privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்ஈழம் : இந்தியாவைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம்!

ஈழம் : இந்தியாவைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம்!

-

1. சென்னை பச்சையப்பா கல்லூரி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அனுப்பிய செய்தி

லயோலா மாணவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து பச்சையப்பா கல்லூரி மாணவர்களும் ஈழப் பிரச்சனையில் போராட்டத்தை முன்னெடுக்க முடிவு செய்தார்கள.

பச்சையப்பா கல்லூரிமார்ச் 12ம் தேதி வகுப்புகளை புறக்கணித்து சாலை மறியல் செய்வதாக அறிவித்திருந்தார்கள். அதை அறிந்த கல்லூரி நிர்வாகம் தேர்வு நடைபெற இருந்த இரண்டாம் ஆண்டு மாணவர்களை தவிர மற்றவர்களுக்கு விடுமுறை அறிவித்து விட்டார்கள். காலையில் கல்லூரிக்கு வந்த மாணவர்களின் அடையாள அட்டைகளை சோதித்து 2ம் ஆண்டு மாணவர்களைத் தவிர மற்ற மாணவர்களை உள்ளே வர அனுமதிக்கவில்லை.

மாணவர்கள் வேறு வழிகளில் கல்லூரிக்குள் வந்து கூடினார்கள். சுமார் 11.15 மணிக்கு 300-400 மாணவர்கள் கல்லூரியிலிருந்து சாலையை நோக்கி முழக்கங்கள் எழுப்பியபடி வந்தார்கள்.

  • ஈழத்தமிழரின் படுகொலைக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால் ஐ.நா. சபை தீர்வல்ல, மத்திய அரசும் தீர்வல்ல
    மாணவர்களாக ஒன்றிணைவோம், வீதியில் இறங்கி போராடுவோம்
  • இனவெறியன் ராஜபக்சேவைத் தண்டிக்க வக்கில்லாத ஜெனீவா தீர்மானத்தை நிராகரிப்போம்,
  • ஈழத் தமிழருக்கு எதிரான காங்கிரசு, பிஜேபி தேசிய கட்சிகளை விரட்டியடிப்போம்
  • ராஜபக்சே கும்பலை தண்டிக்க, இன அழிப்பு நடவடிக்கைகளை முறியடிக்க, ஈழத் தமிழின மக்களின் சுய நிர்ணய உரிமைகளை நிலைநாட்ட வீதியில் இறங்கி போராடுவோம்.
  • ஈழத்தின் துயரத்தை விலை பேசும் ஓட்டுக் கட்சிகளை புறக்கணிப்போம்.

காவல் துறை உதவி ஆணையர் உட்பட 15-20 போலீஸ் கல்லூரிக்குள் அழைக்கப்பட்டிருந்தார்கள். 5-6 டாடா சுமோ, 3 வஜ்ரா வண்டி, தடுப்பு அரண்களை வைத்துக் கொண்டு சுற்றி நிற்பது என்று மாணவர்கள் அச்சுறுத்த முயற்சித்தார்கள். கூடவே, சிலையை தாண்டி வெளியில் போக முடியாமல் கேட்டை மூடி விட்டார்கள். மாணவர்கள் பச்சையப்பன் சிலை அருகில் உட்கார்ந்தார்கள்.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர் ராஜா மாணவர்களிடம் உரை நிகழ்த்தினார். ஈழத் தமிழர் படுகொலை எப்படி நடந்தது என்பதை விளக்கியும், இந்திய அரசும் ஐ.நா. சபையும் மக்கள் மத்தியில் மோசடி கருத்துக்களை பரப்பி வருவதையும் அம்பலப்படுத்தி பேசினார். ‘இந்தி எதிர்ப்பு போராட்டம், தமிழீழ மக்களுக்கு ஆதரவான போராட்டங்கள், முத்துக் குமார் இறந்த போது சாலை மறியல் என்று அரசியல் பாரம்பரியமிக்க பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இப்போது போராட வேண்டும். ஜெனீவா தீர்மானம் என்பதே ஏமாற்று வேலை. இந்திய அரசும் வோட்டுக் கட்சிகளும் நாடகமாடுகிறார்கள். இனப் படுகொலையை நடத்தியதில் இந்திய அரசுக்கும் ராணுவத்துக்கும் பங்கு இருக்கிறது. ஆனால், இப்போது நல்லவர்கள் போல நடிக்கிறார்கள். இதை நம்பக் கூடாது’ என்று சொன்னார்.

தோழர் பேசும் போது உளவுத் துறை போலீசின் தூண்டுதலின் பேரில் கல்லூரி முதல்வர்  நடு நடுவே இடைமறித்தார். “இன்றைக்கு பந்த் அறிவிச்சிருக்காங்க, ஏன் தேவையில்லாம பிரச்சனை பண்றீங்க” என்று தோழர்களை மிரட்டினார்.

