privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திதமிழகமெங்கும் நவம்பர் புரட்சி தினக் கொண்டாட்டங்கள்!

தமிழகமெங்கும் நவம்பர் புரட்சி தினக் கொண்டாட்டங்கள்!

-

நவம்பர்-7-விழா

மாருதி, ஹுண்டாய் ஆலைகளிலிருந்து இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ், போர்ச்சுக்கல் முதல் ஏகாதிபத்தியத்தின் கோட்டையான வால் ஸ்ட்ரீட் வரை பல லட்சக்கணக்கான மக்கள் திரள் திரளாக வீதிகளில் இறங்கி முதலாளித்துவம் இனி ஆளத்தகுதியற்றதாகிவிட்டது என்று கூறி கலகத்தில் ஈடுபடுகிறார்கள். தொன்னூற்று ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு  ரசிய மக்களும் முதலாளித்துவம் ஆளத்தகுதியற்றது என்று கூறி அதற்கு புதைகுழி வெட்டி மண்ணைத் தள்ளி மூடினார்கள் !

அது தான் உலகையே உலுக்கிய ரசியப் புரட்சி. உலகிற்கே விடிவெள்ளியாக திகழ்ந்த அந்த ரசியப் புரட்சி நாளை நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகளான மக்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமிழகம் முழுவதும் தாங்கள் இயங்குகின்ற அனைத்து பகுதிகளிலும் சிறப்பான முறையில் கொண்டாடினர். ஒவ்வொரு ஆண்டும் அரங்கு நிறைந்த தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் இதர பிரிவு உழைக்கும் மக்களின் பங்கேற்போடும் இவ்விழா நடைபெறும்.

சென்னை நிகழ்ச்சிக்கு பு.மா.இ.மு சென்னைக் கிளைச் செயலர் தோழர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். இன்று தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும் மறுகாலனியாக்க கொள்கைகளின் விளைவாக உழைக்கும் மக்களின் அடிப்படை உரிமைகள் அனைத்தும் சிறிது சிறிதாக மறுக்கப்பட்டு வருகின்றன. மக்களும் அதற்கெதிராக பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். மக்களின் துன்ப துயரங்களுக்கெல்லாம் முடிவு கட்ட வேண்டுமெனில் அழுக்குச்சட்டைகளும் அரசாள முடியும் என்று முரசு கொட்டிய ரசிய புரட்சியிலிருந்து அர்ப்பணிப்பு தியாகத்தை வரித்துக்கொண்டு நமது நாட்டிலும் ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்திக்காட்ட வேண்டும் என்று கூறி தனது தலைமை உரையை முடித்தார்.

அடுத்ததாக கூடங்குளம் போராட்டத்தில் போராட்டக்காரர்களுக்கு துணை  நின்ற மனித உரிமை பாதுகாப்பு மைய தோழர்களின் அனுபவத்தை  ம.உ.பா.மை தோழர் சக்தி சுரேஷ் விளக்கினார். அமெரிக்க ரசிய பனிப்போரின் போது இந்தியாவை தன் பக்கம் வைத்துக்கொள்ள ரசியா கொண்டு வந்த அணு உலைக்கு எதிராக கூடங்குளம் மக்கள் அப்போதிருந்தே போராடி வருகின்றனர். ஆனால் புகுஷிமாவுக்கு பிறகு தான் அந்த போராட்டம் புதிய எழுச்சியை எட்டியது. அதன் பிறகு அவர்களுடைய வாழ்க்கையே போராட்டமாக மாறியது. அந்த போராட்டம் அப்பகுதி இளைஞர்களிடமிருந்த விட்டேத்தித்தனத்தை ஒழித்துக்கட்டி அவர்களை நாட்டுப் பற்றுமிக்க போராளிகளாக்கியிருப்பதையும், சாதி ரீதியாக பிரிந்து கிடந்த இடிந்தகரை, கூடங்குளம் மக்களின் பலவீனத்தை பயன்படுத்தி போராட்டத்தை சீர்குலைக்க நினைத்த போலீசுக்கும், அதிகாரவர்க்கத்துக்கும் கூடங்குளம் மக்கள் செருப்படி கொடுக்கும் விதமாக நடந்து கொண்டது இரு பகுதி மக்களையும் எப்படி ஐக்கியப்படுத்தியுள்ளது என்பதையும் விளக்கினார்.

அதே போல மனித உரிமை பாதுகாப்பு மையம் அவர்களோடு களத்தில் நின்று தொடர்ந்து போராட வலியுறுத்தி நம்பிக்கையூட்டி வருவதையும், ம.உ.பா.மை அவர்களின் நம்பிக்கைக்கு உரிய அமைப்பாக விளங்குவதையும் கூறினார்.

