Monday, June 27, 2022
முகப்பு வாழ்க்கை பெண் குருதியில் மலர்ந்த மகளிர் தினம்: மார்ச் 8 திருச்சியில் கூட்டம்!

குருதியில் மலர்ந்த மகளிர் தினம்: மார்ச் 8 திருச்சியில் கூட்டம்!

-

குருதியில் மலர்ந்த மகளிர் தினம்: மார்ச் 8 திருச்சியில் கூட்டம்!

சமூக விடுதலையே! பெண் விடுதலை!

குருதியில் மலர்ந்த அனைத்துலக பெண்கள் தினம்!

அரங்கக் கூட்டம்:
கவிதை, நாடகம், புரட்சிகர கலைநிகழ்ச்சி

நாள்: 8.3.2012, வியாழன்- மாலை 6 மணி
இடம்: கைத்தறி நெசவாளர் கல்யாண மண்டபம்,

தலைமை: தோழர் இந்துமதி, செயலர், பெ.வி.மு, திருச்சி.

சிறப்புரை: ‘மறுகாலனியாக்கச் சூழலில் பெண்கள் மீதான அடக்குமுறையும் அவர்களது விடுதலையும்’

– கவிஞர் தோழர் துரை.சண்முகம்
மக்கள் கலை இலக்கியக் கழகம், சென்னை.

‘பெண்கள் சட்டத்தின் முன் சமமானவர்களா?’

தோழர் மீனாட்சி, உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
மனித உரிமை பாதுகாப்பு மையம், சென்னை.

பெ.வி.மு-வின் ‘நவீன அடிமைகள்’ நாடகம், ம.க.இ.க மையக் கலைக்குழுவின்  புரட்சிகர கலை நிகழ்ச்சி நடைபெறும்.

கூட்ட ஏற்பாடு: பெண்கள் விடுதலை முன்னணி, திருச்சி.

__________________________________

உழைக்கும் பெண்கள் தமது அடிப்படை உரிமைக்காக போராடி இரத்தம் சிந்திய நாள்!

அரசியல், சமூக, பொருளாதார உரிமைகள் பெறவேண்டி போராடச் சொல்லும் பெண்கள் தினம் மார்ச் -8. இந்த உண்மை மறைக்கப்பட்டு, கோலப்போட்டி, சமையல் போட்டி, அழகிப்போட்டி என பெண்களின் சிந்தனை திட்டமிட்டு திசை திருப்பப்பட்டுள்ளது. இன்று காதலர் தினம் போல பெண்களுக்கு ஏதோ ஒரு பரிசு கொடுத்து வாழ்த்துக்கூறுவது என்று நிறுவனமயப்படுத்தப் பட்டிருக்கிறது.

பெண் வயிற்றில் பிறந்து, பெண்ணால் வளர்க்கப்பட்டு, பெண்ணோடு வாழ்பவர்கள்தான் எனினும், பெண்ணின் துயரங்களையும், விருப்பங்களையும், உணர்வுகளையும் ஆண்கள் தெரிந்து கொள்வதில்லை. தெரிந்து கொள்ள இந்த ஆணாதிக்க சமூகம் விரும்புவதுமில்லை.

இந்த நிலையை மாற்றி பெண்ணுரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மார்ச் -8, 1857இல் நியூயார்க்கில் உழைக்கும் வர்க்கப் பெண்களின் அமைப்புகள் தோன்றி போராட்டங்களை முன்னெடுத்தன. அம்மாநாட்டில் இயற்றப்பட்ட புரட்சிகர தீர்மானங்களும், சட்டத்திருத்தங்கள் மூலமான உரிமைகளையும் முன் வைத்து போராட்டங்கள் நடத்தப்பட்டது. உழைக்கும் பெண்கள் இரத்தம் சிந்தி வென்றெடுத்த இந்த உரிமைகள்தான் இன்று பல நாடுகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு சட்டமாக்கப் பட்டிருக்கின்றன. ஆனலும் இன்றைய நம் பெண்களுக்கு போராடி வென்ற பெண்ணிய உரிமைகள் இல்லாமல் போய்விட்டது ஏன்?