2. திருச்சி சட்டக் கல்லூரி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அனுப்பிய செய்தி

தனி ஈழ கோரிக்கையை முன்வைத்து லயோலா கல்லூரி மாணவர்கள் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் போலீஸ் அவர்களை கைது செய்ததைக் கண்டித்தும், அமெரிக்கா, இந்தியா, இலங்கை போலித்தனத்தை அம்பலப்படுத்தியும் தனிஈழம் அமைய வேண்டும் என்றும் திருச்சி ஈ.வெ.ரா. கலை & அறிவிய்ல கல்லூரி மற்றும் திருச்சி சட்டக் கல்லூரியில் புமாஇமு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

  1. Dear Students,

    Please go and take care of your life by studying in the golden period. Please ask yourselves: why not even a single srilankan refugee in TN or in other parts of world do any hunger strike?

    • hello , Everybody has the social interests and responsibilities. Students too. So they are protesting. Many refugees also protesting. Don’t misinterpret the history

  2. இந்தியாதான் போரை நடத்தியிருந்தாலும் ராஜபக்சேக்களை தண்டிக்க இந்தியாவை விட்டா வேறுஅரசாங்கம் ஏது? என நேற்று தினந்தந்தி டிவியில் பேசிய திருமாவளவன் இறுதியில் பாராளுமன்ற அரசியலுக்கு வெளியே போராட்டம் நடத்துவது, கோஷம் போடுவது எல்லாம் வீண் வேலை. காங்கிரஸாக இருந்தாலும், பிஜேபி ஆக இருந்தாலும் இந்த அரசாங்கம் மூலம் மட்டுமே ஈழமக்களுக்கு நீதி கிடைக்க முடியும் என வெளிப்படையாக கூறினார்.

    ஈழம் மட்டுமல்ல இந்திய மக்களுக்கும் எதிரான இந்த ஓட்டுப்பொறுக்கி அரசியல் அமைப்பு என்னதான் அம்மணமாகி கிழிந்து தொங்கினாலும் மக்களுக்கு இதனை விட்டா வேறு நாதியே இல்லையே என திருமா போன்ற பிழைப்புவாதிகள் கர்ஜிப்பதை தாங்க முடியவில்லை.

    தாழ்த்தப்பட்டவனின் கையை வெட்டுங்கடா என்ற காடுவெட்டி குருவையும், திருமாவின்
    சட்டையை பிடித்து சண்டைக்கு கூப்பிட்ட சாதிவெறி ராமதாஸையும் கூட தண்டிக்க துப்பில்லாத திருமாவின் ஓட்டுப்பொறுக்கி அரசியலமைப்பான இந்த பாராளுமன்ற போலி ஜனநாயகம் மூலம் ராஜபக்சேக்களை தண்டிக்க முடியும் என திருமாக்கள் பேசுவது கேலிக்கூத்தாக உள்ளது.

  3. உங்களது கட்சியினர் செய்த போராட்டம் மட்டுமே தான் விளக்கமாக எழுதுவீர்களா?.. பிற மாணவர்கள் போராட்டம் பேசுவதற்கு அருகதையற்றதா?… இது தான் ஜனநாயகமா?.. முரசொலியில் திமுகவினரைப் பற்றி பேசுவதைப்போல.. பார்ப்பனர்கள் தங்களது ஊடக்ங்களில் தங்களைப்பற்றி பேசுவதைப் போல, நீங்களும்… பிரகு எப்படி சாமானிய மக்கள் உங்களுடன் இணைவார்கள்.. முழக்கம் மட்டும் வைத்தால் போதாது.. மக்களுடைய போராட்டங்களை அங்கீகரிக்கவும் அதனுடன் இனைந்து நிற்கவும் தெரியவேண்டும்… தனி தவிலாக மட்டுமே கச்சேரி செய்வேன் என்றால், உங்கள் புரட்சியில் பொதுமக்களாகிய நாங்கள் எப்படி இணைவது.. உறுப்பினரை மட்டும் வைத்து போராட்டம் நிகழ்த்த முடியாதுங்க சார்….

  4. தமிழ்நாட்டில் தற்போது நடக்கும் போராட்டங்கள் அணைத்தும் கட்சி சாராப் போராட்டங்கள். இதில் நீங்கள் என்னவோ செய்தது போல் காட்டிக் கொள்கிறீர்கள். உங்கள் ஆள் பிடிக்கும் வேலையை இங்கே செயல் படுத்துவது வீன்.

