privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்நூல் அறிமுகம்சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்க வேண்டிய நூல்களின் பட்டியல்!

சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்க வேண்டிய நூல்களின் பட்டியல்!

-

டதுசாரி – முற்போக்கு – சமூக அக்கறை கொண்ட அரசியலில்ஆர்வமும், துடிப்பும் மிக்க தோழர்களுக்காகவும், நண்பர்களுக்காகவும் இந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் அவசியம் வாங்கி படிக்க வேண்டிய நூல்களின் பட்டியலை பதிப்பகம் வாரியாக இங்கு தந்திருக்கிறோம். ஆனால், இந்தப் பட்டியல், இறுதியானவை அல்ல. ஏனெனில், பல பதிப்பகங்கள் இன்னமும் விலைப்பட்டியலை கொண்டு வரவில்லை. சிலர் அச்சுக்கு சென்றிருப்பதாக குறிப்பிட்டார்கள். வேறு சிலர், விலைப்பட்டியலை கொண்டு வரும் எண்ணம் இல்லை என்றார்கள். ‘நீங்களாக பார்த்து விவரங்களை எழுதிக் கொள்ளுங்கள்…’ என்பதே பல பதிப்பகங்களின் பதிலாக இருந்தது.

இந்த நடைமுறை சிக்கலுடனேயே இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டிருப்பதால், விடுப்பட்ட நூல்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. தவிர, பாதுகாக்க வேண்டிய சில நூல்களை கொண்டு வந்த பதிப்பகங்கள், பொருளாதாரம் அல்லது வேறு காரணங்களால் இந்தக் கண்காட்சியில் தனியாக ஸ்டால் போடவில்லை. பதிலாக, தாங்கள் வெளியிட்ட நூல்களை பிற பதிப்பகங்களில் வைத்து விற்க முடிவு செய்திருக்கிறார்கள். முடிந்தவரை அப்படி விற்கப்படும் நூல்களின் விவரங்களையும் இந்தப் பட்டியலில் சேர்த்திருக்கிறோம்.

இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டே இந்தப் பட்டியலை படிக்கும்படி தோழர்களிடமும், நண்பர்களிடமும் கேட்டுக் கொள்கிறோம். விடுப்பட்ட நூல்கள் குறித்த விவரங்களை மறுமொழியில் தெரியப்படுத்தினால், அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்க வேண்டிய நூல்களின் பட்டியல்!கண்காட்சி நடக்கும் இடம், மொத்தம் 10 சாலைகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு சாலையின் தொடக்கத்திலும், முடிவிலும் எண்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. எனவே, இந்தப் பட்டியலும் சாலைகளின் எண்கள் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன. அதேபோல் அரசியல், வரலாறு, தத்துவம், கலை இலக்கியங்கள், அறிவியல்… என்றெல்லாம் பிரித்து வகைப்படுத்தாமல், பதிப்பகம் அல்லது விற்பனையகம் சார்ந்தே நூல்களின் விவரங்களை தந்திருக்கிறோம்.

இந்தப் பட்டியலில் உள்ள நூல்களில் 90%, ‘கீழைக்காற்றுஅரங்கில் கிடைக்கும்.

இனி –

———————-

சாலை எண்: 1

. அலைகள் (எண்: 22)

1. சியாங் சிங்: ஒரு கம்யூனிஸ்ட் தலைவரின் புரட்சிகர இலட்சியம் – ஜாஃபியா ராயன் – ரூ. 70/- (இந்த சியாங் சிங், தோழர் மாவோவின் துணைவியார்)

2. தத்துவத்தின் வறுமை – காரல் மார்க்ஸ் – ரூ. 135/-

3. மதம் பற்றி – லெனின் – ரூ. 70/-

4. சோசலிசமும் போரும் – லெனின் – ரூ. 50/-

5. மகாத்மா புலே – தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் (தமிழில்: சிங்கராயர்) – ரூ. 100/-

6. காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு – தமிழில் ஆ.சீனிவாசன் – ரூ. 750/-

(இதே நூலை நியூ செஞ்சுரி புத்தக நிலையமும் வெளியிட்டுள்ளது. கடைசி இரு அத்தியாயங்கள் மட்டும் குருசேவ் கால திரிபுவாத கருத்துக்களை கொண்டவை. எந்தெந்த காலகட்டத்தில் மார்க்ஸ், என்னென்ன நூல்களை, எந்தச் சூழலில் எழுதினார் என்பதை புரிந்து கொள்ள இந்த நூல் உதவும்)

7. இந்தியத் தொழிலாளி வர்க்கம் உருவாகி வளர்ந்த வரலாறு – சுகுமால்சென் (தமிழில்: வீ.பா.கணேசன்) – ரூ. 450/-

8. கறுப்பு அடிமைகளின் கதை (UNCLE TOM’S CABIN) – ஹேரியட்பீச்சர் ஸ்டவ் (தமிழில்: வான்முகிலன்) – ரூ. 280/-

9. அம்பேத்கருக்குப் பிந்தைய தலித் இயக்கங்கள் – ஆனந்த் டெல்டும்ப்டே (தமிழில்: மயிலை பாலு) – ரூ. 50/-

10. வரலாற்று நோக்கில் ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் – எம்.ஆர்.அப்பன் (தமிழில்: மயிலை பாலு) – ரூ. 230/-

11. இந்திய மக்கள்: மதம் – பழக்க வழக்கங்கள் – நிறுவனங்கள் – அபே.ஜெ.எ.துபுவா (தமிழில்: வி.என்.ராகவன்) – ரூ. 260/-

12. இந்தியத் தத்துவ மரபும் மார்க்சிய இயக்கவியலும் – நா.வானமாமலை – ரூ. 100/-

13. தமிழகத்தில் சாதி சமத்துவ போராட்டக் கருத்துகள் – நா.வானமாமலை – ரூ. 30/-

14. பண்டைய வேதத் தத்துவங்களும் வேத மறுப்புப் பெளத்தமும் – நா.வானமாமலை – ரூ. 35/-

15. இந்திய நாத்திகமும் மார்க்சிய தத்துவமும் – நா.வானமாமலை – ரூ. 25/-

16. மார்க்சிய அறிவுத் தோற்றவியல் – நா.வானமாமலை – ரூ. 35/-

17. விஞ்ஞானத் தொழில்நுட்பப் புரட்சி – நா.வானமாமலை – ரூ. 40/-

18. வரலாறும் வக்கிரங்களும் – ரொமிலா தாப்பர் (தமிழில் நா.வானமாமலை) – ரூ. 35/-

19. கற்பனை செய்யப்பட்ட சமயச் சமூகங்களா? – ரொமிலா தாப்பர் (தமிழில்: வான்முகிலன்) – ரூ. 25/-

20. ஆளும் வர்க்கமாக அறிவுஜீவிகள் – அசோக்ருத்ரா (தமிழில்: வான்முகிலன்) – ரூ. 30/-

21. பெளத்தத்தின் சமூக தத்துவமும் சமத்துவமின்மைப் பிரச்னையும் – உமா சக்கரவர்த்தி (தமிழில்: வான்முகிலன்) – ரூ. 25/-

22. அறிவியல், தத்துவம், சமுதாயம் – தேவிபிரசாத் சட்டோபாத்யாயா (தமிழில்: அ.குமரேசன்) – ரூ. 35/-

23. இந்தியாவின் தேசிய இனச்சிக்கலும் ஆளும் வர்க்கங்களும் – சுனிதி குமார் கோஷ் (தமிழில்: திருமலை) – ரூ. 35/-

