privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்உர விலையேற்றம்: விவசாயத்தைச் சூறையாடும் தனியார்மயத் தாக்குதல்!

உர விலையேற்றம்: விவசாயத்தைச் சூறையாடும் தனியார்மயத் தாக்குதல்!

-

இந்திய விவசாயம் பெரும்பாலும் இரசாயன உரங்களையே நம்பியுள்ளது. போதிய அளவு மழை பெய்திருந்தாலும், தற்போது உரத் தட்டுப்பாடு  விலையேற்றத்தால்  இந்திய விவசாயிகள் தத்தளிக்கின்றனர். குறிப்பாக, காவிரி டெல்டா மாவட்டங்களின் தற்போதைய சம்பா நெல் சாகுபடி கடுமையான உரத் தட்டுப்பாட்டில் சிக்கியுள்ளது. பயிருக்கு மணிச்சத்தும் தழைச்சத்தும் கிடைக்க சம்பா நெல் நடவுப் பணியின் போது டி.ஏ.பி. உரம் அடியுரமாக இடப்படும். ஆனால் டி.ஏ.பி. உரம் கிடைக்காமலும், உரத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாலும் பெரும் அவதிக்கு விவசாயிகள் ஆளாகியுள்ளனர். கடந்த ஆண்டு 50 கிலோ எடை கொண்ட டி.ஏ.பி. உரம் ரூ.585க்கு விற்பனை செய்யப்பட்டது. இது தற்போது ரூ.825 வரை விற்கப்படுகிறது. மேலும் உயரும் என்று கூறப்படுகிறது. டி.ஏ.பி. உரத்தில் ஏற்கெனவே 18:46 என்ற அளவில் இருந்த மணிச்சத்து, தழைச்சத்து விகிதம் தற்போது 16:44 என்ற அளவில் உரக் கம்பெனிகளால் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்கெனவே 100 கிலோ பயன்படுத்தப்பட்ட இடத்தில்,  தற்போது 110 கிலோ உரத்தைப் பயன்படுத்த வேண்டியுள்ளது.

தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து என்ற மூன்று வகையான உரங்கள் விவசாயத்திற்கு அடிப்படையான உரங்களாகும். இதில் முதலிரண்டு வகை உரங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன. சாம்பல் சத்து எனப்படும் பொட்டாஷ் உரம் மட்டும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் உரங்களுக்கு, ஆண்டுதோறும் பல்லாயிரம் கோடி ரூபாய்களை மானியமாக ஒதுக்கும் இந்திய அரசு, அவற்றை உர நிறுவன முதலாளிகளிடமே நேரடியாகக் கொடுத்து வருகிறது.

இதுவரை உரங்களின் விலையைக் கட்டுப்படுத்தி வந்த இந்திய அரசு, இந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில், சௌமித்ரா சௌத்திரி கமிட்டியின் பரிந்துரையின் பேரில் உரங்களின் விலைகளை உரக் கம்பெனிகளே தீர்மானித்துக் கொள்ளலாம் என்று  அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, உர நிறுவன பெருமுதலாளிகள் இணைந்து உருவாக்கியுள்ள தங்களது கூட்டமைப்பின் மூலம் (கார்ட்டெல்கள்) உரங்களின் விலையைத் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றியுள்ளனர். ஒரு மூட்டை டி.ஏ.பி.யின் விலை ரூ. 480லிருந்து ரூ.900ஆக உயர்த்தப்பட்டுள்ளது. யூரியாவின் விலையும் பத்து சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொட்டாஷை  கள்ளச் சந்தைக்காரர்கள் பதுக்கிக் கொண்டு, செயற்கையாக தட்டுப்பாட்டை ஏற்படுத்தி பொட்டாஷின் விலையை ரூ. 290இலிருந்து ரூ. 450ஆக உயர்த்தியுள்ளனர். கலப்பு உரம் தயாரிக்க பொட்டாஷ் அத்தியாவசியமென்பதால், கலப்பு உரத்தின் விலை ரூ. 320லிருந்து ரூ.720ஆக, அதாவது இருமடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, தமிழ்நாடு முழுவதும் 26 உர நிறுவனங்கள் பொட்டாஷ் சேர்க்காமலேயே கலப்பு உரம் என்று சொல்லி விவசாயிகளிடம் மோசடி செய்து விற்றுள்ளன.

சிமென்ட் கம்பெனிகள் எவ்வாறு கார்டெல் அமைத்துக் கொண்டு அரசையும் மக்களையும் ஆட்டிப் படைக்கின்றனவோ, அதேபோலத்தான் இன்றைக்கு உரக் கம்பெனி கார்டெல்களும் செயல்படுகின்றன. உர நிறுவனங்கள் மட்டுமன்றி, உர விற்பனை ஏஜென்சிகளும் விவசாயிகளைச் சுரண்டிக் கொழுக்கின்றன. இந்தத் திடீர் விலை உயர்வைப் பயன்படுத்தி உரங்களைப் பதுக்கி வைத்துக் கொண்டு, செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கியும், பதுக்கிய உரங்களை மிக அதிக விலையில் விற்றும் கொள்ளை லாபமடிக்கின்றனர். இவ்வாறு கந்துவட்டிக்காரன் போல உரமுதலாளிகளும், ஏஜென்டுகளும் இந்திய விவசாயிகளை ஒட்டச் சுரண்டுகின்றனர்.

உரவிலையேற்றம் : விவசாயத்தைச் சூறையாடும் தனியார்மயத் தாக்குதல்!

இந்திய அரசு, விவசாயிகளின் நலனைக் காப்பதாகக் கூறிக் கொண்டு  ஆண்டுதோறும் ஒரு இலட்சம் கோடி ரூபாய் வரை உர மானியமாக உரக் கம்பெனிகளுக்குக் கொடுக்கிறது. இதுவும் போதாதென்று, மோசடியான கணக்குகளைக் காட்டி உரக் கம்பெனிகள் கோடிகோடியாக ஊழல் செய்திருப்பதை மத்திய தணிக்கைக் கட்டுப்பாட்டு அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. ஆனாலும், உர முதலாளிகளின் கொள்ளைக்குக் கூட்டாளியாக உள்ள அரசு, இவர்கள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

“”கடந்த இரண்டு ஆண்டுகளாக உரம் தொடர்பாக மத்திய அரசு எடுத்து வரும் கொள்கை முடிவுகள் அரசுக்கும் உர உற்பத்தியாளர்கள் மற்றும் கள்ளச்சந்தைக்கும் உள்ள இரகசிய தொடர்பைக் காட்டுவதாக உள்ளது” என்று சி.பி.எம். கட்சியின் விவசாய சங்கத் தலைவர் வரதராஜன் கூறுகிறார்.

உற்பத்திச் செலவைவிடக் கூடுதலாக 50 சதவீத விலையை வேளாண் உற்பத்திப் பொருட்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று தேசிய விவசாயிகள் ஆணையம் அரசுக்குப் பரிந்துரைத்தது. அதன்படி பார்த்தால், ஒரு குவிண்டால் நெல்லுக்கு 2,000 ரூபாய் வரை அரசு தர வேண்டும். ஆனால், தற்போது நெல்லுக்குக்  கிடைப்பதோ குவிண்டாலுக்கு ரூ. 1,100 மட்டும்தான். நெல்லுக்கும் வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கும் உரிய விலை நிர்ணயம் செய்ய மறுக்கும் அரசு, உர முதலாளிகளின் பரிந்துரைகளை மட்டும் உடனே ஏற்றுச் செயல்படுத்துகிறது.

விவசாயத்திற்கு வழங்கப்பட்டுவரும் மானியங்களைப் படிப்படியாகக் கைவிடுவது என்ற தனியார்மயக் கொள்கையை ஏற்று நடத்திவரும்  அரசு, இப்போது உர விலையை முதலாளிகளே தீர்மானித்துக் கொள்ளையடித்துக் கொள்ள தாராளமாக அனுமதித்துள்ளது. இந்நிலையில், சில விவசாய சங்கங்கள் உரத்திற்கான மானியத்தை விவசாயிகளிடமே கொடுக்க வேண்டும் என  கோரிக்கை வைக்கின்றன. முதலாளிகளுக்குக் கொள்ளையடிக்க சுதந்திரம் கொடுத்துவிட்டு, மானியத்தை விவசாயிகளிடம் கொடு என்பது, தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பதைப் போலத்தான்.

ஏற்கெனவே தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் (100 நாள் வேலைத் திட்டம்) காரணமாக விவசாய வேலைகள் செய்ய ஆட்கள் கிடைப்பது அரிதாகி வருவதால், சிறு விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காமலும், விலை வீழ்ச்சியாலும் கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். சென்ற ஆண்டு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.14 ஆயிரம் விற்ற மஞ்சளின் விலை இந்த ஆண்டு ரூ.4 ஆயிரம்தான். இவ்வாறு பல்வேறு நெருக்கடிகளைச் சுமந்து கொண்டிருக்கும் விவசாயிகளின் முதுகில் பாறாங்கல்லை ஏற்றி வைத்ததுபோல, வரைமுறையற்ற உர விலைக் கொள்ளை எனும் புதிய தாக்குதலை விவசாயிகளின் மீது இந்திய அரசு தொடுத்துள்ளது. விவசாயிகள் விவசாயத்தை விட்டு ஓட்டம்பிடிக்கும் வண்ணம் தனியார்மயமும் தாராளமயமும் சேர்ந்து தொடுத்திருக்கும் இத்தாக்குதலை முறியடிக்காமல்,  இந்தியாவின் ஆகப் பெரும்பான்மையான விவசாயிகளையோ, விவசாயத்தையோ  காப்பாற்ற முடியாது.

________________________________________________

புதிய ஜனநாயகம், நவம்பர் – 2011

_________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. ஊருப்பக்கமெல்லாம் வராத. அங்க ஒண்ணுமே இல்லை. எல்லாம் சுடுகாடாப் போடுச்சி. இப்பல்லாம் விவசாயத்துல ஒண்ணுமே தேறலை. பயிரு வெதைச்சா பத்துப் பைசா கெடைக்கமாட்டேங்குது. உரம் வெலை ஏறுது, வெதை வெலை ஏறுது. நல்லாத்தான் வெளையுது. ஆனா பத்துபைசா வீட்டுக்கு வரமாட்டேங்குது. அதான் எப்படின்னு புரியலை! பத்து வருஷமாப் பட்டுப் பட்டு, சீ போன்னு விவசாயத்தையே வுட்டுட்டேன். ஆனா வயிருன்னு ஒன்னு இருக்குதே? என்னை நம்பி எட்டு ஜீவன். அதான் இந்த ரயில் ரூட்டுல சுண்டல் விக்கறேன்.
    http://puthiyapaaamaran.blogspot.com/2011/12/blog-post_21.html

  2. ////இந்தத் திடீர் விலை உயர்வைப் பயன்படுத்தி உரங்களைப் பதுக்கி வைத்துக் கொண்டு, செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கியும், பதுக்கிய உரங்களை மிக அதிக விலையில் விற்றும் கொள்ளை லாபமடிக்கின்றனர். இவ்வாறு கந்துவட்டிக்காரன் போல உரமுதலாளிகளும், ஏஜென்டுகளும் இந்திய விவசாயிகளை ஒட்டச் சுரண்டுகின்றனர்.///

    விவசாயிகளுக்கு குரல் கொடுக்கும் இந்த கட்டுரையில்
    வியாபாரிகள் உரத்தை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பதன் மூலமும் விவசாயிகளை சுரண்டுவதை சொல்கிறீரகள்

    அப்புறம் எப்படிங்க வியாபாரிகள் நேசசக்தி ஆவார்கள்

    • //விவசாயிகளுக்கு குரல் கொடுக்கும் இந்த கட்டுரையில்
      வியாபாரிகள் உரத்தை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பதன் மூலமும் விவசாயிகளை சுரண்டுவதை சொல்கிறீரகள்

      அப்புறம் எப்படிங்க வியாபாரிகள் நேசசக்தி ஆவார்கள்

      // விவசாயியை வியாபாரி மட்டுமா சுரண்டுகிறான்? அடிமாட்டு விலைக்கு பேரம் பேசி வாங்கி நடுத்தர வர்க்கமும் கூடத்தான் சுரண்டுகிறது. விவசாயி அதிலும் நிலமற்ற ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த விவசாயிதான் ஆக மோசமாக சுரண்டப்படுபவன். அவனைச் சுரண்டுபவர்களில் தொழிலாளி, நடுத்தரவர்க்கமான வியாபாரி இன்ன பிறர் முதல் கொழுத்த பன்னாட்டு மூலதனம் வரை அனைத்தும் உள்ளது. ஒருத்தனை ஒருத்தன் அடிச்சி சாப்பிடுறதுதான் உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தின் விதி. எனவே இதற்கு மூலகாரணமான ஏகாதிபத்தியங்களை எதிர்க்க பொது எதிரி என்ற அளவில் அவனால் பாதிக்கப்பட்டவர்கள் இணைந்து போராடுவதில் என்ன தவறுள்ளது? அப்படியில்லை அவனவன் அவனவனுக்குரியதை தனித்தனியே போராடி வாங்க வேண்டும் என்றால் அதைத்தான் மக்களை பிரிக்க ஏகாதிபத்தியம் உருவாக்கிய பின்நவீனத்துவமும் சொல்கிறது.

