழுத்து நாறும் கட்டமைப்புச் சீர்கேடுகள் இந்த மீள முடியாத போர்களால் ஒரு முடிவுக்கு வந்து விடப் போவதில்லை என்பதையே அமெரிக்கா தொடங்கி மேற்கு ஐரோப்பிய நாடுகள் வரையில் பற்றிப் பரவும் ‘ஆக்கிரமிப்புப்’ போராட்டங்கள் காட்டுகின்றன.

உலகை ஆக்கிரமிக்கக் கிளம்பியிருக்கும் அமெரிக்காவின் காலடியிலேயே அதன் ஆன்மாவை ஆக்கிரமிக்கும் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டே வருகிறது. அமெரிக்கத் தெருக்களில் திரண்டிருக்கும் 99 சதவீத மக்களின் முழக்கங்களில் அடங்கியிருக்கிறது லிபிய மக்களின் ஒப்பாரிச் சத்தம். உலகை மேலாதிக்கம் செய்யது துடிக்கும் அமெரிக்காவின் கனவுகளின் பொருளாதார அடித்தளத்தின் மீது அதன் சொந்த மக்களே தொடுத்திருக்கும் இந்தப் போர் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு போர்களின் வெற்றியை கொண்டாட முடியாதபடி வைத்திருக்கிறது. தற்போது வலுவிழந்து மரணக் குழியின் விளிம்பில் தள்ளாடிக் கொண்டிருக்கும் ஏகாதிபத்திய கட்டமைப்பை குழியில் தள்ளி மண்ணை மூடி நிரப்ப வேண்டிய கடமை உலக மக்கள் அனைவருக்கும் உள்ளது. வாழ்க்கையிழந்த அமெரிக்கர்கள் ஏகாதிபத்திய அழிவின் அறிமுக உரையை எழுதத் துவங்கி விட்டனர் – இதன் முடிவுரையை எழுதும் கடமை நமக்கிருக்கிறது.

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

  1. லிபியா மக்கள் தான் கடாஃபியை கொன்றார்கள். அத்தனை வெறுப்பு. கடாஃபியால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவிகள் பற்றி எழுத யாரும் இல்லையே. கடாஃபியை கொலை செய்யாமல், உயிரோடு பிடித்து, பின் நீதி விசாரணை நடத்தி, பின் மரண தண்டனை விதிக்க லிபியர்கள் முனைந்திருந்தால் (சதாம் ஹுசைன் போல்), ‘ஏகாதிபத்திய’ நாடுகள் எதிர்த்திருக்க போவதில்லையே ?

    ’ஏகாதிபத்தியம்’ என்ற சொல்லை இஸ்டத்துக்கு இப்ப பயன்படுத்துவது பொருத்தமற்றது. எண்ணை வளங்களை மேற்கத்திய நாடுகள் ‘கொள்ளை’ அடிப்பது சாத்தியமல்ல. இன்றைய ஈராக்கில், அப்படி ‘கொள்ளை’ அடிக்க முடியவில்லையே. போருக்கு முன்பு போல், இன்றும் அதே நிறுவனங்கள் ஈராக் மற்றும் லிபிய எண்ணையை சந்தை விலையில் தான் வாங்குகின்றனர்.

    எண்ணையை மிக அதிக விலைக்கு யார் கேட்கிறார்களோ, அவர்களுக்கு தான் விற்பார்கள். இது அடிப்படை சந்தையில் அம்சம். அமெரிகாவை கடுமையாக ‘எதிர்க்கும்’ வெனிசுலாவின் சாவோஸ், அதே அமெரிக்காவிற்க்கு தான் வெனிசுலாவின் எண்ணையை விற்க்கிறார். காரணம் சந்தை பொருளாதாரத்தின் மீற முடியாத விதிமுறைகள் ! லிபியாவிலும் தான். அங்கு உள்ள எண்ணை வளங்களை ‘ஆக்கிரமிப்பது’ என்பது முடியாது. ஏற்கெனவே உள்ள நிறுவனங்கள் தொடரும்.
    ’தேசியமயமாக்கினால்’ , பின்பு இந்தியாவில் நடந்தது போல் ஊழல் சாம்ராஜியம் தான் உருவாகும். 40கள் மெக்சிக்கோவில் இது தான் நடந்தது.

    Mexican ‘socialists’ nationalised the mexican oil companies and threw out American and other companies. the slogan was ‘the oil is ours’ ; now this is the manra of the corrupt govt staff who man those oil companies : ‘the oil is ours’ !! :)))

  2. கூலி படை என்று நீங்கள் தான் சொல்கிறீர்கள். வெற்று வார்த்தை அவதூறு இது. வினவு குழுவை கூட ‘கூலிப்படை’ என்று மிக சுலபமாக சொல்ல ஒருவரால் முடியும். உண்மையாகிவிடுமா ? சர்வாதிகாரத்தை எதிர்ப்பவர்களை ‘கூலிப்படை’ என்று சொன்னால், அது உண்மையாகிவிடுமா என்ன ? யார் கூலிப்படைகள், யார் அறிவுகெட்ட மூடர்கள் என்று எங்களுக்கும் தெரியும். இது போல் பேசித்தான், இன்று வரை கம்யூனிஸ்டுகள் (எல்லா வகையினரும் தான்) உருப்படாமல் திரிகின்றனர்.

    • இந்திய இராணுவத்தை வெளியேறச் சொல்லியும், இந்திய அரசை எதிர்த்தும் போராடும் காஷ்மீரிய, வடகிழக்கு மாநில மக்களுக்காக நேட்டொ படைகள் வருமா!

      • you are an Idiot, India is not under dictator’s rule, people elected govt is running. unlike Saddam/Musharaf/Gaddafi ruling right as dictators … who were in army/military. get general knowledge first.

        • மணி சார் ,நீங்க சொல்றது சரிதான் ,ஆனால் காஸ்மிரை இணைக்கும் பொழுது 25 ஆண்டுகளுக்கு பிறகு அந்த மக்களிடையே வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று உறுதிமொழி கூறப்பட்டதாக கூறுகிறார்களே அதைப் பற்றி சொல்லுங்களேன்,
          மற்றபடி என்ன ஜனநாயக நாடாக இருந்தாலும் பெட்ரோல் வடிந்தால் தான் நேடோ வரும்.

      • அப்டியே பலுசிஸ்தானுக்கும், க்சின்ஜியாங் ப்ரொவின்ஸுக்கும் சேர்த்தே வருமான்னு தெரியலே. ஏன் சொல்றேன்னா நேட்டோவுக்கு பாகிஸ்தான் கூட்டாளி, சீனா பங்காளி. இந்தியனுங்கதான் கோமாளி. ஜமாய்க்கட்டும்.

  3. Boss don’t relate all these stupid things with US. If Gadfafi loved by Libiyans he would have been live. But he killed by them self. He ruled them like HITLOR. Why don’t u say about that. Look at the celebrations after he died. I spoke to few Libiyans here in UAE. They all happy about his ending. While you are touching some international issues, be cleared and verify with people and write. Don’t write what ever you think alone.Who ever ruling, if they live only for their people, they will not treated like Gadafi. Example Juan Carlos Spain King.

  4. நல்ல சொன்னிங்க அதியமான், வினவு கூட்டம்தான் உலகத்தில் யோக்கியமானவர்கள், மற்றவர்கள் எல்லாம் அயோக்கியர்கள், நெனப்புதான் பொழப்ப கெடுக்குது

  5. //உலகை ஆக்கிரமிக்கக் கிளம்பியிருக்கும் அமெரிக்காவின் காலடியிலேயே அதன் ஆன்மாவை ஆக்கிரமிக்கும் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டே வருகிறது. அமெரிக்கத் தெருக்களில் திரண்டிருக்கும் 99 சதவீத மக்களின் முழக்கங்களில் அடங்கியிருக்கிறது லிபிய மக்களின் ஒப்பாரிச் சத்தம்.// அதியமான் கண்களுக்கு இவை தெரியவில்லையோ?