24. உலகை குலுக்கிய பத்து நாட்கள் – ஜான் ரீடு (தமிழில்: ரா.கிருஷ்ணையா) – ரூ. 250/-

(இதே நூலை நியூ செஞ்சுரி புத்தக நிலையமும் வெளியிட்டிருக்கிறது)

25. இந்தியத் தத்துவ இயல் – ஓர் எளிய அறிமுகம் – தேவிபிரசாத் சட்டோபாத்யாயா (தமிழில்: வி.என்.ராகவன்) – ரூ. 150/-

26. மாப்ளா கிளர்ச்சியும் அதன் தோற்றுவாயும் – கான்ராட் உட் (தமிழில்: மு.இக்பால் அகமது) – ரூ. 130/-

27. இந்தியாவில் பெண்கள் இயக்கம் 1940 – 1950 – ரேணு சக்கரவர்த்தி (தமிழில்: நா.தர்மராஜன்) – ரூ. 50/-

28. பிரெடெரிக் எங்கெல்ஸ் – டாக்டர் ஸ்தெபானாவா (தமிழில்: வ.சண்முகசுந்தரம்) – ரூ. 100/- (எங்கெல்சின் வாழ்க்கை வரலாறு)

29. இந்தியப் பெருமுதலாளி வர்க்கம் – சுனிதிகுமார் கோஷ் (தமிழில்: வெ.கோவிந்தசாமி) – 125/-

30. உழைக்கும் மக்களின் முன்னணிப் படை – ஏ.ஷாஜின் (தமிழில்: வி.என்.ராகவன்) – ரூ. 30/-

31. தொழிற்சங்கங்களைப் பற்றி காரல் மார்க்ஸ் – ஏ.லாவோவஸ்கி (தமிழில்: எஸ்.ராமகிருஷ்ணன்) – ரூ. 70/-

32. சீன வானில் சிவப்பு நட்சத்திரம் (RED STAR OVER CHINA) – எட்கர் ஸ்நோ (தமிழில்: வீ.பா.கணேசன்) – ரூ. 375/-

33. மாயையும் எதார்த்தமும் – டி.டி.கோசாம்பி (தமிழில்: வி.என்.ராகவன்) – ரூ. 110/-

34. நேரில் கண்ட ரஷ்யப்புரட்சி – ஆ.ரைஸ்வில்லியம்ஸ் (தமிழில்: பூ.சோமசுந்தரம்) – ரூ. 140/-

35. வரலாறு என்றால் என்ன? – ஈ.எச்.கார் (தமிழில்: நா.தர்மராஜன்) – ரூ. 80/-

36. ஆதிசங்கரரின் மக்கள் விரோதக் கருத்துக்கள் – கன்னடம்: பகவான் (தமிழில்: முனைவர் சி.சண்முகம்) – ரூ. 55/-

37. மாவோவின் நெடும்பயணம் (THE LONG MARCH) – DICK WILSON (தமிழில்: நிழல் வண்ணன்) – ரூ. 175/-

38. மார்க்ஸ் – எங்கெல்ஸ் மேற்கோள்கள் – தொகுப்பு: சி.இளங்கோ – ரூ. 40/-

39. சென்னை பெருநகர தொழிற்சங்க வரலாறு – தே.வீரராகவன் (தமிழில்: ச.சீ.கண்ணன், புதுவை ஞானம்) – ரூ. 150/-

40. இளமையின் கீதம் (சீன நாவல்) (THE SONG OF YOUTH) – YANG MO (தமிழில்: மயிலை பாலு) – ரூ. 300/-

41. சூறாவளி (சீன நாவல்) (THE HURRICANE) – CHO LI – P0 (தமிழில்: மயிலை பாலு) – ரூ. 200/-

42. சீனா: ஒரு முடிவுறாத போர் – வில்லியம் ஹிண்டன் (தமிழில்: கி.இரமேஷ்) – 100/- (கலாச்சார புரட்சி குறித்த வரலாறு)

43. இராணுவமும் அரசியலும் (ஜாக் வோடிஸ் எழுதிய நூலின் சுருக்கம்) – நா.தர்மராஜன் – ரூ. 50/-

முதல் பாதையின் முடிவில் திராவிடர் கழக பதிப்பகத்தின் கடை உள்ளது. இங்கு தந்தை பெரியாரின் நூல்களை வாங்கலாம்.

———

சாலை எண்: 2

. கீழைக்காற்று (எண்: 404 / 405)

1. ஈழப்போராட்டத்தின் எனது பதிவுகள்: பிரபாகரனோடு புலிகள் அமைப்பை ஆரம்பித்த நாட்கள்… – கணேசன் (அய்யர்) – ரூ. 130/-

2. பகத்சிங் சிறைப் போராட்டமும் அரிய ஆவணங்களும் – ஆவணங்கள் தொகுப்பு: சமன்லால் (பேராசிரியர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்) தமிழில்: எஸ்.சம்பத் – ரூ. 15/-

3. படிப்பும் விடுதலைக்கான அறிவும் – தோழர் மருதையன் – ரூ. 15/-

4. நக்சல்பாரி புரட்சியின் இடிமுழக்கம் – ரூ. 12/-

5. தெராய் பிராந்திய விவசாயிகள் இயக்கம் பற்றிய அறிக்கை செப்டம்பர், 1968 – தோழர் கனுசன்யால் – ரூ. 15/-

6. மக்களிடையே நமது பணிகள் – கதீப் அன்சாரி – ரூ. 12/-

7. ஹூனான் விவசாயி இயக்கப் பரிசீலனை பற்றிய அறிக்கை – மாசேதுங் – ரூ. 50/-

8. கட்சி அமைப்பு பற்றி – ஸ்டாலின், காகனோவிர், டிமிட்ரோவ், மாவோ – ரூ. 50/-

9. ஐந்து அரங்குகளில் தேர்வை எதிர்கொள்வோம் – செள என் லாய் – ரூ. 10/-

10. முரண்பாடு பற்றி – மாவோ – ரூ. 40/-

11. கம்யூனிசக் கொடியின் கீழ் – ஜூலியஸ் ஃபூசிக் – ரூ. 7/-

12. போராடும் தருணங்கள் – தோழர் மருதையன் – ரூ. 40/-

13. லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் – ஸ்டாலின் – ரூ. 75/-

14. சினிமா: திரை விலகும்போது… – புதிய கலாச்சாரம் இதழில் வெளிவந்த சினிமா விமர்சனங்கள் – ரூ. 70/-

15. மீண்டும் தொழிலாளி வர்க்கம் (வினவு, புதிய கலாச்சாரம் கட்டுரைகள்) – ரூ. 80/-

16. அருந்ததிராய் – கரண்தபார் விவாதம் – தமிழில்: அனாமதேயன் – ரூ. 10/-

17. விடுதலைப் போரின் வீரமரபு – (புதிய கலாச்சாரம் காலனியாதிக்க எதிர்ப்பு சிறப்பிதழ் கட்டுரைகளின் தொக்கு) ரூ. 65/-

18. ஈராக் வரலாறும் அரசியலும் – கலையரசன் – ரூ. 15/-

19. நினைவின் குட்டை நதி (சுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம்) – ரூ. 70/-

20. நிஜத்தின் உரைகல்லில் சினிமா (வினவு, புதிய கலாச்சாரம் இதழ்களில் வெளிவந்த திரை விமர்சனங்கள்) – ரூ. 110/-

21. ஆகஸ்டு 15, 1947: அதிகாரமாற்றம்: உண்மையா… சடங்கா? – சுனிதிகுமார் கோஷ் – ரூ. 25/-

22. பரமக்குடி துப்பாக்கிச் சூடு செப்.11, 2011, உண்மை அறியும் குழு அறிக்கை – ரூ. 15/-

23. நான் நாத்திகன் ஏன்? – பகத்சிங் – ரூ.