      • //விவசாயியை வியாபாரி மட்டுமா சுரண்டுகிறான்? அடிமாட்டு விலைக்கு பேரம் பேசி வாங்கி நடுத்தர வர்க்கமும் கூடத்தான் சுரண்டுகிறது. விவசாயி அதிலும் நிலமற்ற ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த விவசாயிதான் ஆக மோசமாக சுரண்டப்படுபவன். அவனைச் சுரண்டுபவர்களில் தொழிலாளி, நடுத்தரவர்க்கமான வியாபாரி இன்ன பிறர் முதல் கொழுத்த பன்னாட்டு மூலதனம் வரை அனைத்தும் உள்ளது.//

        அலோ மிஸ்டர் நடுதர வர்க்கம் நேரா போயி விவசாயிகிட்ட பொருள் வாங்குதா ஆனாலும் சொல்றேன் உங்க காமெடிக்கு அளவே இல்லையா ?

        அவனவனுக்குரியதை வாங்க தனிதனியா போராட சொல்லவில்லை பாஸ்

        இந்த வியாபாரி உரத்தை அதிக விலைக்கு விற்கிறானே அவன எப்படி நட்பு சக்தின்னு சொல்றீங்கன்னு சிம்பிளா ஒரு கேள்வி கேட்டேன் என்னென்னமோ உளப்புறீங்க

        போய் தண்ணிய குடிச்சிட்டு வந்து பதில் சொல்லுங்க

        • //அவனைச் சுரண்டுபவர்களில் தொழிலாளி, நடுத்தரவர்க்கமான வியாபாரி இன்ன பிறர் முதல் கொழுத்த பன்னாட்டு மூலதனம் வரை அனைத்தும் உள்ளது.////

          உலகத்திலேயே தொழிலாளி விவசாயியை சுரண்டுகிறான் என்பது தங்களது மிகசிறந்த கண்டுபிடிப்பு இம்மாதிரி கண்டுபிடிப்பை கேள்வி பட்டதே இல்லை

          இந்த மாதிரியான மார்க்சியத்தை யார் சொல்லி கொடுத்தாங்க பாஸ்

          • ஏகாதிபத்தியங்களை எல்லாம் தூர வையி நம்ம முதல் எதிரி அண்ணாச்சிகள் தான்னு சொல்றீயே உனக்கு எந்த முட்டாப்பய இந்த அரசியல சொல்லிக்குடுத்தான்னு நீ முதல்ல சொல்லுய்யா ?

        • ////இந்த வியாபாரி உரத்தை அதிக விலைக்கு விற்கிறானே அவன எப்படி நட்பு சக்தின்னு சொல்றீங்கன்னு சிம்பிளா ஒரு கேள்வி கேட்டேன் என்னென்னமோ உளப்புறீங்க////

          உன்னோட செத்துப்போன மூளைய தூக்கிப்போட்டுட்டு பேசுன்னு உனக்கு எத்தனை தரம் சொல்றது தியாகு ? அதனால தான் பதில் சொன்ன கேள்விக்கே மறுபடியும் பதில் கேட்டுகிட்டு இருக்க.

    • //அப்புறம் எப்படிங்க வியாபாரிகள் நேசசக்தி ஆவார்கள்

      // உங்க பழைய விவாதங்களை அன்னிய நேரடி முதலீடு பற்றிய பதிவில் இப்போதுதான் படித்தேன். நல்ல காமெடியான பதிவர் நீங்கள். உங்களது பின்னூட்டங்களைப் படிப்பது மனதை லேசாக்கி உற்சாகப்படுத்துகிறது. தனியார் கான்வெண்டில் பிள்ளைகளை காசு கொடுத்து படிக்க வைப்பதை நியாயம் என பேசுபவர் நீங்கள், உங்கள் நிறுவனத்தில் மேலாளராக இருந்து தொழிலாளர்களை சுரண்டுபவர் நீங்கள்(ஒரு வியாபாரி விவசாயிக்கு செய்வதை நீங்கள் தொழிலாளிக்கு செய்கிறீர்கள்) நீங்களும் விவசாயியின் தோழன் போல வேசம் கட்டி இங்கு வந்து பேசுவது நல்ல நகைச்சுவை. விவசாயியை மட்டுமல்ல சகல தரப்பு மக்களையும் சுரண்டும் ஏகாதிபத்திய மூலதனத்தை எதிர்த்து வியாபாரி குரல் கொடுப்பதை ஆதரிப்பது பொது எதிரிக்கு ஏதிரான ஐக்கியம் அது சரி என்பதற்கான விடை தொழிலாளியை சுரண்ட உதவும் நீங்கள் தொழிலாளி, விவசாயி நலனுக்கு குரல் கொடுப்பதை சரி என்று சொல்வது அடங்கியுள்ளது. கொஞ்சல் லாங்கா எழுதியுள்ள விசயம் புரியவில்லை என்றால் இயக்கத்து பெரிய’வால்’களிடம் விளக்கம் கேட்டுப் பாருங்களேன்.

      • விவசாயியை வியாபாரி மட்டுமா சுரண்டுகிறான்?

        அடிமாட்டு விலைக்கு பேரம் பேசி வாங்கி நடுத்தர

        வர்க்கமும் கூடத்தான் சுரண்டுகிறது. விவசாயி அதிலும்

        நிலமற்ற ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த விவசாயிதான்

        ஆக மோசமாக சுரண்டப்படுபவன். அவனைச்

        சுரண்டுபவர்களில் தொழிலாளி, நடுத்தரவர்க்கமான

        வியாபாரி இன்ன பிறர் முதல் கொழுத்த பன்னாட்டு

        மூலதனம் வரை அனைத்தும் உள்ளது. ஒருத்தனை

        ஒருத்தன் அடிச்சி சாப்பிடுறதுதான் உலகின் மிகப் பெரிய

        ஜனநாயகத்தின் விதி. எனவே இதற்கு மூலகாரணமான

        ஏகாதிபத்தியங்களை எதிர்க்க பொது எதிரி என்ற அளவில்

        அவனால் பாதிக்கப்பட்டவர்கள் இணைந்து போராடுவதில்

        என்ன தவறுள்ளது? அப்படியில்லை அவனவன்

        அவனவனுக்குரியதை தனித்தனியே போராடி வாங்க

        வேண்டும் என்றால் அதைத்தான் மக்களை பிரிக்க

        ஏகாதிபத்தியம் உருவாக்கிய பின்நவீனத்துவமும்

        சொல்கிறது.//

        இப்படி ஒரு கமெண்டு போட்டு விட்டு அதற்கு பதிலில்

        எப்படி தொழிலாளியை விவசாய விரோதின்னு

        சொல்றீங்கன்னு கேட்டதும் ஓடி போய் ஒழிஞ்சுட்டீங்க

        அதெப்படிங்க விவசாயியை தொழிலாளி சுரண்டுகிறான்னு

        கேட்டதும்

        //இதுக்கு தியாகுத்தனமாக அல்லது

        அடிமுட்டாள்தனமாக பதில் சொல்லனும்னா இப்படிச்

        சொல்லனும்,”விவசாயக் கூலித் தொழிலாளர்களை

        சுரண்டும் விவசாயிகளை எப்படி நட்பு சக்தியாக பார்க்க

        முடியும்?”//

        இதுக்கு பதில் சொல்லுங்கன்னு சம்பந்தமில்லாமல்

        உளறிட்டு

        விவசாயியை தொழிலாளி சுரண்டுகிறான் என சொல்வது

        சரியா யாருய்யா உனக்கு மார்க்சியம் சொல்லி

        கொடுத்ததுன்னு திருப்பி திருப்பி கேட்டதும்

        அப்படி எங்கயுமே சொல்லவில்லை என சொல்லி மழுப்பி

        விட்டு இப்ப வந்து

        அது தியாகு சொன்னதுன்னு (லாஜிக் படி அப்படி

        வருதுன்னு )

        பேந்த பேந்த முழிச்சிட்டு சொல்வது உங்கள்

        அம்மணத்தை மறைக்கவில்லை மிஸ்டர் அகமது

        தவறா சொல்லிட்டேன்னு சொல்லுங்க விட்டுடுறேன்

        ஆனால் மழுப்பல் தவறு

    • //விவசாயிகளுக்கு குரல் கொடுக்கும் இந்த கட்டுரையில்
      வியாபாரிகள் உரத்தை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பதன் மூலமும் விவசாயிகளை சுரண்டுவதை சொல்கிறீரகள்

      அப்புறம் எப்படிங்க வியாபாரிகள் நேசசக்தி ஆவார்கள்
      ///
      ரஷியாவில் புரட்சி நடந்துமுடிந்தவுடன் லெனின் பொருளாதாரத்தில் சீர்த்திருத்தங்களை செய்து முதலாளிகளுக்கு ஆதரவாக மாறி போனார் பின்னால் ரஷியா காபிடலிஸ நாடாகிவிட்டது. தியாகு சொல்வது போல் வினவும் லெனின் மாதிரியே முதலாளிகளுக்கு ஆதரவாக போலி கம்யுனிஸம் பேசுகிறது.

      நன்றி ராஜேஷ்

    • ///விவசாயிகளுக்கு குரல் கொடுக்கும் இந்த கட்டுரையில்
      வியாபாரிகள் உரத்தை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பதன் மூலமும் விவசாயிகளை சுரண்டுவதை சொல்கிறீரகள். அப்புறம் எப்படிங்க வியாபாரிகள் நேசசக்தி ஆவார்கள்///

      அப்புறம் எப்புடி மண்டையா சீன புரட்சில மட்டும் அவங்க நேச சக்தியா இருந்தாங்க ?

  3. /// மேலும் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காமலும், விலை வீழ்ச்சியாலும் ///

    இது நுகர்வோருக்கு நல்ல செய்தி அல்லவா?

    விவசாயிகள் செயற்கை உரத்தைக் கைவிட்டு, நம்மாழ்வாரின் இயற்கை விவசாய முறைக்கு மாற வேண்டும். மேலும் விவசாயம் இதுவரை லிபரலைசேஷன் தொடப்படாத துறையாக இருப்பதுதான் பல சிக்கல்களுக்குக் காரணம்.

    60% மக்கள் விவசாயத்தில் ஈடுபடுவது தேவையற்றது, கட்டுபடியாகாதது. 6% போக மீதி 54% பேரை விவசாயத்திலிருந்து தொழில்துறைக்கு மாற்ற ஒரு எக்ஸிட் பாலிசி கொண்டுவரப்பட வேண்டும்.

