privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்ஒரு பெண் ஒரு பொறுக்கியை எதிர்க்க முடியுமா ?

ஒரு பெண் ஒரு பொறுக்கியை எதிர்க்க முடியுமா ?

-

பெண்களுக்கு எதிரான பாலியல் அச்சுறுத்தல்களுக்கும் வன்முறைக்கும் கடுமையான சட்டங்கள்தான் தீர்வு என்று அரசாங்கம் முன் வைக்கிறது. ‘சட்டத்தை கடுமையாக்கணும், போலீசுக்கு அதிக அதிகாரம் வேணும், நல்லவங்க அரசியலுக்கு வரணும், ஊடகங்கள் சுதந்திரமா செயல்பட்டா பிரச்சனை தீரும்’ என அப்பாவியாய் நம்புபவர்கள் பலர் உள்ளனர்.

ஆணாதிக்க பிற்போக்கு கலாச்சாரத்தோடு  புழங்கும் பொது இடங்களில் பெண்கள் மீது வசை பொழிவது, பாலியல் ரீதியாக திட்டுவது போன்ற நடத்தைகள் சகஜமாகியுள்ளன. அனைவரும் தினமும் சந்திக்கும் இந்த நிகழ்வுகளை பெண்கள் ‘வேறு வழியில்லாமல்’ சகித்துக் கொண்டு போக வேண்டியிருக்கிறது.

சட்டங்களை செயல்படுத்த வேண்டிய காவல் துறை, சமூகத்தின் ஒட்டு மொத்த ஆணாதிக்க மனப்போக்கைத்தான் பிரதிபலிக்கிறது. இந்தச் சூழலில் ஒரு பெண் தனக்கு நேர்ந்த அச்சுறுத்தல்கள் குறித்து புகார் செய்ய காவல் நிலையத்தை அணுகுவதோ, வழக்கு பதிவு செய்வதோ நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்றாக இருக்கிறது.

கடந்த 2 வாரங்களில் பெண்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்பான வழக்குகளை போலீஸ் நிலையத்தில் பதிவு செய்வதற்காக நடத்தப்பட்ட போராட்டங்களைப் பற்றிய இரண்டு சம்பவங்களை பார்க்கலாம். பெண்கள் மீதான அச்சுறுத்தல்களுக்கு எதிராக பெண்கள் அமைப்பாக ஒன்றிணைந்து போராடுவதுதான் ஒரே தீர்வு.

திருச்சியைச் சேர்ந்த மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக்குழுவினர் பிப்ரவரி 1ம் தேதி அனுப்பிய சம்பவம்

திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவி, பள்ளிக்குச் செல்வதற்காக நின்று கொண்டிருந்தார். 30 வயதுடைய ஆண் ஒருவர் ஹீரோ ஹோண்டாவில் வேகமாக வந்து, அந்த மாணவியின் தோளை அமுக்கி, பின்பக்கம் தட்டிவிட்டு சென்றுள்ளான்.

சிறிதும் தயங்காத அந்த மாணவி வேகமாக பின்னாலேயே ஓடிப்போய், அவனை வழிமறித்து, வண்டியை நிறுத்தி, வண்டிசாவியை பறித்து கொண்டு நடுரோட்டில் வைத்து கடுமையாக திட்டி உள்ளார். அவன் வேறுவழியின்றி “என்னை மன்னித்துவிடு , வண்டி சாவியை கொடு” எனக் கேட்டுள்ளான்.

அந்த மாணவி சாவியை தரமறுத்து, அருகில் உள்ள மகளிர் காவல்நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்து விட்டு, அவர்கள் வருவதற்க்குள் வேகமாக அந்த ‘பொறுக்கி’ இருக்கும் இடத்திற்கு வந்து மீண்டும் திட்டியுள்ளார். கூட்டம் கூடவும் ஆண் ட்ராபிக் போலீஸ் வந்து… “ஏம்மா இதப் போயி பெரிய பிரச்சனையா ஆக்குற, போம்மா” என்று அந்த மாணவியை திட்டியுள்ளார். அதற்குள் கூடியிருந்த மக்களில் ஒருவர், அந்த ‘பொறுக்கியை’ கையை ஓங்கிக் கொண்டு அடிக்கப் போயுள்ளார். ட்ராபிக் போலிஸ் உடனே “சரி…சரி விடுங்க, பிரச்சனைய பெரிசாக்காதீங்க“ என்றிருக்கிறார்.

