privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்பார்ப்பனர்களின் குத்தாட்டத்தில் பழனி!

பார்ப்பனர்களின் குத்தாட்டத்தில் பழனி!

-

மீபத்தில் சொந்த வேலையாக பழனி செல்ல வேண்டியிருந்தது. வேலை முடிந்து ஊர் திரும்புமுன் கொஞ்சம் நேரம் இருந்ததால், நம்ம தண்டபாணி எப்படி இருக்கிறான் என்று ஒரு எட்டு பார்த்து விட்டு வரலாமே என்று தோன்றியது. தண்டபாணியின் ‘பின்புறத்தை’ வெகு வேகமாக வெட்டிச் சுரண்டி விற்று வருகிறார்கள் என்றும், கூடிய சீக்கிரம் விடைப்பாக நின்று கொண்டிருக்கும் முருகன் விழுந்து விடக்கூடும் என்றும் வெகு நாட்களாகவே ஒரு செய்தி உலவியதால், ‘தரிசனத்தை’ நான் தள்ளிப்போட விரும்பவில்லை.  மலையையே சுரண்டி விற்கும் காலத்தில் சிலை எம்மாத்திரம்?

பழனி எனும் திருஆவினங்குடி அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாம். இருந்த போதிலும் வருமானத்தில்  இதுதான் முதல் இடமாக இருக்கும். இங்கே முருகன் மட்டும் தான் ஆண்டி – அந்த ஆண்டிக்குச் சேவை செய்வதாகச் சொல்லிக் கொள்ளும் பண்டாரங்களெல்லாம் ஃபாரின் ரிட்டர்ன் மாப்பிள்ளைகள் போல ஆடும் ஆட்டம் சொல்லி மாளாது.

நடைபயணமாக அரும்பாடு பட்டு வரும் பக்தர்களுக்கு முருகன் அருள்பாலிக்கிறாரோ இல்லையோ, நோயை மட்டும் தவறாமல்  அளிக்கிறார்.  சுகாதாரக் கேடுகள் மலிந்த நகராட்சிகளுக்குள் ஒரு போட்டி வைத்தால், பழனி அன் அப்போஸ்டில் ஜெயித்து விடும் – அத்தனை சிறப்பு. அதுவும் தைப் பூசம் மற்றும் பங்குனி உத்திர நாட்களில், ஊரே பஞ்சாமிர்தம் தான்.

முன்பெல்லாம் பழனி படிக்கட்டுகளில் நீக்கமற நிறைந்திருக்கும் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை இப்போது கணிசமாகக் குறைந்திருந்தது. தொழில் போட்டி என்று வந்து விட்டால் பிச்சைக்காரனாவது, முருகனாவது – தூக்கி வீசியெறிந்து விட்டார்கள் போலத்தெரிகிறது பழனி கோயில் பார்ப்பனர்கள். நான் சென்றிருந்த போது வரிசையில் நிற்காமல், சிலர் மட்டும் பவிசாக உள்ளே நுழைந்து கொண்டிருந்தனர், கூடவே ஒரு அர்ச்சகரும்.

வரிசையில் முன்னே நின்று கொண்டிருந்தவர் சலித்துக் கொண்டார். “ச்சை.. எங்களையெல்லாம் பாத்தா மனுசனுகளாவே தெரியலையா இவனுகளுக்கு?” ஆமோதிப்பிற்காகத் என்னைத் திரும்பிப் பார்த்தவர், எதிர்பார்த்தது கிடைத்ததும் தொடர்ந்தார். “இந்த நாயிங்க தானுங்க முருகனையே சொரண்டித் தின்னு போட்டானுக” ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்த சேதிதான்.  இருந்தாலும், மீண்டுமொரு முறை உள்ளூர்க்காரரின் வாயினால் கேட்க சுவையாக இருந்தது.

பழனி முருகனின் சிலை போகர் எனும் சித்தரால் வடிவமைக்கப்பட்ட நவபாஷானக் கட்டு என்று சொல்கிறார்கள். இந்த நவபாஷானம் தீராத நோயையெல்லாம் தீர்க்குமென்றும், இளமை கூடும் என்றும் பல்வேறு கதைகளைச் சொல்வார்கள். 1980களில் இந்தப் புரளிகள் மர்மக் கதை போல மிகப் பிரபலம். அதனை எடுப்பதற்கு இந்த ஆண்டியின் கோவணத்தை அவிழ்த்த பார்ப்பனப் புரோகிதர்கள், முருகப்பெருமானின் பின்புறத்தை கொஞ்சம் கொஞ்சமாகச் சுரண்டி எடுத்து  அரசியல்வாதிகளுக்கு படையல் வைத்து விட்டதாகவும்,  அவ்வாறு முருகனைக் கூறு போட்டதில் ஆர்.எம்.வீ.க்கு கொஞ்சம் பெரிய ‘பீசாக’ கிடைத்தது என்று அவர் சொல்லிக் கொண்டிருந்தார்.