    • எந்த நுகர்வோருக்கு இடைதரகர்களுக்கா இல்லை கடை நிலை நுகர்வோர்கா?

      //60% மக்கள் விவசாயத்தில் ஈடுபடுவது தேவையற்றது, கட்டுபடியாகாதது. 6% போக மீதி 54% பேரை விவசாயத்திலிருந்து தொழில்துறைக்கு மாற்ற ஒரு எக்ஸிட் பாலிசி கொண்டுவரப்பட வேண்டும்//

      பாத்து பாஸ் சாப்பாடு கிடைக்காம நீங்க எக்ஸிட் ஆயிட போறிங்க.

      60% மக்கள் விவசாயத்தில் ஈடுபடுவது தேவையற்றது –

      எதற்காக என்று சொல்ல முடியுமா?.

      60% மக்கள் விவசாயத்தில் ஈடுபடுவது தேவையற்றது, கட்டுபடியாகாதது –

      யாருக்கு கட்டுபடியாகாது என்று சொல்ல முடியுமா?

      54% பேரை விவசாயத்திலிருந்து தொழில்துறைக்கு மாற்ற ஒரு எக்ஸிட் பாலிசி கொண்டுவரப்பட வேண்டும் –

      6% போதும் என்று சொல்கின்ற நீங்கள் அந்த எக்ஸிட் பாலிசியையும் சொல்ல வேண்டியது தானே?

      சும்மா பொது தன்மையா கருத்து எழுதாதிங்க பாஸ்.

      • *** எந்த நுகர்வோருக்கு இடைதரகர்களுக்கா இல்லை கடை நிலை நுகர்வோர்கா?***

        இப்பவாச்சும் இடைத்தரகர்கள் இருப்பதை ஒப்புக் கொள்கிறீர்களே. அந்த இடைத்தரகர்களை ஒழிக்கத்தான் மல்டி பிராண்ட் ரீடெய்ல் கடைத் தொடர்கள் வரவேண்டும் என்கிறோம்.

        • சரவணன் இதற்கு கலைஞர் வசனம் தான் ” கோவில்கள் குடாது என்று சொல்லவில்லை, கோவில்கள் நயவஞ்சகர்களின் கூடாரமாக ஆகிவிட குடாது என்பதற்காக” அதைப் போல் இடைத்தரகர்கள் வேண்டாம் என்று நான் சொல்லவில்லை அது கார்புரெட் நயவஞ்சகர்களின் கூடாரமாக ஆகிவிட்டதை தகற்க வேண்டும் என்பதே என் வாதம்.

      • *** 60% மக்கள் விவசாயத்தில் ஈடுபடுவது தேவையற்றது –

        எதற்காக என்று சொல்ல முடியுமா?.

        60% மக்கள் விவசாயத்தில் ஈடுபடுவது தேவையற்றது, கட்டுபடியாகாதது –

        யாருக்கு கட்டுபடியாகாது என்று சொல்ல முடியுமா? ***

        மொத்தத்தில் பாதிப்பேர் விவசாயத்தைச் சார்ந்திருப்பது எந்த நாட்டுக்கும் தேவையற்றது, அந்த மக்களுக்கே கட்டுபடியாகாதது.

        • //மொத்தத்தில் பாதிப்பேர் விவசாயத்தைச் சார்ந்திருப்பது எந்த நாட்டுக்கும் தேவையற்றது, அந்த மக்களுக்கே கட்டுபடியாகாதது.//

          சரவணாமிக்ஸ்னு ஒன்ன புதுசா உருவாக்கம் செய்கிறேர்கள். வாழ்த்துகள்!!! கிராமபுரங்கள் அதிகமாக இருக்கும் நாடுகளில் 50% மேற்பட்ட மக்கள் விவசாயத்தை நம்பிதான் இருப்பார்கள். இந்தியாவின் மனிதத் தொகையில் 70% விழுகாடு கிராமபுரங்களில் தான் வசிக்கிறார்கள். அவர்களின் வாழ்வாதரமே விவசாயமும் அதன் சார்பு தொழிலும் தான். நீங்கள் சொல்லுவதை பாற்தால் இந்த 70% மக்கள் தேவையற்றவர்களா?
          அந்த மக்களுக்கே கட்டுபடியாக்காமல் செய்தது யார்? மேலும் இதை பற்றி இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை: என்னும் கட்டுரையில் எனது கருத்தை பதிவு செய்திறுக்கிறேன். படியுங்கள்.

  4. ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தால் கூலிக்கு ஆள் கிடைக்கவில்லை என்பது ஏற்க முடியாதது. உரிய ஊதியம் கொடுத்தால் வருவார்கள். விவசாயக் கூலித் தொழிலாளர்களின் ஊதியம் உயர்ந்துவருவது வரவேற்புக்குறியது. இதைச் சாதித்த மன்மோகன் அரசு பாராட்டுக்குரியது.

    • //ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தால் கூலிக்கு ஆள் கிடைக்கவில்லை என்பது ஏற்க முடியாதது. உரிய ஊதியம் கொடுத்தால் வருவார்கள். விவசாயக் கூலித் தொழிலாளர்களின் ஊதியம் உயர்ந்துவருவது வரவேற்புக்குறியது. இதைச் சாதித்த மன்மோகன் அரசு பாராட்டுக்குரியது.

      // இதுக்கு தியாகுத்தனமாக அல்லது அடிமுட்டாள்தனமாக பதில் சொல்லனும்னா இப்படிச் சொல்லனும்,”விவசாயக் கூலித் தொழிலாளர்களை சுரண்டும் விவசாயிகளை எப்படி நட்பு சக்தியாக பார்க்க முடியும்?”

    • //உரிய ஊதியம் கொடுத்தால் வருவார்கள்//

      அப்ப உங்களுக்கே புரியுது செரியான ஊதியம் கொடுகிறது இல்லேனு.

      //விவசாயக் கூலித் தொழிலாளர்களின் ஊதியம் உயர்ந்துவருவது வரவேற்புக்குறியது//

      இப்பதான் உரிய ஊதியம் கொடுத்தால் வருவார்கள் என்று கூறிவிட்டு அடுத்த நொடி பொழுதில் விவசாயக் கூலித் தொழிலாளர்களின் ஊதியம் உயர்ந்துவருவது வரவேற்புக்குறியது டபாருனு ஒரு பொடு பொட்டெங்க. பங்கு சந்தையவிட வேகமா இருக்கிங்க.

      //இதைச் சாதித்த மன்மோகன் அரசு பாராட்டுக்குரியது//

      எத பாஸ் சாதிச்சாங்க 2இலட்சம் விவசாயிகல் செத்ததையா? நல்ல பாராட்டுங்க பாஸ் பக்கத்து வீட்டுல சாவு விழுந்த நம்ம வீட்டுல பிரெக் டான்ஸ் அட வேண்டியது தான்.

      • **** இப்பதான் உரிய ஊதியம் கொடுத்தால் வருவார்கள் என்று கூறிவிட்டு அடுத்த நொடி பொழுதில் விவசாயக் கூலித் தொழிலாளர்களின் ஊதியம் உயர்ந்துவருவது வரவேற்புக்குறியது டபாருனு ஒரு பொடு பொட்டெங்க. ****

        முரண்பாடு எதுவும் இல்லை. ‘நான் கேட்கும் கூலியைக்கொடு, அல்லது நான் வேலைக்கு வர மாட்டேன்…எனக்கு ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்டம் இருக்கிறது!’ என்று கூறி நடையைக் கட்டும் சுதந்திரம் இன்று நிலமற்ற கூலித் தொழிலாளிகளுக்கு வந்திருக்கிறது. அதைக்கொடுக்க மனமில்லையெனெறால் வரத்தான் மாட்டார்கள். அப்புறம் ஆள் கிடைக்கவில்லை என்று புலம்பக்கூடாது. ஆள் கிடைக்கவில்லை என்று புலம்புபவர்கள் தொழிலாள விரோதிகள் என்று அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.

        • யார் தொழிலாள விரோதிகள் பயிர் நடும் காலம் மற்றும் அருவடை காலம் வரும் பொழுது மட்டும் திடிர் என்று ஊரக வேலை வாய்ப்பு திட்டம் வந்து விடுகிறது. இத்திட்டம் முலம் வேலை வாய்பு எப்பொழுது தற வேண்டும் விவசாயர்திற்கு ஏற்ற காலத்திலா? இல்லை அருவடை முடிந்து வேலை வாய்பு குறையும் காலக்கட்டத்திலா? விவசாயர்திற்கு உகந்த காலத்தில் சென்று நாள் ஒன்றுக்கு 120 கூலி கொடுத்தாள் இந்த தொழிலாளிகள் நிச்சயமாக நீங்கள் சொல்லுவதை போல் “‘நான் கேட்கும் கூலியைக்கொடு, அல்லது நான் வேலைக்கு வர மாட்டேன்…எனக்கு ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்டம் இருக்கிறது!’ என்று கூறி நடையகட்டதான் செய்வார்கள். எற்கனவே மாசென்டா போன்ற கார்ப்பிரெட் ஓநாய்களை அனுமதியளித்து சிருவிவசாயிகளை சொற்கத்துக்கு அனுப்பி விட்டீர்கள். விவசாயத்தை மேம்படுத்துகிறோம் என்று கூறி உரம், மற்றும் பிற விவசாய ரசாயன நிறுவனங்களை உச்சி மொகற்ந்து வென்சாமறம் விசியாய்ற்று. இனி எஞ்சியிறுப்பதை நலத்திட்டம் என்று கூறி விவசாயக் காலத்தில் தொழிலாலர்கள் தட்டுபாட்டினை எற்ப்படுத்தி எஞ்சியிறுக்கும் விவசயிகளை பாடை கட்டிவிட்டாள் நிம்மதி அடைந்து விடுவீற்கள். எற்கனவே இந்திய பொருளாதாரத்திள் 50%க்கும் குறைவாக விவசாயதின் பங்கை குறைத்துவிட்டிர்கள். இப்பொழுது இருக்கும் 15.7% பங்கயும் 5%வாக ஆக்கிவிட்டாள் விவசாய நிலங்களை சுரையாடி பன்னாட்டு மற்றும் சிறப்பு பொருளாதார மன்டலங்களுக்கு தாரை வாற்துவிட்டு சிரு விவசாயிகளை அவர்களிடத்திள் கொத்தடிமையாக்கி விட்டாள் நிம்மதி அடைந்து விடுவிற்கள். இந்த நலத்திட்டம் காகிகதிள் விவசாயிகளுக்கு நலமாகதான் இருக்கிறது ஆனால் நடப்பில் அது வேறு.

        • நீங்க எப்படி சரவணன்,
          உழைக்கின்ற மக்களின் பக்கம் நிற்கும் பாட்டாளிகளின் தோழனா ?

          இந்த பதிவில் கேட்ட கேள்விகளுக்கு முதலில் பதில் சொல்லுங்கள் ?
          https://www.vinavu.com/2011/12/22/red-salutes-kishenji/#comment-54252

            • இல்லை சொல்லவில்லை. எப்படி இவ்வளவு துணிவோடு பொய் சொல்கிறீர்கள் ? நீங்கள் பதில் கூறாத கேளிவிகளின் வரிசை எண்ணை இருமுறை எடுத்துப் போட்டிருக்கிறேன் எனினும் பதிலளிக்கப்படவில்லை. வேண்டுமானால் சொல்லுங்கள் உங்களுடைய பார்வைக்காக அவற்றை இங்கே எடுத்துப்போடுகிறேன்.