பொருளாதார விடுதலைதான் பெண்விடுதலையின் முதல்படி. அப்படிப் பார்த்தால் முன்னெப்போதைக் காட்டிலும் பெண்கள் படிப்பதும், வேலைக்குப் போவதும் அதிகரித்திருக்கிறது. இந்தப் பொருளாதார சுதந்திரம் ஒரு பெண் என்ற முறையில் கூடுதல் சுதந்திரத்தை இவர்களுக்கு வழங்கியுள்ளதா? அல்லது பெண்ண்டிமைத்தனம் புதிய வடிவங்களில் இவர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறதா? இந்த அடிமைத்தனத்தை இன்றைய தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்கின்ற மறுகாலனியாக்கச்சூழலில் பெண்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள்? என்ற கேள்விகளுக்கு விடை தேடுவோரையும், பெண்கள் விடுதலையிலும் சமூகவிடுதலையிலும் அக்கறையுள்ள அனைவரையும் அரங்குக்கூட்டத்திற்கு அழைக்கிறோம்.

பெண்கள் விடுதலை முன்னணி

தொடர்புக்கு: தோழர் நிர்மலா, பெ.வி.மு, திருச்சி. செல் 8012421471

_______________________________________________________________

– பெண்கள் விடுதலை முன்னணி, திருச்சி

_______________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 1. கூட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள். பத்திரிக்கை முதல் தொலைகாட்சி வரை அனைத்து ஊடகங்களிலும் பெண்களை முன்னிறுத்தி பாலியல் வக்கிரங்களை கையாளும் போக்கை எதிர்த்து தோழியர்கள் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்.

 2. பெண்ணை பொருளாகவும், உணர்வுடன் இயங்கும் இயந்திரமாகவும் பார்க்கும் உலகுக்கு, பெண் என்பவள் உணர்வுள்ள ஒரு உயிர்தான் என்பதையே இன்னும் போராடிதான் உணர்த்த வேண்டியுள்ளது. போராட்டம் வெல்லட்டும்.

 3. இன்றைய சூழலில் பொருளாதார சுதந்திரத்தை அதிகப்படியான பெண்கள் பெற்ற பின்பும் அவர்களுக்கு ,அந்த பொருள்களின் மீதான(பணம்) உரிமை கிடைக்கவில்லை.கணவனின் அனுமதியின்றி எந்த ஒரு பெண்ணாலும் தன்னுடைய சம்பளத்தை பயன்படுத்த முடியாது.

  மேலும் பன்னாட்டு கம்பெனிகளுக்கு குறைந்த கூலியில் கொத்தடிமைகளாக வேலை செய்ய கவர்ச்சியான ஆட்கள் தேவை.அதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்தது பெண்களை.எனவே,தான் பல பன்னாட்டு கம்பெனிகள் பெண்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அழிக்கின்றனர். இதை பெண்களின் முன்னெற்றம் என தம்பட்டம் அடிக்கும் பெண்ணிய்வாதிகள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

  ண்று பொருளாதார முன்னெற்ராM ஏண்ரா Pஏறீள்

 4. குஷ்பு போன்ற நடிகைகள், சுயஉதவிக் குழுக்களில் உள்ள புரோக்கர் தலைவிகள், முதலாளிகளின், அரசாங்க பதவியில் உள்ளோர்களின் மனைவிமார்கள் மகளீர் சங்க தலைவியாக வலம்வரும் இக்கால சூழலில் உழைக்கும் பெண்களால் நடத்தப்படும் இந்த அரங்கக்கூட்டம் கலங்கரை விளக்கமாகட்டும்.

 5. முஸ்லீகளில் ஒருவர் நான்கு மனைவியை மணந்து கொள்ளலாம் என்று இந்திய சிவில் சட்டம் கூறுகிறது. இதனால் முஸ்லீம் பெண்கள் அவமானப்ப்டுகிரார்கள். இதனை ஒழிக்க அனைவருக்கும் ஒரே சட்டம் கொண்டுவர தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ஆண் ஆதிக்கத்தில் இருந்து இவர்களை விடுவிக்க வேண்டும். பல்வேறு தொழில்களிலும் அவர்கள் சுய தேவையை பூர்த்தி செய்ய அனுமதிக்க வேண்டும். உங்களால் துணிந்து இது போன்ற கருத்துக்களை சொல்வீர்களா என்பதுதான் தெரியவில்லை. இதனால் உங்களுக்கு பாதிப்புகள் ஏற்படலாம். அச்சம் தவிர்!!!

  நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் அஞ்சாத தன்மையும் அனைத்துப் பெண்களுக்கும் வேண்டும்.