24. ’பாரதி’ய ஜனதா பார்ட்டி – வே.மதிமாறன் – ரூ.50

25. பாரதி பக்தர்களின் கள்ள மெளனம் – தோழர். மருதையன் – ரூ.40

26. ஆப்பிரிக்கர்கள் கண்டு பிடித்த இருண்ட ஐரோப்பா – கலையரசன் – ரூ. 50/-

27. காஷ்மீர் யாருக்கு சொந்தம்? – ரூ. 25/-

28. அமெரிக்க நெருக்கடி முதலாளித்துவத்துக்கு சவுக்கடி! (அமெரிக்கப் பொருளாதார நெருக்கடியும் இந்தியாவில் அதன் பாதிப்புகளும் – ரூ.30/-

29. கம்யூனிஸ்டு அறிக்கையின் கதை – ரூ. 7/-

30. கடவுள் கைது பக்தன் விடுதலை – வினவு – புதிய கலாச்சாரம் கட்டுரைகள் ரூ. 25/-

31. இட ஒதுக்கீடு – ஒரு மார்க்சிய லெனினிய பார்வை – புதிய ஜனநாயகம்- ரூ. 30/-

32. சட்டக்கல்லூரி கலவரம்: சாதியம் ஒழிப்போம்! தமிழகம் காப்போம்! – வினவு – ரூ. 35/-

33. ஜீன்ஸ் பேண்டும் பாலியல் வன்முறையும் – வினவு – ரூ. 25/-

34. ஐ.டி.துறை நண்பா… – வினவு – ரூ. 35/-

35. மும்பை 26/11 விளக்கமும் விவாதமும் – வினவு- ரூ. 35/-

36. ஜெயமோகன், சாரு நிவேதிதா, காலச்சுவடு, சுகுமாரன், உயிரோசை, சோல்சனிட்சின் இலக்கிய மொக்கைகள் – வினவு – ரூ. 25/-

37. எண்டோசல்பானையும் பி.டி.கத்திரிக்காயையும் விரட்டி அடிப்போம்! – ரூ. 10/-

38. பெண் எப்போது பெண்ணாக இருந்தாள்? – வினவு -ரூ. 55/-

39. இமாலய சாகசம்: 1962 இந்திய சீனப் போர்: காரணங்களும் விளைவுகளும் – சுனிதிகுமார் கோஷ் – ரூ. 30/-

40. இசை: போதை பொழுதுபோக்கு போராட்டம் – புதிய கலாச்சார கட்டுரைகள் – ரூ. 40/-

41. இந்தியாவில் சாதிகள் (பாவை வெளியீடு) – அண்ணல் அம்பேத்கர் – ரூ. 30/-

. தோழமை (எண்: 385)

1. மார்க்சியமும் மொழியியல் தேசிய இனப் பிரச்னைகளும் – ஸ்டாலின் – (தொகுப்பு: மகாராசன்) – ரூ. 130/-

2. ஒரு கோப்பை தண்ணீர் தத்துவமும் காதலற்ற முத்தங்களும் – லெனின், க்ளாரா ஜெட்கின் உரையாடல் – (தொகுப்பு: மகாராசன்) – ரூ. 100/-

. பொன்னி (எண்: 397)

1. வீரத்தெலங்கானா ஆயுதபோராட்டமும் அதன் படிப்பினைகளும் – சுந்தரய்யா (தமிழில்: தியாகு) – ரூ. 400/-

2. சிறைக் கடிதங்கள் (கம்பிகளுக்குள்ளிருந்து இயற்கையை நேசிக்க வைக்கும் கடிதங்கள்) – ரோசா லக்சம்பர்க் – ரூ. 50/-

3. இந்துமதக் கொடுங்கோன்மை வரலாறு (புரோகித ஆதிக்கத்தில் புதையுண்ட இந்திய வரலாறு) – தர்மகீர்த்தி அடிகள் (தமிழில்: வெ.கொ.பாலகிருஷ்ணன்) – ரூ. 120/-

4. அம்பேசிவம் (கூர்மைப்படுத்தப்பட்ட நாத்திகவாதக் கட்டுரைகள்) – குத்தூசி குருசாமி – ரூ. 50/-

5. வால்மீகி இராமாயணம் (மறைக்கப்பட்ட உண்மை இராமாயணம்) – குருவிக்கரம்பை வேலு – ரூ. 100/-

6. பூமணியின் 5 நாவல்கள் (பிறகு, வெக்கை, நைவேத்தியம், வாய்க்கால், வரப்புகள்) – ரூ. 300/-

7. அம்பாரம் (பூமணியின் 51 சிறுகதைகள் அடங்கிய பெருந்தொகுப்பு) – பூமணி – ரூ. 225/-

—————-

சாலை எண்: 3

. அம்பேத்கர் ஃபவுண்டேஷன்ஸ்

1. அண்ணல் அம்பேத்கரின் அனைத்து ஆக்கங்களும் 37 தொகுதிகளாக தமிழில் கிடைக்கிறது. கைவசம் பிரதிகள் இல்லாததால் தொகுதி 8, 11, 22 ஆகிய மூன்றும் விற்பனைக்கு இல்லை. மீதமுள்ள 34 தொகுதிகளையும் ரூ. 1400/-க்கு வாங்கலாம். ஒருவேளை சில தொகுதிகள் பேப்பர் பேக் ஆக இருந்தால், இந்தத் தொகை உயரும்.

. காலச்சுவடு (எண்: 11 / 12)

1. கிறிஸ்தவமும் தமிழ்ச்சூழலும் – ஆ.சிவசுப்பிரமணியன் – ரூ. 100/-

2. நொறுங்கிய குடியரசு – அருந்ததி ராய் (தமிழில்:க.பூர்ணச்சந்திரன்) – ரூ. 145/-

3. அறியப்படாத தமிழகம் – தொ.பரமசிவன் – ரூ. 100/-

4. மணல்மேல் கட்டிய பாலம் – சு.கி.ஜெயகரன் – ரூ. 100/-

5. கோவில் – நிலம் – சதி – பொ.வேல்சாமி – ரூ. 90/-

6. பொற்காலங்களும் இருண்ட காலங்களும் – பொ.வேல்சாமி – ரூ. 180/-

7. பண்பாட்டு அசைவுகள் – தொ.பரமசிவன் – ரூ. 150/-

8. மந்திரமும் சடங்குகளும் – ஆ.சிவசுப்பிரமணியன் – ரூ. 150/-

9. குமரி நிலநீட்சி – சு.கி.ஜெயகரன் – ரூ. 100/-

10. தமிழகத்தில் அடிமைமுறை – ஆ.சிவசுப்பிரமணியன் – ரூ. 80/-

————

சாலை எண்: 4

. விடியல் (எண்: 306 / 307)

1. இந்திய வரலாறு ஓர் அறிமுகம் – டி.டி.கோசாம்பி (தமிழில்: சிங்கராயர்) – ரூ. 350/-

2. இந்தியா ஒரு வல்லரசு: வேடிக்கையான கனவு – அருந்ததிராய் – ரூ. 30/-

3. ஏகாதிபத்தியத்தின் கிடுக்கிப்பிடியில் இந்திய வேளாண்மை – சுனிதிகுமார் கோஷ் (தமிழில்: நிழல்வண்ணன்) – ரூ. 70/-

