Thursday, May 30, 2024
முகப்புசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்அறிவியலின் நெற்றியடி! பைபிளின் மோசடி!!

அறிவியலின் நெற்றியடி! பைபிளின் மோசடி!!

-

கி.பி. 1860-ஆம் வருடம், ஜூன் மாதம். இங்கிலாந்து, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக வளாகம் மக்கள் வெள்ளத்தால் ததும்புகிறது; பற்பல நாடுகளிலிருந்து வருகை தந்திருக்கும் அறிஞர் பெருமக்கள், என்னதான் நடக்கும் என்று கிசுகிசுத்தவாறு அமர்ந்திருக்கும் பிரபு குலத்தவர்கள். நடைபெற இருந்த மாபெரும் விவாதப் போரைப் பற்றி ஆரவாரத்துடன் பேசிக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டம் என ஆக்ஸ்போர்டு வளாகம் அதிர்ந்து கொண்டிருந்தது.

ஆக்ஸ்போர்டின் கலகலப்பிற்கு காரணம் உண்டு, ‘இயற்கைத் தேர்வின் மூலம் உயிரினங்களின் தோற்றம்’ என்ற புத்தகத்தை வெளியிட்டு அன்றைய இங்கிலாந்தில் ஒரு சூறாவளியைக் கிளப்பியவர் சார்லஸ் டார்வின். பரிணாமத் தத்துவத்தை 230 பக்கங்களில் விவரிக்கும் இச்சிறுநூல் ஏற்படுத்திய புயலில் விவிலியமும் பறந்து சென்றது.

இறைவனின் மறைவாக்கு கேள்விக்குள்ளாக்கப்படுவதை கிறித்தவ பாதிரிகள் கடுமையாக எதிர்த்தார்கள். பொதுமேடையில் விவாதத்திற்குத் தயாரா என்று டார்வினின் ஆதரவாளர்களுக்கு சவால் விட்டனர்.

மதத்தின் பிடியிலிருந்து அறிவியலை மீட்கும் கடமையுணர்வுடன் ஆக்ஸ்போர்டு விவாதத்திற்கு வருகை தந்தனர் டார்வினின் ஆதரவாளர்களான ஹக்ஸ்லியும், ஹூக்கரும். அறிவின் அடக்கத்துடன் அமர்ந்திருந்த இவ்வறிஞர்களின் எதிரில் ஆக்ஸ்போர்டு மதத்துறையின் பிரபலமான மதகுரு பிஷப் வில்பர் போர்ஸ் கம்பீரமாகத் தலை நிமிர்ந்து வீற்றிருந்தார். அவரைச் சுற்றி வெண் தூண்களாய் ஆண்டவனடியார்கள் மூளையைச் சாணை பிடித்துக் கொண்டு (!) அமர்ந்திருந்தனர்.

விவாதம் தொடங்கிற்று. வேத நூலை முத்தமிட்டு, சிலுவை ஏந்திய கரங்களுடன் தொண்டையைக் கனைத்துவிட்டு பேச ஆரம்பித்தார் பிஷப், ”மக்களே! பரமபிதாவின் பெயரால் உங்களை வேண்டுகிறேன். சாத்தானின் அவதாரமான சார்லஸ் டார்வின், நீங்களெல்லாம் குரங்கிலிருந்து தோன்றியவர்கள் என கூசாமல் கூறியிருக்கிறான். பாலூட்டி சீராட்டி வளர்த்த உங்கள் பாட்டன்மார்களும், முப்பாட்டன்மார்களும் குரங்குகளா? இதை ஏற்கப் போகிறீர்களா? எனது கேள்விக்கு இங்கு அமர்ந்திருக்கும் குரங்கின் சீடர்கள் என்ன பதில் தருவார்கள். இவர்கள் குரங்கிலிருந்து உதித்ததாகச் சொல்வது தன் பாட்டன் வழியாகவா, பாட்டி வழியாகவா” என்று கேலி செய்த திருப்தியுடன் இறுதியில் ‘டார்வினின் ஆராய்ச்சி சத்தியமறையின் புனிதக் கொள்கைக்கு எதிராக இருப்பதாகக் கூறி இருக்கையில் அமர்ந்தார்.

‘புனித’க் கொள்கையால் உணர்வூட்டப்பட்ட மக்களின் கரவொலியின் நடுவில் பேச வந்தார் டார்வினின் சீடர் ஹக்ஸ்லி.

அறிவியலின் நெற்றியடி! பைபிளின் மோசடி!!
டார்வின்

வெறியுட்டப்பட்ட மத உணர்வுகளின் மத்தியில் உண்மையைப் பேசுவதற்கு ஒரு மனிதனுக்கு எத்தனை தைரியம் வேண்டும். மதமெனும் குகையிலிருந்த மக்களை விஞ்ஞான உண்மையெனும் ஒளியை நோக்கி ஈர்ப்பதற்கு அனைத்து அவலங்களையும் சகித்துக்கொண்டார் ஹக்ஸ்லி. டார்வினின் ஆராய்ச்சியை விரிவாக பேசினார். ஒரு பாதி மக்களையாவது உண்மையினை ஏற்கவைத்தார். பொது விவாதம் முடிந்தது.

ஆனால் டார்வின் எழுப்பிய புயல் ஓயவில்லை. குரங்குகளை கண்ட இடமெல்லாம் கல்லாலடித்து துரத்தினார்கள் மறை உணர்வு கொண்ட மக்கள்.

இங்கிலாந்தின் தேவாலயங்களில்,கருப்பு உடை தரித்த பக்த கோடிகள், கால்களின் கீழ் டார்வினின் புத்தகத்தை மிதித்தவாறு இறைவனின் புனிதக் கொள்கையை சாத்தானாகிய டார்வினிடமிருந்து காப்பதாக உறுதி பூண்டார்கள்.

கி. பி. 1950 – ‘பொதுவுடைமைப் பூதம்’ ஐரோப்பிய நாடுகளைப் பற்றிப் பரவும் காலம், கம்யூனிஸ்ட் சாத்தான்களிடமிருந்து புனிதக் கொள்கையை காப்பதற்க்கு போப்பாயஸ் XII எச்சரிக்கிறார், ”பரிணம வாதத்தை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் இதைக்கொண்டு பொருள் முதல்வாதிகளும், நாத்திகர்களும் உலகை உருவாக்கிய தேவனின் பங்கை மறைக்கிறார்கள். எந்த உயிரின மூலப்பொருளில் இருந்து மனிதன் தோன்றினானோ, அதைப் படைத்தவன் தேவனே” என்று அருள்மொழிந்து பரலோகம் சென்றார்.

கி.பி. 1996 – வாடிகன் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு போப் ஜான் பால் II சொல்வதாவது. ‘மனிதன் ஒற்றை அடியில் உருவாக்கப்பட்டவன் என்பதில்லை. தேவனால் படிப்படியாக பரிணாம வளர்ச்சியின் மூலம் உருவானவன் என்பதை ஏற்கலாம்’ சென்ற நூற்றாண்டில் (டார்வினால்) வெளியிடப்பட்ட பரிணாம வளர்ச்சி பற்றிய தத்துவம், ஆய்வுசெய்யும் அறிஞர்களுக்கும், புதிய கண்டுபிடிப்புகளுக்கும் குறிப்பிடதக்க பங்காற்றியிருக்கிறது. ஆனால் அனைத்திற்க்கும் மூலகர்த்தா தேவன்தான் என்று ஏற்கனவே போப் பயஸ் XII அருளியிருப்பது முக்கியமான ஒன்றாகும்”.

போப் அவர்களே! காலில் போட்டு மிதித்த சாத்தானின் கருத்தை 137 ஆண்டுகள் கழித்து சிறிது ஏற்கிறோம் என்று ஏன் நடிக்க வேண்டும்? உலகத் தோற்றம் குறித்து பைபிள் கூறுவது நீங்கள் அறியாததல்ல.’

அறிவியலின் நெற்றியடி! பைபிளின் மோசடி!!
கலீலியோ

‘ஐந்து நாட்களில் அண்ட _ பிண்ட சராசரங்களைப் படைத்த பரமபிதா, ஆறாவது நாள் களிமண்ணை உருட்டி ஆதாமையும், அவன் விலா எலும்பிலிருந்து ஏவாளையும் படைத்து விட்டு ஏழாவது நாள் ஓய்வெடுக்கச் சென்றார்.”

