Friday, September 29, 2023
முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்'இந்து கடையிலேயே வாங்கு!' வாங்குபவனுக்கு இந்து உணர்வு, விற்பவனுக்கு.....?

‘இந்து கடையிலேயே வாங்கு!’ வாங்குபவனுக்கு இந்து உணர்வு, விற்பவனுக்கு…..?

-

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 11

”இந்துவியாபாரிகளின்கடையில்எல்லாமதத்தெய்வங்களும்இருக்கும். கிறித்துவ – முசுலீம்கடைகளில்அவரவர்தெய்வங்கள்மட்டும்இருக்கும். மேலும்அவர்களுடையமதப்பெயர்களைமறைத்துவிட்டு, ஸ்டார், சந்திரிகா, டீலக்ஸ், கோல்டு, இந்தியா, சங்குமார்க்என்றுபொதுவானபெயர்களைகடைகளுக்குவைத்துக்கொள்கிறார்கள். எனவேஇந்துஉணர்வைக்காட்டும்வகையில், இந்துக்கள்அனைவரும்இந்துக்கடைகளிலேயேபொருள்வாங்கவேண்டும்.”

வருடா வருடம் தீபாவளியின்போது இந்து முன்னணி வெளியிடும் துண்டுப் பிரசுரம்

முசுலீம் எதிர்ப்பு வெறியில் இந்துமதவெறியர்களின் முரண்பாடான பிதற்றலைப் பாருங்கள். சிறுபான்மையினர் தங்கள் கடைகளில் அவரவர் தெய்வங்களை வைத்தால் மதவெறி என்கிறார்கள். கடைப் பெயர்களை மதப்பெயரின்றி ‘தமிழ்நாடு’, ‘இந்தியா’ எனப் பொதுவாக வைத்தால் ‘ஒளிந்து கொள்வதாக’க் குற்றம் சாட்டுகின்றனர். இவர்களைப் பொறுத்தவரை சிறுபான்மை மக்கள் சிரித்தாலும் குற்றம்; அழுதாலும் குற்றம்.

தமிழகத்தில் 80-களுக்குப் பிறகு இந்து முன்னணி -ஆர்.எஸ்.எஸ்.கும்பல் பரப்பி வரும் பிரபலமான விசமப் பிரச்சாரங்களில் இது முக்கியமானது. நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தைக் குறிவைத்துப் பரவி வரும் இந்நஞ்சை நாம் முறியடிப்பது அவசியம். இன்று வரையிலும்  இந்து, முசுலீம் உழைக்கும் மக்களிடையே இணக்கமான சமூக உறவு மதபேதமின்றி நிலவி வருகிறது.

ஏழு பார்ப்பனப் பெண்களையும், இரண்டு பார்ப்பனக் குழந்தைகளையும் காப்பாற்றும முயற்சியில் உயிர் துறந்த சையது – பக்ருதீன் என்ற பெரியவரின் சமாதிதான் புதுக்கோட்டை, திருமயத்திற்கு அருகிலுள்ள காட்டுப்பாவா பள்ளி வாசலாகும். இதற்கு தொண்டைமான், சேதுபதி போன்ற அரசர்கள் ந்னகொடை அளித்தனர். ஆண்டுதோறும் நிகழும் சந்தனக்கூடு விழாவில் அவ்வட்டாரத்தின் கள்ளர் சாதியினர்தான் பெரும்பங்கு வகிக்கின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து தர்காக்கள், நாகூர், வேளாங்கண்ணி, மாரியம்மன் கோவில்களிலும் இத்தகைய சூழ்நிலையைப் பார்க்க முடியும். மதவேறுபாடின்றி உழைக்கும் மக்கள் கலந்து கொள்ளும் திருவிழாக்களாக இவை விளங்குகின்றன. நோன்புக் கஞ்சியும், அம்மன்கூழும் மக்களிடம் இயல்பாகப் பரிமாறப்படும்.

உழைக்கும் மக்களிடையே இத்தகைய சமூக உறவுகள் இருந்த போதிலும் இந்து – முசுலீம் இரு மதங்களிலும உள்ள மேல்சாதி மேட்டுக் குடியினர் இப்படி இயல்பாக ஒன்று கலப்பதில்லை. தமது மதப்புனித ஆச்சாரத்தில் தனித்து நிற்கவே விரும்புகின்றனர். அம்மன், சுடலைமாடன் கோவில்களை ‘சிறு தெய்வ வழிபாடு’ என்று பார்ப்பன மேல்சாதியினர் இகழ்கின்றனர். தர்காக்களுக்கு இசுலாத்தில் இடமில்லை என இசுலாமியப் பழமைவாதிகள் தடை போடுகின்றனர். இவர்களிடமிருந்துதான் இருமத அடிப்படை வாதமும் எழுகின்றது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இனி இந்து மதவெறியர்களின் ‘வர்த்தக அரசியலை’ப் பரிசீலிப்போம்.

இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள நாட்டில் இசுலாமியப் பெயர் வைத்தால் தங்கள் வர்த்தகம் பிரபலமடையாது என்பதால்தான் இசுலாமிய வியாபாரிகள், திரையுலக நடிகர்கள் தங்களது மத அடையாளம் தெரியாமல் மறைத்துக் கொள்கிறார்கள். அல்லது அவர்களில் சிலரது மதச்சார்பற்ற உணர்வுகூட காரணமாக இருக்கலாம். ஆனால், பெரும்பான்மை மதத்தினரிடம் வளர்க்கப் படும் வகுப்புவாத உணர்வும், வெறியுமே இதற்கு அடிப்படையான காரணம்.

‘இந்துக்களிடமே’ இல்லாத விநாயகர் ஊர்வலத்தை தூத்துக்குடியிலும், திண்டுக்கல்லிலும் முசுலீம்கள் மாலை போட்டு வரவேற்றார்கள் என்று பார்ப்பனப் பத்திரிகைகள் சில ஆண்டுகளாக மகிழ்ச்சியுடன் பிரசுரிக்கின்றன. தமது மதக் கோட்பாட்டைத் தாண்டி புதிதாகப் பல இடங்களில் இசுலாமியர்கள் இப்படிச் செய்வதற்குக் காரணம் இந்து மதவெறி குறித்த அவர்களது அச்சம்.

ஒரு கடையில் தெய்வங்கள் படம் வைப்பதும், வைக்காததும் அவரவர் விருப்பம். கிறித்தவமும், இசுலாமும் ஓரிறைக் கோட்பாட்டு மதங்கள் என்பதால் பொதுவாக வேறு கடவுளர்களை அவர்கள் வணங்குவதில்லை. மேலும் ‘ஒரு கடவுள் கொள்கை’ என்பது புராதன இனக்குழு – வழிபாட்டிலிருந்து பிறந்து வளர்ந்து முன்னேறிய மதத்தின் முக்கியமான அம்சமாகும். சாதியத்தில் வேறூன்றியிருக்கும் பார்ப்பனிய இந்துமதம் – மதம் என்ற வகையில் பின்தங்கியே இருக்கிறது. காரணம் அது பல கடவுள் மதமாக இருக்கிறது.

இந்து மதத்தில் ஏற்கனவே முப்பது முக்கோடி தேவர்கள் இருக்கும்போது அல்லாவையும், இயேசுவையும் சேர்த்துக்கொள்வதில் பிரச்சினை இல்லை. மேலும் இந்து வியாபாரிகளின் கடையிலிருக்கும் கடவுளர்கள் கூட சாதிக்கேற்பவே மாறுபடுவார்கள். மதுரை வீரன், முனியாண்டி, சுடலைமாடன், இசக்கி, மாரியாத்தா போன்ற  சூத்திர – பஞ்சமச் சாமிகளை – ஐயர், ஐயங்கார், சைவப்பிள்ளை, ரெட்டி, நாயுடு, முதலியார் கடைகளில் பார்க்க முடியாது. பிள்ளையார் கொழுக்கட்டையை விழுங்குவதற்காக கருணாநிதியை வம்படியாக அழைக்கும் இராம.கோபாலன், ஆத்தாளுக்குப் படைக்கப்படும் ஆட்டுக்கறியை என்றைக்கும் உண்ண மாட்டார்.

இந்தக் ‘கடைப் பிரச்சினை’யின் மையம் என்ன? ஒரு வியாபாரியின் நோக்கம் லாபம் ஈட்டுவதுதான். தமது மதத்துக்குச் சேவை செய்வது அல்ல. அதைப் போல வாங்குகின்ற நுகர்வோருக்கு பொருளின் தரம், மலிவு விலை, கடைக்காரர் அளிக்கும் சேவை – இவைதான் முக்கியம். தத்தமது மதக் கடைகளில் வாங்கினால் ‘சொர்க்கம்’ கிட்டும் என்பதல்ல.