    • //அமெரிக்கத் தெருக்களில் திரண்டிருக்கும் 99 சதவீத மக்களின் முழக்கங்களில் அடங்கியிருக்கிறது ///

      99 சதவீத மக்கள் திரண்டிருந்தால், இன்னேறம் அங்கு ‘புரட்சி’ உருவாகியிருக்கும். ஆனால் மிக மிக குறைவான சதம் தான் அது. நோக்கங்கள் மற்றும் வழிமுறைகளில் தெளிவு இல்லாத கூட்டம் அது. மேலும் லிபிய மக்களை தான் அவர்கள் ஆதரிக்கின்றனர். கடாஃபியை அல்ல. பார்க்கவும் :

      http://swaminomics.org/?p=2071
      Tea party? The real party is for the retirees

      Indians were bewildered by last year’s rise in the US of the Tea Party, middle class protestors against high taxes, budget deficits and Big Government. Indians more easily understand the Occupy Wall Street (OWS) movement with its class war rhetoric— the bottom 99% against the richest 1%.

      Four years after the sub-prime mortgage crisis sparked the Great Recession, western economies remain in trouble, with flagging GDP and high unemployment. Trillions spent in economic stimuli have created gargantuan government debts without reviving rapid growth. The only surprising thing about aleft wing protest like OWS is that it took so long to come…..

  6. ஈராக்கில் விட்டதை லிபியாவில் பிடிக்க அமெரிக்காவுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது.
    அரபு பகுதிககளை வளைத்துவிட்டபிறகு அடுத்து ஆசியாவா?

  7. காடாபியின் முடிவு சர்வாதிகாரிகளுக்கு ஓர் எச்செரிக்கை என்கிறார் ஒபாமா. இவர்கள் அமெரிக்காவுடன் குலாவிக்கொண்டு மக்களை கொன்றபோதெல்லாம் சர்வாதிகாரிகளாக அமெரிக்காவிற்கு தெரிவதில்லை. ஆனால், அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களை பகைத்துக் கொண்ட உடனேயே சர்வாதிகாரிகளாகிவிடுகிறார்கள். இன்று வரையிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப் படாமல் சவூதியை ஆளும் அப்துல்லா குடும்பத்தை பாதுகாத்து வருவதும் இதே அமெரிக்காதான். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், கேவலமான முறையில் கொல்லப்பட்ட கடாபியை பார்த்து குதூகலிக்கும் இந்த லிபட்டேரியன்கள்தான் பல நூறு ஊடகவியலார்களின் முன்னிலையில் விசாரணை நடத்தி மக்கள் விரோதிகளை தண்டித்த தோழர். ஸ்டாலினின் ஆட்சியை சர்வாதிகாரம் என்பதுதான்.

    • //கேவலமான முறையில் கொல்லப்பட்ட கடாபியை பார்த்து குதூகலிக்கும் இந்த லிபட்டேரியன்கள்தான் பல நூறு ஊடகவியலார்களின் முன்னிலையில் விசாரணை நடத்தி மக்கள் விரோதிகளை தண்டித்த தோழர். ஸ்டாலினின் ஆட்சியை சர்வாதிகாரம் என்பதுதான்.///

      குதுக்கலிக்கவெல்லாம் இல்லை. அவரின் மரணம் கொடுமையானது தான். ஆனால் அதை செய்தவர்கள் சாதாரண மக்கள் என்பதை தான் புரிந்து கொள்ள வேண்டும்,

      விசாரணை நடத்தி மக்கள் விரோதிகளை தண்டித்த முறை பற்றி பெரும் அறியாமையில் இருக்கிறீர்கள். KGB torture in extracting ‘confessions’, combined with the ever present threat of punishing the family members of the ‘accused’ by deporting them to Siberian gulags : இவை பற்றி தெரியாதவர்கள் தான் ஸ்டாலினை கண்மூடித்தனமாக ஆதரிப்பவர்கள். நீங்க 30களில் சோவியத் ரஸ்ஸியாவில் வாழ்ந்திருக்க வேண்டும். அப்ப தான் புரியும்.

      எண்ணை எடுப்பது நின்று போனால், எண்ணை தட்டுபாடு மற்றும் விலை ஏற்றம் உருவாகும். இங்கும் பெட்ரோல் விலை பல மடங்கு உயரும். இங்கு முழங்குபவர்கள் எல்லாம் அப்ப ஆய், ஊய் என்று கத்துவீர்கள். எண்ணை விலை மற்றும் சப்பளை இயல்பாக, ஒழுங்காக நடப்பதே உலகத்துக்கு நல்லது. 1973இல் OPEC எண்ணை விலையை நான்கு மடங்கு ஏற்றியது பற்றி படித்து பார்க்கவும். அது போல் மீண்டும் நிகழ்ந்தால் தான் புரியும்.

      1999இல் செர்பியா நாடு, போஸ்னியா மீது கடும் தாக்குதலை நிகழ்த்தி, பெரும் இன படுகொலைகளை நிகழ்த்தியது. கொல்ல்பட்டவர்கள் போஸ்னிய, கோஸாவா பகுதி முஸ்லிம் மக்கள். கொன்றவர்கள் செர்பிய நாட்டு கிருஸ்துவர்கள். அன்று நேட்டோ மட்டும் கடும் வான்வெளி தாக்குதல் நடத்தி, இதை தடுத்திருக்காவிட்டால், பல லச்சம போஸ்னிய முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டிருப்பார்கள். போஸ்னியாவில் எண்ணை வளம் எல்லாம் இல்லை. எனவே நேட்டோ தாக்குதலை எண்ணைக்காக, ஏகாதிபத்திய சதி என்று கருதுப்வர்கள், முழு வரலாறையும் பார்க்க வேண்டும்,
      செர்பியாவை அன்று ரஸ்ஸிய கண்மூடித்தனமாக ஆதரித்தது.

      • //லிபியா மக்கள் தான் கடாஃபியை கொன்றார்கள்.//

        நீங்கள் மட்டும் லிபியாவில் இருந்துகொண்டுதான் எழுதுகிறீர்களா!

  8. i really do not understand, many people here in India enjoying the freedom and religion tolerance unlike arabs, but they are up against India again. what a cruel world is this? mosques in india is larger than arab world mosques. population in Indian islam world is more than arab world’s population. but still they are up against india. I really do not understand what basis they do? 5th century religion trying to dominate all over the world? i am sure my comment will not be published

    • மணி ,இங்கே இந்தியாவுக்கு எதிராக எங்கே முஸ்லிம்கள் எழுதியுள்ளார்கள் ?

  9. கடாஃபி, மற்றும் முட்டாசிம்மின் கடைசி நாட்களை ‘சே குவேரா’ ரேஞ்சுக்கு விவரித்திருப்பதாகத் தோன்றுகிறது. சுகவாழ்கை வாழ்ந்த சர்வாதிகாரிகள் தானே, அப்பாவி மக்களை சுட்டவர்கள் தானே, அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பிலும் சமரசம் செய்த பிறகு அவர்களுக்கு தியாக பிம்பம் என் கொடுத்தீர்கள்?

    இல்லை நான் தான் கட்டுரையை தவறாக புரிந்து கொண்டிருக்கிறேனா?

  10. என்னதான் கடாபியை விட மகிந்தா ராஜபக்ஷே பலமடங்கு குற்ற்ங்கள் இழைத்திருந்தாலும் அமெரிக்கா லிபியாவை போல இலைங்கையில் அவசரகதியில் ஐ.நாவிடம் அனுமதி(?) வாங்கி தனது நேட்டோ படைகளை அனுப்பி ராஜ்பக்ஷேவை தண்டிக்க குறைந்த்து 10 லட்சம் ஆண்டுகள் ஆகும். அதென்ன 10 லட்சம் ஆண்டுகள் கணக்கு? கொல்லப் பட்ட லட்சக் கணக்கான ஈழத்தமிழன் மக்கி,பெட்ரோலாக மாற அத்தனை வருடங்களாவது ஆகும் அல்லவா?