ஆறு நாட்கள் வேலை, ஏழாவது நாள் விடுமுறை என்பது தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற உரிமையை உங்கள் பரமபிதாவுக்கு வழங்குவதில் எமக்கு ஆட்சேபணையில்லை.

ஆனால் டார்வினின் பரிணாமத் தத்துவத்தை சிறிது ஏற்றுக் கொண்டாலும் பைபிளின் முதல் அத்தியாயம் தவறாகுமே! மாற்ற வேண்டுமே!

இல்லை. எதுவும் மாற்ற வேண்டியதில்லை. போப்பின் அறிக்கைகளுக்கு பொழிப்புரை தருகிறார் கத்தோலிக்க திருச்சபையின் தகவல் தொடர்பாளர் பிரான்சிஸ் மானிஸ்கால்கோ. அதாவது போப்பின் பரிணாமத் தத்துவம் பற்றிய கருத்தை, அவர் மதத் தலைவர் என்ற முறையில் கூறியதாகவோ, கத்தோலிக்கர்களுக்கு வழிகாட்டும் கோட்பாடு என்ற முறையில் சொல்வதாகவோ தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாதாம்.

எங்களுக்குப் புரிகிறது. ஏன் இந்த இரட்டை வேடம்?

விஞ்ஞானிகள் தாங்கள் கண்ட உண்மைகளுக்கு உங்களின் அங்கீகாரத்தை வேண்டி நின்ற காலத்தில் அதை மறுத்தீர்கள். இன்று சந்திரனுக்கு விண்கலம் அனுப்புவது முதல், கணிப்பொறியின் இண்டர்நெட் வரை எந்த விஞ்ஞானியும் உங்களது அக்மார்க் முத்திரைக்கு ஏங்கவில்லை.

ஆனால் மதம் உயிர் வாழ்வதற்கும், காலத்திற்கேற்றவாறு புனரமைப்பதற்கும் அறிவியல் தேவைப்படுகிறது உங்களுக்கு. அதிலும் கடுகளவாவது நேர்மை இருக்கிறதா? இவ்வளவு காலம் திருச்சபை அறிவியல் அறிஞர்களைத் தவறாக நடத்தியது _ இனி அப்படிச் செய்யமாட்டோம் என்று குற்றம் புரிந்த உணர்வுடன் பாவமன்னிப்பு பெறுவதுதானே நியாயம்!

அறிவியலின் அற்புதங்களை அனுபவித்துக்கொண்டு தேவனின் ‘அற்புதங்களை’ப் பிரச்சாரம் செய்வது; பிறகு தேவனின் மகிமை காப்பதற்கு அறிவியலை அவமதிப்பது என்ற திருச்சபையின் திமிருக்கும், இரட்டை வேடத்திற்கும் நீண்ட வரலாறு உண்டு.

மனிதனின் இன்பம் ததும்பும் வாழ்க்கை பரலோகத்தில் மட்டும்தான் என்று மாயை காட்டிய மதவெறியர்களின் கூற்றை பொய்யாக்கி பூமியில் அந்தகைய அற்புதங்களைச் சாதித்திருக்கிறது அறிவியல். நேற்றைய வானொலி முதல் இன்றைய கணிப்பொறி வரை அதன் சாதனைகள் தொடருகிறது. மனித குலத்தின் இத்தகைய பிரம்மாண்டமான அறிவியல் – தொழில் நுட்ப புரட்சிக்கு அடிப்படையான விஞ்ஞான உண்மைகளைக் கண்டவர்கள் மத்திய கால விஞ்ஞானிகள்.

இயற்கையின் புதிரை விடுவிக்க காட்டிலும், களத்திலும், கடலிலும் திரிந்தார்கள். ஊனையும் – உயிரையும் வருத்தி தான் கண்ட உண்மையை நிருபிக்க தளராமல் போராடினார்கள். மதத்தின் பிடியிலிருந்து மனித சிந்தனையை விடுவிக்க திருச்சபையின் கழுவாய்களுக்கு தங்களது உயிரைக் கொடுத்தார்கள்.

பேராற்றல் மிக்க சிந்தனையும், போராட்டமும் கொண்ட இவர்களைத்தான் மாபெரும் மனிதர்கள் என்று குறிப்பிடுகிறார் ஏங்கெல்ஸ். இவர்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தமும் அறிவியல் உலகம் அசுர வேகத்துடன் வளரக் காரணமாயிருந்தது. இவர்களது இழந்து போன வாழ்க்கையில்தான் இருபதாம் நூற்றாண்டின் மனித குல வாழ்க்கை உயிர் வாழுகிறது.

இத்தகைய ‘மாபெரும் மனிதர்களுக்கு’ எதிராக போப்பும், திருச்சபையும், ஏனைய பாதிரிகளும் நடத்திய பயங்கரவாத நடவடிக்கைகளை அறியும் நாகரீக உலகின் மனிதர்கள் எவரும் வெட்கப்படவேண்டும்; கோபம்கொள்ள வேண்டும்.

அறிவியலின் நெற்றியடி! பைபிளின் மோசடி!!
கோபர்நிகஸ்

அறுவை சிகிச்சையின் போதும், பிரசவத்தின் போதும் வலிதெரியாமல் இருப்பதற்காக பயன்படும் குளோராஃபார்ம் எனும் மயக்க மருந்தை இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் யங் சிம்ஸன் சென்ற நூற்றாண்டில் கண்டுபிடித்தார். இதற்கு திருமறையில் ஆதாரமிலையே என்று கடுமையாக எதிர்த்தார்கள் பாதிரிமார்கள். ‘கஷ்டத்தில் நீ குழந்தை பெறுவாய்’ எனும் பைபிளின் வாக்கியத்தைக் கொண்டு தாய்மார்கள் பிரசவத்தின் போது மயக்க மருந்து பயன்படுத்தக் கூடாது அப்போதுதான் தாய்ப்பாசம் இருக்க முடியும் என் வற்புறுத்தினார்கள்.

இரத்தத்தை வகைபிரித்து, இரத்த வங்கியில் சேமிக்கப்படும் முறையினால் உலகமெங்கும் பலகோடி மனித உயிர்கள் காப்பாற்றப்படுகின்றது. மனித ரத்தம் பற்றிய ஆய்வை நடத்திய ‘குற்றத்திற்காக’ செர்வெட்டஸ் எனும் விஞ்ஞானி கழுமரத்தில் ஏற்றி உயிருடன் கொளுத்தப்பட்டார். பரமபிதாவின் புனிதம் காக்க இந்த தண்டனை வழங்கியவர் கால்வின் என்ற புராட்டஸ்டன்ட் பாதிரியார்.

தேவனின் மகிமை கூறி ஆவியெழுப்ப, விமானமேறி உலகைச் சுற்றி சுற்றி வருகிறார்கள் சுவிசேசத்தின் ஊழியர்கள். தேவனின் செய்தியை திருச்சபையின் விண்கோள்கள் பூமி உருண்டையின் மீது பொழிந்த வண்ணம் உள்ளன. ஆனால் உலகம்  உருண்டையானது, தட்டையானதல்ல, பூமி சூரியனைச் சுற்றிவருகிறது என்று சொன்ன கியார்டனே புருனோவை உயிரோடு கொளுத்தினார்கள் கத்தோலிக்க மத குருமார்கள்.

‘வானுலகக் கோள்களின் சுழற்சிபற்றிய’ தனது கண்டுபிடிப்பை 36 ஆண்டுகளுக்கு முன்பே நூலாக எழுதியும், திருச்சபையின் கொலை வெறிக்குப் பயந்துபோன கோப்பர்நிகஸ் இறுதியில் தனது மரணப்படுக்கையில் இருந்து வெளியிட்டார்.

பூமியின் இயக்கத்தையும், சூரியனைச் சுற்றி வருவதையும் கண்டு சொன்ன கலிலீயோ திருச்சபையினால் சித்ரவதை செய்யப்பட்டார். அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் கலிலீயோ விவிலியத்தின் ‘உலகம் பற்றி உண்மைகளை’ ஏற்று தன் கண்டுபிடிப்புகளை மறுக்க வேண்டியிருந்தது. கலிலீயோவின் தொலைநோக்கியை சாத்தானின் கருவி என்றார்கள் கிறித்தவ பாதிரிகள்.