“ பிட்டமிரண்டும் பெருவேல் காக்க.. வட்டக் குதத்தை வடிவேல் காக்க..  நகநக நகநக நகநக நகென.. டிகுடிகு டிகுடிகு டிகுகுண டிகுண..” என்று சூலமங்கலம் சகோதரிகள் குரலில் கந்தர் சஷ்டி கவசம் என் காதில் ஒலிக்கத் தொடங்கியிருந்தது.

வழியும் வியர்வையைப் புறங்கையால் துடைத்துக் கொண்டே நண்பர் விடாமல் பேசிக் கொண்டிருந்தார்.  அர்ச்சனைத் தட்டுகளை எடுத்துச் செல்ல 150 ரூபாய் வரை கட்டணமாம். அதில் தேங்காயை ஸ்பெஷலாக உள்ளே எடுத்துச் சென்று, பின்னர் பக்தர்களுக்குத் தனியே வழங்குவதற்கு தனி கமிசனாம். சாமிக்கும்— பக்தனுக்கும் இடைத்தரகராக அர்ச்சகர் என்றால், அந்த இடைத்தரகருக்கும் பக்தருக்கும் இடையில் இன்னொரு தரகராம்.

ஒரு வழியாக வரிசை முன்னேறியது. பக்தர்களின் முகங்களிலோ பரவசம், பக்தி, பயம், ஏக்கம், ஏமாற்றம், துன்பம், எதிர்பார்ப்பு, ஆசை என்று பல்வேறு பாவங்கள்; தட்டேந்தி நிற்கும் பார்ப்பனர்களின் முகங்களிலோ ஒரே பாவனை தான் – அது எரிச்சல் கலந்த கடுகடுப்பு. தட்டில் காசு போட்டவர்களுக்கு மாத்திரம் திருநீரை வீசினார்கள். அதிலும் பத்து ரூபாய்களுக்கு மேல் போடுபவர்களுக்கு சின்னச் சின்ன தாள்களில் மடிக்கப்பட்ட சிறிய விபூதிப் பொட்டலங்களை விட்டெறிந்தனர்.

பக்தர் ஒருவர், அர்ச்சகரின் பைக்குள் கையை விட்டு விபூதி பாக்கெட்டுகள் சிலவற்றை லவட்டி விட முடியுமா என்று முயற்சித்தார். பழனிக்கே பஞ்சாமிர்தமா? சுதாரித்துக் கொண்ட அர்ச்சகர் பையை இறுகப் பற்றிக் கொண்டே லோக்கல் மதுரைத் தமிழில் கெட்ட வார்த்தையில் அர்ச்சனை செய்ய ஆரம்பித்து விட்டார். தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் திகைத்துப் போனார்கள்.

வெளியே வரும்போது, ஒரு சின்னப் பெண் கையிலிருந்த விபூதியை வாயில் போடச் சென்றாள்.  வரிசையில் நம்மோடு பேசிக் கொண்டிருந்தவர் பதறிப்போய் அந்தப் பெண்ணின் கையைத் தட்டி விட்டார்.  “பாப்பா இத வாய்ல போட்றாதம்மா, நல்லதில்லே” என்றபடி நம்மை நோக்கித் திரும்பியவர், “சுத்தக் கலப்படம் சார்” என்றார்.

“என்னாங்க சொல்றீங்க? இது சாம்பல் தானே?”

“இல்லீங்க, இதெல்லாம் வீணாப் போற காகிதக் கூழில் கெமிக்கல் கலந்து தயாரிக்கறாங்க” என்றவர், கையிலிருந்து நழுவப் பார்த்த பஞ்சாமிர்த டப்பாவை பத்திரமாய் பைக்குள் போட்டுக் கொண்டார். அதன் மூடி லேசாகப் பிளவு பட்டிருந்தது. நான் பார்ப்பதை கவனித்துவிட்டார்.

“இது மட்டும் எப்படிங்க ஒரிஜினலா இருக்கும்? இதுவும் போலி தான்” என்றவர், “ஆனா ஒரிஜினலை விட இது கொஞ்சம் பரவாயில்லாம இருக்கும்” என்றபடி கண்ணைச் சிமிட்டினார்.

ஆச்சர்யமான எனது பார்வையைக் கவனித்தவர், “அட, ஒரிஜினல்ல புழுவா நெளியும். அதுக்கு இது பரவாயில்ல தானே?” என்றார்.

பேசிக் கொண்டே வெளிப் பிரகாரத்தைச் சுற்றி வந்தோம். தரையிலும், படிக்கட்டுகளிலும் உயர்தர கிரானைட் கற்கள் பதிக்கப் பட்டிருந்தன. “இது மதுரையின் எந்த மலையாக இருக்கும்? இந்த பழனி சாமிக்கு, அந்த பழனிச்சாமி கொடுத்த லஞ்சமாக இருக்குமோ” என்று யோசித்துக் கொண்டே இறங்கினேன்.