அடுத்ததாக மறுகாலனியாக்கத்தை மோதி வீழ்த்த வேண்டுமாயின் நாம் எந்த பாதையில் பயணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி  பு.ஜ.தொ.மு மாநில அமைப்புச் செயலர் தோழர் வெற்றிவேல் செழியன் பேசினார். நிகழ்ச்சியில் ம.க.இ.க சென்னை கிளை தோழர்கள் நடத்திய கலை நிகழ்ச்சியில் ‘நவம்பர் ஏழென்ற தினம்’ ‘யார் உண்மையான விடுதலை வீரர்கள்’ ‘முட்டி மோதி வெட்டிச் சாய்த்து’ ‘எதிரியின் இறப்பு இறகை விட லேசானது, மக்களுக்காக வாழ்ந்த தியாகிகளின் மரணம் மலையைவிட கனமானது’ ஆகிய பாடல்கள் பாடப்பட்டன. ம.க.இ.க தோழர்களோடு குழந்தைகளும் இணைந்து கொண்டு பாடல்களை பாடி நடனமாடினர்.’

தேசிய நதி நீர் கொள்கை நடமுறைப்படுத்தப்பட்டால் பல இடங்களில் தண்ணீர் திருடப்படும் நிலையும், தண்ணீர் காணக்கிடைக்காத பொருளாக மாறும் என்பதையும் விளக்குகின்ற தண்ணீர் தாகத்திற்கா ? லாபத்திற்கா ? என்கிற நாடகத்தை பெண்கள் விடுதலை முன்னணி தோழர்கள் நடத்தினர். நாடகம் பார்வையாளர்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றது.

பு.ஜ.தொ.மு தோழர்கள் அன்னிய முதலீடு ஏற்படுத்தப்போகும் விளைவுகளை பற்றி ஒரு விவாத நிகழ்ச்சியை நடத்தினர். பு.மா.இ.மு தோழர்கள் டி.வி சீரியல்கள் ஏற்படுத்தி வரும் சீரழிவுகளை பற்றி திரையை விலக்கிக்காட்டும் நாடகம் ஒன்றை நடத்தினர். விழாவில் 750க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருச்சியில் பாய்லர் ஆலையின் முன்பாக பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியனும், குட்செட் பகுதியில் சுமைபணி தொழிலாளர் பாதுகாப்பு சங்கமும், தில்லைநகர் காந்திபுரத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பிலும் காலையில் எழுச்சி மிகு முழக்கங்களுடன் கொடியேற்று விழா நடத்தப்பட்டது.

மாலை நிகழ்ச்சிக்கு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் திருச்சி மாவட்ட செயலர் தோழர் சீனிவாசன் தலைமை தாங்கினார். ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் தோழர் தர்மராஜ் சிறப்புரையாற்றினார், அறிவுக்கொவ்வாத புராணக் குப்பையான தீபாவளியோடு ரசியப்புரட்சியின் சாதனைகளை ஒப்பிட்டு அது எவ்வாறு மக்களின் அடிமை விலங்கினை உடைத்து விடுதலையை வழங்கியது என்பதையும், தீபாவளி எத்தகைய முட்டாள்தனமான பண்டிகை என்பதையும் விளக்கி புரட்சி நாளை கொண்டாடுவது சரியா மூடத்தனமான தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது சரியா ? எது சரி ? உங்களுக்கு எது வேண்டும் ? என்பதை நீங்களே தீர்மானியுங்கள் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

அடுத்து வாலிபால், ஸ்லோ சைக்கிள், இசை நாற்காலி, பானை உடைத்தல், பாட்டிலில் நீர் நிரப்புதல், கயிறு இழுத்தல், ஓட்டப்பந்தயம், ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, கவிதைபோட்டி, பாட்டுபோட்டி விளையாட்டு போட்டிகளிலும், கலாச்சார போட்டிகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்குரைஞர்கள் பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள்.

பு.மா.இ.மு தோழர்களின் சக்கை நடனம் இளைஞர்களுக்கே உரித்தான துடிப்போடும், பொருத்தமான இசை அமைப்போடும் நிகழ்த்தப்பட்டது  ‘ஊரு காக்கும் காவல் தெய்வம் அய்யனார் சாமி, நம்ம நாடு காக்கும் காவல் தெய்வம் நக்சல்பாரி’ என்ற பாடலையும், முதலாளித்துவம் கொல்லும் கம்யூனிசமே வெல்லும் என்ற பாடலையும் பெண்கள் விடுதலை முன்னணி தோழர்கள் இசை சித்திர நிகழ்ச்சியாக நடத்திக்காட்டினார்கள்.