கி.பி. 370-இல் அலெக்சாண்டிரியாவில் (இன்றைய கெய்ரோ நகரம்) அரும்பாடுபட்டு சேர்த்துவைத்த நூலகத்தையும், அருங்காட்சியகத்தையும் ஆர்ச் பிஷப் சிரில் தலைமையிலான பாதிரிப்படை சூறையாடிக் கொளுத்தியது. நூலகத் தலைவரும் பெண் விஞ்ஞானியுமான ஹைப்பேஷியாவை சித்திரவதை செய்து கொளுத்தினார்கள்.

விஞ்ஞானிகளை வேட்டையாடிய திருச்சபையின் ரத்தக்கறை படிந்த வரலாற்றின் ஒரு சில துளிகள்தான் இவை. அனைத்துலக பாதிரிகளின் எண்ணிக்கையை விட அவர்கள் இழைத்த குற்றங்களின் எண்ணிக்கை அதிகமானதாகும்.

இன்று மதிப்பிட முடியாத அளவுக்கு சொத்துக்களைக் குவித்து வைத்துக்கொண்டு திருச்சபையின் பாதிரிகள் வாழும் உல்லாச வாழ்க்கைக்கு வசதிக்ள செய்தது அறிவியல்தான். விவிலியம் அல்ல.

கூன் விழுந்த முதுகுடன், மண்புழுவை மட்டும் மணிக்கணக்காகப் பார்த்துக்கொண்டிருப்பார் டார்வின். தான் கண்ட மயக்க மருந்தை சோதனை செய்ய தன்னுடம்பையே கருவியாக்கி பல தடவை மயக்கமடைந்தார் சிம்ஸன். எந்த உண்மையையும் சோதித்தறிய அலைந்து திரியும் கலிலீயோ தன் சொந்த வாழ்வின் எழிலைத் துறந்தார். மரணப்படுக்கையிலும் கூட கோள்களின் அமைப்பு பற்றி ‘பிதற்றிக்’ கொண்டிருந்தார் கோப்பர்நிகஸ். உயிரோடு கொளுத்தப்பட்ட போதும் விவிலியத்தின் முட்டாள் தனத்தை ஏற்க மறுத்தார் புருணே.

எதிர்காலத்தில் திருச்சபை தமக்கு அங்கீகாரம் வழங்கும் என்ற நம்பிக்கையிலா இவர்கள் தங்களை வருத்திக்கொண்டார்கள்?

தேவனின் ஊழியர்களே சொல்லுங்கள். யார் பாவிகள், யார் சத்தான்கள்.

குளிரூட்டப்பட்ட அறையில் நித்திரை கொண்டு, காலை எழுந்து உயர்தர ஒயினைக் குடித்து, வறுத்த முழுக்கோழியை முழுங்கி, பளபளக்கும் வெண்பட்டு அங்கியை உடுத்தி, மாருதி காரில் பவனி வந்து, தேவாலயத்தில் கூடியிருக்கும் மந்தைகள் முன்னால், புளித்த ஏப்பத்துடன், பாதிரி திருவாய் மலர்வார், ”கஷ்டத்தில் ஜீவிக்கின்ற கர்த்தரின் குழந்தைகளே சாத்தான்களிடமிருந்து விலகியிருங்கள்.”

எங்கள் விஞ்ஞானிகளின் கால் தூசிகூடப் பெறாத பாதிரிகளே இரண்டாயிரம் ஆண்டுகளாக நீங்கள் செய்துவரும் தேவ ஊழியம் இதுதானே!

‘திருமறையில் ஆதாரமில்லையே’ என்ற எந்த அறிவியல் உண்மைகளை மறுத்து விஞ்ஞானிகளை அழித்தீர்களோ அதே அறிவியலை உங்களுடைய வாழ்க்கையில் வெட்கமில்லாமல் பயன்படுத்தி வருகிறீர்களே. சுவிசேசப் பிரசங்கிகளே பதில் சொல்லுங்கள்.

அறிவியலின் நெற்றியடி! பைபிளின் மோசடி!!
புருணோ

போயிங் 707 விமானத்தில் அனைத்துப் பாதிரிகளையும் அள்ளிப்போட்டு இமயமலையின் உச்சியில் கொண்டுபோய், பாராசூட்  இல்லாமல் தள்ளிவிட்டால் நாங்கள் குற்றவாளிகளல்ல; ஏனென்றால் புவி ஈர்ப்புவிசையை கண்டுபிடித்த நியூட்டன் பைத்தியம் என்று பட்டம் கட்டியது திருச்சபைதான்.

குடல்வால் அறுவை சிகிச்சைக்காக வாடிகனில் 3 ஆண்டுகள் தலைமறைவாயிருந்த போதுதான் போப் முன்னர் கண்ட அறிக்கையை வெளியிட்டார். சிம்ஸனின் ஆவியும், செர்வெட்டஸின் ஆவியும் போப்பிடம் வந்து நியாயம் கேட்டதோ! குளோரோஃபாமும், ரத்தமும் கிடையாது என மறுத்திருந்தால் போப்பின் கதி என்ன? அறிவியலின் ஒழுக்கம் அவ்வாறு செய்ய அனுமதிக்கவில்லை. ஆனால் கருணையே உருவான கடவுளின் ஒழுக்கம்தான் அதை அனுமதிக்கிறது.

இப்படி கொலை பாதக வரலாற்றைத் தெரிந்து கொண்டும் கல்லுளி மங்கன் போல சாந்த சொருபீயாகக் காட்சியளிப்பதற்குத்தான் கிறித்தவப் பாதிரிகளுக்கு பத்தாணாடு கால பயிற்சி கொடுக்கிறார்கள் போலும்.

‘கிறித்தவத்தின் மாபெரும் ஞானி (ஏசு கிறிஸ்து) மக்களின் ஆத்மாக்களுக்கு விடுதலை கோரி, தமது உடம்பைத் தியாகம் செய்தார்; நவீனமான, கல்வியறிவு மிகுந்த ஞானியோ (பாதிரி) தனது சொந்த ஆத்மாவின் விடுதலைக்காக மக்களின் உடம்புகளைத் தியாகம் செய்கிறார்’ என்று காரல்மார்க்ஸ் சொன்னதை நிரூபிக்கிறது 2000-ம் ஆண்டு கால திருச்சபையின் வரலாறு.

மனித குலத்தின் ஊழியர்களான விஞ்ஞானிகள் உயிர் காக்கும் முறைகளைக் கண்ட போது தேவனின் ஊழியர்களான பாதிரிகளோ கழுமரத்தைக் கண்டுபிடித்தார்கள்.

எனவேதான் தேவகுமாரனைச் சிலுவையில் ஏற்றியவன் பிலாத்தா, திருச்சபையின் முன்னோர்களா என்ற சந்தேகம் வருகிறது.

ஞாயிற்றுக் கிழமைதோறும் கோடிக்கணக்கான மக்களுக்குப் பாவ மன்னிப்பு அள்ளி வீசும் பாதிரி வகையறாக்கள் 2000 ஆண்டுகளாகச் செய்து வரும் குற்றங்களுக்கு யாரிடம் மன்னிப்பு பெறுவார்கள்? ஒருவருக்கொருவர் பாவத்தையும் மன்னிப்பையும், பரிமாறிக்கொள்வார்களா? விவிலியம் இதற்கு என்ன தீர்ப்பு சொல்கிறது?

விஞ்ஞானம் வளர்ந்து விட்டதால் பூவுலகின் ஒழுக்கம் கெட்டுப்போய்விட்டது என்று இறுதி அஸ்திரம் ஒன்றை ஏவுகிறார்கள் பைபிளின் ஒழுக்கசீலர்கள். அதாவது களிமண்ணிலிருந்து ஆதாம் தோன்றினான் என்றால் ஒழுக்கம். பரிணாம வளர்ச்சி என்றால் ஒழுக்கக் கேடு. பூமி தட்டை என்றால் ஒழுக்கம். உருண்டை என்றால் ஒழுக்கக்கேடு. அதாவது பொய்யும், முட்டாள்தனமும் ஒழுக்கம். உண்மையும், பகுத்தறிவும் ஒழுக்கக் கேடு.