கடை வைத்து விற்பனை செய்யும் இந்துக்களைவிட வாங்குகின்ற நுகர்வோரான இந்துக்கள்தான் கோடிக்கணக்கில் அதிகம். இங்குதான் கீதா ரகசியம் போன்ற சூட்சுமம் உள்ளது. பொருள் வாங்கும் கோடிக்கணக்கான ‘இந்துக்களின்’ நலனை முன்னிறுத்தி ஆர்.எஸ்.எஸ்.-ம் இந்து முன்னணியும் தமது முழக்கத்தை முன் வைக்கவில்லை.

அப்படி வைப்பதாக இருந்தால் ‘இந்துக்களுக்கு மட்டும் விற்பனை செய், இந்துக்களுக்கு மட்டும் தள்ளுபடி கொடு’ என்று இந்து முதலாளிகடம் கேட்க வேண்டும். கேட்காததற்குக் காரணம், பார்ப்பன, பனியா தரகு முதலாளிகள்தான். இவர்களே ஆர்.எஸ்.எஸ். கும்பலின் எசமானர்களாக உள்ளனர். ‘எங்கள் இந்து முதலாளிகள் லாபம் பார்க்க இந்துக்களே உதவுங்கள்’ என்று அவர்களால் கோர முடியாது. அதனால்தான் ‘இந்து உணர்வைக் காட்டும்  வகையில் இந்துக் கடைகளில் வாங்குங்கள்’ என்று மக்களிடம் கோருகின்றனர். ஆக, இந்து உணர்வு மக்களுக்கும், வியாபாரத்தின் இலாபம் முதலாளிக்கும் சரியாகப் போய்ச் சேருகின்றது. மொத்தத்தில் முதலாளி ஆதரவு, முசுலீம் வெறுப்பு, மக்களிடம் மதமெறி என ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிக்கின்றனர்.

இந்து மதவெறியர்களுக்கு ஆதரவாக இருக்கும் அதே நேரத்தில், மதப்பிரிவினையால் தமது இலாபத்தை இழக்க முதலாளிகளும், வியாபாரிகளும் தயாராக இல்லை. முசுலீம் – கிறித்தவர்களுக்கு விற்காதே, ரம்சான், கிறிஸ்துமஸ், புத்தாண்டில் தள்ளுபடி விற்பனை செய்யாதே என இந்து முன்னணி தங்கள் முதலாளிகளிடம் கேட்க முடியுமா? புற்றீசல் போல் இந்தியாவை மொய்த்து வரும் பன்னாட்டு நிறுவனங்களை ‘கிறித்தவன்’ எனத் தடை போட முடியுமா? வளைகுடா நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் கச்சா எண்ணெயை ‘இசுலாமியப் பெட்ரோல்’ என்று ஒதுக்க முடியுமா? முன்பு விலையேற்றத்தைத் தடுக்க வெங்காயத்தை ஈரானிலிருந்தும், சர்க்கரையை பாகிஸ்தானிலிருந்தும் இறக்குமதி செய்தது பா.ஜ.க. அரசு. வெங்காயம், சர்க்கரையை மட்டும் வெட்கம் கெட்டுத் தின்னலாமா?

இப்படி ‘வியாபாரத்தில்’ இந்து மத வெறியைத்  திணித்தால் சிக்கல் அவர்களுக்குத்தான். பொருள் வியாபாரத்தில் மட்டுமல்ல, ‘உழைப்பு வியாபாரத்திலும்’ இந்து உணர்வைப் புகுத்தினால், கீழ்க்கண்டவற்றை இந்து முன்னணி கண்டிப்பாகச் செய்ய வேண்டும்.

‘இந்துக்களே துபாய்க்கும், சவுதி அரேபியாவுக்கும் போகாதீர்கள்’ என்று தடுக்க வேண்டும்; சென்னை – அண்ணா மேம்பாலத்திற்கு அருகில் இராப்பகலாக வரிசையில் நின்று ‘கிறித்தவ’ அமெரிக்காவிற்குப் போகத் துடிக்கும் பார்ப்பன அம்பிகளைப் பிடித்து உதைக்க வேண்டும். கிறித்தவன் கடையில் பொருள் வாங்குவதைவிட அவன் நாட்டிற்குக் கைகட்டிச் சேவகம் செய்வது இழிவில்லையா? மாறாக அமெரிக்காவிலிருக்கும் அம்பிகளிடம் வசூல் செய்வதற்கென்றே பல்வேறு பினாமி அமைப்புகளை அங்கே ஆர்.எஸ்.எஸ். நடத்தி வருகிறது.

