Saturday, July 24, 2021
முகப்பு கட்சிகள் இதர கட்சிகள் விழுப்புரம்: வன்னிய மக்கள் ஆதரவுடன் வன்னிய சாதிவெறிக்கு கண்டனம்!

விழுப்புரம்: வன்னிய மக்கள் ஆதரவுடன் வன்னிய சாதிவெறிக்கு கண்டனம்!

-

விழுப்புரம் ஆர்ப்பாட்டம் 1தர்மபுரி நத்தம் காலனி, அண்ணாநகர்,  கொண்டாம்பட்டி பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடந்த ஆதிக்கசாதிவெறி தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

3-12-12 திங்கள் மாலை 4-30 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் அருகே புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக பா.ம.க.வன்னிய சாதி வெறியாட்டத்தை கண்டித்தும் ஆதிக்க சாதி வெறி வன்னியர் சங்கத்தை தடை செய்ய கோரியும் அதன் சொத்துக்களை பறிமுதல் செய்ய கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதே நாளில் காலையில் சென்னையில் வி.சி.க,சி.பி.ஐ,சி.பி.எம். நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் வன்னிய சாதி வெறியர்களை பெயர் குறிப்பிட்டு தோலுரிக்காத போது, வன்னியசாதிவெறி சங்கத்தையும், ஆதிக்க சாதிவெறி சங்கங்களையும் தடைசெய்யக் கோரியும் அவர்களின் சொத்துக்களை பறித்தெடுக்க கோரியும் விழுப்புரத்தில் நடந்த புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம் உழைக்கும் மக்களிடையே நம்பிக்கையையும், வர்க்க ஒற்றுமையையும் நிலைநாட்டியது.

விழுப்புரம்,கடலூர் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பெருமளவு வன்னியர்கள் குவிந்துள்ளனர்.முன்னதாக இப்பகுதியில் விரிவாக பிரச்சாரம் செய்யப்பட்டு பெருமளவு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.மூன்று நாட்கள் வன்னிய மக்களிடையே செய்த பிரச்சாரம நிதி வசூலில் ரூபாய் 26,000-00 எட்டியது.

ஆர்ப்பாட்டத்திற்கு சற்று முன்பாக தொடர்பு கொண்ட ஒரு பா.ம.க. காரர் நாக்கூசும் வார்த்தைகளால் அர்ச்சித்து விட்டு, “இதொ வரண்டா நீங்கள் எப்படி ஆர்ப்பாட்டத்தை நடத்துறீங்கனு பாத்துறன்” என சவாலாக பேசி தொலைபேசி தொடர்பை துண்டித்து கொண்டார். ஆனால் சவால் விட்டவரின் சுவடி கூட ஆர்ப்பாட்டத்தின் போது காணோம். 600 பேர் வரை செஞ்சட்டைகளுடன் திரண்டு செங்கொடி, முழக்க தட்டிகள், ஆசான்களின் படங்கள், பேனர்களுடன் தோழர்கள் எழுப்பிய முழக்கங்கள் மக்களை ஈர்த்து 700 பேர் வரையிலும் கூடி நின்றனர்.

விழுப்புரம் ஆர்ப்பாட்டம் 2ஆதிக்க சாதிவெறி சங்கங்களை தடைசெய்யக்கோரியும் சொத்துக்களை பறிதெடுக்க கோரியும் எழுந்த முழக்கங்களை ஆதரித்து நின்ற கூட்டத்தினை கண்டு அஞ்சிய பாமக – வன்னிய சாதிவெறியர்கள் குடிக்க செலவழித்து கல்லெறிய தயாரித்து அனுப்பிய கூட்டம், 3 மணி நேரம் நடந்த ஆர்ப்பாட்டத்தின் பொது செய்வதறியாது திகைத்து நின்றது. கடைசி வரை கூடி நின்ற மக்கள் கூட்டம், பேச்சாளர்கள் எழுச்சியுடன் பேசும்போது ஆங்காங்கெ கர ஒலி எழுப்பி ஆதரித்தனர்.

தலைமை தாங்கிய பு.மா.இ.மு. தோழர் மோகன் சுருக்கமாக தர்மபுரி, தாக்குதலை விளக்கி சனநாயக உணர்வு உள்ளவர்கள் வன்னிய சாதிவெறி சங்கத்தை தடைசெய்ய வேண்டும். பா.ம.க. போன்ற சாதி வெறி கட்சிகளை புறக்கணிக்க வேண்டும் என பேசினார். அடுத்து பேசிய திருவண்ணைநல்லுர் வி.வி.மு. அமைப்பாளர் தோழர் அம்பேத்கர் ஓட்டுப்பொறுக்கி கட்சிகள் அனைத்தும் சாதி வெறியை ஊட்டி வளர்ப்பதை விளக்கி அம்பலப்படுத்தினார். மேலும் பிழைப்புவாத தலித் தலைவர்களையும் அம்பலப்படுத்தி நக்சல்பாரியே மாற்று என்று விளக்கி பேசினார். தர்மபுரியில் பாதிக்கப்பட்ட மக்களே நக்சல்பாரிகள் இருந்தவரை ஆதிக்க சாதிவெறி இல்லாதிருந்ததையும் அவர்கள் இல்லாததால் வன்னிய சாதிவெறியர்களின் கொலை வெறியாட்டம் கட்டற்று நடந்துள்ளதையும் சுட்டிக்காட்டியதை எடுத்துக் கூறினார்.