  11. //தற்போது ஏகாதியபத்திய உலக ஒழுங்கைக் கவ்விப் பிடித்திருக்கும் பொருளாதாரப் பெருமந்தத்திற்கான தீர்வை மூன்றாம் உலக நாடுகளின் வளங்களை மேலும் மேலும் ஒட்டச் சுரண்டுவது, இதற்கான தடைகளைப் போர்களின் மூலம் அகற்றுவது என்கிற பாதையில் மேற்குலகம் சென்று கொண்டிருக்கிறது. ///

    :))). இப்படி ‘புரிந்து’ கொண்டிருப்பதால் தான் பல முக்கிய விசியங்களில், மார்கசியர்களால் சரியான assesmentஅய் செய்ய முடியாமல், சொதுப்பிகிறார்கள். பொருதார பெரும் மந்தத்திற்கான காரணிகளும், தீர்வுகளும் மேலே சொன்னதில் இல்லை. அதை பற்றி புரிந்து கொள்ள, விவாதிக்க திறந்த மனமும், நிஜமான ஆர்வமும் தேவை. இங்கு சாத்தியம் இல்லை.

    போர்கள் உண்மையில் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்துகின்றன என்பதை அமெரிக்கர்கள் இப்போது ஓரளவு ‘புரிந்து’ கொண்டு விட்டனர். ஈராக், ஆஃப்கானிஸ்தானில் இருந்து வெளியேறவே துடிக்கின்றனர். எண்ணை வளங்களை அங்கு ‘கைப்பற்ற’ தான் அப்போர்கள் என்பது தவறான கோண்ம் என்றே இன்று தெரிகிறது. இன்னும் சிக்கலான காரணிகள் தான் இருந்தன். மேலும் லிபியா விசியத்தில் அமெரிக்க ஒதுங்கி கொண்டது. பிரட்டனும், ஃப்ரான்ஸும் தான் மிகவும் தீர்க்கமாக, கடைசி வரை செயல்பட்டன எனப்தை உணர வேண்டும். ஃப்ரான்ஸ் பல விசியங்களில் அமெரிக்க ‘ஏகாதிபத்தியதை’ எதிர்க்கும் நாடு. முக்கியமாக ஈராக் விசியத்தில். ஆனால் லிபியாவில் நடந்த போர் குற்றங்களை, கொடுமைகளை (கடாஃபி செய்ததை) தடுக்கவே மிக முனைப்பாக செயல்பட்டது. அதை சும்மா பொத்தாம் பொதுவாக, ஏகாதிபத்திய கூலிப்படை, etc என்றெல்லாம் சொல்லவது வேஸ்ட். கடாஃபியின் ராணுவம் நடத்திய கொடும் தாக்குதலில் சிக்கியிருந்தால், உலகம் வேறு மாதிரி தெரியும். வேறு எங்கோ சுகமாக உக்கந்துகிட்டு, இணையத்தில், ‘ஏகாதிபத்தியம்’ பற்றி கதைப்பது சுலபம் தான்..

  12. //பிரட்டனும், ஃப்ரான்ஸும் தான் மிகவும் தீர்க்கமாக, கடைசி வரை செயல்பட்டன எனப்தை உணர வேண்டும். ஃப்ரான்ஸ் பல விசியங்களில் அமெரிக்க ‘ஏகாதிபத்தியதை’ எதிர்க்கும் நாடு. முக்கியமாக ஈராக் விசியத்தில். ஆனால் லிபியாவில் நடந்த போர் குற்றங்களை, கொடுமைகளை (கடாஃபி செய்ததை) தடுக்கவே மிக முனைப்பாக செயல்பட்டது. அதை சும்மா பொத்தாம் பொதுவாக, ஏகாதிபத்திய கூலிப்படை, எட்ச் என்றெல்லாம் சொல்லவது வேஸ்ட்.//ஆமாம், சண்டை முடிவதற்குள்ளாகவே, பிரன்சு நாடு எண்ணை ஒப்பந்தங்களை பெறுவது எந்த ஏகாதிபத்தியத்தை எதிர்க்க ?

  13. அதியமான் சார்,

    //ஆனால் லிபியாவில் நடந்த போர் குற்றங்களை, கொடுமைகளை (கடாஃபி செய்ததை) தடுக்கவே மிக முனைப்பாக செயல்பட்டது. //

    கொலைவெறியன் ராஜபக்சே செய்த போர் குற்றங்களுக்கு ஏன் நேட்டோ படைகள் அங்கு வரவில்லை? பிரிட்டனின் தனியார் டிவிதானே இலங்கை கொலைக்கள காட்சிகளை ஒளிபரப்பியது. ஏன் பிரிட்டனும் பிரான்ஸும் அங்கு வரிந்து கட்டிக்கொண்டு வரவில்லை. படுகொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இலங்கையை விட லிபியாவில் அதிகமோ? பிரையாரிட்டி அடிப்படையில் முதலில் கடாஃபியை தூக்கினர்.. அடுத்து ராஜபக்ஷேதான் என்கிறீர்களா?

    • //கொலைவெறியன் ராஜபக்சே செய்த போர் குற்றங்களுக்கு ஏன் நேட்டோ படைகள் அங்கு வரவில்லை? பிரிட்டனின் தனியார் டிவிதானே இலங்கை கொலைக்கள காட்சிகளை ஒளிபரப்பியது. ஏன் பிரிட்டனும் பிரான்ஸும் அங்கு வரிந்து கட்டிக்கொண்டு வரவில்லை///

      ஆம் வரவில்லை. ஆப்பிரிக்காவில் இன்றும் சூடானில், சொமாலியாவில் இதை விட பெரும் படுகொலைகள், இன அழிப்புகள், உள் நாட்டு போர்கள் என்ற பெயரில் நடந்துகொண்டு இருக்கின்றன. லச்சக்கணக்கில் கொலை, பெரும் பட்டினி சாவுகள் நடக்கின்றன. நாம் பெரிசா அலட்டிக்கிரதில்லை. தெரிந்து கொள்ளவும் பிரயத்தனப்படுவதில்லை. அதை பற்றி ஏன் நீங்கள் பேசுவதில்லை ?

      லிபியா அய்ரோப்பாவிற்க்கு மிக மிக அருகில் உள்ளது. ஃப்ராசின்ஸில் லிபிய மற்றும் வட ஆஃப்ரிக்க (முக்கியமாக அல்ஜீரிய, டுனிசிய) மக்கள் பெரும் எண்ணிக்கையில் வாழ்கிறார்கள். லிபியாவில் நடந்த வன்கொடுமைகளை தடுப்பது ஃப்ரான்ஸுக்கு எளிது. அவர்களில் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் அதிக தூரம் செல்ல தேவையில்லை. மேலும் அய்.நா சபை தீர்மானமும் உள்ளது.

      ஈழப்போர் உச்சத்தில் இருக்கும் போது சுமார் 20,000 அப்பாவி தமிழர்கள் குண்டு வீச்சில் கொல்ல்பட்டனர். ஆனால் உலக நாடுகள் பார்த்துகொண்டு தான் இருந்தன. ஒரே காரணம் தான். புலிகளை முற்றாக அழித்தால் தான் நிரந்தர அமைதி அங்கு உருவாகும் என்ற காரணம். 20000 மக்களை பலிகொடுத்தாலு, எதிர்காலத்தில் இன்னும் 1 லச்சம் மக்கள் அய்ந்தாவது ஈழப்போரில் பலியாவதை தடுத்தாகிவிட்டது. இது ஒரு கொடுமையான லாஜிக் தான். மேலும் அங்கு நேட்டோ தலையிடுவது சாத்தியமும் இல்லை. பல இதர காரணிகள்.

      போரில் சிக்கிய அப்பாவி மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்வதை துப்பாக்கி முனையில் தடுத்த புலிகள் பெரும் குற்றவாளிகள். ராஜபக்‌ஷேவிற்க்கு இணையான குற்றவாளிகள் தான். மனித கேடையங்களாக கடைசி வரை அப்பாவி மக்களை பயன்படுத்தியவர்கள். அவர்கள் இன்று முற்றாக அழிந்ததால், இனிமேல் ‘போர்’ இருக்காது. ஈழத்தில் இனி யாரும் அதை முன்னேடுக்க தயாராக இல்லை.