கூட வந்தவர் அதற்குள் நன்றாக நெருக்கமாகியிருந்தார். பழனி பஞ்சாமிர்தத்துக்கு அடுத்தபடி சித்தர்களுக்குத்தானே புகழ் பெற்றது! சாக்கடை சித்தர்னு ஒரு சித்தராம். கடந்த 30 ஆண்டுகளாக சாக்கடை நீரைக் குடித்து, அதிலேயே குளித்து வரும் அந்தச் சித்தரிடம் அடி வாங்கினால் நல்ல பலன் இருப்பதாக நம்பி பக்தர்கள் சாமியாரை அடிக்கச் சொல்லி உடம்பை காட்டுவார்களாம். சமீபத்தில் கோவையில் இருந்து வந்த ஒரு தொழிலதிபரை சாக்கடை சாமியார் அறைந்ததில் அவருக்கு காது செவிடாகி விட்டதாம்.

ஒரு சித்தர் காறித் துப்பினால் நன்மை விளையுமாம்; இன்னொருவரிடம் கெட்ட வார்த்தையால் ஏச்சு வாங்கினால் குலம் விருத்தியடையுமாம். ஒருவர் கஞ்சா சாமியாம்; அவரிடம் குறி கேட்க வேண்டுமானால் கஞ்சா படைக்க வேண்டுமாம். சற்று தூரத்திலேயே கஞ்சா விற்பனையும் ரகசியமாய் நடந்து கொண்டிருந்தது. பல்வேறு ‘சித்தர்களின்’ மகாத்மியங்களை நண்பர் சொல்லச் சொல்ல நாராசமாய் இருந்தது. கடைசியில் பொறுமையிழந்தேன்.

“ஏங்க, பீ தின்னி சித்தர்னு எவனும் இல்லீங்களா?” என்றேன். துணுக்குற்றுப் போய், ஒரு சங்கடமான சிரிப்புடன் விடைபெற்றுக் கொண்டார்.

“நாத்திகர்களான நீங்கள் எங்கள் மனதைப் புண்படுத்துவது போலப் பேசுகிறீர்கள்” என்று எனது ஆத்திக நண்பர்கள் குறைபட்டுக் கொள்வதுண்டு.  உண்மையில் ஆத்திகர்களையும், பக்தர்களையும் புழுவினும் கேவலமாக மதிப்பதும், அவர்கள் உணர்வுகளைப் புண்படுத்துவதும், அவர்கள் பக்தியைக் கொச்சைப் படுத்துவதும் யார் என்பதைப் புரிந்து கொள்ள விரும்புகிறவர்கள் ஒரு முறை பழனி கோயிலுக்குச் சென்று வரலாம்.

அப்புறமும் திருந்தாதவர்கள், கந்தர் சஷ்டி கவசத்தில் ஒரே ஒரு வரியை திருத்திக் கொள்ளலாம்.

“சூடு சொரணை சுயமரியாதை..
பக்கப் பிளவை படர்தொடை வாழை..
எல்லாப்பிணியும் எந்தனைக் கண்டால்
நில்லாதோட நீயெனக் கருள்வாய்”

_____________________________________________________________

– புதிய கலாச்சாரம், அக்டோபர் – 2012

_____________________________________________________________

  1. காக்கா விரட்டினவன்
    விசிறி வீசினவன்
    வாயிலிருந்து லிங்கம் எடுத்தவன்
    ஓடிப் போனவன்
    எத்தனை சாக்கடை சாமி வந்தாலும்

    அக்மார்க் சாமியை
    யாரும் அண்ட முடியுமா

  2. வினவு,
    ஒரு காலத்தில் கிபி1500 வரைக்கும் பழனி கோயில்ல பூஜை பண்ணினவங்க புலிப்பாணி சித்தர் வம்சம்.

    அப்புறம் தான் பார்ப்பன குருக்கள் வந்து ஆக்கிரமிச்சாங்க

    • // ஒரு காலத்தில் கிபி1500 வரைக்கும் பழனி கோயில்ல பூஜை பண்ணினவங்க புலிப்பாணி சித்தர் வம்சம்.//
      அப்போ சித்தர் வம்சத்தில் வந்தவனே இன்னும் பூஜை செய்தான் என்று வைத்துக்கொள்ளுங்கள், அதுவும் பார்ப்பனீயம் தான்…

      பிறப்பை வைத்து மனிதரை வேறுபடுத்துவதை நாம் நிறுத்தக்கற்றுக்கொள்ள வேண்டும்…
      இதை பல மனிதர்கள் (சாதி எதிர்ப்பாளர் பலர் உட்பட) கற்றுக்கொள்ளவில்லை…

  3. கிறித்துவ கூலிப்படை வினவே,

    கடந்த 80 ஆண்டுகளாக கோயில் இந்து அறநிலை துறையின் கீழும் அரசாங்கத்தின் கீழும் தான் உள்ளது. அங்கு இருக்கும் பொருட்களில் பழம் முதல் விபூதி வரை வாங்குவதும் விற்பதும் அரசாங்கத்தின் கீழ் தான் உள்ளது.அங்கு இருக்கும் குருக்கள் அனைவரும் கடை நிலை ஊழியர்கள் சம்பளம் தான் வாங்குகிறார்கள்.

