Friday, September 25, 2020
முகப்பு மறுகாலனியாக்கம் ஊழல் கோவிலை கொள்ளையடிப்பது ஆத்திகரா, நாத்திகரா?

கோவிலை கொள்ளையடிப்பது ஆத்திகரா, நாத்திகரா?

-

கோயில்-கொள்ளை1983-ல் காசி விசுவநாதர் கோவிலில் சிவலிங்கத்தின் அடித்தளத்தில் இருந்த 2 கிலோ தங்கத்தை சுரண்டி திருடியது யார்? கூடவே நாராயணக் கடவுளின் 4 இலட்சம் மதிப்புள்ள வெள்ளி கிரீடத்தை சுருட்டியது யார்? இவ்வளவிற்கும் இது ஆறாவது திருட்டாம். இந்தக் கோவில் அப்போது நான்கு பார்ப்பனர்கள் கையில் இருந்திருக்கிறது. யார் உரிமையாளர் என்ற வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்தது. இத்தகைய திருட்டில் கோவிலில் வேலை செய்த பார்ப்பன அர்ச்சகர்களே ஈடுபட்டது பின்னர் வெளியுலகிற்கு தெரிய வந்தது.

எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் திருச்செந்தூர் உண்டியல் விவகாரத்தில் கொலையே நடந்திருக்கிறது. அறங்காவலர் குழுவினரே கொள்ளை அடித்திருக்கின்றனர். 1993 அக்டோபரில் ஒன்றேகால் இலட்சம் மதிப்புள்ள வைரத்தொங்கல் சிதம்பரம் கோவிலில் களவு போனது. திருடன் 300 தீட்சிதர்கள் மத்தியில்தான் இருக்கவேண்டும் என்று ஒரு தீட்சிதரே அறிக்கை வெளியிட்டுள்ளார்.

95-ம் ஆண்டில் குமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் ஒரு  கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை போனது. கிருஷணன் நம்பூதிரி எனும் பார்ப்பன அர்ச்சகர் கைது செய்யப்பட்டார். இப்படி தமிழகம் முழுவதிலும் உள்ள பல கோவில்களில் கொள்ளை நடந்திருப்பதும் அதில் அந்தந்த கோவில் அர்ச்சகர்களும், அறங்காவலர்களும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் தொகுத்து “உண்மை” இதழில் கவிஞர் கலி. பூங்குன்றன் ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருக்கிறார். படித்துப் பாருங்கள்! கடவுள் இல்லை என்பது உறுதியாகத் தெரிந்தும் அதை மறுத்து நாடகமாடும் ஆத்திகர்கள் குறிப்பாக அர்ச்சகர்கள்தான் இந்த திருட்டில் முக்கிய குற்றவாளிகள். நாத்திகர்கள் எவரும் எங்கேயும் இப்படி கோவில் கொள்ளையில் ஈடுபட்டதில்லை.  இதிலிருந்து தெரியவரும் உண்மை என்ன?

படியுங்கள்:

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. // இவற்றையெல்லாம் தொகுத்து “உண்மை” இதழில் கவிஞர் கலி. பூங்குன்றன் ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருக்கிறார். படித்துப் பாருங்கள்! கடவுள் இல்லை என்பது உறுதியாகத் தெரிந்தும் அதை மறுத்து நாடகமாடும் ஆத்திகர்கள் குறிப்பாக அர்ச்சகர்கள்தான் இந்த திருட்டில் முக்கிய குற்றவாளிகள். நாத்திகர்கள் எவரும் எங்கேயும் இப்படி கோவில் கொள்ளையில் ஈடுபட்டதில்லை. இதிலிருந்து தெரியவரும் உண்மை என்ன? //

  தெரியவரும் உண்மை என்னன்னா, ஒரு பார்ப்பான் திருடினால் இன்னோரு பார்ப்பான் அம்பலப்படுத்திவிடுவான்.. ஆத்திகத் திருட்டை அம்பலப்படுத்துவது ஆத்திகர்களே..

  கவிஞர் கலி.பூங்குன்றன் பார்ப்பான் மேல் பாயுமுன் எண்ணிப்பார்க்க வேண்டியது பெரியார் ராமசுவாமிக்கு சொந்தமான சொத்துக்களை..

  http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=9691:2010-06-22-12-01-51&catid=1121:10&Itemid=391

  • இதனால் தாங்கள் சொல்ல வருவது??