இந்த ‘ஒழுக்கத்தை’ப் பிரச்சாரம் செய்ய அனுமதிக்காததால் முன்னாள் சோசலிச நாடுகளில் கம்யூனிஸ்ட்டுகள் கிறித்துவ மதத்தைக் ‘கொடூரமாக’ ஒடுக்கினார்கள் எனக் கூப்பாடு போடுகிறார்கள். ‘புதிய ஏற்பாட்டின்’ காவலர்கள். ரசியாவிலும், சீனாவிலும் இந்த ‘ஒழுக்கத்திற்கு’க் கிடைத்த வெற்றியைத் தான் திருச்சபையும், தேவனாகிய அமெரிக்காவும் கைகோர்த்துக் கொண்டாடுகிறார்கள்.

இரத்தக் கறை படிந்த வரலாறு திருச்சபைக்கு மட்டும் சொந்தமானதல்ல; பார்ப்பன இந்து மதமும், இசுலாமும் தனித்தனியே வேத புத்தகங்கள் வைத்திருந்தது போலவே, தங்கள் சொந்தக் கழுமரங்களையும் நிறுவியிருந்தார்கள்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹவின் திருநாமத்தால் ஆரம்பிக்கும் திருக்குர்-ஆனுக்கு 35 சிறப்புப் பெயர்கள் உண்டு. அதில் ஒன்று அந்நதீர்-அச்சுறுத்தி எச்சரிப்பது. பைபிளில் பரம்பிதா உலகை ஆறுநாட்களில் படைத்தார். குர்-ஆனில் அல்லா உலகை ஆறு கட்டங்களாகப் படைத்தார். பரமபிதா களிமண்ணில் இருந்து ஆதாமைப் படைத்தார். அல்லாஹ் சுட்ட களிமண்ணிலிருந்து ஆதாமைப் படைத்தார். பைபிளுக்கம் குர்-ஆனுக்கும் இடைவெளி 557 ஆண்டுகள்.

அறிவியலின் நெற்றியடி! பைபிளின் மோசடி!!
சிம்சன்

ஆனால் கடவுள் தங்களை எப்படிப் படைத்தார் என்ற உண்மையைத் திருக்குர் ஆன் விளக்கத்திலிருந்து தெரிந்து கொள்வதற்கு முன்னரே 6 நூற்றாண்டுகளுக்கு முன் இருந்த சிந்து சமவெளித் திராவிடர்கள் கடவுளைப் படைத்து விட்டார்கள் –சுட்ட களிமண்ணைக் கொண்டு.

தசாவதார தத்துவத்தை கைவசம் வைத்திருக்கின்ற பார்ப்பனர்களுக்கு படைப்புத் தத்துவம் பற்றி கவலை இல்லை. அப்படி என்றால் டார்வினின் பரிணாம தத்துவம்? தஞ்சை சரபோஜி நூலகத்தில் உள்ள ஓலைச் சுவடிகளிலிருந்து திருடப்பட்டதாக இருக்கலாம்.

இந்தக் கூற்றை திட்டவட்டமாக சைவர்கள் மறுக்கிறார்கள். தசாவதார நாயகன் விஷ்ணுவைப் படைத்தவன் சிவன் தான் என்கிறார்கள்.

ஆனால் கோஷ்டிப் பூசலின்றி அவர்கள் ஏற்கும் படைப்புத் தத்துவம் ஒன்று வேதத்தின் புருஷ சூக்தத்தில் இருக்கிறது. விராட் புருஷனின் தலையிலிருந்து பிராமணர்களும், தோளிலிருந்து சத்திரியர்களும், தொடையிலிருந்து வைசியர்களும், பாதத்தில் இருந்து சூத்திரர்களும் தோன்றினார்கள் என்ற ‘உயரிய’ படைப்புத் தத்துவம்தான் அது.

ஒரு வேளை டார்வின் தத்துவத்தை அவர்கள் ஏற்றுக் கொள்வதாக இருந்தாலும், தரத்தால் பிரிக்கப்பட்ட நான்கு வகைக் குரங்குகள் அவர்களுக்கு தேவை.

ஈரேழு பதினாலு உலகங்களிலிருந்தும் கடவுளைத் துரத்தும் பணியை விஞ்ஞானிகள் செய்து விடுவார்கள். அதில் ஐயமில்லை.

ஆனால் கடவுளைத் துரத்துவதைவிடக் கடினமான பணி கடவுளின் ஏஜெண்டுகளைத் துரத்துவதுதான். அதை விஞ்ஞானிகள் செய்ய முடியாது. அதற்குச் சமூக விஞ்ஞானிகள் வேண்டும். ஆம். கம்யூனிஸ்டுகள் வேண்டும்.

புதிய கலாச்சாரம், ஜனவரி – 1997

 1. அற்புதமும் ,அறிவார்த்தமும் கலந்த அருமையான கட்டுரை .

  அவர்கள் நம்பும் கடவுள் படைத்த அல்லது இயற்க்கை உருவாக்கிய
  மனித இனத்தின் பலகோடிக்கணக்கான உயிர்களை இரக்கமே இல்லாமல் சிலுவைப்போர் என்ற
  பெயரால் கொன்றுபோட்ட கொடுமைக்காரர்களுக்கு செருப்பால் அடித்தது போல் இப்படி புரியவைக்க வேண்டும்.

  தயவு செய்து தொடர்ந்து எழுதுங்கள் .
  கிறிஸ்தவ பாதிரியார்களின் கொடுமைகளை!!!!இந்து,முஸ்லிம் மற்றும் உள்ள மதவாதிகளை பற்றியும்

 2. //‘வானுலகக் கோள்களின் சுழற்சிபற்றிய’ தனது கண்டுபிடிப்பை 36 ஆண்டுகளுக்கு முன்பே நூலாக எழுதியும், திருச்சபையின் கொலை வெறிக்குப் பயந்துபோன கோப்பர்நிகஸ் இறுதியில் தனது மரணப்படுக்கையில் இருந்து வெளியிட்டார்.//

  இன்று உரிமைகளைக் கேட்டால் அடித்து உதைக்கும் வெட்கங்கெட்ட போலீசு, உள்ளே தள்ளும் ஒன்றுக்கும் உதவாத சட்டம் – வேலியே பயிர் மேயும் ஒன்றுக்கும் உருப்படாத ராணுவம்.
  பட்டப் பகலில் கொள்ளையடிக்க, எல்லா ஆயுதமும் ஜனநாயக அரசியலாளர்களின் கையில்.

  ஆனால் அன்று, சட்டம், போலீசு என்று ஏதும் தேவைப்படாமால் மதப்போதகரின் தாடி மயிர் ஒன்றே போதுமானதாய் இருந்தது போலிருக்கிறது. மதவாதிகளுக்கு மூளை இருந்திருந்து புரிந்துகொண்டிருந்தால், இன்னும் நூறு ஆண்டுகளுக்கு முன்னமேயே கணினிவரை கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம். ஆண்டவரே, அந்தப் பாவிகளை மன்னியாதேயும்!

 3. suniyamana porulil irunthu inthaulagam eppadi thonriyadthu endru vilakkavum

  manithan parinama valarchi adaiinthu veruoru uri inamaha maravillai vilakkavum

  mathavathikalidamum sila mudarkal iruppargal

 4. அற்புதமான அறிவியல் கட்டுரை. அனைவரும் அவசியம் படித்து தெளிய!!! வேண்டும்.

 5. Some examples against of God:
  1. மனிதனுக்கு மார்புகள் (breast) எதற்கு என்றால் குழந்தைக்கு பால் கொடுக்க கடவுள் அருளியது.
  சரி ஆணுக்கு மார்புகள் தேவையே இல்லையே ஏன் உள்ளது?