    எல்லாம் தெரிந்த வினவிற்கு இது தெரியாதா என்ன?

    கிறித்துவ எவான்ங்கலிஸ்ட் கூலிப்படையான வினவிற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன்,

    • இந்து மத மீட்பரே…முதல்ல இந்து அறநிலையத்துறை ஏன் உருவாக்கப்பட்டதுன்னு தெரியுமா..? ராமகோபாலன்கிட்ட கேட்டு சொல்லுங்க… சாமியாரு களவானித்தனம் பண்றான் அதகேட்க துப்பில்ல

      • பழனியில் பூசாரிகளுக்கு தேவலயத்திலா ட்ரெயெனிங் கொடுத்தார்கள்….

        • சாமி கும்பிடமாட்டாராம் ஆனால் பழனிக்குப் பஸ்ஸேரிப் போய் நக்கல் கட்டுரை எழுதுவாராம்…

          • அதெல்லாம் அப்புறம் பழனி பூஜாரியைப்பத்தி பேசு…இல்லை எங்க “இந்து மத” சாம்யாருங்க இப்படித்தான் இருப்போம்னு யோக்கியமா பேசு…அப்புறம் பேசு நக்கலு விக்கலுனு…..

            • பழனீல்ல உள்ள சாமியாருகள் அனைவரும் உண்மையானவர்கள் இல்லை…அந்த வெங்காயம் எங்களுக்கும் தெரியும், உன்மையான கடவுளை நம்புபவன் சாமியார்களின் பின் ஒட மாட்டான்….இந்த சாமியார்கள் மக்களின் பக்தியீனை தங்களின் லாப வேட்டைக்காக பயன்படுத்திக்கொள்கிறார்கள்….அதனால் சில நல்ல சாமியார்களும், ஆன்மீகவாதிகளும் மக்கள் கண்ணீல் படுவதில்லை…ஆனால் நீ இதற்க்காக இந்துக்கடவுள்களை நக்கல் நையாண்டி செய்து கதை எழுதுவது கண்டிக்கத்தக்கது…ஏன் இந்தத தகிரியம், முஸ்லீம் மதக்கடவுள் மீது வரமாட்டேங்கிது…

              • அதாவது உன்னை கேவலமானவன்னு சொல்றது பத்தி உனக்கு கவலை இல்லை..ஏன் அடுத்தவனை பத்தி அவதூறு சொல்லல அப்டீங்குறது தான் உன் பிரச்னை… ரொம்ப கேவலமான ஆளுயா நீ

                • அதில்ல ராஜா என் பிரச்சனை, என் மதம் பிடிக்கவில்லை என்றால் வேறு மதத்திற்க்குப் போ அது உன் இஸ்டம், யார் அதிக காசு கொடுக்கிறார்களோ அந்த மதத்திற்க்குப் போ……அதில் தப்பே இல்லை ஆனால் வேறு மதத்திஏக்குப் போயிட்டு இந்து மதத்த மட்டும் தரக்குறைவாக விமர்சனம் செய்வது பேடித்தனம் அல்லவா????

                  • இங்க யாரோ பீ தின்னி சித்தரை தேடிக்கிட்டு இருந்தாங்க.. இவரு இங்க இருக்காரு.. வேற யாரும் இல்லை நம்ம பீயா என்னும் பையா தான் அவரு..

              • //பழனீல்ல உள்ள சாமியாருகள் அனைவரும் உண்மையானவர்கள் இல்லை//

                ஹய்யோ எல்லா மதத்தவனும் இந்த விசயத்துல ஒன்னாத்தான்யா இருக்காங்க. உண்மையானவங்க இல்லாட்டி பழனிய வுட்டு வெளியேத்திற வேண்டியதுதானே.

                • உண்மை தான் பொலி சாமியார்களையும், பிச்சைக்காரர்களையும் கோயில்களினை விட்டு ஒளிக்க வேண்டும், போலி மதச்சார்பின்மை பேசி இந்துக்களை மட்டும் விமர்சித்துபேசி ஆதாயம் தேடுபவர்களை நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டும்..

                  • நீயும் பேசமாட்ட மத்தவன் பேசினா நொல்ல பேசுவ….சரிய்யா உன் மத்தின் பேர் சொல்லி திருடுபவனை நீயே போய் என்னனு கேள்….அப்படினா அது என் விருப்பம்னு சொல்லுவே..ஊருக்குள்ள திருடனா நாலு பேரு உதைக்கத்தான் செய்வான்….இவ்வளவு பேசுற நீ யார் யார் இந்துனு வரையரை சொல்லு நாங்க ஏன் திட்ரோம்னு புரியும்…..யாரு விரட்டுவா…நாங்க பேசும் போது எறியறது மத்த சாமியாரு அயோக்கித்தனம் பண்ணும்போது எரியணும்…அப்படி ஒண்ணும் எரியலயே…எ..ஏன்….பதில்.