      • // ஈழப்போர் உச்சத்தில் இருக்கும் போது சுமார் 20,000 அப்பாவி தமிழர்கள் குண்டு வீச்சில் கொல்ல்பட்டனர். ஆனால் உலக நாடுகள் பார்த்துகொண்டு தான் இருந்தன. ஒரே காரணம் தான். புலிகளை முற்றாக அழித்தால் தான் நிரந்தர அமைதி அங்கு உருவாகும் என்ற காரணம். 20000 மக்களை பலிகொடுத்தாலு, எதிர்காலத்தில் இன்னும் 1 லச்சம் மக்கள் அய்ந்தாவது ஈழப்போரில் பலியாவதை தடுத்தாகிவிட்டது. இது ஒரு கொடுமையான லாஜிக் தான். மேலும் அங்கு நேட்டோ தலையிடுவது சாத்தியமும் இல்லை. பல இதர காரணிகள். //

        எத்தன பேர் செத்துத் தொலச்சாலும் சரி புலி மட்டும் இருக்கப்படாது!!
        ஹிரொஷிமாவ ஆவியாக்கினதுக்கு அமெரிக்கா சொன்ன காரணமும் இதுதான். உலகயுத்தம் சீக்கிரம் முடியனுமாம். நல்ல நியாயமய்யா..

        // போரில் சிக்கிய அப்பாவி மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்வதை துப்பாக்கி முனையில் தடுத்த புலிகள் பெரும் குற்றவாளிகள். ராஜபக்‌ஷேவிற்க்கு இணையான குற்றவாளிகள் தான். மனித கேடையங்களாக கடைசி வரை அப்பாவி மக்களை பயன்படுத்தியவர்கள். அவர்கள் இன்று முற்றாக அழிந்ததால், இனிமேல் ‘போர்’ இருக்காது. ஈழத்தில் இனி யாரும் அதை முன்னேடுக்க தயாராக இல்லை. //

        3 லட்சம் பேரை சில ஆயிரம் புலிகள் இழுத்துண்டு போனான்றத நம்பமுடியலை. சிங்களப் படையிடம் சிக்கிச் சீரழியறதவிட புலியோட போனா தப்பலாம்ன்னு நினச்சா.. போனா.

        ஆனா போனவா இலங்கை பிரஜைன்னும் பாக்காதெ ஷெல் அடிச்சுக் கொன்ன ராஜபக்‌ஷேயும், சரணடையாம, அசிங்கப்படாம போராடிச் சாவறது மேல்ன்னு சொன்ன புலிகளும் ஒண்ணா? பொதுஜனங்களைப் போராட்டத்துக்குத் தயார் பண்ணாமப் போனதுதான் புலிகள் செஞச தவறு.

      • //உலக நாடுகள் பார்த்துகொண்டு தான் இருந்தன. ஒரே காரணம் தான். புலிகளை முற்றாக அழித்தால் தான் நிரந்தர அமைதி அங்கு உருவாகும்//

        ஏன் இதே சூத்திரத்தை அன்றைய சோவியத்திற்கும் பொருத்தக் கூடாது? அதாவது குலாக்குகளை சிறையிலடைப்பதின் மூலமே உணவுப் பஞ்கத்தை போக்க முடியும் என்பதற்காக. நான் அன்று ரஷ்யாவில் வாழவில்லை. நீங்களும் வாழ்ந்திருக்க மாட்டீர்கள் என்றுதான் நினைக்கிறேன்.

  14. ஏகாதிபத்தியம் என்றால் என்ன என்று திருவாளர் அதியமான் விளக்குவாரா? என் கருத்துப்படி, ஜட்டி, பிரா முதல் போர் விமானங்கள் ஈறாக உணவு முதல் முட்டைப்பூச்சி மருந்து வரை எல்லாவற்றிலும் ஏன் போபால் போன்ற எண்ணற்ற கொடுங்கோல்கள் மூலம் படுகொலைகள் மூலம் உலகெங்கும் சுரண்டும் ஒன்றுதான் ஏகாதிபத்தியம். டர்பன் பயங்கரவாதி மாதிரி 70% மேல் இன்வெஸ்மெண்ட் என்று ஏகாதிபத்தியமே அதிர்ச்சி அடையும் அளவு நக்கித் தொலைக்காமல் இருந்ததுதான் கடாபியின் தவறு. கட்டுரையில் குறிப்பிட்டதுள்ளது மாதிரி ஏகாதிபத்தியங்களோடு கள்ள உறவு கொள்ளும் அரசியல்வாதிகளுக்கு கடாபி ஒரு வேதனையான உதாரணம்.

    • ஆதவன்,

      பனிப் போர் காலங்களில் சோவியத் ரஸ்ஸியா செய்ததும் ஏகாதிபத்தியம் தான். ஆஃப்கானிஸ்தானை 1976இல் படைஎடுத்த ரஸ்ஸியா செய்த ‘ஏகாதிபத்தியத்தை’ அன்று உங்களை போன்றவர்கள் கண்மூடித்தனமாக ஆதரித்தனர். கொரியா போரிலும் தான். இன்று வட கொரியா நிலை என்ன ? மக்கள் பட்டினியில் சாகிறார்கள்.

      ஏகாதிபத்தியம் என்பது காலனியா ஆதிக்க காலங்களில் பிரட்டன் போன்ற நாடுகள் செய்த விசியங்களை தான் சொல்ல வேண்டும். அமெரிக்காவின் பல படை எடுப்புகள், நாடு பிடிக்க அல்ல. wars for idealogy ; to oppose the spread of ‘communism’ ; சோவியத் ரஸ்ஸியாவும், சென்சீனாவும் அதை அவர்கள் பாணியில் எதிர்த்தனர். பெரும் கொடுமைகள் துயரங்கள் விளைந்தன.

      மற்றபடி ‘சுரண்டல்’ பற்றி மார்க்சியர்களின் வாதம் மிக தவறானது என்று நிருபிக்கப்பட்டு பல காலம் ஆகிவிட்டது.

  15. அதியமான் சார்,
    கடந்த எண்பதுகளில் தொடங்கி இலங்கைத் தமிழரின் போராட்டம் வீரியமாக இருந்ததே..! ஆனால் லிபியாவில் கிளர்ச்சி என்பது வெகு சமீபத்தில்தானே தொடங்கியது? அதற்குமுன் அங்கு அமைதியின்மை பற்றி எச்செய்தியும் உலக அரங்கில் பரிமாறப்படவில்லையே? அமைதியை நிலைநாட்டத் துடிக்கும் அண்ணன்கள் முதலில் ராஜபக்சேவைத்தானே காலி செய்திருக்க வேண்டும்? லிபியாவில் அமையும் இடைக்கால அரசுடன் அமெரிக்கா பங்குதாரராக இருக்கும் என்று ஒபாமா அறிவித்திருப்பதன் உள்நோக்கம் பற்றி உங்கள் கருத்து?

  16. //ஆதவன்,
    பனிப் போர் காலங்களில் சோவியத் ரஸ்ஸியா செய்ததும் ஏகாதிபத்தியம் தான்// அதை சமூக ஏகாதிபத்தியம் என்று வினவு சொல்கிறது.//ஏகாதிபத்தியம் என்பது காலனியா ஆதிக்க காலங்களில் பிரட்டன் போன்ற நாடுகள் செய்த விசியங்களை தான் சொல்ல வேண்டும். அமெரிக்காவின் பல படை எடுப்புகள், நாடு பிடிக்க அல்ல.// அப்படியா ? முடியவில்லையே ! அதியமான் நீங்கள் ஒரு நல்ல மனநல மருத்துவரைப் பார்ப்பது நல்லது. அமெரிக்காவிலேயே லடசக்கணக்கான அந்த நாட்டின் சொந்த மக்கள் இப்போது அமெரிக்க ஆக்கிரமிப்பைப் பார்த்துச் சொல்லும் போது, தரமணியில் இருந்த் ஜோஸ்யம் பார்க்கின்றீர்களே ? ஒருவேளை ஆர் எஸ் எஸ் ஸில் சொல்லிக் கொடுக்கின்றீர்களா ?
    ஆதவன்

  17. ஆதவன்,

    மொதல்ல ஒரு விசியம் : நான் ஆர்.எஸ்.எஸ் ஆள் அல்ல, அல்ல. மாறாக அதை எதிர்ப்பவன். இதை பல முறை இங்கு உரக்க சொல்லியும், வேண்டும் என்றே மீண்டும் மீண்டும் மீண்டும் உம்மை போன்ற வீணர்கள் அவதூறாக இப்படி பேசுகிறீர்கள்.