4. வனம் எழுதும் வரலாறு (மாவோயிஸ்ட் கெரிலாக்களுடன் பஸ்கர் காட்டில் தங்கிய அனுபவம்) – சத்நாம் – ரூ. 130/-

5. இந்திய வரலாற்றில் பகவத் கீதை – பிரேம்நாத் பசாஸ் – ரூ. 500/-

6. கோபுரத்தை உலுக்கிய காற்று மற்றும் அதிகாலை பெருவெள்ளம் – ஹேன்சூயின் – (இரு நூல்களும் சேர்த்து) ரூ. 1000/-  (எட்கர் ஸ்நோ எழுதிய நூல்கள் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவணங்கள் அடிப்படையில் எழுதப்பட்ட தோழர் மாவோவின் வாழ்க்கை வரலாறு. அதன் வழியாக சீனாவின் வரலாறு)

7. நீண்ட புரட்சி – எட்கர் ஸ்நோ – ரூ. 175/- (‘சீனவானில் சிவப்பு நட்சத்திரம்’ என்ற புகழ்பெற்ற நூலை ஸ்நோ, 1930களின் இறுதியில் எழுதினார். அதன் பிறகு அவர் மாவோவை 1970களில் சந்தித்தபோது எழுதிய நூல் இது)

8. மார்க்ஸ் முதல் மாசேதுங் வரை – ஜார்ஜ் தாம்சன் (தமிழில்: எஸ்.வி.ஆர்.) – ரூ. 80/-

9. மனித சாரம் – ஜார்ஜ் தாம்சன் (தமிழில்: எஸ்.வி.ஆர்.) – ரூ. 100/-

10. முதலாளியமும் அதன் பிறகும் சரக்கு உற்பத்தியின் தோற்றமும் வீழ்ச்சியும் – ஜார்ஜ் தாம்சன் (தமிழில்: எஸ்.வி.ஆர்.) – ரூ. 75/-

11. சமயம் பற்றி – ஜார்ஜ் தாம்சன் (தமிழில்:  ) – ரூ. 25/-

(ஜார்ஜ் தாம்சனின் இந்த நான்கு நூல்களையும் வாசித்தால் ஓரளவு மார்க்சியத்தின் அடிப்படைகளை தெரிந்து கொள்ளலாம்.)

12. மாஓ சேதுங்: தேர்ந்தெடுக்கப்பட்ட இராணுவப் படைப்புகள் – ரூ. 200/-

13. இந்தியாவும் பிரிட்டிஷ் ஆட்சியும் 1919 – 1947 (1) – சுனிதிகுமார் கோஷ் (தமிழில்: சிங்கராயர்); இந்தியாவும் பிரிட்டிஷ் ஆட்சியும் 1919 – 1947 (2) – சுனிதிகுமார் கோஷ் (தமிழில் நிழல்வண்ணன்) – இரு தொகுதிகளும் சேர்த்து ரூ. 600/-

14. தத்துவம்: பேக்கன் முதல் மார்க்ஸ் வரை – தேவிபிரசாத் சட்டோபாத்யாயா (தமிழில்: மு.வசந்தகுமார்) – ரூ. 35/-

15. சீனாவின் வரலாறு – வெ.சாமிநாதசர்மா – ரூ. 150/-

16. ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும் – ஆனந்த் டெல்டும்ப்டெ (தமிழில்: எஸ்.வி.ஆர்.) – ரூ. 135/-

17. மனிதன் – ஆர்.இராமநாதன் – ரூ. 65/- (62 ஆண்டுகளுக்கு முன் தமிழில் எழுதப்பட்ட நூல் இது. மனித குலத்தின் வளர்ச்சியை மார்க்சிய நோக்கில் எழுதப்பட்ட நூல் இது)

18. ஹோசிமின் – யெவ்கனி கொபலெவ் (தமிழில்: க.விஜயகுமார்) – ரூ. 150/-

19. சீனாவும் சோஷலிசமும்: சந்தை சீர்திருத்தமும் வர்க்கப் போராட்டமும் – மார்ட்டின்ஹார்ட் – லேண்ட்ஸ்பர்க் பால்பர்க்கட் (தமிழில்: க.செங்கோடன்) – ரூ. 100/-

20. 1942 ஆகஸ்ட் புரட்சி: மறைக்கப்பட்ட உண்மைகள் – சு.துரைசாமி – ரூ. 100/-

21. ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் – ஜான் பெர்கின்ஸ் (தமிழில்: இரா.முருகவேள்) – ரூ. 150/-

22. உயிரினங்களின் தோற்றம் (சுருக்கப்பட்ட வடிவம்) – சார்லஸ் டார்வின் (தமிழில்: ராஜ்கெளதமன்) – ரூ. 65/-

23. என் நினைவுகளில் லெனின் – கிளாரா ஸெத்கின் – ரூ. 50/-

24. உலகமயமாக்கல்: அடிமைத்தளையில் இந்தியா – அரவிந்த் (தமிழில்: வசந்தகுமார் – நிழல்வண்ணன்) – ரூ. 175/-

. அடையாளம் (எண்: 322 / 323)

1. எண்ணெய் அரசியல் – கேர்ரி ரீச் (தமிழில்: நா.தர்மராஜன்) – ரூ. 170/-

2. காக்கி உடையும் காவிக் கொடியும் – தபன் பாசு (தமிழில்: நா.தர்மராஜன்) – ரூ. 80/-

3. இஸ்லாத்தின் தோற்றமும் வளர்ச்சியும் – அஸ்கர் அலி எஞ்ஜினியர் (தமிழில்: ஐ.இசக்கி) – ரூ. 150/-

4. ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் – சி.புஸ்பராஜா – ரூ. 425/-

5. நான் ஏன் இந்து அல்ல – காஞ்சா அய்லய்யா – ரூ. 120/-

6. பதி பசு பாகிஸ்தான் – எஸ்.வி.ராஜதுரை – 80/-

7. இந்து இந்தியா – எஸ்.வி.ராஜதுரை – ரூ. 115/-

. பாரதி புத்தகாலயம் (எண்: 18 / 19)

1. இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு: ஆரம்ப ஆண்டுகள் (1920 – 33) தொகுதி 1 – ரூ. 180/-

2. மா சே துங்: ஒரு மனிதர், கடவுளல்லர் – குவான் யான்சி (தமிழில்: மிலிட்டரி பொன்னுசாமி) – ரூ. 140/-  (Foreign Languages Press, Beijing, China, 1992ல் வெளியிட்ட  MAO ZEDONG MAN, NOT GOD, By Quan Yanchi என்ற நூலின் தமிழாக்கம். மாவோவின் மெய்க்காப்பாளராக பல ஆண்ட்கள் பணிபுரிந்த லீயின் கியாயோவின் நினைவு கூர்தல்களை அடிப்படையாகக் கொண்ட நூல் இது. ஆனால், தவறான தமிழாக்கம், ஏராளமான எழுத்துப் பிழைகள். இதை பொறுத்துக் கொண்டுதான் இந்த நூலை வாசிக்க வேண்டும்)

3. ஒரு டிரில்லியனுக்கு எத்தனை ஜீரோ? குற்றவாளிக் கூண்டில் ஐ.எம்.எப் – உலக வங்கி – சூசன் ஜார்ஜ் – ரூ. 130/-

4. மார்க்சின் மூலதனம் பற்றி… – எங்கெல்ஸ் – ரூ. 70/-

5. சூறாவளியாய் தாக்கும் உலக நிதிமூலதனம் – என்.எம்.சுந்தரம் (தமிழில்: இலக்குவன்) – ரூ. 60/-

6, நிதி நெருக்கடி ஒரு புரிதல் – அமானுல்லாகான் (தமிழில்: இரா.இயேசுதாஸ்) – ரூ. 50/-

———-

சாலை எண்: 6

. சிலிக்குயில் (எண்: 277)

பிற பதிப்பகங்களின் நூல்கள் இங்கு கிடைக்கின்றன. குறிப்பாக மனிதன் பதிப்பகம்சார்பில் வெளிவந்த தோழர் கிஷன்ஜி‘, ‘தோழர் ஆசாத்உட்பட மாவோயிஸ்ட்டுகளின் நூல்களை இங்கு வாங்கலாம்.