      • அது என்னது இந்து மத மீட்பரே…. உங்கள் வார்த்தையில் கிறித்துவ நெடி கொஞ்சம் அதிகமாக தெரிகிறது. ஆனால் எங்கள் எல்லை தெய்வத்தின் பெயரை வைத்து இருக்கிறீர்கள், சரி பராவாயில்லை,,, உங்களுக்கு எங்க கருப்பண்ணார் நல்ல புத்தி கொடுக்கட்டும்,

        இந்து அறநிலை துறை உருவாக்கப்பட்டது ஏன் என்பது கேள்வி அல்ல? அது கோயில் வருமானத்தை என்ன செய்து கொண்டு இருக்கிறது. எப்படி நிர்வாகம் செய்கிறது என்பது தான். அடுத்து மாற்று மதங்களில் நடக்கும் ஊழல்களை காட்டிலும் இங்கு குறைவு.

        1000 கோடி ஊழல் நடக்கும் கிரிக்கெட் வாரியத்தை எடுக்காத அரசாங்கம், கோயில்களை வெட்கம் இல்லாமல் எடுப்பது ஏன்?

        சரி வசதியான கோயில்களை விடுங்கள். ஊருக்கு வெளியில் இருக்கும் காவல் தெய்வத்தின் கோயில்களையும், இடுகாட்டில் இருக்கும் அம்மன் கோயில்களை கூட விடாமல் எடுப்பதன் நோக்கம் எனன?

        தங்கள் பதிலுக்கு ஏற்கனவே பதில் தரப்பட்டு விட்டது. ஒவ்வொரு கோயில் நிர்வாக அதிகாரியும், ஒரு மாமூல் காவல் துறை ஆய்வாளர் மாதிரி.

        பொது வலை தளத்தில் இதற்கு மேல் எதுவும் எழுத இயலாது.

        • “இந்து அறநிலை துறை உருவாக்கப்பட்டது ஏன் என்பது கேள்வி அல்ல?”
          ஏன் உங்க பிராத்தல் வேளையெல்லாம் வெளிய வந்திருமா….எவ்வளவு நேக்கா பதில் சொல்றீங்க….உலகத்திலேயே கொயில்ல பப்ளிக்கா லாட்ஜ் நடத்துனது நீங்கதான் பேரு தேவதாசி முறை….

          ஒவ்வொரு கோயில் நிர்வாக அதிகாரியும், ஒரு மாமூல் காவல் துறை ஆய்வாளர் மாதிரி.
          எல்லோரும் கிறிஸ்தவ முசுலீகளா…உங்க ஆளுங்கதானே, போய் செருப்பாலடிங்க இல்லைனா உங்க சாமிங்க கிட்ட சஒல்லி நல்ல புத்திய குடுக்க சொல்லுங்க,…

          மாம்ஸ் வேலைக்கு ஊழல் தேவலாம்…என்ன சூத்திரன் முதற்கொண்டு த்ங்கிறானே அதான் எரியுது….இவ்வளவு பொறுப்ப பேசும் நீங்க அனைத்து சாதியினரும் அர்ச்சகராக, எல்லா மக்களும் கோயிலுக்குள் போக பேச மாட்டெங்குறேளே ஏன்….

  4. தமில்நாட்டு நாத்திகம் இந்து மதத்தை மட்டுமே பேசுவது ஏன் என்ட்ரு புரியவில்லை.முச்லிமை பட்ரி பெசினால் அவன் கசாப்பு கத்தியாலே வெட்டிடுவான்.கிருதுவத்தை பட்ரி பேச முடியாது.ஏன் என்ட்ரால் இப்படி பெச சொல்லி பனம் கொடுப்பதே அவந்தான்.னீங்க இப்படி பேச பேசதான் தமில்நாட்டில் ஆர்.எச்.எச் அபிமானிகல் அதிகமாக வலர்ந்து கொன்டே இருக்கிரார்கல்.னீங்க உன்மையான ஆலாக இருந்தா இந்த கமென்ட்டை அலிக்கக்கூடாது

      • அய்யய்யோ ர்ர்ர்ரொம்ப பய்மா இருக்கே…..”நாத்திகன்” இந்த புயிப்பு முட்டாயெல்லாம் வேற யாட்டியாவது போய் சொல்லு….இது ராமனை செருப்பால் அடித்த பூமி….