    அமெரிக்காவில் பல செயல்கள் ஏகாதிபத்தியம் தான். மறுக்கவில்லை. முக்கியமாக ஈராக் விசியத்தில். ஆனால் லிபியா மீது நேட்டோ படையினர் தாக்குதல் நடத்தவில்லை என்றால் இன்னேறம் பல லச்சம் லிபியர்களை கடாஃபி கொன்றழித்திருப்பார். பெரும் மானுட அழிவு தடுக்கப்பட்டுள்ளது. 1999இல் போஸ்னில்யாவில் இதை விடு பெரும் கொடுமை. அது பெருகாமல் தடுக்கப்பட்டது.

    அமெரிக்கா முன்பு பனிப்போர் காலங்களில் நடத்திய போர்கள் பற்றி பொதுவாக சொன்னேன். வியட்நாம், கொரியா போர்கள் தான் அன்று பெரும் போர்கள். பல வருடங்கள் தொடர்ந்து நடந்தன. (இன்று அர்த்தமில்லாமல் போய்விட்டன. வியட்நாம் இன்று சந்தை பொருளாதாரத்தை வழிமொழிகிறது.). ‘சமூக ஏகாதிபத்தியம்’ என்று சும்மா வார்த்தை விளையாட்டை வைத்து, பல விசியங்களை சாமர்த்தியமாக சமளிப்பாதாக வினவு கருதுகிறது. ஒரு பெரும் பூதத்தை சித்தாந்த அடிப்படையில் உருவாக்கி, பின் அதன் சுயரூபம் தெரிந்தவுடன், அதை இப்படி ஏதாவது சொல்லி நிராகரிப்பது உங்களை பொருத்தவரை சாமர்த்தியமான செயல். ஆனால் கேட்ககிறவன் எல்லாம் கேனையன் அல்ல. மீண்டும் செம்புரட்சி எங்காவாது உருவானால் அதுவும் இதே போல் ‘சமூக ஏகாதிபத்தியமாகவே’ உருமாறும் என்பதே வரலாறு தரும் பாடம். ஆனால் you people will never learn from history..

    சரி, மனநல மருத்துவரை பார்க்க வேண்டியவர் யார் என்று நீரே சொல்ல வேண்டாமே. அதை வாசகர்கள் முடிவு செய்து கொள்ளட்டும். எம்மை கேட்டால், உம்மை போன்றவர்கள் மூளை சலவை செய்யப்பட்ட மதவாதிகளுக்கு ஒப்பானவர்க்ள் என்பேன். ஓகே.

  18. அதியமான் அவர்களே சிங்கள போரின் வரலாறு எவ்வளவு காலத்தையது? தமிழர்க்கு மறுக்கப்பட்ட உரிமைகள் என்னென்ன? ஏன் போராளிகள் உருவானார்கள்? அவர்களை ஏன் மக்கள் ஏற்றுக்கொண்டனர்?தோட்ட தொழிலாளர்களாக பிழைக்க போன தமிழர்கள் வாழும் பகுதிகள் என்னென்ன? சிங்களன் குடியேறுவதற்கு முன்னேயே அங்கிருந்த ஆதி தமிழர்கள் யார்? இதில் யார் போர் நடத்தியது? இந்திய அரசை சிங்களர்கள் எப்போது அணுகினார்கள்? அமெச்சூர் அரசியல் தலைவர் ராசீவ் கனிந்து வந்த விடிவை எப்படி பாழாக்கினார்? அமைதிப்படை செய்த அட்டூழியங்கள். இவை பற்றி எதுவும் அறியாமல் துக்ளக்கும் தினமலரும் படித்து விட்டு கமெண்டை தூக்கிகொண்டு…..ச்சே பார்ப்பன அல்லக்கையாக எவ்வளவு நாள் இருப்பீர்கள்?உன் சொந்தமும் என் சொந்தமும் தான் அங்கே அழிந்தனர்….. அங்கே பார்ப்பனன் பெருமளவு இருந்து ஒரு பார்ப்பான் செத்து இருந்தால் இந்த ஏடுகள் எப்படி எதிர்வினையாற்றும் என்பதை அறிய முடியாதவரா நீங்கள்?

    • களப்பிரன் 2 மற்றும் ஈழ ஆதாரவாளர்களுக்கு,

      ஒரு காலத்தில், (சுமார் 20 வருடங்களுக்கு முன்பு வரை) நானும் உங்களை போல் தான் இருந்தேன். இதை விட உணர்சி பெருக்குடன், தரவுகளுடன் கடும் விவாதம் செய்திருக்கிறேன். பிரபாகரன் அன்று எமக்கு ஒரு ஹீரோ. அவரின் படத்தை அறையில் மாட்டியிருந்தேன். வருடங்கள் செல்ல செல்ல disillusionment set in. reality புரிந்தது. போராளிகள் என்ற பெயரில் கிட்டதட்ட மாஃபியா அளவுக்கு பல குழுக்களும், நபர்களுன் சீரழிந்து விட்டனர் என்ற கசப்பான உண்மை புரிந்தது. பலரையும் சந்தித்திருக்கிறேன்.முகாம்கள் அன்று தமிழகத்தில் இருந்தன. மேலும் பல செய்திகள். போதை மருந்து கடத்தல் தான் பணம் ஈட்ட முக்கிய வழி என்றும் தெரிந்தது.

      பல பொன்னான சந்தர்பங்களை புலிகள் நிராகரித்துவிட்டனர். பால சிங்கம் பெரிய அறிவாளி. ஞானி. அவரின் அருமையான ஆலோசனைகளை அவர்கள் கேட்கவில்லை. இல்லாவிட்டால் இன்றும் பிரபாகரன் இருந்திருப்பார். ஈழத்திற்க்கு பதில், ஆனால் மிகுந்த் சுதந்திரத்துடன் ஒரு தமிழ் பகுதிக்கு சட்டப்படி முதல்வராகியிருக்கலாம். all gone and lacs of lives lost for nothing..

      ஆனால் இந்திய வம்சாவழியினரான மலையக தமிழகர்களை, யாழ்பாணத்து தமிழர்கள் நடத்திய விதம் வேறு விசியம். மேலும் கிழக்கு பகுதி மக்கள், முஸ்லிம்களையும் அவர்கள் நடத்திய விதம் ஜனனாயகத்தன்மை அற்றது. வேளாளர் உயர்சாதிய மனோபாவம் இன்றும் ஈழப்பகுதில் உள்ளது. இதெல்லாம் பற்றி விரிவாக பேச முடியும்.

      ஈழம் எல்லாம் இனி தேவை இல்லை. அமைதியாக, இயல்பாக சிவில் உரிமைகளுடன் ஈழவர்களை வாழ அனுமத்திதாலே போதும். (இன்னும் சில வருடங்களில் இது முழுமையாக சாத்தியமாகும் என்றே நம்புகிறேன்). போதுமடா சாமி என்றே தோன்றுகிறது. மேலும் பிரபாகரன் காலத்திற்க்கு பின்பு, கருணா அல்லது பிள்ளையான் போன்ற ஒரு ‘தலைவர்’ புலிகளின் தலைவராக உருவாகி, சர்வாதிகாரத்தனமாக ஈழத்தை ஆண்டால் ? மிக சாத்தியமான அனுமானம். ஆப்பிரிக்காவில் உள்ள war lords போல் ஈழத் தலைவர்களும் உருவாகி, தமிழன் தமிழனுக்கு அடிமையாக வாழ வேண்டிய கட்டாயங்கள் உருவாகியிருக்கும். ஜனனாயகம், மாற்று கருத்து இவைகளை புலிகள் கடைசி வரை அனுமதிக்கவே இல்லை. மேலும் அவர்கள் பொருளாதார விசியத்தில் ‘வலதுசாரி’ கொள்கை கொண்டவர்கள் தாம். மார்க்சியர்களுக்கு இன்னும் இது விளங்கவில்லை. Lots of illusion about them.