தவிர, முகம் பதிப்பகம் வெளியிட்ட வரலாற்றில் கிறிஸ்தவம் (புரூனோ பெள்வரும் பழைய கிறிஸ்தவமும், பழைய கிறிஸ்தவத்தின் வரலாறு பற்றி, பின் இடைக்கால ஜெர்மனியில் திருச்சபை சீர்திருத்தமும் திருச்சபை எதிர்ப்பும் ஆகிய கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு) – பிரெடரிக் எங்கெல்ஸ் – நூலும் இங்கு கிடைக்கிறது. இதன் விலை: ரூ. 65/-

———–

சாலை எண்: 8

. தமிழ்ப் புத்தகாலயம் (எண்: 209 / 210)

1. வால்காவிலிருந்து கங்கை வரை – ராகுல்ஜி – ரூ. 350/-

2. பொதுவுடமை என்றால் என்ன? – ராகுல்ஜி – ரூ. 35/-

3. கலையும் இலக்கியமும் – மாசேதுங் – ரூ. 12/-

4. யுத்தம் வேண்டாம் – மாக்ஸிம் கார்க்கி – ரூ. 25/-

5. லெனினுடன் சில நாட்கள் – மாக்ஸிம் கார்க்கி – 24/-

6. அமெரிக்காவிலே… – மாக்ஸிம் கார்க்கி – ரூ. 45/-

7. எது நாகரீகம்? – மாக்ஸிம் கார்க்கி – ரூ. 30/-

8. தூக்கு மேடைக் குறிப்பு – ஜூலிஸ் பூசிக் – ரூ. 55/-

. நியூ செஞ்சுரி புத்தக நிலையம் (எண்: 53 / 54)

1. உலகாயதம் பண்டைய இந்தியாவின் ஆரம்பகால பொருள்முதல்வாத சிந்தனைகள் – தேவிபிரசாத் சட்டோபாத்யாயா (தமிழில்: சிங்கராயர்) – ரூ. 500/-

2. மதமும் சமூகமும் – தேவிபிரசாத் சட்டோபாத்யாயா (தமிழில்: சிசுபாலன்) – ரூ. 100/-

3. தமிழகத்தின் பொருளாதார வரலாறு – தேவ.பேரின்பன் – ரூ. 55/-

4. என் வாழ்க்கை – கே.என்.பணிக்கர் (தமிழில்: நா.தர்மராஜன்) – ரூ. 150/-

5. நவீனத்துவம் – தமிழ் – பின்நவீனத்துவம் – கார்த்திகேசு சிவதம்பி – ரூ. 130/-

6. மனித சமுதாயம் (வரலாற்று பொருள்முதல்வாதம் குறித்த எளிமையான விளக்கம்) – ராகுல் சாங்கிருத்யாயன் (தமிழில்: ஏ.ஜி.எத்திராஜுலு) – ரூ. 150/-

7. இந்துத் தத்துவ இயல், பெளத்தத் தத்துவ இயல், இஸ்லாமியத் தத்துவ இயல், ஐரோப்பியத் தத்துவ இயல், விஞ்ஞான லோகாயத வாதம்… ஆகிய ராகுல்ஜியின் நூல்கள் ரூ. 50/- முதல் ரூ. 70/-க்குள் தனித்தனியாக கிடைக்கின்றன.

8. மார்க்சிய மெய்ஞானம் – ஜார்ஜ் பொலீட்ஸ்கர் (தமிழில் ஆர்.கே.கண்ணன்) – ரூ. 55/-  இவை தவிர முன்னேற்ற பதிப்பகம் வெளியிட்ட பழைய ரஷ்ய நாவல்களில் பல, இப்போது நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடாக வந்துள்ளன. பல முக்கிய நூல்களை தேடித்தான் எடுக்க வேண்டும் என்பது இங்குள்ள குறை.

———

சாலை எண்: 10

. கருப்புப் பிரதிகள் (எண்: 119)

1. காசு ஒரு பிசாசு – கலையரசன் – ரூ. 75/-

2. குழந்தைப் போராளி – சைனா கெய்ரெற்சி – ரூ. 180/-

————

இவை தவிர –

சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் வரலாறு (ரூ. 180/-), நிரஞ்சனா எழுதிய நினைவுகள் அழிவதில்லைநாவல் (விலை: ரூ. 60/-) உட்பட சவுத் விஷன் பதிப்பகம் வெளியிட்டுள்ள முக்கியமான நூல்கள் அனைத்தும் கீழைக்காற்றுமற்றும் பாரதி புத்தகாலயம்அரங்குகளில் கிடைக்கும்.

அதுபோலவே –

அருணன் எழுதி மதுரையிலுள்ள வசந்தம் வெளியீட்டகம் வெளியிட்டுள்ள –

1. தமிழரின்  தத்துவ மரபு (1) – ரூ. 170/-

2. தமிழரின் தத்துவ மரபு (2) – ரூ. 100/-

3. காலந்தோறும் பிராமணியம் (வேதகாலம் முதல் சோழர் காலம் வரை) (1) – ரூ. 150/-

4. காலந்தோறும் பிராமணியம் (சுல்தான்கள் + முகலாயர்கள் காலம் (2 & 3) – ரூ. 350/-

5. காலந்தோறும் பிராமணியம் (கிழக்கிந்திய கம்பெனி காலம்) (4) – ரூ. 150/-

6. காலந்தோறும் பிராமணியம் (பிரிட்டனின் நேரடி ஆட்சிக் காலம்) (5) – ரூ. 350/-

7. காலந்தோறும் பிராமணியம் (நேரு காலம்) (6) – ரூ. 250/-

ஆகிய நூல்களும் கீழைக்காற்றுமற்றும்பாரதி புத்தகாலயம்அரங்குகளில் கிடைக்கும்.

முடிவாக,

இங்கு வெளியிடப்பட்டுள்ள நூல்களின் பட்டியில் வாயிலாக பொதுவான இடதுசாரி அரசியல், பொருளாதாரம், இந்திய, தமிழக வரலாறு, சமூகம், சாதி, மதம் குறித்த ஆரம்ப அடிப்படைகளை கற்றுக் கொள்ளலாம். ஆசான்கள் தவிர்த்த நூல்களில் சில கராறான அரசியல் பார்வை இல்லாமல் இருந்தாலும் ஒரு அறிமுகம் என்ற வகையில் படிக்கலாம் என்பதால் அதையும் சேர்த்துள்ளோம்.

  1. அருமையான பரிந்துரை, பட்டியல் தயாரித்த தோழர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்.