              • கேள்வி எண்களைக் குறித்துவைத்துக் கொண்டு பதில் எழுதியது உண்மை. எல்லாமே வெளியாகிவிட்டதா அல்லது மட்டுறுத்தலில் ஏதாவது விடுபட்டுள்ளதா என்று மீண்டும் சரி பார்த்து உறுதி செய்கிறேன். சம்பந்தம் அற்ற இந்தப் பதிவில் காப்பி பேஸ்ட் செய்ய வேண்டாம். எல்லோருக்குமே இடைஞ்சலாக இருக்கும்.

                • எல்லோருக்கும் இடைஞ்சலாக இருக்கும் என்றால் அங்கே வந்து பதில் சொல்லுங்க.

        • /////முரண்பாடு எதுவும் இல்லை. ‘நான் கேட்கும் கூலியைக்கொடு, அல்லது நான் வேலைக்கு வர மாட்டேன்…எனக்கு ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்டம் இருக்கிறது!’ என்று கூறி நடையைக் கட்டும் சுதந்திரம் இன்று நிலமற்ற கூலித் தொழிலாளிகளுக்கு வந்திருக்கிறது./////

          சுதந்திர வாழ்வு வாழ்வதாக நீங்கள் கூறுகின்ற விவசாயிகள் லட்சம் லட்சமாக மடிந்து கொண்டிருக்கிறார்களே ஏன் ?

          ஒரிசா,பீகார்,சட்டிஸ்கர்,ஜார்கண்ட்,உ.பி, ம.பி போன்ற வட பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கில் தென் பகுதியை நோக்கி அகதிகளை போல வருகிறார்களே அது ஏன் ?

          ஒரு வேளை சோற்றுக்காக இந்தியா முழுவதும் சுற்றியழைவதற்கும், சுதந்திரமா செத்தொழிவதற்கும் தான் இங்கு சுதந்திரம் இருக்கிறது.

          • தற்கொலைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும், வாழ்வாதாரம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. அதை எப்படி செய்வது என்பதில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். இதுவரை போன அதே பாதையில் மேலும் மானியம், மேலும் கடன், குறைவான புரொடக்டிவிடி, குறைவான விளைச்சல், தற்கொலை என்ற வட்டம் உடைக்கப்பட வேண்டும். உர மானியம் சிறு விவசாயிகளுக்கு மட்டும் நேரடியாகத் தர வேண்டும். இன்று அதனால் பலன் பெறுபவர்கள் பெரு விவசாயிகள், மற்றும் புரொடக்டிவிடியைப் பற்றிக் கவலையே படாத உர நிறுவனங்கள் மட்டுமே.

            அவை இன்னும் உலுத்துப்போன பழைய டெக்னாலஜியைப் பின்பற்றுகின்றன. அதுதான் மானியம் தர அரசு இருக்கிறதே என்ற மிதப்பில். கம்பெனி மானியம் விலக்கிக்கொள்ளப் பட்டால்தான் போட்டி ஏற்பட்டு விலை குறையும். மற்றபடி கார்ட்டெல் என்பது இப்போதும் இருக்கிறதே? மானியத்தை நிறுத்தினால் கார்ட்டெல் வந்துவிடும் என்பது தவறு. கார்டெல்களைக் கட்டுப்படுத்த வேறு நடைமுறைகள், சட்டங்கள் தேவை. அதற்கும் மானியத்திற்கும் சம்பந்தமில்லை.

            மானியமே தேவையில்லாமல் விவசாயிகள் லாபகரமாகத் தொழில் செய்யும் நிலையை நோக்கிச் செல்ல வேண்டும். 50% மக்கள் விவசாயத்தை நம்பி இருப்பது சஸ்டைனபிள் அல்ல. குஜராத்தில் மதச்சார்பபுள்ள முதல்வர், அவரை அதற்காகக் கூண்டில் ஏற்றி விசாரித்துத் தண்டிப்போம். ஆனால் அங்கு விவசாய வளர்ச்சி விகிதம் 9% என்பதைக் கவனித்து அங்கு செயல்படுத்தப்படும் நல்ல முன்மாதிரிகளை மற்ற மாநிலங்களிலும் அமலாக்க வேண்டும்.

            ஒன்றைக் கவனித்தீர்களா? தற்கொலை செய்துகொள்பவர்கள் சிறு விவசாயிகள்தான். நிலமற்ற விவசாயக் கூலிகள் யாரும் தற்கொலைசெய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப் படுவதில்லை!

            • இதெல்லாம் அப்படியே அதியமான் பேசுவதை போல இரக்கமற்ற முறையில் இருக்கிறது. இதற்கெல்லாம் ஆயிரக்கணக்கான பின்னூட்டங்களின் மூலம் தோழர்கள் ஏற்கெனவே பதிலளித்து விட்டனர்.

              லட்சக்கணக்கில் விவசாயிகள் செத்துக்கொண்டிருக்கிறார்கள், ஆனால் இவரோ அதில் எந்த தரப்பு விவசாயி செத்தான் என்று ஆய்வு செய்து கொண்டிருக்கிறார், வக்கிரமாக இல்லை ?

              ஏகாதிபத்தியங்களின் காலை நக்கும் மன்மோகன், மோடி போன்ற அடிமைகளின் ஆட்சியில் விவசாயிகள் மட்டுமல்ல அடுத்தடுத்து ஒவ்வொரு வர்க்கமாக அனைவரும் தற்கொலைக்கு தான் தள்ளப்படுவார்கள். ஆனால் நக்சல்பாரிகள் அந்த தற்கொலைகளை எதிரிகள் மீதான தாக்குதலாக திருப்புவார்கள்.

              • மார்க்ஸியவாதி என்று சொல்லிக்கொண்டு சமூகவியல் சார்ந்த ஆய்வு தேவையற்றது என்று கூறுகிறீர்களே? இப்படிக்கூடச் சொல்வீர்கள்- ‘ஊரில் மக்கள் தொற்றுவியாதியால் செத்துக்கொண்டிருக்கிறார்கள்…இந்த டாக்டர் யாரைசெல்லாம் இந்த வியாதி தாக்கியிருக்கிறது என்று ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்!’

                விவசாயிகள் தற்கொலை குறித்துப் பல தளங்களில் விரிவான ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.

                மற்றபடி முதல்வரியிலேயே தற்கொலைகள் தடுக்கப்பட வேண்டும் என்று சொல்லித்தான் ஆரம்பித்திருக்கிறேன் அதைப் படிக்கவில்லையா? இனி யாருக்கும் போலியோ வரக்கூடாது என்றுதான் விரும்புகிறோம்…ஆனால் வந்துவிட்டால், குறிப்பாக யாரைப் கோலியோ தாக்குகிறது என்று ஆராய வேண்டும்.

                • //மார்க்ஸியவாதி என்று சொல்லிக்கொண்டு சமூகவியல் சார்ந்த ஆய்வு தேவையற்றது என்று கூறுகிறீர்களே? இப்படிக்கூடச் சொல்வீர்கள்- ‘ஊரில் மக்கள் தொற்றுவியாதியால் செத்துக்கொண்டிருக்கிறார்கள்…இந்த டாக்டர் யாரைசெல்லாம் இந்த வியாதி தாக்கியிருக்கிறது என்று ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்!’//

                  சமூகவியல் ஆய்வு தேவையற்றது என்று அவர் சொல்லவில்லை. விவசாயிகள் செத்து கொண்டு இருக்கும் பொழுது அவர்களுள் எந்த தரப்பு செத்து கொண்டு இருக்கிறார்கள் என்ற ஆய்வு தேவை அற்றது என்று சொல்கிறார். மேலும் தற்கொலை செய்து கொள்வோர் சிரு விவசாயிகள் என்று விளங்கிய பிறகு அதற்கான காரனமும் தெறிந்த பிற்கு ஏதற்கு தேவையற்ற ஆய்வினை செய்து மேலும் காலம் கடத்த வேண்டும்.

                  //விவசாயிகள் தற்கொலை குறித்துப் பல தளங்களில் விரிவான ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.//

                  ஆய்வுகள் பல செய்தாகிவிட்டது காரனங்களும் சொல்லியாகிவிட்டது அனைத்தையும் பெற்றுக் கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காத இந்த அரசாங்கம் வேண்டும்மா என்று ஆய்வு செய்ங்கள்.

                  //இனி யாருக்கும் போலியோ வரக்கூடாது என்றுதான் விரும்புகிறோம்…ஆனால் வந்துவிட்டால், குறிப்பாக யாரைப் கோலியோ தாக்குகிறது என்று ஆராய வேண்டும்.//

                  எதனால் தாக்குகிறது என்று ஆராயுங்கள். தாக்கியவர்களை குனப்படுத்துங்கள் அது திறும்பவும் வராத வாரு நடவடிகை எடுக்க வேண்டும் அதய் விட்டுவிட்டு தேவையற்ற ஆய்வு செய்ய சொல்லி விவசாய்களை மொத்தமாக கொன்றுவிடாதிற்கள்.

              • குஜராத்தில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது மிகவும் குறைவு அல்லது அறவே இல்லை என்றே நினைக்கிறேன். அங்கும் விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப் படுகிறார்கள் என்று சொல்வதற்கு ஆதாரமாக ஏதேனும் சுட்டி தர முடியுமா?

                • நினைக்காதிற்கள் கீள் கண்ட தளத்தில் சென்று உங்கள் நினைப்பை மாற்றிக் கொள்ள முயர்ச்சி செய்க

                  Proof1:
                  http://www.indianmuslimobserver.com/2011/03/farmers-in-gujarat-going-vidarbha-way.html

                  Proof 2:
                  GANDHINAGAR: Gujarat government made an indirect admission on Wednesday that Krishi Mahotsavs,
                  an annual feature, have failed to bring about any improvement in the area brought under cultivation or
                  farm production of major crops. Literature distributed at a press conference, addressed by state
                  agriculture minister Dilip Sanghani, showed that net cultivated area in 2007-06 was 130.51 lakh hectares
                  (ha), which went down to 116.14 lakh ha in 2009-10. Worse, the production of foodgrains, oil seeds and
                  cotton crops identified by the state government as the mainstay of Gujarat agriculture have witnessed a
                  progressive drop. When asked about the sharp dip, as noted in the official figures provided by him,
                  Sanghani expressed his surprise saying, “Chief minister Narendra Modi has put annual growth rate of
                  Gujarat agriculture at 9.6 per cent per annum.” However, agricultural growth rate figures given by the
                  state planning department to the Planning Commission suggesting a growth of minus 12 per cent in 2008-
                  09 and minus 3.3 per cent in 2009-10. A close study of an official note distributed on the occasion
                  suggests the production of foodgrains and oil seeds since 2003-04 has not risen. In fact, their production
                  shows sharp volatility. Except for 2007-08, when foodgrains production reached a whopping 82.06 lakh
                  metric tonnes (MT), for every year since 2003-04 it hovered around 60 lakh MT. As for oil seeds,
                  considered the main crop in Saurashtra, the production was the highest in 2003-04, 65.55 MT,
                  progressively going down with each passing year. Cotton is the only crop which appears to have a
                  sustained growth story since 2003-04. It was 40.27 lakh bales in 2003-04, and reached 78.75 lakh bales
                  in 2009-10 thanks mainly to BT cotton. Official sources admit, even here things are stagnating. A press
                  release issued on Wednesday admitted that this year cotton production will go down by 87,000 bales.
                  When contacted, senior expert Prof YK Alagh said, “This shows we are still a rainfed agriculture.” (The
                  Times of India, 5/8/2010)
                  Proof 3:

                  The Impearlistic Suicide Episode in India by Larry Everest.

                  http://www.countercurrents.org/everest150611.htm

                  The Saga Continues………..

