Saturday, May 10, 2025
முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்சிபிசி கம்பெனியின் முதலாளித்துவ பயங்கரவாதம் !

சிபிசி கம்பெனியின் முதலாளித்துவ பயங்கரவாதம் !

-

டந்த டிசம்பர் 31ம் தேதி கோயம்புத்தூர் துடியலூர் பேருந்து நிலையத்தில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

சிபிசி கம்பெனியின் முதலாளித்துவ பயங்கரவாதம் – முறியடிக்க அணிதிரள்வோம்

தொழிலாளர் போராட்டம்அன்பார்ந்த தொழிலாளர்களே,

கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் அமைந்துள்ள கோயமுத்தூர் பிரிமியர் கார்ப்பரேஷன் (CPC) கம்பெனியில் கடந்த 30 வருடங்களாக எந்தவொரு தொழிற்சங்கமும் இல்லை. தொழிலாளர்களுக்கு மிகக் குறைந்த சம்பளம் கொடுக்கப்பட்ட கடுமையாக சுரண்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள். 30 வருடம் வேலை செய்த தொழிலாளிகளுக்கு மாதச் சம்பளம் ரூ 8 ஆயிரத்தைக் கூட தாண்டவில்லை.

சம்பளம் மட்டுமல்ல முறையான கழிப்பிடம் இல்லை. ஓய்வு விடுதி ஒழுங்காக இல்லை. தாங்கள் கொண்டு வந்த சாப்பாட்டைக் கூட சாப்பிட வசதி இல்லை. கடுமையான வெப்பத்தில் வேலை செய்ய வேண்டிய கொடுமையான நிலை நிலவி வந்தது. தொழிலாளர்கள் சங்கமாகச் சேர்ந்து இதனைத் தட்டிக் கேட்டனர். இதனால் நிர்வாகம் கடும் கோபம் அடைந்து தொழிலாளர்களின் ஒற்றுமையை உடைக்க ஆயிரம் வழிகளில் முயற்சி செய்து கொண்டுள்ளனர்.

கம்பெனிக்குள் நிலவும் இக்கொடுமைகளை தொழிற்சாலை ஆய்வாளரிடம் முறையாக புகார் செய்யப்பட்டது. அவரும் இதனை விசாரித்து தொழிலாளர் தரப்பில் நியாயம் இருப்பதை உணர்தந்தனர். எனவே CPC கம்பெனியின் மீது நடவடிக்கை எடுத்து ரூ 45,000 அபராதம் விதித்தார். இப்படியாக அரசாங்கத்துக்கு அபராதம் கூட கட்டுவோம்; ஆனால் தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்த்திக் கொடுக்க மாட்டோம் என்பதுதான் நிர்வாகத்தின் கொடூரமான நிலைப்பாடு.

சங்கத்தைக் கலைத்து விட்டு வாருங்கள்; உங்களுக்கு சகலமும் தருவோம் என்கின்றனர். முப்பது வருடங்களாக நிர்வாகத்தை நம்பி சங்கமே இல்லாமல் இருந்த தொழிலாளிகளுக்கு என்ன கொடுத்தீர்கள்? என்று கேட்டால் எந்தப் பதிலும் இல்லை.

2011-12ம் நிதியாண்டிற்கான பேலன்ஸ் ஷீட் (நிதிநிலை அறிக்கை) CPC கம்பெனி நிர்வாகம் கொடுத்துள்ளது. அதனை ஆய்வு செய்து பார்த்தோம், 20ம் பக்கத்தில் லாப நஷ்டக் கணக்கு விபரம் உள்ளது (Statement of Profit and Loss) அதில் Employee Benefits Expenses எனும் வகையில் ரூ 5,63,36,000 தொழிலாளர்களுக்கு கொடுத்ததாக கணக்கு எழுதியுள்ளனர். திரு கோபால் அய்யர் அவர்கள் தணிக்கை செய்துள்ளார். கம்பெனியில் வேலை செய்யும் 150 தொழிலாளர்களுக்கும் மாதம் ரூ 20,000 சம்பளம் கொடுத்தாலும் இதனை எட்டிப் பிடிக்க முடியாது. எனவே மரியாதைக்குரிய (P.M.) திரு K ஜெயவீரன் அவர்கள் இதனைத் தெளிவுபடுத்த வேண்டும்.

CPC நிர்வாகம் தொழிற் தகராறுகளை நியாயமான முறையில் பேசித் தீர்க்க வேண்டும். அதை விடுத்து எந்த விசாரணையும் இல்லாமல் சங்க நிர்வாகிகளிடம் உண்மைக்கு மாறான தகவல்களை சொல்லக் கூடாது.

நக்சல்பாரியை விலைக்கு வாங்கக் கூடிய ரூபாய் நோட்டை இந்திய ரிசர்வ் வங்கி இன்னும் அச்சடிக்கவில்லை என்பதை நினைவில் நிறுத்துங்கள்!

பிறவியிலேயே கண்தெரியாத மனிதருக்கு சூரியோதயத்தை சொல்லி புரிய வைக்க முடியாது!

கண்டன ஆர்ப்பாட்டம்

இடம் : துடியலூர் பேருந்து நிலையம்
நாள் : 31-12-2012 மாலை 5.30 மணி
தலைமை : தோழர் P இராஜன், மாவட்டத் தலைவர்

உரை வீச்சு :
தோழர் P ஜெகநாதன்
தோழர் கோபி
தோழர் பூவண்ணன்

கண்டன உரை:
தோழர் விளவை இராமசாமி, மாவட்டச் செயலாளர்

நன்றியுரை :
தோழர் R பத்ரப்பன், CPC கிளைச் செயலாளர்

தகவல் : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, கோவை மாவட்டம்
தொடர்புக்கு : 96297 30399

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க