        • பெரிய மாவீரன் இந்து மத்ததிற்க்கு மட்டும் தானா கரப்பான் அண்ணே?…

          //இது ராமனை செருப்பால் அடித்த பூமி….//

          எப்புடீன்னே உங்க வீட்டு கதவு ஜன்னல் எல்லாத்தையும் டைட்டா பூட்டிகிட்டு யாருக்கும் தெரியாம அடிச்சீங்களே அதுவா……………………பெரிய மாவீரன் அண்ணே நீங்க…

          • நீங்க முழு பூசணிக்காய மொங்கா போடும் ஆளுங்க…..உங்களுக்கு தெரியாதுதான்…..அதுவானே நீங்க நாடக தடைச்சட்டம்னு சட்டமன்றத்துல கொண்டுவந்தீங்களே அப்பதான்……முடிஞ்சா கோர்ட்டு பக்கம் போயி பாருங்க தீர்ப்பிலேயே இருக்கு பெரியார் ராமன செருப்பால அடிச்சது, பிள்ளையாரை நடு ரோட்ல டவுசர கழத்துணது எல்லாம்…அதுக்கெல்லாம் நீங்க ஊருல இருக்கணும்…எப்பவும் மான் கராத்தாலேயே இருந்தா எப்படி தெரியும்…..

            • மாவீஈஈஈஈரன் ப்ப்ப்ப்பீஈஈஈஈஈயாயாயாயா மறுபுடியும் மான் கராத்தே ஆயிட்டார்…இனி அடுத்த பதிவில்தான் தனது கொலைவெறி பீன்னூட்டம் இடுவார்……நன்றி வண்ண்ண்ண்ண்கம்…..

    • இவர்களுக்கு வினவை அப்படி முத்திரை குத்துவதில் ஒரு மகிழ்ச்சி.

      பெரிய அறிவாளி மாதிரி பேசாம கீழுள்ள இணைப்பின் கட்டுரைகள் அனைத்தையும் படித்து விட்டு கொஞ்சம் புத்தியோடு மறுமொழி இடவும்.

      https://www.vinavu.com/category/religion/

    • ஏன்னா இந்துக்கள் அதிகமா இருக்குற இடத்துல அவங்க முட்டாள் தனத்தையும், மூட நம்பிக்கையையும் சொல்ல வேண்டியிருக்கு.

      கிருத்துவர்கள் அதிகமா இருக்குற நாட்டுல “ஒய் அயம் நாட் ய கிறிஸ்டியன்” னு ஒருத்தர் புத்தகம் எழுதியிருக்கார்.

      இஸ்லாமியர் “ஒய் அயம் நாட் ய இஸ்லாமியர்” னு ஒருத்தர் புத்தகம் எழுதியிருக்கார்.

      போய் படிச்சு பாருங்க.

    • //தமில்நாட்டு நாத்திகம் இந்து மதத்தை மட்டுமே பேசுவது ஏன் என்ட்ரு புரியவில்லை//
      இந்து மதக் கட்டுரைகளை மட்டும் படித்துவிட்டு ஏன் புலம்புகிறீர்கள் என்றுதான் எங்களுக்குப் புரியவில்லை.

      //முச்லிமை பட்ரி பெசினால் அவன் கசாப்பு கத்தியாலே வெட்டிடுவான்//
      குஜராத்திலே இந்து ராஷ்டிர வாள்தான் அனைவரையும் கொன்று ஒழித்தது.

      //ஏன் என்ட்ரால் இப்படி பெச சொல்லி பனம் கொடுப்பதே அவந்தான்//
      இதே பழனி கட்டுரை வந்துள்ள புதிய கலாச்சார இதழில்தான் திருச்சபையும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

      //னீங்க இப்படி பேச பேசதான் தமில்நாட்டில் ஆர்.எச்.எச் அபிமானிகல் அதிகமாக வலர்ந்து கொன்டே இருக்கிரார்கல்//
      உண்மைதான். பாசிசம் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அதை ஒழித்துத்தான் ஆகவேண்டும்.

      //னீங்க உன்மையான ஆலாக இருந்தா இந்த கமென்ட்டை அலிக்கக்கூடாது//
      வெளங்கிரும். உங்க கம்மென்ட்டே அழிச்சுப்போட்ட மாதிரிதான் இருக்கு நாத்திகன் என்ற பொய்யரே.

  5. சாக்கடை சித்தரே இருக்கும்போது,பீ திண்ணும் சித்தர் இல்லாமல் இருப்பாரா?பீ திண்ண போயிருக்காருன்னு சொல்லாம நழுவிட்டாரு

  6. weired. What will God have to do for people’s mistakes and arrogance.

    It is very clear that people are taking advantage of people. You believe there is No God and act upon that; I believe there is God ad act upon on that. Both of us believe in something to get the life going. so we are evenstevan. lol

  7. கருப்பன்,னீங்க இன்னும் ராமசாமிநாயக்கர் காலத்திலேயே இருக்கிரீங்க.ராமனை செருப்பாலயே அடிச்ச காலம் 40 வருஷத்துக்கு முன்னாடி.இப்போ இந்து எலுச்சி விலா என்ட்ர பெயரில் தமிழ்நாட்டுல வினாயகர் சதுர்த்தி விழா எப்படி கொன்டாடுராங்க தெரியுமா.தலையில காவி துன்டு கட்டிக்கிட்டு ஆயிரக்கனக்கான இலைஞர் பட்டாலம் போரத நீங்க பார்த்ததில்லையா?.பாவம் சார் நீங்க கடந்த கால நினைவிலிருந்து வெலியே வாங்க.இது 2012.இப்பவே கன்யாகுமரி,கோயம்புதூர்,திருப்பூர்,இங்க எல்லாம் என்ன நிலமை என்ட்ரு உங்கலுக்கு நான் சொல்லத்தேவை இல்லை.இன்னும் 10 வருஷம் கலிச்சி பாருங்க.