  2. மா சே துங்: ஒரு மனிதர், கடவுளல்லர் – (தமிழில்: மிலிட்டரி பொன்னுசாமி) லீயின் கியாயோவின் நினைவு கூர்தல்களை அடிப்படையாகக் கொண்ட நூல் இது. ஆனால், தவறான தமிழாக்கம், ஏராளமான எழுத்துப் பிழைகள். இதை பொறுத்துக் கொண்டுதான் இந்த நூலை வாசிக்க வேண்டும்//
    எழுத்துப் பிழையை இந்நூலில் பெரிய விசயமாக நான் கருதவில்லை. மாவோவின் வாழ்க்கையை இந்நூல் நன்றாக படம்பிடித்து காட்டுகிறது. அவரது மகள் லிநி-யின் வளர்ப்பு பற்றி படிக்கையில் கண்ணில் நீர் கோர்த்துவிட்டது. மனைவி மற்றும் மகனை போரில் பறிகொடுத்தும் நெஞ்சை உறுதியாக வைத்திருந்த மனிதர், விவசாய மக்களின் உணவில்லா நிலை கண்டு, தொடர்ந்து கண்ணீர் வடித்த காட்சி நன்றாக நினைவில் பதிந்துவிட்டது.
    கண்காட்சியில் என்ன வாங்கலாம் என்று யோசித்துக்கொண்டுள்ள நிலையில் இந்த பதிவைக் கண்டு மிகவும் பூரித்துவிட்டேன் – நன்றி வினவு.

  3. […] வினவுநூல் பட்டியல் தொடர்புடைய பதிவுகள்அசிங்கமான மார்க்ஸியம்அண்ணா ஹசாரே, மீண்டும் இரு உரையாடல்கள்.பின் தொடரும் நிழலின் குரல் பற்றிமார்க்ஸியம் இன்று தேவையா?மார்க்ஸ் கண்ட இந்தியாகடிதங்கள் Tagged with: மார்க்ஸியம், வினவு தளம் […]

  4. மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்களின் ஒரிஜினல் பேரையும் குறிப்பிட்டால் கண்காட்சிக்கு வந்து தமிழ் புத்தகங்களை வாங்க முடியாதவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

    (மீண்டும்) ஆர்வி

  5. இலங்கை எழுத்தாளர் செ.கணேசலிங்கன் தொகுத்த குமரன் தொகுப்பு (1971 முதல் – 1983 வரை குமரன் இதழில் வந்த மார்க்சியம், இலக்கியம் சம்பந்தமான தொகுப்பு ) ரூ. 250 ,மொத்த பக்கங்கள் 960 மிகவும் பயனுள்ள தொகுப்பு,

  6. இஸ்லாத்தின் தோற்றமும் வளர்ச்சியும்//
    .
    .
    எவ்வளவு முறை நீ சென்சார் பண்ணாலும் கேட்டுகினு தான் இருப்பேன்!இதை பரிந்துரைக்க காரணம் என்ன?எல்லாரும் இஸ்லாத்துக்கு போகணும்னா?

  7. அ.மார்க்ஸ் எழுதிய பல நூல்களில் ஒன்றை கூட குறிப்பிட இயலாத அளவு வெறுப்பு / bias ? தலித்தியம், பெண்ணியம், மார்க்சிய பார்வை, பின் நவீனத்துவம் மற்றும் பல பல இதர விசியங்கள் பற்றி எழுதிய நூல்கள் ஒன்று கூட இந்த பட்டியலில் இல்லை ? கருப்பு பிரதிகள் பதிப்பகத்தில் மற்றும் பல பதிப்பகங்களில் அவை உள்ளன. நான் மொத்தமாக எல்லாவற்றையும் வாங்கினேன். கீழை காற்று ஸ்டாலில், மெக்காலே பற்றி ஒரு புத்தகம் வாங்கினேன். கிழக்கு பதிப்பகத்தில், அரவிந்தண் நீலகண்டன் எழுதிய ‘கம்யூனிசம்’ பற்றிய புதிய நூலும் முக்கியமானது தான். அனைவரும் படித்து பின்பு விவாதிக்க வேண்டும்.

    • அதியமான் வாங்கி, ஆனால் இந்த லிஸ்டில் விட்டுப் போன நூல்கள்

      1) முப்பதே நாளில் கிளி ஜோசியம்
      2) ஜோசியம் சோழி முதல் சோனி போன் வரை
      3) கம்பியூட்டர் ஜோசியத்துக்கான ஆண்டி வைரஸ் புரோகிராம்கள் (சிறு வெளியீடு)
      4) பின்னூட்ட ஜோசியம் – என் அனுபவங்கள் – பிரபல பதிவர் கே.ஆ.ஏ (அவரேதான்)
      5) வெற்றிலையில் மை – வெற்றி மேல் கை
      6) வைத்தீஸ்வரன் கோவில் நாடி ஜோதிடம் – ஒரு ஆய்வு
      7) சிவகாமியின் வண்டமும் – தண்ணியில் கண்டமும் – நடிகர் குவேக் மனம் திறக்கிறார்
      8.) 2012ல் முதலாளித்துவம் – மாதவாரி திவால் பலன்கள்
      9) கம்யூனிஸ்டுகளுக்கு வைக்க 50 விதமான பில்லி-சூனிய-ஏவல்கள்

      இவையனைத்தும் ஒடலங்குடி பதிப்பத்தில் கிடைக்கும்.

      • உண்மையில் ஜோதிடம் பற்றி ஆராய்ச்சி தான் செய்கிறேன். பலன் சொல்லுவதில்லை. கற்றது கைமண் அளவு என்பதே சரி. அ.மார்க்ஸ் ஹோமியோபதி மருத்துவம் பற்றி எழுதிய முக்கிய கட்டுரையில், ‘பகுத்தறிவின் வன்முறை’ பற்றி அருமையாக விவரித்துள்ளார். எனக்கு சில patterns தெரிகின்றன. pattern recognisation மற்றும் சக மனிதர்களை புரிந்து கொள்ள மிக உதவியாக இருக்கிறது. வேறு பல பார்வைகளும் கிடைக்கின்றன. இவற்றை வெளிப்படையாக பேசினால் பைத்தியகாரன் என்பீர்கள். எனவே அதிகம் பேசுவதில்லை, எழுதுவதில்லை.

    • //அரவிந்தண் நீலகண்டன் எழுதிய ‘கம்யூனிசம்’ பற்றிய புதிய நூலும் முக்கியமானது தான். அனைவரும் படித்து பின்பு விவாதிக்க வேண்டும்.// அரவிந்தன் நீலகண்டன் அறை விழுந்த கண்டன தமிழ்மணத்திலிருந்து ஓடிப் போன காரணம் உங்களுக்கு தெரியுமே? அவனது ‘சூரியன் உதிப்பது மேற்கே’ போன்ற பொய்களை டவுசர் கிழித்துவுடன்தானே தெறித்து ஓடினார். அவனைப் போன்ற பித்தலாட்ட 420களுக்கு இங்கே வக்காலத்து ஏன்? ஆர் எஸ் எஸ் காவி வெறியுடன் பொய்யும் பித்தலாட்டுமும் மட்டுமே அறிவாளித்தனமாக கொண்ட அவனைப் போன்றவர்களை அதியமான் இன்னும் தூக்கித் திரிவதேன்? அவனது பித்தலாட்டங்களுக்கு அதியமான் பொறுப்பேற்பார? தமிழ்ப்பேப்பரில் அவன் கழிந்து வைத்துள்ளவைக்கும் அதியமான் பதில் சொல்வாரா?

