privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஒரு வரிச் செய்திகள் - 26/09/2012

ஒரு வரிச் செய்திகள் – 26/09/2012

-

செய்தி : பிரதமர் மன்மோகன் சிங் அரசுக்கு எந்த ஆபத்துமில்லை, மத்திய அரசு நிலையாக உள்ளது, அரசின் பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு காங்கிரஸ் காரிய கமிட்டி முழு ஆதரவு தெரிவித்துள்ளதாக சோனியா காந்தி தெரிவித்தார்.

கமெண்ட் – மத்திய அரசின் நடவடிக்கைகளால் மக்களுக்குத்தான் ஆபத்து!

*

செய்தி : நீர்ப்பாசனத் திட்டத்தில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, மகாராஷ்டிர அரசின் துணை முதல்வர் அஜித் பவார் ராஜினாமா செய்துள்ளார்.

கமெண்ட் – கிரிக்கெட் தொழிலுக்கிடையில் வேளாண் துறை மந்திரியாக இருக்கும் சரத்பவாரின் மருமகன் அஜீத் பவார் குடும்ப கவுரவத்தை காப்பாற்றி விட்டார். மாமா விவசாயத்திற்கு மந்திரி, மருமகன் நீர்ப்பாசனத்திற்கு மந்திரி என்றால் விதர்பா விவசாயிகள் ஏன் தற்கொலை செய்ய மாட்டார்கள்?

*

செய்தி : காவிரி நதியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தினமும் 2 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்துக்கு உத்தரவிட வேண்டுமென்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!

கமெண்ட் –  மனுவை வாங்கி தினமும் கால் டிஎம்சி நீரை திறக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் உத்திரவிட அதை கர்நாடகம் மறுக்க அதை மறுத்து தமிழக அரசு மீண்டும் மனு தாக்கல் செய்ய…. உலகம் உருண்டைதானே?

*

செய்தி :  சென்னையில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனின் 80வது பிறந்த நாள் விழாவில் அக்கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா பேசும்போது, “உலக கம்யூனிஸ்ட் கட்சிகளில் இன்றுள்ள அறிவாளிகளில் தா.பாண்டியனும் ஒருவர்” என்று பாராட்டினார்.

கமெண்ட் –  முழு உலகிலும் நம்பர் ஒன்றில் இடம்பெறவேண்டிய ஜோக் இதுதான்! தா.பாவெல்லாம் கம்யூனிஸ்ட் அறிவாளியாக இருக்கும் பட்சத்தில் உலகில் எங்குமே புரட்சி சாத்தியமில்லை.

*

செய்தி : சென்னை அருகே முட்டுக்காட்டில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆக்கிரமித்திருந்த அரசு நிலத்தை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மீட்டனர்.

கமெண்ட் – ப.சிதம்பரத்தின் ஆக்கிரமிப்பில் இருக்கும் மத்திய இந்தியாவை மீட்க மாவோயிஸ்டுகளும், பழங்குடி மக்களும் போராடி வருகின்றனர்.

*

செய்தி :  மொத்த மின் உற்பத்தியில் மூன்றில் ஒருபங்கு சென்னைக்கே… 31 மாவட்டங்களுக்கு 5000 மெகாவாட்; சென்னைக்கு 2500 மெகாவாட்.

கமெண்ட் – அமைச்சர்கள், தலைவர்கள், நடிகர்கள், முதலாளிகள் வாழ்வதால் “வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது!”

*

செய்தி : கூடங்குளத்தில் அமைதியான சூழல் உருவானவுடன், அங்கு அரசு அறிவித்துள்ள ரூ.500கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கும் பணிகள் தொடங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

கமெண்ட் – கூடங்குளத்தில் அணு உலை மூடும் வரை அமைதியான சூழல் வராது என்பதால் அரசுக்கு 500 கோடி மிச்சம்தான்.

*

செய்தி : சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் இந்திய அரசின் முடிவு துணிச்சலானது என்று அமெரிக்கா பாராட்டி உள்ளது.

கமெண்ட் – இதையே ”நமது அடிமைகள் திறமைசாலிகள் என்ன நாக்குதான் கொஞ்சம் நீளம் அநியாயத்துக்கு நக்கித்தொலைக்கிறார்கள்…” என்றும் சொல்லலாம்