            • சரவணன் உங்களுக்கு இந்த பிரச்சனையுடைய வீரியம் புறியுதா இல்லை சும்மான நான் புடிச்ச முயலுக்கு மூனு கால் என்று வாதம் செய்றிங்களா? விவசாய்களுடைய அடிப்படை பிரச்சனை எதுனு தெறியாம பிரோடக்டிவிட்டினு உங்க கார்பிரேட் ஜார்கன் எல்லாம் சொல்லாதிங்க.
              உரம் தயாரிபதில் என்ன டெக்னாலஜி மேம்படனும் யுரியாக்கு பதில் யுரெனியத்தை போட சொல்றிங்களா? இந்த எளவு எடுத்த ரசாயனத்த தினுச்சு மண் சத்தே இல்லாம பன்னியாச்சு வேற என்ன டெக்னாலஜி புதுசா கொண்டு வந்து விவசாயிகளை மேலும் தினரடிக்கனும். எங்க நாங்க தான் இந்த முட்டாபைய அரச உர நிறுவனங்களுக்கு மானியம் கொடுக்காதேனு தொன்ட தன்னி வத்த கத்தறோம் நீங்க என்னவோ நாங்க குடுக்க சொன்ன மாதிறி எழுதிறிங்க. அது எப்படி மானியம் கொடுக்கரதாள தான் உர நிறுவனங்கள் போட்டி போடாம விலைய ஏத்தி வச்சிருக்கானுங்களா? முதல்ல எக்கனாமிக்ஸ்ல போய் டிமான்ட் அன்டி சப்பிளை பற்றி படிங்க. ஆர்டிஃபிஸ்யல் டிமான்ட் உருவாகறதுனால தான் இந்த விலையேற்றம் புறிந்து “கொல்லுங்கள்” புறியாம சாவடிக்காதிங்க.

              //50% மக்கள் விவசாயத்தை நம்பி இருப்பது சஸ்டைனபிள் அல்ல//
              ஏன் என்று காரனம் சொல்லுங்க. கிலிப் பிள்ளைக்கு சொல்லுவது போல் சொல்லியாச்சு அப்பவும் அதே புராணத்த பாடுறிங்க, காரனத்த சொலிட்டாவது பாடுங்க.

              //குஜராத்தில் மதச்சார்பபுள்ள முதல்வர், அவரை அதற்காகக் கூண்டில் ஏற்றி விசாரித்துத் தண்டிப்போம். ஆனால் அங்கு விவசாய வளர்ச்சி விகிதம் 9% என்பதைக் கவனித்து அங்கு செயல்படுத்தப்படும் நல்ல முன்மாதிரிகளை மற்ற மாநிலங்களிலும் அமலாக்க வேண்டும்//

              1.விவசாய வளர்ச்சி உயர்ந்திறுக்கிற்து ஆனால் உனவு உர்பத்தி 87 லட்சம் டன்னாக 2007 – 08 இருந்தது 52 லட்சம் டன்னாக 2009 -10 குறைந்து இருக்கிறது.
              2.இந்த வருட நிதி அறிக்கயில் விவசாயிகளின் வளர்ச்சி திட்ட ஒதிக்கிட்டை 97% குரைத்து இருக்கிறார் உங்கள் உதரன முதல்வர்.
              3.21 லட்சம் விவசாயிகள் வெள்ளத்தாள் பாதிப்பு அடைந்திரிக்கிறார்கள், அவருள் 10% மட்டுமே நிவாரனம் தர பட்டுள்ளது.
              4.பாசனத்துக்காக வெட்ட படும் கினறுகளுக்கு மின்சாரம் பாய்ச்சும் மின்சார கம்பங்கள் நட “ரூ 1 லட்சம்” செலவு செய்ய வேண்டியது இருக்கு.
              5. ஒவ்வரு வருடமும் குறைந்தது 500 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
              நீங்கள் சொல்லுவதை போல் மற்ற மானிலங்களும் மேலே குறிப்பிட்டதை அமல் படுத்தினால் விவசாய்கள் என்று காட்ட குட யாரும் இருக்க மாட்டார்கள். ஆகயால் எங்கோ எழுதிய பிட்டை போடாதிர்கள் அப்படி எழுதும் ஊடகங்களின் உன்மை தரத்தை ஆராய்ந்து எழுதுங்கள்.

              • *** பாசனத்துக்காக வெட்ட படும் கினறுகளுக்கு மின்சாரம் பாய்ச்சும் மின்சார கம்பங்கள் நட “ரூ 1 லட்சம்” செலவு செய்ய வேண்டியது இருக்கு.****

                தமிழ்நாட்டில் எப்படி தெரியுமா? மின் வாரியம்தான் தன் செலவில் கம்பம் நடவேண்டும், கம்பி இழுக்கவேண்டும் என்று இருப்பதால் வாரியம் நிதி நிலையைக் காரணம்காட்டி வருடக்கணக்கில் மின் இணைப்பே தருவதில்லை. விவசாயிக்கு டீசல் மேட்டாரே கதி.

                கர்நாடகத்தில் கூட ‘அக்ரமா தக்ரமா’ என்று ஒரு திட்டம் இருக்கிறது. நீங்களே செலவழித்து கம்பம் நட்டு, கம்பி இழுத்துக்கொள்ளலாம். உடனே இணைப்பு வழங்கப்படும். இதற்கு ஏக வரவேற்பு. தமிழ்நாட்டு விவசாயிகள் இதை இங்கும் கேட்டு வருகிறார்கள்.

                500 பேர் குஜராத்தில் தற்கொலை செய்துகொண்டிருந்தாலும் (இது சரியான தகவலா என்று தெரியவில்லை) அடுத்து உள்ள மராட்டிய மாநிலத்தைவிட மிக மிகக் குறைவாக இருப்பதற்கு என்ன காரணம்? மராட்டிய விவசாயிகள் குஜராத் பானி சீர்திருத்தங்களைக் கேட்பது குறிப்பிடத் தக்கது.

                • //கர்நாடகத்தில் கூட ‘அக்ரமா தக்ரமா’ என்று ஒரு திட்டம் இருக்கிறது. நீங்களே செலவழித்து கம்பம் நட்டு, கம்பி இழுத்துக்கொள்ளலாம். உடனே இணைப்பு வழங்கப்படும். இதற்கு ஏக வரவேற்பு. தமிழ்நாட்டு விவசாயிகள் இதை இங்கும் கேட்டு வருகிறார்கள்.//

                  சரியாக தான் பெயர் வைத்து உள்ளார்கள் இது அக்ரமம் தான். தனியார் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்களை உள்ளே விட்டு அவர்கள் இடும் ஆனைகளை அடிபணிந்து அவர்கள் கோறும் கப்பத்தை வாய் மூடி கைய் கட்டி ஒத்துக் கொண்டு அந்த கப்பத்தை கெட்டுவதற்காக அப்பாவி மக்களிடத்திள் வரி மற்றும் நுகர்தள் விலயை ஏற்றி மக்களை தினரடிக்கும் எந்த அரசாங்கமாக இருந்தாளும் அதை செருப்பாளே அடிச்சு வேளியேற்ற வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களுக்கு சிகப்பு கம்பலம் விறித்து அவர்களுக்கு அனைத்து சலுகையும் குடுத்து அதற்கு மேல் மின்சாரம் பயன்பாட்டிலும் சலுகை கொடுக்கும் இது போன்ற எச்ச அரசால் தான் நீங்கள் உச்சி மோகற்ந்து சொல்லும் கொடுமைகளுக்கு மக்கள் ஆள்ளாகிறார்கள். பன்னாட்டு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தல வாழ சொறு போட்டுட்டு மக்களை பிச்சை எடுக்கவிட்ட அரசாங்கத்தின் முடிவுகளுக்கு ஜால்ரா தட்டும் நீங்கள் விவசாயிகள் தற்கொலை அனுதாபம் தெறுவிக்கிறேன் என்று முதளக்கண்நிர் வடிக்காதிர்கள். விவசாயிகளை அனைத்து வகயிலும் சுரன்டும் அரசாங்கத்தையும் தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனத்தயும் எதிர்த்து மக்கள் போரிடும் காலம் வெகு தொலைவில் இல்லை.

                  //தமிழ்நாட்டு விவசாயிகள் இதை இங்கும் கேட்டு வருகிறார்கள்.//

                  ஆதாரம்?

                  //அடுத்து உள்ள மராட்டிய மாநிலத்தைவிட மிக மிகக் குறைவாக இருப்பதற்கு என்ன காரணம்? மராட்டிய விவசாயிகள் குஜராத் பானி சீர்திருத்தங்களைக் கேட்பது குறிப்பிடத் தக்கது.//

                  ஒரு விவசாய் சாவதே கொடுமை என்று வியகியானம் பேசிவிட்டு மராட்டிய மாநிலத்தைவிட மிக மிகக் குறைவாக இருப்பதால் குஜுராத் மாநிலம் சிறந்தது என்று பாராட்டும் உங்களுக்கு ஒரு கேள்வி அடி தட்டு மக்கள் என்றால் அவ்வளவு இலக்காரமா? உங்களுக்கும் 1.5 லட்சம் தமிழ் மக்களை மாக்களை போல் கொன்ற இந்திய – ராசபட்செ அரசிற்கும் ஒரு வேறுபாடும் இல்லை.

                  //மராட்டிய விவசாயிகள் குஜராத் பானி சீர்திருத்தங்களைக் கேட்பது குறிப்பிடத் தக்கது.//

                  இதற்கும் ஆதாரம் எங்கே? உங்கள் விருப்பத்தை மராட்டிய விவசாயிகளின் விருப்பமாக சொல்லாதிர்கள் ஆதரம் இல்லாததை எழுதி மொக்க வாங்காதிங்க. இது வரை நானும் மற்ற தோழர்களும் கேட்ட பல கேள்விகளுக்கும் குடுத்த விடைகளுக்கும் சரியாக பதிலும் சமதானமும் சொல்லவில்லை. அப்படியே விடை கொடுத்தாலும் இது போன்ற ஆதாரம் அற்ற பதில்களை முன் வைக்கின்றிர்கள். விவாதத்தில் உன்மை இருக்க வேண்டும் உங்கள் கேப்பிடலிஸ்டை போல் உங்கள் லாபார்திற்கு ஏற்ப ஆதாரம் இல்லாததை எழுதாதிர்கள்.

  5. //. 6% போக மீதி 54% பேரை விவசாயத்திலிருந்து தொழில்துறைக்கு மாற்ற ஒரு எக்ஸிட் பாலிசி கொண்டுவரப்பட வேண்டும்.
    // அனானி கோபப்படக்கூடாது, நீங்க சொல்வதை கேட்கும் பொழுது வடிவேலு ஒரு படத்தில் தமிழ்நாட்டை அலேக்கா தூக்கிக் கொண்டு போய் டெல்லி கிட்ட வைச்சிட்டா நாம் எடுத்துக் கிட்டது போக மீதி உள்ளதை உபி மாபி கொடுக்கலாம்னு சொல்ற மாதிரி இருக்கு. 60% பேர் விவசாயத்தை நம்பி இருக்கும் நிலை மாற வேண்டும் என்பது சரிதான் ஆனால் அது வெறுமனே 54% அலேக்கா தூக்கி தொழில்துறையில் போடும் எக்ஸிட் பாலிசி மூலம் செய்யக் கூடியது போன்ற எளிய வேலையல்ல. ஏனேனில் அவர்கள் 54% பேரும் மனிதர்கள், தொழில்துறையோ இங்கு சுயமாக நிற்கும் திறனின்றி ஏகாதிபத்திய மூலதனத்தின் தயவில் அவர்களின் காலைக் கழுவும் வேலை செய்து வருகிறது எனவே 54% பேருக்கு வேலைவாய்ப்பு ஏகாதிபத்திய நலனுக்கான தொழில்துறை வளர்ச்சியினால் எந்த காலத்திலும் சாத்தியப்படாது அது ஒரு அப்துல் கலாம் கனவு.