  2. உங்களால் கையை கட்டி கொண்டு வேகமாக ஓட முடியுமா? ஓடுவதற்கு கால் தானே வேண்டும் கை ஏன் முன்னும் பின்னும் போகிறது? விலங்கிடமிரூந்து வந்த பழக்கம் நம்மை விட்டு போகவில்லை.
  3. ஏவாள் கடவுள் சொன்னதை கேட்காமல் Apple தின்றதால் பிரசவத்தின் போது வழி ஏற்படும் என்று சாபமிட்டாராம். சரி அனைத்து விலங்குக்கும் பிரசவிக்கும் போது வழி ஏற்பட என்ன காரணம்?
  Etc., etc., etc.,

 6. சிறந்த கட்டுரை, இருந்தாலும் கிளம்பி வருவார்களே இறைத்தூதர்கள். வரட்டும், வரட்டும்…

 7. உங்கள் கண்கள் அவிந்து போக, திருச்சபை உங்களை மன்னிக்காது. ஆண்டவனுக்கு எதிரான கருத்துகளை விவிலியம் ஏற்றுக்கொள்ளாது, அறிவியலை நாங்கள் எதிர்ப்போம், ஆனால் அதன் பயனையும் நாங்களே அனுபவிப்போம், அதை யாரும் கேட்கக்கூடாது, அவர்களை எங்கள் விசுவாசிகள் விட்டுவைக்க மாட்டார்கள்…ஆமா சொல்லிப்புட்டேன்…

 8. ஆம்.அந்த மாபெரும் பணியை கம்யுனிஸ்டுகள் செய்ததை பெருமையுடன் நினைவு தருவது ருசிய புரட்சியும் சீன புரட்சியும்.மதத்தின் கோரப்பிடியிலிருந்து மக்களை மீட்டு மண்ணில் சொர்க்கத்தை படைத்ததை இன்னும் நினைவுடன் பெருமிதம் கொள்கிறார்கள் அந்த மக்கள்.இந்தியாவில் மக்கள் மனத்தை வென்று நக்சல்பாரிகள் அதை சாதிப்பார்கள்.ஏனெனில் இங்கு நக்சல்பாரிகளே கம்யுனிஸ்டுகள்.

 9. அன்புள்ள வினவு
  ஜெயமோகனின் இணையதளத்தில் இந்து மதம் பற்றிய அண்ணணின் புதிய பொழிப்புரையை படித்தீர்களா?வினையை எதிர்பார்க்கிறோம்

 10. //பூமி சூரியனைச் சுற்றிவருகிறது என்று சொன்ன கியார்டனே புருனோவை உயிரோடு கொளுத்தினார்கள் கத்தோலிக்க மத குருமார்கள்.//
  இந்த கருத்தை முதலில் சொன்னவர் காப்பர்நிகஸ் தானே? அவரைத் தானே உயிரோடு கொளுத்தினார்கள்?

  • It was Copernicus who formulated the theory of cosmology which displaced earth from the center of the universe, but due to the fear of the Church, he published his book just before he died.

   Bruno on the Other hand developed the Copernican theory to a whole new level and identified the sun as a star and proposed intelligent life forms and several planets in various galaxies. He fought against Church and was killed by the Church. A True Martyr of Science!

 11. //manithan parinama valarchi adaiinthu veruoru uri inamaha maravillai vilakkavum//
  யார் சொன்னது? homo erectus, neandarthal man, homo sapiens போன்ற மனித இன பரிணாம வளர்ச்சி பற்றி wikipediaவில் பார்க்கவும்.

  • ippo irukira sila manithargal yean parinama varchi adaiyavillai sila kurankugal ippo

   yean manithnaga maravillai manithan mattum illai veruentha uririnamum ipothu parinama valarchi adaiyavillai yean parinama valrchi oru kuripitta kalathil nindruvidtathu

   • பரிணாமவாதம், மனிதன் தற்போதைய குரங்கிலிருந்து பிறந்ததாக வாதாடவில்லை. மதவாதிகள்தான் அறிவியல் அப்படி சொல்வதாக திரிக்கின்றனர்.

    according to evolution “No species could not change into another species”. if the nature compels an species to change (evolve) for their life, each individuals of that particular species would find its own way of change. so toady’s monkey didn’t evolve into today’s man, both monkey and man has common ancestor.

    so, தற்போதைய குரங்கை உயிர்வாழ இயற்கை தன் சுற்றுசூழலால் நிர்பந்தித்தால், மனிதனாக மாறாது, வேறு ”வகைகளாக” மாறலாம்.

    இயற்கையை மாற்றமுடியாமல் தன்னை வெற்றிகரமாக மாற்றிக்கொள்வதன் மூலம்தான் ஒரு உயிரினம் பரிணாமம் அடைகிறது. ஆனால், பரிணாமத்தின் வளர்ச்சியில், இயற்கை தன்னையே மாற்றுகிற உயிரினத்தையும்(மனிதன்) படைத்துவிடுகிறது. ஆகையால், மனிதன் இனி இயற்கை தேர்வின் மூலம் பரிணாமமடைவதற்கு சாத்தியம் குறைவுதான்.

  • boss nothing have been proved …parinama valarchiye poi,,,,,manithan kuranguil irunthu vanthan..appa matha ella kurangum yen innum marala….meengalil irunthu vanthan nu solichu…ariviyal…anan yen matha meengal inum maravillai….vudunga boss….vethu vathamm ….

   This is from The blog-எதிர்க்குரல்

   “Nothing makes sense in biology except in the light of evolution”
   “பரிணாமம் இல்லாமல் உயிரியலில் எதுவுமே அறிவுக்கு ஒத்து வராது”

   http://www.ethirkkural.com/2012/04/blog-post.html

   • In the same ethirkkural i have asked a question long back and its still not answered pleas try that… U argu that complex living beings cannot evolve from single cell organism and has to be created by GOD then who created GOD who is much complex than humans or any other living being ???

    • சகோதரர்கலே கடவுலுக்கு முன்னால் யார் என்ட்ர கேல்வி ஒரு காமெடியானது ஏனென்ட்ரால் அந்த யாருக்கு முன்னால் யாரோ அவந்தான் கடவுல் நீங்கல் எப்படி பெருவெடிப்பிர்க்கு முன்னால் எதுவும் இல்லை என்ட்ரு கூருகிரீர்கலோ அதர்க்கு முன்னால் இருந்த மாபெரும் சக்திதான் கடவுல்
     னீங்கல் கூருவதுபோல் குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்ட்ரு வைத்துக்கொன்டால் அந்த குரங்கு எதிலிருந்து வந்தது எப்படி வந்தது அப்படி ஒரு உயிரினம் தானாக உருவாகுவதென்ட்ரால் அதுதான் இயர்க்கையானால் இன்ட்ருவரை அவைகல் தானாகவே உருவாகிக்கொன்டிருக்க வென்டுமல்லவா இதிலெ ஆன் பென் எப்படி வந்தது உரவு செய்து விந்துக்கல் பரிமாரிக்கொன்டால்தான் அந்த இனம் மீன்டும் பெருக முடியும் என்ட்ர நிலை எப்படி உருனவானது ஒரு பொருல் இயர்க்கையாக உருவாக வென்டுமென்ட்ரால் அந்த பொருல் முதலில் எப்படி உருவானதோ அதே நிலையில் மட்டுமே உருவாக முடியும் இதர்க்குதான் இயர்க்கை என்ட்ரு பெயர் அதுபோல ஒரு குரங்கு இயர்க்கையாக உருவாகி மனிதனாக பரினமித்ததென்ட்ரால் இன்ட்ரு வரை குரங்குகல் இயர்க்கையாக உருவாகிக்கொன்டே மனிதனாக மாரிக்கொன்டிருக்க வேன்டுமல்லவா ஒவ்வொரு ஆனும் பென்னுமென்ட்ரு இயர்க்கைய்யாகவே உருவாகிக்கொன்டதா இதை சிந்திப்பதர்க்கே ஒரு மாதிரி இல்லைய்யா உங்கல் கருத்துப்படி இயர்க்கையாகவே எல்லா உயிரினமும் தோன்ட்ரியதென்ட்ரால் அதெப்படி இத்கதனை கோடி உயிரினங்கலில் மனிதனுக்கு மட்டும் இவ்வலவு ஆட்ரல் கிடைத்தது குரைந்த பட்ஷம் வெரொரு உயிரினத்திர்க்கு பெசுமாட்ரலாவது கிடைத்திருக்கலாமல்லவா ஏன் கிடைக்கவில்லைநன்பர்கலே நீங்கல் எப்படி நாத்திகத்தை சொல்லிக்கொன்டிருந்தாலும் கடவுலை உங்கலுடைய உல்லத்தில் வைதிருக்காமல் யாருமில்லை