அடுத்து பேசிய புமா.இ.மு. விழுப்புரம் மாவட்ட செயலாளர் தோழர்.செல்வகுமார் பெரியார் படத்தை வைத்துக்கொண்டு அவரது சாதி ஒழிப்புக்கெதிராக சத்திரிய குல வன்னியர் என ஆண்ட பெருமை பேசும் ராமதாசின் பித்தலாட்டங்களை திரை கிழித்தார். இட ஒதுக்கீடு பெருமை பேசும் ராமதாசு தனியார்மயத்தை ஆதரித்து கார்ப்பரேட் நிறுவனங்களின் பகாசுர கொள்ளைக்கு துணை போவதை அம்பலப்படுத்தினார்.சிப்மர் மருத்துவமனையில் இலவச சேவை பெற்று வந்த உழைப்பாளி வன்னியர்கள் மத்திய அமைச்சராய் இருந்த அன்புமணி ராமதாசின் தனியார் மயக்கொள்கையால் இன்று அந்த சேவையை இழந்து தவிக்கும் கோரத்தை உருக்கமாக எடுத்துரைத்தார்.

நாடே மீண்டும் காலனி ஆவதை எதிர்த்து போராடுவதற்க்கு பதில் உழைப்பாளிகளின் சொத்துக்களை சூறையாடும் வன்னிய சாதிவெறியின் கயமைத்தனத்தை தோலுறித்தார். சாதி வெறியாட்டம் மூலம் மக்களை பிளவுப்படுத்தி வர்க்க ஒற்றுமையை சீர்குலைத்து ஆளும் வர்க்கத்திற்கு ராமதாசு சேவை செய்வதை அம்பலப்படுத்திய தோழர், ஆண்ட பரம்பரை என பெருமை பேசும் ராமதாசு ரேசன் கார்டு வேண்டாம்,  பிச்சைக்காசு இலவசப்பொருள் வேண்டாம், தனியார்மயத்தில் காணாமல்போகும் இடஒதுக்கீடு வேண்டாம் என வன்னியர்களுக்கு உத்திரவிட தயாரா என சவால் விட்டார். உழைப்பாளி வன்னியர்கள் ராமதாசைப் புறப்பணிப்பதுதான் உண்மை என்பதைக்கூறி வர்க்க ஒற்றுமைக்கும் மறு காலனியத்தை எதிர்ப்பதற்கும் அறை கூவினார்.

இறுதியில் பேசிய மனித உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ தரும்புரியில் உண்மையை கண்டறியச் சென்ற போது பார்த்த சூழலை விளக்கியதை கேட்ட கூடியிருந்த மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். சந்தடிமிக்க ரயிலடி நிசப்தமானது.

500 பேர் கூட்டத்தை கட்டுப்படுத்த 20 போலிசே போதும். 1500 வன்னிய சாதிவெறியர்களின் வன்முறைக்கு 70 போலிசு பாதுகாப்பு கொடுத்த கொடுரத்தை அம்பலப்படுத்தினார். அந்த போலீசை ஏன் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார். தரும்புரி பகுதியை தொடர்ந்து கண்காணித்து உளவு பார்த்து வரும் கியூ பிரிவு போலிசு வன்னிய சாதிவெறியர்கள் 300 லிட்டர் பெட்ரொல் வாங்கியதையும் ரேசனில் 4 பெரல் மண்ணெண்னையை எடுத்துக் கொண்டதையும் ஏன் தடுக்கவில்லை? வன்னிய சாதிவெறியர்களின் திட்டமிட்ட செயலுக்கு ஆதரவாக இருந்து சூறையாட அனுமதிகத்த கோரத்தினை அம்பலப்படுத்தினார்.

விழுப்புரம் ஆர்ப்பாட்டம் 3வன்கொடுமை தடுப்பு சட்டத்தினை திருத்த வேண்டும் என்கிற ராமதாசின் பொய்ப்பிரச்சாரத்தை முறியடிக்கும் வண்ணம் தமிழகம் முழுவதும் மேலவளவு முருகேசன் கொலை முதல் நடந்த அனைத்து வன்கொடுமைகளிலும் இச்சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படாததை அம்பலப்படுத்தி வன்கொடுமை தடுப்புச்சட்டம் கடுமையாக நடைமுறைபடுத்த வேண்டிய தேவையை வலியுறுத்தினார்.

திருமாவளவன் உட்பட தலித்திய தலைவர்களின் சமரச வாத்த்தை அம்பலப்படுத்தி கேள்வி எழுப்பினார். புரட்சிகர அமைப்புகளின் கீழ் வர்க்க ரீதியாக அணிதிரளுவதெ சாதி, மத, இனவெறிக்கு மாற்று என விளக்கினார். மீண்டும் கண்டன முழக்கங்கள் எழுப்பிய தோழர்கள் சர்வதேசிய கீத்த்துடன் ஆர்ப்பாட்டத்தை முடித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் பிரச்சாரத்தின்போது வன்னியர்கள் பெருமளவு நம்மை ஆதரித்தனர். திருவெண்ணை நல்லுர் ஒன்றிய வி.வி.மு. தோழர்கள் வன்னியர்கள் மிகுதியாக வாழும் ஒரு கிராமத்திற்கு பிரச்சாரம் செய்ய சென்ற போது பா.ம.க. இளைஞர் ஒருவர் தடுத்தார். தோழர்கள் அதை மறுத்துப் பேசியபோது ஒரு உழைப்பாளி வன்னியர் பெண் வந்து அவன் ஒரு தறுதலை பொறம்போக்கு நீங்க எல்லா வீட்டுக்கும் போய் பிரச்சாரம் பண்ணுங்க என்று கூறி அந்த பா.ம.க. காரனை விரட்டி அடித்தார். புதுவையில் தொழிலாளர்கள் பிரச்சாரம் செய்யும்போது ஒருவுர் நமது தோழரை பார்த்து என்ன நீயுமா? நமது சாதி சங்கத்தையே தடைசெய்ய சொல்லிறீயா? என கேள்வி எழுப்பினார். நான் இப்போ தொழிலாளி. நான் மட்டும் இல்ல எனது மனைவி பையனும்கூட இந்த பிரச்சாரத்தில் உள்ளோம். என பதிலளிக்க அவரது உறவினர் வாயடத்து நின்றார். பின்னர் இந்த தாக்குதலை நாங்கள் ஆதரிக்கவில்லை என்று கூறி நன்கொடையும் தந்தார்.