    • ///60% பேர் விவசாயத்தை நம்பி இருக்கும் நிலை மாற வேண்டும் என்பது சரிதான்///

      உங்களின் இந்த கூற்றை ஏற்பதற்கு இல்லை. விவசாயம் மற்றும் விவசாய சார்பு தொழிலை இன்றலவும் முதுகெழும்பாக கொண்ட இந்திய பொருளாதாரத்திள் பெரும் சதவித மக்கள் இத் துரையை நம்பிதான் அவர்களின் வாழ்வாதாரம் அமைய பெற்றுயிருக்கிரது. இத் துரையை எப்படி மேம்படுத்த வேண்டும் அவர்களின் வாழ்கை தரத்தை எப்படி உயர்த வேண்டும் என்று விவாதிக்க வேண்டுமே தவர அவர்களை இத்தொழில் இருந்து மாற்றுவது திற்வாகாது. பன்னாட்டு மற்றும் உள்னாட்டு வினை நிறுவனங்களின் ஆதிக்க நிலைப்பாட்டை உடைத்து விவசாயிகளின் நலனுக்கு ஏற்ப சுமுக வர்தக நிலையை உருவாக்க வேண்டும்.

      1. கூட்டு விவசாய முரை கொண்டு வர வேண்டும்.
      2. விவசாயிகளுக்கு நிதியுதவி செய்ய அனைத்து நிலை வங்கிகளை அரசு பணிக்க வேண்டும்.
      3. தேவையற்ற விவசாய பயன்பாட்டு பொருள்களை தினிக்கும் நிறுவனங்களை ஒழிக்க வேண்டும்.
      4. உரம் மற்றும் இன்றியமையா விவசாய பயன்பாட்டு பொருள்களை அரசே உற்பத்தி செய்ய வேண்டும். தனியார் உர நிறுவனங்களுக்கு வழங்கும் மானியத்தை தகற்து விவசாயிகளுக்கே பயனளிக்கும் மானியங்களை கொடுக்க வேண்டும்.
      5. விவசாய கொள்முதளை அரசை தவர வேறு எந்த அமைப்பும் செய்யகுடாது.
      6. அரசிடம் இருந்து மற்ற வியாபார நிலைகள் பெற்று கொள்ள வேண்டும்.
      இதனால் விவசாயிகள் நலம் பெறுவர் விலைவாசி கட்டுகொப்பில் இருக்கும். தேவையற்ற பதுக்கல்களை தவிற்களாம்.

      • மிஸ்டர் செந்தமிழன்

        கமிசண் மண்டிக்காரர்களுக்கு ஆப்பு வைக்க சொல்கிறீர்களா

        அவங்களோட நேச சக்தி அவர்கள் ஆமா சொல்லிப்புட்டேன்

        //5. விவசாய கொள்முதளை அரசை தவர வேறு எந்த அமைப்பும் செய்யகுடாது.//

        • திரு. தியாகு அவர்களே!

          //அரசிடம் இருந்து மற்ற வியாபார நிலைகள் பெற்று கொள்ள வேண்டும்.//

          இதை படிக்கவில்லையா!!!

          • ////அரசிடம் இருந்து மற்ற வியாபார நிலைகள் பெற்று கொள்ள வேண்டும்.////

            படிச்சேன் ஆனால் இவர்கள் என்ன சொல்கிறார்கள் என பார்க்கலாம் ஏன்னா

            வியாபாரி செய்வது சுரண்டலே இல்லைன்னு விவாதிக்கிறாவுக இவுக

            • நிச்சயமாக சமுதாயத்திலும் சரி வியாபரத்திலும் சரி அடி தட்டு மக்களை அதற்கு மேல் இருக்கும் நிலை சுரன்டதான் செய்கிறது. அச்சுரன்டலை தடுப்பது ஏற்ற தாழ்வினை தகர்பதின் விலைவாக தான் விடியும். அந்த விடியல் எப்பொழுது வரும் அனைத்து மக்களும் அதை உனரும் பொழுது. அந்த உனர்வு எப்பொழுது வரும் அனைத்து ஏற்ற தாழ்வினை ஒழிக்க வேண்டும் என்று நாம் உறுதியுடன் நம்பி செயல்படும் பொழுது. எப்பொழுது செயல்படும் என்றால் சமுதாயத்தில் நெருக்கடி எழும்பொழுது. உதரனம் வாள் ஸ்டிரிட் முற்றுகை. ஆகையால் சில வியாபாரிகள் சுரண்டுகிறார்கள் என்றால் அதை நிரந்திரமாக எப்படி தடுக்க வேண்டும் என்று பார்க்க வேண்டுமே தவர வியாபாரி செய்வது சுரண்டலே ஆகையால் அவ்ர்களை விட்டுவிட வேண்டும் என்று நினைப்பது தவரு என்று நான் நம்புகிறேன்.

            • ////ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தால் கூலிக்கு ஆள் கிடைக்கவில்லை என்பது ஏற்க முடியாதது. உரிய ஊதியம் கொடுத்தால் வருவார்கள். விவசாயக் கூலித் தொழிலாளர்களின் ஊதியம் உயர்ந்துவருவது வரவேற்புக்குறியது. இதைச் சாதித்த மன்மோகன் அரசு பாராட்டுக்குரியது.

              // இதுக்கு தியாகுத்தனமாக அல்லது அடிமுட்டாள்தனமாக பதில் சொல்லனும்னா இப்படிச் சொல்லனும்,”விவசாயக் கூலித் தொழிலாளர்களை சுரண்டும் விவசாயிகளை எப்படி நட்பு சக்தியாக பார்க்க முடியும்?”

              // இதுக்கு பதில் சொல்லுங்க தியாகு ஜி

              • //இதுக்கு பதில் சொல்லுங்க தியாகு ஜி//

                அலோ மிஸ்டர் அக்கவுண்டு ஒரு அக்கவுண்டபிலிட்டி இல்லாம பேசாதீங்க முதலில் கேள்வி கேட்டது நான்

                /உலகத்திலேயே தொழிலாளி விவசாயியை சுரண்டுகிறான் என்பது தங்களது மிகசிறந்த கண்டுபிடிப்பு இம்மாதிரி கண்டுபிடிப்பை கேள்வி பட்டதே இல்லை

                இந்த மாதிரியான மார்க்சியத்தை யார் சொல்லி கொடுத்தாங்க பாஸ்//

                இதுக்கு பதில் சொல்லுங்கோன்னா இன்னொரு இடத்தில் நீங்கள் கொட்டி வைத்த முத்துக்கு ஞான் என்ன பறைவது

                • ///உலகத்திலேயே தொழிலாளி விவசாயியை சுரண்டுகிறான் என்பது தங்களது மிகசிறந்த கண்டுபிடிப்பு இம்மாதிரி கண்டுபிடிப்பை கேள்வி பட்டதே இல்லை

                  இந்த மாதிரியான மார்க்சியத்தை யார் சொல்லி கொடுத்தாங்க பாஸ்//// இத நான் எப்பய்யா சொன்னேன்? நான் சொல்லாததை நான் சொன்னதா சொல்லி பதில் சொல்லச் சொன்னா எப்படி? தியாகுத்தனமென்று இதையும் சொல்லலாம்… உங்கள மாதிரி ஏமாற்று பேர்வழிகளை கிழிக்க இரண்டே இரண்டு விசயம்தான் கேட்டேன்.

                  ஒன்று, உங்க முதலாளியின் சார்பில் தொழிலாளியைச் சுரண்டும் மேலாளரான நீங்கள் எப்படி தொழிலாளி வர்க்கத்தின் நட்பு சக்தியாவீர்கள் என்பது. உங்க தியாகுத்தனம் உங்களையே எதிரி என்று சொல்கிறது.

                  இரண்டு, விவசாயியைச் சுரண்டும் வியாபாரி எதிரி என்ற உங்களது கழுதை விட்டை லாஜிக்கை வைத்து பார்த்தால், விவசாயியைச் சுரண்டும் உங்களைப் போன்ற நடுத்தர வர்க்கமும் எதிரிதான். இதே லாஜிக்கின் நோக்கில், விவசாயக் கூலித் தொழிலாளியைச் சுரண்டும் விவசாயியும் எதிரிதான். உங்க ஊத்தைவாய் லாஜிக்கை இந்த அம்சத்தில் நடைமுறைப்படுத்தினால், விவசாயக் கூலித் தொழிலாளியைச் சுரண்டும் விவசாயியை ஒழிப்பதுதான் கார்ப்போரேட் பார்மிங் மற்றும் ரிடையல் துறையில் அன்னிய முதலீடு மற்றும் உர கம்பனிகள். எனவே விவசாயக் கூலித் தொழிலாளியை சுரண்டும் விவசாயியின் அழிவை நீங்கள் ஆதரிக்கத்தானே வேண்டும்? எதிர்க்க சொல்வது ஏன்? என்ன தியாகுத்தனமய்யா இது?

                  • https://www.vinavu.com/2011/12/26/fertilizer/#comment-54266

                    //விவசாயியை வியாபாரி மட்டுமா சுரண்டுகிறான்? அடிமாட்டு விலைக்கு பேரம் பேசி வாங்கி நடுத்தர வர்க்கமும் கூடத்தான் சுரண்டுகிறது. விவசாயி அதிலும் நிலமற்ற ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த விவசாயிதான் ஆக மோசமாக சுரண்டப்படுபவன். அவனைச் சுரண்டுபவர்களில் தொழிலாளி, நடுத்தரவர்க்கமான வியாபாரி இன்ன பிறர் முதல் கொழுத்த பன்னாட்டு மூலதனம் வரை அனைத்தும் உள்ளது//

                    இதான் உங்க கொமண்டு இதில் ஆறாவது வரியில் என்ன சொல்லி இருக்கிறீர்கள் மிஸ்டர் அக்கவுண்டு

                    • ////விவசாயியை வியாபாரி மட்டுமா சுரண்டுகிறான்? அடிமாட்டு விலைக்கு பேரம் பேசி வாங்கி நடுத்தர வர்க்கமும் கூடத்தான் சுரண்டுகிறது. விவசாயி அதிலும் நிலமற்ற ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த விவசாயிதான் ஆக மோசமாக சுரண்டப்படுபவன். அவனைச் சுரண்டுபவர்களில் தொழிலாளி, நடுத்தரவர்க்கமான வியாபாரி இன்ன பிறர் முதல் கொழுத்த பன்னாட்டு மூலதனம் வரை அனைத்தும் உள்ளது//

                      இதான் உங்க கொமண்டு இதில் ஆறாவது வரியில் என்ன சொல்லி இருக்கிறீர்கள் மிஸ்டர் அக்கவுண்டு/// உங்க கூமுட்டை மூளையை நொந்து கொள்ள வேண்டியதுதான் வேற வழியில்லை. இந்த ஈர வெங்காய கண்டுபிடிப்பு என்னுடைய கண்டுபிடிப்பு இல்லை தியாகு. நான் சொன்னதா நீங்க குறிப்பிட்டிருக்கும் விசயம் ஆக்சுவலி உங்க இத்து போன தியாகு லாஜிக்கின்படி வந்தடையும் முடிவு ஆகும். சுரண்டல்னா எல்லாமே சுரண்டல்தான் என்று போன பதிவில் நீங்கள் செய்த கண்டுபிடிப்பைத்தான் நான் மேலே குறிப்பிட்டுள்ளேன். இதுக்கும் நீங்க ஒரு தியாகுத்தனமான பதில் சொல்லிருகிங்க. விவசாயியிடம் நேரடியா துட்டு ஆட்டையப் போடுறவன் வியாபாரிதான் எனவே வியாபாரி அடிமாட்டு விலைக்கு விவசாயியை சுரண்டி அதில் ஒரு லாபம் வைத்து விற்பதால் குறைந்த விலைக்கு கிடைப்பதை அனுபவிக்கும் நடுத்தரவர்க்கம் சுரண்டல்வாதி கிடையாது என்று அரிய மார்க்ஸிய கண்டுபிடிப்பையும் சொல்லியுள்ளீர்கள். இந்த தத்துவத்தை அப்படியே எடுத்து உங்க நிறுவனத்தில் வைத்தால் உங்க நிறுவன தொழிலாளியை நேரடியாச் சுரண்டும் நீங்கள்தான் தொழிலாளியின் முதல் எதிரி என்று ஆகிறது. நீங்கள் தொழிலாளியை சுரண்டுவதானால் கிடைக்கும் லாபத்தை அடையும் முதலாளி நல்லவன், தொழிலாளியோட பிரண்டு என்று தியாகுத்தனம் சொல்கிறது.