இவையெல்லாம் போகட்டும், பார்ப்பன – பனியா – மார்வாடி முதலாளிகள் தங்கள் பொருள்களை ‘கிறித்தவப்’ பெயர்களில் விற்கிறார்களே, அதையாவது தடுக்கலாமே? டி.வி.எஸ்.அய்யங்கார் அறிமுகப்படுத்தியிருக்கும் சாமுராய், ஸ்கூட்டி போன்ற இருசக்கர வண்டிகளெல்லாம் இந்துப் பெயர்களா? விஜய் மல்லையாவின் மெக்டோவல், பிளாக்நைட் போன்ற சாராய அயிட்டங்களுக்கு ராமன் – கிருஷ்ணன் என்று பெயர் மாற்றக் கேட்டுப் பார்க்கலாமே? ஆணுறைகளில் கூட, நிரோத், பியல்டா, டியூரக்ஸ், மூட்ஸ் போன்ற கிறித்தவ சமாச்சாரங்களைத் தவிர்த்துவிட்டு, காமசூத்ரா போன்ற இந்து மணம் கமழும் ஆணுறைகளைத்தான் வாங்க வேண்டும் என்று இந்து முன்னணி தட்டி எழுதி வைக்க வேண்டாமா?

வியாபாரிகளை இந்து – முசுலீம் எனப் பிரிக்கும் ஆர்.எஸ்.எஸ். இந்து வியாபாரிகளைச் சாதிவாரியாகப் பிரிக்கத் தயாரா? பார்ப்பனர், பனியா, மார்வாடி, சேட், செட்டியார் போன்ற சாதிகள் மட்டுமே தரகு முதலாளிகளாக இருக்கும் மர்மம் என்ன?

– தொடரும்.

_________________________இதுவரை …………………………………………..

_________________________________________________

வினவுடன் இணையுங்கள்

 1. மதங்களில் பெயர்களால் நாட்டை பிளவுபடுத்தும் நரிகள் இவர்கள்… இந்து கடைகளில் வாங்க வேண்டும் கோஷம் போடும் இவர்கள்.. மேலைநாட்டினரினால் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை தன் அன்றாட வாழ்க்கையில் ஏன் உபயோகித்துக் கொண்டு இருக்கிறார்கள்?????… சிந்திப்பார்களா அந்த மடையர்கள்!!!!

 2. மேலைநாட்டினரினால் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை தன் அன்றாட வாழ்க்கையில் ஏன் உபயோகித்துக் கொண்டு இருக்கிறார்கள்?///
  .
  .
  இதையேதானே இஸ்லாமியர்களும் செய்கின்றனர்?செய்வதோ மேற்கத்திய நடைமுறைக்கு எதிரி!ஆனால் இவர்கள் நாள்தோறும் செல்போன் கம்ப்யூட்டர் இன்டர்நெட் ஆகியவை அரபு நாடுகள் கண்டுபிடித்தவையா?

  • இச்லாமியர்கள் எந்த துன்டு சீட்டுகள் முலமாக அவர்கள் பன்டிகையின் பொழுது இச்லாமியர்களின் கடைகளிளே வாங்க வேண்டும் என்று குருவது இல்லை.

   • இந்து முன்னணி கொடுத்ததாக எந்த துண்டு சீட்டும் எனக்கோ எனக்கு தெரிந்தவர்களுக்கோ வரவில்லையே!ஒரு வேலை வஞ்ச புகழ்ச்சியாக வினவுக்கு மட்டும் சீட்டு கொடுத்திருப்பரோ?

    • மதனி நம் அண்ணி அல்ல.இந்து கடைகளில் வாங்குங்கள் என்று வண்ணாரப்பேட்டை எம்சி ரோட்டில் ஒரு கடையில் துணி வாங்கக் கூடாது என்று நோட்டீஸ் ஒட்டிய வரலாறு உண்டு.

 3. இதைஎஎல்லாம் சாதாரண இந்துக்கள் படிப்பதே இல்லை!தேடி பிடித்து படிக்கும் வினாவை நினைத்தால் சிப்பு சிப்பா வருது!
  மேலும் அது உண்மைதானே?ஹிந்து கடையில் மற்ற தெய்வங்கள் படமும் இருக்கும்!ஆனால் கிறித்துவ இஸ்லாமிய கடைகளில் அது உண்டா?இல்லை அது உண்மைதானே?