அங்கு வந்த மகளிர் காவல் நிலைய பெண் போலிஸ் ட்ராபிக் போலிஸிடம் “சார், இதுக்கும் உங்களுக்கும் சம்மந்தமில்லை. அந்த பெண்ணை தோளை பிடித்து அமுக்கி இருக்கான், சாதாரணமா விட்டுடுங்கன்னு சொல்லுறீங்க… இது எங்க(பெண்கள்) பிரச்சினை.. நாங்க பார்த்துக்குறோம். நீங்க உங்க ட்யூட்டிய பாருங்க“ என்று சொல்லி அந்தப் ‘பொறுக்கியை’ அழைத்துக் கொண்டு காவல்நிலையத்திற்கு சென்றார்.

திருச்சியைச் சேர்ந்த பெண்கள் விடுதலை முன்னணி பிப்ரவரி 14ம் தேதி அனுப்பிய செய்தி

திருச்சி பாலக்கரையில் இருந்து சுப்பிரமணியபுரம் செல்வதற்காக தனியார் நகர பேருந்தில் பெண்கள் விடுதலை முன்னணி தோழர் ஒருவர் பயணம் செய்தார். பேருந்தில் கால் வைக்க முடியாத அளவிற்கு கூட்டம் தொங்கி கொண்டும், தள்ளாடிக் கொண்டுமிருந்தது.

பேருந்தின் நடத்துனர் ஒவ்வொரு ஸ்டாப்பிலும் இடமே இல்லையென்றாலும் பயணிகளை ஏற்றிக் கொண்டேயிருந்தார். அவ்வப்போது ‘உள்ளே போ, உள்ளே போ’ என சத்தம் போட்டு கொண்டேயிருந்தார். ஒரு சந்தர்ப்பத்தில் நடத்துனர் டிக்கெட் போடவே முடியாதபடி இட நெருக்கடி ஏற்ப்பட்டது.

நிலைமையை உணர்ந்த நடத்துனர் பயணிகளை பார்த்து ஆத்திரத்துடன் வா, போ என்றும் பெண்களிடம் “ஏய் சொன்னா கேட்கமாட்டியா போன்னு சொல்றேன் அப்படியே நிக்கிற” என தன் மனைவியை ஆணாதிக்கத்துடன் அதட்டுவது போல அடிக்காத குறையாக உறுமினார்.

பெண் தோழர் “ஏங்க மரியாதை இல்லாம பேசுறீங்க, இவ்வளவு கூட்டத்தில் எப்படி இன்னும் உள்ளே போக முடியும், எல்லாத்தையும் சகட்டு மேனிக்கு பேசுறீங்க தனி ஒரு முதலாளி லாபத்துக்காக இவ்வளவு மக்களையும் கொடுமை படுத்துறீங்க” என சத்தம் போட்டு கண்டித்தார்.

உடனே டிரைவர் ஆவேசமாக “ஏய் என்ன திமிறா பேசுற, கண்டக்டர் வயசு என்ன? உன் வயசு என்ன? மரியாதையா பேசு” என சீறினார்.

“ஏங்க மரியாதை இல்லாம எல்லா பெண்களையும் ஒருமையில் பேசுறதும் என்ன நியாயம்? பயணிகள் எல்லாம் இவருக்கு என்ன பொண்டாட்டியா? (மனைவியையே அப்படி பேசுவது தவறு என்பது வேறு)” என கேட்டதும் நக்கலாக

“பொண்டாட்டி இல்ல வப்பாட்டி” என கேலி செய்தான் டிரைவர்.

“மரியாதையா பேசல செருப்பால அடிப்பேன்” என பெண் தோழர் பதில் சொல்ல,

டிரைவர் வண்டியை நடுரோட்டில் நிறுத்தி விட்டு “நீ என்னடி அடிக்கிறது நானும் செருப்பால அடிப்பேன்” என செருப்பை தூக்கி காட்டி போடி, வாடி என்று ரவுடித்தனமாக நடந்து கொண்டிருக்கிறான்.

பெண் தோழர் விடாமல் அவனிடம் சண்டை போட்டுள்ளார், உடனே பயணிகள் மத்தியில் இருந்த ஆண்கள் சிலர் “ஏம்மா டிரைவர் தான் பேசுறார்னா நீயும் சரிக்கு சரியா பேசுற, பேசாம அமைதியாய் போம்மா” என பஞ்சாயத்து செய்தனர்.

“நாகரீகமே  இல்லாமல் இவ்வளவு கேவலமா பேசுறான் என்னை அடங்கி போக சொல்றீங்க, இதே உங்க வீட்டு பொம்பளைங்களை இவன் இப்படி பேசுனா வேடிக்கை பார்ப்பீங்களா? என்ன உங்க நியாயம்” என அவர்களிடமும் வாதம் செய்து கொண்டே பெண் தோழர் உறுதியாக நின்றார். இடையில் 3 இடங்களில் டிரைவர் வண்டியை நடுரோட்டில் நிறுத்தி ஆபாசமாக திட்டுவதும், செருப்பை தூக்கி அடிக்க வருவதும் நடந்தது.

“யேய் போடி என்ன வேணாலும் செய்டி ஒன்னும் புடுங்க முடியாது. இதோ போலீஸ் ஸ்டேஷன் இங்கதான் இருக்கு போய் என்ன வேணாலும் செய்!” என இறக்கிவிட்டு பேருந்து கிளம்பியது. பேருந்தில் இருந்து இறங்கிய தோழருடன் சில இளம்பெண்களும், இரண்டு இளைஞர்களும் அந்த ஸ்டாப்பில் இறங்கினர்.

நடந்த சம்பவங்களை கவனித்தவர்கள் “இவனுக்கு இதே வேலதாம்மா, தினமும் இவனோட வேற வழி இல்லாமல் இந்த பேச்சை கேட்க வேண்டி உள்ளது. இதுக்கு ஏதாவது முடிவு கட்டணும்” என தைரியமூட்டினர். உடன் இறங்கிய இரண்டு இளைஞர்கள் “வாங்க நாங்களும் புகார் செய்றோம்” என தோழருடன் ஏர்போர்ட் போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் தெரிவிக்க சென்றனர்.

சம்பவங்களை கேட்டறிந்த காவல்துறை அதிகாரிகள் ரொம்ப நிதானமாக, “சம்பவம் நடந்தது கே கே நகர் எல்லையில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் வருது. நாங்க அதில் தலையிட முடியாது, இது ஏர்ப்போர்ட் எல்லையில் வராது. நீங்க கே கே  நகர் போலீஸ் ஸ்டேஷன் போங்க” என திசை காட்டினர். சலிப்படையாமல் கே கே நகர் காவல் நிலையம் சென்று புகார் அளிக்க பெண் தோழர் சென்றார். மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மனித உரிமை பாதுகாப்பு மையம் தோழர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தோழர்கள் உதவியுடன் புகார் அளிக்கப்பட்டது.

சம்மந்தப்பட்ட டிரைவர், நடத்துனர் காவல் நிலையத்திற்குள் வந்து சேர்ந்ததும் “நடத்துனரை பார்த்தா வயதான அப்பாவிபோல தெரியுது, இவர் அப்படி பேச மாட்டாரே!” என அதிகாரிகள், பெண் தோழர் பொய் புகார் அளித்ததை போல கேள்வி கேட்டு துளைத்தனர். தோழரின் உறுதியை பார்த்து பின்வாங்கினார்.

அடுத்து தனியார் பேருந்தின் மேனேஜர், “ஏம்மா நடந்த சம்பவத்திற்கு நான் மன்னிப்பு கேக்குறேன் புகார் எல்லாம் வேண்டாம், இன்னும் 15 நாளில் டிரைவருக்கு திருமணம் நடக்க போவுது. அதுவும் உன்னை போல ஒரு பெண் தான், அது வாழ்க்கையை கெடுக்கலாமா?” என உருகினார்.

“இப்படிப்பட்ட காலிப் பயலுக்கு எதுக்கு வக்காலத்து வாங்குறீங்க, உங்க வீட்டு பொண்ணு கிட்ட இப்படி நடத்துகிட்டா நீங்க என்ன செய்வீங்க?” என்றதும் மேனேஜர் உதட்டை பிதுக்கியாவாறே சென்று விட்டார்.

மாலை நேரம் கடந்து இருட்ட தொடங்கியது. தீர விசாரித்ததாக கூறிய காவல்துறை ஆய்வாளர், “வழக்கு போட சொல்லி உள்ளேன், எனக்கு முக்கிய வேலை இருக்கு, சார் பார்த்துக்குவார்” என உதவி ஆய்வாளரை கைகாட்டி விட்டு எஸ்கேப் ஆனார். கடைசி வரை திரும்ப வரவே இல்லை.

அடுத்து உதவி ஆய்வாளர் தீர விசாரித்த வகையில் நடந்த குற்றத்திற்காக ரூ.1,000 அபராதம் கட்ட போதுமான அளவிற்கு வழக்கு என்று தீர்ப்பு எழுதுவது போல பேசினார். “என்ன சார் நியாயம்? நாகரீகமே இல்லாமல் பொது மக்கள் மத்தியில் எந்த வித கூச்சநாச்சம் இல்லாமல் இவ்வளவு கேவலமாக நடந்துள்ளனர். மொய் எழுதுவதை போல அபராதம் போடுவது என்ன நியாயம்?” என சத்தம் போட்டனர்.

“சரி, சரி உங்களுக்கும் வேணாம், எங்களுக்கும் வேணாம், 506\1 ஜாமீனில் வரும் செக்க்ஷனில் வழக்கு போடுகிறோம், போதுமா? இப்போது சந்தோஷம் தானே” என பேரம் பேசினார் உதவி ஆய்வாளர்.

கொடுத்த புகாருக்கு நடந்த சம்பவத்துக்கு பொருத்தமான செக்சனில் வழக்கு போடாமல் இழுத்தடித்தது நீடித்தது. இரவு மணி 10 வரை, வந்திருந்த தோழர்கள், பெண்கள், குழந்தைகள், ஆட்டோ ஓட்டுநர்கள் ஆகியோர் உறுதியோடு காத்திருந்தனர். ‘சரி இவனுங்க சரிப்பட்டு வரமாட்டானுங்க, இரண்டு பொறுக்கிய உள்ள தள்ளனும்னா, நாம 10 பேர் சிறைக்கு போற போராட்டம் நடத்துறதை தவிர வேறு வழி இல்லை’ என முடிவு செய்து, ஸ்டேஷனை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு செய்தனர். பத்திரிக்கைகளுக்கு தகவல் தரப்பட்டது.

பலாப்பழத்தில் ஈ மொய்ப்பதை போல நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகள் வாயில் மைக்கை திணிக்கும் மீடியா கும்பல் ஒன்றையும் காணோம். இறுதியாக தினத்தந்தி நிருபர் மட்டும் வந்து படம் எடுத்து சென்றார்.

ஆர்ப்பாட்டம் தொடங்கியது.

K K நகர் காவல்துறையே,
துணை போகாதே! துணை போகாதே!
பொறுக்கிகளுக்கு துணை போகாதே!

தினமும் இரண்டு கற்பழிப்பு,
கடத்தல், கொலைகள், தாலியறுக்க
வேடிக்கை பார்க்கும் காவல்துறையே!

பட்டப் பகலில் பஸ்ஸிலே
இரண்டு பொறுக்கிகள் துணிச்சலாக
திட்டுறான், மிரட்டுறான்,
பெண்ணை அடிக்க பாயுறான்!
வார்த்தையால கொல்லுறான்
பாதிக்கப்பட்டவர் புகார்கொடுக்க
நேரில் பார்த்த சாட்சியிருக்க
காவல் துறையே தயக்கமென்ன?

பாலியல் குற்றத்துக்கு
ஆண்மை நீக்க தண்டனை என்று
ஜம்பமிடும் ஜெயலலிதாவே!
பாரு, பாரு, யோக்கியதை பாரு,
உன் காவல் துறையின் யோக்கியதை பாரு.

பெண்கள் விடுதலை முன்னணி – வாழ்க!
மக்கள் கலை இலக்கியக் கழகம் – வாழ்க!
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி – வாழ்க!
மனித உரிமை பாதுகாப்பு மையம் – வாழ்க!

என முழக்கம் எதிரொலிக்க துவங்கியதும், கியூ பிரிவு போலீசு வெளியே வந்தார். “இந்தாம்மா ஏன் சத்தம் போடுறீங்க, FIR போட்டுக்கிட்டு இருக்கோம். சும்மா அமைதியா இருங்க” என்றார்.

பிறகு நமது மனித உரிமை பாதுகாப்பு மையம்  வழக்கறிஞர், மக்கள் கலை இலக்கிய கழகம் செயலாளர், பெண்கள் விடுதலை முன்னணி முன்னணியாளர்களை அழைத்து 294(B),506(1),352,354,பெண்களை தொல்லையில் இருந்து காக்கும் சட்டம் பிரிவு-4 ஆகிய செக்சன்களில் வழக்கு பதிவு செய்ததாக கூறி நகலை நம்மிடம் ஒப்படைத்தனர்.

இதற்கு முன் இரண்டு எப்.ஐ.ஆர் எழுதப்பட்டது. அது என்ன ஆனது கிழித்தெறியப்பட்டதா? அல்லது வேறு நபர்கள் மாட்டினால் அவர்களை வைத்து வழக்கு ஜோடிக்கப்படுமா? என நமக்கு தெரியவில்லை.

காலை 11 மணிக்கு நடந்த சம்பவம் இரவு 11 மணிக்கு முடிவிற்கு வந்தது. இது தான் நம்ம ஜனநாயகமும் சட்டமும் பெண்களுக்கு கொடுக்கும் பாதுகாப்பின் லட்சணம்.

  1. அருமை. 90% வீத பேரூந்துகளில் இதுதான் நிலைமை. வா போ என்று மரியாதை குறைவாக பேசுவது. சரியான நடவடிக்கை எடுத்து போராடிய தோழர்களுக்க்கு வாழ்த்துக்கள்.அருமை. 90% வீத பேரூந்துகளில் இதுதான் நிலைமை. வா போ என்று மரியாதை குறைவாக பேசுவது. சரியான நடவடிக்கை எடுத்து போராடிய தோழர்களுக்க்கு வாழ்த்துக்கள்.

    • ஒருத்தரை ஒருமையில் சொல்வதை நீங்கள் எப்படி மரியாதை குறைவாக நினைக்கிறீர்கள் ஒரு தவறு செய்தனை குற்றவாளி அல்லது குற்றம் சுமத்த பட்டவன் என்று சொல்லலாம் அதைவிடுத்து பொறுக்கி என்ற வார்த்தையை பயன்படுத்தும் நீங்கள் மரியாதை தெறிந்தவரா? தேவைக்கு தகுந்த பேருந்துகளை இயக்காத அரசை கண்டிக்க துப்பு இல்லை இந்தியாவிலேயே தமிழ் நாட்டில்தான் ஆட்டோகாரர்கள் கொள்ளையடிக்கிறார்கள் அதை கண்டிக்க துப்பு இல்லை. முதலில் மக்களுக்கு தமிழ் பேச கத்துக்கொடுக்கிற வேலைய தமிழை தெளிவாக கற்றுக்கொண்டு செய்யுங்கள்.

      • //ஒருத்தரை ஒருமையில் சொல்வதை நீங்கள் எப்படி மரியாதை குறைவாக நினைக்கிறீர்கள்//
        தெற்குப்பக்கம் நீங்கள் சென்றதில்லை போலிருக்கிறது. ஆண் பிள்ளைகளை ‘வந்தான் போனான்’ என்று சொன்னாலும் சொல்வார்களே அன்றி பெண் பிள்ளைகளை ‘வந்துது போனுது’ என்றுதான் சொல்வார்கள். பையன் என்ன படிக்கிறான் என்று விசாரிப்பவர்கள் பொண்ணு என்ன படிக்குது என்றுதான் கேட்பார்கள். ஆண்களைப் பற்றி சொல்லும்போது ‘வந்தாப்ள சொன்னாப்ள’ என்பார்கள். தெற்குப்பக்கத்தில் இருந்து வடக்கே வருபவர்களை அதிர்சியில் ஆழ்த்துவதில் முதலிடம் பிடிப்பது இங்குள்ளவர்களின் ‘வா போ’ என்ற ஒருமையில் விளிக்கும் பழக்கம்தான்.

        • vijayakumar,

          In the very southern districts,a guy is vandan/ponan, a girl is vandha,ponaa,

          an older man/woman is vandhaagha,ponaagha and brahmins and pillaimaars say avaal/ivaal.

          what u r talking about is central districts and not southern.

          In Kanyakumari is enna dei/eevtti for buys/girls and vaanga makka for man/woman.

          yeah madras is the worst amongst everything.

          • harikumar,
            you are correct. Enunga.. in Thiruppur, Coimbatore side. A friend of mine from Coimbatore resigned his job and went back to Coimbatore (‘oora sir ithu?’ ‘Inge mariyadhai konjam kooda illai!’).
            Both happened in Trichy. That is why they could not tolerate. I want to thank the woman cop who silenced the traffic police. No one can help a woman other than a woman. Women empowerment.. need of the hour.

      • //ஒருத்தரை ஒருமையில் சொல்வதை நீங்கள் எப்படி மரியாதை குறைவாக நினைக்கிறீர்கள் ஒரு தவறு// அக்க …சூப்பரு…puratchithamizan பேரு அத விட சூப்பரு.

  2. பெங்களூர்: பெங்களூர் மடிவாளா அருகே உள்ள கோடிசிக்கனஹள்ளியில் 4 வயது பெண் குழந்தையை கற்பழித்து கொலை செய்த படுபாதகன் கைது செய்யப்பட்டுள்ளான். மூன்று நாட்களுக்கு முன் கோடிசிக்கனஹள்ளி ரோட்டரி நகரைச் சேர்ந்த 4 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்டு புதர் அருகே கிடந்தது. அந்தக் குழந்தை கற்பழிக்கப்பட்டதும் தெரியவந்தது. இது குறித்து விசாரணை நடத்த 6 காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்தப் படையினர் 40 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் குற்றவாளி சிக்கினான். இந்த கொடூரனின் பெயர் மகேஷ் நஞ்சுண்டையா. ……………..
    Read more at: http://tamil.oneindia.in/news/2013/02/15/india-youth-arrested-rape-murder-four-year-old-in-bangalore-169833.html

    • அந்தப் பச்சக்குழந்தை எவ்வள்வு கொடுமையை அனுபவித்து இறந்திருக்கிறது…

      • பையா,
        ஆதரமில்லாமல் பேசாதீர்கள். அவதூறை பரப்பாதிர்கள். உங்களை மாதிரியானவர்கள் இண்டர்நெட்டில் ஏதோ ஒரு லின்க் போட்டு பொய் செய்திகளை பரப்புகிறீர்கள்.

        கர்நாடகாவில் பிஜேபி தலமையில் ராம ராஜ்யம் நடக்கிறது. அங்கு போய் கற்பழிப்பு நடந்ததாக சொல்வது எவ்வளவு பெரிய அவதூறு.. மக்களுக்கு பாதுக்கப்பென்ன, பெண்களுக்கு வழங்கபடும் மரியாதை என்ன புண்ணிய பூமியாக திகழ்கிறது..

        பெங்களூரில் கற்பழிப்பு சாத்தியாமா, அதுவெல்லாம் இந்தியாவில் தான் சாத்தியம். பெங்களூர் பாராதம்.. paiyaa அவதூறு பரப்புவதை நிறுத்திவிட்டு வேறு வேலை பார்க்கவும்..

  3. ஒரு சாதாரண தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துனர் மீது வழக்கு போட இவ்வளவு போராட்டமா?…
    வாழ்க! ஜனநாயகம்…
    வளர்க! இந்தியாவின் புகழ்…..

  4. **காலை 11 மணிக்கு நடந்த சம்பவம் இரவு 11 மணிக்கு முடிவிற்கு வந்தது**

    இதற்கு பெயர்தான் “செய் அல்லது செயலிலேயே செத்துமடி” என வீரதந்தை நேதாஜி சொன்னது..

    வாழ்த்துக்கள் தோழர்களே..

    உங்களால் பல பெண் பிள்ளைகள் நிம்மதியாய் வெளியில் போய்வரும்…

    (ஆமாம் இந்த விசயத்திலும் சாதி பாக்காம போரடுவீகளா இல்லை தலித்துக்கு மட்டும்தானா..?)

    “|(இல்லை உங்களுக்கு போட்டியா கிருஷ்ணசாமி..ஜான்பாண்டியன்..திருமா மாவளன் இருக்காகலே அதான் கேட்டேன் அப்பு)|”

    • “(ஆமாம் இந்த விசயத்திலும் சாதி பாக்காம போரடுவீகளா இல்லை தலித்துக்கு மட்டும்தானா..?)

      “|(இல்லை உங்களுக்கு போட்டியா கிருஷ்ணசாமி..ஜான்பாண்டியன்..திருமா மாவளன் இருக்காகலே அதான் கேட்டேன் அப்பு)|””

      எவ்வளவு தீரமாய் தோழர்கள் போராடியிருக்கிறார்கள். ஆனால் உங்களுக்கு இந்த நக்கல் மட்டும் போகவில்லையே. முதலில் உங்களைப் போன்றவர்களைக் களையெடுக்க வேண்டும். (உங்கள் இரத்தத்தில் ஊறியிருக்கும் சாதி வெறியைச் சொல்கிறேன்)

  5. தில்லியில் மருத்துவ மாணவி கொடூர நிகழ்வுக்கு பிறகு, போராட்டம் வலுத்தது. மக்களை போராட்ட இடத்திற்கு வரவிடாமல் தடுப்பதற்கு 3 நாட்கள் ரயிலை நிறுத்தினார்கள். இப்படிப் போராட்டம் உச்சத்தில் இருந்த பொழுது கூட, பெண்கள் பாலியல் ரீதியான புகார்களை பெறுவதில் எப்பொழுதும் போல அசமந்தமாய் தான் இருந்தார்கள்.

    உறுதியாய் நின்று போராடிய அனைத்து தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  6. பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவுகட்டுவோம்!
    ஆணாதிக்கத் திமிரை ஒழிப்போம்!
    மனித மதிப்பீடுகளை மழுங்கடிக்கும்
    மறுகாலனியாக்க கலாச்சாரத்தை துடைத்தெறிவோம்!

    மார்ச்,2 2013 சனிக் கிழமை திருவாரூரில்-
    பேரணி ( மாலை 4 மணி – புதிய இரயில் நிலையம் )

    பொதுக் கூட்டம் இடம் : பனகல் சாலை.மற்றும் புரட்சிகர கலை நிகழ்ச்சி.

    பேரணியை துவக்கி வைத்து உரை : தோழர். காளியப்பன்,மாநில இணைச் செயலர்,ம க இ க.

    பொதுக் கூட்ட சிறப்புரை : தோழர். துரை.சண்முகம்,ம க இ க.

    அனைவரும் குடும்பத்துடன் வருக!

  7. அமைப்பாக ஒன்று திரளவேண்டியது கட்டாயம் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

  8. விடாமுயற்சி, மனவுறுதியுடன் ஒரு தீர்மானத்துடன் போராடிய அந்த பள்ளி மாணவியும், பெண்கள் விடுதலை முன்னணி தோழரும் பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியவர்கள்..

  9. பெண்களும் பெண்களுக்காகப் பேசுவோரும் படும் பாட்டை பெண்ணாக இருக்கும் தமிழக முதல்வரே தமது கவனத்துக்கு எடுக்கத் தவறினால் நாடு முன்னேறும் என நினைப்பது முட்டாள்தனமே.

  10. தோழருக்கு வாழ்த்துக்கள். நமக்கு ஏதாவது பிரச்சனை வந்தா தான் நம்மோட பொதுநல சிந்தனை வேலை செய்யுது(அதுவும் சில இடத்தில் தான்). மற்றபடி நமக்கில்லன்னா, யாருக்கோ பிரச்சனைனா நமக்கின்னா அப்ப்டீங்கிற போக்குதான் பொதுவா இங்க இருக்கு.

  11. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் செய்தியைப் பாருங்கள்.
    இதைப் போல் தமிழ் நாட்டிலும் பெண்கள் ஊருக்கு ஊர் ஒற்றுமையாக திரண்டெழ வேண்டும். அநீதி இழைக்கப்படும் போது வாறுகோல்களைக் கொண்டு விளாசி எடுக்க வேண்டும். ஆண்களாகிய நாம் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தால் போதும். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

    Rose – coloured revolutionaries
    SIMPLE VILLAGE WOMAN IS THE DRIVING FORCE BEHIND NGO GULABI GANG, HELPING TO FIGHT FOR OTHER’S RIGHTS

    NEW DELHI
    By NILIMA PATHAK
    Correspondent
    Monday, August 13, 2012

    The seeds of rebellion were sown early in Sampat Pal when her parents refused to send her to school. Despite opposition, she learnt to read and write by watching lessons through the boys’ classroom window.

    The daughter of a shepherd, Sampat told, “I finally ended up going to school after I began writing and drawing on the walls of our home. My parents had given in very reluctantly, but they hatched another plan and decided to marry me off.”

    A resident of village Bidausa, Bundelkhand in Uttar Pradesh, Sampat became a child bride in a region where child marriages are common. She had her first child at the age of 13 and by the time she turned 20 she had five children. But that did not deter her.
    She took up a job as a government health worker. Her husband knew by then that his wife was an independent-minded woman and encouraged her in her pursuits.

    Way ahead of her time, Sampat tried to fight the system but sensed that her hands were tied. Unable to work for the welfare of women, Sampat soon became dissatisfied. She quit the job.

    Fight for a cause
    “I wanted to work for the people and began holding meetings. While networking with women I realized that they were ready to fight for a cause. The issues were many, including child marriages, dowry deaths, farm subsidies and misappropriation of government funds,” she explained.

    One day she saw a man beating his wife mercilessly. Sampat implored him to stop but he refused. The next day, she returned with a group of women all carrying sticks. They beat him like he had beaten his wife. Lesson taught, they went back, but the incident created ripples in the village.

    Sampat realized the power of togetherness and formed Gulabi Gang, an NGO to help women in distress and fight for their rights. She provided them pink (gulabi) saris.
    As for her preference for the colour, Samapt said, “Most colours are associated with political parties or religious groups. Pink has been my favourite and I believe in having a uniform, which removes any kind of disparity and creates discipline. It is also easy for people to recognize us.”

    Women began to join the Gulabi Gang. Sampat made news in 2007 when she slapped a policeman on duty at the Attara police station. This time the fight was for a man who was detained unlawfully. The Gulabi Gang surrounded the police station and it led to a verbal duel between Sampat and the policeman.

    The slap reverberated through several villages. Sampat earned both national and international fame. As the world learnt about the group of women in pin sarees dispensing their own brand of justice, villagers began flocking to them for matters related to corruption and oppression.

    Sampat’s time had come. But she says. “It is not only about feminism. We fight for the oppressed – men, women and animals. We confront people who rape or raise their hands on women. People would kill their newborn on finding she was a girl. We dealt with them firmly.”

    • he slap reverberated through several villages. Sampat earned both national and international fame. As the world learnt about the group of women in pin sarees dispensing their own brand of justice, villagers began flocking to them for matters related to corruption and oppression.

      Correct this: As the world learnt about the group of women in pink sarees

  12. இந்த அமைப்பினரின் போட்டோ ஸ்கேன் செய்து வைத்துள்ளேன். என் பின்னூட்டதில் அதை இணைக்க முடியுமா என்பது எனக்குத் தெரியவில்லை. இணைக்க முடியும் என்றால், அது எப்படி என்று சொல்லித் தந்தால் இணைத்துத் தருகிறேன்.

  13. இதில் குறிப்பிட்டுள்ள இரண்டு சம்பவங்களில் ஒரு மாணவி துணிந்து போராடியிருக்கிறார்.பெண் காவலர்களும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் தயாராகியிருக்கின்றனர்.ஆனால் ஆண் போக்குவரத்துக் காவலர் பிரச்னையை அமுக்கிவிடப் பார்த்திருக்கிறார்.இது தான் ஆண் ஆதிக்கம் அவர்களின் உணர்வோடு கலந்திருப்பதைக் காட்டுகிறது.இந்தப் பிரச்சினை எப்படி முடிந்தது என்று தெரிவிக்கப் படவில்லை.இரண்டாவது சம்பவத்தில் அந்தப் பெண் ஒரு புரட்சிகர அமைப்பைச் சார்ந்தவர்.அவர் உணர்வுப் பூர்வமாகப் போராடியிருக்கிறார்.ஆணாதிக்க எதிர்ப்பு அவரது உணர்வில் கலந்திருக்கிறது. மேலும் இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் படி சொன்னவர்களின் பேச்சு எடுபடவில்லை.அவர் உறுதியாக நின்றதற்குப் புரட்சிகர அமைப்புகளின் பக்க பலம் இருந்திருக்கிறது.புரட்சிகர அமைப்புகளைச் சார்ந்தவர்கள் தனியே போராடுகிறவர்களைக் கண்டறிய வேண்டும்.இணைக்க வேண்டும்.இந்தச் செய்தி இப்போது இணையத்தில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.அனைத்து ஊடகங்களிலும் வந்திருந்தால் நிரைய பெண்கள் இதிலிருந்து உத்வேகம் பெறுவர்.ஆனால் ஊடகங்கள் வரவில்லை.ஊடக முதலாளிகள் மட்டுமல்ல அதில் பணியாற்றுகின்ற பலரும் ஆணாதிக்கவாதிகளாகவே இருக்கின்றனர்.இருந்தபோதிலும் இந்தச் சிறு பொறி பெருங்காட்டுத் தீயாகப் பரவும்.பரவச் செய்திடல் வேண்டும்.போராடிய தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.

  14. . சரியான நடவடிக்கை எடுத்து போராடிய தோழர்களுக்க்கு வாழ்த்துக்கள்

  15. இருபது ஆண்டுகளுக்கு முன் தஞ்சையிலிருந்து திருச்சி வந்த பேருந்தில் தன்னிடம் சில்மிஷம் செய்த ஒரு ஆணை அவன் இறங்கம் நிறுத்தத்தில் வைத்து அறைந்தார் ஒரு பெண் பதிலுக்கு அவன் கை நீட்டும் முன் அதனை தடுத்தவர்களில் நானும் ஒருவன் அந்த வகையில் இந்த கலப்போரட்டத்திலும் நியாயம் கேட்ட பெண்ணுக்கு துணை நின்ற மாணவர்களும் உறுதியாக போராடிய பெண்களுக்கும் எனது வாழ்த்துக்கள் .
    பொறுக்கியை பொருக்கி என்று கூறாமல் பொன்மகனே என்றா அழைப்பார்கள் சில வறட்டு அல்லது போளித்தூய்மைவாதிகளை என்னென்று கூறுவது?

  16. பென்னை அவமாப்படும் படிநடந்து கொல்ல்பவனை பொருக்கி எனக் கூருவதில் தவரே இல்லை

Leave a Reply to Ashwin பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க