privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்பத்திரிகையாளர்களே! அகிலாவுக்கு நீதி கேட்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுங்கள்!!

பத்திரிகையாளர்களே! அகிலாவுக்கு நீதி கேட்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுங்கள்!!

-

posterன் டி.வி. செய்தி வாசிப்பாளர் அகிலாவுக்கு, சன் நியூஸ் செய்தி ஆசிரியர் ராஜா மற்றும் செய்தியாளர் வெற்றிவேந்தன் ஆகியோரால் நிகழ்ந்த பாலியல் தொந்தரவு குறித்தும், அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர துணிவுடன் களமிறங்கியிருக்கும் அகிலா குறித்தும் வாசகர்கள் அறிந்திருப்பீர்கள். எந்தவித பின்னணியும் இல்லாமல் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக போராடி வரும் அகிலா, இந்தக் களத்தில் தனித்து விடப்பட்டிருக்கிறார். சக ஊடக உலகத்தில் இருந்து அகிலாவுக்காக காத்திரமான அளவுக்கு ஆதரவுக் குரல்கள் எழவில்லை.

டெல்லியில் கற்பழித்து கொலைசெய்யப்பட்ட மாணவிக்காக தேசமே பொங்கி எழுந்தது. நடிகை அஞ்சலியின் நியாயத்துக்காக பலரும் கண்ணீர் வடிக்கிறார்கள். ஆனால் அகிலாவுக்கு பரிந்துபேச ஆள் இல்லை. அதற்காக அந்தப் பெண் சோர்ந்து ஒதுங்கவில்லை. எல்லா காலங்களிலும் நீதிக்காக பேச, நீதிக்காகப் போராட மனிதர்களும், இயக்கங்களும் இருக்கிறார்கள் என்று நம்பிக்கையுடன் இயங்கிக்கொண்டிருக்கிறார். அவருக்கு ஆதரவாக மனித உரிமை பாதுகாப்பு மையம் களம் இறங்கியிருக்கிறது. எதிர்வரும் ஏப்ரல் 17-ம் தேதி பட்டினப்பாக்கத்தில் இருக்கும் சன் டி.வி. அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.

நாம் பத்திரிகையாளர்களுக்கு ஓர் வேண்டுகோள் விடுக்கிறோம். இப்போதேனும் நீங்கள் உங்கள் மௌனத்தை கலைக்க வேண்டும். இந்தப் போராட்டத்தில் உங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். நியாயமாக, பத்திரிகையாளர் சங்கங்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தியிருக்க வேண்டும். அவர்களுக்கு  துணிவில்லை என்பதுடன் இப்படிப்பட்ட போராட்டங்களை நடத்தவும் அவர்கள் விரும்பவில்லை. ஊடக முதலாளிகளுக்கு முட்டுக் கொடுப்பதற்காகவே செயல்படும் இந்த சங்கங்கள் எந்தக் காலத்திலும் பத்திரிகையாளர்களின் நலன்களுக்காக செயல்படப் போவதும் இல்லை.

ஆனால் எல்லா ஊடகங்களிலும் அகிலாவுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு கண்டு கோபம் கொள்ளும் பத்திரிகையாளர்கள் ஒரு சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. தங்கள் எதிர்ப்பை யாருடன் இணைத்துக்கொள்வது என்ற திசைவழி புரியவில்லை. அத்தகைய பத்திரிகையாளர்கள் அனைவரும் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும்.

இது அகிலா-ராஜா என்ற இருவ‌ருக்குமான‌ தனிப்பட்ட பிரச்னை இல்லை. நமது அனைவருக்குமான‌ பிரச்னை. ஆயிரமாயிரம் கட்டுப்பாடுகளை கடந்து வெளியில் வரும் பெண்கள், ராஜா போன்ற பொறுக்கிகளால்தான் மறுபடியும் வீட்டுக்குள்ளேயே துரத்தப்படுகின்றனர். ஒரு நிமிடம் சற்றே சிந்தித்துப் பாருங்கள்… உங்கள் அலுவலகங்களில் ‘ராஜா’ இல்லையா? ‘வெற்றிவேந்தன்’ இல்லையா? பெயரும், உருவமும் வேறுபடலாமே தவிர எல்லா ஊடகங்களிலும் இத்தகைய பொறுக்கிகள் இருக்கின்றனர். இவர்களை ஒழித்துக் கட்டியாக வேண்டும். எத்தனையோ பெண்கள், இந்த கயவர்களின் தொந்தரவு தாங்க முடியாமல் ஊடகங்களை விட்டே துரத்தப்பட்டிருக்கின்றனர். பலர் குடும்பச் சூழலை நினைத்து கண்ணீருடன் சகித்துக்கொள்கின்றனர். முதல் முதலாக, அகிலா இந்த திருட்டுப் பூனைகளுக்கு மணி கட்டியிருக்கிறார். அவருக்கு சக பத்திரிகையாளர்களாகிய நீங்கள் தோள்கொடுக்க‌ வேண்டும். பொறுக்கிகளை தண்டிக்கும் போராட்டத்தில் உங்களை இணைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் சொந்தத்துறையில் சக ஊழியருக்கு நேர்ந்த அநீதிக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் உங்கள் பாத்திரம் முக்கியமானது.

இதுவரை யார், யாருக்காகவோ எழுதினீர்கள்; பேசினீர்கள்; நியாயம் கேட்டீர்கள்; உண்மையை உரக்கச் சொன்னீர்கள். இது உங்களுக்காக நீங்கள் போராட வேண்டிய தருணம். கிளர்ந்தெழுங்கள்.

ஏப்ரல் 17-ம் தேதி மாலை 4.30 மணிக்கு பட்டினப்பாக்கம் சன் டி.வி. அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பரிப்போம் வாருங்கள்!