அடுத்ததாக மக்கள் கலை இலக்கிய கழகத் தோழர்கள் தற்காப்பு கலைகளின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக கராத்தே கலையையும், சிலம்பு கலையையும் நுட்பமாக செய்து காட்டினார். மாறுவேட போட்டியில் சிறுவர், சிறுமிகள் விவசாயிகளாக, மீனவர்களாக, பகத்சிங், சின்ன மருது, வ.உ.சி யாக தோன்றி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.

இறுதியாக மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மைய கலைக்குழு தோழர்களின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெற்றது. பிறகு ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கத்தின் திருச்சி மாவட்ட செயலர் தோழர் மணலி தாஸ் நன்றியுரை கூற விழா  நிறைவடைந்தது.

தேனி மாவட்டத்தில் நவம்பர் புரட்சி நாளை ஒட்டி மாவட்டம் முழுவதும் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாக கொடியேற்றப்பட்டது . கம்பம் கூடலூரில் அரங்கக் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் தேனி மாவட்ட தோழர்களோடு, கேரள மாநிலத்தைச் சேர்ந்த தோழர்களும் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் புரட்சி நாள் உரை, கவிதை வாசித்தல், நாடகம், பாடல்கள், வயநாடு மானந்தவாடியை சேர்ந்த தோழர் வர்க்கீஸ் பற்றிய நூல் அறிமுகம் என பல்வேறு நிகழ்ச்சிகளுடன் ரசியப் புரட்சி நாள் கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியும், விவசாயிகள் விடுதலை முன்னணியும் இணைந்து  செங்கொடிகளை ஏந்தி, மார்க்சிய ஆசான்களின் படங்களோடும், முழக்க அட்டைகளோடும் சாலைகளில் ஊர்வலமாக சென்று பாகலூர் சர்க்கிலில் கொடியேற்றி முழக்கமிட்டனர். பிறகு நவம்பர் புரட்சி நாளின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு அறிவிக்கும் வகையில் ஒரு பிரமாண்டமான தெருமுனைக்கூட்டத்தை நடத்தினர்.

சோசலிச புரட்சி தான் மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு என்பதையும், ரசிய மக்களைப் போல நாமும் நமது நாட்டில் ஒரு சோசலிச சமூகத்தை படைக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாகவும் தோழர்கள் பேசினர். பள்ளிச் சிறுமிகளான வெண்மணி, ஓவியா ஆகிய இரு இளம் தோழர்களும் சில புரட்சிகரப் பாடல்களை  பாடினர்.கூட்டத்தை இறுதிவரை மக்கள் கூடி நின்று கவனித்தனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் பூவனூர் கிராமத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் பூவனூர், கிராம இளைஞர்களோடு இணைந்து நவம்பர் புரட்சி நாளை கொண்டாட  திட்டமிட்டனர். இதற்காக கிராமம் முழுவதும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டது.

விளையாட்டு போட்டியில் 150 மாணவர்கள் கலந்து கொண்டனர்.  மாலை பறை முழக்கத்தோடு கூட்டம் தொடங்கியது. கூட்டத்திற்கு தோழர் பாலாஜி தலைமை தாங்கினார். கடலூர் மாவட்ட ம.உ.பா.மை தலைவர் குணசேகர், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்க தலைவர் வெங்கடேசன் மற்றும் சிதம்பரம் செயலாளர் கலை ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

ம.உ.பா.மை மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு சிறப்புரையாற்றினார். எத்தனை தேர்தல் வந்தாலும், எத்தனை ஆட்சி மாற்றம் வந்தாலும் அதனால் உங்களுக்கு என்ன பயன் ? என்ற கேள்வியோடு ரசியாவின் சோசலிச முன்மாதிரிகளை அனைவர் மனதிலும் பதியும் வண்ணம் விளக்கிக் கூறினார். பெண்கள் மன உறுதியோடு போராட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பதற்காக இடிந்தகரை பெண்களின் போராட்டத்தை உதாரணம் கூறினார்.

அடுத்ததாக விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. எங்கள் ஊரில் இதுபோன்ற கூட்டங்கள் இதுவரை நடந்ததில்லை. இந்தக்கூட்டத்தின் மூலம் நாங்கள் நிறைய தெரிந்து கொண்டோம். இனிமேல் எங்களுக்காக நாங்களே போராடுவோம். ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற நிகழ்ச்சிகளை எங்கள் ஊரில் நடத்த வேண்டும் என்று மக்கள் கூறினர்.