                      கம் டு தி பாயிண்டு. இந்த இழவைத்தான் ரெண்டு பாயிண்டா வைச்சி உங்க மோசடி வேசத்தை கிழித்திருந்தேன். நீங்களோ எஸ்கேப்.

                      இப்பயும் ஒன்னும் குறைஞ்சு போயிரல தியாகு ஒரு நல்லவர், தியாகுத்தனம் வல்லமையானதுன்னு நிரூபிக்க கீழ் கண்டவற்றுக்கு பதில் சொன்னாலே போதும். இல்லைனா யாருமே வராத உங்க டீக்கடையிலே டீ ஆற்றிக் கொண்டிருப்பதே உத்தமமானது.

                      ஒன்று, உங்க முதலாளியின் சார்பில் தொழிலாளியைச் சுரண்டும் மேலாளரான நீங்கள் எப்படி தொழிலாளி வர்க்கத்தின் நட்பு சக்தியாவீர்கள் என்பது. உங்க தியாகுத்தனம் உங்களையே எதிரி என்று சொல்கிறது.

                      இரண்டு, விவசாயியைச் சுரண்டும் வியாபாரி எதிரி என்ற உங்களது கழுதை விட்டை லாஜிக்கை வைத்து பார்த்தால், விவசாயியைச் சுரண்டும் உங்களைப் போன்ற நடுத்தர வர்க்கமும் எதிரிதான். இதே லாஜிக்கின் நோக்கில், விவசாயக் கூலித் தொழிலாளியைச் சுரண்டும் விவசாயியும் எதிரிதான். உங்க ஊத்தைவாய் லாஜிக்கை இந்த அம்சத்தில் நடைமுறைப்படுத்தினால், விவசாயக் கூலித் தொழிலாளியைச் சுரண்டும் விவசாயியை ஒழிப்பதுதான் கார்ப்போரேட் பார்மிங் மற்றும் ரிடையல் துறையில் அன்னிய முதலீடு மற்றும் உர கம்பனிகள். எனவே விவசாயக் கூலித் தொழிலாளியை சுரண்டும் விவசாயியின் அழிவை நீங்கள் ஆதரிக்கத்தானே வேண்டும்? எதிர்க்க சொல்வது ஏன்? என்ன தியாகுத்தனமய்யா இது?

                    • தியாகு, இந்த போட்டோல நல்லா இளமையா இருக்காறே யாரு உங்க பையனா பேரனா..

                    • விவசாயியை வியாபாரி மட்டுமா சுரண்டுகிறான்?
                      அடிமாட்டு விலைக்கு பேரம் பேசி வாங்கி நடுத்தரவர்க்கமும் கூடத்தான் சுரண்டுகிறது. விவசாயி அதிலும் நிலமற்ற ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த விவசாயிதான்ஆக மோசமாக சுரண்டப்படுபவன். அவனைச்சுரண்டுபவர்களில் தொழிலாளி, நடுத்தரவர்க்கமான வியாபாரி இன்ன பிறர் முதல் கொழுத்த பன்னாட்டு மூலதனம் வரை அனைத்தும் உள்ளது. ஒருத்தனை ஒருத்தன் அடிச்சி சாப்பிடுறதுதான் உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தின் விதி. எனவே இதற்கு மூலகாரணமானஏகாதிபத்தியங்களை எதிர்க்க பொது எதிரி என்ற அளவில்
                      அவனால் பாதிக்கப்பட்டவர்கள் இணைந்து போராடுவதில்
                      என்ன தவறுள்ளது? அப்படியில்லை அவனவன்அவனவனுக்குரியதை தனித்தனியே போராடி வாங்கவேண்டும் என்றால் அதைத்தான் மக்களை பிரிக்க ஏகாதிபத்தியம் உருவாக்கிய பின்நவீனத்துவமும்
                      சொல்கிறது.//

                      இப்படி ஒரு கமெண்டு போட்டு விட்டு அதற்கு பதிலில்எப்படி தொழிலாளியை விவசாய விரோதின்னு சொல்றீங்கன்னு கேட்டதும் ஓடி போய் ஒழிஞ்சுட்டீங்கஅதெப்படிங்க விவசாயியை தொழிலாளி சுரண்டுகிறான்னு கேட்டதும்

                      //இதுக்கு தியாகுத்தனமாக அல்லது அடிமுட்டாள்தனமாக பதில் சொல்லனும்னா இப்படிச்சொல்லனும்,”விவசாயக் கூலித் தொழிலாளர்களை
                      சுரண்டும் விவசாயிகளை எப்படி நட்பு சக்தியாக பார்க்க முடியும்?”//

                      இதுக்கு பதில் சொல்லுங்கன்னு சம்பந்தமில்லாமல்
                      உளறிட்டு

                      விவசாயியை தொழிலாளி சுரண்டுகிறான் என சொல்வது சரியா யாருய்யா உனக்கு மார்க்சியம் சொல்லிகொடுத்ததுன்னு திருப்பி திருப்பி கேட்டதும்

                      அப்படி எங்கயுமே சொல்லவில்லை என சொல்லி மழுப்பி
                      விட்டு இப்ப வந்து

                      அது தியாகு சொன்னதுன்னு (லாஜிக் படி அப்படி
                      வருதுன்னு )

                      பேந்த பேந்த முழிச்சிட்டு சொல்வது உங்கள்
                      அம்மணத்தை மறைக்கவில்லை மிஸ்டர் அகமது தவறா சொல்லிட்டேன்னு சொல்லுங்க விட்டுடுறேன்

                      ஆனால் மழுப்பல் தவறு

        • ///கமிசண் மண்டிக்காரர்களுக்கு ஆப்பு வைக்க சொல்கிறீர்களா
          அவங்களோட நேச சக்தி அவர்கள் ஆமா சொல்லிப்புட்டே.///

          யோவ் நீ பெரிய மண்டைவீங்கி தான்யா ஒத்துக்குறோம்யா. பின்னூட்டத்திலேயே முடியலைனா நேர்ல எவ்வளவு கொடூரமா இருக்கும்னு நினைச்சு பார்க்கும் போது நாங்கெல்லாம் எவ்வளவோ பரவாயில்லைன்னு தோனுது, அவிங்கள நினைச்சா தான் ரொம்ப பாவமா இருக்கு. இருக்கதே நாலு பேரு அந்த நாலு பேரும் காலியாகப்போறாங்க.

      • இவை எல்லாவற்றையும் செய்த சோவியத் யூனியனின் பொருளாதாரம் ஏன் நொறுங்கிப் போனது? ஒரு ரொட்டித்துண்டுக்கு க்யூவில் நின்றே வெறுத்துப் போன மக்கள் போதும் இந்த கம்யூனிச ஆட்சி என்று தூக்கிப்போட்டார்களே ஏன்?

        • உங்களுக்கு இது தொடர்பாக ஏற்கெனவே ஒரு பதிவில் பதிலளித்துள்ளேன். https://www.vinavu.com/2011/12/22/red-salutes-kishenji/#comment-54252 அதற்கு எந்த பதிலும் கூறாமல் இவ்வாறு அனைத்து பதிவுகளிலும் பேசி வருவது நேர்மையற்றது.

          முன்னரே உங்களுக்களித்த பதில் மேற்கண்ட சுட்டியிலிருந்து…

          1954, 1976 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட சோசலிச அரசுகளின் பின்னடைவுக்கு காரணம் மக்கள் அல்ல முதலாளித்துவ சதிவேலைகளே அவை பின்னடைவுக்குள்ளாக காரணம். கம்யூனிச பீதியால் சோசலிச அரசுகளை அழித்தொழிக்க முதலாளிகள் எந்நேரமும் வேலை செய்து கொண்டிருந்தனர். கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரங்களுக்காக பணத்தை அள்ளி இறைத்தனர். சோசலிச நாடுகளை பற்றியும், அதன் தலைவர்களை பற்றியும் கூறப்படும் எதிர்மறை கருத்துக்கள் அனைத்தும் உருவாக்கியவர்கள் முதலாளிகளே.

          சோசலிச நாடுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் என்பது ஒரு தற்காலிக பின்னடைவு மட்டுமே, உலகம் மீண்டும் அலை அலையாக சோசலிச நாடுகளை காணப்போகிறது.

          உலகில் முதல் முறையாக ரசியாவில் தான் சோசலிச புரட்சி நடைபெற்றது. உலகில் இனி நடைபெறப்போகும் அனைத்து புரட்சிகளும் அதன் பின்னடைவிலிருந்து அணுபவங்களை பெற்றுக்கொண்டு தான் முன்னேறும். அனைவரும் தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டு தான் சரியான வழியை கண்டடைகிறோம். குழந்தைகள் எழுந்து நடக்க முயற்சித்து விழுந்து பிறகு மீண்டும் எழுவதில் தொடங்கி ஒரு வளர்ந்த மனிதன் புதிதாக ஈடுபடும் ஒரு வேலையில் முதலில் ஏற்படும் தவறை கண்டுபிடித்து திருத்திக்கொண்டு அடுத்த முறை அந்த தவறு நேராமல் சரியாக செய்வது வரை அனைத்தும் விழுந்து எழுவதாக தான் இருக்க முடியும். இவ்வாறு மட்டுமே சரியானதை அடைய முடியும். அவ்வாறு இல்லாமல் சோசலிசம் வரவே வராது என்று குருட்டுத்தனமாக பேசினால் ஏன் வராது என்பதற்கும் விளக்கமளிக்க வேண்டும். அவ்விளக்கம் அறிவியல்பூர்வமானதாக இருக்க வேண்டும்.

          • சோஷலிச நாடுகளில் பாலாறும், தேனாறும் ஓடியது, முதலாலித்துவ சதி வேலைகளால் மட்டுமே அந்த அரசுகள் வீழ்ந்தன என்று நம்புவது ‘கடவுள் நல்லவர்களை சோதிப்பார், ஆனால் கைவிட மாட்டார்’ என்று நம்புவது போன்றது!

            *** சோசலிச நாடுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் என்பது ஒரு தற்காலிக பின்னடைவு மட்டுமே, உலகம் மீண்டும் அலை அலையாக சோசலிச நாடுகளை காணப்போகிறது.***

            அகண்ட பாரதம், இயேசுநாதர் மீண்டும் வருவது எல்லாம் நிகழுமானால் இதுவும் நிகழும்!

            *** பின்னடைவிலிருந்து அணுபவங்களை பெற்றுக்கொண்டு தான் முன்னேறும். அனைவரும் தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டு தான் சரியான வழியை கண்டடைகிறோம். ***

            இந்தச் சலுகை சோஷலிசத்துக்கு மட்டும்தானா?
            முலீட்டியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள ரிஷசன், வால் ஸ்ட்ரீட் போராட்டம், யூரோ ஜோன் கிரைசிஸ் போன்றவை இதுபோன்ற சிறு தடுமாற்றங்களே; நிச்சயம் அவை சரி செய்யப்படும் – வெகு விரைவில்.