     • தமிழ் தட்டேழுத்தை அப்படியே அச்சேற்றாமல் பிழை இருக்கிறதா என்று பார்த்து அச்சேற்றுங்கள் நண்பா. ‘ர -ற’, ‘ல -ள’ பிழைகள் மிக அதிகமாக உள்ளது. படிக்க மிகவும் கடினமாக உள்ளது நண்பா. Google Input tools பயன்படுத்தி பாருங்கள். பெருமளவு பிழைகளை தவிர்க்கலாம். தங்களுடைய கருத்துக்கு ஒரு வகையில் உடன்படுகிறேன். நமக்கு தெரிந்த விடயங்களை விட தெரியாத விடயங்கள் மிக அதிகம். அதிக விடயங்களை மேலும் மேலும் படிக்கையில் நாம் எந்த அளவுக்கு ஒன்றும் தெரியாத நபர்களாக இருக்கிறோம் என்று புரிகிறது. அதே சமயம் நம் வாழ்விற்கான ஒட்டு மொத்த அறிவும், பொருளும் ஒரே ஒரு புத்தகத்தில் மட்டும் அடங்கி விடுகிறது என்று சொல்வது எப்படி சரியாகும். குர்ஆன், பைபிள், பகவத்கீதை, திருக்குறள் போன்ற படைப்புகள் மக்களை நல்வழி, நன்னெறி வழியில் செலுத்த அந்தந்த காலத்தில் எழுதப்பட்ட நூல்கள். அவற்றில் உள்ள நல்ல விடயங்களை கடைபிடியுங்கள் தவறில்லை. அவற்றில் தற்காலத்திற்கு ஒவ்வாத கருத்துகள் இருந்தால் அவற்றை தவிர்த்து மற்றவற்றை கடை பிடியுங்கள். ஆனால் அந்த ஒரு நூலை மட்டும் படித்தால் போதும், வேறு எதையும் படிக்க தேவையில்லை என்று நம் அறிவை குறுக்கிக்கொண்டால் நட்டம் நமக்கு தான். உலகப்பொதுமறையாம் திருக்குறளில் இல்லாத நன்னெறி கருத்துகளா? திருவள்ளுவர் ஒரு வேளை அயிரோப்பாவிலோ அல்லது அரேபியாவிலோ பிறந்திருந்தால் இந்நேரம் திருக்குறள் ஒரு மதநூலாக மாரியிருக்ககூடுமோ என்னவோ, அதே சமயம் திருக்குறளின் நன்னெறி கருத்துக்களின் இடையே ஆதிப்பெருவெடி, மின்னணுவியல், வேதியியல் கேள்விகளுக்கு பதில் தேட முடியுமா? எல்லா அறிவியல் ஆராய்ச்சிக்கும் விடையை நன்னெறி நூல்களில் தேடினால் எப்படி கிடைக்கும். அறிவியல் தேடலுக்கு விடை அறிவியல் ஆராய்ச்சியில் உள்ளது, ஆன்மீக ஆராய்ச்சியில் அல்ல. குர்ஆனை படியுங்கள், பைபிளை படியுங்கள், கீதையை படியுங்கள், அவற்றில் உள்ள நல்ல விடயங்களை கடைபிடியுங்கள். நல்ல மனிதர்களாக வாழுங்கள், நல்ல சமுதாயத்தை உருவாக்க முயலுங்கள், ஆனால் அந்த புத்தக அறிவை வைத்துக்கொண்டு அறிவியலை ஆராயாதீர்கள்.

   • Those who are having bible ,all are not correct. many of the Christian people never used to read the bible,but they speak about bible. These people treats the bible as story telling book. in this case, how can we accept their concepts or speech? if we need to know about something, we will search about it and get the clear solution. why we people never do the same in bible? In bible case we always choosing the bishop or pastor. First go and read the bible.then surely you will get the solution for the question, IS GOD ALIVE OR NOT?. And one more thing, don’t try get any solution about Christianity from historic catholic people.

    • lets think practically… can a pen made on its own??? can a chair made on its own?? do the computer creates on its own???? all the things have a creator… likewise this universe is also made by a creator who is called by us as “The God”

 12. பரவாயில்லை எதிர்வினைகள் எதிர்பார்த்ததைவிட விட மிக மிக குறைவுதான்… கிறித்தவர்களுக்கு சகிப்பு தன்மையும், விமர்சனங்களை ஏற்று கொள்ளும் பக்குவமும் எப்போதுமே உண்டு.. இதே கருப்பு பார்ப்பனர்களையோ, இஸ்லாமியரையோ அவர்களின் மத மூட நம்பிக்கைகளை விமர்சனம் செய்து எழுதி இருந்தால் இந்நேரம் நூற்றுக்கணக்கான மறுமொழிகள் குவிந்திருக்கும்… குறிப்பாக இஸ்லாமியர்கள் கட்டுரையாளரை தங்கள் கருத்துக்களால் கொலையே செய்து விடுவர்… 🙂

 13. உயிரியல் தத்துவத்தை டார்வினுக்கு முன் தசாவதாரத்தில் ராமன் விளக்கிவிட்டதாக அவாள் சொல்லி திரிகின்றனர்.

  மச்ச அவதாரத்தில் ஆரம்பித்து மனித அவதாரமான ராமன் அவதாரம் என்பது அதுதானாம்,

  நடுவில் நரசிம்மம், விலங்கும் மனிதனும்

  ஆஹா

 14. Science is human knowledge given by God. No one is objecting or objected the Science knowledge. The problem is believing the science is perfect. Humans knowledge is not equal to God. Science is learning and improving. Science is not perfect it is imperfect. No intelligent will say Darwin’s Monkey theory is perfect and it will never change. So stop claiming we all come from monkey 100% without any doubt.. it is a theory not proved one..

  • //Humans knowledge is not equal to God// oh really… you can believe the origin of man from clay but not evolution.. surprising..

   Darwin and none of the scientists claimed that man was given birth by monkey.. according to evolution “No species could not change into another species”. if the nature compels an species to change (evolve) for their life, each individuals of that particular species would find its own way of change. so toady’s monkey didn’t evolve into today’s man, both monkey and man has common ancestor.

   fundamentalists usually prove their inability to grasp the real thing. but they dont accept theirs’ and their god’s inability(e.g. Bible, Quran, Hindus’ sacred books).they just use their inability to defame the science and great scientists.

  • Yes you are correct still it is a threory ‘cas we cannot change a monkey to a human. But this sort of evolution is possible. There are many hybrid speices are there and those are created manually. Search in net.

   Let us keep the science aside. What is GOD? “Humans knowledge is not equal to God” as for us we know, the GOD’s knowledge is either Bible or Quran or Bhavat Gita or so called 4 vedas. If anything else is there please provide me (us).

   And ofcourse we are not believing the science always. Thatz why keep inventing, keep questioning, keep arguing. Accepting the defeat if there is something wrong or false. if we dont know something openly agree that we dont know. But we dont want to put a full stop there by telling that unknown thing is GOD and stop proceeding with that.

   The way we agree that science is imperfect, are you ready to accept that “Bible, Quran, Gita and all religious materials are imperfect?

  • Dear freind,Science is ever growing sea.Religion is constrained pot.There is no necessity of brain to be a religious fellow.Science requires a person to questions science itself.Any stupid religion has that guts?

 15. வின்ஜாநிகளும் இந்த மத தலைவர்களை போல ஆபத்தானவர்களே . இவர்களின் அணு உலை மற்றும் ஆயுதங்கள் ,பல கண்டுபிடிப்புகள் அப்பாவி மக்களை விட்டு வைக்கவில்லை . வினவு யாரை ஆதரிக்கிறது என்று புரியவில்லை ?

  • மூளையை நன்கு சோப்பு போட்டு கழுவிவிட்டு சொல்லுங்கள்… அணு உலை பிரச்சனைக்கு காரணம் அறிவியலாளர்களா? உலகத்திலேயே அதிக யுரேனியம் கையிருப்ப்பு வைத்திருக்கும் வல்லரசு ஆஸ்திரேலியா. ஆனால் ஆஸ்திரேலியாவில் ஒரு அணு உலை கூட கிடையாதே. ஏன்?