    • பார்க்கதான போறோம்…..ராமசாமி பாதியில விட்டு வைச்ச வேலையை முடிப்போம்….முடுஞ்சா தீஈஈஈஷிதர்ர்ர்க்கு ஒரு ட்ரங்கால் போட்டு பேசி பாருங்க….டவுசர் கியிஞ்ச கதையை மூக்கை சிந்திண்டே சொல்வா…..

      • தீட்சிதர்களுக்கு ட்ரங்கால் 🙂

        இன்றளவும் கோயில்கள் தீட்சிதர்களின் நிர்வாகத்தின் தான் இருக்கிறது….

    • விநாயகர் சதுர்த்தியை ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பக்தி பரவசத்துடனா கொண்டாடுகிறார்கள்!. குடியும் கும்மாளமுமா அல்லவா கொண்டாடுகிறார்கள். இதுதான் பக்தி பரவசமோ. நீங்க விநாயகர் சிலை வைக்க பணம் கொடுப்பதை நிறுத்துனீங்கன்னா எல்லாம் புஸ்வானமா போய்டும். செருப்பால அடிப்பதை விட இது கேவலமா அல்லவா இருக்கு.

  8. அது எந்த கோவிலாக/ஆலயமாக இருந்தாலும்,மக்கள் கூடும் இடங்களில் சுகாதாரம் சுத்தமாக கிடையாது.கழிப்பறைகளைப்பற்றி பேசுவதையே அசிங்கமாக நினைக்கிண்றார்கள்.அங்கங்கே தெண்ணங்கீற்றை வைத்து அடைத்து வைத்து கழிவறை-தாற்காலிகமாக வைத்து அதில்
    கொள்ளை அடிப்பது.குடி நீர் தாற்காலிகமாக லாரிகளில் ஏற்றி pvc tankகுளில் அடைத்து சப்ளை செய்துவிட்டு அதிலும் குல்மால்.தாற்காலிகமான arrangmentக்கு 2 வருட செலவில் permanant structures and arrangement செய்யலாம்.செய்துவிட்டால் காசு வருடா வருடம் அடிப்பதில் குறைந்தது விடும்.ஏனெண்றால் maintananceக்கு தானே கணக்கு கொடுக்கமுடியும்.
    முருகணே சாட்சி.

    • ஒருபய கூட பூஜாரி செய்வது சரி தப்புனு யோக்கியமா பேச மாட்டுக்காங்க…..

      • பார்ப்பன அர்ச்சகன் என்று சொல்லுவதே பொருத்தமாக இருக்கும். பார்பன தெய்வங்கள் வருகைக்கு பின் ஓரங்கட்டப்பட்ட ஐயனார் ,முனீஸ்வரன் , போன்றவர்களுக்கு பூசை செய்பவர்களையே பூசாரிகள் என்பது பொருந்தும்.

        • அஸ்வீன்,

          உங்கள் எழுத்துகளில் இருந்தே தெரிகிறது, கோயில்கள் பற்றிய உங்கள் அறிவு… பழனிக்கு அடுத்து அதிக வருமானம் வரக் கூடியது கருப்பணார் கோயில்களிலும், ஐயனார் கோயில்களிலும் தான்..,. உங்களுக்கு நான் சொல்வது பொய் என்று பட்டால்.,,,,, இந்து அறநிலை துறையை தொடர்பு கொள்ளுங்கள். அல்லது இருக்கவே இருக்கு ஆர் டி ஐ

        • பூசாரிகள் வேறு பண்டாரங்கள் வேறு… சும்மா உளறி கொட்ட வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்,

          பூசாரி செய்வது சரி தப்புனு….. வினவு என்றைகாவது ப்யூன் நிலையில் இருக்கும் அரசாங்கள் ஊழியர்களீன் ஊழலை பேசி இருக்கிறதா>

          நாங்களும் அந்த மாதிரி தான்… புயூன் நிலையில் இருக்கும் குருக்களையோ, பட்டர்களையோ, பண்டாரங்களையோ, சாமியார்களையோ பேச மாட்டோம். அதுவும் தவிர

          வினவு சொன்னது உண்மையாகவே நடந்து இருக்கும் பட்சத்தில் அறநிலை துறையின் புகார் கொடுத்து சம்மந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கலாம்,

          கருணாநிதி மாதிரி தலித் என்பதால் ஊழல் குற்றம் சாட்டுகிறார்கள் என்று ஜில்லி அடிக்க மாட்டாரக்ள் யாறும்,

          வேண்டும் என்றால் வினவு சம்மந்தப்பட்ட நபர் மீது புகார் கொடுத்து அதன் நகலை வினவுல் வெளியிடட்டுமே….