புதுவை பாமக நிர்வாகி ஒருவர் பொதுவாக வன்னிய சங்கத்தை தடைசெய்யக்கூறுவதை கேள்வி எழுப்பி புதுவை வன்னியர் சங்கம் தர்மபுரி தாக்குதலை ஆதரிக்கவில்லை என கைப்பேசியில் தொடர்புகொண்டு தன்னிலை விளக்கம் அளித்தார்.

பிரச்சாரம் செய்த எந்த பகுதியிலும் எதிர்ப்பு ஏதும் இல்லை. மாறாக வரவேற்பும் ஆதரவும்தான் வன்னியர் சங்கத்தை தடைசெய்யக்கோரிய இந்த ஆர்ப்பாட்ட இயக்கத்திற்கு கிடைத்த்து. வன்னியர்கள் மிகுந்த இப்பகுதியில் நடந்த எழுச்சிமிக்க இந்த ஆர்ப்பாட்டம் வர்க்க ஒற்றுமைக்கு குரல்கொடுத்து புதிய சனநாயக புரட்சிக்கு அணி திரள அறை கூவியது.

________________________________________________________________

– தகவல்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விழுப்புரம்
_________________________________________________________

 1. வன்னிய சாதிவெறிக்கு எதிராக வன்னிய மக்களே திரண்டெழுந்து பிரச்சாரத்தில் பங்கு கொண்டு இருப்பது , உழைக்கும் வர்க்க ஒற்றுமையை பரைசாற்றுவதுடன் ராமதாசு போன்ற நச்சு கிருமிகளை அறியா மக்கள் மனதில் இருந்து விரைவில் அகற்றும் எனநம்புவோம்.

 2. அடங்க மறுப்போம்!அத்துமீறுவோம்!திரிப்பி அடிப்போம்! என்று வெத்து சவடால் அடித்தும், கட்டிங்,கட்டபஞ்சாயத்து பிழைப்புவாதம் என திரிந்துபோன தலித் அமைப்புகளை அம்பலப்படுத்துவதும் அவசியமாகிறது.
  ௨ழைக்கும் வர்க்கமான தலித் மற்றும் வன்னிய சாதி மக்கள் சாதியத்தை மறுத்து வர்க்கமாக ஒன்றினைந்து சாதிய இயக்கங்களை புறக்கணிக்க வேண்டும்.
  வர்க்கப்போராட்டம் தோற்றதாக சரித்திரம் இல்லை!
  போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

 3. அடங்க மறுப்போம்!அத்துமீறுவோம் என்று சவடால் அடித்தும், கட்டிங்,கட்டபஞ்சாயத்து பிழைப்புவாதம் என திரிந்துபோன தலித் அமைப்புகளை அம்பலப்படுத்துவதும் அவசியமாகிறது.

 4. வன்னிய சாதிவெறியை மட்டும் விளாவாரியாக எழுதும் வினவுக்கு, தலித் சாதிவெறி தெரியாமல் போனது ஏன்? கடந்த தேவர் ஜெயந்தி அன்று மதுரை அருகே வேனில் சென்றவர்களை பெட்ரோல் குண்டு வெடிப்பும், பரமக்குடி அருகே பைக்கில் சென்றவர்களை கல்லாலேயே அடித்து கொன்ற தலித் சாதிவெறி தெரியாமலே போனது ஏனோ? நீங்கள் சாதிவெறியை கண்டிக்கிறீர்கள் என்றால், ஒட்டுமொத்த சாதிகளின் வெறியையும் கண்டிக்க வேண்டுமல்லவா? ஆனால், அதை நக்சல்பாரிகள் செய்ய மறுப்பதேன்? தலித்தியத்தால் மட்டும்தான் நக்சல் வழியை ஏற்படுத்தமுடியும் என்ற மாயையிலிருந்து நீங்கள் முதலில் வெளியே வாருங்கள். தலித்தியம் பேசும் பலர், சுகபோக அரசு பதவிகளில் இருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் அறியாமல் இருந்திருக்க முடியாது.

  எனது கேள்வி இதுதான்,

  வினவு தளமானது என்பது நக்சல் கொள்கைக்காகவா? மக்களை சுரண்டும் மக்களாட்சிக்கு எதிராகவா?
  ஒடுக்கப்பட்ட மக்களுக்கானது நக்சல் என்றால், சலுகைகளாலும் – சட்டத்தாலும் ஒடுக்கபடும் மக்கள் பெரும்பாலும் தலித் அல்லாதவர்கள் தானே? அதை ஏன் நீங்கள் தட்டிகேட்கவில்லை.

  ஒரு சாதி சார்ந்த நபர்களை மட்டுமே வைத்து எதையுமே சாதிக்க முடியாது. தலித்தியம் பேசுவதும் அப்படித்தான். ஒட்டுமொத்த சாதிவெறியையும் கண்டிக்க கூட திராணி இல்லாத உங்களை பலர் வெறுக்கத்தான் செய்வார்கள்.