இதே போல விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மதுரை, நாமக்கல், சேலம், கோயம்புத்தூர், தருமபுரி, பென்னாகரம் ஆகிய பகுதிகளிலும் ரசிய புரட்சி நாளை புரட்சிகர அமைப்புகள் மக்களோடு இணைந்து சிறப்பான முறையில் கொண்டாடினர்.

  1. விஜய் டி வி, ஏர்டெல் சூப்பர் சிங்கர்தான் , குழந்தைகளின் கலைத் திறமையாக, வீட்டுக்கு வீடு பாராட்டப்படுகிறது. ஆனால் படத்தில் இருக்கும் குழந்தைகளின் திறமையை என்ன என்பது! ஒரு காட்சி நடிப்பதற்கே பலமுறை ஒத்திகை பார்க்கும் சூப்பர் ஸ்டார்கள் மத்தியில் -இச்சிறுக்குழந்தைகளின் தொய்வில்லாத பாட்டும், நடனமும் பரவசப்படுத்தியது.

    கலைக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் உயிர் கொடுப்பவர்கள் இவர்கள்தான்.

    வாழ்க நவம்பர் நாள்!

  2. மக்களுக்காக மடிந்தவர்களின் மரணம் தரும் இழப்பு மலையை விட கனமானது….மக்கள் விரோதிகளின் மரணம் பறவை இறகைவிட லேசானது என்ற சிறுவர்களின் பாடல் அருமை….குழந்தைகளுக்கு எதை சொல்லித்தரவேண்டுமோ அதை, எப்படி சொல்லித்தர வேண்டுமோ அப்படி சொல்லி வளர்த்துள்ளனர் ம.க.இ.க. தோழர்கள்……புரட்சிகர வாழ்த்துக்கள் தோழர்களே!

    • கருப்பா ரொம்ப எமோசன் ஆயி எதாவது ஒன்னு கிடக்க ஒன்னு ஆயிடப்போகுது…

      • பையா அவர்கள் பயப்படாமல் இருக்க கருப்பனின் பின்னூட்டத்தை நீக்கி, பிழைப்புவாதப் பின்னூட்டத்தை மட்டும் அனுமதிக்கும்படி வினவைக் கேட்டுக் கொள்கிறோம்.

        • பயம் கருப்பனப்பாத்து இல்ல அன்பு அவர்களே…..இப்படி ஓவர பில்டப் குடுத்துப்பேசி நெஞசப் புடிச்சுகினு கருப்பு சாஞ்சிருச்சுன்னா…அப்புறம் இந்தநாட்ட யார் காப்பத்துறது…

          • அதுக்குதான் நீங்களும் மான் கராத்தே புகழ் ப்ப்ப்பீயாவும் இருக்கீங்களே…..?

            • ஒரு கமெண்டுக்கு 9 கமெண்ட்டா……..ரிலாக்ஸ் கரப்பான்…அமைதி தேவை….இப்படி ஓவர பில்டப் குடுத்துப்பேசி நெஞசப் புடிச்சுகினு கருப்பு சாஞ்சிருச்சுன்னா…அப்புறம் இந்தநாட்ட யார் காப்பத்துறது…

              • பையா அவர்களே, ஒன்னு கிடக்க ஒன்னு ஆயிடப்போகுதுன்னு ஒன்னுக்கு கூட போகாமல் அடங்கி வாழ்வதைவிட ஒரு நிமிடம் உயிர்ப்புடன் வாழ்வது மேலல்லவா?

                • இறைவா இந்த வெத்து பில்ட் அப்பெல்லாம் ஊருக்கு ஆகாது…..அடுத்தவனுக்குத் தொந்தரவு கொடுக்காமல் வாழ்வதே உயிர்ப்புடன் வாழ்வது தான்…

                  • கடைசி வரை ப்பீயா எந்தக்கேள்விக்கும் பதில் மாட்டார் அதுதான் அவரு தொழில்ரக்சியம்….ஆனா தாறுமாறா பேசுவாரு, அப்டியே மான் கராத்தால ஓஓஓடிறுவாறு…இதுதான் காலம் காலமாய் அவரு தியரி……

        • இப்பவாச்சும் அண்ணன் வெளிய வந்தாரேனு சந்தோசப்படுங்க…..அதுசரி ப்ப்ப்ப்ப்பீயா என்ன ரொம்ப நாள வழக்கம் போல மான் கராத்தே…..ரொம்ம்ம்ப கும்மிட்டாங்களோ…..

      • என்ன இருந்தாலும் உங்கள மாதிரி தெகிரியமா ஊத்தவாயன் சங்கரனுக்கு சப்போர்ட் பண்ற மாதிரி முடியாதுல்ல….

Leave a Reply to கருப்பன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க