      • //அவனைப் போன்ற பித்தலாட்ட//

        அசுரன் எனப்படும் பண்பில்லா சிறுவனக்கு :

        மொதல்ல மரியாதையா பேச கத்துக்க. ஒரு முறை இங்கு ஒரு வாசகர் உனக்கு செமையா கொடுத்தது உறைக்கவே இல்லை போல். உண்மையில் நேரில் உன்னால் இப்படி எல்லாம் ஒருமையில், கீழ்தரமாக ஒருவரை பேச முடியுமா என்ன ? உன்னை போன்ற கோழைகள் தான் இணையத்தில், புனை பெயரில் மட்டும் ஏசுவீக. கேவலமான புத்தி.

        அரவிந்த நீலகண்டனுடன் பல விசியங்கள் நான் கடுமையாக முரண்படுகிறேன். ஆனால் அவரும் எம் நண்பர் தான். அவரின் மேற்படி நூல் பற்றிய விமர்சனங்களும் எமக்கு உண்டு. (கிழக்கு பதிப்பக பாணி பற்றியும்); ஆனாலும் விஞ்ஞானமும் ஸ்டாலின், லெனின் பற்றிய பகுதி மிக முக்கியமானது. ஜெனிடிக்ஸ் மற்றும் குவாண்டம் மெக்கானிக்ஸ் பற்றி சோவியத் அணுகுமுறை பற்றியும் தான். வேறு பல முக்கிய தகவல்கள் பல உள்ளன. கொல்ப்பட்டவர்கள் பற்றியும், குலாகுகள் பற்றிய்ம் சோவியத் ஆவணங்கள் என்ன சொல்கின்றன, மாவோ பற்றியும், வியட்நாம் பற்றியும். படிக்காமலே ஏசுவது தான் உன் பாணியாச்சே. உனக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும். மத்தவங்க எல்லாம் _______ங்க என்ற நினைப்பு உனக்கு. வெத்து ஈகோ மட்டும் தான் உனக்கு இருக்கு. உன்னை எல்லாம் திருத்தவே முடியாது. வருடங்கள் செல்ல செல்ல, வாழ்க்கையில் நிறைய அடிப்படும் போது தான் பக்குவம் மற்றும் ‘புரிந்தல்கள்’ உருவாகும்.

        எதையும் திறந்த மனதோடும், பண்போடும் அனுகுபவர்களுடன் மட்டும் விவாதிப்பது தான் சரியக இருக்கும்.

        • //அசுரன் எனப்படும் பண்பில்லா சிறுவனக்கு :

          மொதல்ல மரியாதையா பேச கத்துக்க// அதியமான் இன்ன வர உண்ட மரியாதையாத்தான் பேசிட்டு இருக்கேன். அத கெடுத்துக்காத. ஒரு சோமாறி, பொய் பித்தலாட்ட பேர்வழி, தேசத் துரோகியும், இந்து மத வெறியனுமான அரவிந்தன் நீலகண்டனுக்காக நீ வசவு வாங்காதே. அவர் உனக்கு நண்பன் எனில் அவன் இங்கு விட்டு விட்டு ஓடிப் போன பிரச்சினைகளுக்கு நீ பதில் சொல்வாயா? சரியென்றால் சொல் ஆட்டத்தை ஆரம்பிப்போம்.

          • //உனக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும். மத்தவங்க எல்லாம் ______ ங்க என்ற நினைப்பு உனக்கு. வெத்து ஈகோ மட்டும் தான் உனக்கு இருக்கு. உன்னை எல்லாம் திருத்தவே முடியாது. // 300 வருசமா முதலாளித்துவம் ஏன் லிபரல் பொருளாதாரத்தையும், சுதந்திர சந்தையையும் எங்கெயுமே செயல்படுத்த முடியாம செத்து போய்க் கொண்டிருக்கிறது என்ற சிறு கேள்விக்கு இன்ன வரை பதில் சொல்லாம ஓடிப் போய்க் கொண்டிருபப்வர்தான் நீங்கள். அதனால் ஈகோ, திறந்த மனது இப்படி உங்களக்கு ஒத்து வராத விசயங்களை பற்றி வீண் பிலாக்கானம் எதற்கு?

            • // 300 வருசமா முதலாளித்துவம் ஏன் லிபரல் பொருளாதாரத்தையும், சுதந்திர சந்தையையும் எங்கெயுமே செயல்படுத்த முடியாம செத்து போய்க் கொண்டிருக்கிறது என்ற சிறு கேள்விக்கு // :))) எந்த சித்தாந்தம் செத்து போனது, எது இன்னும் உயிரோடு இருக்கிறது என்பதை பற்றி நிறைய பேசியாச்சு. மேலும் லிபரல் ஜனனாயகம் சார்ந்த சந்தை பொருளாதாரத்திற்க்கும் இன்னும் 300 வயசு ஆகவில்லை.

              • //:) )) எந்த சித்தாந்தம் செத்து போனது, எது இன்னும் உயிரோடு இருக்கிறது என்பதை பற்றி நிறைய பேசியாச்சு. மேலும் லிபரல் ஜனனாயகம் சார்ந்த சந்தை பொருளாதாரத்திற்க்கும் இன்னும் 300 வயசு ஆகவில்லை.// பேசின எல்லா இடத்துலயும் 300 வருச முதலாளித்துவம் இன்னும் தொல்வியுறுவது ஏன் என்ற கேள்விக்கு பதில் சொல்லாதவர் நீர்… 🙂

          • விவாதிக்க என்றும் நான் தயங்கியதில்லை. ஆனால் மாற்று கருத்து ஒருவர் வைத்தால், உடனே அவரை அவன், இவன் என்று (இணையத்தில் மட்டும், நேரில் பேச தைரியம் இல்லாமல்) பேசுவது மிக கேவலமான, கோழைத்தனமான செயல். அதை தான் சொன்னேன். உமக்கு அது ‘விளங்கவே’ போவதில்லை. ஓடிப்போவது என்பதெல்லாம் உம் கருத்து. இப்படி சகிக்க முடியாமல் ஏசினால், ’ஓடிப்போகாமல்’ என்ன செய்வார்கள். உம்ம பக்கம் தான் ‘நியாயம்’ இருக்கு என்று நினைச்சுக்கிட்டு, மாற்றாறை இஸ்டத்து பேசினா, யாரும் உம்முடன் விவாதிக்க மாட்டார்கள் தான். ஆமா இத்தன பேசறியே நீ, நேரில் விவாதிக்க தயாரா ? இதே ’சொல்லாடல்களை’ நேரில் ஒருவரை பார்த்து பேசுவியா ? அதுவும் உன்னை பல வருடங்கள் மூத்தவரை பார்த்து ?

            • //ஆனால் மாற்று கருத்து ஒருவர் வைத்தால், உடனே அவரை அவன், இவன் என்று (இணையத்தில் மட்டும், நேரில் பேச தைரியம் இல்லாமல்) பேசுவது மிக கேவலமான, கோழைத்தனமான செயல். // ஏன் மீண்டும் மீண்டும் பொய்கள்? ஏட்கோ அரவிந்தன் மாற்றுக் கருத்துதான் வைத்தார் அசுரனும், பிறரும்தான் அவரை திட்டி விரட்டி விட்டோம் என்று பொய்? கேடுகெட்ட நிலையில் அம்பலமாகி ஓடிப் போனான் அரவிந்தன். அவன் ஓடக் கூடாது இங்கிருந்து எங்கள் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் என்றோம் நான், சுகுனா திவாகர் மற்றும் பிற நண்பர்கள்.