  தலித்தியம் சார்ந்த பள்ளர் இனமக்கள் இன்று தேவேந்திர குலமாக மாறிஆண்ட சாதி – ஆதிக்க சாதி என்று புது கதையை கூறி வருவதையும், அதன்மூலம் ஏற்படும் சாதிவெறியின் உச்சத்தையும் இனிவரும் காலங்களில் இந்த தமிழகம் பார்க்கத்தான் போகிறது. அப்போதும், வினவு வேடிக்கைத்தான் பார்க்கும் என்பது என்னுடைய அனுமானம். ஏனென்றால், வினவின் பின்புலமாகவும், அதில் இருக்கும் பெரும்பாலன நபர்களும் தலித் சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதால்.

 5. இரா.ச.இமலாதித்தன்

  என்னய்யா நீர். ”அதுதான் திருப்பி அடிக்கும் தர்மம்” என்பதில் அது சேர்ந்துவிட்டது என்று சப்பைக்கட்டு கட்டிவிட்டார்களே. இவனுக்கு வந்தா ரத்தம் அவனுக்கு வந்தா தக்காளி சட்னி – இதுதான் வினவு. ஆமா தலித்கள் அப்படித்தானே சிந்திக்க முடியும்.

 6. இமலாதித்தன் முகில் அவர்களுக்கு

  இந்து மத வர்னாசிரம தர்மப்படி பிரம்மாவின் காலில் பிறந்தவன் சூத்திரன் என்றும் 2000 ம் ஆண்டுகளாக சாதியப்படிநிலையில் கீழ்நிலையிலும், தீண்டத்தகாதவர்கள், பார்தால் பாவம் தொட்டால் தீட்டு ௭ன்று சேரிகளில் ஒதுக்கி வைக்கப்பட்ட அநீதியை நீங்கள் அனுபவதித்ததுண்டா?
  பறையன் பள்ளன் சக்கிலி வெட்டியான் இழிபிறவி ௭ன சாதியின் பெயரால் ஏச்சும் பேச்சும் கேட்டதுண்டா?
  ஆண்டைக்கு 2000 ம் ஆண்டுகளாக அடிமை வேலை செய்ததுண்டா?
  சாதிய இந்துக்களின் தெருக்களில் செருப்பு அணிவதும் துண்டணிவதும் குற்றம் ௭ன்பதை நீங்கள் ஏற்பீர்களா?
  தாழ்தப்பட்ட பெண்கள் தோள் சீலை அணிக்கூடாதென்பதை உங்கள் வீட்டுப் பெண்கள் ஏற்பார்களா?
  இவையெல்லாம் குற்றம் இல்லையென்றால்..

  ”அத்துமீறுவதும் அடங்க மறுப்பதும் திருப்பி அடிப்பதும்” குற்றமாகாது

  எந்த சாதி மதத்தையும் ஏற்பவர்களல்ல நாங்கள்!

  ௨ழைக்கும் மக்களின் ஒற்றுமைக்கும் அவர்களை வர்க்கமாக அணிதிரட்டி சமூக அவலங்களுக்கெதிராக போராடுபவர்கள்.

  • திரு.ஸ்டாலின் அவர்களே நீர் எங்கு பார்த்தீர், தலித்துகள் செருப்பு போடாமல், பெண்கள் தோள் சீலை கட்டாமல் உயர்சாதி இருப்பிடங்களில் செல்ல முடியவில்லை என்று??
   //”அத்துமீறுவதும் அடங்க மறுப்பதும் திருப்பி அடிப்பதும்” குற்றமாகாது//
   மற்றவர்களை நீங்கள் வன்முறைக்கு அளிப்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது

 7. ஆமாம், எப்படிபட்ட தொல்லைகள் கொடுத்தாலும், பெண் பிள்ளைகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டாலும், எவ்வளவு கட்டபஞ்சாயத்து பண்ணினாலும், அமைதி காக்க வன்னியர்கள் திரண்டு எழுந்து வாருங்கள். வாழ்க வினவின் நடுநிலை.

 8. அடங்கமருத்தால்/அடங்கும்வரை அடி, அத்துமீரினால்/அமைதியாகும்வரை அடி, திருப்பி அடிக்க நினைத்தால்/கொன்ட்ருவிடு. வீர வன்னியன்டா

 9. உங்கலுக்கு அரசியல் செய்யவும், இயக்கத்தை வளர்க்கவும் இது சரியான நேரமாகவும், ரொம்ப வசதியாவும் போச்சு. நத்தம் பகுதியில் தோழர் சின்னதம்பி சொல்வது உண்மை அல்ல.சரியான காரணம் ,நிஜமான உண்மை தெரியுமா உங்களுக்கு, உங்கள மாதிரி ஆளுங்களால தான் அவர்களின் அராஜகம் அதிகம் ஆனது, அவர்கள் பி சி ஆர் சட்டத்தை வைத்துக்கொண்டு செய்யும் அட்டகாசம் உங்களுக்கு தெர்யுமா,அப்படியே வந்தாலும் தோழர்ன்னு தெரிந்தவுடன் வணக்கம் சொல்லிட்டு போய்டுவாங், மத்த சாதாரண மக்கள் படும் பாடு தெரியுமா உங்களுக்கு

  நச்சல்பாரி அமைப்புகளிலும் அதிகம் தியாகம், அழித்தோழிப்பு அனைத்திலும் தியாகிகள் வன்னியர்களே, வேண்டும் என்றால் வட தமிழ்நாட்டில் நச்சல் இயக்கத்துக்காக அதிகம் தியாகம் செய்தவர்கள் , துரோகம் செய்தவர்கள் , காட்டிக்கொடுதவர்கள், தோழர்களுக்கு சோறு போட்டவர்கள்,உதவி செய்தவர்கள், இயக்கத்தை வீண் செய்தவர்கள்,பையன்படுத்திக்கொன்டவர்கள் யார் ,எந்த சாதின்னு கொஞ்சம் பாருங்க …………….நீங்க சாதி பாக்கலன்னாலும் ஒரு சின்ன ஆய்வு செய்யுங்க …………………