  5. சாதாரண தமிழக மக்கள் மிகப்பலருக்கு ராஜபக்ச யார் என்று கூட தெரியாது. தமிழகத்தின் மெத்தப்படித்த அதிமேதாவிகளுக்கு கூட இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழருக்கும் அத்தீவின் வடகிழக்கில் பாரம்பரியமாக வாழும் ஈழத்தமிழருக்கும் உள்ள வேறுபாடு தெரியாது. இன்னொரு நாட்டுக்கு டீ எஸ்டேட்டில் வேலை செய்யப்போனவர்கள், பஞ்சம் பிழைக்கப்போனவர்கள் எப்படி தனி நாடு கேட்டு போராடலாம் என கேட்கிறார்கள். நான் உரையாடியவர்களில் மிகப்பெரும்பாலானோர் இம்மாதிரியான அறியாமையைத்தான் கொண்டிருக்கிறார்கள். ரொம்பவும் சலிப்பாக இருக்கிறது. இப்போது போராட்டத்தில் குதித்திருக்கும் கல்லூரி மாணவர்களும் (அனைவரும் அல்ல) இந்த விடயத்தில் இதே மாதிரியான தற்குறிகள் தான். (ஏதோ ஆர்வக்கோளாறில் போராட்டத்தில் இறங்கி விட்டார்கள்) இந்த அறியாமையை போக்கினால் ஒழிய ஈழத்தமிழர் விவகாரத்தில் தமிழக மக்களிடத்தில் மிகப்பெரிய மாற்றமும் விழிப்புணர்வும் வரும் என்று எதிர்பார்க்க முடியாது. புரட்சிகர அமைப்புக்கள், விவரம் தெரிந்த மாணவர்கள், தமிழ் அமைப்பினர் ஆகியோர் ஈழத்தமிழர் வரலாறு, அவர்களின் யாழ்ப்பாண ராச்சியம் குறித்த வரலாறு, ஈழத்தமிழருக்கும் இந்திய வம்சாவழி தமிழருக்கும் உள்ள வேறுபாடு, பிரச்சினைக்கான காரணங்கள் ஆகியவற்றை மற்றவர்களுக்கு விளக்கி பிரச்சாரம் செய்யவேண்டும். பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் குறிப்பாக பேருந்துகளில் கல்லூரி மாணவர்கள் பிரச்சாரம் செய்ய வேண்டும். மற்ற மாணவர்களுக்கும் தெரியப்படுத்தலாம். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேசுவது பொது மக்களிடம் நன்றாக எடுபடுவதை கண்டிருக்கிறேன். தமிழ் அமைப்பினர் ஒரு குக்கிராமத்தில் இருக்கும் ஒரு வீடு பாக்கியில்லாமல் பிரச்சாரம் செய்ய வேண்டும். அறிவியல் மிகவும் வளர்ந்துள்ள இக்காலத்தில் சாதனங்களை பயன்படுத்தி கருத்தரங்கம், கலந்துரையாடல், பிரச்சாரம் ஆகியவற்றை செய்யலாம். இப்போது போராடும் மாணவர்கள் பெரும்பாலும் சட்ட மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளையும் புலங்களையும் சேர்ந்தவர்களே. இது போதாது. சட்டக்கல்லூரி மாணவர்களை பற்றி பொது மக்களுக்கு நல்ல எண்ணம் இல்லை. எப்போதும் கல்லூரிக்குள் ரகளை செய்பவர்கள், சாதி மோதலில் ஈடுபடுபவர்கள் என்னும் எண்ணம் உள்ளது. இந்த போராட்டத்தில் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் ஏன் பங்கெடுக்கவில்லை? அவர்கள் தமிழர்கள் இல்லையா? அவர்களையும் இழுத்து வரவேண்டும். தமிழகத்தை சேர்ந்த புத்திஜீவிகளிடம் (மெத்தப்படித்த அறிவாளிகள், அரசு அலுவலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், தொழில் அதிபர்கள், பண செல்வாக்கு கொண்டவர்கள், மருத்துவர்கள், பொறியியல் வல்லுனர்கள், உயர்கல்வி பயிலும் மாணவர்கள், தமிழ் நாட்டிலிருந்து வெளிநாட்டில் குடியேறிய தமிழர்கள் ஆகியோர்) பிரச்சாரம் செய்து ஆதரவை அணுகி பெறுவதும் இன்றிமையாதது. இலங்கை தமிழ்நாட்டை விட சிறிய நிலப்பரப்பு. ஆனால் அது இறையாண்மை கொண்ட தனி நாடு. அதனால் தான் வெறும் ஒன்றரை கோடி சிங்களர்களும் அவர்களின் அரசும் எட்டு கோடி எண்ணிக்கையில் உள்ள தமிழ் மக்களை துச்சமாக எண்ணி இன அழிப்பை மேற்கொள்ள முடிகிறது. இந்திய அரசும் தமிழ் நாட்டை உதாசீனப்படுத்தி விட்டு சிங்கள அரசை தாஜா செய்கிறது. தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறது. தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து போராடினால் மட்டுமே உலகம் கவனிக்கும். சம்பந்தப்பட்டவர்கள் இதை கவனிப்பார்களா என தெரியவில்லை.

  6. Students are not students always. They hsve to lead their societies and their Nations. I appreciate the students that have started this Revolution. The Oldies are afraid losing their importance and their political clouts.Whether they win or lose, the struggle is worth fighting and I wish them all success. Well Done fihght to the end.

Leave a Reply to ராஜ் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க