  • ஆனால் இந்தியாவில் பலதாரமணம் செய்தவர்களின் விகிதாசாரம் முஸ்லிம்களை விட மற்றவர்களே அதிகம்

    • நானும் எனக்கு தெரிஞ்ச வரைக்கும் ரெண்டு பொண்டாட்டி கட்டுன பாய்மார்கள இருக்காங்களான்னு தேடிப்பாக்குறேன்.ஒருத்தரும் காணோம். முத சம்சாரம் செத்து போய் ரெண்டாவது பண்ண ஒன்னு ரெண்டு பேர் இருக்காங்க.சட்டவிரோதம் ங்கிற நிலைமையிலும் ரெண்டாவது மூணாவதுன்னு தள்ளிக்கிட்டு வந்து குடும்பம் நடத்துற ஆட்கள விட சட்டம் எடம் கொடுத்தாலும் பண்ணாம இருக்கற பாய்ங்க பரவாயில்ல போல இருக்கே.

   • அப்படியானால் இந்திய முழுவதற்கும் ஒரே சிவில் சட்டம் கொண்டுவர ஏன் தடுக்கி கின்றீர்கள்?

    • முஸ்லிம் சிவில் சட்டத்தை இந்திய பொது சிவில் சட்டமாக கொண்டு வருவதை நாங்கள் தடுக்கவில்லை.

     • முஸ்லீம் சட்டத்தை சிவில் சட்டமாக்க வேண்டுமாம்!! ஏன் இந்துக்கள் சட்டத்தை சட்டமாக்கக்கூடாது? இந்திய மத சார்பற்ற நாடு என்பதை மறந்து பேசாதீர்கள். ஒரே “இந்திய சிவில் சட்டம்தான்” வேண்டும். முஸ்லீம்களில் பலர் பலதார மனம் செய்யவில்லைதான். அப்படியெனில் எதற்காக தனி சட்டம்!

      • Natrayan,

       It is a different debate.Independent civil laws ll make Muslims sit in their own separate worlds and wont integrate with the society.I feel if Muslims want their civil law,they should get their criminal law also,else follow the rules of the game.I wish all of these went to Pakistan and Bangladesh to avoid such problems now.Unnecessary.

       • வினவு வில் பிரச்னைகள் வருவதால் நாங்கள் பங்களா தேசத்திற்கும் பாக்கிஸ்தானுக்கும் செல்ல வேண்டுமாம் .இந்த பிரச்சனைகள் எல்லாம் வேண்டாம் .ஒரு ஆய்வு செய்யுங்கள் .முஸ்லிம் தனியார் சட்டத்தினால் பெண்கள் அதிகமாக பாதிக்கப் பட்டுள்ளனரா? அல்லது மற்ற சட்டங்களினால் பெண்கள் அதிகமாக பாதிக்கப் பட்டுள்ளனரா?என்று .

         • இந்தியாவில் பிரச்னை என்று வினவு வில் சொல்லுகிறார்கள் .சங்க குடும்ப ஊடகங்கள் சொல்லுகின்றன.மற்றபடி இந்தியாவில் அன்றாட அத்தியாவாசியங்களு கான தீர்க்க முடியாத பிரச்சனைகள் நிறையவே உள்ளன.

      • //முஸ்லீம் சட்டத்தை சிவில் சட்டமாக்க வேண்டுமாம்!! ஏன் இந்துக்கள் சட்டத்தை சட்டமாக்கக்கூடாது? இந்திய மத சார்பற்ற நாடு என்பதை மறந்து பேசாதீர்கள். ஒரே “இந்திய சிவில் சட்டம்தான்” வேண்டும். முஸ்லீம்களில் பலர் பலதார மனம் செய்யவில்லைதான். அப்படியெனில் எதற்காக தனி சட்டம்!///
       நாட்ராயன் ,தப்பாக எடுத்துக் கோலாதீர்கள்.நீங்கள் பொது சிவில் சட்டம் கேட்பதால் யாருக்கும் பிரச்னை இல்லாதவாறு முஸ்லிம் சட்டத்தையே பொது சிவில் சட்டமாக்க சொன்னேன்.”எங்கள் சட்டம் எங்களுக்கு: உங்கள் சட்டம் உங்களுக்கு: பொது சட்டம் எதற்கு” ?என்பதே எனது கேள்வி.இந்துக்கள் சட்டம் என்பது நமது சட்டமேதைகள் இயற்றியதுதான்.

 6. ஜாதி மத இன மொழி பிராந்திய அரசியலை தவித்து துணிந்து செயல்படுங்கள்!!! அனைத்து மக்களும் ஒருவரே. சாதிவெறியை கிளப்பாதீர்கள்! இது உங்கள் இயக்கம் வளர்ச்சியை பாதிக்கும்.