   • ஆஸ்திரேலியவில் அணு உலை கிடையாதா? இங்கே ஆளாளுக்கு “அறிவியல்” “விஞ்ஞானம்” என்று அடிக்கும் கும்மி தாங்கமுடியல!!
    OPAL என்ற ஆராய்சி அணு உலையைப் பற்றிய விவரங்களை இங்கே பார்க்கவும்.

    http://www.ansto.gov.au/discovering_ansto/anstos_research_reactor

    • ஆராய்ச்சி அணு உலைக்கும்,பொது பயன்பாட்டு அணு உலைக்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரியாதா? ஆஸ்திரேலியாவில் இருப்பது தம்மாதுண்டு ஆராய்ச்சி அணு உலை. அதுவும் அவனோட யுரேனியம் வியாபரத்துக்குகாக. கூடங்குளம் மாதிரி எந்த ஒரு அணு உலையும் ஆஸ்திரேலியாவில் கிடையாது. அதுதெரியாம இங்க கும்மி அடிக்க வந்துட்டேளேன்னா…!!! இன்னும் உங்களுக்கு டவுட்டா இருகக… இதை கிளிக் பண்ணுங்க…!!!

     http://en.wikipedia.org/wiki/Nuclear_power_in_Australia

 16. வினவு தளம் சர்வ நிச்சயமாக சாத்தான்களால் தான் நடத்தப்படுகிறது.உதிரியா நான் ஆங்காங்கே படித்தவற்றை தொகுத்து அழகாக தந்துள்ளீர்கள்.சில முறை படிக்க வேண்டும்.வாழ்த்துகள்.

 17. மதங்கள் தங்கள் இருப்பைப் பாதுகாத்துக்கொள்வதற்காக அறிவியல் உண்மைகளை ஓரளவாவது ஏற்றுக்கொள்ளத் தள்ளப்படுகின்றன.ஆனால் பக்தர்களை மூட நம்பிக்கையிலே மூழ்க வைத்திருக்கின்றன.அறிவியல்,கடவுளை விஞ்சாதவாறு பார்த்துக்கொள்கின்றனர்.கம்யூனிசப் புரட்சி நடந்த பின்னும் கூட அவர்கள் காரல் மார்க்ஸ் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவர்,யூதர் என்று சொல்லத் தயங்க மாட்டர்கள்.பக்தர்களும் அதை வழிமொழியத் தயங்கமாட்டார்கள்.இந்த பிரச்சினையில் எல்லா மதங்களுக்கும் ஒரே வழி தான்.மதங்களின் கயவாளித்தனத்தை, வினவு தொடர்ந்து தோலுரிக்கிற பணியைச் சைய வேண்டும்.

 18. //வின்ஜாநிகளும் இந்த மத தலைவர்களை போல ஆபத்தானவர்களே //
  haiyo.. haiyo.. ungala ellaam nenachaa paavamaa irukku 😀

 19. //எனவேதான் தேவகுமாரனைச் சிலுவையில் ஏற்றியவன் பிலாத்தா, திருச்சபையின் முன்னோர்களா என்ற சந்தேகம் வருகிறது.//

  நீங்களும் இயேசுவை தேவகுமாரன் என்று ஏற்றுகொள்கிறீர்கள். கார்ல் மார்க்ஸும் ஏற்றுகொண்டு பாராட்டுகிறார்.

  அதனால்தான் இந்துக் கடவுள்களையும் அல்லாஹ்வையும் கிண்டல் செய்தாலும் தேவகுமாரனான இயேசு கிறிஸ்துவை தேவகுமாரன் என்றே ஏற்றுகொள்கிறீர்கள்.

  பாதிரிகள் குற்றம் செய்யலாம்.
  ஆனால், இயேசு கிறிஸ்துவை தேவகுமாரன் என்று ஏற்றுகொண்டீர்களே. அதுவே பாராட்டுக்குரியது.

 20. உங்களது பதிவை பார்த்து நான் ஆச்சரியப்பட வில்லை . ஏன் தெரியுமா ? இது கடைசி காலம் . தேவன் இல்லை என்று மதிகேடன் தன இருதயத்தில் சொல்லி கொள்ளுகிறான் என்று வேதம் சொல்லுகிறது . இதை கூட நீங்கள் கோமாளித்தனம் எனலாம் . கவலை இல்லை . அவனவன் கிரியைக்கு தக்கதாக நான் அளிக்கும் பலன் என்னோடு கூட வருகிறது என்று சொன்னவரின் ( இயேசு கிறிஸ்து ) நியாயத்தீர்ப்புக்கு முன்பு நீங்கள் மனம் திரும்பவேண்டும் என்பது தான் எனது பாரம் . ஆண்டவர் உங்களை நேசிக்கிற படியால் , நானும் உங்களை நேசிக்கிறேன் . நன்றி

  • ஒருவேளை விவிலியத்தில் சொல்லவில்லை என்றால் இந்த பதிவை நம்பியிருப்பீர்கள் அப்படிதானே..

   அந்த வேதத்தில் அந்த வரிகளை எழுதியது யார் என்று தெரியுமா.? ஏன் எழுதினார் என்று தெரியுமா.? ஏசு பிறந்த காலத்திலேயே அரசியல் நாடகங்கள் ஆரம்பித்து விட்டதற்கு ஆதாரமே அந்த சுயநல வழிகள் தான்..

   பைபிளோடு பேசாமல் பகுத்தறிவோடு பேசுங்கள். அமானுஷ்யங்கள் உண்டு. அதற்கு ஆதார வரிகளை காட்டி பேச முயல்பவன் அறிவிலியாகிறான். அந்த வரிகளுக்கு ஆதாரம் என்ன நண்பரே..?

 21. குரங்கிலிருந்து மனிதன் வரவில்லை.மனிதனாகிய நீர் குரங்காக மாரிகொன்டிருக்கிரீர்.

 22. Hi friends
  I have seen all commends, First up all in Jesus life, he was not in S.Asia for 8 years. That time he was studing in Himalays about Hindu vedas. If u want to confirm, u can see many books on this subject. After studying Hindu culture and vedas, he preached with some modification at S. Asia.

 23. அறிவியல் நன்றாக தெரிந்த யாரரவது சொல்லுங்கள்.

  கருப்பொருள் , ஆற்றல் , நேரம் போன்றவை எப்படி தோன்றின?

  அறிவியலின் படி ஆற்றலை அழிக்கவோ, உருவாக்கவோ முடியாது பின்னே ஆற்றல் எப்படி வந்தது?

  உயிரில்லாத வேதி பொருட்களில் இருந்து முதல் உயிர் எப்படி தோன்றியது?

  பரிணாம விதியின் படி கண் போன்ற கருகலான உறுப்புகள் உருவாகமுடியுமா? சாதாரணமா ஒரு ஸ்கூல் Payroll மென்பொருள் எழுதவேண்டும் என்றால் அதற்கு திட்டம் (Project Plan ), செயல்முறை (Execution ) மற்றும் அறிவுத்திறன் (Knowledge ) போன்றவை தேவை. அப்படி இருக்க ஒரு தாறுமாறான (Random ) முறையற்ற (un guided) நிலையில் எப்படி இவ்வளவு உறுப்புக்கள் , உயிர் உருவாகி இருக்க முடியும்?

 24. யார் கேள்வி கேட்பது என்றாலும் இந்த இடுகையின் முன் உள்ள பதில்களை படித்துவிட்டு பின் கேளுங்கள். முன் உள்ள இடுகைகளில் இதற்கான பதில் இருக்கிறது அது மட்டுமல்லாமல் இந்த பதிவே உங்கள் கேள்விக்கான பதில்தான்.( முன் முடிவுகள் ஏதுமின்றி அதை புரிந்து படித்தால்).

 25. There is no need to believe in a God with white beard sitting on the sky and monitoring everything we do in our life. But there is an intelligent design involved in the whole universe. The creator (don’t know who and what his name) deserves respect. And by respecting the creator, the creator gains nothing. And the creator won’t give us any extra “blessings” for just praising him. Only thing is like we respect our flag, emblem etc, the creator of the entire complex cosmic system needs adoration. That’s it. I feel, the liberal Protestant faith provides just that and I am really saying this in all humility (no, I don’t say Protestant faith is superior or everyone must convert or go to hell). As a student of science and theology, I know where the weak link is!