   “பார்ப்பான் திருடினால் இன்னோரு பார்ப்பான் அம்பலப்படுத்திவிடுவான்.. ஆத்திகத் திருட்டை அம்பலப்படுத்துவது ஆத்திகர்களே” — Reason is, everyone is trying to loot but when other guy successfully executes it, due to incompetency they open up the matter in public. These discussed matters came out to public, how many incidents darkened by mutual understanding and sharing between them; your GOD only knows.

  • என்ன பேசுனாலும் அர்ச்சக பாப்பானின் திருட்டை மறைக்க முடியாது. //ஒரு பார்ப்பான் திருடினால் இன்னோரு பார்ப்பான் அம்பலப்படுத்திவிடுவான்..// – தில்லை தீட்சித பார்பனர்களின் திருட்டை அம்பலபடுதியது அரசு.
   திருட்டு மட்டும்மா கில்மாலாம் கூட நடக்குது கோவிலுக்குள்ளேயே !

 2. I dont think Krishnan Namboodiri/Deekshitar is guilty.

  And the Aranilai thurai is full of atheists and why dont u mention subramanian pillai,the trustee of the tiruchendur temple who was killed and also the namboodiri of adikesava perumal temple who commited suicide.

  Basically it is the atheists who loot the temple treasuries.

 3. // Reason is, everyone is trying to loot but when other guy successfully executes it, due to incompetency they open up the matter in public. These discussed matters came out to public, how many incidents darkened by mutual understanding and sharing between them; your GOD only knows.//

  so whenever someone discloses / exposes any such crime, you can suspect zealousy / failed bargains as well..!

 4. இதற்கு என்ன கமெண்ட் எழுதுவது???..

  ம்.ம். நன்றாக சாப்பிட்டு நன்றாக் வயிரை வளர்க்கட்டும். விடுங்கள். வேறு என்ன செய்வது? நம் மக்கள் தான் மேலும் மேலும் கொண்டு கொட்டத் தயாராக இருக்கிறார்களே!!!!

 5. When omnipotent God is not able to protect His own property,how He is going to protect His devotees?In Thirupathi also,the thief is reinstated to continue his loot.For Harikumar”s information,the thief is not an atheist.If you want I will tell you the name and designation of this thief.

 6. Anyone who steals in general and especially the temple wealth can never be a theist.

  Devotees have to protect themselves,nobody here is hoping for divine intervention for things that do not need divine intervention.

  Religion is there to discipline the mind,not to prove a point to anyone.

 7. உள் ஆட்கள் துணையின்றி எந்த திருட்டையும் செய்ய முடியாது! அதில் அர்ச்சகர்களும் விதிவிலக்கல்ல! அவர்களுக்கு கோவில் சொத்துக்கள் எளிய இலக்கு!

  ஆமாம்..அர்ச்சகர்கள் எல்லோரும் ஆத்திகர்கள் என்று எப்படி சொல்வது? பெரும்பாலான அர்ச்சகர்களுக்கு “கடவுள் பயம்” விட்டுப் போனது..போனதுதான்!

  • //அர்ச்சகர்கள் எல்லோரும் ஆத்திகர்கள் என்று எப்படி சொல்வது? //
   ஆனா எல்லா அர்ச்சகனும் பாப்பார புள்ளைக தான.

 8. Neenga enna solla vareenga,kolai mirattal engira vaarthaya neenga kelvi pattadhe illaya,arainila thuraye archagarukku protection kudukkalenna appuram avuru enna seivaaru.

  Uyir mela yaarukku thaan aasai illa.

  • hmm so no fear on GOD, only fear on life. when there is a life threat then GOD goes to 2nd place 🙂
   So these POOSARIs(archahar) clearly know GOD will not protect them or save them. they have to save their life by themself by allowing looting, isnt it?

 9. மனிதன் ! ஒரு சிறின்ப பிரானி, ஒரு பொருளாதார மிருகம்,ஒரு நாகரீகம் அடைந்த விலங்கு,இது உண்மைதானோ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க