  அடுத்ததா உங்களுக்கு விடுதலை சிறுத்தை அமைப்பின் மாநில பொறுப்பாளர் ஒருவர் ஒரு அப்பாவி ஐ கைபேசியில் மிரட்டுவதை கேட்க வேண்டுமா ……………உங்க மெயில் ஐடிக்கு அந்த ஆடியோ அனுப்புறேன் கேளுங்க தோழர்களே பேசுறது மட்டும்மல்ல உண்மையா சாதி வெறி இல்லாதவங்க நாங்க மட்டும்தான் பழகி பாருங்க தெரியும் ………………………….எந்த அமைப்பில் இருந்தாலும் தலித் இல் மட்டும் தான் தனது சாதி வெறி உடன் பிறந்தது உங்கள் அமைப்பில் கூட …………யோசிச்சு பாருங்க தோழர்களே

  • @சரவணன்
   விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொறுக்கி அரசியலில் சீரழிந்து வரும் ஒரு புதிய கட்சி அவ்வளவு தான். மற்றபடி தலித் மக்களுக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. திருமாவே அதை தலித் கட்சி இல்லை என்கிறார். எனவே வி.சி செய்யும் கட்டப்பஞ்சாயத்து,பொறுக்கித்தனங்களுக்கு எல்லாம் தலித் மக்களை பொறுப்பாக்காதீர்கள்,அவர்கள் மீதும் சுமத்தாதீர்கள்.

   தலித் மக்கள் மீதான ஆதிக்க சாதி வெறுப்பு தான் அவர்களை வி.சி யின் சீரழிவுகளோடு ஒப்பிட்டு இழிவுபடுத்தத் துடிக்கிறது.

   வன்னியர்களின் தியாகத்தை பற்றி பேசும் நீங்கள் நாகரீகமற்ற காட்டுமிராண்டிகளைப் போல நடந்து கொள்ளும் வன்னிய சாதிவெறியர்களை பற்றி பேசாமல் வாயை மூடிக்கொண்டிருப்பது ஏன் ?

 10. மாதேஷ்
  எங்கள் கிராமத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரும்பான்மை வன்னிய சாதி மக்கள் வாழும் தெருக்களில் தாழ்தப்பட்ட மக்கள் செல்கிறபோது செருப்பு அணிவது துண்டை தோலில் போட்டு நடப்பது குற்றம் ௭ன்பது எழுதப்படாத சட்டம்.இன்றைக்கும் கிராம குலதெய்வ ஊர்வலமோ தேரோ தலித் மக்கள் பகுதிக்கு செல்லாது வேண்டும் என்றால் உங்கள் வீட்டுப்பாட்டன்மார்கள் அல்லது ஊரில் உள்ள ஆதிக்க சாதி பெரியவர்களை கேட்டுப்பாருங்கள் சாதியத்திமிரோடு கதை போல சொல்வார்கள் தாழ்தப்பட்ட மக்களை எப்படியெல்லாம் ஒடுக்கினார்கள் என்று.
  இன்றைக்கும் தென் மாவட்டங்களில் இரட்டை டம்லர் முறை இருப்பது ௨ங்களுக்கு தெரியாதா?
  பாப்பாபட்டி கீரிப்பட்டி நாட்டார்மங்களம் ௨த்தபுரம் பகுதிகளில் நடப்பது எண்ண ௭ன்பது ௨ங்களுக்கு தெரியாதா?
  கீழ் வெண்மனி தின்னியம் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் படுகொலை வாச்சாத்தி மக்கள் அனுபவித்த கொடுமைகள் பரமக்குடி, தர்மபுரி, கடலூர்,விழுப்புரம் பகுதிகளில் நடந்தது எண்ண தாங்கள் அறியாததா?
  தூங்குபவர்களை எழுப்பலாம்!நடிப்பவர்களை எண்ண செய்யமுடியும்!!
  யாருப்பா வன்னியா
  நரி இன்னொரு முறை ஊலையிட்ரோவ்!

  • தர்மபுரியில் நடந்ததை தெரிந்துகொண்டு எழுதுங்கள், கடலூரில் என்ன நடந்தது?

 11. தலித், நாகரிகம் இல்லாதவங்க …… அப்படிய இருந்துட்டு போங்களன்….. உங்களுக்கு எல்லாம் எதுக்குடா வாழ்கை? Dalit meant for slaves only…… why they need upper caste life….under ramdoss, all the caste party leader’s will soon eliminate dalit people’s and vinavu

 12. திசைவழியறியாத கூட்டத்தை வைத்துப் பல பிரச்சினைகளை சந்தித்து, கருணாநிதி அரசால் ஏவிவிடப்பட்ட அடக்குமுறைகளை எதிர்கொள்ள அமைப்பின் – அணிகளின் பலமுமின்றி, இறுதியில் இதையே காரணமாகக் கூறி தேர்தல் அரசியலில் நுழைந்தார். அத்துடன் அவரது தலித் அரசியல் முடிவுக்கு வந்து, பிழைப்புவாத அரசியல் அத்தியாயம் ஆரம்பித்தது.
  ’98 தேர்தலில் அயா மூப்பனாரோடு கூட்டணிக் கட்டிக் கொண்டு சிதம்பரம் தொகுதியில் நின்றார். இதற்கு நன்றிக் கடன் செலுத்தும் விதத்தில் தஞ்சை மாவட்டத்தில் கூலி விவசாயிகளையும், தாழ்த்தப்பட்ட மக்களையும் ஒடுக்கி வரும் குடும்பத்தைச் சேர்ந்த மூப்பனாரை புரட்சித் தலைவர் என்றார். அதன்பின் போயஸ் தோட்டம், கோபாலபுரம் என மாறி மாறி தாழ்த்தப்பட்ட மக்களின் சுயமரியாதையை அடகு வைத்து, ஓரிரண்டு தொகுதிகளை வென்றார். இக்காலத்திற்குச் சற்று முன்னர்தான் கொடியங்குளம் ஆதிக்கசாதி கலவரம், மாஞ்சோலைப் படுகொலை எல்லாம் இரு கழக அரசுகளால் நடத்தப்பட்டிருந்தன.
  அப்புறம் பாப்பாப்பட்டி, மேலவளவு, திண்ணியம் முதலான வன்கொடுமைகள் நடந்த போது, சிறுத்தைகள் அதை வைத்துத் தமது சொல்வாக்கை வளர்த்துக் கொள்ளத்தான் முனைந்தனர். மேலவளவு முருகேசன் கொலை வழக்குகூடத் தன்னார்வ வழக்கறிஞர்களால் நடத்தப்பட்டு, தண்டனை வாங்கித் தரப்பட்டது. இதற்குள் அண்ணன் எல்லா ஆதிக்க சாதி பிரமுகர்களுடனும் ஐக்கியமாகிவிட்டார். சேதுராமனுடன் கை தூக்கி போஸ் கொடுத்ததென்ன, ராமதாசுடன் சேர்ந்து தமிழ் இயக்கம் கண்டதென்ன, பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு விடுமுறை கோரியதென்ன என்று பலவற்றைப் பட்டியிடலாம்.

 13. ஆஹா… வந்துடுச்சிடா ஒரு ஜாதிக்கலவரம்.. என்று மகிழ்ச்சியுடன் கல்லாக்கட்டக் கிளம்பி விட்டார்கள் அனைத்து முற்போக்குகளும்..பொய்களை மட்டுமே எழுதிப் பிழைப்பு நடத்தும் பத்திரிகைகளும் டி.ஆர்.பி ரேட்டிங்கைத் தவிர மற்ற எவனைப்பற்றியும் கவலைப்படாத தொலைக்காட்சி ஊடகங்களும் தங்கள் பங்குக்கு வழக்கம்போல் கொம்பு சீவத்தொடங்கிவிட்டனர்.

  இந்த ஊடகங்கள் ஊதித்தள்ளும் பொய்களை நம்பிக் கொண்டு உண்மையான நடுநிலைவாதிகளும் கவலை முகங்களோடு என்ன ஆச்சோ ஏது ஆச்சோ என்று ஜாதி ஒற்றுமைப் புராணம் பாடத் தொடங்கி விட்டார்கள்.

  தருமபுரியில் கலவரம் 300 குடிசைகள் சாம்பல் என்று முதல் முதலில் பொய்ப்பரப்புரையை தொடங்கி வைத்த ஊடகம்.. உலகப் புகழ் பெற்ற புதிய தலைமுறைதான். புதிய தலைமுறை பொய் சொல்லுமா? என்று குறுக்குக் கேள்வி கேட்பவர்களுக்கு அது இந்த விசயத்தில் பொய் சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதைக் கடைசியாகச்சொல்கிறோம்.

  300 குடிசைகள் எரிப்பு 50 வாகனங்கள் எரிப்பு என்று இடைவிடாமல் பிரச்சாரம் செய்தது புதிய தலைமுறை. மற்ற செய்திகளை சேகரிப்பது போல சம்பவம் (கலவரம்) நடந்த இடத்திற்கு தனது நிருபரை அனுப்பி நேரடிக் காட்சியாகக் காட்டியதா புதிய தலைமுறை என்றால் இல்லை.

  உடனடியாகத்தான் காட்டவில்லை பிறகாவது காட்டியதா என்றாலும் இல்லை.

  மறுநாள் தினசரி பத்திரிகைகளும் அதனதன் விருப்பத்திற்கு எண்ணிக்கையைக் கூட்டிக் குறைத்து செய்திகளை வெளியிட்டு பெரிய கலவரம் நடந்துவிட்டதாக பிரச்சனையைக் கூர்தீட்டி விட்டன. இப்படி எழுதிய பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் இருதரப்பு நியாயங்களையும் வெளியிட்டதா என்றால் இல்லை. ஒரு தரப்பு செய்தியை மட்டும் கூட்டியும் குறைத்தும் வெளியிட்டுக்கொண்டிருந்தன.

  • நடுநிலை என்று காட்டிக்கொள்ளும் எல்லோரின் முகமும் தருமபுரி சம்பவத்தில் வெளுத்துவிட்டது.

   • தினமணி, ஆங்காங்கே சும்மா விரிசல்கள்தான் என எழுதியது எனவே அதை நம்பலாமா ஆனந்த்

 14. தமில்நாட்டுல எல்லோரும் வன்னியருக்கு எதிரா பேசி அவங்கலை ஒன்னாக்கும் முயர்சியில் இரங்கி இருக்கிரீர்கல்.அவங்க ஒன்னா ஆயிட்டா அவ்வலவுதான்.ஓசிச்சிக்குங்க.