      • Weell said after the monster Prabhakaran was hunted down the situation has changed.. Im just about as optimistic as you adhiyaman sir.. The civil rights would be put in place soon and tamils will have a better life there than are suffering from the iron grasps of karunanidhi and jeyalalitha. years after years

    • ஈழப் போர்களில் ஒரு பாப்பானும் சாகலன்னு யாரு சொன்னா? களப்பிர ஊடகங்களா?

  19. // மேலும் பிரபாகரன் காலத்திற்க்கு பின்பு, கருணா அல்லது பிள்ளையான் போன்ற ஒரு ‘தலைவர்’ புலிகளின் தலைவராக உருவாகி, சர்வாதிகாரத்தனமாக ஈழத்தை ஆண்டால் ? மிக சாத்தியமான அனுமானம். ஆப்பிரிக்காவில் உள்ள war lords போல் ஈழத் தலைவர்களும் உருவாகி, தமிழன் தமிழனுக்கு அடிமையாக வாழ வேண்டிய கட்டாயங்கள் உருவாகியிருக்கும். //

    அதனால, சிங்களனுக்கே அடிமையாக இருந்துட்டுப் போகலாம்ன்னு சொல்ல வர்றீங்களா, அதியமான் சார்?

    • அப்படி ஏன் அர்த்தப்படுத்திக்கொள்கிறீர்கள். இதுதான் விதண்டாவாதம் என்பது. அங்கு யாரும் அடிமை இல்லை. சரி, என்ன செய்யலாம் என்கிறீர்கள் ?

      கிளினோச்சி, யாழ் பகுதியில் இருந்து பல தமிழர்களும் இன்று இணையத்தில் புனை பெயர்களில் கதைக்கின்றனர். யாரும் இங்கு உள்ளவர்களை போல் வெட்டி வீரம் பேசுவதில்லை. அய்ந்தாம் ஈழப்போரை பற்றி பேசுவதில்லை. யாதார்த்தம் என்பது அவர்களுக்கு தான் தெரியும். enough is enough.

      • ஈழத்தில் இன்று யாரும் அரசுக்கு எதிராகப் பேசி உயிரோடு இருக்கமுடியாது. இதுதான் யதார்த்தம்.

        யாழ் பல்கலை ஆசிரியர்களும், மாணவர்களுமே உயிருக்குத் துணிந்து அவ்வப்போது எதிர்ப்புக் குரல் எழுப்பி வருகிறார்கள். வன்னிப் பகுதி முற்றிலும் நாசமாகிக் கிடக்கிறது. தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்கள் தங்குதடையின்றி நடைபெற்று வருகின்றது. புலிகளின் வீழ்ச்சிக்கு முன்னும் பின்னும் சிங்கள அரசு திட்டமிட்டு நடத்திய இனப் படுகொலையில் தப்பியவர்களில் அனேகர் அனாதைகளாக்கப்பட்ட குழந்தைகள், கை,கால்,கண் இழந்தோர், நடந்த கொடுமையால் மன நிலை பிறழ்ந்தோர். கைப்பற்றப்பட்டு காணமல் போனவர்கள் ஆயிரமாயிரம். இவர்களின் நிலைமையை எடுத்துக் கூறக்கூட அயல்னாட்டு செய்தியாளர்களுக்கு அனுமதியில்லை. அடிப்படை மனித உரிமைகளே மறுக்கப்பட்ட இந்த அவல நிலையில் 5ம் ஈழப் போரை யார் கற்பனை செய்யப் போகிறார்கள். அவர்கள் இன்னோரு போருக்குத் தயாரில்லை என்றாலும் இப்போதுள்ள நிலையை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள், சமாதானம் வந்துவிட்டது என்று இலங்கை அரசுதான் புளுகிக் கொண்டிருக்கிறது.

        இனவெறி அரசின் கீழ் தமிழருக்கு சம உரிமை என்பது யதார்த்தத்தில் எப்போதுமே நடவாதது. சர்வதேச அழுத்தம் போர்க்குற்ற விசாரணையில் துவங்கி ஈழத்தமிழர் அரசியல் விடுதலையில் முடிவதுதான் நியாயமாக நடக்கவேண்டியது.

        • கிளினோச்சியில் இருந்து நண்பர் கவிஞர் தீபச்செல்வன் அடிக்கடி முகப்புத்தகத்தில் பேசுகிறார். சொந்த பெயரில் தான். துணிவாகவே பேசுகிறார்.

          யாழ் குடா மக்கள் பற்றியும் செய்திகள் உண்டு. போர் உச்சத்தில் நடந்த போது ‘குருவி’ திரைபடம் யாழ்பாணத்தில் சக்கை போடு போட்டது. யாழ் இளைஞர்கள் பலரும் பெருசா அலட்டிக்கவில்லை என்று ஒரு கோணம் உண்டு.

          தமிழருக்கு இன்றும் வாக்குரிமை உண்டு. ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும், ராஜபக்‌ஷே கும்பல் தமிழ்பகுதிகளிலும் ‘ஓட்டு பொறுக்க’ வேண்டிய நிலை இருக்கு. (புலிகள் ராஜியத்தில் இப்படி எல்லாம் தேர்தல் சாத்தியமில்லை என்பதை ஒப்பிடவே சொன்னேன்). இன்னும் சில வருடங்களில் ராணுவம் விலக்கி கொள்ளப்படும் என்றோ நம்புகிறேன். ராஜபக்‌ஷே ஆட்சி நிரந்தரமல்ல. ஒரு புதிய தலைமுறை சிங்களவர்கள் மற்றும் தமிழர்கள் வருவார்கள். இன்னும் ஒரு 10 வருடங்களில் பாருங்கள். நிலைமை கட்டாயம் சீரடையும்.

  20. மீனவனுக்கு பதில் ஈழத்தில் புரோஹிதம் பண்ணும் ஐயர்களில் கொஞ்சம் பேரை சிங்களன் பொலி போட்டிருந்தால் நம் பத்திரிக்கைகள் இந்திய அரசை பிரித்து மேய்ந்திருக்க மாட்டார்களா?

  21. மாட்டார்கள். குஞ்சுகள் சிங்களனுக்கு சொம்பு தூக்கியிருப்பார்கள்..

  22. //ஈழம் எல்லாம் இனி தேவை இல்லை. அமைதியாக, இயல்பாக சிவில் உரிமைகளுடன் ஈழவர்களை வாழ அனுமத்திதாலே போதும்.//K.R.அதியமான்
    ஈழத்தமிழருக்கு என்ன அரசியல் தீர்வுதேவை என்பதை அந்த மக்கள்தான் முடிவெடுக்கணுமே தவிர தாங்களல்ல! நீங்களொன்றும் ஈழத்தமிழரின் ஏக மக்கள் பிரதிநிதி அல்ல என்ற ஐனநாயக பண்பை கருத்திகொள்ளுங்கள்.
    புலிகள் ஒரு மாபியா அமைப்பாக இருந்தால் எப்படியாம் ஈழத்தமிழரில் 90 வீதத்திற்கதிகாமானோர் அவர்களை ஆதரித்தார்களாம்??? 2004 ல் நடந்த இலங்கை நாடளமன்ற தேர்தலில் 95 சதவீத ஈழத்தமிழர் விடுதலைபுலிகள் முன்னிறுத்திய வேட்பாளர்களுக்கே வாக்களித்தனர். இதற்கு என்ன சொல்லப்போகிறீர்கள்! ஈழத்தமிழர் விடயத்தில் திட்டமிட்டு பொய்யுரைக்கிறீர்கள். இல்லையெனில் சோனியா மகிந்தா பிரச்சாரத்தால் மூளைச்சலவை செய்யப்பட்டுளீர்கள். எதில் எதுவென்பது உங்களிற்குத்தான் வெளிச்சம்.