              //இதே ’சொல்லாடல்களை’ நேரில் ஒருவரை பார்த்து பேசுவியா ? அதுவும் உன்னை பல வருடங்கள் மூத்தவரை பார்த்து ?
              // பண்பில்லாச் சிறுவன் என்ற உமது கிழத்திமிருக்கான பதில்தான் எனது எதிர்வினை. அப்புறம் உங்க லிபரல் முதலாளித்ட்கு, சுத்ந்திரச் சந்தைக்கு எத்தனை வயசாகுட்குன்னு சொல்லிட்டு போயிருங..

              • அசுரன் : சுகுணா திவாகரும் எம் நண்பர் தான். ஆனால் அவர் அ.நீலகண்டனை என்றும் அவன் இவன் என்றெல்லாம் பேசமாட்டார். அரவிந்தன் பற்றி மேலே நீர் இட்ட முதல் பின்னூட்டத்தை பார்க்கவும். அதனால் தான் உம்மை பண்பில்லாத சிறிவன் என்றேன். உமக்கு என்ன ஒரு 28 வயசு இருக்குமா ? அரவிந்தன் 41 வயதானவர்.

                • //அதனால் தான் உம்மை பண்பில்லாத சிறிவன் என்றேன். உமக்கு என்ன ஒரு 28 வயசு இருக்குமா ? அரவிந்தன் 41 வயதானவர்.// கிட்லருக்கு இதவிட வயசு கூட. அதியமான் மாற்றுக் கருத்துக் கொண்டவர் ஆயினும் அவருக்கு மரியாதைக் கொடுப்பதையும், அரவிந்தன் போன்ற தேசத் துரோகிகளுக்கு மரியாதை கொடுக்காததையும் தயவு செய்து ஒப்பிடாதீர்கள்.

                  • //. உமக்கு என்ன ஒரு 28 வயசு இருக்குமா ? // ரொம்ப வருசமா எனக்கு 28ன்னே சொல்றீங்க அதுக்கு பெரிய நன்னி 🙂

                    • அதியமான் அங்கிள், ஆறு மாசம் முன்னால​ பாத்தமாரி அப்பிடியே இருக்காரே… என்ன​ இன்னும் கெளடு தட்டலய!!! அப்பவும் பேஸ்புக்கில​ உனக்கு வயசு காணதும்மா என்னய​ திட்டதுக்கிண்ணாரு… இப்ப உங்ககிட்டயும் அதே டோண். ஆமா உண்மையிலே இவரு ஒரு லிபரல் ஜனநாயகவாதிண்ணா, ஏன்யா இன்னும் கேட்டகேள்விக்கு பதில் சொல்லாம​ வண்டுமுருகன் மாரி ‘ஐ ம் 41 யு ர் 28’ ண்ணு அண்டம் (சாரி தொண்ட​) கிளிய கத்துறாரு…

                • //அவன் இவன் என்றெல்லாம் பேசமாட்டார்//.

                  அதியமான் நீங்கள் லிபட்டேரியனாக இருந்துகொண்டு பேச்சுரிமையை, கருத்துரிமையை மறுக்கிறீர்கள். தங்கையுடன் தாகம் தீர்ப்பது சரி என்பவனையெல்லாம் ஆதரிக்கும் நீங்கள் ஒரு…. யை அவன் இவன் என விளிப்பது தவறு என்று நீங்கள் கூறுவது தவறு ஆமாம்.

              • அரவிந்தன் தமிழ்மணத்திலிருந்து ஓடிப் போக காரணமாக இருந்த அவனது பொய்கள் கீழே உள்ளன. அவற்றை அம்பலப்படுத்தி கேள்வி கேட்ட பொழுது பதில் சொல்ல இயலாமல் ஓடிப் போனவன் இன்று தமிழ்ப்பேப்பரில் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்று செட்டில் ஆகி விட்டான்.

                ##

                ஐன்ஸ்டீனின் எத்த்ர் குறித்து ஒரு முழுப் பொய்யை/பூசணிக்காயை சோற்றில் மறைத்தவர். (ஐன்ஸ்டீன் எத்தர் இல்லை என்று சொல்லிவிட்டதாக பொய் சொன்னான் அரவிந்தன்)

                மாவோ செடிகளிலிடையே வர்க்க பேதம் பார்த்தார் என்று படு முட்டாள்தனமான ஒரு பொய்யை மிக தைரியமாக சொன்னவர்.

                சாதாரண விள்ம்பரப்படத்தின் மிகையான கற்பனையை கொண்டு ஒட்டுமொத்த சீனாவும் பொய் தேசம் என்று கட்டியமைக்கும் படு ஈனத்தனமான அறிவு நாணயமற்ற செயலில் ஈடுபட்டவர்.

                மாக்ஸிம் கார்க்கியை லெனின் கொலை மிரட்டல் செய்தார் என்று பொய் சொன்னவர்.
                (ரஷ்ய மொழிபெயர்ப்பில் ‘கீழே சென்று விடுவாய்’ என்ற அர்த்தத்தை ஒட்டி பல அர்த்தம் தரும் ஒரு வார்த்தையை அரவிந்தன் தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு கார்க்கியை லெனின் கொன்று விடுவதாகச் சொல்லி மிரட்டியதாக பொய் சொன்னான்)

                மேற்கோள்களை தவறான context-ல் தமக்கு சாதகமான முறையில் வெட்டி எடுத்துப் போட்டு பொய் தோரணங்களை கட்டியவர்.

                இயக்கவியல் பொருள் முதல்வாதம் குறித்து ஒரு அரிச்சுவடி கூட சொல்லாமல் நியூட்டானிய பொருள்முதல்வாதம் என்று புளுகியவர்.

                ஹிட்லரை ஊக்குவித்தவர் ஸ்டாலின் என்று பொய் சொன்னவர்.

                இது வரை பார்ப்னிய பயங்கரவாதத்தின் சித்தாந்த நிலைப்பாடு குறித்து நமது கேள்விகளுக்கு கள்ள மௌனம் சாதிக்கும் கயவர்.

                ##

  8. அம்பேத்கர் ஃபவுண்டேஷன்ஸ்//
    .
    .
    என்னால் சென்னை வர இயலாது!இவர்களை தொடர்பு கொள்ள எண் உள்ளதா?வெப்சைட் இணைப்பு கிடைக்குமா?(ஆன்லைனில் வாங்க முடியும் என்றாலும் சரி).வினவு உதவுங்கள்

  9. முதன்முதலாகப் புத்தகம் வெளியிட்ட எங்கள் ப்திப்பக நூலையும்(வரலாற்றில் கிறிஸ்தவம்- எங்கெல்ஸ்)தேடிப் பட்டியல் இட்டதற்கு வினவுக்கு நன்றிகள்

  10. தோழர் மதிமாறனின் புத்தகங்கள் பற்றியும் குறிப்பிடலாம்…..அபசகுனம் பதிப்பகம்….

  11. அதியமான் சார் ரொம்ப டென்சன் ஆனீங்க….ஆனா அசுரனின் கேள்விக்கு பதிலையே காணோம்…..

  12. மதத்தைப் பற்றி மார்க்சியம், சமூக வளர்ச்சியின் அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பற்றி மார்க்சியம். ஆசிரியர்- அ.கா ஈஸ்வரன், செந்தழல் பதிப்பகம்.

Leave a Reply to உண்மைத்தோழன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க