            • //இந்தச் சலுகை சோஷலிசத்துக்கு மட்டும்தானா?
              முலீட்டியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள ரிஷசன், வால் ஸ்ட்ரீட் போராட்டம், யூரோ ஜோன் கிரைசிஸ் போன்றவை இதுபோன்ற சிறு தடுமாற்றங்களே; நிச்சயம் அவை சரி செய்யப்படும் – வெகு விரைவில்.// வாங்க அதியமான் அலைஸ் சரவணன் சார். மேற்படி இந்த இத்துப் போன தத்துவத்தை சொல்பவர் உலகத்திலேயே அதியமான் ஒருவர் மட்டும்தான். அவரிடம் ஒவ்வொரு இடத்திலும் நான் கேட்டது 300 வருசமா நீங்க ‘சிறு’ தடுமாற்றங்களுடனே போயிட்டு இருக்கீங்களே எப்போதான் முதலாளித்துவத்த காட்டப் போறீங்க என்பதுதான். இதற்கு அவர் இன்ன வரை பதில் சொல்லலை.

            • ////சோஷலிச நாடுகளில் பாலாறும், தேனாறும் ஓடியது, முதலாலித்துவ சதி வேலைகளால் மட்டுமே அந்த அரசுகள் வீழ்ந்தன என்று நம்புவது ‘கடவுள் நல்லவர்களை சோதிப்பார், ஆனால் கைவிட மாட்டார்’ என்று நம்புவது போன்றது!////

              சோசலிச நாடுகளில் பாலாறும் தேனாறும் தான் ஓடியது.
              https://www.vinavu.com/2010/11/07/nov-7-3/ இதை எந்த முதலாளித்துவ கொம்பனால் மறுக்க முடியும் ? மறுக்க முடியாததால் தான் சோசலிசத்திற்கெதிரான அவதூறு கதைகளை எழுதுகிறார்கள்.சில பத்தாண்டுகள் மட்டுமே நீடித்த சோசலிச நாடுகள் இந்த பூவுலகில் ஒரு சொர்க்கத்தை படைத்தன. ஆனால் பல நூறாண்டுகளாக நீடிக்கும் முதலாளித்துவம் இந்த உலகில் சாதித்தது என்ன ?

              மனிதர்களை எந்திரங்களாக்கி, உழைப்பைச்சுரண்டி ஒரு சிறு கூட்டம் உட்கார்ந்து தின்பதற்கு பெரும்பாண்மை மக்களை ஓட்டாண்டிகளாகி வைத்திருப்பது தான் முதலாளியம். அது மனிதர்களை மட்டும் அழிக்கவில்லை. காடுகள், மலைகள், ஆறுகள், குலங்கள், கடல்கள், வானம்,பூமி என்று அனைத்தையும் அழித்து வருகிறது. அத்தகைய முதலாளித்துவத்தை ஒழித்துக்கட்டுவதன் மூலம் தான் மனிதர்களையும் இயற்கையையும் காக்க முடியும்.

            • ///அகண்ட பாரதம், இயேசுநாதர் மீண்டும் வருவது எல்லாம் நிகழுமானால் இதுவும் நிகழும்!///

              மதகுரு மாதிரி பேசாமல் ஏன் நிகழாது என்பதற்கு அறிவியல்பூர்வமாக பதிலளியுங்கள்.

            • ////இந்தச் சலுகை சோஷலிசத்துக்கு மட்டும்தானா?
              முலீட்டியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள ரிஷசன், வால் ஸ்ட்ரீட் போராட்டம், யூரோ ஜோன் கிரைசிஸ் போன்றவை இதுபோன்ற சிறு தடுமாற்றங்களே; நிச்சயம் அவை சரி செய்யப்படும் – வெகு விரைவில்.////

              எப்படி சரி செய்யப்படுகிறது ? சோம்பேறி கூட்டமான முதலாளிகளை காக்க உழைக்கும் மக்களின் மடியில் கையை வைப்பதன் மூலம் நெருக்கடிகளிலிருந்து ‘தற்காலிகமாக’ முதலாளித்துவம் காப்பாற்றப்படுகிறது. அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் முதலாளி வர்க்கத்தை மக்கள் மானக்கேடாக திட்டி காறித்துப்புகிறார்கள். வரலாற்றில் முதலாளி வர்க்கம் இனி ஆளத்தகுதியற்றதாகிவிட்டது என்று மார்க்ஸ் அன்றே கூறிவிட்டார். ஆனாலும் ஜாக்கி வைத்து ஜாக்கி வைத்து இருபத்தியோராம் நூற்றாண்டிற்குள்ளும் நுழைந்துவிட்டது. இங்கே மக்கள் அதை தூக்கியெறிவார்கள்.

              முதலாளித்துவ நெருக்கடிகளை இப்படி மட்டுமே சரி செய்ய முடியும். ஆனால் அது மீண்டும் நெருக்கடிக்குள் சிக்குவது தவிர்க்கவியலாதது. எனவே ஒரு கேடான கொள்கையை சரி செய்து மீண்டும் கேடில் முடிவதற்கும் ஒரு சரியான கொள்கையை சரி செய்து சரியான பாதையில் பயணிப்பதற்கும் வேறுபாடு உண்டு. நாம் சரியான கொள்கையை, சோசலிசத்தை மீட்க வேண்டும் என்கிறோம். மக்களும் தங்களுடைய அணுபவத்திலிருந்து சரியானதை தேர்வு செய்வார்கள்.

              • 20ம் நூற்றாண்டு இறுதியிலேயே போலந்து, ஹங்கேரி, ருமேனியா, கிழக்கு ஜெர்மனி, மற்றும் சோவியத் குடியரசுகளில் மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து அந்த ‘பூலோக சொர்க்கங்களை’ தூக்கி எறிந்துவிட்டார்கள்! அந்த மக்கள் எழுச்சிகளை முதலாளித்துவ சதி என்று கூறி அத்தனை கோடி மக்களை அவமதிக்காதீர்கள்!

                இப்பொழுதுகூட க்யூபாவைவிட்டுக் கள்ளத்தோனி மூலமாக முதலாளித்துவ அமெரிக்காவுக்குத்தான் மக்கள் தப்பி ஓடுகிறார்கள். (அது எப்படிங்க உங்கள் சொர்க்கத்தில் பேச்சுரிமை மட்டும் இல்லை? இதாரணமாக இங்கு அந்த சொர்க்கம் வந்துவிட்டால் யாரும் செங்கடல் படத்தைப் பார்க்க முடியாது! தடை போட்டுவிடுவார்கள்.)

                • நல்லது அதியமான், உங்கள் அவதூறு பணியை தடையின்றி தொடருங்கள். உங்களோடு விவாதிக்க நான் தாயார் இல்லை. ஆனால் செய்வதை சொந்த பெயரில் செய்யுங்கள் எதற்கு வேறு வேறு பெயர்கள். உலகத்தில் எவ்வளவு மாற்றங்கள் வந்தாலும் அதியமான் மட்டும் தான் மாறாமல் அப்படியே இருப்பவர்.

        • சோவியத் பொருளாதாரம் விழ்ந்ததற்கு கமியுனிச கொள்கை என்று பினாதாதிர்கள். 1953யில் ஸ்டாலின் மறைவுக்கு பின்னால் அவர்களிடத்தில் ஏற்பட்ட கருத்து சறிவு அதன் பின்பு சோவியத் தலைவர்கள் மேற்க் கொண்ட அரசியல் முடிவுகள் அதன் விலைவாக எற்பட்ட பொருளாதார பின்னடைவுகள் அதனை ஊதி பெறிதாகிய உங்கள் முதலாலிதுவ நாடுகள் அனைத்தும் தான் காரனம்.
          சோவியத் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் தறுனத்திலும் அவர்கள் எந்த ஒரு நாடையும் அழித்து ஒழித்து அவர்கள் வாழ்வதற்காக அழிக்கவில்லை. மேலும் விளங்க வேண்டும் என்றால் தோழர் அம்பேத்தின் பதிலை மனப்பாடம் செய்க!

        • சோவியத் பொருளாதாரம் விழ்ந்ததற்கு கமியுனிச கொள்கை என்று பினாதாதிர்கள். 1953யில் ஸ்டாலின் மறைவுக்கு பின்னால் அவர்களிடத்தில் ஏற்பட்ட கருத்து சறிவு அதன் பின்பு சோவியத் தலைவர்கள் மேற்க் கொண்ட அரசியல் முடிவுகள் அதன் விலைவாக எற்பட்ட பொருளாதார பின்னடைவுகள் அதனை ஊதி பெறிதாகிய உங்கள் முதலாலிதுவ நாடுகள் அனைத்தும் தான் காரனம்.
          சோவியத் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் தறுனத்திலும் அவர்கள் எந்த ஒரு நாடையும் அழித்து ஒழித்து அவர்கள் வாழ்வதற்காக அழிக்கவில்லை. மேலும் விளங்க வேண்டும் என்றால் தோழர் அம்பேத்தின் பதிலை மனப்பாடம் செய்க

  6. \\ அரசு, இப்போது உர விலையை முதலாளிகளே தீர்மானித்துக் கொள்ளையடித்துக் கொள்ள தாராளமாக அனுமதித்துள்ளது. இந்நிலையில், சில விவசாய சங்கங்கள் உரத்திற்கான மானியத்தை விவசாயிகளிடமே கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றன. முதலாளிகளுக்குக் கொள்ளையடிக்க சுதந்திரம் கொடுத்துவிட்டு, மானியத்தை விவசாயிகளிடம் கொடு என்பது, தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பதைப் போலத்தான்.//

    உர விலை நிர்ணயத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும் என்பதில் அதியமானைத் தவிர வேறு யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை.அதே சமயம் உர மானியத்தை நேரடியாக விவசாயிகளிடம் கொடுக்க கோருவதும் சரியானதுதானே.

  7. nitrogen (nutrient) தழைச்சத்து
    phosphate மணிச்சத்து

    //பயிருக்கு மணிச்சத்தும் (phosphate) தழைச்சத்தும் (nitrogen) கிடைக்க சம்பா நெல் நடவுப் பணியின் போது டி.ஏ.பி (diammonium phosphate)உரம் அடியுரமாக இடப்படும்//

    தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து (total ash) என்ற மூன்று வகையான உரங்கள் விவசாயத்திற்கு அடிப்படையான உரங்களாகும். இதில் முதலிரண்டு வகை உரங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன. //சாம்பல் சத்து எனப்படும் பொட்டாஷ் உரம் மட்டும் வெளிநாடுகளிலிருந்து //

    சாம்பல் சத்துனா பொடாச்ஸ் இல்ல, இந்தியா வாங்குறது பொடாச்ஸ் எனப்படும் மணிச்சத்து !!!!!

    //டி.ஏ.பி. உரத்தில் ஏற்கெனவே 18:46 என்ற அளவில் இருந்த மணிச்சத்து, தழைச்சத்து விகிதம் தற்போது16:44// இந்தியாவுல இரண்டு கிரேட் கிடைக்குரதா கேள்விபட்டேன்
    18:46
    16:44

  8. சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
    உழந்தும் உழவே தலை (துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது) – திருவள்ளுவர்.
    வள்ளுவர் வாக்கு உண்மையென்றாலும், உழவனுக்கு இவ்வளவு துன்பம் கூடாது.
    இந்த நாட்டு அரசியல்வாதிகளுக்கு உழவனை பற்றி உண்மையான கவலை இல்லை என்பதை இந்த பதிவு தெளிவுப்டுத்தியுள்ளது.
    எத்தனை வருடம் உழைத்தாலும் வருமான உயார்வு கிடைக்காத ஒரே தொழில் விவசாயம்தான். இதன் விளைவாக இளைய தலைமுறை யாரும் விவசாயத்தில் ஈடுபடுவதில்லை. இது எதுல போய் முடியுமுன்னு தெரியல.

  9. இந்தப் பதங்களுக்குச் சரியான தமிழ்ச்சொற்கள் தெரிந்தவர்கள் கொடுத்து உதவ முடியுமா?

    share cropper-

    casual labour-

    attached labour-

Leave a Reply to சரவணன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க