  23. //ஈழத்தமிழருக்கு என்ன அரசியல் தீர்வுதேவை என்பதை அந்த மக்கள்தான் முடிவெடுக்கணுமே தவிர தாங்களல்ல! /

    ஒத்துக்கொள்கிறேன். ஆனால் இது உங்களை போன்றவர்களுக்கும் பொருந்தும். புலிகளின் ஃபாசிசம் பற்றி நீங்க தான் அறியாமையில் இருக்கீக. அவ்வளவு தான் சொல்ல முடியும்.

    முன்பு ஒரு ஈழத்தமிழர் எனது பதிவில் இட்ட பின்னூட்டம் இது :

    ///baleno said…

    நான் இங்கே பின்னோட்டம் இடுவது லிபியா பற்றி வினவுவில் வந்த கட்டுரைக்கு உங்கள் சிறந்த பின்னோட்டங்களை பாராட்டி.

    //ஈழப்போரில், 2009 சனவரிக்கு பிறகு, அமெரிக்க படைகள் இதே போல், தமிழர்களை காக்க, சிங்கள் படைகளின் முன்னேற்றத்தை தடுக்க, வான்வழி தாக்குதல் நடத்தியிருந்தால், பலரும் ஆதரித்திருப்பார்கள். ஆனால் அமெரிக்க செய்யவில்லை என்பது வேறு விசியம். முக்கிய காரணம் அங்கு எண்ணை இல்லை என்பதல்ல. புலிகளில் ஃபாசிசம் பற்றி அவர்களின் பார்வை. புலிகள் அழிந்தால் தான், அங்கு நிரந்தர அமைதி திரும்பும் என்று ஒரு கோணம். பலரும் இதே பார்வையை தான் கொண்டிருந்தனர். அது சரிதான் என்று தெரிந்துவிட்டது.//

    baleno : மிக சரியான புரிதல்.புலிகளுடைய போராட்டம் எனறு நடத்திய யுத்தத்தால் முழு இலங்கை மக்களுக்கும் துன்பம் ஏற்பட்டாலும், தமிழ் மக்களின் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் நாசமாக்கி அழித்தே விட்டது. கடைசி காலங்களில் (2007-2009)புலிகளின் யுத்த்திற்க்கு வலுகட்டாயமாக பிள்ளைகள் பிடிப்பது,கொடுமைகள், கப்பம் தாங்க முடியாத அளவிற்க்கு சென்று விட்டது.

  24. //ஒத்துக்கொள்கிறேன். ஆனால் இது உங்களை போன்றவர்களுக்கும் பொருந்தும். புலிகளின் ஃபாசிசம் பற்றி நீங்க தான் அறியாமையில் இருக்கீக. //K.R.அதியமான்

    எப்படி எனக்கும் பொருந்தும் என்பதை தெளிவுபடுத்துவீர்களா!நான் ஒரு இன மக்களிற்கு இதுதான் தீர்வு என உங்களைபோல் குருட்டாம் போக்கில் பரிந்துரைக்கவில்லையே?
    ஆமா 2002 வரை புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் வாழ்ந்த எனக்கோ அவர்களை ஆதரித்த 95 வீத வடகிழக்கு வாழ் ஈழத்தமிழ் மக்களிற்கோ உண்மை தெரியாது. இந்தியா- சிறிலங்கா பொய்செய்திகளை கேட்டு அறிந்த உங்களிற்கு எல்லாமே அத்துப்படிதான்!

  25. அதியமான் சார்,
    சும்மா தெரிந்துகொள்வதற்காக கேட்கிறேன்.

    //ஈழப்போர் உச்சத்தில் இருக்கும் போது சுமார் 20,000 அப்பாவி தமிழர்கள் குண்டு வீச்சில் கொல்ல்பட்டனர். ஆனால் உலக நாடுகள் பார்த்துகொண்டு தான் இருந்தன. ஒரே காரணம் தான். புலிகளை முற்றாக அழித்தால் தான் நிரந்தர அமைதி அங்கு உருவாகும் என்ற காரணம். 20000 மக்களை பலிகொடுத்தாலு, எதிர்காலத்தில் இன்னும் 1 லச்சம் மக்கள் அய்ந்தாவது ஈழப்போரில் பலியாவதை தடுத்தாகிவிட்டது. இது ஒரு கொடுமையான லாஜிக் தான். மேலும் அங்கு நேட்டோ தலையிடுவது சாத்தியமும் இல்லை. பல இதர காரணிகள்//

    1. ஈழத் தமிழர்களின் அமைதியான வாழ்வுக்கு புலிகள் தான் எதிரி என்பதற்கு தாங்கள் காட்டும் ஆதரங்கள் என்ன என்ன?
    2. ‘20000 மக்களை பலிகொடுத்து ஐந்தாம் ஈழப் போரை தடுத்தாகிவிட்டது’ என்று குறிப்பிட்டுள்ளீர்கள். எந்த அடிப்படையில் இப்படி சொல்லியிருக்கிறீர்கள்? சிங்களன் மீது உள்ள நம்பிக்கையா? போரில் ஆதரவு கொடுத்த நாடுகள் மீதுள்ள நம்பிக்கையா? எதுவாக இருப்பினும் எந்த ஒரு நம்பிக்கையும் இரண்டு வருடங்களில் ஒன்றும் பலிக்கவில்லையே ஏன்? ராஜபக்ஷே என்பவன் சிங்கள பேரின்வாததின் ஒரு முகம் மட்டுமே. ஒருவேளை ராஜபக்சே ‘அதிகார பகிர்வு’ என்று இறங்கிவந்தாலும்,வேறொருவர் அங்கு அதிபராவார். இப்படி இருக்க சிங்களனிடம் நீதியை எதிர்பார்த்து காத்திரு என்பது பைத்தியக்காரத் தனம் இல்லையா?
    3. பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் பாராளுமன்றத்தில் நடந்தது ஒரு இனப் படுகொலை என்று சொல்லகூட அனுமதிக்கப் படவில்லை. குறிப்பாக ‘இனப் படுகொலை’ என்ற வார்த்தையையே அவைகுறிப்பில் இருந்து நீக்கயது தங்களுக்கு தெரியுமா? இப்படி பட்ட நாடுகள் தான் தமிழனை நாளை வாழ வைக்க போகிறதா?
    4. நேட்டொ தலையிடுவது ஏன் சாத்தியமில்லை? அதென்ன பிற காரணிகள்? போருக்கு முன்பும், போரின் போதும், போருக்கு பிறகும் இலங்கைக்கு ஆதரவு கொடுக்க மட்டும் ‘நேட்டோ’ நாடுகள் முன்வந்தது ஏன்? நடப்பது என்ன என்று தெரியாத அளவுக்கு நேட்டோ நாடுகள் அவ்வளவு அம்மாஞிகளா? நீங்கள் சொன்ன ‘பக்கத்து இலைக்கு மட்டும் பாயாசம்’ கேட்கும் நேட்டோவின் லாஜிக்கை கேட்டால் குழந்தை கூட சிரிக்கும்.

    அதியமான் கூறியவை:
    ———————
    //போரில் சிக்கிய அப்பாவி மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்வதை துப்பாக்கி முனையில் தடுத்த புலிகள் பெரும் குற்றவாளிகள். ராஜபக்‌ஷேவிற்க்கு இணையான குற்றவாளிகள் தான். மனித கேடையங்களாக கடைசி வரை அப்பாவி மக்களை பயன்படுத்தியவர்கள். அவர்கள் இன்று முற்றாக அழிந்ததால், இனிமேல் ‘போர்’ இருக்காது. ஈழத்தில் இனி யாரும் அதை முன்னேடுக்க தயாராக இல்லை//