 15. ஒய் ஆர்எஸ்எஸ் அம்பி

  நோக்கு ஏண்டா அவாளோட வம்பு தலித்னாளே நாகரீகம் இல்லாதவா கழனி காட்ல வேல செய்ரவா நம்மலாட்டம் அமெரிக்கால போய் அவுத்துப்போட்டு ஆட்ரவா இல்லடா
  ஒபாமா காலநக்க அவாலுக்கு தெரியாதுடா! நம்ம பெரியவா மாதிரி கோயில்லையே போட்டுத்தள்ள தெரியாதுடா!நம்ம சின்னவா தேவநாதன் மாதிரி பகவான் முன்னக்கவே காமலீலா பண்னத்தெரியாதுடா!ஆயிரம் இருந்தாலும் அவாளுக்கு நாகரீகம் தெரியாதுடா அம்பி…

 16. வெண்மணி நினைவு நாளான இன்று, ஆதிக்க சாதி வெறியாட்டங்களை எதிர்த்து

  “வெண்மணி தியாகிகளின் நினைவை நெஞ்சிலேந்துவோம்! ”
  சொந்த சாதி மக்களை காவு கொடுக்கும் சாதி அரசியல் அழிவைத் தரும்!
  உழைப்பாளி மக்களை வர்க்கமாய் திரட்டும் கம்யூனிச எழுச்சியே விடிவைத்தரும்”

  என்ற தலைப்பில் விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு-புதுச்சேரி. ஆகிய புரட்சிகர அமைப்புகள் புதுச்சேரி, திருப்புவனையில் பேரணி- பொதுக்கூட்டம், புரட்சிகர கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் இந்தப் பொதுக்கூட்டத்தை நடத்த விட மாட்டோம் என்று அப்பகுதியிலுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பிரச்சனை செய்து வருகின்றனர். காவல் துறை முதலில் பேரணி- பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கொடுத்து விட்டு, இப்போது பொதுக்கூட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்காமல், கூட்டத்தை நடத்த என்று அனுமதி மறுப்பு என்று அறிவித்திருக்கிறது. காவல் துறையின் தடையை மீறிக் கூட்டத்தை நடத்துவோம் என்று தோழர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

 17. வினவில் எழுதும்போது “வன்னிய ஆதிக்க சாதிவெறி” என்று எழுதுகிறார்கள். ஆனால், பொது இடத்தில் போராட்டம் நடத்தும்போது வெறுமனே “ஆதிக்க சாதிவெறி” என்று பேனர் வைப்பது ஏன்?

  • காடுவெட்டி குருவை கைது செய் ! வன்னியர் சங்கத்தை தடை செய் !!
   க்ட்ட்ப்://ந்ந்ந்.வினவு.சொம்/2012/12/07/க்ர்ப்ச்-அர்பட்டம்-fஒர்-ட்கர்மபுரி-ரெபொர்ட்/

   இது தான் ஆர்ப்பாட்டத்தின் மைய முழக்கம். இதையெல்லாம் ? பார்க்கவில்லை?

 18. @சரவணன்
  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொறுக்கி அரசியலில் சீரழிந்து வரும் ஒரு புதிய கட்சி அவ்வளவு தான். மற்றபடி தலித் மக்களுக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. திருமாவே அதை தலித் கட்சி இல்லை என்கிறார். எனவே வி.சி செய்யும் கட்டப்பஞ்சாயத்து,பொறுக்கித்தனங்களுக்கு எல்லாம் தலித் மக்களை பொறுப்பாக்காதீர்கள்,அவர்கள் மீதும் சுமத்தாதீர்கள்.

  தலித் மக்கள் மீதான ஆதிக்க சாதி வெறுப்பு தான் அவர்களை வி.சி யின் சீரழிவுகளோடு ஒப்பிட்டு இழிவுபடுத்தத் துடிக்கிறது.

  வன்னியர்களின் தியாகத்தை பற்றி பேசும் நீங்கள் நாகரீகமற்ற காட்டுமிராண்டிகளைப் போல நடந்து கொள்ளும் வன்னிய சாதிவெறியர்களை பற்றி பேசாமல் வாயை மூடிக்கொண்டிருப்பது ஏன் ?

  என்னங்க இப்படி சொல்றிங்க தலித் மக்களுக்கான மருத்துவ மேல் படிப்பிற்கு இட ஒதுக்கீடு,அமைச்சர் பதவிகள்,சமூக ஒற்றுமை மாநாடு நடத்தியது இதெல்லாம் எதற்க்காக இரண்டுஅடித்தளத்தில் இருக்கும் மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதுதான் அதை புரிந்துகொள்ளாமல் அந்தஅமைப்பை சார்ந்தவர்கள் செய்யும் அட்டகாசம்தான் அதிகம்.

  வன்னிய சாதி வெறியர்கள் பற்றி பேசாமல் இருப்பது ஏன் என்று கேட்குறீங்க சாதிஉணர்வு இருப்பது வேண்டுமானால் இருக்கிறது என்று சொல்லுங்க, சாதி வெறி எங்கேஇருக்கிறது

  நத்தம் சம்பவம் முழுக்க சாதி வெறியால் அல்ல நீங்கள் சரியாக ஆய்வு செய்திருக்கமாட்டீர்கள் நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது. வெள்ளாளப்பட்டி, செல்லன்கொட்டாய், வாணியம்பாடியான்கொட்டாய்,பழையூர்,கொண்டம்பட்டி, ஒன்னியம்பட்டி,மொளகானூர், கதிர்நாயக்கன்பட்டி போன்ற கிராமங்களில் இருக்கும் மக்களிடம் கேளுங்கள், நத்தம் கிராமத்தில் பெரியார்களிடம் விசாரியுங்க

  தலித் பாதுகாவலர்கள் என்று சொல்லும் விசி க்களின் முகத்திரை விரைவில் கிழியும்

  விடுதலை சிறுத்தைகளின்அத்து மீறல்கள், அடங்க மறுத்தல், திமிறி எழுதல், திருப்பி அடிப்பதை பாரீர்,பாரீர்.