 7. […] இதனையொட்டி திருச்சியில் நாளை பெவிமு சார்பில் அரங்குக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. […]

 8. முஸ்லீம் பெண்கள் “பர்த” போட்டுக்கொண்டுதான் வெளியே நடமாடுகிறார்கள். இவர்களுக்கும் சுதந்திரம் வாங்கிக்கொடுங்கள்

  • //ஜாதி மத இன மொழி பிராந்திய அரசியலை தவித்து துணிந்து செயல்படுங்கள்!!! அனைத்து மக்களும் ஒருவரே. சாதிவெறியை கிளப்பாதீர்கள்! இது உங்கள் இயக்கம் வளர்ச்சியை பாதிக்கும்.//
   பெண்கள் விடுதலை முண்ணனியின் மகளிர் தினக் கூட்ட அறிவிப்பிற்கும் தங்களது கருத்துக்கும் கிஞ்சித்தேனும் தொடர்பிருக்கிறதா? ஏன் பாப்பானுங்க மந்திரம் ஓதுற மாதிரியே, அப்ப அப்ப வந்து ஓதிட்டே போற?
   நீர் யென்ன பூ நூல் பார்ட்டியா? எப்ப பாரு, முஸ்லீம் பத்தியே பேசுரீரே?
   உங்க ஆத்துப் பொண்ணுங்கள நீர் எப்படி அய்யா நடத்துறேள்! அதை முதல்ல சொல்லும் எமக்கு! அப்புறம் அடுத்தாத்து சங்கதிய பேசிக்கிடவோம்!

   //முஸ்லீகளில் ஒருவர் நான்கு மனைவியை மணந்து கொள்ளலாம் என்று இந்திய சிவில் சட்டம் கூறுகிறது. இதனால் முஸ்லீம் பெண்கள் அவமானப்ப்டுகிரார்கள். இதனை ஒழிக்க அனைவருக்கும் ஒரே சட்டம் கொண்டுவர தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.//
   தீர்மானம் கொண்டுவருவது இருக்கட்டும், இந்த சங்கதி உங்க ஆயிரம் பொண்டாட்டிகாரன் தசரதனுக்கும் ஊரெல்லாம் பொண்டாட்டி வச்சிருக்கிற கிருஷ்ணனுக்கும் தெரியுமோ, என்ன? எதுக்கும் அவாள்ட்ட கன்சல்ட் பண்ணிட்டு கமெண்ட் போடுங்கோ! அவா அப்ஜெக்சன் பண்ண போறா?

    • \\ ஊரெல்லாம் பொண்டாட்டி வச்சிருக்கிற கிருஷ்ணனுக்கு//

     \\4000 varushathukku munna irunthathum//

     அப்படின்னா 4000 வருசத்துக்கு முன்னால ஸ்திரீ லோலனா இருந்த ஜென்மங்களதா இப்போ கடவுள் அவதாரம்னு கும்புடுறீங்க.

     • raman senjatha seyyi,krishnan sonnatha seyyi- oru aalu kitta positivesum irukku,negativesum irukku,adha thaandi thaan nalladha eduthukkarom.perfect idealist ellam yaarum vara maatanga.

      And moreover,in his time it was no big deal.The girls were okay with it.

   • உங்களின் இந்த கருத்து பரிதாபமாக உள்ளது. முஸ்லீம்களுக்கு வக்காலத்து வாங்குவதிலேயே கண்ணும் கருத்துமாக உள்ளீர். இதற்க்கு பல்வேறு புராண நிகழ்ச்சிகளை உதாரணம் காட்டுகிறீர்கள். தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களைப் பாருங்கள். அதனை திருத்தி முஸ்லீம் பெண்களுக்கு உரிமை பெற்றுக் கொடுங்கள். சம்பந்தம் இல்லாத கருத்துக்களை பதுவு செய்து உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். குறிப்பாக “பர்த” இல்லாத பெண் உலகத்தை உருவாக்குங்கள். முடியாவிட்டால் அனைவரும் கண்டிப்பாக பர்த அணியும்படி முடிவுகள் எடுத்து அதனை உங்கள் குடும்பத்திலிருந்து செயல் படுத்துங்கள்.

  • அவ்வாறெனின் ஆண் ,ஜட்டி,பனியன் ,சட்டை கோட் ,பேன்ட் ,கழுத்தை நெருக்கும் டை .கால் கூட தெரியாமல் சூ,சாக்ஸ் அணிகிறானே அதுவும் சுதந்திரம் இல்லாமைதானா?

Leave a Reply to subramanian பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க