    1. போரில் சிக்கிய அப்பாவி மக்களை பயணக் கைதிகளாக பாவித்த புலிகள் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இதற்கு தகுந்த ஆதரங்களை உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.
    2. புலிகள் முற்றாக அழிந்துவிட்டார்கள் என்று நீங்கள் தான் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள் அதியமான். இது உண்மை என்றே கொள்வோம். ‘இல்லாத புலிக்கு எதுக்கு தடை’ என்ற கேள்விக்கு யாரும் பதில் சொல்ல தயார் இல்லையே? புலிகளின் மிச்ச,சொச்சங்களை அழிக்கவே இன்னும் தடை நீட்டிக்க பட்டுள்ளது என்று கருதுவோம். சில வாரங்களுக்கு முன்பு காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள சென்ற ராஜபக்சேவுக்கு எதிராக ஒரு வழக்கை ஆஸ்திரேலிய வாழ் தமிழர் (புலி எதிர்ப்பாளர்) பதிவு செய்தார். ஆனால் வழக்கம்போல சிங்கள ஊடகம் அவரையும் புலி ஆதரவாளர் என்றே பொய்யுரைத்தது. அவச்ரகால சட்டம் தொடங்கி,இந்த சம்பவம் வரை பார்த்தால் ‘உலகில் சிங்களனை கேள்வி கேட்கும் அனைவரையுமே’ சிங்கள் பேரினவாதம் புலி என்று முத்திரை குத்துவது கண்கூடு. அப்படியானால் நீங்கள் சொல்லும் ஈழப் போரின் முடிவு மற்றும் ஈழத் தமிழர்களின் எதிர்காலம் எனறு 10 வருடம் கழித்து இந்த இரண்டில் ஒன்றாக தானே இருக்கும். 1. சிங்களனுக்கு அடிமையான தமிழன் 2. தமிழன் அற்ற சிறீலங்கா. இதில் எதை நீங்கள் பரிந்துரைக்கிறீர்கள் அதியமான் சார்?
    3.தொலைநோக்கு பார்வையில் 20000 தமிழர்களை பலிகொடுத்து ஐந்தாம் ஈழப் போரை தடுத்ததை விட, இலங்கையில் இருக்கும் ஒட்டுமொத்த தமிழனையும் கொன்றுவிட்டு போரே இல்லாத ஒரு அமைதி பூங்காவாக இலங்கையை மாற்றிவிடலாமே? முகாமில் பலரிடம் பேசியதாக சொன்னீர்கள். அவர்களில் ஒருவர் கூட தன் மண்ணில் சென்று வாழவேண்டும் என்ற ஆசையை சொல்லவில்லையா? சொந்த மண்ணில் வாழவிரும்பவன் எப்படி சார் அடிமையா வாழ்வான்?
    4.’மக்களை புலிகள் மனித கேடையமாக பயன்படுத்தினர்’ என்று ஐ.நா அறிக்கை கூறியதும் அந்த குற்றசாட்டை எதிர்கொள்ள புலிகள் முன்வந்தனர் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆனால் ஒரு பொதுமகனை கூட கொல்லவில்லை என்று அண்டப் புளுகை அவிழ்த்துவிடும் சிங்களன் ‘இருதரப்பு குற்றைத்தையும் விசாரிக்க கோரும்’ பன்னாட்டு போர்குற்ற விசாரணையை எதிர்ப்பது ஏன்?

    அதியமான் கூறியவை:
    ———————
    //போராளிகள் என்ற பெயரில் கிட்டதட்ட மாஃபியா அளவுக்கு பல குழுக்களும், நபர்களுன் சீரழிந்து விட்டனர் என்ற கசப்பான உண்மை புரிந்தது. பலரையும் சந்தித்திருக்கிறேன்.//

    1.இதற்கு தகுந்த ஆதாரங்களையும் உங்களிடம் எதிர்பார்க்கிறேன். 1991 தொடங்கி நீங்கள் புலிகளை வெறுக்கத் தொடங்கிவிட்டீர்கள். ஆனால் போதை வஸ்துகளை விற்றும், மாபியா வேலையும் செய்து வந்த ஒரு அமைப்பு 30 வருடங்களுக்கு மேலாக எப்படி தாக்குபிடித்தது என்றும் நீங்கள் விளக்க கடமைப் பட்டுள்ளீர்கள்?

    அதியமான் கூறியவை:
    ———————
    //பல பொன்னான சந்தர்பங்களை புலிகள் நிராகரித்துவிட்டனர். பால சிங்கம் பெரிய அறிவாளி. ஞானி. அவரின் அருமையான ஆலோசனைகளை அவர்கள் கேட்கவில்லை. //

    1.இவற்றிற்கும் ஆதாரம் தேவை அதியமான் சார்.

    அதியமான் கூறியவை:
    ———————
    //ஆனால் மிகுந்த் சுதந்திரத்துடன் ஒரு தமிழ் பகுதிக்கு சட்டப்படி முதல்வராகியிருக்கலாம்//

    1. அதியமான் சார். இலங்கையின் வரலாறு தெரிந்த நீங்கள்,ஈழப் போராட்டத்தின் அறவழி ஆயுட்கவழி போராட்ட வரலாற்றை கரைத்து குடித்த நீங்கள் ட்கனது சொந்த மண்ணில் ஈழத் தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே வாழவேண்டும் என்று சொலவ்து எப்படி நியாயமாகும்? இந்த இடத்தில் தான் நீங்கள் உண்மையிலேயே ஈழ வரலாற்றை அறிந்தவரா என்று சந்தேகம் எழுகிறது. ஒட்டுமொத்த ஈழவரலாற்றை புலிகளிடம் இருந்து தொடங்கும் தற்குறிகளை போல நீங்கள் இருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

    அதியமான் கூறியவை:
    ———————
    //ஈழம் எல்லாம் இனி தேவை இல்லை. அமைதியாக, இயல்பாக சிவில் உரிமைகளுடன் ஈழவர்களை வாழ அனுமத்திதாலே போதும்.//

    ஒட்டுமொத்த ஈழப் போராட்த்தை தொடக்க புள்ளிக்கே மீண்டும் நீங்கள் கொண்டுசென்று விட்டீர்கள் அதியமான். எந்த மாதிரி சிவில் உரிமையை நீங்கள் சிங்களனிடம் எதிர்பார்க்கிறீர்கள்? அல்லது அவன் எப்ப்டி கொடுப்பான் என்று நம்புகிறீர்கள்? தந்தை செல்வாவின் சிலையை உடைத்தது பற்றி கேட்டதற்கு அந்த நாட்டு அமைச்சர் சொன்ன பதில் என்ன தெரியுமா? “செல்வாவா? யார் அவர்?”. இதுவரை எத்தனை கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து தோல்வியில் முடிந்துவிட்டது என்று உங்களுக்கு தெரியுமா? ‘புலிகள் ஆயுதங்களை விட்டுவிட்டால் சுயநிர்ணய உரிமை தருவேன்’ என்று சொன்ன ராஜபக்சே, ‘போர் முடிந்துவிட்டதால் சுயநிர்ணய உரிமை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை’ என்று பல்டி அடித்த பிறகுமா சிங்களனை நம்பச் சொல்கிறீர்கள?

    அதியமான் கூறியவை:
    ———————
    //இன்னும் சில வருடங்களில் ராணுவம் விலக்கி கொள்ளப்படும் என்றோ நம்புகிறேன். ராஜபக்‌ஷே ஆட்சி நிரந்தரமல்ல. ஒரு புதிய தலைமுறை சிங்களவர்கள் மற்றும் தமிழர்கள் வருவார்கள். இன்னும் ஒரு 10 வருடங்களில் பாருங்கள். நிலைமை கட்டாயம் சீரடையும்.//

    இரண்டு வருடங்களில் நிலைமை மோசமானது தான் மிச்சம். ‘மூலதூவ’ என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? யாழ் தொடங்கி பல தமிழர் பகுதியில் புத்தர் சிலைகளும்,வைபவங்களும் நடப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? தினம் தினம் தமிழர் பகுதியில் நடக்கும் மர்ம கொலைகளின் சூத்திரதாரிகள் யார்? இன்றும் அறுக்கப் படும் தமிழ்ச்சிகளின் மார்பகங்களுக்கு காரணமான ‘கிறீஸ் பூதங்களை’ பற்றி என்ன நினைக்கிறீர்கள்? சிங்கள பகுதியில் சிங்களனும், தமிழர் பகுதியில் தமிழரும் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் தமிழர்கள் உலக்குக்கு சொல்லும் செய்தி உங்களுக்கு புரியாமல் போனது ஏன்?

Leave a Reply to sujith khan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க