  • //இதைஏல்லாம் சாதாரண இந்துக்கள் படிப்பதே இல்லை!தேடி பிடித்து படிக்கும் வினாவை நினைத்தால் சிப்பு சிப்பா வருது!//

   ஆனால் பிரச்சனை என்றால் அடிவாங்குவதம்,சாவதும் சாதாரண இந்துக்கள் தான்… அப்படி தானே?

   • உயர் ஜாதிக்காரன் சாவி கொடுத்துவிட்டு ஆடவிட்டுவிடுகிறான் குளு குளு அரையில இருந்து வேடிக்கை பார்க்கிறான்

    கீழ் சாதி ஹிநது சாவி கொடுத்த பொம்மையை போல் ஆடுகிறான்

 4. நீங்கள் தெரிவில் நின்று கொண்டு மக்கள் கையில் கொண்டு செல்லும் பைகளை பாருங்கள்!இஸ்லாமியர்களின் கையில் இருக்கும் பைகள் இஸ்லாமியர்கள் வைத்திருக்கும் கடைகளிலேயே அது வாங்கபட்டிருப்பதை கட்டும்!அவர்கள் இஸ்லாமியர்கள் யாரேனும் கடை வைத்திருந்தால் அங்கேதான் வாங்குவர்!இது எல்லா மதங்களுக்கும் பொது!அவர்கள் தங்கள் சமூக மக்களின் கடைகளில் வாங்குகிறார்கள்!இதில் என்ன தவறோ!அப்படி பாத்தா எல்லாரையும் கண்டிக்க வேண்டியதுதான்!

  • சாதாரண மக்கள் யாரும் சாதி பார்த்து மதம் பார்த்து கடை களுக்கு போவதில்லை , எப்படி உங்களிடம் பழகுறார்கள், விலை, கடை இருக்கும் தொலைவு , இந்த மாதிரி பார்த்துதான் கடைகளுக்கு போகிறார்கள் . எங்கள் ஊரில் இருக்கும் அண்ணாச்சி மற்றும் இன்ன பிற சாதி கடைகளை விட அங்கே இருக்கும் இஸ்லாமியர் கடைகளுக்கு தான் பிராமிணர்கள் உள்பட பலரும் போகிறார்கள் ,காரணம் அணுகும் முறை விலை போன்ற விஷயங்கள்

  • எந்த தெருவில்நின்ரு பார்தார்நன்பர். சரவனா ஷ்டொர் போஇ பாருங்கல்.

   • இஸ்லாமியர்களின் கடைகளிலேயே இஸ்லாமியர்கள் பொருள்கள் வாங்குகிறார்கள் என்பது ய்தர்த்தத்திற்கும் அறிவியலுக்கும் புறம்பானது. ஒரு ஊரின் மொத்த இஸ்லாமிய ஜனத்தொகையின் வாங்கும் சக்தியுடையவர்களின் தேவையை ஒன்றிரண்டு இஸ்லாமிய கடைகள் பூர்த்திசெய்கின்றது என்பது முட்டாள்தனமான வாதம். மேலும் இது முதலாளித்துவ விதிக்கே புறம்பானது.

 5. சர்வர்கர் வழி வந்த வினை செல்வங்க்லே உங்கள் இந்து கடைகளில் விற்பது அனைதும் கீரூசுதுவர்கள் உற்பத்தி செய்த பொருள்களே. HLL, P&G, Colgate போன்ற கீரூசுதுவ நாட்டிள் இருந்து வந்த நிருவனங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை வாங்க மருத்து விடுவீர்களா.

 6. அன்பான தமிழா உறவுகளே சாவுத தண்டனையை எதிர் நோக்கி இருக்கும் குற்றமற்ற சாந்தன், முருகன், பேரறிவாளனை காப்பாற்ற விரும்பினால் நீங்கள் ஒரே ஒரு கீழ் கண்ட எண்ணுக்கு (“மிஸ்டு கால்” ) அழைப்பு கொடுத்து துண்டிக்கவும் .

  9282221212

  நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு அழைப்பும் மூவர் உயிரை காப்பாற்ற நிச்சயம் உதவும். உங்கள் அழைப்பு தானியங்கி முறையில் தானாகவே இணைப்பு துண்டிக்கப்படும்.

  நம்பிக்கையோடு உடனே துவக்குங்கள் உங்கள் பணியை…

  • அப்புறம் அந்த நம்பர்களை டிரேஸ் செய்து க்யூ பிராஞ்ச் போலீஸ் வரும்! எதுக்கு வம்பு?!