 26. சில விமர்சனங்களின் கருத்துக்கள் கட்டுரையைப் புரிந்து கொள்ளாதது போல இருக்கிறது. உண்மையிலே புரிந்து கொள்ளவில்லையா,அல்லது புரிந்துகொள்ளாதது போல் நடிக்கிறார்களா ? சரி, இந்தப் பிராணிகள் எல்லாம் பைபிளில் ஆதாரம் உள்ள உணவுப் பொருட்களைத் தான் சாப்பிடுகிறார்களா,உடைகளைத் தான் உடுத்துகிறார்களா,மருந்துகளைத் தான் உட்கொள்கிறார்களா ? இதுகள் பயன்படுத்தும் மருந்துகளுக்கு பைபிளின் ஆதாரம் இருக்கிறதாமா ? அல்லது இவர்கள் பயன்படுத்தும் மருந்துகள் சாத்தானின் மக்கள் கண்டுபிடித்தவையாமா ? ஒன்று அறிவு இருக்க வேண்டும் அல்லது மானம் இருக்க வேண்டும்.இரண்டும் இல்லாததுகளுடன் வாழ்வது கொஞ்சம் சிரமமானது தான்.இந்த சந்தர்ப்பத்தில் தான் நியூக்ளியர் ஆயுதங்கள் நியாயப்படுத்தப்படுகின்றனவோ !

 27. வேத நூல்களை உருவாக்கியதன் நோக்கம் வேறு விஞ்ஞான நூல்களின் நோக்கம் வேறு.
  விஞ்ஞானம் கூட காலத்திற்குக் காலம் மாறுபட்டிருந்தது.பூமி தட்டை என்றது ஒருகால விஞ்ஞானம். இல்லை உருண்டை என்றது இன்னொரு விஞ்ஞானம். இப்போதய விஞ்ஞானம் சொல்கிறது அது உருண்டை அல்ல என்று. (திருத்தமான உருண்டை அல்ல)

  விஞ்ஞானிகளும் காலத்திற்குக் காலம் இப்படிச் சண்டையிட்டிருக்கிறார்கள்.

  பைபிள் சொல்கிறது: கடவுள் சொன்னார். அது உண்டாயிற்று. அதாவது அவரே அனைத்திற்கும் மூலம். (கருத்து முதல் வாதம்) மார்க்சிசம் சொல்கிறது ஏதோ ஒருபொருள் உண்டாயிற்று. அதிலிருந்து அனைத்தும் உண்டாயின. அதாவது பொருள் முதன்மையானது. (பொருள் முதல் வாதம்).
  இந்தச் சண்டை எப்போது முடியும்? மனிதன் தானாக ஒரு உயிரினத்தை உருவாக்கும் போதா? இல்லை. ஏனனில் அதற்கும் பைபிளில் பதில் இருக்கிறது: “கடவுள் மனிதனை தனது குணாதிசயங்களுடன் (சாயலில்)படைத்தார்.” எனவே அந்த ஆற்றலை அவன் பெறுவது மத அடிப்படையைத் தகர்த்து விடாது. அடுத்த உயிரினம் கூர்ப்பின் அடிப்படையில் உருவாகும்போது கூர்ப்புக்கொள்கை வாதிகள் வெற்றி பெறலாம். அதுவரை இந்தச் சண்டை தொடரும்.
  முக்கியமான ஒன்று: டார்வின் வெளியிட்டதும் ஒரு தத்துவமே. இன்னமும் நிறுவப்படவீல்லை. விஞ்ஞான ரீதியாக அது சரியாக இருப்பதற்கு வாய்ப்பு இருந்தாலும் தவறென்று நிறுவப்படவும் வாய்ப்பு உண்டு.

  எப்படி விஞ்ஞானம் தனக்குள் முரண்பட்டு வளர்ந்ததோ அதுபோலவே மதக்கோட்பாடுகளும் தனக்குள் முரண்பட்டு வளர்ந்துள்ளது. (அடிமை முறை பற்றிய நிலைப்பாடுகள் – ஆண் பெண் சமத்துவம் – இன அடிப்படையிலான சமத்துவம் இன்னும் பல) விஞ்ஞானம் முன்னேற்றப் புரட்சிகளிலும் (Progressive revolutions) மெய்ஞானம் முன்னேற்ற வெளிப்பாடுகளிலும் (progressive revelations) தங்கியிருக்கிறது.

 28. கடவுள் மனிதனை தனது குணாதியங்களுடன்(சாயலில்)படைத்தார்.

  மனிதன் தனது சாயலில் நல்லதும் கெட்டதுமான குணாதியங்களில் கடவுளைப் படைத்தான் என்று இந்தநுற்றாண்டில் வாசித்து புரிந்து கொள்ள வேண்டும்…கற்றுக் கொடுக்க வேண்டும்.

  மதமும் கடவுளும் ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் உருமாறி-உருமாறி வளர்ந்து வருவதைக் காண்கிறோம். இந்த இரண்டையும் கிளறிக்கிளறிப் பார்த்தால் பொய்யும் பித்தலாட்டமும் பயமும் சுயநலமும் இருப்பதைக் காணலாம்.

  ஆதிகால மனிதனுக்கு இயற்கையை பற்றி அறிவு இருந்திருக்க முடியாது.எந்த ஞானியாக இருந்தாலும் கூட. மின்னல் மழை நெருப்பு கொள்ளைநோய்கள் கூட தங்களுக்கு மேற்பட்ட சக்திதான் இயக்குகிறது என கற்பனை செய்தான். உபதேசித்தான்.

  இதுவே கடவுளின் முதல்தோற்றமும் பூமிக்கு வந்த கதையும். பிறகு கடவுளைப் பற்றி நீதிக் கதைகள்.இதுவும் மனிதனைப் பிடித்து இன்னொருவர்க்கம் அமுக்கிற தேவைக்காகத்தான்.

  இந்த நீதிக்கதைகளில் கூடா சில உண்மைகள் இருக்கத் தான் செய்கிறது. அதையாரும் கவனம் எடுக்கிறதாக இல்லை.அப்படி எடுத்தாலும் படை பரிவாரங்களுடன் வந்து நாஸ்திகன் என முத்திரை குத்திவிடுவான்.

  இதை எல்லாரும் உணராவிட்டாலும் வினவுக்கு வந்து அரசியல் கருத்து சொல்லுபவர்கள் கட்டாயம் உணரவேண்டும். இதற்கு எந்த சாமியும் வந்து கண்ணுகுளை குத்தப் போறதில்லை.

  மதம் கடவுள் கதை சொல்லுபவர்களுக்கு ஒரு வசதியுண்டு. இந்த இப்படியாக கதை சொல்லப் புறப்பட்டால் எவனும் “லபக்” என கவ்விக் கொள்வான்.

  வட்டிக்கு குடுப்பனை தேவாலயத்தில் இருந்து விரட்டியடித்ததோ தோய்பதற்கு ஒன்று உடுப்பதற்கு ஒன்று.கர்ப்பதில் இருந்து நிர்வாணமாக வந்தேன் நிர்வாணமாக போகிறேன்.ஊசிமுனைக் காதுக்குள்ளே ஒட்டங்கள் புகுந்தாலும் பணக்காரர்கள் சொர்கத்திக்குள் நுழைய முடியாது என்பதெல்லாம் அமிதஉற்பத்திக்கு முன் பொசிங்கியே போய் விட்டது.

  இப்பஎல்லாம் வேறுகிரககாரரின் நடமாட்டம் பலகிலோமீட்டர் நீள முள்ள கல்லு பூமியை நோக்கி வருகிறது.நீங்களும் வானவெளியில் பயணிக்கலாம் சந்திரன் செவ்வாயில் காணி வாங்கிவிடலாம் போன்ற கதைகளே சுவாரசியமிக்கவையாக முதாலித்துவம் தெரிவுசெய்கிறது.

  மதம்கடவுள் இரண்டாந்தரம் ஆகிவிட்டது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க