          ஊழல் நீக்கப்பட்டால் உண்மையில் மகிழ்ச்சி எங்களுக்கு தானே 🙂

          • சாமியார்கள் என்று நான் சொன்னது கோயில் சாமியார்களை… கார்பரேட் சாமியார்கள் அல்ல்,,,

  9. வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
    சிற்றிடையழகுற செவ்வேல் காக்க
    நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
    ஆண் குறியிரண்டும் அயில் வேல் காக்க
    பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
    வட்டக் குதத்தை வல்வேல் காக்க
    பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க

    கந்த சஷ்டி கவச வரிகளிலே இப்படி வருகிறது.

    ஏன் ஒவ்வொரு அங்கமாக முருக கடவுள் காக்க வேண்டும். ஒரே வரியில் மனித உடலைக் காக்க என்று சொல்ல முடியாதா ?

    கோவில்கள் இன்று ஷாப்பிங் மால் மாறி ஆகிப்போச்சு. பைசா கொடுத்தா பிரசாதம், தனி வழி, சிறப்பு தரிசனம்.

    திருந்தாத ஜென்மங்கள்.

    • கோயில் தரிசன டிக்கெட் உபயம் செய்தது திராவிட கட்சியும், அதன் முன்னாள் ஆதிக்க சாதி கூட்டணியான நீதி கட்சி தான் (திருப்பதி உட்பட)

      சாப்பிங்க மால் போன்று மாற்றியதில் பெரும் பங்கு திமுக ஆஇஅதிமுக உபயம்…..

  10. உங்கள் கருத்து பழனி முருகன் பட்ரியது அல்ல அவர் உங்களை மன்னிப்பார்

    • சுப்பு,

      முருகன் தண்டிப்பார் என்று சொல்வது தான் சரி….ராஜசேகர் உள் ஒன்று வைத்து புறம் ஒன்றும் பேசும் உங்களுக்கு கண்டிப்பாக தண்டனை உண்டு…. எவன் தப்பு செஞ்சாலும் ஆப்பு தான்,,,,

  11. We went to Palani two years back. The place lost its sanctity. It looks like the world’s biggest trash can. All you see around you is Garbage and trash. There is no place with even a small amount of cleanliness. On the top of the hill the place stinks with urine smell. The people who manage the Palani Kovil are obviously getting paid for doing nothing.

  12. Surya,

    Each year temple spends more than 10Cr in the name of salary. More than 1Cr in the name of cleaning.

    The temple archagas gets the salary of temple watchman. My statement can be easily verified thru RTI.

    You shall file an complaint to the health department on this. Of course it takes huge amount of money and time to punish the culprits. But we have no other way other than doing like this under the administration (i mean HR&CE) of so called sikular …. colonial…. senseless…. indian government,

  13. வினவு ரொம்ப நாளா ஒரு விசயம் சொல்ல வேண்டும் என்று இருந்தேன். உங்கள் வலை தளம் மிகவும் அருமையான முறையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதில் முழுமையான கார்பரேட் ப்ரொவசனலிஸ்த்தை என்னால் அறிய முடிகிறது 🙂

  14. தோழருக்கு வாழ்த்துக்கள்,

    வெகு காலமாக வினவு தளத்தினை தினமும் வாசிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன். வினவினுடைய உரை வீச்சு, கூர்மை, தெளிவு மற்றும் தங்களின் தைரியம் … அற்புதம். கம்யூனிஸ்ட் தோழர்களுக்கே உண்டான தேடிக்கொண்ட வரம் அது, வாழ்த்துக்கள்.

    எனது சொந்த ஊர் மூன்று புறமும் மலைகளால் சூழப்பட்ட அழகான நகரம் பழனி. தமிழர்களின் கடவுளான முருகன் விரும்பியோ விரும்பாமலோ குடிகொண்டிருக்கும் ஊர். எனது ஊரில் சித்தர்கள் வாழ்து வந்ததாக மக்களிடம் அதீத நம்பிக்கை உண்டு மேலும் தை பூசம் மற்றும் பங்குனி உதிரம் போன்ற திருவிழாக்களுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் ஆன்மிக பூமி. அதன் மறு பக்கம் ஏழைகலாலும் ஏமாற்று பேர்வழிகளாலும், அப்பாவிகள் மற்றும் ஆன்மிக பேரொளிகள் நிறைந்த ஊர்.

    ஆன்மிகம் தமிழகத்தில் கல்லா கட்டுவதற்கு பழனி ஒரு நல்ல உதாரணம். இன்னும்நன்றாக தோலுரிக்கலாம் இந்த திருடர்களை…. தகவல் ஆதரஙலுடன் தர நான் தயார்…..

Leave a Reply to சோழன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க