  தீண்டாமைக் கொடுமைக்கு பாதுகாப்புக்கான சட்டம் சாமனியனை அழிக்கும் ஆயுதமாகும் அபாயம், அவலம்

  வணக்கம்,
  தருமபுரி சம்பவம் ஒன்று….. இத்துடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை அமைப்பு ஒன்றில் மாநில நிர்வாகி என்று சொல்லிக்கொள்ளும் ஒருவரின் சகோதரர் சிவநேசன் என்பவர் தனது கல்லூரியில் படிக்கும் மாணவியை காதலிக்க சொல்லி வற்புறுத்துகிறார்,அதற்க்கு அம்மாணவி சம்மதிக்கவில்லை தொடர்ந்து தொந்தரவு செய்யவே அம்மாணவி படிப்பை நிறுத்திவிட்டு ஊருக்கு சென்று விடுகிறாள்.

  அதன் பின்பு சிவநேசன் அம்மாணவியின் ஊருக்கு சென்று தொந்தரவு செய்கிறான் ஊர்க்காரர்கள் விசாரிக்கும்போது கைகலப்பு ஏற்ப்பட்டு காவல் துறை வரை புகார் போகிறது

  இதை வைத்து அம்மாணவனின் அண்ணன் மெத்த படித்தவர் கல்லூரியில் பேராசிரியர் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை அமைப்பொன்றில் மாநில பொறுப்பாளர் என்றும் கூறப்படுகிறது

  மேற்க்கண்ட மாநில பொறுப்பாளர் சம்பந்தப்பட்ட ஊரை சார்ந்த ஒருவரிடம் கைபேசியில் மிரட்டி பேசுவதை தயவு செய்து அவசியம் கேட்கவேண்டுகிறோம்.

  பாதுகாப்புக்கான சட்டம் எப்படி ஆயுதமாக பாய்கிறது என்பதை கேளுங்கள்.

  தருமபுரி சம்பவம் இரண்டு………………விடுதலை சிறுத்தையின் மாவட்ட துனைப்பொருப்பில் இருக்கும் கும்மனூர் இராஜகோபால் என்பவர் தனது கட்சிக்காரர் காவல் நிலையத்தில் கொடுத்திருக்கும் பொய்ப் புகாரை திரும்பப் பெற சிம்பிளா கேட்கிறார் வெறும் 5லட்சம்தான் கேளுங்க

  ஆடியோ ஆதாரம் வேண்டுமெனில் உங்கள் மெயில் ஐடிய மறுமொழியில் போடுங்க

 19. விருத்தாசலம் பகுதியில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த முருகேசனும், வன்னியர் சாதியைச் சேர்ந்த கண்ணகியும் காதல் திருமணம் செய்ததற்காக கட்டி வைத்து நஞ்சூற்றிக் கொல்லப்பட்ட வழக்கில் கூட, வன்னிய சாதி வெறியர்களைத் தண்டிக்கக்கோரிப் போராடுவதற்குப் பதிலாக, அவர்களுடன் பஞ்சாயத்து செய்து சுமூகமாகப் போகுமாறு முருகேசனின் சொந்தங்களுக்கு சிறுத்தைகள் நெருக்குதல் கொடுத்தனர்

 20. இந்த ரவுடிகளை வைத்துப் பிழைக்கும் பிரமுகர்களைச் சுற்றி பெருங்கூட்டமா இருக்கும் தொண்டர்கள் எலும்புகளைக் கவ்வியவாறு சுற்றி வருகின்றனர். இப்படி வசூலிப்பதற்கென்றே ஒரு கட்சியும், கூட்டமும் உருவாகிவிட்டது. பல இடங்களில் வர்த்தகர்களும், முதலாளிகளும் எதற்கு வம்பு என்று பணம் தருவதோடு, சிலர் கட்சியிலும் சேர்ந்து வருகின்றனர். தற்போது திருச்சொந்தூரில் உள்ள சொந்திலாண்டவன் கோவிலில் பூசை சேயும் பார்ப்பனர்களும் சேர்ந்திருக்கிறார்கள். பலருக்கு இது அதியமாகப்படலாம். உண்மை என்னவென்றால், எல்லா பிரபலமான கோவில்களிலும் உள்ள பூசாரிகள் பக்காவான லும்பன்களாக இருப்பார்கள். கை நிறைய காசு, அதை அனுபவிப்பதற்கு வசதிகள் – இப்படி உழைக்காமலேயே தொந்தி வளர்க்கும் கூட்டம், தனது பாதுகாப்பிற்காக சிறுத்தைகளிடம் சேர்ந்ததில் வியப்பில்லை. மேலும், பார்ப்பனர்கள் – தலித் கூட்டணி என்ற மாயாவதிக் கட்சியின் தமிழக கிளைக்கு போட்டியாகக்கூட இதைக் கருதலாம்

 21. அவரது கட்சித் தலைமையகம் கூட அவரது தாயாரின் பெயரில் பதிவாகி, தற்போது அது ஒரு ஆக்கிரமிப்பு என வழக்கே நடந்து வருகிறது. வழக்கிற்கு வராத சுருட்டல்கள் எவ்வளவென்று தெரியவில்லை. ஏற்கெனவே உலகமயத்தால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக வேலைகள் குறைந்துவரும் நேரத்தில், சேரியில் இருக்கும் உதிரியான இளைஞர்களுக்கு இப்படி ஒரு வாழ்வு சிறுத்தைக் கட்சியில் சேர்ந்தால் கிடைக்கிறது. ஓரிரு ஆண்டுகளிலேயே அடுக்குமாடி, ஸ்கார்பியோ கார், பரிவாரங்கள் என இதில் பலர் முன்னுதாரணங்களாக இருக்கிறார்கள்.

 22. ஒரு சாதி சார்ந்த நபர்களை மட்டுமே வைத்து எதையுமே சாதிக்க முடியாது. தலித்தியம் பேசுவதும் அப்படித்தான். ஒட்டுமொத்த சாதிவெறியையும் கண்டிக்க கூட திராணி இல்லாத உங்களை பலர் வெறுக்கத்தான் செய்வார்கள்.

Leave a Reply to pandiya பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க