Friday, May 2, 2025
முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்கோவிலை கொள்ளையடிப்பது ஆத்திகரா, நாத்திகரா?

கோவிலை கொள்ளையடிப்பது ஆத்திகரா, நாத்திகரா?

-

கோயில்-கொள்ளை1983-ல் காசி விசுவநாதர் கோவிலில் சிவலிங்கத்தின் அடித்தளத்தில் இருந்த 2 கிலோ தங்கத்தை சுரண்டி திருடியது யார்? கூடவே நாராயணக் கடவுளின் 4 இலட்சம் மதிப்புள்ள வெள்ளி கிரீடத்தை சுருட்டியது யார்? இவ்வளவிற்கும் இது ஆறாவது திருட்டாம். இந்தக் கோவில் அப்போது நான்கு பார்ப்பனர்கள் கையில் இருந்திருக்கிறது. யார் உரிமையாளர் என்ற வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்தது. இத்தகைய திருட்டில் கோவிலில் வேலை செய்த பார்ப்பன அர்ச்சகர்களே ஈடுபட்டது பின்னர் வெளியுலகிற்கு தெரிய வந்தது.

எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் திருச்செந்தூர் உண்டியல் விவகாரத்தில் கொலையே நடந்திருக்கிறது. அறங்காவலர் குழுவினரே கொள்ளை அடித்திருக்கின்றனர். 1993 அக்டோபரில் ஒன்றேகால் இலட்சம் மதிப்புள்ள வைரத்தொங்கல் சிதம்பரம் கோவிலில் களவு போனது. திருடன் 300 தீட்சிதர்கள் மத்தியில்தான் இருக்கவேண்டும் என்று ஒரு தீட்சிதரே அறிக்கை வெளியிட்டுள்ளார்.

95-ம் ஆண்டில் குமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் ஒரு  கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை போனது. கிருஷணன் நம்பூதிரி எனும் பார்ப்பன அர்ச்சகர் கைது செய்யப்பட்டார். இப்படி தமிழகம் முழுவதிலும் உள்ள பல கோவில்களில் கொள்ளை நடந்திருப்பதும் அதில் அந்தந்த கோவில் அர்ச்சகர்களும், அறங்காவலர்களும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் தொகுத்து “உண்மை” இதழில் கவிஞர் கலி. பூங்குன்றன் ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருக்கிறார். படித்துப் பாருங்கள்! கடவுள் இல்லை என்பது உறுதியாகத் தெரிந்தும் அதை மறுத்து நாடகமாடும் ஆத்திகர்கள் குறிப்பாக அர்ச்சகர்கள்தான் இந்த திருட்டில் முக்கிய குற்றவாளிகள். நாத்திகர்கள் எவரும் எங்கேயும் இப்படி கோவில் கொள்ளையில் ஈடுபட்டதில்லை.  இதிலிருந்து தெரியவரும் உண்மை என்ன?

படியுங்கள்: