privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்த்ரிஷா: கருத்து காயத்ரிக்களின் அறச்சீற்றம்!

த்ரிஷா: கருத்து காயத்ரிக்களின் அறச்சீற்றம்!

-

ந்த உலகின் சர்வரோக பிரச்சினைகளுக்கும் ரைட் ராயலாக தீர்வு சொல்லும் ஒரே உரிமை கருத்து கந்தசாமிகளுக்கு மட்டும்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. கருத்து காயத்ரிக்களுக்கும் அப்பேர்ப்பட்ட தன்னைத்தானே தத்துவஞானியாக நியமித்துக் கொள்ளும் ரைட் நிச்சயம் உண்டு. அதிலும் அந்த காயத்ரிக்கள் விஐபிகளாக இருந்தால் இன்னும் சிறப்பு.

பாலியல் வன்முறையால் டெல்லி மருத்துவ மாணவி கொல்லப்பட்டது குறித்து உதட்டுச் சாயம் தவிர்த்து வேறு எதற்கும் வாய்திறக்காதவர்களையும் பேசவைத்து அழகு பார்க்கின்றன ஊடகங்கள்! பரபரப்பிலும் கொஞ்சம் விஐபிகளை காக்டெய்லாக கலந்து விட்டால் செய்திக்கு செய்தி, கவர்ச்சிக்கு கவர்ச்சி. அந்த வகையில் 13.2.2013 தேதியிட்ட குமுதத்தில் த்ரிஷாவின் அதிரடி என்னும் செய்தி ஹீரோயின் வாய்ஸ் எனும் கொசுறு உட்தலைப்புடன் வெளியாகியிருக்கிறது.

அந்த செய்தியை அப்படியே படியுங்கள்:

த்ரிஷா டுவிட்டர்“டெல்லி மாணவி கற்பழிப்பு விஷயத்தில் பாதிக்கப்பட்ட த்ரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் ‘மருத்துவ விஞ்ஞானிகள் புதிய மருந்துகளை பரிசோதனை செய்வதற்காக விலங்குகளைப் பயன்படுத்துகிறார்கள். அதற்குப் பதிலாக சிறையில் இருக்கும் கற்பழிப்புக் குற்றவாளிகளையும், குழந்தைகளிடம் செக்ஸ் வன்முறையில் ஈடுபட்டவர்களையும் இந்த சோதனைக்குப் பயன்படுத்த வேண்டும்’ என்று அதிரடி அறிவிப்பை வெளியிட, பதிலுக்கு த்ரிஷாவுக்கு ஏகப்பட்ட பாராட்டுகள் குவிந்து விட்டன. த்ரிஷாவிடம் ஒரு மினிபேட்டி.

“டுவிட்டரில் என்னோட கருத்தைப் பார்த்துவிட்டு நானே எதிர்பார்க்காத அளவுக்கு ஆதரவுக் குரல்கள் வந்தது எனக்கே ஆச்சரியமா இருக்கு. அந்த அளவுக்கு டெல்லி மாணவி கற்பழிப்பு சம்பவம் எல்லோரையும் பாதிச்சிருக்கு. வாய் பேசாத விலங்குகளை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துவது என்பது மனிதாபிமானமல்லாத செயல். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. உயிர்வதை கூடாதுங்கறதைப் பற்றி தான் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வலியுறுத்திக்கிட்டே இருக்கேன். விலங்குகள் வதைக்கப்படுவதை தாங்க முடியாது. அப்படியிருக்கும் போது ஒரு பெண்ணை மிருகத்தனமா சிதைச்சது எவ்வளவு பெரிய கொடுமை. சம்பவத்தைக் கேள்விப்பட்டு நான் தூங்கவே இல்லை. அந்த ஆதங்கத்துலதான் மருத்துவப் பரிசோதனைக்கு கற்பழிப்புக் குற்றவாளிகளை உட்படுத்தணும்னு சொன்னேன், அவங்களால நாட்டுக்கும் நல்லது. அவங்களுக்கு தண்டனை கொடுத்த மாதிரியும் இருக்கும்”.

முதலில் இதே பிரச்சினைக்கு அம்மா சொன்ன ஆண்மை நீக்கம் என்பதை இங்கே ஒப்பிட்டுப் பாருங்கள்! இது தற்செயலா இல்லை பாசிச ஜெயாவின் வாரிசாக வரும் தகுதி கொண்டவர் கலையுலகில் இருக்கிறாரா? நல்லவேளை இதுவரை த்ரிஷா அரசியலில் இல்லை. இருந்திருந்தால் ஒரு ஜெயலலிதாவையே தாங்காத தமிழகம் மற்றுமொரு ஜெயலலிதாவின் வருகையால் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்திருக்கும்.

பாலியல் வன்முறை குறித்து பேசும் நடிகை த்ரிஷா முதலில் தனது துறை குறித்து சுயவிமரிசனம் செய்து விட்டு ஊருக்கு உபதேசம் செய்வதுதான் நேர்மை. அதிலும் தென்னிந்திய தேவதை த்ரிஷாவின் சினிமா துறைதான் பாலியல் வன்முறைகளை கற்றுத் தரும் என்சைக்ளோபீடியோவாக இருக்கிறது. அதற்கு உடன்பட்டுத்தான் த்ரிஷாவும் ஏனைய நடிகைகளும் கதைகளிலும், கவர்ச்சிகளிலும் நடித்து விட்டு கோடிகளில் ஊதியம் வாங்குகின்றனர்.

பாடல் வெளியீட்டு விழாக்கள் மற்றும் படம் குறித்த சந்தை நிகழ்ச்சிகளில் வேண்டுமென்றே கவர்ச்சி எனும் ஆபாச உடை அணிந்துதான் த்ரிஷாவும் அவரது திரையுலக தோழிகளும் காட்சியளிக்கிறார்கள். இவையனைத்திற்கும் திட்டமிட்ட ஒரு நோக்கம் உண்டு. அது பெண்ணுடலை வெறி கொண்டு பார்க்கும் ஒரு மலிவான ரசனையை ஆண்களிடம் உருவாக்கி, கதையாக்கி, ரசிக்க வைத்து காசு பார்ப்பது. வண்ணத்திரையிலோ, சினிக்கூத்திலோ, டைம்பாசிலோ இந்த நடிகைகளின் ஆபாசப்படங்கள்தான் பாடநூல்களில் ஆரம்பிக்கும் இறைவணக்கம் போல இடம்பெறுகின்றன. மேலாக ஒரு நடிகை தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதற்கு இத்தகைய கவர்ச்சிப் பட ஆல்பங்களை தொழில்முறை கலைஞர்களை வைத்து தயாரித்துத்தான் வெளியிடுகிறார்கள். அந்த வகையில் ஆபாசம் என்பதுதான் ஒரு நடிகைக்கு மூலதனம்.

அதே நேரம் ஒரு பெண் கவர்ச்சி உடை அணிவதுதான் பாலியல் வன்முறையைத் தூண்டுகிறது என்று மதவாதிகள் சொல்வதை நாம் ஏற்கவில்லை. இல்லையெனில் பாலியல் வன்முறைகளுக்கு உடைகள்தான் காரணம் என்று அயோக்கியர்களின் குற்றம் நியாயப்படுத்தப்படும். ஒரு பெண் நிர்வாணமாகக் கூட நடந்து செல்லட்டும். அதனால் தனக்கு ‘கற்பழிப்பு’ எண்ணம் ஏற்படுகிறது என்று யாராவது சொன்னால் நாம் ஏற்போமா? அல்லது முழு சாக்கு போட்ட பெண்கள் என்பதால் அவர்கள் அனைவரும் வன்புணர்ச்சி செய்யும் மிருகங்களிடமிருந்து தப்பிவிட்டார்களா?

இது ஒருபுறமிருக்க மதவாதிகளின் பிற்போக்கு கருத்துகளை வைத்து சினிமா உலகம் தன்னை நியாயப்படுத்த முடியாது. இங்கே ஆணின் பிடியிலிருந்து பெண்ணுடலை விடுவிக்கும் நோக்கம் இல்லை. மாறாக ஆணின் காமவெறி உலகிற்கு மட்டும் பெண்ணுடல் பயன்பட வேண்டும் என்ற பச்சையான நோக்கம் இருக்கிறது. இது கவர்ச்சி, ஆபாசம் என்று மட்டுமல்ல, எது அழகு என்று உருவாக்கப்படுவதிலும் இருக்கிறது.

‘த்ரிஷாவைப் போன்ற நடிகைகளை வேட்டையாடி தமது காதலை ஏற்றே ஆக வேண்டும்’ என்பதுதான் தமிழ் சினிமா நாயகர்கள் நடிக்கும் படங்களின் கதை. இதே வேட்டையாடல்தான் டெல்லி பாலியல் வன்முறை சம்பவத்திலும் இருக்கிறது. அங்கே ‘கற்பழிப்பு’ என்றால் இங்கே வன்முறையாக காதல், கல்யாணம் என்று அளவு மட்டும் வேறுபடுகிறது. நிஜமான இளையோர் உலகிலும் இப்படித்தான் ஆண்கள் காதல் என்ற பெயரில் பெண்களை வேட்டையாடுகின்றனர். அமில வீச்சினால் விநோதினி கொல்லப்பட்டதற்கும் இதுவே அடிப்படை.

டெல்லி சம்பவத்திற்காக தூக்கம் வரவில்லை என்று துக்கப்படும் த்ரிஷா இத்தகைய கதைகளில் ஜாலியாக நடிப்பதற்கு என்ன காரணம்? கொள்கை வேறு, தொழில் வேறு என்பதா? இவரது கொள்கைப்படி மற்றவர்களை தண்டிக்கலாமென்றால் இவரது தொழில் நமது கொள்கைகளுக்கு எதிரானது என்று இவரை நாம் தண்டிக்க த்ரிஷா ஒத்துக் கொள்வாரா? ஆகவே நபருக்கு நபர் கொள்கை வேறுபடலாம் என்றால் என்ன பொருள்? அதிலும் பாலியல் வன்முறை குறித்து ஆளாளுக்கு ஒரு கொள்கை என்று வேறுபட்டு பார்க்க முடியுமா? அந்த வகையில் த்ரிஷாவின் தொழிலும், அந்த தொழிலை நடத்தும் சினிமாவும் டெல்லி குற்றவாளிகளின் அணிவரிசையில்தான் நிற்கின்றார்கள்.

மாடலிங், சினிமா, டி.வி போன்ற துறைகளில் பெண்களுக்கு சமத்துவம் கிடைப்பதில்லை என்று சில பெண்ணியவாதிகள் அசட்டுத்தனமாக ஆவேசப்படுவதுண்டு. அதாவது த்ரிஷா நடிக்கும் படங்களில் நாயகனுக்கு இணையாகவோ அதிகமாகவோ நாயகியின் பாத்திரம் இருப்பதில்லை. வயதான நடிகர்கள் போல வயதான நடிகைகளுக்கு மார்கெட் இருப்பதில்லை. கூடுதலாக சினிமாவின் எந்தத் துறையிலும் பெண்கள் முன்னேற முடியாமல் ஆணாதிக்கம் நிலவுகிறது என்றும் அவர்கள் கவலைப்படுவதுண்டு.

என்றாலும் அத்தகைய கவலையின் அடிப்படையில் த்ரிஷா, அசின், காஜல், முதலான நடிகைகள் பெண்ணுரிமை காவலர்களாக பதவி உயர்வு பெறும் காட்சியினை சகிக்க முடியவில்லை. சினிமாவே ஒரு குப்பை என்றும், ரசிகர்களின் அதுவும் ஆண்ரசிகர்களின் வக்கிரத்தை விசிறி விடுவதினூடாக வர்த்தகம் செய்யும் தொழில் என்று தெரிந்த பிறகும் மலத்தில் யாராவது அரிசியை தேடுவார்களா என்ன? அதன்படி தமிழ் சினிமாவில் பெண்களுக்கு வாய்ப்பில்லை என்று பேசுபவர்கள் உண்மையில் பெண்களுக்கு எதிரானவர்கள் என்கிறோம்.

அது போல ஒரு நடிகை சில படங்களில் நடித்து நட்சத்திரமாவது என்பது வெறும் திறமையின் அடிப்படையில் மட்டுமல்ல. மேலதிகமாக கவர்ச்சி காட்டுவது என்பதைத் தாண்டி அங்கே திறமைக்கு வேலையில்லை. இந்நிலையில் தயாரிப்பாளர், இயக்குநர், நட்சத்திர நடிகர்கள் ஒத்துக் கொண்டால்தான் ஒரு பெண் நடிகையாக இடம்பெற முடியும். வளர முடியும். ஒரு சில விதிவிலக்குகளைத் தாண்டி இந்த ஒத்துக் கொள்ளலில் பல துணை நடிகைகள் உள்ளிட்டு பெரும் நட்சத்திரங்கள் வரை ஆணாதிக்கத்தால் வேட்டையாடப்படுகின்றனர். உண்மையில் இதை எதிர்த்து எந்த நடிகையும் வாய் திறப்பதில்லை. இவையும் அதிகபட்சம் ஊடகங்களின் கிசுகிசுவாக, அதையும் ரசிப்பது என்ற அளவிலேதான் வெளிவருகின்றன.

ஆகவே த்ரிஷா முதலான நடிகைகள் டெல்லி கயவர்களை தண்டிப்பது இருக்கட்டும், தங்கள் துறையில் அத்தகைய நபர்களை தண்டிக்க வேண்டாம், அடையாளமாவது காட்டுவார்களா? நிச்சயம் காட்டமாட்டார்கள். ஏனெனில் கோடிகளில் கொழிக்கும் அவர்களது நட்சத்திர வாழ்வின் அஸ்திவாரத்தை இழப்பதற்கு அவர்கள் கனவிலும் விரும்பமாட்டார்கள். அந்த வகையில் சினிமாவில் பெண்கள் பாலியல் ரீதியின் துன்பறுத்தப்படுவதற்கு இவர்களும் ஒரு வகையில் காரணமாக இருக்கிறார்கள்.

இதை த்ரிஷாவின் ஆரம்பகால வாழ்க்கையில் இருந்தே சொல்ல முடியும். அப்போது மிஸ் சென்னையோ இல்லை மிஸ் திருவல்லிக்கேணியோ என்று பட்டம் பெற்ற த்ரிஷாவை ஆனந்த விகடன் முதலான பத்திரிகைகள் அட்டைப்படத்தில் போட்டு உதவின. மாடலிங் உலகில் இருந்த அவருக்கும் திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து ஆளாகி வருகிறார். அப்போது விளம்பர நடிகையாக இருந்த ஒரு பெண் மாடலிங் உலகில் சக்தி வாய்ந்த ஒரு நபர் தன்னை பாலியல் வன்முறை செய்ததாக குற்றம் சாட்டுகிறார். வழக்கம் போல பத்திரிகைகள் சென்சேஷனாக போட்டு காசு பார்க்கின்றன.

த்ரிஷாவும் மாடலிங் துறை என்பதால் அவரிடமும் கருத்து கேட்கிறார்கள். அப்போது அவர் என்ன சொன்னார்? ‘குற்றம் சாட்டிய பெண்ணும், குற்றம் சாட்டப்பட்ட ஆணும் தனக்கு தெரியும் என்பதோடு இருவரும் தொழில் நிமித்தம் வேண்டியவர்கள் என்பதால் இருவருக்கு எதிராகவும் கருத்து சொல்ல மாட்டேன்’ என்றார் த்ரிஷா.

நல்லது, ‘கற்பழிப்பு’ குற்றவாளிகளை சோதனைச்சாலை எலிகளாக பயன்படுத்தலாம் என்ற த்ரிஷாவின் யோசனைப்படி த்ரிஷாவுக்கும், அவரது சினிமா துறையினருக்கும் என்ன தண்டனை கொடுக்கலாம், நீங்களே சொல்லுங்கள்!

  1. இப்ப நீர் சொல்ல் வர்றது என்னா…. பெண்கள் கவர்ச்சி காட்றதால் தான் ஆண் தப்பு பண்றான்னு சொல்லற சராசரி ஆண் மாதிரி பேசறாப்ல இருக்கு…

    • //அதே நேரம் ஒரு பெண் கவர்ச்சி உடை அணிவதுதான் பாலியல் வன்முறையைத் தூண்டுகிறது என்று மதவாதிகள் சொல்வதை நாம் ஏற்கவில்லை. இல்லையெனில் பாலியல் வன்முறைகளுக்கு உடைகள்தான் காரணம் என்று அயோக்கியர்களின் குற்றம் நியாயப்படுத்தப்படும். ஒரு பெண் நிர்வாணமாகக் கூட நடந்து செல்லட்டும். அதனால் தனக்கு ‘கற்பழிப்பு’ எண்ணம் ஏற்படுகிறது என்று யாராவது சொன்னால் நாம் ஏற்போமா? அல்லது முழு சாக்கு போட்ட பெண்கள் என்பதால் அவர்கள் அனைவரும் வன்புணர்ச்சி செய்யும் மிருகங்களிடமிருந்து தப்பிவிட்டார்களா?

      இது ஒருபுறமிருக்க மதவாதிகளின் பிற்போக்கு கருத்துகளை வைத்து சினிமா உலகம் தன்னை நியாயப்படுத்த முடியாது. இங்கே ஆணின் பிடியிலிருந்து பெண்ணுடலை விடுவிக்கும் நோக்கம் இல்லை. மாறாக ஆணின் காமவெறி உலகிற்கு மட்டும் பெண்ணுடல் பயன்பட வேண்டும் என்ற பச்சையான நோக்கம் இருக்கிறது. இது கவர்ச்சி, ஆபாசம் என்று மட்டுமல்ல, எது அழகு என்று உருவாக்கப்படுவதிலும் இருக்கிறது.//

    • அப்படிச் சொல்லவில்லை நண்பரே.

      //அதே நேரம் ஒரு பெண் கவர்ச்சி உடை அணிவதுதான் பாலியல் வன்முறையைத் தூண்டுகிறது என்று மதவாதிகள் சொல்வதை நாம் ஏற்கவில்லை. இல்லையெனில் பாலியல் வன்முறைகளுக்கு உடைகள்தான் காரணம் என்று அயோக்கியர்களின் குற்றம் நியாயப்படுத்தப்படும். ஒரு பெண் நிர்வாணமாகக் கூட நடந்து செல்லட்டும். அதனால் தனக்கு ‘கற்பழிப்பு’ எண்ணம் ஏற்படுகிறது என்று யாராவது சொன்னால் நாம் ஏற்போமா? அல்லது முழு சாக்கு போட்ட பெண்கள் என்பதால் அவர்கள் அனைவரும் வன்புணர்ச்சி செய்யும் மிருகங்களிடமிருந்து தப்பிவிட்டார்களா?//

      இந்த வரிகளை நீங்கள் வாசிக்கவில்லையா???

      பாலியல் வன்முறைகள் கொட்டிக் கிடக்கும் சினிமா உலக குப்பைக்குள் இருந்து கொண்டு கற்பழிப்பையோ அல்லது வேறு எந்த பெண்ணியல் தொடர்பான கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு அந்த நடிகைக்கு எந்தவித அருகதையுமில்லை. பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களைத் தண்டிக்க வேண்டுமென்றால் சினிமா உலகில் இருக்கும் 75% ஆண்கள் சிறையினுள் இருக்க வேண்டும். அவர்களுக்கு உடந்தையாக(புகழுக்காக சினிமா உலகினுள் நடக்கும் பாலியல் வன்முறைகளை மறைத்தல் அல்லது பொறுத்துக் கொள்ளுதல்) இருந்த படியால் நடிகைகளும் கம்பி எண்ண வேண்டுயது வரும்.அதைப் பற்றி வாய் திறக்காத அம்மணி இப்படி புகழுக்காக வார்த்தைகளை விடக் கூடாது என்பதுதான் இந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

  2. ஒரு பெண் நிர்வாணமாக நடந்து சென்றாலும், தனக்கு இச்சை ஏற்படாது என்பவனை, “பேடி” என்றே மக்கள் அடையாளப்படுத்துவர்…

    ஆபாச உடை தவறு என்பதை எவராலும் மறுக்க முடியாது!

    நமது மதிப்பிற்குரியவர்கள் அவ்வாறு தோன்றினால், நம் மனம் உறுத்தாதிருக்காது.

    “ஆனால் அவள் தவறு செய்தால், நான் கொடூரம் புரிவேன் என்பது மிருகத்தனமே….!”

  3. கருத்து சொல்வதற்கான ஏகப்போக உரிமையை ஏகப்பட்ட முற்போக்குகள் பெற்றிருக்கிற வேளையில் த்ரிஷா கருத்து சொன்னா வினவுக்கு கோபம் வருமா வராதா? இதிலும் நடிகைகள் நுழைஞ்சிட்டா, பாவம் கருத்து கந்தசாமிங்க ஏமாந்து செத்து கித்து தொலைச்சிடப் போறாங்க.

  4. Its a shame that cine actors and actresses have started advising our society.

    Agree fully with the writer that actresses will act in any degrading role provided the money is good.

    Female models act in filthy deodorant advt for money. As soon as a man sprays it, any married women in the nearby will go behind the man. Funny part is Deodorants only attract beautiful women. It never attracts poor and ugly women.

    All actresses get to sleep with Heroes, Directors and Producers for opportunities and sleep with Businessmen for money.
    They also get to sleep with corrupt powerful Policemen. Because of the powerful connections these actresses think they can do and talk whatever they want in society.

    • Thats true but many politicians from these progressive parties are also guilty of it,this is what you get for following people like periyar who marry young women at 76.

        • it is relevant,we all know that Trisha is an immature,doll whose opinion on twitter and her followers and their social concerns are so fake,that’s why we point hands at them and say that their activism is fake.

          The same way,our own leaders whom we have deified also fail in so many things.

          Trisha 90% mosam,periyar evrum 10% thaan mosam,athanaala ithellam oru periya prachanaye illai.

          • திரிஷா immature, அரிகுமாரு பயங்கரமா mature ஆனவரு, உலகமகா அதி புத்திசாலி.

            இறைவன் நான்கு வர்ணங்களாக படைத்தது, என்று நம்பும் உங்கள் அறிவு எப்படிப் பட்டது?

            Basic அறிவியல், கொஞ்சூண்டு பகுத்தறிவு கூட இல்லை.
            குழந்தைக் கூட ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்விகளை எழுப்பும்.

            • thambi,

              un kelvi enna ippo?

              pagutharivunna enna? i have enough common sense to do whatever i want/need to do?

              Basic sciencea ellam pathi ene pesuriya?

              modhalla un peru ennannu sollu,appuram vimarsanam ellam seyyalam.

              4 varnamnna ennane unakku theriyadhu,varnamnaale ennannu unakku theriyadhu,

              periyara vimarsanam panna unakku engayo kuthuthu kodayuthu,ennavo ———– maadhiri pesura?

              • யோவ் அரிகுமாரு எதுக்கு ஓவரா குதிக்கர சின்ன புள்ள மாதிரி, சரி வர்ணபிரிவை அறிவியல் பூர்மா விளக்கு பார்போம்!

                /modhalla un peru ennannu sollu,/

                என் பேரே இது தான் அரிகுமாருனு கேவலமான பெயரெல்லாம் இருக்கும்போது ‘அடப்பாவி’ என்ற அழகான பெயர் இருந்தால் குடியா முழுகிபோய்டும் .

                • ippo inga yaaru kudhikirathu?

                  sambandhame illama naduvula ninkkirathu neeya naana?

                  Varnam is gunam,temperment.

                  Society is divided into 4 things Intelligentsia/Wisdom,Warfare/Governance,Economics/Business,Farming/Animalhusbandry/physical work.

                  Ehy do you need science for it,it is obvious that one who cannot think ll work or fight and one who can think ahead ll take care of similar things.

                  This was there so that all the resources of the land and equally divided amongst people.

                  It is such a simple thing,that you need science to analyse this.

                  Simple as that.

                  Adapaavi,nalla peru,perey ippadinna sollave vaanam.

                  • என்ன கதை சொல்லுரீங்க…

                    அதாவது இறைவன் நான்கு வர்ணமாக பிரித்து படைத்தான் என்று நம்பும் ஆள் நீங்கள். ஆனால் அறிவியல், வரலாறு ரீதியில் நீங்கள் ஒரு குழந்தை தனமான அறிவை வைத்துள்ள மனிதர். ஏனென்றால் அறிவியல் படி மனித இனம் தோன்றிய விதமே வேறு. அதுவும் கற்கால மனித வாழ்க்கை / வரலாறு முற்பட்ட மனித வாழ்க்கை எப்படி இருந்தது என்று பார்த்தால் நீங்கள் பேசுவது எவ்வளவு அபத்தம் / குழந்தை தனமானது என்று புரியும். சரி அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு பார்ப்பான் உயர்வானவன் என்று நம்பும் நீங்கள், உங்கள் அறிவு வளர்ச்சிக்கு ஏற்றப்படி பேசுங்க, பெரிய அறிவாளி மாதிரி இருக்க முயற்சி செய்ய வேண்டாம்.

        • பாப்பாத்தி நியாயமே தனிதான்.சம்பந்தமே இல்லாம ஏதாவது பெரியாற பத்தி சொல்லணும். அந்த அளவுக்கு பார்ப்பன பாம்பு அடிபட்டுருக்கு.

  5. ஏன் நீ மட்டும் தான் கருத்து சொல்லனுமா…சீறனுமா…கோபப்படனுமா..

    சினிமாநடிகைக்கு எந்த உரிமையும் இல்லையா…..இது ஜனனாயகநாடுப்பா எல்லாருக்கும் அவங்க கருத்த சொல்ல உரிமை இருக்கிறது…

    • புகை பிடிக்கக்கூடாதுன்னு ஒருத்தன் இன்னொருத்தனுக்கு அட்வைஸ் பண்ணலாம்.
      அதற்கு அவனுக்கு இரண்டு தகுதிகள் இருக்கணும்
      1) அவன் புகை பிடிக்காதவனாக இருக்கணும்
      2) சிகரெட் விற்காதவனா இருக்கணும்
      சரிதானே??
      அதைத்தானே இங்கே பதிவில் சுட்டியிருக்கிறார்கள். பதிவை படிக்காமல் தலைப்பை மட்டும் பார்த்து பதில் போடலாமா?

      • ரிஷி சார் இந்தப் பதிவ நல்லா படிச்சாச்சு…வினவு மட்டும் தான் இந்த சமூகத்திற்க்கு அறிவுறை செய்ய வேண்டுமா என்ன??
        மறுமொழி எண் 6 அய்ப்படியுங்கள்….ஏதாவது அர்த்தம் இருக்கிறதா??…இன்று மகளிர் தினம் த்ரிஷா நடிகையாக இருக்கட்டும் யாராகவேண்டுமானாலும் இருக்கட்டும், ஆனால் அவள் ஒரு பெண்…கற்ப்பளிப்பு பற்றி கருத்து சொல்ல அவருக்கும் உரிமை உண்டு…

        1. அரசியல்வாதிக்கு இருக்கும் போது நடிகைக்கு கருத்து சுதந்திரம் இருக்கக்கூடாதா?
        2. ஏன் ஊரில் உள்ளனை எல்லாம் ஏசும் இந்த வினவுக்கு இருக்கும் போது நடிகைக்கு கருத்து சுதந்திரம் இருக்கக்கூடாதா?

        கருத்து எண் 12 இப்பப்படிக்கவும்…

        • //மறுமொழி எண் 6 அய்ப்படியுங்கள்….ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?//

          ஆம்.. இருக்கிறது! அந்த பத்தியில் சொல்லப்பட்ட விடயங்கள் என் வாழ்க்கையில் நிகழ்ந்தது. அப்படிப்பட்ட வேட்டையாடலால் பாதிக்கப்பட்டவன் என்ற முறையில்தான் இங்கே விவாதிக்க வந்தேன். எல்லாப் பதிவுகளுக்கும் நான் கருத்து சொல்வதில்லை.

          //கருத்து எண் 12 இப்பப்படிக்கவும்…//

          படிச்சாச்சு! நானும் கருத்து சொல்லக்கூடியவன்தான்!! யாராவது ஒருவர் என்னிடம் வந்து நீ கருத்து சொல்வதற்கு தகுதி இல்லை என்று கூறினால் என் தகுதியை சீர் தூக்கிப் பார்ப்பேன். அதில் பிழை இருந்தால் திருத்திக் கொள்வேன். திருத்த முடியாவிடில் கருத்து சொல்வதை நிறுத்தி விடுவேன். ஊருக்கு மட்டும் ‘உபதேசம்’ செய்ய மாட்டேன்.

          இங்கு யாரும் ஊருக்கு உபதேசம் செய்யக்கூடாது என்று சொல்லவில்லை. அதற்கான தகுதி இருக்கிறதாவென சோதித்துப் பார்த்துக்கொள்ளுங்கள்; உங்களை நீங்களே உரசிப்பார்த்துக்கொள்ளுங்கள் என்ற பதிவுதான் இருக்கிறது!!

          இதற்குமேலும் உங்களுக்கு மாற்றுக்கருத்து இருப்பின்.. நல்லது. Let us agree to disagree 🙂

      • புகை பிடித்து, அதனால் பாதிகப்பட்டு கஸ்டங்களை அனுபவித்தவனாகவும் இருக்கலாம்..

        • பையா, ராஜபக்சே ”எல்லோரும் அன்பாக இருக்க பழக வேண்டும்” என்று கருத்துச் சொன்னால் அதை எப்படி பார்ப்பீர்கள்?

          • “நடந்த முடிந்த துயரங்களையெல்லாம் கண்டு மனம் வருந்தி ராஜபக்சே இப்போ திருந்திட்டார்!! அவரது மனமாற்றத்தை நாமெல்லாம் வரவேற்கவேண்டும்” என்று சொல்வார் பையா.

            திருந்திட்டார்னு எப்படிச் சொல்றீங்கனு ஒரு கேள்வி கேளுங்க. “தான் திருந்திட்டதா ராஜபக்சேவே சொன்னார்” என்று பையா சொல்வார்!!!!

            இப்பொழுது தெரிகிறதா ராஜபக்சேவெல்லாம் இந்தியாவில் சர்வசாதாரணமாக எப்படி நடமாட முடிகிறது என்று!!!!!!!!

            • னிங்கள் கற்பழிப்புக் குற்றவாளி ராம்சிங்கை, ராசபக்ஸே உடன் ஒப்பீடு செய்திருந்தால்….னான் ஒத்துக்கொண்டிருப்பேன்…..திரிசாவ விடுங்க பாஸ் எதோ சின்னப்பொண்ணு…

  6. //‘த்ரிஷாவைப் போன்ற நடிகைகளை வேட்டையாடி தமது காதலை ஏற்றே ஆக வேண்டும்’ என்பதுதான் தமிழ் சினிமா நாயகர்கள் நடிக்கும் படங்களின் கதை. இதே வேட்டையாடல்தான் டெல்லி பாலியல் வன்முறை சம்பவத்திலும் இருக்கிறது. அங்கே ‘கற்பழிப்பு’ என்றால் இங்கே வன்முறையாக காதல், கல்யாணம் என்று அளவு மட்டும் வேறுபடுகிறது. நிஜமான இளையோர் உலகிலும் இப்படித்தான் ஆண்கள் காதல் என்ற பெயரில் பெண்களை வேட்டையாடுகின்றனர். அமில வீச்சினால் விநோதினி கொல்லப்பட்டதற்கும் இதுவே அடிப்படை.//
    முடியலடா சாமி, என்னே அறிவு…என்னே அறிவு…

    • அறிவைப்பத்தி நீ பேசுறயா paiya.ஒரு பதிவில் NASA வின் செயற்கைகோள்கள் பூமிய சுத்தி வரப்போ திருநள்ளாறு க்கு மேல மூணு வினாடி நின்னுட்டு பிறகு புறப்பட்டு போவுதுன்னு ஒரு கிறுக்குப்பயல் கிளப்பிவிட்ட புரளியை அறிவே இல்லாம நம்பி அதுக்கு லிங்க் கொடுத்த உனக்கும் அறிவுக்கும் என்ன சம்பந்தம்.

  7. கருத்து சொல்ல வேண்டாம் என்று யாரும் இங்கு சொல்லவில்லை. சொல்வதற்கு முன் அவர்களை திருத்திக்கொள்ள வேண்டும் என்றுதான் சொல்கிறார்கள். Mr. Payya

  8. கவர்ச்சி காட்டாத நடிகைகள்தான் கருத்து சொல்லனும்னா அங்கமுத்து, தேனி குஞ்சரத்தம்மா மட்டும்தான் கருத்து சொல்லனும்.

  9. நல்லது, ‘கற்பழிப்பு’ குற்றவாளிகளை சோதனைச்சாலை எலிகளாக பயன்படுத்தலாம் என்ற த்ரிஷாவின் யோசனைப்படி த்ரிஷாவுக்கும், அவரது சினிமா துறையினருக்கும் என்ன தண்டனை கொடுக்கலாம், நீங்களே சொல்லுங்கள்!/|/ எல்லாப்பயலையும் போட்டுப் பொதைக்க வேண்டியதுதான்!

  10. என்னத்தான சொல்லவர்ரீங்கன்னு புரியலயே ?? பெண்கள் கவர்ச்சியா உடையணிவது தவறு என்கிறீர்களா ? அல்லது புர்கா போடறது தவறுன்னு சொல்கிறீர்களா ? அல்லது இரண்டுமே தவறுன்னு சொன்னீங்கன்னா, பெண்கள் சாதாரணமா எந்தளவுக்கு உடை அணியனும்னு தெளிவா சொன்னாலாவது பெண்களுக்கு உபயோகமா இருக்குமே.

  11. எவளாவது ஏதாவது சொன்னா, காண்டாகி ஒடனே ஒரு பதிவு போட்டுடறது? ரொம்ப வருசமா பாக்குறேன் மகனே.நீ அதிகமாவே ஜிம்புறே…அடங்கு…

    • உண்மை…என்மனதில் ரொம்பநாள் இருந்தத ரொம்ப அழகா ஒரே வரீல்ல எழுதீட்டீங்க…

      • காலையிலேயிருந்து நானும் யோசிக்கிறேன். பொருள் கண்டுபிடிக்க முடியவில்லை. நீங்கள் பாராட்டியிருக்கிறதப் பார்த்தா உங்களுக்கு தெளிவா புரிந்திருக்கும் என தெரிகிறது.
        ஆமா அது என்னங்க “ஜிம்புறே”

          • நீங்களாக ஒன்றை உருவாக்கிக் கொண்டு, அதற்கு நீங்களாகவே ஒரு விளக்கத்தைத் தந்தால் அதற்கு நாங்கள் எப்படி ஆடமுடியும் திரு. பையா அவர்களே!!!

  12. கேரளாவில் 3 வயது தமிழ் சிறுமியை கற்பழித்தவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்..அல்லது அந்த சிறுமி காட்டிய கவர்ச்சி என்ன என சொல்லமுடியுமா….

    திரிஷா கவர்ச்சி காட்டினால் உனக்கு என்ன…. நமது நாட்டின் சிலைகள்..பெண் தெய்வங்களின் அங்கங்கள் வெளியே தெரியும்.. அதை வக்கிரத்தோடு வணங்குவீர்களா.. அல்லது பக்தியோடு வணங்குவீர்களா.

    http://www.ndtv.com/article/south/another-kerala-shocker-three-year-old-raped-fighting-for-her-life-339189?pfrom=home-lateststories

    • எம்.எப். உசேனை என்னாத்துக்காக அண்ணா நாட்டை விட்டு துரத்தி அடித்தீர்கள். அவரும் அங்கங்கள் தெரியும் படித்தானே தெய்வத்தை (?) படமாக வரைந்தார். ஏன் அதையும் பக்தியோடு வணங்க வேண்டியது தானே? ஏன் அவரை வக்கிரத்தோடு விரடிடி அடித்தீர்கள்?

      • அடப்பாவிகளா.. தெய்வங்களின் சிலைகள் நிர்வாணமாய் இருந்தால் அது ஆபாசம் இல்லையாம். ஆனால் பெண்களின் சேலை சிறிது விலகினால் அது ஆபாசமாம்..நான் சொல்ல வந்தது
        ஓன்று நாட்டில் உள்ள அம்மணமாய் உள்ள அனைத்து சிலைகளை உடைத்து ஏறியுங்கள் அல்லது பெண்களை வக்கிரத்தோடு பார்ககவேண்டாம் என்பதைதான்..

        எம்.எப். உசேனை நான் எதற்காக விரட்டித்தேன்.. அது RSS பிரச்சனை புரிந்ததா… கலாச்சார காவலாளிகளே.. நியுயார்க் நகரில் சில நாட்களில் NO PANTS DAY என்று ஓரு நிகழ்ச்சி நடத்தப்படும்.https://en.wikipedia.org/wiki/No_Pants_Day அதாவது ஆண்களும் பெண்களும் pant இல்லாமல் வெளியே வருவார்கள். இது கவர்ச்சி என ஓருபோதும் யாரும் கருதுவது கிடையாது. அதுபோல் கற்பழிப்பும் கிடையாது.நமது நாட்டில் பெண்களின் சேலை சிறிது விலகினால் அது ஆண்களுக்கு ஆபாசமாம்… கற்பழிப்பும் நடக்குமாம்..

        நமது நாட்டில் பாலியல் கல்வி மிகவும் அவசியம். குறிப்பாக சிறுகுழந்தைகளுக்கு பாலியல் குறித்த விழிப்புணர்வு மற்றும் வன்கொடுமைகள் தற்காப்பு பள்ளிகளில் கற்றுத்தரப்பட வேண்டும்.

          • அந்நாட்டில் கட்டிய மனைவியை அனுமதி இல்லாம் தொட்டால் கூட அதுவும் ரேப்தான்… அந்த சட்டத்தை இந்தியாவில் வைத்து உங்கள் புள்ளிவிவரங்களை சரிபார்த்து கொள்ளவும்..

    • //திரிஷா கவர்ச்சி காட்டினால் உனக்கு என்ன…. நமது நாட்டின் சிலைகள்..பெண் தெய்வங்களின் அங்கங்கள் வெளியே தெரியும்.. அதை வக்கிரத்தோடு வணங்குவீர்களா.. அல்லது பக்தியோடு வணங்குவீர்களா.//

      குஷ்புவுக்கு கோயில் கட்டியது ஏன் என்ற தத்துவார்த்த விளக்கம் இப்போதுதான் புரிகிறது.

      //அதை வக்கிரத்தோடு வணங்குவீர்களா.. அல்லது பக்தியோடு வணங்குவீர்களா.////

      அதை பக்தியோடு வணங்கமுடியவில்லை என்பதன் வெளிப்படைதான் சங்க.ஸ்வாமிகளும், தேவநாத ஸ்வாமிகளும்.

  13. புனிதமான புத்தர்கள் மட்டுமே கருத்து சொல்லலாம் என்றால் உலகில் யாரும் வாய் திறக்க முடியாது

    • புனித புத்தராக இருக்க வேண்டாம். சிறிதளவேனும் அடிப்படைத் தகுதி வேண்டாமா திரு.ராமன்?

  14. u r not commenting about what she said. the whole article is about her background her life style and her privacy. do u mean she hasn’t got any rights to say that? she is women that is enough to comment about that. I do agree there are some points about //Cinema industry and their portrayal of women is a major factor affecting women in our society//. how ever the way it written is not acceptable. it criticize thirisha. u can criticize her in a different article when u r writing about her. but i think the way u have written is to get more hits. please do reads the comments below to that article.

  15. Vinavu is not wrong in thinking that someone like Trisha/any actress do not have any real concern for social issues and do mere lip service,

    But the question is that why is Vinavu trying to equate itself with trisha,when the whole world knows whose opinion is to be taken more seirously.

    The worst part is that,there is half hidden idea to portray Trisha as a brahmin girl voicing stupid opinions,vinavu moolaiye moolai.

  16. நச் !!! நெத்தியடி !!! த்ரிஷா முதலான நடிகைகள் டெல்லி கயவர்களை தண்டிப்பது இருக்கட்டும், தங்கள் துறையில் அத்தகைய நபர்களை தண்டிக்க வேண்டாம், அடையாளமாவது காட்டுவார்களா? நிச்சயம் காட்டமாட்டார்கள். ஏனெனில் கோடிகளில் கொழிக்கும் அவர்களது நட்சத்திர வாழ்வின் அஸ்திவாரத்தை இழப்பதற்கு அவர்கள் கனவிலும் விரும்பமாட்டார்கள். அந்த வகையில் சினிமாவில் பெண்கள் பாலியல் ரீதியின் துன்பறுத்தப்படுவதற்கு இவர்களும் ஒரு வகையில் காரணமாக இருக்கிறார்கள். True Statement !!!

  17. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=545500

    Can anyone explain the route cause analysis on this case ? Becoming similar to some film story and going to great extremes ….

    Ooops . TV channels to restrict from playing 24 x 7 and restrict hours for cinima and cinema related broadcasting and make people to understand, there are so many other entertainments are there in this word. This may help in future. Else Sorry future Generations !!!

  18. திருவாளர் குணமனோகர் அவர்களே! கருத்து கூறும் உரிமை எல்லொருக்கும் உண்டு என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன்! மற்றபடி திரிஷாவின் கருத்து ஏற்கெனவெ நாஜிக்கள் யூதக்கைதிகளிடம் நடத்தியதுதான்! பாவம் திரிஷா சின்ன பிள்ளை விட்டு விடலாம்! ஆனால், உஙகள் ஊடகஙள் அதற்கு கொடுக்கும் முக்கியத்துவம் இருக்கிறதே, அதைத்தான் கண்டிக்க வேண்டும்! பெரியாரை பாமரத்தனமாக இளையராஜா விமர்சித்ததற்கு வக்காளத்து வாஙகுவதும் சிறுபிள்ளைத்தனமானது தான்!

  19. idho eludhittaryuppa kaliyuga budharu??/ ivanunga enna enna eludhuaanunga aana suyama yaaraadhu oru karuthu sonna adha kindal pannunvaanunga… trisha pathi alasi aarayura nee keli seiyura umudhathukkum igadunukum unakkum enna idhyasam edhaadhu ou seidhi pottu hitsa jaasthi pannlamnnu nennaikkar aana paaamla hit use panra karapaampoochi pola thaan makkal unna nenaikkarraanga …hehehehehehehehe ethana kodi varusham aanalaum unga kitta ellam tamilnadu aatchi athikaramlamm kedaikarthu hehehehe

Leave a Reply to Kasisamy பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க