 7. //அவர்கள் இஸ்லாமியர்கள் யாரேனும் கடை வைத்திருந்தால் அங்கேதான் வாங்குவர்!இது எல்லா மதங்களுக்கும் பொது!அவர்கள் தங்கள் சமூக மக்களின் கடைகளில் வாங்குகிறார்கள்!இதில் என்ன தவறோ!அப்படி பாத்தா எல்லாரையும் கண்டிக்க வேண்டியதுதான்!
  // இதே பொந்து மதத்து ஆட்களின் கையில் இருப்பவற்றை உற்றுப் பார்த்தால் அவனவன் சாதிக்காரன் கடையில் வாங்கியது இருக்கும். இதுக்கு என்ன சொல்வாரு போக்கன்?

  • அப்படி பாத்தா எல்லாரையும் கண்டிக்க வேண்டியதுதான்///
   .
   .
   இந்த வரியை ஏனோ நீங்கள் படிக்கலியா?ஹிந்து மதம்னு சொல்ல வரலை!அப்போ நானும் குஸ்லாம் என சொல்கிறேன்!எல்லாரும் அப்படிதான்!யாரும் விதிவிலக்கில்லை!ஆனால் கண்டிக்கபடுவது இந்துக்கள் மட்டுமே!அதைதான் நான் சொல்றேன்!

   • //இதே பொந்து மதத்து ஆட்களின்//
    .
    .
    அடுத்த மதத்துக்கு மரியாதை கொடுக்க கத்துக்கோ மொதல்ல!

    // எல்லா மதத்துக்கு இதுதான் ‘மரியாதை கிடையாது’ குஸ்லாமுக்கும் அதான்.

    //இந்த வரியை ஏனோ நீங்கள் படிக்கலியா?ஹிந்து மதம்னு சொல்ல வரலை!அப்போ நானும் குஸ்லாம் என சொல்கிறேன்!எல்லாரும் அப்படிதான்!யாரும் விதிவிலக்கில்லை!ஆனால் கண்டிக்கபடுவது இந்துக்கள் மட்டுமே!அதைதான் நான் சொல்றேன்!
    // பதிவை படிக்கலையா? ஆர் எஸ் எஸ் பன்றிகளின் உளறல் எந்தளவுக்கு பொய்யானது, அயோக்கியத்தனமானது என்பதைதான் பதிவு அம்பலப்படுத்துகிறது. சோ கால்டு இந்து எல்லாக் கடவுள் படத்தையும் வைச்சிருக்கான் என்ற ஆர் எஸ் எஸ் உளறலை அம்பலப்படுத்தித்தான் ஒடுக்கப்பட்ட சாதி தெய்வங்களை பாப்பார இந்து வைச்சிக்கிறதில்லையே ஏன் என்று கேட்டேன்.

  • இதே பொந்து மதத்து ஆட்களின்//
   .
   .
   அடுத்த மதத்துக்கு மரியாதை கொடுக்க கத்துக்கோ மொதல்ல!

 8. //”இந்துவியாபாரிகளின்கடையில்எல்லாமதத்தெய்வங்களும்இருக்கும். // எல்லா தெய்வமும்னா? அவனவன் சாதிய சேர்ந்த தெயவமும், பாப்பார தெய்வங்களின் படமும்தான் இருக்கும். முனிசாமி, மாயாண்டி, அய்யனார், காத்தாவராயன், மதுரை வீரன் படங்களை பாப்பான் கடையில பாக்க முடியுமா? அப்போ அந்த தெய்வங்களும் அதை கும்பிடும் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களும் இந்து இல்லையா மிஸ்டர் போக்கன்?

  • எல்லா தெய்வமும்னா? //
   .
   .
   கிறிஸ்து+மதினா+ஒரு இந்து சாமி படம்!
   .
   .
   பாப்பார தெய்வங்களின் ////
   .
   .
   ஆமா பாலைவன தெய்வங்களை நீ கும்பிடும்போது மத்தவன் என்ன கும்பிட்டா உனக்கேன்னா நோகுது?

  • அப்போ அந்த தெய்வங்களும் அதை கும்பிடும் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களும் இந்து இல்லையா மிஸ்டர் போக்கன்?//
   .
   .
   அய்யா இவர்களும் இஸ்லாமியர்கள் இல்லையா மிஸ்டர் நூறு!
   https://www.vinavu.com/2009/08/24/ahmadiyya/

   • //அய்யா ஹிந்து மதம் பற்றி தெரியாம விமர்சிப்பது தவறு!

    // இந்து என்றால் சாதிதான், சாதி வெறிபிடிச்ச அலைகிறாய் என்று சொல்வது விமர்சனம் அல்ல. அது உண்மை, யாதார்த்தம், குற்றச்சாட்டு, இந்து என்று சொல்லிக்கிறவன் ஒவ்வொருத்தனுக்கும் அவமானம்.

 9. ஹிந்து மதத்தை அடுத்த மதத்தவர் எப்படி வேணும்னாலும் பேசலாம்!ஆனால் நாங்கள் அதற்கு நாகரிக முறையில் பதில் அளிக்க முயன்றால் உடனே கமன்டு! “கட்டு”
  *
  எங்க ஊரில் ஒரு இசுலாமியன் சூப்பர் மார்கட் திறந்ததால் சுற்றி இருந்த ப்ள சிறு வியாபாரிகள் எல்லாரும் காலி!இதை பற்றியும் வினவு சொல்லுமா?

 10. //எங்க ஊரில் ஒரு இசுலாமியன் சூப்பர் மார்கட் திறந்ததால் சுற்றி இருந்த ப்ள சிறு வியாபாரிகள் எல்லாரும் காலி!இதை பற்றியும் வினவு சொல்லுமா?
  // எங்க ஊரு மட்டுமில்ல இந்தியாவுல எங்த கிராமத்துலயும், சின்ன நகரத்துலயும் தாழ்த்தப்பட்டவன் கடையே திறக்க முடியாது. அப்படி திறந்து நல்லபடியா நடத்தினான்னு வைச்சுக்க அப்போ வருவான் பாரு ஒரு இந்து அவன் தான் சாதி இந்து. அவன் என்ன முஸ்லீமா? யோவ் உளறுவதை விட்டுட்டு புள்ளக் குட்டிகளயாவது மனுசனா வளருங்க. சாதி வெறிபிடிச்ச மிருகமா வளக்காதீங்க

 11. //ஆமா பாலைவன தெய்வங்களை நீ கும்பிடும்போது மத்தவன் என்ன கும்பிட்டா உனக்கேன்னா நோகுது?
  // ஓ அக்கவுண்ட் அகமதுன்னு பேர பாத்து கன்பூசிங்கா…. ஓகே என் பேர மாத்திக்கிறேன் ‘இனிப்புக்கடை முருகன்’ ஓகேவா? பெரிய புடுங்கியாட்டம் பேசுற நீ ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதியினரின் தெய்வங்கள் மீது(மக்கள் மீதும் தான்) தீண்டாமை/பாராமையை திணிக்கும் பாப்பார இந்து பற்றி வாய் திறவாமல் மூடிக் கொண்டு இருப்பது ஏன்?

 12. இந்து என்றால் சாதிதான், சாதி வெறிபிடிச்ச அலைகிறாய் என்று சொல்வது விமர்சனம் அல்ல. அது உண்மை, யாதார்த்தம், குற்றச்சாட்டு, இந்து என்று சொல்லிக்கிறவன் ஒவ்வொருத்தனுக்கும் அவமானம்.//
  நூற்றுக்கு நூறு உண்மை.

  • சரியாகச் சொன்னீர்கள்! இன்னும் எத்தனை நாட்கள்தான் இந்து என்று ஏமாற்றுவார்களோ தெரியவில்லை, இந்து என்று சொல்லும் ஒவ்வொருத்தனும் உண்மையிலேயே உழைக்கும் மக்களின் விரோதிதான். மனதளவில் இதை உணர்ந்தாலும் உணராவிட்டாலும் உண்மை இதுதான், இந்துமதம் அழிந்தால்தான் இந்தியாவைப் பொருத்தவரை மக்கள் சுயமரியாதையுடன் வாழமுடியும்.

 13. 1990ஆம் ஆண்டு சென்னை நங்கநல்லூரில், பல பொருட்களை வாங்க கூடாது… சில பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என நோட்டிஸ் கொடுத்தார்கள்… ஆர்.எஸ்.எஸ். அம்பிகள்… அதில் கோல்கேட், குளசப் போன்ற பல் பேஸ்ட்களை வாங்க கூடாது எனவும்… பபுல் எனும் பேஸ்டை வாங்க வேண்டும் என எழுதி இருந்தது… இது எல்லா பொருட்களுக்கும்… நிறுவனத்தின் பெயரோடு வந்திருந்தது… பின்னாளில் பாஜக ஆட்சிக்கு வந்த பின் பன்னாட்டு நிறுவனத்துடன் கூட்டு வைத்திருக்கும் இந்துஸ்தான் யுனிலிவர் கம்பெனியிடம்… பொறுக்காமலா இருந்திருப்பார்கள்… பாஜக, ஆர்.எஸ்.எஸ். அம்பிகள்…

  இணையத்தில் இருக்கும் ஒரு மூத்த வடகலை நாம பார்ப்பன அம்பி… மருத்துவத்திற்கு கூட பார்ப்பன பாஜக டாக்டரிடம் காட்டுகிறேன்… சாதி வெறியை ஏற்று கொள்ளும் போது…

  நாத்திகர்கள், பார்ப்பன எதிர்ப்பாளர்கள் சிகிச்சைக்கு வந்தால் மெதுவாக கொல்லும் விசத்தை கொடுத்து கொல்ல வேண்டும்… தனது இயக்க… இயக்க ஆதரவு டாக்டர்களுக்கு ஆணையிட்டு இருந்த ஆர்.எஸ்.எஸ்…. பொருட்கள் வியாபாரத்தில்… பார்ப்பனர் சாதி/மத வெறி விசத்தை கக்குவது இயல்பானதுதானே?

 14. my father’s best friend Dr.Ramamurthy in Tenkasi,Tirunelveli district,a vadaman iyer and landlord and RSS member,does service for two rupees consultation fees and sometimes not even that if the patient is very poor.Thangam Krishnamurthy hospital run by a bunch of vadaman iyers,including two FRCS practiioners from London have a multi speciality hospital right in the heart of Tenkasi town and do medical service inluding surgery at prices 10 times lower than what they charge u at Apollo/Isabella or any catholic missionary hospital anywhere in Tirunelveli/TN.

  My grandfather Mr.Sundaram Iyer,of Ayikudy village regularly goes to Mr.Kuthoos,a muslim doctor in tenkasi and he swears only by the name of Mr.Kuthoos.

  I,Subramanian have always been treated by Dr.Suresh David,Christian Nadar doctor from Nagercoil in Kodambakkam and i would prefer to go to him always if i can and he knows since i was 6.

  Tamizh Kural,RSS would never have said or done anything like that.I can bet on it and u please stop giving random bullshit based what some random individual said or did.

  I ll go on to say that u r lying right through the teeth.

  • ஆதாரத்துடன் பேசும் சுப்பிரமணி சார் ,டாக்டர் ராம மூர்த்தி இரண்டு ரூபாய் பீஸ் வாங்கியது எந்த காலத்தில்?அப்போது மற்ற டாக்டர்கள் எவ்வளவு பீஸ் வாங்கினார்கள்?
   ///.Thangam Krishnamurthy hospital run by a bunch of vadaman iyers,including two FRCS practiioners from London have a multi speciality hospital right in the heart of Tenkasi town and do medical service inluding surgery at prices 10 times lower than what they charge u at Apollo/Isabella or any catholic missionary hospital anywhere in Tirunelveli/TN. ///
   சென்னை அப்போலோவுடன் தென்காசி மருத்துவமனையை ஒப்பிடுவது சரியா?
   தென்காசி தங்கம் கிருஷ்ணமூர்த்தி மருத்துவ மனையை விட திருநெல்வேலியில் எந்த மிசனரி மருத்துமனையில் பத்து மடங்கு அதிக விலையில் மருத்துவ சேவை செய்கிறார்கள்?

 15. i remember him doing it as late as 2002 and now he doesn’t practice i believe,nonetheless which doctor sits in tenkasi and does it when he could have easily moved to madras in the 80s and be something great now.

  i never said missionary hospitals are devils/exploiters or anything,i am just responding to people here who seem to claim exorbitant stupid blatant lies that there are no hindus or non christians in medical service.

  i agree 10 times is a high number but it is definitely 2-3 times lesser than catholic hospitals i know in tirunelveli.

 16. ஐய்யா கொம்முனிஸ்டுகளே,இந்த ஹாரம்,ஹலால் கரி கடை விவரங்களை ஏன் எழுத்துவதில்லை.ஹிந்துக்கள் வைத்திருக்கும் கரி கடைகளில் முஸ்லீம்கள் கரி வாங்கி பார்ததே கிடயாது.இதை பற்றி ஏன் வினவு எழுத்துவதில்லை?,இதுவும் ஒரு வகயில் தீண்டாமைதானே?.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க